கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல்

பகுதி 9

✵பாடம் 10 – 18

ஒரு மனிதனாக உயிர்த்தெழுப்பப்பட்டது

குறிக்கோள்: கர்த்தராகிய இயேசு ஒரு மனிதனாக உயிர்த்தெழுப்பப்பட்டார் என்பதைக் காண்பதற்கு.

பொருட்சுருக்கம்: லூக்காவில் நாம் மனித-இரட்சகரின் உயிர்த்தெழுதலைக் காண்கிறோம், குறிப்பாக ஒரு மனிதனாக இரண்டு சீஷர்களுடனான அவரது ஐக்கியத்தில் காண்கிறோம். முதலில், அவர் இந்தப் பெண்களால் கண்டுபிடிக்கப்பட்டார். பின்னர், அவரது உயிர்த்தெழுதல் பேதுருவால் புலனாய்வுசெய்து விசாரிக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் இரண்டு சீஷர்களுக்குத் தரிசனமாகி, அவர்களுக்கு வேதவாக்கியங்களைத் திறந்துக்காட்டினார், அதன்பின் அப்போஸ்தலர்களுக்குத் தரிசனமாகி, வேதவாக்கியத்தைப் புரிந்துகொள்ளும்படி அவர்களது மனதுகளைத் திறந்து, அவர்களுக்கு சுவிசேஷத்தைக் கொண்டு ஆணையிட்டார். கர்த்தராகிய இயேசு ஒரு மனிதனாக ஒரு சரீரத்துடன் உயிர்த்தெழுந்தார் என்பதை நாம் பார்த்தாக வேண்டும். மாம்சமாகுதலில் கர்த்தர் மனுஷீகத்தைத் தரித்துக்கொண்டார், ஆனால் உயிர்த்தெழுதலில் அவர் அதைத் களைந்துப்போடவில்லை. இன்று நம் உயிர்த்தெழுந்த கர்த்தர் இன்னும் ஒரு மனித சரீரத்துடன் ஒரு மனிதனாக இருக்கிறார். அவருக்கு மாம்சமும் எலும்புகளும் இருந்தன, மேலும் அவரது சிலுவையிலறையப்படுதலின் விளைவாக வந்தத் தழும்புகளை அவரது மாம்சம் இன்னும் சுமந்தது. அவர் சீஷர்களுக்கு முன்பாகச் சாப்பிட்டார், மேலும் உயிர்த்தெழுதலில் சீஷர்களுடனான அவரது தொடர்புகொள்ளுதலில் அவர் ஒரு மனித வழியில் அவர்களைக் கவனித்துக்கொண்டார்.

பின்புலம்: இந்தப் பாடத்தின் முடிவில், தினசரி வேதாகம வாசிப்புக்கு ஒரு சாத்தியமான பிரயோகம் உள்ளது. இளம் வாலிபர்களுக்குத் தங்கள் வேதாகம வாசிப்பு சம்பந்தமாக அடிக்கடி நினைவூட்டும் நினைப்பூட்டுதல்கள் தேவை. அவர்கள் அடிக்கடி நிறுத்தி, தொடங்குகிறார்கள். இது இயல்பானது. ஒவ்வொரு நிறுத்தத்திலும், அவர்களுக்கு வெறுமனே அதிக உத்வேகமும் உற்சாகப்படுத்துதலும் தேவை. இறுதியில், அவர்கள் இதைத் தொடர்ந்தால், அது அவர்களது பழக்கமாகிவிடும்.

அதிகாரம்: லூக்கா 24.

போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:

உயிர்த்தெழுதலில் கிறிஸ்து எவ்வாறு ஒரு மனிதனாக இருந்தார் என்பதைக் காட்ட கதைகளைப் பயன்படுத்தவும். இன்றும் அவர் இன்னும் பரலோகங்களில் சிங்காசனத்தில்  ஒரு மனிதராக இருக்கிறார்.

I. கர்த்தருடைய வாழ்க்கை மற்றும் வேலையை நியாயப்படுத்தும் ஒரு நியாயப்படுத்துதலாக அவர் தேவனால் உயிரோடு எழுப்பப்பட்டார்—ரோ. 4:25

“தேவன் அவரை மரித்தோர் மத்தியிலிருந்து உயிரோடு எழுப்புதல், அவர் தேவனால் நீதிப்படுத்தப்பட்டு நியாயப்படுத்தப்பட்டார் என்பதற்கான ஒரு சின்னமாக இருந்தது. கர்த்தர் என்னவாக இருந்தாரோ, அவர் பூமியில் என்ன செய்தாரோ அதை தேவன் தாம் நீதிப்படுத்தியதற்கான ஒரு சான்றாக, கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார். தேவன் அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்ப உள்ளே வந்திருக்கவில்லை எனில், இதன் அர்த்தம், தேவன் அவரை நீதிப்படுத்தவில்லை என்பதாக இருந்திருக்கும். ரோமர் 4:25, கிறிஸ்து ‘நம் தப்பிதங்களின் நிமித்தம் ஒப்புக்கொடுக்கப்பட்டு, நம் நீதிப்படுத்துதலின் நிமித்தம் எழுப்பப்பட்டார்’ என்று கூறுகிறது (கிரே.). நாம் தேவனால் கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக நீதிப்படுத்தப்படக்கூடுமாறு, அவரது மரணம் தேவனுடைய நீதியான கோரிக்கைகளை நிறைவேற்றி திருப்திப்படுத்தியது (ரோ. 3:24). கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல், தேவன் நமக்கான அவரது மரணத்தில் திருப்தியடைந்தார் என்பதற்கான ஒரு நிரூபணம் ஆகும். தேவன் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்புதல், கிறிஸ்து என்னவாக இருந்தாரோ, என்ன செய்தாரோ அவற்றைப் பற்றிய அவரது நீதிப்படுத்தலாகவும் நியாயப்படுத்தலாகவும் இருந்தது. இதிலிருந்து, கிறிஸ்து சிலுவையில் நமக்காகச் செய்ததை தேவன் ஏற்றுக்கொண்டார் என்ற நிச்சயத்தை நாம் பெறக்கூடும். நாம் கிறிஸ்துவின் மரணத்தினிமித்தம் தேவனால் நீதிப்படுத்தப்படுகிறோம், மேலும் உயிர்த்தெழுந்தவராகிய கிறிஸ்துவில் நாம் தேவனுக்கு முன்பாக ஏற்றுக்கொள்ளப்படுகிறோம்” (Life-study of Luke, Message 54, pp. 466–467).

A. அவருடைய உயிர்த்தெழுதல், இந்தப் பெண்களால் அதிகாலையிலே கண்டுபிடிக்கப்பட்டது—லூக்கா 24:1-11

முதல் கர்த்துரடைய நாள் அன்று விடியற்காலையில், பெண்கள் கர்த்தருடைய சரீரத்திற்கு சுகந்தவர்க்கமிடுவதற்காக (சரீரத்தை அபிஷேகம்செய்வதற்காக) தயார்செய்திருந்த சுகந்தவர்க்கங்களுடன் கல்லறைக்கு வந்துசேர்ந்தனர். மாற்குவின்படி, இந்தப் பெண்களாவனர் மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும் (இயேசுவின் தாயும் கூட), சலோமி (யாக்கோபு மற்றும் யோவானின் தாய்) என்பவளுமே. அரிமத்தேயுவைச் சேர்ந்த யோசேப்பு இயேசு இறந்த நாளான வெள்ளிக்கிழமை அன்று கல்லறையில் இயேசுவைக் கிடத்துவதை அவர்கள் பார்த்திருந்தனர். அவர்கள் அவரை அபிஷேகம் செய்ய இயலாதிருந்தனர், ஏனெனில் இந்த சப்பாத் ஓய்வுநாள் வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பித்திருந்தது, மேலும் அது ஒரு பண்டிகை நாளாக இருந்ததால் சனிக்கிழமையும் ஒரு சப்பாத் ஓய்வுநாளாக இருந்தது. மாலையில் ஒரு புதிய நாள் தொடங்கியது (எபிரேய நாட்கள் மாலையில் தொடங்குகின்றன—ஆதி. 1:5), எனவே அவர்கள் கர்த்தருக்கு சுகந்தவர்க்கமிடுவதற்கான (அபிஷேகம்செய்வதற்கான) சுகந்தவர்க்கங்களை விலைக்கு வாங்க முடிந்தது. இப்போது அவர்கள் கர்த்தருடைய அடக்கத்திற்காக அவருக்கான அவர்களது சேவையை முடிப்பதற்காக விடியலில் (முதல் வெளிச்சத்தில்) விரைந்துக்கொண்டிருந்தனர். (உண்மையில், மகதலேனா மரியாள் ஏற்கனவே யோவான் 12ல் கர்த்தருக்கு சுகந்தவர்க்கமிடுவதன் [அபிஷேகம்செய்வதன், தைலமிடுவதன்] மூலம் இதைக் கவனித்துக்கொண்டாள்.) அவர்கள் வந்துசேர்ந்த போது, கல் உருட்டி தள்ளப்பட்டிருப்பதையும், கல்லறை காலியாக இருப்பதையும் அவர்கள் கண்டனர். அவர்கள் இதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கையில், இருவர் பிரகாசமாக மின்னும் ஆடையில் அவர்கள் அருகில் நின்று அவர்களிடம், “உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்” என்று கூறினர். கர்த்தர் தாம் சிலுவையில் அறையப்படுவதற்கு பாவமுள்ள மனிதர்களிடம் ஒப்புக்கொடுக்கப்பட்டு, மூன்றாம்நாளில் உயிர்த்தெழுவார் என்று எவ்வாறு அவர்களுக்குச் சொன்னார் என்பதை இந்த தேவதூதர்கள் அவர்களுக்குத் தொடர்ந்து நினைவுபடுத்தினார்கள். இதைக் கேட்டபின், இந்தப் பெண்கள் சீஷர்களிடம் சொல்லத் திரும்பினர், ஆனால் பெரும்பாலான சீஷர்கள் அதை அபத்தமானதாக எண்ணி, அவர்களை நம்பவில்லை.

B. அவரது உயிர்த்தெழுதல் பேதுரு மற்றும் யோவானால் புலனாய்வுசெய்யப்பட்டு ஆராயப்பட்டது—லூக்கா 24:12; யோவான் 20:2-10

இருப்பினும், பேதுருவும் யோவானும் எழுந்து, கல்லறைக்கு ஓடினார்கள். இளையவனாக இருந்ததால் யோவான் முதலில் வந்துசேர்ந்து, உள்ளே உற்றுப் பார்த்தான், ஆனால் கல்லறைக்குள் நுழையவில்லை. பின்பு பேதுரு வந்துசேர்ந்து, கல்லறைக்குள் நுழைந்து, கர்த்தர் கிடத்தப்பட்டிருந்த இடத்தில் மெல்லிய சீலைகளும், முகக் கைக்குட்டையும் ஒழுங்காக வைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். அதன்பின் யோவானும் உள்ளே நுழைந்து, பேதுரு பார்த்திருந்தததைக் கண்டான். என்ன நடந்திருந்தது என்பதை அவர்கள் இன்னும் புரிந்துக்கொள்ளாத போதிலும்கூட, கர்த்தர் உண்மையில் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருந்தார் என்பதை இந்தக் கட்டத்தில் யோவான் தான் நம்பியதாக நமக்குச் சொல்கிறான் (யோவான் 20:9). அப்போது பேதுருவும் யோவானும் ஆச்சரியத்தில் வெளியேறினர்.

C. உயிர்த்தெழுதலில் கர்த்தர் வேறு இரண்டு சீஷர்களுக்குத் தோன்றி, அவர்களுடன் எம்மாவுக்கு நடந்தார்கள்—லூக்கா 24:13-35

கர்த்தரின் சீஷர்களில் (இந்தப் பதினொருவரைச் சேராத) இருவர் எருசலேமிலிருந்து ஏழு மைல் தொலைவில் உள்ள எம்மாவு என்னும் ஒரு பட்டணத்திற்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தனர். அவர்கள் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, அவர்கள் கடந்த சில நாட்களாக நடந்த அனைத்து நிகழ்வுகளையும் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். ஒருவேளை சில சமயங்களில் அவர்கள் துக்கமாகவும், சில சமயங்களில் குழப்பமாகவும் இருந்திருக்கலாம்; நிச்சயமாக அவர்கள் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை ஒன்றன்பின் ஒன்றாக பார்த்து சாட்சிபகிர்ந்திருந்தார்கள். கர்த்தர் எருசலேமுக்குள் வெற்றிசிறக்கும் விதமாய் நுழைந்திருந்தார், மேலும் அவரை எதிர்த்த அனைவரையும் அவர் எவ்வாறு வாயடைந்து என்பதைப் பார்த்து அவரது சீஷர்கள் சாட்சிப்பகிர்ந்தனர். என்னே ஒரு மகிமையான நேரமாக அது இருந்திருக்கும்! பின்னர் அவர் அவர்களது சொந்தத் தலைவர்களால் கைது செய்யப்பட்டு, பிலாத்துவிடம் ஒப்படைக்கப்பட்டு, ஒரு சிலுவையில் அறையப்பட்டார். இயேசு இஸ்ரயேலை அதன் முந்தைய மகிமைக்கு மறுசீரமைக்கும் காலமாக இது இருந்தது என்று நினைத்தவர்களுக்கு என்னே ஓர் அதிர்ச்சி! திடீரென்று அவர்களது நம்பிக்கைகள் தகர்க்கப்பட்டன. ஆனால் இப்போது சிலர், அவர் வைக்கப்பட்ட (கிடத்தப்பட்ட) சமாதி காலியாக இருந்ததாகவும், அவர் வாழ்ந்துக்கொண்டிருந்தார் என்று கூறின தேவதூதர்கள் காணப்பட்டிருந்ததாகவும் கூறிக்கொண்டிருந்தனர். அவர்கள் நடந்துக்கொண்டிருக்கையில் நிச்சயமாகப் பேசுவதற்கென்று நிறைய இருந்தது. திடீரென்று ஓர் அந்நியன் அருகில் வந்து, அவர்களுடன் நடக்க ஆரம்பித்தான். (ஏதோ ஒரு வகையில் அவர்கள் அவனை அடையாளம் கண்டு கொள்வதில் இருந்து தடுக்கப்பட்டனர்.) அவர்கள் எதைப் பற்றி பேசிக்கொண்டிருந்ததாக அவர்களிடம் அவன் கேட்டான். அவர்கள் சோகமாகத் தோன்றினர், ஆனால் இந்த அந்நியருக்கு சமீபத்திய நிகழ்வுகள் அறிமுகமில்லாததாக இருந்தது என்றும் ஆச்சரியப்பட்டார்கள். நிச்சயமாகவே எருசலேமில் இருந்த ஒவ்வொரு நபரும் என்ன நடந்திருந்தது என்பதை அறிந்திருந்தார்கள். அது எப்படி அவனுக்குத் தெரியாமல் போனது? அவர்கள் தங்கள் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்களை அவனிடம் சொன்னார்கள். அப்போது கர்த்தர், “தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா (லூக்கா 24:25-26)?” பின்னர் அவர் தம்மைப் பற்றிய வேதவாக்கியங்கள் எல்லாவற்றையும் அவர்களுக்குத் திறந்தார். அவர்கள் தங்கள் சேருமிடத்தை நெருங்கியதும், மாலைப் பொழுது நெருங்கிக்கொண்டிருந்ததால் தங்களுடன் தங்கும்படி அவர்கள் அவரைக் கேட்டுக் கொண்டனர். அவர்கள் சாப்பிட உட்கார்ந்தனர், அவர் அப்பத்தைப் பிட்கையில், அவரை அடையாளம் காணும்படி அவர்களது கண்கள் திறக்கப்பட்டன, அப்போது அவர் மறைந்தார். அச்சமயம், அவர்கள் தாங்கள் இயேசுவைப் பார்த்திருந்தனர் என்பதைச் சீஷர்களிடம் சொல்ல எருசலேமுக்கு விரைந்து திரும்பினார்கள்.

D. கர்த்தர் வீட்டில் இருந்த சீஷர்கள் அனைவருக்கும் தரிசனமாகி, சுவிசேஷத்தைக் கொண்டு அவர்களுக்கு ஆணையிட்டார்—லூக்கா 24:36-49

இந்த இரண்டு சீஷர்களும் இதையெல்லாம் பதினோரு சீஷருக்கும் தெரிவித்துக் கொண்டிருந்த போது, கர்த்தர் தாமே அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்குச் சமாதானம்” என்று வாழ்த்தினார். ஒருவேளை அவர்கள் தாங்கள் ஓர் ஆவியைப் பார்த்துக்கொண்டிருக்கிறோமோ என்று நினைத்து, திகிலடைந்திருக்கலாம், ஆனால் கர்த்தர் தம் துளையுண்ட (குத்தப்பட்ட) கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காட்டி, தம்மைத் தொடும்படி அவர்களை அழைத்தார். அது உண்மைதான் என்று நம்புவது மிகவும் நலமானதாகத் இன்னும் தோன்றியது, எனவே கர்த்தர் தமக்குக் கொஞ்சம் உணவைக் கொடுக்கும்படி அவர்களிடம் கேட்டுக்கொண்டார், மேலும் அவர் சாப்பிட்டார். அவர் வெறும் ஓர் ஆவியாக மட்டுமல்லாமல், ஒரு சரீரத்துடன் உயிர்த்தெழுந்திருந்தார் என்பதற்கு இது நிஜமான நிரூபணமாக இருந்தது. தம்மைப் பற்றி எழுதப்பட்ட விஷயங்கள் அனைத்தும் எவ்வாறு நிறைவேற்றப்பட வேண்டியிருந்தது என்பதைப் பற்றி அவர் அவர்களுடன் எவ்வாறு பேசியிருந்தார் என்பதை அப்போது அவர் அவர்கள் அனைவருக்கும் நினைவூட்டினார், மேலும் அவரது நாமத்தில் பாவங்களின் மன்னிப்புக்கான மனந்திரும்புதல் எருசலேமிலிருந்து தொடங்கி பறைசாற்றப்படும் என்ற உண்மை உட்பட, தம்மைப் பற்றிய வேதவாக்கியங்களைப் புரிந்துகொள்ள அவர்களது மனதை அவர் திறந்தார். இவ்வாறு அவர் தம் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை (பொருளாட்சிக்குரிய வல்லமையின் ஆவியானவரின் வெளியூற்றுதலை) அவர்கள் மீது அனுப்பும் வரை, எருசலேமில் தொடர்ந்து தங்கி இருக்கும்படி அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டார். இந்தப் பேச்சின் போதுதான் ஏதொவொரு சமயம் இயேசு தம் சீஷர்களுக்குள் பரிசுத்த ஆவியானவரை சுவாசித்து ஊதினார் (யோவான் 20:22). என்னே ஒரு சொல்லிமுடியாத அற்புதமான நாள்!

II. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு சரீரமுள்ள ஒரு மனிதனாக உயிர்த்தெழுந்தார்—லூக்கா 24:39-40

மாம்சமாகுதலில் கர்த்தர் மனுஷீகத்தைத் தரித்திருந்தார், ஆனால் உயிர்த்தெழுதலில் அவர் அதைத் களைந்துப்போடவில்லை. இன்றும் நம் உயிர்த்தெழுந்த கர்த்தர் இன்னும் ஒரு மனித சரீரமுள்ள ஒரு மனிதனாகவே இருக்கிறார்!

A. அவருக்கு மாம்சமும் எலும்புகளும் இருந்தன, மேலும் அவரது சிலுவைமரணத்திலிருந்து வந்த தழும்புகளை அவரது மாம்சம் இன்னும் ஏந்தியது—யோவான் 20:24-28; லூக்கா 24:37-39

கர்த்தர் தாம் ஒரு பேய் அல்ல, மாறாக அவர் ஒரு சரீரமுள்ள ஓர் உயிர்த்தெழுப்பப்பட்ட மனிதனாக இருந்தார் என்பதை நிரூபிப்பதற்காக தம்மைத் தொடும்படி அவர் சீஷர்களை அழைத்தார்.

B. அவர் சீஷர்களுக்கு முன்பாகச் சாப்பிட்டார்—லூக்கா 24:41-43

அவர் இன்னும் உயிர்த்தெழுதலில் ஒரு மனிதராக இருந்தார் என்பதற்கு இது கூடுதல் நிரூபணமாக இருந்தது.

C. அவர் ஒரு மனித வழியில் சீஷர்களைக் கவனித்து வந்தார்—லூக்கா 24:36-39; யோவான் 20:15-16; லூக்கா 24:15-30

உயிர்த்தெழுதலில் கூட, கர்த்தர் இன்னும் அணுகமுடியாத (சேரக்கூடாத) ஒளியில் வாசம்செய்யும் வல்லமைமிக்க தேவனாக சீஷர்களுக்குத் தோன்றவில்லை. மாறாக, அவர் ஒரு மிகவும் அணுகக்கூடிய மற்றும் மனித வழியில் ஒரு மனிதனாகத் தோன்றினார். பயந்துபோன சீஷர்களுக்கு அவர் சமாதானத்தைக் கொண்டுவந்தார் (லூக்கா 24:36-39). மரியாள் அவரைத் தேடியதற்கு அவர் பதிலளித்தார் (யோவான் 20:15-16). இந்த மனந்தளர்ந்துபோன சீஷர்கள் இருவரும் எம்மாவுக்குப் புறப்பட்டுச்செல்ல எருசலேமிலிருந்து அவர்கள் கிளம்பிச் சென்ற போது, அவர் அவர்களுடன் நடந்து சென்று, அவர்களது முட்டாள்தனமான பேச்சுக்கு செவிசாய்த்து, வேதவாக்கியங்களை அவர்களுக்கு விளக்கி, அவர்களுடன் தங்கவும் கூட ஒத்துக்கொண்டார் (லூக்கா 24:15-30). கர்த்தர் எவ்வளவு மனுஷீகமாகவும் அணுகக்கூடியவராகவும் இருந்தார்!

D. அவரது சரீரம், உயிர்த்தெழுதலில் உள்ள ஒரு சரீரமாக இருந்தது—லூக்கா 24:36-37

கர்த்தர் சீஷர்களுக்குத் தோன்றியபோது, அவர்கள் அவரை ஒரு பேய் என்று நினைத்தார்கள், மேலும் அவர்கள் திடுக்கிட்டுப் பயந்துபோனார்கள். “அவர் எப்படி திடீரென்று அறையில் தரிசனமாகுவதற்கு முடிந்தது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. கதவு அடைக்கப்பட்டு இருந்தது, மேலும் யாரும் அதைத் திறக்கவில்லை. ஆயினும்கூட, கர்த்தர் ஒரு பௌதிக சரீரத்துடன் தரிசனமானார்….இங்கே நாம் மனித-இரட்சகரின் உயிர்த்தெழுந்த சரீரத்தைப் பார்க்கிறோம், இது ஆவிக்குரியதும் (1 கொரி. 15:44), ஒரு மகிமையின் சரீரமும் ஆகும் (பிலி 3:21). கர்த்தருடைய தரிசனமாகுதல் மிகவும் பரம்புதிரானதாக இருந்தது, மேலும் நாம் அதை முழுவதும் புரிந்துகொள்ள முடியாது. அவர் இந்த அறைக்குள் ஆவியானவராக வந்தார், ஆயினும்கூட ஒரு பௌதிக, தொடக்கூடிய சரீரத்துடன் வந்தார். ஆணிகளாலான தழும்புகள் (அச்சுகள்) இன்னும் காணப்பட முடிந்தன. ஓர் ஈட்டியால் குத்தப்பட்டிருந்த அவரது விலா பக்கத்தில் உள்ள இடம் இன்னும் காணப்படவும் தொடப்படவும் முடிந்தது. கர்த்தரின் சரீரம் கண்ணுக்குப் புலப்படுவதாகவும், தொடத்தக்கதாகவும் இருந்தது மட்டுமல்லாமல், அவரால் உணவைச் சாப்பிடவும் இயன்றது. ‘ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்தார்’ (வவ. 41–43). ஓர் ஆவிக்குரிய சரீரமுள்ளவராக கர்த்தராகிய இயேசுவால் இன்னும் பொருள்ரீதியான உணவை எவ்வாறு சாப்பிட இயன்றது என்று எங்களுக்குப் புரியவில்லை” (Life-study of Luke​​, Message 55, pp. 475–476).​

III. உயிர்த்தெழுந்த கர்த்தர், தம்மைப் பற்றிய வேதவாக்கியங்களைப் புரிந்துகொள்ளும்படி அவர்களது மனதுகளைத் திறப்பதன் மூலம் சீஷர்களுக்கு ஆணையிட்டார்—லூக்கா 24:25-32, 44-49; எபே. 1:17-19; 2 கொரி. 3:12-16

உயிர்த்தெழுதலில், கர்த்தர் பாவங்களின் மன்னிப்பைப் பிரகடனப்படுத்தும்படி சீஷர்களுக்கு ஆணையிட்டார். “லூக்கா 24இல் சீஷர்களுடனான மனித-இரட்சகரின் சந்திப்பு, பாவங்களின் மன்னிப்பைப் பிரசங்கிக்கும்படி சீஷர்களுக்கு அவர் ஆணையிடுவதற்கான ஏற்ற சமயமாக இருந்தது. கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது என்று எழுதப்பட்டிருப்பதை அவர்களுக்குச் சுட்டிக்காட்டிய பிறகு, அவர் அவர்களிடம், ‘அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்’ என்று சொன்னார் (வவ. 47–48). பாவிகளின் பாவங்களுக்கான மனித-இரட்சகரின் பதிலீடான மரணம் நிறைவேற்றப்பட்டு, அவரது உயிர்த்தெழுதலால் உறுதிசெய்யப்பட்ட பிறகுதான், பாவங்களின் மன்னிப்பு பறைசாற்றப்பட முடியும் (ரோ. 4:25ஐ பார்க்கவும்)” (Life-study of Luke​, Message 55, p. 477). தம் ஆணையுடன்கூட, கர்த்தர் சீஷர்களுக்கு வேதவாக்கியங்களைத் திறந்தார் (லூக்கா 24:32), தம்மைப் பார்க்கும்படி அவர்களது கண்களைத் திறந்தார் (லூக்கா 24:31), தம்மைப் பற்றிய வேதவாக்கியங்களைப் புரிந்துகொள்ள அவர்களது மனதுகளைத் திறந்தார் (லூக்கா 24:45). கர்த்தரால் ஆணையிடப்படுவதற்கு, நம் இருதயங்கள் நமக்குள் கொழுந்துவிட்டு எரியும் வரை, தம்மை பற்றிய வேதவாக்கியங்களைப் புரிந்துகொள்ள நம் மனதுகளைத் திறக்கும்படி இந்த உயிர்த்தெழுந்தக் கர்த்தரை நாம் அனுமதித்தாக வேண்டும் (லூக்கா 24:32, 44-49).

A. கர்த்தர் வேதவாக்கியங்களையும், சீஷர்களின் கண்களையும் திறந்தார்—லூக்கா 24:31-32

“24:13-35 இல் மனித-இரட்சகர் வேதவாக்கியங்களையும், சீஷர்களின் கண்களையும்கூட திறந்தார்….வசனம் 27, ‘மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்’ என்று நமக்குச் சொல்கிறது. இந்த அதிகாரத்தில் வேதவாக்கியங்கள் இருமுறை அதிகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வசனம் 32 வேதவாக்கியங்களைத் திறப்பதைப் பற்றியும், வசனம் 45 வேதவாக்கியங்களைப் புரிந்துகொள்வதைப் பற்றியும் பேசுகிறது. வேதவாக்கியங்களில் கிறிஸ்துவையும், அவரது மரணம் மற்றும் உயிர்த்தெழுதலையும் பற்றிய ஒரு முழு பதிவு, ஒரு முழுமையான வெளிப்பாடு உள்ளது. இருப்பினும், கர்த்தரைப் பின்பற்றுபவர்களுக்கு இந்தக் காரியங்கள் திறக்கப்படாததால், பரிசுத்த வார்த்தையை அவர்களுக்குத் திறப்பதற்காக அவர் அவர்களிடம் வந்தார். அவர்களது கண்களைத் திறக்கும் குறிக்கோளுக்காகவும் கர்த்தர் அவர்களிடம் வந்தார்….இரட்சகர் அவர்களுடன் நடந்தார் (வ. 15), அவர்களுடன் தங்கினார் (வ. 29), ஆனால் அவர்கள் அவரிடம் அப்பத்தைக் கொடுத்து, அவர் அதைப் பிட்கும்வரை, அவரை அடையாளம்காண அவர்களது கண்கள் திறக்கப்படவில்லை….அவர்களது கண்கள் திறக்கப்பட்டவுடன், அவர்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். இந்த இரண்டு சீஷர்களின் கண்களும் திறக்கப்பட வேண்டியது மட்டுமல்லாமல்; பேதுரு, யோவான், யாக்கோபு ஆகியோரின் கண்களும் திறக்கப்பட வேண்டியிருந்தது….வார்த்தையின் இந்தப் பகுதியில், மனித-இரட்சகர் வேதவாக்கியங்களைத் திறந்தார், தம் சீஷர்களின் கண்களையும் திறந்தார்”  (Life-study of Luke​, Message 54, pp. 471–472).

B. வேதவாக்கியங்களைப் புரிந்துகொள்ள கர்த்தர் அவர்களது மனதையும் திறந்தார்—லூக்கா 24:45

“எம்மாவுக்குச் செல்லும் வழியில் சீஷர்களுக்கு இந்த மனித-இரட்சகர் வேதவாக்கியங்களைத் திறந்திருந்தது போலவே, அவர் இப்போது அறையில் கூடியிருந்தவர்களுக்கு வார்த்தையைத் திறந்தார். வேதவாக்கியங்களைப் புரிந்துகொள்வதற்கு அவர்களது மனதுகளையும் அவர் திறந்தார் [லூக்கா 24:45]….முழு பழைய ஏற்பாடும் [இரட்சகரைப்] பற்றிய ஒரு வெளிப்பாடு ஆகும்…அவரே அதன் மையம் மற்றும் உள்ளடக்கம். அவர் சீஷர்களின் மனதைத் திறந்தார் என்ற உண்மை, வேதவாக்கியங்களைப் புரிந்துகொள்வதற்கு நம் மனம் கர்த்தர் ஆவியானவரால் அவருடைய பிரகாசிப்பித்தல் மூலமாக திறக்கப்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது (எபே. 1:18-19)” (​Life-study of Luke​, Message 55, p. 476). கர்த்தர் நடத்தினால், தினசரி வேதாகம வாசிப்புக்கான அவசியத்தைப் பற்றியும், நாம் வார்த்தைக்கு வரும்போது நம் இருதயத்தைக் கர்த்தரிடம் திருப்ப வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் பேசுவதன் மூலம் இளம் வாலிபர்களுக்கு இந்தக் குறிப்பைப் பிரயோகிக்கும்படி நீங்கள் உணரக்கூடும்.

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: கர்த்தர் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தபோது, அவர் ஓர் ஆவியானவராக மட்டுமல்லாமல், ஒரு மனிதனாகப் புறப்பட்டு வந்தார். உயிர்த்தெழுதலில் கர்த்தர் ஜீவன்-தரும் ஆவியானவராகவும், அதேசமயம் ஓர் உயிர்த்தெழுந்த மனிதனாகவும் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வது சற்று கடினமாக இருக்கக்கூடும் என்பதால், கர்த்தர் ஒரு மனிதனாக சீஷர்களுக்குத் தரிசனமாகுதல் பற்றிய பின்வரும் நான்கு எடுத்துக்காட்டுகள் உதவிகரமானவையாக இருக்கக்கூடும்: (1) அன்று உயிர்த்தெழுதலின் நாளில் அவர் எம்மாவுக்குச் செல்லும் சாலையில் தம் சீஷர்கள் இருவருக்குத் தரிசனமானார் (லூக்கா 24:13-35). அவர் அப்பத்தைப் பிட்கும் வரை அவர்கள் அவரை அடையாளம் காணவில்லை. பின்னர், அவர் மறைந்துபோவதற்கு முன், அவர்கள் தங்களுடன் இருந்தவர் இந்த உயிர்த்தெழுந்தக் கிறிஸ்துவே என்பதைக் காண அவர்களது கண்கள் திறக்கப்பட்டன. (2) அதுவுமல்லாமல் அன்று உயிர்த்தெழுதலின் நாளில், அவர் மேல் அறையில் சீஷர்களுக்குத் தரிசனமானார். அவர் அவர்களிடம், “புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா?” என்று கேட்டார். அப்போது அவர், கொஞ்சம் பொரித்த மீன்கண்டத்தை வாங்கி அவர்களுக்கு முன்பாகச் சாப்பிட்டார். அவர் அங்கு ஒரு பௌதிக மனிதனாக இருந்தார், தம் சீஷர்களுடன் மீன் சாப்பிட்டுக்கொண்டிருந்தார் (லூக்கா 24:36-49). (3) எட்டு நாட்களுக்குப் பிறகு அவர் மீண்டும் தம் சீஷர்களுக்குத் தரிசனமானார். அவர் தோமாவிடம், “நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு” என்று கூறினார். (4) யோவான் 21:1-14, கர்த்தர் தாம் உயிர்த்தெழுந்த பிறகு எவ்வாறு சீஷர்களுக்குப் பௌதிகரீதியாக தம்மையே வெளியரங்கமாக்கினார் என்பதையும் நமக்குக் காட்டுகிறது. அவர் ஏன் இதைச் செய்தார்? யோவான் 20:26, footnote 3 இவ்வாறு கூறுகிறது, “வசனம் 19இல் எட்டு நாட்களுக்கு முன்பு கர்த்தர் வந்த பிறகு, அவர் சீஷர்களை விட்டுச்சென்றார் என்பதாக யோவானின் பதிவில் எந்த வெளிப்படையான வார்த்தையோ சிறு குறிப்போ இல்லை. உண்மையில், அவர்கள் அவரது பிரசன்னத்தைக் குறித்து அறியாவிட்டாலும் அவர் அவர்களுடன் தங்கியிருந்தார். எனவே, வசனம் 26 இல் அவரது வருகை என்பது உண்மையில் அவரது வெளியரங்கமாகுதலாக, அவரது தோன்றுதலாக இருந்தது (யோவான் 21:1, footnote 2ஐப் பார்க்கவும்). தம் மரணத்திற்கு முன்பு கர்த்தர் மாம்சத்தில் இருந்தார், அவரது பிரசன்னம் காணக்கூடியதாக இருந்தது. அவரது உயிர்த்தெழுதலுக்கு பிறகு, கர்த்தர் ஆவியானவரானார், அவரது பிரசன்னம் காண முடியாததானது. அவரது உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, அவரது வெளியரங்கங்கள் அல்லது தோன்றுதல்கள், அதிகமாகக் கிடைக்கக்கூடியதும், மேலோங்குகிறதும், விலையேறப்பெற்றதும், ஐசுவரியமானதும், அவரது காணக்கூடிய பிரசன்னத்தைவிட நிஜமானதுமாகிய அவரது காண முடியாத பிரசன்னத்தை உணர்ந்தறியவும், அனுபவித்துமகிழவும், நடைமுறைப்படுத்தவும் சீஷர்களைப் பயிற்றுவிப்பதற்காக இருந்தன. அவரது உயிர்த்தெழுதலில், அவரது இந்தப் பிரிய பிரசன்னம் அவர் அவர்களுக்குள் ஊதியிருக்கிறவரும், அவர்களுடன் எந்நேரமும் இருக்கப்போகிறவருமான ஆவியானவரே. இன்று நம்மிடம் இருப்பது, எந்நேரமும் நம்முடன் உள்ள கர்த்தரின் கண்ணுக்குப் புலப்படாத பிரசன்னமே. நம்மால் அவரைப் பார்க்க முடியாவிட்டாலும், கண்ணுக்குப் புலப்படாத விதத்தில் அவர் நம்முடன் இருக்கிறார். அவர் தம் கண்ணுக்குப் புலப்படாத பிரசன்னத்தில் தம்மை அறிந்துகொள்ளும்படி தம் சீஷர்களைப் பயிற்றுவித்துக்கொண்டிருந்ததைப் போலவே, அவர் எந்நேரமும் தங்களுடன் இருக்கிறார் என்பதை இளம் வாலிபர்களும்கூட உணர்ந்தறிய வேண்டும். இந்தக் கூடுகையின் முடிவில், கர்த்தரின் பிரசன்னம் தங்களுடன் இருப்பதற்காகவும், அவர் மிக எளிதில் கிடைக்கப்பெறக்கூடியவராக இருப்பதற்காகவும் கர்த்தருக்கு நன்றிகூறி, ஜெபிக்க சிறிது நேரம் பெறுவது அவர்களுக்கு நலமாயிருக்கும்.

சுவிசேஷ செயலாக்கம்: தேவனை உள்ளடக்குவதற்கான ஒரு பாத்திரமாக சிருஷ்டிக்கப்பட்ட மனிதன், கர்த்தரின் பிரகாசித்தல் இல்லாமல் சோகமாய் வெறுமையாகவே இருக்கிறான், இருளை மட்டுமே உள்ளடக்குகிறான், ஏனெனில் கர்த்தருக்கு அப்பால் அவன் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாத இரண்டு விஷயங்களை ஆசையாய்ப் பின்தொடர்வதில் அவன் தன் வாழ்நாளை வீணாகக் கழிக்கிறான்: ஒளி, திருப்தி. அப்படியானால், மக்கள் தங்கள் தேவைக்கு ஐசுவரியமான விதத்தில் நிரப்பீடளிக்க முடியகக்கூடிய ஒருவரை நோக்கித் திரும்புவதை எது தடுக்கிறது? அவர்களது கண்களுக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மகிமைக்கும் இடையில் பல முக்காடுகள் பொருத்தப்பட்டு உள்ளன, இவை சாத்தானால் அங்கு வைக்கப்பட்டுள்ளன, இவன் இத்தனை பல தந்திரமான வழிகள் மூலமாக அவர்கள் அனைவரையும் இருளில் வைத்துக்கொண்டும், இவ்வாறு வலிமிகுந் விதத்தில் வெறுமையாக வைத்துக்கொண்டும் வந்திருக்கிறான் (2 கொரி. 4:3-4). “கோட்பாட்டில், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் புரிந்துகொள்வதிலிருந்து மக்களைத் தடுக்கிற தத்துவம், மதம், அல்லது கலாச்சார பாரம்பரியங்கள் போன்ற எதுவும் ஒரு முக்காடாக இருக்கிறது” (2 கொரி. 4:3, footnote 1). ஒரு குருடனால் சூரியனின் பிரகாசித்தலைப் பார்க்க முடியாது என்பதால், குருடாக்குபவனாகிய, “அதாவது இன்றைய உலகத்தின்மீது ஆதிக்கம்செலுத்தி, மனிதனின் மனதையும், அவனது எண்ணங்களையும் குருடாக்கி, மனிதனின் ஆராதனைக்காக வேட்டையாடித் தேடும் வஞ்சகனாகிய சாத்தான், தற்போதைய யுகத்தின் அதிபதி” (2 கொரி. 4:4, footnote 1), சுவிசேஷத்தின் பிரகாசித்தலுக்கு உங்கள் கண்களை மூடி முக்காடிட்டு வைக்க முயற்சிக்கின்றது. சாத்தான் உங்களுக்கு இனிமேலும் முக்காடிடுவதற்கு அனுமதிக்காதீர்கள்! “இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்” சொன்ன தேவன், இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தேவனுடைய மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, உங்கள் இருதயத்திலே பிரகாசிக்கிறவராக இருப்பதற்கு அனுமதியுங்கள் (2 கொரி. 4:6). இந்தப் பிரகாசித்தல் உங்கள் வெற்று பாத்திரத்தை மகிமையின் கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற பொக்கிஷத்தால் ஒளிரச் செய்து நிரப்பும் (2 கொரி. 4:7, footnote 1). இன்று, சுவிசேஷத்தின் மூலமாக, நீங்கள் உங்கள் இருளுக்குப் பதிலாக, தேவனுடைய பிரகாசித்தலை ஒளியாகவும், உங்கள் வெறுமைக்குப் பதிலாக, கிறிஸ்துவை உங்களுக்குள் ஓர் அற்புதமான, விலைமதிப்பற்ற பொக்கிஷமாகவும் பெறலாம். இத்தனை பல கண்மூடித்தனமான எண்ணங்களால் உங்களுக்கு முக்காடிட்ட நிலையில் வைப்பதற்கு இன்னும் இப்போதும் கூட முயல்பவனும், உங்கள் வெறுமையை நிரப்ப உங்கள் வாழ்நாள் முழுவதும் உலகத்தில் உள்ள ஏதோவொன்றுக்காக கண்மூடித்தனமான தட்டுத்தடுமாறி தடவித்தடவித் தேடிக்கொண்டு, உங்களை இருளில் வைத்திருக்க விரும்புகிறவனுமாகிய பொல்லாங்கனிடமிருந்து விலகிச் செல்லுங்கள். அதற்குப் பதிலாக, உங்களை ஒளியால் நிரப்பி, இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அதி விலையேறப்பெற்ற மற்றும் திருப்திகரமான பொக்கிஷமாகிய   தம்மையே உங்களுக்குள் வைக்க விரும்புகிறவராகிய இந்தப் பிரகாசிப்பவரிடம் திரும்புங்கள்!

மிக முக்கியக் காரியங்கள்: நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.).

பின்புல வாசிப்பு: Life-study of Luke, Messages 54–55.

REFERENCES: Life-study of Luke, Messages 54–55.