வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்
பகுதி 8
✵பாடம் 01 – 08
✵பாடம் 10 – 18
கிறிஸ்துவின் ஊழியம்
உவமைகளில் கிறிஸ்துவின் போதனை (1)
குறிக்கோள்: பாவிகளை இரட்சிப்பதில் மூவொரு தேவனின் அன்பான கரிசனையையும், கிரியையும் காண்பதற்கு.
பொருட்சுருக்கம்: இந்தப் பாடத்தில் நாம் லூக்கா சுவிசேஷத்திலுள்ள நான்கு பிரதான உவமைகளைப் பற்றி பேசுவோம்—லூக்கா 15 இல் மேய்ப்பனும் தொலைந்துபோன செம்மறியாடும், ஸ்திரீயும் தொலைந்துபோன காசும், தகப்பனும் ஊதாரி மைந்தனும் பற்றிய உவமைகள் மற்றும் லூக்கா 10 இல் நல்ல சமாரியன் பற்றிய உவமை. லூக்கா 15 இல் உள்ள மூன்று உவமைகளும் பாவிகளை இரட்சிப்பதற்கான மூவொரு தேவனின் இரட்சிக்கும் அன்பையும், கிரியையும் திரைநீக்குகின்றன. இந்த உவமைகள் தொலைந்துபோன மக்களை இரட்சிப்பதிலும், அவர்களை தம் மூலமாக தமக்குள் கொண்டுவருவதற்கான மூவொரு தேவனின் கிரியையை வெளிப்படுத்துகின்றன. லூக்கா 10:25-37 இல் கர்த்தராகிய இயேசு தம்மையே நல்ல சமாரியனாகச் சித்தரிக்கிறார். இந்த உவமை, மரிக்கின்றவனுக்காகக் கர்த்தர் எவ்வாறு கரிசனைப்படுகிறார் என்பதை ஒரு விரிவான வழியில் காட்டுகிறது. இந்த உவமைகள் மூலமாக நாம் நம் தேவை, நம் இரட்சகராகிய கிறிஸ்துவில் உள்ள தேவனுடைய இரட்சிப்பு ஆகிய இரண்டையும் காண்கிறோம்.
பின்புலம்: கர்த்தருடைய இரட்சிப்பு, தனிப்பட்ட ரீதியில் நம் ஒவ்வொருவருக்காகவும் உள்ளது என்ற ஓர் உணர்வை இந்த உவமைகள் நமக்குத் தருகின்றன. அவர் நம்மைப் பொக்கிஷமாகக் கருதுகிறார் அதோடு அவர் நம்மைக் கண்டுபிடிக்கும் வரை நம்மைத் தேடுவதை நிறுத்தவில்லை. நாம் உலகத்திலும், நம்மிலும், பாவத்திலும் தொலைந்துபோய், பிரமாணத்தின் மரண அடிகளின் கீழ் காயப்படுத்தப்பட்டோம். ஆனால் அவர் நம்மை தனிப்பட்ட முறையில் நாடினார், பாசமாக நமக்காகக் கரிசனைப்பட்டார், அவர் நம்மைக் கண்டெடுத்தவுடன் நம்மைக் குறித்து களிகூர்ந்தார். எவ்வாறு கர்த்தர் தம் தோள்களில் நம்மைச் சுமந்தார் (மேய்ப்பனின் உவமை), அவர் நம்மைக் கண்டெடுக்கும் வரை நம் இருதயத்தைப் பெருக்கினார் (ஸ்திரீயின் உவமை), நம்மிடம் ஓடிவந்து நம்மை முத்தமிட்டார் (அன்பான தகப்பனின் உவமை), நம் காயங்களைக் கட்டி நம்மை சபைக்குக் கொண்டுவந்தார் (இழிவாகக் கருதப்பட்ட சமாரியனின் உவமை). ஒவ்வோர் இளம் வாலிபனும் மூவொரு தேவனுக்கு விசேஷித்தவன் அதோடு தேவன் தங்களை ஒரு மாபெரும் அன்புடன் நேசிப்பதில்லை என்று ஒருபோதும் உணரக்கூடாது.
அதிகாரங்கள்: லூக்கா 10, 15.
கற்பிப்பதற்கான உண்மைகள் கொண்ட செய்திக்குறிப்பு
இதுவும், பின்வரும் பாடமும் கர்த்தர் தம் போதனையில் பயன்படுத்திய உவமைகளில் சிலவற்றைப் பற்றி பேசும். இந்தக் குறிப்பிட்ட பாடம், (மேய்ப்பனும், தொலைந்துபோன செம்மறியாடும்; ஸ்திரீயும், தொலைந்துபோன காசும்; தகப்பனும், ஊதாரி மைந்தனும் பற்றிய உவமைகளில் காட்டப்பட்டுள்ள) மூவொரு தேவன் தொலைந்துபோன பாவிகளைத் தேடுவதைச் சித்தரிக்கும் லூக்கா 15 இன் உவமைகளைப் பற்றியும், லூக்கா 10 இல் உள்ள நல்ல சமாரியனின் உவமையைப் பற்றியும் பேசுகிறது. அடுத்தப் பாடம் மத்தேயுவிலிருந்து எடுக்கப்பட்ட உவமைகளைப் பற்றி பேசும், அதில் விதைப்பவன் மற்றும் நான்கு வகையான நிலம் பற்றிய உவமையும், தாலந்துகள் பற்றிய உவமையும், பத்து கன்னிகைகள் பற்றிய உவமையும் அடங்கும். இந்தப் பாடம் நிறைய குறிப்புகளைப் பற்றி பேசுவதால், நீங்கள் இரண்டு வார காலத்திற்குள் இந்தப் பாடத்தை நடத்திமுடித்து, லூக்கா 15 மற்றும் லூக்கா 10 ஐ இந்த வெவ்வேறு வாரங்களில் பேசும்படி உணரக்கூடும்.
I. சிலருக்குச் சத்தியங்களை வெளிப்படுத்தவும், மற்றவர்களிடமிருந்து அவற்றை மறைக்கவும் கர்த்தர் தம் போதனையில் உவமைகளைப் பயன்படுத்தினார்—மத். 13:10–17; லூக். 8:10
ஒரு சித்தரம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்று கூறப்படுகிறது, எனவே கர்த்தர் தம் போதனைகளில் பெரும்பாலும் உவமைகளை (ஆவிக்குரிய உட்கருத்து வாய்ந்த ஒன்றை வெளிக்கொணர்கிற கதைகள்) பயன்படுத்தினார். எனினும், செவிசாய்ப்பவர்கள் புரிந்துகொள்ளாதவாறு கர்த்தர் தாம் உவமைகளில் பேசினார் என்றும் தம் சீஷர்களிடம் சொன்னார்! சிலருக்குச் சத்தியத்தைத் தெளிவுபடுத்தவும், மற்றவர்களிடமிருந்து அதை மறைக்கவும் முடியக்கூடிய இந்தக் கதைகள் கர்த்தருடைய தெய்வீக ஞானம் மற்றும் அறிவின் விளைபொருளாக இருந்தன. ஆகவே உவமைகளை ஆய்வுசெய்ய வரும்போது நாம் கர்த்தரிடம் ஞானம் மற்றும் புரிந்துகொள்ளுதலின் ஆவியைக் கேட்க வேண்டும், ஏனெனில் கர்த்தருடைய உவமைகள் இயற்கையான மனதால் புரிந்துகொள்ளப்பட முடியாது. “ஒரு பணிந்தடங்கும் இருதயத்திலுள்ள பிரகாசிப்பிக்கப்பட்ட மனம் மட்டுமே இந்தப் பரம இரகசியங்களைப் புரிந்துகொள்ள முடியும்” (Matt13:11, footnote 1). நாம் கர்த்தருடைய சீஷர்களைப் போன்று இருக்க வேண்டும், மேலும் வார்த்தையின் இந்த விலையேறப்பெற்ற பகுதிகளில் உள்ளடக்கப்பட்டுள்ள வெளிப்பாட்டைப் பெற அவரிடம் வர வேண்டும்.
II. லூக்கா 15 இல், மூன்று உவமைகளிலும் மூவொரு தேவன் தொலைந்துபோன பாவியைத் தேடுவதையும் இரட்சிப்பதையும் நாம் காண்கிறோம்—லூக். 15:1–32
கர்த்தர் தாம் பாவிகளை வரவேற்று, அவர்களுடன் சாப்பிட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாகை இந்த மும்மடங்கு உவமையைக் கொடுத்தார் (லூக். 15:1-2). இந்த உவமைகளில் கர்த்தர் வெளிப்படுத்துவது என்னவெனில், தொலைந்துபோன பாவியைத் தேடுவதிலும் இரட்சிப்பதிலும் முழு மூவொரு தேவனும் ஈடுபட்டுள்ளார் என்பதே. இந்த உவமைகளின் வரிசைக்கிரமம் உட்கருத்து வாய்ந்தது: முதலில் குமாரன் தம் தேடுதலிலும், பின்னர் ஆவியானவரும் காட்டப்படுகிறார், அதன்பின் பிதாவானவர் குமாரன் மற்றும் ஆவியானவரின் தேடுதலின் பலனைப் பெறுகிறார். இது வேதாகமத்தின் வரிசைக்கிரமத்தோடும் அதேபோல் நம் அனுபவத்தோடும் பொருந்துகிறது. சுவிசேஷங்களில், இயேசு பாவிகளைத் தேடவும், அவர்களுக்காக மரிக்கவும் வந்தார். இதைத் தொடர்ந்து, நடபடிகள் முதற்கொண்டு, ஆவியானவர் கிறிஸ்துவின் மீட்பின் வேலையின் அடிப்படையில் மனிதர்களின் இரட்சிப்புக்காகவும் மனந்திரும்புதலுக்காகவும் அவர்களுக்குள் வேலைசெய்யத் தொடங்கினார். இவ்வாறு, பல பாவிகள் “கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றனர்” அதோடு கிறிஸ்துவின் மீட்பின் அடிப்படையில் ஆவியானவர் மூலமாகப் பிதாவாகிய தேவனிடம் முன்வந்துள்ளனர் (எபே. 2:18).
A. மேய்ப்பன் மற்றும் தொலைந்துபோன செம்மறியாடு பற்றிய உவமையில், குமாரன் இந்த உலகிற்குள் வந்து, அவனுக்காக மரிப்பதன் மூலம் பாவியைத் தேடுவது காட்டப்பட்டுள்ளது—லூக். 15:3-7
யோவானில், கர்த்தர் தாம் தம் ஆடுகளுக்காக தம் ஜீவனைக் கொடுக்கும் நல்ல மேய்ப்பர் என்பதை நமக்கு வெளிப்படுத்துகிறார் (யோவான் 10:11). லூக்காவில் உள்ள இந்த உவமை, அவர் உலகில் மனிதர்களிடையே ஒரு மனிதனாக ஆகுவதற்கு தம் மகிமையை ஒதுக்கி வைத்ததைச் சுட்டிக்காட்டுகிறது, பின்னர் அவர் நம் அனைவரையும் தம்முடன் சிலுவைக்குச் சுமந்துசென்று, தம் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குள் நம்மைக் கொண்டுவந்து, நம்மை மீட்கின்றார். இவ்வாறுதான் தொலைந்துபோன நாம் “கண்டுபிடி”க்கப்பட்டோம் (லூக். 15:6). நம்மைக் காப்பாற்றுவதற்காக கர்த்தர் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருந்தது என்பதை நாம் கருத்தில் கொள்ளும்போது அது நம்மை மனதுருக வைக்கிறது. அவர் வெறுமனே ஒரு மனிதனாக வளர்ந்து, மனுக்குலத்தின் திரளானோருக்காக மரிக்கவில்லை; அவர் நம் ஒவ்வொருவரையும் கருத்தில்கொண்டு் வளர்ந்து மரித்தார். அவரைப் பொறுத்தவரை நாம் ஒவ்வொருவருமே அந்தத் தொலைந்துபோன ஆடுகள்தான். அவரது தொலைந்துபோன ஆடுகளில் ஒன்றுதான் “கண்டுபிடி”க்கப்படவில்லை என்றாலும்கூட அவரால் ஒருபோதும் இளைப்பாறுதலில் இருக்க முடியாது. பின்வருபவைதான் இந்த உவமையைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல்கள்.
- இந்த ஆடு தொலைந்துபோன இடமாகிய வனாந்தரம், உலகத்தை அடையாளப்படுத்துகிறது—லூக். 15:4
இந்தத் தொலைந்துபோன ஆடு வனாந்தரத்திற்குள் அலைந்து திரிந்தது, இது உலகத்தை அடையாளப்படுத்துகிறது. நிச்சயமாகவே இந்த உலகம்,, தொலைந்துபோனவர்களாலும் அலைந்துதிரிகின்றவர்களாலும் நிறைந்த ஒரு பரந்த வனாந்தரம் ஆகும்! நம்மைக் கண்டுபிடிப்பதற்குக், கர்த்தர் இந்த உலகத்திற்குள் வந்து (யோவான் 1:9), மனிதர்களிடையே ஒரு மனிதனாக வாழ வேண்டியிருந்தது.
- மேய்ப்பனின் தோள்களின்மேல் சுமக்கப்படுதல் என்பது கர்த்தருடைய இரட்சிக்கும் வலிமையை அடையாளப்படுத்துகிறது—லூக். 15:5
கர்த்தர் நம்மை வனாந்தரத்தைவிட்டு வெளியே சுமந்துவந்து, நமக்காகச் சிலுவையில் மரிப்பதன் மூலம் தம் மந்தைக்குள் நம்மைக் கொண்டுவந்தார். இப்போது நாமும் அவரும், இரட்சிக்கப்பட்ட அனைவருடனும் களிகூர்ந்திட முடியும்! ஓர் உதவியற்ற தொலைந்துபோன ஆடுகளாக, நம்மை நாமே இரட்சிப்பதற்கான எந்த ஆற்றலும் நம்மிடம் இருக்கவில்லை. நம்மைத் தம் சொந்தத் தோள்களில் சுமந்து, நம் இரட்சிப்பை நிறைவேற்றியது நம் வலுவான மற்றும் அன்பான மேய்ப்பர்தான்.
B. ஸ்திரீயும் தொலைந்துபோன காசும் பற்றிய உவமையில், இந்தப் பாவி மனந்திரும்பி, தேவனிடம் திரும்பக்கூடுமாறு பிரகாசித்தல் மற்றும் பெருக்குதல் மூலம் ஆவியானவர் அவனுக்குள் வேலைசெய்வதாகக் காட்டப்பட்டுகிறார்—லூக். 15:8–10
இந்த மேய்ப்பன் குமாரனாகிய தேவனை தெளிவாகக் குறிப்பதாலும், மூன்றாவது உவமையில் உள்ள தகப்பன் பிதாவாகிய தேவனை தெளிவாகக் குறிப்பதாலும், இரண்டாவது உவமையில் உள்ள ஸ்திரீ ஆவியானவராகிய தேவனைதான் குறித்தாக வேண்டும். இந்த உவமையின் பின்வரும் அம்சங்களால் இது உறுதிப்படுத்தப்படுகிறது.
- வீடு பாவியை அடையாளப்படுத்துகிறது, ஆவியானவரின் வேலை ஓர் உள்ளார்ந்த, அகம்சார்ந்த வேலை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது—லூக். 15:8; 1 பேது. 1:2
கிறிஸ்துவின் மீட்கும் வேலை நிறைவேற்றப்பட்டிருந்தாலும், தேவனுடைய முழு இரட்சிப்பைப் பெறுவதற்காக நம்மை அவரிடம் மனந்திரும்பவும் திரும்புவதற்கும் வைப்பதற்கு ஆவியானவரின் வேலை இன்னும் தேவைப்படுகிறது. “ஆவியானவர் நம்மைக் கண்டுபிடித்தல் நம் ஆள்தத்துவத்தின் ‘வீட்டிற்குள்’ நடைபெறுகிறது என்ற உண்மை, நாம் நம்மிலேயே தொலைந்துபோனோம் என்பதை வெளிப்படுத்துகிறது. நாம் நம் மனதிலும், சித்தத்திலும், உணர்ச்சியிலும் தொலைந்துபோனோம்….உலகத்தின் வனாந்தரத்திலிருந்து நம்மைத் திரும்பக் கொண்டுவருவதற்காகக் கிறிஸ்து சிலுவையில் மரித்தார், ஆயினும்கூட நாம் நம்மிலேயே தொலைந்துபோனவர்களாக நிலைத்திருந்தோம். ஆகவே, ஆவியானவர் நம்மை நம்மிலேயே கண்டுபிடிக்கிறார்….ஆவியானவரின் பிரகாசிப்பித்தலின் விளைவாக ஏற்படும் இந்த மனந்திரும்புதல் ஒட்டுமொத்தமாக ஓர் உள்ளார்ந்த காரியம் ஆகும். எந்தவொரு மனிதனும், எந்தவொரு தேவதூதனும் இத்தகைய ஓர் அகம்சார்ந்த வேலையை நம்மில் செய்ய இயலாது. இது, ஊடுருவிச்செல்லும் ஆவியானவரால் மட்டுமே செய்யப்பட முடியம், ஏனென்றால் நம்மைப் பிரகாசிப்பிக்கவும், அம்பலப்படுத்தவும் ஆவியானவர் நம் ஆள்தத்துவத்தின் ஆழங்களுக்குள் ஊடுருவிச்செல்ல முடியும். அப்போது, நாம் எவ்வளவு முட்டாள்த்தனமாக இருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்தறிந்து, நாம் மனந்திரும்பி, நாம் பிதாவிடம் திரும்பிவர முடிவு செய்கிறோம்” (Life-study of Luke, Message 35, p299).
- ஸ்திரீ ஒரு விளக்கைப் பொருத்தி, அதைப் பயன்படுத்தி பெருக்குகிறாள், இந்த விளக்கு தேவனுடைய வார்த்தையை அடையாளப்படுத்துகிறது—லூக். 15:8; சங். 119:105, 130
ஆவியானவரால் பயன்படுத்தப்படும் விளக்கு தேவனுடைய வார்த்தையே ஆகும். ஆவியானவர் வார்த்தையை நம் இருதயங்களுக்குப் பிரயோகித்து, நமக்குள் “பெருக்க” அதைப் பயன்படுத்தி, நம்மை அம்பலப்படுத்தவும், நமக்கு சக்தியூட்டவும், இதனால் நம்மை தேவனிடம் திரும்ப வைக்கின்றார். இது, பின்வரும் உவமையில் ஊதாரி மைந்தனின் அனுபவத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த மறைவான, உள்ளார்ந்த ரீதியில் பிரகாசிப்பத்தலும் பெருக்குதலும்தான் இறுதியில் அவனது நிஜமான சூழ்நிலையைவிட்டு விழித்தெழுந்து, தகப்பனிடம் திரும்பும்படி அவன் முடிவு செய்வதற்குக் காரணமாக அமைந்தது.
C. தகப்பன் மற்றும் ஊதாரி மைந்தன் பற்றிய உவமையில், பிதாவானவர் திரும்பிவரும் பாவியை தம்மிடம் ஏற்றுக்கொண்டு, அவனுக்குத் தம் முழுமையான இரட்சிப்பைப் பிரயோகிப்பதாகக் காணப்படுகிறார்—லூக். 15:11–32
குமாரனின் மற்றும் ஆவியானவரின் தேடுதலும் கண்டுபிடித்தலும், இந்தப் பாவி பிதாவிடம் திரும்பிவருதலை விளைவிக்கின்றன (“காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்”—லூக். 15:32). ஒரு பாவி இரட்சிக்கப்படுவதில் மூவொரு தேவனை அனுபவிக்கும் அவனது அனுபவத்தின் வெவ்வேறு அம்சங்களைக் காட்டுவதற்குக் கர்த்தர் இந்த உவமைகளை ஒன்றுசேர்த்து குழுவாக அமைத்தார். இந்த இறுதி உவமையில், திரும்பிவரும் பாவியானவன் பிதாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தேவனுடைய முழுமையான இரட்சிப்பை அனுபவித்துமகிழ்கிறான். இந்த உவமையிலிருந்து பின்வரும் குறிப்புகளை வெளியே கொண்டுவாருங்கள்:
- இந்த மகன் “தூரதேசத்துக்குப்” புறப்பட்டுப்போய் முடிந்து, அவனுக்குக் கொடுக்கப்பட்ட எல்லாவற்றையும் விரயமாக்கினான், இறுதியில் அவன் அருவருப்பிலும் அசுத்தத்திலும் உழன்று ஆழமாக மூழ்கிப்போயிருந்த ஒரு வறிய மற்றும் ஆதரவற்ற சூழ்நிலையில் போய் முடிவடைந்தான்—லூக். 15:13–16
- மகன் தான் திரும்பிவந்தால் தன்னை தன் தகப்பான் ஏற்றுக்கொள்வார் என்பதை உணர்ந்தறிய விழித்தெழுந்தான்—லூக். 15:17–19
இதுவே முந்தைய உவமைகளில் மேய்ப்பராகக் கர்த்தருடைய தேடுதலின் மற்றும் ஸ்திரீயாக ஆவியானவரின் தேடுதலின் விளைவாக இருந்தது.
- இவ்வளவு நீண்ட காலமாக தொலைந்துபோய், தனக்கு மரித்துப்போனவனாக இருந்திருந்த இந்த மகனை தந்தை எதிர்பார்த்து விழித்திருந்து, காத்திருந்தார்—லூக். 15:20, 24
அவன் வெகுதொலைவே தூரத்தில் வரும்போதே, இந்தத் திரும்பிவருகின்றவனை தகப்பன் கண்டார் என்பது இந்தத் தகப்பன் தன் மகனின் திரும்பிவருதலை எதிர்பார்த்து அதற்காக ஏங்கிக்கொண்டு விழித்திருந்தான் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. நாம் பிதாவிடம் மனந்திரும்புதலில் வரும்போது, அவர் நம்மைச் சந்திக்க விரைகிறார்! இது என்னே ஒரு மென்மையான காட்சி. மகன் தன் மனஸ்தாபத்தைச் செயல்படுத்த முடிவதற்கு முன்பு, அவனது தகப்பன் அவனைத் தழுவி, அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுகிறார். மகன் தன் பலவீனமான முன்மொழிதலை முன்வைக்க முடிவதற்கு முன்பு, தகப்பன் அவனுக்கான தன் எண்ணங்களைப் பற்றி பேசுகின்றார். மகன் நிச்சயமாகவே தன் தகப்பனின் ஏற்றுக்கொள்ளுதலைக் (வரவேற்பு) கண்டு மிரண்டு போனான். என்னே ஓர் இரட்சகர் தேவன் நமக்கு இருக்கிறார்! என்னே ஓர் அன்பு அவர் நம்மீது வைத்திருக்கிறார்! நம்மை நியாயந்தீர்ப்பதோ, ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதோ அவரது இருதயத்தில் இல்லை; நாம் அவரது முழு இரட்சிப்பையும் அன்பில் அனுபவித்துமகிழ வேண்டும் என்பதே அவரது வாஞ்சை.
- தகப்பன் திரும்பிவந்தவனின் மீது சிறந்த அதி சிறந்த வஸ்திரத்தை உடுத்தி, அவன் விரலுக்கு ஒரு மோதிரத்தையும், அவனது கால்களுக்குப் பாதரட்சைகளையும் போட்டு, அதன்பின் இந்தக் கொழுத்த கன்றை அடித்து, அவனுக்காக ஒரு விருந்து வைத்தான்—லூக். 15:22–23
இந்த அதி சிறந்த வஸ்திரம் நம் நீதியாகிய கிறிஸ்துவைப் பிரதிநிதிப்படுத்துகிறது, இந்த மோதிரம் முத்திரையிடும் ஆவியானவரைப் பிரதிநிதிப்படுத்துகிறது, மேலும் இந்தப் பாதரட்சைகள், நாம் ஒரு காலத்தில் உழன்று மூழ்கியிருந்த அழுக்கான உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுவதற்கான வல்லமையைப் பிரதிநிதிப்படுத்துகின்றன. இந்தக் காரியங்கள் அனைத்தும் நம் இரட்சிப்பின் புறம்பான அம்சத்தை உருவாக்குகின்றன. இந்தப் பொருட்கள் தரிப்பிக்கப்பட்ட பிறகு, இந்த மகன் தன் தகப்பனைப் போலவே புறம்பான ரீதியில் தோற்றமளித்தான், ஆனால் உள்ளான ரீதியில் அவனுக்கு இன்னும் தன் பசியாற்றப்படவும், உலகத்தில் பங்குபெற்றப் பிறகு மறுபடிகட்டமைக்கப்படவும் வேண்டியிருந்தது (பன்றிகள் சாப்பிட்ட உணவையே இந்த மகன் சாப்பிட்டதாக நேரடியாகச் சாற்றப்படவில்லை, ஆனால் நிச்சயமாகவே பாவிகளாக நாம் உலகத்தில் அசுத்தமான விஷயங்கள் பலவற்றையும் “சாப்பிட்டு”விட்டோம்). அப்போது தகப்பன், (நம் ஜீவ நிரப்பீடாகிய கிறிஸ்துவைப் பிரதிநிதிப்படுத்தும்) இந்தக் கொழுத்த கன்றுக்குட்டியை தன் மகன் விருந்துண்ணும்பமடி செய்தார். இது தேவனுடைய இரட்சிப்பின் உள்ளார்ந்த அம்சத்தை அடையாளப்படுத்துகிறது. “தன் தகப்பனிடம் திரும்பி வந்தபின், இந்த ஊதாரி மைந்தன் தேவனுடைய வழங்கீட்டின் சகல ஐசுவரியங்களையும் அவரது இரட்சிப்பில் அனுபவித்துமகிழ்ந்தான். அவன் கிறிஸ்துவை தன் புறம்பான நீதியாக அனுபவித்துமகிழ்ந்தான், அவன் தான் பிதாவுக்குச் சொந்தமானவன் என்பதையும், பிதாவும் அவரது ஐசுவரியங்கள் அனைத்தும் அவனுக்குச் சொந்தமானவை என்பதையும் சுட்டிக்காட்டும் முத்திரையாக ஆவியானவரை அனுபவித்துமகிழ்ந்தான், அவன் உலகத்திலிருந்து தன்னைப் பிரித்தெடுக்கும் தேவனுடைய இரட்சிப்பின் வல்லமையை அனுபவித்துமகிழ்ந்தான், மேலும் அவன் தன் ஜீவனாகவும், ஜீவ நிரப்பீடாகவும் உள்ள கிறிஸ்துவாகிய இந்த உள்ளான கிறிஸ்துவையும் அனுபவித்துமகிழ்ந்தான். எனவே, அவன் மிகவும் மகிழ்ச்சியான ஒரு நபராக ஆகுவதற்கு முடியும். அவன் தன் தகப்பனுடன் புசித்து, சந்தோஷமாயிருக்க முடியும். என்னே ஓர் இனிமையான சித்திரம் இது!” (Life-study of Luke, Message 35, p302).
- தகப்பன் தன் மறுபடி-பிறந்த மகனை தன் வீட்டிற்குள் வரவேற்றார்—லூக். 15:25
மரித்துப்போய், மீண்டும் வாழ்ந்த இவன் தன் தகப்பனின் வீட்டில் வாழ வந்தான். இங்குள்ள தகப்பனின் (பிதாவின்) வீடு சபையை அடையாளப்படுத்துகிறது (யோவான் 14:2 மற்றும் அடிக்குறிப்புகளைக் காண்க).
III. நல்ல சமாரியனின் உவமையில், நாம் ஒரு கீழ்நோக்கி செல்லும் பாதையில் காயப்படுத்தப்பட்டு, நிர்வாணமாக இருப்பதைக் கண்டு, நம் காயங்களைக் கட்டி, நம்மை உடுத்துவித்து, நம்மைச் சபைக்குக் கொண்டுவந்து, நம்மைக் கவனித்துக்கொள்ளும்படி அதற்கு நிரப்பீடு வழங்குகிற நம் மதிக்கப்படாத “அயலவர்” கர்த்தரே—லூக். 10:25–37
லூக்கா 10 இல், கர்த்தர் பாவிகளைத் தேடுவதும் இரட்சிப்பதும் நல்ல சமாரியனின் உவமையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த உவமையில், “எனக்குப் பிறன் (அயலவர்) யார்?” என்ற கேள்விக்கு கர்த்தர் பதிலளிக்கிறார். இந்தக் கேள்வியைக் கேட்ட பெருமைமிக்க நியாயசாஸ்திரி, இதைக் கேட்பதற்குமுன் நியாயப்பிரமாணத்தைக் குறித்து இன்னொரு கேள்வியைக் கேட்டிருந்தான், மேலும் அவன் நியாயப்பிரமாணத்தை தவறான விதத்தில் பிரயோகிக்க தவறாக வழிநடத்தப்பட்டதன் காரணமாக, தன்னைக் கவனித்துக் கொள்வதற்கான ஒரு நல்ல அயலவர் தேவைப்பட்டது அவனுக்குதான் என்பதை உணர்ந்தறியும்படி அவனுக்குக் கர்த்தர் உதவ விரும்பினார், ஏனெனில் இத்தகைய ஒரு அயலவராகதானே இருக்க அவன் நல்ல நிலைமையில் இருக்கவில்லை. “சுய-நீதிப்படுத்தப்பட்ட நியாயசாஸ்திரி தான் ஒருவரையொருவர் தன் அயலவராக நேசிக்க முடியும் என்று நினைத்தான் [லூக். 10:29]. தன்னை நேசிக்கும்படி தனக்கு தானே ஓர் அயலவர், இந்த [இரட்சகர்] தேவை என்பது சுய-நீதிப்படுத்தலின் குருட்டுத்தன்மையின் கீழ் அவனுக்குத் தெரியவில்லை….அவன் நியாயப்பிரமாணத்தின் கீழ் மரணத்திற்கென்று ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டான், மற்றவர்களை நேசிப்பதைப் பற்றி கூறவே தேவையில்லை, தன்னையே கவனித்துக்கொள்ள இயலாதவனாக இருந்தான் என்பதையும், இந்த [இரட்சகர்]தான் அவனை நேசித்து, அவனுக்கு முழு இரட்சிப்பையும் அளிக்கக்கூடியவராக இருந்தார் என்பதையும் இந்த இரட்சகர் இந்தக் கதையின் மூலமாக அவனுக்குத் திரைநீக்க விரும்பினார்” (Life-study of Luke, Message 25, pp216–217).
A. தான் நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடித்த போதிலும், எருசலேமிலிருந்து எரிகோவுக்குச் செல்வதற்கான ஒரு கீழ்நோக்கிய வழிப்பாதையில் சென்றுகொண்டிருந்த நியாயசாஸ்திரியை இந்தக் “குறிப்பிட்ட மனிதன்” அடையாளப்படுத்தினான்—லூக். 10:25–30 (கிரே.).
எருசலேம் என்பது தேவனுடைய பொருளாட்சியில் இந்த ஆசீர்வாதத்தின் இடத்தைப் பிரதிநிதிப்படுத்துகிறது, எரிகோ என்பது ஒரு சாபத்தின் இடத்தைப் பிரதிநிதிப்படுத்துகிறது. நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிப்பதற்கான தன் முயற்சிகள் மூலமாக அவன் தான் தன்னையே மேம்படுத்துவதாக உணர்ந்த போதிலும் இந்த நியாயசாஸ்திரி உண்மையில் எரிகோவை நோக்கி மேலும் மேலும் தாழ்வாக வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தான். தேவனுடைய ஆசீர்வாதத்தை ஆதாயம்பண்ணுவதற்காக நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்க ஒருவன் எவ்வளவு அதிகமாக முயற்சிக்கிறானோ, அவ்வளவு அதிகமாக அவன் தேவனுடைய சாபத்தின் கீழ் வருவான். மனிதன் தன் சொந்த திறனால் நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கர்த்தர் ஒருபோதும் உத்தேசிக்கவில்லை. தங்களுக்காக மரிப்பதற்கும், இத்தகைய ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கான வழியை தங்களுக்கு வழங்குவதற்கும் தங்களுக்கு ஓர் இரட்சகர் தேவை என்று மக்கள் உணர்ந்தறியும்படி செய்வதற்காக இந்த நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது.
B. நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிய முயன்றவர்களை அடித்து காயப்படுத்த நியாயப்பிரமாணத்தைப் பயன்படுத்திய, நியாயப்பிரமாணத்தின் சட்டப்பூர்வமான போதகர்களைக் கள்ளர்கள் அடையாளப்படுத்தினர்—மத். 23:3–4, 15; ரோ. 7:8–11
நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதில் மனிதனின் இயலாமை இருந்தபோதிலும், நியாயப்பிரமாணத்தைப் போதிக்கும் சில போதகர்கள், மக்களை அசாத்தியமானதைச் செய்யும்படி வலுக்கட்டாயப்படுத்தவும், மக்கள் கைக்கொள்வதற்கான கூடுதல் நியாயப்பிரமாணங்களை உருவாக்குவதற்கும்கூட தங்களால் முடிந்த அனைத்தையும் இன்னும் செய்தனர். இந்தச் சட்டபூர்வமான போதகர்கள் ஓய்வுநாளில் குணமாக்குதலை அனுமதிக்கவும்கூட செய்யாத அளவிற்கு, அவர்கள் மக்களை ஒடுக்கினர்! நியாயப்பிரமாணத்தின் மூலமாக தேவனை திருப்திப்படுத்த முயற்சிப்பவர்கள் அனைவருமே இத்தகைய போதகர்களின் தாக்கத்தின் கீழ் வருகின்றனர், மேலும் எந்தவொரு நிரப்பீட்டையும் வழங்காமல் மனிதர்கள் மீது கோரிக்கைகளை மட்டுமே வைக்கும் ஒரு அமைப்புமுறையின் கீழ் இறுதியில் காயப்படுத்தப்பட்டு இரத்தம்சிந்துவதில் போய் முடிவடைகிறார்கள். இந்தச் சட்டபூர்வமான போதகர்கள் நியாயப்பிரமாணத்தின் சுமையை மிகவும் அதிகமாக்கினர், மேலும் தங்கள் அசாத்தியமான கோரிக்கைகளை (அவர்கள் தாங்களும் கைக்கொள்ள முடியாத கோரிக்கைகளை) பூர்த்தி செய்ய முடியாதவர்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, தண்டித்தனர். இத்தகைய மாயக்காரர்கள் மெய்யாகவே கள்ளர்கள்தான், தேவனை ஒருபோதும் அடையவே முடியாதபடி மக்களின் நம்பிக்கையைத் திருடி, அவர்களது மனச்சாட்சிக்கு சேதம் விளைவிக்கின்றனர். (இந்த உவமையில் நியாயப்பிரமாணத்தின் ஊழியர்களாகிய ஓர் ஆசாரியனும், ஒரு லேவியனும் அந்த மனிதனைக் கடந்து சென்றார்கள், ஏனெனில் அவர்கள் காயமடைந்தவனுக்கு எந்த உதவியையும் வழங்க இயலாமலும் சித்தமில்லாமலும் இருந்தனர்.)
C. காயமடைந்த பாதிக்கப்பட்டவனைை இரட்சிப்பதற்காக, அவன் அடிபட்டுக் கிடந்த இடத்திற்கு இறங்கிவந்த இந்த இழிவாகக் கருதப்பட்ட சமாரியனால் கர்த்தர் அடையாளப்படுத்தப்பட்டார்—லூக். 10:33–34; யோவான் 8:48
சமாரியர்கள் யூதர்களால் இழிவாகக் கருதப்பட்ட ஒரு ஜனமாக இருந்தனர். “லூக்கா 10:25 மற்றும் 29 இல் கர்த்தர் எவனிடம் பேசிக்கொண்டிருந்தாரோ அவன் உட்பட, சுயமாக-உயர்த்தப்பட்ட மற்றும் சுயமாக-நீதிப்படுத்தப்பட்ட பரிசேயர்களால் ஒரு தாழ்வான, அற்பமான சமாரியனாக (யோவான் 8:48; 4:9) இழிவாகக் கருதப்பட்டு, நிந்திக்கப்பட்ட ஒரு தாழ்வான அந்தஸ்தைச் சேர்ந்த ஒரு பாமர மனிதனாக வெளித்தோற்றத்தில் இருந்த [இரட்சகரை] இந்தச் சமாரியன் அடையாளப்படுத்துகிறான். இத்தகைய ஓர் [இரட்சகர்], தொலைந்துபோனவனைத் தேடுகின்ற மற்றும் பாவியை இரட்சிக்கின்ற தம் ஊழியப் பயணத்தில் (19:10), யூதமதமயமாக்கும் கொள்ளையர்களால் காயப்பட்டுப் பாதிக்கப்பட்டவன் தன் பரிதாபமான மரிக்கும் நிலைமையில் கிடக்கிற இடத்திற்கு இறங்கி வந்தார்” (Life-study of Luke, Message 25, p215). இந்தச் சமாரியன் அவனது காயங்களைக் கட்டி, அவற்றின்மேல் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்தான் என்பது கர்த்தர் தம் இரட்சிப்பில் காப்பாற்றுகிறவர்களுக்கு எவ்வாறு அவர் பரிசுத்த ஆவியையும், தெய்வீக ஜீவனையும் ஊழியம்செய்கிறார் என்பதை அடையாளப்படுத்துகின்றது (see Matt. 9:17, footnote 1 and John 2:9, footnote 1).
D. சபையைப் பிரதிநிதிப்படுத்தும் சத்திரத்திற்கு இந்தச் சமாரியன் இந்த இரட்சிக்கப்பட்டவனைக் கொண்டுவந்து சேர்த்து, இரட்சிக்கப்பட்டவனின் தொடர்ச்சியான கவனிப்புக்காகச் சத்திரத்திற்குப் பணம் வழங்கினான்—லூக். 10:34-35
“இந்தச் சமாரியன் இந்த மனிதனை ஒரு சத்திரத்திற்குக் கொண்டுவந்து, அவனைக் கவனித்துக்கொண்டான். அவர் அவனை சபைக்குக் கொண்டுவந்து, சபையின் மூலமாக அவனைக் கவனித்துக்கொண்டார் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது” (Life-study of Luke, Message 25, p216). முந்தைய உவமைகளில், இந்தப் பாவி தகப்பனிடமும், தகப்பனின் வீட்டிற்கும் தன் சொந்தத்தில் வந்ததாகத் தெரிகிறது. இங்கே இந்த பெருமைமிக்க நியாயப்பிரமாணத்தைக்-கைக்கொள்பவன் தான் கவனித்துக் கொள்ளப்பட முடியக்கூடிய ஓர் இடத்திற்கு ஓர் உதவியற்ற நோயாளியாக கர்த்தருடைய கழுதை-ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட வேண்டியிருந்தது. கர்த்தர் நம் ஒவ்வொருவருக்காகவும் சபைக்குக் கிருபை அளித்திருக்கிறார் (இது காயமடைந்தவனைக் கவனித்துக்கொள்வதற்காக சமாரியனால் சத்திரத்திற்குச் செலுத்தப்பட்ட பணத்தால் அடையாளப்படுத்தப்படுகிறது). நாம் இருக்கும் சபையிடம் நமக்கான குறிப்பிட்ட கிருபை உள்ளது, ஆகவே நம் நிலைமைகள் எவ்வளவு மோசமானவையாக அல்லது தீவிரமானவையாக இருந்தாலும்சரி, நாம் இருக்கும் இடத்திலுள்ள பரிசுத்தவான்கள் நம் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நமக்கு நிரப்பீட்டை வழங்க முடியும்.
இடைநிலைபிரயோகம்: இந்த உவமைகளில் பாவிகளைத் தேடுவதிலும் இரட்சிப்பதிலும் உள்ள கர்த்தருடைய மனதுருக்கத்தையும், அவரது அன்பான இருதயத்தையும் முன்னிலைப்படுத்துங்கள். கர்த்தர் நம்மைக் கண்டுபிடிக்கவில்லை எனில், தன் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு அலைந்து திரியும் ஒரு சிறு குழந்தையைப் போலவே நாம் இன்னும் உலகத்தில் அலைந்து திரிந்துக் கொண்டிருப்போம். நாம் அதை அறியாமலே கூட, கர்த்தர் வந்து நமக்காக மரித்தார், இவ்வாறு நம்மைத் தம் தோள்களில் திரும்பக் கொண்டுவருவதற்கு தகுதியானவராக இருந்தார், ஏனெனில் நம்முடைய தேவனாகிய அவரிடம் நாம் திரும்பக் கொண்டுவரப்பட முடியுமாறு வரும்படி நமக்காக மரிப்பதே அவரது சந்தோஷமாக இருந்தது (எபி. 12:2). இன்று ஆவியானவராக அவர் தாம் செய்துமுடித்திருக்கிறவற்றை, தொலைந்துபோன பலருக்குப் பிரயோகித்து, பதிலளிக்கவும், அவர்களது இரட்சிப்பைக் “கண்டுபிடிக்கவும்” அவர்களைத் தூண்டுகின்றார். பலர் தாங்கள் இரட்சிக்கப்பட்டபோது தாங்கள் கர்த்தரைக் கண்டுபிடித்ததாகக் கூறுகின்றனர், ஆனால் அவர்கள் கர்த்தரைக் கண்டுபிடித்தது நிஜமாகவே ஆவியானவரின் பிரகாசத்தல் மற்றும் அவர்களது இருதயங்களில் அவரது மறைவான வேலையின் விளைவாக இருந்தது. குமாரன் மற்றும் ஆவியானவரின் தேடுதல் வேலையின் விளைவு என்னவெனில், நம் தகப்பனாக உள்ள தேவனிடம் நாம் ஓடுகிறோம், மேலும் அவர் நம்மை ஏற்றுக்கொண்டு, நம் புறம்பான மூடுதலுக்காகவும், உள்ளான அனுபவமகிழ்ச்சிக்காகவும் அதிகமான கிறிஸ்துவை நமக்குப் பிரயோகிக்கிறார் என்பதே. நல்ல சமாரியனின் உவமையில், இந்தச் சமாரியன் காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டுவதிலும், காயமடைந்தவனைச் சபையாகிய சத்திரத்திற்கு அவன் கொண்டுசெல்வதிலும் கவனம்செலுத்துங்கள். தாங்கள் இரட்சிக்கப்பட்டதற்கு முன் உலகத்தில் அலைந்து திரிந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், முதல் முறையாக இருந்தாலும்சரி அல்லது இரட்சிப்பிற்குப் பிறகு ஒரு மனந்திரும்புதலின் போது இருந்தாலும்சரி இரட்சிப்பிற்காக கிறிஸ்துவிடம் முன்வந்த நம் ஒவ்வொருவருக்கும் இந்தக் குறிப்புகள் அனைத்தும் பிரயோகிக்கப்படக்கூடியவையாக உள்ளன.
சுவிசேஷப் பிரயோகம்: இந்தப் பாடம் தானே ஒரு சுவிசேஷ செய்தியாக உள்ளது அதோடு இவ்வாறு வழங்கப்படலாம். தேவனிடமிருந்து விலகி, உலகத்தில் தொலைந்துபோனவர்கள் அனைவரும் தற்காலிக பூமிக்குரிய அனுபவமகிழ்ச்சியின் கரொப்பு நெற்றைப் (தவிட்டு) புசிக்கையில் திருப்திக்காக ஏங்குகின்றார்கள், இவை அவர்களைத் தொடர்ச்சியாகக் காலியாகவும், ஒருபோதும் திருப்தி அடையாமலும் இருக்க வைக்கின்றன. நம் பிதாவாகிய தேவனின் நேசிக்கின்ற மற்றும் மன்னிக்கின்ற இருதயத்தையும், நம் இரட்சகராகிய கிறிஸ்துவின் தேடுகின்ற மற்றும் இரட்சிக்கின்ற ஆவியானவரையும் குறித்து அவர்களுக்குச் சொல்லப்பட வேண்டும். தொலைந்துபோனவர்கள், நல்ல மேய்ப்பராகிய கர்த்தரால் சிலுவையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றனர் என்ற நற்செய்தியை அவர்களுக்கு அறிவியுங்கள். கர்த்தர் ஒரு பொதுவான அர்த்தத்தில் உலகத்திற்காக மரிப்பதற்கு மாத்திரம் தம்மையே கொடுக்கவில்லை (யோவான் 3:16), மாறாக அவர் மிகவும் தனிப்பட்ட ஒரு முறையில் நம் ஒவ்வொருவருக்காகவும் குறிப்பிட்ட விதத்திலும் தம்மையே கொடுத்தார் (கலா. 2:20). நல்ல மேய்ப்பராக அவர் சிலுவைக்கென்று புறப்பட்டுச் சென்று, இந்த ஒருவராகிய உங்களைக் கண்டுபிடிக்கத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் விட்டுசென்றார்! ஆயினும்கூட தேவனுடைய இரட்சிப்பின் வேலை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புறம்பான ரீதியில் செய்யப்பட்ட ஒன்று மட்டுமல்ல. வார்த்தையின் வெளிச்சத்தைப் பயன்படுத்தி, உங்களை மனந்திரும்புதலுக்குக் கொண்டுவருவதற்காக இப்போதே உங்களுக்குள் உள்ளான ரீதியில் வேலைசெய்துகொண்டிருக்கும் நுணுக்கமாகத் தேடும் ஸ்திரீயாக அவர் இன்னும் கிரியைசெய்கின்றார், இப்போதும்கூட கிரியைசெய்கின்றார். காத்திருக்கும் மற்றும் விழித்திருக்கும் தகப்பனாக அவர் உங்களைத் தண்டிப்பதற்காக அல்ல, மாறாக உங்களைப் பாசமாக முத்தமிடவும், தேவனைத்-திருப்திப்படுத்தும் நீதியாகிய கிறிஸ்துவை உங்களுக்கு உடுத்தவும் (அதி சிறந்த வஸ்திரம்), ஆவியானவரால் உங்களுக்கு முத்திரையிடவும் (மோதிரம்), அழுக்கான பூமியிலிருந்து உங்களைப் பிரித்தெடுக்க தம் இரட்சிப்பின் வல்லமையால் உங்களைத் தூக்கிப்பிடிக்கவும் (பாதரட்சைகள்), உங்கள் அனுபவமகிழ்ச்சிக்காகவும், உள்ளான இரட்சிப்பிற்காகவும் இந்த ஐசுவரியமான கிறிஸ்துவை விருந்துண்ணும்படி உங்களுக்கு அளிக்கவும் (கொழுத்த கன்றுக்குட்டி) அவர் உங்கள் திரும்பி வருதலுக்காக ஏங்குகின்றார் (லூக். 15:20–23). உங்களை நீங்களே இரட்சித்துக்கொள்ள உங்களால் செய்ய முடியக்கூடியது ஒன்றுமில்லைு; எரிகோவுக்கு இறங்கிச் சென்று கொண்டிருந்த அந்தக் “குறிப்பிட்ட மனிதன்” போலவே, நீங்கள் தேவையில் இருக்கிறீர்கள். எவ்வளவு அதிகமாக நீங்கள் மத ரீதியான போதனைகளின்படி நன்மை செய்யவும், ஒழுங்காக நடந்துகொள்ளவும் முயற்சிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் அவர்களால் அடிக்கப்பட்டு குற்றுயிராக நீங்கள் விட்டுவிடப்பட்டிருப்பதைக் காண்கிறீர்கள் (லூக். 10:30). ஆயினும்கூட கர்த்தர் மனதுருக்கம் நிறைந்தவராய், உங்களைக் குணமாக்கவும் (உங்கள் காயங்களைக் கட்டி), உங்களுக்குத் தம்மையே பரிசுத்த ஆவியானவராகவும், தெய்வீக ஜீவனாகவும் கொடுக்கவும் (உங்கள் காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து), ஒரு தாழ்வான வழியில் ஒரு தாழ்வான வழிவகை மூலம் உங்களைக் கொண்டுசெல்லவும் (உங்களை தம் கழுதையின்மேல் ஏற்றி), உங்களைக் கவனித்துக்கொள்ளும்படி உங்களைச் சபைக்குக் கொண்டுவரவும் (சத்திரம்) ஏங்குகின்றார் (லூக். 10:33-35). அவர் இத்தகைய ஓர் இரட்சகராக இருக்க—தம் மூலமாக உங்களைத் தமக்குள் கொண்டுவருவதன் மூலம் உங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்வதற்கு இப்போதே தயாராக இருக்கிறார். ஆ, என்னே ஓர் அற்புதமான இரட்சகர்!
CRUCIAL MATTERS: நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைக் குறித்த ஒரு புரிந்துகொள்ளுதல் (II.C.).
பின்னணி வாசிப்பு: Life-study of Luke, Messages 25, 34–35.
REFERENCES: Life-study of Matthew, Message 38, p471; Life-study of Mark, Message 15, p142; Life-study of Luke, Messages 25, 34–35; The Conclusion of the New Testament, Message 48, pp512– 516.