கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல்
பகுதி 9
✵பாடம் 10 – 18
தேவன் மனிதனை வந்தடைந்திருக்கிறார்!
குறிக்கோள்: மனிதனை வந்தடைவதற்கான தேவனுடைய குறிக்கோளைக் கிறிஸ்து தம் வழிமுறையின் மூலமாக நிறைவேற்றினார் என்பதைக் காண்பதற்கு.
பொருட்சுருக்கம்: இன்று உயிர்த்தெழுதலில் கிறிஸ்துவே, ஆவியானவராக மனிதனுக்குள் வந்தடையும் இந்தப் பதனிடப்பட்ட மூவொரு தேவனின் வந்தடைதலாக இருக்கிறார். கிறிஸ்து உயிர்த்தெழுதலில் ஆவியானவராக ஆகியிருப்பது மட்டுமல்லாமல்; பரமேறுதலில், அவர் எல்லா மனிதர்களும் தம்மைப் பெறக்கூடுமாறு, மாம்சமான யாவர்மேலும் இந்த ஆவியானவரை வெளியூற்றினார். நித்தியத்தில் தேவன் திட்டமிட்டு விரும்பியிருந்தது எதுவோ, அது கிறிஸ்துவின் வழிமுறையின் முழுமையாக்குதலில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இறுதியாக, தேவன் மனிதனை வந்தடைந்திருக்கிறார்! தம் மரணத்தின் மூலமாக, கிறிஸ்து ஒவ்வொரு தடையையும் அகற்றினார், மேலும் தம் உயிர்த்தெழுதலில், அவர் தமக்குத் திறக்கும் அனைவருக்குள்ளும் இந்தப் பதனிடப்பட்ட மூவொரு தேவ-மனிதனாக நுழையக்கூடுமாறு அவர் ஆவிமயமாக ஆனார். எனவே, தேவன் இப்போது மனிதனுக்குள் பாய்ந்தோடுகிறார். அவரது வழிமுறையே, தேவன் மனிதனை வந்தடைந்து, அவனுக்குள் நுழைவதற்குப் பயன்பட்ட வாய்க்காலாக இருந்தது. இன்று, தேவன் இன்னும் நம்மை வந்தடைந்துக் கொண்டிருக்கிறார். அவர் நம்மை வந்தடைந்து, நம் ஆவிக்குள் நுழைந்திருந்தாலும், அவர் இன்னும் நம் ஆள்தத்துவத்தின் ஒவ்வொரு பகுதியையும், மையத்திலிருந்து சுற்றுவட்டம் வரை வந்தடைடைய வேண்டும். இதை அவர் செய்வார், ஆயினும்கூட நம் ஒத்துழைப்பின் மூலம் அவருடைய பரவுதலை நாம் துரிதப்படுத்த முடியும். இறுதியில், தேவனுடைய வந்தடைதல் எல்லாவற்றின் விளைவாக, தேவன் தம்மையே நம்முடன் கலந்திணைப்பதன் விளைபயனாகிய புதிய எருசலேமே இருக்கும்.
பின்புலம்: இந்தக் குறிக்கோளில் இளம் வாலிபர்களின் பங்கு, வெறுமனே பெற்றுக்கொள்வதே ஆகும். நம் ஜீவனாகவும், ஜீவ நிரப்பீடாகவும் இருக்கப் பதனிடப்பட்டிருக்கும் கர்த்தரை அனுபவித்துமகிழ்வதே நம் வேலை என்று அவர்களுக்கு நினைவுபடுத்தப்பட வேண்டும். சத்தியம் நமக்கு நன்கு பரீட்சியமானதாக இருந்தாலும், நாம் எண்ணற்ற முறை அதைக் கேட்க வேண்டியிருந்ததால், சகோதரர் லீ அதை நம்மிடம் எண்ணற்ற முறை பேசினார். நம் இளம் வாலிபர்களுக்கும் அப்படித்தான் (இது பொருந்தும்).
அதிகாரம்: யோவான் 20.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
இந்தப் பாடத்தில், சேவிப்பவர், மனிதனை வந்தடைவதற்கும், அவனுக்குள் நுழைவதற்குமான தேவனுடைய தீவிர விருப்பத்தைக் கொண்டும், எவ்வாறு கிறிஸ்து தம் வழிமுறையின் மூலமாக ஒவ்வொரு தடையையும் நீக்கி இதை நிறைவேற்றினார் என்பதைக் கொண்டும் இளம்வாலிபர்களுக்குக் கருத்துப்பதிவை ஏற்படுத்த தன்னால் சாத்தியமான அனைத்தையும் செய்தாக வேண்டும். தேவன் இப்போது மனிதனில் இருக்கிறார்! இதுவே யுகங்களின் விருப்பத்தின் நிறைவேறுதல். தேவன் மனிதனில் இருந்தால், அவர் திருப்தி அடைகிறார்,மேலும் எல்லாம் சரியாகிவிடும்.
I. மனிதனுக்குள் நுழைந்து, அவனுக்கு எல்லாமாக ஆகுவதே, நித்தியத்தில் தேவனின் ஏக்கமாக இருந்தது—எரே. 2:13; ஆதி. 2:9, 16; எபே. 1:6, 10
மனிதனுடன் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே தேவனின் விருப்பமாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது. எபேசியர் 1 “தம் சித்தத்தின் நல்லின்பம்” மற்றும் “தம்மில் தீர்மானித்திருந்த தம் நல்லின்பம்” பற்றி பேசுகிறது (எபே. 1:6, 10, கிரே.). தேவனுடைய நல்லின்பம், தம்மையே மனிதனுக்குள் பகிர்ந்தளிப்பதே ஆகும். இதற்காகவே கடவுள் கடந்த நித்தியத்தில் நம்மை முன்னறிந்து, கிறிஸ்து தேவன் நம்மைக் கடந்த நித்தியத்தில் முன்னறிந்து, இயேசு கிறிஸ்துவில் தெரிந்துகொண்டு, “நம்மை….குமாரத்துவத்திற்கென்று முன்குறித்திருக்கிறார்” (எபே. 1:4, 6, கிரே.). கடந்த நித்தியத்தில், தேவன் தம்மையே உங்களுக்குள் பகிர்ந்தளிக்க விரும்பினார் மற்றும் திட்டமிட்டார்!
II. காலத்தில், தேவன் தம் விருப்பத்தைச் செயல்படுத்த ஆரம்பித்தார்—ஆதி. 1:1; எபே. 3:9–11; வெளி. 4:11
தேவன் ஒரு நல்லின்பத்தைக் கொண்டிருப்பதோடு நின்றுவிடவில்லை. தம் நல்லின்பத்தை அடையவும், தம் இருதயத்தின் வாஞ்சையை நிறைவேற்றவும், அவர் தம்மில் ஒரு குறிக்கோளையும், இந்தக் குறிக்கோளை நிறைவேற்றுவதற்கான ஒரு திட்டத்தையும், ஒரு பொருளாட்சியையும் உருவாக்கினார். கடந்த நித்தியத்தில் தேவன் தாம் மனிதனின் பாவங்களுக்காக மரிப்பதற்கும், மனிதனுக்குள் நுழைவதற்கான இந்தச் சகலத்தையும்-உள்ளடக்கிய ஆவியானவராக ஆகுவதற்கும் அவர் மனுஷீகத்தில் ஊனுருகொள்ளுமாறு தேவையான ஒரு திட்டத்தை ஏற்கெனவே செயல்படுத்தியிருந்தார் (உருவாக்கியிருந்தார்). தேவன் தம் குறிக்கோளை நிறைவேற்றுவதற்கான முதல் படி, அவர் வானங்களையும், பூமியையும், மனிதனையும் சிருஷ்டித்ததுதான் (சக. 12:1). முழு பிரபஞ்சமும், மனிதன் உட்பட அதில் உள்ள சகலமும், தேவனுடைய குறிக்கோளுக்காகவும், அவரது இன்பத்திற்காகவும் சிருஷ்டிக்கப்பட்டன (வெளி. 4:11; ரோ. 11:36). மனிதனைத் தம் சாயலிலும், தம் ரூபத்தின்படியேயும் சிருஷ்டித்த பிறகு (ஆதி. 1:26), தேவன் அவனை ஏதேன் தோட்டத்திலுள்ள ஜீவ விருட்சத்திற்கு முன் நிறுத்தி, மனிதன் தம்மை ஜீவனாக உள்ளே எடுத்துக்கொள்வான் என்று எதிர்நோக்கினார் (ஆதி. 2:9, 16) இருப்பினும், மனிதன் தேவனைத் தேர்ந்தெடுக்கவில்லை, மாறாக தேவனை நிராகரிக்கவும், நன்மை தீமை அறியத்தக்க அறிவு விருட்சத்தின் கனியைப் புசித்து, சாத்தானின் பாவமான சுபாவத்தை உள்ளே எடுத்துக்கொள்ளவும் பிசாசால் சபலப்படுத்தப்பட்டான். இதன் மூலம், மனிதன் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டான்.
A. தேவன் மனிதன் தம்மைப் பெறுவதற்கும் உள்ளடக்குவதற்குமான ஓர் ஆவியுடன் அவனை தம் சொந்த சாயலில் சிருஷ்டித்தார்—ஆதி 1:26; சக. 12:1.
B. மனிதன் தம்மைத் தேர்ந்தெடுப்பதற்காக தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள ஜீவ விருட்சத்தால் தேவன் மாதிரியாகக் காட்டப்படுகிறார்—ஆதி. 2:9
C. இருப்பினும், மனிதன் தேவனைத் தேர்ந்தெடுக்கவில்லை, மாறாக அதற்குப் பதிலாக தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டான்—ஆதி. 3:24; ரோ. 3:11-12
III. தேவன் தாமே தம் நித்திய விருப்பத்தை நிறைவேற்ற உள்ளே வந்தார்—மத். 1:23; கொலோ. 2:9
இந்தக் குறிப்புக்காக, தேவன் மனிதனிடமிருந்து எவ்வாறு பிரிக்கப்பட்டார் என்பதை ஓர் உதாரணத்துடன் விளக்க்கிக்காட்டுவது அருமையானதாக இருக்கும். (பகிர்ந்துகொள்பவராகிய) உங்களுக்கும், ஓர் இளம் வாலிபருக்கும் இடையில் பல பொருட்களை இடைமறித்து வைத்து, அதன்பின் அந்த நபரை வந்தடைவதற்கான உங்கள் விருப்பத்தில் இந்தத் தடைகளை ஓரமாக ஒதுக்கித் தள்ளுதல், அவற்றைத் தாண்டிக் குதித்தல் ஆகியன போன்றவற்றின் மூலம் இது செய்து காட்டப்படலாம். இது ஆழமாகக் கருத்துப்பதிவு ஏற்படுத்தக்கூடியதாக இருந்தாக வேண்டும். தேவன் மனிதனை வந்தடைந்து, அவனுக்குள் நுழைய எவ்வளவாய் விரும்புகிறார்! இதுவே தேவனை உந்தித்தள்ளுகிறது, உக்குவிக்கிறது. அவர் நம்மை நேசிக்கிறார், நம்முடன் ஒன்றாக இருக்க விரும்புகிறார், மேலும் அவர் நம்மை வந்தடையும் வரை இளைப்பாறுதலில் இருக்க மாட்டார். (அவர் நம்மை வந்தடைதலே, அவர் நம்மைக் காப்பாற்றுதலும் ஆகும், ஏனெனில் அவர் இன்றி, நாம் மாயையே, நம் வாழ்வுகள் வெறுமையானவையும் அர்த்தமற்றவையுமே, மேலும் நாம் நித்தியத்திற்கும் பாழாகிவிடுவோம்.)
A. மரணத்தின் மூலமாக அவர் மனிதனுடைய பாவத்தை நீக்கிப்போட்டு, மனிதனை தேவனிடமிருந்து பிரித்த ஒவ்வொரு தடையையும் அகற்றிவிடவும் கூடுமாறு அவர் ஒரு மனிதன் ஆனார்—மத். 4:16; யோவான் 1:29; எபி. 9:26.
மனிதனை வந்தடைய கிறிஸ்து இரண்டு பிரதான படிகளை எடுத்தார். இந்த இரண்டு பிதரான படிகள், இரண்டு “ஆகுதல்கள்” ஆகும். முதல் படி, அவர் மாம்சமாக ஆகுவதற்கு, ஒரு மனிதனாக ஆகுவதற்கு இருந்தது (யோவான் 1:1, 14).
B. அவர் மனிதனுக்குள் நுழையக்கூடுமாறு, அவர் ஜீவன்–தரும் ஆவியானவராக ஆகுவதற்கு உயிர்த்தெழுந்தார்—1 கொரி. 15:45; யோவான் 7:38-39
கிறிஸ்துவின் இரண்டாவது பிரதான படியும், அவரது இரண்டாவது “ஆகுதல்” ஆகும். உயிர்த்தெழுதலில், கடைசி ஆதாமாகிய கிறிஸ்து “ஒரு ஜீவன்-தரும் ஆவியானவராக” ஆனார் (1 கொரி. 15:45, கிரே.). இந்த இரண்டு பிரதான படிகள் மூலம் தேவன் மனிதனை வந்தடைந்திருக்கிறார். இந்த ஜீவன்-தரும் ஆவியானவரே “இந்த ஆவியானவர்” (யோவான் 7:39, கிரே.), சகலத்தையும்-உள்ளடக்கிய ஆவியானவர் (பிலி. 1:19 மற்றும் footnotes 3-4). இந்த ஜீவன்-தரும் ஆவியானவரே, மனிதனை வந்தடையும் மூவொரு தேவன். யோவான் சுவிசேஷத்தில், கர்த்தர் தம்மையே விசுவாசிகளுக்கு ஜீவ அப்பமாக ஆவியானவர் மூலம் கொடுப்பதாகவும் (யோவான் 6:35, 63), தம்மையே விசுவாசிகளுக்கு ஜீவத் தண்ணீராகக் கொடுப்பதாகவும் (யோவான் 4:10; 7:38) ), விசுவாசிகளிடம் “வேறொரு தேற்றரவாளனாக” திரும்பி வருவதாகவும் வாக்குத்தத்தம் பண்ணினார் (யோவான் 14:16, 18; 15:26). இந்த வாக்குத்தத்தங்கள் அனைத்தும், மூவொரு தேவன் மனிதனை வந்தடைவதைப் பற்றியவையாக இருந்தன. இவை அனைத்தும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மாலையில், அவர் வந்து, தம் சீஷர்களுக்குள் ஜீவன்-தரும் ஆவியானவராகத் தம்மையே சுவாசித்து ஊதிய போது நிறைவேற்றப்பட்டன (யோவான் 20:22).
C. விசுவாசிக்கிற எவரும் அவருக்குத் திறந்து, அவரைப் பெறக்கூடுமாறு, மாம்சமான யாவர்மேலும் அவர் தம்மையே இந்த ஆவியானவராக வெளியூற்றுவதற்காக அவர் பரமேறினார்—அப். 2:15-17, 21, 33; 1 கொரி. 12:13 (ஒப். அப். 1:5)
ஆவியானவராக சீஷர்களை வந்தடையும் தம் வந்தடைதலை நிறைவுசெய்வதற்காக, கிறிஸ்து பரலோகங்களுக்கு ஏறிச்சென்று, சுவிசேஷம் பிரசங்கிக்கப்படவும், மனிதர்கள் தம்மை ஜீவன்-தரும் ஆவியானவராகப் பெறவும் கூடுமாறு அவர் தம்மையே இந்தப் பொருளாட்சிரீதியான ஆவியானவராக மாம்சமான யாவர்மேலும் வெளியூற்றினார். (இந்தக் காரியம் பாடம் 16 இல் விவரிகப்பட்டது அதோடு அலகு 10, பாடம் 3 இல் மீண்டும் விவரிக்கப்படும்.)
IV. உயிர்த்தெழுதலில், கிறிஸ்து தம் விசுவாசிகளுக்குள் தம்மையே சுவாசித்து ஊதினார், மேலும் பரமேறுதலில், அவர் மாம்சமான யாவர்மேலும் தம் ஆவியானவரை வெளியூற்றினார்—யோவான் 20:22; அப். 2:33
உயிர்த்தெழுதலில் உள்ள கிறிஸ்து தம் சீஷர்களுக்குள் சுவாசித்து ஊதியபோது, அவர் அவர்களிடம், “பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினார். வெளித்தோற்றத்தில் சிறியதாகத் தோன்றிய இந்த கணநேரத்திற்குரிய நிகழ்வானது, பிரபஞ்சத்தில் தேவனுடைய நகர்வின் வரலாற்றில் மாபெரும் உட்கருத்து வாய்ந்த ஒரு மகத்தான நிகழ்வாக இருந்தது. இந்த ஆவியானவரே மனிதனை வந்தடையும் சாட்சாத்து பதனிடப்பட்ட மூவொரு தேவனாக இருந்தார் (யோவான் 7:39). அந்தக் கணநேரத்தில், தேவன் தம் விசுவாசிகளில் சிலருக்குள் நுழைந்தார். அதுவரை, அவர் ஒரு மனிதனுக்குள் (இயேசு) அடைத்துவைக்கப்பட்டிருந்தார். வீழ்ச்சியின் காரணமாக தேவன் எந்தப் பாத்திரங்களிடமிருந்து பிரிக்கப்பட்டிருந்தாரோ, இப்போது தேவன் கடைசியில் ஒருவழியாக அவர்களில் சிலரை வந்தடைந்து, அவர்களுக்குள் நுழைந்திருந்தார். இந்த சீஷர்கள்தான் தேவனை இவ்விதமாய் முதன்முதலில் அனுபவித்தவர்களாக இருந்தனர்! கிறிஸ்து தம் மரணத்தின் மூலமாக இந்த எதிர்மறையான பிரச்சனைகளை அகற்றியிருந்து, ஜீவன்-தரும் ஆவியானவராக ஆகுவதற்கு மரணம் மற்றும் உயிர்த்தெழுதலினூடாய்ப் பதனிடப்பட்டிருந்ததால் இது சாத்தியமானதாக இருந்தது. முழுநிறைவேற்றமடைந்த, பதனிடப்பட்ட, சகலத்தையும்-உள்ளடக்கிய ஆவியானவராக, தேவன் இன்று மனிதனால் பெற்றுக்கொள்ளப்பட முடியக்கூடிய ஒரு வடிவில் இருக்கிறார். மேலும், தம்மையே ஆவியானவராக வெளியூற்றுவதற்குப் பரமேறுதலிலுள்ள கிறிஸ்துவுக்குக் கொடுக்கப்பட்டபோது, அது நாம் அவருக்காக வேலை செய்யக்கூடுமாறு வல்லமைக்காக இருந்தது மட்டுமல்லாமல்; அது மனிதர்கள் அவரைப் பெற்றுக்கொள்ள முடிவதற்காக இருந்தது! ஆவியானவரின் ஞானஸ்நானம், நாம் இந்த ஆவியானவரைப் பருகுவதற்காகவே உள்ளது. அல்லேலூயா! என்னே ஒரு சாதனை! தம் மாம்சமாகுதல், மனித வாழ்க்கை, மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல் மூலமான கிறிஸ்துவின் சாதனையே இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒப்பற்ற சாதனையாகும், ஏனெனில் அது தேவனுடைய நித்திய குறிக்கோளை நிறைவேற்றியது.
V. இன்று தேவன் நம்மை வந்தடைந்திருக்கிற அதோடு இன்னும் நம்மை வந்தடைந்துக் கொண்டிருக்கிற தேவனாக இருக்கிறார்—கலா. 3:2–3, 5
உங்களுக்கு நேரம் இருந்தால் அதோடு நீங்கள் பாரப்படுத்தப்பட்டால், இளம் வாலிபர்களுக்கு இந்தப் பாடத்தைப் பிரயோகிக்க நீங்கள் இந்தப் பின்வரும் குறிப்புகளைப் பயன்படுத்தலாம். அவரது வழிமுறையின் மூலமாக, தேவன் மனிதனை வந்தடைந்திருக்கிறார். இருப்பினும், வெறுமனே நம் ஆவிக்குள் நுழைவதோடு மாத்திரம் அவர் நின்றுவிட விரும்புவதில்லை. அங்கிருந்து அவர் நம் ஆள்தத்துவத்தின் ஒவ்வொரு பகுதிக்குள்ளும் பரவ விரும்புகிறார் (எபே. 3:17). அவர் நம்மை ஒரேதரம் இரட்சிப்பதன் மூலம் நம்மை வந்தடைய விரும்புவது மட்டுமல்லாமல்; அவர் நம் கணந்தோறுமுள்ள நிரப்பீடாகவும் இருக்கிற ஒவ்வொரு நொடிக்குமான நிரப்பீடாக ஆகுவதற்கு, நம் தினசரி வாழ்வில் நமக்கு எல்லாமுமாக ஆகுவதற்கு விரும்புகிறார். ஆ, மூவொரு தேவன் மனிதனை வந்தடைந்ததற்காக அவருக்குத் துதி! “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக” (2 கொரி. 13:14).
A. தேவன் நம்மை வந்தடைந்திருக்கிறார், மேலும் இப்போது நமக்குள், அதாவது நம் ஆவிக்குள் வசிக்கிறார்—ரோ. 8:9–11; 2 தீமோ. 4:22
B. தேவன் இன்று நம் உள்ளான பகுதிகள் எல்லாவற்றிற்குள்ளும் பரவுவதன் மூலம் தம் வந்தடைதலை நிறைவுசெய்கின்றார்—2 கொரி. 3:3, 18; 5:20
C. தேவன் தம்மையே மனிதனுக்குள்ளும் மனிதனிலும் பாய்ந்தோடச் செய்தல், தேவன் மனிதனை வந்தடைதலின் உச்சநிலையான விளைபயனாகிய புதிய எருசலேமை உற்பத்திசெய்கிறது—யோவான் 4:14; வெளி. 21:2; 22:1-2
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: இந்தப் பாடத்தில் நாம் இரண்டு பிரதான குறிப்புகளைக் கொண்டு இளம் வாலிபர்களுக்குக் கருத்துப்பதிவை ஏற்படுத்த விரும்புகிறோம். முதலாவது குறிப்பு, மூவொரு தேவன் பதனிடப்பட்டு முழுநிறைவேற்றப்பட்டார் என்பதே. அவரது வழிமுறையின் படிகளை அவர்களுடன் மறு-ஆய்வு செய்யவும்: மாம்சமாகுதல், மனித வாழ்க்கை, சிலுவைமரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல். இந்த வழிமுறையின் படிகள் நிறைவுசெய்யப்பட்டதும், அவர் முழுநிறைவேற்றமடைந்தார் என்பதே அதன் அர்த்தம். மூவொரு தேவனின் வழிமுறை, கர்த்தர் இந்த ஆவியானவராக ஆகுவதில் முழுநிறைவேற்றப்பட்டது. இன்று இந்த ஆவியானவரே பதனிடப்பட்ட மூவொரு தேவனின் முழுநிறைவேற்றமாக இருக்கிறார். இத்தகைய ஓர் ஆவியானவராக, அவர் உயிர்த்தெழுதலின் நாளில் தம் சீஷர்களுக்குள் சுவாசித்து ஊதப்பட்டார் (யோவான் 20:22), பெந்தெகொஸ்தே நாளில் சபையின் மீது வெளியூற்றப்பட்டார் (அப்போஸ்தலர் 2:33). இரண்டாவது குறிப்பு, தேவன் மனிதனை வந்தடையும் இந்தக் காரியத்திற்கு இன்னொரு பக்கம் இருப்பதை இளம் வாலிபர்களுக்குக் காட்டுங்கள். மனிதன் தேவனுடைய சாயலிலும் ரூபத்திலும் ஒரு மூன்று-பகுதி பாத்திரமாக, ஒரு “தேவ-பாட்டிலாக” (தேவ-குப்பியாக) சிருஷ்டிக்கப்பட்டான். ஆனால் தேவனால் நிரப்பப்படுவதற்குப் பதிலாக, மனிதன் சாத்தானின் ஜீவனையும் சுபாவத்தையும் தனக்குள் எடுத்துக்கொண்டான். இது மனிதனை முற்றும்முடிய விழுந்துபோக வைத்தது. மனிதனின் நிலைமை மிகவும் கீழ்நிலையில் (அடிமட்டத்தில்) இருந்தது—கலகக்காரன், பாவமுள்ளவன், மரித்தவன். இந்தப் பாழடைந்த மனிதனை எவ்வாறு தேவன் வந்தடைய முடியும்? தேவனுடைய வழிமுறையின் மூலமாக அவர் தமக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள அனைத்து தடைகளையும் நீக்கி, மனிதனால் பெறப்படுவதற்கு இந்த ஆவியானவராக ஆனார். நம் இருதயத்தைக் கர்த்தரிரிடம் திருப்புவதன் மூலமும், நம் ஆவியைப் பயிற்சிசெய்வதன் மூலமும் நாம் கர்த்தருக்குத் திறக்கும்போது, நாம் அவரை ஆவியானவராக நம் ஆவிக்குள் பெறுகிறோம். இருப்பினும், அவர் அங்கு நின்றுவிடுவதில்லை; அவர் நம் ஆவியிலிருந்து நம் ஆத்துமாவிற்குள்ளும், இறுதியில் நம் சரீரத்திற்குள்ளும்கூட நிரம்பி வழிய விரும்புகிறார் (ரோ. 8:11). இந்த அற்புதமான வழிமுறையை, ஒன்றுக்கொன்று உள்ளுக்குள் பொருந்தக்கூடிய மூன்று சிறிய டப்பர்வேர் கிண்ணங்களின் பயன்பாட்டின் மூலம் உதாரணங்காட்டி விளக்கப்படலாம். இந்த ஆவியானவரை உதாரணங்காட்டி விளக்குவதற்கு ஒரு குடம் நிறைய தண்ணீரை எடுத்து, மற்ற இரண்டு கிண்ணங்களுக்குள் அமர்ந்திருக்கும் அதி சிறிய கிண்ணத்திற்குள் ஊற்றவும். இந்தக் கிண்ணம் நிறைந்து, தண்ணீரால் நிரம்பி வழிகிறபோது அது இரண்டாவது கிண்ணத்தையும், அதன்பின் மூன்றாவது கிண்ணத்தையும் நிரப்பும். நம் முழு ஆள்தத்துவத்தையும் ஆதாயப்படுத்த நம் ஆவியிலிருந்து வெளியே பாய்ந்தோடுவதற்கான தேவனின் விருப்பத்தைக் கொண்டு இளம் வாலிபர்களுக்குக் கருத்துப்பதிவை ஏற்படுத்த, இது போன்ற ஓர் எளிய உதாரணம் மிகவும் பயனுள்ளதாக இருக்க முடியும். எவ்வாறு தங்கள் இருதயத்தைக் கர்த்தரிடம் திருப்புவது என்பதை இளம் வாலிபர்களுடன் பயிற்சிசெய்வதன் மூலம் முடிக்கவும். மூவொரு தேவனின் உச்சநிலையான வந்தடைதலாக ஆவியானவரைப் பெறுவது எவ்வளவு எளிது என்பதைக் காட்டுவதற்கு, ஒன்றுசேர்ந்து கர்த்தரைக் கூப்பிடுவதில் சிறிது நேரம் செலவிடுங்கள். நீங்கள் அறையைச் சுற்றிச் சென்று, இளம் வாலிபர்கள் பலமுறை கர்த்தரைக் கூப்பிட வைக்கவும், ஒவ்வொரு முறையும் முன்பு இருந்ததை விட பலமாகக் கூப்பிட வைக்கவும். “கர்த்தாவே, ஆவியானீர்! இவ்வளவு அருகிலே, அற்புதமாகக் கிடைக்கின்றீர்! உம்மைப் போற்றுகின்றேன்” (பாடல்கள் , #539, சரணம்)!
சுவிசேஷ செயலாக்கம்: இந்தப் பாடத்தின் உள்ளடக்கம் சுவிசேஷமே. ரோம எண் ஒன்று ஒரு நல்ல அஸ்திபாரத்தை இடுகிறது, இது மனிதனின் எல்லாமுமாக ஆகுவதற்கு மனிதனுக்குள் நுழைவதற்கான, கடந்த நித்தியத்தில் உள்ள தேவனின் ஏக்கத்தை நமக்குக் காட்டுகின்றது. அத்தகைய ஓர் ஏக்கத்தின் காரணமாக, அத்தகைய ஒரு நல்லின்பத்தின் காரணமாக, தேவன் மனிதனை வந்தடைவதற்கும், அவனுடன் ஒன்றாக இருப்பதற்குமான தம் இருதய விருப்பத்தைப் பெற சில திட்டவட்டமான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார் என்பதை ரோம எண் இரண்டில் நாம் காணலாம். இருப்பினும், மனிதன் தவறான மரத்தில் பங்குகொண்டான், அதனால் விழுந்துபோய், தேவனின் எதிரியுடன் ஒன்றாகி, தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டான் என்பதையும் இங்கே நாம் காண்கிறோம். மனிதனை வந்தடைவதற்கான தம் விருப்பத்தால் உந்தப்பட்டு, தேவன் தாமே ஒரு மனிதனாகி, (மனிதனின் பாவங்களை நீக்கிப்போடவும், மனிதனை தேவனிடமிருந்து பிரித்த ஒவ்வொரு தடையையும் அகற்றிவிடவும்) மரணத்தினூடாய்க் கடந்துசென்று, ஜீவன்-தரும் ஆவியானவராக ஆகுவதற்கு உயிர்த்தெழுந்து, அவர் தம்மையே இந்த ஆவியானவராக மாம்சமான யாவர்மேலும் வெளியூற்றக்கூடுமாறும், மனிதன் அவருக்குள் விசுவாசித்து, அவர் என்னவாக இருக்கிறாரோ அவை அனைத்தையும் தங்கள் இரட்சிப்பாகப் பெறக்கூடுமாறும் பரமேறினார். இது ரோம எண் மூன்றில் காணப்படலாம். இப்போது, ரோம எண் நான்கில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடியே, ஜீவன்-தரும் ஆவியானவராகிய இந்த உயிர்த்தெழுப்பப்பட்ட மற்றும் பரமேறிய கிறிஸ்து இன்று நம்மால் பெறப்பட முடியம், ஆனால் அதற்கு நாம் அவரது நாமத்தைக் கூப்பிடுவதன் மூலம் அவரை உள் சுவாசிக்க நம் வாயைத் திறக்க வேண்டும் (யோவான் 20:22. ; ஏசா. 12:3-4; ரோ. 10:13). அவரைக் கூப்பிடுங்கள், தேவன் உங்களை வந்தடைவார்!
மிக முக்கியக் காரியங்கள்: நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.); தேவன் தம் பொருளாட்சியை நிறைவேற்ற ஒரு வழிமுறையினூடாய்க் கடந்துசென்றிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுதல் (II.A.3.).
பின்புல வாசிப்பு: The Divine Economy, Chapters 8–9.
REFERENCES: Life-study of John, Messages 44, 46; The Divine Economy, Chapters 1, 3, 8–9, 15.