வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்
பகுதி 8
✵பாடம் 01 – 08
✵பாடம் 10 – 18
கிறிஸ்துவின் ஊழியம்
தம் சீஷர்களுக்குப் பயிற்சியளித்தல் (1)
குறிக்கோள்: நம்மைக் கர்த்தருக்குப் பயனுள்ளவர்களாக ஆக்குவதற்கான பயிற்சியின் அவசியத்தைக் காண்பதற்கு.
பொருட்சுருக்கம்: பூமியில் தம் ஊழியத்தின் ஆண்டுகளின் போது, கர்த்தராகிய இயேசு தம் சீஷர்களுக்குக் போதித்தது மட்டுமல்லாமல்—அவர் அவர்களுக்குப் பயிற்சி அளித்தார், அதாவது தங்கள் இயற்கையான ஜீவனில் தங்களின்படி அல்ல, மாறாக தெய்வீக ஜீவனில் கிறிஸ்துவின்படி வாழவும் சேவிக்கவும் அவர்களை சீஷராக்குவதன் மூலம் அவர் அவர்களை ஆயத்தப்படுத்தினார். போதிப்பது என்றால் ஒருவரின் பிரகாசிப்பித்தலுக்காகச் சத்தியத்தை உட்பகிர்வதாகும்; பயிற்சியளிப்பது என்றால் ஒருவரின் எதிர்கால பயன்பாட்டிற்காக ஒருவரின் குணத்தை வடிவமைப்பதாகும். கர்த்தர் எல்லா சீஷர்கள்மீதும் வேலைசெய்தாார், ஆனால் இந்தப் பாடத்தில் நாம் பேதுருவுக்குக் கர்த்தர் பயிற்சியளித்ததில் உள்ள ஒரு சில சம்பவங்கள் குறித்து (ஓர் எடுத்துக்காட்டாக) கவனம் செலுத்துவோம். மத்தேயு 16 மற்றும் 17 இல், கர்த்தர், பேதுருவைக் குவிமையமாகக் கொண்டு, சீஷர்களுக்குப் பல்வேறு காரியங்களைக் குறித்துப் பயிற்சியளித்தார்: அவரை ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவாக அறிவதற்கான வெளிப்பாட்டின் தேவை (மத். 16:13–17); சுயத்தை மறுதலித்து, சிலுவையை எடுத்துக்கொண்டு, அவரைப் பின்பற்ற வேண்டிய அவசியம் (மத். 16:21–26); தேவன் பூரிப்படையும் ஒருவராகக் கிறிஸ்துவை இனங்கண்டுகொள்ளவும், அவருக்குச் செவிகொடுக்கவும் வேண்டிய அவசியம் (மத். 17:1–8); விசுவாசத்தில் ஜெபிக்க வேண்டிய அவசியம் (மத். 17:14–21); கிறிஸ்துவின் குமாரத்துவத்தைப் பற்றிய வெளிப்பாட்டையும் தரி்சனத்தையும் பிரயோகிக்க வேண்டிய அவசியம் (மத். 17:24–27). இந்த அதிகாரங்களில் கர்த்தர் பேதுருவைக் கடிந்துகொள்ளுதலையும், தேவன் பேதுருவுக்குக் குறுக்கிடுதலையும், கர்த்தர் பேதுருவை மீன் பிடிக்கக் கடலுக்கு அனுப்புவதன் மூலம் அவனை ஒழுங்குபடுத்துதலையும் நாம் காண்கிறோம். இந்தக் காரியங்கள் எல்லாவற்றிலும் கர்த்தராகிய இயேசு தம் சீஷர்களின் ஆள்தத்துவத்தைத் தொட்டு, அவர்களை வடிவமைத்து, அவரது தொடர்ச்சியாக அவரைச் சேவிப்பதற்கு அவர்களை ஆயத்தப்படுத்தினார். அவரது பயிற்சியின் ஒரு விளைவாக, சீஷர்கள் அவரைச் சேவித்தது மட்டுமல்லாமல், புதிய எருசலேமின் அஸ்திபாரங்களாகவும் ஆனார்கள்.
பின்புலம்: நீதிமொழிகள் 22:6, “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” என்று கூறுகிறது. இந்த வசனம் இரண்டு பிரகாசிப்பிக்கும் குறிப்புகளைக் கொடுக்கிறது. முதலில் இது “வழி” பற்றி் பேசுகிறது, அதாவது நம் வாழ்க்கையில் நேர்த்தியான வழியை எடுத்துக்கொள்ள நமக்குப் பயிற்சி தேவை என்பதை இது காட்டுகிறது. ஒரு நேர்த்தியான திசையை நோக்கிய ஒரு நேர்த்தியான வழியில் நம் வாழ்க்கையை வாழ்வதற்கு வழிகாட்டுதலும் பயிற்சியும் தேவை என்ற ஓர் அடிப்படையான உணர்ந்தறிதலை இளம் வாலிபர்கள் பெற வேண்டும். இரண்டாவதாக இந்த வசனம், நாம் இளம் வயதாய் இருக்கும்போதே இந்தப் பயிற்சி பெறப்பட்டது எனில், அது ஒரு நேர்மறையான மற்றும் நீடித்த தாக்கத்தைக் கொண்டிருந்து, இவ்வாறு நமக்கு வழிகாட்டப்பட்டிருக்கும் நேர்த்தியான வழியிலிருந்து விலகிவிடாமல் நம்மைக் காத்துக்கொள்கின்றது என்பதைக் காட்டுகிறது. இளம் வாலிபர்கள் கர்த்தருடைய பயிற்சியைப் பொக்கிஷமாகக் கருத வேண்டும். இந்த பயிற்சி கடுமையானதோ, இரக்கமற்றதோ, குறிக்கோளற்றதோ இல்லை. மாறாக இந்தப் பயிற்சி நம் அன்புக்குரிய கர்த்தரிடமிருந்து தாமே வருகிறது, இவர் தம் வார்த்தையில் உள்ள எழுத்துக்களால் நமக்குப் பயிற்சி அளிப்பது மட்டுமல்லாமல், அவருக்கான சேவையில் நம் பயனுள்ளத்தன்மைக்காக நமக்குள் இருந்து வாழவும், தம் உள்ளார்ந்த பேசுதல் மூலம் நமக்கு வழிகாட்டவும்கூட செய்கிறார்.
அதிகாரங்கள்: மத்தேயு 16–17.
கற்பிப்பதற்கான உண்மைகள் கொண்ட செய்திக்குறிப்பு
இந்தப் பன்னிரண்டு சீஷர்களும், கர்த்தர் தம் ஊழியத்தின் அதிகரிப்புக்காகவும் பரவலுக்காகவும் தெரிந்தெடுத்தவர்களாக இருந்தனர். அவர்கள் ஆரம்பத்தில் மிகவும் “கச்சா” பொருளாக இருந்தனர்! (யூதேய தேசத்தானாகிய) யூதாஸ் ஸ்காரியோத்தைத் தவிர மற்ற அனைவரும் கலிலேயாவைச் சேர்ந்தவர்கள், இது பயனுள்ள எதையும் உற்பத்தி செய்வதில் நற்பெயரைக் கொண்டிராத ஒரு பிராந்தியமாக இருந்தது (யோவான் 7:52). சீஷர்களில் குறைந்தது நான்கு பேர் மீனவர்களாக இருந்திருந்தனர், அநேகமாக சிறிதளவே முறையான கல்வியைப் பெற்றிருந்தனர். சீஷர்களில் ஒருவன் ஒரு வரி வசூலிப்பவனாக இருந்திருந்தான். குறைந்த பட்சம் ஒருவனாவது யோவான் ஸ்நானகனின் ஒரு முன்னாள் சீஷனாக இருந்திருந்தான் (யோவான் 1:35–41). அவர்கள் அநேகமாகப் பல தலைசிறந்தக் குணாதிசயங்களைக் கொண்டிருந்து கர்த்தரை நேசித்த போதிலும், அவர்கள் கர்த்தருடன் இருந்த ஆண்டுகளில், அவர்களது வலுவான இயற்கையான கட்டமைப்பு மற்றும் மதரீதியான கருத்துக்கள் காரணமாக கர்த்தர் அவர்களை எதற்குள் கொண்டுவர முற்பட்டாரோ அதற்குள் நுழைவதற்கான இடம் மாற்றத்தை அவர்கள் மேற்கொள்ள முடியவில்லை. எனினும் கர்த்தர், தம் தொடர்ச்சியாக இருப்பதற்கான சீஷர்களைத் தேர்ந்தெடுத்திருந்தார். ஆகவே அவர்கள் மற்றவர்களுக்குப் போதிக்க முடியுமாறு வெறுமனே அவரது போதனைகளைப் புரிந்துகொள்வதற்காக மட்டுமல்லாமல், கர்த்தர் தாமே செய்திருந்ததைப் போலவே அவர்கள் இறுதியில் தேவ-மனித வாழ்க்கையை வாழவும், மற்றவர்களுக்கு தெய்வீக ஜீவனை ஊழியம் செய்யவும் முடியுமாறு அவர்களது சாட்சாத்து ஆள்தத்துவத்திற்குள் நுழையும்படி அவர் அவர்களைப் பயிற்றுவிக்க, அவர்களைச் சீஷராக்க வேண்டியிருந்தது.
I. கர்த்தருடைய ஊழியத்தில், அவர் தம் சீஷர்களுக்கு உயர்ந்த சத்தியத்தைப் போதித்தது மட்டுமல்லாமல்; அவர் அவர்களுக்குப் பயிற்சியளிக்கவும் செய்தார்.
கர்த்தருடைய ஊழியத்தில், அவர் தம் சீஷர்களுக்கு உயர்ந்த சத்தியத்தைப் போதித்தது மட்டுமல்லாமல்; அவர்களது எதிர்கால பயனுள்ளத்தன்மைக்காக அவர்களது குணத்தை வடிவமைத்து அவர்களுக்கு அவர் பயிற்சியளிக்கவும்கூட செய்தார். போதிப்பது என்றால் ஒருவரின் பிரகாசிப்பித்தலுக்காகச் சத்தியத்தை உட்பகிர்வதாகும்; பயிற்சியளிப்பது என்றால் ஒருவரின் எதிர்கால பயன்பாட்டிற்காக ஒருவரின் குணத்தை வடிவமைப்பதாகும். பேதுருதான் கர்த்தருடைய சீஷர்களில் முன்னணி வகிப்பவனாக இருந்தான் (ஒப். மாற். 16:7), ஆகவே எவ்வாறு கர்த்தர் தம் சீஷர்களுக்குப் பயிற்சி அளித்தார் என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டாக நாம் பேதுருவின் வரலாற்றைப் பார்க்கலாம். மத்தேயு 16 மற்றும் 17 இல், கர்த்தர், பேதுருவைக் குவிமையமாகக் கொண்டு, சீஷர்களுக்குப் பல்வேறு காரியங்களைக் குறித்துப் பயிற்சியளித்தார்: அவரை ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவாக அறிவதற்கான வெளிப்பாட்டின் தேவை (மத். 16:13–17); சுயத்தை மறுதலித்து, சிலுவையை எடுத்துக்கொண்டு, அவரைப் பின்பற்ற வேண்டிய அவசியம் (மத். 16:21–26); தேவன் பூரிப்படையும் ஒருவராகக் கிறிஸ்துவை இனங்கண்டுகொள்ளவும், அவருக்குச் செவிகொடுக்கவும் வேண்டிய அவசியம் (மத். 17:1–8); விசுவாசத்தில் ஜெபிக்க வேண்டிய அவசியம் (மத். 17:14–21); கிறிஸ்துவின் குமாரத்துவத்தைப் பற்றிய வெளிப்பாட்டையும் தரி்சனத்தையும் பிரயோகிக்க வேண்டிய அவசியம் (மத். 17:24–27). கர்த்தரைப் பின்பற்றுவது என்றால் நிலையான பயிற்சியில் இருப்பதாக இருந்தது. நான்கு சுவிசேஷங்கள் முழுவதிலும், கர்த்தர் தொடர்ந்து பேதுருவையும் சீஷர்களையும் பயிற்றுவித்து வந்தார்.
A. போதிப்பது என்றால் ஒருவரின் பிரகாசிப்பித்தலுக்காகச் சத்தியத்தை உட்பகிர்வதாகும்—அப். 18:11; 1 கொரி. 14:6, 26; கொலோ. 1:28; 2 தீமோ. 2:2
போதித்தலுக்கும் பயிற்சியளித்தலுக்கும் நடுவே ஒரு வித்தியாசம் உள்ளது. போதிப்பது என்றால் ஒருவரின் பிரகாசிப்பித்தலுக்காகச் சத்தியத்தை உட்பகிர்வதாகும்; பயிற்சியளிப்பது என்றால் ஒருவரின் எதிர்கால பயன்பாட்டிற்காக ஒருவரின் குணத்தை வடிவமைப்பதாகும். அவர்கள் கர்த்தருடைய போதித்தல் மூலமாக வெளிப்பாட்டைப் பெற்றும்கூட, இயேசுவே கிறிஸ்துவாக இருந்தார் என்ற வெளிப்பாட்டைப் பெற்றபின் உடனேயே பேதுருவைக் கர்த்தர் கடிந்துகொள்ளுதல் மூலம் உதாரணங்காட்டி விளக்கப்படுவது போல் அவர்களது ஆள்தத்துவத்தில் இன்னும் பாதிக்கப்படாமல் இருப்பது சாத்தியமானதாகவே இருந்தது (மத். 16:16–17, 21–22). போதித்தல் என்பது கர்த்தருடைய ஊழியத்தின் ஒரு முக்கியப் பகுதியாக இருந்தது, ஆனால் சீஷர்களைத் தம் தொடர்ச்சியாகப் பயனுள்ளவர்களாக ஆக்குவதற்காகக் கர்த்தர் அவர்களைப் பயிற்றுவித்து, அவர்களது குணத்தை வணைவதற்கு வேண்டியிருந்தது.
B. பயிற்சியளிப்பது என்றால் ஒருவரின் எதிர்கால பயன்பாட்டிற்காக ஒருவரின் குணத்தை வடிவமைப்பதாகும்—நீதி. 22:6; தீத்து 2:4-5, 12-13
நீதிமொழிகள் 22:6, “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” என்று கூறுகிறது. இது ஒரு வாக்குறுதிகூட அல்ல, அப்படியிருக்க ஒரு கோட்பாட்டு வாக்கியமாக இருக்கவே முடியாது: யாராவது ஒரு குறிப்பிட்ட திசையில் பயிற்சி பெற்றால், அவர்கள் தங்கள் பயிற்றுவிக்கப்பட்ட வழியில் தொடருவதில் உறுதியாக இருப்பார்கள். இது ஏனெனில், பயிற்சி என்பது ஒருவரின் குணத்தை வடிவமைப்பதை அல்லது வணைவதை உள்ளடக்குகிறது. தேவனுக்கான கர்த்தருடைய சீஷர்களின் எதிர்கால சேவையில் அவர்களைப் பயனுள்ளவர்களாக ஆக்கிவிடக்கூடிய வகையில் கர்த்தர் அவர்களுக்குப் பயிற்சியளித்து, அவர்களது குணத்தை வடிவமைத்தார்.
C. கர்த்தர் சுவிசேஷங்களில் எல்லா சீஷர்கள்மீதும் பலமுறை வேலைசெய்தார், ஆனால் எவ்வாறு கர்த்தர் தம் சீஷர்களைப் பயிற்றுவித்தார் என்பதைப் பற்றிய ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டைப் பேதுருவின் வரலாறு நமக்கு அளிக்கிறது—மத். 16:13–25; 17:1–6, 24–27
கர்த்தர் சீஷர்களுக்கு உயர்ந்த போதனையை வழங்கியது மட்டுமல்லாமல், அவர் அவர்களது குணத்தின்மீது வேலைபண்ணவும் செய்தார். எடுத்துக்காட்டாக, யோவான் 6:5–6 இல், பிதாவில் நம்பிக்கை வைக்கும்படி பிலிப்புவை அவர் பயிற்றுவித்தார், மேலும் யோவான் 11:1–44 இல், வளைந்துக்கொடுப்பவர்களாக இருக்கவும், அவரை உயிர்த்தெழுதல் ஜீவனாக அறிந்துகொள்ளவும் அவர் தோமாவையும், எல்லா சீஷர்களையும் பயிற்றுவித்தார். பேதுருதான் கர்த்தருடைய சீஷர்களில் முன்னணி வகிப்பவனாக இருந்ததால் (ஒப். மாற். 16:7), கர்த்தருடைய பயிற்சி அடிக்கடி பேதுருவைக் குவிமையமாகக் கொண்டிருந்தது. கர்த்தர் பேதுருவின்மீது வேலைசெய்கையில், நிச்சயமாகவே மற்ற சீஷர்களும் பயனடைந்தார்கள். (பயிற்சியின் ஒரு சில கூடுதல் எடுத்துக்காட்டுகளுக்கு, மத். 18:1–4; 26:36–45, 50–54, 31–35, 57–58, 69–75;
யோவான் 21:2–13, 15–17 ஐ காண்க.)
II. கர்த்தர் சீஷர்களின் குணத்தின் மீது வேலைசெய்வதன் மூலம் அவர்களுக்குப் பயிற்சி அளித்தார்
கர்த்தர் சீஷர்களுக்குப் பயிற்சி அளித்த முதல் வழி, அவர்களது குணத்தின்மீது வேலைசெய்வது மூலமாகவே இருந்தது. கர்த்தர் பேதுருவோடும் சீஷர்களோடும் இடைபடுதல், அவர்களது சாட்சாத்து ஆள்தத்துவத்தைத் தொட்டது. மத்தேயு அதிகாரங்கள் 16–17 ஐ சேர்ந்த மூன்று எடுத்துக்காட்டுகள், கர்த்தர் சீஷர்கள் மீது எவ்வாறு வேலைசெய்தார் என்பதை உதாரணங்காட்டி விளக்குகின்றன.
A. கர்த்தர் பேதுருவைக் கடிந்துக்கொண்டார்—மத். 16:21–25
மத்தேயு 16:21–22 இல், இயேசுவே கிறிஸ்துவாக இருந்தார் என்ற வெளிப்பாட்டைப் பேதுரு பெற்றிருந்த பிறகு உடனேயே கர்த்தர் “தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.” எனினும், கர்த்தர் திரும்பி பேதுருவைப் பார்த்து, “எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்” (மத். 16:23). இதைத் தொடர்ந்து கர்த்தர் தம் சீஷர்களுக்கு, சுயத்தை மறுதலித்தல் மற்றும் சிலுவையைச் சுமத்தல் பற்றிய ஒரு வார்த்தையைக் கொடுத்தார். இந்த வழியில் கர்த்தர் பேதுருவின் இயற்கையான ஆக்கிரோஷத்தோடும் அபிப்பிராயத்தோடும் இடைபட்டார், மேலும் இதிலிருந்து பேதுருவும் மற்ற சீஷர்களும் தாங்கள் தங்கள் சுயத்தையும், இயற்கையான ஜீவனையும் மறுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டனர். இதுவே கர்த்தர் தம் சீஷர்களுக்கு அளித்த பயிற்சியாக இருந்தது.
B. தேவன் பேதுருவைக் குறுக்கிட்டார்—மத். 17:4–5
கர்த்தராகிய இயேசு தம் சீஷர்களில் மூன்று பேருக்கு முன்பாக மலையில் உருமாற்றப்பட்டபோது, பேதுரு மூன்று வாசஸ்தலங்களைக் கட்டுவதற்கான ஒரு அபத்தமான முன்மொழிதலை முன்வைத்தான்: ஒன்று கர்த்தருக்கும், ஒன்று மோசேக்கும், ஒன்று எலியாவுக்கும் (மத். 17:1-4). பேதுருவின் முன்மொழிதல் அவனது இயற்கையான கருத்தை அம்பலப்படுத்தியது, மேலும் இயேசுவே தம் நேச குமாரனாக இருந்தார் என்றும், சீஷர்கள் அவருக்கு மட்டுமே செவிகொடுக்க வேண்டும் என்றும் அறிவிக்கும்படி பேதுருவின் முட்டாள்தனமான பேச்சை உடனடியாக தேவன் குறுக்கிட்டார் (மத். 17:5). இதன் மூலம், பேதுருவும் சீஷர்களும் தங்கள் இயற்கையான கருத்தைச் சார்ந்துகொள்ளாமல் இருக்கப் பயிற்சி பெற்றனர்.
C. கர்த்தர் பேதுருவை மீன் பிடிக்க கடலுக்கு அனுப்புவதன் மூலம் அவனை ஒழுங்குபடுத்தினார்—மத். 17:24–27
மத்தேயு 16 இல் பேதுரு, இயேசுவே தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்ற வெளிப்பாட்டைப் பெற்றான். மத்தேயு 17:1-3 இல் அவன், இயேசு மகிமையில் கிறிஸ்துவாக இருப்பதைக் குறித்த தரிசனத்தைப் பார்த்து, கிறிஸ்துவைப் பற்றிய தேவனுடைய அறிவிப்பைக் கேட்டான். எனினும் ஆலய வரியை வசூலித்தவர்களிடமிருந்து சோதனை வந்தபோது, பேதுருவின் இயற்கையான கருத்தும், இயற்கையான தன்னம்பிக்கையும், தான்தோன்றித்தனமும் மீண்டும் அம்பலப்படுத்தப்பட்டன. தான்தோன்றித்தனமாகச் செயலாற்றுவதற்கு அல்ல (மத். 17:25–26), மாறாக மலையில் அவனுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தபடியே கிறிஸ்துவுக்குச் செவிசாய்க்கும்படி கர்த்தர் பேதுருவைத் திருத்தி, அவனுக்குப் பயிற்சி அளித்தார் (மத். 17:5).
III. சீஷர்கள் தங்கள் இயற்கையான ஜீவனில் தங்களின்படி அல்ல, மாறாக தெய்வீக ஜீவனில் கிறிஸ்துவின்படி வாழவும் சேவிக்கவும் அவர்களை சீஷராக்குவதன் மூலம் கர்த்தர் சீஷர்களுக்குப் பயிற்சி அளித்தார்.
“கர்த்தர் அந்த மூன்றரை ஆண்டுகளில் பூமியில் செய்ததெல்லாம் ஒரு அடையாளமாக இருந்தது, எதையாவது ஒன்றை அடையாளப்படுத்துகின்றது….கர்த்தர்…எல்லாவற்றையும் ஓர் அடையாளமாகச் செய்யவும் பேசவும் பண்ணினார்….மனுஷீகத்தில் தம்மையே மறுதலித்து (யோவான் 5:19, 30), மனிதனைப் பற்றிய அவர்களது கருத்தை புரட்சிகரமாக்குவதன் மூலம் (பிலி. 3:10; 1:21) தேவனை வாழும்—ஒரு தேவ-மனிதனின் முன்மாதிரியாக, பூமியில் கிறிஸ்துவின் மனித வாழ்க்கை மூலமாகக் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் சீஷராக்கப்பட்டனர். கர்த்தராகிய இயேசு தம் மனுஷீகத்தில் தம்மையே மறுதலிப்பதன் மூலம் தேவனை வாழ்வதிலிருந்து சீஷர்கள் பார்த்தவற்றின் மூலம் சீஷர்களின் கருத்து புரட்சிகரமாக்கப்பட்டது” (TheVitalGroups,Message2,pp17–18).
A. கர்த்தர் எவ்வாறு விஷயங்களைச் செய்தார் என்பதை சீஷர்கள் உற்றுக் கவனித்தனர்
“கர்த்தராகிய இயேசு குறிப்பாக இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த நான்கு பேரை சீஷராக்கினார்: பேதுருவும் அந்திரேயாவும் யாக்கோபும் யோவானும். அவர் சுமார் மூன்றரை ஆண்டுகளாக அவர்களை சீஷராக்கினார். அவர்கள் கர்த்தரைப் பின்பற்றி இரவும் பகலும் அவருடன் தங்கியிருந்து, அவருடன் பயணம் செய்து, அவருடன் சாப்பிட்டு, அவருடன் எல்லாவற்றையும் செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் அவருடன் வாழ்ந்துகொண்டு, எல்லா நேரங்மும் அவரைச் சுற்றியே இருந்தார்கள். எவ்வாறு இந்த தேவ-மனிதன் நடந்துகொண்டார் என்பதை அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் அவரை உற்றுக் கவனித்தார்கள்” (The Vital Groups, Message 2,pp16–17). கர்த்தருடைய வாழ்க்கையை உற்றுக் கவனிப்பதன் மூலம் சீஷர்கள் கர்த்தரால் சீஷராக்கப்பட்டனர். “சகோதரர் வாட்ச்மேன் நீ பதினெட்டு ஆண்டுகளாக எவ்வாறு செயலாற்றினார் என்பதை உற்றுக்கவனித்துக்கொண்டு நான் மீட்டுத்திருப்புதலில் இருந்தேன். நான் அவரில் உற்றுக்கவனித்த அனைத்தும், என்னை சீஷராக்கும் விஷயங்களாக ஆகிவிட்டன” (The Vital Groups, Message 2, p18).
B. அவர் தமக்கு ஏற்ப வாழவோ அல்லது சேவிக்கவோ செய்யவில்லை, மாறாக தெய்வீக ஜீவனை வாழ தம் இயற்கையான ஜீவனை மறுதலிப்பதன் மூலம் பிதாவுக்கு ஏற்ப வாழவும் சேவிக்கவும் செய்தார்.
“கிறிஸ்துவிடம் மனித ஜீவனும் சுபாவமும் இருந்தது, ஆனால் அவர் தம் மனித ஜீவனையும் சுபாவத்தையும் மறுதலிப்பதன் மூலமாக தெய்வீக ஜீவனையும் சுபாவத்தையும் வாழ்ந்தார். இதுவே, மூன்றரை ஆண்டுகளாக தம்மைப் பின்பற்றுபவர்கள் அனைவரையும் சீஷராக்குவதற்கான அவரது தெய்வீக மற்றும் பரம்புதிரான வாழ்க்கையாயக இருந்தது….ஒரு சீஷன், தன் மனித ஜீவனில் தெய்வீக ஜீவனை வாழ்பவனாக இருக்கிறான்” (The Vital Groups, Message 2, p19).
C. ஒரு சீஷனின் வாழ்க்கையை வாழ்ந்த ஒருவரின் முன்மாதிரியாகவும் மாதிரிப்படிவமாகவும் தம்மையே கொடுப்பதன் மூலம் கர்த்தர் தம்மைப் பின்பற்றுபவர்களை சீஷராக்கினார்—லூக். 14:26–27; யோவான் 6:57
தெய்வீக ஜீவனால் ஒரு மனித வாழ்க்கையை வாழ்ந்த ஒருவரின் ஒரு முன்மாதிரியாகக் கர்த்தர் மூன்றரை ஆண்டுகள் சீஷர்களுக்கு முன்பாக வாழ்ந்தார். “அவர் ஒரு யூதராக இருந்தார், அவருக்கு ஒரு யூத முகரூபம் என்பதில் சந்தேகமில்லை. மனித ஜீவனையும் சுபாவத்தையும் கொண்ட யூத இரத்தமும், யூத மாம்சமும் அவரிடம் இருந்தது. ஆனால் அவர் தம் மனித ஜீவனில் இன்னொரு ஜீவனால் வாழ்ந்தார். இந்த மற்றொரு ஜீவன் தெய்வீக ஜீவனே. அவர் தம் மனித ஜீவனில் தெய்வீக ஜீவனை வாழ்ந்ததால், அவரது மனித வாழ்க்கை பரம்புதிரானதாக, ஒரு பரம இரகசியமாக இருந்தது. அவரது மனித வாழ்க்கையிலிருந்து தெய்வீகமான ஒன்று வந்தது….நாம் அனைவரும் தெய்வீக மற்றும் பரம்புதிரான நபர்களாக இருக்க கர்த்தரால் சீஷராக்கப்பட வேண்டும்” (The Vital Groups, Message 2, p17).
IV. கர்த்தருடைய பயிற்சியானது, சீஷர்கள் அவரது தொடர்ச்சியாக அவரைச் சேவிப்பதற்காக அவர்களை ஆயத்தப்படுத்தி, புதிய எருசலேமின் மதில்களின் அஸ்திபாரமாக அவர்களை உற்பத்திசெய்தது—அப். 1:12–17; வெளி. 21:14
இடைநிலைபிரயோகம்: பேதுருதான் அநேகமாக மிகவும் வெளிப்படையாகப் பேசும், கண்மூடித்தனமான சீஷனாக இருந்தான். அவன் எப்போதும் தவறான நேரத்தில் தன் வாய் திறந்து, அவன் பேசக் கூடாத விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தான். இடை நிலை பள்ளி மாணவர்கள் பலருக்கும் இந்த ஒரே மாதிரியான அனுபவம் உள்ளது. கர்த்தர் பேதுருவை அழைத்தப் பிறகு, அவர் அவனது பெயரை சீமோன் என்பதிலிருந்து “ஒரு கல்” என்று பொருள்படும் கேபா என்று மாற்றினார். இதன் அர்த்தம், தேவனுடைய பிரபஞ்சளாவிய கட்டிடத்தின் ஒரு பகுதியாக இருக்கும்படி அவனை கோடிக்கணக்கான மக்கள் மத்தியிலிருந்து தேர்ந்தெடுத்தார் என்பதே. என்னே ஒரு கனம்! ஆனால் பேதுரு மிகவும் கரடுமுரடானவனாக இருந்தான். கர்த்தர் அவனைப் பயன்படுத்த முடிவதற்கு முன்பு அவனுக்கு நிறைய பயிற்சியும் சீர்பொருத்தலும் தேவைப்பட்டது. கர்த்தர் பேதுருவோடு இடைபட்ட விதம், பேதுரு சொன்னதும் செய்ததுமான விஷயங்கள் மூலமாகவே இருந்தது. பேதுரு தான் பேசியிருக்கக் கூடாத ஒன்றைப் பேசியபோது, அவனை சரிசெய்வதற்கான ஒரு வாய்ப்பைக் கர்த்தருக்கு அது அளித்தது. ஒரு முறை கர்த்தர் அவனைச் “சாத்தான்” என்றுகூட அழைத்தார், இதற்குக் காரணம் அவன் சாத்தானியமயமான ஒன்றைப் பேசினான் என்பதே. கர்த்தர் தன்னுடன் இடைபடுவதற்கான பல வாய்ப்புகளை பேதுரு அவருக்கு வழங்கினான். இடைநிலைப் பள்ளி மாணவர்களாக நாம் இளமையாகவும், மிகவும் வெளிப்படையாகவும்கூட இருக்கிறோம் என்பதை நாமும் உணர்ந்தறிய வேண்டும். நிஜமாகவே சாத்தானிடமிருந்து தானே வரும் நம் சுயத்திலிருந்து நாம் அநேக நேரங்களில் பல விஷயங்களைச் சொல்கிறோம். கர்த்தர் தாம் பேதுருவோடு நேரடியாக இடைபட்டது போலவே நம்மோடு நேரடியாக இடைபடுவதில்லை, மாறாக நம் பெற்றோர், ஆசிரியர்கள், சேவிப்பவர்கள் மூலமாக நம்மோடு இடைபடுகிறார். பேதுருவைப் பொறுத்தவரை, கர்த்தர் அவனைச் சரிசெய்தபோது அது இனிமையானதாக இருக்கவில்லை, ஆனால் பிற்பாடு அவன் அதை மிகவும் அதிகமாகப் பாராட்டினான். 1 மற்றும் 2 பேதுரு புத்தகங்களை நீங்கள் வாசித்தால், அவனது ஆத்துமா மீதான கர்த்தருடைய மேய்த்துப்பேணும் கரிசனையை அவன் எவ்வளவு அதிகமாகப் பாராட்டினான் என்பதை நீங்கள் உணர்ந்தறியலாம் (1 பேது. 2:25). நம்மீது அதிகாரம் செலுத்தி, நமக்காகக் கரிசனைப்படுகிறவர்கள் நம் வாழ்வில் நமக்கு அதி சிறந்ததையே பங்களிக்க விரும்புகிறார்கள் என்பதை நாமும்கூட உணர்ந்தறிய வேண்டும். கர்த்தரிடமிருந்து வருவதாக எண்ணி அவர்களது பயிற்சியையும் ஒழுங்குபடுத்தலையும் நாம் ஏற்றுக்கொள்ள முடிந்தால், நாம் மிகவும் அதிகமாக ஆசீர்வதிக்கப்படுவோம். இது, நம் எதிர்கால பயனுள்ளத்தன்மைக்காகக் கர்த்தரிடமிருந்து வரும் ஒரு பயிற்சியாகவும் ஆயத்தப்படுத்தலாகவும் இருக்கும். நாமும்கூட தேவனுடைய கட்டிடத்திற்காக தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மற்றும் விலையேறப்பெற்ற கற்களாக இருக்கிறோம். 1 பேதுரு 2:5, “ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும்…கட்டப்பட்டுவருகிறீர்கள்” என்று கூறுகிறது. பேதுருவைப் போலவே, நாம் தேவனால் அவரது பிரபஞ்சளாவிய கட்டிடத்திற்காகத் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறோம். என்னே ஒரு கனம் இது! ஆனால் அவர் இதை நிறைவேற்றுவதற்காக, அவர் நம்மைப் பயிற்றுவிக்கும்படி பல அனுபவங்களினூடாய் நம்மைக் கொண்டுசெல்ல வேண்டியிருக்கிறது. இளம் வாலிபர்கள் தங்களுக்கு நடக்கும் விஷயங்களிலிருந்து பயனடைய முடியக்கூடிய வழிகளைச் சுட்டிக்காட்ட இந்தக் குறிப்பைப் பயன்படுத்தவும். கர்த்தர் உங்களுக்கு எவ்வாறு பயிற்சி அளித்திருக்கிறார் என்பதை உங்கள் அனுபவங்கள் மற்றும் கதைகள் மூலமாகக் காட்டுங்கள். கர்த்தர் எவ்வாறு உங்களுக்குப் பயிற்சியளித்து வந்திருக்கிறார் என்பதற்கான எடுத்துக்காட்டுகளாக புகார்செய்தல், பொய் சொல்லுதல் அல்லது நகைச்சுவையாகப் பேசுதலோடு கர்த்தர் இடைபடுதல் பற்றிய கதைகளை நீங்கள் சுட்டிக்காட்டலாம்.
சுவிசேஷப் பிரயோகம்: மனிதனை இரட்சிக்கும் தேவனுடைய இரட்சிப்புக்கு இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று புறம்சார்ந்த, சட்டரீதியான (சட்டப்பூர்வமான) அம்சம், மற்றொன்று (ஜீவனிலும், ஜீவன் மூலமாகவும் உள்ள) அகம்சார்ந்த, ஜீவாதார அம்சம். தேவனுடைய இரட்சிப்பின் சட்டரீதியான அம்சம் தேவனுக்கு முன்பாக மனிதனின் பாவப் பிரச்சினையைத் தீர்க்கிறது. பாவம் செய்யும் ஒவ்வொரு மனிதனும் செத்தாக வேண்டும் என்று தேவனுடைய நீதியான நியாயப்பிரமாணம் கோருகிறது (எசே. 18:20). சிலுவையில் கர்த்தருடைய மரணத்தின் மூலம், தேவனுடைய இரட்சிப்ணபின் சட்டரீதியான அம்சம் நிறைவேற்றப்பட்டு, நியாயப்பிரமாணத்தின் நீதியான கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. இப்போது, கிறிஸ்துவுக்குள் விசுவாசிக்கிறவர்கள் அனைவரும் இந்த மரண நியாயதீர்ப்பிலிருந்து இரட்சிக்கப்படுவார்கள். ஆனால் மனிதனுக்கு இன்னும் ஓர் உள்ளார்ந்த பிரச்சினை இருக்கிறது. இந்த உள்ளார்ந்த பிரச்சினை உள்வசிக்கும் பாவமும், அதன் ஆசை இச்சைகளோ்டுகூடிய மாம்சமும், மற்றும் பல உள்ளார்ந்த சிரமங்கள் மற்றவையுமே ஆகும். அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 7:15-18 இல் விவரித்ததுபோல், அவன் நிலையாகப் போராடிக்கொண்டிருந்தான், அவன் தான் வெறுத்ததைச் செய்து, அவன் தான் தீர்மானித்திருந்ததைச் செய்ய இயலாதிருந்தான். ஒவ்வொரு நபரும் இதே பிரச்சினையுடன் போராடுகிறார்கள். தீமையைச் செய்வது பவுல் அல்ல, மாறாக “எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது” என்று பவுல் முடிவு செய்தான் (ரோ. 7:17). எனினும், தேவனுடைய இரட்சிப்பு புறம்சார்ந்ததாயும் சட்டரீதியானதாயும் இருப்பது மட்டுமல்லாமல், அது உள்ளார்ந்ததாயும், அகம்சார்ந்ததாயும், ஜீவாதாரமானதாயும்கூட இருக்கிறது. அது புறம்பான ரீதியில் நம்மை தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து இரட்சிப்பது மட்டுமல்லாமல், நாம் ஒருபோதும் ஜெயங்கொள்ள முடியாத நம் உள்ளார்ந்த விழுந்துபோன நிலைமையிலிருந்தும்கூட அது நம்மை இரட்சிக்கிறது. அவர் பூமியில் இருந்தபோது, கர்த்தராகிய இயேசு பன்னிரண்டு சீஷர்களை ஒன்றுசேர்த்துத் திரட்டி, தம் தெய்வீக ஜீவனில் வாழ்வதற்கும், சட்டரீதியான மற்றும் ஜீவாதாரமான தம் அற்புதமான இரட்சிப்பை அனுபவிப்பதற்கும் அவர்களுக்குப் போதிக்கவும், பயிற்சியளிக்கவும் செய்தார். கர்த்தரைப் பெற்றுக்கொள்வதன் மூலம் நாம் தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து இரட்சிக்கப்பட்டு, நம் அவயவங்களில் உள்ள இந்த உள்வசிக்கும் பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட அவரது ஜீவனையும் சுபாவத்தையும் கொண்ட அவரது பிள்ளைகளாக ஆகிவிடலாம் (ரோ. 7:23).
மிக முக்கியக் காரியங்கள்: உங்கள் இலக்குகளையும், இறுதியில் உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளையும் நிறைவேற்ற உங்கள் பாத்திரத்தை அதி சிறந்த முறையில் தயார்ப்படுத்தும் மனித மற்றும் ஆவிக்குரிய கல்வியையும் பயிற்சியையும் நாடுதல் (IV.A.3.).
பின்னணி வாசிப்பு: Life-study of Mark, Message 24, pp216–219; Message 45; Message 63,pp533–534, 536–538; Life-study of Matthew, Message 50; The Vital Groups, Message 2, pp16–21.
REFERENCES: Life-study of Mark, Message 24, pp216–219; Message 32, pp284–289; Message 33;Message 41, pp357–358; Message 45; Message 63, pp533–534, 536–538; Life-study of Matthew, Messages 48–50; Crystallization-study of the Epistle of James, Message 7, pp91–95; The Vital Groups, Message 2, pp16–21.