உயிர்த்தெழுந்து, பரமேறிய கிறிஸ்துவின் பரப்புதல்
பகுதி 10
✵பாடம் 10 – 18
ஒரு ஜீவிக்கும் பலி
குறிக்கோள்: சபை வாழ்க்கையை வாழ கர்த்தருக்கு நம்மையே வழங்குவதன் (காணிக்கையாக்குவதன்) புத்தியுள்ளத்தன்மையை (நியாயத்தன்மையை) இளம் வாலிபர்களுக்குக் காட்டுவதற்கு.
பொருட்சுருக்கம்: பவுல், சபை வாழ்க்கையைப் பற்றிய ஐந்து அதிகாரங்களுடன் ரோமர் புத்தகத்தை முடிக்கிறான், இது தேவனுடைய முழு இரட்சிப்பின் இலக்கு சபை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. தேவனுடைய இலக்கு நனவாக்கப்படுவதற்கு (உணர்ந்தறியப்படுவதற்கு), நாம் நம் சரீரங்களைக் தேவனுக்கு வழங்கி, நம் மனம் புதிதாக்கப்படுதல் மூலம் மறுசாயலாக்கப்பட்டாக வேண்டும். நாம் இந்த நடைமுறைக்குரிய வழியில் நம்மையே அவருக்கு நம்மையே வழங்கும்போது, அவர் தம் சரீரத்தைக் கட்டியெழுப்புவதற்காக நம்மை மறுசாயலாக்குவார், மேலும் அவருடைய சித்தமே, அதாவது இந்த சபை வாழ்க்கையே நன்மையும், நற்பிரியமும், பரிபூரணமுமானது என்பதை நம் அனுபவத்தின் மூலம் நாம் நிரூபிப்போம்.
பின்புலம்: கவலைக்கிடமாக, இளம் வாலிபர்கள் பலர் உயர்நிலைப் பள்ளியின் முடிவை நெருங்கிவிட்டனர், ஆயினும் சபை வாழ்க்கைக்காக தங்கள் வாழ்வுகளைக் கொடுப்பதற்கான கண்ணோட்டம் இன்னும் அவர்களுக்கு இல்லை. எனினும், இந்த வசனங்களின்படி, நாம் நம் வாழ்வுகளைக் கொண்டு செய்யத்தக்க அதி புத்தியுள்ள காரியம், சபை வாழ்க்கையை வாழ்வதற்கான அர்ப்பணிப்பில் நம் சரீரங்களைக் கர்த்தருக்குக் காணிக்கையாக்குவதே (வழங்குவதே) ஆகும். இந்தத் தருணத்தில், இளம் வாலிபர்களில் சிலர் தங்களை ஒருபோதும் அர்ப்பணித்திருக்க மாட்டார்கள், அப்படியிருக்க மற்றவர்கள் அர்ப்பணித்திருப்பார்கள். பொருட்படுத்தாமல், ஒவ்வொருவரும் இந்தக் காணிக்கையின் (வழங்குதலின்) புத்தியுள்ளத்தன்மையைப் பார்க்க வேண்டும், மேலும் அவர்களது அர்ப்பணிப்பு தேவன் தங்களில் நடைமுறைக்குரிய ரீதியில் வேலைசெய்வதற்கும், இத்தகைய ஓர் அர்ப்பணிப்பை நிறைவேற்றுவதற்குமான தளத்தை அவருக்கு அளிக்கிறது என்பதை அங்கீகரிக்க வேண்டும். நாம் அர்ப்பணிக்கிறோம், தேவன் அதைச் செயல்படுத்துகிறார்.
அதிகாரம்: ரோமர் 12.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
-
கிறிஸ்துவின் சரீரமான சபையாகிய தம் குறிக்கோளின் நிமித்தம் தேவன் தம் ஜீவனில் நம்மை இரட்சிக்கிறார்—எபே. 1:22-23; 3:9-10; 5:25–27
“…ரோமர் புத்தகத்தில் ஐந்து முழு அதிகாரங்கள் சபையின் காரியத்தைப் பற்றிப் பேசுகின்றன. ஜீவன் ஜீவனுக்காக இல்லை— ஜீவன் சரீரத்திற்காக இருக்கிறது. ஜீவன் சபைக்காக இருக்கிறது. நாம் விழிப்புடன் இருக்க வேண்டும், ஏனெனில் அதிசிறந்த காரியங்களால்கூட நாம் முகத்திரையிடப்பட முடியும்….ரோமர் புத்தகத்தில் பவுலின் கடைசி வார்த்தை சபை என்று நான் குறித்துக்காட்ட விரும்புகிறேன். யாரோ ஒருவர் பேசுவதை நாம் கேட்கும்போது, அவருடைய முடிவுரை வார்த்தைக்காக நாம் எப்போதும் காத்திருப்போம், ரோமர் புத்தகத்தில் முடிவுரை வார்த்தை சபையைப் பற்றியதாகும். எனவே, எட்டாம் அதிகாரத்துடன் நீங்கள் நிறுத்திவிட்டால், பவுலுடைய சொற்பொழிவின் கடைசி வார்த்தையிலிருந்து உங்களையை பிரித்து, பெருமளவான காரியத்தை நீங்கள் தவறவிடுவீர்கள். நாம் பவுலின் முடிவுரைக்குத் தங்குதடையின்றி முன்னேறிச்செல்ல வேண்டும். ரோமர் புத்தகத்தை பவுல் எழுதியது ஏன்? வெறுமனே நீதிப்படுத்துதல், பரிசுத்தமாகுதல், அல்லது மகிமைப்படுதலுக்காகக்கூட அவன் எழுதவில்லை. உச்சநிலையாகவும் இறுதிநிறைவாகவும் சபை வாழ்க்கைக்கென்று ரோமர் எழுதப்பட்டது. ரோமர் புத்தகத்தின் முழுநிறைவு சபையே” (ரோமரின் ஜீவ-ஆய்வு , செய்தி 25, ப. 318).
-
ரோமர் புத்தகத்தின் முழுநிறைவு சபையே.
சபை வாழ்க்கையே, ரோமரில் உள்ள முழுநிறைவான தலைப்பு. நாம் சபை வாழ்க்கையை வாழ முடியுமாறு, நாம் ஜீவனில் வளர்ந்துக்கொண்டும், தேவனுடைய முழுமையான இரட்சிப்பை அனுபவித்துக்கொண்டும் இருக்கிறோம்.
-
கிறிஸ்துவின் சரீரமே, தேவனுடைய இரட்சிப்பின் இலக்கு—ரோ. 12:4-5
“நமக்கான தேவனுடைய இலக்கு நாம் ஒரு கூட்டு வாழ்க்கையாகிய ஒரு சரீர வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே. அவருடைய மீட்பு, நீதிப்படுத்துதல், மற்றும் பரிசுத்தமாகுதல் எல்லாம் இந்த இலக்கிற்காகவே. சரீர வாழ்க்கைக்கு நாம் கவனம்செலுத்தாவிட்டால், நாம் நிச்சயமாகவே தேவனுடைய இலக்கைத் தவறவிடுவோம். மீட்கப்படுவது, நீதிப்படுத்தப்படுவது, பரிசுத்தமாக்கப்படுவது, கிறிஸ்துவுக்கு ஒத்தசாயலாக்கப்படுவது—எல்லாம் நம்மிடம் ஒரு நேர்த்தியான கூட்டு வாழ்க்கை இருக்க வேண்டும் என்பதற்காகவே. ரோமர் 8ல் உள்ள பரிசுத்தமாகுதல் மற்றும் ஒத்தசாயலாகுதலின் அனுபவங்களுடன் நாம் நிறுத்திவிடக் கூடாது. ஆவியானவரில் பரிசுத்தமாகுதல் மற்றும் ஒத்தசாயலாகுதலின் அனுபவங்கள், நாம் கூட்டு வாழ்க்கையை நடைமுறைப்படுத்தும்படியாக, நம்மை ரோமர் 12க்கு முன்னோக்கிக் கொண்டுவரவே என்பதை நாம் பார்க்க வேண்டும்” (ரோமரின் ஜீவ-ஆய்வு, செய்தி 25, ப. 324). இந்த யுகத்தில், கூட்டு வாழ்க்கையே சபை வாழ்க்கை; நித்தியத்தில் அது புதிய எருசலேமாக இருக்கும்.
-
கர்த்தருடைய குறிக்கோளுக்காக நம்மையே அவருக்கு வழங்குவதே (காணிக்கையாக்குவதே) அதி புத்தியுள்ளது—ரோ. 12:1.
“ஒரு ஜீவிக்கும் பலியாக நம்மை தேவனுக்கு வழங்குவதே நம் அதி புத்தியுள்ள சேவை….ஒரு தெளிவான மனம் நமக்கிருந்து, நாம் புத்தியுள்ள, நேர்மையான, மற்றும் பகுத்தறிவுள்ள நபராயிருக்க விரும்பினால், நமக்கு நிச்சயமாக சபை வாழ்க்கை இருக்க வேண்டும். சபை வாழ்க்கையில் இருக்க விரும்பாதவர்களே மக்கள் மத்தியில் அதிமுட்டாள்கள். சபை வாழ்க்கையைத் தவிர வேறு எதையாவது நடைமுறைப்படுத்துவது முட்டாள்தனமானது, ஆனால் சபை வாழ்க்கைக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுப்பது பகுத்தறிவுள்ள, புத்தியுள்ள காரியம். சபைத்தலைவிட வேறெதுவும் அதிக புத்தியுள்ளதல்ல. இரண்டு டாலர்களை ஓர் உலகப்பிரகாரமான காரியம் அல்லது கேளிக்கைக்குச் செலவுசெய்வது முடடாள்தனமானது, ஆனால் சபை வாழ்க்கையில் இரண்டு மில்லியன் டாலர்களைச் செலவுசெய்வது புத்திசாலித்தனமானது. எனக்கு நூறு வாழ்க்கைகள் இருக்குமானால், நாம் அவை அனைத்தையும் சபை வாழ்க்கைக்கே கொடுப்பேன். எனினும், என் வாழ்க்கையின் மிகச் சிறிய பகுதியைக்கூட உலகப்பிரகாரமான காரியங்களுக்குக் கொடுக்கமாட்டேன், ஏனெனில் அப்படிச் செய்வது முட்டாள்தனமாக இருக்கும். சபை வாழ்க்கைக்கு நம்மைக் கொடுப்பது என்னே புத்தியுள்ள சேவை! நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நான் மீட்டுத்திருப்புதலில் இருந்திருக்கிறேன், அதைக் குறித்து நான் மிகச் சிறிதளவுகூட வருத்தப்பட்டதில்லை என்று நான் சாட்சிபகர முடியும். சபையைப் பற்றி நான் எண்ணும்போதெல்லாம் பரவசமடைகிறேன். சபை வாழ்க்கை பற்றியும், சபை வாழ்க்கைக்கான என் ஊழியத்தைப் பற்றியும் நான் எண்ணும் ஒவ்வொரு தடவையும் நான் பரலோகத்தில் இருக்கிறேன். என்னே புத்தியுள்ள சேவை இது!” (ரோமரின் ஜீவ-ஆய்வு , செய்தி 25, பப. 326-327).
-
நம் சரீரங்களை ஒப்புக்கொடுக்கும்படி தேவனுடைய மனதுருக்கங்கள் மூலமாக அப்போஸ்தலன் நமக்குப் புத்திசொல்கிறான்—ரோ. 12:1.
“அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய மனதுருக்கங்களை முன்னிட்டு உங்களைக் கெஞ்சுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள சேவை’ (கிரே.) என்று ரோமர் 12:1 கூறுகிறது. 12:1ல் பவுல் தான் நமக்குக் கட்டளையிடப்போகும் காரியத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி, கெஞ்சும் விதத்தில் பேசுகிறான். இது தேவனுடைய வாஞ்சையையும் குறிக்கோளையும் திரைநீக்குகிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் மற்றும் யுகங்களாக தேவனிடம் ஒரு குறிப்பிட்ட வாஞ்சை இருந்துவந்திருக்கிறது—அது கிறிஸ்துவுக்காக ஒரு சரீரத்தைப் பெறுவது. எனவே, ‘அப்படியிருக்க, சகோதரரே…தேவனுடைய மனதுருக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்’ என்று அப்போஸ்தலன் கூறினான். ‘மனதுருக்கம’ என்று ஒருமையிலல்ல, ‘மனதுருக்கங்கள்’ என்று பன்மையிலிருப்பதைக் கவனியுங்கள். மனதுருக்கம் என்பது இரக்கத்தைவிட ஐசுவரியமும் ஆழமுமானது என்று 9:15ல் நாம் பார்த்திருக்கிறோம். தேவன் நம்மேல் ஒரு வகை மனதுருக்கம் மட்டுமல்ல, அநேக வகை மனதுருக்கங்களை வைத்திருக்கிறார். நம்மைத் தேர்ந்தெடுத்தலில் அவர் நம்மேல் மனதுருக்கமாய் இருந்திருக்கிறார். நம்மை அழைத்தலில், நம்மை இரட்சித்தலில், நம்மை தம் ஜீவனுக்குள் கொண்டுவருவதில் அவர் நம்மேல் மனதுருக்கமாய் இருந்திருக்கிறார். கடந்த அதிகாரங்கள் காட்டுவதுபோல, கடந்த காலத்தில் அவர் நம்மேல் அநேக மனதுருக்கங்களை வைத்திருந்திருக்கிறார். தேவனுடைய இந்த மனதுருக்கங்கள் மூலம் தேவனுக்கு நம் சரீரங்களை வழங்க வேண்டுமென்று நம்மிடம் அப்போஸ்தலன் பவுல் கெஞ்சினான். நாம் தேவனுடைய மனதுருக்கங்களை உணர்ந்து, அவற்றால் அசைக்கப்பட்டால், நாம் என்ன செய்ய வேண்டும் என்று அப்போஸ்தலன் கெஞ்சினானோ அதை நாம் செய்வோம்” (ரோமரின் ஜீவ-ஆய்வு , செய்தி 25, பப. 324-325).
-
நாம் நம் சரீரங்களை ஒரு ஜீவிக்கும் பலியாக வழங்க வேண்டும்—ரோ. 12:1.
“வசனம் 1ல் நம் சரீரங்களை ‘ஒரு ஜீவிக்கும் பலியாக’ வழங்க வேண்டுமென்றும் பவுல் நம்மிடம் கெஞ்சுகிறான்….சபை வாழ்க்கையிலுள்ள காரியமோ பலியை, அதாவது, தேவனின் திருப்திக்காக அவருக்கு நம்மை வழங்குவதைப் பற்றியது. சபை வாழ்க்கை மொத்தமாக தேவனுடைய திருப்திக்கான ஒரு பலி. அநேக சரீரங்கள் வழங்கப்பட்டாலும், பலி ஒன்றே. இங்கு ஏன் அநேக சரீரங்களும் ஒரேவொரு பலியும் உள்ளன? ஏனெனில் அநேக அவயவங்கள் ஒரே சரீரமாக இருக்கின்றன, அநேக விசுவாசிகள் ஒரே சபையாக இருக்கின்றனர். ‘ஜீவிக்கும்’ என்ற வார்த்தையைப் பவுல் ஏன் பயன்படுத்துகிறான்? ஏனெனில் இந்தப் பலியை பழைய ஏற்பாட்டுப் பலிகளோடு அவன் ஒப்பிடுகிறான். பழைய ஏற்பாட்டு நாட்களில் செலுத்தப்பட்ட பலிகள் யாவும் கொல்லப்பட்டன, ஆனால் சபை ஒரு கொல்லப்பட்ட பலி அல்ல; அது ஜீவனாக கிறிஸ்துவால் நிரம்பிய ஒரு ஜீவிக்கும் பலி” ( ரோமரின் ஜீவ-ஆய்வு, செய்தி 25, பப. 325-326).
-
நம் சரீரங்களை வழங்குவது அதி நடைமுறைக்குரியது—ரோ. 12:1.
“பவுல் சபை வாழ்க்கை பற்றி பேச ஆரம்பித்தபோது, தங்கள் சரீரங்களை வழங்கும்படி விசுவாசிகளிடம் அவன் மன்றாடினான், ஏனெனில் மனிதர்களுக்கு சரீரத்தைவிட எதுவும் அதிக நிஜமானதும் நடைமுறைக்குரியதும் அல்ல. உங்கள் சரீரம் சபை வாழ்க்கையில் இல்லையென்றால், நீங்கள் எவ்வளவாய் சபை வாழ்க்கைக்காக இருக்கிறீர்கள் என்று கூறாதீர்கள். கடந்த ஆண்டுகளில் அநேக மக்கள் என்னிடம்: ‘சகோதரரே, நான் உங்களுடன் நிற்கிறேன். என் வியாபாரத்தின் பாரம் அதிகக் கனமாக இருப்பதால், நான் சபை வாழ்க்கையில் இருக்க முடியாது, ஆனால் நீங்கள் செய்வதுடன் நான் ஒன்றாக இருக்கிறேன்’ என்று கூறினார்கள். மற்றவர்கள், ‘கூடுகையில் கலந்துகொள்ள முடியாத அளவு நான் மிகவும் களைப்பாய் இருக்கிறேன். நீங்கள் கூடுகைக்குப் போங்கள், நான் வீட்டிலிருந்து உங்களுக்காக ஜெபிப்பேன். பௌதிகமாக நான் கூடுகைக்குப் போக முடியாது, ஏனெனில் நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன், ஆனால் என் இருதயமும் ஆவியும் உங்களுடன் இருக்கும்’ என்று கூறியிருக்கின்றனர். இந்த வார்த்தைகள் இனிமையாகத் தோன்றுகின்றன, ஆனால் அவை ஏமாற்றுபவை. நாம் நம் சரீரங்களில் இருக்கிறோம் என்பதை நாம் உணர வேண்டும். நம் சரீரங்கள் எங்கிருக்கிறதோ, அங்கே நாம் இருப்போம். எல்லாப் பரிசுத்தவான்களும் கூடுகையில் கலந்துகொள்ள தாங்கள் மிகவும் களைப்பாக இருப்பதாகக் கூறுகின்றனர் என்று வைத்துக்கொள்ளுங்கள். கூடுகை என்னவாகும்? எனவே, தங்கள் சரீரங்களை வழங்கும்படி பவுல் சகோதரர்களிடம் கெஞ்சினான். நீங்கள் கர்த்தருடைய குறிக்கோளுக்கு அக்கறைசெலுத்துவதானால், நீங்கள் உங்கள் சரீரத்தை வழங்க வேண்டும்….கூடுகைக்கு வராமலிருப்பதைவிட கூடுகைக்கு வந்து தூங்குவது மிக நல்லது. நீங்கள் கூடுகைக்கு வந்து, கடைசி சில நிமிடங்களைத் தவிர மீதி எல்லா நேரமும் தூங்கக்கூடும். ஒருவேளை, கடைசி ஐந்து நிமிடங்களில் நீங்கள் தெய்வீக ஊக்கமளிக்கப்பட்டு பெரிய உதவியைப் பெறுவீர்கள். இப்படி நடைபெற்றிருக்கிற அநேக சம்பவங்கள் எனக்குத் தெரியும்” (ரோமரின் ஜீவ-ஆய்வு , செய்தி 25, ப. 327).
-
கர்த்தருடைய குறிக்கோளுக்காக நாம் நம்மையே அவருக்கு வழங்கிய (காணிக்கையாக்கிய) பிறகு, அவர் தம் சரீரத்தைக் கட்டியெழுப்புவதற்காக நம்மை மறுசாயலாக்குவார்—ரோ. 12:2
நாம் கர்த்தருக்கு நம்மையே வழங்குதல் (காணிக்கையாக்குதல்) அவருடைய குறிக்கோளுக்காக உள்ளது. நாம் நம்மையே அவருக்கு வழங்கும் (காணிக்கையாக்கும்) போது, அவர் தம் சரீரத்தைக் கட்டியெழுப்புவதற்காக நம்மை மறுசாயலாக்குவார்.
-
நாம் இந்த யுகத்திற்கு ஒத்தசாயலாகக்கூடாது—ரோ. 12:2
“’இந்த யுகத்திற்கு ஒத்தசாயலாகாமல்’ என்று பவுல் நமக்குக் கூறுகிறான். நாம் இந்த யுகத்தால் வடிவமைக்கப்படக் கூடாது. இந்த யுகம் என்றால் என்ன? யுகம் என்பது சபை வாழ்க்கைக்கு எதிரானதும் பதிலீடுமானதுமான தற்போதைய நடைமுறை உலக வாழ்க்கை. முழு உலகமும் ஒரு சாத்தானிய அமைப்பு, அதாவது, சாத்தானால் கட்டியமைக்கப்பட்ட ஓர் அமைப்பு….இந்த உலக அமைப்பு பல யுகங்களால் ஆனதாகும்….மேலும் ஒவ்வொரு யுகமும் உலகத்தின் ஒரு பகுதி. ஒவ்வொரு யுகத்திற்கும் அதன் நவீன பாணி இருக்கிறது….தற்போதைய நடைமுறை உலக வாழ்க்கையாக, ஒரு யுகம் என்பது உலக அமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதால், யுகங்களுள் ஏதேனும் ஒன்றில் இல்லாமல் நீங்கள் இந்த உலகத்தில் இருக்க முடியாது….உலகத்தைக் கைவிடும்படி, நீங்கள் யுகத்தையும் கைவிட்டாக வேண்டும்….ஒவ்வொரு யுகத்திற்கும் அதனதின் வடிவமும் பாங்கும் உள்ளன. அறுபது ஆண்டுக்கு முன்பு மேற்கத்திய சீமாட்டிகள் தங்கள் கூந்தலை ஓர் உயர்ந்த கோபுரமாக வடிவமைத்தார்கள். பின்னர் குட்டை முடி பொதுவானதானது, ‘குறுகக்கத்தரித்த முடி’ என்றழைக்கப்பட்ட கூந்தல் பிரசித்தமானது. சமீப ஆண்டுகளில் இளையவர்கள் இந்த யுகத்தின் சிகையலங்காரமான ‘ஹிப்பி வகை’ என்றழைக்கப்படுவதைப் பின்பற்றுகின்றனர்….உலகம் சபையை எதிர்க்கிறது, யுகங்கள் சபைகளை எதிர்க்கின்றன. சபை வாழ்க்கை வேண்டுமென்று நாம் அக்கறைப்பட்டால், நாம் யுகத்தைக் கைவிட வேண்டும். தற்போதைய யுகம் சபை வாழ்க்கையை எதிர்ப்பதால், நாம் யுகத்தைப் பின்பற்றி அதன்படி வடிவமைக்கப்பட்டிருந்தால், நிஜமாக சரீர வாழ்க்கையை நாம் அனுபவிக்க முடியாது. நவீன யுகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிற ஒரு நபர் ஞாயிற்றுக்கிழமை கூடுகைகளில் கலந்துகொள்ளக்கூடும், ஆனால் அவன் சபை வாழ்க்கையை நடைமுறைப்படுத்த முடியாது. நாம் சரீர வாழ்க்கையை, சபை வாழ்க்கையின் நடைமுறையை விரும்பினால், நாம் இந்த யுகத்தைப் பின்பற்றவும் அதற்கு ஒத்தசாயலாகவும் கூடாது. இதனால்தான் பவுல் இந்த யுகத்திற்கு ஒத்தசாயலாகக் கூடாதென்று நமக்குக் கூறினான்” (ரோமரின் ஜீவ-ஆய்வு, செய்தி 25, பப. 328-330).
-
மனம் புதிதாவதால் நாம் மறுசாயலாக்கப்படுகிறோம்—ரோ. 12:2
“இந்த யுகத்திற்கு நாம் ஒத்தசாயலாகக் கூடாது, மாறாக, நம் மனம் புதிதாவதால் நாம் மறுசாயலாக வேண்டும் (எபே. 4:23; தீத்து 3:5). இந்த யுகத்திற்கு நாம் ஒத்தசாயலாவதென்றால் புறம்பார்ந்தரீதியில் நவீன பாணிகளைக் கடைப்பிடிப்பதாகும்; மறுசாயலாவதென்றால் உள்ளார்ந்தரீதியில் ஒரு வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்த நம் ஆள்தத்துவத்திற்குள் ஒரு ஜீவாதார மூலக்கூறு உருவாக்கப்படுவதாகும். நம் மனம் புதிதாக்கப்படுவதின் மூலம் நாம் மறுசாயலாக்கப்பட வேண்டும்….புறம்பார்ந்த போதனைகளால் மட்டுமல்ல, கிறிஸ்துவின் மூலக்கூறு மனதிற்குள் சேர்க்கப்படுவதால் மனம் புதிதாக்கப்படுகிறது. கர்த்தராகிய இயேசு தம்மை நம் ஆவியிலிருந்து நம் மனதிற்குள் பரப்பும்போது, நம் மனம் புதிதாக்கப்படும். நம் மனம் புதிதாவதினால் நம் ஆத்துமா வளர்சிதைமாற்றரீதியில் மாற்றப்படுகிறது. இந்த வழியில் நம் ஆத்துமாவில் சபை வாழ்க்கைக்குத் தேவையான மறுசாயலாகுதலை நாம் அனுபவிக்கிறோம். நாம் சபை வாழ்க்கையை நடைமுறைப்படுத்த விரும்பினால், நம் மனம் புதிதாவதினால் நம் ஆத்துமாவில் இப்படிப்பட்ட ஒரு மறுசாயலாகுதலை நாம் அனுபவிக்க வேண்டும்” (ரோமரின் ஜீவ-ஆய்வு , செய்தி 25, ப. 330).
-
இந்த வழியில் நாம், தேவனுடைய சித்தம் என்ன என்பதைப் பரிசோதனையால் நிரூபிப்போம்—ரோ. 12:2
“’தேவனுடைய நன்மையும், பிரியமும், பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பரிசோதனையால் நிரூபிக்கும்படியாக’ நம் மனதின் புதிதாகுதலும் நம் ஆத்துமாவின் மறுசாயலாகுதலும் நமக்குத் தேவை. தேவனுடைய சித்தம் என்ன? தேவனுடைய சித்தம் சரீர வாழ்க்கையை, சபை வாழ்க்கையைப் பெறுவதே. 12:2ல் குறிப்பிடப்பட்ட தேவனுடைய சித்தத்தை உங்கள் தனிப்பட்ட மனித சூழ்நிலைக்கு, அதாவது, திருமணம், உத்தியோகம், மற்றும் வீட்டுக் காரியங்களுக்குப் பிரயோகிக்காதீர்கள். ‘ஆ கர்த்தாவே, நான் ஒரு புதிய வீடு வாங்க இருக்கிறேன். உம்முடைய சித்தம் என்ன? அதில் எத்தனை படுக்கை அறைகளும், குளியல் அறைகளும் இருக்க வேண்டும்? அதற்காக நான் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்? கர்த்தாவே, நான் உம் சித்தத்தை நான் அறிய விரும்புகிறேன்’ என்று சிலர் ஜெபிக்கின்றனர். இந்த முறையில் ஜெபிக்காதீர்கள், ஏனெனில் எவ்வளவாய் நீங்கள் இந்த வழியில் ஜெபித்து தேவனுடைய சித்தத்தைத் தேடுகிறீர்களோ, அவ்வளவாய் நீங்கள் இருளிலும் அவருடைய சித்தத்திற்கு வெளியேயும் இருப்பதைக் கண்டுகொள்வீர்கள். 12:2ல் குறிப்பிடப்பட்ட சித்தம் சபை வாழ்க்கையைப் பெறுவதே. நீங்கள் வாங்குகிற வீடு, நீங்கள் செய்யும் வேலை, மற்றும் நீங்கள் திருமணம் முடிக்கும் நபர் எல்லாம் சபை வாழ்க்கையைச் சார்ந்திருக்க வேண்டும். நீங்கள் அணியும் ஆடைகள்கூட சபை வாழ்க்கையைச் சார்ந்திருக்க வேண்டும். நீங்கள் சபை வாழ்க்கையுடன் சரியாக இருந்தால், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். எல்லாமே சபை வாழ்க்கைக்காக இருக்க வேண்டும், ஏனென்றால் சபை வாழ்க்கையைப் பெறுவதே தேவனின் ஒப்பற்ற சித்தமாகும். இதுவே நன்மையும், பிரியமும், பரிபூரணமுமானது. இது சரீர வாழ்க்கைக்காக இருக்கிறது. நம் சரீரங்களை வழங்குவது, நம் ஆத்துமாக்கள் மறுசாயலாகுவது, நம் மனங்கள் புதிதாகுவது எல்லாம் சரீர வாழ்க்கைக்காகவே” (ரோமரின் ஜீவ-ஆய்வு, செய்தி 25, பப. 330-331).
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: ஒவ்வொரு நாளும் நாம் நம் சரீரங்களின் அவயவங்களை இரண்டிலொன்று அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு அல்லது நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு வழங்குகின்றோம் (ரோ. 6:12–13). சபை வாழ்க்கை என்பது வார்த்தையையும், பரிசுத்தவான்களின் சாட்சிகளையும் தீர்க்கதரிசனங்களையும் கேள்விப்படுதலால் நம் மனதுகள் மறுசாயலாக்கப்பட முடியக்கூடிய இடமாகும். வேதாகமத்தை வாசிக்க நம் அவயவங்களை (நம் கண்களையும், நம் மனதையும்) வழங்குவதன் மூலம், நம் மனம் மறுசாயலாக்கப்படுகிறது (ரோ. 12:1–2). நாம் திரையரங்கம், தொலைக்காட்சிப் பெட்டி ஆகியன போன்றவற்றுக்கு நம் சரீரங்களை வழங்கும் போதெல்லாம், உலகத்தின் ஒரு மூலக்கூறு நமக்குள் நுழைந்து, நம் மனப்பாங்குகளையும், சிந்தனையையும், ஆசைகளையும் வடிவமைத்து, நம் விருப்பத்தேர்வுகளைப் பாதிக்கிறது. இவ்வாறு, நம் சரீரங்களை தவறான விஷயங்களுக்கு வழங்குவதன் மூலம், நம் வாழ்வுகள் தவறான வழியில் வடிவமைக்கப்படுகின்றன. கர்த்தருடைய சாயலாகத்தானே அதிகமாக மறுசாயலாக்கப்படுவதற்குப் பதிலாக (2 கொரி. 3:18), நாம் இந்த தேவனற்ற, சாத்தானிய யுகத்திற்கு அதிகமாக ஒத்தசாயலாகிறோம். சில விசுவாசிகள், பாவத்தில் ஈடுபட்டுள்ள இரட்சிக்கப்படாத மக்கள் இருக்கும் வண்ணமாக அப்படியே அவர்களைப் போன்றே இருக்கும் அளவிற்கு இந்த விசுவாசிகள் உலகத்திற்கு அவ்வளவாய் ஒத்தசாயலாகிறார்கள். நாம் எப்போதும் ஒரு திசையில் அல்லது இன்னொரு திசையில் வடிவமைக்கப்படுகிறோம். களிமண் பாத்திரங்களாக, நாம் எதற்கு நம்மை வழங்குகிறோமோ அதன் வடிவத்தை அப்படியே எடுத்துக்கொள்கிறோம். இது நமக்கு ஒரு கடுமையான எச்சரிப்பாக இருக்க வேண்டும். நாம் கர்த்தரால் பயன்படுத்தப்பட வேண்டும் எனில், நாம் எதற்கு நம்மை வழங்குகிறோம் (கீழ்ப்படுத்துகிறோம்) என்பதைக் கவனித்துக்கொள்வதன் மூலம் நாம் எவ்வாறு வடிவமைக்கப்படுகிறோம் என்பதை நாம் கவனித்துக்கொண்டாக வேண்டும்.
சுவிசேஷ செயலாக்கம்: இரண்டிலொன்று நாம் இந்த யுகத்திற்கு அதன் தாக்கங்கள் மற்றும் மனப்பாங்குகளால் ஒத்தசாயலாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம், அல்லது நாம் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்தசாயலாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு யுகத்திற்கும் அதன் வடிவமைக்கும் தாக்கம் உள்ளது என்பது தெளிவாகிறது. ஒரு யுகத்தில், உற்பத்திசெய்யப்படும் மக்கள் அனைவருக்கும் ஒரே சிந்தனை, உடை, முதலியன இருக்கும். உங்கள் பள்ளிகளுக்குள் வெவ்வேறு ஓட்டங்கள் (போக்குகள்) அல்லது வகைகளும் கூட உள்ளன, அவை மக்களை அவற்றின் அச்சுக்கு ஏற்ப வடிவமைக்கின்றன. உதாரணமாக, விளையாட்டில் ஈடுபடுபவர்கள் ஒரு விதமாகவும், ஒரு குறிப்பிட்ட வகையான இசையில் ஈடுபடுபவர்கள் வேறு விதமாகவும் ஆடை அணிவார்கள். நாம் எந்த யுகத்தில் வாழ்கிறோமோ அது அனைவரையும் வடிவமைக்கிறது. அது ஒரு நீரோட்டத்தைப் போன்று நகர்கிறது, செயலற்ற முறையில் தனக்குள் அடித்துச்செல்லும் அனைவரும் தங்களைச் சுற்றியுள்ள நீரோட்டத்தில் உள்ள அனைத்தையும் கொண்டு முழுமையாக ஊறவைக்கப்படும் வரை அவர்களைச் சுமந்து இழுத்துச்செல்கிறது. எனினும், கர்த்தரில் விசுவாசிக்கிறவர்கள் அவரது தெய்வீக ஜீவனைப் பெற்றுக்கொள்கின்றனர், இது இந்த நீரோட்டத்திற்கு எதிராக நீந்தவும், இந்த யுகத்திற்கு வெளியே வாழவும் அவர்களுக்குத் திறனளிக்கிறது. தேவனுடைய சாயலாகத் தங்களை வடிவமைக்கும் இந்த அதிக சக்திவாய்ந்த ஜீவனால் அவர்கள் வாழ்கிறார்கள் மற்றும் நகர்கிறார்கள். தேவனுடைய தெய்வீக ஜீவனைப் பெற்றுக்கொள்ளுங்கள், அது இந்த யுகத்தின் நீரோட்டத்திலிருந்து உங்களைத் திருப்பவும், அவருடைய மகிமையான சாயலுக்கு உங்களை ஒத்தசாயலாக்கவும் உங்களுக்கு நிரப்பீடளிக்கும்.
மிக முக்கியக் காரியங்கள்: நாம் நம் உயிர்களைக் கொடுக்க முடியக்கூடிய அதி உயர்ந்த விஷயமாக தேவனுடைய நித்திய குறிக்கோள் இருத்தல் பற்றிய ஒரு தரிசனத்தின் அடிப்படையில் கர்த்தரை அறிதலும், நேசித்தலும், அவருக்கு நம்மையே அர்ப்பணித்தலும் (III.C.5.).
பின்புல வாசிப்பு: Life-study of Romans, Message 25.
REFERENCES: Life-study of Romans, Message 25.