வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்
பகுதி 8
✵பாடம் 01 – 08
✵பாடம் 10 – 18
கிறிஸ்துவின் ஊழியம்
ராஜ்யத்தைப் பற்றிய கிறிஸ்துவின் போதனை
குறிக்கோள்: தேவனுடைய ராஜ்யத்துக்குள் நுழைவதற்கு தேவனால் பிறந்திருப்பவர்களாக நாம் எவ்வாறு தேவனுடைய ராஜ்யத்தில் வாழ்வது என்று நாம் கர்த்தரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தறியும்படி இளம் வாலிபர்களுக்கு உதவுவதற்கு.
பொருட்சுருக்கம்: கிறிஸ்துவுக்குள் விசுவாசித்து அவரைப் பெற்றவர்களாக நாம் தெய்வீக ஜீவனையும், தெய்வீக சுபாவத்தையும் கொண்ட தேவனுடைய பிள்ளைகளாக இருக்க தேவனால் பிறந்திருக்கிறோம். நாம் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறந்திருப்பதால், நாம் தேவனுடைய ராஜ்யத்திற்குள் நுழைந்திருக்கிறோம். தேவனுடைய ராஜ்யம் என்பது தெய்வீக ஆட்சியுரிமைக்கு மட்டுமல்லாமல், தெய்வீக இனத்திற்கும் ஒரு தெய்வீக மண்டலமாக உள்ளது, அதில் தெய்வீக காரியங்கள் அனைத்தும் உள்ளன. எவ்வாறு இந்த தெய்வீக மண்டலத்தில் வாழ வேண்டும் என்று ராஜ்யத்தைப் பற்றிய கர்த்தருடைய போதனையிலிருந்து இப்போது நாம் கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக, நாம் ஆவியில் ஏழ்மையாக இருக்கவும் (மத். 5:3), நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்களாக இருக்கவும் (மத். 5:6), இரக்கமுடையவர்களாக இருக்கவும் (மத். 5:7), இருதயத்தில் தூய்மையுள்ளவர்களாக இருக்கவும் (மத். 5:8), சமாதானம் பண்ணுகிறவர்களாக இருக்கவும் (மத். 5:9), முதலாவது தேவனுடைய ராஜ்யத்தைத் தேடவும் (மத். 6:33), பிதாவின் சித்தத்தைச் செய்யவும் (மத். 7:21) கற்றுக்கொள்ள வேண்டும். தேவனுடைய பிள்ளைகளாக இளம் வாலிபர்கள் தாங்கள் ராஜ்யத்தின் நிஜத்தில் வாழ ஒரு இராஜரீக ஜீவனைப் பெற்றுள்ளனர் என்பதை உணர்ந்தறியும்படி அவர்களுக்கு நாம் உதவ வேண்டும். புறம்பான ரீதியில் நாம் மற்றவர்கள் இருக்கும் வண்ணமாகவே தோன்றக்கூடும், ஆனால் உள்ளான ரீதியில் நாம் வேறொரு மண்டலத்தில், அதாவது தெய்வீக ஆட்சியுரிமை மற்றும் தெய்வீக இனங்களின் மண்டலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தறியும்படி அவர்களுக்கு நாம் உதவ வேண்டும்.
பின்புலம்: யோவான் 3 மற்றும் மத்தேயு 5, தேவனுடைய ராஜ்யத்திற்குள் நுழைந்து, அதில் வாழ்வதற்கான ஒரு வழியை ஒவ்வோர் இளம் வாலிபருக்கும் கொடுக்கின்றன. யோவான் 3 நமக்கு அதி உயர்ந்த ஜீவனைக் கொடுக்கிறது அதோடு மத்தேயு 5 அதி உயர்ந்த ஜீவனால் மட்டுமே செயல்படுத்தப்பட முடியும் அதி உயர்ந்த வாழ்க்கையை விவரிக்கிறது. கர்த்தருடைய வார்த்தையில் உள்ள ஒவ்வொரு கோரிக்கைக்கும் கர்த்தர் தாமே, அந்தக் கோரிக்கையைப் பூர்த்தி செய்வதற்கான ஜீவனாக நமக்கு இருக்கிறார் என்று வேதாகமத்தில் உள்ள இரும்புக் கவசக் (வளைந்துக் கொடுக்காத) கோட்பாட்டை இளம் வாலிபர்கள் எப்போதும் நினைவில் வைத்திருந்தாக வேண்டும். நாம் தேவனுடைய ராஜ்யத்தில் வாழ்வதற்கான ஒவ்வொரு கோரிக்கையையும் பூர்த்தி செய்ய முடியக்கூடிய ஒரு ஜீவன் நம்மிடம் இருப்பதற்காக நாம் கர்த்தருக்கு நன்றிசெலுத்த முடியும்.
அதிகாரங்கள்: மத்தேயு 5, யோவான் 3.
கற்பிப்பதற்கான உண்மைகள் கொண்ட செய்திக்குறிப்பு
தேவனுடைய ராஜ்யம் என்பது ஒரு தெய்வீக மண்டலமாகும், இதில் எல்லா தெய்வீக விஷயங்களும் உள்ளன. நம் மறுபடிஜெநிப்பித்தல் மூலம், நாம் தேவனுடைய இனமாக இருக்க தேவனுடைய ஜீவனால் பிறந்திருக்கிறோம். இந்த தெய்வீகப் பிறப்பின் மூலம் நாம், தெய்வீக இனத்தின் தெய்வீக மண்டலமாகிய தேவனுடைய ராஜ்யத்திற்குள் நுழைந்தோம். நம் மறுபடிஜெநிப்பித்தல் மூலம், நம் ராஜாவாக நம்மில் குடியிருக்க கர்த்தராகிய இயேசுவை நம் ஆவிக்குள் நாம் பெற்றுக்கொள்ளவும் செய்தோம். இவ்விதமாய், நாம் தெய்வீக ஆட்சியுரிமையின் ஒரு மண்டலமாகவும் உள்ள தேவனுடைய ராஜ்யத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளோம். விசுவாசிகளாக நாம் தேவனுடைய ராஜ்யத்தின் இந்த தெய்வீக மண்டலத்தில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
I. நம் தெய்வீகப் பிறப்பின் மூலம் நாம், தெய்வீக இனத்தின் தெய்வீக மண்டலமாகிய தேவனுடைய ராஜ்யத்திற்குள் நுழைந்திருக்கிறோம்—யோவான் 3:3–6
யோவான் 3 இல் கர்த்தராகிய இயேசு நிக்கொதேமுவிடம், தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க புதிதாய்ப் பிறக்க வேண்டியதைப் பற்றி பேசினார் (யோவான் 3:3). தேவனுடைய ராஜ்யம் என்பது தெய்வீக இனத்தின் ஒரு தெய்வீக மண்டலமாகும். எந்தவொரு ராஜ்யத்திற்குள்ளும் நுழைய நமக்கு ஒரு குறிப்பிட்ட வகையான ஜீவன் தேவை. ஒரு நாய் ஒருபோதும் பூனை ராஜ்யத்திற்குள் நுழைய முடியாது, ஏனெனில் ஒரு நாயிடம் பூனையின் ஜீவன் இல்லை. எனினும், பூனை ஜீவனுடன் ஒரு நாய் மீண்டும் பிறக்கும் எனில், அது புறத்தூண்டுதலின்றி பூனை ராஜ்யத்தில் இருக்கும். தேவனுடைய ராஜ்யத்திற்குள் நுழைய நாம் தெய்வீக ஜீவனைப் பெற வேண்டும். யோவான் 3:3 இல் “புதிதாய்ப் பிறப்பது” என்பது தெய்வீக ஜீவனைப் பெற்றுக்கொள்வதைப் பற்றிய ஒரு காரியம் (கிரே.). தெய்வீக ஜீவன் மட்டுமே தேவனுடைய ராஜ்யத்தில் உள்ள தெய்வீக விஷயங்களை உணர்ந்தறிய முடியும். கர்த்தராகிய இயேசு நிக்கொதேமுவிடம் சொன்னதாவது, அவன் தன் (மாம்சமாகிய) தாயிடமிருந்து மீண்டும் எத்தனை முறைதான் பிறந்தாலும்சரி, அவன் இன்னும் மாம்சமாக மட்டுமே இருப்பான் என்பதே (யோவான் 3:4–6). எனினும், தேவனால் பெற்றெடுக்கப்படுவதற்கு நாம் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறந்திருக்கிறோம் (யோவான் 3:5). எனவே, நாம் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசித்திருக்கிறோம்.
A. நாம் தேவனுடைய பிள்ளைகளாக, தேவனுடைய இனமாக ஆகுவதற்கு தேவனால் பிறந்திருக்கிறோம்—யோவான் 1:12-13; 1 யோ. 3:1
கிறிஸ்துவுக்குள் விசுவாசித்து அவரைப் பெற்றவர்களாக நாம் தெய்வீக ஜீவனையும், தெய்வீக சுபாவத்தையும் கொண்ட தேவனுடைய பிள்ளைகளாக இருக்க தேவனால் பிறந்திருக்கிறோம். தேவனுடைய ராஜ்யத்திற்குள் நுழைவது என்றால் தெய்வீக ஜீவனோடும் சுபாவத்தோடும் தேவனால் பிறப்பதாகும். நாம் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறந்திருப்பதால், நாம் தேவனுடைய ராஜ்யத்திற்குள் நுழைந்திருக்கிறோம் (யோவான் 3:5). 1 யோவான் 3:1, “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” என்று கூறுகிறது. நாம் தேவனால் அவரது ஜீவனோடும், அவரது சுபாவத்தோடும், அவரது மரபணுக்களோடும்கூட உண்மையிலேயே பெற்றெடுக்கப்பட்டிருக்கிறோம் (ஒப். 1 யோ. 3:9). இவ்வாறு நாம் தேவனுடைய இனம் என்று அழைக்கப்படலாம்—நாம் தேவனுடைய வகையினம் (ஒப். ஆதி. 1:26, 27). இதுவே தேவனுடைய ராஜ்யத்திற்குள்ளான நம் பிரவேசம் ஆகும்.
B. நம்மிடம் தெய்வீக ஜீவனும், தெய்வீக சுபாவமும் உள்ளது—யோவான் 3:36; 1 யோ. 5:11, 13; 2 பேது. 1:4
யோவான் 3:36, “குமாரனுக்குள் விசுவாசிக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்” என்று கூறுகிறது (கிரே.). இந்த நித்திய ஜீவன் சாட்சாத்து மூவொரு தேவனின் ஜீவன்தானே. நாம் கிறிஸ்துவுக்குள் விசுவாசிப்பதன் மூலம் இந்த தெய்வீக, நித்திய ஜீவனைப் பெற்றோம், ஏனெனில் இந்த ஜீவன் அவரில் இருக்கிறது (1 யோ. 5:11, 13). மறுபடிஜெநிப்பிக்கப்படுவது, புதிதாய்ப் பிறப்பது என்றால் நம் மனித ஜீவனுக்குக் கூடுதலாக தெய்வீக ஜீவனைப் பெறுவதாகும். இந்த வழியில், நாம் தேவனுடைய ராஜ்யத்திற்குள் நுழைகிறோம். அது மட்டுமல்லாமல், நாம் தேவனுடைய சாட்சாத்து தெய்வீக சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகவும் ஆகியிருக்கிறோம் (2 பேது. 1:4)!
C. இத்தகையவர்களாக நாம் தெய்வீக இனத்துக்குரிய ஒரு தெய்வீக மண்டலத்திற்குள் நுழைந்திருக்கிறோம், அதில் தெய்வீக காரியங்கள் அனைத்தும் உள்ளன—யோவான் 3:5
நாம் தேவனால் தெய்வீக ஜீவனோடும், தெய்வீக சுபாவத்தோடும் பிறந்திருப்பதால், நிச்சயமாகவே நாம் தேவனுடைய ராஜ்யத்திற்குள் நுழைந்திருக்கிறோம். ராஜ்யம் என்பது தெய்வீக ஆட்சியுரிமைக்கு மட்டுமல்லாமல், தெய்வீக இனத்திற்கும் ஒரு தெய்வீக மண்டலமாக உள்ளது, அதில் தெய்வீக காரியங்கள் அனைத்தும் உள்ளன. தெய்வீக விஷயங்கள் அனைத்தையும் உணர்ந்தறியவும், அனுபவிக்கவும், அனுபவித்துமகிழவும் முடியக்கூடிய தெய்வீக ஜீவன் நம்மிடம் இருக்கிறது!
II. தேவனுடைய ராஜ்யம், தெய்வீக ஆட்சியுரிமையின் ஒரு மண்டலமாகவும் உள்ளது—மத். 5–7; ரோ. 14:17
தேவனுடைய ராஜ்யம் என்பது தெய்வீக ஜீவனால் கட்டமைக்கப்பட்ட ஒரு தெய்வீக மண்டலமாக முதலாவது உள்ளது. எனினும், தேவனுடைய ராஜ்யம் தெய்வீக ஆட்சியுரிமையின் ஒரு மண்டலமாகவும் உள்ளது. ஒவ்வோர் இனமும், அது உடைமையாகக் கொண்டிருக்கும் வகையான ஜீவனால் நிர்வகிக்கப்படுகிறது. ஒரு நாய் குரைக்கிறது, ஏனெனில் அதனிடம் நாய் சார்ந்த ஜீவன் உள்ளது. நீங்கள் ஒரு நாய்க்குக் குரைக்கக் கற்பிக்க வேண்டியதில்லை; குரைப்பதிலிருந்து அதை நீங்கள் மிக எளிதில் தடுக்கவும் முடியாது. மேலும், மியாவ் என்று கூற ஒரு நாய்க்கு நீங்கள் கற்பிக்க முடியாது. ஆனால் ஒரு நாய் பூனை சார்ந்த ஜீவனைைப் பெற்று வாழ இருந்தது எனில், அது புறத்தூண்டுதலின்றி மியாவ் கூறத் தொடங்கும். தம் ஜீவனை நமக்குக் கொடுப்பதிலும், நம்மை தேவனுடைய ராஜ்யத்திற்குள் கொண்டுவருவதிலும் தேவனுடைய நோக்கம் என்னவெனில், நாம் இந்த ஜீவனால் அதன் ஒழுங்குமுறையின் கீழ் வாழ்வோம் என்பதே. தேவனுடைய ராஜ்யமே தேவனுடைய ஆளுகையாகும்.
A. நாம் கிறிஸ்துவுக்குள் விசுவாசித்தபோது நாம் அவரைப் பெற்றுக்கொண்டது நம் இரட்சகராகவும், நம் ஜீவனாகவும் மட்டுமல்லாமல், நம் ராஜாவாகவும்கூட—கிறிஸ்து தேவனுடைய ராஜ்யத்தை நம் ஆவிக்குள் கொண்டு வந்துள்ளார்—மத். 5:3; கொலோ. 3:15; 1 பேது. 3:15
நாம் கிறிஸ்துவுக்குள் விசுவாசித்தபோது, அவர் நம்மை மறுபடிஜெநிப்பிப்பதற்கான தெய்வீக ஜீவனாக மட்டுமல்லாமல் அதோடு நம்மில் வாழ்வதற்கான நம் இரட்சகராக மட்டுமல்லாமல், நம்மில் ஆளுகைசெய்வதற்கான நம் ராஜாவாகவும் நமக்குள் வந்தார். கிறிஸ்து தாமே நாம் பெற்றிருக்கும் தேவனுடைய ராஜ்யமாக இருக்கிறார் (லூக். 17:21). மத்தேயு 5:3, “ஆவியில் ஏழ்மையானவர்கள் பாக்கியவான்கள், பரலோக ராஜ்யம் அவர்களுடையது” என்று கூறுகிறது (கிரே.). ஆவியில் ஏழ்மையாக இருப்பது என்றால் நாம் கிறிஸ்துவைப் பெற முடியுமாறு மனந்திரும்புவதற்கும், எல்லாவற்றிலிருந்தும் நம்மைக் காலியாக்குவதற்கும் நம்மையே தாழ்த்துவதே ஆகும். நாம் கிறிஸ்துவைப் பெற்றவுடன், நம்மிடம் பரலோக ராஜ்யம் இருக்கிறது. இன்று, நம்மிடம் நம் ஆவியில் பரலோக ராஜ்யம் இருக்கிறது!
B. பரலோக ராஜ்யத்திற்குள் நுழைவது என்றால் நமக்குள் இருக்கும் தெய்வீக ஜீவனின் ஆளுகையின் கீழ் இருப்பதன் மூலம் தேவனுடைய ராஜ்யத்தின் நிஜத்தில் வாழ்வதே ஆகும்—மத். 5:20
கிறிஸ்துவை நம் ஆவிக்குள் ராஜ்ய ஜீவனாகப் பெற்றபின், நாம் இன்னும் அந்த ஜீவனின்படி வாழாமல் இருக்கக்கூடும். எனவே, அந்த ஜீவனின்படி எவ்வாறு வாழ்வது என்று கர்த்தராகிய இயேசு மத்தேயு அதிகாரங்கள் 5–7 இல் நமக்குக் கற்பித்தார். நம்மிடம் நம் ஆவியில் பரலோக ராஜ்யம் இருக்கிறது (மத். 5:3), ஆனால் பரலோக ராஜ்யத்திற்குள் நுழைவதைப் பற்றி கர்த்தர் இன்னும் பேசுகிறார் (மத். 5:20). இதுவே இன்று பரலோக ராஜ்யத்தின் நிஜத்தில் வாழ்வதாகும், இதன்மூலம் கிறிஸ்துவின் திரும்பி வருதலின் போது நாம் ராஜ்யத்தை நம் வெகுமதியாகப் பெற முடியும் (மத். 7:21–22). பரலோக ராஜ்யத்தின் நிஜத்தில் வாழ்வதற்கு, நாம் நமக்குள் இருக்கும் தெய்வீக ஜீவனின் ஆளுகையிின் கீழ் ஒரு நீதியான வாழ்க்கையை வாழ வேண்டும் (மத். 5:20). “தேவனுடைய ராஜ்யத்திற்குள் நுழைவதற்கு நம் வாழ்க்கையின் ஒரு புதிய ஆரம்பமாக மறுபடிஜெநிப்பிக்கப்படுதல் தேவை (யோவான் 3:3, 5), ஆனால் பரலோக ராஜ்யத்திற்குள் நுழைவதற்கோ, மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட பிறகு நம் வாழ்க்கையில் வாழ்ந்துகாட்டப்படும் விஞ்சிய நீதி தேவை. பரலோக ராஜ்யத்திற்குள் நுழைவது என்றால் இன்று அதின் நிஜத்தில் வாழ்வது மற்றும் வருங்காலத்தில் அதின் வெளியரங்கத்திற்குள் பங்குபெறுவது என்று அர்த்தம்” (Life-study of Matthew, Message 17, p. 217). நீதியைப் பெறுவதற்கான ஒரே ஒரு வழி தெய்வீக ஜீவனால் ஆளப்படு்வது மட்டுமே (ஒப். ரோ. 5:17).
C. தேவனுடைய பிள்ளைகளாக நாம் ராஜ்யத்தின் நிஜத்தில் வாழ ஒரு இராஜரீக ஜீவனைப் பெற்றுள்ளோம்—ரோ. 5:17
தேவனுடைய பிள்ளைகளாக நாம் ராஜ்யத்தின் நிஜத்தில் வாழ ஒரு இராஜரீக ஜீவனைப் பெற்றுள்ளோம். புறம்பான ரீதியில் நாம் மற்றவர்கள் இருக்கும் வண்ணமாகவே தோன்றக்கூடும், ஆனால் உள்ளான ரீதியில் நாம் வேறொரு மண்டலத்தில், அதாவது தெய்வீக ஆட்சியுரிமை மற்றும் தெய்வீக இனங்களின் மண்டலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எவ்வாறு இந்த தெய்வீக மண்டலத்தில் வாழ வேண்டும் என்று ராஜ்யத்தைப் பற்றிய கர்த்தருடைய போதனையிலிருந்து இப்போது நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
III. எவ்வாறு இந்த தெய்வீக மண்டலத்தில் ராஜ்ய வாழ்க்கையை வாழ்வது என்று நாம் கர்த்தருடைய போதனையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்—மத். 5–7
மத்தேயு 5–7, எவ்வாறு பரலோக ராஜ்யத்தில், தெய்வீக மண்டலத்தில் வாழ்வது என்பது பற்றிய கர்த்தருடைய போதனையை அளிக்கிறது. குறிப்பாகக் கர்த்தர் நமக்குப் போதித்து என்னவெனில், ராஜ்ய வாழ்க்கையை வாழ்வதற்கு நாம் ஆவியில் ஏழ்மையாக இருக்கவும், நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்களாக இருக்கவும், இரக்கமுடையவர்களாகவும், இருதயத்தில் தூய்மையானவர்களாக இருக்கவும், சமாதானக்காரணர்களாக இருக்கவும், நம் எல்லா தேவைகளுக்கும் தேவனில் நம்பிக்கை வைக்கவும், நம் பரலோகப் பிதாவின் சித்தத்தைச் செய்தாகவும் வேண்டும் என்பதே. தேவனுடைய ராஜ்யத்தின் நிஜத்தில் உள்ள இத்தகைய ஒரு வாழ்க்கை, பரலோகப் பிதாவின் பரிபூரணமான ஜீவனின்படி உள்ள ஒரு பரிபூரணமான ஜீவியத்தில் வெளிக்காட்டப்படுகிறது (மத். 5:48).
A. ஆவியில் ஏழ்மையானவர்கள் பாக்கியவான்கள், பரலோக ராஜ்யம் அவர்களுடையது—மத். 5:3
மத்தேயு 5 இல் பேசப்பட்டுள்ள பரலோக ராஜ்யத்தின் முதலாம் அம்சம் நம் மனித ஆவியுடன் தொடர்புடையது. ராஜ்ய வாழ்க்கையை வாழ, நாம் ஆவியில் ஏழ்மையாக இருந்தாக வேண்டும். நம் ஆள்தத்துவத்தின் ஆழங்களிலிருந்து, அதாவது நம் ஆவியிலிருந்து நாம் கர்த்தருக்குத் திறந்து, நம்மிடமிருந்து நம் கருத்துக்கள் எல்லாவற்றையும் இறக்கி வைக்கும் போது, இந்தப் பரலோக ராஜ்யத்தைக் கொண்ட நம் ராஜாவாக இருக்கும்படி நம் திரும்பிய மனம் மூலமாக நம் ஆவிக்குள் கர்த்தராகிய இயேசு ஜீவன்-தரும் ஆவியானவராக நுழைவார். நாம் இந்த வழியில் எல்லா நேரமும் கர்த்தருக்குத் திறக்க வேண்டும்.
B. நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் திருப்தியடைவார்கள்—மத். 5:6, 20
பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பது என்பது மத்தேயு அதிகாரங்கள் 5–7 இல் விவரிக்கப்பட்டுள்ள பரிபூரணத்தின் அதி உயர்ந்த தரத்தின்படி உள்ள (மத். 5:48) தேவனுடைய விஞ்சிய நீதியதைக் கொண்டிருப்பதைப் பற்றிய ஒரு காரியம் ஆகும் (மத். 5:20; ரோ. 14:17). நம்மில் நாமே இந்த வகையான நீதியான வாழ்க்கையை வாழ நமக்கு எந்த வழியும் இல்லை என்பதை நாம் உணர்ந்தறிந்தாக வேண்டும் (ஒப். பிலி. 3:9). இத்தகைய ஒரு நீதியான வாழ்க்கையை வாழ்வதற்கு, நாம் வேறொரு ஜீவனால், தேவனுடைய தெய்வீக ஜீவனால் வாழ்ந்தாக வேண்டும். மத்தேயு 5:6 இல் குறிப்பிடப்பட்டுள்ள நீதி வெறுமனே கிறிஸ்து தாமே (1 கொரி. 1:30-31; ஒப். ரோ. 5:17). அவரே நீதி என்பதால், நாம் அவரைத் தேடியாக வேண்டும். நாம், “கர்த்தாவே, உம்மேல் பசிதாகமுள்ளவனாய் என்னை ஆக்கிவிடுமே” என்றுகூட ஜெபிக்க வேண்டும். நாம் கிறிஸ்துவின் மேல் பசிதாகமுள்ளவர்களாய் இருந்து, அவரை ஆதாயம்பண்ண முற்பட்டால் (பிலி. 3:8–9, 11), நிச்சயமாக நாம் திருப்திப்படுத்தப்படுவோம்.
C. இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் இரக்கம் பெறுவார்கள்—மத். 5:7
“பரலோக இராஜ்யத்திற்காக, நாம் நீதியுள்ளவர்களாக இருப்பது மட்டுமல்லாமல், இரக்கமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். இரக்கத்தைப் பெறுவதென்றால் நாம் எதற்குத் தகுதியோ அதைவிட மேலானதைப் பெறுவதாகும். நாம் மற்றவர்களுக்கு இரக்கமுள்ளவர்களாக இருந்தால், கர்த்தர் நமக்கு, விசேஷமாக, அவரது நியாயாசனத்தில் (யாக். 2:12–13), இரக்கம் அருள்வார் (2 தீமோ. 1:16, 18)….நம்முடன் இடைபடுவதில் நாம் நீதியாக இருக்கவேண்டும்.இருப்பினும், மற்றவர்களிடம் நாம் இரக்கமுள்ளவர்களாக இருக்கவேண்டும். நாம் விஞ்சிய நீதியை நாடுவதற்கு கவனமாக இருந்தால், நாம் காலப்போக்கில் மற்றவர்களிடம் இரக்கமுள்ளவர்களாவோம்” (Life-study of Matthew, Message 14, p. 184). இதற்குக் காரணம், நாம் நீதியைத் தேடுவதில், நம் இயற்கையான மனிதன் எவ்வளவு பலவீனமாக இருக்கிறான் என்பதை நாம் கண்டுபிடிக்கிறோம். நம் இயற்கையான மனிதனின் பரிதாபமான சூழ்நிலையை நாம் உணர்ந்தறியாவிட்டால், நாம் ஒருபோதும் மற்றவர்களுக்கு இரக்கம் காட்ட மாட்டோம், மாறாக அவர்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்போம். இருப்பினும், நாம் நீதியைத் தேடுவதில், நாம் எவ்வளவு பலவீனர்கள், நாம் எவ்வளவு தவறுகள் செய்திருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்தறிகிறோம். இவ்வாறு, நாம் மற்றவர்களிடம் இரக்கமுள்ளவர்களாக இருக்கிறோம்.
D. இருதயத்தில் தூய்மையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்—மத். 5:8
நீதி நம்மிடமாகவும்; இரக்கம் மற்றவர்களிடமாகவும்; இருதயத்தில் தூய்மை தேவனிடமாகவும் உள்ளது. நாம் நம்முடன் கண்டிப்பாக இருப்பதன் மூலம் விஞ்சிய நீதியை நாடுவோம் எனில் அதோடு மற்றவர்களிடமாக இரக்கமுள்ளவர்களாயிருந்து, அவர்களை மன்னித்து, அவர்களுக்குத் தகுதியானதை விட அதிகமாக அவர்களுக்குக் கொடுப்போம் எனில், அப்போது நாம் தேவனிடமாக இருதயத்தில் தூய்மையாகவும் இருக்க முடியும். தேவனைத்தவிர வேறு எதையும் தேடாமல், நாம் அவரிடமாக இருதயத்தில் தூய்மையுள்ளவர்களாக இருந்தாக வேண்டும். நாம் இருதயத்தில் தூய்மையாக இருப்பதற்கான வெகுமதி தேவனைக் தரிசிப்பதே ஆகும். தேவன் தாமே நம் வெகுமதி; வேறு எந்த வெகுமதியும் அவரை விட மாபெரியது அல்ல.
E. சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய குமாரர் என்னப்படுவார்கள்—மத். 5:9
பலர் இந்த வசனத்தை ஓர் இயற்கையான முறையில் புரிந்துகொள்கிறார்கள். எனினும், சமாதானம் பண்ணுகிறவர்களாக இருப்பது என்றால் அரசியல் பண்ணுவது என்று அர்த்தமல்ல. அரசியல்செய்வது பொய்மையானதும், மாய்மாலம் செய்வதுமாகும். நாம் நம்முடன் முற்றிலும் நீதியுள்ளவர்களாகவும், கண்டிப்பாகவும் இருந்தும்கூட, மற்றவர்களிடமாக இன்னும் இரக்கமுள்ளவர்களாய் இருந்தாக வேண்டும். மேலும், நாம் தேவனிடமாக இருதயத்தில் தூய்மையுள்ளவர்களாக இருந்து, அவரை மட்டுமே தேடியாக வேண்டும். நாம் இத்தகைய நபர்களாக இருந்தால், புறத்தூண்டுதலின்றி நாங்கள் சமாதானம் செய்பவர்களாக இருப்போம். மக்களுடன் சண்டையிடுவதற்குப் பதிலாக, நம்மைச் சுற்றியுள்ள அனைவரோடும் நாம் சமாதானமாக இருப்போம்.
F. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், பொருள் ரீதியான தேவைகளைப் பற்றி கவலைப்படவோ, அவற்றால் முன்-ஆக்கிரமிக்கப்படாமல், நம் தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்யும்படி பிதாவில் நம்பிக்கை வைத்தல்— மத். 6:33-34
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தைத் தேடி, பொருள் ரீதியான தேவைகளைப் பற்றி கவலைப்படாமலும் அல்லது அவற்றால் முன்-ஆக்கிரமிக்கப்படாமலும் இருப்பவர்களின் பொருள் ரீதியான தேவைகள் அனைத்தையும் பிதாவானவர் பூர்த்திசெய்வார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுதல் என்பது, நம் ஆள்தத்துவத்தின் சாட்சாத்து ஆழங்களைத் தொடுகிறது. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுபவர்களுக்கு உலகத்துக்குரிய, பொருள் ரீதியான விஷயங்களுடன் எந்தப் பிணைப்பும் இருக்கக்கூடாது. நாம் தெய்வீக ஜீவனால் வாழ்ந்துகொண்டிருந்தால் மட்டுமே நாம் இந்த வழியில் தூய்மையாக இருக்க முடியும்.
G. பரலோகப் பிதாவின் சித்தத்தைச் செய்கிறவர்களே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள்—மத். 7:21
ராஜ்ய மக்களாகிய நாம் வெறும் ஒரு நீதியான வாழ்க்கையை வாழ்வதற்காக மட்டும் இங்கு இல்லை. மாறாக, நாம் பரலோகப் பிதாவின் சித்தத்தைச் செய்வதற்காகவே இங்கு இருக்கிறோம். நமக்கு ஒரு பரலோகப் பிதா இருக்கிறார், மேலும் நாம் அவரது பிள்ளைகள். விஞ்சிய நீதியான ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு, நாம் அவரது ஜீவனால் வாழ வேண்டும். எனினும், இங்கே அது பிதாவின் ஜீவனைப் பற்றிய ஒரு காரியம் அல்ல, மாறாக பிதாவின் சித்தத்தைப் பற்றிய ஒரு காரியம் ஆகும். நம் பிதாவிடம் செய்துமுடிப்பதற்கான ஒரு சித்தம் உள்ளது, ஆனால் அவரது ஜீவனால் மட்டுமே நாம் அதைச் செய்துமுடிக்க முடியும். நாம் அவரது சித்தத்தைச் செய்யக்கூடுமாறு, நாம் அவரது ஜீவனைப் பெற்றுள்ளோம்.
H. தேவனுடைய ராஜ்யத்தின் நிஜத்தில் உள்ள ஒரு வாழ்க்கை, பரலோகப் பிதாவின் பரிபூரணமான ஜீவனின்படி உள்ள ஒரு பரிபூரணமான ஜீவியத்தில் வெளிக்காட்டப்படுகிறது—மத். 5:48
மத்தேயு சுவிசேஷம் ராஜ்யத்தின் அதி உயர்ந்தக் கோரிக்கைகளை, அதாவது பரலோக ராஜ்யத்தின் நிஜத்தில் இருக்க நமக்குத் தேவையான விஞ்சிய நீதியை முன்வைக்கிறது. யோவான் சுவிசேஷம், இத்தகைய ஒரு வாழ்க்கையைப் பெற நமக்குத் திறனளிக்கும் தெய்வீக ஜீவனை முன்வைக்கிறது. தெய்வீக ஜீவன் இல்லாமல் நாம், மத்தேயுவில் கர்த்தரால் விவரிக்கப்பட்டுள்ளதைப் போன்ற இத்தகைய ஒரு வாழ்க்கையை ஒருபோதும் பெற முடியாது. எனினும் நிஜமாகவே தெய்வீக ஜீவனாால் வாழ, தேவனுடைய ராஜ்யத்தின் நிஜத்தில் வாழ நமக்கு உதவும்படி மத்தேயுவில் உள்ள போதனை நமக்குத் தேவை. ராஜ்யத்தின் கோரிக்கை பரிபூரணமே தவிர வேறு ஒன்றும் அல்ல: “ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்” (மத் 5: 48). இத்தகைய ஒரு பரிபூரணமான வாழ்க்கை, பரலோகப் பிதாவின் பரிபூரணமான ஜீவனை வெளிக்காட்டுகிறது.
IV. தேவனுடைய ராஜ்யத்தின் நிஜத்தில் உள்ள ஒரு வாழ்க்கை, பரலோகப் பிதாவிின் தெய்வீக ஜீவனால் மட்டுமே வாழ்ந்துக்காட்டப்பட முடியும்—மத். 5:48
பரலோக ராஜ்யம் அதி உயர்ந்தக் கோரிக்கையைக் கொண்டுள்ளது (மத். 5:48), மேலும் பரலோக ராஜ்யத்தின் இந்த அதி உயர்ந்தக் கோரிக்கை, நம் அதி உயர்ந்த நிரப்பீடாகிய பரலோகப் பிதாவின் தெய்வீக ஜீவனால் மட்டுமே பூர்த்தி செய்யப்பட முடியும். மத்தேயு 5:48 இல் உள்ள கோரிக்கை, நாம் “பூரண சற்குணராயிருக்க” வேண்டும் என்பதே, ஆனால் அந்தக் கோரிக்கையைப் பூர்த்தி செய்வதற்கான வழியையும் இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது. நாம் பரலோகப் பிதாவின் பிள்ளைகள்! நம்மிடம் அவரது தெய்வீக ஜீவன் இருக்கிறது என்பதே இதன் அர்த்தம்! நாம் விஞ்சிய நீதியைக் கொண்ட ஒரு வாழ்க்கையை வாழ முற்படும்போது, தெய்வீக ஜீவனால் வாழ்வதற்கான நம் தேவையை நாம் இன்னும் அதிகம் அதிகமாய் உணர்ந்தறிவோம். இந்த தெய்வீக ஜீவனால் வாழ்வதை நாம் பயிற்சிசெய்யும் போது, நாம் இன்னும் அதிகம் அதிகமாய் தேவனுடைய ராஜ்யத்தின் நிஜத்திற்குள் நுழைவோம்.
இடைநிலைபிரயோகம்: எந்தவொரு உயிருள்ள ராஜ்யத்திலும் இருப்பது, அந்த ராஜ்யத்தின் ஜீவனால் பிறப்பதைப் பற்றிய ஒரு காரியம் ஆகும். நாய் ஜீவனால் பிறப்பதன் மூலம் ஒரு நாய் இந்த நாய் ராஜ்யத்திற்குள் நுழைவது போலவே, நாம் தெய்வீக ஜீவனால் பிறப்பதன் மூலம் தேவனுடைய ராஜ்யத்திற்குள் நுழைகிறோம். எனவே, தேவனுடைய ராஜ்யத்தின் கோரிக்கைகளைப் பூர்த்திசெய்வது என்பது வெறுமனே நம் முயற்சியைப் பற்றிய ஒரு காரியம் அல்ல என்பதை நாம் கற்றாக வேண்டும். அது, நமக்குள் இருக்கும் தெய்வீக ஜீவனை பண்படுத்தி வளர்த்தெடுத்தல் பற்றிய ஒரு காரியம் ஆகும். இதனால்தான் நம் காலைப் புத்துயிர் அவ்வளவு அதிகமாக மிக முக்கியமானது. நாம் தெய்வீக ஜீவனுக்கு உணவளிக்கவில்லை எனில், அது வளர முடியாது. நமக்குள் இருக்கும் தெய்வீக ஜீவன் நீர்ப்பாய்ச்சப்பட்டு, வளர முடியுமாறு, ஒவ்வொரு காலையிலும் நாம் கர்த்தருடன் ஒரு சில நிமிடங்கள் செலவிட வேண்டும். அப்போது, தேவனுடைய ராஜ்யத்தின் கோரிக்கைகள் புறத்தூண்டுதலின்றி நம்மில் பூர்த்திசெய்யப்பட ஆரம்பிக்கும். இது கொஞ்சம் நேரம் எடுக்கும் ஒரு வழிமுறையாகும், ஆனால் நாம் அவரது ஜீவனை வளர்த்தெடுத்து, அவரது ஜீவனால் வாழ உண்மையுள்ளவர்களாக இருந்தால் அவரது ஜீவனால் அதைச் செயல்படுத்த இயலும்.
சுவிசேஷப் பிரயோகம்: கடந்த நித்தியத்திலிருந்தே தேவனுடைய வாஞ்சை, பல குமாரர்களைப் பெற்றெடுப்பதாகவே இருந்திருக்கிறது. எபேசியர் 1:4, 6, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே நம்மைத் தெரிந்துகொண்டு, “குமாரத்துவத்திற்கென்று” நம்மை முன்குறித்தார் என்று நமக்குச் சொல்கிறது (கிரே.). தேவன் முன்னதாகவே நம்மைக் குறியிடுதல், குமாரத்துவத்திற்கென்று நம்மை முன்குறிப்பதற்காக இருந்தது. நாம் சிருஷ்டிக்கப்பட்டதற்கு முன்பே கூட நாம் தேவனுடைய குமாரர்களாக இருக்கும்படி முன்குறிக்கப்பட்டோம். எனவே, நாம் தேவனுடைய குமாரர்களாக இருக்கும்படி அவரது ஜீவனில் பங்குபெறுமாறு தேவனின் சிருஷ்டிகளாகிய நாம் அவரால் மறுபடி ஜெநிப்பிக்கப்படுவது தேவை. குமாரத்துவம் என்பது, ஜீவனை மட்டுமல்லாமல், ஒரு குமாரனின் அந்தஸ்தையும் பெற்றிருப்பதை மறைவாகக் காட்டுகிறது. தேவனால் குறியிடப்பட்டவர்கள் அவரது குமாரர்களாக இருக்கும்படி அவரது ஜீவனையும், அவரைச் சுதந்தரிக்கும்படி அந்தஸ்தையும் பெற்றிருக்கின்றனர். தேவனுடைய குமாரர்களாக ஆகுவதன் மூலம், நாம் தேவனுடைய ராஜ்யத்திற்குள் நுழைகிறோம். விலங்கு ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருக்க, நீங்கள் விலங்கு ஜீவனைக் கொண்ட ஒரு விலங்காகப் பிறந்தாக வேண்டும். மனித ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருக்க, நீங்கள் மனித ஜீவனைக் கொண்ட ஒரு மனிதனாக இருந்தாக வேண்டும். அதேபோல், தேவனுடைய ராஜ்யத்திற்குள் நுழைவதற்கு, நீங்கள் தேவனால் தெய்வீக ஜீவனுடன் பிறந்தாக வேண்டும். இதைதான் அப்படியே கர்த்தராகிய இயேசு யோவான் 3-ஆம் அதிகாரத்தில் நிக்கொதேமுவிடம் சொன்னார். யோவான் 3:3, “இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்” என்று கூறுகிறது. பின்னர் ஐந்தாவது வசனத்தில் கர்த்தர், “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்று தொடர்கிறார். யோவான் 1:12, “அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை பெற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்” என்று கூறுகிறது. இந்த வசனம், எவ்வாறு தேவனால் பிறப்பது என்பதை நமக்குக் காட்டுகிறது—நாம் அவருக்குள் விசுவாசிப்பதன் மூலம் அவரைப் பெற்றாக வேண்டும். இன்றே அவரைப் பெற்றுக்கொள்ளுங்கள்! அவருக்குள் விசுவாசித்து, தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க புதிதாய்ப் பிறந்திடுங்கள்.
மிகமுக்கியக் காரியங்கள்: எல்லாவற்றின் மீதும் ஜீவனில் ஆளுகைசெய்ய கிறிஸ்துவின் அரசத்துவத்தின் கீழ் ஒரு வாழ்க்கையை வாழ்தல் (III.H.).
பின்னணி வாசிப்பு: Life-study of Matthew, Messages 14–15, 19–20; Message 24, pp302–304.
REFERENCES: Life-study of Matthew, Messages 13–15, 17–20, 22, 24; Life-study of John, Messages 8– 9; The Vital Groups, Message 1; Crystallization-study of the Complete Salvation of God in Romans, Messages 4–6.