கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல்

பகுதி 9

✵பாடம் 10 – 18

கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்!

குறிக்கோள்: கிறிஸ்து உயிர்த்தெழுப்பப்பட்டார் என்ற இந்தத் தெளிவான (அப்பட்டமான) மற்றும் மகிமையான உண்மையைக் காண்பதற்கு.

பொருட்சுருக்கம்: கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலே ஒரு விசுவாசியின் நம்பிக்கையின் மையப் பொருளாகும். கிறிஸ்து மனிதனுக்காக மரிப்பதன் மூலமும், உயிர்த்தெழுதலில் தம்மையே மனிதனுக்குள் பகிர்ந்தளிப்பதன் மூலமும் மனிதனைச் சேவிக்க வந்தார். சுவிசேஷங்களில் கர்த்தரின் உயிர்த்தெழுதல் பற்றிய விவரணங்கள், இந்த உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுடனான சீஷர்களின் முதல் தொடர்பின் ஓர் அற்புதமான காட்சியை சித்தரிக்கின்றன. மூன்று பெண்கள் இந்தக் காலியான கல்லறையைக் கண்டுபிடித்த பிறகு, (இந்தப் பெண்களில் ஒருவளாகிய) மகதலேனா மரியாள் சென்று பேதுரு, யோவான் ஆகியோரிடம் சொன்னாள், இவர்கள் புலனாய்வு செய்ய அவளுடன் கல்லறைக்குத் திரும்பிச் சென்றனர், பின்னர் விட்டுசென்றனர். இருப்பினும், மரியாள் கல்லறையில் தங்கியிருந்தாள், சாட்சாத்துக் கர்த்தரைக் கண்டுபிடிப்பதில் மட்டுமே அக்கறை கொண்டிருந்தாள். அவளது தேடுதலின் நிமித்தம், கர்த்தர் அவளுக்குத் தரிசனமானார், புதிதாக உயிர்த்தெழுந்த கர்த்தரைக் காணும் முதல் நபராக அவளை ஆக்கினார். பின்னர் அதே நாளில், ஒரு சாலையில் நெடுகே நடந்து சென்றுக்கொண்டிருந்த தம் விசுவாசிகளில் இருவருக்கும், அதன்பின் ஒரு வீட்டில் ஒன்றுசேர்ந்துக் கூடியிருந்த பதினோரு பேருக்கும் கர்த்தர் தரிசனமானார், அங்கே அவர் அவர்களுடன் உணவருந்தினார். பின்னர் அவர், சர்வ சிருஷ்டிப்புக்கும் சுவிசேஷத்தை பறைசாற்றும்படி தம் சீஷர்களுக்குக் கட்டளையிட்டார், ஏனெனில் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றவன் எவனும் இரட்சிக்கப்படுவான்.

பின்புலம்: மரணத்தால் உயிர்த்தெழுதல் ஜீவனைப் பிடித்துவைக்க முடியாது. இந்த உண்மை சுவிசேஷங்களில் காட்டப்பட்டுள்ளது. கிறிஸ்து கண்ணியத்துடன் மரணத்தை எதிர்கொண்டார், மனப்பூர்வமாக சிலுவைக்குச் சென்றார், வெற்றிகரமாக உயிர்த்தெழுந்தார். நாம் எதிர்கொள்ளும் எந்த ஒரு மரண சூழ்நிலையாலும் நாம் ஒருபோதும் சோர்வடையக்கூடாது. கிறிஸ்து மரணத்தை ஜெயங்கொண்டிருக்கிறார் அதோடு இப்போது உயிர்த்தெழுதல் ஜீவனாக நமக்குள் இருக்கிறார்.

அதிகாரம்: மாற்கு 16.

போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:

இந்தப் பாடத்தைப் பகிர்வதற்கு முன், பாடங்கள் 12 மற்றும் 14ஐ வாசிக்க மறக்காதீர்கள், ஏனெனில் அவை அதே பத்திகளில் சிலவற்றையும் உள்ளடக்குகின்றன.

I. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலே நம் கிறிஸ்தவ நம்பிக்கையின் மையப் பொருளாகும்—ரோ. 10:9; 4:25; 1 கொரி. 15:1-4; மாற்கு 16:14-15; லூக்கா 24:46

ஒரு விசுவாசியின் நம்பிக்கையின் மையப் பொருள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலே ஆகும். இரட்சிக்கப்படுவதற்கு நாம், தேவன் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பியிருக்கிறார் என்று நம் இருதயத்தில் விசுவாசித்தாக வேண்டும் (ரோ. 10:9). ஒருவன் இரட்சிக்கப்பட வேண்டுமானால், அவன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டாக வேண்டும். இயேசு மரித்து இருந்தார் என்று ஒருவன் நினைத்தால் அவன் அவரைக் கூப்பிடுவானா? கர்த்தர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று நாம் நம்பவில்லை எனில், நாம் அவரைத் தொடர்புகொள்ள நாட மாட்டோம் (ரோ. 10:14). கிறிஸ்து உயிர்த்தெழுதலில் இருக்கிறார் என்பதை நாம் ஒப்புக்கொள்ளவில்லை எனில், நாம் அவரை நோக்கிக் கூப்பிடுவதற்கும், அவரைப் பெறுவதற்கும் நம் ஆள்தத்துவத்தைத் திறக்க மாட்டோம். மேலும், இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்படவில்லை எனில், நம் விசுவாசம் வீண் என்று பவுல் நமக்குத் தெளிவாகச் சொல்கிறான் (1 கொரி. 15:14). கிறிஸ்து நம் நீதிப்படுத்தலுக்காக உயிரோடு எழுப்பப்பட்டார் (ரோ. 4:25). தேவன் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்புதல், அவர் நம் சார்பான கிறிஸ்துவின் பதிலீடான மரணத்தில் திருப்தியடைகிறார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. கிறிஸ்து உயிரோடு எழுப்பப்படவில்லை எனில், நாம் நீதிப்படுத்தப்படுவதில்லை. எனவே, நாம் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்போது, நாம் பறைசாற்றும் இந்த நம்பிக்கையின் மையப் பொருள்,”கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்!” என்பதே  (ஒப். அப். 2:32).

A. கிறிஸ்து மனிதனுக்காக மரிப்பதன் மூலமும், உயிர்த்தெழுதலில் தம்மையே மனிதனுக்குள் பகிர்ந்தளிப்பதன் மூலமும் மனிதனைச் சேவிக்க வந்தார்—மாற்கு 10:45

மாற்குவின் சுவிசேஷம், தேவனையும் மனிதனையும் சேவிக்க வந்தவராக இயேசுவை சித்தரிக்கிறது. எனவே, மாற்கு சித்தரிக்கும் கிறிஸ்துவை அடிமை-இரட்சகர் என்று நாம் குறிப்பிடலாம். இந்த அடிமை-இரட்சகரின் மிகப்பெரிய சேவை அவரது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகும். இயேசு தம் மீட்கும் சேவையில் பாவம், பாவங்கள், நம் பழைய மனிதன், சாத்தான், உலகம் மற்றும் மற்ற எல்லா எதிர்மறையான காரியங்களிலிருந்தும் நம்மை விடுவிக்க சிலுவையில் மரித்தார். அவனது மரணத்தின் மூலமாகதான், கர்த்தர் தமக்குள் அடங்கியிருந்த தெய்வீக ஜீவனையும் விடுவித்தார். கிறிஸ்துவின் மரணம் அவருடைய உயிர்த்தெழுதலுக்கான வழியைத் திறந்தது; மரணத்தின் மூலமாக அவர் உயிர்த்தெழுதலுக்குள் நுழைந்தார். நாம் இந்த உயிர்த்தெழுதல் ஜீவனால் வாழக்கூடுமாறு, இந்த தெய்வீக ஜீவனை நமக்குள் ஊழியஞ்செய்வதன் மூலம் அவர் தம் உயிர்த்தெழுதலில் இப்போது தேவனைச் சேவிக்கிறார். கிறிஸ்து நமக்காக தேவனுக்கு இப்படிப்பட்ட ஓர் ஊழியராக (சேவிப்பவராக, வேலைக்காரராக) ஆகிவிட்டதால், தேவனுடைய நித்திய குறிக்கோளின் நிறைவேற்றத்திற்காக நாம் தேவனிடம் பழையபடி திரும்ப மீட்டுத்திருப்பப்பட்டிருக்கிறோம். இத்தகைய ஓர் அடிமை-இரட்சகருக்காக கர்த்தருக்கு துதி! நாம் அவருடன் முழுவதும் உயிர்த்தெழுதலில் இருக்கும் வரை, இன்று அவர் நம்மை தம் வழிமுறைக்குள் கொண்டுவருகின்றார்.

B. கிறிஸ்து அடிமைஇரட்சகராக நம் நீதிப்படுத்துதலுக்காக உயிர்த்தெழுப்பப்பட்டார்—ரோ. 4:25; லூக்கா 9:22; மத். 16:21

C. கர்த்தரின் உயிர்த்தெழுதலை உறுதிப்படுத்துவதற்கான வழி, உயிர்த்தெழுந்த கர்த்தராக அவரைத் தொடர்புகொள்வதே ஆகும்—ரோ. 10:13.

இந்த உயிர்த்தெழுந்தக் கர்த்தருடைய நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். இது ஏனெனில், நாம் அவரது நாமத்தை நோக்கிக் கூப்பிடும்போது, நாம் இந்த உயிர்த்தெழுந்தவரின் நபரைத் தொடுகிறோம். இருப்பினும், விசுவாசிக்காதவர்கள் உயிர்த்தெழுதலில் கர்த்தருடைய அற்புதமான நிஜத்தை அனுபவிக்க முடியாது (ரோ. 10:11–12). நாம் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் விசுவாசிப்பதால், இன்று நாம் இரட்சிக்கப்படுகிறோம்.

II. வாரத்தின் முதல் நாளிலே கர்த்தர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்—யோவான் 20:1

A. அதிகாலையில் இந்தக் காலியான கல்லறை மூன்று பெண்களால் கண்டுபிடிக்கப்பட்டது—மாற்கு 16:1-8

  • மூன்று பெண்களும் கர்த்தருடைய சரீரத்திற்கு சுகந்தவர்க்கமிடும்படி (சரீரத்தை அபிஷேகம்செய்யும்படி) வந்திருந்தார்கள்—மாற்கு 16:1

கர்த்தரின் மூன்று அன்பர்களாகிய (காதலர்களாகிய) மகதலேனா மரியாளும், “யாக்கோபின் தாயாகிய” மரியாளும் (இயேசுவின் தாய்), சலோமே என்பவளும் இன்னும் இருட்டாக இருந்தபோது எழுந்திருந்து, கர்த்தருடைய சரீரத்திற்கு சுகந்தவர்க்கமிடும்படி (சரீரத்தை அபிஷேகம்செய்யும்படி) தாங்கள் விலைக்கு வாங்கியிருந்த சுகந்தவர்க்கங்களுடன் கல்லறைக்கு விரைந்துக்கொண்டிருந்தனர்.

  • கல்லறையின் வாசலில் இருந்து கல் உருட்டி தள்ளப்பட்டிருப்பதை இந்த மூவரும் கண்டனர்—மாற்கு 16:4

நுழைவாயிலில் ஒரு மாபெரும் கல் உருட்டப்பட்டு மூடப்பட்டிருந்ததால், அவர்கள் தாங்கள் நெருங்கியதும், அவர்கள் எப்படி கர்த்தருடைய சரீரத்தை அணுகுவதற்கு உள்ளே நுழையப்போகின்றனர் என்று ஆச்சரியப்பட்டனர். (அது நாமாக இருந்திருந்தால், கல்லறை ஏற்கனவே மூடப்பட்டு அதற்கு முத்திரை வைக்கப்பட்டிருந்தது என்பதை உணர்ந்தறிந்து, எதையும் செய்ய முயற்சிப்பதற்கான எந்த எண்ணமும்கூட நமக்கு இல்லாமல் இருந்திருக்கக்கூடும்.) ஆனால், அவர்கள் ஆச்சரியப்படும் வகையில், கல் உருட்டி தள்ளப்பட்டிருந்ததைக் அவர்கள் கண்டார்கள்! இவ்வாறு, கர்த்தருடைய உயிர்த்தெழுதலின் மகத்தான உண்மையை முதலில் கண்டுபிடித்தவர்கள் மூன்று பலவீனமான மற்றும் முட்டாள்தனமான சகோதரிகள்தான். நாம் அனைவரும் கர்த்தருடைய இத்தகைய “முட்டாள்தனமான” அன்பர்களாக (காதலர்களாக) இருப்போமாக!

  • கல்லறைக்குள் அவர்கள் ஒரு தூதனைக் கண்டார்கள், மேலும் இயேசு உயிர்த்தெழுந்திருந்தார் அதோடு அவர்களுக்கு முன்பாக கலிலேயாவுக்குள் போய்க்கொண்டிருந்தார் என்று சீஷர்களுக்கும்பேதுருவுக்கும்” சொல்லும்படி இவன் அவர்களுக்குக் கட்டளையிட்டான்—மாற்கு 16:5-7

கல்லறைக்குள் இந்தச் சகோதரிகள், வெள்ளையங்கி தரித்திருந்த ஒரு வாலிபனாக தோன்றிய ஒரு தேவதூதன் உட்கார்ந்திருந்ததைக் கண்டு பதற்றமடைந்தனர். இந்த தேவதூதன், கர்த்தர் உயிரோடு எழுப்பப்பட்டிருந்ததை இந்தச் சகோதரிகளுக்கு தெரிவித்தான். அவர்கள் அவரைக் கிடத்தியிருந்த காலியான இடத்தைப் பார்க்கும்படி இவன் இந்தச் சகோதரிகளுக்குச் சொல்லவும்கூட செய்தான். பின்னர் அவன், கர்த்தர் தாம் அவர்களுக்குச் சொல்லியிருந்தது போல், கலிலேயாவில் அவர்களைச் சந்திக்கப் போய்க்கொண்டிருந்தார் என்பதை சீஷர்களுக்கும் “பேதுருவுக்கும்” (கீழே உள்ள சுவிசேஷ செயலாக்கத்தைப் பார்க்கவும்) சொல்லும்படி அவர்களுக்கு அறிவுறுத்தினான். சகோதரிகள் இதைக் கேள்விப்பட்ட போது, அவர்கள் திகிலடைந்து திடுக்கிட்டு நடுங்கிக்கொண்டு கல்லறையை விட்டு வெளியே ஓடினர். (இந்தக் கட்டத்தில், யோவான் சுவிசேஷத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, மகதலேனா மரியாள் பேதுரு மற்றும் யோவானிடம் சென்றனர், அவர்கள் புலனாய்வுசெய்து விசாரித்தனர் ஆனால் மீண்டும் விட்டுசென்றனர். இருப்பினும் மரியாள், கர்த்தருடைய சரீரத்திற்கு என்ன நேர்ந்திருந்தது என்பதை இன்னும் புரிந்துகொள்ள இயலாமல் தோட்டத்தில் தவித்தாள்.)

C. கர்த்தர் முதன்முதலில் மகதலேனா மரியாளுக்குத் தரிசனமானார்—மாற்கு 16:9; யோவான் 20:11-17

கர்த்தர் வாரத்தின் முதல் நாள் அதிகாலையில் எழுந்தருளி, முதன்முதலில் மகதலேனா மரியாளுக்குத் (அவர் அவளிடமிருந்து ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார்) தரிசனமானார். யோவான் 20:11-17 இல் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி, எவ்வாறு கர்த்தர் மரியாளுக்குத் தரிசனமானார் என்ற மனதுருகவைக்கும் கதையை இங்கே சொல்லுங்கள் (இந்த விவரணம் பின்னர் ஒரு பாடத்தில் அதிக விரிவாகப் பரிசீலிக்கப்படும்). பிற்பாடு, மரியாள் தான் கர்த்தரை உயிருடன் பார்த்திருந்ததை இந்தத் துயரமடையும் சீஷர்களிடம் தெரிவித்தாள், ஆனால் (யோவான் 20:8 இல் யோவான் தான் இந்தக் காலியான கல்லறையைப் பார்த்தபோது அவன் நம்பியதாக நமக்குச் சொல்லுகிற போதிலும்) அவர்கள் அவளை நம்பவில்லை.

D. கிராமப்புறங்களில் நடந்துக்கொண்டிருந்த இருவருக்குக் கர்த்தர் பின்னர் தரிசனமானார்—மாற்கு 16:12-13

கர்த்தரைப் பின்பற்றியவர்களில் இருவர் கிராமப்புறங்களில் நடந்துக்கொண்டிருந்த போது கர்த்தர் அவர்களுக்கு மறுரூபமாய்த் (ஒரு வேறு வடிவில்) தரிசனமானார். இந்தச் சகோதரர்கள் தாங்களும் கர்த்தரை உயிருடன் பார்த்திருந்ததாக சீஷர்களிடம் தெரிவித்தனர். இந்தப் பரவசமடைந்த சாட்சிகளையும் சீஷர்கள் நம்பவில்லை.

III. பிற்பாடு கர்த்தர், பதினொரு சீஷர்களும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவர்களுக்குத் தரிசனமானார்—மாற்கு 16:14

கர்த்தர் இறுதியாக பதினொரு சீஷர்களுக்கும் நேரடியாகத் தரிசனமாகி, தம்மைப் பார்த்திருந்தவர்களின் அறிக்கைகளை நம்பாததற்காக அவர்களைக் கடிந்துக்கொண்டார். இந்த நேரத்தில்தான், அவர் அவர்களிடம் தம்மைத் தொட்டுப் பார்க்கவும், தம் காயங்களைக் கூடத் தொட்டுப் பார்க்கவும் கேட்டுக்கொண்டார், மேலும் அவர் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டார், அவர் உயிர்த்தெழுதலில் ஒரு மனிதனாக உண்மையிலேயே அவர்களுடன் இருந்தார் என்பதை நிரூபித்தார்!

A. உயிர்த்தெழுந்த கர்த்தர் சுவிசேஷத்தைப் பறைசாற்றும்படி சீஷர்களுக்குக் கட்டளையிட்டார்—மாற்கு 16:15-16

உயிர்த்தெழுந்த கர்த்தராக, இயேசு தாம் நிறைவேற்றியிருந்ததை (சாதித்திருந்ததை) சர்வ ஜனங்களுக்கும், சர்வ சிருஷ்டிப்புக்கும் கூட பறைசாற்றும்படி தம் சீஷர்களுக்குக் கட்டளையிட்டார்! அவர் தம் உயிர்த்தெழுதலுக்கு சாட்சிகளாக இந்த சீஷர்களை அனுப்பினார் (அப். 1:8, 22; 2:32; 3:15). மனிதனுக்காக மரித்திருந்த இந்த அடிமை-இரட்சகர் இப்போது உயிர்த்தெழுதலில் இருந்தார் என்பதைக் குறித்து அவர்கள் ஜனங்களிடம் சாட்சிப்பகிர்ந்தனர். உண்மையில், இந்த சுவிசேஷமானது உயிர்த்தெழுந்தக் கிறிஸ்து தாமே. என்னே ஓர் அற்புதமான சுவிசேஷம் சீடர்களிடம் இருந்தது!

B. இந்த சுவிசேஷம் சர்வ சிருஷ்டிப்புக்கும் பறைசாற்றப்பட வேண்டியிருந்தது—மாற்கு 16:15

“தம் மரணம், உயிர்த்தெழுதல் மூலம் அடிமை-இரட்சகரால் நிறைவேற்றப்பட்ட தேவனுடைய மீட்பு தேவனுடைய சிருஷ்டிப்பில் முதன்மையானவனாகிய மனிதனுக்காக மட்டுமல்லாமல், சர்வ சிருஷ்டிப்புக்காகவும் இருந்தது என்பதை இது வெளிப்படுத்துகிறது. எனவே, எல்லாக் காரியங்களும், அவை பூமியில் உள்ளதோ பரலோகத்தில் உள்ளதோ, தேவனுடன் ஒப்புரவாக்கப்பட்டன, மேலும் சுவிசேஷம் வானத்தின் கீழுள்ள சர்வ சிருஷ்டிப்புக்கும் (சிருஷ்டிப்பிலும்) பறைசாற்றப்பட வேண்டும் (கொலோ. 1:20, 23). இதன் அடிப்படையில், சர்வ சிருஷ்டிப்பும் அழிவின் அடிமைத்தனத்திலிருந்து தேவனுடைய பிள்ளைகளின் மகிமையின் விடுதலையினுள் விடுவிக்கப்பட எதிர்பார்க்கிறது (ரோ. 8:19–22” (மாற்கு 16:15, footnote 2). “16:15 இல் கர்த்தர் தம் சீஷர்களிடம், ‘நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்’ என்று கூறினார்.  பின்னர் வசனம் 20, அவர்கள் வெளியே புறப்பட்டுப்போய், எவ்விடமெங்கும் பிரசங்கித்தார்கள் என்று நமக்குச் சொல்கிறது. இந்த அற்புதமான அடிமை-இரட்சகரையும், அவரது சகலத்தையும்-உள்ளடக்கிய மரணத்தையும், அவரது அற்புதமான உயிர்த்தெழுதலையும் பற்றி தேசங்களுக்கும், இன்னும் சர்வ சிருஷ்டிப்புக்கும் கூடச் சொல்ல நாமும் புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது” (Life-study of Mark​, Message 51, pp. 441–442).​

  • விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள்—மாற்கு 16:16

“16 ஆம் வசனத்தில் கர்த்தர் தம் சீஷர்களிடம், ‘விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்’என்று தொடர்ந்து கூறினார். விசுவாசிப்பதென்றால் பாவங்களின் மன்னிப்புக்காக (அப். 10:43) மட்டுமல்லாமல்,  மறுபடிஜெநிப்பித்தலுக்காகவும் (1 பேது. 1:21, 23) அடிமை-இரட்சகரைப் பெற்றுக்கொள்வதாகும் (யோவான் 1:12). 1:21, 23), இதனால் விசுவாசிக்கிறவர்கள் மூவொரு தேவனுடனான ஒரு ஜீவாதார சேர்க்கையில் (மத். 28:19) தேவனுடைய பிள்ளைகளாகவும் (யோவான் 1:12-13), கிறிஸ்துவின் அவயவங்களாகவும் ஆகிவிடக்கூடும் (எபே. 5:30). ஞானஸ்நானம் பண்ணப்படுவதென்றால், அடிமை-இரட்சகரின் மரணத்தின்மூலம் பழைய சிருஷ்டிப்பை முடிவுகட்ட அடக்கம்பண்ணப்படுவதாலும்,  அடிமை-இரட்சகரின் உயர்த்தெழுதல்மூலம், தேவனின் புதிய சிருஷ்டியாக இருக்க எழுப்பப்படுவதாலும் இதனை உறுதிப்படுத்துவதாகும்.விசுவாசிப்பதும், ஞானஸ்நானம் பண்ணப்படுவதும் தேவனின் முழு இரட்சிப்பைப் பெறுவதற்கான ஒரே முழுப் படியின் இரண்டு பகுதிகள். விசுவாசிக்காமல் ஞானஸ்நானம்பண்ணப்படுவது, வெறுமனே ஒரு வெறுமையான சடங்காகும்; ஞானஸ்நானம் பண்ணப்படாமல் விசுவாசிப்பது, உள்ளார்ந்த இரட்சிப்பின் புறம்பான உறுதிப்படுத்துதல் இல்லாமல் உள்ளார்ந்தரீதியில் மட்டுமே இரட்சிக்கப்படுவதாகும். இவை இரண்டும் சேர்ந்து செல்ல வேண்டும்….மாற்கு 16:16, ‘விசுவாசிக்காதவனும், ஞானஸ்நானம் பண்ணப்படாதவனும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்’என்று கூறுவதில்லை. இது, ஆக்கினைத்தீர்ப்பு விசுவாசிக்காததுடன் மட்டுமே தொடர்புடையது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது; இது ஞானஸ்நானம் பண்ணப்படாததுடன் தொடர்புடையதல்ல. விசுவாசித்தல், அது மட்டுமே, ஆக்கினைத்தீர்ப்பிலிருந்து ஒருவர் இரட்சிப்பைப் பெறுவதற்குப் போதுமானது; ஆயினும், ஒருவரின் உள்ளார்ந்த இரட்சிப்பின் நிறைவுசெய்தலுக்காக, அதற்கு ஒரு புறம்பார்ந்த உறுதிபடுத்துதலாக ஞானஸ்நானம் தேவை” (​Life-study of Mark​, Message 51, pp. 438–439). ஆகவே, நாம் மக்களுக்கு ஞானஸ்நானம் பற்றியும், அதேபோல் கிறிஸ்துவில் விசுவாசித்தல் பற்றியும் சொல்ல வேண்டும், ஏனெனில் நம் உள்ளார்ந்த நம்பிக்கையின் புறம்பார்ந்த உறுதிபடுத்துதலாக ஞானஸ்நானம் என்பது ஓர் இயல்பான இரட்சிப்பின் அனுபவத்தின் முழுமையாக்குதல் ஆகும். கர்த்தர், சிலுவையில் தம் மரணமே தம் ஞானஸ்நானமாக இருப்பதாகக் கருதினார் (லூக்கா 12:50). இந்த ஞானஸ்நானத்தின் மூலமாகதான், அவர் உயிர்த்தெழுதலுக்குள் நுழைந்தார். நாமும்கூட ஞானஸ்நானத்தின் மூலமாக உயிர்த்தெழுதல் ஜீவனின் அனுபவத்திற்குள் நுழைகிறோம். அவரில் விசுவாசிக்கிறவர்கள் அவரது உயிர்த்தெழுதலின் சாயலில் அவருடன் வளரக்கூடுமாறு, இன்னும் ஜீவனின் புதுத்தன்மையில் நடக்கவும்கூடுமாறு ஞானஸ்நானம் அவர்களை அவரது மரணத்திற்குள் நாட்டுகிறது (ரோ. 6:4–5). மேலும், விசுவாசித்து ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறவர்களாக நாம் கர்த்தருக்கென்று பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறோம். உலகம் நமக்குப் பின்னால் மறுபுறம் உள்ளது. இப்போது நாம் கிறிஸ்துவுடன் உயிர்த்தெழுதலில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். நம் உயிர்த்தெழுந்தக் கர்த்தருக்கென்று முழுவதும் பிரிந்தெடுக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ, நம் ஞானஸ்நானத்தின் உண்மையின் மீது நாம் விசுவாசத்தின் மூலமாக நின்றாக வேண்டும். கர்த்தருக்குத் துதி! என்னே ஓர் அற்புதமான சுவிசேஷம் நம்மிடம் உள்ளது. இதை மற்றவர்களிடம் பேசுவதற்கு, நாம் ஞானஸ்நானத்தின் நிஜத்தை நம் தினசரி வாழ்வில் அனுபவிக்க வேண்டும்.

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: பின்வரும் மூன்று குறிப்புகளைப் பயன்படுத்தி, நாம் இளம் வாலிபர்களுக்கு இரட்சிப்பின் “விஞ்ஞானத்தை” முன்வைக்க முடியும்: (1) கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மூலம் நாம், தேவன் பாவத்திற்கான அவரது காணிக்கையை ஏற்றுக்கொண்டார் அதோடு இந்த ஏற்றுக்கொள்ளுதலுக்கு நிரூபணமாக அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார் என்பதைப் பார்க்கிறோம். இப்போது, தேவனுக்கும் நமக்கும் இடையில் எதுவும் இல்லாததால், அவர் சுதந்திரமாக நமக்குள் வந்து, அவரது முழுமையான இரட்சிப்பை நிறைவேற்ற நம்முடன் கலந்திணைக்கப்பட முடியும், ஏனெனில் நம் பாவங்கள் நீக்கிப் போடப்பட்டிருக்கின்றன. (2) கிறிஸ்து உயிர்த்தெழுந்தபோது அவர் ஜீவன்-தரும் ஆவியானார். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் விசுவாசிப்பது என்பது “கடைசி ஆதாம் ஜீவன்-தரும் ஆவியான” போது உயிர்த்தெழுதலில் இருந்த அளவிற்கு மிகவும் முக்கியமானது (1 கொரி. 15:45). யோவான் 1:12-13 இன் படி நாம் அவருக்குள் விசுவாசிக்கும் போது, நாம் அவரைப் பெறுகிறோம். நாம் யாரைப் பெறுகிறோம்? இப்போது ஜீவன்-தரும் ஆவியானவராக இருக்கும் கிறிஸ்துவை நாம் பெறுகிறோம்! கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவர் மரிக்கவில்லை, மாறாக உயிர்த்தெழுந்தார்! (3) அவருக்குள் விசுவாசிப்பதன் மூலம், நாம் அவரைப் பெற்று, “இரட்சிக்கப்படுகிறோம்.” ரோமர் 10:9, “என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டுதேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்” என்று கூறுகிறது. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலே, பாவிக்கும் பரிசுத்தவானுக்கும் இடையே உள்ள மாபெரும் பிளவு. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் விசுவாசிக்கிறவர்கள் இரட்சிக்கப்படுகிறார்கள், விசுவாசியாதவர்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறார்கள். வசனம் 10, “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்” என்று தொடர்ந்து கூறுகிறது. இந்த உரைவிளக்கப் பாடத்தில் உள்ள குறிப்புகள் கர்த்தரின் உயிர்த்தெழுதல் பற்றிய உண்மைகளையும், அவரது உயிர்த்தெழுதல் பலரால் பார்க்கப்பட்டு சாட்சிப்பகிரப்பட்டதையும் முன்வைக்கின்றன. இந்த உயிர்த்தெழுந்தக் கர்த்தரே நம் ஆவியில் வாழ்பவர் என்பதைக் காட்டி முடிக்கவும். ஒரு வட்டமாகச் சுற்றிச் சென்று, இளம் வாலிபர்கள் அனைவரும் தங்களில் உள்வசிக்கும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை அனுபவித்துமகிழும் விதமாகத் தங்கள் கலந்திணைந்த ஆவியைப் பயிற்சிசெய்வதன் மூலம் கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்படி செய்யவும்.

சுவிசேஷ செயலாக்கம்: நீங்கள் அவரை மறுதலிப்பதில் ஏன் நீங்கள் தொடர்கிறீர்கள்? உங்களிடமான அவரது இருதயத்தை நீங்கள் அறிந்திருந்தால், எல்லா மறுதலிப்புகளும் கரைந்துபோய், நீங்கள் அவரிடம் ஓடுவீர்கள். “பேதுருவுக்கும்” என்ற வார்த்தையை நீங்கள் கேட்க வேண்டியிருக்கலாம். கர்த்தர் சிலுவையில் அறையப்பட்ட பிறகு, ஓர் ஐசுவரியவான் அவரை ஒரு புதிய கல்லறையில் வைத்தான் (மாற்கு 15:43-46). மூன்றாம் நாள் அதிகாலையிலே, கர்த்தரை நேசித்த மூன்று பெண்கள் அவரைத் தேடி கல்லறைக்கு வந்தார்கள் (மாற்கு 16:1-2). ஆனால், கர்த்தருடைய உயிர்த்தெழுதலைப் பற்றி அவர்களுக்குச் சொல்லவும், அவருடைய சீஷர்களுக்கும், பேதுருவுக்கும் அவருடைய உயிர்த்தெழுதலைப் பற்றி சொல்லும்படி அவர்களுக்கு அறிவுறுத்தவும் ஒரு தேவதூதன் அங்கே இருந்தான் (மாற்கு 16:5-7). பேதுருவுக்கு அவருடைய உயிர்த்தெழுதலைப் பற்றி குறிப்பாக சொல்லப்பட வேண்டும் என்று கர்த்தர் ஏன் மிகவும் கரிசனைப்பட்டார்? கர்த்தர் அநீதியாகக் கைதுசெய்யப்பட்டு, கொடூரமாக நடத்தப்பட்ட அந்த மாலையில், பேதுரு தான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று தான் கர்த்தரிடம் சொல்லியிருந்ததைச் செய்தான்: அவன் அவரை ஒருமுறை அல்ல, மாறாக மூன்று முறை மறுதலித்தான். அவன் இதைச் செய்தபோது, கர்த்தர் திரும்பி அவனை உற்றுப் பார்த்தார், இது அவனைக் கண்ணீருடன் பறந்தோடும்படி செய்தது (லூக்கா 22:54-62). இதுவே பேதுரு, ஒரு கணம், மரணப்பரியந்தம்கூட கர்த்தருக்கான தன் உத்தமத்தை வலுவாக அறிக்கையிட்டுக்கொண்டும், அடுத்த கணம் முதலில் வார்த்தைகளாலும், பின்னர் ஓர் ஆணையிடுதலாலும், இறுதியாக சபித்தல் மற்றும் சத்தியம்பண்ணுதலால் அவரை வெட்கத்துடன் மறுதலித்துக்கொண்டும் இருந்தான் (மத். 26:35, 70, 72, 74). ஒருவேளை பேதுரு இவ்வாறு நினைத்திருக்கலாம், “நான் செய்திருப்பது அவருக்குத் தெரியும். அவர் திரும்பி, என்னை உற்றுப் பார்த்தார். நான் என்ன செய்ய வேண்டும்? அவரிடமிருந்து என்னைப் பிரிக்கும் இந்தப் பாவத்தின் நிமித்தம் நான் மீண்டும் அவரை நெருங்கி வரத் துணிவதில்லை—நான் அவரை மறுதலித்தேன்!” ஆனால் இந்தப் பெண்கள் இந்தக் காலியான கல்லறையிலிருந்து வந்தவுடன், கர்த்தருடைய உயிர்த்தெழுதலைப் பற்றி சீஷர்களுக்கும் “பேதுருவுக்கும்” சொல்லும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. “இங்கு ஒரு வீழ்ச்சியடைந்த, பாவகரமான பேதுரு, கர்த்தரை மறுதலித்த ஒரு பேதுரு இருந்தான். ஆயினும் கர்த்தர் குறிப்பாக அவனைக் குறிப்பிட்டார். இதுவே சுவிசேஷம்….’ ‘பேதுருவுக்கும்’ ​என்றால் ‘உங்களுக்கும்’—அதாவது பேதுரு போன்று தோல்வியடைந்திருக்கிற ‘உங்களுக்கு’ என்று பொருள். உங்களுக்கான கர்த்தரின் இருதயத்தை நீங்கள் பார்ப்பீர்களாக. நீங்கள் கர்த்தரின் இருதயத்தைப் பார்த்தால், நீங்கள் அவரை நோக்கி ஓடுவீர்கள்” (“And Peter,” ​The Collected Works of Watchman Nee​, Volume 18, pp. 252–253, 254).

மிக முக்கியக் காரியங்கள்: நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.).

பின்புல வாசிப்பு: Life-study of Mark, Message 51.

REFERENCES: Life-study of Mark, Message 51; “And Peter,” The Collected Works of Watchman Nee, Volume 18, pp. 252–253, 254.