கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல்

பகுதி 9

✵பாடம் 01 – 09

பரீட்சிக்கப்பட்டு, பரிசோதிக்கப்படுதல்

குறிக்கோள் : கர்த்தராகிய இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, அவர் தேவ ஆட்டுக்குட்டியானவராக ஏறெடுக்கப்படுவதற்குப் பாத்திரராக இருந்தார் என்பதை நிரூபிக்க அவர் பரீட்சிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டார் என்பதைக் காண்பதற்கு.

பொருட்சுருக்கம் : கர்த்தராகிய இயேசு கடைசிமுறை எருசலேமுக்கு வந்தபோது, அவர் வேலைசெய்ய வரவில்லை, மாறாக தம்மை மரணத்திற்குள்ளாக்கப் போகிறவர்களால் பரீட்சிக்கப்படுவதற்கும், பரிசோதிக்கப்படுவதற்கும் தம்மையே ஒப்புக்கொடுக்க வந்தார். யாத்திராகமம் பன்னிரண்டின்படி, பஸ்கா ஆட்டுக்குட்டி பலியிடப்பட முடிவதற்கு முன், அது முழுமையாகப் பரிசோதிக்கப்பட வேண்டியிருந்தது. நிஜமான பஸ்கா ஆட்டுக்குட்டியாக, கிறிஸ்து பல நாட்களாகப் பரிசோதிக்கப்பட்டார். அவர் தம் அதிகாரம் தொடர்பாகப் பிரதான ஆசாரியர்களாலும், மூப்பர்களாலும் (மத். 21:23-32), சீசருக்குக் கப்பம் கட்டுவது தொடர்பாக பரிசேயரின் சீஷர்களாலும், ஏரோதியர்களாலும் (மத். 22:15–22), உயிர்த்தெழுதல் தொடர்பாக சதுசேயர்களாலும் (மத். 22:23–33), நியாயப்பிரமாணத்திலுள்ள மாபெரும் கட்டளை தொடர்பாக ஒரு வழக்கறிஞனாலும் (மத். 22:34-40)  பரீட்சிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டார். அப்போது அவர் கிறிஸ்துவைப் பற்றிய கேள்வியால் இந்தப் பரிசோதனையாளர்கள் அனைவரையும் வாயடைத்தார் (மத். 22:41–46). இந்தப் பரீட்சைகள் மற்றும் பரிசோதனைகள், கிறிஸ்துவே நம் மீட்பிற்காகச் சிலுவையில் ஏறெடுக்கப்பட முடியக்கூடியவராகிய இந்தப் பரிபூரணமான தேவ ஆட்டுக்குட்டியாக இருந்தார் என்பதை நிரூபித்தன.

பின்புலம்: இந்தப் பாடத்தில் உள்ள வசனங்கள், கர்த்தர் எவ்வாறு பரிசோதிக்கப்பட்டார் என்பதைக் காட்டுகின்றன. பின்னர் இந்த வசனங்கள், ஒவ்வோர் இளம் வாலிபனும் பதிலளித்தாக வேண்டிய ஒரு கேள்வியுடன் முடிவடைகின்றன: “கிறிஸ்துவானவரைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” (மத். 22:42). பேதுரு, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று கூறுவதன் மூலம் மத்தேயு 16:16 இல் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க இயன்றது. ஆனால் நாம் அதே வழியில் பதிலளிக்க இயல்வது என்பது அவரைப் பற்றிய ஒரு தனிப்பட்ட வெளிப்பாட்டை நாம் பார்த்திருக்கிறோமா என்பதைப் பொறுத்தது (மத்தேயு 16:17). கிறிஸ்துவைப் பற்றிய ஒரு பொதுவான, புறம்பான உணர்ந்தறிதலை மட்டுமே கொண்டிருக்கக்கூடிய இளம் வாலிபர்கள் அவரைப் பற்றிய ஒரு தனிப்பட்ட வெளிப்பாட்டைப் பெற ஜெபிக்க வேண்டும். இந்தப் பாடம், ஒவ்வோர் இளம் வாலிபரையும்: “கிறிஸ்துவானவரைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்ற இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

அதிகாரங்கள்: மத்தேயு 21–22.

போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:

இந்தப் பாடத்தில், கர்த்தர் தாம் தேவ ஆட்டுக்குட்டியாக ஏறெடுக்கப்படுவதற்கு முன், யூதர்களின் பிரதிநிதிகளால் எவ்வாறு பரிசோதிக்கப்பட்டார் என்பதையும், கர்த்தர் எப்படி ஒவ்வொரு பரீட்சையிலும் தேர்ச்சியடைந்தார் என்பதையும் நாம் பார்ப்போம். அவர்கள் பரீட்சித்துக்கொண்டிருந்தது தேவன் தாமே என்பதை ஆரம்பத்தில் நினைவில் கொள்வது நல்லது. “பரிசோதிக்கப்பட்டுக்கொண்டிருந்தவர் தேவ-மனிதனாக இருந்தார் என்ற உண்மையால் நமக்கு ஆழமாகக் கருத்துப்பதிவு ஏற்படுத்தப்பட வேண்டும். சர்வத்தையும் சிருஷ்டித்த இந்தச் சாட்சாத்து சிருஷ்டிகர் தம் சிருஷ்டிகளால் சூழப்பட்டு, அவர்களால் ஒரு நயவஞ்சகமான மற்றும் அவமதிக்கும் விதத்தில் பரிசோதிக்கப்பட்டார். ஆயினும்கூட, அவர் பொறுமையாக இருந்தார், சிறிதும் கோபப்படவில்லை. அவர் அவர்களுக்கு நேர்த்தியாகவும் ஞானமாகவும் பதிலளித்தார் (Life-study of Luke​, Message 46, p. 396).

I. பூமியில் தம் கடைசி வாரத்தின் போது, கர்த்தர் தாம் பஸ்கா ஆட்டுக்குட்டியாக மரிக்கக்கூடுமாறு, அவர் இந்தப் பரீட்சித்தலுக்குத் தம்மையே ஒப்புக்கொடுத்தார்—1 கொரி. 5:7; யாத். 12:5; மத். 21:2322:46

பஸ்காவுக்காகப் பலியிடப்படுவதற்குத் தகுதிபெற, ஓர் ஆட்டுக்குட்டி எந்தப் பழுதும் இல்லாமல், பரிபூரணமாக இருக்க வேண்டியிருந்தது (யாத். 12:5). யாத்திராகமம் பன்னிரண்டின்படி, பஸ்கா ஆட்டுக்குட்டி மாதத்தின் பத்தாம் தேதியில் தெரிந்துகொள்ளப்படக்கடவது, ஆனால் அது பதினான்காம் தேதி சாய்ங்காலம் (அந்தி) வரை கொல்லப்படவில்லை. அந்த நான்கு நாட்களின் போது இந்த ஆட்டுக்குட்டி எந்தக் குறைபாடும் இன்றி இருந்ததா என்பதை உறுதிப்படுத்த பரிசோதிக்கப்பட்டது, ஏனெனில் குறைபாடுள்ளதாகக் காணப்படும் எந்த ஆட்டுக்குட்டியும் தேவனால் நிராகரிக்கப்பட்டிருக்கும்; அதன் இரத்தம் வீரியமற்றதாக இருந்திருக்கும். கர்த்தர் தாம் இந்த மாதிரியை நிறைவேற்றக்கூடுமாறு, பஸ்காவுக்கு முந்தைய வாரம் எருசலேமுக்கு வருவதற்குத் வேண்டுமென்றே தம்மை முன் நிறுத்தினார் (ஒப். யோவான் 12:1). அவர் சிலுவையில் அறையப்பட முடிவதற்கு முன்பு, கர்த்தர் தம்மைக் குறித்து எழுதப்பட்ட வேதவாக்கியங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டியிருந்தது. ஆகையால், அவர் தம்மை எருசலேமில் உள்ள அனைவருக்கும், குறிப்பாக யூதர்கள் மத்தியில் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அவர்களது ஆய்வுக்காக ஒப்புக்கொடுத்தார்.

கர்த்தர் எருசலேமுக்கு வந்தபோது, யூதத் தலைவர்கள் அவரைப் பரீட்சிப்பதற்கான வழிகளைத் தயாரிக்கத் தொடங்கினர். “உண்மையில் இந்தப் பரீட்சை அவர்களால் தொடங்கப்படவில்லை; இது [இரட்சகரால்] தொடங்கப்பட்டது. தீர்க்கதரிசனத்தின்படி, அவர் தாம் தேவ ஆட்டுக்குட்டியாக பஸ்காவின் போது கொல்லப்பட வேண்டியிருந்தது என்பதை அறிந்திருந்தார். பழைய ஏற்பாட்டில் உள்ள தீர்க்கதரிசனங்கள், அவர் மரணத்திற்குள்ளாக்கப்படப் போகும் காலம், இடம் ஆகிய இரண்டையும் குறிப்பிட்டன (Life-study of Luke​, Message 45, pp. 387–388). (இந்தக் குறிப்பைப் பற்றிய கூடுதல் விவரங்கள் Life-study of Luke, Message 45, pp. 388–389 இல் காணப்படலாம்.)

A. கர்த்தர் மனிதனுடைய பாவங்களுக்காக மரிக்க தேவ ஆட்டுக்குட்டியாக வந்தார்—யோவான் 1:29

B.தேவனுடைய ஆட்டுக்குட்டியாக, கர்த்தர் ஒரு பாவமில்லாத வாழ்க்கையை வாழ்ந்தார், அதனால் அவர் நம் சார்பாக இந்த ஏற்புடைய பலியாக இருக்கக்கூடும்யோவான் 1:29; எபி. 4:15; 9:26; எபே. 5:2.

C. ஏறெடுக்கப்படுவதற்கு முன், கர்த்தர் தாம் தேவ ஆட்டுக்குட்டியாக இருப்பதற்குத் தகுதியானவராக இருந்தார் என்பதை நிரூபிக்க யூதத் தலைவர்களால் பரீட்சிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டார்மத். 21:2322:46

II. யூதத் தலைவர்களால் அவர் பரிசோதிக்கப்படும்போது கர்த்தர் ஒவ்வொரு பரீட்சையிலும் தேர்ச்சி பெற்றார், மேலும் பரிபூரணராகவும், பழுதற்றவராகவும் இருப்பதாகக் காணப்பட்டார்—மத். 21:27; 22:22, 33, 3740, 46

அவர் பரீட்சிக்கப்படும் போது, கர்த்தர் நான்கு திசைகளில் இருந்து விசாரிக்கப்பட்டார்: அதிகாரம் குறித்தும் (அவரது அதிகாரத்தின் ஊற்றைப் பற்றி), அரசியல் குறித்தும் (சீசருக்குக் கப்பம் கட்டுவது பற்றி), உயிர்த்தெழுதலில் நம்பிக்கை குறித்தும், நியாயப்பிரமாணம் குறித்தும் (எந்தக் கட்டளை அதி மாபெரியதாக இருந்தது என்பது பற்றி.) ஓர் ஆட்டுக்குட்டி ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் பரிசோதிக்கப்பட்டிருப்பதைப் போலவே, இயேசுவும் அவ்வாறு பரிசோதிக்கப்பட்டார். எந்தத் திசையிலிருந்தும் எந்தப் பரிசோதனையாளராலும் அவரில் எந்தக் கோளாறும் கண்டுபிடிக்கப்பட முடியவில்லை. அவர்களது பரீட்சைகள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றதன் மூலம், பஸ்கா ஆட்டுக்குட்டியாக இருக்கத் தகுதிபெற்ற ஒப்பற்றவராக இருப்பதாகக் கர்த்தர் தம்மையே காட்டினார். எனினும், கர்த்தர் யூதத் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட நாடிக்கொண்டிருக்கவில்லை. கர்த்தர் நம் பலியாக ஏறெடுக்கப்படுவதற்கான இந்த வழிவகையாக, தம்மைக் குறித்த தலைவர்களின் எதிர்ப்பையும், நிராகரிப்பையும் பயன்படுத்தினார்.

A. அவர் தம் அதிகாரம் குறித்து பிரதான ஆசாரியர்களாலும், மூப்பர்களாலும் பரிசோதிக்கப்பட்டார்—மத். 21:2322:14

“பரிசோதிக்கப்பட்டுக்கொண்டிருந்தவராக, இந்த தேவ-மனிதன் வெளிப்படையானவராயும், உண்மையானவராயும், ஞானியாயும், கௌரவமானவராயும் இருந்தார். ஆனால் அவரைக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தவர்கள் கீழ்த்தரமானவர்களாயும், தந்திரமானவர்களாயும், நயவஞ்சகமானவர்களாயும், நேர்மையற்றவர்களாயும் இருந்தனர். இவர்கள் இரண்டிலொன்று ஒரு நேர்த்தியான மனப்பாங்குடனோ அல்லது ஒரு நேர்த்தியான ஆவியிலோ வரவில்லை” (Life-study of Luke​, Message 45, p. 390).  யூதர்களிடையே இருந்த தலைவர்கள் இயேசுவிடம் கேட்ட முதல் காரியம், அவரது அதிகாரத்தின் ஊற்றைப் பற்றியதாக இருந்தது. பதிலுக்கு இயேசு இவர்களிடம், யோவான் ஸ்நானகனின் அதிகாரத்தின் ஊற்றைப் பற்றி ஒரு கேள்வியைக் கேட்டார். இது பரிசோதகர்களை ஓர் இக்கட்டான நிலைக்குத் தள்ளியது, ஏனெனில் யோவானின் போதனை பரலோகத்திலிருந்து (அதாவது தேவனிடமிருந்து) வந்தது என்று இவர்கள் கூறினால், இவர்கள் ஏற்கனவே இயேசுவை மேசியாவாகப் பெற்றிருக்க வேண்டும் என்பதால் அஇர்கள் தம்மிடம் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டார்கள் என்று இயேசு இவர்களிடம் கேட்டிருக்கலாம். யோவானின் போதனை பூமியிலிருந்து வந்தது என்று இவர்கள் கூறினால், அவர்கள் இந்த மக்கள் கூட்டத்துடன் சிக்கலில் இருந்திருப்பார்கள், ஏனெனில் இந்த மக்கள் கூட்டத்தினர் யோவான் தேவனிடமிருந்து அனுப்பப்பட்ட ஒரு தீர்க்கதரிசியாக இருப்பதாகக் கருதினர். இது பிரதான ஆசாரியர்கள் மற்றும் மூப்பர்களின் தூய்மையற்றத் தன்மையையும், அரசியலையும் அம்பலப்படுத்தியது. இவர்களது பொய்யான பதிலைத் (மாறுத்தரம்) தொடர்ந்து கர்த்தர், யோவானின் சாட்சியை ஏற்றுக்கொள்ளாததற்காக இவர்களைக் கண்டனம்செய்த மூன்று உவமைகளைப் பேசினார், மேலும் அவர்கள் ராஜ்யத்திற்குள் நுழைவதிலிருந்து நிராகரிக்கப்படுவார்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார் (மத். 21:32). மேலும், தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருந்தக் கட்டிடக் கல்லாக தாம் இருந்தார் என்றும் (மத். 21:42; சங். 118:22), மேலும் இவர்கள் அவரை நிராகரிப்பதும் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டது என்றும் கர்த்தர் இவர்களிடம் சொன்னார். இவர்களது நிராகரிப்பு, அவர்கள் யூதராக இருந்தாலும்சரி அல்லது புறவினத்தாராக இருந்தாலும்சரி, கர்த்தரை ராஜாவாகப் ஏற்றுக்கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட இன்னொரு “தேசத்திற்கு” ராஜ்யத்தைக் கொடுப்பதற்கான வழியைக் கர்த்தருக்குத் திறந்தது (மத். 21:42–43).

B. அவர் அரசியல் குறித்து பரிசேயர்களின் சீஷர்களால் ஏரோதியர்களுடன் பரிசோதிக்கப்பட்டார்—மத். 22:15-22

பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் இயேசுவை விட்டுசென்று, இயேசுவை அவரது வார்த்தைகளில் பிடிக்க முயற்சிப்பதற்குப் பரிசேயர்களில் சிலரை, சில ஏரோதியருடன் அனுப்பினர் (மாற்கு 12:13). “கர்த்தராகிய இயேசுவே மனுக்குலத்தின் [முழு] குடும்பத்திற்காகவும் மரிக்க நியமிக்கப்பட்ட பஸ்கா ஆட்டுக்குட்டியாக இருந்தார் என்று நாம் கூறலாம். எனவே, அவர் இந்த மதத் தரப்பினராகிய பரிசேயர்களால் மட்டுமல்லாமல், அரசியல் தரப்பினராகிய ஏரோதியர்களாலும் பரிசோதிக்கப்பட்டார். இந்தப் பஸ்கா ஆட்டுக்குட்டியானவர் யூதர்கள், புறவினத்தார்கள் ஆகிய இரு தரப்பினராலும் பரிசோதிக்கப்பட்டார் என்பதே இதன் பொருள்” (Life-study of Luke, Message 46, pp. 398–399). “ஏரோதியர்கள் பரிசேயர்களை எதிர்த்தனர். எனினும், இந்தத் தருணத்தில் ஏரோதியரும் பரிசேயரும் கர்த்தராகிய இயேசுவைச் சிக்கவைக்க சதிசெய்தனர்…. 17ஆம் வசனத்தில் அவர்கள் கர்த்தரிடம், “ஆகையால் எங்களுக்குக் கூறும், நீர் என்ன நினைக்கிறீர்? சீசருக்குக் கப்பம் கட்டுவது நியாயப்பிரமாணத்தின் படியானதா, இல்லையா?” என்று கேட்டனர். இது நிஜமாகவே கண்ணியிலகப்படுத்தும் ஒரு கேள்வியாகும்…. இதைச் செய்வது நியாயப்பிரமாணத்தின்படியானதே என்று கர்த்தராகிய இயேசு கூறியிருந்தால், அவர் பரிசேயரைப் பின்பற்றிய யூதர்கள் எல்லாரையும் காயப்படுத்தியிருப்பார். ஆனால், அது நியாயப்பிரமாணத்தின்படியானதல்ல என்று அவர் கூறியிருந்தால், ரோம அரசாங்கத்தின் பக்கம்நின்ற ஏரோதியர்கள் அவரைக் குற்றஞ்சுமத்த இது ஒரு பலமான தளத்தைக் கொடுத்திருக்கும்…. எனவே, அந்த இரண்டு தரப்பினரில் ஒரு தரப்பினர் இந்தக் காரியத்தை எதிர்த்தனர், வேறொரு தரப்பினர் இதற்குச் சாதகமாக இருந்தனர். அவர்களது கருத்துப்படி, கர்த்தர் தங்கள் கேள்விக்கு எப்படிப் பதிலளித்தாலும் சரி, அவர் இன்னும் அவர்கள் கண்ணியில் அகப்படுவார்.

எனினும், கர்த்தராகிய இயேசு ஞானமுள்ளவர்; ஒவ்வொரு நபரையும், ஒவ்வொரு சூழ்நிலையையும் எவ்வாறு கையாளுவது என்று அவருக்குத் தெரியும்…. கர்த்தராகிய ரோம நாணயத்தைக் காட்டவில்லை, மாறாக ஒரு நாணயத்தைத் தம்மிடம் காட்டும்படி அவர்களிடம் கேட்டார்…. ஒரு ரோம நாணயத்தை வைத்திருப்பதன்மூலம், அவர்கள் ஏற்கெனவே இந்தக் காரியத்தில் தோற்றுவிட்டனர்.யூதர்கள், ரோம அரசியல் அதிகாரம், தேவனுடைய ஆவிக்குரிய அதிகாரம் ஆகிய இரண்டு அதிகாரங்களின்கீழ் இருந்தார்கள். எருசலேமில் ரோம அரசாங்கம் மட்டுமல்லாமல், தேவனுடைய ஆலயமும் இருந்தது. இந்தக் காரணத்தால்தான், யூத மக்கள் ரோம அரசாங்கம், தேவனுடைய ஆலயம் ஆகிய இரண்டு அமைப்புகளுக்கு வரி செலுத்த வேண்டியிருந்தது. ஆகையால், சீசருடையதை சீசருக்குச் செலுத்தும்படியும், தேவனுடையதை தேவனுக்குச் செலுத்தும்படியும் கர்த்தர் அவர்களிடம் கூறினார். இந்தப் பதில் பரிசேயருக்கும், ஏரோதியருக்கும் அதிர்ச்சியளித்தது, அதோடு அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்” (Life-study of Matthew​, Message 59, pp. 691–692).

C. அவர் உயிர்த்தெழுதல் குறித்து சதுசேயர்களால் பரிசோதிக்கப்பட்டார்—மத். 22:23-33

அந்த நாளில், மரித்தோரின் உயிர்த்தெழுதலில் நம்பாத சதுசேயர்களில் சிலரும் இயேசுவிடம் ஒரு கேள்வியைக் கேட்க அவரிடம் வந்தார்கள். மரணத்திற்குப் பின்புள்ள வாழ்க்கையில் நம்புவது எவ்வளவு அபத்தமானது என்பதை அவர்களது கேள்வி உதாரணங்காட்டி விளக்குவதற்காக இருந்தது. இருப்பினும், வேதாகமத்தில் தேவன் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபின் தேவன் என்று அழைக்கப்படுவதைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் கர்த்தர் அவர்களது முட்டாள்தனத்தை அம்பலப்படுத்தி, வேதவாக்கியங்களைப் பற்றிய அவர்களது புரிதல் இல்லாமையில் அவர்களை அவமானப்படுத்தினார். தேவன் மரித்தோரின் தேவனாக அல்ல, மாறாக ஜீவிப்போரின் (ஜீவனுள்ளோரின்) தேவனாக மட்டுமே இருக்க முடியும் என்பதால், நிச்சயமாக இது ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு உயிருடன் இருப்பதை நிரூபிக்கிறது. கர்த்தராகிய இயேசு வேதவாக்கியங்களை, “எழுத்துக்களின்படி மட்டுமல்லாமல், அவற்றுக்குள் மறைவாகக் காட்டப்படும் ஜீவன் மற்றும் வல்லமையின்படியும்” விவரித்துரைத்தார் (Matt. 22:32, footnote 1). மக்கள் கூட்டத்தார் இதைக் கேட்டபோது, அவர்கள் அவரது போதனையைக் குறித்து மீண்டும் வியப்படைந்தார்கள். “சதுசேயர்களுக்கு இத்தகைய பதிலைத் தருவதன்மூலம், கர்த்தர் அவர்களை வாயடைத்தார்” (Life-study of Matthew​, Message 59, p. 694).

D. அவர் நியாயப்பிரமாணத்தைக் குறித்து சதுசேயர்களில் வழக்கறிஞன் ஒருவனால் பரிசோதிக்கப்பட்டார்—மத். 22:34-40

சதுசேயர்கள் கர்த்தரால் வாயடைக்கப்பட்டிருந்ததைக் கேள்விப்பட்டு, பரிசேயர்கள் மீண்டும் ஒன்றுசேர்ந்து கூடிவந்தனர், அப்போது அவர்களில் ஒருவனாகிய, ஒரு வழக்கறிஞன், நியாயப்பிரமாணத்தின் கட்டளைகளில் எது அதிமாபெரியதாக இருந்தது என்பது தொடர்பான ஒரு கேள்வியை இயேசுவிடம் முன்வைத்தான். இயேசு, “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது” என்று உடனடியாகப் பதிலளித்தார் (மத். 22:37-40). இதைப் பேசுவதில் கர்த்தர், அன்பே தேவனுடைய கட்டளைகளின் ஆவி என்பதை வெளிப்படுத்தினார். இத்தகைய ஒரு பதிலின் மூலம் கர்த்தர் தேவ ஆட்டுக்குட்டியாக தம் பரிபூரணத்தை மெய்ப்பித்துக் காட்டினார்.

E. ஒவ்வொரு பரீட்சையையும் கடந்துவந்த பிறகு, “கிறிஸ்துவானவரைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்பதன் மூலம் கர்த்தர் தம் பரிசோதகர்களை வாயடைத்தார்—மத். 22:4146

“கிறிஸ்துவானவரைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்?” என்ற ஒரு கேள்வியைக் கொண்டு யூதத் தலைவர்களைப் பரிசோதிக்கக் கர்த்தர் இஸ்ரயேலின் உண்மையான தலைவராக தம் சொந்த அதிகாரத்தை இப்போது பயிற்சிசெய்தார் (மத். 22:42). கிறிஸ்துவைப் பற்றிய கர்த்தரின் கேள்வி, தம்மைப் பரீட்சித்தவர்களின் நிஜமான சூழ்நிலையை அம்பலப்படுத்தியது. யூதத் தலைவர்கள் மதம், அரசியல், நம்பிக்கை, நியாயப்பிரமாணம் ஆகியவற்றிற்காகக் கரிசனைப்பட்டனர், ஆனால் அவர்கள் கிறிஸ்துவைப் பற்றி அறியாதவர்களாக இருந்தனர். “கிறிஸ்துவானவரைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்பதே கேள்விகளுக்கெல்லாம் கேள்வி; நாம் தேவனுடைய பொருளாட்சியுடன் தொடர்புடையவர்களாக இருக்க விரும்பினால், நாம் கிறிஸ்துவை அறிந்தாக வேண்டும். கிறிஸ்து தாவீதின் குமாரனாக இருந்தார் என்று பரிசேயர்கள் சரியாக பதிலளித்தனர், ஆனால் 110 ஆம் சங்கீதத்தில் தாவீது கிறிஸ்துவை தன் கர்த்தர் என்று அழைத்தது எப்படி சாத்தியமாக இருந்தது என்பதை அவர்களால் கர்த்தரிடம் சொல்ல முடியவில்லை. “கிறிஸ்து தேவனே; தம் தெய்வீகத்தில் அவர் தாவீதின் கர்த்தராக இருக்கிறார். அவர் ஒரு மனிதனும் கூட; தம் மனுஷீகத்தில், அவர் தாவீதின் குமாரனாக இருக்கிறார். பரிசேயர்களிடம் கிறிஸ்துவின் நபரைக் குறித்து பாதி வேத அறிவு மட்டுமே, அதாவது தம் மனுஷீகத்தின்படி அவர் தாவீதின் குமாரன் என்ற பாதி வேத அறிவு மட்டுமே இருந்தது. அவர்களிடம் மற்ற பாதி, அதாவது தம் தெய்வீகத்தின்படி அவர் தேவ குமாரன் என்ற பாதி இல்லை” (Matt. 22:45, footnote 1). “தம் அற்புதமான நபரைக் குறித்து கிறிஸ்து கேட்ட கேள்விகளுக்கெல்லாம் கேள்வி, அவரை எதிர்த்த எல்லா எதிராளிகளின் வாய்களையும் அடைத்தது”  (Matt. 22:46, footnote 1). இதற்குப் பிறகு, யாரும் இயேசுவிடம் வேறு எந்தக் கேள்விகளையும் கேட்கத் துணியவில்லை. இயேசுவில் எந்தக் குறையையும் அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக, அவர் பாவமற்றவர், பரிபூரணமானவர், தேவ ஆட்டுக்குட்டியாக மரிப்பதற்கு முழுவதும் தகுதியுள்ளவர் என்பதை அவர்கள் தங்கள் பரீட்சித்தலின் மூலம் நிரூபித்தார்கள்.

III. எல்லா மக்களும் இறுதியில் இந்தக் கேள்வியால் பரீட்சிக்கப்படுவார்கள்—“கிறிஸ்துவானவரைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”—மத். 22:42

A. மக்களுக்குப் பல கேள்விகள் உள்ளன, ஆனால் பெரும்பாலானவர்களுக்கு கிறிஸ்து யார் என்ற ஒரு கருத்து இல்லை

“மக்களிடம் இன்று பல கேள்விகள் உள்ளன, ஆனால் அவர்கள் கேள்விகள் அனைத்தும் மதம், அரசியல், நம்பிக்கை, நியாயப்பிரமாணம் என்ற நான்கு வகைகளாக வகைப்படுத்தப்படலாம். பழங்காலத்தைப் போன்று மக்கள் இன்றும் கிறிஸ்துவுக்காக அல்ல, இந்தக் காரியங்களுக்காகவே அக்கறைப்படுகின்றனர். அவர்களுக்கு அவரைக் குறித்த எந்தக் கருத்தும் இல்லை. ஆனால் தேவனின் கரிசனை கிறிஸ்துவுக்காக இருக்கிறது, கிறிஸ்துவின் கரிசனை தமக்காக இருக்கிறது. எனவே, “கிறிஸ்துவானவரைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய குமாரன்?” என்று அவர் கேட்கிறார். இந்தக் கேள்வி கிறிஸ்துவின் நபரைப் பற்றிப் பேசுகிறது; இது பிரபஞ்சத்தில் மிகக் குழப்பமான காரியமாகிய ஒரு பரமஇரகசியமாகும் (பரம்புதிர்)”  (Life-study of Matthew, Message 59, pp. 695–696). கிறிஸ்துவைப் பற்றி என்ன செய்வது என்று இன்றும் மக்கள் இன்னும் குழப்பத்தில் உள்ளனர். அவர் தாம் யார் என்று அவர் கூறுகிறாரோ அதுவாக அவர் இருக்கிறார் என்று அவர்கள் தாங்கள் நம்புவதாகக் கூறினால், அவர்கள் ஏன் அவரைப் பின்பற்றுவதில்லை என்பதை அவர்கள் விளக்க வேண்டும். பலர் வசதியாக இந்த விஷயத்தை புறக்கணிக்கிறார்கள். எனவே, கிறிஸ்து நிஜமாகவே யார் என்பது குறித்து அவர்களுக்கு எந்தக் கருத்தும் இல்லை. இந்தக் கேள்வி அனைவரின் நிஜமான சூழ்நிலையை அம்பலப்படுத்துகிறது.

B. இந்தக் கேள்விக்கெல்லாம் கேள்வியானது இறுதியில் ஒவ்வொருவராலும் பதிலளிக்கப்பட்டாக வேண்டும்.

கிறிஸ்துவைப் பற்றிய இந்தக் கேள்விக்கு மக்கள் பதிலளிக்கும் வரை, அவர்களது சொந்த வாழ்க்கைகளும் கேள்விக்குறியாக உள்ளன. மக்கள் இந்தக் கேள்வியை நிலுவையில் நிறுத்தி வைக்கும் வரை, அவர்களது சொந்த வாழ்க்கைகளும் நிலுவையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இந்தக் கேள்விக்கான பதிலை அனைவரும் கண்டுபிடிக்க வேண்டும். கிறிஸ்துவே இந்தப் பிரபஞ்சத்தின் மைய அர்த்தமாக இருப்பதால், அவர் யார் என்ற கேள்வியை மக்கள் தீர்த்து வைத்தாக வேண்டும், இதனால் அவர்களது சொந்த வாழ்க்கைகளும் அவற்றின் மையத்தையும் அர்த்தத்தையும் கண்டுபிடிக்கக்கூடும்.

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: யூதத் தலைவர்கள் கோபம் மற்றும் பொறாமையால் தூண்டப்பட்டு (எரிபொருளூட்டப்பட்டு), தாங்கள் கர்த்தராகிய இயேசுவைப் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் கர்த்தருடைய நபர் மற்றும் வேலையை நியாயப்படுத்தும் ஓர்  அற்புதமான மற்றும் முழுமையான நியாயப்படுத்துதலுக்கான மேடையை அறியாமலேயே ஏற்படுத்திக்கொண்டிருந்தனர். இத்தகைய ஓர் இருண்ட சூழ்நிலையில், நாம் பாராட்டும்படியாக நம் அற்புதமான கிறிஸ்துவைப் பற்றிய ஓர் அழகிய திரைநீக்கத்தை நாம் பார்க்க முடிகிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தப் பாடத்தின் மூலமாக, மத்தேயு 22 இல் திரைநீக்கப்பட்டுள்ள இந்தப் பாவமற்ற, பரிபூரண கிறிஸ்துவின் தூய்மை மற்றும் நிகரற்ற மதிப்பு பற்றிய ஒரு பாராட்டுதலை தங்களுக்குள் உருவாக்க இளம் வாலிபர்களுக்கு நாம் உதவ முடியும். கர்த்தருடைய முழு வாழ்க்கையும் அங்கு பரிசோதிக்கப்பட்டுக்கொண்டிருந்தது என்பதைக் கொண்டு அவர்களுக்குக் கருத்துப்பதிவை ஏற்படுத்துங்கள். அவர் இதுவரை கூறிய அல்லது செய்த அனைத்தும், அவர் குற்றமுள்ளவராக நிரூபிக்கப்படும் வரை அவரை நிரபராதியாகக் கருதி உண்மையைத் தேடும் நேர்மையான மனிதர்களால் அல்ல, மாறாக அவர்கள் தாங்கள் அவரைச் சிலுவையில் அறையக்கூடுமாறு அவரைக் குற்றவாளியாகக் கண்டுபிடிக்க முயற்சிப்பவர்களால் கூர்ந்தாராயப்பட்டுக்கொண்டிருந்தது. கர்த்தருடைய பரிசோதனை அவரது வாழ்நாள் முழுவதும் நீடித்தது. உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இத்தகைய ஒரு முழுமையான முறையில் சோதிக்கப்பட்டால் அவர்கள் எவ்வாறு காலங்கழிப்பார்கள் என்று அவர்களிடம் கேளுங்கள். அவர்கள் பரிபூரணமானவர்களாயும், பழுதற்றவர்களாயும், எந்தக் குற்றச்சாட்டு மத்தியிலும் குற்றமற்றவர்களாயும் காணப்படுவார்களா? அவர்கள் தங்கள் பெற்றோரிடம் பேசிய வார்த்தைகள் எப்படி? அல்லது அவர்கள் பெற்றோரிடம் பேசிய தொனி எப்படி? நாம் எவ்வளவு அபூரணர்களாக இருக்கிறோம் என்பதை நாம் எவ்வளவு அதிகமாகப் பார்க்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் நம் கறையற்ற இரட்சகரைப் பாராட்டுவோம். இந்தப் பாடத்தை இவ்விதமாய்ப் பிரயோகிப்பதில், இளம் வாலிபர்களின் குறைபாடுகளில் தங்கிவிடாமல் இருக்க கவனமாயிருங்கள். அவர்கள் அம்பலப்படுத்தப்பட்டவுடன், அவர்களுக்காகவும், அவர்களது குறைபாடுகள் அனைத்திற்காகவும் மரித்த அதோடு இப்போது அவர்களைத் தம் ஜீவனில் இரட்சித்துக்கொண்டிருக்கும் அன்பான, மன்னிக்கும் மற்றும் பரிபூரணமானவரிடம் தங்கள் கண்களை மீண்டும் திருப்ப அவர்களுக்கு உதவுங்கள் (ரோ. 5:10).

சுவிசேஷத்திற்கான செயலாக்கம்: கர்த்தராகிய இயேசுவை யூதர்கள் பரிசோதித்தல் பற்றிய படத்தை வரையவும். மதம், அரசியல், நம்பிக்கை மற்றும் வேதாகம வியாக்கியானம் பற்றிய கேள்விகளை அவர்கள் அவரிடம் கேட்டார்கள். அவர்களது பரிசோதனைகள் அனைத்தும் முடிந்து, அவர்கள் கர்த்தரிடம் எந்தக் குறையும் காணாதிருந்த நிலையில், அவர் பதிலுக்கு அவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். கேள்விகளுக்கெல்லாம் கேள்வி, “கிறிஸ்துவானவரைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்பதே. மதம், அரசியல், விசுவாசம், வேதாகம வியாக்கியானம் ஆகியவை நம்மை இரட்சிக்க முடியாது. எல்லா கேள்விகளுக்கும் பிறகு, அனைவரும் மதம், அரசியல், விசுவாசம் மற்றும் வேதாகம வியாக்கியானம் பற்றி தெளிவாக இருந்தனர். இருப்பினும், “கிறிஸ்துவானவரைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்ற இயேசுவின் கேள்விக்குப் பரிசேயர்களால் பதிலளிக்க முடியவில்லை. கிறிஸ்து யார் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இந்த சுவிசேஷ நண்பர்களில் சிலர், கிறிஸ்து யார் என்பதை அறியாமல் இது போன்று இருக்கக்கூடும். இந்தப் பத்தியில் நாம், கிறிஸ்து தேவனாகவும் மனிதனாகவும் இருப்பதைக் காண முடியும். நாம் இரட்சிக்கப்படுவதற்கான ஒரே வழி கிறிஸ்துவின் மூலமாகவே ஆகும். அவர் ஒரு மனிதனாக இருக்க மாம்சமான தேவன் என்பதை நாம் அறிக்கையிட்டு, ஒரு தாழ்மையான இருதயத்துடன், அவரை நம் இரட்சகராகப் பெற்றுக்கொள்ள வேண்டும். (See Gospel Outlines​, Subject sixty-six, “The Question of Questions.”)

மிகமுக்கியக் காரியங்கள்: நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.).

BACKGROUND READING: Life-study of Luke, Message 45, pp. 387–390; Message 46, pp. 396–399;

Life-study of Matthew, Message 59; Matt. 22:32, footnote 1; 22:45, footnote 1; 22:46, footnote 1.

REFERENCES: Life-study of Luke, Messages 45–46; Life-study of Matthew, Message 59; Matt. 22:32, footnote 1; 22:45, footnote 1; 22:46, footnote 1; Gospel Outlines, Subject sixty-six, “The Question of Questions.”