கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல்

பகுதி 9

✵பாடம் 10 – 18

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலும், உயர்த்தப்படுதலும்

குறிக்கோள்: அடிமை-இரட்சகர் தம் பரமேறுதலில் உயர்த்தப்பட்டார், மேலும் ஒரு மனிதனாக, கர்த்தராகவும் கிறிஸ்துவாகவும் ஆக்கப்பட்டார் என்பதைக் காண்பதற்கு.

பொருட்சுருக்கம்: கிறிஸ்து ஒரு மனிதனாக ஆகுவதற்கு மாம்சமாவது என்றால், அவர் தேவனாக தம் வடிவத்தை ஒதுக்கிவைக்க வேண்டியிருந்தது என்பது அர்த்தம். ஒரு மனுஷரூபமாய்க் காணப்பட்டு, அவர் நமக்காகச் சிலுவையில் ஓர் அவமானகரமான மரணத்தை எய்தும் அளவிற்குக் கூட, ஓர் அடிமையாகச் சேவிக்க தம்மைத்தாமே கூடுதலாகத் தாழ்த்தினார். அப்படிப்பட்ட ஒருவரைத்தான் தேவன் இந்த பிரபஞ்சத்தின் சிங்காசனத்திற்கு உயர்த்தினார். தம் பரமேறுதலில், கிறிஸ்து கர்த்தராகவும் கிறிஸ்துவாகவும் ஆக்கப்பட்டார். எனவே, இன்று சிங்காசனத்தில் தேவனுக்காகவும் தேவனாகவும் ஆட்சிசெய்யும் ஒரு மனிதன் வீற்றிருக்கிறார். சிங்காசனத்தில் ஒரு மனிதன் இருக்கிறான்! இன்று, நாம் கிறிஸ்துவை பரமேறிய கர்த்தராக அறியக்கூடும். அவரே பூமியின் ராஜாக்களுக்கு ஆட்சியாளர் (வெளி. 1:5), நாம் இரட்சிக்கப்பட்டு, முதிர்ச்சியடைந்து, சீர்பொருத்தப்பட்டு, மகிமைக்குள் கொண்டுவரப்படக்கூடுமாறு இந்த முழு பிரபஞ்சத்தையும் நிர்வகிக்கின்றார். மேலும், நாம் சிங்காசனத்தில் உள்ள இவரை அனுபவிக்கக்கூடும், ஏனெனில் அவர் நம் ஆவியில் ஆவியானவராகவும் இருக்கிறார். நாம் ஆவியானவரால் வாழவும் நடக்கவும் செய்யும்போது, அவர் நமக்குள் ஆளுகைசெய்கிறார் அதோடு நம் எல்லா சூழ்நிலைகளிலும், சுற்றுச்சூழல்களிலும் நாம் அவருடன் ஆளுகைசெய்கிறோம்.

பின்புலம்: நமக்கு ஊழியம்செய்துக்கொண்டும், நமக்காக ஜெபித்துக்கொண்டும், நமக்குச் சமயத்திற்கேற்ற கிருபையையும் இரக்கத்தையும் நிரப்பீடளித்துக்கொண்டும் இருக்கும் சிங்காசனத்தில் உள்ள கிறிஸ்து இளம் வாலிபர்களுக்கு  உத்வேகம் அளிப்பதிலும், அவர்களை உற்சாகப்படுத்துவதிலும் ஒருபோதும் ஓய்வதில்லை.

அதிகாரம்: லூக்கா 24.

போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:

இந்தப் பாடத்தின் செய்திக்குறிப்பு மற்றும் குறிப்புகளுக்குக் கூடுதலாக, இந்தப் பாடத்திற்கான ஆயத்தமாகுதலின் பகுதியாகப் பாடல்கள் #82, #86, #96 ஆகியவை அனுபவித்துமகிழப்பட்டு அசைபோடப்படும்படி பரிந்துரைக்கப்படுகிறது.

I. தம் மாம்சமாகுதல், மனித வாழ்க்கை, மரணம் ஆகியவற்றின் மூலமாக முற்றும்முடிய தம்மையே தாழ்த்திய கர்த்தர் தம் பரமேறுதல் மூலமாக முற்றும்முடிய உயர்த்தப்பட்டார்—மத். 23:12

A. அவரது மாம்சமாகுதல் மூலமாக, கிறிஸ்து தேவனின் வடிவத்தை ஓர் அடிமையின் வடிவத்திற்காகப் பரிமாற்றம் செய்துக்கொண்டார்—பிலி. 2:8

நித்தியத்தில் கிறிஸ்து தேவனுடைய வடிவத்தில் இருந்தபோதிலும், அவர் தம் மாம்சமாகுதலின் காலத்தில் மனுஷீகத்தின் மாம்சத்தை தம் மீது தரித்துக்கொள்வதற்காக அவர் தம் தெய்வீக வடிவத்தை ஓரமாக ஒதுக்கிவைத்தார். அவர்   தம்மை அவதூறுசெய்து துஷ்பிரயோகம்செய்த மனிதர்களுக்கு மத்தியில் சிரம்பபட்டு உலைந்து நடப்பதற்காக தம் மகிமையின் சிங்காசனத்தை விட்டுவிட்டார். அவர் மனுக்குலத்தின் பாடுபடும் நிலைமையின் துயரத்தை அநுபவித்தார், மேலும் ஒரு மனிதனாக நம்மைப் போலவே எல்லா வகையிலும் சோதிக்கப்பட்டார். ஏசாயாவின்படி, கிறிஸ்து ஒரு சௌந்தரியமான மனித வடிவத்தைக் கூட கொண்டிருக்கவில்லை, ஆனால் எந்தச் சௌந்தரியமும் இல்லாமல், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற ஒரு வேரைப்போல வளர்ந்தார். மேலும், மாம்சமாகுதல் மூலமாக அவர் வீழ்ச்சியின் மூலம் மாம்சத்துடன் தொடர்புடைய எல்லாவற்றோடும் ஈடுபட்டார். “அவர் மகிமையின் தேவனாயிருந்தார். ஆனால் அவருடைய மாம்சமாகுதல், அவருடைய மகிமையிலிருந்து அவரை கீழே இறக்கிக்கொண்டுவந்து, ஒரு மனிதனாக்கியது. அவர் பழைய மனிதனுக்குரியவராகுமாறு அடிவரை கீழே சென்றார். அவர் புதிய சிருஷ்டிப்பின் பகுதியாக இருப்பதற்கு அல்ல, மாறாக, தேவனுடைய பழைய சிருஷ்டிப்பின் பகுதியாக இருப்பதற்கே மனிதமாம்சமாகுதலில் வந்தார். தாவீதின் இந்த வித்தின் (சந்ததியின்) மாம்சமானது சாத்தான், பாவம், உலகம் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட பழைய சிருஷ்டிப்பைச் சேர்ந்த ஒரு பழைய மனிதனே ஆகும்” (The Crystallization of the Epistle to the Romans​​, Message 1, p. 8).      கிறிஸ்து சிலுவையில் நம் இடத்தை எடுத்துக்கொள்ள முடியுமாறு, அவர் இதையெல்லாம் செய்ய ஒப்புக்கொண்டார். இது மூவொரு தேவனின் ஆலோசனை சங்கத்தால் தீர்மானிக்கப்பட்டது, மேலும் அதை நிறைவேற்றுவதற்காக கிறிஸ்து நம் நிமித்தமாக தம்மையே ஓர் அடிமையாக ஒப்படைத்தார். இவ்வாறு, இந்த நித்திய மற்றும் வரம்பற்ற தேவகுமாரன் நாசரேத்தைச் சேர்ந்த ஒரு சிறிய மனிதனாக தம் விழுந்துபோன சிருஷ்டிகள் மத்தியில் முப்பத்து மூன்றரை ஆண்டுகளாக உழைப்பதற்கு தம் தெய்வீக வல்லமை, மகிமை, பிரகாசம் ஆகியவற்றை மனப்பூர்வமாக ஒதுக்கிவைத்தார்.

B. மாம்சமான அடிமைஇரட்சகராக, கிறிஸ்து ஒரு சிலுவையின் மரணபரியந்தமும்கூட கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார்—மத். 27:26-44; பிலி. 2:8

“கிறிஸ்து ஒரு மனுஷரூபமாய்க் காணப்பட்டு, தம்மைத்தாமே தாழ்த்தினார். முதலில் அவர் தம் தெய்வத்தன்மையின் வடிவத்தை, அதாவது, புறம்பான வெளியாக்கத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, மனிதர்களின் ரூபத்தில் ஆகுவதன் மூலம் தம்மைத்தாமே வெறுமையாக்கினார். பின்னர் அவர் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்ததின் மூலம் தம்மைத்தாமே தாழ்த்தினார். கிறிஸ்து தேவனுடைய வெளியாக்கத்தை உடைய தேவனாயிருந்தார். அவர் தேவனுக்கு சமமாயிருந்தாலும், அவர் இந்த சமத்துவத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, மனிதர்களின் சாயலை எடுத்துக்கொண்டதின்மூலம் தம்மைத்தாமே வெறுமையாக்கினார்….பின்னர், ஒரு மனிதனின் தோற்றத்தில் காணப்பட்டு அவர் தம்மைத்தாமே தாழ்த்தினார். அவர் ஒரு மனிதனாக இருந்தபோது, அவர் எதையும் வலியுறுத்தவில்லை என்பதே இதன் பொருள். மாறாக, அவர் சிலுவையில் மரிக்கும் அளவிற்கு தம்மைத்தாமே தாழ்த்தினார். இதுவே நம் முன்மாதிரியாகிய கிறிஸ்து….சிலுவை மரணம் கிறிஸ்துவினுடைய தாழ்வுபடுத்துதலின் உச்சகட்டமாக இருந்தது. யூதர்களைப் பொருத்தவரை, இது ஒரு சாபமாக இருந்தது (உபா. 21:22-23). புறவினத்தாரைப் பொருத்தவரை, இது குற்றவாளிகள்மீதும் அடிமைகள்மீதும் சுமத்தப்படும் ஓர் மரண தண்டனையாக இருந்தது (மத். 27:16-17, 20-23). எனவே, இது ஓர் அவமானத்திற்குரிய காரியமாக இருந்தது (எபி. 12:2)” (Life-study of Philippians​, Message 10, p. 88).​

C. உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல் மூலமாக, தேவன் தாழ்த்தப்பட்ட கிறிஸ்துவை முற்றும்முடிய உயர்த்தி, எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்—லூக். 24:5-7, 50-52; மத். 28:17-18; பிலி. 2-9

கிறிஸ்துவின் மனித வாழ்வின் ஒரு குணாதிசயம் என்னவெனில், அவர் தமக்காக எதையும் பற்றிக்கொள்ள முயற்சிக்கவில்லை என்பதே. மாறாக, அவர் தம்மையே வெறுமையாக்கினார், மேலும் பிதா தமக்காக எதை வைத்திருந்தாலும், அது ஓர் இன்பமான காரியமாக இருந்தாலும் சரி, ஒரு துன்பமான காரியமாக இருந்தாலும் சரி, அதை அவர் வெறுமனே பெற்றார். அவர் ஒரு சிலுவையிலறையப்பட்ட வாழ்க்கையை, சிலுவையின் கீழ் வாழும் ஒரு வாழ்க்கையை, சுய-மறுதலித்தலின் ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார். கிறிஸ்து பிதா தமக்காக ஆயத்தம்செய்திருந்த அனைத்தையும் முடித்ததும், அவர் “முடிந்தது!” என்று கூக்குரலிட்டார். அவர் உண்மையாகவே தம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் பிதாவுக்குப் பணிந்தடங்குதலில் வாழ்ந்திருந்தார். அவர் ஒருபோதும் தம்மைத்தாமே உயர்த்தவோ அல்லது பிதா ஆயத்தம்செய்திருந்ததைத் தவிர வேறு எதையும் தமக்காக தேடவோ இல்லை. இதன் காரணமாக, தேவன் கிறிஸ்துவை உயர்த்தி, அவரை மேலே எழுப்பி, அவரது நாமத்தை இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அதி உயர்ந்த நாமமாக ஆக்கினார். தேவன் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒரு மாதிரியாகக் காண்பிக்க முடியக்கூடிய ஒரு வாழ்க்கையைக் கிறிஸ்து நிறைவேற்றினார். இன்று, கிறிஸ்து இந்தப் பிரபஞ்சத்தில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளார்! அவர் ஒவ்வொரு நபருக்கும், இடத்துக்கும் அல்லது பொருளுக்கும் மேலாக இருக்கிறார்.

II. இன்று பிரபஞ்சத்தில், ஒரு மனிதன் தேவனுடைய சிங்காசனத்தின் மீது அமர்த்தப்பட்டிருக்கிறார், எல்லாவற்றிற்கும் மேலாக ஆளுகைசெய்கின்றார்—வெளி. 3:21; லூக்கா 22:69

கிறிஸ்து உயிர்த்தெழுந்து பரமேறிய போது, அவர் ஒரு மனிதனாக அவ்வாறு செய்தார்! அவர் தம் மனுஷீகத்தை உரிந்துப்போடவில்லை. மாறாக, தம் உயிர்த்தெழுதலில் அவர் தம் மனுஷீகத்தை தெய்வீகத்திற்குள் உயர்த்தினார். ஒரு மனிதன் எல்லோருக்கும் கர்த்தராக ஆக்கப்பட்டிருக்கிறார் என்று எண்ணுவது வியப்பாக இருக்கிறது. இயேசு ஏன் ஒரு மனிதனாக ஆகுவதற்கு வேண்டியிருந்தது என்பதற்கு இதுவே ஒரு கூடுதலான காரணம். அவர் நம் பாவங்களுக்காக மரிக்க ஒரு மனிதனாக இருக்க வேண்டியிருந்தது மட்டுமல்லாமல்; மனிதனை சிருஷ்டிப்பதில் தேவனின் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இந்தப் பிரபஞ்சத்திற்கு தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் வெளிக்காட்டுவதற்கும் அவர் ஒரு மனிதனாக சிங்காசனத்தில் அமர்த்தப்படவும் வேண்டியிருந்தது. பாடல் #76, சரணங்கள் 3-4, “ஒரு பருவத்திற்கு தாழ்த்தப்பட்டு, / பாவிகளின் உதடுகளிலிருந்து / ஒரு நாமத்தைப் பெற  / அவர் யாருக்கென்று வந்தாரோ, / உண்மையாக அவர் அதைத் தாங்கினார் / கடைசி வரை களங்கமற்றவராக, / அதை மீண்டும் வெற்றிகரமாக கொண்டு வந்தார், / மரணத்திலிருந்து அவர் கடந்து சென்ற போது; / அதை வெற்றியுடன் தாங்கி, / அதன் மனித ஒளியுடன், / அனைத்து வகையான சிருஷ்டிகளின் வழியாக, / மைய உயரத்திற்கு உயர்த்தி”! என்று கூறுகின்றன. அவரது மாம்சமாகுதலுக்கு முன், கிறிஸ்துவுக்கு ஒரு மனித நாமம் இருக்கவில்லை. இப்போதும், என்றென்றும், அவருடைய நாமம் இயேசு! நம் தேவன் ஒரு மனிதனாக ஆகியிருக்கிறார், மேலும் இப்போது ஒரு மனிதனாக சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார்!

A. தம் பரமேறுதலில், இயேசு கர்த்தராகவும் கிறிஸ்துவாகவும் ஆக்கப்பட்டிருக்கிறார்—அப். 2:36; 10:36

“தேவனாக, கிறிஸ்து எல்லா நேரமும் கர்த்தராக இருந்தார் (லூக்கா 1:43; யோவான் 11:21; 20:28). ஆனால் மனிதனாக, அவர் தம் உயிர்த்தெழுதலில் தம் மனுஷீகத்தைத் தேவனுக்குள் கொண்டுவந்த பிறகு, தம் பரமேறுதலில் கர்த்தராக்கப்பட்டார். நடபடிகள் 10:36 இல் ‘எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிறவரான’ கிறிஸ்துவைப்பற்றிப் பேகுரு பேசுகிறார். ‘எல்லாருக்கும்’ என்பது இங்கே எல்லா மனிதர்களையும், எல்லா மக்களையும் குறிக்கிறது…..அவர் பூமியின்மீதுள்ள வெவ்வேறு இனத்தார் மற்றும் மக்கள் அனைவருக்கும் கர்த்தராக இருக்கிறார்

“நடபடிகள் 2:36, கிறிஸ்து கர்த்தராக ஆக்கப்பட்டார் என்று நமக்குச் சொல்கிறது. நாம் பார்த்திருக்கிறபடி, அவர் தம் பரமேறுதலுக்கு முன் கர்த்தராக இருந்தார், ஆனால் அவர்  இந்தப் பணிக்குள் அதிகாரப்பூர்வமாக பதவியமர்த்தப்படவில்லை….பழைய ஏற்பாட்டில் கிறிஸ்து அடோனாய் [‘கர்த்தராக’] இருந்தார். பின்னர் அவர் ஒரு மனிதனாக, ஓர் இழிவாகக் கருதப்பட்ட நசரேயனாக ஆனார். இந்தச் சாட்சாத்து நபர் பூமியில் இருந்தபோதுகூட இவரே கர்த்தராக இருந்தார். ஆனால், தம் பரமேறுதலில்தான் அவர்  தம் கர்த்தத்துவத்திற்குள் பதவியமர்த்தப்பட்டார். கிறிஸ்து தம் பரமேறுதலில் எல்லா மனிதர்களுக்கும் மட்டுமல்ல, எல்லாக் காரியங்களுக்கும்கூட எல்லாருக்கும் கர்த்தராகப் பதவியமர்த்தப்பட்டார் .

கர்த்தர் என்ற முறையில், கிறிஸ்து இப்போது முழுப் பிரபஞ்சம், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள், அனைத்து நேர்மறையான பொருட்கள், காரியங்கள், மற்றும் நபர்களை உடைமையாகப் பெற்றிருக்கிறார். கிறிஸ்து, தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல், தூதர்களுக்கும், ஆயிரவருட அரசாட்சியிலும்  புதிய வானம் புதிய பூமியிலும் இருக்கப்போகும் அனைவருக்கும்கூட கர்த்தர். ஆகையால், அவர் வானத்திற்கும், பூமிக்கும், அவர் மீட்டுக்கொண்ட ஒவ்வொன்றுக்கும், ஒவ்வொருவருக்கும் கர்த்தர். பரமேறுதலில் அவர் எல்லாவற்றையும் உடைமையாக்க எல்லாவற்றின் கர்த்தராக இருக்கிறார்….தம் பரமேறுதலில் உள்ள கிறிஸ்து தம் பரலோக ஊழியத்திற்கான கிறிஸ்துவாகவும் இருக்கிறார். நடபடிகள் 2:36, தம் பரமேறுதலில் கிறிஸ்து கர்த்தராக மட்டுமல்லாமல், தேவனின் ஆணையை நிறைவேற்ற, தேவனின் அபிஷேகம் செய்யப்பட்டவராகிய  (எபி. 1:9) கிறிஸ்துவாகவும் ஆக்கப்பட்டார் என்பதை வெளிப்படுத்துகிறது. பரமேறுதலில் அவர் பரலோகங்களில் தம் ஊழியத்திற்காக தேவனால் அபிஷேகம் செய்யப்பட்டார், நியமிக்கப்பட்டார். அவர் பூமியில் இருந்தபோது, அவர் தம் பூமிக்குரிய ஊழியத்திற்காக அபிஷேகம் செய்யப்பட்டு, நியமிக்கப்பட்டார். ஆனால் தம் பரமேறுதலில், அவர் தம் பரலோக ஊழியத்தின் மூலமாக  தேவனுடைய ஆணையை நிறைவேற்றுவதற்காகக் கிறிஸ்துவாக ஆக்கப்பட்டார்” (​Conclusion of the New Testament, Message 31, pp. 339–340).​

B. பரமேறிய கர்த்தராக, இயேசு இந்த உயர்த்தப்பட்ட தேவமனிதனாக ஆளுகை செய்ய தேவனுடைய சிங்காசனத்தின் மீது அமர்த்தப்பட்டிருக்கிறார்—வெளி. 22:1

இன்று சிங்காசனத்தின் மீது வீற்றிருக்கிறவர் வெறும் தேவன் மட்டுமல்ல, வெறும் மனிதனும் மட்டுமல்ல. அவர் ஒரு தேவ-மனிதன், தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றியிருக்கிற அதோடு தேவனுடைய குறிக்கோளின்படி தேவனை வெளிக்காட்டும் ஒரு மனிதன், தேவன் வசிக்கும் ஒரு மனிதன். இதுவே பரமேறுதலிலுள்ள கிறிஸ்து. கிறிஸ்து ஒருபுறம் தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார் (எபி. 1:3), ஆயினும் மறுபுறம் அவர் தேவனுடைய சிங்காசனத்தின் மீது வீற்றிருக்கிறார் (வெளி. 3:21; 22:3). (இப்பிரபஞ்சத்தில் இரண்டு சிங்காசனங்கள் இல்லை—வெளி. 22:3 மற்றும் footnote 5 ஐ பார்க்கவும்.) இன்று இப்பிரபஞ்சத்தில் உள்ள சிங்காசனத்தில் நீங்கள் ஒரு தேவ-மனிதனைக் காண முடியும். அவர் தொடக்கூடியவர், ஆயினும் அவர் இந்தச் சாட்சாத்து வரம்பற்ற மற்றும் எல்லையற்ற தேவனின் ஊனுரு.

III. நாம் இன்று கிறிஸ்துவை இந்தப் பரமேறிய கர்த்தராக அறியக்கூடும்—எபி. 12:2.

இன்று பிரபஞ்சத்தில், பரமேறுதலிலுள்ள கிறிஸ்து ஒரு மகத்தான (மாபெரும்) காந்தத்தைப் போன்றவர், தம்மை         ஆசையாய்ப் பின்தொடர நம்மை ஈர்க்கின்றார். நாம் அவரிடம் முன்வரக்கூடுமாறு அவர் தொடர்ச்சியாக நமக்காகப் பரிந்துபேசுகின்றார் (எபி. 12:2, footnote 2).

A. பரமேறிய கர்த்தராக, கிறிஸ்து நம்மை ராஜாக்களாக சீர்பொருத்துதலுக்காக எல்லாவற்றையும் ஏற்பாடு செய்வதற்காக நம் சுற்றுச்சூழலின் மீது ஆட்சி செய்கிறார்—எபே. 4:8, 1213

பரமேறிய கர்த்தராக, கிறிஸ்து தேவனுடைய குறிக்கோளின் நிறைவேற்றத்திற்காக இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் நிர்வகிப்பதற்காக சிங்காசனத்தின் மீது அமர்ந்திருக்கிறார். நடைமுறையில், இதன் அர்த்தம் கிறிஸ்து, தேவனுடைய பல குமாரர்களாக நம் வளர்ச்சிக்காக இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் இயக்குகிறார் என்பதே. நம் வளர்ச்சிக்காக அவர் நம் சுற்றுச்சூழலில் உள்ள எல்லா நிகழ்வுகளையும், நபர்களையும், பொருட்களையும் ஏற்பாடு செய்துள்ளார் அதோடு இன்னும் ஏற்பாடு செய்துக்கொண்டிருக்கிறார். நம் வாழ்வில் ஆட்சிசெய்யவும்,  ஆளுகைசெய்யவும் பரமேறுதலிலுள்ள கிறிஸ்துவை நாம் அனுமதித்தால், இன்று நம் சூழ்நிலைகளில் ராஜாக்களாகவும், வருகின்ற யுகத்தில் எதிர்காலத்தில் ராஜாக்களாகவும் அவரது அதிகாரத்தைப் பயிற்சிசெய்ய நாம் சீர்பொருத்தப்படுவோம்.

  • தம் பரமேறுதலில், கிறிஸ்து நம் ஆரம்ப இரட்சிப்புக்காக எல்லாவற்றையும் ஆட்சிசெய்தார்—அப். 17:26-27; யோவான் 17:2; வெளி. 1:5; எபே. 1:22-23.

“நீங்கள் இரட்சிக்கப்படுவதை ஒரு சிறிய விஷயமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். கர்த்தராகிய இயேசு தம் ஆட்சித்துவத்தைப் பயிற்சிசெய்ததின் நிமித்தமாக அது நிறைவேற்றப்பட்டது. நீங்கள் பிறந்த இடம் தற்செயலானதாக அல்ல, மாறாக அவரது நிர்வாகத்தின் கீழ் இருந்தது. நீங்கள் சரியான நாட்டிலும், சரியான ஊரிலும், சரியான குடும்பத்திலும் பிறந்தீர்கள், மேலும் சரியான நேரத்தில் அவர் உங்களைத் தம்மிடம் கொண்டு வந்தார்” (The Heavenly Ministry of Christ, ​Chapter 3, p. 20).

  • தம் பரமேறுதலில் கிறிஸ்து, நாம் முழுவதும் மகிமைக்குள் கொண்டுவரப்படும் வரை இன்னும் எல்லாவற்றையும் ஆட்சிசெய்கின்றார்—ரோ. 8:28-29; எபி. 2:10

“தம் பரமேறுதலில்….அவர் தேவனின் நித்தியக் குறிக்கோளை நிறைவேற்றும்படி, அதாவது, சபையைக் கட்டியெழுப்பவும், தம் பல சகோதரர்களை மகிமைக்குள் கொண்டுவரும்படி தம் பணிக்குள் அவர் பதவியமர்த்தப்பட்டார்” (Life-study of Hebrews​​, Message 4, p. 48). தேவனுடைய குமாரர்களாக நம் மகிமைப்படுத்தலுக்காக நமக்கு நடக்கும் எல்லாவற்றிலும் கர்த்தருடைய கரம் இருக்கிறது என்பதை நாம் இனம் கண்டுகொள்ளும் போது (எபி. 2:10; 2 கொரி. 4:17), அவர் நமக்காக ஏற்பாடு செய்வதையெல்லாம் நாம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வோம்.

B. பரலோகங்களில் உள்ள இந்தப் பரமேறிய கிறிஸ்துவே, நாம் இங்கு பூமியில் இருக்கையில் வாழவும் நடக்கவும் கூடுமாறு அவசியமான ஆவியானவராகவும் இருக்கிறார்—2 கொரி. 3:17; கலா. 5:25

“கிறிஸ்துவின் பரமேறுதலை நமக்கு நிஜமானதாக்கும் இந்த ஜீவன்-தரும் ஆவியானவருக்கு அப்பால், நாம் இந்தப் பரமேறிய கிறிஸ்துவுக்கும் நம் தினசரி வாழ்வில் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நினைக்கக்கூடும். ஆனால் கிறிஸ்துவின் பரமேறுதலின் ஒவ்வோர் அம்சமும் நம் தினசரி அனுபவத்தின் பகுதியாக இருக்க வேண்டும். நாம் கிறிஸ்துவின் பரமேறுதலை அனுபவிக்க வேண்டுமானால், நாம் ஆவியானவரின்படி நடக்க வேண்டும்” (​​Life-study of Mark​, Message 51, pp. 440–441). கிறிஸ்துவை ஆவியானவராக அனுபவித்துமகிழ்வது எப்படி என்று நமக்குத் தெரியாவிட்டால், நம் வளர்ச்சிக்காக நம் சுற்றுச்சூழலில் அவரது ஏற்பாடு அனைத்தின் முழு அனுகூலத்தையும் நாம் ஆதாயப்படுத்தாமல் போகக்கூடும். இருப்பினும், இன்று நம் ஆவியில் ஆவியானவராக உள்ள கர்த்தரால் நாம் நடந்தால், நாம் வளர்ந்து, ஒரு நாள் அவருடன் அவரது உடன்-ராஜாக்களாக ஆளுகைசெய்யக்கூடிய தேவனுடைய குமாரர்களாக ஆகுவதற்கு மறுசாயலாக்கப்படுவோம்.

C. ஆவியானவராகிய இந்தப் பரலோகக் கிறிஸ்துவால் நாம் வாழ்ந்து, நடக்கும்போது, நாம் பரலோகங்களில் அவருடன் ஒன்றுசேர்ந்து ராஜாக்களாக ஆளுகைசெய்கிறோம்—மாற்கு 16:19-20; ரோ. 5:17

“நாம் ஆவியானவரில் இருக்கும்போது, நாம் பரலோகங்களில் இருக்கிறோம்” (Life-study of Mark​, Message 51,​ p. 441) இன்று கிறிஸ்து பரமேறுதலில் இருக்கிறார், உன்னதங்களில் தேவனுடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். கிறிஸ்துவில் இருப்பவர்களாக, நாமும் அவருடன் ஒன்றுசேர்ந்து அவரது மரணம் மற்றும் உயிர்த்தெழுதலினூடாய்க் கடந்துசென்று, அவருடன் சிங்காசனத்தில் இருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்தறிய வேண்டும். இப்போது நாம், பரமேறுதலில் உள்ள கிறிஸ்துவில் இருக்கிறோம். இந்த உண்மையை அனுபவிக்க, நாம் நம் ஆவியைத் தொட மட்டுமே செய்ய வேண்டும். நம் ஆவியில் உள்ள கிறிஸ்து, பரலோகங்களில் இருக்கும் அதே கிறிஸ்துவே. நாம் இந்த ஆவியானவராகிய அவரால் வாழும்போது, நாம் எல்லாவற்றின் மீதும் ஜீவனில் ஆளுகைசெய்து, பூமியில் ஒரு பரலோக வாழ்க்கையை அனுபவிக்கிறோம் (ரோ. 5:17). இதுவே இன்று கிறிஸ்துவின் பரமேறுதலை அறிவதாகும்.

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: மாம்சமாகுதல் முதல் பரமேறுதல் வரையிலான கர்த்தருடைய வழிமுறையின் படிகளை இளம் வாலிபர்களுக்கு நினைவூட்டவும். கர்த்தர் ஒரு மனிதனாக ஆகுவதில் கடந்துசென்ற படிகளைக் காட்ட பிலிப்பியர் 2:5-11ஐப் பயன்படுத்துங்கள். கர்த்தருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, அவர் நாற்பது நாட்கள் தம் சீஷர்களுடன் கூடிவந்து, பின்னர் பரமேறினார். அதன்பின், நடபடிகள் 1:3-11 இல் கர்த்தரின் பரமேறுதலை வெளிக்கொணரும் வசனங்களை இளம் வாலிபர்களுடன் வாசிக்கவும். கர்த்தருடைய பரமேறுதல் பற்றிய கதையில், கர்த்தராகிய இயேசு ஒரு மனிதனாகப் பரமேறினார் என்பதைக் கொண்டு இளம் வாலிபர்களுக்கு நாம் கருத்துப்பதிவை ஏற்படுத்த வேண்டும். இன்று அவர் ஒரு மனிதனாக பரலோகத்தில் தேவனுடைய சிங்காசனத்தில் இருக்கிறார். கிறிஸ்துவின் பரமேறுதலே, பிரபஞ்சத்திலேயே உள்ள அதி உயர்ந்த பதவியாகிய—எல்லோருக்கும் கர்த்தர்—என்ற பதவிக்குள் அவர் பதவியமர்வுசெய்யப்படுதலாக இருந்தது. இத்தகைய ஒரு பரமேறிய மனிதனாக அவர் இப்போது எல்லாவற்றின் மீதும் ஆளுகை செய்கின்றார்.  இந்தப் பரமேறிய கர்த்தரை இன்று நம் அனுபவத்தில் நாம் எப்படி அறிந்து கொள்ளலாம் என்பதை இளம் வாலிபர்களுக்குக் காட்டுவதற்காக & III.A.2 இல் உள்ள குறிப்புகளைப் பயன்படுத்தவும்.

சுவிசேஷ செயலாக்கம்: பிலிப்பியர் 2:9-11 இல்  முழங்கால் யாவும் முடங்கும், நாவுகள் யாவும் கர்த்தர் என்று அறிக்கைப்பண்ணும் இந்த உயர்த்தப்பட்ட கிறிஸ்துவை வெளிப்படுத்துவதற்கு முன்பு, வசனங்கள் 5-8 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்த அற்புதமான, தாழ்மையான, கீழ்ப்படிதலுள்ள கிறிஸ்துவைக் கொண்டு இளம் வாலிபர்களுக்குக் கருத்துப்பதிவை ஏற்படுத்தவும். நம் இரட்சிப்புக்கான ஓர் அடிமையாக வருவதில் கர்த்தரின் தாழ்மையையும் கீழ்ப்படிதலையும் காட்ட, கர்த்தருடைய வாழ்க்கையைப் பற்றிய பின்வரும் குறிப்புகளில் சிலவற்றினூடாய்க் கடந்துசெல்லுங்கள்: பிரபஞ்சத்தின் தேவனாகவும் ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாகவும், கர்த்தர் ஓர் அரச மாளிகையில் அல்ல, மாறாக ஒரு சிறிய நகரத்தில் ஒரு தாழ்வான முன்னணையில் பிறந்து (மத். 2:6), ஓர் இழிவாகக் கருதப்பட்ட பகுதியில் வளர்ந்தார் (யோவான் 1:46; 7:41, 52). அவர் தம் பெற்றோருக்கு முழுக் கீழ்ப்படிதலிலும் வளர்ந்தார் (லூக்கா 2:51). அவர் தம் ஊழியத்தைத் தொடங்குவதற்கு முன் அவர் ஞானஸ்நானம் பெற்றார், அதாவது மாம்சத்திலுள்ள ஒரு மனிதனாக, அவர் தாம் மரணத்திற்கும் அடக்கம்பண்ணுதலுக்குமே தவிர வேறு எதற்கும் லாயக்கு அல்ல என்பதை தம் பரிபூரணமான மனுஷீகத்தைக் கொண்ட அவர்கூட உணர்ந்தறிந்தார் என்பதை இது காட்டுகின்றது (மத். 3:13-15). தேவனுடைய குமாரனாக ஒரு நிலைப்பாட்டை எடுக்க பிசாசினால் சோதிக்கப்பட்டபோது, அவர் அதற்குப் பதிலாக மனுஷகுமாரனாக நிற்பதையே மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்தார் (மத். 4:3–11). தேவாலயத்து உப்பரிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து கீழே குதிக்கும்படி அவருக்குப் பிசாசினால் சவால் விடப்பட்டபோதும்கூட, தேவதூதர்கள் எவ்வாறு அவரைத் தங்கள் கைகளில் தாங்குவார்கள் என்பதைப் பற்றிய ஓர் அற்புதமான காட்சியைக் காட்ட அவர் மறுத்துவிட்டார் (மத். 4:5–7). அவர் தம் ஊழியத்தின் முடிவில், மக்கள் அவரைத் தங்கள் ராஜாவாக இருக்கும்படி உயர்த்த முயன்றபோது, அவர் ஒரு கழுதைக் குட்டியின் மீது அமர்ந்து எருசலேமுக்குள் நுழைந்து, அவரது ராஜ்யம் இந்த உலகத்திற்குரியது அல்ல என்பதை அவர்களுக்குச் சொன்னார். ஒரு மாபெரும் ராஜாவாக வாழ்ந்து, அவர்களால் உயர்த்தப்படுவதற்குப் பதிலாக, அவர் ஒரு சிறிய கோதுமை மணியாக மரித்து, பூமிக்குள் நுழைவார் என்பதை அஈவர்களுக்குச் சொன்னார் (யோவான் 12:12-15, 19-20, 23-24). சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர் தாம் முற்றும்முடிய நேசித்த தம் சீஷர்களுடன் இராப்போஜனத்திற்கு அமர்ந்திருக்கையில், அவர் இந்த உலகத்தை விட்டு புறப்பட வேண்டிய நேரம் வந்திருந்தது என்பதை உணர்ந்தறிந்து, அவர் எழுந்து, தம் மேலுடைகளை  கழற்றி வைத்து, ஒரு துண்டை தமக்குக் கட்டிக்கொண்டு, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, அவர்களது கால்களைக் கழுவினார் (யோவான் 13:1-5 மற்றும் வசனம் 4 இன் footnotes 1 & 3). இறுதியாக, ஒரு மாபெரும் திரள் கூட்டம் அவரை அநியாயமாகக் கைது செய்ய வந்தபோது, தம் தற்காப்புக்காகப் பன்னிரண்டு படையணிகள் தேவதூதர்களை அழைப்பதற்குப் பதிலாக, அவர் பேதுருவிடம் தன் பட்டயத்தை அதன் உறைக்குள் திருப்பி வைக்கும்படி சொன்னார் (மத். 26:52-53), மேலும் அவர் “மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவரானார்” (பிலி. 2:8). இத்தகைய ஒரு விலையேறப்பெற்ற கிறிஸ்துவைப் பற்றிய ஒரு பார்வையை முன்வைத்த பிறகு, முழங்கால்கள் யாவும் முடங்கும், நாவுகள் யாவும் கர்த்தர் என்று பகிரங்கமாக அறிக்கையிட வேண்டிய இந்த தேவனால்-உயர்த்தப்பட்டவராக அவரை முன்வையுங்கள்!

மிக முக்கியக் காரியங்கள்: நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.); கர்த்தரின் பிரபஞ்சமளாவிய கிரியையின் அடிப்படையில் கர்த்தரை அறிதலும், நேசித்தலும், அவருக்கு நம்மையே அர்ப்பணித்தலும்—உலக சூழ்நிலையிலும், நமக்கான தம் தனிப்பட்ட கவனிப்பிலும் தேவனின் இறையாண்மையை அறிதல் (III.C.1.); எல்லாவற்றின் மீதும் ஜீவனில் ஆளுகைசெய்ய கிறிஸ்துவின் ராஜத்துவத்தின் கீழ் ஒரு வாழ்க்கையை வாழ்தல் (III.H.).

பின்புல வாசிப்பு: Life-study of Luke, Message 76.

REFERENCES: Life-study of Mark, Message 51; The Conclusion of the New Testament, Messages 31, 77; Life-study of Luke, Messages 76–79; Life-study of Philippians, Message 10, pp. 87–88; Message 11; Life-study of Acts, Message 10; Life-study of Hebrews, Message 50, pp. 565–566; The Heavenly Ministry of Christ, Chapter 3; The Crystallization of the Epistle to the Romans, Message 1, p. 8.