கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல்
பகுதி 9
✵பாடம் 10 – 18
பரலோக ராஜாவாகிய கிறிஸ்து
குறிக்கோள்: பரமேறுதலிலுள்ள பரலோக ராஜாவாக கிறிஸ்து பூமி முழுவதையும் ஆட்சிசெய்கின்றார், ஆளுகைசெய்கின்றார் அதோடு இந்த யுகத்தின் முழுநிறைவு வரை சகல நாட்களிலும் நம்மோடு இருக்கிறார் என்பதைக் காண்பதற்கு.
பொருட்சுருக்கம்: தம் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு தம் சீஷர்களை நாற்பது நாட்கள் பயிற்றுவித்தப் பிறகு, கர்த்தர் பரலோகங்களுக்குப் பரமேறினார். தம் பரமேறுதலில், கிறிஸ்து தேவனுடைய பொருளாட்சியை நிறைவேற்ற அபிஷேகம்செய்யப்பட்டார். எல்லா நபர்களையும், பொருட்களையும், காரியங்களையும் புறம்பான ரீதியில் ஆட்சிசெய்வதற்கு அவர் ராஜாவாக ஆக்கப்பட்டார், மேலும் தம் விசுவாசிகள் தம்மை உள்ளான ரீதியில் ஆதாயப்படுத்தக்கூடுமாறு அவர்களுக்காகப் பரிந்துபேச அவர் ஆசாரியராக ஆக்கப்பட்டார். நம் பரலோக ராஜா தாம் திரும்பி வருவதற்கான ஆயத்தத்தில் தம் பரப்புதலுக்காக தம்மால் ஆணையிப்பட்டிருக்கிறவர்கள் நாமே. சுவிசேஷத்தை அறிவிக்கவும், தேசங்களை சீஷராக்கவும் புறப்பட்டுச் செல்லும்படி கர்த்தர் தம் சீஷர்களுக்குச் கட்டளையிட்டார். இன்று கர்த்தருடன் வேலை செய்வதற்கு நாம் ஆவியானவரின் சாராம்சரீதியான அம்சம், ஆவியானவரின் பொருளாட்சிரீதியான அம்சம் ஆகிய இரண்டையும் அறிந்திருந்தாக வேண்டும். பரமேறிய கர்த்தருடன் வேலை செய்வதற்கு, நாம் எவ்வாறு ஜெபித்து கர்த்தருடைய நடத்துதலைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் அறிந்திருந்தாக வேண்டும். தம் சீஷர்களாக இருப்பவர்களாக, கர்த்தர் இந்த யுகத்தின் முழுநிறைவு வரையிலும்கூட , நம்மோடு இருக்கிறார் என்பதை நாம் உணர்ந்தறிய வேண்டும்.
பின்புலம்: ஒவ்வோர் இளம் வாலிபனும் உலகத்தின் மினுமினுப்பால் எளிதில் ஏமாற்றப்படுகிறார்கள். இது கண்களுக்கு மிகவும் அதிகக் கவர்ச்சிகரமானதாக உள்ளது. எனவே, நம் இளம் வாலிபர்கள் உலகத்தின் நிஜமான சூழ்நிலையையும், சாத்தானால்-நிரப்பப்பட்ட உலகத்தின் விதியையும், உலகத்தின் நிஜமான ஆட்சியாளரையும் பற்றிய ஒரு வெளிப்பாட்டைப் பெற்றாக வேண்டும். அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் அலைந்துத் திரிந்தாலும்கூட, இது போன்ற ஒரு தரிசனம் அவர்களது மனதுகளில் ஒட்டிக்கொண்டிருக்கும். அது அவர்களுக்கு உத்வேகம் அளிக்கவும், அவர்களைக் காத்துக்கொள்ளவும் முடியும்.
அதிகாரம்: மத்தேயு 28.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
முந்தைய பாடங்களில், தேவன் பூமியில் தம் நகர்வுக்காக உலக சூழ்நிலையை எவ்வாறு ஆட்சிசெய்கின்றார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். இருப்பினும், கிறிஸ்து உயிர்த்தெழுந்து பரமேறிய பிறகு, தேவன் எல்லாவற்றையும் தம் குமாரனிடம் கையளித்து, தம் பொருளாட்சியை நிறைவேற்றுவதற்காக எல்லா நிகழ்வுகளையும், காரியங்களையும், நபர்களையும் ஆட்சிசெய்ய அவரை அபிஷேகம் செய்தார். கிறிஸ்துவின் பரமேறுதல் முதற்கொண்டு, தேவன் எல்லாவற்றையும் கிறிஸ்துவில் தலைமேற்படுத்த கிறிஸ்துவின் மூலமாக இந்தப் பிரபஞ்சத்தை ஆட்சிசெய்கிறார்.
I. தம் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு தம் சீஷர்களை நாற்பது நாட்களாகப் பயிற்றுவித்த பிறகு, கர்த்தர் பரலோகங்களுக்கு ஏறிச்சென்றார்—லூக்கா 24:49-52; அப். 1:1-10
கர்த்தரின் பரமேறுதல் பற்றிய உண்மைகளை சுருக்கமாக முன்வைக்கவும். தம் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, கர்த்தர் தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றி தம் சீஷர்களுக்குப் போதிக்கவும், தம் கண்ணுக்குப் புலப்படாத பிரசன்னத்தில் எவ்வாறு வாழ்வது என்பதை அவர்களுக்குப் பயிற்றுவிக்கவும் நாற்பது நாட்கள் அவர்களுடன் தங்கியிருந்தார். அவர் உயிர்த்தெழுந்து நாற்பது நாட்களுக்குப் பிறகு, அவர் எருசலேமுக்கு வெளியே பெத்தானியாவுக்கு அருகிலுள்ள ஒலிவ மலைக்கு சீஷர்களை அழைத்துச் சென்றார். அங்கே அவர் தம் கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார். அவர் அவர்களை ஆசீர்வதித்துக்கொண்டிருந்தபோது, அவர் கண்ணுக்குப் புலப்படும் விதமாகப் பரலோகத்திற்குள் தூக்கிச்செல்லப்பட்டு, தம் சீஷர்களை விட்டுப் பிரிந்தார், மேலும் ஒரு மேகம் அவரை அவர்களது பார்வையிலிருந்து எடுத்துச் சென்றது.
II. பரமேறுதலிலுள்ள கிறிஸ்து தேவனுடைய பொருளாட்சியை நிறைவேற்ற அபிஷேகம் செய்யப்பட்டார்—வெளி. 5:1–14
ஒலிவ மலையில் நின்றுகொண்டு, சீஷர்கள் பூமியின் பார்வைக் கோணத்திலிருந்து கர்த்தர் பரமேறிச் செல்வதைக் கண்டனர். கர்த்தரின் பரமேறுதலின் மறுமுனையை, மூன்றாம் வானத்தில் கர்த்தர் வருகை தரும் காட்சியைக் காண யோவான் கொடுத்துவைக்கப்பட்டான். ஒருபுறம், யோவான் கிறிஸ்துவை அப்போது சற்று முன்தான் அடிக்கப்பட்டிருந்த வண்ணமாயிருந்த தேவ ஆட்டுக்குட்டியானவராகக் கண்டான். மறுபுறம், இந்த ஆட்டுக்குட்டியானவரே தேவனுடைய பொருளாட்சியை நிறைவேற்ற ஜெயங்கொண்டிருந்த யூதா கோத்திரத்து சிங்கமாக இருந்தார் என்று அறிவிக்கப்பட்டதை யோவான் கேள்விப்பட்டான்! கிறிஸ்து தம் பரமேறுதலின் நேரத்தில் தேவனுடைய பொருளாட்சியில் ஒரு புதிய பங்கை வகிக்க முன்வந்தார். அவர் அப்போதுதான் தம் பூமிக்குரிய ஊழியத்தை நிறைவேற்றியிருந்தார். இப்போது, உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதலில், அவர் தம் பரலோக ஊழியத்திற்குள் பதவியமர்த்தப்பட்டிருந்தார். பூமியில் அவர், தம் பூமிக்குரிய ஊழியத்தின் மூலமாக தேவனுடைய பொருளாட்சியை நிறைவேற்ற அபிஷேகம் செய்யப்பட்டிருந்தார். இப்போது, பரலோகத்தில், அவர் தம் பரலோக ஊழியத்தின் மூலமாக தேவனுடைய பொருளாட்சியை நிறைவேற்ற அபிஷேகம் செய்யப்பட்டார்.
A. கிறிஸ்து எல்லா நபர்களையும், பொருட்களையும், காரியங்களையும் புறம்பான ரீதியில் ஆட்சிசெய்வதற்கு ராஜாவாக ஆக்கப்பட்டார்—வெளி. 1:5; 19:16; ரோ. 8:28:
இந்தக் குறிப்பு, மீண்டும் மீண்டும் இளம் வாலிபர்களுக்குக் கருத்துப்பதிவு ஏற்படுத்த வேண்டும். பெரும்பாலான நிகழ்வுகள் தற்செயலானவை, சீரற்றவை அல்லது ஒரே நேரம் நிகழும் எதிர்பாராதவை என்று இந்த யுகம் மக்களுக்குப் போதிக்கிறது. கர்த்தர் தம் பொருளாட்சியை நிறைவேற்றுவதற்காக எல்லா நிகழ்வுகளையும், காரியங்களையும், நபர்களையும் இறையாண்மையுடன் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார் என்று நமக்கு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்பட வேண்டும். சர்வதேச அளவில் இருந்து தனிப்பட்ட நிலை வரை இயற்கையிலும், மனித சமுதாயத்திலும் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் அவரது கரம் உள்ளது. எதுவுமே தற்செயலாக நடப்பதில்லை. வெறும் ஒரே நேரம் நிகழும் எதிர்பாராத தற்செயல் என்று எதுவும் இல்லை. கர்த்தர் சபையைத் தம் மகிமையான இணைபாதியாக உற்பத்திசெய்வதற்காக, தேவனுடைய பொருளாட்சியை செயல்படுத்துவதற்கு சகலமும் ஒன்றுசேர்ந்து கிரியைசெய்யும்படி கர்த்தர் இன்று ஒரு மிகவும் விலாவாரியான முறையில் வேலைசெய்துகொண்டிருக்கிறார். பூமியில் தேசங்களுக்கிடையில் என்ன நடந்தாலும் அது சபையின் மீது கொஞ்சம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, ஏனெனில் தம் பரமேறுதலில் கிறிஸ்து சுவிசேஷத்தைப் பரப்புவதற்காகவும், தம் சரீரத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் உலக சூழ்நிலையை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். உலகில் உள்ள மக்கள், தேவனுடைய செயற்படும் கரத்தை அடையாளம் காணாமல் இருக்கக்கூடும், ஆனால் நாம் அவ்வாறு அறியாதவர்களாக இருக்கக்கூடாது. பரமேறுதலிலுள்ள கிறிஸ்துவே எல்லோருக்கும் கர்த்தராகவும், பூமியின் ராஜாக்களுக்கு ஆட்சியாளராகவும், எவரில் சகலமும் நிலைநிற்கிறதோ அந்த நபராகவும்கூட இருக்கிறார். தேவனுடைய பொருளாட்சியின் குவிமையமாகிய சபைக்காக அவரே இவை அனைத்துமாக இருக்கிறார்.
B. கிறிஸ்து தம் விசுவாசிகள் தம்மை உள்ளான ரீதியில் ஆதாயப்படுத்தக்கூடுமாறு அவர்களுக்காகப் பரிந்துபேச அவர் ஆசாரியராக ஆக்கப்பட்டார்—எபி. 7:25-26; 8:1
பரமேறுதலில் கிறிஸ்து எல்லா நிகழ்வுகளையும், நபர்களையும், காரியங்களையும் ஆட்சிசெய்யும் ஒரு ராஜாவாக இருப்பது மட்டுமல்லாமல்; அவர் ஓர் ஆசாரியராகவும் இருக்கிறார். நம் மகா பிரதான ஆசாரியராக கிறிஸ்து தம்மிடம் நாம் தொடர்ச்சியாக முன்வரக்கூடுமாறு நமக்காகப் பரிந்துபேச தேவனுக்கு முன்பாக நிற்கிறார். பரமேறுதலில் அவர் (பிரதான ஆசாரியரின் மார்ப்பதக்கத்தின் மீதுள்ள விலையேறப்பெற்ற கற்களால் மாதிரியாகக் காட்டப்படும்) நம் அனைவரையும் தேவனுக்கு முன்பாகச் சுமந்துசென்று, ஒவ்வொரு நாளும் தம் சரீரத்தின் எல்லா அவயவங்களுக்காகவும் தனித்தனியாக ஜெபிக்கிறார். என்னே ஓர் அற்புதமான பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறார்! அவர் நமக்காக எல்லாவற்றையும் ஏற்பாடு செய்வது மட்டுமல்லாமல், நாம் அவரிடம் முன்வரவும், நாம் முழு குமாரத்துவத்திற்கென்றும் வளரும்படி அவர் ஏற்பாடு செய்திருக்கும் எல்லாவற்றிலும் நாம் முழுவதும் பங்கேற்று, அவற்றிலிருந்து பயனடையவும் கூடுமாறு அவர் நமக்காக ஜெபித்துக்கொண்டும் இருக்கிறார்.
III. நம் பரலோக ராஜா தாம் திரும்பி வருவதற்கான ஆயத்தத்தில் தம் பரப்புதலுக்காக தம்மால் ஆணையிப்பட்டிருக்கிறவர்கள் நாமே—லூக்கா 24:46-50; அப். 1:8
முந்தைய பாடத்தில் நாம், கிறிஸ்துவோடு ஆளுகை செய்ய நாம் எவ்வாறு சீர்பொருத்தப்படுகின்றோம் என்பதையும், நம் ஆவியில் ஆவியானவராகிய அவரை வாழ்வதன் மூலம் இன்று நாம் ஜீவனில் ஆளுகைசெய்ய முடியும் என்பதையும் பார்த்திருக்கிறோம். இந்தப் பாடத்தில், நாம் தேவனுடைய குமாரர்களாக மகிமைக்குள் கொண்டுவரப்படக்கூடுமாறு எவ்வாறு கிறிஸ்து சகலத்தையும் கிரியைசெய்ய வைக்கின்றார் அதோடு நமக்காகப் பரிந்துபேசுகின்றார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். இது ஓர் அற்புதமான உணர்ந்தறிதல், ஆனால் இன்னும் ஒரு கூடுதல் வெளிப்பாட்டிற்கான தேவை உள்ளது. நாம் கிறிஸ்துவின் சகோதரர்கள் மட்டுமல்லாமல், நாம் கிறிஸ்துவின் சீஷர்களும், அவரது உடன்-வேலையாட்களும் கூட. அவரது பரமேறுதலில் அவரது கிரியை தனிநபர்களாகிய நமக்கானது மட்டுமல்லாமல்; அவரது முழு சரீரமும் கட்டியெழுப்பப்பட்டு, அவர் தாம் திரும்பி வருவதற்காக அவரது ஜெயங்கொள்பவர்கள் வெளியரங்கமாக்கப்படும் வரை, பரமேறுதலில் அவரது கிரியை முழு பூமியின் மீதும் உள்ள அவரது நகர்விற்காகவே உள்ளது. நாம் தாமே வளர வேண்டும், ஆயினும்கூட இந்த ஜீவனை மற்றவர்களுக்குள் பரப்புதலுக்காக இந்தப் பரமேறிய கிறிஸ்துவுடன் எவ்வாறு ஒத்துழைப்பது மற்றும் உடன்-உழைப்பது என்பதை நாம் அறிந்துகொள்ளவும் வேண்டும்.
A. சுவிசேஷத்தை அறிவிக்கவும், சகல தேசங்களையும் சீஷராக்கவும் புறப்பட்டுச் செல்லும்படி கர்த்தர் தம் சீஷர்களுக்குச் கட்டளையிட்டார்—மத். 28:18-19; மாற்கு 16:15; லூக்கா 24:46-48
கிறிஸ்துவின் சீஷர்களாகிய நமக்கு ராஜ்யத்தின் சுவிசேஷத்தைக் கொண்டு ஆணையிடப்பட்டிருக்கிறது (மத். 24:14). நாம் நம் “எருசலேமிலிருந்து” (அப். 1:8), அதாவது நாம் இருக்கும் இடத்திலிருந்து ஆரம்பித்து, நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு, அருகில் உள்ளவர்களுக்கும், தொலைவில் உள்ளவர்களுக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தாக வேண்டும். நாம் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்போது, நாம் தேசங்களைச் சீஷராக்கவும் செய்து (மத். 28:19), நம்மைப் போலவே அவர்களையும் கிறிஸ்துவின் சீஷர்களாக ஆக்கிவிடுகின்றோம்.
B. இன்று கர்த்தருடன் வேலை செய்வதற்கு நாம் ஆவியானவரின் சாராம்சரீதியான அம்சம், ஆவியானவரின் பொருளாட்சிரீதியான அம்சம் ஆகிய இரண்டையும் அறிந்திருந்தாக வேண்டும்—லூக்கா 24:49; அப். 1:8; மாற்கு 16:20
கர்த்தர் தம் பரமேறுதலுக்குள் நுழைந்த பிறகு, இந்த ஆவியானவரை தம் சரீரத்தின்மீது வெளியூற்ற அவருக்குக் கொடுக்கப்பட்டது. ஆவியானவரின் வெளியூற்றுதலுக்காகக் காத்திருக்கும்படி அவர் தம் சீஷர்களுக்குக் கட்டளையிட்ட நேரத்தில், அவர் இன்னும் பரமேறியிருக்கவில்லை. இப்போது, இன்று, கிறிஸ்து பரமேறுதலில் இருக்கிறார், மேலும் ஆவியானவர் வெளியூற்றப்பட்டிருக்கிறார். ஆவியானவர் நமக்குள் இருப்பது மட்டுமல்லாமல், அவர் வல்லமைக்காகவும் வேலைக்காகவும் நம்மீது கூட இருக்கிறார். பரமேறுதலில் கிறிஸ்துவுடன் எப்படி நிற்பது என்பதை அறிந்தவர்களாக நாம் இருக்க விரும்பினால், நமக்குள்ளும் நம்மீதும் ஆவியானவர் இருக்கிறார் என்பதை நாம் உணர்ந்தறிந்தாக வேண்டும். நாம் கர்த்தருக்காக ஒன்றைக் கர்த்தருடைய நாமத்தில் செய்யும்போது, எதிரியைக் கீழ்ப்படுத்தும் பொருளாட்சிரீதியான ஆவியானவரின் அதிகாரமும், நாம் எதைச் செய்ய வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறாரோ அதையெல்லாம் நிறைவேற்றுவதற்கான இந்த ஆவியானவரின் வல்லமையும் நமக்கு இருக்கிறது. நாம் கர்த்தருக்காக வேலைசெய்ய ஏற்கனவே முழுவதும் தரிப்பிக்கப்பட்டுள்ளோம். நாம் செய்ய வேண்டியதெல்லாம், கர்த்தர் நமக்கு ஏற்கனவே தரிப்பித்திருப்பதைப் பயன்படுத்துவதுதான்.
C. பரமேறிய கர்த்தருடன் வேலை செய்வதற்கு, நாம் எவ்வாறு ஜெபித்து கர்த்தருடைய நடத்துதலைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் அறிந்திருந்தாக வேண்டும்—ரோ. 8:26-27; அப். 16:6-7
பவுல் கர்த்தருடைய ஆணையை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, பலமுறை அவன் ஆவியானவரால் அவரது பிரயாணம் செய்தலில் அரசாளப்பட்டான். சில சமயங்களில் கர்த்தர் சுவிசேஷத்திற்காக ஒரு கதவைத் திறப்பார், அப்போது பவுல் அந்த திறப்பின் வழியாக தைரியமாகச் செல்வான். சில சமயங்களில் பவுலை எங்கேயும் போக விடாமல் கர்த்தர் தடை செய்வார். இந்தப் பூமியில் நாம் நடக்கும்போது, நாம் ஆவியானவருக்கு மிகவும் உணர்திறன் உடையவர்களாக இருக்க வேண்டும். மேலும், சிங்காசனத்தில் உள்ள கர்த்தரைத் தொடும் ஒரு விதத்தில் எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதை நாம் கற்றாக வேண்டும். நமக்காகவும், நம்மைப் பற்றிய அந்த விஷயங்களுக்காகவும் மட்டுமே ஜெபிப்பதற்குப் பதிலாக, கர்த்தருடைய இருதயத்தில் உள்ள விஷயங்களுக்காகவும் நாம் ஜெபிக்கலாம். அவருடைய நகர்வுக்காக நம் மூலமாக ஜெபிக்கும்படி அவரை அனுமதிக்க நாம் கர்த்தருக்குத் திறந்தால், பூமியில் அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு வழியை நம் ஜெபம் அவருக்கு அனுமதிக்கும். இது எவ்வளவு மகத்தான ஒரு ஜெபம்! பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்தத் தேவைகளால் முன் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனர். தேவனுடைய இருதயத்தில் உள்ளதை நிறைவேற்ற சிங்காசனத்தில் உள்ள தேவனை நகர்த்தும் ஒரு விதத்தில் எவ்வாறு ஜெபிப்பது என்பதைக் கற்றுக்கொள்வோர் யார்?
D. தம் சீஷர்களாக இருப்பவர்களாக, கர்த்தர் இந்த யுகத்தின் முழுநிறைவு வரையிலும்கூட , நம்மோடு இருக்கிறார் என்பதை நாம் உணர்ந்தறிய வேண்டும்—மத். 28:20
முந்தைய இரண்டு குறிப்புகளையும் வலியுறுத்துவது ஓரளவு நம் விருப்பத்தைச் சார்ந்ததாகக் கருதப்படுகையில், இந்த இறுதிக் குறிப்பை வலியுறுத்துவதன் மூலம் இந்தப் பாடம் அதி சிறப்பாக முன்வைக்கப்படக்கூடும். கர்த்தர் இன்று எல்லாவற்றையும் செயல்படுத்திக்கொண்டு, பரமேறுதலில் இருக்கிறார். அவர் வெற்றிசிறந்துவிட்டார் அதோடு இப்போது எல்லாவற்றிற்கும் மேலான ராஜாவாக ஆளுகை செய்கிறார். இத்தகைய ஒருவராக, அவர் நம்முடன் இருக்கிறார். நாம் எங்கு சென்றாலும்சரி, இந்த ஆவியானவராக அவர் தொடர்ச்சியாக நம்முடன் இருக்கிறார். கிறிஸ்துவில் உள்ள நம் ஆசீர்வாதத்தைப் பற்றிய உணர்ந்தறிதலில் நாம் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். எல்லாமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. உலகம் முடிந்துவிட்டது. சாத்தான் முடிந்துவிட்டான். நம் தோல்விகள் முடிந்துவிட்டன. ஏன்? கிறிஸ்து தம் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாக என்ன சாதித்திருக்கிறாரோ அதோடு தம் பரமேறுதலில் இப்போது என்ன நிறைவேற்றிக்கொண்டிருக்கிறாரோ அதுவே இதற்குக் காரணம். எதுவும் கிறிஸ்துவிடமிருந்து நம்மைப் பிரிக்க முடியாது, அல்லது எதுவும் அவருக்கு முட்டுக்கட்டையிடவும் முடியாது. இப்போது அவரைப் பாருங்கள்—அவரே இந்தப் பிரபஞ்சத்தில் ஒப்பற்ற ஆட்சியாளராக என்றென்றும் முடிசூட்டப்பட்டு இருக்கிறார். அத்தகைய ஒருவராக, அவர் நம் முழு இரட்சிப்புக்காக எல்லா மனிதர்களையும், பொருட்களையும், நிகழ்வுகளையும் ஆட்சிசெய்துகொண்டிருக்கிறார். இன்று நாம் அவரை நம் ராஜாவாக அங்கீகரித்து, பூமியில் அவரது ராஜ்யத்தின் வருகைக்காக அவருடன் ஒன்றுசேர்ந்து உழைப்பவர்களாக இருக்கிறோம். என்னே ஒரு கிறிஸ்து! இத்தகைய ஒருவரோடு இணைந்திருப்பதற்கு நாம் பாக்கியவான்கள் (ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்).
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: இரண்டு பக்கங்களிலிருந்தும் கிறிஸ்துவின் பரமேறுதலைக் காண இளம் வாலிபர்களுடன் ஒன்றுசேர்ந்து வெளிப்படுத்துதல் 5:1-14, நடபடிகள் 1:1-10 ஆகிய இரண்டையும் வாசிக்கவும். கர்த்தர் ஒரு மனிதனாகப் பரமேறிய போது சீஷர்கள் கண்டதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். மேலும் கர்த்தர் பரமேறிய போது பரலோகத்தில் நடந்த காட்சியையும் தெரியப்படுத்துங்கள். எவ்வாறு யோவான் அவரை யூதா கோத்திரத்து சிங்கமாகவும், ஓர் ஆட்டுக்குட்டியாகவும் பார்த்தான் என்பதைக் காட்டுங்கள். மகிமையில் ஒரு மனிதனாகக் கர்த்தரின் இந்த இரண்டு அம்சங்களையும் விரித்துரைக்கவும்—சிங்கம், ஆட்டுக்குட்டி. சாத்தானையும், அவனது கலகக்கார தூதர்களையும் பேய்கள் அனைத்தையும் தோற்கடிக்க எவ்வாறு கர்த்தர் சிலுவையில் தம் மரணம் மற்றும் தம் உயிர்த்தெழுதல் மூலமாக ஒரு சிங்கமாக இருந்தார் என்பதை நாம் பார்க்க வேண்டும். அதன்பின் நாம், ஒரு மனிதனாக அவர் உலகத்தின் பாவத்தை நீக்கிப்போடுவதற்கு தேவ ஆட்டுக்குட்டியாக இருந்தார் என்பதையும் பார்க்க வேண்டும் (யோவான் 1:29). இன்று தேவனுடைய சிங்காசனத்தில் உள்ள ஒரு மனிதனாக, கர்த்தராகிய இயேசு இன்னும் சாத்தானுக்கு ஒரு சிங்கமாகவும், நமக்கு ஓர் ஆட்டுக்குட்டியாகவும் இருக்கிறார். நாள் முழுவதும் நாம் இந்தத் தீய உலகத்தை அதன் அனைத்து சோதனைகளுடனும், சாத்தானை அவனது தாக்குதல்கள் அனைத்துடனும் எதிர்கொள்ளுகையில், ஒவ்வோர் எதிர்மறையான சூழ்நிலையையும் ஜெயங்கொள்ள நம் ஆவியில் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் இந்தச் சிங்கம் நமக்கு இருக்கிறார். மீண்டும், தேவனுடைய சிங்காசனத்தில் உள்ள ஒரு மனிதனாக கர்த்தர் இன்னும் நம் பாவத்தை நீக்கிப்போட தேவ ஆட்டுக்குட்டியாக இருக்கிறார் என்பதைக் கொண்டு நமக்குக் கருத்துப்பதிவு ஏற்படுத்தப்பட வேண்டும். அவர் இன்னும் நம் ஆவியில் அன்பானவராகவும், மன்னிப்பவராகவும், கிடைக்கக்கூடியவராகவும் இருக்கிறார். அறிக்கையிடுதலின் கொஞ்சம் தனிப்பட்ட ஜெபத்தை இளம் வாலிபர்கள் செய்வதுடன் முடிக்கவும். கர்த்தர் தாம் யூதா கோத்திரத்து சிங்கமாக சாத்தானையும் உலகத்தையும் தோற்கடித்ததற்காகவும், தாம் தேவ ஆட்டுக்குட்டியாக பாவங்களை மன்னித்ததற்காகவும் சுத்திகரித்ததற்காகவும் கர்த்தருக்கு தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல அவர்களுக்கு உதவுங்கள்.
சுவிசேஷ செயலாக்கம்: இரட்சிப்பின்றி, விழுந்துபோன மனிதர்கள் பாவத்தால் நிறைந்தவர்களாகவும், பிசாசின் பிள்ளைகளாகவும்கூட இருக்கிறார்கள் (யோவான் 8:44). அவர்களது கண்கள் தங்கள் பொல்லாத பிதாவால் குருடாக்கப்பட்டிருக்கின்றன, இவன் ஆரம்பத்திலிருந்தே ஒரு பொய்யனாகவும் கொலைகாரனாகவும், அவர்களைத் தொடர்ச்சியாக வஞ்சிக்க வேலைசெய்துக்கொண்டு வந்திருக்கிறான், இதனால் அவர்கள் தங்கள் இறுதி சேருமிடமாகிய அக்கினிக் கடலைச் சென்றடையும் வரை அவர்கள் அனைவரும் தொடர்ந்து இருளில் நடப்பார்கள் (யோவான் 12:40; 2 கொரி. 4:3-4; யோவான் 8:44; மத். 25:41). ஆயினும்கூட, இருளில் நடக்கின்ற அனைவரும் ஒரு மாபெரும் ஒளியைக் கண்டு, மனந்திரும்பி, அவருக்குள் விசுவாசித்து, இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம் (ஏசா. 9:2; யோவான் 8:12). மனிதர்களின் கண்களைக் குருடாக்கும்படி சாத்தான் வேலை செய்யும்போது, கர்த்தர் அவற்றைத் திறக்கும்படி வேலை செய்துகொண்டு வந்திருக்கிறார். உங்கள் கண்கள் திறக்கப்படவும், நீங்கள் இரட்சிக்கப்படவும் உங்களை இந்தக் கூடுகைக்கு வரவழைப்பதற்காகக் கிறிஸ்து, பரமேறிய ராஜாவாக உங்கள் ஒவ்வொரு சுற்றுச்சூழலிலும் வேலைசெய்துகொண்டு வந்திருக்கிறார், எல்லா மனிதர்களையும், பொருட்களையும், காரியங்களையும் ஆட்சிசெய்து கொண்டிருக்கிறார். அவர் உங்கள் இரட்சிப்புக்காக எல்லாவற்றையும் ஏற்பாடு செய்துகொண்டு வந்திருக்கும் அதோடு இன்னும் ஏற்பாடு செய்துகொண்டிருக்கும் ராஜாக இருப்பது மட்டுமல்லாமல், தம்மிடம் முன்வருபவர்களை முற்றும்முடிய இரட்சிக்க இயலக்கூடிய ஒரு பிரதான ஆசாரியராகவும் இருக்கிறார் (எபி. 7:25). அத்தகைய ஒரு பிரதான ஆசாரியராக, அவர் உங்கள் சார்பாகப் பரிந்துபேசுவதற்கு எப்போதும் ஜீவிக்கிறார், இதனால் நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் அவரை உள்ளான ரீதியில் நாளுக்கு நாள் தொடர்ச்சியாக ஆதாயப்படுத்தும்படி உங்கள் இரட்சிப்பைத் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வீர்கள் (எபி. 7:25). திறந்துக்கொடுத்து, உங்கள் அற்புதமான ராஜா-இரட்சகராகவும், உண்மையுள்ள பிரதான ஆசாரியராகவும் அவரைப் பெற்றுக்கொள்ளுங்கள்!
மிக முக்கியக் காரியங்கள்: நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.); ஒரு கனிக்கொடுக்கும் சுவிசேஷ வாழ்க்கையை வாழ்தல் (III.G.).
பின்புல வாசிப்பு: Life-study of Matthew, Message 72.
REFERENCES: Life-study of Matthew, Message 72; The Conclusion of the New Testament, Message 31, p. 340; Life-study of Luke, Message 55.