கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல்

பகுதி 9

✵பாடம் 01 – 09

நியாயந்தீர்க்கப்படுதல் (1)

குறிக்கோள்: மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய சுவிசேஷங்களில் நியாயத்தீர்ப்பு வேளையின் போது ஒரு தேவ-மனிதனாகக் கர்த்தரின் கண்ணியத்தையும் கனத்தையையும் காண்பதற்கு.

பொருட்சுருக்கம்: சிலுவைக்குச் செல்வதற்கு முன், கர்த்தர் யூதத் தலைவர்களாலும், புறவின ஆட்சியாளர்களாலும் நியாயந்தீர்க்கப்பட்டார். இந்த நியாயத்தீர்ப்பினூடாய்க் கடந்துசென்ற பிறகு, கர்த்தர் குற்றமற்றவராக இருப்பதாக முழுமையாகக் காட்டப்பட்டு, சிலுவையில் நமக்காக மரிக்கத் தகுதியான பதிலீடாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டார். முதலில் கர்த்தர் இந்த ஊழல்நிறைந்த (கெட்டுப்போன) யூதத் தலைவர்களால் நியாயந்தீர்க்கப்பட்டார். அவர்கள் அவரைப் பொய்யாகக் குற்றம் சாட்டியபோது, அவர் தொடர்ந்து அமைதியாக இருந்தார், தன்னை மயிர்கத்தரிக்கிறவர்களுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஓர் ஆட்டைப்போல அவர் இருப்பார் என்று கூறும் ஏசாயா 53:7 இல் உள்ள தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார். அவர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா என்று அவர்கள் அவரிடம் கேட்டதற்கு, அவர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதான் என்றும், அன்றியும் மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் அவர்கள் காண்பார்கள் என்றும் வலுவாகவும் உறுதியாகவும் பதிலளித்தார் (கிரே.). கர்த்தருடைய பதிலால் கோபமடைந்த யூதத் தலைவர்கள், கர்த்தரைக் கண்டனம்செய்து, பிலாத்துவிடம் அவரைக் கொண்டுவந்தார்கள், அவனும் கர்த்தரிடம் கேள்வி கேட்டான். கர்த்தர் மீண்டும், தம் சகலத்தையும்-விஞ்சுகின்ற தெய்வீக மகத்துவத்துடன் கூடிய அதிஉயர்ந்த தரத்தாலான தம் மனிதப் பரிபூரணத்தில், பிலாத்துவின் முன் நின்று, குற்றம் இல்லாதவராகக் காணப்பட்டார். ஆயினும்கூட, சிலுவையில் அறையப்படும்படி பிலாத்து அவரை அநியாயமாக ஒப்புக்கொடுத்தான். சிலுவையில் அறையப்படுவதன் மூலம், கர்த்தர் ரோமானிய மரணதண்டனை முறையின்படி மரித்து, எவ்வாறு கர்த்தர் நம் பாவங்களுக்காக மரிப்பார் என்பது பற்றிய தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றினார். எல்லா வகையிலும், கர்த்தர் இந்த நியாயத்தீர்ப்பு வேளையில் தம்மை கண்ணியத்திலும் கனத்திலும் நடத்தினார்.

பின்புலம்: நாம் விமர்சிக்கப்படும்போது, நாம் புண்படுத்தப்படுகிறோம். நாம் அநியாயமாக நடத்தப்படும் போது, நாம் எதிர்த்துப் போராடுகிறோம். ஆனால் யூதர்கள், புறவினத்தார்கள் மற்றும் புறச்சமாய போர்வீரர்களின் துன்புறுத்தல் மற்றும் கொடுமைகளுக்கு மத்தியிலும் ஒரு கனத்திற்குரிய தேவ-மனிதனாக நின்ற ஒரு நபர் நம் ஆவியில் இருக்கிறார். இன்று நம் வாழ்க்கையில் நாம் அவரது வாழ்க்கையை அனுபவித்துமகிழ முடியும். அவரை அனுகரிக்க முயற்சிக்காதீர்கள். இந்தப் பாடத்தில் உள்ள எல்லா வசனங்களுக்கும் “ஆமென்” கூறுவதன் மூலம் வெறுமனே அவரை அனுபவித்துமகிழுங்கள்.

அதிகாரங்கள்: மத்தேயு 26–27; மாற்கு 14-15; லூக்கா 22-23.

போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:

சிலுவையில் மரிப்பதற்கு முன், கர்த்தர் தாம் நம் பதிலீடாக இருக்கத் தகுதியானவராக இருந்தார் என்பதை நிரூபிப்பதற்காக எல்லா திசைகளிலிருந்தும் பரிசோதிக்கப்பட்டார். பிரதான ஆசாரியர்களும், மூப்பர்களும் அவரது அதிகாரத்தைப் பற்றி அவரிடம் விசாரித்த இடமாகிய ஆலயத்திலிருந்து இந்தப் பரிசோதித்தல் தொடங்கி (மத். 21:23), அவர் இந்தப் பரிசோதித்தலின் கடைசி படியாகிய—யூதத் தலைவர்கள் மற்றும் ரோமானிய ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட தீர்ப்பை அடைந்த வரை தொடர்ந்தது (மத். 26:57-27:32). இந்த நியாயத்தீர்ப்பு வேளையின் போது, நாம் ஒரு தேவ-மனிதனாகிய கர்த்தரின் கண்ணியத்தையும் கனத்தையும் காண்கிறோம். யூதத் தலைவர்களின் தவறான குற்றச்சாட்டுகளுக்கும், புறவின ஆட்சியாளர்களின் ஊழல்ரீதியான கையாளுதலுக்கும் மத்தியில், கர்த்தர் தம் சகலத்தையும்-விஞ்சுகின்ற தெய்வீக மகத்துவத்துடன் கூடிய அதிஉயர்ந்த தரத்தாலான தம் மனிதப் பரிபூரணத்தில் தாம் நடந்துக்கொண்டார். இந்தக் கடைசி பரிசோதித்தலினூடாய்க் கடந்துசென்ற பிறகு, கர்த்தர் குற்றம் இல்லாதவராக இருப்பதாகக் காணப்பட்டார். எனவே அவர் நம் அனைவருக்காகவும் மரிப்பதற்கான ஒப்பற்ற பதிலீடாக இருக்க தகுதி பெற்றார். இந்தப் பாடத்தில் நாம் இந்த நியாயத்தீர்ப்பைக் குறித்து மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியோரின் விவரணத்தைப் பரிசீலிப்போம், மேலும் அடுத்த பாடத்தில் நாம் இந்த நியாயத்தீர்ப்பைக் குறித்த யோவானின் விவரணத்தைப் பரிசீலிப்போம்.

I. கர்த்தர், யூதர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் யூதத் தலைவர்களால் நியாயந்தீர்க்கப்பட்டார்—மத். 26:57-68; மாற்கு 14:53-65; லூக்கா 22:66-71

கர்த்தர் முதலில், யூதர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் யூதத் தலைவர்களால் நியாயந்தீர்க்கப்பட்டார். மத்தேயு 26:59, “பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் (சனஹெரின்) யாவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்” என்று கூறுகிறது (கிரே.). சன்ஹெரின் என்பது யூதர்களிடையே அதி உயர்ந்த நீதிமன்றமாக இருந்தது (அப். 4:5-6, 15; 5:27, 34, 41) மேலும் பிரதான ஆசாரியர்கள், மூப்பர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் வேதபாரகர்கள் அடங்கிய ஓர் ஆலோசனை சங்கமாக இருந்தது. அவர்கள் தேவனை ஆராதித்து, தேவனைப் பற்றி மக்களுக்குப் போதித்தாலும், அவர்கள் கர்த்தராகிய இயேசுவை நியாயத்தீர்ப்பதில் அவர்களld பொய்மை முழுவதும் அம்பலமாக்கப்பட்டது. அவர்கள் பல பொய் சாட்சிகளின் வாய்களினால் அவருக்கு எதிராகப் பலமுறை பொய்ச் சாட்சியம் தேடினார்கள், ஆனாலும் அவர்கள் எந்தச் சாட்சியத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை (மத். 26:59-61; மாற்கு 14:55-59).

A. கர்த்தர் தம் நடத்தையைப் பற்றிக் கேள்விக் கேட்கப்பட்டபோது ஒரு வார்த்தையும் பதிலளிக்கவில்லை—மத். 26:62-63; மாற்கு 14:60-61; ஏசா. 53:7).

கர்த்தர் பொய் சாட்சிகளால் அநியாயமாகக் குற்றம் சாட்டப்பட்ட போதிலும், அவர் தம்மையே நியாயப்படுத்த ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தன்னை மயிர்கத்தரிக்கிறவர்களுக்கு முன்பாக இருக்கிற ஓர் ஆட்டைப்போல அவர் சனஹெரினுக்கு முன்பாக நின்றார், மேலும் இவ்வாறு ” அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்” என்று கூறும் ஏசாயா 53:7 இல் உள்ள வார்த்தையை நிறைவேற்றினார்.

B. கர்த்தர் தம் நபர் தொடர்பாகக் கேள்விக் கேட்கப்பட்ட போது கடுமையாக பதிலளித்தார்—மத். 26:64; மாற்கு 14:62; லூக்கா 22:69-70

தம் நடத்தையைப் பற்றி கர்த்தர் தம் குற்றம்சாட்டுபவர்களுக்குப் பதிலளிக்கவில்லை, ஆனால் தம் நபரைப் பற்றி அவர் கடுமையாகவும் உறுதியாகவும் பதிலளித்தார் (Mark 14:62, footnote 1 ஐப் பார்க்கவும்). அவர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா என்று கேட்கப்பட்ட போது கர்த்தர், “நீர் சொன்னபடிதான்; அன்றியும் மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று கூறினார் (மத். 26:64, கிரே.). தம் சிலுவைமரணத்திற்கு முன்பு மட்டுமல்லாமல், பரமேறுதலில் அவரது உயிர்த்தெழுதலுக்குப் பிறகும் (அப். 7:56), வானத்தின் மேகங்கள்மேல் தாம் திரும்பி வரும்போதும் கூட கர்த்தர் தாம் மனுஷகுமாரன் என்று இங்கே சுட்டிக்காட்டினார் (மத். 26:64). பிரதான ஆசாரியன் கர்த்தரிடம், அவர் தாம் “தேவகுமாரன்” தானா என்று கேட்டான், ஆனால் கர்த்தர் “மனுஷகுமாரன்” என்று பதிலளித்தார், மத்தேயு 4 இல் உள்ள அதே வழியில் தம்மைச் சோதித்த பிசாசுக்கு அவர் பதிலளித்திருந்த அதே வழியில் பதிலளித்தார். தேவனுடைய குறிக்கோளை நிறைவேற்றுதலுக்காக, கர்த்தர் ஒரு மனிதனாக இருக்க வேண்டியிருந்தது; இவ்வாறு கர்த்தர் தம்மைக் குற்றம்சாட்டுகிறவர்களுக்கு முன்பாக ஒரு மனிதன் என்ற தம் தளத்தில் நின்றார். கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டதும், பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, “இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன?” என்று கூறினான் (மத். 26:65). பின்னர் அவர்கள் அவரது முகத்தில் துப்பி, அவரது கண்களை மூடிக்கொண்டு, அவரைத் தங்கள் முஷ்டிகளால் அடித்து, அவரைக் கன்னத்தில் அறைந்து, “உம்மை அடித்தவன் யார்? அதை ஞானதிருஷ்டியினால் எங்களுக்குச் சொல்லும்” என்று கூறினார்கள் (மத். 26:66-68; மாற்கு 14:65). இவை அனைத்திற்கும் மத்தியில், கர்த்தர் ஒருபோதும் தம்மையே நியாயப்படுத்தாமலும், ஒருபோதும் எதிர்த்துச் சண்டையிடாமலும் வெற்றிசிறந்தார்.

II. புறவினத்தாரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ரோம ஆளுநரால் கர்த்தர் நியாயந்தீர்க்கப்பட்டார்—மத். 27:126; மாற்கு 15:1-15; லூக்கா 23:125

“தேவனுடைய இறையாண்மையின் கீழ் [அவர்] தன்னை மயிர்கத்தரிக்கிறவர்களுக்கு முன்பான ஓர் ஆடாக யூதத் தலைவர்களால் மட்டுமின்றி (ஏசா. 53:7), குற்றம்சாட்டுகிறவர்களுக்கு முன்பான ஒரு குற்றவாளியாக ரோம ஆளுநராலும் நியாயந்தீர்க்கப்பட்டார். யூதத் தலைவர்களால் பிரதிநிதிப்படுத்தப்படும் யூதர்களுக்காக மட்டுமல்லாமல், ரோம ஆளுநரால் பிரதிநிதிப்படுத்தப்படும் புறவினத்தாருக்காகவும் ஒரு மீட்கும் பொருளாக (10:45) அவர் தம் பிராணனைக் (ஜீவனைக்) கொடுத்துப் பாவிகளைச் இரட்சிக்க மரிக்கக்கூடுமாறு, அவர் இவ்விதமாய் நியாயந்தீர்க்கப்பட்டார் (Life-study of Luke, Message 51, p. 444).

A. கர்த்தர் பிலாத்துவால் அநியாயமாக மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்—மத். 27:26

ரோம சட்டம் உலகில் அதி வலிமையானதாக  இருந்தாலும், அந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் (செயல்படுத்துவதில்) ரோம ஆட்சியாளர்கள் மிகவும் பலவீனமாகவே இருந்தனர். பிலாத்து அத்தகைய ஓர் ஆட்சியாளனாக (யூதேயாவில் சீசரின் [இராயனின்] ஒரு முகவராக, கி.பி. 26–35) இருந்தான். அவன் கர்த்தருடனான தன் இடைபடுதலில் நியாயமற்றவராக இருந்தான். பரபாஸ் குற்றவாளி என்பதையும், கர்த்தர் குற்றமற்றவர் (நிரபராதி) என்பதையும் அறிந்திருந்தும் அவன், “எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவையோ” என்று யூதர்களிடம் அநியாயமாகக் கேட்டான் (மத். 27:18). பிரதான ஆசாரியர்களும், மூப்பர்களும் பரபாசை விடுவிக்கக் கேட்கும்படியும், இயேசுவை அழிக்கும்படியும் மக்கள் கூட்டத்தினரை சம்மதிக்க வைத்த போது (மத். 27:20-23), பிலாத்து கூச்சத்துடன், பொறுப்பற்ற முறையில் மக்கள் கூட்டத்தினருக்கு முன்பாகத் தன் கைகளைக் கழுவி, “இந்த மனிதனுடைய இரத்தத்திற்கு நான் குற்றமற்றவன்; நீங்களே அதைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறினான் (மத். 27:24). பிலாத்து மரணத்துக்கு ஏதுவான குற்றம் (காரணம்) ஒன்றும் கர்த்தரில் காணவில்லை என்றாலும் (லூக்கா 23:22), பிலாத்து (ஒரு கொலைகாரனாகிய) பரபாசை விடுவித்து, இயேசுவை மரண தண்டனைக்கு உட்படுத்தினான் (மத். 27:26). இது, பிலாத்து எவ்வளவாய் முற்றிலும் அநீதியானவனாக இருந்தான் என்பதைக் காட்டுகிறது. ஆயினும் கர்த்தர் மீண்டும் கண்ணியத்திலும் கனத்திலும் தாம் நடந்துக்கொண்டார். யூதர்களின் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், கர்த்தர் தம்மையே நியாயப்படுத்தவில்லை, அதனால் பிலாத்து மிகவும் ஆச்சரியப்பட்டான் (மத். 27:13-14; மாற்கு 15:2-5).

B. கர்த்தர் பிலாத்துவால் அநியாயமாகச் சாட்டையால் அடிக்கப்பட்டார்—மத். 27:26

பிலாத்து (தான் மரணத்துக்கு ஏதுவான குற்றம் [காரணம்] ஒன்றும் காணாத) கர்த்தரை அநியாயமாக மரண தண்டனைக்கு உட்படுத்தியது மட்டுமல்லாமல், சிலுவையில் அறையப்படுவதற்கு அவன் இயேசுவை ஒப்புக்கொடுக்கும் முன் அவரைச் சாட்டையால் அடிக்கவும் செய்தான். (சாட்டையால் அடித்தல் என்பது ஒரு வகையான தண்டனை அல்லது சித்திரவதையாக இருந்தது, அதில் ஒருவர் கடுமையாக வாரினால் அடிக்கப்பட்டார்.) இது அரசியலின் இருளையும் அநியாயத்தையும் முற்றும்முடிய அம்பலமாக்கியது. இந்த அநியாயம் ஏசாயா 53:5, 8ஆகியவற்றையும் நிறைவேற்றியது.

C. ரோம வழியிலான மரணதண்டனையின்படி சிலுவையில் அறையப்படுவதற்குக் கர்த்தர் இறையாண்மையாக ஒப்புக்கொடுக்கப்பட்டார்—மத். 27:26

“யூத மரண தண்டனை கல்லெரிவதன் மூலம் நிறைவேற்றப்பட்டது (லேவி. 20:2, 27; 24:14; உபா. 13:10; 17:5). சிலுவைமரணம் என்பது அடிமைகள் மற்றும் கொடிய குற்றவாளிகளுக்கு மட்டுமே மரண தண்டனை அளிப்பதற்காக ரோமர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு புறவின நடைமுறையாக இருந்தது (எஸ். 6:11). கர்த்தராகிய இயேசு சிலுவையில் அறையப்படுதல், பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களின் ஒரு நிறைவேற்றமாக மட்டுமல்லாமல் (உபா. 21:23; கலா. 3:13; எண். 21:8-9), அவர் தாம் எவ்வாறு மரிப்பார் என்பதைக் குறித்த கர்த்தருடைய வார்த்தையின் நிறைவேற்றமாகவும் இருந்தது (யோவான் 3:14; 8:28; 12:32). இவை கல்லெரிதல் மூலம் நிறைவேற்றப்பட்டிருக்க முடியாது” (Matt 27:26, footnote 2).

III. கர்த்தர், புறசமய படைவீரர்களால் ஏளனஞ்செய்யப்பட்டார்—மத். 27:27-32

கர்த்தர் நியாயந்தீர்க்கப்பட்ட பிறகும், அவர் சிலுவையில் அறையப்பட்டதற்கு முன்பும், அவர் ஆளுநரின் படைவீரர்களால் அநியாயமாக நடத்தப்படுதலின் கீழ் பாடநுபவித்தார். படைவீரர்கள் இயேசுவை ஆளுநர் மாளிகைக்குள் அழைத்துச் சென்று, போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து, அவரது வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான ஒரு மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்ளுகளால் பின்னப்பட்ட ஒரு கிரீடத்தை அவரது சிரசின்மேல் வைத்து, அவரை ஏளனம் செய்து, அவர் மீது துப்பி, அவரது தலைக்குள் முட்களை அடித்தார்கள். பின்னர் சிலுவையில் அறையப்படுவதற்கு அவரை அவர்கள் கொண்டுபோனார்கள் (மத். 27:27–32). இந்த அனைத்து அவமதிப்புகள் முழுவதும், கர்த்தர் தாம் கண்ணியமும் கனமும் நிறைந்த ஒரு தேவ-மனிதனாக நடந்துக்கொண்டார். அவர் இந்தப் படைவீரர்களைக் கடிந்துக்கொள்ளவும் இல்லை, அல்லது அவர் ஓர் எதிர்ப்பையோ புகாரையோ ஒலிப்பதற்குத் தம் வாயைத் திறக்கவும் இல்லை.

IV. நியாயத்தீர்ப்பின் வேளையில் கர்த்தர் ஒரு தேவ மனிதனாக கண்ணியமானவராகவும் கனத்திற்குரியவராகவும் இருந்தார்

“யூத மதத் தலைவர்களின் குற்றச்சாட்டுகள் அவர்களது மதத்தில் அவர்களின் பொய்மையையும் வஞ்சகத்தையும் அம்பலப்படுத்தின, ரோம அதிகாரிகளால் வழங்கப்பட்ட நியாயத்தீர்ப்பு அவர்களது அரசியலில் அவர்களின் இருளையும், அழுகியதன்மையையும் அம்பலமாக்கியது. அதே சமயம், மனித இரட்சகர் தம் சகலத்தையும் விஞ்சுகிற தெய்வீக மகத்துவத்துடன் அதிஉயர்ந்த தரத்தாலான தம் மனிதப் பரிபூரணத்தில் மீண்டும் நியாயப்படுத்தப்பட்டார். இது அவர் யாருக்காக மரிக்க உத்தேசித்தாரோ அந்தப் பாவிகளுக்கான பதிலீடாக இருப்பதற்கு அவர் முழுவதும் தகுதியானவர் என்பதற்கான ஓர் அதிபலமான அடையாளமாக இருந்தது”” (Luke 23:24, footnote 1). கர்த்தர் ஒரு மனிதனாக மதரீதியான மற்றும் அரசியல் உலகங்களால் அவற்றின் ஊழலில் நியாயந்தீர்க்கப்பட்டார். அவர் பெற்ற சகல அநீதியான மற்றும் ஊழல்நிறைந்த நியாயத்தீர்ப்பு, அவர் பெற்ற அநியாய மற்றும் கொடூரமான நடத்தை முழுவதும், கர்த்தராகிய இயேசு ஒரு தேவ-மனிதனாக கண்ணியமும் கனமும் நிறைந்த முறையில் தாம் நடந்துக்கொண்டார். மதம், அரசியல் ஆகிய இரண்டின் இருள் மற்றும் ஊழலுக்கு மாறாக, கர்த்தராகிய இயேசு தேவனுடைய ஒரு சாட்சியாகப் பிரகாசித்தார்.

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: ஒரு சாக்போர்டில், இரண்டு நெடுவரிசைகளை (கட்டங்கள்) வரையவும். ஒரு நெடுவரிசையில் (கட்டத்தில்), யூத மற்றும் புறவின தலைவர்களின் அநியாயங்கள் அனைத்தையும் விவரிக்கவும்: (1) யூதத் தலைவர்கள் அவருக்கு எதிராகப் பொய் சாட்சியம் தேடினார்கள் (மத். 26:59); (2) தேவதூஷணம் செய்ததாக அவரை அவர்கள் குற்றம் சாட்டினார்கள் (மத். 26:65); (3) அவர்கள் அவரது முகத்தில் துப்பினார்கள் (மத். 26:67); (4) அவர்கள் அவரைத் தங்கள் முஷ்டிகளால் அடித்தனர் (மத். 26:67); (5) அவர்கள் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள் (மத். 26:67); (6) அவர்கள் அவருடைய கண்களைக் கட்டி, அவரை அடித்துக்கொண்டிருந்தவன் யார் என்று ஞானதிருஷ்டியினால் சொல்லும்படி அவரிடம் சொன்னார்கள் (மத். 26:68; மாற்கு 14:65); (7) பிரதான ஆசாரியர்களும், தலைவர்களும் பிலாத்துவுக்கு முன்பாக அவர் மீது குற்றம் சாட்டினார்கள் (மத். 27:12); (8) பிலாத்துவும் ஏரோதுவும் ஒருவருக்கொருவர் அவரை முன்னும் பின்னுமாக அனுப்பி அலைக்கழித்தனர் (லூக்கா 23:5-12); ஏரோதின் படைவீரர்கள் அவரை ஏளனம்செய்து, அவரை இகழ்ந்தனர் (லூக்கா 23:11); (10) பிலாத்து அவரை அநியாயமாக மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, அவருக்குப் பதிலாக பரபாஸ் என்ற ஒரு கொலைகாரனை விடுவித்தான் (மத். 27:26); (11) பிலாத்து இயேசுவை சாட்டையால் அடித்தான் (மத். 27:26); (12) பிலாத்துவின் படைவீரர்கள் அவரது வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான ஒரு மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்ளுகளால் பின்னப்பட்ட ஒரு கிரீடத்தை அவரது சிரசின்மேல் வைத்து, அவரைத் தலையில் அடித்து, அவரை ஏளனம் செய்தனர் (மத். 27:27–32). பின்னர், இரண்டாவது நெடுவரிசையில் (கட்டத்தில்), தன்னை மயிர்கத்தரிக்கிறவர்களுக்கு முன்பாக இருக்கிற ஓர் ஆட்டைப்போல நியாயத்தீர்ப்பு வேளையில் கர்த்தருடைய கண்ணியமான அமைதியைப் பற்றி விவரிக்கவும் (ஏசா. 53:7): (1) அவர் நியாயந்தீர்க்கப்பட தம்மைக் கொண்டுபோகும்படி தம்மைக் குற்றம்சாட்டியவர்களை அனுமதித்தார் (மத். 26:57); (2) அவர் யூதர்களின் பொய் சாட்சிகளுக்கு முன்பாகத் தொடர்ந்து அமைதியாக இருந்தார் (மத். 26:62–63; ஏசா. 53:7); (3) அவர் தாம் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவாக இருத்தலைப் பற்றி கடுமையாக பதிலளித்தார் (மத். 26:64; மாற்கு 14:62); (4) சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் அதோடு வானத்தின் மேகங்கள்மேல் வரும் மனுஷகுமாரனாக அவரை அவர்கள் காண்பார்கள் என்று அவர் யூதத் தலைவர்களுக்குத் தெரியப்படுத்துவதன் மூலம், அவர்களுக்கு  மேலும் பதிலளித்தார் (மத். 26:64); (5) அவர் பிலாத்துவுக்கு முன் குற்றம் சாட்டப்பட்டபோது அவர் தொடர்ந்து அமைதியாக இருந்தார் (மத். 27:12); (6) அவர் ஏரோதுவால் விசாரிக்கப்பட்ட போது தொடர்ந்து அமைதியாக இருந்தார் (லூக்கா 23:9); (7) ஒரு ஊழல்நிறைந்த புறவின ஆட்சியாளராகிய பிலாத்துவின் பார்வையில் கூட அவர் குற்றமற்றவராக இருந்தார் (லூக்கா 23:4). கர்த்தர் தம் நியாயத்தீர்ப்பு வேளையில் எவ்வளவு அற்புதமாக தாம் நடந்துகொண்டார் என்பதையும், தம்மைத் தகாதமுறையில் நடத்திய அனைவருக்காகவும் அவர் எவ்வாறு மரித்தார் என்பதையும் கொண்டு இளம்வாலிபர்களுக்குக் கருத்துப்பதிவை ஏற்படுத்தவும். உண்மையில், (முதல் நெடுவரிசையில் [கட்டத்தில்] உள்ள மக்களை விட எவ்விதத்திலும் சிறந்தவர்களாக இல்லாத) அந்தப் பாவமுள்ள, தகாதமுறையில் நடத்தும் மக்களால் நாம் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டோம், ஆனால் பாவிகளாகிய நம் அனைவருக்காகவும் கர்த்தர் மரித்தார். என்னே ஓர் அற்புதமான இரட்சகர்!

சுவிசேஷ செயலாக்கம்: பழைய ஏற்பாட்டில், இஸ்ரயேல் புத்திரரின் பாவங்களை மூடுவதற்காக ஒரு விலங்கு காணிக்கையாக்கப்பட முடிவதற்கு முன், அது எந்த விதமான குறைபாடும் இல்லாததாக இருந்ததா என்பதை உறுதிப்படுத்த முதலில் அது கவனமாக ஆய்வுசெய்யப்பட வேண்டியிருந்தது. விலங்குகளில் ஓர் ஒற்றை களங்கம் (கறை) அல்லது குறைபாடு காணப்பட்டால் கூட, அது காணிக்கையாக்கப்பட முடியாத அளவிற்கு இந்தப் பரிசோதனை மிகவும் நுணுக்கமானதாக இருந்தது அதோடு இந்தத் தரம் மிகவும் உயர்ந்ததாக இருந்தது. இந்த ஆய்வு முழுவதும், காணிக்கையாக்குபவர்கள் தங்கள் கைகளில் அமைதியாக இருக்கும் விலங்குகளில் எந்தக் குறையும் காணப்படவில்லை எனில், தங்கள் பாவமான ஜீவன்களுக்கான ஒரு மூடுதலாக அதன் பரிபூரணமான ஜீவனைக் காணிக்கையாக்குவார்கள். இந்த வகையான காணிக்கை பழைய ஏற்பாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் ஏறெடுக்கப்பட்டது, எண்ணற்ற விலங்குகளின் பலி செலுத்தப்படும்படி கோரியது. பழைய ஏற்பாட்டைச் சேர்ந்தக் காணிக்கைகளைப் போலவே, கர்த்தராகிய இயேசுவும் பரிசோதிக்கப்பட வேண்டியிருந்தது. எவ்வளவு அதிகமாக நாம் கர்த்தரை இந்தக் களங்கமற்றவராகவும் (கறையற்றவராகவும்) பாவமில்லாதவராகவும் பார்க்கிறோமோ, நாம் எவ்வளவு பாவமுள்ளவர்கள் என்பதை அவ்வளவு அதிகமாக நாம் புறத்தூண்டுதலின்றி உணர்ந்தறிகிறோம். நீதியின் அதி உயர்ந்த தரத்தின்படி ஒரு பரிபூரணமான மனித வாழ்க்கையை வாழ்ந்தப் பிறகு, கர்த்தர் அக்கிரமக்காரர்களால் கைது செய்யப்பட்டார், யூதத் தலைவர்களால் நியாயமற்ற முறையில் நியாயந்தீர்க்கப்பட்டு குற்றம்சாட்டப்பட்டார், மேலும் கோழைத்தனமான அரசியல் ரோம ஆளுநரான பிலாத்துவால் மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு அநியாயமாக சாட்டையால் அடிக்கப்பட்டார். ஆயினும், அவர் குற்றம் இல்லாதவராகக் காணப்பட்டார், அவர்களுடைய அநீதியான பரிசோதித்தலின் கடுங்கோபத்திலிருந்து நீதிமானாக வெளிப்பட்டார். இவ்வாறு பரிசோதிக்கப்பட்டு, மாசற்றவராகக் (களங்கமற்றவராக) காணப்பட்டிருக்கிற பின், கர்த்தர் நம்மை தேவனிடம் கொண்டு வரக்கூடுமாறு, நீதிமானாகிய அவர், அநீதியுள்ளவர்களாகிய நம் சார்பில் மரிக்கக்கூடுமாறு அவர் தொடர்ந்து சிலுவைக்குச் சென்றார் (1 பேது. 3:18). “வழி தடையின்றியிருக்க, இப்போது அனைவரும் வரலாம்” (Hymns, #1109, stanza 1). அவர் தேவ ஆட்டுக்குட்டியாக வந்தார், ஒரு பரிபூரணமான மனித வாழ்க்கை வாழ்ந்தார், நம் அனைவரின் சார்பாகவும் மரித்தார், நம் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக தம் விலையேறப்பெற்ற இரத்தத்தைச் சிந்தினார், மேலும் இப்போது உயிர்த்தெழுதலில், ஜீவன்-தரும் ஆவியானவராக அவர் நம் ஜீவனாக நம்மால் பெறுக்கொள்ளப்பட இயல்கிறார் (யோவான் 1:29; 3:16; 1 பேது. 1:19; 1 கொரி. 15:45; கொலோ. 3:4). பாவம்-நீக்குபவராகவும், ஜீவன்-தருபவராகவும் அவரை இப்போதே பெற்றுக்கொள்ளுங்கள்.

மிக முக்கியக் காரியங்கள்: நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைப் பற்றிய ஒரு புரிந்துகொள்ளுதல் (II.C.).

பின்புல வாசிப்பு: Life-study of Mark, Message 46, pp. 399–403.

REFERENCES: Luke 23:24, footnote 1; Life-study of Luke, Message 51, pp. 442–448; Mark 14:62, footnote 1; Life-study of Mark, Message 46, pp. 399–403; Recovery Version Outline of Mark, pp. 233, 235; Matthew 27:26, footnote 2; Life-study of Matthew, Message 57, p. 669; Message 69, pp. 798–801; Message 70, pp. 805–809; Collected Works of Watchman Nee, Volume 38, pp. 341–346.