கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல்

பகுதி 9

✵பாடம் 01 – 09

நியாயந்தீர்க்கப்படுதல் (2)

குறிக்கோள்: யோவான் சுவிசேஷத்தில் இந்தக் குற்றமற்ற கிறிஸ்து குருட்டு மதம் மற்றும் இருண்ட அரசியலால் எவ்வாறு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார் என்பதைக் காண்பதற்கு.

பொருட்சுருக்கம்: கர்த்தர் யூத மதவாதிகளாலும், புறவின அரசியல்வாதிகளாலும் பரிசோதிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது, அவருக்கு மரண பயம் இருக்கவில்லை, மேலும் இந்தப் பயங்கரமான நியாயத்தீர்ப்பை தைரியமாக எதிர்கொண்டார். யூதத் தலைவர்கள் அவரது போதனையைப் பற்றி அவரிடம் கேட்டபோது அவர், “நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்…நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்” என்று பதிலளித்தார் (யோவான் 18:20, 21). அவர் ஒரு ராஜாவா என்று பிலாத்து அவரிடம் கேட்டதற்கு அவர், “நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்” என்று கூறுவதன் மூலம் பதிலளித்தார் (யோவான் 18:37). கர்த்தர் பஸ்கா ஆட்டுக்குட்டியாகப் பரிசோதிக்கப்படுகையில், அவர் தம்மை பரிசோதித்தவர்களைப் பரிசோதித்து, அவர்களது தவறுகளை அம்பலமாக்கினார். இறுதியில் பிலாத்து, “நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்” என்று மூன்று முறை அறிவித்தான். ஆயினும்கூட, கர்த்தர் மனிதனின் அநியாயத்தில் குருட்டு மதத்தாலும், இருண்ட அரசியலாலும் தண்டனை விதிக்கப்பட்டார். கர்த்தர் மீதான தங்கள் மத வெறுப்பால் குருடாக்கப்பட்ட யூதர்கள், கிறிஸ்து சிலுவையில் அறையப்பட வேண்டும் என்று கோரினர். தன் அரசியலாலும், யூதர்களைப் பிரியப்படுத்துவதற்கான விருப்பத்தாலும் இருளடைந்த பிலாத்து, நியாயத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, கர்த்தருக்கு மரண தண்டனை விதித்தான். யோவானின் சுவிசேஷத்தில் உள்ள இந்தப் பதிவின் மூலம், நாம் மதத்திற்காகவும்சரி அரசியலுக்காகவும்சரி அக்கறைப்படாமல் இருக்க உத்வேகம் அடைகிறோம். இவ்விரண்டும் கர்த்தரைச் சிலுவையில் அறைய ஒன்றுசேர்ந்து வேலைசெய்தன. அவர் தாம் நம் மீட்பிற்காக மரிக்க முடியுமாறு, இந்த அநியாயமான மரண தண்டனைக்கு மனப்பூர்வமாய் பணிந்தடங்கிய இந்தக் குற்றமற்ற கிறிஸ்துவுக்காக மட்டுமே நாம் அக்கறைப்படுகிறோம்.

பின்புலம்: மதமும் அரசியலும் தேவனுடைய குறிக்கோளை நிறைவேற்ற முடியாது. மாறாக அவை தேவனுடைய  குறிக்கோளுக்கு முட்டுக்கட்டையிடுகின்றன. மதத்திற்காக அக்கறைப்பட வேண்டாம் அதோடு அவன் தான் கிறிஸ்துவில் எந்தக் குறையும் காணவில்லை என்று கூறிய பிறகு, திரும்பி, அவரைச் சிலுவையில் அறைந்த பிலாத்துவைப் போன்று, அரசியலாகவும் இருமுகமாகவும் இருப்பதற்காக அக்கறைப்பட வேண்டாம். நாம் கிறிஸ்துவுக்காக மட்டுமே அக்கறைப்பட வேண்டும். யோவான் சுவிசேஷத்தில் உயிர்த்தெழுதல் ஜீவனாகிய கிறிஸ்துவின் பிரகாசமான சாட்சியைக் காட்ட மதம் மற்றும் அரசியலின் கருப்பு பின்புலம் உதவியது. இந்தப் பாடத்தில் கிறிஸ்து நியாயந்தீர்க்கப்படுதல் பற்றிய சித்திரத்தின் ஒரு தர்க்கரீதியான கண்ணோட்டத்தை இளம்வாலிபர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும், மேலும் மதமும் அரசியலும் இந்த அழகான நபருடன் ஒப்பிடப்படவே முடியாது என்ற நிதானமான முடிவுக்கு வர வேண்டும்.

அதிகாரங்கள்: யோவான் 18-19.

போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:

நியாயத்தீர்ப்பு வேளையில் கர்த்தர் எவ்வாறு கண்ணியமானவராகவும் கனத்திற்குரியவராகவும் இருந்தார் என்பதைக் கடந்த பாடத்தில் நாம் மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா சுவிசேஷத்திலிருந்து பார்த்தோம். அத்தகைய கண்ணியமும் கனமும் யோவானின் விவரணத்தில் மீண்டும் காணப்படுகின்றன. கூடுதலாக நாம், எவ்வாறு கர்த்தர் இந்தப் பின்வரும் இரண்டு குறிப்பிட்ட விஷயங்களால் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார் என்பதை யோவான் சுவிசேஷத்திலிருந்து நாம் பார்க்க விரும்புகிறோம்: மதம் மற்றும் அரசியல். மதம் குருடானது, அரசியல் இருண்டது, மேலும் இவ்விரண்டும் கர்த்தரைச் சிலுவையில் அறைய ஒன்றுசேர்ந்து வேலைச் செய்தன. கரத்தருடைய மற்றும் தம் பரிசோதகர்களுடைய உரைகள் பல இந்த விவரணத்தில் புதியவையாக உள்ளன; ஆகவே யோவான் 18:12–19:16 ஐ இளம் வாலிபர்களுடன் ஒன்றுசேர்ந்து வாசிப்பது பலனுள்ளதாக இருக்கும். (குறிப்பு: இந்தப் பாடத்தின் முடிவில் உள்ள உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம், கர்த்தர் தாம் நியாயந்தீர்க்கப்படும்போது ஜீவனாகிய தம்மை யாராக வெளியரங்கமாக்கினார் என்பதற்கான ஒரு நல்ல சுருக்கத்தை அளிக்கிறது.)

I. கர்த்தர் மனுக்குலத்தால் தம் கண்ணியத்தில் பரிசோதிக்கப்பட்டார்—யோவான் 18:12–38; 11:25

மற்ற சுவிசேஷங்களில் பார்ப்பதைப் போலவே, நாம் யோவான் சுவிசேஷத்திலும் கர்த்தர் பரிசோதிக்கப்படுகையில் எவ்வளவு கண்ணியமானவராக இருந்தார் என்பதைப் பார்க்கிறோம். “யோவானின் சுவிசேஷத்தின் அதிகாரங்கள் பதினெட்டு மற்றும் பத்தொன்பது மிகவும் குறிப்பிட்டவை. இந்த அதிகாரங்களில் கர்த்தர் நிச்சயமாகவே தாம் ஒரு சாதாரண மனிதனாக நடந்துகொள்ளவில்லை. இருப்பினும், இந்த அதிகாரங்களைப் பற்றிய நம் புரிதல் இயற்கையானதாக இருக்கக்கூடும். நாம் யோவான் 18 மற்றும் 19ஐ வாசிக்கும்போது, நாம் ஓர் இயற்கையான வழியில் கர்த்தர் மீது அனுதாபப்படக்கூடும் அதோடு அவரது பாடுகள் அனைத்திற்காகவும் அவர் மீது பரிதாபப்படக்கூடும். ஆனால் இந்த அதிகாரங்களில் நமக்கு ஒரு பரிதாபகரமான சூழ்நிலையைப் பற்றிய ஒரு சித்திரம் இல்லை—ஒரு வெற்றிசிறந்த நபரின் ஓர் உருவப்படம் நமக்கு உள்ளது. எனவே, நாம் இந்த அதிகாரங்களை வாசிப்பதில் நாம் வருத்தப்படவும், கர்த்தர் மீது அனுதாபப்படவும் கூடாது. அதற்குப் பதிலாக, இந்த அதிகாரங்கள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஜீவனின் வெற்றியின் ஒரு பதிவாக இருப்பதை நாம் பார்க்க வேண்டும். யோவான் 18 மற்றும் 19, முறிக்கப்பட முடியாத உயிர்த்தெழுதல் ஜீவனின் ஒரு கண்காட்சியாகும். இந்த அதிகாரங்களில் பதிவு செய்யப்பட்ட எல்லாவற்றிலும் கர்த்தர் உயிர்த்தெழுதலாகவும் ஜீவனாகவும் இருப்பவராக தாம் நடந்துக்கொண்டார் (11:25). இந்த அற்புதமான நபர் ஜீவனாயிருக்கிறார், மேலும் இந்த அதிகாரங்களில் இந்த ஜீவன் கண்காட்சிப்படுத்தப்படுகிறது (The Fulfillment of the Tabernacle and the Offerings in the Writings of John, Chapter 59, p. 548).

A. அவர் பஸ்கா ஆட்டுக்குட்டியாக பரிசோதிக்கப்பட்டார்—யோவான் 1:29; யாத். 12:2-6

யோவான் சுவிசேஷத்தின் ஆரம்பத்தில், யோவான் ஸ்நானகன் தன்னிடம் இயேசு வருவதைக் கண்டு, “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.!” என்று கூறினான் (யோவான் 1:29). பின்னர், மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, கர்த்தர் பஸ்கா நாளிலே நிஜமான பஸ்கா ஆட்டுக்குட்டியாகச் சிலுவையில் அறையப்பட்டார் (1 கொரி. 5:7). பழைய ஏற்பாட்டில், பஸ்கா நாளில் பஸ்கா ஆட்டுக்குட்டி கொல்லப்படுவதற்கு முன்பு, அதனிடம் எந்தப் பழுதுகளும் (குறைபாடுகளும்) இருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த அது முதலில் பரிசோதிக்கப்பட்டது (யாத். 12:2-6). கர்த்தராகிய இயேசு மனுக்குலத்தால் பரிசோதிக்கப்படுதல், இந்த மாதிரியின் ஒரு நிறைவேறுதலாக இருந்தது. அவர் பஸ்கா நாளில் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, அவர் பரிசோதிக்கப்பட்டு, பழுதற்றவராக இருப்பதாக நிரூபிக்கப்பட்டார். இந்தக் காரணத்திற்காக பிலாத்து, “நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்” என்று அறிவித்தான் (யோவான் 18:38). எனவே, பாவிகளைக் கடந்துபோகச் செய்ய அவர் தகுதியானவராக இருந்தார் (John 18:13, footnote 1, Mark 12:37, footnote 1 ஆகியவற்றைப் பார்க்கவும்).

B. அவர் யூதர்களால் அவர்களது மதத்தில் தேவனின் நியாயப்பிரமாணத்தின்படி பரிசோதிக்கப்பட்டார்—யோவான் 18:12-27

கர்த்தர் முதலில் யூதர்களால் அவர்களது மதத்தில் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி பரிசோதிக்கப்பட்டார். இந்தப் பரிசோதித்தலின் போது, பிரதான ஆசாரியன் கர்த்தரிடம் அவரது சீஷர்களையும், அவரது போதனையையும் குறித்து கேட்டான் (யோவான் 18:19). கர்த்தர் ஒரு மிகவும் கண்ணியமான வழியில் பதிலளித்து, “நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெபஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை. நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே” என்று கூறினார் (யோவான் 18:20-21). “பிரதான ஆசாரியன் கர்த்தரைப் பரிசோதித்துக்கொண்டும் நியாயந்தீர்த்துக்கொண்டும் இருந்தபோது, பிரதான ஆசாரியன் கர்த்தரால் அவரது கண்ணியத்தில் நியாயந்தீர்க்கப்பட்டுக்கொண்டிருந்தான் (18:19-21). கர்த்தர் பயமில்லாமல், பிரதான ஆசாரியனிடம் ஒரு மிகவும் கண்ணியமான வழியில் பேசினார். பஸ்கா ஆட்டுக்குட்டி பரிசோதிக்கப்படுகையில், இந்தப் பரிசோதகன் அவரால் பரிசோதிக்கப்பட்டுக்கொண்டிருந்தானந், மேலும் இந்தப் பரிசோதகனின் பழுதுகள் அம்பலமாக்கப்பட்டன” (Life-study of John, Message 42, p. 510).

C. அவர் புறவினத்தார்களால் மனிதனின் சட்டத்தின்படி அவர்களது அரசியலில் பரிசோதிக்கப்பட்டார்—யோவான் 18:28-38

கர்த்தர் யூத சட்டத்தின்படி (நியாயப்பிரமாணம்) யூதர்களால் மட்டுமல்லாமல், ரோம சட்டத்தின்படி புறவினத்தார்களாலும் பரிசோதிக்கப்பட்டார் என்பது தேவனுடைய இறையாண்மையாக இருந்தது. யூத சட்டத்தின்படி, மரணம் கல்லெறிதல் மூலம் இருந்தது (யோவான் 18:31; லேவி. 24:16), ஆனால் அவர் எவ்வாறு வெண்கல சர்ப்பமாக உயர்த்தப்படுவார் (யோவான் 3:14; 18:32) என்பது பற்றிய கர்த்தருடைய வார்த்தையை அந்த மரணதண்டனை முறை நிறைவேற்றியிருக்காது. யூத தேசம் ஆட்சியில் இல்லாததாலும், குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கும் அதன் உரிமையை இழந்திருந்ததாலும், யூதத் தலைவர்கள் கர்த்தரை ரோம அதிகாரிகளிடம் இடம் மாற்றி ஒப்படைத்தனர், அவர்கள் சமீபகாலத்தில் சிலுவையில் அறையப்படுவதை தங்கள் மரணதண்டனை முறையாக ஏற்றிருந்தனர். இது இந்தத் தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலுக்காக தேவனுடைய இறையாண்மையின் கீழ் தீர்மானிக்கப்பட்டது (சங். 22:14-16; யோவான் 12:32-33). கர்த்தர் இந்தப் பரிசோதனையை எவ்வாறு ஒரு கண்ணியமான வழியில் மேற்கொண்டார் என்பதைப் பின்வரும் குறிப்புகள் காட்டுகின்றன.

  • கர்த்தர் தாம் தேவனுடைய ராஜ்யத்தின் ராஜாவாக இருந்தார் என்பதற்குச் சாட்சிப்பகிர்ந்தார்—யோவான் 18:33-37

கர்த்தரை நியாயந்தீர்க்கையில் பிலாத்து தானே அவரால் நியாயந்தீர்க்கப்பட்டுக்கொண்டிருந்தான். பிலாத்து பயங்கொள்ளியாக இருந்தான், ஆனால் கர்த்தர் கண்ணியமானவராக இருந்தார். பிலாத்து யூத மக்களுக்கு அஞ்சினான். ஆனால் கர்த்தர் அஞ்சாமல் பிலாத்துவிடம், “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல” என்று கூறுவதன் மூலம் பதிலளித்தார். கர்த்தர், பயங்கொள்ளியான பிலாத்துவின் முன் ஒரு கண்ணியமான ராஜாவாக நின்றார், அவரது ராஜ்யம் இந்த உலகத்திற்குரியதாக இருக்கவில்லை.

  • கர்த்தர் சத்தியத்திற்குச் சாட்சிப்பகிர்ந்தார்—யோவான் 18:37

அவர் ஒரு ராஜாவாக இருந்தார் என்பதற்குச் சாட்சிப்பகிர்ந்தப் பிறகு கர்த்தர், “சத்தியத்திற்குச் சாட்சிப்பகிர நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்” என்று கூறினார் (யோவான் 18:37, கிரே.). “மூவொரு தேவனே இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள நிஜம், மேலும் கர்த்தராகிய இயேசு இந்த நிஜத்தைக் குறித்து சாட்சியப்பகிர வந்தார்….கர்த்தர் சத்தியத்திற்குச் சாட்சிப்பகிர்வதென்றால், மூவொரு தேவனே இந்தப் பிரபஞ்சத்தின் நிஜமான உள்ளடக்கம் என்பதற்கு அவர் சாட்சிப்பகிர்ந்தார் என்று அர்த்தம்” (The Fulfillment of the Tabernacle and the Offerings in the Writings of John, Chapter 56, p. 521). அப்போது பிலாத்து கர்த்தரிடம், “சத்தியமாவது என்ன?” என்று கேட்பதன் மூலம் கர்த்தருக்குப் பதிலளித்தான் (யோவான் 18:38). சத்தியம் என்னவாக இருந்தது என்று பிலாத்துவுக்குத் தெரியாது, மேலும் அவன் தானே உண்மையாக (சத்தியமாக) இருக்கவில்லை. அவன் கர்த்தரால் அம்பலப்படுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்ட ஒரு பொய்யான நபராக இருந்தான்.

  • கர்த்தர் குற்றமற்றவராக இருப்பதாகக் காணப்பட்டார்—யோவான் 18:38; 19:4, 6; 1 பேது. 1:19.

கர்த்தரைப் பரிசோதித்தப் பிறகு,, அவர் குற்றமில்லாதவராக இருந்தார் என்று பிலாத்து மூன்று முறை அறிவித்தான் (யோவான் 18:38; 19:4, 6). கர்த்தர் மாசற்ற, பழுதற்ற தேவ ஆட்டுக்குட்டியாக இருந்தார் (1 பேது. 1:19).

II. இருண்ட அரசியலுடன் கூடிய குருட்டு மதத்தால் மனிதனின் அநியாயத்தில் கர்த்தர் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்—யோவான் 18:38-19:16

“கர்த்தராகிய இயேசு பரிசோதிக்கப்பட்ட பிறகு, பரிபூரணராகிய அவர் மனிதனின் அநியாயத்தில் தண்டனை உட்படுத்தப்பட்டார்  (18:38-19:16). இந்த நியாயமற்ற தண்டனை மதத்தின் குருட்டுத்தன்மையையும், அரசியலின் இருளையும் அம்பலப்படுத்தியது (18:38-39; 19:1, 4–5, 8–14, 16) (Life-study of John​​, Message 42, p. 512).

A. யூத மதவாதிகள் தங்கள் மதம் மற்றும் வெறுப்பால் குருடாக்கப்பட்டு இருந்தனர்—யோவான் 18:39-40; 19:67, 12, 15

வார்த்தையின் இந்தப் பகுதியில் நாம் யூத மதவாதிகளின் குருட்டுத்தன்மையைக் காண்கிறோம்; அவர்கள் செய்த அனைத்தும் வஞ்சகமானதாக இருந்தது, பொய்மை நிறைந்ததாக இருந்தது. “அவர்கள் யூதர்கள் மத்தியில் முக்கியமானவர்களாக இருந்தார்கள், ஆயினும் அவர்கள் தேவனுக்குரிய விஷயங்களைப் பற்றி கரிசனைப்படவில்லை. தம்மையே தேவனுடைய குமாரன் என்று அழைத்துக் கொண்ட இந்த இயேசு தாம் செய்த மற்றும் சொன்ன விஷயங்களால் தங்கள் பதவிக்கு அச்சுறுத்தல் விடுத்துக்கொண்டிருந்தார் என்பதே அவர்களது ஒரே கரிசனையாக இருந்தது. இப்படியே தொடர்ந்து செய்யும்படி இயேசுவை அவர்கள் அனுமதித்தால், அவர்களது பதவி ஆபத்தில் இருக்கும், மேலும் அவர்களது கண்ணியம் திவாலாகிப்போய்விடும். எனவே, அவர்கள் தங்கள் தனிப்பட்ட கௌரவத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமாறு, அவர்கள் இயேசுவை அகற்ற அவசரமாக முயன்றனர் (Collected Works of Watchman Nee, Volume 38, Chapter 47, pp. 342–343). அவர்கள் பொல்லாதவர்களாயும், மாய்மாலக்காரர்களாயும், வஞ்சகமிக்கவர்களாயும், பாசாங்கு நிறைந்தவர்களாயும் இருந்தனர். உச்சநிலையாக, அவர்கள் தங்கள் வெறுப்பில் அதி நீதியானவரை நிராகரித்து, அதற்குப் பதிலாக ஒரு கொள்ளைக்காரனைத் தேர்ந்தெடுத்தனர் (யோவான் 18:40). கர்த்தர் குற்றமற்றவராக இருந்தார் என்று பிலாத்து சொன்ன போதிலும், அவர்கள் “சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்” என்று சத்தமிட்டார்கள் (யோவான் 19:4-6).

B. புறவின அரசியல்வாதி கர்த்தருக்கு மரண தண்டனை விதிப்பதில் இருளடைந்து இருந்தான்—யோவான் 18:38-39; 19:1, 4–5, 8–14, 16

கர்த்தர் குற்றமற்றவராக இருப்பதாகப் பிலாத்து மூன்று முறை அறிவித்தான், ஆயினும் பிலாத்து யூதர்களைப் பிரியப்படுத்துவதற்காக, பரபாஸ் என்ற ஒரு கொள்ளைக்காரனை விடுவித்து, கர்த்தரை சிலுவையில் அறையப்படும்படி ஒப்புக்கொடுத்தான். இங்கு நாம் அரசியலின் இருளைப் பார்க்கிறோம். பிலாத்து பயங்கொள்ளியாகவும், மக்களுக்கு அஞ்சியவனாகவும் இருந்தான், ஓர் உண்மையான அரசியல்வாதிக்கான ஓர் எடுத்துக்காட்டாகச் செயல்புரிந்தான். அவன் நியாயத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த நீதிமானை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தான்.

C. கர்த்தர் நம் மீட்பிற்காக மரிப்பதற்காக, இந்த அநியாயமான நியாயத்தீர்ப்புக்குப்பணிந்தடங்கினான்—யோவான் 19:1, 11, 16; 10:17-18

கர்த்தர் தமக்கு அநியாயமாக மரண தண்டனை விதிக்கப்பட்டபோது எதிர்க்கவில்லை. மாறாக, அவர் நம் மீட்பிற்காக மரணத்தின் நியாயத்தீர்ப்புக்கு மனமுவந்துப் பணிந்தடங்கினார். இந்த நியாயத்தீர்ப்பை எதிர்கொள்ளும் அவரது நடத்தை, அவரே உயிர்த்தெழுதலும் ஜீவனும் என்பதை நிரூபிக்கிறது. யோவான் 19:1இல் அவர் மறுத்துவிடாமல், பிலாத்துவின் கசையடிகளால் (சாட்டை அடிகளால்) மனமுவந்து பாடநுபவித்தார். யோவான் 19:2-3 இல், அவர் தம் தலையில் முட்கிரீடத்தைச் சூட்டி, ஓர் ஊதா நிற வஸ்திரத்தை அவருக்கு அணிவித்து, அவரை ஏளனம் செய்து, அவரை அறைந்தப் படைவீரர்களின் அவமதித்தலை அமைதியாக ஏற்றுக்கொண்டார். யோவான் 19:10இல், கர்த்தரை விடுவிக்கவோ அல்லது அவரைச் சிலுவையில் அறையவோ தனக்கு அதிகாரம் உண்டு என்று பிலாத்து கூறுவதன் மூலம் கர்த்தரை மிரட்டியபோது, கர்த்தர் எந்த மரண பயமும் இல்லாமல், “பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு” என்று கூறினார். நாம் பயந்திருப்போம், ஆனால் கர்த்தருக்கு எந்த மரண பயமும் இருக்கவில்லை. மனிதனின் அநியாயத்தில் குருட்டு மதத்தாலும், இருண்ட அரசியலாலும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், நாம் மீட்கப்படவும், அபரிமிதமாக ஜீவனைப் பெறவும் கூடுமாறு, நமக்காக அவர் மனப்பூர்வமாக சிலுவைக்குச் சென்றார் (யோவான் 10:10-11).

III. தேவனுடைய பொருளாட்சியில் மதம் அல்லது அரசியலுக்கு இடமில்லை; நாம் இந்தக் குற்றமற்ற கிறிஸ்துவுக்காக மட்டுமே அக்கறைக் கொள்ள வேண்டும்

மதம் குருடாயும், அரசியல் இருண்டதாயும் உள்ளது. கிறிஸ்துவின் மீது அநியாயமான தண்டனையை நிறைவேற்றும்படி இவ்விரண்டும் ஒன்றுசேர்ந்து வேலைசெய்தன. நாம் மதம் அல்லது அரசியலுக்காக  அக்கறைக் கொள்ளக்கூடாது; சத்தியத்திற்குச் சாட்சிப்பகிர உலகிற்குள் வந்த அதோடு அவர் நம் மீட்பிற்காக மரிக்க முடியுமாறு ஓர் அநியாயமான நியாயத்தீர்ப்புக்குப் பணிந்தடங்கிய இந்தக் குற்றமற்ற கிறிஸ்துவுக்காக மட்டுமே நாம் அக்கறைக் கொள்ள வேண்டும். குருட்டுத்தனமான மதவாதிகள் அவருக்காக அக்கறைக் கொள்ளவில்லை அதோடு இந்த இருளடைந்த அரசியல்வாதி அவருக்காக அக்கறைக் கொள்ளவில்லை, ஆனால் ஆட்சியாளர்களின் பரிசோதித்தலினூடாய்க் கடந்துசென்று, நம் மீட்பிற்காக மரித்த இந்த உயிர்த்தெழுதலாகவும், ஜீவனாகவும் உள்ள அவருக்காக நாம் அக்கறைக் கொள்கிறோம், அவரை நாம் நேசிக்கிறோம்.

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: கர்த்தர் யூதாஸால் காட்டிக் கொடுக்கப்பட்ட சமயத்திலிருந்து, அவர் சிலுவையில் அறையப்பட்ட சமயம் வரை, கர்த்தர் எதிர்கொண்ட அனைத்துமே தொந்தரவுக்குரியதாயும், துன்பத்திற்குரியதாயும், திகிலூட்டுவதாயும், அடக்குமுறைக்குரியதாயும் இருந்தது. நம் மத்தியில் உள்ள அதி தைரியமானவர்களைக் கூட பயமுறுத்தியிருக்கும் சூழ்நிலை ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தது. ஆயினும்கூட, ஒவ்வொரு சூழ்நிலையும் கர்த்தர் எப்படிப்பட்ட நபராக இருந்தார் என்பதை நிரூபிப்பதற்கான ஒரு சுற்றுச்சூழலை வழங்கியது. யோவான் 11:25 இல் கர்த்தர் தாம் உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருந்தார் என்று கூறினார். “கர்த்தரே ஜீவன் என்பதை நாம் எவ்வாறு அறிய முடியும்? அது அவர் மரணத்திற்குள் செல்வதாலும், அதன் மூலம் கீழ்ப்படுத்தப்படாமல் இருப்பதாலுமே ஆகும். கர்த்தர் மரணத்தால் பயமுறுத்தப்படவோ, தொந்தரவுசெய்யப்படவோ, கட்டுப்படுத்தப்படவோ அல்லது  ஆளப்படவோ இல்லை. நாம் இந்த இரண்டு அதிகாரங்களையும் [யோவான் 18 மற்றும் 19] வாசிக்கும்போது நாம் கண்டுபிடிப்பது என்னவெனில், கர்த்தர் மரணத்திற்குள் சென்றபோது, அவர் அதை வென்று கீழ்ப்படுத்தினார் என்பதே (Life-study of John, Message 42, p. 508). ஒவ்வொரு மரண சூழ்நிலையிலும், அவர் ஜீவனாக இருந்தார் என்பதை பின்வரும் எடுத்துக்காட்டுகள் காட்டுகின்றன:

யூதாஸ் போர்ச்சேவகக் குழுவுடன் (அவர்களது ஆயுதங்களுடன்) வந்தபோது, அவர் தம்மையே அவர்கள் கைகளில் ஏறெடுக்க  தைரியமாகவும், மனமுவந்து தானாக முன்வந்தும் ஒப்புக்கொடுக்கப் புறப்பட்டுச் சென்றார் (யோவான் 18:4). நீங்கள் இதைச் செய்திருக்க முடியுமா? (2) அவர்கள் தம்மைக் கைது செய்ய வந்தபோது, அவர் தம் சீஷர்களை ஓர் எளிமையான முறையில் கவனித்துக் கொள்ளும் அளவிற்குக் கர்த்தருக்கு இத்தகைய அமைதிநிலை இருந்தது (யோவான் 18:8). இந்தச் சூழ்நிலையில் நீங்கள் நிம்மதியாக இருந்திருப்பீர்களா? (3) மரண பயத்தைப் பற்றிய ஒரு துளியளவு அறிகுறியும் இன்றி, அவர் தம் பரிசோதகர்களுக்கு தைரியமாகப் பதிலளித்தார் (யோவான் 18:20-21, 34-37; 19:11). (4) அவர் பிலாத்துவின் அநியாயமான கசையடிகளால் (சாட்டை அடிகளால்) மனமுவந்து பாடநுபவித்தார் (யோவான் 19:1). (5) அவர் படைவீரர்களின் ஏளனம் செய்தலை அமைதியாக ஏற்றுக்கொண்டார் (யோவான் 19:2-3). (6) அவர் எதிர்ப்பின்றி சிலுவையில் ஆணியடிக்கப்பட்டார் (யோவான் 19:18). நாமும் பல கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறோம். இந்தச் சுற்றுச்சூழல்கள் அனைத்திலும் நாம், கிறிஸ்து நமக்குள் உயிர்த்தெழுதல் மற்றும் ஜீவனாக வாழ்கிறார் என்பதையும், மேலும் எதுவும் அவரை ஒடுக்கவோ அல்லது சோர்ந்துபோகப் பண்ணவோ முடியாது என்பதையும் நாம் அங்கீகரிக்க வேண்டும் (கலா. 2:20; யோவான் 11:25; ஏசா. 42:4). இதுவே நம் ஜெபமாக இருக்க வேண்டும், “இவ்வுயிர்ப்பின் ஜீவனை நான் காண / எச்சாவிலும் ஜீவாற்றல் ஊற்றட்டும், / என் அனுபவத்தில் உணரட்டும் / இந்த மெய் ஜீவன் கர்த்தர் கிறிஸ்துவே” (பாடல்கள், # 639).

சுவிசேஷ செயலாக்கம்: மதம் என்பது கிறிஸ்து இல்லாமல் தேவனுக்காகக் காரியங்களைச் செய்வதற்கான மனிதனின் கண்டுபிடிப்பே ஆகும். இதன் முதல் நிகழ்வு, ஆதியாகமம் 4 இல் கர்த்தருக்கான காயீனின் காணிக்கையில் காணப்படலாம். ஆபேல் செய்ததைப் போலவே, மனிதன் மந்தையின் தலையீற்றுகளின் பலியைக் காணிக்கையாக்குவதே கர்த்தருடைய வாஞ்சையாக இருந்தது, ஆயினும் காயீன் கர்த்தருக்குக் காய்கறிகளைக் காணிக்கையாக்கினான். ஆபேலின் பலி தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, அப்படியிருக்க காயீனின் பலி ஏற்றுக்கொள்ளப்படவில்லை. “காயீன் தன் சொந்த உழைப்பின் கனியை தேவனுக்குக் காணிக்கையாக்கினான் (ஆதி. 4:3). இரத்தஞ்சிந்துதலுக்கான எந்த இரத்தமும் இல்லாமல் அவன் நிலத்தின் கனிகளைக் கொண்டு வந்தான். இதன் பொருள், அவன் தன் பெற்றோரிடமிருந்து கேள்விப்பட்டிருந்த தேவனுடைய மீட்பின் வழியை அவன் நிராகரித்திருந்தான் என்பதே. காயீனின் பெற்றோருக்கு வெளிப்படுத்தப்பட்டபடியே தேவனுடைய மீட்பின் வழி ஒரு பலியாக இருந்தது, அதில் இரத்தம் சிந்தப்பட்டது, ஏனெனில் இரத்தஞ்சிந்துதல் இல்லாமல் பாவங்களின் நிவிர்த்தி இல்லை (எபி. 9:22)….காயீன் தேவனுடைய வழிக்காக அக்கறைக் கொள்ளவில்லை; அவன் தன் கருத்தின்படி தன் சொந்த வழியைக் கண்டுபிடித்தான்….[அவன்தான்] மதத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவனாக இருந்தான். யூதா 11, “காயீனுடைய வழியில் நடந்து” சென்றவர்களைப் பற்றி பேசுகிறது. காயீனின் வழி என்ன? அது மனிதனின் சொந்த முயற்சியாலும், பிசாசின் ஊக்கப்படுத்துதலின் கீழ் மனிதனின் சொந்தக் கண்டுபிடிப்பின்படியும் தான்தோன்றித்தனமாக தேவனைப் பிரியப்படுத்தவும், தேவனை ஆராதிக்கவும் நன்மை செய்வதே ஆகும். கிறிஸ்து இன்றி தேவனை மத ரீதியாக ஆராதிப்பதே காயீனின் வழி (Life-study of Genesis, Volume 1, Message 23, pp. 305–306). காயீனின் மேன்மைப்பாராட்டுதல், அவனது சொந்த உழைப்பின் கனியில் இருந்தது. மதரீதியானவர்களைப் பொறுத்தவரை, அவர்களது நம்பிக்கையும் அவர்களது சொந்த உழைப்பில்தான் உள்ளது—கிறிஸ்துவின் ஜீவிக்கும் நபர் இல்லாத போதிலும், தேவனைப் பிரியப்படுத்த அவர்களால் செய்ய முடிவதில்தான் உள்ளது. உங்கள் சொந்த உழைப்பில் உள்ள உங்கள் மேன்மைப்பாராட்டுதலை விட்டு திரும்புங்கள். தேவனுடைய பார்வையில் அழுக்கான கந்தையைப் போன்ற அதோடு உங்களை இரட்சிக்க இயலாத உங்கள் சொந்த நீதியால் தேவனைப் பிரியப்படுத்த முயற்சிக்கும் உங்கள் சொந்தக் கருத்துக்களிலிருந்தும் அதேபோல் திரும்புங்கள் (ஏசா. 64:6, எபே. 2:8). அதற்குப் பதிலாக, பாவங்களின் மன்னிப்புக்காக தம் இரத்தத்தைச் சிந்துவதில் தாம் செய்திருக்கிறவற்றில் விசுவாசம் வைத்து, ஜீவிக்கும் இயேசுவையும், அவரது இரட்சிப்பின் வழியையும் நோக்கித் திரும்புங்கள் (எபி. 11:6; மத். 26:28; கொலோ. 1:12-14).

மிக முக்கியக் காரியங்கள்: நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைப் பற்றிய ஒரு புரிந்துகொள்ளுதல் (II.C.).

பின்புல வாசிப்பு: Life-study of John, Message 42, pp. 508–512.

REFERENCES: Life-study of John, Message 42, pp. 508–512; Life-study of Luke, Message 51; Collected Works of Watchman Nee, Volume 38, Chapter 47; The Fulfillment of the Tabernacle and the Offerings in the Writings of John, Chapters 55–59; John 18:13, footnote 1; Mark 12:37, footnote 1; Hymns, #639.