கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல்

பகுதி 9

✵பாடம் 01 – 09

மதத்தால் கைதுசெய்யப்படுதல்

குறிக்கோள்: மாபெரும் நானே இருக்கிறேனாக, கர்த்தராகிய இயேசு கைதுசெய்யப்படவும், விசாரணைசெய்யப்படவும், மரணத்திற்குள்ளாக்கப்படவும் பாவமுள்ள மனிதர்களின் கைகளில் எவ்வாறு தம்மையே மனமுவந்து ஒப்படைத்தார் என்பதைக் காண்பதற்கு.

பொருட்சுருக்கம்: அவர் தாம் கைதுசெய்யப்படுவதற்கான அனைத்தையும் ஏற்பாடுசெய்திருந்த பிறகு, இயேசு தம்மைக் காட்டிக்கொடுத்திருந்த ஒரு நெருங்கிய கூட்டாளியான யூதாஸ் தலைமையில் முன்னின்று நடத்தப்பட்ட, தம்மைக் கைதுசெய்கிறவர்களின் வருகைக்குத் தயாராவதற்காக கெத்செமனே தோட்டத்திற்குச் சென்றார். அவர் சிருஷ்டிகராக இருந்தபோதிலும்கூட, அவர் தம் சிருஷ்டிகளின் மீட்பிற்காக மரிக்க சிலுவைக்கு நடத்தப்படக்கூடுமாறு, தம் சிருஷ்டிகளால் அவர் தாம் பிணைக்கப்படுவதற்கு அனுமதித்தார். அவர் கைதுசெய்யப்பட்டவுடன், அவரது சீஷர்கள் அனைவரும் அவரை விட்டு ஓடிப்போய், விலகிச்சென்றனர். பேதுரு ஒரு தூரத்தில் பின்தொடர முயன்றான், ஆனால் அவன் இறுதியில் கர்த்தரை முழுவதும் மறுதலித்தான். அவர் யூதாஸால் காட்டிக்கொடுக்கப்பட்டு, தம் சீஷர்களால் கைவிடப்பட்டு, பேதுருவால் மறுதலிக்கப்பட்ட போதிலும்கூட, கர்த்தராகிய இயேசு இத்தகைய ஒரு சூழ்நிலையின் மத்தியில் கண்ணியத்துடனும் அமைதியுடனும் தாம் நடந்துக்கொண்டார். மாபெரும் நானே இருக்கிறேனாகிய அவர் (யோவான் 18:4-6) பாவமுள்ள மனிதர்களின் கைகளில் தம்மையே ஒப்படைத்தார்! தேவன் மனிதனாக ஆகியிருந்தார், மேலும் இப்போது இந்த தேவ-மனிதன் கைதுசெய்யப்படவும், விசாரணைசெய்யப்படவும், மரணத்திற்குள்ளாக்கப்படவும் சித்தமாயிருந்தார். அவர் தப்பிக்க தம் வல்லமையையும் அதிகாரத்தையும் பயன்படுத்தவில்லை, மேலும் அவர் தம்மைக் கைதுசெய்தவர்களுக்கு எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. என்னே ஓர் அற்புதமான இரட்சகர்!

பின்புலம்: பாடங்கள் 2-8 இல் இளம் வாலிபர்களுக்கு எந்தத் தனிப்பட்ட செயலாக்கமும் (பிரயோகமும், பிரயோகித்தலும்) இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களது கர்த்தருடைய பாடுபடுதல் மற்றும் மரணம் பற்றிய அறிவு உத்வேகத்திற்குரியதாயும் தொடக்கூடியதாயும் உள்ளது. மேலும், இது அவர்களது முழு கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் அடித்தளமான அறிவு ஆகும். அதிக பட்சம் நீங்கள், இந்த இளம் வாலிபர்கள் கர்த்தருடைய பாடுகளுடன் ஒன்றித்துக்காண முடியுமாறு, அதாவது கர்த்தர் அனுபவித்தவற்றுடன் அவர்களது அனுபவங்களில் சிலவற்றை ஒப்பிட்டுப் பார்க்க முடியுமாறு  இவ்விதமாய் இந்தப் பாடங்களை நடத்த விரும்பலாம். இரண்டாயிரம் ஆண்டுகளாக, இந்த மரிக்கும் இரட்சகர் மனிதர்களை இரட்சிப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் கொண்டு வந்திருக்கிறார்.

அதிகாரங்கள்: மத்தேயு 26; மாற்கு 14; லூக்கா 22; யோவான் 18.

போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:

இந்த நான்கு சுவிசேஷங்களும், கர்த்தராகிய இயேசு எவ்வாறு மதத்தால் கைது செய்யப்பட்டார் என்பதைப் பற்றிய ஒரு விலாவாரியான பதிவேட்டை நமக்குத் தருகின்றன (மத். 26:47–56; மாற். 14:43-52; லூக். 22:47-62; யோவான் 18:1-11.,எவ்வாறு கர்த்தர் யூதாஸால் காட்டிக் கொடுக்கப்பட்டார் அதோடு தம் சீஷர்கள் அனைவராலும் கைவிடப்பட்டார் என்பதைச் சுட்டிக்காட்டி, ஒவ்வொரு விவரணத்தின் விவரங்களையும் கலந்தாலோசிக்கவும். லூக்கா 22:54–62 இல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி உள்ள பேதுருவின் மறுதலிப்பைப் பரிசீலிக்க சிறிது நேரம் செலவிடுங்கள். எனினும், இந்தப் பாடத்தின் குவிமையப் புள்ளியாக கர்த்தராகிய இயேசு தாமே இருக்க வேண்டும்—அவர் இத்தகைய ஒரு சூழ்நிலையின் மத்தியில் எவ்வாறு கண்ணியத்துடனும் அமைதியுடனும் தாம் நடந்துக்கொண்டார். அவர் மாபெரும் நானே இருக்கிறேனாக இருந்தார் (யோவான் 18:4-6), ஆயினும், அவர் கைதுசெய்யப்படவும், விசாரணைசெய்யப்படவும், மரணத்திற்குள்ளாக்கப்படவும் பாவமுள்ள மனிதர்களின் கைகளில் தம்மையே ஒப்படைக்கச் சித்தமாயிருந்தார்.

I. கெத்செமனே தோட்டத்தில், கர்த்தர் தம்மைக் காட்டிக்கொடுத்த சீஷனாகிய யூதாஸின் உதவியுடன் மதத் தலைவர்களால் இரகசியமாகக் கைதுசெய்யப்பட்டார்—மத். 26:47, 55

A. கர்த்தர் தாம் கைது செய்யப்படக்கூடுமாறு இந்தத் தோட்டத்திற்குச் செல்ல முன்முயற்சி எடுத்தார்—மாற்கு 14:42; யோவான் 18:18

கர்த்தர் கைது செய்யப்படுவதற்காக தோட்டத்திற்குச் சென்றார். அவர் தாம் உண்மையான பஸ்கா ஆட்டுக்குட்டியாக ஏறெடுக்கப்படுவதோடு ஒத்துப்போகும் வகையில் அவர் தாம் கைது செய்யப்படுவதற்காக ஏற்பாடுசெய்து வந்திருந்தார். இதற்காக அவர், கடந்த நான்கு நாட்களின் போது யூத அதிகாரிகளால் அவர் பரீட்சிக்கப்படுதல், அவர் யூதாஸால் காட்டிக்கொடுக்கப்படுதல் உட்பட பல நிகழ்வுகளைத் தூண்டினார்  (யோவான் 13:26-27 ஐ பார்க்கவும்).

B. கர்த்தரைக் கைதுசெய்ய வந்தவர்கள், அவரது சொந்த சீஷர்களில் ஒருவனாகிய யூதாஸால் நடத்தப்பட்டனர்—யோவான் 18:2-3

யூதாஸ் தன்னைப் பின்தொடர்ந்தவர்களுக்கு, கர்த்தர் யார் என்று அவர்கள் எவ்வாறு அறிந்துக்கொள்ளலாம் என்று சுட்டிக்காட்டினான் என்பதையும், எவ்வாறு அவன் கர்த்தரைப் புகழ்ந்து முத்தமிட்டார் என்பதையும், எவ்வாறு கர்த்தர் பதிலளித்தார் என்பதையும் தெரியப்படுத்துங்கள் (மாற். 14:44-46). “யூதாஸ் தன்னைக் காட்டிக்கொடுப்பான் என்பதைக் கர்த்தர் அறிந்திருந்தார் [யோவான் 13:11, 21-27]. அவர் அதைத் தவிர்க்கவில்லை. இது, அவர் பதனிடப்படுவதற்குத் தானாக முன்வந்து தம்மையே ஒப்படைத்தார் என்பதையும் நிரூபிக்கிறது. கர்த்தரை மரணத்திற்குள்ளாக்க கர்த்தருடைய கள்ள சீஷனை சாத்தான் பயன்படுத்தினான், ஆனால் இதைச் செய்வதன் மூலம் அவன், கர்த்தர் பதனிடப்படுவதற்கான வாய்ப்பை அவருக்கு வழங்கினான் என்பதை அவன் அறியவில்லை” (Life-study of John, Message 42, p. 506). “அந்த மக்கள்கூட்டத்தைக் கர்த்தரிடம் வழிநடத்தியது ஓர் அந்நியனாக இருந்திருந்தால் அது அவருக்கு அவ்வளவு வலிநிறைந்ததாக இருந்திருக்காது. ஆனால் அவரைக் கைதுசெய்ய மக்கள்கூட்டத்தாரை வழிநடத்தியவன் மூன்றரை வருடங்களாக அவருக்கு மிக நெருக்கமாக இருந்தவன் ஆவான். மனித ரீதியாகச் சொன்னால், இது கர்த்தராகிய இயேசுவைக் காயப்படுத்தியது” (Life-study of Matthew, Message 69, p. 797).

II. கர்த்தர் தம்மைக் கைதுசெய்ய வந்தவர்களால் தாம் சிறைப்பிடிக்கப்பட அனுமதித்தார்—மத். 26:51-54; லூக். 22:51; யோவான் 18:4-8

அவர் அவர்களை அனுமதித்திருந்தாலன்றி, ஒருவனும் கர்த்தரைக் கைது செய்ய இயல மாட்டான். தேவனுடைய குறிக்கோள் நிறைவேற்றப்பட முடியுமாறு, கர்த்தராகிய இயேசு தாம் இந்த அநீதியுள்ள யூதத் தலைவர்களால் கைது செய்யப்பட மனமுவந்து அனுமதித்தார். அவரது கைது முழுவதும், கர்த்தராகிய இயேசு தாம் மிகவும் கண்ணியத்துடனும் அமைதியுடனும் நடந்துக்கொண்டார்.

A. வேதவாக்கியங்கள் நிறைவேற்றப்படக்கூடுமாறு, கர்த்தர் தாம் சிறைப்பிடிக்கப்பட அனுமதித்தார்—மாற். 14:49

இந்தத் தலைவர்கள் தங்கள் படைவீரர்களுடன் இயேசுவைக் கைது செய்ய வந்தபோது, அவர் வாரத்தின் எந்த நாளிலும் தேவாலயத்தில் இருந்தபோது அவர்கள் அவரை எளிதில் பிடித்திருக்க முடிந்திருக்கையில், இரவில் இரகசியமாக வந்ததற்காக அவர் அவர்களைக் கடிந்துகொண்டார். “[இரட்சகரைப்] பிரியமாக வரவேற்றிருந்து, அவரது பேசுதலால் மகிழ்ச்சியடைந்திருந்த (12:37) மக்களைக் குறித்து அஞ்சிய, தேவனைக் கைவிட்டு தேவனைக் காயப்படுத்தும் எதிர்ப்பாளர்கள், பகல் நேரத்திலோ, ஆலயம் போன்ற ஒரு பொது இடத்திலோ அவரைக் கைதுசெய்யத் துணியவில்லை. அதற்குப் பதிலாக, ஒரு திருடனைக் கைதுசெய்வது போல (வ. 48) தந்திரமாக ஆழ்ந்த இராவில் அவரைக் கைதுசெய்தனர் (லூக். 22:52)” (Life- study of Luke, Message 51, p. 441). மாற்கு 14:49இல் கர்த்தர் அவர்களிடம், “நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே” என்று கூறினார். ஆயினும் அவர், “ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேறவேண்டியதாயிருக்கிறது” என்று கூறி, தாம் சிறைப்பிடிக்கப்பட அனுமதித்தார். தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றுவதன் நிமித்தம் கர்த்தர் இந்த அநியாயமான நடத்துதலுடன் ஒத்துப்போனார் (நடத்துதலைப் பொறுத்துக்கொண்டார்). கர்த்தர் தாம் எதைச் செய்தாலும் அது வேதவாக்கியங்களின் நிறைவேறுதலுக்காகவே இருந்தது என்று அடிக்கடி அறிவித்தார் (லூக். 18:31; 22:37; யோவான் 13:18, முதலியன). பழைய ஏற்பாட்டில் உள்ள பல தீர்க்கதரிசனங்கள், கர்த்தர் இந்த ஒப்பற்ற தேவ ஆட்டுக்குட்டியாக எப்படி, எப்போது மரிக்க வேண்டும் என்பதை முன்னறிவித்தன. தம்மைப் பற்றி எழுதப்பட்ட அனைத்து வேதவாக்கியங்களின் நிறைவேற்றத்திற்காக இந்த விவரங்கள் அனைத்தையும் உருவாக்குவதற்குக் கர்த்தர் உண்மையுள்ளவராக இருந்தார்.

B. கர்த்தர் தாம் சிறைப்பிடிக்கப்படுவது பிதாவின் சித்தத்தின் பாத்திரத்தின் பகுதியாக இருந்ததால், கர்த்தர் அதை அனுமதித்தார்—யோவான் 18:11; மத். 26:53.

கர்த்தர் பிதாவிடம் கேட்டிருக்க முடியும், அப்போது எந்த வகையான படையிடமிருந்தும் அவரைக் காப்பாற்ற பிதா அவருக்குப் பன்னிரண்டு லேகியோன் தேவதூதர்களை அனுப்பியிருப்பார் (மத். 26:53.) எனினும், அவர் தப்பிக்க தம் வல்லமையையும் அதிகாரத்தையும் பயன்படுத்த மாட்டார், மேலும் அவர் தம்மைக் கைதுசெய்தவர்களுக்கு எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. கர்த்தர்  தம் கைது, பிதா தமக்குக் கொடுத்திருந்த பாத்திரத்தின் பகுதியாக இருந்தது என்பதை அடையாளம் கண்டுக்கொண்டார், மேலும் அவர் அதில் பானம்பண்ணச் சித்தமாயிருந்தார் (யோவான் 18:11). இயேசு தாம் சிறைப்பிடிக்கப்படுவது பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காக, அதாவது அவர் எல்லா காணிக்கைகளுக்குமான (பலிகள்) இடமாற்றமாக ஆகுவதற்காக இருந்தது என்பதை அடையாளம் கண்டுக்கொண்டார் (எபி. 10:5–7). அவர் இந்த வழியில் காணிக்கையாக (பலி) ஏறெடுக்கப்படவில்லை எனில், தம்மையே மனிதனுக்குள் பகிர்ந்தளிக்க தேவனுக்கு எந்த வழியும் இருக்காது.

C. அது அவர்களது வேளையாக இருந்ததால், கர்த்தர் தாம் சிறைப்பிடிக்கப்பட அனுமதித்தார்—லூக். 22:53

இந்த நேரத்தில் கர்த்தர் தம்மை யூதர்களின் ராஜாவாக வெளியரங்கமாக்கவில்லை, ஏனெனில் இது இதற்கான இடமோ நேரமோ அல்ல. யூத மக்கள் இந்த நியமிக்கப்பட்ட தலைவர்களால் ஆளப்பட்டனர், மேலும் அவர்கள்தான் அதிகாரத்தில் இருந்தவர்கள் என்பதால், அவர்களது தீர்மானத்தின்படி பிணைக்கப்படுவதற்குக் கர்த்தர் தம்மையே அவர்களது கைகளில் பணிந்தடங்கச் செய்தார். எனவே அது அவர்களது வேளையாக இருந்தது. அவர்களது வேளை இருளின் அதிகாரத்தின் வேளையாக இருந்தது (லூக்கா 22:53), ஏனெனில் அவர்கள் முழுவதும் இருளின் அதிகாரத்தின் கீழ் இருந்தனர், அதாவது, அவர்கள் சாத்தானால் முழுவதும் அபகரிக்கப்பட்டு இருந்தனர்.

D. தாம் சிறைப்பிடிக்கப்படும்படி அனுமதித்த கர்த்தர் இந்த மாபெரும் நானே இருக்கிறேனாக இருந்தார்—யோவான் 18:4-6

அவர்கள் யாரைத் தேடிக்கொண்டிருந்தார்கள் என்று கர்த்தர் கேட்ட போது, “நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம்” என்று படைவீரர்கள் பதிலளித்தனர். இதற்கு இயேசு, “நானே இருக்கிறேன்”என்று பதிலளித்தார் (கிரே.). அவர்கள் இதைக் கேட்ட போது, அவர்கள் பின்னிட்டு, தரையிலே விழவும்கூட செய்தனர். ‘யெகோவா’ என்னும் நாமத்தின் அர்த்தமாகிய ‘நானே இருக்கிறேன்’ என்ற இந்த வார்த்தையைக் கேட்டு அவர்கள் பயந்தனர். அவர்கள் எவரைக் கைதுசெய்ய வந்தனரோ, அவரே யெகோவா தேவனாக இருந்தார் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது….அவர் செய்ய வேண்டியிருந்ததெல்லாம் ஒரே ஒரு வார்த்தை பேசுவதுதான், அப்போது அவரைக் கைப்பற்றியவர்கள் மரித்திருப்பார்கள். அவர் கைப்பற்றப்பட சித்தமாயிருக்கவில்லை எனில், அவர்கள் எப்படி அவரைப் பிடித்திருக்க முடியும்” (Life-study of John, Message 42, p. 507)? மக்கள் சாட்சாத்து தேவனைப் பிணைப்பதற்காக சாட்சாத்து தேவன் மேல் கைகளை வைக்கப் போகின்றார்கள். ஆயினும், அவர்களது சிருஷ்டிகராகிய அவர் அவர்களது நலன்களுக்காகக் காணிக்கையாக ஏறெடுக்கப்படக்கூடுமாறு, அவர் தம் சிருஷ்டிகளால் தாம் பிணைக்கப்பட அனுமதித்தார். அவர் தாம் கைது செய்யப்பட்டபோது பிரதான ஆசாரியனின் வேலைக்காரனின் காதைக் குணப்படுத்துவதைக் கூட அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் தாங்கள் கைது செய்துக்கொண்டிருந்தது யார் என்பதை அவர்கள் நிச்சயமாகவே பரிசீலித்திருக்க வேண்டும். “கைது செய்யப்பட்டவர் சாட்சாத்து தேவனாக, ஒரு மனிதனில் உள்ள தேவனாக இருந்தார். இதன் அர்த்தம், தேவன் தம் சிருஷ்டிகளால் கைது செய்யப்பட்டார், மேலும் ஒரு பொய்மையின் வழியில் கூட கைது செய்யப்பட்டார். நியாயமும் நீதியுமான தேவன் அவர்களை உடனடியாக நியாயந்தீர்த்திருக்க வேண்டாமா? ஆனால் அவர்களை நியாயந்தீர்ப்பதற்குப் பதிலாக, அவர் அவர்களைப் பொறுத்துக்கொண்டார். அவரைப் பின்பற்றுபவர்களுக்கும், அவரைக் கைதுசெய்தவர்களுக்கும் மீட்பை நிறைவேற்றுவதற்காக அவர் கைதுசெய்யப்படுவதை ஏற்றுக்கொண்டார்” (Life-study of Luke​​, Message 51, p. 442).

III. அவர் கைது செய்யப்பட்டபோது, கர்த்தர் தம் சீஷர்கள் அனைவராலும் கைவிடப்பட்டு, கர்த்தருடைய தலையாய (முதன்மையான) சீஷனாகிய பேதுருவால் மறுதலிக்கப்பட்டார்—மத். 26:56, 6975

மாபெரும் நானே இருக்கிறேன் தாம் பாவமுள்ள மனிதர்களால் கைதுசெய்யப்பட்டவும், துஷ்பிரயோகம் செய்யப்படவும் அனுமதித்தது மட்டுமல்லாமல், அவர் தம் சொந்த சீஷர்களால் கைவிடப்படுதலாலும், அவர் மறுதலிக்கப்படுதலாலும் கூட பாடநுபவித்தார். தோட்டத்தில், சீஷர்கள் எவ்வாறு தாங்கள் மரணபரியந்தம் வரை ஒருபோதும் இடறலடையவோ அல்லது கர்த்தரை மறுதலிக்கவோ மாட்டார்கள் என்பதைச் சற்றுமுன்தான் அறிவித்திருந்தனர் (மாற். 14:27-31). இருப்பினும், சோதனை வந்தவுடன், அவர்கள் அனைவரும் அவரை மறுதலித்தனர். என்னே ஒரு துன்பமாக (பாடு) கர்த்தருக்கு இது இருந்திருக்க வேண்டும்.

A. அவர் கைது செய்யப்பட்டபோது, கர்த்தருடைய சீஷர்கள் அனைவரும் அவரை விட்டு, ஓடிப்போனார்கள்—மாற். 14:50

சீஷர்கள் கர்த்தருக்கான தங்கள் உணமைத்தன்மையைப் (உத்தமம்) பற்றிய தங்கள் அறிக்கைகளைச் செயல்படுத்த முற்றிலும் சக்தியற்றவர்களாக இருப்பதாகக் காட்டப்பட்டனர். கர்த்தர் இந்தச் சிலுவையின் மரணத்தால் பாடுபடத் தயாராக இருந்தார், ஆனால் அவரது சீஷர்கள் அவரை அவரது பாடுகளில் பின்பற்ற இன்னும் தயார்ப்படுத்தப்படல்லை. கர்த்தர் தம் எதிரிகளால் துன்புறுத்தப்படுவது என்பது ஒரு காரியம், ஆனால் தம் மிக நெருங்கிய நண்பர்கள் மற்றும் சீஷர்களால் காட்டிக் கொடுக்கப்படுவது அவரை மிகவும் அதிகமாகக் காயப்படுத்தியிருக்க வேண்டும்.

B. அவரது கைதுக்குப் பிறகு, பேதுரு தூரத்தில் பின்தொடர முயன்றான், ஆனால் கர்த்தரைப் பின்பற்றுபவர்களில் ஒருவனாகக் குறிப்பிடப்பட்டபோது, பேதுரு கர்த்தரை முற்றிலும் மறுதலித்தான்—லூக். 22:54-62

அன்று காலையில் ஒரு சேவல் கூவுகிறதற்கு முன்னே பேதுரு கர்த்தரை மூன்றுதரம் மறுதலிப்பான் என்று கர்த்தர் பேதுருவிடம் சொல்லியிருந்தார், ஆனால் பேதுரு தான் அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை ஒருபோதும் செய்யவே மாட்டேன் என்று நம்பிக்கையுறுதியுடன் அறிவித்தான். சீஷர்களில் பேதுருதான், என்ன நடக்கப் போகின்றது என்பதைக் காண பின்தொடர்ந்த இருவரில் பேதுருவும் ஒருவனாக இருந்தான் (மற்றவனாக இருந்தது அநேகமாக யோவான்தான்—யோவான் 18:15 ஐப் பார்க்கவும்). பின்னர், அவன் சில வேலைக்காரர்களுடன் நெருப்பைச் சுற்றி அமர்ந்திருக்கையில், ஒரு வேலைக்காரி கர்த்தருடன் இருந்து வந்திருந்த  ஒருவனாக அவனை அடையாளம் கண்டுகொண்டாள். பேதுரு கர்த்தரைத் தெரியாது என்றுகூட மறுதலித்தான். ஒரு சிறிது நேரம் கழித்து, ஓர் இரண்டாவது நபர் அவனைக் கர்த்தருடைய சீஷர்களில் ஒருவன் என்று குற்றம்சாட்டியபோது, பேதுரு மீண்டும் அதை மறுதலித்தான். சுமார் ஒரு மணி நேரம் கழித்து  ஒரு மூன்றாவது ஆள், பேதுரு கர்த்தருடன் இருந்து வந்திருந்தவனாக இருந்தான் என்று வலியுறுத்தினான். பேதுரு ஒரு மூன்றாம் முறையாகக் கர்த்தரை மறுதலித்தான், அப்போது உடனே ஒரு சேவல் கூவியது. அப்போது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப் பார்த்தார். அது எப்படிப்பட்ட பார்வையாக இருந்துத என்பதை நாம் கற்பனைசெய்து பார்க்க மட்டுமே முடியும். அவர்களது கண்கள் நேருக்குநேர் சந்தித்தபோது, பேதுரு தன்னிடம் கர்த்தர் சொல்லியிருந்ததை நினைவுக்கூர்ந்தான், அப்போது அவன் வெளியே ஓடிச்சென்று, கதறி அழுதான். அதே நேரத்தில், கர்த்தர் தம் எதிர்ப்பாளர்களிடமிருந்து மிகுந்த துன்புறுத்தலால் பாடநுபவித்துக்கொண்டிருந்தார், அவர் தம் சீஷர்களால் மிகுந்த மறுதலிப்பாலும்கூட பாடநுபவித்துக்கொண்டிருந்தார்.

IV. கர்த்தருடைய கைது பற்றிய விவரணம், இத்தகைய ஒரு சூழ்நிலை மத்தியில் கர்த்தருடைய கண்ணியத்தையும் அமைதியையும் சித்தரிக்கிறது.

கைது செய்யப்பட்டுக்கொண்டிருந்தவர், மாபெரும் நானே இருக்கிறேனாக இருந்தார் (யோவான் 18:4-6), ஆயினும் அவர் பாவமுள்ள மனிதர்களின் கைகளில் தம்மையே ஒப்படைத்தார்! தேவன் மனிதனாக ஆகியிருந்தார், மேலும் இப்போது இந்த தேவ-மனிதன் கைதுசெய்யப்படவும், விசாரணைசெய்யப்படவும், மரணத்திற்குள்ளாக்கப்படவும் சித்தமாயிருந்தார். அவர் தப்பிக்க தம் வல்லமையையும் அதிகாரத்தையும் பயன்படுத்தவில்லை, மேலும் அவர் தம்மைக் கைதுசெய்தவர்களுக்கு எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை.  அவரது கைது மற்றும் விசாரணை முழுவதும், கர்த்தர் மிகுந்த கண்ணியத்துடனும் அமைதியுடனும் தாம் நடந்துக்கொண்டார். என்னே ஓர் அற்புதமான இரட்சகர் அவர்!

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: ஒரு நபர் கர்த்தரில் விசுவாசித்திருக்கிற உடனேயே, அவன் தான் ஒரு கிறிஸ்தவன் என்பதை மற்றவர்களிடம் அறிக்கையிடுவது மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு குழந்தையும் பேசுவதன் மூலம் பேசக் கற்றுக்கொள்கிறது. எப்படி பேசுவது என்பதைக் கற்க நாம் காத்திருக்கக்கூடாது. மேலும், வாயினால் அறிக்கையிடுதல் மூலம்தான் முதலில் நாம் இரட்சிக்கப்படுகிறோம் (ரோ. 10:10). ஒவ்வொரு புதிய விசுவாசியும்: தங்கள் நண்பர்கள், வகுப்பு தோழர்கள், அயலவர்கள் மற்றும் உறவினர்களிடம் கர்த்தரை அறிக்கையிடுவதற்கான வாய்ப்புகளைத் தேட வேண்டும். நாம் இரட்சிக்கப்பட்ட உடனேயே கர்த்தரை அறிக்கையிடுவது, நீண்ட காலத்திற்கு நம்மைப் பல பிரச்சனைகளிலிருந்து இரட்சிக்கிறது. நாம் ஒரு கிறிஸ்தவர் என்பது மக்களுக்குத் தெரியாத வரை, அவர்கள் தங்கள் பாவச் செயல்களில் நம்மையும் சேர்த்துக்கொள்ள தொடர்ந்து முயற்சித்துக்கொண்டிருப்பார்கள். நாம் விசுவாசிகள் என்பதை அவர்கள் அறிந்தவுடன், நாம் பல விஷயங்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறோம். நாம் நம் நண்பர்களிடம் கர்த்தரைப் பற்றி பேசாமல் வெறுமனே நம் நடத்தையை மேம்படுத்த வேண்டும் என்று சிலர் நினைப்பது போல் நாமும் நினைப்பது ஒரு தவறு. நாம் கர்த்தருடைய நாமத்தை அறிக்கையிடவில்லை எனில், அவர்கள் நம் நடத்தையில் உள்ள ஒரு மாற்றத்தைக் கர்த்தருடன் இணைத்துப்பார்க்க மாட்டார்கள். மேலும், கர்த்தருடைய நாமத்தை அறிக்கையிடாமல் இருத்தல் என்பது நிஜமாகவே நம் மோசமான நடத்தைக்காக நமக்கு நாமே ஒரு சாக்குப்போக்கை வெறுமனே விட்டுவிடுவதற்குதான் உள்ளது. நாம் ஒரு “பின் கதவை” விட்டுவைத்தால், நாம் தோல்விக்கு நம்மை நாமே அமைத்துக் கொள்கிறோம். இந்தத் தலைப்பு தொடர்பாகக் கூடுதலதாக வாசிக்க, Messages for Building Up New Believers, Chapter 4, “Confessing with the Mouth,” pp. 55–67 (Collected Works of Watchman Nee, v. 48) ஆகியவற்றைப் பார்க்கவும்.

சுவிசேஷ செயலாக்கம்: தேவன் நிஜமானவர் அதோடு அவர் நீதியின்படி அனைவரையும் நியாயந்தீர்க்க வருகின்றார் என்ற உணர்ந்தறிதல் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிறது. மேலும், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் பாவமுள்ளவன் அதோடு தேவனுடைய நீதியின் தரத்தை அடைய இயலாது இருக்கிறான் என்ற உணர்ந்தறிதல் இருக்கிறது. அதனால், இரட்சிப்புக்கு வழியில்லாமல், வருகின்ற நியாயத்தீர்ப்புக்காக மக்கள் பயத்தில் காத்திருக்கின்றனர். அவருக்குத் தேவைப்படும் நேரத்தில், கர்த்தருடன் இருந்த அனைவரும் அவரைக் கைவிட்டனர், ஓர் அநியாயமான கைதையும், தீங்கிழைக்கும் விசாரணையையும், கொடூரமான அடித்தலையும், அவமானகரமான மரணத்தையும் எதிர்கொள்ள அவரைத் தனியாக விட்டுவிட்டார்கள். அந்த இக்கட்டான தருணத்தில், அவர்கள் தங்கள் இரட்சகரை விட்டு விலகினர். நீங்கள் எப்படி? நீங்களும் இவ்வளவு காலம் கர்த்தரை மறுதலித்துக்கொண்டும், மீண்டும் மீண்டும் அவரை விட்டு விலகிச் சென்றுக்கொண்டும் வந்திருக்கிறீர்களா? ஒருவேளை நீங்கள் அவரை நிராகரிக்கும் ஒரு பழக்கத்திற்குள் விழுந்திருக்கலாம். இதுவே உங்களை நோக்கிய கர்த்தருடைய இருதயமாக இருந்திருந்தால் என்ன செய்வது? உண்மையில் எந்த நம்பிக்கையும் இருக்காது! ஆயினும் உள்ளுக்குள் ஆழமாக, நீங்கள் “அவரைத் தள்ளிவிடவும்,” அவரது அழைப்பை மறுக்கவும் முயற்சித்துக்கொண்டு வந்திருந்தாலும்கூட, “ஒரு நாள் நான் நிச்சயமாகவே அவரைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும், ஏனெனில் உள்ளுக்குள் இருக்கும் இந்தப் பரந்த மாயை உணர்வை நிரப்புவதற்கான அதோடு நியாயத்தீர்ப்பின் நீதியுள்ள தண்டனைக்குத் (ஈடுசெய்தல்) தகுதியான என் பாவங்களிலிருந்து என்னை இரட்சிப்பதற்கான ஒரே நம்பிக்கை அவர் மட்டுமே என்பது எனக்குத் தெரியும்” என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறது. பதிலளிக்க வேண்டிய நேரம் இதுவே. கர்த்தர், தம் உத்தமத்தில், உங்களுக்காக ஒரு திட்டவட்டமான மற்றும் விலையுயர்ந்த நிலைப்பாட்டை எடுத்தார்; இப்போது, அவருக்கான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் இதுவே. இன்று, நீங்கள் உண்மையில் ஒரு தேர்வுசெய்தாக வேண்டும்: இந்த முக்கியமான தருணத்தில் நீங்கள் அவரைத் தேர்ந்தெடுக்கப் போகின்றீர்களா அல்லது அவரைக் கைவிடப் போகின்றீர்களா? இந்த விஷயத்தில் உங்களை நோக்கிய அவரது தேர்வு ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது—நீங்கள் அவருக்குத் திறந்துக்கொடுத்து, அவரைப் பெறுவதற்காக அவர் ஏங்குகிறார். உங்கள் தேர்வு என்னவாக இருக்கும்? அவரைத் தேர்ந்தெடுங்கள்!

மிக முக்கியக் காரியங்கள்: நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.).

பின்புல வாசிப்பு: Life-study of John, Message 42, pp. 506–507; Life-study of Matthew, Message 69, p. 797; Life-study of Luke, Message 51, pp. 441–442.

REFERENCES: Life-study of John, Message 42; Life-study of Matthew, Message 69; Life-study of Luke, Message 51; Messages for Building Up New Believers, Chapter 4, “Confessing with the Mouth,” pp. 55–67 (Collected Works of Watchman Nee, v. 48).