வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்
பகுதி 8
✵பாடம் 01 – 09
✵பாடம் 10 – 18
கிறிஸ்துவின் ஊழியம்
மனிதத் தேவைக்காகக் கரிசனைப்படுதல்—நோயுற்றவர்களைக் குணப்படுத்துதல்
குறிக்கோள்: கர்த்தர் பாவத்தோடு இடைபட்டு, தெய்வீக ஜீவனை உட்பகிர்ந்ததால், அவர் நோய்வாய்ப்பட்டவர்களைக் குணப்படுத்த இயன்றது என்பதைப் புரிந்துகொள்வதற்கு.
பொருட்சுருக்கம்: நோய் என்பது பாவத்தின் ஒரு விளைவு ஆகும் அதோடு பாவத்திநிமித்தம் தேவனுக்குமுன் மனிதனின் அசாதாரணமான நிலைமையின் ஓர் அடையாளம் ஆகும். ஆகவே, மக்கள் கர்த்தராகிய இயேசுவைச் சேவிக்கக் கூடுமாறு பௌதிகமாகவும், ஆவிக்குரியரீதியிலும் அவர் தம் ஊழியத்தில் அவர்களது நோயுற்ற நிலைமையைக் குணப்படுத்தி, அவர்களை ஓர் இயல்பு நிலைமைக்குப் பழையபடி கொண்டுவந்தார். நாம் தெய்வீக ஜீவனில் பங்குபெற்று, கிறிஸ்துவின் நற்பண்புமிக்க மனுஷீகத்தை அனுபவிக்கையில் நாம் மற்றவர்களுக்கு இந்தக் குணப்படுத்துதலை ஊழியம்செய்ய முடியுமாறு இன்று நாம், நம் நோய்வாய்ப்பட்ட ஆவிக்குரிய நிலைமையைக் குணப்படுத்துபவராகக் கிறிஸ்துவை அனுபவிக்க வேண்டும்.
பின்புலம்: கர்த்தரோடு உள்ள ஓர் உண்மையான, தனிப்பட்ட, ஜீவிக்கும் தொடுதலைக் கொண்டிராமல் ஓர் இளம் வாலிபன் சபை வாழ்க்கையில் வளர்வது சாத்தியம்தான். சில இளம் வாலிபர்கள் “ஜனக்கூட்டத்தைப்” பின்பற்றி, கர்த்தரைச் சுற்றி கூடிவருகிறார்கள், ஆனால் மாற்கு 5 இல் உள்ள அந்த ஸ்திரீயைப் போன்று, “ஜனக்கூட்டத்தையும்” (தங்களைச் சுற்றியுள்ள எல்லாத் திசைத்திருப்பங்களையும்) தாண்டிச்சென்று, தங்களுக்காகக் கர்த்தரைத் தொடுவதற்கான ஒரு சமயம் அவர்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. கர்த்தரைத் தொடுவதன் மூலம் தன் நிலைமை குணமாக்கப்பட்ட அந்த ஸ்திரீயைப் போலவே, அவரது குணமாக்கும் வல்லமையை அனுபவித்துமகிழ்வதற்கு தனிப்பட்ட முறையில் அவரைத் தவிப்புடன் தொட வேண்டிய பல இளம் வாலிபர்கள் உள்ளனர். பன்னிரண்டு ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டிருந்து, கர்த்தருடைய குணப்படுத்தும் வல்லமையால் குணமாக்கப்பட்ட ஸ்திரீக்கு நடந்ததைப் போலவே– கொள்ளைநோய் போன்று தங்களை வாதித்திருக்கும் தங்கள் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படுவதை, இந்தப் பாடத்தில் உள்ள வசனங்கள் மூலமாக, ஓர் இளம் வாலிபன் அவருடனான ஒரு தொடுதல் மூலமாக அனுபவித்துமகிழக்கூடும் என்றிருக்கலாம்.
அதிகாரங்கள்: மத்தேயு–யோவான்.
கற்பிப்பதற்கான உண்மைகள் கொண்ட செய்திக்குறிப்பு
சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கும், சத்தியத்தைப் போதிப்பதற்கும் கூடுதலாக, குணப்படுத்துதல் கிறிஸ்துவின் பூமிக்குரிய ஊழியத்தின் ஒரு பிரதான பகுதியாக இருந்தது. மக்கள் தேவனைச் சேவிக்கவும், கிறிஸ்துவைப் பின்பற்றுவும் கூடுமாறு, கிறிஸ்து அவர்களுக்குத் தங்கள் சுகவீனங்களைக் குணமாக்கி, தங்கள் செயல்பாட்டை மீட்டெடுத்தார். கிறிஸ்துவின் குணப்படுத்தும் விதம், நாம் தேவனை அவரது பொருளாட்சியில் சேவிக்கக்கூடுமாறு, நம் ஆவிக்குரிய செயல்பாடு மீட்டெடுக்கப்பட வேண்டிய விதத்தையும் சுட்டிக்காட்டுகிறது.
I. மக்கள் தேவனை அனுபவித்துமகிழ்ந்து, அவரைச் சேவிக்கக்கூடுமாறு, கர்த்தராகிய இயேசு தம் ஊழியத்தில் மக்களைக் குணமாக்கி, அவர்களது செயல்பாட்டை மீட்டெடுத்தார்
கிறிஸ்து தம் ஊழியத்தைத் தொடங்கியபோது, எல்லா வகையான அடிமைத்தனக்கட்டிலும் உள்ளவர்களை விடுவிப்பதற்கும், தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தியை அறிவிக்கிறதற்கும் தாம் அபிஷேகம் செய்யப்பட்டதாக அவர் அறிவித்தார் (லூக். 4:18). வீழ்ச்சியின் மூலமாக வெளி வந்த ஒரு வகையான அடிமைத்தனக்கட்டாக பௌதிக நோய் இருந்தது. பாவத்தின் காரணமாக, மனிதனின் சரீரம் சேதப்படுத்தப்பட்டு, சுகவீனம் மற்றும் மரணத்திற்கு ஆளானது. கிறிஸ்து தம் ஊழியத்தில் மக்களைப் பாவத்தின் அடிமைத்தனக்கட்டிலிருந்தும், பாவத்தின் விளைவாக ஏற்பட்ட நோயிலிருந்தும் விடுவித்தார். மக்களைக் குணப்படுத்துவதிலும், (ஒரு நபரை அசுத்தமாகவும், தேவனுடைய பிரசன்னத்தில் நிற்க இயலாமலும் ஆக்கிவிட்ட) குஷ்டரோகம் போன்ற இத்தகைய வியாதிகளிலிருந்து மக்களைச் சுத்திகரிப்பதிலும், கிறிஸ்து தம் ஊழியத்தின் மூலமாக தேவனுடனான மனிதனின் உறவு மீட்டெடுக்கப்படும் என்றும்; மனிதன் கிறிஸ்துவில் தேவனோடுள்ள ஐக்கியத்தை அனுபவித்துமகிழ மீண்டும் இயல்வான் என்றும் சுட்டிக்காட்டினார். கிறிஸ்துவின் குணப்படுத்தும் ஊழியம், கிறிஸ்து மனிதனுக்காக நிறைவேற்றிக்கொண்டிருந்த மாபெரும் “யூபிலியின்” பகுதியாக இருந்தது (see Life-study of Luke, Message 64). (கிறிஸ்துவின் ஊழியத்தின் இந்த யூபிலி, ஆயிரவருடத்தின் வருகின்ற யுகத்தின் போது முழுவதுமாக அனுபவிக்கப்படும். அந்த நேரத்தில், சுகவீனமும் நோயும் முழுமையாக வெளியேற்றப்படும்!)
II. கர்த்தர் மக்களின் பாவங்களை மன்னிப்பதன் மூலமும், தம்மையே அவர்களுக்குள் ஜீவனாகவும் நற்பண்பாகவும் உட்பகிர்வதன் மூலமும் அவர்களைக் குணப்படுத்தினார்
A. கிறிஸ்துவின் குணப்படுத்துதலுக்கு தேவனுடைய பக்கத்தில் மன்னிப்பும், மனிதனுடைய பக்கத்தில் விசுவாசமும் தேவைப்பட்டது
விழுந்துபோன மக்கள் மீது நிறைவேற்றப்படும் எந்தவொரு குணப்படுத்துதலுக்கும் மீட்பு தேவைப்படுகிறது, ஏனெனில் நோய் என்பது பாவத்தின் ஒரு விளைவாகவும், பாவத்தின் காரணமாக தேவனுக்கு முன்பாக மனிதனின் அசாதாரண நிலைமையின் ஓர் அடையாளமாகவும் உள்ளது (யோவான் 5:14 ஐக் காண்க).
- நோயின் ஆணிவேராகிய பாவத்திற்கு தேவனுடைய பக்கத்தில் மன்னிப்பு தேவைப்படுகிறது—மாற். 2:5
நோய் பாவத்தின் காரணமாக ஏற்படுவதால், நோய் உண்மையிலேயே அகற்றப்பட முடிவதற்கு முன்பு பாவம் இடைபடுத்தப்பட்டாக வேண்டும். நம் பாவங்களையும் நோய்களையும் சிலுவையில் சுமந்தவராகவும் (மத். 8:17), சாட்சாத்து தேவனுடைய ஊனுருவாக இருப்பவராகவும், கிறிஸ்துவுக்கு எந்தவிதமான நோய் அல்லது எதிரியின் ஒடுக்குதல் மீது அதிகாரம் உள்ளது. இவ்வாறு, மத்தேயு 9 மற்றும் மாற்கு 2 இல் பதிவுசெய்யப்பட்ட திமிர்வாதக்காரனின் சங்கதியில் அவருக்கு இருந்தது போலவே, கிறிஸ்துவுக்குப் பூமியில் மனிதனின் பாவங்களை மன்னிப்பதற்கான அதிகாரம் இருந்தது.
- கிறிஸ்து அளிக்கும் மன்னிப்பும் குணப்படுத்துதலும் மனிதனின் பக்கத்தில் விசுவாசத்தைக் கோருகின்றன— மத். 9:22, 28-29; மாற். 2:5; 10:52; லூக். 17:19
கிறிஸ்து குணப்படுத்துபவராக மக்களிடம் வரமுடிந்தாலும், விசுவாசத்தின் மூலமாகதான் குணமப்படுத்துதல் பெற்றுக்கொள்ளப்பட்டது. விசுவாசமே, நாம் கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்வதற்கான வழிவகையாகும். பல சந்தர்ப்பங்களில் கர்த்தர், குணப்படுத்தப்பட்ட மக்களிடம் சொன்னதாவது, அவர்களது குணமடைதல் அவர்களது விசுவாசத்தின் காரணமாக அல்லது அதற்கேற்ப நடந்தது என்பதே. பாவத்திலிருந்தும், பாவத்தின் துணை-உற்பத்திப் பொருட்களிலிருந்தும் நம்மைக் குணப்படுத்துவதற்கான கிறிஸ்துவின் ஜீவனின் கிரியை, நம் விசுவாசத்தின் கிரியையின் அடிப்படையில் உள்ளது.
B. அவர் ஊழியம்செய்த குணப்படுத்துதல் ஜீவ-நிரப்பீட்டின் வடிவத்தில் வந்தது—மாற். 7:26-30
சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய ஒரு ஸ்திரீ, பிசாசு பிடித்திருந்த தன் மகளைக் குணமாக்கும்படி கர்த்தரிடம் வேண்டிக்கொண்டாள். பிள்ளைகளுக்கான அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்று கர்த்தர் பதிலளித்தார். இதைக் கூறுவதில், கர்த்தர் தம் குணப்படுத்தும் ஊழியம் தேவனுடைய மக்களுக்கு ஒரு வகையான அப்பமாக இருந்தது என்று மறைவாய்க் காட்டினார். இந்த “அப்பத்தைப்” பற்றிப் பிடிப்பதற்கான வாய்ப்பை இந்தப் பெண் பற்றிக்கொள்வதற்கான வழியையும் அவர் திறந்தார், ஏனெனில் தேவனுடைய மக்கள் இருந்த “மேஜையில்” (அதாவது புனித தேசத்தில்) அவர் இனியும் இருக்கவில்லை. யூதர்கள் நிராகரிப்பு காரணமாக, அவர் நல்ல நிலத்தை விட்டு வெளியேறி, அத்தகைய ஒரு புறவின “நாயால்” கண்டுகொள்ளப்பட “மேஜையின் கீழிருக்கும்…துணிக்கைகள்” ஆனார். “அவர் தம் சுவிசேஷ சேவையில் வெறுமனே அற்புதங்களைச் செய்யவில்லை. அது அவரது சுவிசேஷ சேவையின் உள்ளான உட்கருத்தாக இருக்கவில்லை. இந்தச் சேவையின் உள்ளான உட்கருத்து, அவர் தம்மையே உணவாக விநியோகித்துக் கொண்டிருந்தார் என்பதே….கர்த்தரை நம் உள்ளான ஜீவ நிரப்பீடாகப் பெற்றுக்கொள்ளாமல் ஓர் அற்புதத்தை அனுபவிப்பது வீண்தான்….அவர் நம் குணப்படுத்துபவராக இருக்கும்போது கூட, கர்த்தராகிய இயேசு நம் அப்பமே என்பதை நாம் உணர்ந்தறிய வேண்டும்” (Life-study of Mark, Message 22, pp200, 202–203). கர்த்தர் மனிதனுக்கு ஜீவனாக இருக்க வந்தார் (யோவான் 6:33; 10:10), மேலும் அவர் மனிதனுக்கு ஜீவனாக இருப்பதன் ஒரு விளைவாக மனிதனைக் குணப்படுத்துதல் இருந்தது.
C. குணப்படுத்துதல், அவரது மனித நற்பண்புமிக்க பரிபூரணத்தின் மூலமாக அவரிடமிருந்து வெளியே பாய்ந்தோடியது—மாற். 5:27, 29–30
பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ கர்த்தருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டபோது, அவள் குணப்படுத்தப்பட்டாள். அவரிடமிருந்து ஏதோ ஒன்று வெளியேறி, அந்தத் தேடுபவளுக்குள் சென்றிருந்ததைக் கர்த்தர் உணர்ந்தார். அது, அவரை நெருக்கிக்கொண்டிருந்த மற்ற எவருக்குள்ளும் செல்லவில்லை, விசுவாசத்தில் அவரைத் தொட்டவளுக்குள் மட்டுமே சென்றது. “கர்த்தருடைய நற்பண்பு, அவரது வல்லமை அவரிடமிருந்து வெளியேறிச் சென்று, வேறொருவருக்குள் ஊடுருவப்பாய்ச்சப்பட்டிருந்தது என்ற உள்ளான உணர்வு அவருக்கு இருந்தது….அவரது வஸ்திரங்கள், தம் மனுஷீகத்தில், தம் மனித நற்பண்புமிக்க பரிபூரணத்தில் உள்ள தம் பரிபூரணமான நடத்தையை அடையாளப்படுத்துகின்றன. அவரது வஸ்திரங்களைத் தொடுவது என்பது தேவன் ஊனுருகொண்டிருந்த, அவரது மனுஷீகத்தில் உள்ள சாட்சாத்துக் கர்த்தரையே உண்மையில் தொடுவதாக இருந்தது (கொலோ. 2:9). அத்தகைய ஒரு தொடுதல் மூலம், தொடுகின்றவளுக்குள் அவரது மனுஷீகத்தின் பரிபூரணத்தின் மூலமாக ஊடுருவப்பாய்ச்சப்பட்டு, அவளது குணப்படுத்துதலாக ஆயிற்று. சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிற தேவன், அவளது இரட்சிப்பு மற்றும் அனுபவமகிழ்ச்சிக்காக அடிமை-இரட்சகரின் மனுஷீகத்தின் மூலம் அவரில் தொடக்கூடியவரானார்” (Life-study of Mark, Message 17, pp. 156–157). இவ்விதமான குணமாக்குதல் தெய்வீக வல்லமையினாலான ஓர் எளிய அற்புதத்திலிருந்து வேறுபட்டது. இந்த வகையான குணப்படுத்துதல் கர்த்தருடைய மனித வாழ்க்கையின் நற்பண்பிலிருந்து வெளிவருகிறது (see Life-study of Matthew, Message 44, p. 529).
III. நாம் தேவனைச் சேவிக்கக்கூடுமாறு, நம்மைப் பௌதிக ரீதியில் மட்டுமல்லாமல், ஆவிக்குரிய ரீதியிலும் குணப்படுத்த நமக்கு இன்னும் கிறிஸ்துவின் குணப்படுத்தும் ஊழியம் இன்றும் தேவை
தேவனை முழுமையாகச் சேவிப்பதிலிருந்து நம்மைத் தடுக்கும் வகையான நோய் பொதுவாக ஒரு பௌதிக ரீதியான நோய் அல்ல, மாறாக ஓர் ஆவிக்குரிய ரீதியான நோய் ஆகும். ஆகவே நம் நோயுற்ற ஆவிக்குரிய நிலைமையைக் கர்த்தர் குணப்படுத்துதல் நமக்குக் குறிப்பாகத் தேவை. எனினும் ஒரு பிணிநீக்கத்தை நாடுவதற்கு, நாம் நோய்வாய்ப்பட்டுள்ளோம் அதோடு நமக்கு ஒரு வைத்தியன் தேவை என்பதை முதலில் நாம் அடையாளம் காண வேண்டும் (மத். 9:12)! பல வழிகளில் (நம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும்) சீடர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள் அதோடு அவர்களுக்கு அவரது குணப்படுத்தும் ஊழியம் தேவைப்பட்டது என்பதைக் கர்த்தர் சுவிசேஷங்களில் வெளிப்படுத்துகிறார்.
A. கிறிஸ்து நம்மை ஒரு பொதுவான வழியில் குணப்படுத்துதல் என்பது கிறிஸ்துவைச் சேவிக்கத் தொடங்க நமக்குத் திறனளிக்கிறது
ஒரு நாள் கர்த்தர் பேதுருவின் வீட்டிற்கு வந்தார், அப்போது பேதுருவின் மாமியார் ஜுரமாய்க் கிடந்தாள் (மத். 8:14). அவர் அவளைக் குணப்படுத்தினார், அப்போது அவள் உடனே எழுந்து கர்த்தரையும், அவரது சீஷர்களையும் சேவிக்க ஆரம்பித்தாள். இது, நாம் கர்த்தரைச் சேவிக்க எழுந்திருப்பதைத் தடுக்கும் ஒரு பொதுவான நோய் நம் அனைவருக்கும் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. (முழு சரீரத்தையும் பாதிக்கும் ஜுரத்தால் பிரதிநிதித்துவப்படுத்தும்) ஒரு பொதுவான வழியில் நம்மைப் பாதிக்கும் இந்த நோயிலிருந்து நம்மைக் குணப்படுத்தும்படி கர்த்தர் நமக்குத் தேவை. நாம் சக்திவாய்ந்த ரீதியில் மறுபடிஜெநிப்பிக்கப்பட்டபோது அல்லது நாம் அவரால் புத்துயிரூட்டப்படும் போது கர்த்தர் நம்மைத் தொட்டவுடன், நாம் குணப்படுத்துதலைப் பெறுகிறோம் அதோடு கர்த்தரைச் சேவிக்க எழுந்திருக்க இயல்கிறோம். கர்த்தருக்குத் துதி! மேலும், கர்த்தருடைய குணப்படுத்தும் தொடுதல் மாற்கு 1:40 இல் உள்ள குஷ்டரோகியைச் சுத்திகரித்ததைப் போலவே அது நம்மையும் சுத்திகரிக்கிறது. இவ்வாறு, கர்த்தருடைய குணப்படுத்துதல் மூலம் நாம் ஆவிக்குரிய ரீதியாகக் குணப்படுத்தப்படுகிறோம், சுத்திகரிக்கப்படுகிறோம், சக்தியூட்டப்படுகிறோம், இதனால் நாம் கர்த்தரைச் சேவிக்க தகுதியடைந்து பலப்படுத்தப்படக்கூடும்.
B. கிறிஸ்துவின் தொடர்ச்சியான குறிப்பிட்ட குணப்படுத்துதல், கிறிஸ்துவை ஒவ்வொரு வழியிலும் சேவிக்க நமக்குத் திளனளிக்கிறது
நாம் ஒரு பொது வழியில் ஆவிக்குரிய ரீதியாகக் குணப்படுத்தப்பட்டு, கர்த்தரைப் பின்பற்றத் தொடங்கியபின், நாம் கர்த்தரால் முழுமையாகப் பயன்படுத்தப்பட முடிவதற்கு முன்பு பல குறிப்பிட்ட உறுப்புகளுக்கும் அவயவங்களுக்கும் கர்த்தருடைய கூடுதலான குணப்படுத்துதல் நமக்கு இன்னும் தேவை என்பதை நாம் கண்டுணர்கிறோம். உதாரணத்திற்கு, நாம் (ஒரு கூடுகையிலோ, ஒரு நண்பரிடமோ) கர்த்தருக்காகப் பேச வேண்டிய சமயத்தில், நாம் பெரும்பாலும் பேச இயலாமல் இருப்பதைக் கண்டுணர்கிறோம், எனவே நாம் ஊமையாக இருக்கிறோம். வார்த்தை ஊழியம் செய்யப்படும்போது நாம் சிறிதளவே பெற்றுக்கொள்கிறோம் என்பதையும் நாம் உணர்ந்தறியக்கூடும், எனவே நாம் செவிடாக இருக்கிறோம். நாம் கர்த்தரால் முழுமையாகப் பயன்படுத்தப்பட முடிவதற்கு முன்பு, நமக்கு அவரது குறிப்பிட்ட குணப்படுத்துதல் தேவை, குறிப்பாக நம் காதுகளுக்கும், கண்களுக்கும், நாக்குக்கும் தேவை!
- உறுப்புகளைக் குணமாக்கும் கர்த்தருடைய குறிப்பிட்ட குணப்படுத்துதல், அவரது சீஷர்கள் மத்தியில் குணப்படுத்துதலுக்கான கொஞ்சம் தேவையை அடிக்கடி சின்னமாகக் காட்டியது.
உறுப்புகளைக் குணமாக்கும் கர்த்தருடைய குறிப்பிட்ட குணப்படுத்துதல், அவரது சீஷர்கள் மத்தியில் குணப்படுத்துதலுக்கான கொஞ்சம் தேவையை அடிக்கடி சின்னமாகக் காட்டியது. உதாரணத்திற்கு, சீஷர்கள் அவரது வருகின்ற ராஜ்யத்தில் பதவிக்காக பேரார்வமுள்ளவர்களாக ஆகவிட்ட போது அவர்கள் தாங்கள் குருடர்களாக இருந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டினர் (மாற். 10:35–45). அவர்களுக்குத் தங்கள் குருட்டுத்தன்மையைக் குணப்படுத்தும் ஒரு குணப்படுத்துதல் தேவைப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகக் குருடனாகிய பர்திமேயு’வைக் கர்த்தர் குணப்படுத்தினார் (மாற். 10:46–52).
- பல்வேறு உறுப்புகளைக் குணமாக்கும் கர்த்தருடைய குறிப்பிட்ட குணப்படுத்துதலுக்கு இரண்டு விஷயங்கள் பெரும்பாலும் தேவைப்பட்டது, அதாவது உறுப்புகளுக்கு அவர் குறிப்பிட்ட விதத்தில் பிரயோகித்தலும், மனிதனின் ஒத்துழைப்பும்.
மாற்கு 7:32 இல், ஒரு செவிடும் ஊமையுமான மனிதன் கர்த்தரிடம் குணப்படுத்துதலுக்காகக் கொண்டுவரப்பட்டான். இந்த குணப்படுத்துதலில் கர்த்தர் தம் கைகளை இந்த மனிதனின் காதுகளுக்குள் அழுத்துதலும், தம் உமிழ்நீரால் இந்த மனிதனின் நாவைத் தொடுதலும், பெருமூச்சுவிடுதலும், மனிதனின் காதுகள் திறக்கப்படும்படி கட்டளையிடுதலும் சம்பந்தப்பட்டது. மாற்கு 8:23 இல், ஒரு குருடன் கர்த்தரிடம் கொண்டுவரப்பட்டான், மேலும் கர்த்தர் அவனது கண்களில் உமிழ்ந்து, தம் கைகளை அவன்மேல் வைத்தார். குருடன் சிறிது பார்வையைப் பெற ஆரம்பித்தான், ஆனால் அவனது பார்வை முழுவதுமாக மீட்டெடுக்கப்படுவதற்கு முன்பு கர்த்தர் அவன்மேல் மீண்டும் கைகளை வைக்க வேண்டியிருந்தது. (உடனடியாக இதற்குப் பிறகு பேதுரு, கிறிஸ்துவே தேவனுடைய குமாரனாக இருந்தார் என்ற தரிசனத்தைப் பெற்றான்.) யோவான் 9:6-7 இல், கர்த்தர் குருடனுடைய கண்களின்மேல் பூசும்படி ஒரு வகையான களிமண்ணை (சேற்றை) உண்டாக்கத் தரையிலே துப்பினார், பின்னர் ஒரு குறிப்பிட்ட குளத்தில் இந்தக் களிமண்ணைக் கழுவச் செல்லும்படி அவனிடம் சொன்னார். அவன் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தபின் அவன் தன் பார்வையைப் பெற்றான். குறிப்பிட்ட உறுப்புகளைக் குணமாக்கும் கர்த்தருடைய குணப்படுத்துதலுக்கு, கர்த்தர் மூலமான கூடுதலான இடைபடுதலும், மனிதனின் தரப்பில் ஒரு மும்முரமான ஒத்துழைப்பும் தேவை என்பதை இதுபோன்ற சங்கதிகள் சுட்டிக்காட்டுகின்றன. நாம் கர்த்தரைச் சேவித்து, அவரைப் பின்பற்றும்போது, நம் கேட்கும், பேசும், பார்க்கும் உறுப்புகளைக் குணப்படுத்தக் கர்த்தருடைய கூடுதலான இடைபடுதல் நமக்குத் தேவை என்பதை நாம் உணர்ந்தறிவோம், இதனால் நாம் கர்த்தரை அதி முழுமையான வழியில் சேவிக்கக்கூடும். இதற்காக நாம் கர்த்தருக்கு நம் முழு ஒத்துழைப்பையும் கொடுப்போமாக!
IV. குணப்படுத்துதல் என்பது இன்று கிறிஸ்துவின் சரீரத்தின் மூலமான கிறிஸ்துவின் ஊழியத்தின் ஒரு பகுதியாக இன்னும் உள்ளது.
A. கர்த்தருடைய ஊழியத்தின் தொடர்ச்சியை முன்னெடுப்பவர்களாகிய தம் சீஷர்களுக்கு அவர், வியாதிகளைக் குணப்படுத்துவதற்கான அதிகாரத்தைக் கொடுக்கிறார்—மத். 10:1; லூக். 9:2; மாற். 16:14–18
கர்த்தருடைய குணப்படுத்தும் ஊழியம் கர்த்தருடைய சீஷர்களால் தொடரப்பட்டது என்பது நடபடிகள் புத்தகத்தில் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது (அப். 3:2–8; 5:16; 8:6–7; 9:33–34; மற்றும் 19:11–12 ஐ பார்க்கவும்). இன்றும், நாம் இன்னும் நடபடிகள் புத்தகத்தில் இருக்கிறோம், மேலும் குணப்படுத்துதலின் ஊழியம் இன்றும் நம்மிடையே இன்னும் உள்ளது. கர்த்தருடைய ஊழியத்தில் ஒரு பங்குள்ளவர்களாகிய நாம் அனைவரும் கர்த்தருடைய குணப்படுத்தும் ஊழியத்தை மற்றவர்களிடம் எவ்வாறு பயிற்சிசெய்வது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். “இன்று ஒவ்வொரு விழுந்துபோன மனிதனும் நோய்வாய்ப்பட்டிருக்கிறான். பலர் பௌதிக ரீதியில் நோய்வாய்ப்பட்டுள்ளனர், மேலும் அனைவரும் ஆவிக்குரிய ரீதியில் நோய்வாய்ப்பட்டுள்ளனர். ஒவ்வொரு விழுந்துபோன நபரும் ஆவிக்குரிய ரீதியில் நோய்வாய்ப்பட்டிருப்பதால், உள்ளூர் சபைகளிலுள்ள நாம் வைத்தியர்களைப் போன்று சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும், சத்தியத்தைப் போதிக்கவும் கற்றாக வேண்டும். இதன்அர்த்தம், நம் போதனையிலும் பிரசங்கத்திலும் நாம் மக்களுக்கு அவர்களது குணப்படுத்துதலுக்கான ஒரு பரலோகப் பரிந்துரை மருந்தை, தெய்வீக மருந்தைக் கொடுக்க வேண்டும். மக்கள் குணப்படுத்தப்படும் இத்தகைய ஒரு வழியில் எவ்வாறு சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, சத்தியத்தைப் போதிப்பது என்பதை நம்மிடையே உள்ள பரிசுத்தவான்கள் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்” (Life-study of Mark, Message 6, p55, see also Life-study of Matthew, Message 12, pp159–160).
B. சபை, கர்த்தருடைய சரீரமாக, இயேசு கிறிஸ்துவின் நற்பண்புமிக்கப் பரலோக மனுஷீகத்தை உடைமையாகக் கொண்டுள்ளது, இதிலிருந்து பௌதிக மற்றும் ஆவிக்குரியக் குணப்படுத்துதல் பாய்ந்தோடுகிறது—மாற். 6:56
மற்றவர்கள் நம் மூலமாகக் குணப்படுத்தப்படுவதை நாம் பார்க்க விரும்பினால், நாம் கிறிஸ்துவின் உயர்த்தப்பட்ட மனுஷீகத்தால் வாழ்பவர்களாக இருக்க வேண்டும். மக்கள் கர்த்தருடைய வஸ்திரங்களைத் தொட்ட போது, அவர்கள் குணப்படுத்தப்பட்டனர் (மாற். 6:56). இயேசுவின் வஸ்திரம் அவரது தெய்வீகத்தை அடையாளப்படுத்தவில்லை. மாறாக, இது அவரது மனுஷீகத்தின் நீதியான செயல்களை அடையாளப்படுத்துகிறது. அவரது மனுஷீகம் ஊதா நாடாவின், அதாவது பரலோக ஆளுகையினால் சரிப்படுத்தப்படுவதின் அடையாளத்தை ஏந்தியுள்ளது. இது நோயுற்றவர்களைக் குணப்படுத்தும் திறனுடையதாக இருந்த ஒரு நற்பண்பை உற்பத்திசெய்தது.சபை மக்களாகிய நம்மிடம் நேர்த்தியான சபை வாழ்க்கை இருந்து, நாம் கிறிஸ்துவினால் வாழும்போது, நாம் அவரது உயர்த்தப்பட்ட மனுஷீகத்தை வாழ்ந்துகாட்டுவோம். இவ்விதமான வாழ்க்கையில் நம்மைச் சுற்றியிருக்கிறவர்களைச் சுகப்படுத்த வல்லமையுடனான ஒரு நற்பண்பு இருக்கும்” (Life-study of Matthew, Message 44, pp529–530).
இடைநிலைபிரயோகம்: ஆதாமின் பாவத்தின் காரணமாக நோய் மனுக்குலத்திற்கு வந்தது. மனிதர்கள் இப்போது பாவத்தோடு பிறந்துள்ளதால், நோய் ஒவ்வொரு மனிதனையும் கஷ்டப்படுத்துகிறது. நோய் உடலின் எந்தப் பகுதியையும் தாக்க முடியும். ஒரு ஜுரம நம் உடல் முழுவதையும் வலிக்கச் செய்யும். பிற சுகவீனங்கள் நம் கண்கள் அல்லது காதுகள் போன்ற ஒரு பகுதியை மட்டுமே தாக்குகின்றன, இவை குருட்டுத்தன்மையை அல்லது செவிட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும். மனிதனிடம் பாவம் இருப்பதால்தான், மனித சரீரத்திற்கான இதுபோன்ற சேதம் அனைத்தும் ஏற்படுகின்றன. பாவம் நோயையும் குறைபாடுகளையும் உள்ளே கொண்டுவருகிறது, இது தேவனை முழுமையாகவும் சுதந்திரமாகவும் பின்பற்றுவதற்கான மனிதனின் திறனைக் கட்டுப்படுத்துகிறது. உதாரணத்திற்கு, ஒருவர் தான் கர்த்தரால் ஏதோவொரு குறிக்கோளுக்காக அழைக்கப்பட்டதாக உணரும் போது, நோய் அவனுக்கு இடையூறு செய்யக்கூடும். இது, கர்த்தரைப் பின்பற்றுவதிலிருந்து அவனுக்கு இடையூறு செய்ய பாவத்தின் மூலமாக கிரியைசெய்யும் எதிரியே. எனினும் கர்த்தர் பாவங்களை மன்னிப்பதற்காகவும், நோயின் காரணமாகிய பாவத்தோடு இடைபடவும் மரித்தார். அவரே மனிதனின் பாவங்களுக்காக மரிக்க வந்தவராக இருந்தார் என்பதால், கிறிஸ்து மக்களைக் குணப்படுத்த முடியும், மேலும் அவர் அவ்வாறு செய்தார். அவரது ஊழியம் பௌதிக ரீதியான துன்பத்தில் இருந்த பலருக்கு ஒரு மாபெரும் விடுதலையை உள்ளே கொண்டுவந்து, அவரைப் பின்பற்றும்படி எழுந்திருக்க அவர்களுக்குத் திறனளிக்கின்றது. நாம் கர்த்தரைப் பின்பற்ற இயலுமாறு, கர்த்தர் நம் ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொள்கிறார். ஆகவே நம் வாழ்க்கையில் நோய் என்பது ஒரு சிறிய விஷயம் என்று நாம் கருதக்கூடாது. நாம் ஏன் நோய்வாய்ப்பட்டிருக்கிறோம் என்பது குறித்து நாம் கர்த்தருக்கு முன்பாக இருக்க வேண்டும். (மற்றவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது நமக்கு அவர்களது சூழ்நிலை தெரியாது என்பதால் நாம் அவர்களை நியாயந்தீர்க்க முடியாது, ஆனால் நாம் எப்போதும் எதிரியைக் கட்டிப்போட வேண்டும்.)எனினும், நாம் ஜீவனில் வளரும் போது நாம் கர்த்தரைக் கிருபையாக எடுத்துக்கொள்ளக் கற்கும்படி, நாம் பலவீனங்களையும் சுகவீனங்களையும் கொண்டிருக்குமாறு கர்த்தர் அனுமதிக்கக்கூடும். பவுல் தன் இளம் உடன்-வேலையாளாகிய தீமோத்தேயுவிடம், அவனது உடல்நலப் பிரச்சினைகளுக்காக அற்புத குணப்படுத்துதலை நாடும்படி சொல்லவில்லை (1 தீமோ. 5:23), மேலும் பவுலும் தானே ஏதோவொரு பௌதிக பிரச்சினையால் அவதிப்பட்டான் (2 கொரி. 12:7). நம்மை தெய்வீக ஜீவனின் ஒழுங்குபடுத்துதலின் கீழ் வைத்திருக்க நோயின் வரம்பு கர்த்தரால் பயன்படுத்தப்படலாம், ஏனெனில் நமக்கு எந்த பிரச்சினையும் இல்லாதபோது, நாம் பெரும்பாலும் தளர்வானவர்களாகி விடுகிறோம். நமக்கு என்ன தேவை என்பதைக் கர்த்தர் சரியாக அறிவார், மேலும் அவர் நம் நன்மைக்காக எதிர்மறையான ஒன்றைக் கூட பயன்படுத்தலாம். எதுவுமே, நம் சுகவீனங்கள் கூட நமக்குத் தற்செயலாக நடப்பதில்லை என்ற உணர்ந்தறிதலை இந்த வகையான பாடம் உறுதிப்படுத்த முடியும். நாம் ஆரோக்கியமாக உள்ள போது இருப்பதை விட இன்னும் அதிகமாக நாம் நோயுற்று உள்ள போது, கிறிஸ்துவை ஆதாயம்பண்ண நம் பௌதிகக் குறைபாடுகளும் சுகவீனங்களும் காரணமாக அமைகின்றன. இதனால்தான், பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்கள் பாவத்தின் இத்தகைய துணை-உற்பத்திப்பொருட்களை அனுபவிக்க தேவன் இன்னும் அனுமதிக்கிறார். இறுதியில் பவுல், தன்மேல் தேவனுடைய வல்லமை நிழலிடும்படி (தங்கும்படி) அவன் தன் பலவீனஙகளில் மேன்மைப் பாராட்டுவான் என்று கூற முடிந்தது (2 கொரி. 12:9). நாம் சுகவீனமாக அல்லது பலவீனமாக ஆகிவிடும் போது நாம் கர்த்தருடைய பிரகாசத்திற்காக ஜெபிக்க வேண்டும். கர்த்தரிடமிருந்து வந்த ஒன்றாக அதை ஏற்றுக்கொள்வதா அல்லது சாத்தானிடமிருந்து வந்த ஒன்றாக அதை நிராகரிப்பதா என்பதை அப்போது நாம் அறிவோம்.
சுவிசேஷப் பிரயோகம்: நோய் என்பது பாவத்தின் ஒரு விளைவாகும்; பாவம் இருக்கும் இடத்தில், நோயும் இருக்கிறது. இதுவே பௌதிக மண்டலத்தைப் பொறுத்தவரை உள்ள உண்மையாக மட்டுமல்லாமல் (ஒரு பாவமுள்ள வாழ்க்கைமுறைக்கும் வியாதிகளுக்கும் இடையேயான தொடர்பைக் காட்டும் ஒரு சில எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்படலாம், அதாவது புகைபிடித்தல் மற்றும் குடிப்பதால் ஏற்படும் நுரையீரல் மற்றும் கல்லீரல் புற்றுநோய், முறையற்ற தகாத உறவுகளின் மூலமாகப் பெறப்பட்ட வியாதிகள் ஆகியன போன்றவை), ஆவிக்குரிய மண்டலத்தைப் பொறுத்தவரையிலும் உள்ள உண்மையாகவும் உள்ளது. ஒவ்வொரு பாவியும், கர்த்தருக்கான தங்கள் சேவையை இல்பொருளாக்கி, அடிமைகளாகப் பாவத்தைச் சேவிக்கும்படி அவர்களைத் தூண்டி, மரணத்தை விளைவிக்கும் ஒரு பலவீனப்படுத்தும் பாவத்தால் பீடிக்கப்பட்டுள்ளான் (ரோ. 6:6, 23). ஒரு நபராகிய பாவத்திற்கு அவர்கள் மீது ஒரு வல்லமை உள்ளது, அது தன் கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படிதலில் பணிந்தடங்கும்படி அவர்களைப் பலவந்தப்படுத்துகிறது (ரோ. 7:17). இதன் விளைவாக, இதன் வெளியாக்கமே நோய். இன்றைய மனுக்குலத்தின் நோய்வாய்ப்பட்ட நிலைமைக்கு நம் கண்கள் திரைநீக்கப்பட வேண்டும். ஆனால் இதை விட அதிகமாக, நாம் இனியும் நோயின் ஊற்றைக்—பாவம்—குறித்து அறியாமையில் இருக்கக்கூடாது. ஒருவரின் நேர்த்தியான ஆரோக்கியம் மீட்டெடுக்கப்பட முடிவதற்கு முன்பு, பாவம் அகற்றப்பட்டாக வேண்டும், பாவம் இடைபடுத்தப்பட்டாக வேண்டும். மனிதன் தன்னைப் பாவத்திலிருந்து விடுபடச் செய்வதற்குப் பல நூற்றாண்டுகளாக தன்னில்தானே முயற்சித்துக்கொண்டு வந்திருக்கிறான், ஆனாலும் பயனில்லை; தத்துவம், மதம், கலாச்சாரம், அரசாங்கம்—இவை அனைத்தும் அதற்கு எதிராக சக்தியற்றவையாக உள்ளன. மனிதனுக்குக் குணப்படுத்துதல் தேவை, ஆனால் மனிதன் தன்னையே குணப்படுத்த முடியாது. மனிதனுக்கான தம் கரிசனையில் கர்த்தராகிய இயேசு, உங்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி அல்ல, மாறாக உங்களை மன்னிக்கவும், இரட்சிக்கவும், குணப்படுத்தவும் உங்களுக்குள் வர விரும்புகிறார் (யோவான் 3:17; லூக். 19:10; 10:33–34; மத். 8:7). நீ சொஸ்தமாக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறாயா (யோவான் 5:6)? ஆனால் நீங்கள் கேட்டால், அவர் குணப்படுத்த வல்லவராயும் சித்தமுள்ளவராயும் இருக்கிறார் (மாற். 1:40–41; மாற். 2:5–12). நீங்கள் பாவங்களை அறிக்கையிட்டால், உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி உங்களைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1 யோ. 1:9).
மிக முக்கியக் காரியங்கள்: நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.).
பின்னணிவாசிப்பு:Life-study of Matthew,Message25,pp316–317;Message26,pp324–326;Message27,pp329–333;Message29,pp354–356,361;Message32,pp401–403;Message44, pp529–530; Message 46, p552; Life-study of Mark, Message 6, pp54–58; Message 7, pp62–69;Message19,p177;Message22;Message23,pp205–209,211–212;Message26,p233;Message 33; Message 52, p447; Message 63, pp533–534; Message 65, p549.
REFERENCES:Life-study of Matthew,Message25,pp316–317;Message 26,pp324–326;Message27,pp329–333;Message29,pp354–356,361; Message 32, pp401–403; Message 44, pp529–530; Message 46, p552; Life-study of Mark, Message 6, pp54–58; Message 7, pp62–69; Message19,p177;Message22;Message23,pp205–209,211 212;Message26,p233;Message33;Message52,p447;Message63,pp533–534;Life-studyofLuke,Message11,pp92–93;Message12,p102;Message13,pp107–110;Message 20, p169; Message 31, pp262–264; Life studyofJohn,Message13;Message14,pp168–171;Message21;Life-studyofActs,Message13,pp100–101; Message 14, pp112–113; 2 Timothy 4:20, footnote 2.