கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல்
பகுதி 9
✵பாடம் 10 – 18
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கண்டறிதல்
குறிக்கோள்: கர்த்தருடைய உயிர்த்தெழுதல் கண்டறியப்படுவதற்கு அவரது விசுவாசிகளின் தேடுதல் தேவைப்படுகிறது என்பதைக் காண்பதற்கு.
பொருட்சுருக்கம்: சுவிசேஷப் பதிவில், உயிர்த்தெழுந்த கர்த்தர் முதலில் மகதலேனா மரியாளுக்கும், பின்னர் சாலையில் ஒன்றுசேர்ந்து நடந்துகொண்டிருந்த இருவருக்கும், அதன்பின் ஒரு வீட்டிற்குள் ஒன்றுசேர்ந்துக் கூடிவந்திருந்த சீஷர்களுக்கும் தரிசனமாகிறார். இந்தச் சங்கதிகள் ஒவ்வொன்றும், கர்த்தர் தம் அன்பான மற்றும் தேடும் விசுவாசிகளுக்கு எப்படித் தரிசனமாகிறார் என்பதைப் பற்றிய ஒரு கோட்பாட்டை முன்வைக்கிறது. முதலில், நாம் கர்த்தரைத் தனிப்பட்ட ரீதியில் தேடுகையில் அவர் நமக்குத் தரிசனமாகிறார். இரண்டாவதாக, நாம் மற்ற விசுவாசிகளுடன், குறிப்பாக அவரது வார்த்தையைக் குறித்து ஒன்றுசேர்ந்து ஐக்கியப்படும்போது நாம் கர்த்தரைக் காண்கிறோம். மூன்றாவதாக, நாம் கர்த்தரைக் கூடுகைகளில் காண்கிறோம். கர்த்தருடைய உயிர்த்தெழுதல் ஒரு நிறைவேற்றப்பட்ட உண்மையாக இருந்தது, ஆனால் கர்த்தரை நேசித்துக்கொண்டும் தேடிக்கொண்டும் இருந்த அந்த சீஷர்கள் மட்டுமே அவரது உயிர்த்தெழுதலை அனுபவித்தனர். கர்த்தருடைய உயிர்த்தெழுதல் கண்டறிய்யப்படுவதற்கு அவரது விசுவாசிகளின் தேடுதல் தேவைப்படுகிறது. நாம் கர்த்தரைத் தொடும் வரை திருப்தி அடையாதவர்களாக, மரியாளைப் போன்று நாமும் இருப்போமாக. அப்போது, நாம் கர்த்தரைத் திரும்பக் கொண்டுவரும் அவரது கூட்டு மணவாட்டியாக ஆகிவிடுவோம்; நாம் அவரது இரண்டாம் வருகையில் அவருக்கு விலையேறப்பெற்றவர்களாகிய அந்தத் தேடுபவர்களாக இருப்போம்.
பின்புலம்: கிறிஸ்துவுக்காகவும், கிறிஸ்துவுக்காக மட்டுமே உள்ள ஓர் எளிய, நெருக்கமான மற்றும் தூய்மையான அன்பைக் குறித்து இளம் வாலிபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கு இது ஒரு வாய்ப்பாகும்.
அதிகாரங்கள்: மாற்கு 16; லூக்கா 24; யோவான் 20.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
இந்தப் பாடத்தில் சித்தரிக்கப்பட்ட முன்னேற்றம், மாற்கு 16:9-15 இல் அதி தெளிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
I. உயிர்த்தெழுந்தக் கர்த்தர், உயிர்த்தெழுதலின் நாளில் தம் விசுவாசிகளுக்குத் தரிசனமானார்
சுவிசேஷப் பதிவில், உயிர்த்தெழுந்த கர்த்தர் முதலில் மகதலேனா மரியாளுக்கும், பின்னர் எம்மாவுக்குச் செல்லும் சாலையில் ஒன்றுசேர்ந்து நடந்துகொண்டிருந்த இரண்டு சீஷர்களுக்கும், அதன்பின் ஒரு வீட்டிற்குள் ஒன்றுசேர்ந்துக் கூடிவந்திருந்த சீஷர்களுக்கும் தரிசனமானார். இந்தச் சங்கதிகள் ஒவ்வொன்றும், கர்த்தர் தம் அன்பான மற்றும் தேடும் விசுவாசிகளுக்கு எப்படித் தரிசனமாகிறார் என்பதைப் பற்றிய ஒரு கோட்பாட்டை முன்வைக்கிறது. முதலில், நாம் கர்த்தரைத் தனிப்பட்ட ரீதியில் தேடுகையில் அவர் நமக்குத் தரிசனமாகிறார். இரண்டாவதாக, நாம் மற்ற விசுவாசிகளுடன், குறிப்பாக அவரது வார்த்தையைக் குறித்து ஒன்றுசேர்ந்து ஐக்கியப்படும்போது நாம் கர்த்தரைக் காண்கிறோம். மூன்றாவதாக, நாம் கர்த்தரைக் கூடுகைகளில் காண்கிறோம். நம் அனுபவத்தில், நாம் தனிப்பட்ட அனுபவத்திலிருந்து கூட்டு அனுபவத்திற்கும் அல்லது கூட்டு அனுபவத்திலிருந்து தனிப்பட்ட அனுபவத்திற்கும் நடத்தப்படக்கூடும். நாம் கர்த்தரை நேசிப்பவர்களாகவும், தினமும் அவரைத் தேடுபவர்களாகவும் இருந்தால், நாம் மற்றவர்களுடன் ஐக்கியம் கொள்ளும்போது நிச்சயமாக நாம் அவரைக் காண்கிறோம், மேலும் கூடுகைகளில் நாம் அவரது பிரசன்னத்தை அனுபவித்துமகிழ்கிறோம், அவரை மற்றவர்களுக்கு நிரப்பீட்டளிக்கவும்கூட செய்கிறோம்.
A, உயிர்த்தெழுந்த கர்த்தர் முதன்முதலில் மகதலேனா மரியாளுக்குத் தரிசனமானார்—மாற்கு 16:9; யோவான் 20:11-17
“கர்த்தரின் உயிர்த்தெழுதல் என்னும் உண்மை நிறைவேற்றப்பட்டிருக்கிறது, ஆனால் அது கண்டறியப்பட்டு காணப்பட்டாக வேண்டும். மகதலேனா மரியாள் கல்லறைக்கு வருவதற்கு முன்பு, ஜீவனில் உயிர்த்தெழுதல் உண்மையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனால் மரியாள் கர்த்தரை நேசிப்பதாலும், தேடுவதாலும் அதைக் கண்டறிய வேண்டியிருந்தது. இது ஒரு கோட்பாட்டை வகுக்கிறது. இன்று கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஒரு நிறைவேற்றப்பட்ட உண்மை, ஆயினும் வெகு சிலரே அதைப் பார்த்திருக்கின்றனர். நாம் இத்தகைய ஒரு கண்டறிதலைப் பண்ண விரும்பினால், நாம் முதலில் கர்த்தரை நேசித்து, அவரைத் தேடியாக வேண்டும் (Life-study of John, Message 45, pp. 539–540).
- மகதலேனா மரியாள், கர்த்தருடைய சரீரத்தை அடக்கம் பண்ணுதலை அன்புடன் கவனித்துக்கொள்ள கல்லறைக்கு அதிகாலையிலே வந்த பெண்களில் ஒருவளாக இருந்தாள்—மத். 28:1; மாற்கு 16:1; லூக்கா 24:1, 10; யோவான் 20:1
காலியான கல்லறைக்கு வந்துசேரும் பெண்களில் மகதலேனா மரியாள்தான் நான்கு சுவிசேஷங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே நபர். கர்த்தர் அவளை விட்டு ஏழு பிசாசுகளைத் துரத்தினார் என்றும், அவள் தன் நளத தைலத்தின் ஒரு வெள்ளைக்கல் பரணியை உடைத்து, அதையெல்லாம் கர்த்தர் மீது ஊற்றின அளவிற்கு கர்த்தரை நேசித்தாள் என்றும் வார்த்தை நமக்குச் சொல்கிறது, இது அவள் அவருக்கான தன் அன்பிலிருந்து தன் முழு வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் அவர் மீது ஊற்றினாள் என்பதை அடையாளப்படுத்துகின்றது. பஸ்கா பண்டிகையில் தம் மரணத்திற்குப் பிறகு கர்த்தர் தாம் இத்தகைய கவனிப்பைப் பெறமாட்டார் என்பதை நிச்சயமாக அறிந்திருந்து, தம் அடக்கம் பண்ணுதலுக்கான ஆயத்தமாக அவளது சுகந்தவர்க்கமிடுதலைப் (அபிஷேகத்தை) பாராட்டினார். அவள் ஒரு முட்டாள்தனமான நபராகத் தோன்றினாள், ஏனெனில் அவள் அவரது மரணத்திற்குப் பிறகு, அதாவது கல்லறையின் மீது ஒரு பெரிய கல் உருட்டப்பட்டிருப்பதை அவள் அறிந்திருந்த போதிலும்கூட, அவள் கர்த்தருடைய சரீரத்திற்கு மீண்டும் சுகந்தவர்க்கமிட (சரீரத்தை அபிஷேகம்செய்ய) நாடுவதற்கு வந்தாள்.
- கல்லறை காலியாக இருப்பதைக் கண்டதும், மரியாள் பேதுரு மற்றும் யோவானிடம் அதைச் சொல்வதற்கு ஓடிச்சென்றாள், இவர்கள் அவளுடன் கல்லறைக்குத் திரும்பினார்கள்—யோவான் 20:2-10
இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டிருந்தார் என்று தேவதூதன் அவளிடமும், மற்ற பெண்களிடமும் சொன்ன பிறகும்கூட (மத். 28:2–7; மாற்கு 16:5–7; லூக்கா 24:4-7), கல்லறை காலியாக இருந்தது என்ற உண்மைக்கு மட்டுமே அவளால் கவனம் செலுத்த முடிந்தது, ஏனெனில் அவள் பேதுரு மற்றும் யோவானிடம், “கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை”என்று சொன்னாள் (யோவான் 20:2). (யோவான் 20:2 இல், “இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும்” என்ற சொற்றொடர் யோவானைக் குறிக்கிறது.) அவளிடம் கர்த்தருக்காக மட்டுமே ஓர் இருதயம் இருந்தது, அவள் தேவதூதர்களைக் கூட கவனிக்கவில்லை என்று தோன்றியது. பேதுருவும் யோவானும் கல்லறைக்கு ஓடி, அது காலியாக இருப்பதைக் கண்டறிந்து, பின்னர் விட்டுசென்றனர். “கல்லறையை முதலில் பார்த்தவர் மரியாள், மேலும் கல்லறைக்குள் நுழைந்த முதல் நபர் பேதுரு. இங்கே இந்தச் சகோதரர்கள் நிஜமாகவே சகோதரர்கள்தான், ஏனெனில் அவர்கள் மனதில் தெளிவாக இருக்கிறார்கள் அதோடு சகோதரிகளை விட அவர்களுக்கு இந்த உண்மையை நம்புவது எளிதாகும். இந்த இரண்டு சகோதரர்களும் காலியான கல்லறையையும், சீலைகளையும், முகத்தில் விரிக்கப்படும் கைக்குட்டைத் துணியையும் பார்த்தார்கள், மேலும் கர்த்தர் உயிர்த்தெழுப்பப்பட்டிருந்திருக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தார்கள். அவர்கள் இந்த உண்மையைப் பார்த்து, அதை உணர்ந்தறிந்து, அதில் புறம்சார்ந்த ரீதியில் நம்பினாலும், அவர்களுக்கு அகம்சார்ந்த ரீதியில் இந்த அனுபவம் இருக்கவில்லை. புறம்சார்ந்த உண்மையுடன் திருப்தி அடைந்த பிறகு, அவர்கள் கல்லறையை விட்டுசென்றனர். இருப்பினும், இந்தச் சகோதரியாகிய மரியாள், தொடர்ந்து தங்கியிருந்தாள், ஏனெனில் அவள் இன்னும் காத்துக்கொண்டும், உற்றுநோக்கிக்கொண்டும், எதிர்பார்த்துக்கொண்டும் இருந்தாள்” (Life-study of John, Message 45, p. 541).
- சகோதரர்கள் விட்டுசென்றிருந்த பிறகு, மரியாள் கல்லறையில் தொடர்ந்து தங்கியிருந்தபோது, இயேசு அவளுக்குத் தரிசனமானார்—யோவான் 20:11-17
பேதுருக்கோ யோவானுக்கோ அல்ல, மாறாக இத்தகைய ஒருவருக்குத்தான் கர்த்தர் முதன்முதலில் தம் உயிர்த்தெழுதலின் பசுமையில் தம்மையே முன்வைத்தார். “சகோதரர்கள் கர்த்தருடைய உயிர்த்தெழுதலின் உண்மையில் விசுவாசம் வைப்பதில் திருப்தியடைந்தார்கள், ஆனால் இந்தச் சகோதரி மேலும் சென்று, உயிர்த்தெழுந்த சாட்சாத்து கர்த்தரையே, அதாவது கர்த்தரை அனுபவிக்கும் தனிப்பட்ட அனுபவத்தை நாடினாள்” (யோவான் 20:1, footnote 2). மரியாள் எப்படி பரிதாபமாகத் தன் எளிய மனக் கஷ்டத்தில் கல்லறைக்கு அருகில் தொடர்ந்து தங்கிக்கொண்டிருந்தாள் (யோவான் 20:11) என்ற கதையைச் சொல்லுங்கள். இயேசு உயிர்த்தெழுதலில் தம் விசுவாசிகளிடம் வர முடிவதற்கு முன்பு, அவர் தம்மையே பிதாவுக்குக் காணிக்கையாக்க வேண்டியிருந்தது, ஆயினும் மரியாள் அங்கே இருந்தாள். இத்தகைய ஒரு தேடுபவளிடமிருந்து அவரால் திரும்பி விலகிச்செல்ல முடியவில்லை. அவளுடைய கூடுதல் தேடுதலின் காரணமாக, அவளுக்கு வெகுமதியாக அவரது தரிசனமாகுதல் அளிக்கப்பட்டது. என்னே ஓர் ஆச்சரியமான நிகழ்வு! இத்தகைய ஒருவளைச் சந்திப்பதற்காகக் கர்த்தர் பிதாவுடனான தம் திட்டமிடப்பட்ட சந்திப்பை சற்றுத் தாமதித்தார். நாம் இத்தகைய தேடுபவர்களாக இருந்தால், கர்த்தர் நம்மை எதிர்க்க இயலாமல் இருப்பார், நிச்சயமாக நம்மிடம் வருவார்.
B. உயிர்த்தெழுந்தக் கர்த்தர் எம்மாவுக்குச் செல்லும் வழியில் இரண்டு சீஷர்களுடன் சேர்ந்துக்கொண்டார்—மாற்கு 16:12; லூக்கா 24:13-32
கர்த்தரைத் தான் கண்டடையும் வரை திருப்தி அடையாத ஒருவருக்கு மரியாள் ஓர் எடுத்துக்காட்டாக இருந்தாள். அவளது வகையான, கர்த்தரை ஆசையாய்ப் பின்தொடரும் “பகுத்தறிவற்ற” பின்தொடர்தல், நாம் கர்த்தரைப் பின்தொடர்வதில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நமக்குக் காட்டுகிறது. நாம் கர்த்தரைத் தொட்டிருக்கும் வரை நாம் சிறிதும் நின்று விடக்கூடாது! எம்மாவுக்குச் செல்லும் வழியில் போய்க்கொண்டிருந்த இரண்டு சீஷர்களின் விவரணம், உயிர்த்தெழுந்த கர்த்தரைக் கண்டுபிடிப்பதற்கான மற்றொரு இரகசியத்தை வெளிப்படுத்துகிறது. இந்த இரகசியம் ஐக்கியமே. இந்த இரண்டு விசுவாசிகளும் கர்த்தரைக் குறித்து ஒன்றுசேர்ந்து நடந்துக்கொண்டும் ஐக்கியப்பட்டுக்கொண்டும் இருந்தனர். அவர்கள் இவ்விதமாக ஐக்கியப்பட்டுக்கொண்டிருக்கையில், கர்த்தர் தரிசனமாகி, அவர்களது ஐக்கியத்திற்குள் நுழைந்தார். அவர்கள் கர்த்தரோடு நடக்கவும், பேசவும் செய்தபோது, கர்த்தர் அவர்களுக்கு வேதவாக்கியங்களை ஒன்றன்பின் ஒன்றாக நினைவுபடுத்துகையில் அவர்களது இருதயங்கள் தங்களுக்குள் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தன. பல சமயங்களில் நாம் வார்த்தையில் கர்த்தரைப் பற்றி மற்ற விசுவாசிகளுடன் ஐக்கியப்படும்போது, நமக்கு இதுபோன்ற அனுபவம் உள்ளது. நாம் அவரைப் பற்றி மற்றவர்களுடன் ஐக்கியப்பட்டுக்கொண்டிருக்கையில், குறிப்பாக நாம் அவரது வார்த்தைக்கு வருகையில், கர்த்தர் நம்மிடம் வருகிறார், மேலும் அவர் ஒவ்வொரு வசனமாக கொண்டுவரத் தொடங்குகிறார், ஒரு உருப்படி மற்றொன்றிற்கு இட்டுச் செல்கிறது.
C. உயிர்த்தெழுந்த கர்த்தர், ஒன்றுசேர்ந்து கூடிவந்திருந்த சீஷர்களுக்குத் தரிசனமானார்—மாற்கு 16:14; யோவான் 20:19, 24-28
மாற்கு 16இல், மரியாள் கர்த்தரை தனிப்பட்ட ரீதியில் தேடிக்கொண்டிருந்தபோது, கர்த்தர் அவளுக்குத் தரிசனமானார் என்று நமக்்கு முதலில் சொல்லப்படுகிறது. பின்னர், ஒன்றுசேர்ந்து ஐக்கியப்பட்டுக் கொண்டிருந்த இரண்டு சீஷர்களுக்கும் கர்த்தர் தரிசனமானார் என்று நமக்குச் சொல்லப்படுகிறது (ஒப். லூக்கா 24:13-15). இறுதியாக, பதினொருவரும் ஒன்றுசேர்ந்து கூடிவந்திருந்தபோது கர்த்தர் அவர்களுக்குத் தரிசனமானார் என்று நமக்குச் சொல்லப்படுகிறது. இது, உயிர்த்தெழுந்தக் கர்த்தரின் தரிசனமாகுதலை நாம் அனுபவித்துமகிழ முடியக்கூடிய மூன்றாவது வழியை, அதாவது கூடுகைகளை வெளிப்படுத்துகிறது. இந்தக் கூடுகையில் தோமா மற்ற சீஷர்களுடன் இருக்கவில்லை என்று நமக்குச் சொல்லப்படுகிறது (யோவான் 20:24). அவன் அங்கே இல்லாததால், கர்த்தருக்குத் தம் உயிர்த்தெழுதலில் தம் சீஷர்களுடன் இருந்த முதல் கூடுகையைத் (சந்திப்பை) தவறவிட்டான். அவன் இந்தக் கூடுகையத் (சந்திப்பை) தவறவிட்டது ஒரு தீவிரமான விஷயமாக இருந்தது. நாம் ஒன்றுசேர்ந்து கூடிவரும் போதெல்லாம், கர்த்தர் அங்கு நம்மோடு இருக்கிறார் என்பதை நாம் உணர்ந்தறிய வேண்டும் (மத். 18:20). ஆகையால், நாம் கர்த்தருடைய தரிசனமாகுதலை விரும்பினால், நாம் விசுவாசிகளின் கூடிவருதலைப் புறக்கணிக்கக்கூடாது (எபி. 10:25). கர்த்தரைப் பார்த்திருந்த சாட்சிகளின் அறிக்கைகளுக்கு சீஷர்கள் ஆரம்பத்தில் பதிலளிக்கவில்லை என்றாலும்கூட, அவர்கள் ஒன்றுசேர்ந்து கூடிவந்தபோது அவர்களிடம் கர்த்தருடைய தரிசனமாகுதல் இருந்தது (யோவான் 20:19; லூக்கா 24:36). இளம் வாலிபர்களின் கூடுகைகள் பல, இதைப் போன்றுதான் உள்ளன. ஆரம்பத்தில் நாம் குளிர்ந்துபோனவர்களாயும் பதிலளிக்காதவர்களாயும் இருக்கக்கூடும், ஆனால் இறுதியில் கர்த்தர் தரிசனமாகிறார், அப்போது அனைவரும் ஒரு வகையான பங்கேற்பு மற்றும் அனுபவமகிழ்ச்சிக்குள் கொண்டு வரப்படுகிறோம். இதனால்தான், குளிர்ச்சியாகவோ அனலாகவோ எப்படி இருந்தாலும் சரி, நம் அனைவருக்கும் கூடுகைகள் தேவை.
II. கர்த்தரின் உயிர்த்தெழுதல் கண்டறிப்படு தலுக்கு அவரது விசுவாசிகளின் தேடுதல் தேவைப்படுகிறது—யோவான் 20:1–17
“கர்த்தருடைய உயிர்த்தெழுதல் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அதைக் கண்டறிவதற்கு அவரது சீஷர்களின் தேடுதல் தேவைப்படுகிறது. அவரது உயிர்த்தெழுதலைக் கண்டறிதல், கர்த்தராகிய இயேசுவின் அன்பான தேடுபவர்களால் செய்யப்பட்டது. யோவான் அதிகாரம் இருபது, கர்த்தரின் உயிர்த்தெழுதலை உணர்ந்தறியக்கூடிய விதமான நபரை, அவரது உயிர்த்தெழுதலின் தரிசனம் வெளிப்படுத்தப்பட முடியக்கூடிய விதமான நபரைக் காட்டுகிறது. கர்த்தருடைய உயிர்த்தெழுதலின் வெளிப்பாட்டை நாம் எவ்வாறு பெற முடியும்? இந்தப் பிரபஞ்சத்தில் நிறைவேற்றப்பட்ட கர்த்தருடைய உயிர்த்தெழுதல் போன்ற ஓர் அற்புதமான மற்றும் பரம்புதிரான உண்மை உள்ளது. ஆனால் அதை நாம் எப்படி அறிந்துகொள்ள முடியும்? அது நமக்கு எப்படி வெளிப்படுத்தப்பட முடியும்? இந்த தரிசனத்தை நாம் எவ்வாறு பெற முடியும்? கர்த்தரை நேசிப்பதாலும், அவரைத் தேடுவதாலும் மட்டுமே முடியும்…ஆவிக்குரிய கண்டறிதல், ஆவிக்குரிய வெளிப்பாடு, ஆவிக்குரிய தரிசனம் ஆகியவை கர்த்தரைத் தேடுவதையே மிகவும் அதிகமாகச் சார்ந்துள்ளது” (Life-study of John, Message 45, pp. 539–540).
A. கர்த்தரின் தரிசனமாகுதல் இன்றி, கர்த்தரின் உயிர்த்தெழுதலைப் பற்றிய அறிவு வீண்
பலர் கர்த்தரின் உயிர்த்தெழுதலை ஒரு வரலாற்று உண்மையாக அறிவர். இருப்பினும், இந்த உயிர்த்தெழுந்தக் கர்த்தரை அவர்கள் அனுபவித்திருக்க மாட்டார்கள்! கர்த்தர் நமக்குத் தரிசனமாகும்போது, இந்த உயிர்த்தெழுந்த கிறிஸ்து தாமே பற்றிய ஒரு வெளிப்பாட்டை அப்போது நாம் பெறுகிறோம். அப்போது உயிர்த்தெழுதல் என்பது ஒரு வெறும் உபதேசமாக இருப்பதாக நின்றுவிடுகிறது அதோடு நம் அனுபவத்தில் ஒரு தனிப்பட்ட கண்டுபிடிப்பாக ஆகிவிடுகிறது. “கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் பற்றிய உண்மையை நீங்கள் கண்டறிந்தீர்களா? கர்த்தர் உயிர்த்தெழுப்பப்பட்டிருக்கிறார் என்ற வெளிப்பாடு அல்லது தரிசனத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா? அவரது உயிர்த்தெழுதல் பற்றிய அறிவும், உபதேசமும், கதையும் உங்களிடம் இருப்பது எனக்குத் தெரியும், ஆனால் அதைப் பற்றிய உண்மையை நீங்கள் ஆவியில் கண்டறிந்திருக்கிறீர்களா? நாம் அத்தகைய ஒரு கண்டறிதலைச் செய்ய வேண்டும் எனில், நாம் முதலில் கர்த்தரை நேசித்து, அவரைத் தேடியாக வேண்டும்” (Life-study of John, Message 45, pp. 539–540).
B. மரியாள் கர்த்தரை மிகவும் அதிகமாக நேசித்துத் தேடியதால், அவர் முதலில் அவளுக்குத் தரி்சனமானார்
“கர்த்தரின் உயிர்த்தெழுதல் பற்றிய உண்மை நிறைவேற்றப்பட்டிருக்கிறது, ஆனால் அது கண்டறியப்பட்டு காணப்பட்டாக வேண்டும். மகதலேனா மரியாள் கல்லறைக்கு வருவதற்கு முன்பு, ஜீவனில் உயிர்த்தெழுதல் உண்மையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனால் மரியாள் கர்த்தரை நேசித்துத் தேடுவதன் மூலம் அதைக் கண்டறிய வேண்டியிருந்தது. இது ஒரு கோட்பாட்டை வகுக்கிறது. இன்று கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஒரு நிறைவேற்றப்பட்ட உண்மை, ஆயினும் பலர் அதைப் பார்த்திருக்கவில்லை….இத்தகைய ஒரு கண்டறிதலை நாம் செய்ய வேண்டுமானால், நாம் முதலில் கர்த்தரை நேசித்து, அவரைத் தேடியாக வேண்டும்” (Life-study of John, Message 45, pp. 539–540). உச்சநிலையாக, கர்த்தரைத் தேடாமல் நாம் அந்த அளவிற்கு அனுபமாக்க மாட்டோம். மரியாள் செய்ததைப் போலவே, நாம் அவரைக் கண்டடையும் வரை திருப்தி அடையாமல், தனிப்பட்ட முறையில் கர்த்தரைத் தேட வேண்டும்.
C. கர்த்தருக்கான நம் அன்பையும் தேடுதலையும் கிளர்ந்தெழுப்ப, நமக்குக் கூடுகைகள் மற்றும் ஆவிக்குரிய கூட்டாளிகளின் ஐக்கியம் தேவை—2 தீமோ. 2:22; எபி. 10:25
சுவிசேஷங்களில் உள்ள விவரணத்தில், கர்த்தர் தம்மை ஒரு தனிப்பட்ட முறையில் தேடிக்கொண்டிருந்தவளுக்கு முதலில் தரிசனமானார், மேலும் கூடுகைகளில் சீஷர்களுக்குக் கடைசியாகத் தரிசனமானார். இருப்பினும், நம் அனுபவத்தில் பல முறை, இந்த ஒழுங்கு தலைகீழாக ஆக்கப்படுகிறது. நம்மில் பெரும்பாலோர் ஆரம்பத்தில் பதினொரு சீஷர்களைப் போன்று இருக்கிறோம், மரியாளைப் போன்று இல்லை. கூடுகைகளில் கர்த்தரால் ஈர்க்கப்பட்டு, கூட்டாளிகளைப் பெற உற்சாகப்படுத்தப்பட்டு, அவரைத் தேடும் காதலர்களாக நாம் ஆகுவதற்கு வழிவகுக்கும் கர்த்தருக்கான ருசியை இறுதியில் பெறுவதிலிருந்துதான் பெரும்பாலும் நம் அனுபவம் தொடங்குகிறது. மற்றவர்களுடனான நம் ஐக்கியத்தின் மூலமாக நம் தேடுதல் அதிகரிக்கிறது. அப்போது நாம் இந்த உயிர்த்தெழுந்தக் கிறிஸ்துவைப் பற்றிய அனுபவத்தாலும் கண்டறிதலாலும் நிறைந்திருப்போம். நாம் ஒன்றுசேர்ந்து கூடிவரும் போது, மற்றவர்களுடன் ஐக்கியம்கொள்வதும், கூடுகைகளில் இந்த ஜீவிக்கும் கிறிஸ்துவை நிரப்பீடு செய்வதும் மிக எளிதாக இருக்கும்.
III. கர்த்தர் தம் இரண்டாம் வருகையின் நாளில் தம் அன்பான தேடுபவர்களுக்குத் தரிசனமாவார்—மத். 25:6; 2 தீமோ. 4:8; வெளி. 2:28; 22:16
நாம் அனைவரும் மரியாளைப் போன்று இருக்க விரும்புகிறோம் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். நம்மிடம் இந்த வகையான இருதயம் இருக்கிறது. எனினும், அடிக்கடி பெரும்பாலும் நாம் அவிசுவாசிக்கும் சீஷர்களைப் போன்று, நம் சொந்த வருத்தங்கள் மற்றும் கவலைகளில் மூழ்கிவிடுகிறோம். மரியாளைப் போன்று கர்த்தரைத் தேடுபவர்களாக நாம் எப்படி ஆகுவதற்கு முடியும்? .அப்படிப்பட்ட ஓர் இருதயம் உள்ளவர்களைச் சுற்றி இருக்க நாம் வருவதிலிருந்து அது தொடங்குகிறது. அதனால்தான் நாம் கூடுகைகளுக்கு வர வேண்டும். அப்படியானால், நாம் மரியாளைப் போன்ற ஓர் இருதயம் கொண்ட கூட்டாளிகளைத் தேட வேண்டும் (2 தீமோ. 2:22). அத்தகைய சகோதர சகோதரிகளுடன் நாம் இருக்கையில், கர்த்தர் தம்மையே மேலும் மேலும் அதிகமாக நமக்கு வெளிப்படுத்தும்போது, குறிப்பாக அவரது வார்த்தையின் ஊழியம் மற்றும் ஐக்கியம் மூலமாக நமக்கு வெளிப்படுத்தும்போது நாம் கர்த்தரின் பிரகாசித்தலையும் ஈர்த்தலையும் அனுபவமாக்குகிறோம் (உ.பா. 1:4). இந்த வழியில்தான் நாம் ஒன்றுசேர்ந்து கர்த்தருடைய ஒரு கூட்டுக் காதலியாக, பல “மரியாள்களால்” தொகுக்கப்பட்ட ஒரு மணவாட்டியாக ஆகிவிடுவோம். நமக்கு அப்படிப்பட்ட ஓர் இருதயம் இருந்தால், சாட்சாத்து கர்த்தரைத் தவிர வேறு எதற்கும் நம்மிடம் ஓர் இருதயம் இருக்காது. அத்தகைய விசுவாசிகளுக்குத்தான் கர்த்தர் தம் இரண்டாம் வருகையில் பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரமாக தரிசனமாவார் (வெளி. 2:28). நாம் கூடுகைகளிலும், கூட்டாளிகளோடும், அவரைத் தேடும் நம் தனிப்பட்ட தேடுதலிலும் கர்த்தரை அனுபவித்துமகிழ்ந்துக் கொண்டிருந்தால், நம் இருதயங்கள் இறுதியில், “கர்த்தராகிய இயேசுவே, நீர் எங்கே? நீர் இங்கு இல்லாததை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது! நாங்கள் உங்களுக்காக இங்கே காத்திருக்கின்றோம்!” என்று கூக்குரலிடும்.
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: இந்தப் பாடத்தின் உண்மைகளை முன்வைக்கவும்: கல்லறையில் மரியாளின் கதை, எம்மாவுக்குச் செல்லும் வழியில் இரண்டு சீஷர்களின் கதை, உயிர்த்தெழுதலின் நாளில் மேல் அறையில் சீஷர்களுக்குக் கர்த்தர் தரிசனமாகுதலின் கதை. கர்த்தருடைய உயிர்த்தெழுதலில், அவர் ஜீவன்-தரும் ஆவியானார் என்பதைக் கொண்டு இளம் வாலிபர்களுக்குக் கருத்துப்பதிவை ஏற்படுத்தவும் (1 கொரி. 15:45). இத்தகைய ஓர் ஆவியானவராக, அவர் எப்போதும் சீஷர்களுடன் இருக்கிறார். முன்னதாக, அவர்கள் கர்த்தரை ஒரு மனிதனாக அறிந்திருந்தனர், ஆனால் இப்போது அவர்கள் அவரை ஒரு நித்தியமான, உள்வசிக்கும், தங்களை ஒருபோதும் விட்டுவிலகாத கண்ணுக்குத் தெரியாத நபராக அறியக் கற்றுக்கொள்ள வேண்டும். முன்பு, அவர்கள் கர்த்தராகிய இயேசுவை பௌதிகமாக அறிந்திருந்தார்கள், ஆனால் இப்போது அவர்கள் அவரை ஆவிக்குரிய ரீதியில் அறியக் கற்றாக வேண்டும். கர்த்தர் ஒருபோதும் நம்மை விட்டு விலகுவதில்லை என்பதைக் கொண்டு நமக்கும் கூட கருத்துப்பதிவு ஏற்படுத்தப்பட வேண்டும். எனவே, இத்தகைய ஓர் உள்வசிக்கும், கண்ணுக்குத் தெரியாத நபரை எவ்வாறு அறிந்து கொள்வது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இதை நாம் எவ்வாறு செய்ய முடியும்? கர்த்தரை அறிந்து கொள்வதற்கான அதி சிறந்த வழி அவரை நேசிப்பதே. மரியாள் கர்த்தரின் தரிசனமாகுதலைப் பெற்றிருந்ததற்குக் காரணம், அவருக்கான அவளது அன்பே. அவளது அன்பு, கர்த்தர் தம்மையே அவளுக்கு வெளியரங்கமாக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தியது. பள்ளியிலும், வீட்டிலும், நம் சகோதர சகோதரிகளிடமும், நம் பெற்றோரிடமும் கர்த்தர் தம்மையே நமக்கு வெளியரங்கமாக்குவதும் நமக்குத் தேவை. கர்த்தரை நன்கு அறிந்துகொள்வதற்கான ஒரு வழி, “கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மை நேசிக்கிறேன்” என்று நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் கூறுவதுதான். நாம் இதை ஒவ்வொரு நாளும் செய்தால், இந்த அற்புதமான, உள்வசிக்கும் கர்த்தராகிய இயேசுவை அறியவும் நம் இருதயம் மென்மையாக்கப்படும், நம் ஆவி பலப்படுத்தப்படும்.
சுவிசேஷ செயலாக்கம்: `உயிர்த்தெழுதலில் விசுவாசியாதவர்கள் “எல்லா மனிதர்களிலேயும் மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள்,” எந்த எதிர்காலமும், எதிர்காலத்திற்கான எந்த நம்பிக்கையும் இல்லாதவர்கள் (1 கொரி. 15:19). அவர்கள் தற்காலிக அனுபவமகிழ்ச்சியை ஆசையாய்ப் பின்த்தொடர்ந்துத் தேடி வீணாகத் தங்கள் நாட்களை நிரப்புகிறார்கள். “மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே?” (1 கொரி. 15:32b). அப்படிப்பட்டவர்கள் மத்தியில் நீங்கள் இருந்தால், உங்கள் குடித்துவெறித்த அவிசுவாச நிலையிலிருந்து கர்த்தர் உங்களைக் காப்பாற்றக்கூடுமாறு, உயிர்த்தெழுதலில் உங்களுக்கான கர்த்தரின் இரக்கமுள்ள தரிசனமாகுதலுக்காக நீங்கள் ஜெபிக்க வேண்டும். முட்டாள்தனமாக இருக்காதீர்கள், மாறாக விதைக்கப்படுவது மரிக்காதவரை அது உயிர்ப்பிக்கப்படுவதில்லை என்று எண்ணுங்கள். ஒரு கோதுமை மணி பூமிக்குள் விழுந்து, மரிக்கும் போது, அது பல மணிகளை உற்பத்திசெய்ய உயிரோடு எழுப்பப்படுவதில்லையா? இதுவே உயிர்த்தெழுதல்! கர்த்தராகிய இயேசு மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாகத் தனித்திராமல், தம் உயிர்த்தெழுதலின் கனியாக இருப்பதற்காகத் தம்முடன் பல மணிகளாக நம்மை உற்பத்திசெய்யுமாறு பூமிக்குள் விழுந்த ஒரு கோதுமை மணிக்கு அவர் தம்மையே ஒப்பிட்டார் (யோவான் 12:24). கர்த்தர் உங்களுக்காக மரித்தார், மேலும் இப்போது, உயிர்த்தெழுதலில், அவர் உங்களுக்கு உள்ளான ரீதியில் தரிசனமாகுவதற்கு விரும்புகிறார். அதற்கு இதுதான் ஏற்ற சமயம்! அவிசுவாசத்தின் தீய தலைமுறையின் மத்தியில், மரணத்தால் பிடித்துவைக்க இயலாத ஒருவரை நோக்கித் திரும்புங்கள் (மத். 12:39-40; 16:4; அப். 2:24). தம்மை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, மரணத்தைத் தோற்கடித்து, மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுவிடம் திரும்புங்கள். ஓர் அழிக்கமுடியாத ஜீவனை உடையவராகிய அவரிடம் இப்போதே ஜெபியுங்கள், உங்களுக்காக மரித்ததற்காக அவருக்கு நன்றகூருங்கள், மேலும் தேவனும், உயிர்த்தெழுதலுமாகிய என்றென்றும் ஜீவிப்பவராக உங்களுக்குள் வரும்படி அவரிடம் கேளுங்கள் (எபி. 7:16; யோவான் 1:1; 11:25).
மிக முக்கியக் காரியங்கள்: கர்த்தருடன் ஓர் உயிர்த்துடிப்புள்ள, தனிப்பட்ட மற்றும் நெருக்கமான உறவை வளர்த்தல் (III.E.); சபையின் கூடுகைகளில் கலந்துகொள்ளுதல் (III.F.2.); ஆவிக்குரியக் கூட்டாளிகளுடன் கர்த்தரை ஆசையாய்ப் பின்தொடர்தல் (III.F.4.).
பின்புல வாசிப்பு: Life-study of John, Message 45.
REFERENCES: Life-study of John, Messages 45–46; Daily Life for the Meeting Life; John 20:24, footnote 2.