வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்

பகுதி 8

பாடம் 01 – 08

பாடம் 10 – 18

கிறிஸ்துவின் ஊழியம்

கிறிஸ்துவின் ஜெபங்கள் (2)

குறிக்கோள்:  கர்த்தராகிய இயேசு ஐயாயிரம் பேரைப் போஷிக்கும் அற்புதத்தை நிகழ்த்துவதில் ஒரு ஜெப மனிதனாகிய தம்மிடமிருந்து கற்றுக்கொள்ளும்படி எவ்வாறு அவர் தம் சீஷர்களைப் பயிற்றுவித்தார் என்பதைக் காட்டுவதற்கு.

பொருட்சுருக்கம்: ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேரைப் போஷிக்கும் அற்புதத்தை நிகழ்த்துவதில், கர்த்தராகிய இயேசு தம் சீஷர்களைப் பயிற்றுவித்தார். இந்த அற்புதத்தை நிகழ்த்துவதற்கு முன்பு அவர் அப்பங்களையும் மீன்களையும் எடுத்து, பரலோககத்தை நோக்கிப் பார்த்து, அவற்றை ஆசீர்வதித்தார். இது பல்வேறு விஷயங்களைச் சுட்டிக்காட்டுகிறது: அவர் பிதாவோடு ஒன்றாயிருந்து, அவரில் நம்பிக்கை வைத்தார்; அவர் தம்மிலிருந்து எதுவும் செய்யவில்லை; அவர் தம் சொந்தச் சித்தத்தை அல்ல, மாறாக பிதாவின் சித்தத்தை நாடினார்; அவர் தம் சொந்த மகிமையை அல்ல, மாறாக பிதாவின் மகிமையை நாடினார். அனுப்பப்பட்டவராகக் கர்த்தர், ஆசீர்வாதத்தின் ஊற்று தம்மிடம் அல்ல, மாறாக அனுப்புகின்றவராகிய பிதாவிடமே இருந்தது என்பதை உணர்ந்தறிந்தார். அவர் இந்த அற்புதத்தை நிகழ்த்திய பிறகு, அவர் ஜெபத்தில் பிதாவோடு தனியாக இருக்க ஒரு மலைக்கு ஏறிச் சென்றார். இதிலிருந்து நாம் கர்த்தரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை (1) நம் ஒப்பற்ற ஊற்றாகிய தேவனை எப்போதும் கனப்படுத்துவதும், (2) ஜெபத்தில் கர்த்தருடன் தனியாக நேரம் செலவிட்டு, அவருடன் நெக்கமான அனுபவித்துமகிழ்வதுமே.

பின்புலம்: மத்தேயு 14 இல், கர்த்தர் ஐயாயிரம் பேரைப் போஷிக்கும் அற்புதத்தை நிகழ்த்திய போது, கிடைக்கக்கூடியவையாக இருந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும்  விட மிகவும் அதிகமாக இந்தக் கூட்டத்திற்குத் தேவைப்பட்ட இந்த சூழ்நிலை இருந்தது. (நம் குடும்ப வாழ்க்கையிலோ, நம் பள்ளி வாழ்க்கையிலோ, அல்லது கிறிஸ்தவ வாழ்க்கையை வாழும் நம் வாழ்க்கையிலோ) உள்ள தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நிரப்பீட்டையும் தாண்டி, நம்மைச் சுற்றியுள்ள தேவைகள் இருப்பதாக நாம் அடிக்கடி உணர்கிறோம். கர்த்தர் பரலோகங்களை நோக்கிப் பார்த்தபோது, ஆசீர்வாதத்தின் ஊற்று தம்மிடமிருந்து அல்ல, மாறாகப் பரலோகங்களிலுள்ள பிதாவிடமிருந்தே இருந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டினார் அதோடு தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்யும்படி அவரில் நம்பிக்கை வைத்தார். பிதாவானவர் அந்தத் தற்போதைய தேவைக்குப் பதிலளித்தார், மேலும் சுற்றியும் போதுமான உணவை விட அதிகமாகவே இருந்தது. கர்த்தர் பரலோகங்களை நோக்கிப் பார்த்தல் என்பது ஒப்பற்ற ஊற்றாகிய பிதாவிடம் ஜெபிக்கவும், அவரை நோக்கிப் பார்க்கவும் நம்மெல்லாருக்கும் உள்ள ஒரு முன்மாதிரியாகும். நம்மிடம் என்ன இருக்கிறது, நம்மால் என்ன செய்ய இயலும் என்ற வரம்பை நாம் நோக்கிப் பார்க்கத் தேவையில்லை. நாம் ஜெபிக்க மட்டுமே வேண்டும். மற்றவர்களால் செய்ய முடியாததைச் செய்யவும், இல்லாதவற்றை இருக்கிறவையாக அழைக்கவும், நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு தேவையையும் பூர்த்திசெய்யவும் ஜெபத்தின் மூலம் நாம் அவரை நோக்கிப் பார்க்கிறோம்.

திகாரம்: மத்தேயு 14.

கற்பிப்பதற்கான உண்மைகள் கொண்ட செய்திக்குறிப்பு

மத்தேயு 11:29 இல் கர்த்தர், “என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினார். இங்கே கர்த்தர், தம்மிடமிருந்து கற்றுக்கொண்டு, தம்மை அவர்களது முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளும்படி தம் சீஷர்களிடம் சொன்னார். சீஷர்கள் கர்த்தருடன் வாழ்ந்து நகர்ந்தபோது, அவர்கள் அவரை உற்றுக்கவனித்துக்கொண்டும், அவரிடமிருந்து கற்றுக்கொண்டும் இருந்தனர். அவரைப் பற்றி அவர்கள் உற்றுக்கவனித்த ஒரு விஷயம், எவ்வாறு அவர் ஒரு ஜெப மனிதனாக வாழ்ந்தார் என்பதுதான். மத்தேயு 14 இல், கர்த்தர்  ஐந்து அப்பத்தையும், இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம்பேரை போஷித்தார். பலர் இந்த விவரணத்தை வாசித்து, இத்தகைய ஓர் அற்புதத்தை நிகழ்த்துவதற்கான கர்த்தருடைய திறனைக் கண்டு வியப்படைகிறார்கள். எனினும் இந்தப் பாடத்தில், அவர் நிகழ்த்திய அற்புதத்தில் அல்ல, மாறாக அவர் தம் சீஷர்களுக்குக் கற்பித்த பாடத்தில் நாம் குவிமையம் கொள்ள விரும்புகிறோம். ஐயாயிரம் பேரைப் போஷிப்பதில் கர்த்தர் செய்தது மெய்யாகவே வியப்புக்குரியதாக இருந்தது, ஆனால் வார்த்தையின் இந்தப் பகுதியில் நமக்கு ஊழியம்செய்வது என்னவெனில், அவர் ஒரு ஜெப மனிதனாகத் தம்மைப் பற்றி நமக்குக் கற்பிக்கும் பாடமே.

I. ஐயாயிரம் பேரைப் போஷிக்கும் அற்புதத்தை நிகழ்த்துவதில், கர்த்தர் ஒரு ஜெப மனிதனாகிய தம்மிடமிருந்து கற்றுக்கொள்ளும்படி தம் சீஷர்களைப் பயிற்றுவித்தார்—மத். 14:19

ஐயாயிரம் பேரைப் போஷித்தல் பற்றிய இந்த விவரணத்தில், கர்த்தர் தாம் இந்த அற்புதத்தை நிகழ்த்துவதற்கு முன்னும் பின்னும் செய்த விஷயங்களின் மூலமாக தம் சீஷர்களுக்குக் கற்பித்தார். இந்த அற்புதத்திற்கு முன்பு, கர்த்தர் பரலோகத்தை நோக்கிப் பார்த்து ஐந்து அப்பத்தையும், இரண்டு மீன்களையும் ஆசீர்வதித்தார். இந்த அற்புதத்திற்குப் பிறகு, கர்த்தர் பிதாவிடம் ஜெபிக்க அந்தரங்கமாக மலைக்குச் சென்றார். இந்தச் செயல்கள் இரண்டும் சீஷர்களுக்கான ஒரு முன்மாதிரியை முன்வைத்து, ஜெப மனிதர்களாக வாழ அவர்களைப் பயிற்றுவித்தது.

A. இந்த அற்புதத்தை நிகழ்த்துவதற்கு முன்பு, கர்த்தர் பரலோகத்தை (பரலோகங்களில் உள்ள தம் பிதாவை) நோக்கிப் பார்த்து ஐந்து அப்பத்தையும், இரண்டு மீன்களையும் ஆசீர்வதித்தார், இது சுட்டிக்காட்டுவதாவது:

மத்தேயு 14:19, “அப்பொழுது, அவர் ஜனங்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள்” என்று கூறுகிறது. அப்பங்களையும் மீன்களையும் ஆசீர்வதிக்கையில் கர்த்தர் பரலோகத்தை நோக்கிப் பார்த்தல், அவர் பிதாவை நோக்கிப் பார்த்தலாக இருந்தது இதைச் செய்வதன் மூலம் கர்த்தர், ஆசீர்வாதத்தின் ஊற்று தாம் அல்ல, மாறாக பிதாவானவரே என்பதைச் சுட்டிக்காட்டினார். பிதாவே அனுப்புகிறவராயும், கர்த்தரே அனுப்பப்பட்டவராயும் இருந்தார். அனுப்பப்பட்டவராகக் கர்த்தர், ஆசீர்வாதத்தின் ஊற்று தம்மிடம் அல்ல, மாறாக அனுப்புகின்றவராகிய பிதாவிடமே இருந்தது என்பதை உணர்ந்தறிந்தார். பரலோகத்தை நோக்கிப் பார்க்கும் இந்த ஒரே செயல் மூலம் கர்த்தர் பின்வரும் நான்கு விஷயங்களைக் காட்டினார்:

  1. அவர் பிதாவோடு ஒன்றாயிருந்தார் அதோடு அவரில் நம்பிக்கை வைத்தார்—யோவான் 10:30

கர்த்தர் பிதாவை நோக்கிப் பார்த்தல், அவர் பிதாவோடு ஒன்றாயிருந்தார் அதோடு அவரில் நம்பிக்கை வைத்தார் என்பதைச் சுட்டிக்காட்டியது. ஆசீர்வாதம் என்பது நம்மால் என்ன செய்ய முடியும் என்பதில் நம்பிக்கை வைப்பதில் அல்ல, மாறாக கர்த்தரில் நம்பிக்கை வைப்பதிலும், அவருடன் ஒன்றாயிருப்பதிலும்தான் வருகிறது என்பதை இதிலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம்.

  1. அவர் தமக்காகவே எதுவும் செய்யவில்லை—யோவான் 5:19

கர்த்தர் பிதாவை நோக்கிப் பார்த்தல், அவர் தம்மிலிருந்து எதுவும் செய்ய மாட்டார் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. பிரபஞ்சம் அவர் மூலமாக சிருஷ்டிக்கப்பட்டிருந்தாலும், அவர் தம்மாலேயே எதுவும் செய்ய மாட்டார். இது, மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக தங்களுக்குத் தெரிந்ததையும், தங்களால் செய்ய முடிந்ததையும் காட்ட விரும்பும் இன்றைய மக்களைப் போன்று அல்ல.

  1. அவர் தம் சொந்த சித்தத்தை அல்ல, மாறாக பிதாவின் சித்தத்தையே நாடினார்—யோவான் 5:30

யோவான் 5:30 இல் கர்த்தர், “எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால்” என்று கூறினார். கர்த்தர் பிதாவை நோக்கிப் பார்த்தல் சுட்டிக்காட்டுவது என்னவெனில், அவர் செய்துகொண்டிருந்தது தம் சொந்த சித்தத்தை நாடுதல் அல்ல, மாறாக பிதாவின் சித்தத்தை நாடுதலாக இருந்தது என்பதே. அவர் தம் சொந்த குறிக்கோளையும் நோக்கத்தையும் நாடவில்லை, மாறாக அவர் பிதாவின் குறிக்கோளையும் நோக்கத்தையும் நாடினார்.

  1. அவர் தம் சொந்த மகிமையை அல்ல, மாறாக பிதாவின் மகிமையை நாடினார்—யோவான் 7:18

கர்த்தரும் தம் சொந்த மகிமையை அல்ல, மாறாக பிதாவின் மகிமையை நாடினார். கர்த்தர் பரலோகத்திலுள்ள பிதாவை நோக்கிப் பார்த்ததன் மூலம், தம்மிடமிருந்து சீஷர்கள் கற்றுக்கொள்வதற்காக அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்ததை நாம் காண்கிறோம். கர்த்தர் பிதாவை நோக்கிப் பார்த்ததை உற்றுக்கவனிப்பதன் மூலம், நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம். இந்தப் பாடம், நம் ஒப்பற்ற ஊற்றாகிய தேவனைக் கனப்படுத்துவதே ஆகும். கர்த்தர் பிதாவை தம் ஊற்றாகக் கனப்படுத்தினார், இவ்வாறு அவரோடு ஒன்றாயிருந்தார், அவரில் நம்பிக்கை வைத்தார், தம்மிலிருந்து எதுவும் செய்யவில்லை, தம் சொந்தச் சித்தத்தை நாடவில்லை, தம் சொந்த மகிமையையும் நாடவில்லை.

B. அவர் அற்புதத்தை நிகழ்த்திய பிறகு, அவர் ஜெபத்தில் பிதாவோடு தனியாக இருக்க ஒரு மலைக்கு ஏறிச் சென்றார்—மத். 14:22–23

மத்தேயு 14:22-23, “இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார். அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்” என்று கூறுகின்றன. ஐயாயிரம் பேரைப் போஷிக்கும் அற்புதத்தை நிகழ்த்துவதற்கு முன்பு கர்த்தர், ஆசீர்வாதத்தின் ஊற்றாக பிதாவே இருந்தார் என்பதைக் காட்ட பரலோகத்தை நோக்கிப் பார்த்தார். அற்புதத்தை நிகழ்த்திய பிறகு, கர்த்தர் தம் சீஷர்களையும் மக்கள்கூட்டத்தையும் அனுப்பிவைத்துவிட்டு, ஜெபிக்கும்படி அந்தரங்கமாக மலைக்கு ஏறிச் சென்றார். அற்புதத்தை நிகழ்த்தியதில் அவர் பெற்ற தம் வெற்றியின் அனுபவமகிழ்ச்சியில் நிலைத்திருப்பதற்கு பதிலாக, கர்த்தர் பிதாவுடன் தனியாக இருக்க தொலைவே சென்றார். கர்த்தர் அந்தரங்கமாக மலைக்குச் செல்வது, அவர் தாம் என்ன செய்துகொண்டிருந்தார் என்பதை யாருக்கும் தெரியப்படுத்தவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது, இல்லையெனில் மற்றவர்கள் அவரைப் பின்தொடர்ந்திருப்பார்கள். அவர் பிதாவிடம் ஜெபிப்பதற்கும், அவரோடு நெருங்கிய ஐக்கியம் கொள்வதற்கும் அவருடன் தனியாக இருக்கச் சென்றார். இது, நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம். நாமும்கூட எல்லா மக்கள்கூட்டங்களிலிருந்தும் விலகி பிதாவுடன் தனியாக நேரத்தைச் செலவிடவும், அவருடன் நெருங்கிய ஐக்கியம் கொள்ளவும் வேண்டும்.

II. ஒரு ஜெப மனிதனாகக் கர்த்தர் நமக்கு ஒரு முன்மாதிரியாக, பின்வருபவற்றைக் கற்பிக்கின்றார்:

ஒரு ஜெப மனிதனாகக் கர்த்தர் தம்மிடமிருந்து கற்றுக்கொள்ளும்படி தம் சீஷர்களுக்குப் போதித்தார். கர்த்தர் பரலோகத்தை நோக்கிப் பார்ப்பதன் மூலம் இளம் வாலிபர்களாகிய நாம் கற்பது என்னவெனில், தேவனை நம் ஒப்பற்ற ஊற்றாக எடுத்துக்கொண்டு, அவரைத் தவிர வேறு எந்த ஊற்றிலும் நம்பிக்கை வைக்காமல் இருப்பதே ஆகும். கர்த்தர் ஜெபிப்பதற்கு அந்தரங்கமாக மலைக்குச் செல்வதன் மூலம் நாம் கற்பது என்னவெனில், பிதாவுடன் ஒரு நெருக்கமான நேரத்தை அனுபவிக்க அவருடன் தனியாக நேரம் செலவிடுவதே ஆகும்.

A. தேவனை நம் ஒப்பற்ற ஊற்றாகக் கனப்படுத்த

காலை வேளையில் ஜெபிப்பதற்கான ஒரு நல்ல ஜெபம் என்னவெனில், “பிதாவே, நான் உம்மை என் ஊற்றாக எடுத்துக்கொண்டு, இன்று எனக்காக நீர் வைத்திருப்பதையெல்லாம் உம் கரத்திருந்து பெறுகிறேன். உம்மிடமிருந்து வரும் எல்லாமும் எனக்குத் தேவை. நீரே என் ஒப்பற்ற ஊற்று” என்பதே. பாடல்கள் #595, பத்தி 2,, “நாம், பிதாவின் கரத்திலிருந்து, / நம் பங்கை ஸ்தோத்திரத்துடன் எடுத்துக் கொண்டு, / அவர் திட்டமிட்ட விஷயங்களுக்காக துதிக்கும்போழ், / எப்போதுமே ஏதோ ஒன்று நமக்கு மேலே இருக்கிறது” என்று கூறுகிறது. கர்த்தர் பிதாவை தம் ஊற்றாக எடுத்துக்கொண்டார், மேலும் அவ்வாறு செய்வதன் மூலம், நாம் பின்பற்றுவதற்கான ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தினார். நாமும் பிதாவை நம் ஒப்பற்ற ஊற்றாக எடுத்துக்கொள்ளலாம். நாம் நம்மில் அல்லது நம் திறனில் நம்பிக்கை வைக்கவில்லை; மாறாக, நம் ஊற்றாகிய அவரில் நாம் நம்பிக்கை வைக்கிறோம். நாம் நம் சித்தத்தையும், நம் மகிமையையும் நாடுவதில்லை; மாறாக நாம் அவரது சித்தத்தை நாடி, அவரது மகிமைக்காக அக்கறைப்படுகிறோம். அவரே நம் குடும்ப வாழ்க்கை, நம் பள்ளி வாழ்க்கை, நம் எதிர்கால வாழ்க்கை, நம் கிறிஸ்தவ வாழ்க்கை, மற்றும் நம் சபை வாழ்க்கையின் ஊற்று. நாம் நம் பிதாவின் கரத்திலிருந்து நம் பங்கை ஸ்தோத்திரத்துடன் எடுத்துக்கொண்டு, அவர் திட்டமிட்ட விஷயங்களுக்காகத் துதிக்கும்போது நாம் எவ்வளவு நிம்மதியாக உணர்கிறோம்.

B. ஜெபத்தில் அவருடன் தனியாக நேரத்தை செலவிட்டு, அவருடன் நெருங்கிய ஐக்கியத்தை அனுபவித்துமகிழுங்கள்—மத். 14:23; 6:6; மாற். 1:35

“மற்றவர்களுடன் ஜெபிப்பது நல்லதுதான், ஆனால் அடிக்கடி நாமாகவே தனியாக ஜெபிக்க வேண்டும். நாம் மற்றவர்களுடன் ஜெபிக்கும்போது, நாம் அந்தரங்கமாகக் கர்த்தரிடம் ஜெபிக்கையில், கர்த்தரை அனுபவித்துமகிழ்வதுபோல நாம் அவரை ஆழமானவிதத்தில் அனுபவித்துமகிழ முடியாது. நாம் ஜெபிக்கும்போது, நாம் அந்தரங்கமாக நம் அறைக்குள் பிரவேசித்து, நம் கதவை அடைத்து, இரகசியமாகக் காண்கிற பிதாவிடம் இரகசியமாக ஜெபிக்க வேண்டும் என்று கர்த்தராகிய இயேசுவும் கூட நமக்குச் சொன்னார் (மத். 6:6). அப்போது அவர் நமக்கு எவ்வளவு அந்நியோன்யமானவர், நாம் அவருக்கு எவ்வளவு நெருக்கமானவர்கள் என்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது. நாம் ஓர் ‘உயர்ந்த மலைமீது’ ஓர் உயர்வான மட்டத்திற்குச் செல்ல மக்கள் கூட்டத்தையும், நம் குடும்பத்தையும், நம் நண்பர்களையும், சபையிலுள்ள பரிசுத்தவான்களையும் விட்டுச்செல்ல கற்க வேண்டும். நாம் ஒரு தாழ்ந்த மட்டத்திலுள்ள பூமிக்குரிய காரியங்களை விட்டு வெகுதொலைவாக உயர்வாகச் செல்ல வேண்டும். நாம் பிதாவுடன் அந்நியோன்யமாக ஐக்கியம்கொள்ள அந்தரங்கமாகவும், இரகசியமாகவும் அவருடன் இருக்கும்படி மக்கள் கூட்டத்திடமிருந்து பிரிக்கப்பட்டு, ஓர் உயர்வான மட்டத்திற்குச் செல்ல வேண்டும். இதுவே  மலைமீது ஜெபத்தில் இருப்பதன் உட்கருத்து” (The God-man Living, Message 14, p. 129). நாம் ஜெபத்தில் கர்த்தரிடம் அந்தரங்கமாகச் செல்லும்போது, நாம் நிறைய நேரம் செலவிட வேண்டும் என்று இளம் வாலிபர்களாகிய நாம் உணரத் தேவையில்லை. நாம் பள்ளிக்குச் சென்று திரும்பிய பிறகு பாட்டுப் பாடுவதற்கும், ஜெபிப்பதற்கும், கர்த்தரிடம் நாம் அவரை நேசிக்கிறோம் என்று சொல்வதற்கும் கர்த்தருடன் ஐந்து நிமிடங்கள் செலவிட்டாலும்கூட, நாம் இந்த நாளிலிருந்து கழுவப்படும் அதோடு கர்த்தருடன் இனிமையான ஐக்கியத்திற்குள் வரும் உணர்வு நமக்கு இருக்கும். நாம் கர்த்தருடன் இந்த அந்தரங்கமான நேரங்களைச்  செலவிடும்போது, கர்த்தரோடு உள்ள நம் உறவு மிகவும் நெருக்கமானதாக ஆகிவிடுகிறது. இந்த வழியில், நாம் அவருடன் ஐக்கியப்படும் ஒரு வாழ்க்கைக்குள் கொண்டு வரப்படுகிறோம்.

டைநிலைபிரயோகம்: இளம் வாலிபர்கள் பலர் தங்கள் பெற்றோர் ஜெபிப்பதை உற்றுக்கவனிப்பதால், அவர்கள் ஜெபத்தைப் பற்றிய காரியத்தோடு பரீட்சியமாக உள்ளனர். சில இளம் வாலிபர்கள் வாரத்தின் போது ஒரு முறையாவது (ஒரு கூடுகையிலோ, உணவு வேளையிலோ, படுக்கைக்கு முன்னதாகவோ) ஜெபிக்கின்றனர். ஜெபம் என்றால் என்ன, ஜெபத்தின் நன்மைகள் குறித்து ஓர் எளிய வார்த்தையைப் பேசுவதன் மூலம், ஜெபத்தைப் பற்றிய பாராட்டுதல் மற்றும் நடைமுறைப் பயிற்சிக்குள் நாம் அவர்களை இன்னும் உறுதியாக நடத்த முடியும். ஜீவ பாடங்கள், பாடம் 4, ஜெபம் தொடர்பான மிகவும் உதவிகரமான சில குறிப்புகளை அளிக்கிறது: 1) ஜெபத்தின் உட்கருத்து என்பது வெறுமனே தேவனிடம் விஷயங்களைக் கேட்பதில் அல்ல, மாறாக நம் ஆவியைக் கொண்டு ஆவியானவரைத் தொடர்புகொள்வதில் உள்ளது, அச்சமயத்தின் போது நாம் தேவனை நமக்குள் உள்சுவாசிக்கிறோம். ஜெபம் என்பது ஆவிக்குரிய சுவாசித்தலாகவும், ஒரு புதிதாகப் பிறந்த குழந்தைக்கு சுவாசித்தல் எவ்வளவு முக்கியமோ அதேபோல் ஒரு விசுவாசி சுவாசிக்கு அவ்வளவு முக்கியமானதாகவும் உள்ளது. 2) ஜெபத்தின்புலன்  நம் ஆவியே (யோவான் 4:24; எபே. 6:18). 3) ஜெபத்தின் வழிவகை  கர்த்தருடைய இரத்தத்தினாலும், கர்த்தருடைய நாமத்திலும் உள்ளது (எபி. 10:19-20; யோவான் 15:16). 4) ஜெபத்தின்இடையூறு  நம் மனச்சாட்சியில் உள்ள கண்டனம்செய்தலே ஆகும் (எபி. 10:22). 5) ஜெபத்தின் நன்மைகள் என்னவெனில் ஜெபம் நம்மைச் சபலப்படுத்துதலினின்று காக்கிறது (மத். 26:41), சமயத்திற்கேற்ற உதவிக்காக நமக்கு இரக்கத்தையும் கிருபையையும் கொண்டுவருகிறது (எபி. 4:16), அதோடு கவலையிலிருந்து நம் இருதயத்தைக் காக்க நமக்குச் சமாதானத்தைக் கொண்டுவருகிறது (பிலி. 4:6–7). (தயவுசெய்து ஜீவ பாடங்கள், பாடம் 4 ஐ பார்க்கவும்.) நாம் கர்த்தரைத் தொடர்புகொண்டு, அவரை நமக்குள் உள்சுவாசிக்கும்படி கர்த்தரிடம் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், பல வழிகளிலும் ஜெபிக்க முடியும்.

சுவிசேஷப் பிரயோகம்: தேவனுடைய சிருஷ்டிப்பின் மையமாகிய மனிதன் தேவனை ஜீவனாக உடைமையாக்கி, அவரை வாழும்படி சிருஷ்டிக்கப்பட்டான். மனிதனின் அன்பான சிருஷ்டிகராகிய தேவன் மனிதனுக்கு எல்லாமுமாயிருக்க விரும்பினார், இவ்வாறு மனிதன் எல்லாவற்றிலும் தம்மை முழுமையாகச் சார்ந்துகொள்ளுவான் என்று ஏங்குகின்றார். அவர் மனிதனின் வழங்கீடாகவும், பாதுகாப்பாகவும், அவனது இன்பமாகவும்கூட இருக்கும்படி மனிதனின் ஒவ்வொரு தேவையையும் முழுமையாகப் பூர்த்திசெய்ய விரும்பினார். எனினும் மனிதன் இத்தகைய ஒரு சார்ந்துகொள்ளும் வாழ்க்கையை வாழத் தேர்ந்தெடுக்கவும், தன் ஒவ்வொரு தேவைக்கும் தன் சிருஷ்டிகரின் இருதயத்தில் நம்பிக்கை வைக்கும்படி தேர்ந்தெடுக்கவும் வேண்டும் என்று தேவன் விரும்பினார். ஆகவே, தேவன் மனிதனை ஏதேன் தோட்டத்தின் நடுவில் வைத்தார், அங்கே இரண்டு வித்தியாசமான கோட்பாடுகளைக் கொண்ட இரண்டு விருட்சங்களுக்கிடையே தேர்ந்தெடுப்பதற்கான விருப்பத்தேர்வு மனிதனுக்கு இருந்தது: தேவனைச் சார்ந்துகொள்ளும் கோட்பாட்டைக் கொண்ட ஜீவ விருட்சமும், தேவனிடமிருந்து சுயாதீனமாக இருக்கும் சார்ந்துகொள்ளாமையின் கோட்பாட்டைக் கொண்ட நன்மை தீமை அறியத்தக்க அறிவு விருட்சமும். துரதிர்ஷ்டவசமாக, மனிதன் விழுந்துபோய், தேவனிடமிருந்து சுயாதீனமாக ஆனான். ஆதாம் தேவனுக்குக் கீழ்ப்படியாமல், நன்மை தீமை அறியத்தக்க அறிவு விருட்சத்தில் பங்குபெற காலம் முதல், மனித வரலாற்றில் கிட்டத்தட்ட எல்லாரும் பின்பற்றப்பட வேண்டிய வழிப்பாதை ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தேவன் இயேசு என்ற பெயருள்ள ஒரு மனிதனாக ஆனார். ஓர் உண்மையான மனிதனாக, அவர் தமக்கு தேவன் தம் ஊற்றாகவும் நிரப்பீடாகவும் தேவை என்பதை உணர்ந்தறிந்தார், எனவே அவர் ஒரு ஜெப வாழ்க்கையை வாழ்ந்தார். ஜெபம் என்பது மனிதன் தேவனைச் சார்ந்துகொள்ளும் ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கான தேவன் நியமித்த வழி ஆகும். ஜெபம் என்றால் “என்னால் அதைச் செய்ய முடியாது; எனக்கு தேவன் தேவை” என்பது அர்த்தம். அதி உயர்ந்த மனுஷீகத்தைக் கொண்ட பரிபூரணமான மனிதராகிய இயேசு தமக்கு தேவன் தேவை என்பதை உணர்ந்தறிந்ததைப் போலவே, நாமும்கூட தேவன் நமக்குத் தேவை என்பதை உணர்ந்தறிந்தாக வேண்டும். உண்மையில், தேவனிடமிருந்து சுயாதீனமாக நம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து போராடுவது என்பது பங்குபெற வேண்டாம் என்று மனிதனுக்கு தேவன் கட்டளையிட்ட விருட்சமாகிய நன்மை தீமை அறியத்தக்க அறிவு விருட்சத்தின் கோட்பாட்டின்படி கலகத்தனமாக வாழ்வதாகும் (ஆதி. 2:16–17). தேவனிடமிருந்து சுயாதீனத்திற்கு வகுக்கும் வழிப்பாதையில் உள்ள தலைவன் சாத்தானே. அவனது சேருமிடம் அக்கினிக்கடல்தான் (வெளி. 20:10). ஒரே வழியை எடுத்துக்கொள்வதை வலியுறுத்துபவர்கள் அனைவரும் ஒரே சேருமிடத்திற்கு வந்துசேருவார்கள் (வெளி. 20:15). இன்று இரண்டு வழிகள் உங்களுக்கு முன்னே முன்வைக்கப்படுகின்றன: ஜீவவழி, மரணவழி (எரே. 21:8). இன்று உங்கள் வழிப்பாதையை மாற்றவும்! ஜீவனைத் தேர்ந்தெடுத்து, வாழுங்கள் (உபா. 30:19)! உங்கள் சுயாதீனத்தைக் குறித்து மனந்திரும்பி, கர்த்தரைச் சார்ந்திருக்கும் இனிமையான சார்ந்துகொள்ளுதலின் ஒரு வாழ்க்கையை வாழத் தேர்ந்தெடுங்கள். அவ்வாறு செய்வதற்கு நீங்கள் ஜெபித்து, அவர் உங்களை இந்தப் பேரழிவின் பாதையிலிருந்து காப்பாற்றி பரிபூரண ஆனந்தமும், நித்திய பேரின்பமும் நிறைந்த ஜீவ பாதையில் உங்களை நடத்துவதற்கான உங்கள் தேவையை அவரிடமிருந்து ஒப்புக்கொண்டாக வேண்டும் (சங். 16:11).

மிக முக்கியக் காரியங்கள்: வேதாகமத்தில் உள்ள முக்கியமான நிகழ்வுகளை அறிதல் (I.B.)      ; நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைப் பற்றிய ஒரு புரிந்துகொள்ளுதல் (II.C.); கர்த்தருடன் ஐக்கியம் கொள்ள ஜெபித்தல் மற்றும் நம் சொந்தத் தேவைகளுக்காவும், பிறரின் தேவைகளுக்காகவும் விண்ணப்பித்தல் (III.E.6.).

பின்னணி வாசிப்பு : The God-man Living, Message 14.

REFERENCES: The God-man Living, Message 14; Life Lessons, Lesson 4.