வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்

பகுதி 7

பாடம் 01 – 08

பாடம் 09 – 18

கிறிஸ்து என்னும் நபர்

Jump to section

மனிதமாம்சமாகுதலில் கிறிஸ்து: மனுஷகுமாரன்

குறிக்கோள்: மனிதமாம்சமாகுதலின்மூலம் மூவொரு தேவன் ஓர் உண்மையான மனிதனோடு தம்மை இணைத்துக்கொண்டு, தம்மை அவரோடு கலந்திணைத்திருக்கிறார் என்பதை காண்பிப்பது.

பொருட்சுருக்கம்: கிறிஸ்து மனிதமாம்சமாகுதலில் தேவனுடைய குமாரனாக இருக்கிறார் என்று 11-ஆம் பாடத்தில் நாம் பார்த்தோம். கிறிஸ்து தம் மனிதமாம்சமாகுதலில், மனுஷகுமாரனாகவும் மாறினார், அதாவது, நம்மைப்போலவே காலத்திலும் இடத்திலும் எல்லைக்குட்பட்டிருந்த ஓர் உண்மையான மனிதனாகவும் மாறினார் என்று இப்போது நாம் பார்க்கிறோம். கிறிஸ்து தேவனுடைய குமாரனாகவும் மனுஷகுமாரனாகவும் இருப்பது, கிறிஸ்து தம் மனிதமாம்சமாகுதல்மூலம் வரம்பற்ற தேவனை வரம்புள்ள மனிதனுக்குள் கொண்டுவந்தார் என்பதை சுட்டிக்காட்டுகிறது. அவர் தம் மனிதமாம்சமாகுதலின்மூலம், தேவனை மனிதனோடு ஒன்றாக்கி, மனுஷீகத்தோடு தெய்வீகத்தை கலந்திணைத்தார். கிறிஸ்து தம் மனிதமாம்சமாகுதலில், மூவொரு தேவனை முப்பகுதி மனிதனோடு சேர்த்திணைத்து, கலந்திணைக்கவும்செய்தார்.

பின்புலம்: எந்த எல்லையும் அறியாத வரம்பற்ற தேவன் பல விதத்தில் எல்லைக்குட்பட்ட வரம்புள்ள மனிதனுக்குள் கொண்டுவரப்பட்டார் என்பதின் அர்த்தத்தை ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள். (உதாரணமாக, பள்ளிப் படிப்பை முடிக்க காத்திருத்தல், உங்களில் சிலர் இன்னும் ஓட்டுநர் உரிமத்தை பெறாதது போன்ற மட்டுப்படுத்துதலை) நீங்கள் அனுபவிக்கும்போது, “நம்முடைய கிறிஸ்து மனுஷகுமாரனாக மட்டுப்படுத்தப்படுதலை அறிந்திருந்தார்!” என்று நாம் தைரியமாய் அறிக்கையிடவேண்டும். நம்மை காலத்தினாலும் இடத்தினாலும் எல்லைக்குட்பட்ட, மட்டுப்படுத்தப்பட்ட, கட்டுண்ட வாழ்க்கை வாழச்செய்யும்படி, இப்போது அவர் நமக்குள் இருக்கிறார்.

அதிகாரங்கள்: மத்தேயுமுதல் யோவான்வரை.

போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:

மனிதமாம்சமாகுதலில் கிறிஸ்து முழுமையான தேவனாகவும் இருக்கிறார், பரிபூரணமான மனிதனாகவும் இருக்கிறார்; அவர் இரண்டு சுபாவங்களை உடைய ஒரு நபராக இருக்கிறார். தெய்வீகம் என்ற பக்கத்திலிருந்து பார்க்கும்போது, கிறிஸ்து மாம்சத்தில் வெளியரங்கமான தேவனாகவே இருக்கிறார். மனுஷீகம் என்ற பக்கத்திலிருந்து பார்க்கும்போது, கிறிஸ்து நிஜமான மனிதனாக இருக்கிறார், இவரோடு மூவொரு தேவன் சேர்ந்திணைந்து, கலந்திணைந்திருக்கிறார். கிறிஸ்து மனுஷகுமாரனாக இருக்கிறார் என்று சொல்வது, அவர் ஒரு மனிதனாக இருக்கிறார் என்பதை வலியுறுத்துகிறது. மனிதமாம்சமாகுதலில் கிறிஸ்து மனுஷகுமாரனாக இருக்கிறார் என்பது, மனுஷீகத்திற்குள் தெய்வீகம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது; ஓர் உண்மையான மனிதனோடு மூவொரு தேவனின் சேர்க்கையை அது சுட்டிக்காட்டுகிறது. கிறிஸ்து காலத்தினாலும் இடத்தினாலும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிஜமான மனிதனாக இருந்தார், ஆனால், வரம்பற்ற தேவனை தம்முடன் சேர்ந்திணைந்து, கலந்திணையப்பெற்ற ஒரு மனிதனாக அவர் இருந்தார்.

I. கிறிஸ்து தம் மனிதமாம்சமாகுதலில் மனுஷகுமாரனானார்—மத். 16:13

மத்தேயு 16:13-லும், வேறு பல வசனங்களிலும், கர்த்தராகிய இயேசு தம்மை மனுஷகுமாரன் என குறிப்பிட்டார். இதை செய்ததின்மூலம், கர்த்தர் தாம் ஒரு நிஜமான மனிதன் என்ற உண்மையை வலியுறுத்தினார். அவர் இடத்தினாலும் காலத்தினாலும் மட்டுப்படுத்தப்பட்ட, வரம்புள்ள மனிதனாக இருந்தார்; அவர் உண்மையான மனித சுபாவத்தை உடைய ஓர் உண்மையான மனிதனாக இருந்தார்.

A. அவர் இடத்தினாலும் காலத்தினாலும் மட்டுப்படுத்தப்பட்ட, வரம்புள்ள மனிதனாக இருந்தார்—யோவான் 7:6

மனிதமாம்சமாகுதலில், கிறிஸ்து காலத்தினாலும் இடத்தினாலும் மட்டுப்படுத்தப்பட்ட, வரம்புள்ள மனிதனாக மாறினார். அவர் அப்படியே பூமியில் தோன்றிவிடவில்லை, மாறாக, அவர் ஒரு மனிதனாக பிறப்பதற்குமுன்பு, ஒரு மனித கர்ப்பத்தில் கருவாகி, ஒன்பது மாதங்கள் அங்கே இருந்தார். பிற்பாடு, அவர் வளரும்போது, அவர் பிழைப்புக்கு ஒரு வேலைசெய்யவேண்டியிருந்தது. ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்திற்கு செல்ல, அவர் நடக்கவேண்டியிருந்தது. தேவனால் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தின்கீழ் அவர் வாழ்ந்தார். சிலவேளைகளில், அவர் அழுதார். அவர் மற்ற மனிதர்களால் சிலுவையில் அறையப்படக்கூடிய அளவுக்கு அவ்வளவு வரம்புக்குட்பட்டவராக இருந்தார்!

B. அவர் உண்மையான மனித சுபாவத்தை உடைய ஓர் உண்மையான மனிதனாக இருந்தார்

கர்த்தர் உண்மையான மனித சுபாவத்தை உடைய உண்மையான மனிதனாகவும் இருந்தார். பார்ப்பதற்கு அவர் நம்மைப்போலவே இருந்தார். அவர் நம்மைப்போலவே சாப்பிடவும், குடிக்கவும், தூங்கவும் வேண்டியிருந்தது. நம்மைப்போலவே அவருக்கு மனித ஜீவனும் மனித சுபாவமும் இருந்தது; நம்மைப்போலவே அவர் மாம்சமுள்ள மனிதனாக வளர்ந்தார்.

II. கிறிஸ்து தம் மனிதமாம்சமாகுதலில், வரம்பற்ற தேவனை வரம்புள்ள மனிதனுக்குள் கொண்டுவந்தார்

இந்த அற்புதமான உண்மையை ஒரு கணம் யோசித்துப்பாருங்கள். எல்லையில்லா, நித்திய, மட்டற்ற, அளவில்லாத, வரம்பற்ற தேவன் வரம்புள்ள மனிதனானார். நம்மில் யாருக்கும் மட்டுப்படுத்தப்படுதல் பிடிக்காது, ஆனால், கிறிஸ்து தம் மனிதமாம்சமாகுதலில், வரம்பற்ற தேவனை வரம்புள்ள, மட்டுப்படுத்தப்பட்ட மனிதனுக்குள் கொண்டுவந்தார்.

A. கிறிஸ்து தம் மனிதமாம்சமாகுதலில் தேவனுடைய குமாரனாகவும் இருக்கிறார், மனுஷகுமாரனாகவும் இருக்கிறார்

கர்த்தராகிய இயேசு பரிசுத்த ஆவியானவரால் கருவானதினிமித்தம், அவர் தேவனுடைய குமாரனாக இருக்கிறார். அவர் ஒரு மனித கன்னிகைக்குள் கருவாகி, அவளால் பிறந்ததினிமித்தம், அவர் மனுஷகுமாரனாக இருக்கிறார். தெய்வீக பக்கத்தில், கிறிஸ்து தேவனுடைய குமாரனாக இருக்கிறார். மனுஷீக பக்கத்தில், அவர் மனுஷகுமாரனாக இருக்கிறார். கர்த்தராகிய இயேசு தேவனுடைய குமாரனாகவும் மனுஷகுமாரனாகவும் இருப்பதால், சிலசமயங்களில், அவர் தாம் தேவனுடைய குமாரன் என்றும், மற்றசமயங்களில், தாம் மனுஷகுமாரன் என்றும் மற்றவர்களிடம் சுட்டிக்காட்டினார்.

  1. கர்த்தராகிய இயேசு பரிசுத்த ஆவியானவரால் கருவானதினிமித்தம், அவர் தேவனுடைய குமாரனாக இருக்கிறார்—மத். 1:18, 20; லூக். 1:35; யோவான் 5:25; 9:35, 37; 10:36
  2. அவர் ஒரு மனித கன்னிகைக்குள்ளும் கருவாகி, அவளாலும் பிறந்ததினிமித்தம், அவர் மனுஷகுமாரனாக இருக்கிறார்—மத். 1:23; லூக். 1:27, 30–31; யோவான் 1:51; 3:14; 5:27

B. கிறிஸ்து தேவனுடைய குமாரனாகவும் மனுஷகுமாரனாகவும் இருப்பது, அவர் தம் மனிதமாம்சமாகுதல்மூலம் வரம்பற்ற தேவனை வரம்புள்ள மனிதனுக்குள் கொண்டுவந்தார் என்பதை சுட்டிக்காட்டுகிறது

தேவனுடைய குமாரன் என்ற முறையில், அவர் வரம்பற்ற தேவனாக இருக்கிறார். மனுஷகுமாரன் என்ற முறையில், அவர் வரம்புள்ள மனிதனாக இருக்கிறார். கிறிஸ்து தம் மனிதமாம்சமாகுதலில், வரம்பற்ற தேவனை வரம்புள்ள மனிதனுக்குள் கொண்டுவந்தார். அவர் தெய்வீகத்தை மனுஷீகத்திற்குள் கொண்டுவந்தார். தேவனுடைய கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, கிறிஸ்து மாம்சத்தில் வெளியரங்கமான மூவொரு தேவனாயிருக்கிறார். மனிதனுடைய கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, அவர் காலத்தினாலும் இடத்தினாலும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிஜமான மனிதனாயிருக்கிறார். ஆயினும், வரம்பற்ற தேவன், மட்டுப்படுத்தப்பட்ட இந்த மனிதனுக்குள் நுழைந்து, இந்த மனிதனோடு இணைந்துவிட்டார்! தேவனும் மனிதனும் சேர்ந்த சேர்க்கையாகிய ஒரு மனிதனே கிறிஸ்து; அவர் வரம்பற்ற தேவனோடு இணைந்த வரம்புள்ள ஒரு மனிதனாவார்.

C. கிறிஸ்து தம் மனிதமாம்சமாகுதலின்மூலம், தேவனை மனிதனோடு ஒன்றாக்கி, மனிதனோடு தேவனை கலந்திணைத்தார்—யோவான் 1:1, 14

கிறிஸ்துவின் மனிதமாம்சமாகுதல் தேவனை மனிதனுக்குள் கொண்டுவந்தது. இது எவ்வளவு உட்கருத்துவாய்ந்தது! கிறிஸ்துவின் மனிதமாம்சமாகுதலில், தேவன் தம்மையே மனிதனோடு இணைத்துக்கொண்டு, தம்மையே மனிதனோடு கலந்திணைத்தார். கிறிஸ்து மனிதமாம்சமானபின், பூமியில் ஒரு மனிதன் உண்டாயிருந்தார், அவர் மூவொரு தேவனோடுதாமே சேர்ந்திணைந்து, கலந்திணைந்திருந்தார்! தேவன் மனிதனோடு ஒன்றாகியிருந்தார்!

III. கிறிஸ்து தம் மனிதமாம்சமாகுதலில், மூவொரு தேவனை முப்பகுதி மனிதனோடு சேர்த்திணைத்து, கலந்திணைத்தார்

A. மூவொரு தேவனைப்பொருத்தவரை, பிதா ஊற்றாக இருக்கிறார், குமாரன் வெளியாக்கமாக இருக்கிறார், ஆவியானவர் உட்பிரவேசித்தலாக இருக்கிறார்—2 கொரி. 13:14

மூவொரு தேவன்தாமே கிறிஸ்துவில் தம்மை மனிதனோடு இணைத்துக்கொண்டார். எனினும், இயேசுகிறிஸ்து என்ற ஒரு நபருக்குள் மட்டும் நுழையவேண்டும் என்பதல்ல தேவனுடைய நோக்கம். நம்மெல்லாருக்குள்ளும் நுழையவேண்டும் என்பதே அவருடைய நோக்கம்! தேவன் மனிதனுக்குள் நுழைவதற்கு, அவர் மூவொருவராக இருக்கவேண்டும். தேவன் நம்மோடு ஒன்றாகி, தம்மை நம்மோடு கலந்திணைக்குமாறு, மூவொரு தேவனில், பிதா ஊற்றாக இருக்கிறார், குமாரன் வெளியாக்கமாக இருக்கிறார், ஆவியானவர் உட்பிரவேசித்தலாக இருக்கிறார்.

B. முப்பகுதி மனிதனைப்பொருத்தவரை, ஆவியே மிக உள்ளான பகுதியாக இருக்கிறது, ஆத்துமா நடுவில் இருக்கிறது, சரீரம் வெளியே இருக்கிறது—1 தெச. 5:23

முப்பகுதி மனிதனோடுதான் தேவன் தம்மையே இணைத்துக்கொண்டு, கலந்திணைக்க விரும்புகிறார். தேவனை உள்ளடக்கிக்கொண்டு, அவரை வெளிக்காட்டும்படி, ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகிய மூன்று பகுதிகளுடன் தேவன் மனிதனை சிருஷ்டித்தார். ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகிய மூன்று பகுதிகளை மனிதன் கொண்டிருக்கிறான் என்று 1 தெசலோனிக்கேயர் 5:23 பலமாக சுட்டிக்காட்டுகிறது. நம்முடைய மிக உள்ளான பகுதியாகிய ஆவி உள்ளான உறுப்பாக இருக்கிறது, நாம் தேவனை தொடர்புகொள்ளுமாறு, அது தேவ-உணர்வுள்ளதாயிருக்கிறது (யோவான் 4:24; ரோ. 1:9). ஆத்துமா என்பது நம் சுயமே ஆகும் (ஒப்பீடு மத். 16:26; லூக். 9:25), இது நம் ஆவிக்கும் நம் சரீரத்திற்கும் இடையே உள்ள ஊடகமாகும், இது சுய-உணர்வுள்ளதாயிருக்கிறது, இதனால் நமக்கு நம் ஆளுமை உண்டாயிருக்கிறது. நம் புறம்பான பகுதியாகிய சரீரம் புறம்பான உறுப்பாக இருக்கிறது, நாம் பெளதீக உலகத்தை தொடர்புகொள்ளுமாறு, அது உலக-உணர்வுள்ளதாயிருக்கிறது. சரீரம் ஆத்துமாவைக் கொண்டிருக்கிறது, ஆத்துமா ஆவியைக் கொண்டிருக்கிற பாத்திரமாக இருக்கிறது. ஆவியில், தேவன் ஆவியானவராக வசிக்கிறார்; ஆத்துமாவில், நம் சுயம் வசிக்கிறது; சரீரத்தில், பெளதீக புலன்கள் வசிக்கின்றன.

C. மனிதமாம்சமாகுதலில் கிறிஸ்துவே, இப்படிப்பட்ட முப்பகுதி மனிதனோடு இந்த மூவொரு தேவனின் சேர்ந்திணைதலாகவும் கலந்திணைதலாகவும் இருக்கிறார்

மனிதமாம்சமாகுதலுக்குமுன்பு, தேவன் தேவனாயிருந்தார், மனிதன் மனிதனாயிருந்தான். தேவன் மனிதர்களிடையே நகர்ந்தார், அவருடைய ஆவியானவர் மனிதர்கள்மேல் இறங்கினார், ஆனால் தேவனும் மனிதனும் ஒருபோதும் ஒன்றாய் சேர்ந்திணைந்து, கலந்திணைந்ததில்லை. மனிதன் தேவனோடு சேர்த்திணைக்கப்பட்டது மட்டுமல்ல, அதாவது, அவரோடு ஒன்றாய் சேர்க்கப்பட்டது மட்டுமல்ல, ஒரே வஸ்துவாக அவன் தேவனோடு கலந்திணைக்கவும்பட்டான். மனிதமாம்சமாகுதலில் கிறிஸ்துவே, இப்படிப்பட்ட முப்பகுதி மனிதனோடு இந்த மூவொரு தேவனின் சேர்ந்திணைதலாகவும் கலந்திணைதலாகவும் இருக்கிறார். அவர் ஓர் ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகியவைகளைக்கொண்ட ஓர் இயல்பான மனிதனாக இருந்தார், இருப்பினும் இவரோடு மூவொரு தேவன் சேர்ந்திணைந்து, கலந்திணைந்திருந்தார். இப்பேர்ப்பட்டவராக, கர்த்தராகிய இயேசு ஒரு தேவ-மனிதனுக்கான மூலப்படிவமாயிருந்தார். இயேசுகிறிஸ்துவினுடைய முன்மாதிரியின்படி, தேவன் தம்மையே நம்மோடு இணைத்துக்கொண்டு, தம்மை நம்மோடு கலந்திணைக்க விரும்புகிறார்.

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: மனிதனோடு ஒன்றாகி, தம்மை மனிதனோடு கலந்திணைக்கவேண்டும் என்பதே ஆதிமுதல் தேவனுடைய நோக்கமாக இருந்துவருகிறது. கடைசியில் மூவொரு தேவன் அதை செய்துமுடித்துவிட்டார் என்பதே மனுஷகுமாரனாகிய கிறிஸ்துவினுடைய மனிதமாம்சமாகுதலின் நிஜமான உட்கருத்து! கிறிஸ்துவின் மனிதமாம்சமாகுதலில், தேவன் தம்மை மனிதனோடு சேர்த்திணைத்து, கலந்திணைத்துக்கொண்டார்! இப்போது அவர் தம்மை மனிதர்களுக்குள் பகிர்ந்தளிப்பதை தொடர விரும்புகிறார். நம்முடைய பக்கத்தில், நாம் தேவனுடைய பகிர்ந்தளித்தலை பெற்றுக்கொள்ளுமாறு, ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகியவைகளை உடைய முப்பகுதி ஆள்தத்துவங்களாக நாம் சிருஷ்டிக்கப்பட்டோம். தேவனுடைய பக்கத்தில், அவர் பிதாவாகவும், குமாரனாகவும், ஆவியானவராகவும் தம்மையே நமக்குள் பகிர்ந்தளிக்குமாறு, அவர் மூவொருவராக இருக்கிறார்.

சுவிசேஷ செயலாக்கம்: மனிதனோடு ஒன்றாகி, தம்மை மனிதனோடு கலந்திணைக்கவேண்டும் என்பதே ஆதிமுதல் தேவனுடைய நோக்கமாக இருந்தது. எனினும், மனிதன் விழுந்துபோய், பாவமுள்ளவனானான்; 4000 வருடங்களாக, தேவன் மனிதனுக்குள் நுழைய அவருக்கு எந்த வழியும் இல்லை. இது கிறிஸ்துவின் மனிதமாம்சமாகுதலை மிகுந்த உட்கருத்துவாய்ந்ததாக்குகிறது! கிறிஸ்துவின் மனிதமாம்சமாகுதலில், முதல்முறையாக, தேவன் தம்மையே மனிதனோடு இணைத்துக்கொண்டு, கலந்திணைத்துக்கொள்ளமுடிந்தது. இந்த பூமியில் வாழ்ந்ததிலேயே பரிபூரணமான ஒரே மனித வாழ்க்கைதான் அதின் விளைவாக இருந்தது. நற்செய்தி என்னவென்றால், இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனிதனுக்குள் மட்டும் நுழையவேண்டும் என்பது தேவனுடைய விருப்பமல்ல. விசுவாசிக்கிற எல்லாருக்குள்ளும் அவர் தம்மை பகிர்ந்தளிக்குமாறு, கிறிஸ்துவினுடைய மீட்பின்மூலம், மனிதனுடைய பாவம் என்ற பிரச்சனையை அவர் நீக்கிவிட்டார் (யோவான் 3:15).

முக்கியமான விஷயங்கள்: நம் நிறைவான இரட்சிப்புக்காக அநேக அம்சங்களில் கிறிஸ்துவையும், அவருடைய நபரையும் வேலையையும்பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.).

பின்புல வாசிப்புக்காக: The Conclusion of the New Testament, Message 26, pp. 287-288.

ஒப்பீடுகள்: Life-study of Matthew, Message 69, pp. 798-799; Life-study of Mark, Message 46, p. 402; The Conclusion of the New Testament, Message 26, pp. 287-288; How to be a Coworker and an Elder, Chapter 1.

 

Jump to section