கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல்
பகுதி 9
✵பாடம் 10 – 18
இராஜ-இரட்சகரின் வெற்றி
குறிக்கோள்: கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல், அதாவது மரணத்தின் மீதான அவரது வெற்றி, தேவனுடைய நீதியைப் பற்றிய ஒரு காரியமாக இருந்தது என்பதைக் காண்பதற்கு.
பொருட்சுருக்கம்: மத்தேயுவில் நாம் ராஜாவின் உயிர்த்தெழுதலில் அவரது வெற்றியைக் காண்கிறோம். மத்தேயுவில், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் தேவனுடைய நீதியைப் பற்றிய ஒரு காரியமாக இருந்தது. தேவனுடைய நீதியான கோரிக்கைகள் அனைத்தையும் பூர்த்திசெய்து, தேவனுடைய நீதியில் நமக்காக மீட்பை முழுவதும் நிறைவேற்றிய ஒரு மரணமாகிய, ஒரு நீதியான மரணத்தில் உச்சத்தை அடைந்த (உச்சமடைந்த) ஒரு நீதியான வாழ்க்கையைக் கிறிஸ்து வாழ்ந்தார். இவ்வாறு, இந்த நீதியுள்ள தேவன் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்ப வேண்டியிருந்தது. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் என்பது தேவனுடைய நீதி முழுவதும் பூர்த்திசெய்யப்பட்டது என்ற தேவனின் நீதியான அங்கீகாரமாக இருந்தது. மேலும், நம்முடைய இரட்சிப்பு இந்த உயிர்த்தெழுந்த கிறிஸ்துவில் நித்தியமாக பாதுகாப்பானதாக உள்ளது, ஏனெனில் நம் சார்பில் அவரது நீதியான விலைக்கிரயம்செலுத்தலை தேவன் ஏற்றுக்கொண்டதை உயிர்த்தெழுதல் நிரூபித்தது. கிறிஸ்து நம் நீதிப்படுத்தலுக்காக உயிரோடு எழுப்பப்பட்டார், மேலும் இந்த நீதியுள்ள தேவன் அவரில் நம்மை நீதிமான்களாக அங்கீகரித்தாக வேண்டும்.
பின்புலம்: தேவனுடைய நீதியைப் பற்றிய சத்தியம், இளம் வாலிபர்களின் ஆவிக்குரிய அஸ்திபாரத்திற்கு அவசியம்.
அதிகாரங்கள்: மத்தேயு 27–28.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
I. மத்தேயுவில், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நீதியைப் பற்றிய ஒரு காரியம்
மத்தேயு, பரலோக ராஜ்யத்தின் ராஜாவாகிய கிறிஸ்துவின் மீது குவிமையம் கொள்கிறது. ராஜ்யம் என்பது நீதியைப் பற்றிய ஒரு காரியம்; ஆகவே, கிறிஸ்து ராஜ்யத்தின் நேர்த்தியான ராஜாவாக இருப்பதற்கு, அவர் நீதியுள்ளவராக இருப்பதாகக் காட்டப்பட்டாக வேண்டும். மத்தேயுவில் தேவன், கிறிஸ்து நீதியுள்ளவர் என்றும், அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்புவதன் மூலம் இந்த ராஜாவாக இருக்கத் தகுதியுள்ளவர் என்றும் உறுதிப்படுத்துகிறார். எனவே, மத்தேயுவில், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நீதியுடன் தொடர்புடையது. “நாம் மத்தேயு 28ஐ வாசிக்கையில், நமக்கு இந்தக் கருத்து இருக்க வேண்டும். இந்த அதிகாரத்தில், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வல்லமையுடன் தொடர்புடையது என்ற ஒரு மறைவான குறிப்பையும் நாம் பார்க்க முடியாது. எனினும், நாம் கவனமாக வாசித்தால், இது நீதியுடன் தொடர்புடையது என்று நாம் பார்க்க முடியும். ஏன் கிறிஸ்துவின் உயித்தெழுதலைப்பற்றிய அதிகாரமான இந்த அதிகாரத்தில், ரோம படைவீரர்களின் இலஞ்ச ஊழலைப்பற்றிய பதிவை மத்தேயு சேர்க்கிறான் என்று ஒருவேளை நீங்கள் ஆச்சரியப்பட்டிருக்கலாம் [மத். 28:11–15]. இது மனிதனின் அநீதியை அம்பலமாக்கும் குறிக்கோளுக்காகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அநீதிக்கு எதிர் வல்லமை அல்ல, மாறாக நீதியாகும். தேவன் தம் நீதியின்நிமித்தம், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்ப பொறுப்புள்ளவராக இருந்தார். ஆகையால், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் தேவனின் நீதியின்படி இருந்தது. படைவீரர்களின் இலஞ்ச ஊழலைப்பற்றிய வரலாற்று விவரணத்தை மத்தேயு உட்செருகியதற்கான காரணம் இதுவே. வேறெந்த சுவிசேஷமும் இதைக் குறிப்பிடவில்லை. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் தேவனின் நீதியுடன் தொடர்புடையது, இது மனிதனின் அநீதிக்கு எதிரானது என்பதைக் காட்ட மத்தேயு இதைச் சேர்க்கிறான்” (Life-study of Matthew, Message 72, pp. 822–823). தம் நியாயத்தீர்ப்பு மற்றும் சிலுவைமரணத்தில், கிறிஸ்து முழுவதும் நீதியுள்ளவராகக் காட்டப்பட்டார். இதற்கு நேர்மாறாக, அந்த நேரத்தில் இஸ்ரயேல் தலைவர்கள் தங்கள் திட்டங்கள் மற்றும் இடைபடுதல்களில் முற்றும்முடிய அநீதியானவர்களாக இருப்பதாகக் காட்டப்பட்டனர். அவர்களின் அநீதியானது ஒரு கறுப்புப் பின்புலமாகச் செயல்படுகிறது, இதற்கு எதிராக கிறிஸ்துவின் நீதி ஒரு படிகத் தெளிவான முறையில் தனித்து நிற்கிறது.
II. கிறிஸ்து எல்லா நீதியையும் நிறைவேற்றியிருந்தப் பிறகு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார்—மத். 3:15; 1 யோ. 2:1; ரோ. 4:25; 5:18
கிறிஸ்து எல்லா நீதியையும் நிறைவேற்றிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார் (ஒப். மத். 3:15). கிறிஸ்துவின் நீதியான வாழ்க்கையின் உச்சமடைதல் (உச்சத்தை அடைதல்) “ஒரே நீதியுள்ள செய்லாக” இருந்தது (ரோ. 5:18, கிரே.), இது தேவனுடைய பொருளாட்சியில் மீட்பை நிறைவேற்றியது. சிலுவையில், மனிதனின் அநீதி அனைத்தும் கிறிஸ்துவின் மீது வைக்கப்பட்டது, மேலும் அவர் நம் பாவங்களுக்கான ஒரு பதிலீடாக நீதியுள்ள தேவனால் ஒரு நீதியான வழியில் நியாயந்தீர்க்கப்பட்டார் (ஏசா. 53:6; 1 பேது. 2:24). கிறிஸ்து தேவனுடைய நீதியின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றியதால், தேவன் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்புவதற்கு தம் நீதியில் பொறுப்புள்ளவராக இருந்தார். தம் நீதியின்படி, தேவன் கிறிஸ்துவை சிலுவையில் நியாயந்தீர்க்க வேண்டியிருந்தது. அதுவுமல்லாமல் அவரது நீதியின்படி, தேவன் கிறிஸ்துவை மரணத்திலிருந்து விடுவித்து, மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்ப வேண்டியிருந்தது. ரோமர் 4:25 உயிர்த்தெழுதலை நீதியுடன் இணைக்கிறது, இது கிறிஸ்து “நம் நீதிப்படுத்தலுக்காக எழுப்பப்பட்டும்” இருந்தார் என்று கூறுகின்றது. எனவே, உயிர்த்தெழுதல் என்பது தெய்வீக வல்லமையைப் பற்றிய ஒரு காரியமாக மட்டுமல்லாமல், நீதியைப் பற்றிய ஒரு காரியமாகவும் உள்ளது. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் தேவனுடைய நீதியை வெளியரங்கமாக்கியது, மேலும் தேவனுடைய நீதியின் தரத்தின்படி நம்மை நீதிப்படுத்தவும் (ரோம். 4:25), நம்மை “அவரில் தேவனுடைய நீதியாக” ஆக்குவதற்கும் கூட செய்தது (2 கொரி. 5:21, கிரே.).
A. இயேசு ஒரு குழந்தையாகவும், ஒரு வயதுவந்தவராகவும் ஒரு பாவமற்ற வாழ்க்கையை வாழ்ந்தார், மேலும் அவருடைய பயபக்தியின் நிமித்தம் (காரணமாக) தேவனால் கேட்கப்பட்டார்—எபி. 5:7; லூக்கா 2:52; யோவான் 1:29; 1 பேதுரு 2:22-23
எபிரெயரில், தேவன் இயேசுவின் பயபக்திக்கு மாறுத்தரம் அளிக்கும் விதமாக அல்லது அதை அங்கீகரிப்பதற்காக இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பியதாக நமக்குச் சொல்லப்படுகிறது. இங்கே “பயபக்தி” என்பது ஒரு மத ரீதியான வாழ்க்கை முறையைக் குறிப்பதில்லை; மாறாக அது நீதியின்படி உள்ள ஒரு நடையையும் வாழ்க்கையையும் குறிக்கிறது. தொழுவத்திலிருந்து (முன்னணையிலிருந்து) சிலுவை வரை, கிறிஸ்து முற்றிலும் நீதியுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார். இந்த நீதியுள்ள தேவனின் தெய்வீக ஜீவனால் வாழ்ந்தவராக, இயேசுவால் இதைச் செய்ய இயன்றது. அவர் முழுவதும் நீதியுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்ந்ததால், அவர் நம் சார்பில் மரிக்கத் தகுதி பெற்றார், மேலும் அவர் தேவனால் உயிர்த்தெழுப்பப்படுவதற்குத் தகுதி பெற்றார். ஒரு குழந்தையாக, இயேசு பாவம் இன்றி இருந்தார். ஒரு குழந்தையாகக்கூட, அவர் கீழ்ப்படிதலும் தூய்மையும் கொண்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார். அவர் பொய் சொல்வதற்கான அல்லது பிறரிடம் இருந்ததைப் பற்றி பேராசை கொள்வதற்கான எந்தச் சபலப்படுத்தலையும் அவர் எதிர்த்தார். அவர் தம் பெற்றோருக்கு முற்றிலும் கீழ்ப்படிதலுள்ளவராக இருந்தார் (லூக்கா 2:51). சத்தியத்தைத் தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வார்த்தை கூட அவர் பேசியதில்லை, அவர் பிறர் மீது வெறுப்புணர்வால் எதையும் செய்ததும் இல்லை. என்னே ஒரு தூய்மையான குழந்தைப் பருவத்தை அவர் மேற்கொண்டார்! அது நம் குழந்தைப் பருவத்திலிருந்து எவ்வளவு வித்தியாசமானது! ஒரு வயதுவந்தவராக, இயேசு பாவம் இன்றியும் இருந்தார். யோவான் ஸ்நானகன் இயேசுவை தேவ ஆட்டுக்குட்டி என்று அறிமுகப்படுத்தினான். நிச்சயமாக அவனது பரிந்துரை, இயேசு தம் குணத்தில் எந்தக் கறையோ பழுதோ இல்லாமலும், தம் சுபாவத்தில் பாவம் இல்லாமலும் இருந்தார் என்பதை மறைவாய்க் காட்டியது.
B. இயேசு தேவனுடைய நீதியான கோரிக்கை ஒவ்வொன்றையும், தம்மைக் குறித்து எழுதப்பட்ட வேதவாக்கியங்கள் அனைத்தையும் நிறைவேற்றினார்—மத். 26:54; மாற்கு 14:49-50; லூக்கா 24:27
இயேசு பாவத்திற்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்தது மட்டுமல்லாமல்; அவர் தேவனுடைய நீதியான கோரிக்கைகள் அனைத்தையும், வேதவாக்கியம் அனைத்தையும் மும்முரமாக நிறைவேற்றவும் செய்தார். நம் பாவநிவாரண பலியாக இருப்பதிலிருந்து அவரைத் தகுதியிழக்க வைக்கும் எதிர்மறையான எதையும் தவிர்ப்பது ஒரு காரியமாக இருந்தது; தமக்கு தேவனால் நியமிக்கப்பட்ட அனைத்தையும் நேர்மறையாக நிறைவேற்றுவது இன்னொரு காரியமாக இருந்தது. தம்மிடம் தேவன் கோரிய அனைத்தையும் நிறைவேற்ற இயேசு கவனமாக இருந்தார் (யோவான் 19:30).
- இயேசு எல்லா நீதியையும் நிறைவேற்றினார்—மத். 3:15
இயேசு தம் வாழ்வில் எல்லா நீதியையும் நிறைவேற்றினார். இதைப் பற்றிய ஓர் எடுத்துக்காட்டு மத்தேயு 3:15இல் கொடுக்கப்பட்டுள்ளது. தேவன், பழைய சிருஷ்டிப்பில் உள்ள தம் மக்கள் ஞானஸ்நானம் மூலமாக தம் புதிய காலகட்டத்திற்குள் நுழைய வேண்டும் என்று நியமித்தார். இயேசு தம் மாம்சத்தில் பழைய சிருஷ்டியுடன் தொடர்புடைய ஓர் இஸ்ரயேலராக இருந்ததால், ஞானஸ்நானம் செய்யப்படுவதற்கு அவர் முன்னணி வகித்தது பொருத்தமானதாக இருந்தது (மத். 3:15 மற்றும் footnote 1). (தீர்த்துக்கட்டுதல் பற்றிய ஒரு சித்திரமாகிய) ஞானஸ்நானத்திற்குள் அவர் நுழைதல், ஒரு மும்முரமான வழியில் நீதியை நிறைவேற்றுவதற்காக இருந்தது. தீர்த்துக்கட்டப்படுதலும் முளைப்பிக்கப்படுதலுமே அதிஉயர்ந்த நீதி. பரலோக ராஜ்யத்தின் ராஜாவாக, கர்த்தராகிய இயேசு முடிவுகட்டப்படுவதற்கு முன்னணியெடுத்தார். இவ்விதமாய், அவர் தேவனுடைய பார்வையில் நீதியை நிறைவேற்றினார். ஞானஸ்நானத்தின் மூலமாக கர்த்தராகிய இயேசு நீதியின் நுழைவாயிலுக்குள் பிரவேசித்து, நீதியின் பாதையில் தொடர்ந்து நடந்தார். ஆகையால், அவர் நியாயமானவராக, நீதியானவராக இருந்தார் (அப். 3:14; 7:52; 22:14)” (Life-study of Matthew, Message 10, pp. 127–128).
- இயேசு வேதவாக்கியம் அனைத்தையும் நிறைவேற்றினார்—மத். 21:42; மாற்கு 15:28; லூக்கா 4:21; 24:27; யோவான் 13:18; 17:12; 19:24, 28, 36
தேவனுடைய நீதியான கோரிக்கைகள் அனைத்தையும் மும்முரமாக நிறைவேற்றுவதோடு கூடுதலாக, இயேசு தம்மைக் குறித்து எழுதப்பட்ட வேதவாக்கியங்கள் அனைத்தையும் நிறைவேற்றவும் வேண்டியிருந்தது. உதாரணமாக, அவர் நிஜமான பஸ்கா ஆட்டுக்குட்டியாக நான்கு நாட்கள் யூத ஆட்சியாளர்களால் பரிசோதிக்கப்பட்ட பிறகு பஸ்கா அன்று மரிக்க வேண்டியிருந்தது. இந்த மாதிரியை நிறைவேற்ற, அவர் குற்றமற்றவராகக் காணப்பட்டும்கூட, இன்னும் நிராகரிக்கப்பட வேண்டியிருந்தது (மத். 21:42). மேலும், அவர் மரிக்க வேண்டியிருந்த நாள் தானியல் 9:25-26 இல் உள்ள தீர்க்கதரிசனத்தால் நிறுவப்பட்டது. அவர் வெறுமனே எந்த பஸ்கா பண்டிகையிலும் மரிக்க முடியாது; அது அந்தக் குறிப்பிட்ட வருடமாக இருக்க வேண்டியிருந்தது. இவற்றையும், இத்தனை அதிகமான மற்ற மாதிரிகளையும் தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்றுவதற்காக, இயேசு தாம் பூமியில் ஊழியம் செய்து கொண்டிருந்தபோது இத்தனை அதிகமான நிகழ்வுகளை ஒருங்கிணைக்க வேண்டியிருந்தது.
- இயேசு தம் வெற்றிகரமான மரணத்தை அநுபவிப்பதன் மூலம் தம் பூமிக்குரிய ஊழியத்தை நிறைவேற்றினார்—மத். 26:54
இயேசு தம் பூமிக்குரிய வாழ்க்கை மற்றும் ஊழியத்தின் ஓட்டத்தை எந்தப் பழுதோ தோல்வியோ இல்லாமல் நிறைவேற்றினார். தேவனுடைய பொருளாட்சியைச் செயல்படுத்த முடியக்கூடிய ஒரு மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை அவர் சாதிக்கத் தேவையான ஒவ்வொரு கோரிக்கையையும் அவர் நிறைவேற்றினார். சிலுவையில், அவர் நம் இடத்தில் தேவனுடைய முழு நியாயத்தீர்ப்பையும் அநுபவித்திருந்தப் பிறகு, அவர், “முடிந்தது!”என்று கூக்குரலிட்டார். என்னே ஒரு வெற்றி! என்ன ஒரு ஜெயம்! கிறிஸ்துவின் மரணத்தின் வேலை பயங்கர-வீரியமுள்ளதாக இருந்தது. குறைவுபடுகிற அல்லது செய்யப்படாமல் இருந்த விட்டுவிடப்பட்ட எதுவும் இருக்கவில்லை. நம் சார்பான அவரது மீட்பின் பணி (வேலை) பூர்த்திசெய்யப்பட்டது. தம் ஆவியை தேவனிடம் ஒப்புக்கொடுத்து, அவர் மரித்தார், மேலும் அவரது ஊழியத்தின் பூமிக்குரிய நிலை நிறைவுசெய்யப்பட்டது. அது முடிக்கப்பட்டது! அது முடிந்தது! தேவன் விரும்பிய மற்றும் கோரிய அனைத்தையும் அவரது ஜீவன் மற்றும் மரணம் நிறைவேற்றியது.
III. தேவன் நீதியைப் பற்றிய ஒரு காரியமாகக் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார்—எபி. 5:7.
யோவான் சுவிசேஷத்தில், இயேசு தம்மையே மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்புவதற்கான வல்லமை தம்மிடம் இருந்தது என்று கூறினார். அந்த சுவிசேஷத்தில், வலியுறுத்துதல் ஜீவனாகிய கர்த்தர் மீது உள்ளது. உயிர்த்தெழுதல் ஜீவனை எதுவும் அடக்கிவைக்க முடியாது! இருப்பினும், மத்தேயுவில், கர்த்தரின் உயிர்த்தெழுதல் நீதியைப் பற்றிய ஒரு காரியம் ஆகும். தேவன் நீதியுள்ளவர் அதோடு இயேசு எல்லா நீதியையும் நிறைவேற்றியிருந்தார் என்பதால் தேவன் இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார். தேவனுடைய நீதியான கோரிக்கை ஒவ்வொன்றையும் நிறைவேற்றிய பிறகு இயேசு பாதாளத்தில் விட்டுவிடப்படுவது நீதியானதாக இருந்திருக்காது. இருப்பினும், தேவன் தம் செயல்கள் எல்லாவற்றிலும் நீதியுள்ளவர் (தானி. 9:14); ஆகையால், அவர் கிறிஸ்து இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார். பரலோக ராஜ்யம் நீதியைப் பற்றிய ஒரு காரியம் ஆகும் (ஏசா. 16:5); நீதி தேவனுடைய சிங்காசனத்தின் அஸ்திபாரமும் கூட (சங். 97:2). ஏசாயா 53:11இல், தேவன் இயேசுவை பாவத்திற்கான ஒரு காணிக்கையாக ஆக்கிவிட்டப் பிறகு, அதன் விளைவைக் காணும்படி இயேசுவுக்குக் கொடுக்கப்படும் என்று நமக்குச் சொல்லப்பட்டுள்ளது. இது உயிர்த்தெழுதலை மறைவாய்க் காட்டுகிறது. மேலும், நடபடிகள் 2:31 மற்றும் நடபடிகள் 13:37 இல், தேவன் தம் பரிசுத்தராகிய இயேசு சீர்கேட்டை அநுபவிக்கவோ அல்லது பாதாளத்திற்குக் கைவிடப்படவோ அனுமதிக்க முடியாது என்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தேவன் நீதியுள்ளவர் அதோடு (சிலுவையில் அவரது மரணத்துடன் உச்சத்தை அடைந்த—ரோ. 5:18)இயேசுவின் நீதியின் காரணமாக, தேவன் இயேசுவை மரித்தோர் மத்தியிலிருந்து உயிரோடு எழுப்பினார் (எபி. 5:7). இப்போது இயேசு பரலோகங்களில் சிங்காசனத்தில் ஒரு மனிதனாக நிறுவப்பட்டுள்ளார். என்னே ஒரு வெற்றி! இயேசு ஒவ்வொரு சோதனையிலும் ஜெயித்தார், ஒவ்வொரு பரீட்சையிலும் தேர்ச்சிபெற்றார். அவர் எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், அவர் ஒருபோதும் அநீதிக்கு ஒருமுறை கூட அடிபணியவில்லை (எபி. 4:15). ஆகவே, தேவன் அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பி, அவரைக் கர்த்தராகவும் கிறிஸ்துவாகவும் ஆக்கினார் (அப். 2:36). இயேசுவின் வெற்றிக்காக அல்லேலூயா! நம் தேவனும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நீதிக்காக கர்த்தரைத் துதியுங்கள் (2 பேதுரு. 1:1 மற்றும் footnote 9)!
IV. உயிர்த்தெழுந்தக் கிறிஸ்துவில் நம் இரட்சிப்பு நித்தியமாகப் பாதுகாப்பானது—ரோ. 3:26
A. நீதியின் காரணமாக, தேவன் இயேசுவின் விசுவாசத்தைச் சேர்ந்தவர்களை நியாயப்படுத்தியாக வேண்டும்—ரோ. 3:22, 26
தேவன் நீதியுள்ளவர் என்பதால், கிறிஸ்துவில் விசுவாசிப்பவர்களை அவர் ஏற்றுக்கொண்டாக வேண்டும். கிறிஸ்துவை உயிரோடு எழுப்பிய பிறகு, அவர் ஒருபோதும் கிறிஸ்துவை மீண்டும் பாதாளத்திற்குள் வைக்கமாட்டார். ஆகவே, நாம் கிறிஸ்துவில் உள்ள நம் இரட்சிப்பில் நித்தியத்திற்கும் பாதுகாப்பாக இருக்கிறோம், ஏனெனில் கிறிஸ்து உயிர்த்தெழுதலில் இருக்கும் வரை, நாம் இரட்சிக்கப்படுவோம் என்பதை நாம் அறியமுடியும். கிறிஸ்து நமக்காக என்னே ஒரு பாதுகாப்பான இரட்சிப்பை அடித்துருவாக்கியிருக்கிறார்! தேவனுடைய சிங்காசனம் நீதியின் அடிப்படையில் இருப்பதால், தேவனால் ஒருபோதும் நம்மை நிராகரிக்க முடியாது (சங். 89:14; 97:2). இயேசுவின் பலி தேவனுக்கு ஏற்புடையதாக இருந்திருக்கவில்லை எனில், தேவன் இயேசுவை உயிர்த்தெழுப்பியிருக்க மாட்டார். எனவே, இந்த உயிர்த்தெழுந்தக் கிறிஸ்துவே நம் நித்திய இரட்சிப்பின் (இரட்சிப்புக்கான) “ரசீது.” தேவனுடைய சொந்த நேசக் குமாரனான, இந்த உயிர்த்தெழுந்த இயேசுவாகிய, ஓர் அதி அற்புதமான “ரசீதை” அவர் நமக்கு வழங்கியுள்ளார்! இயேசு தாமே நம் இரட்சிப்பின் பாதுகாப்பு, மேலும் அவர் தாமே நம் நீதி (1 கொரி. 1:31; எரே. 23:6). இதனால்தான் வேதாகமம், தேவனுடைய நீதி சுவிசேஷத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுகிறது (ரோ. 1:16-17).
B. நீதிப்படுத்தப்பட்டவர்கள் முற்றும்முடிய இரட்சிக்கப்படும் வரை, தேவன் அவர்களுக்கு ஜீவனைக் கொடுத்தாக வேண்டும்—ரோ. 5:18-19
நம் மறுபடிஜெநிப்பித்தல், சிலுவையில் நம் பாவங்களுக்காக மரிக்கும் கிறிஸ்துவின் நீதியான செயலின் அடிப்படையில் இருந்தது. இயேசு சிலுவையில் மரித்தபோது இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டுப் பாய்ந்தது (யோவான் 19:34). இந்த இரத்தம் பாவத்தைச் சுத்திகரிப்பதற்காக இருந்தது, மேலும் இந்த இரத்தம் சுத்திகரித்த அனைவருக்கும் ஜீவனைக் கொடுப்பதற்கு இந்தத் தண்ணீர் இருந்தது. நாம் கர்த்தருடைய இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டதால், உயிர்த்தெழுதலில் கர்த்தர் இந்த தெய்வீக ஜீவனை தம் மரணத்தின் மூலமாக நமக்குள் விடுவித்தார். நீதியின் நிமித்தம், நம் ஆவி ஜீவனாயிருக்கிறது (ரோ. 8:10)! இன்று இந்த ஜீவன் நம் ஆவியிலிருந்து நம் முழு ஆள்தத்துவத்திற்குள்ளும் பரவுவதன் மூலம் நம்மை நீதிமான்களாகக் கட்டமைக்கின்றது (ரோ. 5:19; 2 கொரி. 5:21). நாம் பாவிகளாகக் கட்டமைக்கப்பட்டோம், ஆனால் இன்று தேவன் கிறிஸ்துவின் மீட்கும் வேலையின் (பணியின்)அடிப்படையில் தம் ஜீவனால் நம்மை நீதிமான்களாகக் கட்டமைத்தாக வேண்டும்.
C. இன்று உயிர்த்தெழுதலில் இயேசு சிங்காசனத்தில் இருப்பது மட்டுமல்லாமல்; அவர் நம் ஆவியிலும் இருக்கிறார்—வெளி. 22:1, 3; கொலோ. 1:27; ரோ. 8:11, 16; 2 தீமோ. 4:22
உயிர்த்தெழுதலில் கிறிஸ்து ஜீவன்-தரும் ஆவியானார், மேலும் இப்போது அவர் நமக்குள் வாழ்கிறார் (1 கொரி. 15:45; கொலோ. 1:27). உயிர்த்தெழுதலின் நாளில், கர்த்தர் தம்மையே ஜீவ சுவாசமாக சீஷர்களுக்குள் சுவாசித்து ஊதினார் (யோவான் 20:22). இன்று நாம், நமக்குள் இருக்கும் ஆவியானவராகிய நம் உயிர்த்தெழுந்த கர்த்தரால் வாழக் கற்றாக வேண்டும். உயிர்த்தெழுப்பப்பட்டவரும், உயிர்த்தெழுதலாயிருப்பவரும் இப்போது சரியாக நமக்குள்தான் இருக்கிறார்! கர்த்தர் தம்மையே நீதியாகக் கொண்டு நம்மைக் கட்டமைக்க சரியாக நமக்குள் வாழும் நீதியுள்ளவராக உயிர்த்தெழுதலில் இருக்கிறார். இத்தகைய ஒரு வழிமுறையின் மூலமாக, ஒரு நாள் நம் ராஜாவாகிய கிறிஸ்துவின் ஆளுகைசெய்தலின் கீழ் ராஜ்யத்தில் வாழ்வதற்கு நாம் அனைவரும் நீதிமான்களாகக் கட்டமைக்கப்படுவோம் அதோடு நாம் அனைவரும் அவரது நீதியுள்ளவர்களாகத் தகுதிபெறுவோம் (மத். 13:43).
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: இந்தப் பாடம், தேவனுடைய இரட்சிப்புக்குப் பின்னால் உள்ள இரண்டு சக்திகளைக் காட்டுவதற்கான ஒரு வழியில் முன்வைக்கப்படலாம்—அன்பு மற்றும் நீதி. “தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3:16). ஆனால் தேவனுடைய நீதி நிறைவேறாமல், தேவனுடைய அன்பு இரட்சிப்பதற்காக மனிதனை வந்தடைய எந்த வழியும் இருக்க முடியாது என்பதை நாம் பார்த்தாக வேண்டும். சிலுவையில் கர்த்தருடைய மரணம் தேவனுடைய நீதியின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக இருந்தது. தேவன் “நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணின” சமயமாகிய, சிலுவையில் கடைசி மூன்று மணிநேரங்களில் இது நிறைவேற்றப்பட்டது. தேவனுடைய நீதி என்ற கருத்தை இளம் வாலிபர்களிடம் முன்வைப்பதற்கான ஒரு வழியாக, “God’s Full Salvation, A Lesson Book” என்ற புத்தகத்தில், “The Basis of Salvation—God’s Righteousness” என்ற தலைப்பிலான பாடம் ஒன்பதைப் பயன்படுத்தவும். அவர்கள் இந்தக் கருத்தைப் புரிந்துகொண்டவுடன், கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்படுதல் என்பது நீதியைப் பற்றிய அதோடு பாவத்திற்கான அவரது காணிக்கையை தேவன் ஏற்றுக்கொண்டதையும் பற்றிய ஒரு காரியமாக இருந்தது என்பதை அவர்களுக்குக் காட்டவும் (உரைவிளக்கப் பாடத்தின் குறிப்புகள் III. & IV). தங்கள் பாவங்களுக்காக மரித்ததற்காகவும், அவருடைய நீதியின் நிமித்தம் தங்களை நியாயத்தீர்ப்பிலிருந்து விடுவித்ததற்காகவும் கர்த்தருக்கு நன்றி கூறி, ஜெபிக்கும்படி இளம் வாலிபர்களிடம் கேட்டுக்கொள்வதன் மூலம் முடிக்க நீங்கள் உணரக்கூடும்.
சுவிசேஷ செயலாக்கம்: நீதியே தேவனுடைய சிங்காசனத்தின் அஸ்திபாரம் (சங். 89:14). ஆகவே, தேவன் எல்லாவற்றையும் ஒரு நீதியான வழியில்—நீதியின்படி செய்தாக வேண்டும். தேவன் மனிதனை இரட்சித்தல் கூட நீதியான விதத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். தேவனுடைய பிரமாணத்தின்படி, பாவத்தின் நீதியான தண்டனை மரணம் (எசே. 18:4; ரோ. 6:23.) ஆனாலும், எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையினின்று குறைவுபட்டிருக்கிறார்கள் (ரோ. 3:23); நீதிமான் ஒருவனாகிலும் இல்லை (ரோ. 3:10). ஆகவே, தேவனுடைய நீதியான நியாயப்பிரமாணத்தின்படி, ஒவ்வொரு மனிதனும் மரணத்திற்குப் பாத்திரராக இருக்கிறான். ஆனால் தேவனுடைய அன்பான இருதயத்தின்படி, எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார் (1 தீமோ. 2:4). அப்படியானால் தேவன் என்ன செய்ய வேண்டும்? தேவன் மனிதனுக்கான தம் அதீத (மாபெரும்) அன்பின் பொருட்டு தேவன் தம் நீதியை வெறுமனே புறக்கணிக்க முடியாது. மனிதன் இரட்சிக்கப்பட வேண்டுமானால், அது தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் நீதியான கோரிக்கைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யும் ஒரு வழியில் செய்யப்பட்டாக வேண்டும். இதைச் செய்ய, நம் தேவன் ஓர் அற்புதமான இரட்சிப்பின் வழியை வழங்கினார், தேவனுடைய நீதியை திருப்திப்படுத்தவும், மரண தண்டனையிலிருந்து நம்மை இரட்சிக்கவும் செய்தார். ஒரு பரிபூரணமான, பாவமற்ற, மனித வாழ்க்கையை வாழ்வதற்கு பாவ மாம்சத்தின் சாயலில் ஒரு மனிதனாக ஆகுவதன் மூலம் அவர் இதைச் செய்தார் (யோவான் 1:14; ரோ. 8:3; எபி. 4:15). பின்னர், அவர் உலகத்தின் பாவத்தைப் நீக்கிப்போடுவதற்கு இந்த ஒப்பற்ற, மாசற்ற (கறையற்ற) தேவ ஆட்டுக்குட்டியாக ஒரேதரம் மரிக்கத் தம்மையே ஒப்புக்கொடுத்தார் (எபி. 7:27; 9:12; 10:10; யோவான் 1:29). பின்னர் மூன்றாம் நாளில், அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் (1 கொரி. 15:4). அவரது உயிர்த்தெழுதல், நமக்கான அவரது மரணத்தின் மூலம் தேவனுடைய கோரிக்கைகள் பூர்த்தியாக்கப்பட்டன என்பதையும், அவரது மரணத்தின் நிமித்தம் நாம் தேவனால் நீதிப்படுத்தப்படுகிறோம் என்பதையும், அவரில் நாம் தேவனுக்கு முன்பாக ஏற்றுக்கொள்ளப்படுகிறோம் என்பதையும் நிரூபிக்கிறது (ரோ. 8:3-4; ரோ. 4:24–5:2). நாம் கர்த்தராகிய இயேசுவுக்குள் விசுவாசிப்பதன் மூலம், அவர் தம் நீதியான வாழ்க்கையிலும், மீட்கும் மரணத்திலும், ஜீவனை விடுவிக்கும் உயிர்த்தெழுதலிலும் நிறைவேற்றிய அனைத்தும் விசுவாசத்தில் நமக்குப் பிரயோகிக்கப்படுகிறது (அப். 26:18; கலா. 2:16, 20). இவ்வாறு, தேவனுடைய நீதியானது விசுவாசத்தின் மூலமாக சுவிசேஷத்தில் வெளிப்படுத்தப்பட்டு, உயிர்த்தெழுந்தக் கிறிஸ்துவில் நித்தியத்திற்கும் பாதுகாப்பான ஓர் இரட்சிப்பை நமக்கு அளிக்கின்றது (ரோ. 1:16-17; யோவான் 10:28; ரோ. 3:24; 1 கொரி. 15:21-22; ரோ. 8:1)!
மிக முக்கியக் காரியங்கள்: நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.).
பின்புல வாசிப்பு: Life-study of Matthew, Messages 71 and 72.
REFERENCES: Life-study of Matthew, Messages 71–72; Message 10, pp. 127–128; God’s Full Salvation, A Lesson Book, Lesson 9.