உயிர்த்தெழுந்து, பரமேறிய கிறிஸ்துவின் பரப்புதல்
பகுதி 10
✵பாடம் 10 – 18
சரீர வாழ்க்கைக்கான ஓர் இயல்பான வாழ்க்கை
குறிக்கோள்: நமக்கு சரீர வாழ்க்கைக்கான ஒரு நேர்த்தியான, இயல்பான வாழ்க்கை தேவை என்பதையும், இந்த வாழ்க்கைக்காக நாம் ஆவியின்படி நடந்தாக வேண்டும் என்பதையும் காண்பதற்கு.
பொருட்சுருக்கம்: ஆவியால் நடக்கவும் (ரோ. 8:4), தம் சரீரத்தின் நிமித்தம் மறுசாயலாக்கப்படுவதற்காக தேவனுக்குத் தங்களையே ஒரு ஜீவிக்கும் பலியாக வழங்கவும் (ரோ. 12:1–5) விசுவாசிகளுக்குப் பவுல் கட்டளையிட்டான். ஆவியின்படி நடத்தல் அல்லது மறுசாயலாக்கப்படுதல், நாம் கூடுகைகளில் நம் ஆவியை எவ்வளவு பலமாகப் பயிற்சிசெய்கிறோம் என்பதோடு தொடர்புடையது என்று நாம் நினைக்கக்கூடும். எனினும், நம் தினசரி வாழ்க்கையில் உள்ள நேர்த்தியான நடத்தை மற்றும் நேர்த்தியான உறவுகளின் அடிப்படையில் பவுல் சரீர வாழ்வில் உள்ள இயல்பான வாழ்க்கையை விவரிக்கிறான். நாம் ஆவியின்படி நடப்பதன் நிஜமான வெளியரங்கம், நாம் கூடுகைகளில் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதல்ல, மாறாக நம் தினசரி வாழ்க்கையில் நாம் எப்படி நம்மையே நடத்திக்கொள்கிறோம் என்பதே. ரோமர் 12-13, ஆவியின்படி நடப்பதன் வெளியரங்கம் மற்றும் வெளியாக்கமாகிய இயல்பான மனித வாழ்க்கையை விவரிக்கின்றன.
பின்புலம்: சரி, தவறு ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாடு மிகவும் மங்கலாக இருக்கும் ஒரு யுகத்தில், இது போன்ற ஒரு செய்தி இரண்டு குறிக்கோள்களுக்காக உதவ முடியும். முதலாவதாக அது, மனித நற்பண்பு மற்றும் உரிமை என்ன என்பதைப் பற்றி இளம் வாலிபர்களுக்குக் கல்வியூட்ட முடியும். இரண்டாவதாக அது, நம் ஆவியில் உள்ள தெய்வீக ஜீவனை துய்க்கும் நம் அனுபவமகிழ்ச்சி, இத்தகைய ஒரு வாழ்க்கையை வாழும்படி எவ்வாறு நமக்கு நிரப்பீடளித்து, நம்மைப் பயிற்றுவிக்கிறது என்பதை விளக்க முடியும்.
அதிகாரங்கள்: ரோமர் 12-15.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
-
தேவனுடைய குறிக்கோளின் நிமித்தம் நாம் நம்மையே அவருக்குக் கொடுக்கும்போது, நாம் சரீர வாழ்க்கையை வாழத் தொடங்குவோம்—ரோ. 12:1–5
தேவனுடைய குறிக்கோளின் நிமித்தம் அவருக்குத் தங்கள் சரீரங்களை ஒரு ஜீவிக்கும் பலியாக வழங்கும்படி விசுவாசிகளுக்குப் பவுல் புத்திசொன்னான் (ரோ. 12:1). தங்கள் சரீரங்களை வழங்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்ட பிறகு உடனே, அவன் சரீர வாழ்க்கையைப் பற்றி பேசத் தொடங்கினான் (ரோ. 12:3-6). நாம் நம் சரீரங்களை வழங்குதல் என்பது நாம் சரீர வாழ்க்கையை வாழ முடியுமாறு உள்ளது. பவுல் சரீர வாழ்க்கையை, புலப்படாத ஒன்றாக முன்வைக்கவில்லை; ரோமர் 12-13 இல் உள்ள சரீர வாழ்க்கை மிகவும் நடைமுறைக்குரியது மற்றும் உறுதியானது. சரீர வாழ்க்கையை வாழ, நமக்கு ஓர் இயல்பான மனித வாழ்க்கை, கிறிஸ்துவை வெளிக்காட்டும் ஒரு நேர்த்தியான தினசரி வாழ்க்கை இருந்தாக வேண்டும்.
-
சரீர வாழ்க்கையில் உள்ள ஓர் இயல்பான வாழ்க்கை என்பது முதன்மையாக நாம் கூடுகைகளில் எவ்வாறு பயிற்சிசெய்கிறோம் என்பதைப் பற்றிய ஒரு காரியம் அல்ல, மாறாக நம் தினசரி வாழ்க்கையில் உள்ள ஒரு நேர்த்தியான மனித வாழ்க்கையைப் பற்றிய ஒரு காரியம் ஆகும்—ரோ. 12:3—13:14
ஆவியானவரின்படி நடத்தல் அல்லது மறுசாயலாக்கப்படுதல், நாம் கூடுகைகளில் நம் ஆவியை எவ்வளவு பலமாகப் பயிற்சிசெய்கிறோம் என்பதோடு தொடர்புடையது என்று நாம் நினைக்கக்கூடும். எனினும், நம் தினசரி வாழ்க்கையில் உள்ள நேர்த்தியான நடத்தை மற்றும் நேர்த்தியான உறவுகளின் அடிப்படையில் பவுல் சரீர வாழ்வில் உள்ள இயல்பான வாழ்க்கையை விவரிக்கிறான். சரீர வாழ்க்கை ஒரு கூடுகை வாழ்க்கையாக இருப்பது மட்டுமல்லாமல், நம் தினசரி வாழ்க்கையைப் ஒரு காரியமாகவும் இருக்கிறது. நாம் ஆவியின்படி நடப்பதன் நிஜமான வெளியரங்கம், முதன்மையாக நாம் கூடுகையில் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதல்ல, மாறாக நம் தினசரி வாழ்க்கையில் நாம் எப்படி நம்மையே நடத்திக்கொள்கிறோம் என்பதே. ரோமர் 12-13, ஆவியின்படி நடப்பதன் வெளியரங்கம் மற்றும் வெளியாக்கமாகிய இயல்பான மனித வாழ்க்கையை விவரிக்கின்றன.
-
நாம் நம்மைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி மிகவும் அதிக உயர்வாக எண்ணாமல், தேவன் நமக்குக் கொடுத்திருப்பதின்படி சரீரத்தில் செயல்பட வேண்டும்—ரோ. 12:3-8
கூடுகைகளில் நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதன் மூலம் அவ்வளவு அதிகமாக அல்ல, மாறாக நம் தினசரி வாழ்க்கையில் நாம் எவ்வாறு வாழ்கிறோம் என்பதன் மூலம்தான், நாம் கிறிஸ்துவை வெளிக்காட்டுகிறோம். சரீர வாழ்க்கையில் உள்ள ஓர் இயல்பான வாழ்க்கையின் முதல் உருப்படி, நாம் நம்மைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி மிகவும் அதிக உயர்வாக எண்ணாமல் இருப்பதுதான். நாம் நம்மைப் பற்றி மிகவும் உயர்வாக எண்ணிக்கொண்டு, மற்றவர்களை இழிவாகக் கருதக்கூடும் அல்லது நமக்கு நாமே சாக்குப்போக்குகளைச் சொல்லிக்கொண்டு, மற்றவர்களை மட்டம்தட்டக்கூடும். மற்றொரு சாத்தியக்கூறு என்னவெனில், நம்மிடம் எந்தப் பங்கும் இல்லை என்று நாம் உணரக்கூடும், இதனால் சரீரத்தில் செயல்பட மறுக்கக்கூடும். இந்த மனப்பாங்குகள் இரண்டுமே தவறானவை.
-
மற்றவர்களை நோக்கி, நாம் கணம்பண்ணுகிறவர்களாக வேண்டும், அவர்களை அன்புடன் நேசிக்க வேண்டும், அவர்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும்—ரோ. 12:9–10, 13, 15
-
தேவன நோக்கி, நாம் ஆவியிலே அனலுள்ளவர்களாய் எரிந்துக்கொண்டு, ஓர் அடிமையாகக் கர்த்தரை விடாமுயற்சியுடன் சேவிப்பவர்களாக இருக்க வேண்டும்—ரோ. 12:11
நாம் தேவனை நோக்கி எப்படி இருக்க வேண்டும் என்ற வழியை ரோமர் 12:11 விவரிக்கிறது. சோம்பேறித்தனத்திற்கு எதிர்சொல் விடாமுயற்சி. கர்த்தருக்காக வைராக்கியமாக இருக்க, நாம் அவரை விடாமுயற்சியுடன் ஆசையாய்ப் பின்தொடர்ந்தாக வேண்டும். மேலும், நாம் ஆவியிலே அனலுள்ளவர்களாய் எரிந்துக்கொண்டு, ஓர் அடிமையாகக் கர்த்தரைச் சேவிப்பவர்களாக இருந்தாக வேண்டும் சரீரத்திற்காக, தேவனுடைய குறிக்கோளுக்காக, நம் சோம்பல் இடைபடுத்தப்பட்டாக வேண்டும். அதன்பின் சபை வாழ்க்கைக்காக நாம் ஓர் அடிமையாகக் கர்த்தரைச் சேவித்தாக வேண்டும். நம் தினசரி வாழ்வில் ஆவியிலே அனலுள்ளவர்களாக எரிந்துக்கொண்டிருப்பது, சரீர வாழ்வில் உள்ள ஓர் இயல்பான வாழ்க்கையின் மற்றொரு அம்சமாகும்.
-
நம்மை நோக்கி, நாம் கர்த்தரைத் துய்க்கும் அனுபவமகிழ்ச்சியில் நிறைந்திருந்து, நம்பிக்கையில் சந்தோஷப்படவும் (களிகூரவும்), உபத்திரவத்தில் பொறுமையாக இருக்கவும், ஜெபத்தில் விடாமுயற்சியுடன் இருக்கவும், தீமையானதை அருவருத்து ஜெயிக்கவும், நன்மையானவற்றுடன் ஒட்டிக்கொள்ளவும் வேண்டும்—ரோ. 12:9, 12
“கிறிஸ்தவர்களாகிய நாம் சந்தோஷப்படுகிற மக்களாக இருக்க வேண்டும், ஏனெனில் கர்த்தரை அனுபவித்துமகிழ்தல் எப்போதும் நமக்கு இருக்கிறது. அவரது ஐசுவரியங்களில் நாம் கர்த்தரை அனுபவித்து மகிழ்ந்தால், உள்ளார்ந்தரீதியில் நாம் மகிழ்ச்சியாக இருப்பது மட்டுல்லாமல், புறம்பார்ந்தரீதியிலும் நாம் சந்தோஷமாய் இருப்போம். குழப்பமான நேரங்களில்கூட நம்பிக்கையில் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும், இருக்க முடியும்….கிறிஸ்தவர்களாகிய நாம் உபத்திரவத்தில் பொறுமையாக இருக்கவும் வேண்டும்….நம்பிக்கையில் சந்தோஷப்படுவதன்மூலம் எந்தவித உபத்திரவத்தையும் நாம் பொறுத்துக்கொள்ள முடியும். [ரோமர்] 5:3 உபத்திரவத்தில் நாம் களிகூரமுடியும் என்று கூறுகிறது….உபத்திரவத்தைப் பொறுத்துக்கொள்ளும்படி நாம் ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருக்க வேண்டும். விடாமுயற்சியுடன் நாம் ஜெபிக்க வேண்டும். இது உபத்திரவத்தைப் பொறுத்துக்கொள்ள நமக்குத் திறனளிப்பதுடன், நாம் கர்த்தருடைய அனுபவமகிழ்ச்சியில், அதாவது அவருடைய பிரசன்னத்திலும், அவருடைய சித்தத்திலும் நிலைத்திருக்கவும் செய்கிறது….இவை யாவற்றுக்கும் கூடுதலாக, தேவனுடைய பரிசுத்த மக்களாக நாம் தீமையான காரியங்களை அருவருத்து ஜெயிக்கவும், நன்மையான காரியங்களோடு ஒட்டிக்கொள்ளவும் வேண்டும். தேவனுகென்று பிரித்தெடுக்கப்பட்டிருக்கிற கிறிஸ்தவர்களாகிய நாம், நடத்தையின் அதி உன்னத தரத்தை, அதாவது, நல்லொழுக்க மற்றும் நன்னெறி மக்களுக்கும் மேலான தரத்தைப் பராமரிக்க வேண்டும்” (ரோமரின் ஜீவ-ஆய்வு, செய்தி 27, பப. 348-349). இது சரீர வாழ்வில் உள்ள ஓர் இயல்பான வாழ்க்கையின் மற்றோர் அம்சமாகும்.
-
நமக்காக நாமே பழிவாங்காமல், நம்மைத் துன்புறுத்துபவர்களை நாம் ஆசீர்வதித்தாக வேண்டும், எல்லா மனிதர்களோடும் சமாதானமாக வாழ்ந்தாக வேண்டும்—ரோ. 12:14-21
ஒரு நேர்த்தியான, இயல்பான மனித வாழ்க்கை என்பது நம் எதிரிகளோடும், துன்புறுத்துபவர்களோடும் கூட சமாதானமாக இருக்கும் ஒரு வாழ்க்கையும் ஆகும். நம்மைத் துன்புறுத்துகிறவர்களை நாம் ஆசீர்வதிக்க வேண்டும், அவர்களைச் சபிக்கக் கூடாது (ரோ. 12:14). மக்களை ஆசீர்வதிப்பது என்றால் அவர்களைப் பற்றியும், அவர்களிடமும் நல்ல விஷயங்களைப் பேசுவதாகும். “நம்மைப் பொறுத்தவரை மக்கள் எவ்வளவு கெட்டவர்களாக இருந்தாலும், நம் வாய் ஆசீர்வாதத்தை மட்டும் வெளிப்படுத்த வேண்டும், சாபத்தையல்ல. நாம் கர்த்தருக்குச் சத்துருக்களாய் இருக்கையில் அவர் நம்மை எவ்வளவாய் ஆசீர்வதித்தார்! அதே விதத்தில் நம் சத்துருக்களையும், நம்மைத் துன்புறுத்துகிறவர்களையும் நாம் ஆசீர்வதிக்க வேண்டும். இதுவும் கர்த்தருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றும் வாழ்க்கையின் ஓர் அம்சமாகும்….நாம் ஒருவருக்கும் தீமைக்குப் பதிலாக தீமை செய்யக் கூடாது (வ 17). நியாயப்பிரமாணத்தின் கீழ் கண்ணுக்குக் கண், பல்லுக்குக் பல் என்று இருந்தது. இன்று நாம் நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லை, கிருபையின் கீழ் இருக்கிறோம். நாம் தீமைக்குப் பதிலாக தீமை செய்யக்கூடாது, மாறாக, கர்த்தர் நமக்குச் செய்திருக்கிறதுபோல தீமைக்குப் பதிலாக நாம் நன்மை செய்யவேண்டும்….மேலும், நாமே பழிவாங்கக் கூடாது, மாறாக தேவனுடைய கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள், ஏனெனில் பழிவாங்குதல் கர்த்தருக்குரியது (வ. 19). ஓர் இயல்பான மனித வாழ்க்கையுடன் நாம் சபை வாழ்க்கையைப் பயிற்சிசெய்கையில், எந்த வழியிலும் நாமே பழிவாங்கக் கூடாது. மக்களின் தீவினையையும் எல்லாவற்றையும் இழப்பதையும் பொறுத்துக் கொள்ள நாம் விருப்பமுள்ளவர்களாக இருக்க வேண்டும். முழு சூழ்நிலையையும் கர்த்தருடைய இறையாண்மையின் கரத்தில் விட்டுவிட்டு, அவருடைய இறையாண்மையின்படி அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ அதைச்செய்ய நாம் அவருக்கு இடங்கொடுக்க வேண்டும்….’அன்றியும் உன் சத்துரு பசியாயிருந்தால் அவனுக்குப் போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால் அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித் தழலை அவன் தலைமேல் குவிப்பாய்’ என்று வசனம் 20ல் பவுல் கூறுகிறான். இது உண்மையில் நம் எதிரிகளை நேசிப்பதாகும். அவர்களுக்கான நம் அன்பு கர்த்தரிடம் அவர்களைத் திருப்ப அவர்கள் தலைகளின்மேல் குவிக்கப்பட்ட அக்கினித் தழலாயிருக்கும். நம் எதிரிகளை அமைதிப்படுத்த மிகச் சிறந்த வழி அவர்களுக்கு புசிக்கவும் குடிக்கவும் சிலவற்றைக் கொடுப்பதாகும். எனவே, ‘நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு’ என்று பவுல் நமக்குக் கட்டளையிடுகிறான் (வ. 21)….இறுதியாக, நம்மால் கூடுமான அளவுக்கு எல்லா மனிதர்களுடனும் சமாதானத்துடன் வாழ வேண்டும் (வ. 18)” (ரோமரின் ஜீவ-ஆய்வு, செய்தி 27, பப. 349–350). சரீர வாழ்க்கையில் உள்ள ஓர் இயல்பான, நேர்த்தியான மனித வாழ்க்கையின் வெளியாக்கமாகிய இத்தகைய ஒரு வாழ்க்கை,, கர்த்தர் தம்மையே நமக்குள் அடித்துருவாக்காமல் வாழப்படுவது சாத்தியமற்றது.
-
எல்லா மனிதர்களின் பார்வையிலும் கண்ணியமான (யோக்கியமான) விஷயங்களைச் செய்ய நாம் முன்யோசனை செய்தாக வேண்டும்—ரோ. 12:17; 2 கொரி. 8:21
சபை வாழ்க்கையை வாழ்பவர்களாக நாம், 2 கொரி. 8:21 இல் தேவையுள்ள பரிசுத்தவான்களுக்காகப் பணம் வசூலிக்கப்பட்டுக்கொண்டிருந்த போது பவுல் செய்தது போல், மற்றவர்கள் நம் வாழ்க்கையையும் செயல்களையும் எப்படி நிதானிக்கிறார்கள் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். நம்மிடம் தூய்மையற்ற உள்நோக்கங்கள் எதுவும் இல்லாவிட்டாலும்கூட, பிறர் இடறலடைவதற்கு நாம் எந்தத் தளத்தையும் அளிப்பதில்லை என்பதை நாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் சரீர வாழ்க்கையை வாழும்போது, மற்றவர்கள் நம்மை விசுவாசிகளாக எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைக் குறித்து நாம் உணர்வுள்ளவர்களாக ஆகிவிடுகிறோம்.
-
ஒரு நேர்த்தியான மனித வாழ்க்கையைப் பெறுவதற்கு, நாம் நம் மனம் புதிதாகுதல் மூலம் மறுசாயலாக்கப்பட்டாக வேண்டும்—ரோ. 12:2
ரோமர் 12இல் பவுலின் சிந்தனையின் முற்போக்கின்படி, சபை வாழ்க்கைக்கான ஒரு நேர்த்தியான தினசரி வாழ்க்கையைப் பற்றி அவன் பேசுவதற்கு முன் மறுசாயலாகுதல் குறிப்பிடப்பட்டுள்ளது, இது அத்தகைய ஒரு வாழ்க்கைக்கு மறுசாயலாகுதல் தேவைப்படுகிறது என்பதைக் காட்டுகின்றது.
-
மறுசாயலாகுதல் என்பது கர்த்தர் தம் ஜீவனை நமக்குள் பகிர்ந்தளிப்பதன் மூலம் ஏற்படுத்தப்படும் ஒரு வளர்சிதை மாற்றமாகும்—2 கொரி. 3:18.
“12:1-2ஐ நாம் பரிசீலிப்பதற்கு முன் மறுசாயலாகுதலுக்கு ஒரு வரையறை கொடுக்க நான் விரும்புகிறேன்….மறுசாயலாகுதல் வெறுமனே ஒரு மாற்றத்தை மட்டும் குறிக்கவில்லை; ஒரு சாரப்பொருளானது சுபாவம், வடிவம் இரண்டிலும் மாற்றப்படுவதை அது குறிக்கிறது….இந்த வகை மாற்றம் ஒரு வளர்சிதை மாற்றம். இது வெறும் புறம்பார்ந்த ஒரு மாற்றமல்ல, மாறாக உள்ளார்ந்த கட்டமைப்பிலும், புறம்பார்ந்த வடிவத்திலும் உள்ள ஒரு மாற்றம். இந்த மாற்றம் வளர்சிதை வழிமுறையால் நடைபெறுகிறது. வளர்சிதைமாற்றம் என்ற வழிமுறையில் வைட்டமின்களால் நிறைந்த ஒரு ஜீவாதார மூலக்கூறு நம் ஆள்தத்துவத்திற்குள் வந்து, நம் ஜீவாதார ஜீவனில் ஒரு வேதியியல் மாற்றத்தை உண்டுபண்ணுகிறது. இந்த வேதியியல் மாற்றம் ஒரு வடிவிலிருந்து மற்றொரு வடிவத்திற்கு நம் ஆள்தத்துவத்தின் கட்டமைப்பை மாற்றுகிறது. இதுவே மறுசாயலாகுதல். ஒரு நபருக்கு வெளிறிய முகத்தோற்றம் இருக்கிறது, ஒருவன் அவனுடைய நிறமற்ற முகத்தோற்றத்தை மாற்ற விரும்பி, அவனுடைய தோலுக்கு சாயம் பூசுகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். நிச்சயமாக இது புறம்பார்ந்த ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும், ஆனால் இது ஒரு ஜீவாதார மாற்றமல்ல, ஜீவனில் ஒரு மாற்றமல்ல. அப்படியானால் நிஜமாகவே ஒரு நல்ல முகவண்ணத்தை ஒரு நபர் எவ்வாறு பெற முடியும்? தேவையான ஜீவாதார மூலக்கூறுகளுடன் ஆரோக்கியமான உணவை தன் சரீரத்திற்குள் அனுதினமும் உட்கிரகித்துக்கொள்வதன்மூலம் அதைப் பெறமுடியும். உங்கள் சரீரம் ஜீவிக்கும் உயிரியாக இருப்பதால், ஒரு ஜீவாதார சாரப்பொருள் அதற்குள் நுழையும்போது, வளர்சிதைமாற்ற வழிமுறையால் ஜீவாதாரமாக ஒரு வேதிச் சேர்மம் உருவாக்கப்படுகிறது. படிப்படியாக இந்த உள்ளார்ந்த வழிமுறை உங்கள் முகத்தின் நிறத்தை மாற்றும். இந்த மாற்றம் புறம்பார்ந்ததல்ல; இது உள்ளிலிருந்து வரும் ஒரு மாற்றம், வளர்சிதைமாற்ற வழிமுறையிலிருந்து விளையும் ஒரு மாற்றம். வேதத்தின்படி, இந்த வளர்சிதை மாற்றம் மறுசாயலாகுதல் என்று அழைக்கப்படுகிறது” (ரோமரின் ஜீவ-ஆய்வு , செய்தி 25, பப. 321-322).
-
நாம் நம் சொந்த முயற்சியால் நம் வாழ்க்கையை முன்னேற்ற முடியாது, மாறாக மறுசாயலாக்கப்படுவதற்குக் கர்த்தரிடமிருந்து ஒரு நிலையான ஜீவநிரப்பீட்டைப் பெற்றாக வேண்டும்
“மறுசாயலாகுதலின் வழிமுறையில் கிறிஸ்துவின் ஜீவன் நம் ஆள்தத்துவத்திற்குள் சேர்க்கப்படுகிறது. ஜீவாதார மற்றும் வைட்டமின்களால் நிறைந்த அவருடைய ஜீவன் நம் ஆள்தத்துவத்துள் ஊடுருவிப்பரவும்போது, ஓர் ஆவிக்குரிய வேதிச் சேர்மம் உருவாக்கப்படுகிறது. சுபாவம், வடிவம் இரண்டிலும் நம் கட்டமைப்பை இது மாற்றுகிறது. இதுவே மறுசாயலாகுதல். இது வெளியார்ந்த திருத்தமோ புறம்பான சரிப்படுத்துதலோ அல்ல. இது முற்றிலும் நம் ஜீவாதார மூலக்கூறிலுள்ள ஓர் உள்ளார்ந்த வளர்சிதை மாற்றம், அதாவது, கர்த்தராகிய ஆவியானவரால் ஜீவனிலும் ஜீவனாலுமான ஒரு மாற்றம் (2 கொரி. 3:18)….மறுசாயலாகுதலின் வழிமுறையில் தெய்வீக மூலக்கூறு நமக்குள் அடித்துருவாக்கப்படுகிறது. ரோமர் 12லிருந்து 16வரை உள்ள பகுதியை நாம் அணுகுகையில், மறுசாயலாகுதலின் இந்த நேர்த்தியான புரிந்துகொள்ளுதலை நாம் மனதில் வைத்துக்கொண்டால், வார்த்தையின் இந்தப் பகுதி இன்னது என்று நம்பும்படி நம்மை நடத்தும் நம் இயற்கையான கருத்திலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது என்று நாம் உணர்வோம்” (ரோமரின் ஜீவ-ஆய்வு, செய்தி 25, ப. 322).
-
நாம் ஆவியின்படி நடக்கும்போது நாம் மறுசாயலாக்கப்படுகிறோம்—ரோ. 8:4
மறுசாயலாக்கப்படுவதற்கு, நமக்குக் கர்த்தருடைய ஜீவனின் நிரப்பீடு தேவை. இவ்வாறு, நாம் ஒவ்வொரு நாளும் ஒரு காலை எழுப்புதலைப் பெற வேண்டும், மேலும் நாம் கூடுகைகளில் இருக்க வேண்டும். எனினும், நம் பெரும்பாலான நேரம் கூடுகைகளுக்கு வெளியே செலவிடப்படுகிறது. இவ்வாறு, நம் தினசரி வாழ்க்கையில் நாம் இந்தக் கலந்திணைந்த ஆவியின்படி நடப்பதைப் பயிற்சிசெய்யவும் (ரோ. 8:4), ஆவியானவரால் வாழவும் நடக்கவும் வேண்டும் (கலா. 5:16, 25). ஆவியின்படி நடப்பது என்றால் நம் தினசரி வாழ்க்கையில் உள்ள அனைத்தையும் ஆவியானவரின் மட்டுப்படுத்துதலின் கீழ் செய்வதாகும் (ரோ. 5:21; அப். 16:7). நாம் ஆவியின்படி வாழ்ந்து, நடக்கும்போது, நம்மை ஒழுங்குபடுத்துவதற்கும், நம்மை மறுசாயலாக்குவதற்குமான வழியை கர்த்தருக்கு நாம் கொடுக்கிறோம். நாம் கர்த்தருடைய ஒழுங்குப்படுத்துதல் மற்றும் மட்டுப்படுத்துதலின் கீழ் வாழும்போது, நாம் அவருடைய அபரிமிதமான நிரப்பீட்டைப் பெறுகிறோம் (2 தீமோ. 4:22) அதோடு நம் தினசரி வாழ்க்கையில் அவரை வெளிக்காட்டும்படி மறுசாயலாக்கப்படுகிறோம். இவ்வாறு, சரீர வாழ்க்கையை வாழவும், கர்த்தரை வெளிக்காட்டுகிற ஒரு நேர்த்தியான மனித வாழ்க்கையைப் பெறவும் நமக்குத் திறனளிக்கப்படுகிறது.
-
நம் மறுசாயலாகுதலும், ஆவியின்படியான நம் நடையும் நம் தினசரி வாழ்க்கையில் வெளியரங்கமாக்கப்படும்—கலா. 5:16, 22–25
மறுசாயலாகுதல், ஆவியின்படி நடத்தல் போன்ற இந்தக் காரியங்கள் கோட்பாட்டளவிலானவை (தத்துவார்த்தமானவை) அல்ல; அவை நம் வாழ்க்கையின் மூலம் நடைமுறையில் சரிபார்க்கப்படலாம். நம் மறுசாயலாகுதல் மற்றும் ஆவியின்படியான நம் நடையின் நிஜமான வெளியரங்கம், நம் தினசரி வாழ்க்கையில் நாம் எவ்வாறு நம்மை நடத்திக்கொள்கிறோம் என்பதே. ஜீவனில் உள்ள உண்மையான வளர்ச்சி, நம் தினசரி வாழ்க்கையில் ஏற்படும் ஒரு மாற்றத்தில் காட்சியாக்கப்பட்டு, ஓர் ஐசுவரியமான சபை வாழ்க்கையை விளைவிக்கிறது. ரோமர் 12-13 இல் பட்டியலிடப்பட்டுள்ள காரியங்கள் அனைத்தும், ஜீவனில் உள்ள நம் வளர்ச்சியில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதைப் பார்க்க நம்மை நாமே சோதித்துக்கொள்ள ஒரு சரிபார்ப்புப் பட்டியலாக உள்ளன. ஜீவனில் உள்ள வளர்ச்சி, ஆவியின்படி நடத்தல், மறுசாயலாகுதல் ஆகியவை கோட்பாட்டளவிலான காரியங்கள் அல்ல; அவற்றிற்கு ஒரு நடைமுறைக்குரிய வெளியாக்கம் உள்ளது. கர்த்தரை அனுபவிப்பதில் நாம் குறைவாக இருந்தால், இந்த அதிகாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காரியங்களிலும்கூட நாம் குறைவுபடுவோம், ஏனெனில் நம் சொந்த திறன் அல்லது முயற்சியால் நாம் இத்தகைய ஒரு வாழ்க்கையை வாழ முடியாது. ஆகவே, ஒரு சிறந்த கிறிஸ்தவனாக இருக்க முயற்சிப்பதற்கும், நம் நடத்தையை முன்னேற்றுவதற்கும் பதிலாக, நாம் அதிக ஜீவனைப் பெற கர்த்தரிடம் சென்றாக வேண்டும். ரோமர் 12-13 இல் குறிப்பிடப்பட்டுள்ள நற்பண்புகளை புறத்தூண்டுதலின்றி வாழ்ந்துக்காட்டுவது, இந்த ஜீவனின் பிரமாணமே ஆகும்.
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: (இன்றைய சமுதாயத்தின் விழுந்துபோன மற்றும் சீரழிந்த தரநிலைகள் காரணமாக, இளம் வாலிபர்கள் ஒரு நேர்த்தியான, உயர்ந்த மற்றும் நற்பண்புமிக்க தரநிலையுள்ள மனித வாழ்க்கையால் உட்செலுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது. இத்தகைய ஒரு பேசுதல், அவர்களுக்குள் இருக்கும் தேவனால்-சிருஷ்டிக்கப்பட்ட மனுஷீகத்திற்கு ஒத்திருக்கிறது.) ஓர் இயல்பான கிறிஸ்தவனின் வாழ்க்கை என்பது அதி உயர்ந்த, அதி உன்னதமான மண்டலத்தில் வாழப்படும் ஒரு வாழ்க்கையாகும். ஓர் இயல்பான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழும் ஒருவன் மற்றவர்களுக்கு எதிராக ஒரு வெறுப்பு கொள்ள மாட்டான், மாறாக அவன் தனக்குத் தீங்கு இழைக்கப்படும் போது மற்றவர்களை மன்னிக்க சித்தமாய் இருப்பான். அவர் மற்றவர்களை விட தன்னை சிறந்ததாகக் கருதமாட்டான், மாறாக மற்றவர்கள் இரட்சிக்கப்படுவதைக் காண வாஞ்சிக்கும் ஒரு கரிசனையுள்ள (அக்கறையுள்ள) இருதயத்தைக் கொண்டிருப்பான். இத்தகைய ஒருவன், சந்தேகத்திற்கு இடமின்றி, தன் பெற்றோருக்கு உண்மையாக மதிப்பளித்து, அவர்களுக்குக் கீழ்ப்படிவான் அதோடு எல்லா மனிதர்களின் பார்வையிலும் ஒரு கண்ணியமான (யோக்கியமான) வழியில் வாழ முன்யோசனையுடன் இருப்பான் (ரோ. 12:17; 2 கொரி 8:21). இவை, ஓர் இயல்பான கிறிஸ்தவனின் உயர்த்தப்பட்ட வாழ்க்கையின் ஒரு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இத்தகைய ஓர் உயர்ந்த வாழ்க்கையை நாம் வாழ்வது என்பது அசாத்தியமானது மற்றும் முற்றிலும் தன்னிச்சையானது (புறத்தூண்டுதலற்றது). இது அனைத்தும் நம் வாழ்க்கையின் ஊற்றைப் பொறுத்தது. கிறிஸ்துவின் வாழ்க்கை, நம்மில் கிறிஸ்துவால் மட்டுமே வாழப்பட முடியும் என்பதை நாம் உணர்ந்தறிந்தாக வேண்டும். நாம் கிறிஸ்துவுடன் தொடர்புகொள்ளவில்லை எனில், நாம் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ இயல மாட்டோம். கிறிஸ்து மட்டுமே நிஜமான கிறிஸ்தவர்: நிஜமான “கிறிஸ்து-மனிதர்.” எனவே, நாம் கிறிஸ்துவை தொடர்ச்சியாகத் தொடர்புகொண்டு, அனுபவித்துமகிழ்கிறவர்களாக இருந்தாக வேண்டும். நாம் இதை எவ்வளவு அதிகமாகச் செய்கிறோமோ, அவ்வளவு அதிகமாக கிறிஸ்து புறத்தூண்டுதலின்றி (தன்னியல்பாக) நம்மிலிருந்து வாழ்ந்துக்காட்டப்படுவார். இப்படிப்பட்ட ஒரு விதத்தில் நாம் கிறிஸ்துவைத் தொடர்புகொண்டு வாழ்வதன் விளைவு, கிறிஸ்துவின் வெளியாக்கமாக—இன்று பூமியில் கிறிஸ்துவின் சரீரத்தின் ஒரு சாட்சியாக இருக்கும்.
சுவிசேஷ செயலாக்கம்: மனிதனுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று, அவனது மனுஷீகத்தில் அவனை இன்னும் அதிக நேர்த்தியானவனாக ஆக்கிக்கொள்ள முன்னேற்றத்திற்காகப் போராடுகிறது. புத்தாண்டு பிறக்கும்போது, பெருந்திரளான மக்கள் தங்களையே மேம்படுத்திக்கொள்ள பெருந்தீர்மானங்களை மேற்கொள்கின்றனர்; சிலர் மதம் அல்லது தத்துவத்திடம் கூட திரும்புகின்றனர். முன்னேற்றத்திற்கான ஒரு தேவை பற்றிய அவர்களது உணர்வு, பாவத்தைக் குறித்து அவர்களைக் கண்டனம்செய்யும், அவர்களது மனச்சாட்சியின் உள்ளுக்குள் ஆழத்தில் இருந்து வருகிறது. மக்கள் தங்கள் மனதிற்குள் இருக்கும் நன்மையின் பிரமாணம் காரணமாகவே (Rom. 7:23, footnote 2), தங்கள் மனச்சாட்சியின் உள்ள இந்த உணர்வைச் சாந்தப்படுத்துவதற்காக நன்மைசெய்ய விரும்பி, முயற்சிசெய்கிறார்கள். ஆயினும்கூட, தன்னையே முன்னேற்றுவதற்கான இந்த இயற்கையான ஜீவனின் பலவீனமான (இலேசான, அற்பமான) முயற்சிகள், மனிதனின் மாம்சத்தில் உள்ள பாவம் மரணம் என்பவற்றின் பிரமாணத்தால் விரைவாக வெல்லப்படுகின்றன (ரோ. 8:2). இந்த முயற்சிகள் ஒரு சடலத்திற்கு ஒப்பனைசெய்தல் (மேக்கப் போடுதல்) போன்றது, இது அதன் வெளிப்புற தோற்றத்தை மட்டுமே முன்னேற்றுகிறது. இத்தகைய மாற்றங்கள் தற்காலிகமானவை அதோடு மனிதனின் நிஜமான தேவையை நிவர்த்தி செய்வதில்லை. உண்மை என்னவெனில், எல்லா மனிதர்களும், நல்ல மனிதர்களும் கூட, ஓர் உள்ளார்ந்த சர்ப்பத்தனமான சுபாவத்தைக் கொண்ட சர்ப்பங்களாக உள்ளனர், இது ஒரு நேர்மையான மற்றும் ஒழுக்கமான நபராகத் தோன்றிய நிக்கொதேமுவுக்குக் கர்த்தர் வெளிப்படுத்தியதைப் போன்றதே (யோவான் 3:14-15). மனிதனுக்கு வெறும் வெளிப்புற மாற்றம் தேவையில்லை; அவன் மற்றொரு ஜீவனை, அதாவது தன்னை வளர்சிதைமாற்ற முறையில் மறுசாயலாக்கும் ஒரு ஜீவனைப் பெற வேண்டும். அவன் ஓர் இயல்பான, நேர்த்தியான மனித வாழ்க்கையின் ஒப்பற்ற ஊற்றாகிய சாட்சாத்து தேவனையே பெற்றுக்கொள்ள வேண்டும்.
மிக முக்கியக் காரியங்கள்: தேவனுடைய கூட்டு வெளியாக்கமாகக் கட்டியெழுப்பப்படுவதற்கான, தேவனுடைய உச்சநிலையான குறிக்கோளை மனிதன் நிறைவேற்றுவான் என்பதைப் புரிந்துக்கொள்ளுதல் (II.B.4.).
பின்புல வாசிப்பு: Life-study of Romans, Message 27.
REFERENCES: Life-study of Romans, Message 1, p. 14; Messages 25–27; Message 28, pp. 327–330; The Secret of God’s Organic Salvation, Chapter 3.