கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல்

பகுதி 9

✵பாடம் 01 – 09

கர்த்தரின் சிலுவைமரணம் (9)

குறிக்கோள்: தேவ ஆட்டுக்குட்டியாகவும், வெண்கல சர்ப்பமாகவும், கோதுமை மணியாகவும் கர்த்தருடைய மரணத்தின் உட்கருத்தைக் காண்பதற்கு.

பொருட்சுருக்கம்: இந்த பாடத்தில், தேவ ஆட்டுக்குட்டியாகவும், வெண்கல சர்ப்பமாகவும், கோதுமை மணியாகவும் கர்த்தருடைய மரணத்தின் சாதனைகளை நாம் ஆராய்வோம். தேவ ஆட்டுக்குட்டியாக, கிறிஸ்து உலகத்தின் பாவத்தை நீக்கிப்போட்டார். வெண்கலப் சர்ப்பமாக, அவர் பாவத்தின் உச்சநிலையான ஊற்றாகிய பிசாசுடன், அந்தப் பழைய சர்ப்பத்துடன் இடைபடுவதன் மூலம் பாவநிவாரணக் காணிக்கையின் இன்னோர் அம்சத்தை நிறைவேற்றினார். கோதுமை தானியமாக, கிறிஸ்து தம் நகலாக்கமாகவும் (மறுபிரதி), மறுஉற்பத்தியாகவும் உள்ள பல கோதுமை மணிகளை உற்பத்திசெய்வதற்காக தமக்குள் உள்ளடக்கப்பட்டுள்ள (அடங்கியுள்ள) தெய்வீக மூலக்கூறை விடுவிப்பதற்காக மரித்தார். யோவான் சுவிசேஷத்தில் இயேசு, மனிதன் தெய்வீக ஜீவனை அடைதலுடன் கிறிஸ்துவின் இந்த மூன்று அம்சங்கள் ஒவ்வொன்றையும் தொடர்புபடுத்துகிறார். எனினும், முதல் இரண்டு அம்சங்கள், கிறிஸ்துவின் மீட்பின் சட்டரீதியான அம்சத்துடன் அதிகத் தொடர்புடையவையாக உள்ளன, இந்த சட்டரீதியான அம்சம் கோதுமை மணியாக கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக விடுவிக்கப்பட்ட தெய்வீக ஜீவனை மனிதன் பெறுவதற்கான வழியைத் திறக்கிறது. கிறிஸ்துவின் சட்டரீதியான மீட்பின் நிறைவேற்றத்தின் அடிப்படையில் தெய்வீக ஜீவனில் உள்ள நம் ஜீவாதார இரட்சிப்பை நாம் என்றென்றும் அனுபவித்துமகிழ்வோம்.

பின்புலம்: கர்த்தருடைய மரணத்தின் உட்கருத்தை முழுவதுமாகப் புரிந்துகொள்ள இளம் வாலிபர்களுக்குப் பல ஆண்டுகள் ஆகும், ஆயினும்கூட அவர்களது அறிவு இன்றே தொடங்கலாம். ஒருவேளை நீங்கள் இந்தக் குறிப்புகளை ஊழியம்செய்துவிட்டு, அதன்பின் இளம் வாலிபர்கள் மனப்பாடம் செய்து, அதை ஒப்பிப்பதற்கு நேரம் கொடுக்கலாம். அவர்கள் இந்த நிஜத்திற்குள் நுழைவதற்கு, இது ஒரு வகையான ஆரம்பம்.

அதிகாரங்கள்: யோவான் 1, 3, 12, 19.

போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:

யோவான் சுவிசேஷம், நாம் தேவனை ஜீவனாகப் பெறக்கூடுமாறு கிறிஸ்து வந்தார் என்று வலியுறுத்துகிறது (யோவான் 10:10). யோவான், கர்த்தருடைய மரணம் கூட ஜீவனுக்காக இருந்தது என்பதை நமக்கு வெளிப்படுத்துகிறான். யோவானின் சுவிசேஷத்தில், இயேசு குறிப்பாக தேவ ஆட்டுக்குட்டியாகவும், வெண்கல சர்ப்பமாகவும், கோதுமை மணியாகவும் சித்தரிக்கப்படுகிறார். இவை ஒவ்வொன்றாக கர்த்தருடைய மரணத்தின் விளைவு ஜீவனே ஆகும்.

I. கர்த்தர் நம் சட்டரீதியான மீட்பிற்காக தேவ ஆட்டுக்குட்டியாக மரித்தார்—யோவான் 1:29

இயேசு தேவ ஆட்டுக்குட்டியாக இருந்தார் என்று யோவான் ஸ்நானகன் அறிவித்தபோது யூத மக்கள் ஈர்க்கப்படாமல் இருந்திருக்கலாம் அல்லது ஏமாற்றமடையவும்கூட செய்திருக்கலாம். யாராவது ஒரு பெரிய தலைவராக வர வேண்டும் என்று அவர்கள் விரும்பினர் (ஒப். யோவான் 6:15). யோவான் யாரையாவது சுட்டிக்காட்டி, “நாம் யாருக்காகக் காத்துக்கொண்டு வந்திருக்கிறோமோ அவர் இங்கே இருக்கிறார்! இதோ, யூதா கோத்திரத்தின் மகா சிங்கம்!” என்று கூறுவான் என்பதை அவர்கள் எதிர்நோக்கிக்கொண்டிருந்தனர். ஒரு சின்ன ஆட்டுக்குட்டியாக வந்த ஒருவர், அவர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த விடுதலைசெய்பவராக இருக்க முடியும் என்று தோன்றவில்லை. அவர்களுக்குத் தேவையானவர், தங்கள் புறம்பான சூழ்நிலையிலிருந்து தங்களை இரட்சிக்கும் ஒருவரல்ல; அவர்களுக்குத் தேவையானவர், தங்கள் உள்ளார்ந்த நிலைமையிலிருந்து தங்களைக் இரட்சிக்க முடியக்கூடிய ஒருவராக இருந்தார் என்பதை அவர்கள் உணர்ந்தறியவில்லை.

A. தேவ ஆட்டுக்குட்டியாக, இயேசு உலகத்தின் பாவத்தை எடுத்துப்போட வந்தார்—யோவான் 1:29

மனிதன் விழுந்துபோனது முதற்கொண்டு, பாவம் மனிதனின் ஒப்பற்ற பிரச்சினையாக ஆகியிருந்தது. பாவம் மனித இனத்திற்குள் உட்செலுத்தப்பட்டிருந்தது; பிறப்பிலிருந்தே எல்லா மக்களும் பாவிகளாகக் கட்டமைக்கப்பட்டு இருந்தனர் (ரோ. 5). ஒவ்வொருவரும் எதிர்கொண்ட அதி அடிப்படையான பிரச்சினையோடு—தேவனிடமிருந்து தங்களைப் பிரிக்கும் பிரிவோடு—இடைபட இயேசு வந்தார். பாவம் மற்றும் பாவங்கள் காரணமாக, யாருமே, யூதர்கள் கூட, தேவனைப் பெற முன்வர முடியவில்லை, ஏனெனில் தேவன் நீதியுள்ளவர், அவர் பாவத்தைக் கண்டனம்செய்தாக வேண்டும். தேவ ஆட்டுக்குட்டியாக இயேசு, மனிதனை தேவனிடமிருந்து பிரிக்கும் பாவத்தை நீக்கிப்போட வந்தார்.

B. தேவ ஆட்டுக்குட்டியாக, இயேசு நம் ஒப்பற்ற பதிலீடாக நம் பாவங்களுக்காக மரிக்க வந்தார்

மாம்சமாகுதல் மூலமாக, கிறிஸ்துதம் மீது இரத்தத்தையும் மாம்சத்தையும் தரித்துக்கொண்டார். அவர் தம் மீது ஒரு மனித சரீரத்தைத் தரித்துக்கொண்டதற்கு முதன்மையான காரணம், அவர் நம் பதிலீடாக இருப்பதற்கான தேவ ஆட்டுக்குட்டியாக ஆகமுடிவதற்காகத்தான் இருந்தது. இத்தகைய ஒரு குற்றமற்ற மற்றும் பாவமற்ற காணிக்கையாக, அவர் சிலுவையில் நம் இடத்தில் (நமக்குப் பதிலாக) ஏற்றுக்கொள்ளப்பட்டார். இது, நம் பாவநிவாரண காணிக்கையாக இயேசுவின் மீட்கும் வேலையாக இருந்தது. தேவ ஆட்டுக்குட்டியாக, கிறிஸ்து யாத்திராகமம் பன்னிரண்டில் உள்ள பஸ்காவின் மாதிரியை நிறைவேற்றினார். மேலும், தேவ ஆட்டுக்குட்டியாக அவரே எல்லா காணிக்கைகளின் இடமாற்றமாகவும் முழுமொத்தமாகவும் இருக்கிறார் (எபி. 10:9 மற்றும் footnote 1 ஐ பார்க்கவும்). இயேசுவைத் தவிர, பாவத்திற்கான வேறு காணிக்கை எதுவும் இல்லை (எபி. 10:18-20). மேலும், இந்த ஆட்டுக்குட்டியைக் காணிக்கை செலுத்துபவர்கள் இந்த ஆட்டுக்குட்டியைப் புசிக்கவும் செய்கிறார்கள் (யாத். 12:3–8). இவ்வாறாக, அவருடைய பாவமற்ற, பரிசுத்த சுபாவம் நமக்குள் நுழைந்து, நம் பாவமுள்ள, விழுந்துபோன சுபாவத்தை இடமாற்றுகிறது. நாம் நிஜமாகவே தேவ ஆட்டுக்குட்டியால் பாவத்திலிருந்து இரட்சிக்கப்படுகிறோம்!

C. தேவ ஆட்டுக்குட்டியாக கிறிஸ்துவின் பலியின் மூலமாக, நாம் தேவனுடைய சட்டரீதியான மீட்பையும், தேவனுடைய ஜீவாதார இரட்சிப்பையும் பெறுகிறோம்—ரோ. 5:10

மேலே குறிப்பிட்டுள்ளபடி, கிறிஸ்து தேவ ஆட்டுக்குட்டியாக வந்ததன் இலக்கு, நாம் ஜீவனைப் பெறக்கூடும் என்பதே (யோவான் 10:10). தேவன் கிறிஸ்துவை நம் பாவநிவாரணக் காணிக்கையாக ஏற்றுக்கொண்டதால், இப்போது தேவனிடம் முன்னோக்கி வருவதற்கான தைரியம் நமக்கு இருக்கிறது, ஏனெனில் கிறிஸ்து தேவ ஆட்டுக்குட்டியாக தேவனுடைய நீதியான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளார் (எபி. 10:19). நாம் சட்டரீதியாக மீட்கப்பட்டுள்ளோம்; நாம் தேவனுடைய ஜீவனைப் பெறுவதிலிருந்து தேவன் நம்மை நிராகரிக்க முடியாது. கிறிஸ்து தம்மையே தேவ ஆட்டுக்குட்டியாகக் காணிக்கையாக்கியிருப்பதால், கிறிஸ்துவில் தம்மிடம் முன்னோக்கி வருபவர்களை தேவன் இரட்சித்தாக வேண்டும். கிறிஸ்து தம்மையே தேவ ஆட்டுக்குட்டியாகக் காணிக்கையாக்குதல் என்பது நாம் தேவனுடைய ஜீவாதார இரட்சிப்பை அனுபவித்துமகிழ்வதற்கான நித்திய அடித்தளமாகும். இந்த ஜீவாதார இரட்சிப்பு நம்மைப் பாவத்திலிருந்து இரட்சித்து, நம் அனுபவமகிழ்ச்சிக்காகவும் பங்கேற்பிற்காகவும் தேவன் என்னவாக இருக்கிறாரோ அவை எல்லாவற்றிற்கும் நம்மைக் கொண்டுவருகிறது.

II. நம் மாம்சத்தில் சாத்தானின் தீய சுபாவத்தைத் தீர்த்துக்கட்டுவதற்காகக் கர்த்தர் வெண்கல சர்ப்பமாக மரித்தார்—யோவான் 3:14-16

இயேசு தேவ ஆட்டுக்குட்டியாக இருந்தார் என்று யோவான் கூறுவதைக் கேட்டவர்கள் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மனுஷகுமாரன் ஒரு வெண்கல சர்ப்பமாக உயர்த்தப்பட்டாக வேண்டும் என்று இயேசு நிக்கொதேமுவிடம் சொன்னபோது, அது இன்னும் அதிக ஆச்சரியமானதாக ஒலிந்திருக்க (இருந்திருக்க) வேண்டும். ஓர் ஆட்டுக்குட்டியாக இருப்பது வேறு, ஒரு சர்ப்பமாக இருப்பது வேறு. எனினும், நம் பாவநிவாரண காணிக்கையாகவும், பதிலீடாகவும் இருக்க, கர்த்தர் ஒரு வெண்கல சர்ப்பமாகவும் அதேபோல் ஓர் ஆட்டுக்குட்டியாகவும் இருக்க வேண்டியிருந்தது.

A. மோசே வனாந்தரத்தில் வெண்கல சர்ப்பத்தை உயர்த்தியது போலவே தாமும் உயர்த்தப்படுவார் என்று இயேசு கூறினார்—யோவான் 3:14

கர்த்தர் தாம் மனுஷகுமாரனாக, எண்ணாகமம் இருபத்தொன்றில் குறிப்பிடப்பட்டுள்ள வெண்கல சர்ப்பத்தின் மாதிரியின் நிறைவேற்றமாக இருந்தார் என்று நிக்கொதேமுவிடம் சுட்டிக்காட்டினார். எண்ணாகமத்தின் இந்தப் பகுதியில், இஸ்ரயேல் புத்திரர் விஷப் பாம்புகளால் கடிக்கப்பட்டுக்கொண்டிருந்தனர். தேவன் மோசேக்கு, ஒரு வெண்கல சர்ப்பத்தை வடிவமைத்து அதை ஒரு கம்பத்தின் மேல் உயர்த்தும்படி அறிவுறுத்தினார். அந்த வெண்கல சர்ப்பத்தை நோக்கிப் பார்த்தவர்கள் அனைவரும் பிழைத்தனர். உயர்த்தப்பட்ட இந்தச் சர்ப்பம் ஒரு விஷ சர்ப்பமாக இருக்கவில்லை என்பது உட்கருத்து வாய்ந்தது. இந்தச் சர்ப்பத்திடம் சர்ப்பத்தனமான சுபாவம் இருக்கவில்லை. மாறாக, அது வெண்கலத்தால் ஆனதாக இருந்தது, இது தேவனுடைய நியாயத்தீர்ப்பை அடையாளப்படுத்துகிறது. மேலும், இவ்விதமாய் ஒரு கம்பத்தின் மேல் உயர்த்தப்படுவதும் தேவனுடைய நியாயத்தீர்ப்பைக் குறிக்கிறது. சர்ப்பம் சாத்தானை அடையாளப்படுத்துகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். கிறிஸ்து தாம் சாத்தானின் வடிவில் நியாயந்தீர்க்கப்பட வேண்டியிருந்தது என்று கிறிஸ்து ஏன் கூறுவார்?

  • மனுக்குலம் முழுவதும் சர்ப்பத்தனமாக ஆகியிருக்கிறது, மேலும் சர்ப்பத்தின் கடியால் அனைவரும் மரித்துக்கொண்டிருக்கிறார்கள்—மத். 3:7; 12:34; 23:33; எண். 21:6

சாத்தானின் சுபாவம் வீழ்ச்சியின் மூலமாக மனுக்குலத்திற்குள் நுழைந்து, எல்லா மனிதர்களையும் சர்ப்பங்களாக ஆக்கியது, அல்லது, சர்ப்பத்தனமானவர்களாக ஆக்கியது என்று நாம் கூறக்கூடும் (ஒப். மத். 3:7; 12:34; 23:33). நயநாகரிகமான மற்றும் மதரீதியான பண்பாளனாகிய நிக்கொதேமுவிடம் இயேசு, அவன் ஒரு சர்ப்பமாக இருந்தான் என்று சொல்லிக்கொண்டிருந்தார். நாம் நல்லவர்களாக இருந்தாலும்சரி, கெட்டவர்களாக இருந்தாலும்சரி, நாம் அனைவரும் சர்ப்பங்கள். கர்த்தர் தேவ ஆட்டுக்குட்டியாக உலகத்தின் பாவத்தை நீக்கிப்போட்டார், ஆனால் வெண்கல சர்ப்பமாகிய கிறிஸ்துவின் மூலமாக நாம் தாமே நியாயந்தீர்க்கப்பட்டோம். தேவனுடைய பார்வையில் சர்ப்பங்களாக ஆகியிருந்தவர்கள் என்ற முறையில், நம் மீட்சி ஒரு நியாயத்தீர்ப்பின் மூலமாக மட்டுமே இடம்பெற முடியும். சர்ப்பத்தின் வடிவில் இருந்தும், சர்ப்பத்தின் விஷம் இல்லாத ஒருவர் நம் இடத்தில் (நமக்குப் பதிலாக) நியாயந்தீர்க்கப்படுவது நமக்குத் தேவைப்பட்டது. நம் இடத்தில் (நமக்குப் பதிலாக) மரிக்கும்படி தேவன் தம் குமாரனை அனுப்பிய அளவுக்கு அவர் இந்த விழுந்துபோன, சர்ப்பத்தனமான இனத்தை இவ்வளவாய் நேசித்தார் (யோவான் 3:16). நாம் நியாயந்தீர்க்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அதற்குப் பதிலாக ஒரு பதிலீடானவர் உயர்த்தப்பட்டார், இவரிடம் தம் ஆள்தத்துவத்தில் எந்தப் பாவமும், எந்த விஷமும் இல்லாத போதிலும் இவர் எல்லா நியாயத்தீர்ப்பையும் சுமந்தார் .

  • இயேசு இந்தச் சர்ப்பத்தை அழிப்பதற்காக பாவ மாம்சத்தின் சாயலில் வந்தும்கூட, பாவம் இல்லாமல் இருந்தார்—ரோ. 8:3; எபி. 2:14.

சர்ப்பமாகிய சாத்தானே பாவத்தின் ஊற்று, எனவே சாத்தானும் அதேபோல் பாவமும் அழிக்கப்பட்டாக வேண்டும். தேவ ஆட்டுக்குட்டியாக இயேசுவின் மரணம் பாவத்தோடு இடைபட்டது, அப்படியிருக்க வெண்கல சர்ப்பமாக இயேசுவின் மரணம் பாவத்தின் ஊற்றாகிய சாத்தானோடு இடைபட்டது. ஆதாம் இந்த சர்ப்பத்தால் கடிக்கப்பட்டு, அவனால் விஷமூட்டப்பட்ட போது நாம் ஏதேன் தோட்டத்தில் கடிக்கப்பட்டோம். ஆகவே, பழைய சர்ப்பமாகிய சாத்தானோடு இடைபடும் பொருட்டு, நம் இரட்சகர் வெண்கல சர்ப்பமாக, அதாவது வடிவில் சர்ப்பமாக சிலுவையில் அறையப்படுவது அவசியமானதாக இருந்தது. இந்த சர்ப்பமாக சிலுவையில் அறையப்படுவதன் மூலமாகதான் கர்த்தராகிய இயேசு, பண்டைய சர்ப்பமாகிய பிசாசின் தலையை நசுக்கினார் (ஆதி. 3:15; வெளி. 12:9). இந்த வழியில், அவர் இந்த உலகத்தின் அதிபதியை நியாயந்தீர்த்து (யோவான் 16:11), அவனது உலகமாகிய சாத்தானிய அமைப்புடன் இடைபட்டார். இதனாலேயே இயேசு பாவ மாம்சத்தின் சாயலில், ஆயினும் பாவம் இல்லாத சாயலில் இருக்க வேண்டியதாயிருந்தது (ரோ. 8:3).

B. வெண்கல சர்ப்பமாக உயர்த்தப்பட்ட கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பவர்கள் பிழைப்பார்கள்—எண். 21:8; யோவான் 3:14-15

வனாந்தரத்தில் சர்ப்பங்களால் கடிப்பட்டவர்களுக்கு குணமாக்குதல் தேவைப்படவில்லை, அவர்களுக்கு ஜீவன் தேவைப்பட்டது, ஏனெனில் அவர்கள் தேவைப்பட்டுக்கொண்டிருந்தனர். இது இன்றும் பொருந்தும். சர்ப்பத்தின் விஷத்தின் காரணமாக, ஒட்டுமொத்த மனுக்குலமும் மரித்துக்கொண்டிருக்கிறது. வெண்கல சர்ப்பமாக உயர்த்தப்பட்ட கர்த்தரை நோக்கிப் பார்ப்பவர்கள் அனைவரும் பிழைப்பார்கள். விசுவாசிக்கிற ஒவ்வொருவரும் நித்திய ஜீவனைப் பெறுவதே கர்த்தர் உயர்த்தப்பட்டதன் இலக்காக இருந்தது. வார்த்தையின் இந்தப் பகுதியில், கர்த்தர் தாம் வெண்கல சர்ப்பமாக உயர்த்தப்படுதலை, மறுபடிஜெநிப்பித்தலுடன் தொடர்புப்படுத்துகிறார். கிறிஸ்து வெண்கல சர்ப்பமாக ஆகிவிடுவதன் மூலமாக, சர்ப்பத்தனமாக (சாத்தானின் இனம் மற்றும் சாத்தானின் அதிகரிப்பாக) இருந்தவர்கள் தெய்வீகமாக (தேவனின் இனம் மற்றும் தேவனின் அதிகரிப்பாக) ஆகிவிடுகிறார்கள். மீண்டும், யோவானின் சுவிசேஷம் கிறிஸ்துவின் மரணம் நாம் தேவனை ஜீவனாகப் பெறுவதற்காகவே இருந்தது என்று வெளிப்படுத்துகிறது.

III. தெய்வீக ஜீவன் நமக்குள் உட்பகிரப்படக்கூடுமாறு, அதை விடுவிக்க கர்த்தர் கோதுமை மணியாக மரித்தார்—யோவான் 12:23-24

ஒரு கோதுமை மணியாக அவரது மரணத்துடன் தொடர்புடைய அளவிற்கு, கிறிஸ்துவின் மரணத்தின் எந்த அம்சமும் அவ்வளவாய் மிகவும் தெளிவாகத் தொடர்புடையது அல்ல (யோவான் 12:24). மீண்டும், இந்த வார்த்தை அதைக் கேள்விப்பட்டவர்களின் இயற்கையான கருத்துக்குப் பொருந்தவில்லை. “இந்தக் கட்டத்தில், உலகப்பிரகாரமான கண்ணோட்டத்தின்படி, இயேசு தம் பொற்காலத்தில் இருந்தார்….கர்த்தர் லாசருவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பியிருந்ததால், யூதர்களில் ஒரு திரளான ஜனக்கூட்டம் அவரை மிகவும் உயர்வாக மதித்து, ‘ஓசன்னா, கர்த்தருடைய நாமத்திலே வருகிற இஸ்ரயேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர்’ என்று ஆரவாரம் செய்வதன் மூலம்….அவரை அன்புடன் வரவேற்றனர். மனித ரீதியாகப் பேசினால், இந்தச் சாட்சாத்து மணிநேரமே கர்த்தர் தாம் பூமியில் இருந்தபோது அவருக்கு அதி மகிமையான காலமாக இருந்தது” (​​Life-study of John, Message 26, p. 311).  பஸ்கா பண்டிகைக்காக எருசலேமில் இருந்த கிரேக்கர்கள் கூட இயேசுவை சந்திக்க நாடினர். “நாம் அங்கு இருந்திருந்தால், அல்லது இத்தகைய வரவேற்பு நமக்கு நீட்டிக்கப்பட்டிருந்தால், ‘கர்த்தருக்கு துதி. தேவனை மகிமைப்படுத்தும்படி நான் ஒன்றைச் செய்வதற்கான சமயம் இதுவே’ என்று கூறியிருப்போம். எனினும், கர்த்தராகிய இயேசு பரவசமடையவில்லை. அவர், ‘மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்’ என்று கூறினார்….இதுவே மனித கனத்தின் மகிமையை நோக்கிய அவரது எதிர்வினையாக இருந்தது. ஒரு கோதுமை மணி பெருக்கமடைவதற்கான வழி என்ன? இது வரவேற்கப்படுவதன் மூலமோ அல்லது கனப்படுத்தப்படுவதன் மூலமோ அல்ல, மாறாக மரிக்கும்படி மண்ணில் விழுந்துமடிவதன் மூலம்தான்” (Life-study of John​, Message 26, p. 312).  (தயவுசெய்து, The Fulfillment of the Tabernacle and the Offerings in the Writings of John, Chapter 32, pp. 303–304 ஐயும் வாசிக்கவும்.)

A. கர்த்தராகிய இயேசு மண்ணில் விழுந்து மடிவதற்காக ஒரு கோதுமை மணியாக வந்தார்—யோவான் 12:24

கர்த்தர் தமக்குள் இருந்தது அதிகரிக்கப்படவும் பெருக்கப்படவும் கூடுமாறு, மரிக்க வந்திருந்த ஒரே கோதுமை மணியாக தம்மையே ஒப்பிட்டார். இந்த அதிகரிப்பு மற்றும் பெருக்கம், அவர் இனியும் தனியாக குடியிருக்க மாட்டார் என்பதைக் குறிக்கும். கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் காலம் வரை, கிறிஸ்து தேவனுடைய ஒரே பேறான குமாரனாக இருந்தார். அவரது மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் வழிமுறை மூலமாகக் கிறிஸ்து, ஜீவனிலும் சுபாவத்திலும் தாம் இருக்கும் வண்ணமாகவே உள்ள பல சகோதரர்களிடையே முதற்பேறானவராக ஆனார். கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாக உற்பத்திசெய்யப்பட்ட பல மணிகளாக நாம் கிறிஸ்துவின் மற்உற்பத்தி என்பதற்காகக் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!

B. ஒரு கோதுமை மணியாக அவரது மரணத்தின் மூலமாக, அவரது மனுஷீகத்தின் ஓட்டுக்குள் அடங்கியிருந்த தெய்வீக ஜீவனும் மகிமையும் விடுவிக்கப்பட்டு, அவர் பெருக்கத்தில் மறுஉற்பத்தி செய்யப்பட்டார்.

கிறிஸ்து தாம் மாம்சமான போது தம் மீது தரித்துக்கொண்ட மனுஷீகம், அல்லது மாம்சம் என்று நாம் கூற முடியக்கூடிய விஷயம், அவரது தெய்வீகத்தை மறைத்துவைத்த  ஓர் ஓட்டை உருவாக்கியது. தேவன் தாமே கோதுமை மணியாகிய கிறிஸ்துவில் மறைத்துவைக்கப்பட்டார். தேவனே மகிமை என்பதால், இந்த தெய்வீக மகிமை அவரது மாம்சத்தின் ஓட்டுக்குள் மறைத்துவைக்கப்பட்டது என்றும் நாம் கூறலாம். கிறிஸ்துவில் இருந்த தெய்வீக ஜீவனும் அவருக்குள் மறைத்துவைக்கப்பட்டது. அவரைச் சுற்றி வாழ்ந்த அனைவருக்கும், அவரது தாயாருக்கும் கூட, அவர் யார் என்று ஒருபோதும் நிஜமாகவே தெரியவில்லை. ஒரு விதை மரிப்பதற்கு முன், அதன் உள்ளடக்கங்கள் என்னவென்று நமக்குத் தெரியாது. அவரது தெய்வீக ஜீவனும் மகிமையும் விடுவிக்கப்படுவதற்கும் வெளிக்காட்டப்படுவதற்கும் முடிவதற்கு முன்பாக, அவரது மனுஷீகத்தின் ஓடு உடைக்கப்பட வேண்டியிருந்தது. இதனாலேயே கர்த்தருக்கு மரண பயம் இருக்கவில்லை, ஏனெனில் ஒரு கோதுமை மணி மரணத்தின் மூலமாக மட்டுமே விடுவிக்கப்பட்டு அதிகரிக்கப்படுகிறது. கர்த்தர் தாம் உள்ளடக்கிய தெய்வீக ஐசுவரியங்கள் எல்லாவற்றாலும் நெருக்கப்பட்டதாக உணர்ந்தார், மேலும் சிலுவையில் அவரது “ஞானஸ்நானம்” நிறைவேற்றப்படுமாறு ஏங்கினார் (லூக்கா 12:50). கிறிஸ்துவின் மனுஷீகத்தின் ஓடு சிலுவையில் உடைக்கப்பட்டபோது, இந்த தெய்வீக ஜீவன் இறுதியாக அவருக்குள் இருந்து விடுவிக்கப்பட்டது, இதனால் அவர் உயிர்த்தெழுதலில் தம் விசுவாசிகளுக்குள் அதை உட்பகிர முடியும். இதன் மூலமாக, பூமியின்மேல் ஓர் அக்கினி போடப்பட்டது, அது இன்றும் பூமியில் இன்னும் பரவுகின்றது (லூக்கா 12:49).

C. பெருக்கப்பட்ட கோதுமை மணிகள் என்பது தம் மகிமையின் வெளியாக்கத்திற்கான தேவனுடைய பல குமாரர்களும், கிறிஸ்துவின் அதிகரிப்பும் ஆகும்—எபி. 2:10

முதல் கோதுமை மணியின் ஜீவனைக் கொண்டிருக்கும் பல மணிகளாக, நாம் இந்த முதல் கோதுமை மணியை அவரது சரியான மறுஉற்பத்தியாக வெளிக்காட்டுகிறோம். நாம் கிறிஸ்துவின் மகிமைப்படுத்தலுக்கான அவரது வெளியாக்கத்தின் பெருக்கமாக இருக்கிறோம், இது தம் பல குமாரர்களில் பிதாவின் மகிமைப்படுத்தலாகவும் இருக்கிறது.

D. சபையாக இருப்பதற்கு இந்தப் பல மணிகள் ஒரே அப்பமாக ஒன்றுசேர்த்து இழைந்திணைக்கப்படுகின்றன—1 கொரி. 10:17; யோவான் 12:24 மற்றும் footnote 1

நாம் கர்த்தருடைய பந்திக்காகக் கூடிவரும் போது, நாம் பங்குபெறும் அப்பம் கிறிஸ்துவின் பரம்புதிரான சரீரத்தின் ஒரு சின்னம் ஆகும். கர்த்தர் கோதுமை மணியாக தம் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக நமக்கு உணவானார். நாம் இதை மீண்டும் வலியுறுத்தியாக வேண்டும்—அவரது மரணம் ஜீவனுக்காக இருந்தது! இந்த ஒரே கோதுமை மணி பல மணிகளாகப் பெருக்கப்பட்டது, மேலும் இந்தப் பல கோதுமை மணிகள் ஒன்றாக ஒன்றுசேர்த்து இழைந்திணைக்கப்பட்டுவிட்டன, இந்த ஒரே அப்பம் தம் அதிகரிப்பாகவும்,  பெரிதாக்கமாகவும் உள்ள கிறிஸ்துவின் சரீரமே ஆகும். கிறிஸ்துவின் சரீரமாக சபை வெறுமனே கிறிஸ்துவின் பெருக்கமாகவும் மறுஉற்பத்தியாகவும் இருக்கிறது. இது கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாக முற்றிலும் அவரிலிருந்து வெளிவந்த ஒன்று ஆகும்.

E. நாம் அனைவரும் ஜீவநிரப்பீடு மற்றும் ஜீவஉற்பத்திசெய்தலுக்கான கோதுமை மணிகளாக ஆகியிருக்கிறோம்—யோவான் 12:24

நாம் ஒரு பாவநிவாரண காணிக்கையாக (பலியாக) மரிப்பதற்கு நாம் தேவ ஆட்டுக்குட்டியாகவோ அல்லது வெண்கல சர்ப்பமாகவோ இருக்க முடியாது என்றாலும், இந்த ஒப்பற்ற கோதுமை மணியிலிருந்து உற்பத்திசெய்யப்பட்ட கோதுமை மணிகளாக நாம் மற்றவர்களுக்கு உணவாக ஆகுவதற்கு முடியும். பல மணிகளாக, நாம் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் உற்பத்திசெய்யப்பட்ட “அதிகக் கனியாக” இருக்கிறோம். பல மணிகளாக, நாமே அவரது நகலாக்கம் (மறுபிரதி). ஆகையால், நமக்குள் இருக்கும் ஜீவன் விடுவிக்கப்பட்டு, கிறிஸ்துவின் கூடுதலான பெருக்கத்திற்காகவும் அதிகரிப்பிற்காகவும் மற்றவர்களுக்கு ஒரு நிரப்பீடாக ஆகிவிடக்கூடுமாறு நாமும் மரணத்திற்குள்ளாக்கப்பட நம்மையே அளிக்க வேண்டும்.

IV. சிலுவையில் கர்த்தருடைய விலாப் பக்கம் குத்தப்பட்டது, அப்போது இரத்தமும் தண்ணீரும் பாய்ந்தது—யோவான் 19:34

சிலுவையில் கர்த்தருடைய மரணம் தேவனுடைய சட்டரீதியான மீட்பு, தேவனுடைய ஜீவாதார இரட்சிப்பு ஆகிய இரண்டையும் நிறைவேற்றியது. நாம் அவரை ஜீவனாகப் பெற்று (யோவான் 3:14-15; 1:12-13, 29), அவரது ஜீவாதார இரட்சிப்பை அனுபவித்துமகிழக்கூடுமாறு அவரது சட்டரீதியான மீட்பு உள்ளது. கர்த்தருடைய குத்துண்ட விலாப் பக்கத்திலிருந்து வெளிப்பட்ட இரத்தத்தையும் தண்ணீரையும் சாட்சியாகக் கண்டு, அதைக் குறித்து சாட்சிப்பகிர்ந்த சீஷனாக யோவான் இருந்தான் (யோவான் 19:34). இரத்தம் மீட்புக்காக இருந்தது; தண்ணீர் ஜீவனின் உட்பகிர்தலுக்காக இருந்தது. கர்த்தரை ஜீவனாகப் பெறுவதற்கான சட்டரீதியான நிலையும் உரிமையும் நமக்கு இருக்கக்கூடுமாறு நம்மை மீட்கவும், எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஊற்றாக இருந்தவனை அழிக்கவும் கர்த்தர் சிலுவையில் மரித்தார். கர்த்தர் இந்த தெய்வீக ஜீவனை தம் உயிர்த்தெழுதலில் நமக்கு உட்பகிரக்கூடுமாறு, இந்த தெய்வீக ஜீவனை விடுவிக்கவும் சிலுவையில் மரித்தார். இது அற்புதம் இல்லையா? “தேவ ஆட்டுக்குட்டியானவர் நம் பாவத்தை நீக்கிப்போட்டார், வெண்கல சர்ப்பத்தினால் மாதிரியாகக் காட்டப்பட்டவர் பழைய சர்ப்பமாகிய சாத்தானை அழித்தார், மேலும் கோதுமை மணியானவர் இந்த தெய்வீக ஜீவனை விடுவித்தார். அல்லேலூயா, பாவம் நீக்கிப்போடப்பட்டிருக்கிறது, சாத்தான் அழிக்கப்பட்டிருக்கிறான், மேலும் இந்த தெய்வீக ஜீவன் விடுவிக்கப்பட்டிருக்கிறது” (Life-study of Luke​, Message 70, p. 596)!

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: இந்தப் பிரபஞ்சத்தில் மூன்று சாரார்கள்—தேவன், சாத்தான் மற்றும் மனிதன்—உள்ளனர் என்பதை இளம் வாலிபர்களுக்குக் காட்ட இந்தப் பாடம் பயன்படுத்தப்பட முடியும். கர்த்தராகிய இயேசு மனிதனை மீட்டுத்திருப்பும்படி உலகத்தின் பாவத்தை நீக்கிப்போடுவதற்கு தேவ ஆட்டுக்குட்டியாக சிலுவையில் மரித்தார் (யோவான் 1:29). அவர் சாத்தானை அழிக்க வெண்கல சர்ப்பமாகவும் சிலுவையில் மரித்தார் (யோவான் 3:14). கடைசியாக அவர், நாம் மறுபடிஜெநிப்பிக்கப்பட முடியுமாறு, அவரது மனுஷீகத்தின் ஓட்டுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் தம் தெய்வீக ஜீவனை விடுவிப்பதன் மூலம் தேவனுடைய குறிக்கோளை நிறைவேற்ற கோதுமை மணியாக மரித்தார் (யோவான் 12:24). இந்தப் பாடம், தேவனுடைய முழு இரட்சிப்பு என்ற ஒரு பாடப் புத்தகத்தில், “மனிதனின் வீழ்ச்சி” என்ற தலைப்பிலான ஆறாவது பாடத்தைப் போலவே அப்படியே வழங்கப்படலாம். அங்கு மனிதனுக்கு இரண்டு பிரச்சனைகள் இருப்பதை நாம் காண்கிறோம், ஒன்று புறம்சார்ந்தது, பாவத்தின் காரணமாகவும், மற்றொன்று அகம்சார்ந்தது, நம் சுபாவத்தின் காரணமாகவும் இருக்கிறது. இதைப் பற்றிய ஓர் உதாரணம் உள்ளது—தன் பெற்றோருக்குக் கீழ்ப்படியாமல், சிறிது விஷத்தைக் குடித்த ஒரு குழந்தை. இது இரண்டு பிரச்சினைகளை விளைவித்தது: கீழ்ப்படியாமை பெற்றோருக்கு எதிரான ஒரு குற்றத்தை விளைவித்தது, மேலும் விஷத்தை உட்கொள்ளுதல் ஒரு மருத்துவ அவசரநிலையை விளைவித்தது. மனிதன் கீழ்ப்படியாத குழந்தையைப் போன்றவன். ஏதேன் தோட்டத்தில், அவன் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போனது மட்டுமல்லாமல், இந்தப் பாவமுள்ள சுபாவத்தை உட்கொள்ளவும் செய்தான். கிறிஸ்து தேவ ஆட்டுக்குட்டியாக மரித்தல், நம் பாவத்தின் புறம்சார்ந்த அம்சத்தைத் தீர்க்கிறது (யோவான் 1:29). கிறிஸ்து கோதுமை மணியாக மரித்தல், நம் சுபாவத்தின் அகம்சார்ந்த அம்சத்தைத் தீர்க்கிறது (யோவான் 12:24). இறுதியாக, கிறிஸ்து வெண்கல சர்ப்பமாக தேவனுடைய எதிரியை அழிக்கிறார் (யோவான் 3:14). கிறிஸ்துவின் இந்த அற்புதமான அம்சங்களைப் புரிந்துகொள்வதற்கும் அனுபவித்துமகிழ்வதற்கும் மிகவும் இளமையாக இல்லாத, உயர்நிலைப்பள்ளியில் பயிலும் நம் இளம் வாலிபர்களுக்குப் போதிக்கப்பட வேண்டிய, கிறிஸ்து தொடர்பான வேதாகமத்தின் சில அற்புதமான “உண்மைகள்” இவைகளே. இந்த மூன்று விஷயங்களை வலுப்படுத்தவும் உறுதிப்படுத்தவும், உரைவிளக்கப் பாடத்திலிருந்து சில குறிப்புகளைப் பயன்படுத்தவும்.

சுவிசேஷ செயலாக்கம்: தேவனுக்குத் தம் குறிக்கோளுக்காக மனிதன் தேவைப்படுவது மட்டுமல்லாமல், தேவன் மனிதனை நேசிக்கவும் செய்கிறார். அவர் மனிதனை நேசிப்பதால், அவர் தம் நீதியை திருப்திப்படுத்தவும், வீழ்ச்சியின் ஒரு விளைவாகிய பாவத்தின் ஒவ்வொரு தடயத்தையும் முழுமையாக அகற்றவும் செய்யக்கூடிய இத்தகைய ஒரு வழியில் மனிதனை இரட்சிக்க உள்ளே வந்தார். “ஆதாம் பாவம் செய்தபோது, அவன் மரித்திருக்க வேண்டும் என்று பழைய ஏற்பாட்டில் நாம் காண்கிறோம். ஆனால் தேவன் அவனுக்காக ஓர் ஆட்டுக்குட்டியைக் கொன்று, அவனுடைய நிர்வாணத்தை மூடுவதற்கு ஆட்டுக்குட்டியின் தோலில் இருந்து செய்யப்பட்ட ஆடைகளை அவனுக்கு உடுத்தினார்….மனிதனுக்கான பதிலீடாக இர உக்க, மனிதனின் பாவங்களுக்காக தன் இரத்தத்தைச் சிந்தும்படி இந்த ஆட்டுக்குட்டியை தேவன் பயன்படுத்தினார்; இவ்வாறு இந்த ஆட்டுக்குட்டி, மனிதன் தன்னை தேவனுக்கு முன்பாக மூடிக்கொள்வதற்கான ஆடையாக ஆயிற்று. அப்போதிருந்து, எல்லா தலைமுறைகளிலும் மனிதன் ஆட்டுக்குட்டி மூலமாக மட்டுமே தேவனுக்கு முன்பாக வர முடிந்தது. நம் பாவங்களுக்காக ஓர் ஆட்டுக்குட்டியின் இரத்தம் சிந்துதல் மூலமாகத மட்டுமே நாம் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட முடியும்” (Gospel Outlines, Subject Ninety-eight, “The Lamb of God,” p. 204). புதிய ஏற்பாட்டில், தேவனுடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு தம் ஊழியத்தைத் தொடங்கியபோது யோவான் ஸ்நானகன் அவரை, “உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டி!” என்று அறிமுகப்படுத்தினான் (யோவான் 1:29). இதைக் கேள்விப்பட்ட அனைவரும் ஆட்டுக்குட்டியின்—அதாவது பழைய ஏற்பாடு முழுவதும் செலுத்தப்படும் பாவம்-மூடும் பலியின்—உட்கருத்தை அறிந்திருந்தனர். ஆனால் உலகத்தின் பாவத்தை நீக்கிப்போட உலகத்தோற்றம் முதல் தேவனால் ஆயத்தம்பண்ணப்பட்ட தேவ   ஆட்டுக்குட்டியாக இப்போது தேவனுடைய குமாரன் (1 பேது. 1:19-20; வெளி. 13:8)—உங்களுக்கு இப்போது முன்வைக்கப்படுவதைப் போலவே, அவர் அவர்களுக்கு முன்வைக்கப்பட்டுக்கொண்டிருந்தார். இந்த விலையேறப்பெற்றவர், நம் சகலப் பாவங்களையும் சுமக்கவும், நீக்கிப்போடவும் நம் பதிலீடாக சிலுவையில் அடிக்கப்பட்டார். “அவர் இத்தகைய ஒரு வழியில் மனிதனின் பாவங்களைச் சுமந்து, நீக்கிப்போட்டதால், அவர் சிந்திய இரத்தம் இன்று மனிதனின் பாவங்களைக் கழுவவும், மனிதனுக்கும் தேவனுக்கும் இடையிலான பிரச்சினையைத் தீர்க்கவும் முடிகிறது” (Gospel Outlines, Subject Ninety-eight, “The Lamb of God,” p. 205). இத்தகைய ஓர் இரட்சிப்பைப் பெற நாம் என்ன செய்தாக வேண்டும்? அறிக்கையிட்டு, மனந்திரும்பி, பெற்றுக்கொள். தேவ ஆட்டுக்குட்டியாக இயேசு உங்கள் பாவங்களுக்காக மரித்தார் என்பதை அறிக்கையிடு. நீங்கள் அவருக்கு முன்பாக உங்கள் பாவங்களைக் குறித்து மனந்திரும்புமாறு அவரது பிரகாசித்தலுக்குத் திறந்துக்கொடுக்கவும். பின்னர், இந்த அற்புதமான தேவ ஆட்டுக்குட்டியை உங்கள் இரட்சகராகப் பெற்றுக்கொள்ளுங்கள், அவர் உங்களுக்குத் தேவைப்படுகிறார் அதோடு உங்களை நேசிக்கிறார்.

மிக முக்கியக் காரியங்கள்: நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.).

பின்புல வாசிப்பு: Life-study of John, Message 4, pp. 44–45, Message 9, pp. 110–115; Message 26, pp. 309–321; The Fulfillment of the Tabernacle and the Offerings in the Writings of John, Chapter 32, pp. 303–304.

REFERENCES: Life-study of Genesis, Message 20, pp. 257–261; Message 21, pp. 279–280; Life-study of John, Message 4, pp. 44–45; Message 9, pp. 110–115; Message 26, pp. 309–321; The Fulfillment of the Tabernacle and the Offerings in the Writings of John, Chapter 1, pp. 16–17; Chapter 4, p. 42; Chapter 7; Chapter 9, pp. 91–92; Chapter 10, pp. 99–103; Chapter 11, pp. 114–115; Chapter 32, pp. 303–307; The Issue of Christ Being Glorified by the Father with the Divine Glory, Chapter 1; Chapter 2, pp. 13–16; Chapter 3, pp. 21–22; John 12:24, footnote 1; Life-study of Luke, Message 70, p. 596; Gospel Outlines, Subject Ninety-eight, “The Lamb of God.