கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல்
பகுதி 9
✵பாடம் 10 – 18
விசுவாசிகளுடன் வாழ்தலும், நகர்தலும்
குறிக்கோள்: உயிர்த்தெழுந்த கிறிஸ்து தம் விசுவாசிகளுடன் வாழ்கின்றார் மற்றும் நகர்கின்றார் என்பதைக் காண்பதற்கு.
பொருட்சுருக்கம்: யோவான் 20–21, பின்வருபவை பற்றிய ஒரு சுருக்கமான உருவப்படம் ஆகும், “சபை யுகத்தின்போதுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையுடன் தொடர்புடைய எல்லா காரியங்கள்: கர்த்தருக்கான அன்புடன் அவரைத் தேடுதல்; கர்த்தரை உயிர்த்தெழுதலில் பார்த்தல்; அவரது வெளியரங்கமாகுதலை அனுபவிப்பதன்மூலம்—அவருடைய பிதா நம் பிதா, மற்றும் நாம் அவருடைய சகோதரர்கள் என்ற—கர்த்தருடைய உயிர்த்தெழுதலின் விளைவைப் பற்றிய வெளிப்பாட்டைப் பெற்றுக்கொள்ளுதல்; கர்த்தருடைய பிரசன்னத்தை அனுபவித்துமகிழ விசுவாசிகளுடன் கூடிவருதல்; கர்த்தர் பரிசுத்த ஆவியை நம்முள் சுவாசித்து ஊதுவதைப் பெற்று, கர்த்தரைப் பிரதிநிதிப்படுத்த அவரது ஆணை மற்றும் அதிகாரத்துடன் கர்த்தரால் அனுப்பப்படுதல்; கர்த்தர்மீது விசுவாசத்தால் வாழவும், நம் தினசரி வாழ்க்கைக்காக அவரில் நம்பிக்கை வைக்கவும் கற்றுக்கொள்ளுதல்; கர்த்தர்மீது அன்புகூருதல், நம் இயற்கையான பலம் கையாளப்படுதல்; சபையின் கட்டியெழுப்புதலுக்காக மந்தையை மேய்த்துப்பேணுதல்; சுய-சித்தத்தால் அல்ல, மாறாக அவரது வழிநடத்துதலின்படி தேவனை மகிமைப்படுத்த சிலர் மரணம்வரை கூட கர்த்தரைப் பின்பற்றுதல், மற்றும் சிலர் அவர் திரும்பிவரும்வரை உயிரோடு இருத்தலுடன் கர்த்தருடைய காணமுடியாத பிரசன்னத்திற்குப் பழக்கப்படுதல்” (John 21:23, footnote 1). யோவான் 20-21இல் நாம், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுடன் தொடர்புடைய எல்லா காரியங்களையும் நம் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு எவ்வாறு பிரயோகிப்பது என்பதைப் பார்க்கிறோம்.
பின்புலம்: வேதாகமக் கதாபாத்திரங்களின் பலவீனங்களையும் குறைபாடுகளையும் இளம் வாலிபர்களுக்குச் சுட்டிக்காட்டுவது பெரும்பாலும் உதவியாக இருக்கும். இது பாவத்திற்கோ உலகத்திற்கோ தளத்தை அளிப்பதற்காக அல்ல, மாறாக அவரைப் பெறவும், அவரை அனுபவித்துமகிழவும், அவரைப் பின்பற்றவும் அவர் நம்மை மீறுசீரமைப்பதற்குப் பயன்படுத்தும் வழிவகையாகிய தேவனுடைய அன்பான கரிசனையையும், அவரது எல்லைக்குட்படுத்தப்படாத மன்னிப்பையும் உதாரணங்காட்டி விளக்குவதற்காக உள்ளது. யோவான் 21இல், நாம் பேதுருவின் தோல்வியைப் பார்த்தாலும், கர்த்தர் பேதுருவை மீட்டுத்திருப்புதலையும் நாம் பார்க்கிறோம், மேலும் இங்கிருந்து பேதுரு எவ்வாறு கர்த்தரால் பெரிதும் பயன்படுத்தப்பட்டான் என்பதை நாம் அறிகிறோம். இளம் வாலிபர்களின் வாழ்வுகள் அடிக்கடி ஏற்றம் இறக்கம் உள்ளவையாக இருப்பதால் இந்தக் கண்ணோட்டம், மீண்டும் ஒருமுறை எழுந்து கர்த்தரைப் பின்பற்றுவதற்கு அவர்களைப் பலப்படுத்த முடியும்.
அதிகாரங்கள்: யோவான் 20–21.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
இந்தப் பாடம் யோவான் 20-21 இல் வெளிப்படுத்தப்பட்ட உயிர்த்தெழுதலிலுள்ள கிறிஸ்துவைப் பற்றிய அனுபவத்தின் ஒரு சுருக்கமாகும். இது ஓர் உபதேசரீதியான பாடம் அல்ல, மாறாக விசுவாசிகளாகிய நமக்கு யோவான் சுவிசேஷத்தைப் பிரயோகிக்கும் ஒரு பிரயோகித்தலே ஆகும்.
I. யோவான் சுவிசேஷத்தின் கடைசி இரண்டு அதிகாரங்கள், கர்த்தருடைய உயிர்த்தெழுதலின் காலம் முதல், அவரது திரும்பி வருதலின் காலம் வரையிலான காலத்தை, அதாவது சபை யுகத்தின் முழு காலப்பகுதியையும் உள்ளடக்கியது.
“இந்த சுவிசேஷத்தின் கடைசி இரண்டு அதிகாரங்களில் பேசப்படுவதன் காலப்பகுதி விசாலமானது. இது கர்த்தருடைய உயிர்த்தெழுதலைக் கண்டுபிடித்தலுடன் துவங்கி, அவரது திரும்பிவருதலுடன் முடிவுறுகிறது. இவ்விரண்டு நிகழ்வுகளுக்கும் இடையில், சபை யுகத்தின்போதுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையுடன் தொடர்புடைய எல்லா காரியங்களும் இருக்கின்றன: கர்த்தருக்கான அன்புடன் அவரைத் தேடுதல்; கர்த்தரை உயிர்த்தெழுதலில் பார்த்தல்; அவரது வெளியரங்கமாகுதலை அனுபவிப்பதன்மூலம்—அவருடைய பிதா நம் பிதா, மற்றும் நாம் அவருடைய சகோதரர்கள் என்ற—கர்த்தருடைய உயிர்த்தெழுதலின் விளைவைப் பற்றிய வெளிப்பாட்டைப் பெற்றுக்கொள்ளுதல்; கர்த்தருடைய பிரசன்னத்தை அனுபவித்துமகிழ விசுவாசிகளுடன் கூடிவருதல்; கர்த்தர் பரிசுத்த ஆவியை நம்முள் சுவாசித்து ஊதுவதைப் பெற்று, கர்த்தரைப் பிரதிநிதிப்படுத்த அவரது ஆணை மற்றும் அதிகாரத்துடன் கர்த்தரால் அனுப்பப்படுதல்; கர்த்தர்மீது விசுவாசத்தால் வாழவும், நம் தினசரி வாழ்க்கைக்காக அவரில் நம்பிக்கை வைக்கவும் கற்றுக்கொள்ளுதல்; கர்த்தர்மீது அன்புகூருதல், நம் இயற்கையான பலம் கையாளப்படுதல்; சபையின் கட்டியெழுப்புதலுக்காக மந்தையை மேய்த்துப்பேணுதல்; சுய-சித்தத்தால் அல்ல, மாறாக அவரது வழிநடத்துதலின்படி தேவனை மகிமைப்படுத்த சிலர் மரணம்வரை கூட கர்த்தரைப் பின்பற்றுதல், மற்றும் சிலர் அவர் திரும்பிவரும்வரை உயிரோடு இருத்தலுடன் கர்த்தருடைய காணமுடியாத பிரசன்னத்திற்குப் பழக்கப்படுதல்” (John 21:23, footnote 1).
II. பேதுருவின் தோல்விக்குப் பிறகு, கர்த்தர் பேதுருவைத் தம் எல்லைக்குட்படுத்தப்படாத மன்னிப்பாலும், தம் அன்பான கரிசனையாலும் மேய்த்துப்பேணினார்—யோவான் 21
பேதுருதான் ஆரம்பகால சபையில் முதல் அப்போஸ்தலனாக இருந்தான், ஆனால், நம்மைப் போலவே, அவனும்கூட மனிதனாக இருந்தான் அதோடு சில தோல்விகளைச் சந்தித்தான். ஒருவேளை பேதுருவின் அதி மாபெரும் தோல்வி, அவன் தான் கர்த்தருக்காக மரிக்கத் தயாராக இருந்தான் என்று மேன்மைப்பாராட்டியப் பிறகு அவரை மூன்று முறை மறுதலித்தான் என்பதே இருந்திருக்கலாம். நிச்சயமாக இந்தத் தோல்விக்குப் பிறகு பேதுரு மிகவும் சோர்வடைந்தான், அதாவது அவன் கர்த்தரைப் பின்பற்றுவதைக் கைவிட்டு, தன் பழைய மீன்பிடித் தொழிலுக்குத் திரும்பிச்சென்ற அளவிற்குக் கூட சோர்வடைந்தான். இருப்பினும், கர்த்தர் பேதுருவையும் மற்ற சீஷர்களையும் மீட்டுத்திருப்பவும் மறுசீரமைக்கவும் உள்ளே வந்தார், அவர்களைத் தம் எல்லைக்குட்படுத்தப்படாத மன்னிப்பாலும், அன்பான கரிசனையாலும் மேய்த்துப்பேணினார். யோவான் 21இல் பேதுரு (மற்ற சீஷர்களுடன்) பின்வாங்குதலையும், கர்த்தர் அவர்களை மேய்த்துப்பேணி மீட்டுத்திருப்பப் பயன்படுத்திய இந்த அற்புதமான வழியையும் பற்றிய கதையைச் சொல்லுங்கள். நாம் நம் கிறிஸ்தவ நடையில் தோல்வியடையும் போது, நாமும்கூட சோர்வடையக்கூடும். இருப்பினும், நாம் கர்த்தருக்குத் திறக்கும்போது, அவரைப் பெறுவதற்கும், அவரை அனுபவித்துமகிழ்வதற்கும், அவரைப் பின்பற்றுவதற்கும் அவர் நம்மை மேய்த்துப்பேணி, நம்மை மறுசீரமைக்கிறார்.
A. தன் பிழைப்புக்காகக் கர்த்தரைப் பின்பற்றவும், அவரில் நம்பிக்கைவைக்கவும் பேதுருவைக் கர்த்தர் மீட்டுத்திருப்பினார்—யோவான் 21:1-14
பல உயர் சத்தியங்களைப் பற்றிய தரிசனத்தை நாம் பார்த்திருந்தாலும்கூட, நமக்கும் மிகவும் மனித மற்றும் நடைமுறைக்குரிய தேவைகளும் பிரச்சினைகள் உள்ளன. பேதுரு கர்த்தருடைய ஊழியத்திற்கும், மரணத்திற்கும், உயிர்த்தெழுதலுக்கும் ஒரு சாட்சியாக இருந்தான். இருப்பினும், அவன் தன் பிழைப்புக்காகக் கவலைப்பட்டான் அதோடு அவனது விசுவாசம் தளர்ந்துபோனது. எனவே, அவன் ஓர் உத்தியோகத்திற்காக மீண்டும் மீன்பிடி தொழிலுக்குச் செல்ல முடிவுசெய்தான். யோவான் 21இல், கர்த்தர் தம்மில் விசுவாசத்தால் வாழ பேதுருவையும் சீஷர்களையும் பயிற்றுவித்தார்.
B. கர்த்தர் தம் நெருக்கமான மேய்த்துப்பேணுதல் மூலமாகத் தமக்கான பேதுருவின் அன்பை மறுசீரமைத்தார்—யோவான் 21:15-19
பேதுரு தான் மற்ற அனைவரையும் விட கர்த்தரை அதிகம் நேசிப்பதாகவும், தான் கர்த்தருக்காக மரிக்கத் தயாராக இருப்பதாகவும் மேன்மைப்பாராட்டியிருந்தான். இந்த மேன்மைப்பாராட்டுதலுக்குப் பிறகு உடனடியாக, அவன் கர்த்தரை மூன்று முறை மறுதலித்தான். என்னே ஒரு பரிதாபகரமான தோல்வியாக இது இருந்தது! ஒருவேளை இந்த வழியில் கர்த்தரைத் தோல்வியடையச் செய்தப் பிறகு, பேதுரு தன்னால் கர்த்தரை நேசிக்க முடியாது என்று உணர்ந்திருக்கலாம். இவ்வாறு, கர்த்தர் பேதுருவை மேய்த்துப்பேணவும், அவனுக்கான தன் அன்பை மறுசீரமைக்கவும் வந்தார் (யோவான் 21:15-17). மேலும் தன் காலத்திலோ அல்லது தன் இயற்கையான பலத்தினாலோ இல்லாவிட்டாலும், அவன் உண்மையில் கர்த்தருக்காக மரிப்பான் என்பதை உணர்ந்தறியும்படி பேதுருவுக்குக் கர்த்தர் உதவினார் (யோவான் 21:18-19).
C. கர்த்தர் பேதுருவிடம் தம் ஆட்டுக்குட்டிகளுக்கு உணவூட்டவும், தம் ஆடுகளை மேய்த்துப்பேணவும் கட்டளையிட்டார்—யோவான் 21:15-17
அவனை மேய்த்துப்பேணுவதில், கர்த்தர் பேதுருவை அவனது ஊழியத்திற்குத் திரும்ப மறுசீரமைத்து, கர்த்தருடைய ஆட்டுக்குட்டிகளுக்கும் ஆடுகளுக்கும் உணவூட்டவும், அவரது ஆடுகளை மேய்த்துப்பேணவும் அவனுக்குக் கட்டளையிட்டார்.
III. யோவானின் கடைசி இரண்டு அதிகாரங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளபடி, இன்று சபைகளில் நாம் கர்த்தருடைய சீஷர்களாக தொடர்ந்து வாழ்கிறோம்.
A. நாம் உயிர்த்தெழுதலில் கர்த்தரைத் தேடுகிறவர்கள்—யோவான் 20:1-13
மகதலேனா மரியாள்தான் உயிர்த்தெழுதலில் கர்த்தரைக் கண்டறிந்த முதல் நபராக இருந்தாள், ஏனெனில் அவள் பகுத்தறிவு அல்லது புறம்பான சூழ்நிலைகளைப் பற்றி அக்கறைப்படாமல், நிர்க்கதியாக மட்டுமீறிய விதத்தில் கர்த்தரைத் தேடினாள். கர்த்தருடைய பிரசன்னத்தை விட்டு விலகியிருப்பதை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சபை வாழ்க்கை என்பது முதலாவதாகவும் முதன்மையாகவும் நம் ஜீவிக்கும் கர்த்தரைத் தேடும் ஒரு வாழ்க்கையாகும். இது போன்று கர்த்தரை உறுதியாய்த் தேடும் சிலர் இருக்கும் வரை, சபை வாழ்க்கை ஒருபோதும் மந்தமானதாகவோ அல்லது வறண்டதாகவோ ஆகிவிட முடியாது. இறுதியில் சபை கிறிஸ்துவின் கூட்டு மணவாட்டியாக ஆகிவிடுகிறது, எனவே அவருக்கான நம் தேடுதல் அதிகரித்தாக வேண்டும். சாட்சாத்து கர்த்தரைத் தவிர வேறு எந்தவொன்றாலும் நாம் ஒருபோதும் திருப்தியடையக்கூடாது.
B. அவருடைய தேவன் நம்முடைய தேவன், அவருடைய பிதா நம்முடைய பிதா என்ற வெளிப்பாட்டை நாம் அவரிடமிருந்து பெற்றிருக்கிறோம்—யோவான் 20:17
தம் சீஷர்களிடம் சென்று, அவர் தம்முடைய தேவனிடத்திற்கும் அவர்களுடைய தேவனிடத்திற்கும், தம்முடைய பிதவினிடத்திற்கும் அவர்களுடைய பிதாவினிடத்திற்கும் பரமேற வேண்டியிருந்தது என்று சொல்லும்படி கர்த்தர் மரியாளிடம் கூறினார். கர்த்தரின் உயிர்த்தெழுதலின் மூலமாக, இந்த விசுவாசிகள் அவருடைய பல சகோதரர்களாக உற்பத்தி செய்யப்பட்டிருந்தனர் என்பதே இதன் பொருள்! நாம் தேவனுடைய ஜீவனையும் சுபாவத்தையும் உடையவர்களாக, தேவனுடைய பல குமாரர்களாக இருக்கிறோம் என்பதை சபையில் நாம் உணர்ந்தறிகிறோம். அதுபோல நாம் கிறிஸ்துவின் சகோதரர்களாகவும் இருக்கிறோம். சபை அத்தகையவர்களால் மட்டுமே ஆனதாகும்.
C. நாம் இந்த உயிர்த்தெழுந்த கர்த்தரின் பிரசன்னத்தை நம் ஐக்கியத்திலும், நம் கூடுகைகளிலும் அனுபவித்துமகிழ்கிறோம்—யோவான் 20:19
சீஷர்கள் ஒன்றுசேர்ந்து கூடிவரச் செய்யப்பட்டிருந்தபோது, கர்த்தர் அவர்களுக்குத் தரிசனமாகி, அவர்களுடன் உணவருந்தினார். தோமா இந்தக் கூடுகையைத் தவறவிட்டான், ஆனால் அடுத்த வாரம் அதே நேரத்தில் கர்த்தர் மீண்டும் தரிசனமானார், மேலும் தோமா அந்தக் கூடுகையில் கண்டுகொண்டான். சபையின் கூடுகைகளில் நாம் கர்த்தரைக் கண்டுகொள்கிறோம். முதல் கூடுகை, கர்த்தருடைய உயிர்த்தெழுதலின் நாளில் நடந்தது. கர்த்தர் அன்று முதல் தம் நாமத்தில் கூடுகிறவர்களுடன் தொடர்ந்து கூடிவந்திருக்கிறார், மேலும் அவர் திரும்பிவரும் வரை அவ்வாறு தொடர்ந்து செய்வார். உண்மையில், கர்த்தருடைய பந்தியின் செயல்பாடுகளில் ஒன்று, கர்த்தர் வரும்வரை அவருடைய மரணத்தை நாம் அறிவிப்பதே ஆகும் (1 கொரி. 11:26). சபையில் நாம் அறிவிப்பது என்னவெனில், கர்த்தருடைய மரணம் இவ்வளவு அதிகமானவற்றை நிறைவேற்றியிருக்கிறது என்பதும், சபை இந்த உயிர்த்தெழுந்தக் கர்த்தருடைய பிரசன்னத்தை அனுபவித்துமகிழ்கின்றது என்பதுமே.
D. இந்த உயிர்த்தெழுந்த கர்த்தரை ஆவியானவராக உள் சுவாசிப்பதன் மூலம் நாம் அவரைப் பெறுகிறோம்—யோவான் 20:22
அவரது உயிர்த்தெழுதலின் நாளில், கர்த்தர் சீஷர்களுக்குள் சுவாசித்து ஊதி, பரிசுத்த ஆவியைப் பெறும்படி அவர்களுக்குச் சொன்னார். அந்த நேரத்திலிருந்து சபை தொடங்கியது. நாம் முதன்முதலில் கர்த்தரை உள் சுவாசித்தபோது, நாம் இரட்சிக்கப்பட்டு, சபையின் ஒரு பகுதியாக ஆகிவிட்டோம், மேலும் நம் வளர்ச்சிக்காகவும், சபையின் முன்னேற்றத்திற்காகவும் நம் தொடர்ச்சியான சுவாசித்தல் மூலம் நாம் தொடர்ந்து கர்த்தரைப் பெறுகிறோம். இன்று நாம் கர்த்தரை ஆவியானவராகத் தொடர்ந்து உள் சுவாசிக்கிறோம். இது சபை வாழ்க்கைக்கு அவசியம்.
E. பூமி முழுவதும் சுவிசேஷத்தைப் பரப்பும்படி கர்த்தரால் ஆணையிடப்பட்டிருக்கிறவர்கள் நாம்—யோவான் 20:21-23
உயிர்த்தெழுப்பப்பட்டவராக, கர்த்தர் தம் சீஷர்களுக்கு புறப்பட்டு சென்று, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி கட்டளையிட்டார். இன்றும் நாம் இன்னும் கர்த்தரின் இந்த ஆணையைச் சுமக்கிறோம். சபைகளில் இந்த உயிர்த்தெழுந்தக் கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாக இதுவே நம் பொறுப்பும், பாக்கியமும் ஆகும். நம் சுவிசேஷம், ஒரு மகிழ்ச்சியான நித்தியத்திற்காக வெறுமனே பாவத்திலிருந்தும் நியாயத்தீர்ப்பிலிருந்தும் இரட்சிக்கப்படும் தாழ்வான சுவிசேஷம் அல்ல; நம் சுவிசேஷம் ராஜ்யத்தின் சுவிசேஷம் ஆகும், இதன் மூலம் மனிதர்கள் தேவனுடைய பொருளாட்சிக்குள் நுழைந்து, கிறிஸ்துவின் சரீரம் கட்டியெழுப்பப்பட்டு, ஒவ்வோர் அவயவமும் தெய்வீக ஜீவனில் முழு-வளர்ச்சி அடையும் வரை ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குத் தொடர்ந்து முன்னோக்கிச் செல்கின்றனர்.
F. நாம் கர்த்தரில் விசுவாசத்தால் வாழவும், நம் தினசரி வாழ்க்கைக்காக அவரில் நம்பிக்கைவைக்கவும் கற்றுக்கொள்கின்றோம்—யோவான் 21:3-9
கலிலேயாவில் மீன்பிடிக்கச் செல்வதன் மூலம் சீஷர்கள் தங்களுக்கு வழங்குவதற்கான கர்த்தருடைய திறனில் உள்ள தங்கள் விசுவாசத்தை ஓரளவு கணநேரத்திற்குக் கைவிட்டனர். அவர்களுக்குக் கர்த்தரால் ஆணையிடப்பட்டிருந்தது, ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய சேவைக்காக அவரில் காத்திருப்பதிலிருந்து ஒரு “மாற்றுப்பாதை” அல்லது ஒரு “விடுமுறை” எடுத்தார்கள். இருப்பினும், அவர்களுக்கு என்ன தேவை இருந்தாலும்சரி அதை நிறைவேற்றுவதற்கான தம் திறனை கர்த்தர் அவர்களுக்கு நிரூபித்துக் காட்டினார். ஒரு பெரிய மீன் கூட்டத்தை அப்படியே அவர்களது வலைக்குள் அனுப்பி சிக்கவைக்கவும்கூட அவரால் முடியும். (இந்த விஷயத்தை அவர்களுக்குத் தெளிவுபடுத்தும்படி இந்த மீன்கள் வலைக்குள் செல்வதிலிருந்து தடுத்தவரும் அவர்தான், இது இன்னோர் அதிசயமாக இருந்தது.) அவர்கள் தாங்கள் கரைக்கு வந்தபோது அவர்களுக்காக காலை உணவுடன் அவர் காத்திருந்தார். அவர்கள் பிடித்திருந்த மீன்கள் எதுவும்கூட அவருக்குத் தேவைப்படவில்லை. நம் இருதயங்கள் மனக் கவலையின்றி விடுதலையாக இருக்கக்கூடுமாறு அதோடு நம் தினசரி வாழ்வுகளின் அத்தியாவசியங்களைப் பூர்த்திசெய்வதில் கூட நம் கர்த்தர் எவ்வளவு நிஜமானவர் என்பதை மற்றவர்களுக்கு நாம் சாட்சிப்பகிரக்கூடுமாறு, இன்று சபை வாழ்க்கையில் கர்த்தருடைய சீஷர்களாக நாம் நம் தினசரி தேவைகள் அனைத்திற்கும் கர்த்தரில் நம்பிக்கைவைக்கக் கற்றுக்கொள்கின்றோம்.
G. நாம் வேறு எந்த நபர் அல்லது பொருளையும் விட கர்த்தரை அதிகமாக நேசிக்கிறோம்—யோவான் 21:15-17
கர்த்தர் பேதுருவிடம், அவன் மற்ற எல்லாவற்றையும் விட கர்த்தரை அதிகமாக நேசித்தானா என்று கேட்டபோது, பேதுரு தான் கர்த்தரை நேசிப்பதாக பதிலளித்தான், ஆனால் அவன் அன்பிற்கு ஒரு வித்தியாசமான வார்த்தையை, அதாவது தனிப்பட்ட பாசத்தையும் விருப்பத்தையும் சுட்டிக்காட்டிய ஒரு வார்த்தையைப் பயன்படுத்தினான். இருப்பினும், கர்த்தர் பயன்படுத்திய வார்த்தை உயர்ந்ததாகவும், அதிக முழுமையானதாகவும் இருந்தது. (பேதுரு தம்மை நேசித்தானா இல்லையா என்று மூன்றாவது முறையாகக் கர்த்தர் பேதுருவிடம் கேட்டபோது பேதுரு வருத்தப்பட்டதற்குக் காரணம், மூன்றாம் முறை கர்த்தர் பேதுருவின் வார்த்தையைப் பயன்படுத்திய போது, அவர் பேதுருவின் சொந்த வகையான இந்த அறிக்கையிடப்பட்ட அன்பைக் பற்றி கேள்வி எழுப்பவும்கூட செய்தார் என்பதை இது சுட்டிக்காட்டுகின்றநு.) கர்த்தர் தம்மையே நமக்குத் திரைநீக்கியிருதால், நாம் கர்த்தரை நம் உண்மையான முதல் அன்பாக நேசிக்க வந்திருக்கிறோம். இவ்வகையான அன்பு கர்த்தருடைய மதிப்பின்படியேயன்றி, கர்த்தருக்கான ஓர் அன்பை தயாரிப்பதற்கான நம் திறனின்படி இல்லை. தேவன் தம் அன்பை நம் இருதயங்களில் ஊற்றியிருக்கிறார் (ரோ. 5:5), மேலும் கர்த்தர் அன்பாக நம்மில் உள்வசிக்கின்றார். மேலும், இந்த அன்பானவராக அவர் தம்மையே பின்தொடர்வதற்கு நம்மை ஈர்க்கின்றார். கர்த்தருக்குத் துதி! சபை வாழ்க்கையில் நாம் அனைவரும் அவரது காதலர்கள், அவருக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் ஒற்றை இருதயமுள்ள கன்னிகைகள்.
H. கர்த்தருடைய மந்தையாகிய சபையைக் கட்டியெழுப்புவதற்காக நாம் மற்றவர்களை மேய்த்துப்பேணக்கூடுமாறு, நாம் கர்த்தருடைய இடைபடுதலைப் பெறுகிறோம்—யோவான் 21:15-17
பேதுரு மற்ற சீஷர்களுக்கு மத்தியில் முன்னணி வகிக்க கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டான், ஆனால் பேதுரு அவர்கள் அனைவரையும் விட அதிகமாக தோல்வியடைந்தான். கர்த்தர் பேதுருவை விட்டுவிடவில்லை; அதற்குப் பதிலாக அவனது செயல்பாடு என்னவாக இருக்குமோ அதற்காக அவனை சீர்பொருத்தும் ஒரு கண்ணோட்டத்துடன் அவர் அவனோடு இடைபட்டார். கர்த்தர் சித்தமாயிருக்கிறபடி நாம் அவரது கரங்களில் பயனுள்ளவர்களாக இருக்கக்கூடுமாறு, இன்று நாம் அனைவரும் கர்த்தரால் இடைபடுத்தப்பட்டு, அவரால் சீர்பொருத்தப்படுகிறோம். ஆகவே நாம் கர்த்தருடைய இடைபடுதலை விட்டு தப்பியோடிப்போக நாடக்கூடாது. அதற்குப் பதிலாக, நாம் கர்த்தருடைய மாபெரும் திட்டத்தில் நம் பங்கை வகிக்கக்கூடுமாறு, அவர் நம்மில் ஏதோவொன்றை அடித்துருவாக்குகின்றார் என்பதை நாம் உணர்ந்தறிய வேண்டும். இது நாம் இப்போது பார்ப்பதற்கும் அப்பாற்பட்டது, ஆனால் கர்த்தர் நம்முடன் இடைபடுவதை அனுமதிக்க நாம் சித்தமாயிருந்தால், எந்த இலக்கிற்காக கர்த்தர் நம்மிடம் அடித்துருவாக்குகின்றார் என்பதை ஒருநாள் நாம் உணர்ந்தறிவோம்.
I. கர்த்தருடைய கண்ணுக்குத் தெரியாத பிரசன்னத்தை நாம் நடைமுறைப்படுத்துகிறோம்—யோவான் 21:1; 20:19
கர்த்தருடைய கண்ணுக்குத் தெரியாத பிரசன்னத்தை அறிந்துகொள்ளும்படி சீஷர்கள் கர்த்தரால் தம் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு நாற்பது நாட்கள் பயிற்றுவிக்கப்பட்டனர். நாம் கர்த்தரை ஆவியானவராக உள் சுவாசிப்பதன் மூலம் அவரை நம் ஜீவ-நிரப்பியாக அனுபவித்து மகிழ வேண்டியது மட்டுமல்லாமல், நம்முடன் உள்ள அவரது கண்ணுக்குத் தெரியாத பிரசன்னத்தை அறியவும் நாம் முயன்றாக வேண்டும். இவ்விதமாய் பயிற்சிசெய்வதன் மூலம்தான் நாம் அவரைப் பின்பற்றவும், அவரால் நகரவும் இயல்கிறோம். இவ்விதமாய் அவரை அறிந்துகொள்வதன் மூலமும்தான் நாம் இவ்வளவு அதிகமான மனச்சோர்வு போன்றவற்றை எதிர்கொள்ள இயல்கிறோம். புறம்பான சூழ்நிலை என்னவாக இருந்தாலும்சரி, அவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார். எவ்வளவு மனதுக்கு இதமானது!
J. நாம் இறக்கும் வரை அல்லது கர்த்தர் திரும்பி வரும் வரை நாம் கர்த்தரைப் பின்பற்றுவோம்—யோவான் 21:18-23
யோவான் 21:18 இல், கர்த்தர் தமக்கு எந்த வகையான மரணம் ஏற்படும் என்று பேதுருவுக்குச் சொன்னார், மேலும் அவர் தாம் திரும்பும் வரை மற்றொரு சீஷன் உயிரோடு வாழ்வானா இல்லையா என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று அவர் பேதுருவிடம் சொன்னார் (யோவான் 21:22). இவை அனைத்தும் கர்த்தரைப் பொறுத்தது. நாம் வெறுமனே கர்த்தரைப் பின்பற்றுபவர்கள். மரணம்வரை அவரைப் பின்பற்றிய பிறகு நாம் அவரைச் சந்திக்க எழுந்தாலும், அல்லது அவருடைய வருகையில் உயிருடன் இருப்பவர்களாக நாம் ஆகாயத்தில் (காற்றில்) கர்த்தரைச் சந்தித்தாலும், கோட்பாடு ஒன்றே. சபை வாழ்க்கையில், அவருடைய ஜெயங்கொள்பவர்களாக இருக்க நமக்கு வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்டவர்களாக இருப்பதற்கு, கர்த்தரைப் பின்பற்றுவதற்கான ஓர் இருதயம் மட்டுமே நம்மிடம் இருக்க வேண்டும். நாம் அப்படிப்பட்டவர்களாக இருந்தால், ஜீவன் நமக்குச் சாதகமாக வேலை செய்கிறது, மரணம் கூட நமக்குச் சாதகமாக வேலை செய்கிறது. ஒரு சூழ்நிலை புறம்பாக ஒரு மரண சூழ்நிலையாக வெளியில் தோன்றினாலும் இல்லாவிட்டாலும், நாம் எந்த சூழ்நிலையிலும் அவரைப் பின்பற்ற தயாராக இருக்கிறோம். நம்மைப் பொறுத்தவரை, அவர் மாத்திரமே ஜீவன். அவரைப் பெறுவதே ஜீவனைப் பெறுவதும், அதை அபரிமிதமாகப் பெறுவதும் ஆகும். சபை யுகத்தில் அவருக்காக வாழ்கின்றவர்களாக இதுவே நம் சாட்சி.
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: இளம் வாலிபர்களுடன் ஒன்றுசேர்ந்து யோவான் 21ஐ வாசித்து, சீஷர்கள் தங்கள் முந்தைய தொழிலாகிய மீன்பிடித் தொழிலுக்குத் திரும்பிச் செல்வதன் மூலம் எவ்வாறு பின்வாங்கினார்கள் என்பதைச் சுட்டிக்காட்டவும். அதன்பின், சீஷர்கள் எல்லாவற்றுக்கும் கர்த்தரைச் சார்ந்திருக்க முடியும் என்று சீஷர்களை நம்ப வைக்க பல அற்புதங்களைச் செய்துகீட்டுவதன் மூலம் சீஷர்களை மீட்டுத்திருப்புவதற்கான கர்த்தரின் கரிசனையையும் இருதயத்தையும் அவர்களுக்குக் காட்டுங்கள். சீஷர்களுக்கு எந்த மீனும் வலையில் அகப்படாமல், இரவு முழுவதும் மீன்பிடித்திருந்தப் பிறகு, கர்த்தர் அவர்களுக்குத் தரிசனமாகி, படகின் வலது பக்கத்தில் தங்கள் வலைகளை வீசும்படி அவர்களுக்குச் சொன்னார். அவ்வாறு செய்தபின் உடனேயே, அவர்களது வலைகள் அத்தனை அதிகமான மீன்களால் நிரப்பப்பட்டன, அவர்களால் இனியும் அவற்றை உள்ளே இழுக்க இயலவில்லை. அவர்கள் ஒருவழியாக நிலத்திற்கு வந்தபோது, கர்த்தர் மீன்பிடிக்கச் செல்லாமலேயே, அங்கு கடற்கரையில் ஒரு கனல் நெருப்புடன் இருந்தார், சீஷர்கள் காலை உணவைச் சாப்பிடுவதற்காக மீன் மற்றும் அப்பங்களை ஏற்கனவே தயார்செய்திருந்தார். பிற்பாடு கர்த்தர் தம்மைப் பேதுரு நேசித்தானா என்று அவனிடம் மூன்று முறை கேட்பதன் மூலம் ஒரு விசேஷித்த வழியில், அவர் அவனுக்காகக் கரிசனைப்பட்டார். இது, முன்பு மூன்று முறை கர்த்தரை மறுதலித்திருந்த பேதுருவை அம்பலப்படுத்தவும், கர்த்தருக்கான அவனது அன்பை மறுசீரமைக்கவும் உயர்த்தவும் உதவியது. கர்த்தருடைய ஆட்டுக்குட்டிகளுக்கு உணவூட்டவும், அவரது ஆடுகளை மேய்த்துப்பேணி, அவற்றிற்கு உணவூட்டவும்கூட கர்த்தர் பேதுருவுக்குக் கட்டளையிட்டார். கர்த்தருடைய “மந்தையாகிய” சபையில் இருப்பவர்களைப் பேதுரு கவனித்துக்கொள்ள வேண்டும் என்று கர்த்தர் விரும்பினார் என்பதே இதன் அர்த்தம். நம் தோல்விகள் எல்லாவற்றிலிருந்தும் நம்மை மீட்டுத்திருப்பி, மற்ற எல்லாவற்றையும் விட அதிகமாக அவரை நேசிக்க நம்மை நடத்துவதற்கு நமக்கான கர்த்தரின் அன்பான கரிசனையை நாம் யோவான் 21 இல் உள்ள இந்தக் கதையின் மூலமாகப் பார்க்க முடியும். நம் வாழ்வாதாரத்திற்காக எல்லா நேரமும் அவரில் நம்பிக்கைவைத்து, அவருக்கு நன்றிகூறுகையில், நம் முதல் அன்பினால், அதாவது நம் அதி சிறந்த அன்பினால் அவரை நேசிப்பதாலும், கர்த்தரில் இளம் வாலிபர்களைக் கவனித்துக்கொள்வதாலும், நாம் கர்த்தர் திரும்பும் வரை, சபையில் எவ்வாறு ஒரு நேர்த்தியான, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும் என்பதையும் நாம் பார்க்கிறோம். “கர்த்தராகிய இயேசுவே, நான் மற்ற எல்லாவற்றையும் விட உம்மை அதிகமாக நேசிக்கிறேன்!” என்று இளம் வாலிபர்களை அறிவிக்க வைப்பதன் மூலம் முடிக்கவும்.
சுவிசேஷ செயலாக்கம்: கர்த்தரின் உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதலுக்குப் பிறகு, அவர் தம்முடைய பிதாவிடமும் அவர்களுடைய பிதாவிடமும், தம்முடைய தேவனிடத்திற்கு அவர்களுடைய தேவனிடத்திலும் பரமேற வேண்டியிருந்தது என்பதை தம் சீஷர்களிடம் சென்று, அவர்களுக்குச் சொல்லும்படி அவர் மரியாளுக்குச் சொன்னார் (யோவான் 20:17). கர்த்தரின் உயிர்த்தெழுதலின் மூலமாக, விசுவாசிகள் தேவனுடைய ஜீவனையும் சுபாவத்தையும் உடையவர்களாக, அவருடைய பல சகோதரர்களாக, தேவனுடைய பல குமாரர்களாக உற்பத்திசெய்யப்பட்டுள்ளனர் என்பதே இதன் பொருள் (1 பேது. 1:3-4; ரோ. 8:29; ரோ. 5:10; 2 பேது. 1:4). பின்னர், தாம் உயிர்த்தெழுந்த தினத்தின் இரவில், அவர் தம் சீஷர்களுடன் இனிமையான விதத்தில் கூடிவந்தார், அங்கே அவர் அவர்களிடம், “உங்களுக்குச் சமாதானம்” என்று சொல்லி, அதன்பின் தம்மையே பரிசுத்த ஆவியானவராக அவர்களுக்குள் சுவாசித்து ஊதினார் (யோவான் 20:21-22). கர்த்தருக்குள் விசுவாசிப்பது என்றால் தேவனுடைய சாட்சாத்து ஜீவனையும் சுபாவத்தையும் பெற்று, அதன் மூலம் தேவனுடைய ஓர் உண்மையான பிள்ளையாக ஆகுவதாகும் (யோவான் 1:12). ஒரு விசுவாசியாக, சுபாவத்தின்படி சாத்தானைத் தங்கள் பிதாவாகக் கொண்டவர்களில் இனியும் உங்கள் பங்கு இருக்காது. இந்த யுகத்தில் அவர்களுடைய பங்கு இருளிலும், இருளின் அதிகாரத்தின் கீழும் நிலைத்திருப்பதே ஆகும், மேலும் அடுத்த யுகத்தில் அவர்களுடைய சுதந்தரம் பிசாசுக்காகவும் அவனது தூதர்களுக்காகவும் தேவன் ஆயத்தம்செய்திருக்கும் அக்கினிக்கடலே ஆகும் (யோவான் 8:44; 1 யோ. 3:10; மத். 4:16; எபே. 5:8; மத். 25:41; வெளி. 20:15). இது உங்களுக்கான தேவனுடைய இருதயம் அல்ல! இன்று நீங்கள் மனந்திரும்பினால், அவர் உங்கள் பாவங்களைத் துடைத்து, அவர் தம் சீஷர்களிடம் சொன்னது போலவே “உங்களுக்குச் சமாதானம்” என்று உங்களிடம் சொல்வார் (அப். 3:19; எபே. 2:17). பின்னர், அவருடைய நாமத்தைக் கூப்பிடுவதன் மூலம் அவரைப் பெற்றுக்கொள்ள வெறுமனே திறந்துக்கொடுப்பதன் மூலம், நீங்கள் ஆவியானவரால் பிறப்பீர்கள், தேவனை உங்கள் பிதாவாகக் கொண்டிருப்பீர்கள் (ரோ. 10:13; யோவான் 3:6; கலா. 4:6). இருளுக்குப் பதிலாக, நீங்கள் ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய ஒதுக்கப்பட்டப் பங்கில் ஒரு பகுதியில் பங்கடைவதற்கு தகுதி பெறுவீர்கள் (கொலோ. 1:12). நீங்கள் இருளின் அதிகாரத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு, இப்போதும் நித்தியத்திற்கும் அவரது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்குள் இடம் மாற்றப்படுவீர்கள் (கொலோ. 1:13). கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்ளுங்கள், தேவனை உங்கள் பிதாவாகப் பெற்றுக்கொள்ளுங்கள்!
மிக முக்கியக் காரியங்கள்: கர்த்தருடன் ஓர் உயிர்துடிப்பான, தனிப்பட்ட மற்றும் நெருக்கமான உறவை வளர்த்தல் (III.E.).
பின்புல வாசிப்பு: Life-study of John, Message 48.
REFERENCES: Life-study of John, Messages 48–49; A Word of Love, Chapter 1, p. 20.