வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்

பகுதி 8

பாடம் 01 – 09

பாடம் 10 – 18

கிறிஸ்துவின் ஊழியம்

Jump to section

கிறிஸ்துவின் ஞானஸ்நானம் மற்றும் அபிஷேகம்

குறிக்கோள்: கர்த்தருடைய ஊழியம் அவரது ஞானஸ்நானத்தோடும், பிதாவாகிய தேவனாலான அவரது அபிஷேகத்தோடும் ஆரம்பித்தது என்பதைக் காண.

பொருட்சுருக்கம்: கர்த்தருடைய ஊழியம் அவரது ஞானஸ்நானத்தோடும், பிதாவாகிய தேவனின் அபிஷேகத்தோடும் தொடங்கியது (மத். 3:13-17). ஒரு மனிதனாக, கர்த்தராகிய இயேசு “எல்லா நீதியையும் நிறைவேற்ற,” அதாவது தேவனுடைய கோரிக்கையை நிறைவேற்ற ஞானஸ்நானம் பெறும்படி யோவான் ஸ்நானகனிடம் வந்தார். நீதி என்றால், தேவன் நியமித்திருக்கிற வழியில் வாழ்வதாலும், காரியங்களைச் செய்வதாலும் சரியாக இருப்பதாகும். தேவனுடைய நியமனத்தின்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவதற்கு மட்டுமல்லாமல், தாம் ஓர் இயற்கையான வழியில் அல்லாமல் உயிர்த்தெழுதலின் வழியில் ஊழியம்செய்யுமாறு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்கு உட்படுத்தப்படும்படி தம்மை அனுமதிக்கவும் கர்த்தர் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார். கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தைத் தொடர்ந்து மூன்று விஷயங்கள் வந்தன: திறந்தப் பரலோகங்கள், தேவ ஆவியானவரின் இறங்குதல், பிதாவின் பேசுதல். ஆவியானவரின் இறங்குதலே பிதாவாகிய தேவனின் அபிஷேகமாக, கர்த்தராகிய இயேசுவின் ஊழியத்திற்காக அவர்மேல் இருக்கும்படி இவர் தம் ஆவியானவரை அனுப்புதலாக இருந்தது. அவர்மேல் இறங்கும்படி பிதா தம் ஆவியானவரை அனுப்புதல் என்பது மூவொரு தேவன் அவரது ஊழியத்திற்கான ஊற்றாகவும், நிரப்பீடாகவும், வல்லமையாகவும், அதிகாரமாகவும் அவருடன் ஒன்றாயிருப்பார் என்பதைச் சுட்டிக்காட்டியது. கர்த்தராகிய இயேசுவைப் பிதாவாகிய தேவன் அபிஷேகித்தல் என்பது கர்த்தராகிய இயேசுவே தேவனுடைய குமாரன், பிதாவின் பிரியமானவர், அவரில்தான் பிதாவின் பூரிப்பு உள்ளது என்பதை முழு பிரபஞ்சத்திற்கும் அறிவித்தது. கர்த்தர் ஞானஸ்நானம் பண்ணப்படுவதிலும், அபிஷேகம் பண்ணப்படுவதிலும் அவரை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

பின்புலம்: வருந்தத்தக்க விதத்தில், சில இளம் வாலிபர்கள் இரண்டிலொன்று ஞானஸ்நானம் தொடர்பான சத்தியத்தைப் பாராட்டுவதில்லை அல்லது அது முக்கியமானது என்று அவர்கள் உணர்வதில்லை. ஞானஸ்நானம் எல்லா நீதியையும் நிறைவேற்றுவதால், அது முக்கியமானது என்பதை இந்தப் பாடங்கள் காட்டுகின்றன. கர்த்தர் தாமே இந்த நீதியின் வழியை எடுத்துக்கொண்டார், மேலும் நாம் அனைவரும் அவரது முன்மாதிரியை ஏற்றுக்கொண்டு, நம் மாம்சத்தில் மரணத்திற்கும் அடக்கம்பண்ணுதலுக்குமே தவிர வேறு எதற்கும் நாம் லாயக்கு அல்ல என்பதை ஒப்புக்கொண்டு ஞானஸ்நானம் பெற வேண்டும். நாம் ஞானஸ்நானம் பண்ணப்பட்டவுடன், தேவனுக்கு முன்பான நம் வாழ்க்கை மற்றும் ஊழியத்தின் அடித்தளமாக நம் ஞானஸ்நானத்தை எடுத்துக்கொள்ளும் ஒரு வழியில் நாம் வாழ வேண்டும்.

திகாரங்கள்: மத்தேயு 3.

கற்பிப்பதற்கான உண்மைகள் கொண்ட செய்திக்குறிப்பு

பாடம் 1 இன் படி, கர்த்தராகிய இயேசு தாம் தேவனுக்கு முன்பாக ஊழியம்செய்ய முடியக்கூடிய ஒரு வயதுவரை முதிர்ச்சியடைந்திருந்தார். ஆயினும் கர்த்தராகிய இயேசு தம் திறனையும் ஆற்றலையும் மற்றவர்களுக்கு முன்பாகக் காட்சியாக்கும்படி அவசரப்படவில்லை. மாறாக, தம்முடைய ஊழியத்தைத் தொடங்குவதற்கு முன் கர்த்தர், தேவனுக்கு முன்பாக மாம்சத்திலுள்ள ஒரு மனிதனாக மரணத்திற்கும் அடக்கம்பண்ணுதலுக்குமே தவிர வேறு எதற்கும் அவர் லாயக்கு அல்ல என்பதையும், அவருக்கு  மாம்சத்தில் எந்த நம்பிக்கையும் இருக்கவில்லை என்பதையும் காட்டும்படி ஒன்றைச் செய்தார். அப்போது அவர் பிதாவாகிய தேவனால் அபிஷேகம்செய்யப்பட்டு, ஆவியானவரால் ஊழியம்செய்யத் தொடங்கினார். கர்த்தர் எடுத்த வழி, ஒருவரின் ஆற்றலைக் காட்சியாக்கும் உலகத்தின்ன் வழிக்கு முற்றிலும் முரணானது ஆகும்.

I. கர்த்தருடைய ஊழியம் அவரது ஞானஸ்நானத்தோடும், பிதாவாகிய தேவனாலான அவரது அபிஷேகத்தோடும் ஆரம்பித்தது—மத். 3:13-17

இந்தப் பாடத்தின் மைய சிந்தனை என்னவெனில், கர்த்தராகிய இயேசு தம் ஊழியத்தைத் தொடங்குவதற்கு முன்பு, அவர் தேவனுடைய நீதியான கோரிக்கைகளை நிறைவேற்ற யோவான் ஸ்நானகனால் முதலில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, அதன்பின் அவரது ஊழியத்தை முன்னெடுக்கப் பிதாவால் அபிஷேகம் பண்ணப்பட்டார். கர்த்தர் ஞானஸ்நானம் பண்ணப்படுவதிலும், அபிஷேகம் பண்ணப்படுவதிலும் அவரை நாம் அறிந்துகொள்ள வேண்டும். மத்தேயு 3 இல், யோவான் ஸ்நானகன் யூதேயாவின் வனாந்தரத்தில் ஊழியம்செய்யத் தொடங்கி, பரலோக ராஜ்யத்தின் நிமித்தம் மனந்திரும்புதலைப் பிரசங்கித்தான் (மத். 3:1-2). எல்லா மக்களும் அவனுக்குச் செவிசாய்க்கும்படி வெளியே வனாந்தரத்திற்கு வந்தனர், மேலும் யோவான் தான் ஏற்றுக்கொண்ட அனைவரையும் தீர்த்துக்கட்டும்படி அவர்களுக்கு யோர்தான் நதியில் ஞானஸ்நானம் கொடுத்தான் (மத். 3:5–6). அவரது ஊழியம் ஒரு தீர்த்துக்கட்டும் ஊழியமாக இருந்தது. அப்போது கர்த்தராகிய இயேசு யோவானிடம் வந்து, ஞானஸ்நானம்பண்ணப்பட்டு தீர்த்துக்கட்டப்படவும் விரும்பினார். அவ்வாறு செய்வதிலிருந்து அவரை யோவான் தடுக்க முயன்றார், ஆனால் “எல்லா நீதியையும் நிறைவேற்ற” அதை அனுமதிக்கும்படி கர்த்தராகிய இயேசு யோவானிடம் சொன்னார் (மத். 3:13-15). கர்த்தர் ஞானஸ்நானம் பண்ணப்பட இந்தப் படியை மேற்கொண்ட பிறகு, பரலோகங்கள் திறக்கப்பட்டன அதோடு கர்த்தராகிய இயேசு எல்லா மக்களுக்கு முன்பாகவும் பிதாவாகிய தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டார் (மத். 3:16-17).

II. கர்த்தராகிய இயேசு தம் ஊழியத்தைத் தொடங்குவதற்கு முன்பு, அவர் தேவனுடைய நீதியான கோரிக்கையை நிறைவேற்ற யோவான் ஸ்நானகனால் முதலில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டான்—மத். 3:13–15; ரோ. 3:20–21; மத். 21:32

பழைய ஏற்பாட்டில் தேவனுடைய நீதியான கோரிக்கை, அவரது மக்களுக்கு மோசே மூலமாகக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதாக இருந்தது. எனினும், இந்த நியாயப்பிரமாணம் பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களைச் சீர்ப்பொருத்த இயலவில்லை, மேலும் நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் அவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிப்படுத்தப்பட இயலவில்லை (எபி. 10:1; ரோ. 3:20). யோவான் ஸ்நானகன் வந்தபோது, தேவன் மோசேக்குரிய நியாயப்பிரமாணத்தின் கோட்பாட்டையும் சடங்குகளையும் ஒழித்தார் (மத்தேயுவின் ஜீவ-ஆய்வு, செய்தி 20). யோவான் ஸ்நானகன் ஒரு புதிய வழியுடன்—நீதியின் வழியுடன்—வந்தபோது தேவன் நியாயப்பிரமாணத்தின் காலக்கட்டத்தை முடித்தார் (மத். 21:32; 3:15; மாற். 1:1).

A. ஒரு மனிதனாக, கர்த்தராகிய இயேசு “எல்லா நீதியையும் நிறைவேற்ற” ஞானஸ்நானம் பெறும்படி யோவான் ஸ்நானகனிடம் வந்தார்—மத். 3:15

“யோவானின் பிரசங்கித்தலே இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் ஆரம்பமாக இருந்தது (மாற். 1:1). அவன், ‘மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது’ என்று அறிவித்தான் (மத். 3:2). மக்கள் மனந்திரும்பிய போது, அவன் அவர்களை அடக்கம்செய்யும்படி அவர்களைத் தண்ணீருக்குள் வைத்தான். யோவான் மக்களுக்குத் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுத்தான், இது மாம்சத்திலுள்ள மனிதன் மரணத்திற்கும் அடக்கம்பண்ணுதலுக்கும் மட்டுமே லாயக்கு என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. ஆனால் ஜீவனைப் பெறுவதற்காக மக்களை ஆவியானவருக்குள் வைக்கும்படி கர்த்தராகிய இயேசு வந்தார் (வ. 11). இதுவே புதிய ஏற்பாடு. கிறிஸ்துவின் ஊழியம் அவரது ஞானஸ்நானத்தால் துவங்கியது (வ.வ. 13–17). அவர் தம் ஊழியத்தின் எந்தப் பகுதியையும் முன்னெடுப்பதற்கு முன், அவர் செய்த முதல் விஷயம், யோவானால் உள்ளே கொண்டுவரப்பட்ட நீதியின் வழியின்படி நீதியை நிறைவேற்ற ஞானஸ்நானம் பண்ணப்படுவதாக இருந்தது” (The God-man Living, Message 4, p35).

  1. நீதி என்றால், தேவன் நியமித்திருக்கிற வழியில் வாழ்வதாலும், காரியங்களைச் செய்வதாலும் சரியாக இருப்பதாகும்.
  2. தேவனுடைய நியமனத்தின்படி எல்லா நீதியையும் நிறைவேற்ற, அதாவது தேவனின் கோரிக்கையை நிறைவேற்றக் கர்த்தர் ஞானஸ்நானம்ப ண்ணப்பட்டார்.

மாம்சத்தில், யாருமே தேவனைப் பிரியப்படுத்த முடியாது (ரோ. 8:8). மாம்சத்திலுள்ள மனிதன் மரணத்திற்கும் அடக்கம்பண்ணுதலுக்குமே தவிர வேறு எதற்கும் லாயக்கு அல்ல என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதே யோவான் ஸ்நானகனால் உள்ளே கொண்டுவரப்பட்ட நீதியின் வழியாக இருந்தது. மாம்சத்தில் உள்ள மனிதர்களாக நாம் அவரைச் சேவிப்பதற்கு, நாம் முதலில் மரணத்திற்கு உட்படுத்தப்பட்டு, அடக்கம் பண்ணப்பட வேண்டும் என்பதை தேவன் நியமித்திருக்கிறார். இதுவே அவரது நீதியான கோரிக்கை. இதுவும் யோவானால் உள்ளே கொண்டுவரப்பட்ட நீதியின் வழியாகும்—நீங்கள் தேவனைப் பிரியப்படுத்த விரும்பினால், நீங்கள் மரணத்திற்கு உட்படுத்தப்பட்டு அடக்கம் செய்யப்படும்படி ஞானஸ்நானம் பண்ணப்பட்டாக வேண்டும். மாம்சத்திலுள்ள ஒரு மனிதனாகக் கர்த்தராகிய இயேசு தேவனுடைய நீதியான கோரிக்கையை நிறைவேற்ற இந்த வழியில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்.

B. உங்கள் மாம்சத்தில் நீங்கள் மரணத்திற்கும் அடக்கம்பண்ணுதலுக்குமே தவிர வேறு எதற்கும் லாயக்கு அல்ல என்பதை ஒப்புக்கொள்வதே நீதியின் வழி—மத். 3:15; ரோ. 1:4-5; 8:8; கலா. 2:15-16; 1 கொரி. 15:50

தேவனுடைய நீதியான வழியின்படி, கர்த்தராகிய இயேசு கூட தம் மாம்சத்தின்படி தாம் மரணத்திற்கும் அடக்கம்பண்ணுதலுக்குமே தவிர வேறு எதற்கும் லாயக்கு அல்ல என்பதை ஒப்புக்கொண்டார். கிறிஸ்து மாம்சத்தின்படி தாவீதின் வித்திலிருந்து (சந்ததியிலிருந்து) வெளிவந்தார் (ரோ. 1:4-5), மேலும் “மாம்சத்தில் இருப்பவர்கள் தேவனைப் பிரியப்படுத்த முடியாது” (ரோ. 8:8, கிரே.). கிறிஸ்துவின் மாம்சம் பாவமற்ற மாம்சமாக இருந்தபோதிலும் கூட (2 கொரி. 5:21; ரோ. 8:3), கிறிஸ்து தம் மாம்சத்தில் தாம் மரணத்திற்கும் அடக்கம்பண்ணுதலுக்குமே தவிர வேறு எதற்கும் லாயக்கு அல்ல என்பதை இன்னும் ஒப்புக்கொண்டார். இந்த வழியில், கிறிஸ்து தேவனுடைய எல்லா நீதியையும் நிறைவேற்றினார்.

C. கர்த்தர் தாம் ஓர் இயற்கையான வழியில் அல்ல, மாறாக உயிர்த்தெழுதலின் வழியில் ஊழியம் செய்யக்கூடுமாறு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்கு உட்படுத்தப்படும்படி தம்மை அனுமதிக்கவும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்.

கிறிஸ்துவின் ஞானஸ்நானம் தம் ஊழியத்தைத் தொடங்குவதற்கான ஓர் ஆரம்பப் படியாக, ஒரு முன்நிபந்தனையாகக் கூட இருந்தது. அவர் பரிபூரணராகவும், பாவமற்றவராகவும் இருந்தபோதிலும்கூட, அவர் ஓர் இயற்கையான வழியில் தேவனைச் சேவிக்க வரவில்லை. அவர் மாம்சத்தில் ஒரு மனிதராக இருந்ததால், கர்த்தராகிய இயேசு தாம் ஓர் இயற்கையான வழியில் அல்ல, மாறாக உயிர்த்தெழுதலின் வழியில் ஊழியம் செய்யக்கூடுமாறு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்கு உட்படுத்தப்படும்படி தம்மை அனுமதிக்கவும் ஞானஸ்நானத்தின் வழியை எடுத்துக்கொண்டார். அவர் இந்த வழியை, அதாவது தேவனுடைய நீதியின் வழியை எடுத்துக்கொள்ளுதல் நம் அனைவருக்கும் ஒரு மாதிரியாகவும் இருந்தது (ஒப். ரோ. 6:3-4). கர்த்தர் ஞானஸ்நானம் பண்ணப்பட்டதைப் போலவே, தீர்த்துக்கட்டப்பட்டு, இவ்வாறு எல்லா நீதியையும் நிறைவேற்றும்படி நாமும் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும். ஞானஸ்நானத்திற்குப் பிறகு, நாம் தேவனுக்கு முன்பாக நம் வாழ்க்கை மற்றும் ஊழியத்தின் அடித்தளமாக நம் ஞானஸ்நானத்தை எடுத்துக்கொள்ளும் ஒரு விதத்தில் வாழ்ந்து, நம் மாம்சம் மரணத்திற்கும் அடக்கம்பண்ணுதலுக்குமே தவிர வேறு எதற்கும் லாயக்கு அல்ல என்பதை உணர்ந்தறிய வேண்டும்.

III. அவர் ஞானஸ்நானம் பண்ணப்பட்டப் பிறகு, கிறிஸ்து தம் ஊழியத்தை நிறைவேற்றுவதற்காக பிதாவாகிய தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டார்—மத். 3:16-17

கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தைத் தொடர்ந்து மூன்று விஷயங்கள் வந்தன: திறந்தப் பரலோகங்கள், தேவ ஆவியானவரின் இறங்குதல், பிதாவின் பேசுதல். பரலோகங்கள் திறத்தல் என்பது அவரது ஞானஸ்நானத்தின் உட்கருத்து பரலோகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, முத்திரையிடப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டியது. அவர்மேல் இறங்கும்படி ஆவியானவரை அனுப்புதல் என்பது மூவொரு தேவன் அவரது ஊழியத்தின் ஊற்றாகவும், நிரப்பீடாகவும், வல்லமையாகவும், அதிகாரமாகவும் அவருடன் ஒன்றாயிருப்பார் என்பதைச் சுட்டிக்காட்டியது. பிதா பேசுதல் என்பது கிறிஸ்துவின் தெய்வீகத்தின்படி அவர் தேவனுடைய குமாரன், பிதாவின் பிரியமானவர், அவரில்தான் பிதாவின் பூரிப்பு உள்ளது என்பதை இந்த முழு பிரபஞத்திற்கும் அறிவிப்பதற்கு இருந்தது. மாம்சத்தில், கிறிஸ்து மரணத்திற்கும் அடக்கம்பண்ணுதலுக்குமே தவிர வேறு எதற்கும் லாயக்கு அல்ல. எனினும், கிறிஸ்துவை அபிஷேகம் செய்வதன் மூலம், பிதாவாகிய தேவன் இந்த முழு பிரபஞ்சத்திற்கும் அறிவித்தது என்னவெனில், இன்னோர் ஊற்றின்படி, அதாவது அவரது தெய்வீகத்தின் ஊற்றின்படி கிறிஸ்து பரிசுத்தத்தின் ஆவியானவராகவும் இருந்தார் என்பதே (ரோ. 1:5).

A. பிதா ஆவியானவரை அனுப்புதல் என்பது பூமியில் கிறிஸ்துவின் ஊழியத்திற்காக அவர் கிறிஸ்துவை அபிஷேகம் பண்ணுதலாக இருந்தது—மத். 3:16.

ஆவியானவரின் இறங்குதலே பிதாவாகிய தேவனின் அபிஷேகமாக, கர்த்தராகிய இயேசுவின் ஊழியத்திற்காக அவர்மேல் இருக்கும்படி இவர் தம் ஆவியானவரை அனுப்புதலாக இருந்தது. கிறிஸ்துமேல் இறங்கும்படி பிதா தம் ஆவியானவரை அனுப்புதல் என்பது மூவொரு தேவன் அவரது ஊழியத்திற்கான ஊற்றாகவும், நிரப்பீடாகவும், வல்லமையாகவும், அதிகாரமாகவும் அவருடன் ஒன்றாயிருப்பார் என்பதைச் சுட்டிக்காட்டியது.

B. கிறிஸ்துவை அபிஷேகம்பண்ணுதல் திறக்கப்பட்ட பரலோகங்களுடன் இருந்தது என்பது அவரது ஞானஸ்நானத்தின் உட்கருத்து பரலோகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, முத்திரையிடப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது—மத். 3:16

C. கிறிஸ்துவின் அபிஷேகம் பிதாவின் அறிவித்தலுடன் இருந்தது—மத். 3:17; ரோ. 1:5

கிறிஸ்துவை தாம் அபிஷேகித்தலில் பிதாவாகிய தேவன், கர்த்தராகிய இயேசுவே தேவனுடைய குமாரன், பிதாவின் பிரியமானவர், அவரில்தான் பிதாவின் பூரிப்பு உள்ளது என்பதை முழு பிரபஞ்சத்திற்கும் அறிவித்தார். மாம்சத்தில் ஒரு மனிதனாக, கிறிஸ்து ஞானஸ்நானம் பண்ணப்பட்டார். இது, மாம்சத்தின்படி அவர் மரணத்திற்கும் அடக்கம்பண்ணுதலுக்குமே தவிர வேறு எதற்கும் லாயக்கு அல்ல என்பதை அறிவிப்பதற்கு இருந்தது. இந்த வழியில் அவரது ஞானஸ்நானம் தேவனுடைய நீதியை நிறைவேற்றியது. எனினும், தம் தெய்வீகத்தின்படி இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரனாக, பிதாவின் பிரியமானவராக இருந்தார். கிறிஸ்து எல்லா நீதியையும் நிறைவேற்ற ஞானஸ்நானம் பண்ணப்படுவதற்கான படியை எடுத்தபோது, பிதாவாகிய தேவன் அவரை அபிஷேகித்து, அவரது பூரிப்பு கிறிஸ்துவில் இருக்கிறது என்பதை இந்தப் பிரபஞ்சத்திற்கு அறிவிப்பதற்கான படியை எடுத்தார்.

டைநிலைபிரயோகம்: கிறிஸ்து தம் ஊழியத்திற்காக எடுத்த வழி ஞானஸ்நானமாக இருந்தது. அவரது ஞானஸ்நானம் தேவனுடைய நீதியை நிறைவேற்ற, தேவன் நியமித்திருக்கும் வழியில் விஷயங்களைச் செய்வதால் சரியாக இருப்பதற்கு இருந்தது. கர்த்தருக்குள் விசுவாசித்த பின் நாம் ஞானஸ்நானம் பெற்றபோது, நாம் ஞானஸ்நானத்தின் முழு உட்கருத்தையும், அதாவது ஞானஸ்நானம் என்றால் மரணத்திற்குள் உட்படுத்தப்பட்டு, அடக்கம்பண்ணப்படுவதாகும் என்பதை உணர்ந்தறியாமல் இருக்கக்கூடும் (ரோ. 6:3-4). ஞானஸ்நானம் என்பது நம் மாம்சத்தில் நாம் மரணத்திற்கும் அடக்கம்பண்ணுதலுக்குமே தவிர வேறு எதற்கும் லாயக்கு அல்ல என்ற ஓர் அறிவிப்பாகும். எனினும், ஞானஸ்நானம் பண்ணப்பட்ட பிறகு, நாம் அதே நீதியின் வழியில் ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும். நடைமுறைக்குரிய ரீதியில் சொன்னால், மரணத்திற்கு உட்படுத்தப்பட்டு, அடக்கம் பண்ணப்படுவது என்றால் நம் விருப்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு மற்றவர்களுடன் சேர்ந்து ஒத்துப்போவது ஆகும். எடுத்துக்காட்டாக, உங்கள் நண்பர்கள் உங்களுடன் வெளியே செல்லும்படி உங்களிடம் கேட்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், ஆனால் உங்கள் தாய் தனக்கு வீட்டு வேலையில் உதவிசெய்யும்படி உங்களிடம் கேட்கிறாள். வெளிப்படையாக, நீங்கள் உங்கள் தாயுடன் சேர்ந்து ஒத்துப்போக வேண்டும், ஆனால் நீங்கள் அவ்வாறு எப்படி செய்கிறீர்கள் என்பது நீங்கள் தேவனோடு சரியா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது. உங்கள் வாய்க்குள் அல்லது சத்தமாக முணுமுணுத்து, புகார்செய்து கொண்டிருக்கையில் நீங்கள் உங்கள் தாய்க்கு வேண்டா-வெறுப்புடனும், அரை-மனதுடனும் உதவி செய்தால், நீங்கள் ஞானஸ்நானத்தின் வழியில் வாழவில்லை. எனினும், நீங்கள் அந்தச் சூழ்நிலையில் கர்த்தரிடம் திரும்பினால், உங்கள் விருப்பத்தேர்வு ஒரு அவ்வளவு முக்கியமல்ல என்பதை நீங்கள் காண்பீர்கள், மேலும் நீங்கள் உங்கள் தாய்க்கு உதவுவதில் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருப்பீர்கள். இந்த மகிழ்ச்சி, உயிர்த்தெழுதலின் ஓர் அடையாளம் ஆகும். கர்த்தருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் நிஜத்தில் வாழ ஒவ்வொரு சூழ்நிலையிலும் கர்த்தரிடம் திரும்ப இயல்வது எவ்வளவு அற்புதமானது.

சுவிசேஷப் பிரயோகம்: தம் பரிபூரணமான மனுஷீகத்தைக் கொண்ட கர்த்தராகிய இயேசு  கூட, “எல்லா நீதியையும்” நிறைவேற்ற ஞானஸ்நானம் பண்ணப்படுவதற்கான அவரது தேவையை ஒப்புக்கொண்டார் (மத். 3:15). மாம்சத்திலுள்ள ஒரு மனிதனாக, அவர் தாம் மரணத்திற்கும் அடக்கம்பண்ணுதலுக்குமே தவிர வேறு எதற்கும் லாயக்கு அல்ல என்பதை உணர்ந்தறிந்தார். அதே உணர்ந்தறிதல் உங்களுக்கும் இருக்கிறதா? பிறப்பால் உங்கள் நிலைப்பாடு அல்லது நிலையைப் பொருட்படுத்தாமல், உங்கள் உயர்ந்த நெறிமுறைகள் அல்லது நல்ல ஒழுக்கங்களைப் பொருட்படுத்தாமல், உங்கள் மதரீதியான நடத்தையையும், நடைமுறைப் பயிற்சிகளையும்கூட பொருட்படுத்தாமல், கிறிஸ்துவுக்கு வெளியே “நீதிமான் யாரும் இல்லை, ஒருவர் கூட இல்லை” (ரோ. 3:10, கிரே.). ஞானஸ்நானம் தன்னில்தானே உங்களை இரட்சிக்க முடியாது என்றாலும், அதற்குப் பின்னால் இருக்கும் உட்கருத்து சக்திவாய்ந்தது. கர்த்தருடைய இரக்கத்தால் நாம் நம் பெருமையைக் விட்டுவிட்டு, தேவனுக்கு முன்பாக அழுக்கான கந்தையாக உள்ள நம் சொந்த நீதியில் நாம் வைக்கும் நம் நம்பிக்கையைக் கைவிட வேண்டும் (ஏசா. 64:6). அடுத்து, நாம் தேவனுக்கு முன்பான நம் அநீதியான நிலைப்பாட்டை உணர்ந்தறிந்து, ஒரு மனந்திரும்பும் இருதயத்துடன் கர்த்தருக்குத் திறந்து, அவரை நம் மீட்பராகவும், நம் இரட்சகராகவும், நம் சாட்சாத்து நீதியாகவும்கூட பெற்றுக்கொள்ளும்படி கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிட வேண்டும் (1 கொரி. 1:30-31). அதன்பின், கர்த்தர் ஞானஸ்நானம் பண்ணப்பட்டதைப் போலவே, தீர்த்துக்கட்டப்பட்டு, இவ்வாறு எல்லா நீதியையும் நிறைவேற்றும்படி நாமும் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும். புதிய விசுவாசிகள் பலர், வெறுமனே கர்த்தருக்குள் விசுவாசித்து, அவரைப் பெற்றுக்கொள்வது மாத்திரம் போதுமானது என்று நினைக்கின்றனர். எனினும், வேதாகமத்தின்படி ஞானஸ்நானம் என்பது நீதியைப் பற்றிய ஒரு காரியம் ஆகும் (மத். 3:15). நாம் எல்லா நீதியையும் நிறைவேற்ற, அதாவது தேவனுடைய கோரிக்கையைப் பூர்த்திசெய்ய ஞானஸ்நானம் பண்ணப்பட்டாக வேண்டும். நாம் எவ்வளவு நல்லவர்கள் அல்லது நீதியுள்ளவர்கள் என்று நாம் நினைத்தாலும்சரி, நாம் இன்னும் மாம்சத்தில் இருக்கிறோம் அதோடு நாம் ஒருபோதும் தேவனைப் பிரியப்படுத்த முடியாது (ரோ. 8:8). நாம் அவரைப் பிரியப்படுத்த விரும்பினால் நாம் மரணத்திற்கு உட்படுத்தப்பட்டு, அடக்கம் பண்ணப்பட ஞானஸ்நானம் பண்ணப்பட்டாக வேண்டும். நாம் கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பண்ணப்படும் போது, நாம் அவரது மரணத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, அவருடன் அடக்கம் பண்ணப்படுகிறோம் (ரோ. 6:3-4). உங்கள் அநீதியிலிருந்து, தேவனுடைய நீதியாகிய கிறிஸ்துவுக்குள் விடுதலையாக்கப்படும்படி கிறிஸ்துவுக்குள் விசுவாசித்து, ஞானஸ்நானம் பண்ணப்படுங்கள்.

மிக முக்கியக் காரியங்கள்: வேதாகமத்தில் உள்ள முக்கியமான நிகழ்வுகளை அறிதல் (I.B.)      ; நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.)

பின்னணி வாசிப்பு: The God-man Living, Message 4, pp34–36; Message 5.

REFERENCES: The God-man Living, Messages 4–5, 8–9.

 

Jump to section