வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்

பகுதி 8

பாடம் 01 – 08

பாடம் 10 – 18

கிறிஸ்துவின் ஊழியம்

கிறிஸ்துவின் ஜெபங்கள் (1)

குறிக்கோள்: கர்த்தராகிய இயேசு பிதாவுடன் ஒருமையில் இருந்து, பூமியில் தேவனுடைய சித்தம் செய்யப்படுவதற்காக ஜெபித்த ஒரு ஜெப மனிதனாக இருந்தார்.

பொருட்சுருக்கம்: தம் தேவ-மனித வாழ்க்கையில், கர்த்தராகிய இயேசு ஒரு ஜெப மனிதராக இருந்தார். அவரது ஜெபங்கள் ஒரு பொதுவான மனிதன் பொதுவான ஜெபங்களை ஜெபிப்பதைப் போன்று இருக்கவில்லை, அல்லது அவை ஒரு மத ரீதியான மனிதன் ஒரு மத ரீதியான வழியில் ஜெபிப்பதாகவும் இருக்கவில்லை. மாறாக அவரது ஜெபங்கள், பரம்புதிரான தேவனிடம் ஜெபித்த ஒரு தேவ-மனிதனின் ஜெபங்களாக இருந்தன. ஒரு ஜெப மனிதனாக, அவர் தேவனோடு ஒன்றாயிருந்தார், அவர் எப்போதும் தேவனுடைய பிரசன்னத்தில் வாழ்ந்தார், மேலும் அவர் தேவனில் நம்பிக்கை வைத்தார். மேலும், உலகத்தின் அதிபதியாகிய சாத்தானுக்கு அவரில் எந்தத் தளமும் இருக்கவில்லை (ஆகவே அவரது ஜெபங்கள் ஒருபோதும் தூய்மையற்றவையாகவோ, மறைவான ஆசைகள் அல்லது உள்நோக்கங்களால் சாயம் அடிக்கப்பட்டவையாகவோ இருக்கவில்லை). அவர் தம் ஜெபங்களில் முற்றிலும் தேவனோடு ஒன்றாயிருந்தார் அதோடு தேவனுடைய சித்தம் மற்றும் தேவனுடைய ராஜ்யம் குறித்து அக்கறை கொண்டிருந்தார். பிதாவின் சித்தம் பரலோகத்திலே செய்யப்படுவதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதற்காக ஜெபிக்க நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இதுவே பரலோக ஆளுகை, பரலோக ராஜ்யம் பூமியில் நிறைவேற்றப்படுவதற்காக ஜெபிப்பது ஆகும்.

பின்புலம்: ஒவ்வோர் இளம் வாலிபனும் எளிய மற்றும் உண்மையான ஜெபங்களை ஜெபிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஜெபம் என்பது கர்த்தருக்கு ஒரு புறம்பான, சடங்காச்சாரத்துக்குரிய நடவடிக்கையாக இருக்கவில்லை. ஜெபம் என்பது ஒரு தேவ-மனிதனாக அவர் தேவனுடைய பிரசன்னத்தில் வாழ்ந்த அவரது வாழ்க்கையின் ஓர் உட்கருத்துவாய்ந்தப் பகுதியாக இருந்தது. அவர் ஜெபித்தார் என்ற உண்மை, அவர் தேவனைச் சார்ந்தது, தேவனுடன் ஒன்றாயிருந்தார் என்பதற்கான ஒரு சுட்டிக்காட்டுதலாக இருந்தது. கர்த்தர் தம் ஊழியத்தைத் தொடங்கியபோது அவர் ஜெபித்தார், அவர் தாம் சீஷர்களைத் தெரிந்தெடுப்பதற்கு முன்பு ஜெபித்தார், அவர் தாம் தனியாக இருந்த போது ஜெபித்தார், அவர் தேவனுடைய சித்தம் பூமியில் செய்யப்படும்படி ஜெபித்தார்,தம்மைத் துன்புறுத்தியவர்களுக்காக அவர் ஜெபித்தார், மேலும் அவர் நம் எல்லாருக்காகவும் ஜெபித்தார் (யோவான் 17). நாம் அனைவரும் இந்தப் பாடத்தில் உள்ள வசனங்கள் மூலமாக ஜெப மனிதர்களாக ஆகிவிட வேண்டும், அதாவது மத ஜெபங்களை அல்ல, மாறாக கர்த்தரைத் தொடும், தேவனுடைய ராஜ்யத்தை பூமிக்குக் கொண்டுவரும், அதோடு நாம் அவரை நம் தினசரி நிரப்பீடாகப் பெற வைக்கும் உண்மையான ஜெபங்களை ஜெபிக்கும் ஜெப மனிதர்களாக ஆகிவிட வேண்டும்.

திகாரம்: மத்தேயு 6.

கற்பிப்பதற்கான உண்மைகள் கொண்ட செய்திக்குறிப்பு

I. தம் தேவ-மனித வாழ்க்கையில், கர்த்தராகிய இயேசு ஒரு ஜெப மனிதராக இருந்தார்.

இயேசு தேவனோடு ஒன்றாயிருந்ததால் (யோவான் 10:30), அவர் ஒரு பொதுவான மனிதனாகவோ, ஒரு மத ரீதியான மனிதராகவோ கூட வாழவில்லை. அவர் மாம்சத்தில் ஒரு மனிதனாக பௌதிக மண்டலத்தில் வாழ்ந்து, நடந்தார், ஆனால் அவரது வாழ்க்கையும் வேலையும் முற்றிலும் வேறொரு மண்டலத்தில் இருந்தன. அவர் மனிதனாக இருந்தபோதிலும், அவர் தம் மனித ஜீவனால் அல்ல, மாறாக தெய்வீக ஜீவனால் வாழ்ந்தார்.

A. அவரது ஜெபங்கள் ஒரு பொதுவான மனிதன் பொதுவான ஜெபங்களை ஜெபிப்பதைப் போன்று இருக்கவில்லை.

B. அவரது ஜெபங்கள் ஒரு மத ரீதியான மனிதன் ஒரு மத ரீதியான வழியில் ஜெபிக்கும் ஜெபங்களாக இருக்கவில்லை.

C. மாறாக அவரது ஜெபங்கள், பரம்புதிரான தேவனிடம் ஜெபித்த ஒரு தேவ-மனிதனின் ஜெபங்களாக இருந்தன.

கர்த்தராகிய இயேசு பௌதிக ரீதியில் ஒரு மனிதனாக இருந்தபோதிலும், அவர் அதரிசனமான தேவனோடு ஒன்றாயிருந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார், ஆகவே, அவரைச் சுற்றியுள்ளவர்களுக்குப் பரம்புதிரானதாக இருந்த ஒரு வாழ்க்கையை  வாழ்ந்தார். இத்தகைய ஒரு நபராக, இயேசு பொதுவான, மனித, அல்லது மதக் கருத்துக்களின்படி ஜெபிக்கவில்லை. அவர் இத்தகைய ஒரு தெய்வீக, பரம்புதிரான மண்டலத்தில் வாழ்ந்ததால், அவரது ஜெபமும் தெய்வீக, பரம்புதிரான மண்டலத்தில் இருந்தது. சுவிசேஷங்களில் பதிவுசெய்யப்பட்ட பல சூழ்நிலைகள் இதை உதாரணங்காட்டி விளக்குகின்றன.

II. ஒரு ஜெப மனிதனாக, கர்த்தராகிய இயேசு தேவனோடு ஒன்றாயிருந்து, பூமியில் தேவனுடைய சித்தம் செய்யப்படுவதற்காக ஜெபித்தவராக இருந்தார்.

ஒரு ஜெப மனிதனாக, கர்த்தராகிய இயேசு தேவனோடு ஒன்றாயிருந்தார். அவர் எப்போதும் தேவனுடைய பிரசன்னத்தில் வாழ்ந்தார், மேலும் அவர் தேவனில் நம்பிக்கை வைத்தார். மேலும், கர்த்தராகிய இயேசு பூமியில் தேவனுடைய சித்தம் செய்யப்படுவதற்காக ஜெபித்தார். இவ்வாறு உலகத்தின் அதிபதியாகிய சாத்தானுக்கு அவரில் எந்தத் தளமும் இருக்கவில்லை, ஆகவே அவரது ஜெபங்கள் ஒருபோதும் தூய்மையற்றவையாகவோ, மறைவான ஆசைகள் அல்லது உள்நோக்கங்களால் சாயம் அடிக்கப்பட்டவையாகவோ இருக்கவில்லை. கர்த்தராகிய இயேசு தம் ஜெபங்களில் முற்றிலும் தேவனோடு ஒன்றாயிருந்தார் அதோடு தேவனுடைய சித்தம் மற்றும் தேவனுடைய ராஜ்யம் குறித்து அக்கறை கொண்டிருந்தார்.

A. அவரது ஊழியத்திற்குள்ளான அவரது பிரவேசம், ஒரு குறிப்பிட்ட கால ஜெபம் மற்றும் உபவாசத்தின் அடிப்படையில் இருந்தது— மத். 3:13—4:11

இயேசு தம் ஊழியத்தைத் துவக்குவித்த போது செய்த முதல் விஷயம் பாலைவனத்திற்குள் (வனாந்திரம்) சென்று, உபவாசம் பண்ணுவதுதான். கண்ணுக்குத் தெரியாத ஆவியானவர் அவரை அங்கே நடத்தினார் என்பதே இதற்குக் காரணமாக இருந்தது. அவர் பொதுவான நடைமுறைப் பயிற்சியின்படி ஜெபித்ததாக வேதாகமம் குறிப்பிடவில்லை என்றாலும், உபவாசித்தல் எப்போதும் ஜெபத்துடன் உடன் சேர்ந்தே செல்கிறது (மத். 6:5, 16; 17:21; அப். 13:2–3). நாற்பது நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம் இல்லாமல் கர்த்தர் தம் ஊழியத்தைத் தொடங்கவில்லை என்ற உண்மை, அவர் முற்றிலும் தேவனோடு ஒன்றாயிருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இயேசு ஜெபிக்கும்படி தனியாக ஒரு மலை அல்லது பாலைவனத்திற்குச் (வனாந்திரம்) சென்றார் என்று பலமுறை நமக்குச் சொல்லப்பட்டிருப்பது உட்கருத்துவாய்ந்தது. அவர் தம் வாழ்க்கை மற்றும் நகர்வுக்காக முழுவதும் தேவனைச் சார்ந்திருந்த ஒரு நபராக இருந்தார் என்பதை இது சுட்டிக்காட்டியது. நாற்பது நாட்கள் இரவும் பகலும் உபவாசித்தப் பிறகு, தேவனைச் சார்ந்திருக்கும் ஒரு மனிதனாகிய அவரது நிலைப்பாட்டிலிருந்து அவரைச் சாத்தானால் விலக்க முடியவில்லை என்ற உண்மை, முழுமையாக தேவனைச் சார்ந்திருந்து இயேசு தம் மனித இருத்தலை முன்னெடுப்பதில் உறுதியாக இருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டியது.

B. பன்னிரண்டு அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு இயேசு இரவு முழுவதும் ஜெபித்தார்—லூக். 6:12–16; மத். 10:1–4

இயேசு தேவனோடு ஒன்றாயிருந்து, பூமியில் தேவனுடைய சித்தம் செய்யப்படுவதற்காக முற்றுமுடிய அக்கறைப்பட்டதால், அவரைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளை தேவன் உணர்ந்தபடியே அவர் அவற்றை உணர்ந்தார், மேலும் அவர் மாம்சத்தில் ஒரு மனிதனாக தம் சொந்த திறனுக்கு ஏற்ப அவற்றிற்கு எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக ஜெபத்தின் மூலம்  அவற்றிற்கு எதிர்வினையாற்றினார். சந்தேகத்திற்கு இடமின்றி இயேசு ஒரு மனிதனாக மாபெரும் திறனைக் கொண்டிருந்தார், ஆனால் அவர் தேவனோடு ஒன்றாயிருந்த ஒரு ஜெப மனிதராக வாழ்வதற்காக தம் இயற்கையான மனித ஜீவனை நிராகரித்தார். இத்தகையவராக அவர் தம்மைச் சுற்றியுள்ள நிஜமான சூழ்நிலையைக் கண்டு, சுவிசேஷத்துடன் வெளியே புறப்பட்டுச் செல்ல சில வேலையாட்களை நியமிக்க வேண்டிய ஓர் அவசியம் இருப்பதை உணர்ந்தறிந்தார். பிற மனிதர்கள் செய்யக்கூடியது போல், அவர் இந்தப் பணிக்காக மற்றவர்களை மதிப்பீடு செய்யவில்லை. ஒருவேளை நாம், இயேசுவைப் பின்பற்றிகொண்டிருந்த அனைவரின் பயோடேட்டாக்களையும் பரிசீலனைசெய்து, அவர்களது தனிப்பட்ட பலம் மற்றும் தனிச்சிறப்புகளுக்கு ஏற்ப வேலையாட்களின் ஓர் அணியை ஒன்றிணைக்க முயன்றிருப்போம். ஆனால் இயேசு இதைச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, அவர் தம் சீஷர்களில் யாரை அப்போஸ்தலர்களாக நியமிப்பார் என்பதை அறிய இரவு முழுவதும் ஜெபித்தார்.

C. சிலுவையில் துன்பப்படுகையில் கூட, அவரது ஜெபம் தெய்வீகமானதாகவும் பரம்புதிரானதாகவும் இருந்தது, ஏனெனில் அவர் தேவனோடு ஒன்றாயிருந்து, பூமியில் தேவனுடைய சித்தத்திற்காக ஜெபித்தார்

இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது, தம்மைத் துன்புறுத்தியவர்களின் மன்னிப்புக்காக அவர் ஜெபித்தார். மற்றவர்கள் நமக்குச் செய்யும் குற்றங்களை அவர்களுக்கு மன்னிக்கும் திறன் மனிதர்களாகிய நமக்கு இல்லை. சிறிய குற்றங்களுக்கும் அதேபோல் பெரிய குற்றங்களுக்கும் இது பொருந்தும். நம் இயற்கையான ஜீவனில், நாம் இந்தக் குற்றங்களைச் சேமித்து வைக்கிறோம்; நாம் அவற்றை மன்னிப்பதில்லை. மக்கள் இயேசுவுக்குச் செய்த காரியமே அதி மாபெரும் பாவமாக இருந்தது. அவர் முற்றிலும் நிரபராதியாக இருந்த போதிலும் அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்தனர். தேவனிடமிருந்து பழிவாங்குதலைக் கோருவதற்கான ஒவ்வொரு உரிமையும் கர்த்தருக்கு இருந்தது. (இங்கே ஆபேலின் இரத்தம் மற்றும் இயேசுவின் இரத்தம் பேசுவது ஒப்பிடப்படலாம்—எபி. 12:24 மற்றும் அடிக்குறிப்பு 3 ஐப் பார்க்கவும்.) தெய்வீக மற்றும் பரம்புதிரான மண்டலத்தில் வாழும் ஒரு மனிதனால் மட்டுமே மற்றவர்களை உண்மையாக மன்னித்து, அவர்களது மன்னிப்பை நாட முடியும். “தம்மை சிலுவையில் அறைந்துகொண்டிருந்தவர்களின் மன்னிப்புக்காக ஜெபிப்பது ஓர் எளிதான காரியமாக இருக்கவில்லை, ஆனால் அவர் அதைத் தம் மனுஷீகத்தில் தெய்வீக வல்லமையுடன் செய்தார். இது ஒரு மனித ஜீவனில் நிகழ்த்தப்பட்ட ஒரு தெய்வீக உண்மை—ஆயினும்கூட பௌதிக மனித ஜீவனில் அல்ல, மாறாக பரம்புதிரான மனித ஜீவனில்—நித்திய ஆவியானவரின் தெய்வீக வல்லமையால் நிகழ்த்தப்பட்டது” (The God-man Living, Message 17, p. 160).

III. பிதாவின் சித்தம் பூமியில் செய்யப்படுவதற்காக ஜெபிக்கக் கர்த்தராகிய இயேசுவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்—மத். 6:5-15

பிதாவின் சித்தம் பரலோகத்திலே செய்யப்படுவதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதற்காக இயேசு தாம் ஜெபித்து போலவே, சீஷர்களும் ஜெபிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். இதுவே பரலோக ஆளுகை, பரலோக ராஜ்யம் பூமியில் நிறைவேற்றப்படுவதற்காக ஜெபிப்பது ஆகும். ஜெபத்தைப் பற்றிய இயேசுவின் போதனை, நாமும் அவர் செய்தது போலவே, தேவனுடன் ஒன்றாக வாழ்ந்துகொண்டிருந்த ஜெப மனிதர்களாக இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியது. தங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபிக்கும்படி அவர் தம் சீஷர்களிடம் (நம் பிரதிநிதிகள்) சொன்னார் (மத். 5:44). தங்கள் இயற்கையான திறனால் இதை யார் செய்ய முடியும்? நம்மைத் துன்பப்படுத்துபவர்களை நம்மில் நாமே எப்போதும் வெறுப்போம். மற்ற மனிதர்களின் அங்கீகாரத்தைப் பெற பகிரங்கமாக ஜெபிப்பதற்குப் பதிலாக, தங்கள் பரலோகப் பிதாவிடம் இரகசியமாக ஜெபிக்க வேண்டும் என்றும் அவர் அவர்களுக்குச் சொன்னார் (மத். 6:5–6). மத்தேயு அதிகாரங்கள் 5-7 இல் உள்ள அவரது அதி மேன்மையான போதனையில், இயேசு தம் சீஷர்களுக்கு முன்பாக ஒரு வாழ்க்கைத் தரத்தை வைத்தார், அதை அவர்கள் தங்கள் இயற்கையான ஜீவனில் அடைவது அசாத்தியமானதாக இருந்தது. ஒருவர் அவரது போதனையை நிறைவேற்றுவதற்கான ஒரே சாத்தியமான வழி, தேவனைத் தங்கள் ஊற்றாக எடுத்துக்கொள்வதாலும், தேவனில் நம்பிக்கை வைப்பதாலும், தேவனோடு ஒன்றாக ஜெப மனிதர்களாக வாழ்வதாலும் இயேசு செய்ததைப் போலவே அவர்கள் வாழ்வதால் மட்டுமே இருக்கும். இது, மத்தேயு 6 இல் ஜெபத்தைப் பற்றிய கர்த்தருடைய போதனையில் கூடுதலாக உதாரணங்காட்டி விளக்கப்பட்டுள்ளது.

A. பிதாவின் நாமம் பரிசுத்தப்படுத்தப்படவும், அவரது ராஜ்யம் வரவும், அவரது சித்தம் பூமியில் செய்யப்படவும் ஜெபிக்க அவர் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்—மத். 6:9-10

ஜெபத்தைக் குறித்து கர்த்தர் நமக்குக் கற்பிக்கும் முதல் விஷயம், நாம் தேவனோடு ஒன்றாயிருக்கும்போது நாம் நம் பிதா மற்றும் அவரநு ராஜ்யத்தின் நலன்களுக்காக ஜெபிக்க பாரப்படுத்தப்டுவோம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. தேவனோடு ஒன்றாயிருப்பது என்றால் எல்லாமுமே மகிழ்ச்சியும் ஆனந்தமுமாய் இருக்கும் அதோடு பாரத்திலிருந்து விடுபடுவார்கள் என்று நாம் நினைக்கக்கூடும். உண்மையில், நாம் கர்த்தரைத் தொட ஆரம்பித்து, நிஜமான சூழ்நிலையைக் காண நம் கண்கள் அவரால் திறக்கப்பட்டவுடன், இந்த யுகத்தில் தேவனுடைய நகர்வை நிறைவேற்றுவதற்காகப் போராடுவதற்கு நாம் பாரப்படுத்தப்படுவோம். எவ்வளவு அதிகமாக நாம் தேவனுடைய பொருளாட்சியின் இலக்கைப் பார்க்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் அதற்காகப் போராடுவதற்குப் பாரப்படுத்தப்படுவோம். இதனால்தான் ஜெபத்தைப் பற்றிய இந்த மாதிரிப்படிவத்தில், கர்த்தர் ஒரு போராடும் விதத்தில் ஜெபிப்பதன் மூலம் தொடங்குகிறார். அவர் தேவனோடு ஒன்றாயிருந்த ஒரு ஜெப மனிதராக இருந்ததால், அவர் நிஜமான சூழ்நிலையைப் பார்த்தார். பிதாவின் நாமம் பூமியில் பரிசுத்தப்படுத்தப்படவில்லை, மேலும் பிதாவின் ராஜ்யம் இன்னும் பூமிக்கு வந்திருக்கவில்லை. எவ்வளவு அதிகமாக நாம் நம் பிதாவின் புத்திரர்களாக அதே வழியில் வாழ்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் அவரது ராஜ்யம் பூமியில் ஸ்தாபிக்கப்படும் வரை இந்த வழியில் ஜெபிப்போம்.

B. அவர்கள் தங்கள் தினசரி தேவைகளுக்காக ஜெபிக்கும்படி அவர் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்—மத். 6:11

கர்த்தர் இந்த ஜெப-மாதிரிப்படிவத்தில் உதாரணங்காட்டி விளக்கிய இரண்டாவது விஷயம், தினசரி பௌதிகத் தேவைகளுக்காக தேவன்மீது வைக்கும் ஒரு முழுமையான நம்பிக்கையே இருந்தது. தேவனோடு ஒன்றாயிருந்த அதோடு தேவனில் முழுமையாக நம்பிக்கை வைக்கும் ஒரு நபர் மட்டுமே உணவு, சுகாதாரம், தங்குமிடம் போன்ற விஷயங்களில் மற்ற மக்கள் அனுபவிக்கும் கவலையிலிருந்து விடுபட முடியும் (ஒப். மத். 6:31). நம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றிற்காகவும் நாம் கர்த்தரில் வைக்கும் இந்த வகையான நம்பிக்கை நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு நம்மை மெய்யாகவே பரம்புதிரானவர்களாக ஆக்கிவிடுகிறது, ஏனெனில் நாம் விளக்கப்படவோ புரிந்துகொள்ளப்படவோ முடியாத ஒரு வாழ்க்கையை வாழ்கின்றோம்.

C. அவர்களும் மற்றவர்களை மன்னித்தது போல தேவனுடைய மன்னிப்புக்காக ஜெபிக்கும்படி அவர்களுக்கு அவர் கற்றுக்கொடுத்தார்—மத். 6:12, 14-15

இந்த ஜெபத்தில் உள்ள ஒவ்வொரு குறிப்பும், நாம் முழுமையாக தேவனைச் சார்ந்துக்கொள்வதில் வாழும் நபர்களாக இருந்தாக வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இந்த ஜெபம்தானே தெய்வீகமான மற்றும் பரம்புதிரான மண்டலத்தில் உள்ளது, அதோடு நம்மை இந்த மண்டலத்திற்குள் கொண்டு வருகிறது. ஒவ்வொருவரும் தங்கள் சொந்த கடன்கள் மன்னிக்கப்பட விரும்புகிறார்கள், ஆனால் மற்றவர்களை யார் மன்னிக்க முடியும்? நம் தோல்விகள், குறைபாடுகள் மற்றும் தவறுகள் காரணமாக நாம் மற்றவர்களுக்குக் கடனாளிகளாக இருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்தறிவதற்கும் இந்த ஜெபம் காரணமாக அமைகிறது. நம்மிடம் இந்த வகையான மனப்பாங்கு இருந்தால், நாம் மற்றவர்களைக் கர்த்தரில் மன்னிப்போம், இது நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு நிச்சயமாக நம்மைப் பரம்புதிரான மக்களாக ஆக்குகிறது. (வசனங்கள் 14 மற்றும் 15 இல், நாம் மற்றவர்களின் குற்றங்களை மன்னிக்காவிட்டால், கர்த்தர் நம் குற்றங்களை மன்னிக்க மாட்டார், ஆகவே நம் ஜெபத்திற்கு முட்டுக்கட்டையிடப்படும் என்பதைக் கர்த்தர் வெளிப்படுத்துகிறார்.)

D. சபலப்படுத்துதலிருந்து காக்கப்படுவதற்கு ஜெபிக்கும்படி அவர் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்—மத். 6:13

கர்த்தருடைய ஜெபத்தில் உள்ள நான்காவது முக்கிய குறிப்பு, பொல்லாங்கனின் வேலையிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளும்படி நாம் கர்த்தரைச் சார்ந்துக்கொள்ள வேண்டும் என்பதை வெளிப்படுத்துகிறது. பலர் சபலப்படுத்துதலை ஜெயங்கொள்ள பாடுபடுகிறார்கள், அப்படியிருக்க மற்றவர்கள் வெறுமனே விட்டுக்கொடுத்துவிடுகின்றனர். நாம் நம் சொந்தத்தில் உதவியற்றவர்களாகவும், சபலப்படுத்துதலை எதிர்த்துப் போராட இயலாதவர்களாகவும் இருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்தறிய வேண்டும் என்று இயேசு சுட்டிக்காட்டினார். இத்தகைய ஒரு மனப்பாங்கும்கூட, நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு நம்மைப் பரம்புதிரான நபர்களாக ஆக்கிவிடுகிறது. நம்மில் நாமே திடநம்பிக்கை வைப்பதற்கு பதிலாக, நமக்குக் கர்த்தர் தேவை என்பதே நம் சாட்சி. இது நமக்கு ஒரு வெட்கக்கேடு அல்ல; மாறாக, இதுவே நம் மேன்மைப் பாராட்டுதல் ஆகும். நாம் சுதந்திரமானவர்கள் அல்ல,  சார்புடையவர்கள். நமக்கு தேவன் தேவை. நம் இருத்தலின் குறிக்கோள் தேவனில் பூர்த்தி செய்யப்படுகிறது. தேவனுக்கு அப்பால் நம் சொந்த பலத்தால், சபலப்படுத்துதலை ஜெயங்கொள்வது ஒரு மகிமை அல்ல. இத்தகைய ஒரு ஜெயங்கொள்ளுதல் ஒரு வெற்றி அல்ல. நம்மைச் சபலப்படுத்துதலினின்று காத்துக்கொள்கிறவராக தேவன் இருக்க விரும்புகிறார். இதற்காக, ஜெபத்தின் மூலமாக தேவனில் நம்மைக் காத்துக்கொள்வதால் ஒரு சார்ந்துகொள்ளும் வாழ்க்கையை வாழும் நபர்களாக நாம் இருக்க வேண்டும்.

E. நம் ஜெபத்தின் மூலமாக, நாம் தேவனை தேவனாக ஏற்றுக்கொண்டு, அவரை நம் ஜீவ நிரப்பீடாக ஆதாயம்பண்ணுகிறோம்.

இத்தகைய ஒரு ஜெபம், தேவனே பிரபஞ்சத்தில் உள்ள ஒப்பற்றவர்; எல்லாற்றிற்கும் உரியவர் என்பதை ஒப்புக்கொள்கிறது. இந்த ஜெபத்தின் வழியில் தேவனைத் தேடுவது என்றால் தேவனுக்கு உரிமையுள்ள இடத்தை நம் வாழ்வுகளில் அவருக்கு அளிப்பதன் மூலம் அவரைக் கனப்படுத்துவதே ஆகும். இந்த வழியில் பூமியில் ஜெபிக்கும் மக்கள் தேவனுக்கு இருக்கும் போது, அவரது ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டு, அவரது வல்லமை காட்சிப்படுத்தப்பட்டு, அவரது மகிமை பூமியில் வெளிக்காட்டப்படுகின்றது. இவ்வாறு, இந்த ஜெபம் பூமியில் தேவனுடைய ராஜ்யத்தின் முன்னேற்றத்தை விளைவிக்கிறது, ஏனெனில் இத்தகைய ஜெபம் பூமியில் தேவன் நகர்வதற்காக அவருக்குத் தேவைப்படும் ஒத்துழைப்பை அவருக்கு அளிப்பது மட்டுமல்லாமல்; இது, நாம் அவரைத் தொடர்புக்கொள்வதன் மூலம் ஜீவனில் வளர்ச்சியையும் நமக்கு ஏற்படுத்துகிறது.

டைநிலைபிரயோகம்: தேவன் அதரிசனமானவர், மேலும் அவரில் விசுவாசியாமல் இருப்பதற்கு இதுவே ஒரு காரணம் என்று பலர் கூறுகின்றனர். “எங்களுக்குக் கடவுளைக் காட்டுங்கள், அப்போது நாங்கள் அவரில் விசுவாசிப்போம்” என்று அவர்கள் கூறுகிறார்கள். இளம் வாலிபர்கள் தாங்கள் இந்த அதரிசனமான மற்றும் பரம்புதிரான தேவனைத் தங்கள் வாழ்க்கையின் மூலமாக மற்றவர்களுக்கு வெளியரங்கமாக்க முடியும் என்பதை உணர்ந்தறிய வேண்டும். எனினும் இந்த அதரிசனமான தேவனை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதற்கு, நாம் அவரை அனுபவித்துமகிழ வேண்டும். அவர் அதரிசனமானவர் என்பதால், எவ்வாறு நாம் அவரைத் தொடர்புகொள்வது? நம் மனித ஆவியால்தான். நம் ஆவியின் மூலம் நாம் நம் தேவனைத் தொடர்புகொள்ளவும், பெற்றுக்கொள்ளவும், அனுபவித்துமகிழவும் முடியும். ஜெபம் என்றால் இதுவே—நம் ஆவியின் மூலம் தேவனைத் தொடர்புகொள்வதே ஆகும். நாம் ஜெபிக்கும்போது நாம் நம் மனதில் எதையும் யோசித்துக் கொண்டுவரவோ, சில சடங்காச்சாரத்தின்படி ஏதாவது கூறவோ தேவையில்லை. கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவதன் மூலமும், நம் இருதயத்தில் உள்ளதையெல்லாம் பற்றி அவரிடம் வெறுமனே பேசுவதன் மூலமும் நாம் எளிமையாக தேவனைத் தொடர்புகொள்ள வேண்டும். நாம் இந்த வழியில் தேவனைத் தொடர்புகொள்ளும் போது, நாம் ஓர் அதரிசனமான ஊற்றால் சக்தியூட்டப்பட்டு வழிநடத்தப்படுகிறோம், இவ்வாறு நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு பரம்புதிராகத் தோன்றும் நபர்களாக நம்மை ஆக்குகின்றோம். இந்த அதரிசனமான ஊற்றின் (தேவன்) மூலம், நாம் மற்றவர்களை மன்னிக்கவும், துன்புறுத்தல்களைச் சகித்துக்கொள்ளலாம், மற்றவர்களால் முடியாத விதத்தில் வாழவும் முடிகிறது. நாம் இந்த வழியில் வாழ்வதை மற்றவர்கள் பார்க்கும்போது, நம்மை மிகவும் வித்தியாசமானவர்களாக ஆக்குவது என்ன என்று அவர்கள் ஆச்சரியப்படுவதற்கு நடத்தப்படுகிறார்கள். அப்போது நாம் தேவனைப் பற்றி மற்றவர்களிடம் பேசும்போது, அவர்கள் செவிசாய்ப்பார்கள். இதுவே, இயேசு வாழ்ந்த அதே மாதிரியான வாழ்க்கையை வாழ்வதாகும். இயேசு செய்ததைப் போலவே, நாம் இந்த தெய்வீக, பரம்புதிரான மண்டலத்தை அனுபவித்து, நம் பரம்புதிரான, அதரிசனமான தேவனால் வாழவும் நகரவும் முடியும்.

சுவிசேஷப் பிரயோகம்: “ஜெபத்தின் நிஜமான உட்கருத்து என்னவென்றால், நம் ஆவியில் தேவனைத் தொடர்புகொள்வதும், சாட்சாத்து தேவனையே உறிஞ்சிக்கொள்வதும் ஆகும். ஜெபம் என்பது மனித ஆவி தேவனுடைய ஆவியானவரைத் தொடர்புகொள்வதே ஆகும், இதன் போது மனிதன் தேவனையே தனக்குள் உள்சுவாசிக்கிறான். ஆகையால் ஜெபத்தின் வலியுறுத்துதல், தேவனிடம் விஷயங்களைக் கேட்பதில் அல்ல, மாறாக தேவனைத் தொடர்புகொள்வதிலும் உறிஞ்சிக்கொள்வதிலுமே உள்ளது” (Life Lessons, Volume 1, Lesson 4, p24). ஒவ்வொரு நாளும், கோடிக்கணக்கான மத ரீதியான மக்கள் கோடிக்கணக்கான மத ரீதியான ஜெபங்களை உச்சரிக்கின்றனர். இந்த ஜெபங்களில் சில கனத்துக்குரியவையாகவும், தன்னலமற்றவையாகவும், பூமியில் கர்த்தர் நிறைவேற்ற விரும்புகிறவற்றுடன் ஓரளவு இணக்கமானவையாகவும் கூட இருக்கக்கூடும். ஆனால் ஜெபத்தின் நிஜமான உட்கருத்து, தங்கள் ஆவியில் தேவனைத் தொடர்புகொள்வதும் உறிஞ்சிக்கொள்வதும் ஆகும் என்ற கண்ணோட்டம் எத்தனை பேருக்கு உள்ளது? இன்று, இந்த கூடுகையில், கர்த்தர் உங்கள் ஜெபத்தை வாஞ்சிக்கின்றார். உங்களுக்கு வழங்கப்படுவது, எந்த வகையிலும் ஒரு மத ரீதியான நடைமுறைப் பயிற்சி அல்ல, மாறாகக் கர்த்தரைப் பெறுவதற்கான எளிய வழியே ஆகும். தேவன் ஆவியாயிருக்கிறார், மேலும் அவரைத் தொடர்புகொள்வதற்கும் உறிஞ்சுக்கொள்வதற்குமான திறன் கொண்ட ஒரு மனித ஆவியை அவர் உங்களுக்குள் சிருஷ்டித்தார். இந்த மனித ஆவியே உங்களுக்குள் இருக்கும் அதி ஆழமான பகுதியாகும், அது நிஜமான ஒன்றைத் தேடிவருகின்றது அதோடு தேவனைக் கண்டறிவதில் மட்டுமே இதற்கான பதில் அமைந்துள்ளது என்று எல்லா நேரமும் அறிந்திருக்கின்றது. இன்றிரவு, புறம்பான பேசுதல் உள்ளான குரலுடன் பொருந்துகிறது. கர்த்தருடன் உரையாடுவதற்காக மட்டுமல்லாமல், நீங்கள் அவரைப் பெறுவதற்கும் உறிஞ்சுக்கொள்வதற்கும் கூடுமாறு உங்கள் ஆவியால் அவரைத் தொடர்புகொள்வதற்கும் நீங்கள் ஜெபிக்க வேண்டிய நேரம் இதுவே.

மிக முக்கியக் காரியங்கள்: நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைக் குறித்த ஒரு புரிந்துகொள்ளுதல் (II.C.).      ; கர்த்தருடன் ஐக்கியம் கொள்ள ஜெபித்தல் மற்றும் நம் சொந்தத் தேவைகளுக்காவும், பிறரின் தேவைகளுக்காகவும் விண்ணப்பித்தல் (III.E.6.).

பின்னணி வாசிப்பு: The God-man Living, Messages 10–11.

REFERENCES: The God-man Living, Messages 10–17; Lessons on Prayer, Chapters 1–3; The Prayer Ministry of the Church, Chapters 1–3 (The Collected Works of Watchman Nee, Volume 22); Life-study of Luke, Message 14, pp117–118; Message 40, pp347–352; Life-study of Matthew, Message 21,pp264–269; Message 44, p522.