வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்

பகுதி 8

பாடம் 01 – 09

பாடம் 10 – 18

கிறிஸ்துவின் ஊழியம்

Jump to section

மனிதத் தேவைக்காகக் கரிசனைப்படுதல்—பேய்களைத் துரத்துதல்

குறிக்கோள்: எவ்வாறு கர்த்தராகிய இயேசு தம் ஊழியத்தில் பேய்களைத் துரத்தி, இதன் மூலம் சாத்தானின் கலகத்திலிருந்தும் அபகரிப்பிலிருந்தும் மக்களை விடுவித்தார் என்பதைக் காட்டுவதற்கு.

பொருட்சுருக்கம்: கர்த்தர் பாவிகளுக்கான தம் சேவையை நிறைவேற்ற பூமிக்கு வந்தபோது, பேய் பிடித்திருக்கும் பல சங்கதிகளை அவர் சந்தித்தார். ஒரு நபர் ஒரு பேயினால் பிடிக்கப்பட்டிருப்பது என்றால் அவன் சாத்தானால் அபகரிக்கப்பட்டிருக்கிறான் என்பது பொருள். ஆகவே கர்த்தர் தம் ஊழியத்தில் மனிதனின் பாவங்களை மன்னித்து, மனிதனின் நோயைக் குணப்படுத்தியது மட்டுமல்லாமல், அவர் சாத்தானின் அபகரிப்பு மற்றும் கலகத்திலிருந்து மனிதனை விடுவிப்பதற்காகப் பேய்களை விரட்டவும் செய்தார். இன்று மனிதன் சாத்தானால் அபகரிக்கப்பட்டிருக்கிறான் அதோடு கர்த்தருடைய ஊழியத்தின் இந்த அம்சம் அவனுக்குத் தீவிரமாகத் தேவைப்படுகிறது. கர்த்தர் பூமியில் தம் ஊழியத்தில் மக்களிடமிருந்து பேய்களைத் துரத்துவதன் மூலம் பிசாசின் கிரியைகளை அழிக்க வந்தார். இதன் மூலம், அவர் மக்களை சாத்தானின் ராஜ்யத்திலிருந்து விடுவித்து, அவர்களை தேவனுடைய ராஜ்யத்திற்குள் விடுவித்தார். அவர் இதைத் தம் சொந்த முயற்சியினாலும் பலத்தினாலும் அல்ல, மாறாக தேவனுடைய ஆவியினாலும், ஜெபத்தினாலும், தம் தெய்வீக அதிகாரத்தைப் பயிற்சிசெய்வதினாலும் இதைச் செய்தார். எல்லா கலகத்திலிருந்தும், கீழ்ப்படியாமையிலிருந்தும், அபகரிப்பிலிருந்தும் நம்மை விடுவிக்கும்படி கர்த்தரிடம் நாம் அனைவரும் நம்மையே திறந்து, நம் முழு ஆள்தத்துவத்தையும் ஆக்கிரமிப்பதற்கான முழு தளத்தையும் கர்த்தருக்குக் கொடுப்போமாக.

பின்புலம்: கர்த்தர் பேய்களைத் துரத்துவது குறித்த ஒரு செய்தியை நாம் ஒருபோதும் கேள்விப்பட்டிருக்க மாட்டோம், ஆனால் கர்த்தர் மக்களிடமிருந்து பேய்களைத் துரத்தய போது அவர் என்ன செய்துகொண்டிருந்தார் என்பதின் உட்கருத்தை நாம் பார்த்தால், நாம் அவரது ஊழியத்தின் இந்தப் பகுதியை நாம் உயர்வாகக் கருதுவோம். வெளிப்படையாக, ஒரு நாகரீகமான நாட்டில் வாழும் இளம் வாலிபர்களுக்கும், பேய் பிடித்திருத்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனினும், பேய் பிடித்திருத்தல் என்பது தேவன் தமக்காக சிருஷ்டித்த மனிதனை சாத்தான் அபகரிப்பதை அடையாளப்படுத்துகிறது என்பதை நாம் காணும்போது, இந்த விஷயத்தில் கர்த்தருடைய ஊழியத்திற்கு நம்முடன் அதிகத் தொடர்பு உள்ளது என்பதை நாம் காண்கிறோம். எல்லா இடங்களிலும், கோடிக்கணக்கான இளம் வாலிபர்கள் எதிரியின் ஒரு பிடித்திருக்கும் (உடைமையாக்கும்) மூலக்கூறால் அபகரிக்கப்படுகின்றனர் அதோடு தேவனுடைய ராஜ்யத்திற்குள் விடுவிக்கப்படுதல் தேவை.

திகாரம்: மத்தேயு 8.

கற்பிப்பதற்கான உண்மைகள் கொண்ட செய்திக்குறிப்பு:

கர்த்தர் பூமியில் இருந்தபோது, அவர் பாவிகளை சாத்தான் ராஜ்யத்திலிருந்து விடுவித்து, அவர்களை தேவனுடைய ராஜ்யத்திற்குள் கொண்டுவருவதற்காக அவர்களிடம் வந்தார். சாத்தானின் ராஜ்யத்தில் விழுந்துபோன தூதர்களும், பேய்களும், சாத்தானால் சபலப்படுத்தப்பட்டு மற்றும் அபகரிக்கப்பட்ட தேவனால்-சிருஷ்டிக்கப்பட்ட மனிதனும் அடங்குவர். கர்த்தர் பூமிக்கு வந்தபோது, அவர் பிசாசின் கிரியைகளை அழிக்க வந்தார் (1 யோ. 3:8). சாத்தானால்-அபகரிக்கப்பட்ட மக்களிடமிருந்து பேய்களைத் துரத்துவதன் மூலம் அவர் இதைச் செய்தார்.

I. கர்த்தர் தம் ஊழியத்தில் மக்களிடமிருந்து பேய்களைத் துரத்தினார்—மத். 8:16; மாற். 1:23–28

மத்தேயு 8:16, “மாலைவேளையானபோது, பேய் பிடித்திருந்த பலரை அவர்கள் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர் ஒரு வார்த்தையினாலே ஆவிகளைத் துரத்தி…னார்” என்று கூறுகிறது (கிரே.). சுவிசேஷங்களின் பதிவில், கர்த்தர் மக்களிடமிருந்து பேய்களைத் துரத்திய பல சங்கதிகளை நாம் காண்கிறோம் (மத். 8:28-34; மத். 15:21–28; மாற். 1:23-27; மாற். 9:14-29). விழுந்துபோன தூதர்களிடமிருந்து வேறுபடும் பேய்கள் அசுத்த ஆவிகளாக உள்ளன (மாற். 1:23) மேலும்  ஆதாமுக்கு முந்தைய யுகத்தில் வாழ்ந்தவையும், சாத்தானின் கலகத்தில் அவனுடன் இணைந்தவையுமான உயிரினங்களின் ஆவிகளைக் குறிக்கின்றன. தேவன் இந்த உயிரினங்களைத் தண்ணீரினால் நியாயந்தீர்த்தார், அந்த நேரத்தில் அவை தாங்கள் நியாயந்தீர்க்கப்பட்ட தண்ணீரில் குடியிருக்கும் உடலிழந்த ஆவிகளாக ஆகிவிட்டன. இன்றுவரை, அவை இன்னும் சாத்தானின் ராஜ்யத்திற்காக மனிதனைப் பிடிக்கும் (உடைமையாக்கும்) தீய வேலையாட்களாக நகர்கின்றன. (ஆதியாகமத்தின் ஜீவ-ஆய்வு , செய்தி 2 ஐக் காண்க.) விழுந்துபோன தூதர்கள் சாத்தானுடன் ஆகாயத்தில் வேலை செய்கிறார்கள், பேய்கள் சாத்தானுடன் பூமியில் நகர்கின்றன; இருவருமே சாத்தானின் ராஜ்யத்திற்காக மனிதன் மீது தீய விதத்தில் செயல்புரிகின்றன. மக்கள் பேய்களால் பிடிக்கப்படுதல் என்பது தேவன் தம் குறிக்கோளுக்காகச் சிருஷ்டித்த மனிதனைச் சாத்தான் அபகரித்திருப்பதைக் குறிப்பாக அடையாளப்படுத்துகிறது. புதிய ஏற்பாட்டில் உள்ள ஒவ்வொரு சங்கதியாக ஒன்றன் பின் ஒன்றாக, எவ்வாறு கர்த்தர், சாத்தானின் ராஜ்யத்தில் அடிமைத்தனக்கட்டில் பிடித்துவைக்கப்பட்டிருந்த மக்களிடமிருந்து பேய்களை வெளியே துரத்தினார் என்பதைக் காட்டுகிறது. கர்த்தருடைய ஊழியத்தின் இந்த அம்சம் மக்களை சாத்தானின் ராஜ்யத்திலிருந்து, தேவனுடைய ராஜ்யத்திற்குள் விடுவித்தது.

A. சாத்தானின் ராஜ்யத்திலிருந்து மக்களை தேவனுடைய ராஜ்யத்திற்குள் விடுவிப்பதற்காக அவர் பேய்களைத் துரத்தினார்—மத். 12:26; அப். 26:18; கொலோ. 1:13

சாத்தானுக்கு ஒரு ராஜ்யம் இருப்பதை வேதாகமம் தெளிவாகக் காட்டுகிறது (மத். 12:26, அடிக்குறிப்பு 1; மாற். 3:24, அடிக்குறிப்பு 1). அவனது ராஜ்யத்தில் மனிதன் மீது தீய விதத்தில் செயலாற்றும், ஆகாயத்தில் உள்ள விழுந்துபோன தூதர்கள் இருப்பது மட்டுமல்லாமல் (எபே. 2:2; 6:11-12), சாத்தானின் ராஜ்யத்திற்காக மனிதனை உடைமையாக்கப் பூமியில் நகரும் பேய்கள் உள்ளன. சாத்தானின் அடிமைத்தனக்கட்டிலிருந்தும் (லூக். 13:16), சாத்தானின் இருளின் அதிகாரத்திலிருந்தும் (கொலோ. 1:13), தேவனுடைய ராஜ்யத்திற்குள்ளும் அவர்களை விடுவிப்பதற்காக கர்த்தர் பேய்-பிடித்திருக்கும் மக்களிடமிருந்து பேய்களைத் துரத்தினார். கோட்பாட்டில், பேய் பிடித்திருத்தல் என்பது தேவன் தமக்காகச் சிருஷ்டித்த மனிதனைச் சாத்தான் அபகரித்திருப்பதை அடையாளப்படுத்துகிறது.

B. அவர் தேவனுடைய ஆவியினால் பேய்களை விரட்டினார்—மத். 12:28

மத்தேயு 12:28, “நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய இராஜ்ஜியம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே” என்று கூறுகிறது. கர்த்தர் தம் சொந்த வல்லமையினாலோ, பலத்தினாலோ, சக்தியினாலோ அல்ல, மாறாக எந்தப் பரிசுத்த ஆவியானவரால் அவர் அபிஷேகம் பண்ணப்பட்டு, எவர் மூலம் அவர் தம் ஊழியத்தில் நகர்ந்தாரோ அந்தப் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் பேய்களைத் துரத்தினார். “தேவனுடைய ஆவியே தேவனுடைய ராஜ்யத்தின் வல்லமை. தேவனுடைய ஆவி வல்லமையில் எங்கிருக்கிறாரோ, அங்கு தேவனுடைய ராஜ்யம் இருக்கிறது, மேலும் அங்குப் பேய்களுக்கு எந்தத் தளமும் இல்லை” (மத். 12:28, அடிக்குறிப்பு 1).

C. அவர் ஜெபிப்பதன் மூலம் பேய்களைத் துரத்தினார்—மத். 17:21; மாற். 9:29

மாற்கு 9 இல், சீஷர்கள் ஒரு குறிப்பிட்ட தகப்பனின் மகனிடமிருந்து ஒரு பேயைத் துரத்த இயலவில்லை. கர்த்தர் இந்த அசுத்த ஆவியைக் கடிந்துகொண்டு, புறப்பட்டு வெளியே வரும்படி அதற்குக் கட்டளையிட்டப் பிறகு, சீஷர்கள் ஏன் தங்களால் இந்தப் பேயைத் துரத்த இயலவில்லை என்று கர்த்தரிடம் கேட்டார்கள். அதற்குக் கர்த்தர், “இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலு…மேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது” என்று கூறுவதன் மூலம் பதிலளித்தார் (மாற். 9:29). அவர் ஒரு பேயைத் துரத்துவதற்கு முன், கர்த்தர் ஜெபித்தார். எதிரியின் பிடிக்கும் (உடைமையாக்கும்) மூலக்கூறிலிருந்து மற்றவர்களை விடுவிக்கும்படி இரகசியமாக ஜெபிக்கக் கர்த்தரிடமிருந்து நாம் கற்றாக வேண்டும்.

D. அவர் தம் தெய்வீக அதிகாரத்தைப் பயிற்சிசெய்வதன் மூலம் பேய்களைத் துரத்தினார்—மாற். 1:27

மாற்கு 1:23–26 இல், ஜெபஆலயத்திற்குள் வந்த ஒருவனிடமிருந்து கர்த்தர் ஒரு பேயைத் துரத்தினார். இதைக் கவனித்தவர்கள் ஆச்சரியப்பட்டு, “இவர் அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே” என்று கூறினர் (மாற். 1:27). கர்த்தரிடம் தம் சேவைக்காகப் பேய்களைத் துரத்துவதற்கான தெய்வீக அதிகாரம் இருந்தது. மேற்கண்ட நான்கு குறிப்புகளிலிருந்து நாம் காண்பது என்னவெனில், கர்த்தர் மக்களை சாத்தானின் ராஜ்யத்திலிருந்து தேவனுடைய ராஜ்யத்திற்குள் விடுவிப்பதற்காகப் பேய்களைத் துரத்தினார் என்பதே. அவர் தேவனுடைய ஆவியினாலும், ஜெபத்தினாலும், தம் தெய்வீக அதிகாரத்தைப் பயிற்சிசெய்வதினாலும் இதைச் செய்தார்.

II. கர்த்தர் இன்று மனிதனை சாத்தானின் அபகரிப்பு மற்றும் கலகத்திலிருந்து விடுவிக்கிறார்.

பேய்ப் பிடித்திருத்தலின் கோட்பாடு, தேவனுக்கு விரோதமான கலகமே. பேய்கள் தேவனுக்கு விரோதமாகக் கலகத்தில் உள்ளன, மேலும் மனிதனை தேவனிடமிருந்தும், அவரது குறிக்கோளிடமிருந்தும் அபகரிக்கும்படி சாத்தானின் ராஜ்யத்திற்காக வேலை செய்கின்றன. பேய் பிடித்திருத்தலினின்று மனிதனைக் காப்பாற்றுவதற்கான கர்த்தருடைய ஊழியம் சாத்தானின் அபகரிப்பிலிருந்தும் கலகத்திலிருந்தும் மனிதனை விடுவித்தது.

A. ஒவ்வொரு சமுதாயத்திலும், நாகரிகமான மற்றும் நாகரிகமற்ற சமுதாயத்திலும் சாத்தான் மனிதனை அபகரிப்பதற்கும் ஆக்கிரமிப்பதற்கும் குறிப்பிட்ட வழிவகையைப் பயன்படுத்துகிறான்

வெளிப்படையாக, பேய் பிடித்திருத்தல் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மிகவும் பண்பட்ட தேசத்தில் நடப்பதில்லை. ஆயினும்கூட, சாத்தான் தந்திரமிக்கவன், மேலும் அவன் நாகரிகமற்ற நாடுகளில் செய்வதைப் போலவே மிகவும் நாகரிகமான நாடுகளில் மக்களைப் பிடிப்பதற்கு இன்னும் ஒரு வழியைக் கொண்டிருக்கிறான். மக்கள், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கூட, சாத்தானின் ராஜ்யத்தில் சிறைபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள் (மாற். 3:27) அதோடு எதிரியின் ஒரு பிடித்துவைக்கும் (உடைமையாக்கும்) மூலக்கூறால் ஆக்கிரமிக்கப்படுகிறார்கள். பொழுதுபோக்குகளில் இருப்பவர்களுக்கு, மக்களை ஆக்கிரமிக்க சாத்தானிடம் ஒரு வழி இருக்கிறது. கல்வியாளர்களில் இருப்பவர்களுக்கு, மக்களை ஆக்கிரமிக்க சாத்தானுக்கு மற்றொரு, அறிவார்ந்த வழி உள்ளது. வெளியே புறப்பட்டுப் போகும்படி பேய்களுக்குக் கட்டளையிடுவதற்கான தம் அதிகாரத்தைப் பயிற்சிசெய்வதன் மூலம் கர்த்தர் தம் ஊழியத்தில் பேய்களைத் துரத்தினார் (மாற். 1:27). இன்று, அதிகாரத்துடன் வார்த்தையைப் பிரசங்கிக்கும் அவரது உண்மையுள்ள ஊழியர்கள் மூலமாக, கர்த்தர் மக்களை எதிரியின் அபகரிக்கும் மூலக்கூறிலிருந்து இன்னும் விடுவிக்கிறார், இதனால் அவர்கள் தேவனுடைய ராஜ்யத்திற்குள் விடுவிக்கப்பட முடியும். (எதிரியின் எந்தவொரு ஆக்கிரமிக்கும் மூலக்கூறிலிருந்தும் நம் இளம் வாலிபர்களை விடுவிப்பதற்காக ஜெபித்து தெய்வீக அதிகாரத்தைப் பயிற்சிசெய்வதற்கான தேவையைப் பார்ப்பதற்கு, சேவிப்பவர்களாக, மாற்கு ஜீவ-ஆய்வு, செய்தி 6, pp. 53–54 ஐ வாசிப்பது நலமானதாக இருக்கும். அதிகாரத்துடன்கூடிய போதித்தல் மூலம் மட்டுமே இத்தகைய ஓர் ஆக்கிரமிக்கும் மூலக்கூறிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட முடியும். அமானுஷ்ய விளையாட்டுகள், தீய (ஆபாசப்) படங்கள், விக்கிரக ஆராதனை ஆகியன போன்று, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இளம் வாலிபர்களிடையே நடைபெறும் குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் அவர்களுக்கு முட்டுக்கட்டையிடுவதற்கான தளத்தைப் பேய்களுக்குக் கொடுக்க முடியும் என்பது குறித்து விழிப்புடன் இருப்பதும் நல்லதுதான்.)

B. நமக்குள் எல்லா கலகத்தையும், கீழ்ப்படியாமையையும், அபகரிப்பையும் கீழ்ப்படுத்தும்படி கர்த்தராகிய இயேசுவை நாம் அனுமதிக்க வேண்டும், மேலும் நம் ஆள்தத்துவத்தில் எல்லா தளத்தையும் நாம் அவருக்குக் கொடுக்க வேண்டும்

நம் ஆள்தத்துவத்திற்குள் இருக்கும் அபகரிக்கும் மூலக்கூறு ஒவ்வொன்றிலிருந்தும் கர்த்தர் நம்மை விடுவிக்க முடியும். கர்த்தருடைய பேசுதலுக்கும், கர்த்தருடைய நகர்வுக்குமான ஓர் எதிர்ப்பை நாம் நமக்குள்ளேயே கூட சில சமயங்களில் உணர்கிறோம். இன்றும் கர்த்தர் தம் ஊழியத்தில், எல்லா கலகத்திலிருந்தும், கீழ்ப்படியாமையிலிருந்தும், அபகரிப்பிலிருந்தும் நம்மை விடுவிக்க விரும்புகிறார். நமக்குள் இருக்கும் எல்லா கலகத்தையும் கீழ்ப்படுத்தி, நம் ஆள்தத்துவத்தை ஆக்கிரமிப்பதற்கான எல்லா தளத்தையும் பெறும்படி கர்த்தரை நாம் அனுமதிப்போம் எனில், நமக்குள் இருக்கும் அபகரிக்கும் மூலக்கூறு ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு முழுமையான விடுவிப்பை நாம் அனுபவித்துமகிழ்வோம். மகதலேனா மரியாள் கர்த்தருடைய ஊழியத்தின் இந்த அம்சத்தின் ஓர் ஆசீர்வதிக்கப்பட்ட பெறுநரான நபராக இருந்தாள் என்பதை மாற்கு 16:9-10 மற்றும் யோவான் 20:11-18 காட்டுகின்றன. கர்த்தர் அவளிடமிருந்து ஏழு பேய்களைத் துரத்திய பிறகு, அவள் கர்த்தருடைய அன்பான பின்பற்றுபவளாக ஆனாள் அதோடு அவரது உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவரைப் பற்றிய ஒரு வெளிப்பாட்டைப் பெற்ற முதல் நபராக இருந்தாள் (யோவான் 20:15–16). நாம் அனைவரும், அவளைப் போலவே, அபகரிக்கும் மூலக்கூறு ஒவ்வொன்றிலிருந்து, சாட்சாத்துக் கர்த்தரால் முழுமையாகவும் பூர்த்தியாகவும் ஆக்கிரமிக்கப்படும் ஒரு வாழ்க்கைக்குள் விடுவிக்கப்படுவோமாக.

டைநிலைபிரயோகம்: கர்த்தர் பேய்களைத் துரத்துவது பற்றிய ஒரு குறிப்பிட்ட கதை பூமியில் அவரது ஊழியத்தில் மேலோங்கி நிற்கிறது. மத்தேயு 8:23–34 இல் கர்த்தர் ஒரு படகில் கடலைக் கடந்துகொண்டிருந்த போது, ஒரு பெருங்காற்று எழுந்தது. இந்தக் காற்று ஆகாயத்தில் உள்ள விழுந்துபோன தூதர்கள் காரணமாக இருந்தது, மேலும் படகில் அடித்த அலைகள் தண்ணீரில் உள்ள பேய்கள் காரணமாக இருந்தன. கர்த்தர் காற்றையும் கடலையும் அதட்டினார் என்பதால் இது நமக்குத் தெரியும். அதட்டுதல்கள் உயிரற்ற விஷயங்களுக்கு வழங்கப்படுவதில்லை, மாறாக ஆளுமை கொண்ட விஷயங்களுக்குதான் வழங்கப்படுகின்றன. பிற்பாடு மிகுந்த அமைதலுண்டாயிற்று, அப்போது சீஷர்கள், “இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே” என்றார்கள் (மத். 8:27). உண்மையில் வீழுந்துபோன தூதர்களும் பேய்களும்தான் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்தன. கர்த்தர் மறுபக்கத்தில் பேய்களைத் துரத்தப் போகின்றார் என்பதை அவை அறிந்திருந்ததன் காரணமாகவே அவற்றின் எதிர்ப்பு இருந்தது. கர்த்தர் கடலைக் கடந்ததும், அவர் இரண்டு மனிதர்களிடமிருந்து பேய்களைத் துரத்தினார், மேலும் இந்தப் பேய்கள் அருகிலுள்ள பன்றிகளுக்குள் (அசுத்தமான விலங்குகள்) சென்றன, இதன் விளைவாக அவை கடலுக்குள் பாய்ந்து, மூழ்கிப்போயின. இங்கே வார்த்தையின் இந்தப் பகுதியில், மனுக்குலம் மத்தியில் நிலவும் சூழ்நிலை பற்றிய ஒரு சித்திரத்தை நாம் காண்கிறோம். மனிதர்கள் மத்தியில் கலகத்தின் புயல் கடல் உள்ளது, பேய் பிடித்திருத்தல் உள்ளது, ஒரு பிழைப்பு நடத்தும் குறிக்கோளுக்காக ஒருவித அசுத்தமான தொழிலில் மனிதனின் ஈடுபாடும் உள்ளது. கர்த்தர் தம் தெய்வீக அதிகாரத்துடன் நம் ஒவ்வொரு சூழ்நிலைக்குள்ளும் வர நாம் அனுமதிப்போம் எனில், கர்த்தர் நம் புயல் கடலை அமைதிப்படுத்தி, நம்மை எல்லா அபகரிப்பிலிருந்தும் கலகத்திலிருந்தும் விடுவித்து, அசுத்தமான நடவடிக்கைகளில் ஈடுபடும் எந்த ஈடுபாட்டிலிருந்தும் நம்மைக் காப்பாற்றுவார். (See Life-study of Matthew, Message 26, pp321–324; Life-study of Mark, Message 17, pp151–155,158–159.)

சுவிசேஷப் பிரயோகம்: இன்று நாகரிகமான நாடுகளில் பேய் பிடித்திருத்தலின் சங்கதிகள் அரிதாகவே தோன்றினாலும், பிசாசு பிடித்திருத்தலால் மோசமாகத் துன்பப்படும் இத்தனை அதிகமான அன்பான இளம் வாலிபர்களிடம் சுவிசேஷத்தின் ஒரு விடுதலையாக்கும் வார்த்தையைப் பேச என்னே ஒரு மாபெரும் தேவை உள்ளது என்பதை நாம் உணர்ந்தறியுமாறு, எதிரியின் தந்திரமான வேலையைப் பார்க்கும்படி நமக்கு நம் கண்கள் திறக்கப்பட வேண்டும். இத்தகையவர்கள் தங்கள் வாழ்க்கையைக் கடலோரம் (பாவங்களின் ஆழம் மற்றும் பேய்களின் சாட்சாத்துக் கூடு), தியேட்டர்களிலும், நடன அரங்கங்களிலும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் நிஜமான சுதந்திரம் இல்லாமல், கல்லறைகளில் (இறந்தவர்களின் குடியிருப்பு, இருளும் மரணமும் நிறைந்தவை) குடியிருக்கின்றனர், அங்கே தங்களைத் தாங்களே கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, வெளிப்புற சக்திகளால் (திரைப்படங்கள், நடனமாடுதல், புகைத்தல், அவர்களது கோபமான மனநிலை, நாகரீகமான ஆடை ஆகியன போன்றவை) கட்டுப்படுத்தப்படுகின்றனர். “பேய் பிடித்திருக்கும் ஒருவரின் வாழ்க்கை வேறு எந்த ஆளுகைக்கும் உட்பட்டது அல்ல, அது பைத்தியக்காரத்தனமானது. அரசாங்க சட்டங்கள், பள்ளி விதிமுறைகள் மற்றும் வீட்டு ஒழுக்கம் இத்தகைய ஒருவனைக் காக்க முடியாது. ஓர் இரும்பு சங்கிலி கூட அவனைக் கீழ்ப்படுத்த முடியாது.…இத்தகையவன் தன்னைத்தானே காயப்படுத்துகிறான் [அதோடு சுய கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறான்].…அவர்கள் ஒரு மூர்க்கத்தனமான வழியில் கூச்சலிட்டுக் கதறுகிறார்கள், மேலும் அவர்களால் அமைதியாக இருக்க முடியாது. அவர்கள் தங்களையே சித்திரவதைச் செய்து, தங்கள் சொந்த சரீரங்களைக் காயப்படுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த நற்பெயரையும், தங்கள் அந்தஸ்தையும், தங்கள் குடும்பப் பெயரையும் சேதப்படுத்துகிறார்கள்” (Gospel Outlines, Subject 72, p146). இந்த வெளிச்சத்தில், யுகத்தின் மனப்பாங்கிலும் நடவடிக்கையிலும் உள்ள எதிரியின் தந்திரமிக்க வேலை முற்றும்முடிய அம்பலப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் அத்தனை அதிகமான இளம் வாலிபர்கள் சுவிசேஷத்தின் இந்தப் பேய்-விரட்டும் வார்த்தையைக் கேள்விப்பட வேண்டிய அவசியம் எவ்வளவு மாபெரியது என்பதை நாம் காண முடிகிறது. (See Gospel Outlines, Subject 72, pp145–148.)

மிக முக்கியக் காரியங்கள்: வேதாகமத்தில் உள்ள முக்கியமான நிகழ்வுகளை அறிதல் (I.B.)      ; மனிதன் விழுந்துபோய் பாவமுள்ளவனாகவும், கெடுக்கப்பட்டவனாகவும், சாத்தானுக்கும் அவனது உலக அமைப்புக்கும் கீழ்ப்பட்டவனாகவும் ஆனான் என்பதைப் புரிந்துக்கொள்ளுதல் (II.B.2.); நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.)

பின்னணிவாசிப்பு:Life-study of Mark,Message6,pp53–54;Message12,pp111–114; Message17,pp151–155,158–159;Life-studyofMatthew,Message26,pp321–324;Message33,pp407–413.

REFERENCES: Life-study of Genesis, Message 2, pp18–20; Life-study of Mark, Message 6, pp53–54; Message 12, pp111–114; Message 17, pp151–155, 158–159; Life-study of Matthew, Message 26, pp321–324; Message 33, pp407–413; Mark 3:24, footnote 1; 3:27, footnote 1; 3:29, footnote 1.

 

Jump to section