வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்
பகுதி 8
✵பாடம் 01 – 08
✵பாடம் 10 – 18
கிறிஸ்துவின் ஊழியம்
தம் சீஷர்களுக்குப் பயிற்சியளித்தல் (2)
குறிக்கோள்: கர்த்தருக்குப் பயனுள்ளவர்களாக ஆகுவதற்கான பயிற்சியின் அவசியத்தைக் காண்பதற்கு.
பொருட்சுருக்கம்: கடைசி பாடத்தில் நாம் பார்த்தது என்னவெனில், பேதுரு மட்டுமல்லாமல், எல்லா சீஷர்களும் தம்மால் பயிற்றுவிக்கப்படும் இத்தகைய ஒரு வழியில் கர்த்தராகிய இயேசு பேதுருவுடன் அடிக்கடி இடைபட்டார் என்பதே. இந்தப் பாடத்தில் நாம், இந்தக் குறிக்கோளுக்காகக் கர்த்தர் யோவானோடும் இடைபட்டார் என்பதைப் பார்க்க வேண்டும். யோவான் தன் இயற்கையான ஜீவனில் பேரார்வமுள்ளவனாயும், கண்மூடித்தனமாயும், குறுகலானவனாயும், சகிப்புத்தன்மையற்றவனாயும் இருந்தான். எனினும் கர்த்தர் அவனுக்குப் பயிற்சியளித்து, அவனை ஆதாயப்படுத்தினார், இதனால் அவன் அவரது கரத்தில் அதி பயனுள்ளவனாக ஆனான், புதிய ஏற்பாட்டின் முக்கியப் பகுதிகளையும்கூட எழுதினான். பயிற்சியின் விளைவாக யோவான் தூய்மையானவனாயும், அன்பானவனாயும், வெளிப்படையானவனாயும், தெய்வீகக் கட்டிடத்திற்காக தெய்வீக ஜீவனால் கட்டமைக்கப்பட்ட ஒரு மனிதனாயும் ஆனான். கர்த்தரால் பயிற்றுவிக்கப்படுவது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு பேதுரு, யோவான் ஆகிய இருவருமே தலைசிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளனர். என்னே ஒரு பிரம்மாண்டமான வித்தியாசத்தைப் பயிற்சி உண்டாக்குகிறது!கர்த்தருக்குப் பயனுள்ளவர்களாக இருக்க நமக்குப் பயிற்சி தேவை. பேரார்வமுள்ளவர்களாயும், கண்மூடித்தனமாயும், குறுகலானவர்களாயும், சகிப்புத்தன்மையற்றவர்களாயும் இல்லாதிருக்கும்படி கர்த்தராகிய இயேசு தம் சீஷர்களுக்குப் பயிற்சியளித்தார், மேலும் இந்த வழியில் அவர் இவர்களைத் தமக்குப் பயனுள்ளவர்களாக ஆக்கினார்.
பின்புலம்: (யாரோ பேய்களை விரட்டுவதைத் தடைசெய்தவனும், மற்றவர்கள் மீது அக்கினியை விழப்பண்ண வேண்டுமா என்று கர்த்தரிடம் கேட்டவனுமான) இடிமுழக்கக் குமாரனாகிய யோவானைப் போன்று குறுகிய மனப்பான்மை கொண்டவனாக இருப்பதிலிருந்து ஒரு நபர், “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனுக்குள் விசுவாசிக்கும் அனைவரும் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3:16, கிரே.) என்று தான் எழுத முடிகிற அளவிற்கு ஒருநாள் தூய்மையானவனாகவும், அன்பானவனாகவும், அனைவரையும் தழுவி உள்ளடக்குகிறவனாகவும் இருப்பதற்கு எவ்வாறு மாற முடிந்தது (யோவான் 1:12)? கர்த்தருடைய பயிற்சி மூலம் யோவான் மற்றவர்களுக்காக தன் இருதயத்தில் பெரிதாகி, தேவனுடைய இரட்சிப்பு அனைவருக்குமானது என்பது குறித்து முழுவதும் அறிந்திருந்தான். நாம்தான் அதி தலைசிறந்த விசுவாசிகள் என்று இளம் வாலிபர்கள் உணரக்கூடாது. தேவனுக்கு மற்றவர்களைப் பற்றி அக்கறையில்லை என்றும், தாங்கள் அனுபவித்துமகிழும் அதே இரட்சிப்பை அப்படியே மற்றவர்கள் அனுபவித்துமகிழ முடியாது என்றும் அவர்கள் நினைக்கவும்கூடாது. நம் இருதயத்தில் விசாலமாக்கப்படுவதற்கு, குறிப்பாக இது நம் மனப்பாங்கோடும், நாம் மற்றவர்களை ஏற்றுக்கொள்வதோடும் தொடர்புடையது என்பதால் நமக்குக் கர்த்தருடைய பயிற்சி் தேவை.
அதிகாரங்கள்: மாற்கு 9–10; லூக்கா 9.
கற்பிப்பதற்கான உண்மைகள் கொண்ட செய்திக்குறிப்பு
கடைசி பாடத்தில் நாம் பார்த்தது என்னவெனில், பேதுரு மட்டுமல்லாமல், எல்லா சீஷர்களும் தம்மால் பயிற்றுவிக்கப்படும் இத்தகைய ஒரு வழியில் கர்த்தராகிய இயேசு பேதுருவுடன் அடிக்கடி இடைபட்டார் என்பதே. இந்தப் பாடத்தில் நாம், இந்தக் குறிக்கோளுக்காகக் கர்த்தர் யோவானோடும் இடைபட்டார் என்பதைப் பார்க்க வேண்டும். யோவான் பேரார்வமுள்ளவனாயும், கண்மூடித்தனமாயும், குறுகலானவனாயும், சகிப்புத்தன்மையற்றவனாயும் இருந்தான், ஆனால் அவன் கர்த்தரால் முழுமையாகப் பயிற்றுவிக்கப்பட்டு ஆதாயப்படுத்தப்பட்டான்.
I. சீஷர்கள் தங்கள் இயற்கையான வாழ்க்கையில் கர்த்தருடைய பயன்பாட்டிற்குத் தகுதியற்றவர்களாக இருந்தனர் அதோடு அவரால் பயிற்சியளிக்கப்பட வேண்டியிருந்தது.
கர்த்தராகிய இயேசு தம் குறிக்கோளுக்காக சீஷர்களை அழைத்தார் (மத். 9:9; யோவான் 1:43; மாற். 1:16-20), ஆனால் சீஷர்கள் தங்கள் இயற்கையான ஜீவனில் அவரது பயன்பாட்டிற்குத் தகுதியற்றவர்களாக இருந்தனர். சீஷர்கள் தங்கள் இயற்கையான ஜீவனில் பேரார்வமுள்ளவர்களாயும், கண்மூடித்தனமாயும், குறுகலானவர்களாயும், சகிப்புத்தன்மையற்றவர்களாயும் இருந்தனர் (மாற். 10:35–45; லூக். 9:51–56; மாற். 9:38-50). நாம் அனைவரும் இந்த வழியில்தான் உள்ளோம். நம் இயற்கையான ஜீவனில் நாம் கோணலும், மாறுபாடானவர்களும், கர்த்தருடைய பயன்பாட்டிற்கு முற்றிலும் தகுதியற்றவர்களாகவும் இருக்கிறோம். இதனால்தான் அப்போஸ்தலனாகிய பவுல், கர்த்தரை உண்மையாகவே சேவிக்கிறவர்கள் “மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல்” இருப்பவர்களாக உள்ளனர் என்று கூறுவான் (பிலி. 3:3). ஆயினும்கூட இந்தப் பேரார்வமுள்ள, கண்மூடித்தனமான, குறுகலான, சகிப்புத்தன்மையற்ற சீஷர்களைத் தமக்குப் பயனுள்ளவர்களாக ஆக்குவதற்குக் கர்த்தரிடம் ஒரு வழி இருந்தது. அவர் குறைந்தது மூன்று வருடங்களாவது இவர்களை ஒரு முழுநேரப் பயிற்சியினூடாய்க் கொண்டு சென்றார்! இந்தப் பாடத்தில் நாம், எவ்வாறு கர்த்தர் சீஷர்களுக்குப் பயிற்சி அளித்தார் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம். அவர்களுக்குப் பயிற்சியளிப்பதில், அவர் குறிப்பிட்ட ஒரு சிலர் மீது தம் கவனத்தைச் செலுத்தினார், மேலும் இதன் மூலம் சீஷர்கள் அனைவருக்கும் உதவி கிடைத்தது. இந்தப் பாடத்தில் நாம், கர்த்தர் யோவானைக் குறிப்பிட்ட விதத்தில் பயிற்றுவித்ததைப் பார்ப்போம்.
A. சீஷர்கள் தங்கள் இயற்கையான ஜீவனில் பேரார்வமுள்ளவர்களாயும், கண்மூடித்தனமாயும், குறுகலானவர்களாயும், சகிப்புத்தன்மையற்றவர்களாயும் இருந்தனர்—மாற். 10:35–45; லூக். 9:51–56; மாற். 9:38-50.
B. எனினும் அவர்கள் கர்த்தருடைய கரத்தில் பயனுள்ளவர்களாக ஆகுமாறு, கர்த்தர் அவர்களைப் பயிற்றுவித்து ஆதாயப்படுத்தினார்.
C. கர்த்தர் குறிப்பாக யோவானைப் பயிற்றுவித்தார், மேலும் அவ்வாறு செய்வதில் மற்ற சீஷர்களுக்கும் உதவினார்.
II. பேராவலின் வழிக்குப் பதிலாக சிலுவையின், தாழ்மையின் மற்றும் சேவையின் வழியை எடுத்துக்கொள்ளும்படி கர்த்தர் யோவானுக்கும், மற்ற சீஷர்களுக்கும் பயிற்சியளித்தார்—மாற். 10:35–45
மாற்கு 10:35–45, யோவானும் (மற்ற சீஷர்களும்) பதவிக்குப் பேரார்வமுள்ளவர்களாக இருந்தார்கள் என்ற உண்மையை அம்பலப்படுத்துகிறது. அவர்களது பேரார்வம் காரணமாக அவர்கள் இந்த ராஜ்யத்தில் அவருக்கு அதி நெருக்கமானவர்களாக இருக்க விரும்பினர். மாற்கு 10:35–37 பின்வருமாறு பதிவுசெய்கிறது, “அப்பொழுது செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரிடத்தில் வந்து: போதகரே, நாங்கள் கேட்டுக்கொள்ளப்போகிறதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டுமென்று விரும்புகிறோம் என்றார்கள். அவர் அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள் செய்யவேண்டும் என்றார்கள்.” இந்த வேண்டுகோள், யாக்கோபும் யோவானும் இன்னும் இயற்கையான “இடிமுழக்கக் குமாரர்களாக” இருந்தனர் என்ற உண்மையை அம்பலப்படுத்துகிறது (மாற். 3:17, கிரே.). இத்தகைய ஒரு வேண்டுகோளை விடுக்க அவர்கள் கர்த்தருடனான தங்கள் இயற்கையான உறவைக் கூட பயன்படுத்தினர் (மத். 20:20–21). அப்போது சற்று முன்தான் கர்த்தர் தம் சீஷர்களிடம் தம் மரணம் குறித்து பேசிக்கொண்டு வந்திருந்தார் (மாற். 10:32-34). ஆயினும்heo, யாக்கோபும் யோவானும் கர்த்தர் கூறிக்கொண்டிருந்த காரியத்தைப் பார்க்க முடியாதபடி குருடாக இருந்தனர், மேலும் ஒரு பதவிக்கான தங்கள் பேரார்வத்திற்காக மட்டுமே அக்கறை கொண்டிருந்தார்கள். அவர்கள் தம்மைப் பின்பற்றுவதற்கும், தம் உயிர்த்தெழுதலுக்குள் நுழைவதற்குமான வழியை வெளிப்படுத்துவதற்கான இந்த வாய்ப்பைக் கர்த்தர் பயன்படுத்தினார். மாற்கு 10:38-39 இல் கர்த்தர், தம்மைப் பின்பற்றுவதற்கான வழி, தம் மரணப் பாத்திரத்தில் குடிப்பதும், தம் மரண ஸ்நானத்தால் ஸ்நானம் பெறுவதுமே என்பதை வெளிப்படுத்தினார். கர்த்தருடைய மரணத்திற்குள் நுழைவது என்பது நாம் நம்மையே அல்ல (கலா. 2:20), மாறாக கிறிஸ்துவை வாழக்கூடுமாறு (பிலி. 1:21) நம் இயற்கையான ஆள்தத்துவத்தைத் தீர்த்துக்கட்டுகிறது. மேலும் கர்த்தர் தேவனுடைய ஓர் அடிமையாக தம் நிலைப்பாட்டில் நின்று அவர்களைப் பயிற்றுவித்து, “என் வலதுபாரிசத்திலும் என் இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி…அதை அருளுவது என் காரியமல்ல” என்று கூறினார் (மாற். 10:40). அவரது பதில் அவர்களது பேராவலையும் சுயாதீனத்தையும் அம்பலப்படுத்தியது, மேலும் அதே நேரத்தில், அவர் தம் எஜமானராகிய பிதாவை முற்றிலும் சார்ந்திருந்தார் என்பதை அவர்களுக்குக் காட்டியது. மற்ற பத்து சீஷர்களும் இதைப் பற்றி கேள்விப்பட்டபோது, அவர்கள் யாக்கோபையும் யோவானையும் குறித்து எரிச்சலடைய ஆரம்பித்தார்கள் (மாற். 10:41). இது சீஷர்களுக்கு மேலும் பயிற்சி அளிப்பதற்கான ஒரு வாய்ப்பைக் கர்த்தருக்கு அளித்தது. ராஜ்யத்தில் முதலிடம் பெறுவதற்கான வழி அனைவருக்கும் அடிமையாக மாறுவதே என்று கர்த்தர் தம்மையே எடுத்துக்காட்டாக வைப்பதன் மூலம் அவர்களுக்குப் போதித்தார் (மாற். 10:42–45), “அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்” (மாற். 10:45). இந்த வழியில் கர்த்தர், சீஷர்கள் பேராவலின் வழியை அல்ல, மாறாக சிலுவையின், தாழ்மையின் மற்றும் சேவையின் வழியை எடுத்துக்கொள்ளும்படி அவர்களுக்குப் பயிற்சியளித்தார்.
III. மற்றவர்களை நியாயந்தீர்ப்பதில் மூர்க்கத்தனமாகவும், கண்மூடித்தனமாகவும் இருக்காமல், அதற்கு பதிலாக மக்களின் இரட்சிப்பைத் தேடும்படி கர்த்தர் யோவானுக்கும், மற்ற சீஷர்களுக்கும் பயிற்சியளித்தார்—லூக். 9:51-56
லூக்கா 9:51–56 யோவானின் கண்மூடித்தனமானத்தன்மையை அம்பலப்படுத்துகிறது, இது மக்களை அழிப்பதற்கு அல்ல, மாறாக அவர்களை இரட்சிக்க வந்த இரட்சகரின் நற்பண்புக்கும் ஒழுக்கநெறிக்கும் முரணானதாக இருந்தது. கர்த்தராகிய இயேசுவும், சீஷர்களும் எருசலேமுக்குப் பயணித்துக்கொண்டிருக்கையில், அவர்கள் சமாரியர்களின் ஒரு கிராமத்தில் தங்க விரும்பினார்கள். எனினும், கர்த்தர் எருசலேமை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததால் இந்தச் சமாரியர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை (லூக். 9:53). இதைப் பார்த்து யாக்கோபும் யோவானும் கர்த்தரிடம், இவர்களைப் பட்சித்துப்போடும்படி தாங்கள் வானத்திலிருந்து இவர்கள்மேல் அக்கினியை இறங்கப்பண்ணும்படி கட்டளையிட அவருக்கு விருப்பமா என்று கேட்டனர். இதுவே, சமாரியர்கள் மீது நியாயத்தீர்ப்பை அறிவிப்பதில் அவர்களது மூர்க்கத்தன்மையாகவும் கண்மூடித்தனமானத்தன்மையாகவும் இருந்தது. எனினும் கர்த்தர், “நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள்” என்று கூறி அவர்களைக் கடிந்துகொண்டார் (லூக். 9:55). சமாரியர்கள் மீதான அவர்களது மூர்க்கத்தனமான மற்றும் கண்மூடித்தனமான நியாயத்தீர்ப்பு, இரட்சகரின் நற்பண்புக்கும் ஒழுக்கநெறிக்கும் முரணானதாக இருந்தது. கர்த்தராகிய இயேசு, மனித-இரட்சகராக, மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, மாறாக இரட்சிக்கிறதற்கே வந்தார் (லூக். 9:56). நிராகரிப்பிற்கான ஓர் எதிர்வினையாக நியாயத்தீர்ப்பை அறிவிப்பதில் மூர்க்கத்தனமாகவும் கண்மூடித்தனமாகவும் இல்லாதிருக்கும்படி சீஷர்களுக்கு இங்கே கர்த்தர் பயிற்சியளித்தார்.
IV. ஒருமையைக் காத்துக்கொள்வதன் நிமித்தம் சகிப்புத்தன்மையுடனும், இருதயத்தில் பெரிதாக்கப்பட்டும் இருக்கும்படி கர்த்தர் யோவானுக்கும், மற்ற சீஷர்களுக்கும் பயிற்சியளித்தார்—மாற். 9:38–50; கொலோ. 4:6
மாற்கு 9:38-50, குறிப்பாக யோவானின் பேசும் விதத்தில் காட்டப்படும் அவனது குறுகலானத்தன்மையையும் சகிப்புத்தன்மையின்மையையும் அம்பலப்படுத்துகிறது (மாற். 9:38). ஆகவே யோவான் ஒருமையைக் காத்துக்கொள்வதன் நிமித்தம் மற்றவர்களைச் சகிப்புத்துக்கொள்பவனாகவும், இறுதியில் இருதயத்தில் பெரிதாக்கப்பட்டும் இருக்க முடியுமாறு அவனுக்குப் பயிற்சியளிக்கப்பட வேண்டியிருந்தது. தங்களுடன் பின்பற்றாத ஒரு சகோதரன் கர்த்தருடைய நாமத்திலே பேய்களை விரட்டுவதை யோவான் கண்டபோது, இவன் அவனைத் தடை செய்தான். எனினும், கர்த்தர் மிகவும் ஞானமுள்ள ஒரு வழியில் யோவானைச் சரிசெய்து (மாற். 9:39–40), ஒற்றுமையின் நிமித்தம் ஒருவரோடொருவர் சமாதானத்தைக் காத்துக்கொள்ளும்படி சீஷர்களுக்குக் போதித்தார் (மாற். 9:50). யோவான் குறிப்பாக தன் பேச்சில் சரிசெய்யப்பட வேண்டியிருந்தது. ஆகவே கர்த்தர் சீஷர்களிடம், தங்கள் பேச்சு தொடர்பாகத் தங்களுக்குள் உப்பு வைத்திருக்கும்படி சொன்னார் (மாற். 9:50 மற்றும் அடிக்குறிப்பு 1; கொலோ. 4:6).
V. பயிற்சியின் விளைவாக, யோவான் இறுதியில் கர்த்தருடைய கரத்தில் அதி பயனுள்ளவனாக ஆனான்
A. யோவான் தூய்மையானவனாயும், அன்பானவனாயும், வெளிப்படையானவனாயும், தெய்வீகக் கட்டிடத்திற்காக தெய்வீக ஜீவனால் கட்டமைக்கப்பட்ட ஒரு மனிதனாயும் ஆனான்—2 யோ. 1-2; 3 யோ. 1, 4–10; 1 யோ. 4:8, 16
பேரார்வமுள்ளவனாயும், கண்மூடித்தனமாயும், குறுகலானவனாயும், சகிப்புத்தன்மையற்றவனாயும் இருந்த அப்போஸ்தலனாகிய யோவான் தூய்மையானவனாயும், அன்பானவனாயும், வெளிப்படையானவனாயும் இருந்த ஒரு நபராக, தெய்வீகக் கட்டிடத்திற்காக தெய்வீக ஜீவனால் கட்டமைக்கப்பட்ட ஒரு மனிதனாக ஆனான். தன் பிள்ளைகள் (பரிசுத்தவான்கள்) சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று அவன் கேள்விப்படுகிற “சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம்” தனக்கு இல்லாத அளவிற்கு, அவன் கர்த்தருடைய ஆர்வத்திற்காக மட்டுமே அக்கறைப்பட்டு, தூய்மையானாவன் ஆனான் (3 யோ. 4). மற்ற வேலையாட்களை ஆதரித்துத் தாங்கும்படி பரிசுத்தவான்களை அவன் உற்சாகப்படுத்தினான், ஆனால் தனக்காக எதையும் நாடவில்லை (3 யோ. 4–8). ஒரு தீய எதிர்ப்பாளனாகிய தியோத்திரேப்புவால் தாக்கப்பட்டபோது, யோவான் அவனுடன் சண்டையிட எதுவும் செய்யவில்லை (3 யோ. 9–11). சமாரியர்கள் மீது அக்கினியை இறங்கப்பண்ணும்படி விரும்பிய இளைஞனிடமிருந்து அவன் எவ்வளவு வித்தியாசமானவனாக இருந்தான்! யோவான் தேவனுடைய அன்பால் கட்டமைக்கப்பட்டு, தேவனுடைய அன்பைப் பரிசுத்தவான்களிடம் ஊழியம் செய்தான் (யோவான் 3:16; 1 யோ. 4:8). அவர் நேசித்த ஒரு நபராக (1 யோ. 4:8), இன்னும் “அன்பில் நிலைத்திருக்கிற” ஒரு நபராகவும்கூட ஆனான் (1 யோ. 4:16). “அன்பில் நிலைத்திருப்பதென்றால், தேவன் நம்மில் வெளிக்காட்டப்படுமாறு தேவனாகவே இருக்கிற அன்பைக்கொண்டு பழக்கமானவிதத்தில் மற்றவர்களிடம் அன்புகூருகிற ஒரு வாழ்க்கை வாழ்வதாகும்” (1 John 4:16, footnote 4). இத்தகையதே கர்த்தருடைய நெருக்கி ஏவுதலின் விளைவாக இருந்தது!
B. புதிய ஏற்பாட்டின் முக்கியப் பகுதிகளை எழுதவும்கூட யோவான் கர்த்தரால் பயன்படுத்தப்பட்டான்— யோவான் 21:24; வெளி. 1:4
அப்போஸ்தலனாகிய யோவான் மூன்று நிருபங்களையும், வெளிப்படுத்தலையும், யோவான் சுவிசேஷத்தையும் எழுதக் கர்த்தரால் பயன்படுத்தப்பட்டார். அவனது எழுத்துக்கள் சபைக்கு ஒரு பழுது-பார்க்கும் ஊழியமாக இருந்தன அதோடு முழு வேதாகமத்தி்ற்கும் முடிவுரையாக இருந்தன. அவன் எவ்வளவு பயனுள்ளவனாக ஆனான்!
C. பயிற்சி, நம் ஆள்தத்துவத்தில் ஒரு பிரம்மாண்டமான வித்தியாசத்தை உண்டாக்குகிறது
கர்த்தருக்குப் பயனுள்ளவர்களாக இருக்க நமக்குப் பயிற்சி தேவை. கர்த்தரால் பயிற்றுவிக்கப்படுவது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு பேதுரு, யோவான் ஆகிய இருவருமே தலைசிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளனர். பேரார்வமுள்ளவர்களாயும், கண்மூடித்தனமாயும், குறுகலானவர்களாயும், சகிப்புத்தன்மையற்றவர்களாயும் இல்லாதிருக்கும்படி கர்த்தராகிய இயேசு தம் சீஷர்களுக்குப் பயிற்சியளித்தார், மேலும் இந்த வழியில் அவர் இவர்களைத் தமக்குப் பயனுள்ளவர்களாக ஆக்கினார். என்னே ஒரு பிரம்மாண்டமான வித்தியாசத்தைப் பயிற்சி உண்டாக்குகிறது! இந்த காரணத்திற்காகதான், நாம் அனைவரும் கர்த்தருக்குப் பயனுள்ளவர்களாக ஆகுவதற்கு நமக்குத் தேவையான ஆவிக்குரிய பயிற்சியைப் பெற விரும்ப வேண்டும்.
இடைநிலைபிரயோகம்: கர்த்தருக்கான தங்கள் பயனுள்ளத்தன்மையின் நிமித்தம் பயிற்றுவிக்கப்படுவதற்கான ஓர் அகத்தூண்டுதலை இளம் வாலிபர்களுக்குள் உட்செலுத்துங்கள். இடை நிலைப் பள்ளியில், அவர்கள் சத்தியத்தின் கோடைகால பள்ளிகளுக்கு தங்களைத் தாங்களே கொடுத்து, கர்த்தரில் தங்களை விட வயதான பரிசுத்தவான்களுக்குத் திறந்திருக்க கற்றுக்கொள்ள வேண்டும். பின்னர், உயர்நிலைப் பள்ளியில், அவர்கள் கோடைகால மற்றும் குளிர்கால பயிற்சிகள் அல்லது வீடியோ பயிற்சிகளில் கலந்துகொள்ளத் துவங்கக்கூடும். இறுதியாக, அவர்கள் நான்கு ஆண்டு கல்லூரியை முடித்துவிட்டு, பின்னர் தங்கள் வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்கான தங்கள் பயனுள்ளத்தன்மைக்கான ஓர் உறுதியான அடித்தளத்தைத் தங்களுக்கு அளிப்பதற்காக இரண்டு வருடங்கள் முழுநேரப் பயிற்சிக்குச் செல்ல ஆசைப்பட வேண்டும்.
சுவிசேஷப் பிரயோகம்: மனிதனின் முயற்சியில் தேவன் பிரியப்படுகிறார் என்று பூமியிலுள்ள பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். ஏழைகளுக்கு உதவுவதற்கும், ஒடுக்குமுறையைத் தடுப்பதற்கும், வறியோருக்காகப் போராடுவதற்கும் சமூக சீர்திருத்தத்திற்காக தங்கள் வாழ்வுகளைக் கொடுக்கும் மக்களை நாம் மிகவும் உயர்வாக மதிக்கிறோம். இயற்கையான மனிதன் ஒருபோதும் தேவனைப் பிரியப்படுத்த முடியாது என்பதை நாம் கொஞ்சம் கூட உணர்ந்தறியவில்லை. ஏசாயா 64:6, “நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது” என்று கூறுகிறது. மனிதனின் நீதியைப் பற்றிய தேவனின் மதிப்பீடு என்னவெனில், அது ஓர் “அழுக்கான கந்தை” என்பதே. ரோமர் 8:8, “மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனைப் பிரியப்படுத்த முடியாது” என்று நமக்குச் சொல்கிறது. மனிதன் தான் மற்றவர்களை நேசித்தால், தான் நன்றாக வாழ்வதாக நினைக்கிறான். ஆனால் அவன் “தேவனைப் பிரியப்படுத்த முடியாது” என்று தேவனுடைய வார்த்தை வெளிப்படுத்துகிறது. தேவனுடைய பூரிப்புக்குப் பாத்திரமான ஒரே ஒரு பொருள் அவரது குமாரன், இயேசு கிறிஸ்து மட்டுமே. பிதாவானவர் தாம் தம் குமாரனில் மிகவும் பிரியமாயிருந்ததாகக் கூறி பரலோகத்திலிருந்து பிதா பேசியதாக சுவிசேஷங்களில் பல்வேறு முறை பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்தேயு 3:17, “அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்று கூறுகிறது. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நம் கர்த்தராகப் பெறுவதன் மூலம் மட்டுமே நாம் அவரைப் பிரியப்படுத்த முடியும் என்பதை நாம் உணர்ந்தறிய வேண்டும். நாம் அவரைப் பெறும்போது, அவர் நம் ஜீவனாக இருக்க நமக்குள் வருகிறார். இதுவே தேவனை அதி மகிழ்ச்சியாக ஆக்குகிறது. லூக்கா 15:7, “அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று கூறுகிறது. ஒரு பாவி மனந்திரும்பும்போது, பரலோகம் களிகூருகிறது. ஆனால் தொண்ணூற்றொன்பது சுய-நீதிமான்கள் கிறிஸ்துவுக்கு அப்பால் நன்மை செய்ய முயற்சிக்கும்போது, எந்தக் களிகூருதலும் இல்லை. அது ஏன்? மறுபடியும் அதற்குக் காரணம், தேவன் தம் குமாரனில் மட்டுமே பூரிப்படைகிறார் என்பதே. இந்த அற்புதமானவருக்குள் விசுவாசிப்பதன் மூலம் நாம் அவரைப் பெற்றாக வேண்டும். நாம் இதைச் செய்யும்போது, நாம் மகிழ்ச்சியாக இருப்போம், தேவன் மகிழ்ச்சியாக இருப்பார், மேலும் பரலோகத்திலுள்ள தேவதூதர்கள் அனைவரும் களிகூருவார்கள்!
மிக முக்கியக் காரியங்கள்: உங்கள் இலக்குகளையும், இறுதியில் உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளையும் நிறைவேற்ற உங்கள் பாத்திரத்தை அதி சிறந்த முறையில் தயார்ப்படுத்தும் மனித மற்றும் ஆவிக்குரிய கல்வியையும் பயிற்சியையும் நாடுதல் (IV.A.3.).
பின்னணி வாசிப்பு: The Vital Groups, Message 29 (unpublished message from the Spring of 1997); Life-study of Mark, Message 27, pp 243–245; Message 28, pp 247–248; Message 29, pp 257–258; Message 33, pp 291–295; Life-study of Luke, Message 23, pp 195–197.
REFERENCES: Life-study of Mark, Messages 27–29, 32–33; Life-study of Luke, Message 23, pp195–197; The Vital Groups, Message 29 (unpublished message from the Spring of 1997); 1 John 4:16, footnote 4.