வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்

பகுதி 7

பாடம் 01 – 08

பாடம் 09 – 18

கிறிஸ்து என்னும் நபர்

Jump to section

கிறிஸ்துவின் குழந்தைப்பருவமும் இளமைப்பருவமும்

குறிக்கோள்: கர்த்தருடைய குழந்தைப்பருவத்தையும், இளமைப்பருவத்தையும்பற்றிய உண்மைச்சம்பவங்களைப் பயன்படுத்தி, அவர் ஒரு நிஜமான குழந்தையாகவும், நிஜமான சிறுவனாகவும் இருந்தார் என்பதையும், அவர் ஒரு மனிதனாக இயல்பான விதத்தில் வளர்ந்தார் என்பதையும் காண்பிப்பது.

பொருட்சுருக்கம்: கர்த்தராகிய இயேசுவின் குழந்தைப்பருவத்தையும் இளமைப்பருவத்தையும்பற்றிய கதையை மத்தேயு 2 மற்றும் லூக்கா 2 வழங்கின்றன. கிறிஸ்து வரம்பில்லாத தேவனாக இருந்தாலும், அவர் இயல்பான விதத்தில் வளர்ந்து, விருத்தியடையவேண்டிய ஒரு நிஜமான மனிதனாகவும் இருந்தார் என்று இந்த அதிகாரங்கள் காண்பிக்கின்றன. அவர் வரம்புள்ள மனிதன் என்ற முறையில், குழந்தைப்பருவம், வளர்ச்சியடைதல், விருத்தியடைதல், முதிர்ச்சியடைதல் ஆகிய நிலைகளினூடாய் கடந்துசெல்லவேண்டியிருந்தது. மத்தேயு 2-ல், கர்த்தராகிய இயேசு புறவின சாஸ்திரிகளால் தேடப்பட்டு, பணிந்துகொள்ளப்பட்டார்; அவர் ஏரோதின் பொறாமைக்கு ஆளானார்; அவர் எகிப்துக்கு கொண்டுசெல்லப்பட்டார்; அவர் நாசரேத்தில் வசிக்க திரும்பிவந்து, நசரேயன் என்று அழைக்கப்பட்டார். லூக்கா 2-ல், அவர் விருத்தசேதனம்பண்ணப்பட்டார், பெயர்சூட்டப்பட்டார், அர்ப்பணிக்கப்பட்டார், ஆராதிக்கப்பட்டார். அதன்பின், அவர் வளர்ந்து, பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்திருந்தார், தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது (லூக். 2:40). தேவன் என்ற முறையில் இயேசு சர்வஞானியாயிருந்தார், ஆனால் மனிதன் என்ற முறையில் அவர் ஞானத்தில் வளரவேண்டியிருந்தது. லூக்கா 2:41-52, ஓர் இளைஞனாக கர்த்தர் வாழ்ந்த வாழ்க்கையை நமக்கு காண்பிக்கிறது; “இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்” என்று அது சாட்சிபகர்கிறது (லூக். 2:52).

பின்புலம்: விசுவாசியாத அநேக வாலிபர்கள், விசுவாசிகளாகிய நம் வாலிபர்களில் இயேசுவின் நேர்த்தியான, சமநிலையான மனுஷீகம் வாழ்ந்துகாட்டப்படுவதை பார்க்கவேண்டும். இயேசுவின் நேர்த்தியான மனுஷீகமே இந்த சீர்கெட்ட யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிற மக்களுக்கு மாற்றுமருந்தாக இருக்கிறது. கர்த்தருடைய சமநிலையான மனுஷீகத்திற்கான ஓர் எடுத்துக்காட்டு, அவர் பன்னிரண்டு வயதாயிருந்தபோது காணப்படுகிறது. ஒருபக்கம், அவர் தம் பிதாவுக்குரிய காரியங்களில் இருந்தார், மறுபக்கம், அவர் தம் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். சில வாலிபர்கள் இவ்வாறு சமநிலையுடன் இருப்பதில்லை. அவர்கள் கூட்டங்களில் கர்த்தரைநோக்கிக் கூப்பிடக்கூடும், ஆனால் அதற்குப்பின், வீட்டுக்குச் சென்று, தங்கள் அறையை சுத்தமாக வைத்திருக்கத் தவறக்கூடும் அல்லது தங்கள் தாயிடம் தகுந்த முறையில் பேசத் தவறக்கூடும். லூக்காவில் உள்ள கர்த்தருடைய மனுஷீகத்தைப்பற்றிய வசனங்களை ஜெப-வாசிப்புசெய்வது மதிப்புவாய்ந்தது, இதனால் நாம் நேர்த்தியான மனித வாழ்க்கை வாழ கர்த்தருடைய மனுஷீகத்தை நமக்குள் எடுத்துக்கொள்ளமுடியும். பள்ளிகளில் உள்ள இரட்சிக்கப்படாத வாலிபர்கள் இப்படிப்பட்ட மனுஷீகத்தை பார்க்கும்போது, அவர்கள் கர்த்தரிடம் கவர்ந்திழுக்கப்படுவார்கள்.

அதிகாரங்கள்: மத்தேயு 2; லூக்கா 2.

போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:

இந்த பாடத்தில், மத்தேயு 2:1-23, லூக்கா 2:21-52 ஆகியவைகளில் உள்ள முக்கியமான குறிப்புகளை நாம் படிப்போம். கர்த்தருடைய குழந்தைப்பருவத்தையும், இளமைப்பருவத்தையும்பற்றிய வெவ்வேறு சம்பவங்களை இவ்விரண்டு அதிகாரகள் பதிவுசெய்கின்றன; இவ்வாறாக, மத்தேயுவின் பதிவும் லூக்காவின் பதிவும் ஒன்றையொன்று நிறைவுசெய்கின்றன. இவைகளை ஒன்றாக சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது, கர்த்தராகிய இயேசு ஓர் உண்மையான மனிதனாக இருந்தார் என்பதை பிரம்மிக்கவைக்கும் வகையில் இவைகள் நமக்கு விளக்கிக்காட்டுகின்றன. அவர் ஒரு நிஜமான குழந்தையாக பிறந்தார்; இயல்பான குழந்தைப்பருவத்தையும் பிள்ளைப்பருவத்தையும் கடந்துசென்றார்; ஓர் உண்மையான மனிதன் என்ற முறையில், அவர் ஒரு நேர்த்தியான மனிதனாக விருத்தியடைய, வளரவும் கற்றுக்கொள்ளவும் வேண்டியிருந்தது.

I. கர்த்தராகிய இயேசு ஓர் உண்மையான மனித குழந்தையாக இயல்பான மனுஷீக குழந்தைப்பருவத்தினூடாய் கடந்துசென்றார்

கர்த்தராகிய இயேசு ஓர் உண்மையான மனித குழந்தையாக பிறந்தார் என்பதை மத்தேயு 2, லூக்கா 2 ஆகியவைகளிலுள்ள கர்த்தருடைய குழந்தைப்பருவத்தைப்பற்றிய சம்பவங்கள் நமக்கு காண்பிக்கின்றன. தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படியும் (லேவி. 12:3), மனித வழக்கத்தின்படியும், அவர் எட்டாம் நாளில் விருத்தசேதனம்பண்ணப்பட்டு, பெயர்சூட்டப்பட்டார். தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படியே, அவர் தேவனுக்கு அர்ப்பணிக்கப்படும்படி ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டார் (யாத். 13:2; 22:29). ஒரு குழந்தையாக அவர் பலவீனமாயிருந்தார், அவருக்கு உதவி தேவைப்பட்டது, அவருடைய பெற்றோர் அவரை கவனித்துக்கொள்ளவேண்டியிருந்தது. அவருடைய பெற்றோர் அவருடைய உயிருக்காக பயந்ததினால், அவர்கள் அவருடன் எகிப்துக்கு ஓடிப்போகவும் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்! இந்த வசனங்களில் உள்ள கதைகளை சொல்லி, இயேசு எப்படி ஓர் உண்மையான மனித குழந்தையாக இருந்தார் என்பதை சுட்டிக்காட்டுங்கள்.

A. கிறிஸ்து தம் குழந்தைப்பருவத்தில், தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படியும், மனித வழக்கத்தின்படியும், விருத்தசேதனம்பண்ணப்பட்டு, பெயர்சூட்டப்பட்டு, தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டார்—லூக். 2:21-24

B. ஒரு குழந்தையாக, கர்த்தர் புறவின சாஸ்திரிகளால் தேடி கண்டுபிடிக்கப்பட்டு, பணிந்துகொள்ளப்பட்டார்; ஆலயத்தில் சேவைசெய்கிறவர்களால் ஆராதிக்கப்பட்டார்—மத். 2:1-12; லூக். 2:25-38

C. கர்த்தர் யூதர்களுக்கு இராஜாவாக பிறந்ததால், அவர் ஏரோதின் பொறாமைக்கு ஆளானார், அவர் எகிப்துக்கு ஓடிப்போகும்படி கட்டாயத்துக்குள்ளானார்—மத். 2:2-3, 7-9, 12-18

II. கர்த்தராகிய இயேசு மனித வாழ்வுக்குரிய பிரமாணத்தின்படி ஒரு சிறுவனாக வளர்ந்தார்

கர்த்தராகிய இயேசு நம் இரட்சகராக இருக்கும்படி திடீரென்று ஒருநாள் பூமியில் ஒரு மனிதனாக தோன்றிவிடவில்லை. மாறாக, அவர் ஒரு குழந்தையாக பிறந்து, முப்பது வருட வளர்ச்சியினூடாய் கடந்துசென்றபிறகுதான், அவர் ஊழியஞ்செய்ய வந்தார் (லூக். 3:23). ஒரு மனிதனாக அவருடைய வளர்ச்சி மனித வாழ்வுக்குரிய இயற்கையான பிரமாணத்தின்படியே இருந்தது. ஒரு சிறுபிள்ளையாக, கர்த்தராகிய இயேசு எல்லாவற்றையும் அறிய தம் தெய்வீக சர்வஞானத்தைப் பயன்படுத்தவில்லை. அவர் நடக்க கற்றுக்கொள்ளவேண்டியிருந்தது, பேச கற்றுக்கொள்ளவேண்டியிருந்தது, தம் தந்தையின் வீட்டில் தச்சனாக இருக்க கற்றுக்கொள்ளவேண்டியிருந்தது. தேவனுக்குரிய காரியங்களைக்கூட, கர்த்தர் படித்து, கற்றுக்கொள்ளவேண்டியிருந்தது (லூக். 2:46).

A. ஒரு சிறுபிள்ளையாக, கர்த்தர் நாசரேத்தில் வசிக்க திரும்பிவந்து, அங்கு வளர்ந்தார்; இதனால் அவர் நசரேயன் என்று அழைக்கப்பட்டார்—மத். 2:19-23; லூக். 2:39-40

கர்த்தராகிய இயேசு தேவனுடைய கிறிஸ்துவாக பெத்லகேமில் பிறந்தாலும் (மீகா 5:2; மத். 2:1, 5-6), அற்பமாய் எண்ணப்பட்ட ஒரு பிராந்தியத்தில்தான் அவர் வளர்ந்தார். ஓர் உண்மையான, மனித சிறுபிள்ளையாக வளரும்போது, கர்த்தராகிய இயேசு உயர்ந்த சமுதாயத்தில் வாழவில்லை. மாறாக, அவர் நாசரேத்தில் ஓர் ஏழ்மையான வீட்டில் வளர்ந்தார், அதற்காக பிற்பாடு யூதர்கள் அவரை அற்பமாய் எண்ணினார்கள் (யோவான் 1:46).

B. கர்த்தராகிய இயேசு வளர்ந்து, பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்திருந்தார், தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது—லூக். 2:40

தேவன் என்ற முறையில், இயேசு சர்வஞானியாயிருந்தார், ஆனால் மனிதன் என்ற முறையில், அவர் கற்றுக்கொள்ளவும், ஞானத்தில் வளரவும் வேண்டியிருந்தது.

C. இயேசு வளரும்போது, “ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்”—லூக். 2:52

கர்த்தராகிய இயேசு ஓர் உண்மையான, இயல்பான மனிதனாக இருந்ததால், நம்மைப்போலவே, அவரும் வளரவும், விருத்தியடையவும், கற்றுக்கொள்ளவும் வேண்டியிருந்தது. அவர் வளர்த்தியில் விருத்தியடைந்தது மட்டுமல்ல, அதாவது, உடல்ரீதியாக வளர்ச்சியடைந்து, விருத்தியடைந்தது மட்டுமல்ல, அவர் வளர்ந்தபோது, ஞானத்திலும் விருத்தியடைந்தார். ஞானம் என்பது நம் ஆவியோடு தொடர்புடையதாகும். கர்த்தராகிய இயேசு தேவனுக்குரிய காரியங்களை கற்றுக்கொள்ள நாடினார் (லூக். 2:46); அவர் தேவனை அறிந்துகொண்டதிலிருந்தும், தம் மனித ஆவியை தகுந்தமுறையில் பயிற்சிசெய்ததிலிருந்தும் வந்த ஞானத்தில் விருத்தியடைந்தார்.

  1. தேவனுடைய நியாயப்பிரமாணத்தில் நியமிக்கப்பட்டிருந்த பண்டிகைகளை ஆசரிக்கும்படி கர்த்தர் தம் குடும்பத்துடன் வருடாவருடம் எருசலேமுக்கு சென்றார்—லூக். 2:41
  2. பன்னிரண்டு வயதில், கர்த்தராகிய இயேசு தேவனை நாடவும், தேவனுக்குரிய காரியங்களில் இருக்கவும் ஆலயத்திலேயே இருந்துவிட்டார்—லூக்கா 2:42-49
  3. நேர்த்தியான இளைஞனாக, கர்த்தராகிய இயேசு தம் மனித பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருந்தார்—லூக். 2:49-51
  4. இவையெல்லாவற்றிலும், கர்த்தர் தேவகிருபையிலும் மனுஷர்தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடையும்விதத்தில் நடந்துகொண்டார்—லூக். 2:52

IV. கர்த்தராகிய இயேசு வரம்பற்ற தேவனாக இருந்தாலும், அவர் இயல்பான விதத்தில் வளர்ந்து, விருத்தியடையவேண்டிய ஒரு நிஜமான மனிதனாகவும் இருந்தார்

கிறிஸ்து வரம்பற்ற தேவனாக இருந்தாலும், அவர் இயல்பான விதத்தில் வளர்ந்து, விருத்தியடையவேண்டிய ஒரு நிஜமான மனிதனாகவும் இருந்தார். அவர் ஒரு மனிதனானபோது, மனிதர்கள் வளர்ந்து, விருத்தியடையும்படி தேவன் தம் சிருஷ்டிப்பில் நியமித்திருந்த வழியை அவர் எடுத்துக்கொண்டார். இது அவருக்கு மாபெரும் மட்டுப்படுத்துதலாக இருந்தது. வரம்பற்ற தேவன் காலத்தினாலும் இடத்தினாலும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு மனிதனாக மாறினார். சர்வவல்லமையுள்ள, சர்வஞானியான தேவன், உதவிதேவைப்படுகிற ஒரு குழந்தையாக மாறினார்; மனித வாழ்வுக்குரிய பிரமாணத்தின்படி ஒரு மனிதன் கற்றுக்கொள்ளவேண்டிய எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிற வழிமுறையின்மூலம் அவர் ஒரு மனிதனாக வளரவேண்டியிருந்தது. மேலும், பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர் தம் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருந்த ஒரு பிள்ளையாக மாறினார். அவர் மெய்யாகவே ஓர் உண்மையான மனிதனாக இருந்தார்!

A. அவர் காலத்தினாலும் இடத்தினாலும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தார்—யோவான் 7:6

B. ஒரு மனிதன் என்ற முறையில் கற்றுக்கொள்ளவேண்டிய தேவையினால் அவர் மட்டுப்படுத்தப்பட்டிருந்தார்—லூக். 2:46

C. அவர் தம் பெற்றோருக்குப் பணிந்திருந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்—லூக். 2:51

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: மனிதன் கற்றுக்கொள்ளவும், வளர்ச்சியடையவும்வேண்டுமென்று தேவன் தம் சிருஷ்டிப்பில் நியமித்திருக்கிறார். மனிதர்கள் உதவியின்றி எதையுமே செய்யமுடியாதவர்களாக, அதாவது, தங்களுக்குத்தாங்களே எதையும் செய்துகொள்ள திராணியற்றவர்களாக தங்கள் வாழ்வை தொடங்குகிறார்கள். மனிதர்கள் முழுவதும் தனித்துவமான ஆட்களாக தாங்களாகவே வாழக்கூடிய திராணியுள்ளவர்களாவதற்கு, ஏறக்குறைய இருபது வருடங்கள் அவர்களை கவனித்துக்கொள்வதற்கும், அவர்களை பயிற்றுவிப்பதற்கும், அவர்களுக்கு கல்விபூகட்டுவதற்கும் பெற்றோரும் வயோதிபரும் அவர்களுக்கு தேவை. கர்த்தராகிய இயேசுகூட, பூமியில் ஒரு மனிதனாக வாழ்ந்தபோது, மனித வளர்ச்சிக்காக தேவன்-நியமித்த இந்த வழியை எடுத்துக்கொண்டார். ஒரு மனிதன் தகுந்தமுறையில் வளர்ச்சியடைவதில், உடல்ரீதியான வளர்ச்சி அடங்கியுள்ளது, அதுமட்டுமல்ல, புதிய காரியங்களையும் திறமைகளையும் கற்றுக்கொள்கிற தொடர்ச்சியான வழிமுறையும் அடங்கியுள்ளது. ஒருவன் தன் பெற்றோரிடமிருந்தும், வயதில் பெரியவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள அவர்களுக்குப் பணிந்திருக்க சித்தமாயிருப்பதும், படிப்பதற்கு சிரத்தையுடன் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள சித்தமாயிருப்பதும் ஒரு நேர்த்தியான மனிதனாக வளர்ச்சியடைகிற இந்த வழிமுறைக்கு முக்கியமான இரண்டு காரியங்களாகும். லூக்கா 2-ல், இவ்விரண்டு குணங்களையும் கர்த்தர் வெளிக்காட்டினார்: ஆலயத்தில் அவர் சிரத்தையுடன் படித்துக்கொண்டிருந்தார்; போதகர்களிடம் அவர் மரியாதையாயிருந்தார், தம் பெற்றோருக்கும் கீழ்ப்படிந்திருந்தார். நாம் நேர்த்தியான மனிதர்களாக வளர்ச்சியடைவதற்கு, நாமும் இதே வழியை எடுத்துக்கொள்ளவேண்டும்: நம் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், சேவைசெய்கிறவர்களுக்கும் நாம் மனமுவந்து கீழ்ப்படியவேண்டும், நம்மால் முடிந்த எல்லாவற்றையும் படிப்பதற்கும் கற்றுக்கொள்வதற்கும் சிரத்தையுடன் நாம் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும்.

சுவிசேஷ செயலாக்கம்: மத்தேயு 2:1-11ல், கிறிஸ்து பெத்லகேமில் பிறந்தபிறகு, கிழக்கிலிருந்த சாஸ்திரிகள் அவருடைய நட்சத்திரம் உதிப்பதை கண்டு, அவரை பணிந்துகொள்ளும்படி வந்தார்கள். அவர்கள் கண்ட நட்சத்திரம், கிறிஸ்துவைப்பற்றி சாஸ்திரிகள் பெற்றுக்கொண்ட ஜீவனுள்ள தரிசனத்தை குறிக்கிறது. நம்மெல்லாருக்கும் கிறிஸ்துவைப்பற்றிய தரிசனம் தேவை, அதினால் நாம் அவரை தேடும்படி உத்வேகமடைகிறோம். துரதிர்ஷ்டவசமாக, கிறிஸ்து எருசலேமில்தான் இருப்பார் என்ற தவறான கருத்து சாஸ்திரிகளிடம் இருந்தது. இந்த கருத்து, எருசலேமாகிய மதரீதியான மையத்திற்கு அவர்களை தவறாக வழிநடத்திவிட்டது, கிறிஸ்துவோ அங்கு இல்லை. அவர்கள் எருசலேமை வந்தடைந்தபோது, கிறிஸ்துவின் பிறப்பைக்குறித்து கேள்விப்பட்ட ஏரோது பிரதான ஆசாரியர்களையும் வேதபாரகரையும் ஒன்றாக கூட்டினான், வேதவாக்கியங்களின்படி கிறிஸ்து பெத்லகேமில்தான் பிறப்பார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். வேதவாக்கியங்களால் திருத்தமடைந்த சாஸ்திரிகள், அதன்பின், பெத்லகேமைநோக்கி போனார்கள், அப்போது அந்த நட்சத்திரம் மறுபடியும் தோன்றியது. அங்கே அவர்கள் கிறிஸ்துவை கண்டு, சாட்சாத்து தேவனாகிய அவரை பணிந்துகொண்டார்கள் (Matt. 2:11, footnote 2). அதன்பின்பு, அவர்கள் வேறு வழியாய் புறப்பட்டுப்போய்விட்டார்கள். இந்த பகுதியில் மூன்று வகையான மக்களை நாம் பார்க்கிறோம். கிறிஸ்துவை அழிக்க விரும்பிய ஏரோது (மத். 2:16), கிறிஸ்துவை நேசிக்காத பிரதான ஆசாரியர்களும் வேதபாரகரும் (அவர்கள் அவரை பணிந்துகொள்ளும்படி பெத்லகேமுக்கு போகாததில் இதை பார்க்கிறோம்), மற்றும் கிறிஸ்துவை நாடிய சாஸ்திரிகள். நீங்கள் எப்படிப்பட்ட நபராக இருப்பீர்கள்: கிறிஸ்துவை எதிர்கிறவரா, கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அக்கறையற்றவிதத்தில் கேட்கிறவரா, அல்லது கிறிஸ்துவுக்குள் விசுவாசித்து, அவரை தேடுகிறவரா? கிறிஸ்து ஜீவனுள்ளவராயிருக்கிறார்; கிறிஸ்துவைப்பற்றிய ஜீவனுள்ள தரிசனத்தை பார்க்கிறவர்கள் அவரை பெற்றுக்கொள்ளும்படி அவருக்குள் விசுவாசிக்கவேண்டும். உங்கள் பாவங்களை அறிக்கைசெய்வதினாலும், அவரைப்பற்றிய உங்களுடைய மதரீதியான தவறான புரிந்துகொள்ளுதலை கைவிடுவதினாலும், அவருடைய வார்த்தையை விசுவாசிப்பதினாலும், இயேசுவும் இம்மானுவேலுமான அவரை பெற்றுக்கொள்வதினாலும் இன்றே அவரை கண்டுகொள்ளுங்கள் (மத். 1:21, 23).

முக்கியமான விஷயங்கள்: நம் நிறைவான இரட்சிப்புக்காக அநேக அம்சங்களில் கிறிஸ்துவையும், அவருடைய நபரையும் வேலையையும்பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.).

பின்புல வாசிப்புக்காக: Life-study of Matthew, Message 7; Life-study of Luke, Message 6.

REFERENCES: Life-study of Matthew, Message 7; Life-study of Luke, Message 6; Finding Christ by the Living Star; Matthew 2:2, footnote 2; 2:4, footnote 1; 2:9, footnote 1; 2:11, footnote 2; 2:12, footnote 2.

 

Jump to section