வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்

பகுதி 8

பாடம் 01 – 09

பாடம் 10 – 18

கிறிஸ்துவின் ஊழியம்

Jump to section

மனிதத் தேவைக்காகக் கரிசனைப்படுதல்—குருடரின் கண்களைத் திறத்தல்

குறிக்கோள்: பௌதிகரீதியாகவும், ஆவிக்குரிய ரீதியாகவும் குருடாக இருந்தவர்களின் கண்களை எவ்வாறு கர்த்தராகிய இயேசு தம் ஊழியத்தில் திறந்தார் என்பதைக் காட்டுவதற்கு.

பொருட்சுருக்கம்: கர்த்தராகிய இயேசு தம் ஊழியத்தில் குருடரின் பார்வையை மீட்டுத்திருப்பும்படி அவர்களது கண்களைத் திறந்தார். அவர் பௌதிக ரீதியில் குருடானவர்களின் கண்களைத் திறந்தது மட்டுமல்லாமல்; அவர் ஆவிக்குரிய ரீதியில் குருடானவர்களின் கண்களையும் திறந்தார். மனிதன் ஆவிக்குரிய விஷயங்களைப் பார்க்க முடியுமாறு, அவனை இருளிலிருந்து விடுவித்து, அவனது பார்வையை மீட்டெடுக்கும் உலகத்தின் ஒளி அவரே. இந்தப் பாடத்தில், கர்த்தர் குருடரின் கண்களைத் திறக்க தம் வாயிலிருந்து உமிழ்நீரைப் பயன்படுத்தும் இரண்டு சங்கதிகளை நாம் ஆய்வுசெய்வோம். இந்த உமிழ்நீர் என்பது கர்த்தருடைய வாயிலிருந்து புறப்பட்டுவரும் அதோடு ஜீவனின் தெய்வீக ஒளியை வெளிக்கொணரும் வார்த்தையை அடையாளப்படுத்துகிறது. நாம் இந்த வார்த்தையை நமக்குள் பெற்று, அதனுடன் கலந்திணைக்கப்படும் போது, நாம் ஓர் அபிஷேகத்தைப் பெறுகிறோம், இதன் மூலம் நம் கண்களுக்கு, அதாவது சாத்தானால் குருடாக்கப்பட்ட நம் கண்களுக்குப் பார்வை மீட்டெடுக்கப்படுகின்றன. இந்த அம்சத்தில் கர்த்தருடைய ஊழியம் எவ்வளவு அற்புதமானது! அவர் நம் குருட்டுத்தன்மையைக் குணப்படுத்துகிறார், மேலும் உண்மையான ஆவிக்குரிய விஷயங்களைப் பார்க்கும்படி, அவரது ஜீவிக்கும் வார்த்தையின் மூலம் நம் கண்களைத் திறக்கிறார்.

பின்புலம்: இளம் வாலிபர்கள் தங்கள் பார்வையைப் பெற, அவர்களுக்குக் கர்த்தருடனான ஒரு தனிப்பட்ட நேரம் தேவை. மாற்கு 8 ல், கர்த்தர் ஒரு குருடனின் பார்வையை, அவனது கண்களில் உமிழ்ந்து, அவனது கண்களைத் தொடுவதன் மூலம் மீட்டுத்திருப்புகிறார். இவ்விதமாய் இந்தக் குருடனுக்கான கர்த்தருடைய கரிசனைக்கான காரணம், “அந்தக் குருடனின் பார்வையை மீட்டுத்திருப்பக் கூடிய மூலக்கூறை அவர் அவனுக்குள் உட்செலுத்தக் கூடுமாறு அவன் அவருடன் ஒரு தனிப்பட்ட, அந்நியோன்யமான நேரத்தைச் செலவிட அவர் விரும்பினார்” என்பதே (மாற்கு 8:23, அடிக்குறிப்பு 2). தங்களைச் சுற்றி யாரும் இல்லாத, யாரும் குறுக்கிடாத, கர்த்தருடைய மூலக்கூறைப் பெறும்படி அவருடன் தாங்கள் தன்னந்தனியாக இருக்க முடியக்கூடிய இதுபோன்ற கர்த்தருடனான ஒரு நேரம் இளம் வாலிபர்களுக்குத் தேவை. கர்த்தருடன் தன்னந்தனியாக இருப்பதற்கான அதி சிறந்த நேரங்களில் ஒன்று காலை வேளையில்தான். இத்தகைய ஒரு நேரத்தின் போது அவர் நம்மைக் குணப்படுத்தி, எல்லாவற்றையும் தெளிவாகப் பார்க்கும்படி நம் கண்களைத் திறக்கிறார்.

திகாரங்கள்: மாற்கு 8; யோவான் 9.

கற்பிப்பதற்கான உண்மைகள் கொண்ட செய்திக்குறிப்பு:

கொள்ளைநோய் போல் மனிதனை வாதிக்கும் அனைத்து பிரச்சினைகளிலும், குருட்டுத்தன்மைதான் அதி தீவிரமான மற்றும் அதி தந்திரமிக்க ஒரு பிரச்சினையாகும். கிறிஸ்துவின் மகிமையின் சுவிசேஷத்தின் பிரகாசத்தை அவிசுவாசிகள் பலரால் ஏன் பெற இயல்வதில்லை? அது ஏனெனில், இந்த யுகத்தின் தேவனானவன் அவர்களைக் குருடாக்கியிருக்கிறான் என்பதே (2 கொரி. 4:4). இந்தக் காரணத்திற்காகதான், கிறிஸ்து தம் ஊழியத்தில் மனிதனின் கண்களைத் திறப்பதன் மூலம் அவனது தேவைக்காகக் கரிசனைப்பட்டார், இதனால் அவன் ஆவிக்குரிய விஷயங்களைப் பார்க்க முடியும். ஆவிக்குரிய விஷயங்களை நோக்கி நம் கண்களை குருடாக்க சாத்தான் முயல்கிறான், ஆனால் நாம் எல்லாவற்றையும் தெளிவாகக் காண முடியுமாறு,  கிறிஸ்து ஜீவ ஒளியாக நம் கண்களைத் திறக்க முடியும். கர்த்தருடைய ஊழியத்தின் இந்த அம்சத்தைப் பொக்கிஷமாகக் கருதும்படி இளம் வாலிபர்களுக்கு இந்தச் செய்தியில் உள்ள வசனங்கள் உதவி, அவர் அவர்களது பார்வையை மீட்டுத்திருப்ப முடியுமாறு கர்த்தருடன் அவரது வார்த்தையில் நேரம் செலவிடுவதற்கான ஓர் உத்வேகத்தைத் அவர்களில் போடுவதாக.

I. பௌதிக ரீதியாகவும், ஆவிக்குரிய ரீதியாகவும் குருடாக இருந்தவர்களின் கண்களைக் கர்த்தர் திறந்தார்— லூக். 4:18

லூக்கா 4:18-19 இல் கர்த்தர், “கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்…குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும்…என்னை அனுப்பினார்” என்று கூறினார். பௌதிக ரீதியாகவும், ஆவிக்குரிய ரீதியாகவும் குருடாக இருந்தவர்களின் கண்களைக் கர்த்தர் பூமியில் தம் ஊழியத்தில் திறந்தார்.

A. பௌதிகக் குருட்டுத்தன்மை என்பது ஆவிக்குரிய விஷயங்களைப் பார்ப்பதற்கான ஆவிக்குரிய பார்வையின் இழப்பை அடையாளப்படுத்துகிறது

சுவிசேஷங்களில் பௌதிகக் குருட்டுத்தன்மை தொடர்பான சங்கதிகள் மனிதனின் ஆவிக்குரிய குருட்டுத்தன்மையைக் அடையாளப்படுத்திய சித்திரங்களாக இருந்தன. மனிதன் தேவனுடைய விஷயங்களுக்கு ஆவிக்குரிய ரீதியில் குருடாக இருக்கிறான் அதோடு ஆவிக்குரிய விஷயங்களைப் பார்ப்பதற்கான தன் உள்ளான பார்வையை இழந்துவிட்டான். புதிய ஏற்பாட்டில் உள்ள பல்வேறு பகுதிகள் ஆவிக்குரிய குருட்டுத்தன்மையின் காரியத்தைக் காட்டுகின்றன: அவிசுவாசிகள் சுவிசேஷத்தை நோக்கி ஆவிக்குரிய ரீதியில் குருடாக உள்ளனர் (2 கொரி. 4:4); பரிசேயர்கள் ஆவிக்குரிய ரீதியில் குருடாக இருந்தனர் (யோவான் 9:39–41); மேலும் விசுவாசிகள் ஆவிக்குரிய ரீதியில் குருடாக ஆகிவிடலாம் (2 பேது. 1:9; 1 யோ. 2:11; வெளி. 3:17). மனிதனின் ஆவிக்குரிய குருட்டுத்தன்மை காரணமாக, கர்த்தர் தம் ஊழியத்தில் அவனது பார்வையை மீட்டுத்திருப்ப வந்தார், இதனால் அவன் ஆவிக்குரிய விஷயங்களைப் பார்க்க முடியும்.

B. ஆன்மீக குருட்டுத்தன்மை வாழ்க்கையின் ஒளியின் பற்றாக்குறையிலிருந்து வருகிறது—அப். 26:18;1 யோ. 2:11; யோவான் 8:12

குருட்டுத்தன்மை இருளிலிருந்து வருகிறது, மேலும் இருள் என்பது பாவம் மற்றும் மரணத்தின் ஓர் அடையாளமாக உள்ளது. “இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு…அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு” பவுலுக்குக் கர்த்தரால் நடபடிகள் 26:18 இல் ஆணையிடப்பட்டது. “தேவனுடைய சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்களாகிய புதிய ஏற்பாட்டு யூபிலியின் ஆவிக்குரிய மற்றும் தெய்வீக ஆசீர்வாதங்களில் முதல் காரியம், விழுந்துபோனவர்கள் ஆவிக்குரிய மண்டலத்திலுள்ள தெய்வீக காரியங்களைக் காணுமாறு அவர்களின் கண்களைத் திறந்து, அவர்களை இருளிலிருந்து ஒளியிடம் திருப்புவதாகும். இந்தக் காரியங்களைக் காண்பதற்கு ஆவிக்குரிய பார்வையும், தெய்வீக ஒளியும் தேவை” (Acts 26:18, footnote1).

C. ஆவிக்குரிய குருட்டுத்தன்மை உலகத்தின் ஒளியாகிய கிறிஸ்துவால் குணப்படுத்தப்படுகிறது—யோவான் 8:12; 9:5

யோவானின் சுவிசேஷத்தின் ஆரம்பத்தில் அது, “அவரில் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாக இருந்தது….உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி”(யோவான் 1:4, 9, கிரே.). பின்னர் யோவான் 8:12 இல் கர்த்தர், “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்” என்று கூறினார். உலகின் ஒளியாக இருக்க வந்த ஒளியாகிய கிறிஸ்துவின் பற்றாக்குறையிலிருந்தே குருட்டுத்தன்மை வருகிறது. அவரே ஒளி, மேலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் எந்த வகையிலும் இருளிலே நடவாமல், ஜீவ ஒளியை அடைந்திருப்பார்கள்.

II. கர்த்தர் இரண்டு குறிப்பிட்ட சங்கதிகளில் குருடர்களின் கண்களை, கர்த்தருடைய ஜீவனுள்ள வார்த்தையை அடையாளப்படுத்தும் உமிழ்நீரைத் தம் வாயிலிருந்து உமிழ்வதன் மூலம் குணப்படுத்தினார்—மாற். 8:22-26; யோவான் 9:6–7

பௌதிக ரீதியில் குருடானவர்களின் கண்களைக் கர்த்தர் திறக்கும் இரண்டு குறிப்பிட்ட சங்கதிகள் உள்ளன, இவற்றின் மூலம் நாம் எவ்வாறு கர்த்தர் ஆவிக்குரிய ரீதியில் குருடாக இருப்பவர்களின் கண்களைத் திறக்கிறார் என்பதைப் புரிந்துகொள்கிறோம் (மாற். 8:22-26; யோவான் 9:4-7). இந்த இரண்டு சங்கதிளிலும், கர்த்தர் அவர்களது கண்களைத் திறக்க தம் வாயிலிருந்து உமிழ்நீரை எடுத்துப் பயன்படுத்தினார்.

A. மாற்குவின் சுவிசேஷத்தில், கர்த்தர் இந்தக் குருடனை கிராமத்தைவிட்டு வெளியே நடத்திச் சென்று, அவனது கண்களில் உமிழ்ந்தார்—மாற். 8:22-26

மார்ற்குவில், கர்த்தர் பெத்சாயிதாவுக்கு வந்தபோது ஒரு குருடன் அவரிடம் கொண்டு வரப்பட்டான். அப்போது கர்த்தர் “குருடனுடைய கையைப்பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்து: எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார்” (மாற். 8:23). கர்த்தர் இந்தக் குருடனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோவது என்பது அவர், “அந்தக் குருடனின் பார்வையை மீட்டுத்திருப்பக் கூடிய மூலக்கூறை அவனுக்குள் உட்செலுத்தக் கூடுமாறு அவன் அவருடன் ஒரு தனிப்பட்ட, அந்நியோன்யமான நேரத்தைச் செலவிட அவர் விரும்பினார்” என்பதைச் சுட்டிக்காட்டக்கூடும் (மாற்கு 8:23, அடிக்குறிப்பு 2). நாம் அனைவருக்கும் கர்த்தருடனான இத்தகைய ஒரு நேரம் தேவை. (அடுத்த சங்கதியிலும் காணப்படுவது போலவே) அவரது வாயிலிருந்து வந்த உமிழ்நீர், மனிதனின் பார்வையை மீட்டுத்திருப்புவதற்கான ஜீவனின் தெய்வீக ஜீவ ஒளியை வழங்குகிற கர்த்தருடைய வார்த்தையை அடையாளப்படுத்துகிறது. கர்த்தர் அவனது கண்களில் உமிழ்ந்தப் பிறகு, குருடனால் பார்க்க முடிந்தது, ஆனாலும் அவ்வளவு தெளிவாகப் பார்க்க முடியவில்லை. ஆகவே, கர்த்தர் மீண்டும் குருடன் மீது கைகளை வைத்தார், அப்போது அவனது பார்வை முழுவதுமாக மீட்டெடுக்கப்பட்டது. இதேபோல், நம் பார்வை ஆவிக்குரிய ரீதியில் மீட்டுத்திருப்பப்படுவதின் ஆரம்பக் கட்டத்தில் நாம், இந்தக் குருடன் பார்த்தது போலவே விஷயங்களை தெளிவற்ற விதத்தில் பார்க்கக்கூடும். நாம் எல்லா விஷயங்களையும் தெளிவாய்ப் பார்க்க முடியுமாறு, கர்த்தரிடமிருந்து இவ்வாறு நமக்கு ஒரு கூடுதலான தொடுதல் தேவை.

B. யோவானின் சுவிசேஷத்தில், கர்த்தர் உமிழ்நீரோடு கலந்திணைக்கப்பட்ட களிமண்ணால் (சேற்றால்) இந்த மனிதனின் கண்களை அபிஷேகம் செய்தார்—யோவான் 9:6-7

கொஞ்சம் வித்தியாசமான முறையில் குணப்படுத்தப்பட்ட மற்றொரு குருடனின் பதிவை யோவானின் விவரணம் தருகிறது. இந்தக் கதையில் உள்ள வித்தியாசம், எவ்வாறு கர்த்தர் நம் குருட்டுத்தன்மையைக் குணப்படுத்துகிறார் என்பது பற்றிய ஒரு கூடுதலான விளக்கத்தை அளிக்கிறது. இந்தச் சங்கதியில் கர்த்தர் “தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி (களிமண்), அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி (அபிஷேகம் பண்ணி)” (யோவான் 9:6). இந்தக் களிமண் மனுஷீகத்தைக் குறிக்கிறது (ரோ. 9:21). நாம் களிமண். கர்த்தருடைய “வாயிலிருந்து புறப்படுகிற” உமிழ்நீர் இந்த வார்த்தையை அடையாளப்படுத்துகிறது (மத். 4:4), இது ஆவியாயும் ஜீவனாயும் உள்ளது (யோவான் 6:63). யோவான் 9:6, கர்த்தர் “தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி (களிமண்)” என்று கூறுகிறது. கர்த்தர் உமிழ்நீரினால் களிமண்ணை உண்டாக்குவது என்றால் அவர் தம் உமிழ்நீரைக் களிமண்ணுடன் கலந்திணைக்கிறார் என்பது அர்த்தம்; இதன் பொருள் அவர் தம் ஜீவனுள்ள வார்த்தையை மனுஷீகத்துடன் கலந்திணைக்கிறார் என்பதே. நாம் களிமண், மேலும் உமிழ்நீர் என்பது கர்த்தருடைய வார்த்தை (இது ஆவியாயும் ஜீவனாயும் உற்றநு). கர்த்தருடைய வார்த்தை நம்மிடம் வரும்போது, நாம் அவரது சாராம்சத்தையும் மூலக்கூறையும் நமக்குள் பெற்றுக்கொள்கிறோம், மேலும் அதனுடன் கலந்திணைக்கப்படுகிறோம். “வெறுமனே வேதாகமத்தை வாசித்தல் அல்லது படித்தல் போதாது. உங்கள் மனுஷீகத்தோடு தெய்வீக ஜீவனின் கலந்திணைதல் இல்லாமல், நீங்கள் ஒருபோதும் வார்த்தையின் ஒளியைப் பார்க்க முடியாது. நீங்கள் அதை வாசிக்கக்கூடும், ஆனால் நீங்கள் அதைப் பார்க்க முடியாது….சகோதர சகோதரிகளே, இன்றும்கூட நீங்கள் பார்வையைப் பெற்று, ஒளியில் இருக்கப் போகின்றீர்கள் எனில், நீங்கள் முதலில் கர்த்தரை அவரது வார்த்தையில் பெற்றாக வேண்டும். நீங்கள் மறுபடிஜெநிப்பிக்கப்பட்டிருந்தாலும்கூட, நீங்கள் கர்த்தரை அவரது வார்த்தையில் பெற்று, அவருடன் அதிகம் அதிகமாய்க் கலந்திணைக்கப்பட்டாக வேண்டும். நீங்கள் இன்னும் களிமண்ணாக இருக்கிறீர்கள் அதோடு கர்த்தருடைய வாயிலிருந்து வரும் உமிழ்நீர் உங்களுக்குத் தேவை, இது சாட்சாத்துக் கர்த்தருடைய சாராம்த்தை தானே அடையாளப்படுத்துகிறது” (Life-study of John, Message 21, pp253–254). கர்த்தரை அவரது வார்த்தையில் பெற்ற பிறகு, அபிஷேகம் தொடர்ந்துவருகிறது. நம் மனுஷீகத்துடன் (ஆவியாயும் ஜீவனாயும் இருக்கும்) கர்த்தருடைய வார்த்தையினுடைய கலந்திணைதலின் அபிஷேகித்தல் மூலம்தான், சாத்தானால் குருடாக்கப்பட்ட நம் கண்கள் பார்வை பெற முடியும்.

III. நாம் ஆவிக்குரிய விஷயங்களைப் பார்க்கக்கூடுமாறு, நம் ஆவிக்குரிய பார்வையைக் கர்த்தர் மீட்டுத்திருப்ப விரும்புகிறார்— வெளி. 3:17-18

ஆவிக்குரிய அறிவைக் குவித்தும்கூட, மெய்யான ஆவிக்குரிய பார்வை இல்லாத, சபை வாழ்க்கையிலுள்ள இளைஞர்களிடையே ஓர் ஆபத்து இருக்கிறது. தாங்கள் ஏற்கனவே இதற்கு முன்பு எல்லாவற்றையும் கேள்விப்பட்டிருக்கிறார்கள், அதோடு ஏற்கனவே ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றி அறிவார்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்று கூடுகைகளில் இந்த உணர்வு, இந்த நிலைமையில் இருக்கும் சிலருக்கு அடிக்கடி வந்திருக்கிறது. இதுவே யோவான் 9:39–41 இல் உள்ள பரிசேயர்களோடும், வெளிப்படுத்தல் 3:17 இல் லவோதிக்கேயாவிலுள்ள சபையோடும் உள்ள சங்கதியாக இருந்தது. இந்த இரண்டு மக்கள் குழுக்களுக்கும் உபதேசரீதியான அறிவு இருந்தது, ஆனால் உண்மையில் குருடர்களாக இருந்தனர் அதோடு இவர்களிடம் “உண்மையான ஆவிக்குரிய விஷயங்களில் மெய்யான ஆவிக்குரிய உட்பார்வை” இல்லை (வெளி. 3:17, அடிக்குறிப்பு 2). தாங்கள் பார்க்கக்கூடுமாறு தங்கள் கண்களை அபிஷேகம் பண்ணுவதற்கு (பூசுவதற்கு) கலிக்கம் வாங்குவதற்கு விலைக்கிரயத்தைச் செலுத்தும்படி லவோதிக்கேயாவுக்குக் கர்த்தர் அறிவுறுத்தினார். இங்குள்ள கலிக்கம் அபிஷேகிக்கும், ஜீவன்-தரும் ஆவியானவரே (1 யோ. 2:27;1 கொரி. 15:45). நாம் ஆவியானவரைப் பெற்றவுடன், கிறிஸ்துவின் விலையேறப்பெற்றத் தன்மையைக் காணவும், அவரிடம் கவர்ந்திழுக்கப்படவும் நாம் நிஜமான பார்வையைப் பெறுவோம் (See Life-study of Revelation, Message 16, pp205–207). இந்தப் பாடத்திலிருந்து நாம் பார்ப்பது என்னவெனில், ஆவியானவரைப் பெறுவதற்கான நடைமுறைக்குரிய வழி, கர்த்தருடைய ஜீவனுள்ள வார்த்தையைப் பெறும்படி கர்த்தருடன் கொஞ்சம் தனிப்பட்ட மற்றும் நெருக்கமான நேரத்தைச் செலவிடுவதே ஆகும்.

டைநிலைபிரயோகம்: ஒரு நபரிடம் இந்த வார்த்தை பேசப்படும்போது, அவன் சுவிசேஷத்தின் காட்சியைக் காண முடியாதவாறு இந்த யுகத்தின் தேவனான சாத்தான் அவனது எண்ணங்களைக் குருடாக்குகிறான் (2 கொரி. 4:4). இதை உதாரணங்காட்டி விளக்குவதற்கு ஓர் எடுத்துக்காட்டு உதவலாம். ஒரு பிங்-பாங் (மேசைப்பந்தாட்டம்) பந்தை எடுத்து, அதைப் பாதியாக வெட்டுங்கள். ஒரு பாதியின் உட்புறத்தில் “விளையாட்டு” என்று எழுதுங்கள், மறு பாதியின் உட்புறத்தில் “சலிப்பு” என்று எழுதுங்கள். பின்னர் இந்த இரண்டு பாதிகளையும், இளம் வாலிப சகோதர்களில் ஒருவனின் கண்களுக்கு மேல் மெதுவாக வைக்கவும். தனக்கு முன்னால் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது பற்றி எதையும் அவனால் பார்க்க முடியாதவாறு இப்போது அவன் கண்கள் மூடப்பட்டு இருக்கின்றன. அவனால் பார்க்கவும் சிந்திக்கவும்  முடியக்கூடியது எல்லாம் “விளையாட்டு” மற்றும் அவன் எவ்வளவு “சலிப்பு” அடைந்துள்ளான் என்பதே. (உண்மையில், அவனால் இந்த இரண்டு பாதிகளுக்குள் இருளைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாது.) பின்னர், இந்த இளம் வாலிப சகோதரனுக்கு முன்னால் சில சுவாரஸ்யமான விஷயங்களைச் செய்யுங்கள் (எ.கா., ஒரு கொடியை அசையுங்கள், பிஸ்கட் சாப்பிடுங்கள், ஒரு வைர மோதிரத்தைக் காண்பியுங்கள்). எல்லாம் செய்து முடிந்தபின், இந்தச் சகோதரன் தான் இந்தக் கூடுகையில் இருந்தபோதிலும்கூட, ஒரு விஷயத்தையும் காணவில்லை; அதற்கு பதிலாக அவன் விளையாட்டு, சலிப்பு ஆகியவற்றால் முன்-ஆக்கிரமிக்கப்பட்டுஇருந்தான். இதேபோல், கூடுகைகளில் கிறிஸ்துவின் விலையேறப்பெற்றத் தன்மையைக் பார்ப்பதிலிருந்து சாத்தான் பெரும்பாலும் நம் எண்ணங்களைக் குருடாக்குகிறான். முக்காடு அகற்றப்பட முடியுமாறு, ஒவ்வொரு கூடுகையிலும் நாம் நம் இருதயத்தைக் கர்த்தரிடம் திருப்ப வேண்டும். பின்னர் “கிறிஸ்துவின் மகிமையின் சுவிசேஷத்தின் பிரகாசம்” நமக்குள் பிரகாசிக்க முடியும் (2 கொரி. 3:16; 4:4, 6).

சுவிசேஷப்பிரயோகம்: “மனிதனின் புறம்பான கண்கள் பார்க்க முடிந்தாலும், அவனது உள்ளான கண்கள் குருடாக இருக்கின்றன. [அவன்] தான் எங்கிருந்து வந்தான் என்றோ, எங்குச் செல்கின்றான் என்றோ… வாழ்க்கை எதைப் பற்றியது என்றோ, தேவனுடனான அவனது உறவு என்ன என்றோ அவனுக்குத் தெரியவில்லை….கர்த்தரே உலகின் ஒளியாக இருக்கிறார். கர்த்தரால் மட்டுமே மனிதனின் இருளை விரட்ட முடியும்; அதாவது, கர்த்தரால் மட்டமே மனிதனின் குருட்டுத்தன்மையின் பிரச்சினையைத் தீர்க்கவும், மனிதன் தன் பார்வையை மீண்டும் பெற வைக்கவும் முடியும்” (Gospel Outlines, Subject 106, p221). யோவான் 9 இல், குருடனாகப் பிறந்த ஒரு மனிதனைக் குணப்படுத்துதல் பற்றிய சங்கதி உள்ளது. இந்த மனிதனின் குருட்டு நிலைமையைக் குணப்படுத்துதல் மிகவும் அர்த்தமுள்ள ஒரு வழியில் செய்யப்பட்டது. கர்த்தர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி (களிமண்), அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி (அபிஷேகம் பண்ணி), “நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம். அப்படியே அவன் போய்க் கழுவி, பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான்” (யோவான் 9:7).  “உமிழ்தல் (துப்புதல்) என்பது கர்த்தருடைய வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகளை அடையாளப்படுத்துகிறது, மேலும் களிமண் என்பது பூமியின் மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட மனிதனை அடையாளப்படுத்துகிறது. பரிசுத்த ஆவியானவரின் நகர்தல் மற்றும் அபிஷேகித்தல் மூலமாக மனிதனுக்குள் நுழைந்து, மனிதனோடு கலந்திணையும் வார்த்தைகள் மனிதனுக்குத் தெளிவாகக் காண திறனளிக்கின்றன” (Gospel Outlines, Subject 106, p221). ஆயினும், அவனது கண்கள் திறக்கப்பட்டதற்கு முன்பு, குருடன் சீலோவாம் குளத்திற்குச் சென்று, அதில் கழுவ வேண்டும் என்ற கர்த்தருடைய வார்த்தையை அவன் விசுவாசித்து, அதற்குக் கீழ்ப்படிய வேண்டியிருந்தது. “அவன் சென்று கழுவுதல், அவன் கர்த்தருடைய ஜீவன்-தரும் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தான் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. எனவே அவன் பார்வையைப் பெற்றுக்கொண்டான். அவன் களிமண்ணைக் கொண்டு அபிஷேகிக்கப்பட்ட பிறகு, அதனைக் கழுவும்படி சென்றிருக்காவிட்டால், அந்தக் களிமண் இன்னும் அதிகமாக அவனைக் குருடாக்கியிருக்கும். கர்த்தரின் அபிஷேகித்தலுக்கு நம் கீழ்ப்படிதல் நம்மைக் கழுவி, நமக்குப் பார்வை தருகிறது” (யோவான் 9:7, அடிக்குறிப்பு 3). “குருடன் பார்க்க முடியுமாறு கர்த்தர் அவனைக் குணப்படுத்திது மட்டுமல்லாமல், கர்த்தர் தேவனுடைய குமாரனாக இருந்தார் என்பதை உணர்ந்தறியவும் அவனை நடத்தினார்….இயேசு கிறிஸ்துவே தேவனுடைய குமாரன் என்பதை உணர்ந்தறிவதே நிஜமான கண் திறத்தல்” (Gospel Outlines, Subject 106,p221).

மிக முக்கியக் காரியங்கள்: வேதாகமத்தில் உள்ள நிகழ்வுகளின் வரலாற்றுக்குரிய நிகழ்ச்சிக் கோவையை் அறிதல் (I.C.)      ; நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.)

பின்னணி வாசிப்பு: John 9:6, footnote 1; Mark 8:22, footnote 1; Mark 8:23, footnotes 2–3.

REFERENCES: John 9:6, footnote 1; Life-study of John, Message 21, pp245–254; Life-study of Revelation, Message16, pp205–207; Luke 4:18, footnotes5–6; Mark 8:22, footnote 1; Mark 8:23, footnotes 2–3; Mark 8:24, footnote 1; Revelation 3:17, footnote 2; Gospel Outlines, Subject 106, p221.

 

Jump to section