வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்

பகுதி 8

பாடம் 01 – 09

பாடம் 10 – 18

கிறிஸ்துவின் ஊழியம்

Jump to section

கிறிஸ்துவுக்கு இருந்த சபலப்படுத்துதல்கள்

குறிக்கோள்: எவ்வாறு கர்த்தர் பிசாசை ஒரு மனிதனாக எதிர்கொண்டு, தோற்கடித்தார் என்பதைக் காட்டுவதற்கு.

பொருட்சுருக்கம்: கர்த்தராகிய இயேசு தண்ணீரில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, தேவனுடைய ஆவியானவரால் அபிஷேகம் செய்யப்பட்டபின், அவர் பிசாசினால் சபலப்படுத்தப்படும்படி ஆவியானவரால் நடத்தப்பட்டார். இந்தச் சபலப்படுத்துதல், அவர் தம் ஊழியத்தை நிறைவேற்றத் தகுதியானவராக இருந்தார் என்பதை நிரூபிப்பதற்கான ஒரு சோதனையாக இருந்தது. தம் ஊழியத்தை நிறைவேற்ற, அவர் தேவனுடைய எதிரியாகிய பிசாசை, அதாவது, சாத்தானைத் தோற்கடிக்க வேண்டியிருந்தது, மேலும் அவர் இதை ஒரு மனிதனாகச் செய்ய வேண்டியிருந்தது. முதலாவதாக, கற்களை அப்பங்களாக மாற்றுவதன் மூலம் கர்த்தர் ஒரு மனிதனாகத் தம் அந்தஸ்தைப் புறக்கணிக்கவும், அவர் தேவ குமாரனாக இருந்தார் என்பதை நிரூபிக்கவும் செய்யும்படி கர்த்தரைப் பிசாசு சபலப்படுத்தினான். எனினும், கர்த்தர் ஒரு மனிதனாகத் தம் நிலையில் உறுதியாக நின்று, “மனுஷன்…” என்று கூறினார் (மத். 4:4). இரண்டாவதாக, தேவாலயத்து உப்பரிகையிலிருந்து கீழே குதித்து தாம் தேவ குமாரனாக இருந்தார் என்பதைக் காட்டும்படி ஓர் அற்புதத்திற்குரிய வழியில் செயலாற்றும்படி பிசாசு அவரைச் சபலப்படுத்தினான். கர்த்தர், “என்றும் எழுதியிருக்கிறதே…” என்று கூறுவதன் மூலம் பிசாசைத் தோற்கடித்தார் (மத். 4:7). இறுதியாக, தன்னை ஆராதிப்பதற்கு ஈடாக பிசாசு அவருக்கு உலகத்தின் ராஜ்யங்களையும், அவற்றின் மகிமையையும் வழங்கினான். மீண்டும், கர்த்தர் பிசாசின் சபலப்படுத்துதலை எதிர்த்து, “அப்பாலே போ சாத்தானே” என்று அவனிடம் கூறினார் (மத். 4:10). கர்த்தராகிய இயேசு, ஒரு மனிதனாக நின்று, முற்றிலும் வெற்றி பெற்றார், மேலும் பிசாசின் சபலப்படுத்துதல் ஒரு முழுமையான தோல்வியாக இருந்தது. பிசாசின் சபலப்படுத்துதல்கள் மீதான கிறிஸ்துவின் வெற்றியில் அவரை நாம் அறிந்துப் பாராட்ட வேண்டும்.

பின்புலம்: சாத்தானை (ஒரு சிருஷ்டியை) தோற்கடிக்க தேவனுக்கு ஒரு மனிதன் (இன்னொரு சிருஷ்டி) தேவை, மேலும் இந்த வெளிச்சத்தில், புறம்பான அற்புதங்கள் அதிகமாக ஒன்றும் பொருட்டல்ல. இந்தப் பாடம், இளம் வாலிபர்கள் தங்கள் பாராட்டுதலைப் புறம்பான அற்புதங்களிலிருந்து கிறிஸ்துவிடம் திருப்ப உதவும், இவர் அற்புதங்களின் வழியை நிராகரித்து, ஒரு மனிதனாகத் தம் நிலையில் நின்று, தேவனுக்கு சாத்தானைத் தோற்கடிப்பதில் தம் குறிக்கோளை நிறைவேற்ற மனிதன் தேவை என்பதை அங்கீகரித்தவர். இளம் வாலிபர்கள் இதைப் பார்த்தால், உலகத்தில் இடைநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி இளம் வாலிபர்கள் பெரும்பாலும் ஈர்க்கப்பட்டுள்ள சூப்பர் ஹீரோ கதைகளால் அவர்கள் மோகம் கொள்ள மாட்டார்கள். தேவனுடைய குறிக்கோளை நிறைவேற்ற நாம் சூப்பர் ஹீரோக்களாக இருப்பது அவருக்குத் தேவையில்லை. எதிரியின் ஒவ்வொரு சபலப்படுத்துதலையும் ஜெயங்கொள்ள முடியக்கூடியவராகிய கிறிஸ்துவை நாம் அனுபவித்துமகிழ்வதே அவருக்குத் தேவை.

திகாரங்கள்: மத்தேயு 4.

கற்பிப்பதற்கான உண்மைகள் கொண்ட செய்திக்குறிப்பு:

I. முதல் தேவ-மனிதன் பிசாசினால் சபலப்படுத்தப்படும்படி பரிசுத்த ஆவியால் நடத்தப்பட்டார்—மத். 4:1

மத்தேயு 4:1, “அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்” என்று கூறுகிறது. இந்த வசனம், பிசாசினால் சபலப்படுத்தப்படும்படி கர்த்தர் வனாந்தரத்திற்குள் செல்லுதல் ஆவியானவரின் நடத்துதலின் கீழும்,தேவனுடைய ஏற்பாட்டின் கீழும் இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இந்தச் சபலப்படுத்துதல், இயேசு தம் ஊழியத்தை நிறைவேற்றத் தகுதியானவராக இருந்தார் என்பதை நிரூபிப்பதற்காக தேவனால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஒரு சோதனையாக இருந்தது. தம் ஊழியத்தை நிறைவேற்ற, அவர் தேவனுடைய எதிரியாகிய பிசாசை, அதாவது, சாத்தானைத் தோற்கடிக்க வேண்டியிருந்தது, மேலும் அவர் இதை ஒரு மனிதனாகச் செய்ய வேண்டியிருந்தது. தேவன் சிருஷ்டிகராக ஒருபோதும் அவரது சிருஷ்டிப்பாகிய சாத்தானுடன் நேரடியாக இடைபட மாட்டார். சிருஷ்டிகராகிய தேவன் தம் சிருஷ்டிப்பை எளிதில் தோற்கடிக்க முடியும் என்பதால் இது தேவனுக்கு ஒரு மகிமையாக அளிக்காது. சாத்தான் விஷமூட்டிக் கெடுத்த அதே மனிதன் மூலம் சாத்தானைத் தோற்கடிக்க தேவன் விரும்புகிறார். இந்த வழியில், மனிதன், ஒரு சிருஷ்டி, இன்னொரு சிருஷ்டியை, சாத்தானை தோற்கடிக்கிறான். இது தேவனுக்கு ஒரு மகிமை ஆகும். ஆகவே, தேவனுடைய நித்திய பொருளாட்சியை நிறைவேற்றுவதற்காகக் கர்த்தர் தம் ஊழியத்தை முன்னெடுக்கத் தகுதியுள்ளவராக இருக்க அவர் ஒரு மனிதனாக எதிரியைத் தோற்கடிக்க வேண்டியிருந்தது.

II. இந்த முதல் தேவ-மனிதன் ஒரு மனிதனாகத் தம் நிலையில் நிற்பதன் மூலம் பிசாசின் சபலப்படுத்துதல்கள் ஒவ்வொன்றையும் ஜெயங்கொண்டார்—மத். 4:2–11

இந்த முதல் தேவ-மனிதன் அனுபவித்த சோதனை, தேவனுடைய நித்திய பொருளாட்சியின் நிறைவேறுதலுக்காக உண்மையில் தேவனுக்கும் சாத்தானுக்கும் நடுவிலான ஒரு யுத்தமாக இருந்தது. ஒரு மனிதனாக சாத்தானைத் தோற்கடிக்க தேவனுக்குக் கிறிஸ்து தேவை. ஆகவே, இந்த முதல் தேவ-மனிதன் ஒரு மனிதனாக தம் அந்தஸ்தைப் புறக்கணித்து, தேவ குமாரனாக தம் நிலையை எடுத்துக்கொள்ளும்படி அவரைச் சபலப்படுத்துவதே சாத்தானின் உத்தியாக இருந்தது. கர்த்தர் இதைச் செய்திருந்தார் எனில், அவர் தேவனுடைய சிருஷ்டியாகிய சாத்தானைத் தோற்கடிப்பதற்கான தமது நிலைப்பாட்டை இழந்திருப்பார். எனினும், சாத்தானின் உத்தியை அறிந்து, கர்த்தர் தாம் தேவனுடைய சிருஷ்டியாகிய சாத்தானுடன் இடைபடும், தேவனுடைய இன்னொரு சிருஷ்டியாகிய ஒரு மனிதனாக இருந்தார் என்பதை வலியுறுத்துவதன் மூலம் ஒவ்வொரு முறையும் எதிர்த்துப் போராடினார். இதன் மூலம், அவர் பிசாசைத் தோற்கடித்து, தேவனுடைய மகிமைக்காக யுத்தத்தில் வென்றார். நாம் இந்தப் பின்வரும் சபலப்படுத்துதல்கள் ஒவ்வொன்றிலும் அவரது வெற்றியைக் காண்கிறோம்.

A. முதலாவதாக, கற்களை அப்பங்களாக மாற்றும்படி கர்த்தரைப் பிசாசு சபலப்படுத்தினான்—மத். 4:2–4

மத்தேயு 4:2–3, “அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்” என்று கூறுகிறது.

  1. கர்த்தர் ஒரு மனிதனாக தம் அந்தஸ்தைப் புறக்கணித்து, தேவ குமாரனாக தம் நிலையை எடுத்துக்கொள்ளும்படி சபலப்படுத்தப்பட்டார்—மத். 4:3

சபலப்படுத்துகிறவன் கர்த்தரை நோக்கி, “நீர் தேவனுடைய குமாரனேயானால்…” என்று கூறினான் (மத். 4:3). இதற்கு நாற்பது நாட்களுக்கு முன்னர், பரலோகங்களிலிருந்து பிதா, “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்று கிறிஸ்துவைக் குறித்து அறிவித்தார் (மத். 3:17). கிறிஸ்து உண்மையில் தேவ குமாரனாக இருந்தார், ஆனால் கர்த்தர் தேவனுடைய எதிரியைத் தோற்கடிக்க, அவர் ஒரு மனிதனாக தம் நிலையில் நிற்க வேண்டியிருந்தது. இதை அறிந்த பிசாசு, ஒரு மனிதனாக தம் அந்தஸ்தைப் புறக்கணித்து, தேவ குமாரனாக தம் நிலையை எடுத்துக்கொள்ளும்படி கர்த்தரைச் சபலப்படுத்துவதற்கான ஓர் அடித்தளமாகப் பிதாவின் அறிவிப்பை எடுத்துக் கொண்டான். கரத்தர் தம் பசியை ஆற்றும்படி அற்புதத்திற்குரிய ரீதியில் கற்களை அப்பங்களாக மாற்றுவதன் மூலம் தாம் தேவ குமாரனாக இருந்ததை நிரூபிக்க வேண்டும் என்று அவன் விரும்பினான். கர்த்தர் இதைச் செய்திருந்தால் அதோடு தேவ குமாரன் என்ற தம் அந்தஸ்தை நிரூபிக்க தம்மையே ஒரு காட்சியாக்கியிருந்தால், அவர் ஒரு மனிதன் என்ற தம் நிலையை விட்டுவிட்டு, சாத்தானைத் தோற்கடிப்பதற்கான தம் நிலைப்பாட்டை இழந்திருப்பார். ஆனால் கர்த்தர் மாம்சத்தில் ஒரு மனிதனாக தம் நிலையில் நிலைத்திருந்ததன் மூலம் தம் ஞானஸ்நானத்தின் அடித்தளத்தின் மீது நின்றார் (பாடம் 2 ஐப் பார்க்கவும்).

  1. கர்த்தர் ஒரு மனிதனின் நிலையில் நிற்பதன் மூலம் பிசாசைத் தோற்கடித்தார்—மத். 4:4

“மனுஷன்…” என்று கூறுவதன் மூலம் கர்த்தர் பிசாசை எதிர்கொண்டார் (மத். 4:4). இந்த ஒரே வார்த்தை எதிரிக்கு ஒரு கொல்லும் வார்த்தையாக இருந்தது, இதன் மூலம் கர்த்தர் சாத்தானோடு (ஒரு சிருஷ்டி) இடைபடுவதில், ஒரு மனிதன் (இன்னொரு சிருஷ்டி) என்ற நிலையில் தம் நிலைப்பாட்டை வலியுறுத்தினார். கர்த்தர் ஒரு மனிதனாக தம் நிலையைத் தொடர்ந்து பற்றிக்கொண்டார், மேலும் இதனால் சாத்தானைத் தோற்கடித்தார். கர்த்தர், “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்று தொடர்ந்து கூறினார் (மத். 4:4). கர்த்தர் தம் சொந்த வார்த்தைகளை மேற்கோள் காட்டவில்லை, மாறாக தேவனுடைய வார்த்தையை எதிரியிடம் பேசினார். கர்த்தர் மேற்கோள் காட்டிய வார்த்தை, அவர் தம் பசிக்காக அக்கறைப்படவில்லை என்பதையும், கற்களை அப்பமாக மாற்றுவதன் மூலம் ஒரு காட்சியாக்குவதற்கு அவர் அக்கறைப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. மாறாக அவர் தேவனுடைய ஆவலுக்காக அக்கறைப்பட்டு, வேதவசனங்களை தம் அப்பமாக எடுத்துக்கொண்டு அதினாலே வாழ்ந்தார். இங்கே “வார்த்தை” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க சொல் “ரீமா” ஆகும், இது உடனடி வார்த்தையைக் குறிக்கிறது. எந்த வார்த்தையினால் கர்த்தர் வாழ்ந்து வந்திருந்தாரோ, அது அவரது சூழ்நிலைக்குப் பிரயோகிக்கப்பட்ட உடனடி வார்த்தையாக ஆயிற்று. அதேபோல், நாம் வார்த்தையை நம் போஷாக்களிக்கும் உணவாக எடுத்துக்கொண்டு, நாள் முழுவதும் நாம் சந்திக்கும் ஒவ்வொரு சபலப்படுத்தும் சூழ்நிலைக்கும் அதைப் பிரயோகிக்கலாம்.

B. இரண்டாவதாக, தேவாலயத்து உப்பரிகையிலிருந்து கீழே குதிக்கும்படி கர்த்தரைப் பிசாசு சபலப்படுத்தினான்—மத். 4:5– 6

மத்தேயு 4:5–6, “அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்” என்று கூறுகிறது.

  1. கர்த்தர் தாம் தேவ குமாரனாக இருந்தார் என்பதைக் காட்டும்படி ஓர் அற்புதத்திற்குரிய வழியில் செயலாற்றும்படி சபலப்படுத்தப்பட்டார்—மத். 4:6

கிறிஸ்து தேவ குமாரனாக இருந்தார் என்ற பிதாவின் அறிவிப்பின் அடிப்படையில், சபலப்படுத்துகிறவன், “நீர் தேவனுடைய குமாரனேயானால்…” என்று மீண்டும் கூறினான் (மத். 4:6). கர்த்தர் தம் தேவாலயத்து உப்பரிகையிலிருந்து குதித்து, அற்புதத்திற்குரிய வழியில் தேவதூதர்கள் தம்மை ஏந்திக்கொள்ள வைப்பதன் மூலம் தம் தெய்வீகத்தை எடுத்துக்கொள்ளும்படி கர்த்தரைச் சாத்தான் சபலப்படுத்தினான். சாத்தான் வேதவசனங்களை ஒரு தந்திரமிக்க வழியில் மேற்கோள் காட்டி, ஒரு மனிதனாக தம் நிலைப்பாட்டை விட்டுவிட்டு, தாம் தேவனுடைய குமாரனாக இருந்தார் என்பதை நிரூபிக்கும்படி கர்த்தரை மீண்டும் சபலப்படுத்தினான்.

  1. தம் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருக்கும்படி ஒரு மனிதனாக நிற்பதன் மூலம் கர்த்தர் பிசாசை தோற்கடித்தார்—மத். 4:7

கர்த்தர், “உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே” என்று கூறுவதன் மூலம் எதிர்த்துப் போராடினார் (மத். 4:7). கர்த்தர் வேதவசனங்களை மீண்டும் மேற்கோள் காட்டினார், மேலும் அவற்றை மேற்கோள் காட்டுவதில், அவர் தம் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருக்க வேண்டிய, தேவனுக்கு முன்பான ஒரு மனிதனாக இருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டினார். மீண்டும், அவர் ஒரு மனிதனாக தம் நிலைப்பாட்டைப் பற்றிக்கொண்டார். பிசாசின் முதலாவது சபலப்படுத்துதல் மனித வாழ்க்கையோடு தொடர்புடையதாக இருந்தது. பிசாசின் இரண்டாவது சபலப்படுத்துதல் மதத்தின் காரியத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. நாம் யாரோ ஒருவர் என்பதை நிரூபிக்க ஒன்றைச் செய்யும்படி மதரீதியான மண்டலத்தில் பிசாசு நம்மை அடிக்கடி சபலப்படுத்துகிறான். நாம் சுய-மகிமைக்காகவோ, நம்மை நாமே உயர்த்தும் சுய-உயர்த்துதலுக்காகவோ அக்கறைப்படாமல் இருப்பதன் மூலம் இந்தச் சபலப்படுத்துதலை நிராகரிக்க வேண்டும். நாம் யாரோ ஒருவர் என்பதை நிரூபித்துக் காட்ட தேவாலயத்து உப்பரிகையிலிருந்து குதிப்பதற்குப் பதிலாக, நாம் வெறுமனே ஒரு மெதுவான வழியில் நடந்துசென்று, நாம் யாரும் இல்லை என்று நினைக்கும்படி மற்றவர்களை அனுமதித்து, நம் கிறிஸ்து எல்லாமுமாயிருக்கிறார் என்று சாட்சிப்பகிர வேண்டும். இது எதிரியைத் தோற்கடிக்கும்.

C. மூன்றாவதாக, பிசாசு தன்னை ஆராதிக்கும்படி கர்த்தரைச் சபலப்படுத்தினான்—மத். 4:9

மத்தேயு 4:8–9, “மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்” என்று கூறுகிறது.

  1. கர்த்தர் பிசாசைக் கடவுளாக ஆராதித்து, அவனது அடியாளாக அவனைச் சேவிக்குமாறு, அவர் அகப்படுபடி அவருக்கான ஒரு தூண்டில் இரையாக இருந்த, உலகத்திற்குரிய ராஜ்யங்களையும், அவற்றின் மகிமையையும் ஆதாயம்பண்ணும்படி கர்த்தர் சபலப்படுத்தப்பட்டார்—மத். 4:8–9

“ஆதாமுக்கு முந்தைய யுகத்திலே, ஆதாமுக்கு முந்தைய யுகத்தின் தலையாயிருக்கும்படி தேவன் பிரதானதூதனை நியமித்தபோது (எசே. 28:13-14), பூமியினுடைய ராஜ்யங்களின் அதிகாரமும் மகிமையும் அவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதாகதான் அது இருந்திருக்க வேண்டும். அவன் தேவனுக்கு விரோதமாகக் கலகஞ்செய்து, தேவனின் எதிரியான சாத்தானாகிய பிறகு, அவன் தேவனால் நியாயந்தீர்க்கப்பட்டான் (ஏசா. 14:12–15), ஆனால் அவன்மீதான தேவனுடைய நியாயத்தீர்ப்பின் முழுமையான செயல்படுத்துதல் ஆயிரவருடத்தின் முடிவுவரை நிறைவுசெய்யப்படாது (வெளி. 20:7–10). எனவே, அந்த நேரம்வரை அவனுக்குப் பூமியின் ராஜ்யங்கள்மீது அதிகாரம் உண்டு. அவன் கர்த்தரைச் சபலப்படுத்திய இந்தச் சூழ்ச்சிகரமான சபலப்படுத்தலில், கர்த்தர் அவனைக் கடவுளாக ஆராதித்து, அவனது அடியாளாக அவனைச் சேவிக்குமாறு, அவர் அகப்படுபடி அவருக்கான ஒரு தூண்டில் இரையாக, இந்த முதல் தேவ-மனிதனுக்கு அவன் பூமிக்குரிய ராஜ்யங்களையும், அவற்றின் மகிமையையும் அளித்தான்” (The God-man Living, Message 6, p. 57). (லூக்கா 4:6, அடிக்குறிப்பு 1 ஐயும் காண்க.)

  1. கர்த்தர் உலகத்துக்குரிய ராஜ்யங்களையும், அவற்றின் மகிமையையும் நேசிக்காததன் மூலமும், அதற்குப் பதிலாக தேவனை ஆராதித்து, அவரை மட்டுமே சேவிப்பதன் மூலமும் கர்த்தர் பிசாசை ஒரு மனிதனாகத் தோற்கடித்தார்—மத். 4:10

கர்த்தர், “அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே” என்று கூறுவதன் மூலம் சபலப்படுத்துகிறவனுக்குப் பதிலளித்தார் (மத். 4:10). “இந்த முதல் தேவ-மனிதன் தீய சபலப்படுத்துகிறவனின் பிசாசுத்தனமான சூழ்ச்சித் திட்டத்தை இனம்கண்டு கொண்டு, அவனை விரட்டுவதன் மூலமும், தேவனுக்கு முன்பான ஒரு மனிதனாக அவர் தேவனை ஆராதித்து, அவரை மட்டுமே சேவிப்பார்கள் என்று ஓர் அவமானப்படுத்தும் முறையில் அவனுக்குச் சொல்வதன் மூலமும் அவனைத் தோற்கடித்தார்” (The God-man Living, Message 6, p. 57).மீண்டும், கர்த்தர் தேவனை மட்டுமே ஆராதிப்பதற்கும் சேவிப்பதற்குமான மனிதனின் தளத்தில் நிற்பதன் மூலம் எதிரியைத் தோற்கடித்தார். முதல் இரண்டு சபலப்படுத்துதல்கள் மனித வாழ்க்கை மற்றும் மதம் தொடர்பானவை. இந்தச் சபலப்படுத்துதல் என்பது உலகத்திற்குரிய மகிமை, பதவி உயர்வு, லட்சியம், நிலை, மற்றும் ஒரு ஒளிமயமான எதிர்காலம் பற்றியதாக இருந்தது. இளம் வாலிபர்களிடையே கூட ஒரு தலைவனாக இருப்பதற்கான இந்த வாஞ்சையும், உலகத்துக்குரிய மகிமையைப் பெறுவதற்கான ஒரு வாஞ்சையும் உள்ளது. “ஒரு குறிப்பிட்ட பதவியை நீங்கள் நாடிக்கொண்டிருக்கும் போதெல்லாம், உங்களுக்குள் ஆழமாக நீங்கள் ஒரு விக்கிரகத்தை நாடிக்கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். இந்தக் காரணத்திற்காக, பொருளாசையை விக்கிரக ஆராதனை என்று அப்போஸ்தலன் கூறினான் (கொலோ. 3:5)” (Life-study of Matthew, Message 11, p145).

III. முதல் தேவ-மனிதன் பிசாசை ஒரு மனிதனாக முற்றிலுமாகத் தோற்கடித்தார் அதோடு தம் ஊழியத்தை நிறைவேற்றத் தகுதியானவராக இருந்தார்—மத் 4: 11

பிசாசுக்கு அவர் “அளித்த எதிர்” பதில்கள் எல்லாவற்றிலும், கர்த்தர் ஒரு மனிதனாக தம் நிலைப்பாட்டை வலுவாக வலியுறுத்தினார். அவரது முதல் பதிலில் அவர், “மனுஷன்…” என்று கூறினார் (மத். 4:4). அவரது இரண்டாவது மற்றும் மூன்றாவது பதிலில் அவர், “உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக” என்றும், “உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக” என்றும் கூறினார் (மத். 4:7, 10). இந்த அறிக்கைகள் ஒவ்வொன்றிலும் கர்த்தர் தாம், வேறொரு உயிரினமாகிய சாத்தானைத் தோற்கடிக்க ஒரு மனிதன், ஓர் உயிரினம் என்ற நிலைப்பாட்டில் நின்றுகொண்டிருந்தார் என்பதை வலியுறுத்தினார். இதன் மூலம் அவர் இந்தச் சோதனையில் தேர்ச்சி பெற்று, தம் ஊழியத்தை நிறைவேற்ற அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்துவாக இருக்க தகுதியுடையவராக இருந்தார். இந்த ஆரம்பப் போரில், சாத்தான் போரில் தோற்றுப்போனான், மேலும் கிறிஸ்து தேவனுடைய மகிமைக்காக போரில் வென்றார். “வெற்றிகரமாக வந்து, தேவ-மனிதனுக்கு ஊழியம்செய்து, அவரது நாற்பது-நாள் உபவாசப் பசியை கவனித்துக்கொண்ட [மத். 4:11] ”தேவதூதர்களுக்கு முன்பாக சாத்தான் வெட்கப்படுத்தப்பட்டான் (மத். 4:11) (The God-manLiving, Message 4, p39).

டைநிலைபிரயோகம்: 1 யோவான் 2:14, “வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்” என்று கூறுகிறது. இங்கே நாம் தேவனுடைய வார்த்தைக்கும், பொல்லாங்கனை ஜெயங்கொள்வதற்கும் இடையே ஒரு தொடர்பைக் காண்கிறோம். “எவ்வாறு இளம் வாலிபர்கள் இந்தப் பொல்லாங்கனை ஜெயங்கொள்ள முடியும்? அவர்களிடம் தங்களில் நிலைத்திருக்கும் தேவனுடைய வார்த்தை இருப்பதால், அவர்கள் அவனை ஜெயங்கொள்ள முடியும். தேவனுடைய வார்த்தையே அவர்களது புகலிடமும், அரணும், கோட்டையும்கூட. நாளுக்கு நாள், இளம் வாலிபர்கள் தேவனுடைய வார்த்தையில் தங்க வேண்டும். தேவனுடைய வார்த்தை நம்மில் நிலைத்திருந்து அதோடு நாம் நம் புகலிடமாகிய வார்த்தையில் தங்கியிருக்கும்போது, நாம் பொல்லாங்கனிடமிருந்து பாதுகாக்கப்படுகிறோம் என்பதை நம் அனுபவத்திலிருந்து நாம் அறிவோம்” (Life-study of 1 John, Message 20, pp171–172). “இளம் வாலிபர்கள், பிசாசுக்கும், உலகத்திற்கும், அதன் இச்சைக்கும் எதிராக தங்களில் நிலைத்திருக்கிறதும், தங்களில் கிரியைசெய்கிறதுமான தேவனுடைய வார்த்தையால் போஷிக்கப்பட்டு, பலப்படுத்தப்பட்டு, தாங்கப்படுகின்றனர்” (Life-study of 1 John, Message 19, p164). பொல்லாங்கன் இளம் தலைமுறையை அழிக்க முற்படும் ஒரு யுகத்தில், நாம் தினமும் இந்த வார்த்தையை நமக்குள் பெற்று, அது நம்மில் நிலைத்திருக்க அனுமதிப்பவர்களாக இருந்தாக வேண்டும். இது, பொல்லாங்கனையும், அவனது உலகத்துக்குரிய அமைப்பையும் ஜெயங்கொள்ள நமக்கு வழிவகுக்கும்.

சுவிசேஷப் பிரயோகம்: ஏன் தேவன் தாமே சாத்தானை வெறுமனே ஒரேதரமாக அழிப்பதில்லை என்று சில நேரங்களில் நாம் ஆச்சரியப்படக்கூடும். எவ்வாறு தேவன் சாத்தானைத் தோற்கடிப்பார் என்பதை நாம் பார்க்கும்போது இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கப்படுகிறது. நம் தேவன் வரம்பில்லாத மற்றும் சர்வ வல்லமையுள்ள தேவன், பிரபஞ்சத்தையும், (சாத்தான் உட்பட) அதன் சிருஷ்டிகள் அனைத்தையும் சிருஷ்டித்த சிருஷ்டிகர். தேவன் தம் சிருஷ்டியாகிய சாத்தானை சிருஷ்டித்தது போலவே எளிதாகவும், உடனடியாகவும் அவர் வெறுமனே அவனை நிர்மூலமாக்குவது அர்த்தமற்றதாக இருக்கும். மாறாக, தேவன் சாத்தானை இன்னொரு சிருஷ்டியாகிய—மனிதன்—மூலமாகத் தோற்கடிக்க உத்தேசிக்கிறார். நம் தேவன் தம் வரம்பில்லாத ஞானத்தின்படி அதி துல்லியமான மற்றும் மிகக் கவனமான வழியில் தம் பொருளாட்சியை நிறைவேற்றும் ஓர் அதி ஞானமுள்ள தேவனாக இருக்கிறார். அவரது வாஞ்சை மனிதன் மூலமாக சாத்தானைத் தோற்கடிப்பதும், மனிதன் மூலமாக மகிமைப்படுவதுமே. ஆயினும், சுமார் நான்காயிரம் ஆண்டுகளாக, ஒவ்வொரு மனிதனும்—ஒன்றன் பின் ஒன்றாக—சாத்தானால் தோற்கடிக்கப்பட்டான். தேவ-மனிதனாகிய இயேசு வந்த வரை சாத்தானின் சபலப்படுத்துதல்களை யாராலும் எதிர்க்க இயலவில்லை. இயேசு தேவனுடைய குமாரனாக இருந்தார் என்ற தளத்தின் அடிப்படையில் சாத்தான் இயேசுவைத் திரும்பத்திரும்பச் சபலப்படுத்தினான், ஆனால் கர்த்தர் ஒரு மனிதனாக தம் நிலையில் உறுதியாக நின்றார். கல்லை அப்பமாக மாற்றுதல் (மத். 4:3–4), தேவதூதர்களால் ஏந்தப்படும்படி தேவாலயத்து உப்பரிகையிலிருந்து தம்மையே குதிக்க வைத்தல் (மத். 4:6–7) போன்ற அற்புதமான செயல்களைச் செய்துக் காட்டுவதன் மூலம் இயேசு தாம் தேவ குமாரனாக என்ன செய்ய முடியும் என்பதை நிரூபிப்பது அவருக்கு எளிதாக இருந்திருக்கும். ஆனால் அல்லேலூயா! அவர் ஒரு மனிதனின் நிலையில் உறுதியாக நின்று, சாத்தானை ஒரு மனிதனாகத் தோற்கடித்தார். அவர் மனுக்குலத்தின் வரலாற்றிலேயே சாத்தானின் சபலப்படுத்துதல்கள் அனைத்தையும் ஜெயங்கொண்ட முதல் மனிதன் ஆனார்! முதல் தேவ-மனிதனாக, அவர் சாத்தானைத் தோற்கடித்தார், மேலும் சாத்தான் மற்றும் அவனது சபலப்படுத்துதல்கள் அனைத்தின் மீதான அவரது வெற்றியை அனுபவிக்க மீதமுள்ள மனுக்குலத்திற்கும் வழியை வகுத்தார். நாம் செய்ய வேண்டியது எல்லாம், “கர்த்தாவே, நான் ஓர் உதவியற்ற பாவி என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். உம் எதிரியாகிய சாத்தானை தோற்கடிப்பதற்குப் பதிலாக, நான் அவனால் தோற்கடிக்கப்பட்டேன். கர்த்தாவே, சாத்தானை ஒரு மனிதனாக தோற்கடித்தவராகிய நீர் எனக்குத் தேவை. உம்மை என் தேவ-மனித இரட்சகராக ஏற்றுக்கொள்ள நான் திறக்கிறேன். நீங்கள் என் மூலமாக சாத்தானை தோற்கடிக்க முடியுமாறு, என் ஆவிக்குள் வாரும்” என்று அவரிடம் சொல்வதுதான். அவர் தம் சிருஷ்டிகளில் ஒன்றான சாத்தானை, முதல் தேவ-மனிதனாகிய இயேசுவின் மூலமாக மட்டுமல்லாமல், பல தேவ-மனிதர்களாகிய நம் மூலமாகவும் தோற்கடிக்க முடியும் என்பது தேவனுக்கு என்னே ஒரு மகிமை!

மிக முக்கியக் காரியங்கள்: வேதாகமத்தில் உள்ள முக்கியமான நிகழ்வுகளை அறிதல் (I.B.)      ; நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.)

பின்னணி வாசிப்பு: The God-man Living, Message 4, pp. 37–39.

REFERENCES: Life-study of 1 John, Message 19, p164; Message 20, pp171–172; Life-study of Matthew, Message 11; The God-man Living, Message 4, pp37–39; Message 6.

 

Jump to section