வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்

பகுதி 8

பாடம் 01 – 08

பாடம் 10 – 18

கிறிஸ்துவின் ஊழியம்

சபை வாழ்க்கையில் நம் ஜீவியத்தைப் பற்றிய கிறிஸ்துவின் போதனை

குறிக்கோள்: கர்த்தர் சபை வாழ்க்கையைப் பற்றிய தம் போதனையில், ஒருவரையொருவர் மன்னிக்கவும்,  ஒருவரையொருவர் சேவிக்கவும்,  ஒருவரையொருவர் மேய்த்துப்பேணுவதற்கும் எவ்வாறு நமக்குக் கற்றுக்கொடுக்கிறார் என்பதைக் காட்டுவதற்கு.

பொருட்சுருக்கம்: நான்கு சுவிசேஷங்களிலும் கர்த்தருடைய போதனையில் பெரும்பாலானவை சபை வாழ்க்கையில் நாம் ஒன்றுசேர்ந்து வாழ்வதைப் பற்றியது. இந்தப் பாடத்தில் நாம் மூன்று காரியங்களில் கவனம் செலுத்துவோம்: ஒரு மன்னிக்கும் வாழ்க்கையாகவும், ஒரு சேவிக்கும் வாழ்க்கையாகவும், ஒரு மேய்த்துப்பேணும் வாழ்க்கையாகவும் உள்ள சபை வாழ்க்கை. மத்தேயு 18 இல் கர்த்தராகிய இயேசு, சபை வாழ்க்கையில் நாம் ஒருவரையொருவர் மன்னிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய ஒரு தீவிரமான வார்த்தையை அளித்தார். கர்த்தர் நம்மீது இரக்கம் காட்டியிருந்து, இத்தனை அதிகமான விஷயங்களை நமக்கு மன்னித்திருக்கிறார் என்பதை நாம் உணர்ந்தறிய வேண்டும், மேலும் இவ்வாறு நாமும் ஒருவருக்கொருவர் இரக்கம் காட்டி, ஒருவரையொருவர் நம் இருதயங்களிலிருந்து மன்னிக்க வேண்டும் (மத். 18:35). மத்தேயு 20:20–28 இல், மற்றவர்களைச் சேவிப்பது பற்றி கர்த்தர் நமக்குப் போதித்தார். பெரியவனாயிருக்கவும், சபை வாழ்க்கையில் மற்றவர்கள் மீது அதிகாரத்தைப் பயிற்சிசெய்யவும் முயற்சிப்பதற்கு பதிலாக, நாம் ஒருவரையொருவர் மனத்தாழ்மையிலும் அன்பிலும் சேவிக்க வேண்டும். யோவான் 21:15-17 இல் கர்த்தர், சபை வாழ்க்கையில் மேய்த்துப்பேணுதலைப் பற்றி பேசினார். மேய்த்துப்பேணுதல் என்றால் சகலத்தையும்-உள்ளடக்கிய கனிவான கரிசனையைக் கொண்டு மந்தையைக் கவனித்துக்கொள்வது ஆகும். சபை வாழ்க்கையில் நாம் பரஸ்பரத்தில் மேய்த்துப்பேணுதலை, அதாவது அன்பில் ஒருவரையொருவர் மேய்த்துப்பேணுதலைப் பயிற்சிசெய்ய வேண்டும். இதைச் செய்ய, நாம் கிறிஸ்துவின் மனுஷீகத்தைக் கொண்டு ஒருவரையொருவர் சீராட்டவும், அவரது தெய்வீகத்தைக் கொண்டு ஒருவரையொருவர் போஷிக்கவும் வேண்டும்.

பின்புலம்: சபை வாழ்க்கையை வாழ்வது என்றால் என்ன? அது வெறுமனே பெரிய கூடுகைகளுக்கு வருவதுதானா? இது உண்மையில் சபை வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தாலும், சபை வாழ்க்கையின் நடைமுறையாக்கம் இந்த மூன்று குறிப்புகளில் காணப்படுகிறது: (நாம் காயப்படுத்தப்பட்டதாக உணர்ந்தாலும்கூட) மன்னித்தல், (அந்தஸ்து தரவரிசை அல்லது பதவிக்கான எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்) சேவித்தல், (பரிசுத்தவான்களைச் சீராட்டுதல் மற்றும் உணவளித்தல் மூலம்) மேய்த்துப்பேணுதல். மக்களைச் சபை வாழ்க்கையை விட்டு வெளியேற வைக்கும் எச்சரிக்கை அறிகுறிகளை அடையாளம் காண இளம்வாலிபர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். பிதாவாகிய தேவனின் நேசிக்கின்ற மற்றும் மன்னிக்கின்ற இருதயத்தைவிட்டும், இரட்சகராகிய கிறிஸ்துவின் சேவிக்கின்ற மற்றும் மேய்த்துப்பேணுகின்ற ஆவியைவிட்டும் நம்மை நாமே துண்டித்துக்கொள்ளும் போது நாம் சபை வாழ்க்கையை நடைமுறையாக்கத்தில் வாழ இயலாமல் இருப்பதை நாம் காண்கிறோம். நாம் இந்தக் காயப்படுத்தப்பட்ட நிலைமையில் தொடர்ந்து நிலைத்திருக்க ஒருபோதும் நம்மை நாமே அனுமதிக்கக் கூடாது அதோடு மத்தேயு 18 இல் காணப்படும் கிறிஸ்துவை அனுபவித்துமகிழ்வதன் மூலம் பரிசுத்தவான்களைச் சேவிப்பதற்கும் மேய்த்துப்பேணுவதற்கும் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.

திகாரம்: மத்தேயு 18.

கற்பிப்பதற்கான உண்மைகள் கொண்ட செய்திக்குறிப்பு

“கிறிஸ்தவ வாழ்க்கைக்கு இரண்டு அம்சங்கள் உள்ளன: தனிப்பட்ட கிறிஸ்தவ வாழ்க்கையின் அம்சம், கூட்டுக் கிறிஸ்தவ வாழ்க்கையின் அம்சம். தெய்வீகப் பகிர்ந்தளிப்பு முதலில் நம் தனிப்பட்ட கிறிஸ்தவ வாழ்க்கைக்காகவும், அதன்பின் கூட்டுக் கிறிஸ்தவ வாழ்க்கைக்காகவும் உள்ளது. தனிப்பட்ட கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒரு தனிப்பட்ட காரியம் ஆகும், ஆனால் கூட்டுக் கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒரு சபை காரியம் ஆகும்” (The Conclusion of the New Testament, Message 160, p. 1739).

I. கர்த்தர், சபை வாழ்க்கையிலுள்ள நம் ஜீவியத்தைப் பற்றி போதித்தார்—மத். 18.

நான்கு சுவிசேஷங்களிலும் கர்த்தருடைய போதனையில் பெரும்பாலானவை சபை வாழ்க்கையில் நாம் ஒன்றுசேர்ந்து வாழ்வதைப் பற்றியது. நாம் கர்த்தரைப் பெற்ற பிறகு, நாம் ஒரு தனிப்பட்ட வழியில் ஒரு சுயாதீனமான வாழ்க்கையை வாழ்வது கர்த்தருக்கு விருப்பமில்லை. நாம் கூட்டு சபை வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆகவே, இத்தகைய ஒரு கூட்டு் வாழ்க்கையை வாழ்வது குறித்து அவர் தம் சீஷர்களிடம் பல விஷயங்களைப் பேசினார்.

II. சபை வாழ்க்கை என்பது ஒரு மன்னிக்கும் வாழ்க்கையும், ஒரு சேவிக்கும் வாழ்க்கையும், ஒரு மேய்த்துப்பேணும் வாழ்க்கையும் ஆகும்—மத். 18:15– 35; 20:20–28; யோவான் 21:15–17

சபை என்பது தனிநபர்களை ஒன்றிணைத்துக் கொண்டுவந்து, அவர்களைச் சபை என்று அழைப்பதன் மூலம் உருவாக்கப்படும் ஒரு சமூக அமைப்பு அல்ல. மாறாக, சபை என்பது கிறிஸ்துவின் ஜீவனின் வெளிப்பாய்தல் மூலம் உற்பத்திசெய்யப்பட்ட கிறிஸ்துவின் ஜீவாதார சரீரம் ஆகும் (எபே. 1:22–23). இந்த ஜீவனைப் பெற்றிருக்கும் இளம் விசுவாசிகளாக, நாம் இப்போது இந்தச் சரீரத்தின் அவயவங்களாக இருக்கிறோம். ஆயினும்கூட ஒருவர், “சபை வாழ்க்கை என்றால் என்ன?” என்று கேட்கக்கூடும்.சுவிசேஷங்களில் உள்ள கர்த்தருடைய போதனையின்படி, சபை வாழ்க்கை என்பது ஒரு மன்னிக்கும் வாழ்க்கையும், ஒரு சேவிக்கும் வாழ்க்கையும், ஒரு மேய்த்துப்பேணும் வாழ்க்கையும் ஆகும்.

A. சபை வாழ்க்கை என்பது ஒரு மன்னிக்கும் வாழ்க்கை ஆகும்—மத். 18:15–35

“சபை வாழ்க்கையில் விசுவாசிகள் ஒருவரையொருவர் மன்னிக்கின்றனர். பேதுரு கர்த்தரிடம், ‘என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ’ என்று கேட்டான் (மத். 18:21). கர்த்தர், ‘ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்’ என்று பதிலளித்தார் (வ. 22), பின்னர் அவர் ஓர் உவமையை ஓர் உதாரணமாகக் கொடுத்தார் (வ.வ. 23-35). மத்தேயு 18:35, ‘நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்’ என்று கூறுகிறது. நமக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிற சகோதரனை நாம் மன்னிக்காவிட்டால், நாம் இருதயத்திலிருந்து மனப்பூர்வமாய் அவனை மன்னிக்கும்வரை, நாம் கர்த்தரால் ஒழுங்குபடுத்தப்படுவோம். அப்போது கர்த்தர் நம்மை மன்னிப்பார். மனந்திரும்புதல் மற்றும் மன்னிப்பின் வழியை நாம் பயிற்சிசெய்யவில்லை எனில், எவ்வளவு அதிகமான காலம் நாம் சபை வாழ்க்கையில் தங்கியிருக்கிறோமோ, அவ்வளவு அதிகமான குற்றங்கள் இருக்கும். இறுதியில், குற்றங்களின் இந்தக் குவிப்பு, நாம் சபை வாழ்க்கையைக் கைவிடுவதற்கான காரணமாகிவிடும். நமக்குத் தேவையான கிருபையைக் கர்த்தர் நமக்கு அருள்வாராக. நீங்கள் ஒருவனைக் காயப்படுத்தினால், நீங்கள் அவனிடம் சென்று, மனந்திரும்ப வேண்டும். ஒருவன் உங்களைக் காயப்படுத்தினால், நீங்கள் அவனை உங்கள் இருதயத்திலிருந்து மனப்பூர்வமாய் மன்னிப்பதற்கான் கிருபைக்காகக் கர்த்தரை நோக்கிப் பார்க்க வேண்டும். நீங்கள் ஒரு குற்றத்தை மன்னித்தவுடன், நீங்கள் அதை மறந்துவிட வேண்டும், அதை ஒருபோதும் மீண்டும் குறிப்பிடக் கூடாது. நாம் இதைச் செய்தால், நாம் ஒரு நேர்த்திியான சபை வாழ்க்கையைப் பராமரிப்போம்” (The Conclusion of the New Testament, Message 163, p. 1771).

  1. கர்த்தர்தாமே நம்மீது இரக்கமாயிருந்து, அத்தனை அதிகமான விஷயங்களை நமக்கு மன்னித்தார்—மத். 18:24, 27

மத்தேயுவில் உள்ள கர்த்தருடைய உவமை, அவர் எந்த அளவிற்கு நம்மீது இரக்கமாயிருந்தார் என்பதைக் காட்டுகிறது. நாம் அவருக்கு ஒரு மாபெரும் கடன்பட்டிருக்கிறோம் (கடன் என்பது நாம் இரட்சிக்கப்பட்ட பிறகு நாம் குவித்திருக்கும் பாவங்களை மறைவாய்க் காட்டுகின்றது). நாம் அறிக்கையிட்டு மனந்திரும்பிய போது, நாம் தானே ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாத இந்த மாபெரும் கடனைக் கர்த்தர் நமக்கு மன்னித்தார். கர்த்தரிடமிருந்து இத்தகைய இரக்கத்தைப் பெற்றிருக்கும் நாம் நம் சக சகோதரர்கள் மீது இரக்கமாயிருந்து், அவர்களை நம் இருதயத்திலிருந்து மனப்பூர்வமாமய் மன்னிக்க வேண்டும்.

  1. நாம் மற்றவர்கள் மீது இரக்கமாயிருந்து, அவர்களை நம் இருதயங்களிலிருந்து மனப்பூர்வமாய் மன்னிக்க வேண்டும்—மத். 18:35; எபே. 4:32; கொலோ. 3:13

மற்றவர்களை நம் இருதயத்திலிருந்து மனப்பூர்வமாய் மன்னிக்க, நாம் கர்த்தரை ஜீவனாக எடுத்துக்கொள்ள வேண்டும். “மன்னிக்கின்ற கர்த்தர் நம் ஜீவனாக இருக்கிறார், நம்முள் வாழ்கிறார்; மன்னித்தல் அவரது ஜீவனின் ஒரு நற்பண்பாகும். நாம் அவரை நம் ஜீவனாகவும் நபராகவும் எடுத்துக்கொண்டு, அவரால் வாழும்போது, நாம் மற்றவர்களை மன்னிப்பது புறத்தூண்டுதலற்றதாக இருக்கும்—அது நம் கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒரு நற்பண்பாக மாறும்” (Col3:13, footnote 2).

B. சபை வாழ்க்கை என்பது ஒரு சேவிக்கும் வாழ்க்கை ஆகும்—மத். 20:20–28

சபை வாழ்க்கை என்பது நாம் ஒருவரையொருவர் சேவிக்கி்ற ஒரு சேவிக்கும் வாழ்க்கையாகவும் உள்ளது. இது நம் “இயற்கையான, சுய-நாட்டமுள்ள மனதிற்கு” முரணானது (Matt20:26, footnote 1). நாம் முதன்மையாயிருந்து, மற்றவர்களுக்கு மேலாக ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பதவியை வகிக்கவே பெரும்பாலும் விரும்புகிறோம். மத்தேயு 20:20-24 மற்றும் லூக்கா 22:24 இல் உள்ள சீஷர்களுக்கு ஒரு சேவைசெய்யும் மனப்பாங்கு இருக்கவில்லை, மாறாக யார் பெரியவனாயிருந்தான் என்று தங்களுக்குள் வாதிட்டனர். போட்டியும் லட்சியமும் சபை வாழ்க்கையைச் சேதப்படுத்துகிறது. இந்தக் காரணத்திற்காகவே கர்த்தர் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தது, லட்சியம் நிறைந்தவர்களாக இருப்பதற்கு அல்ல, மாறாக மற்றவர்களை அவர்களது அடிமைகளாகச் சேவிப்பதற்கே.

  1. நாம் பெரியவனாயிருக்கவும், மற்றவர்கள் மீது அதிகாரஞ்செலுத்தவும் முயலக்கூடாது—மத். 20:25–26

உலகில், பெரியவர்களாய் இருப்பவர்கள், மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்தும் ஆட்சியாளர்களே (மத். 20:25). ஆனால் சபையில் இது அப்படியல்ல. சபையில், “உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்” என்று கர்த்தர் கற்பித்தார் (மத். 20:26).

  1. நாம் மனத்தாழ்மையிலும் அன்பிலும் ஒருவரையொருவர் சேவிக்க வேண்டும்—மத். 20:26–28; கலா. 5:13

நாம் சபை வாழ்க்கையில் மாபெரிய ஒருவனாக இருக்கும் லட்சியம் நிறைந்தவர்களாக இருக்கக்கூடாது. நாம் வெறுமனே மனத்தாழ்மையிலும் அன்பிலும் பரிசுத்தவான்களை அவர்களது அடிமைகளாகச் சேவிக்க வேண்டும். கர்த்தர் சேவிக்கப்படும்படி வராமல், சேவிக்கும்படி வந்ததைப் போலவே, நம்மிடமும் ஒருவரையொருவர் சேவிப்பதற்கான அதே மனநிலையுள்ளவர்களாக இருக்க வேண்டும் (மத். 20:28; பிலி. 2:3–5).

C. சபை வாழ்க்கை என்பது ஒரு மேய்த்துப்பேணும் வாழ்க்கை ஆகும்—யோவான் 21:15-17

யோவான் 21:15-17 இல் யோவானின் ஜீவ சுவிசேஷத்தின் முடிவில் கர்த்தர், சபை வாழ்க்கையில் மேய்த்துப்பேணுவதைப் பற்றி் பேசினார். கர்த்தர் தம் பூமிக்குரிய ஊழியத்தின்போது மக்களை மேய்த்துப்பேணினார் (மத். 9:36) அதோடு தம் பரலோக ஊழியத்தில் இன்னும் சபையைை மேய்த்துப்பேணிக் கொண்டிருக்கிறார். யோவான் 21:17 இல், கர்த்தர் மேய்த்துப்பேணவும் பேதுருவுக்குப் போதித்தார் (யோவான் 21:17). மேய்த்துப்பேணுதல் என்றால் சகலத்தையும்-உள்ளடக்கிய கனிவான கரிசனையைக் கொண்டு மந்தையைக் கவனித்துக்கொள்வது ஆகும். சபை வாழ்க்கையில் நாம் பரஸ்பரத்தில் மேய்த்துப்பேணுதலை, அதாவது அன்பில் ஒருவரையொருவர் மேய்த்துப்பேணுதலைப் பயிற்சிசெய்ய வேண்டும்.

  1. நாம் கிறிஸ்துவின் மனுஷீகத்தைக் கொண்டு ஒருவரையொருவர் சீராட்ட வேண்டும்—எபே. 5:29;1 தெச. 2:7

“மக்களைச் சீராட்டுவது என்றால், அவர்களை சந்தோஷமாக்குவது, அவர்களை ஆறுதல்படுத்துவது, நீங்கள் அவர்களுக்கு மகிழ்ச்சியாகவும், எல்லாவற்றிலும், எவ்விதத்திலும் தொடர்புகொள்வதற்கு எளிமையாகவும் இருக்கிறீர்கள் என்பதை அவர்கள் உணரும்படிச் செய்வதுமாகும்” (The Vital Groups, Message 10, p97). நாம் மற்றவர்களை மேய்த்துப்பேணும் போது, நாம் அவர்களை மகிழ்விக்கும்படி அவர்களைச் சீராட்ட வேண்டும். ஒரு தாய் ஒரு குழந்தைக்குப் பாலூட்டும் போது, அவள் குழந்தையை அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் அரவணைக்கிறாள். இது குழந்தையை மகிழ்ச்சியாகவும், வசதியாகவும், உணவைப் பெற விருப்பமாகவும் உணர வைக்கிறது. யோவான் 8 இல் கர்த்தர் தம் மனுஷீகத்தில் பாவமுள்ள விபச்சார ஸ்திரீயை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்காமல் இருப்பதன் மூலம் அவளைச் சீராட்டினார். அது இந்த ஸ்திரீயைக் கர்த்தர் போஷிப்பதற்கான வழியை ஆயத்தம்பண்ணும்படி இவளுக்கு ஓர் ஆறுதலாக இருந்தது.

  1. நாம் கிறிஸ்துவின் தெய்வீகத்தைக் கொண்டு ஒருவரையொருவர் போஷிக்க வேண்டும்—எபே. 5:29;

யோவான் 21:15, 17

“மக்களைப் போஷிப்பது என்றால், மூன்று நிலைகளில் உள்ள அவருடைய முழுமையான ஊழியத்தில் சகலத்தையும்-உள்ளடக்கிய கிறிஸ்துவைக்கொண்டு அவர்களுக்கு உணவூட்டுவதாகும். நாம் மக்களிடம் கிறிஸ்துவைப் பற்றி பேசும்போது, அவர்களுக்கு புரியாத ஒரு வகையான மொழியில் நாம் அவர்களிடம் ஒரு புரிந்துகொள்ள முடியாத வழியில் பேசக்கூடாது. நாம் இந்தச் சகலத்தையும்-உள்ளடக்கிய கிறிஸ்துவை அனைவருக்கும் வழங்குவதற்கான ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்” (The Vital Groups, Message 11, p103). மக்களைச் சீராட்டியப் பிறகு நாம் அவர்களைப் போஷிக்கத் தொடர்ந்து முன் சென்றாக வேண்டும். பரிசேயர்கள் அனைவரையும் அனுப்பிவிடுவதன் மூலமும், அவளை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்காததன் மூலமும் கர்த்தர் முதலில் இந்த பாவமுள்ள ஸ்திரீயை சீராட்டினார். பின்னர், அவளைப் பாவத்திலிருந்து விடுவிப்பதற்காகவும், “இனிப் பாவஞ்செய்யா”மல் இருக்கும்படி அவளுக்குத் திறனளிப்பதற்காகவும் அவர் தம் தெய்வீகத்தில் அவளைப் போஷித்தார் (யோவான் 8:11, 24, 34-36). கர்த்தர் நானே இருக்கிறேனாக தம் தெய்வீக ஜீவனால் அவளை விடுதலையாக்கினார். நாம் மற்றவர்களை மகிழ்விப்பதற்காக அவர்களைச் சீராட்டவும், அவர்களிடம் சத்தியத்தைப் பற்றிய ஒன்றைப் பேசுவதன் மூலம் அவர்களைப் போஷிக்கவும் செய்யும்போது, நாம் அவர்களை மேய்த்துப்பேணுகிறோம்.

III. சபை வாழ்க்கையில், நாம் மக்களை மன்னிக்கவும், சேவிக்கவும், மேய்த்துப்பேணவும் வேண்டும்

சபை வாழ்க்கையை வாழும் நம் ஜீவியம் ஒரு மன்னிக்கும் வாழ்க்கையாகவும், சேவிக்கும் வாழ்க்கையாகவும், மேய்த்துப்பேணும் வாழ்க்கையாகவும் இருந்தால் எந்தவொரு காயப்படுத்துதல்களுக்கும் இடமளிக்காத, எந்தப் பதவியையும் நாடாத அதோடு பரிசுத்தவான்களின் முன்னேற்றத்துக்காகவும், விசுவாசத்தின் சந்தோஷத்திற்காகவும் அவர்களுக்கு அக்கறைசெலுத்தும் ஒரு சபை வாழ்க்கையை நாம் அனுபவித்துமகிழ்வோம். இது சபை வாழ்க்கையை மிகவும் அனுபவித்துமகிழத்தக்கதாக ஆக்குகிறது.

டைநிலைபிரயோகம்: சபையின் அதி எளிய வரையறை “சபைமன்றமே” ஆகும். சபைமன்றமாக சபை என்பது அழைக்கப்பட்டோர் அனைவரின் கூடிவருதல் ஆகும். சபை: ஒரு பாடப் புத்தகம், அழைக்கப்பட்டோரின் சபைமன்றமாக சபையைப் பற்றிய ஒரு விவரணத்தை அளிக்கிறது (Lesson 3, pp27–30). சபை என்பது ஒரு பௌதிகக் கட்டிடம் அல்ல, மாறாக தம் குறிக்கோளின் நிறைவேற்றத்திற்காக உலகத்தைவிட்டு வெளியே சாட்சாத்து தேவனிடமே அழைக்கப்பட்டிருக்கும் அனைவரையும் கூட்டிச்சேர்க்கும் ஒரு கூடுகை ஆகும். நாமே சபை! ஆயினும்கூட, சபை என்பது தேவனுடைய ஜீவனைக் கொண்ட வெவ்வேறு மக்களைக் கூட்டிச்சேர்க்கும் கூடுகையாக இருப்பதால், பெரும்பாலும் காயப்படுத்துதல்கள் உள்ளன. மற்றவர்களுடன் ஒன்றுசேர்ந்து கூடிவருவது அற்புதமானது, ஆனால் இந்த ஒன்றுசேர்தல் பெரும்பாலும் விரும்பத்தகாத உணர்வுகளை விளைவிக்கக்கூடிய நம் வேறுபாடுகளை வெளியே கொண்டுவருகின்றன. இதை அறிந்திருந்து, மத்தேயு 18 இல் கர்த்தர் மன்னிப்பைப் பற்றிய காரியம் தொடர்பாகப் பேசினார். நாம் மற்றவர்களைக் காயப்படுத்தும்போது, நாம் அவர்களது மன்னிப்பை நாடியாக வேண்டும். மற்றவர்கள் நம்மைக் காயப்படுத்தும்போது, நாம் அவர்களை மன்னித்து, அவர்கள் செய்த தவறுகளை மறந்தாக வேண்டும். நாம் மற்றவர்களை மன்னிக்கும் போதெல்லாம், நாம் நிஜமான சபை வாழ்க்கையை அனுபவிக்கிறோம்.

சுவிசேஷப் பிரயோகம்: உள்நோக்கத்தில் தூய்மையான, உறவுகளில் மன்னிக்கும் அதோடு மற்றவர்களுக்காக அக்கறைப்படும் ஓர் உண்மையான மற்றும் அன்பான நபரை இன்றைய சமுதாயத்தில் கண்டுபிடிப்பது கடினம். 2 தீமோத்தேயு 3:1-4, “மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நன்மையை நேசிக்காதவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்பால் குருடாக்கப்பட்டவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்” என்று கூறும் போது அது நம் தற்போதைய சமுதாயத்தை விவரிக்கிறது (கிரே.). இந்த வசனங்கள் உண்மையாகவும் அன்பாகவும் இல்லாத ஒரு சமுதாயத்தை விவரிக்கின்றன. (இங்கே, நீங்கள் ஒரு தனிப்பட்ட மற்றும் கண்டித்துணர்த்தும் வார்த்தையை அவர்களிடம் பேசி,முன்னதாகக் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு குணாதிசயங்களையும் பொறுத்தவரை “நீங்கள் எப்படி?”  என்று கேட்கும்படி உணரக்கூடும்.) இத்தகைய ஒரு வருந்தத்தக்க நிலைமையிலிருந்து நீங்கள் எவ்வாறு விடுதலையாக்கப்பட முடியும்? இதற்கான ஒரே பதில், கர்த்தரை உங்கள் ஜீவனாகப் பெற்று, அவரது சரீரமாகிய—சபையின் ஓர் அவயவமாக ஆகுவதற்கு ஞானஸ்நானம் பண்ணப்படுவதே ஆகும். நேர்த்தியான சபை வாழ்க்கை என்பது பலவீனமான மற்றும் காயமடைந்தவர்களைப் பராமரிப்பதற்கான ஒரு குணப்படுத்தும் மருத்துவமனையாகவும், தேவனுடைய ஜீவன்-தரும் வார்த்தையால் உங்களை பெலப்படுத்தவும் போஷிக்கவும் உள்ள ஒரு தெய்வீகப் பள்ளியாகவும், நீங்கள் தெய்வீக ஜீவனில் முதிர்ச்சிக்கென்று நாளுக்கு நாள் வளரும்போது உங்களைக் கவனித்துக்கொள்வதற்கான ஓர் அன்பான வீடாகவும் உள்ளது. அற்புதமான சபை வாழ்க்கையில் காணப்படும் அன்பும் கரிசனையும், எல்லோரும் தன்னை மட்டுமே “நம்பர் ஒன்” என்று எண்ணிக்கொள்ளும் இன்றைய சமுதாயத்தில் காணப்படும் சுய-நாட்டமுடையோர் அனைவருக்கும் அப்படியே நேரெதிராக உள்ளது. தம்மையே நம் ஜீவனாகவும், சபையை நம் வாழ்க்கையாகவும் நமக்குக் கொடுத்ததற்காகக் கர்த்தரைத் துதியுங்கள்! ஜீவனில் தேவனுடைய ஒரு குமாரனாகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய—சபையின் ஓர் அவயவமாகவும் ஆகுவதற்கு இன்றே விசுவாசித்து, ஞானஸ்நானம் பெறுங்கள்!

மிகமுக்கியக் காரியங்கள்: ஒரு சுறுசுறுப்பான, கூட்டு சபை வாழ்க்கையைப் பயிற்சிசெய்தல் (III.F.).

பின்னணி வாசிப்பு: The Conclusion of the New Testament, Message 163, pp1771–1773; The Crystallization-study of the Gospel of John, Message 13.

REFERENCES: Colossians 3:13, footnote 2; Life-study of Matthew, Message 52; Message 55, pp652–

656; Matthew 20:26, footnote 1; The Church, A Lesson Book, Lesson 3, pp27–30; The Collected Works of Watchman Nee, Volume 15, pp206–210; The Conclusion of the New Testament, Message 160; Message 163, pp1771–1773; The Crystallization-study of the Gospel of John, Message 13; The Vital Groups, Messages 6–7, 10–11.