கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல்
பகுதி 9
✵பாடம் 01 – 09
கர்த்தரின் சிலுவைமரணம் (1)
குறிக்கோள்: கிறிஸ்துவின் சிலுவைமரணம் பற்றிய விவரங்களைக் காண்பதற்கும், கிறிஸ்துவின் மரணம் சாத்தானின் ராஜ்யத்தின் மீது ஏற்படுத்தியிருந்த இந்தப் பிரம்மாண்டமான தாக்கத்தைக் காண்பதற்கும்.
பொருட்சுருக்கம்: யூதத் தலைவர்களாலும், ஒரு ரோம அரசியல்வாதியாலும் அநீதியாய் நியாயந்தீர்க்கப்பட்டு கண்டனம்செய்யப்பட்ட பிறகு, இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் சிலுவையில் தொங்கியபோது, முதல் மூன்று மணிநேரங்களில் அவர் மீது அவமதிப்புகளைக் குவிக்க ஒவ்வொரு வாய்ப்பும் பயன்படுத்தப்பட்டது. சிலுவையில் கடைசி மூன்று மணிநேரங்களில், கிறிஸ்துவை பாவத்தின் முழுமொத்தமாக நியாயந்தீர்க்க தேவன் உள்ளே வந்தார். அவர் தம் மீட்பின் வேலையை செய்தடுமுடித்தப் பிறகு, கிறிஸ்து தம் ஆவியை ஈன்றார் (விட்டார்). கர்த்தர் மரித்தபோது, சாத்தானின் ராஜ்யத்தை நசுக்குவதிலும், தேவனுடைய பொருளாட்சியை நிறைவேற்றுவதிலும் அவரது மரணம் ஏற்படுத்தியிருந்த இந்தப் பிரபஞ்சமளாவிய தாக்கத்தைச் சுட்டிக்காட்டிய பல சம்பவங்கள் இடம்பெற்றன. இறுதியில் இயேசு ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றும் வகையில் ஓர் ஐசுவரியவானின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். யூதத் தலைவர்கள் கல்லறைக்கு ஒரு காவலனை அமைத்து, அதை அடைத்து வைத்து, அவருடைய வரும் உயிர்த்தெழுதல் பற்றிய ஒரு தெளிவான சாட்சிக்கான மேடையை அமைத்தனர்.
பின்புலம்: ஒவ்வோர் இளம் வாலிபனும் கர்த்தரின் மரணத்தைப் பற்றிய ஒரு வெளிப்பாட்டைப் பெற வேண்டும், மேலும் “இயேசு எனக்காக மரித்தார்” என்று பாராட்டுதலுடன் கூற இயல வேண்டும். முதல் ரோம இலக்கத்திலிருந்து தொடங்கி, அவர் தம்மை ஏளனம்செய்து, கொன்றவர்களுக்காக மரிக்க வந்தார் என்ற உண்மையால் நாம் தொடப்படாமல் இருக்க முடியாது. அவர் எவ்வாறு ஏளனம்செய்யப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டார் என்பதைப் பற்றிய விவரங்கள், பல நூற்றாண்டுகளாக அநேகப் பாவிகளின் இருதயங்களைத் தொட்டிருக்கும் பாடல்களின் உள்ளடக்கமாக ஆகியிருக்கின்றன. பாடல்கள் 1048 மற்றும் 1066, அவரது மரணம் நம்மீது ஏற்படுத்தும் இந்த இரட்சிக்கும் விளைவைத் தொடுகிறது.
அதிகாரம்: மத்தேயு 27.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
இந்தப் பாடம், கர்த்தரின் சிலுவைமரணம் பற்றிய மத்தேயுவின் விவரணத்தை அதன் மையமாக எடுத்துக்கொள்கிறது. இந்தப் பாடம் இளம் வாலிபர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகையில், அவர்கள் அதைத் தங்கள் வேதாகமங்களில் இசைவாகப் பின்பற்றலாம்.
I. மனிதனின் மீட்பிற்காக மரிக்க வந்த இந்தப் பாவமற்ற கர்த்தராகிய இயேசு தாம் யாரை இரட்சிப்பதற்காக மரித்துக்கொண்டிருந்தாரோ அவர்களால் ஏளனம்செய்யப்பட்டு, கொல்லப்பட்டார்—மத். 27:33-44
கர்த்தர் ஆறுமணி நேரங்கள் சிலுவைமீது இருந்தார். முதல் மூன்று மணி நேரம், அவர் தேவனுடைய சித்தத்தைச் செய்ததற்காக மனிதரால் துன்புறுத்தப்பட்டார்; கடைசி மூன்று மணி நேரம், அவர் நம் மீட்பை நிறைவேற்றும்படி தேவனால் நியாயந்தீர்க்கப்பட்டார். (இந்த விஷயம் பாடம் 8 இல் விரிவாக விளக்கப்படும்.)
A. கர்த்தர் சிலுவையில் அறையப்படுவதற்காக, “கபாலஸ்தலம்“ என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்—மத். 27:33
கர்த்தர் நியாயந்தீர்க்கப்பட்ட பிறகு, அவர் சிலுவையில் அறையப்படுவதற்காக நகர மதில்களுக்கு வெளியே ஓர் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். (“கல்வாரி” என்ற வார்த்தை, அதே அர்த்தமுள்ள லத்தீன் பெயரிலிருந்து நமக்குக் கிடைக்கிறது.)
B. எட்டி கலக்கப்பட்ட திராட்சைரசம் கர்த்தருக்குக் குடிக்கக் கொடுக்கப்பட்டது, ஆனால் அவர் அதைக் குடிக்க விரும்பவில்லை.—மத். 27:34
இது, கர்த்தர் நம் மீட்பிற்காகச் சிலுவையில் பாடநுபவிக்க வேண்டியிருந்ததின் முழு பழுவிலிருந்தும் தப்பிப்பதற்கான ஒரு வழியை அவருக்குக் கொடுப்பதன் மூலம் அவரைச் சபலப்படுத்துவதற்கே (சோதிப்பதற்கே) இருந்தது. எனினும், அவர் எந்தவொரு உணர்விழக்கச் செய்யும் அல்லது மதிமயக்கும் பாதிப்பும் இன்றி, தமக்காகப் பிதா ஆயத்தப்படுத்தியிருந்த இந்தப் பாத்திரத்தில் முழுவதுமாகப் பானம்பண்ணுவதில் அவர் உறுதியாக இருந்தார்.
C. அவரைச் சிலுவையில் ஆணியடித்தப் பிறகு, படைவீரர்கள் கர்த்தருடைய வஸ்திரங்களைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர்—மத். 27:35
கர்த்தர் சிலுவையின் மீது அவமானத்தில் பாடநுபவித்துக் கொண்டிருந்தபோது, படைவீரர்கள் உணர்ச்சியற்றவர்களாக அவரது வஸ்திரங்களை, அதாவது இந்தப் பூமியில் கர்த்தருக்குச் சொந்தமான ஒரே பொருளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர். இது, சங்கீதம் 22:18 இல் உள்ள தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியது. கர்த்தரால் சிலுவையில் தம் வஸ்திரங்களை அணியவும் கூட முடியவில்லை என்ற உண்மை, அவர் நமக்காக என்னே ஓர் அவமானகரமான மரணத்தை அநுபவித்தார் என்பதை மேலும் சுட்டிக்காட்டுகிறது.
D. அவருக்கு எதிரான குற்றச்சாட்டு அச்சிடப்பட்டு, அவரது தலைக்கு மேல் தொங்கவிடப்பட்டது—மத். 27:37
அந்தப் பலகை, “இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு” என்று எழுதப்பட்டிருந்தது. அவர்கள் கர்த்தரையும் யூதர்களையும் ஏளனம் செய்வதாக இதைச் செய்த போதிலும், இந்த அதிகாரப்பூர்வக் குற்றச்சாட்டின் மூலம் அவர்கள் இயேசுவை தாவீதின் சிங்காசனத்திற்கு உரிய சட்டப்படியான (உரிமையுள்ள) வாரிசாகவும், இவ்வாறு வேதவாக்கியங்களில் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட மேசியாவாகவும் அங்கீகரித்தனர்.
E. அவர் இரண்டு கொள்ளையர்களுக்கு இடையில் சிலுவையில் அறையப்பட்டார்—மத். 27:38
இரண்டு பொதுவான திருடர்களுக்கு இடையில் இயேசு சிலுவையில் தொங்கினார். இது, துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள் என்ற தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியது (ஏசா. 53:9). ஒரு குற்றவாளியாக மரிந்தவராக, இயேசுவின் சரீரம் எந்தக் கனமும் அல்லது அறிவிப்பும் இல்லாமல் கீழே வீசப்பட்டு, புதைக்கப்பட்டிருக்க வேண்டும்.
F. அவரைச் சூழ்ந்திருந்த மற்றும் அவ்வழியே கடந்துசென்ற அனைவராலும் அவர் ஏளனம்செய்யப்பட்டு தூஷிக்கப்பட்டார்—மத். 27:39–44
அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு படைவீரர்கள் அவரை ஏளனம்செய்திருந்தனர். இப்போது, அவருடன் பக்கவாட்டில் சிலுவையில் அறையப்பட்டுக்கொண்டிருந்த இரண்டு திருடர்கள் உட்பட, அவ்வழியே கடந்துசென்ற மக்கள் அனைவரும்கூட ஏளனம்செய்து, தூஷித்தனர். அவர்களுடைய பாவங்களுக்காக அவர் மரணத்திற்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருதார் என்பதை அவர்கள் உணர்ந்தறியவில்லை. இவ்வாறு, இயேசு சிலுவையில் தொங்கிய முதல் மூன்று மணிநேரங்களில், காலை ஒன்பது மணி முதல் நண்பகல் வரை, ஒவ்வொரு விதமான கேலியும் ஏளனமும் மனிதனால் அவர் மீது குவிக்கப்பட்டது. சிலுவையில் அறையப்படுதல் மூலமான மரணம் ஓர் அதிஅவமானகரமான மரணமாக இருந்தது. கர்த்தர் மௌனத்தில் இந்த நிந்தித்தலால் பாடநுபவித்தார். அவர் தம்மை நிந்தித்தவர்களிடம் ஒருபோதும் திரும்பிப் பேசவே இல்லை. ஒருபோதும் வரலாற்றில் ஒரு மனிதன் இவ்வளவு கண்ணியமான ஒரு மரணத்தை அநுபவித்ததில்லை. கர்த்தருடைய மரணத்தின் அவமானம், கர்த்தரின் கண்ணியம் முழுவதுமாக வெளியரங்கமாக்கப்பட முடியக்கூடிய ஓர் இருண்ட பின்புலமாகப் பயன்பட்டது. கர்த்தர் தம் கண்ணியத்தில், தங்கள் அநீதியில் அம்பலப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் முரணாகவும் வலுவான எதிர்நிலையில் நிற்கிறார்.
II. மனிதனின் எல்லா அவமதிப்புகளாலும் பாடநுபவித்தப் பிறகு, இயேசு தேவனால் நியாயந்தீர்க்கப்பட்டு கைவிடப்பட்டார்—மத். 27:45-50
சிலுவையில் அவரது முதல் மூன்று மணிநேரங்களில் கிறிஸ்துவின் மீது அவமதிப்புகளைக் குவிப்பதற்கு மனிதர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்திருந்த பிறகு, தேவன் தாமே கிறிஸ்துவை நியாயந்தீர்க்க உள்ளே வந்தார். சிலுவையில் கடைசி மூன்று மணி நேரங்களில், தேவன் அவரை நம் பாவத்திற்காகப் பாடநுபவித்த நம் பதிலீடாக எண்ணினார், மேலும் நம் பாவத்தின் காரணமாக தேவன் அவரைக் கைவிட்டார்.
A. ஆறாம் மணிநேரம் முதல் ஒன்பதாம் மணிநேரம் வரை, பூமியெங்கும் இருள் சூழ்ந்தது—மத். 27:45
இயேசு சிலுவையில் தொங்கிய இறுதி மூன்று மணி நேரத்தில், நண்பகல் தொடங்கி, தேவன் பூமியெங்கும் இருள் சூழச் செய்தார். இத்தகைய ஓர் இருள் நிச்சயமாக மக்களிடையே ஒரு மாபெரும் அச்சத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்க வேண்டும். இந்த நேரத்தில்தான், இயேசுவே மனுக்குலத்தின் சகல பாவங்களுக்கும் பொறுப்பான ஒப்பற்ற பாவியாக இருந்தது போல் அவரை நியாயந்தீர்க்க தேவன் உள்ளே வந்தார். “அந்த மணிநேரங்களில் தேவனுடைய பார்வையில் கர்த்தர் பாவத்தின் ஒரு முழுமொத்தமாக இருந்தார்” (Life-study of Luke, Message 52, p. 454).
B. கர்த்தர், “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று கூக்குரலிட்டார்—மத். 27:46
தேவன், நம் பாவங்களுக்காக இயேசுவின் மீது தம் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்காகக் கிறிஸ்துவை சிலுவையில் கைவிட்டார். இதுதான் தேவன் நம் பாவங்களை அவர்மீது வைத்தத் தருணம் என்று ஏசாயா 53 வெளிப்படுத்துகிறது. நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரையிலான மூன்று மணி நேரத்தில், நீதியான தேவன் நம் எல்லாப் பாவங்களையும் இந்த பதிலீட்டாளர்மீது வைத்து, நம் பாவங்களுக்காக அவரை நீதியாய் நியாயந்தீர்த்தார். தேவன் அவரைக் கைவிட்டார், ஏனெனில் இந்த நேரங்களில் அவர் சிலுவையில் ஒரு பாவியாக இருந்தார்; அவர் பாவமாகவும் ஆக்கப்பட்டார். ஒருபுறம், கர்த்தர் நம் பாவங்களைச் சுமந்தார்; மறுபுறம், அவர் நமக்காகப் பாவமாக்கப்பட்டார். எனவே, தேவன் அவரை நியாயந்தீர்த்தார். இது முற்றிலும் நீதியைப்பற்றிய ஒரு காரியமாக இருந்தது” (Life-study of Matthew, Message 70, p. 812). (கர்த்தரின் கூக்குரலைக் கேட்டதும், படைவீரர்களில் ஒருவர் ஏளனம்செய்யும் வகையில் அவருக்குக் குடிப்பதற்குக் கொஞ்சம் காடியைக் கொடுத்து (லூக்கா 23:36), மீதமுள்ளவர்களோ, “பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம்” என்று கூறினார்கள், ஏனெனில் அவர் தம்மைக் காப்பாற்றும்படி எலியா வருவதற்காகக் கூக்குரலிட்டுக்கொண்டிருந்தார் என்று அவர்கள் நினைத்தார்கள். இது கர்த்தர் மீது குவிக்கப்படுவதற்கான ஓர் இறுதி அவமதிப்பாக இருந்தது.)
C. கர்த்தர் மீண்டும் ஒருமுறை கூக்குரலிட்டு, மரித்து, தம் ஆவியை ஈன்றார் (விட்டார்)—மத். 27:50
தேவனுடைய நீதியால் கோரப்பட்ட இந்தப் பாத்திரத்தின் கடைசி துளியையும் அவர் பானம்பண்ணியிருந்தப் பிறகு, இயேசு கூக்குரலிட்டு, தம் ஆவியை ஈன்றார் (விட்டார்). இங்கே “ஈன்றார் (விட்டார்)”என்பதற்கான கிரேக்க வார்த்தைக்கு “கலைத்துவிட்டார்” என்றும் பொருள். பாவத்தின் ஒவ்வொரு கடனும் முழுமையாகச் செலுத்தப்பட்டிருக்கும் வரை அவர் தம்மை மரிக்க அனுமதிக்கவில்லை. அவருடைய மரணம் அதன் குறிக்கோளை முழுவதுமாக நிறைவேற்றியிருந்த பிறகுதான், இயேசு தம் மீட்கும் ஊழியத்தை வெற்றிகரமாக முடித்து, தம் பாடநுபவிக்கும் சரீரத்திலிருந்து தம் ஆவி விடுவிக்கப்படுவதற்கு அனுமதித்தார். இவ்வாறு, இயேசு மனிதனால் கொல்லப்படவில்லை. அவருடைய ஊழியத்தின் முதல் கட்டத்தில் அவருடைய வேலை முடிக்கப்பட்ட போதுதான், அவர் தம் ஆவியை ஈன்றார் [விட்டார்] (யோவான் 10:17-18; லூக்கா 23:46; Matthew 27:50 and footnote 1 ஆகியவற்றையும் பார்க்கவும்).
III. இயேசுவின் மரணத்தின் தாக்கத்திற்குப் பல சம்பவங்களாலும், பல சாட்சிகளாலும் சாட்சியமளிக்கப்பட்டன—மத். 27:51–56
இயேசுவின் மரணத்தின் தாக்கம் வரையெல்லையில் பிரபஞ்சமளாவியதாகவும், காலத்தில் நித்தியமானதாகவும் இருந்தது. அது தேவனுடைய எதிரியாகிய சாத்தானின் வல்லமையை என்றென்றும் அழித்தது, மேலும் அது ஒரு நித்தியமான ரீதியில் பாதுகாப்பான அஸ்திபாரத்தை உருவாக்கியது, அதன் மீது மனிதன் தேவனிடம் வர முடியும் மற்றும் அதன் மீது தேவன் மனிதனுக்குள் தம் நித்திய குறிக்கோளை நிறைவேற்ற முடியும். இது பல சம்பவங்களால் அடையாளப்படுத்தப்பட்டது மற்றும் இதற்கு அங்கிருந்தவர்களால் சாட்சியமளிக்கப்பட்டது.
A. தேவாலயத்தில் உள்ள திரைச்சீலை மேல் தொடங்கி கீழ் வரை கிழிக்கப்பட்டது—மத். 27:51
“இது, தேவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான பிரிவு அழிக்கப்பட்டது என்பதை அடையாளப்படுத்துகிறது, ஏனெனில் கிறிஸ்துவினால் எடுத்துக்கொள்ளப்பட்ட பாவ மாம்சம் (இது திரைச்சீலையினால் அடையாளப்படுத்தப்படுகிறது) (ரோ. 8:3) சிலுவையிலறையப்பட்டது (எபி. 10:20). ‘மேல்தொடங்கி கீழ் வரை’ என்ற வார்த்தைகள், திரைச்சீலைக் கிழிக்கப்படுதல் மேலிருந்து தேவன் செய்த செயலாக இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. பாவம் நியாயந்தீர்க்கப்பட்டதாலும் பாவ மாம்சம் சிலுவையிலறையப்பட்டதாலும், தேவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான பிரிவு அகற்றப்பட்டது. இப்போது, தேவனின் பிரசன்னத்திற்குள் நுழைவதற்கான வழி நமக்காகத் திறந்திருக்கிறது. என்னே கர்த்தருடைய மரணத்தின் அற்புதமான விளைவு! அவரது மரணம் உயிர் தியாகம் அல்ல; அது மீட்பின் செயலாகும் (Life-study of Matthew, Message 70, pp. 812–813).
B. பூமி அசைக்கப்பட்டது, பாறைகள் பிளக்கப்பட்டன—27:51
“பூமி அசைக்கப்படுவது, சாத்தானுடைய கலகத்தின் ஆதாரம் அசைக்கப்பட்டிருக்கிறது என்பதை அடையாளப்படுத்துகிறது, பாளைகள் பிளப்பது, சாத்தானின் பூமிக்குரிய இராஜ்ஜியத்தின் அரண்கள் நொறுக்கப்பட்டிருக்கின்றன என்பதை அடையாளப்படுத்துகிறது. அல்லேலூயா, கர்த்தரின் மரணம் திரைச்சீலையைக் கிழித்தது, சாத்தானுடைய கலகத்தின் ஆதாரத்தை அசைத்தது, சாத்தானுடைய ராஜ்யத்தின் அரண்களை நொறுக்கியது! என்னே ஒரு மரணம்! அவரது மரணத்திற்காகக் கர்த்தருக்குத் துதி! தேவனுடைய நீதி முழுவதும் திருப்தியாக்கப்பட்டதால், கிறிஸ்துவின் மரணம் இவ்வளவு வீரியமாக இருக்க முடிந்தது” (Life- study of Matthew, Message 70, p. 813).
C. இறந்திருந்த பல பரிசுத்தவான்கள் தங்கள் கல்லறைகளிலிருந்து வெளியே புறப்பட்டு வந்தனர்—மத். 27:52
“கல்லறைகள் திறக்கப்படுவது, மரணம் மற்றும் பாதாளத்தின் வல்லமை மேற்கொள்ளப்பட்டு கீழ்ப்படுத்தப்பட்டிருந்தது என்பதை அடையாளப்படுத்துகிறது, பரிசுத்தவான்களின் சரீரங்கள் எழுப்பப்படுவது, கிறிஸ்துவினுடைய மரணத்தின் விடுவிக்கும் வல்லமையை அடையாளப்படுத்துகிறது….மாதிரியியலில், அறுவடையின் முதற்பலன்கள் ஒரு தனி கோதுமை கதிராக இருக்கவில்லை, மாறாக கோதுமையின் ஒரு கதிர் கட்டாக இருந்தது, இது உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை மட்டுமல்லாமல், இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளதுபோல கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு மரித்தோரிலிருந்து எழுந்த பரிசுத்தவான்களையும் மாதிரியாகக் காட்டுகிறது” (Life-study of Matthew, Message 70, p. 813).
D. நூற்றுக்கு அதிபதியும், படைவீரர்களும், இயேசு தேவனுடைய குமாரனாக இருந்தார் என்று அறிக்கையிட்டனர்—மத். 27:54
சற்றுமுன் இயேசுவை இவ்வளவு கொடூரமாக நடத்தியிருந்த படைவீரர்கள் தாங்கள் சற்றுமுன் தேவனுடைய குமாரனை சிலுவையில் அறைந்திருந்ததை உணர்ந்தறிந்த போது அவர்கள் மிகவும் திகிலடைந்து போனார்கள். நாம் இந்தப் படைவீரர்களாக இருந்தால், தேவனுடைய குமாரனை சிலுவையில் அறைந்ததற்காக நாம் எப்படி உணருவோம்? ஆயினும், இயேசுவை சிலுவையில் அறைந்ததில் நமக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை நாம் அனைவரும் உணர்ந்தறிய வேண்டும். நம் பாவமும், தேவனிடமிருந்து பிரிவும்தான் அவரை மரணமடையச் செய்தது.
E. இயேசுவுக்கு ஊழியஞ்செய்திருந்த ஸ்திரீகளில் பலர் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்—மத். 27:55
அவரது சீஷர்கள் அனைவரும் ஓடிப்போயிருந்தாலும், மத்தேயுவின் விவரணத்தில் நமக்குச் சொல்லப்படுவது என்னவெனில், இயேசுவைப் பின்பற்றிய ஸ்திரீகள் அவர் சிலுவையில் அறையப்பட்டதற்குச் சாட்சிப்பகிர அங்கே இருந்தனர் என்பதே. இத்தகைய உண்மையுள்ள மற்றும் எளிமையான “ஸ்திரீகளாக” இருக்க நாம் அனைவரும் விரும்ப வேண்டும். யார் அதி மாபெரியவனாக இருப்பான் என்று வாதிட்டு, கர்த்தருக்காக மரிப்பதற்கான தங்கள் தயார்நிலையை அறிவித்த சீஷர்களைப் போலல்லாமல், இந்த ஸ்திரீகள் வெறுமனே கர்த்தரைப் பின்பற்றி, அவரது பிரசன்னத்திற்காக மட்டுமே அக்கறைப்பட்டனர். கர்த்தருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை அனுபவிப்பதற்கு முன், யார் அதி மாபெரியவனாக இருப்பான் என்று வாதிட்டப் பிறகு ஓடிப்போன அந்த இயற்கையான சீஷர்களைப் போன்று நாம் இருக்கிறோம். எனினும், நாம் அவருடைய காதலர்களாக ஆன பிறகு, அவர் எங்கு சென்றாலும்சரி, அது சிலுவைக்குச் செல்வதாக இருந்தாலும்கூட, நாம் வெறுமனே அவரைப் பின்பற்றுகிறோம். கர்த்தரைப் பின்பற்றுபவர்கள் நிச்சயமாக தங்கள் வாழ்நாள் முழுவதும் மாபெரும் விஷயங்களுக்குச் சாட்சிப்பகிர்வார்கள்.
IV. கர்த்தர் ஓர் ஐசுவரியவானால் அடக்கம்செய்யப்பட்டார்—மத். 27:57–66
இது ஏசாயா 53:9இல் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தின் ஒரு நிறைவேற்றமாக இருந்தது.
A. அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு, இயேசுவின் சரீரத்தை எடுத்துச் செல்ல பிலாத்துவின் அனுமதியைக் கேட்டான்—மத். 27:57–58
யோசேப்பு கர்த்தருடைய ஓர் ஐசுவரியவானான சீஷராக இருந்தான். அவன் தான் இயேசுவின் சரீரத்தை எடுத்துச் செல்லக்கூடுமாறு அனுமதி கேட்க துணிச்சலாகப் பிலாத்துவிடம் வந்தான்.
B. யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்து, அதைச் சணல்நார்த் துணியால் சுற்றி, தன் சொந்தக் கல்லறையில் வைத்து, இந்த இரண்டு மரியாள்களும் நோக்கிப் பார்க்கையில் இந்தக் கல்லறைக்கு முன்னால் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப்போனான்—மத். 27:59–61
“கர்த்தராகிய இயேசு ஒரு மெல்லிய சணல்நார்த் துணியால் சுற்றப்பட்டு, ஒரு புதிய கல்லறையில் வைக்கப்பட்டார். மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும், அடக்கம் பண்ணுதலைக் காணும்படி கல்லறைக்கு எதிரே உட்கார்ந்தனர். இவ்விதமான அடக்கம்பண்ணுதல் ஏசாயா 53:9இன் நிறைவேற்றத்திற்காக இருந்தது. இந்த நீதிமான் நிச்சயமாக இப்படிப்பட்ட ஓர் அடக்கம்பண்ணுதலுக்குப் பாத்திரராக இருந்தார்” (Life-study of Matthew, Message 70, p. 814). இதைச் செய்வதில், கர்த்தருடைய இந்தப் பின்பற்றுபவர்கள் தங்கள் அன்பான எஜமானருக்கு தாங்கள் அநேகமாக அளிக்கும் தங்கள் இறுதி பிரியாவிடையாக இருந்தது என்று நினைத்ததைக் கொடுத்திருக்கலாம்.
C. பிரதான ஆசாரியர்களும், பரிசேயர்களும் கல்லறையைப் பாதுகாக்க பிலாத்துவிடம் அனுமதி கேட்டனர், மேலும் அவர்கள் அந்தக் கல்லுக்கு முத்திரையிட்டு, அவரது சமாதிக்கு ஒரு காவற்படையை ஏற்படுத்தினர்—மத். 27:62–66
“வசனங்கள் 65 மற்றும் 66, ‘அதற்குப் பிலாத்து அவர்களிடம், காவற்படையை அழைத்துக்கொண்டு போய், நீங்கள் அறிந்திருக்கிற வழியில் கல்லறையைப் பத்திரமாய்க் காவல்செய்யுங்கள் என்றான். அவர்கள் சென்று, அந்தக் கல்லுக்கு முத்திரையிட்டு, காவற்படையை அங்கு நிறுத்தி, சமாதியைப் பத்திரமாய்க் காவல்செய்தனர்’ என்று கூறுகின்றன. இது, ஓர் எதிர்மறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எதிர்க்கிற யூதத் தலைவர்களால் உச்தேசிக்கப்பட்டது, ஆனால் இது கர்த்தருடைய உயிர்த்தெழுதலின் ஒரு பலமான நேர்மறையான சாட்சியாக மாறியது. இப்படிப்பட்ட ஒரு முத்திரை இல்லாமல், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் அந்தளவுக்குக் குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்காது” (Life-study of Matthew, Message 70, p. 814).
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: மத்தேயுவின் பதிவைப் பயன்படுத்தி, இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு அவருக்குச் செய்யப்பட்ட அநீதியான விஷயங்கள் அனைத்தையும் சுட்டிக்காட்டுங்கள். கிறிஸ்து சிலுவையில் ஆணியடிக்கப்படுவதற்கு முந்தைய மணிநேரங்களில் அத்தனை அதிகமான அவமதிப்புகள் அநியாயமாக அவர் மீது குவிக்கப்பட்டன. அவர் இரகசியமாகக் கைது செய்யப்பட்டார். ஆசாரியர்களும், யூதத் தலைவர்களும் அவரைக் கண்ணத்தில் அறைந்து, அவரது முகத்தில் எச்சில் துப்பி, அவரை ஏளனம் செய்தார்கள். அவர் எந்தத் தவறும் செய்யாதிருந்தும்கூட, அவரை எப்படிக் கொல்வது என்பது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். பிலாத்துவுக்கு முன்பாக அவருக்கு எதிராகப் பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன, மேலும் தான் இயேசுவிடம் எந்தக் குற்றமும் காண முடியவில்லை என்று பகிரங்கமாக அறிவித்தப் பிறகு பிலாத்து மக்கள்கூட்டத்தினரின் அநீதியான கோரிக்கைகளுக்குப் பணிந்து, இயேசுவைச் சாட்டையால் [கசையடியால்] அடித்து (உலோக துண்டுகள் கொண்ட கயிறுகளால் கடுமையாகக் கசையடித்து), சிலுவையில் அறையப்படும்படி அவரை ஒப்படைத்தான். படைவீரர்கள் அவரை யூதர்களின் ராஜாவே என்று ஏளனமாகப் போற்றுவதற்காக அவருக்கு ஒரு இராஜரீக அங்கியை அணிவித்து, முட்கிரீடத்தால் அவரை முடிசூட்டினார்கள். அவர்கள் அவர் மீது துப்பவும், அவர் முட்கிரீடத்தை அணிந்திருக்கையில் அவரைத் தலையில் அடிக்கவும்கூட செய்து, இதனால் இந்த முட்கள் அவரது மாம்சத்திற்குள் கடிக்கும்படி செய்தனர். சிலுவையை கொல்கொதாவுக்குக் கொண்டுவரும் தங்கள் வேலையைக்கூட அவர்கள் செய்யவில்லை; அதற்குப் பதிலாக ஒரு பார்வையாளரை அதைச் சுமந்துச்செல்லும்படி கட்டாயப்படுத்தினர். இறுதியாக, அவர்கள் இந்தக் குற்றமற்ற, பாவமற்ற மனிதனை சிலுவையில் ஆணியடித்தனர். அவர் சிலுவையில் இருந்தபோது, அவர் தாம் இரட்சிக்க வந்திருந்த மக்களால் ஏளனம்செய்யப்பட்டு, தூஷிக்கப்பட்டார். “மனிதனின் அநீதியை முற்றிலும் அம்பலமாக்கிய கிறிஸ்துவே, தாம் அம்பலமாக்கிய எல்லா அநீதியையும் சுமந்தார். முதலில் அவர் மனிதனின் அநீதியை அம்பலமாக்கினார், பின்பு அவர் அதைச் சிலுவையில் சுமந்தார். இது வீட்டைச் சுத்தம் செய்வதைப் போன்றது. நீங்கள் சுத்தம் செய்யவில்லையென்றால், பொருட்களுக்கு அடியில் மறைந்திருக்கும் தூசியை நீங்கள் பார்க்காதிருக்கக் கூடும். ஓர் அறையைச் சுத்தம் செய்யும்போது முதலில் குப்பை அம்பலமாக்கப்படுகிறது. பின்பு அது குப்பைத்தட்டில் பெருக்கி எடுக்கப்படுகிறது. அதுபோல பஸ்காவின் நாளில், கர்த்தராகிய இயேசு முதலில் குப்பை” அனைத்தையும், அதாவது மனிதனின் அநீதி அனைத்தையும் அம்பலமாக்கினார். பின்பு அவர் தாம் அம்பலமாக்கிய ‘குப்பையை’ சுத்தம் செய்தார். ஆ, கர்த்தராகிய இயேசுவின் சாட்சாத்து பிரசன்னமே முழுப் பிரபஞ்சத்திலும் மறைந்திருந்த ‘குப்பையின்’ ஒவ்வொரு துகள்களையும் அம்பலமாக்கியது. இறுதியில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே ‘தூசி’ ஆனார், மேலும் அனைத்து ‘தூசிகளும்’ அவர் மீது சேகரிக்கப்பட்டது. இவ்வாறு, மனிதனின் எல்லா அநீதியும் அம்பலமாக்கப்பட்டபிறகு, அது சிலுவையில் கிறிஸ்துவினால் சுமக்கப்பட்டது.தேவனின் நீதி வெளியரங்கமாக்கப்படுமாறு, மனுக்குலத்தின் ஒட்டுமொத்த அநீதியும் சிலுவையில் கர்த்தர்மீது குவிக்கப்பட்டது. நீதியான தேவன் இந்த எல்லா அநீதியையும் நியாயந்தீர்த்து, தம் நீதியைச் செயல்படுத்த உள்ளே வந்தார். கிறிஸ்துவின்மூலம் மனிதனின் அநீதி இறுதியில் தேவனின் நீதியாக மாறியதற்கு இதுவே காரணம். இதன் மூலம் நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்” (Life-study of Matthew, Message 71, p. 817).
சுவிசேஷ செயலாக்கம்: விழுந்துபோன மனிதனுக்கு மூன்று அடிப்படையான, ஆயினும் மிகவும் தீவிரமான, மூன்று தரப்பினர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உள்ளன: தேவனும், சாத்தானும், தானும். தனக்கும் தேவனுக்கும் இடையே உள்ள மனிதனின் பிரச்சினை, அவர்களுக்கு இடையே ஒரு தடை உள்ளது என்பதே. அந்தத் தடையானது மனிதனின் விழுந்துபோன மற்றும் பாவமுள்ள மாம்சமே ஆகும், இது மனிதனை தேவனிடம் வரவிடாமல் தடுக்கிறது. எனினும், பிரபஞ்சத்தில் தேவன் மட்டுமல்ல, அவரது எதிரியாகிய சாத்தானும் இருக்கிறான், இவன் தன் கலகத்திற்கான அடித்தளமாகப் பூமியைப் பயன்படுத்துகிறான். இந்தப் பொல்லாங்கன் மனிதனை அடிமைத்தனம் மற்றும் மரணபயத்தின் கீழ் பிணைக்கிறான் (எபி. 2:14-15). எனவே, மனிதனுக்கும் சாத்தானுக்கும் இடையே உள்ள பிரச்சனை, மனிதன் ஒரு வல்லமையின் கீழ், ஓர் அடிமைத்தனத்தின் கீழ்—மரணபயத்தின் கீழ் இருக்கிறான். இறுதியாக, மனிதனுக்கு தனக்குள்ளேயே கூட ஒரு பிரச்சினை இருக்கிறது. அவனது வாழ்நாள் முழுவதும், அவன் திருப்தியைத் தேடுவதற்குத் தள்ளப்படுகிறான், தனக்குள் இருக்கும் தாகத்தைத் தணிக்க எதையும் முயற்சிக்கின்றான். கர்த்தராகிய இயேசு சிலுவையில் மரித்தபோது, பல அற்புதமான மற்றும் அர்த்தமுள்ள சம்பவங்கள் நிகழ்ந்தன, இவை மனிதனின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குமான அவரது மரணத்தின் வீரியத்தைக் காட்டுகின்றன. கர்த்தர் ஓர் உரத்த சத்தமாய்க் கூக்குரலிட்டு, தம் ஆவியை ஈன்ற (விட்ட) பிறகு உடனேயே, தேவாலயத்திலிருந்த திரைச்சீலை மேல்தொடங்கி கீழ் வரை கிழிக்கப்பட்டது (மத். 27:51). “இது, தேவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான பிரிவு அழிக்கப்பட்டது என்பதை அடையாளப்படுத்துகிறது, ஏனெனில் கிறிஸ்துவினால் எடுத்துக்கொள்ளப்பட்ட பாவ மாம்சம் (இது திரைச்சீலையினால் அடையாளப்படுத்தப்படுகிறது) (ரோ. 8:3) சிலுவையிலறையப்பட்டது (எபி. 10:20). ‘மேல்தொடங்கி கீழ் வரை’ என்ற வார்த்தைகள், திரைச்சீலைக் கிழிக்கப்படுதல் மேலிருந்து தேவன் செய்த செயலாக இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. பாவம் நியாயந்தீர்க்கப்பட்டதாலும் பாவ மாம்சம் சிலுவையிலறையப்பட்டதாலும், தேவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான பிரிவு அகற்றப்பட்டது” (Life-study of Matthew, Message 70, pp. 812–813). அது மட்டுமல்லாமல், கர்த்தராகிய இயேசு சிலுவையில் மரித்தபோது, (சாத்தானின் கலகத்தின் அடித்தளத்தை அடையாளப்படுத்தும்) பூமி அசைக்கப்பட்டது, (சாத்தானின் பூமிக்குரிய ராஜ்யத்தின் அரணை அடையாளப்படுத்தும்) பாறைகள் பிளக்கப்பட்டன (மத். 27:51). பாறைகள் பிளக்கப்படுதல், யாத்திராகமம் 17 இல் உள்ள பதிவை மீண்டும் திரும்பச் சுட்டிக்காட்டவும் செய்தது. வனாந்தரத்தில் இஸ்ரயேல் புத்திரரைப் பின்தொடர்ந்த (கிறிஸ்துவை மாதிரியாகக் காட்டும்) இந்தப் பாறை அடிக்கப்பட்டபோது, தாகத்தைத்-தணிக்கும் தண்ணீரின் ஒரு நதி விடுவிக்கப்பட்டது (யாத். 17:6; 1 கொரி. 10:4). இத்தகைய ஒரு நதி இன்னும் பாய்ந்தோடிக்கொண்டிருக்கிறது அதோடு திருப்திக்கான மனிதனின் உள்ளான தேடலைத் திருப்திப்படுத்தக் கிடைக்கப்பெறுகிறது. இறுதியாக, மனிதனை அதன் பயத்தின் கீழ் கட்டிலும் அடிமைத்தனத்திலும் பிடித்துவைத்திருந்த மரணத்தின் வல்லமை, சிலுவையில் கர்த்தருடைய மரணத்தால் வெல்லப்பட்டு, கீழ்ப்படுத்தப்பட்டு, அகற்றப்பட்டது, இது இறந்திருந்த பரிசுத்தவான்களின் கல்லறைகள் திறக்கப்படுவதாலும், அவர்களது சரீரங்கள் உயிரோடு எழுப்பப்படுவதாலும் காட்டப்படுகிறது (மத். 27:52). சிலுவையில் நமக்காக இத்தகைய ஒரு மரணத்தை-வெல்லும், சாத்தானை-தோற்கடிக்கும், ஜீவனை-விடுவிக்கும் மரணத்தை அநுபவித்தப் பிறகு, கர்த்தராகிய இயேசு தாம் செய்திருக்கிற எல்லாவற்றையும் பிரயோகிக்கவும், ஜீவனாகிய தம்மால் உங்களை நிரப்பவும் ஜீவன்-தரும் ஆவியானவராக உயிர்த்தெழுந்தார். ஆ அல்லேலூயா, என்னே ஒரு மரணம் மற்றும் என்னே ஒரு ஜீவன்!
மிக முக்கியக் காரியங்கள்: நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைப் பற்றிய ஒரு புரிந்துகொள்ளுதல் (II.C.).
பின்புல வாசிப்பு: Life-study of Matthew, Message 70, pp. 808–814; Message 71, pp. 815–817.
REFERENCES: Life-study of Matthew, Messages 70–71; God’s New Testament Economy, Chapter 3, pp. 48–49; Life-study of Luke, Message 52, pp. 454–455; Hymns 1048, 1066.