உயிர்த்தெழுந்து, பரமேறிய கிறிஸ்துவின் பரப்புதல்

பகுதி 10

✵பாடம் 10 – 18

சிருஷ்டிப்பு தேவனை அறிவிக்கிறது

குறிக்கோள்: சிருஷ்டிப்பிலுள்ள தெய்வீக குணாதிசயங்கள் தேவனின் உள்ளார்ந்த சுபாவத்தை வெளிக்காட்டுகின்றன என்பதையும், நாம் தேவனைப் பெறுவதன் மூலமும், அவரது மட்டுப்படுத்தும் வழியை எடுத்துக்கொள்வதன் மூலமும் நாம் துன்மார்க்கத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறோம் என்பதையும் காண்பதற்கு.

பொருட்சுருக்கம்: மனிதர்கள் தங்கள் தீய செயல்களை விரும்புவதால், அவர்கள் தேவனை மறுதலிக்கத் தேர்ந்தெடுத்துள்ளனர். தேவன் நிஜமானவர் என்பதை ஒப்புக்கொள்வது என்பது அவரே தங்கள் சிருஷ்டிகர் என்பதை ஒப்புக்கொள்வதாகும், எனவே தங்கள் உரிமையாளருக்கு தங்கள் வாழ்க்கையில் ஆட்சிசெய்வதற்கான உரிமை உண்டு. தேவன் தாம் இருக்கிறார் என்பதற்கான மறுக்கமுடியாத நிரூபணங்கள் பலவற்றை மனிதனுக்கு வழங்கியுள்ளார், மேலும் இவை அவர் எப்படிப்பட்ட தேவன் என்பதையும்கூட வெளிப்படுத்துகின்றன. தேவன் தம் சிருஷ்டிப்பில் காணப்படுகிறார். இருப்பதெல்லாம் விபரீதமாக (தற்செயலாக) இருத்தலுக்குள் வந்தன (உருவாயிற்று) என்று நினைப்பது அபத்தம். சிருஷ்டிப்பின் ஒவ்வொரு பொருளும் தேவனுடைய கைவேலையின் (கைவண்ணத்தின்) அச்சடையாளத்தைக் கொண்டுள்ளது. சிருஷ்டிப்பு தேவனுடைய நித்திய வல்லமையையும், அவரது தெய்வீக குணாதிசயங்களையும் தெரியப்படுத்துகிறது என்று பவுல் சாற்றுகிறான், மேலும் தேவனுடைய சிருஷ்டிப்பின் மண்டலமாகிய கிறிஸ்துவின் மூலமாக செயல்படுத்தப்பட்டிருக்கும் உள்ளார்ந்த குணாதிசயத்தை சர்வ சிருஷ்டிப்பும் கொண்டுள்ளது என்று கொலோசெயரில் நமக்குச் சொல்லப்படுகிறது. தேவனை சிருஷ்டிகராக மறுதலிப்பதே மிகப்பெரிய முட்டாள்தனம். பரிணாம வளர்ச்சியைப் பிரசங்கிப்பவர்கள் மக்களிடம், தேவனை அடையாளம் காணும்படி தங்களுக்கு தேவன் கொடுத்திருக்கும் பகுத்தறியும் திறனைத் தலைகீழாய்புரட்டுமாறு கேட்கிறார்கள். இறுதியில், இத்தகைய நபர்கள், தேவனுடைய மட்டுப்படுத்தும் வழியை எடுத்துக்கொள்வதன் மூலம் நமக்கு இருக்கும் இந்தப் பாதுகாப்பை விட்டுவிட்டு, அதி அசிங்கமான வடிவிலான பாவத்தில் ஈடுபடுவதற்குக் கீழத்தரமாக இறங்குகின்றனர்.

பின்புலம்: ஒரு தேவனற்ற வாழ்க்கைமுறையை நியாயப்படுத்தும் ஒரு நியாயப்படுத்துதலாக பலர் தழுவும் ஒரு போட்டியான “சுவிசேஷமாக” டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு ஆகியிருக்கிறது. அதன் தாக்கத்தின் காரணமாக, இளம்வாலிப கிறிஸ்தவர்கள் பலர் விஞ்ஞானம் வேதாகமத்தைப் பொய் என நிரூபிப்பதாக நம்புவதற்கும்கூட வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள்! இந்த உலகக்-கண்ணோட்டத்தின் தீய தாக்கத்திற்கு எதிராக இளம் வாலிபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு, தேவனுடைய சுவிசேஷம் நிலைத்துநிற்கிறது என்று அவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும்! மேலும், ரோமரின் இந்தப் பகுதியில், தேவனை தங்கள் சிருஷ்டிகராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்கத் தேர்ந்தெடுப்பவர்களுக்காக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தேவனுடைய கோபாக்கினையிலிருந்து நாம் பாதுகாக்கப்படுவதற்கும் விடுவிக்கப்படுவதற்கும் கூடுமாறு, இந்த துன்மார்க்கத்தை மட்டுப்படுத்துவதற்கான ஒரு வழியை தேவன் நமக்குக் கொடுத்துள்ளார் என்பதை நாம் பார்த்தாக வேண்டும்.

அதிகாரங்கள்: ரோமர் 1-2.

போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, மனுக்குலம் பிரபஞ்சத்தைப் பார்த்து வியந்து, அதன் தோற்றத்தைக் குறித்து ஒரு ஞானமுள்ள மற்றும் சக்திவாய்ந்த சிருஷ்டிருக்குப் பெருமை சேர்த்திருக்கிறது. எனினும், கிட்டத்தட்ட கடந்த நூறு ஆண்டுகளில் மட்டுமே, சாத்தான் இந்தப் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய போதனைகள் மற்றும் பிற தத்துவங்களின் வழிவகை மூலமாக சிருஷ்டிப்பின் இந்தச் சாட்சியை இல்பொருளாக்க சக்திவாய்ந்த முறையில் வேலை செய்திருக்கிறான். இந்தப் பாடம், ஒரு பாவத்தில்-திளைக்கும் வாழ்க்கைமுறைக்கு ஓர் ஆரோக்கியமான தேவபயத்தைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு சாக்குப்போக்கை இந்த யுகத்தைச் சேர்ந்த இளம்வாலிபர்கள் இத்தனை அதிகமானோருக்கு வழங்கியிருக்கும் இந்த பரிணாம வளர்ச்சிக்குரலிய உலகக்-கண்ணோட்டத்திற்கு எதிராகத் தடுப்பூசிப்போடுவதற்கு உதவ முடியும்.

  • மனிதன் சிருஷ்டிப்பின் மூலமாக தேவனை அறிகிறான்—ரோ. 1:19-21

தோட்டத்தில், ஆதாமும் ஏவாளும் நாளுக்கு நாள் தங்களை வரவேற்ற புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டு வியந்திருக்க வேண்டும். முழு பிரபஞ்சமும் “பூமியில் ஒளி தரும்படிக்கு” பிரகாசிக்கும் சுடர்களால் நிரப்பப்பட்டு  அவர்களுக்கு மேலே இருந்தது (ஆதி. 1:15), மேலும் அவகளைச் சுற்றி “பார்வைக்கு அழகு…மான” (ஆதி. 2:9) அத்தனை மிகுதியானவை உட்பட, சுவாரஸ்யமான மற்றும் அழகான சிருஷ்டிப்புகள் அத்தனை அதிகமானவை இருந்தன. தேவனின் சிருஷ்டிப்பானது தேவனின் மகத்துவம், வல்லமை, ஞானம் மற்றும் அன்பான கவனிப்பு குறித்து அவர்களுக்குச் சாட்சிபகிர்ந்தது. வீழ்ச்சிக்குப் பிறகு, தேவனின் சிருஷ்டிப்பு இருப்பதை நிறுத்தவில்லை. மனுக்குலம் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டதாக ஆகியிருந்த போதிலும்கூட, தேவன் யார் என்பதற்கு சாட்சிபகிரும் ஒரு சாட்சியாக அது தொடர்ந்து நிலைத்திருந்து வருகிறது. உண்மையில், தேவனின் சிருஷ்டிப்பு மனுக்குலத்தின் அடுத்தடுத்த தலைமுறை ஒவ்வொன்றாலும் இன்னும் அதிக முழுமையாக ஆராயப்பட்டு, ஆய்வுசெய்யப்பட்டிருக்கிறது. முன்பு எப்போது இராத அளவிற்கு இன்று தேவனுடைய சிருஷ்டிப்பைக் கண்டு வியக்க அதிக விஷயங்கள் உள்ளன. மனிதன் (இயற்பியல், உயிரியல், வேதியியல், மருத்துவம், முதலியன போன்ற) எந்தத் துறையிலும் எவ்வளவு அதிகமாக ஆய்வுசெய்கிறானோ, அது ஒரு சூப்பர்-கேலக்ஸியின் அளவு நிலையிலோ அல்லது ஒரு செல் அல்லது அணுவின் அளவு நிலையிலோ எதுவாக இருந்தாலும்சரி, அவ்வளவு அதிகமாக மனிதன் தேவனுடைய சிருஷ்டிப்பில் உள்ள ஒவ்வொரு வடிவமைப்பின் பரிபூரணம் மற்றும் கைவினைத்திறனைக் கண்டு வியப்படைந்தாக வேண்டும்.

  • தேவனின் வல்லமையும், தேவனின் தெய்வீக குணாதிசயங்களும் தேவன் சிருஷ்டித்திருக்கும் விஷயங்களில் தெளிவாகக் காணப்படுகின்றன—ரோ. 1:19-20

மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி, சிருஷ்டிப்பானது தேவன் எப்படிப்பட்ட தேவன் என்பதைப் பற்றி மனிதனிடம் சாட்சிபகிர்கிறது. அவர் ஒரு சிறிய தேவனோ அல்லது ஒரு பலவீனமான தேவனோ அல்ல. அவர் முற்றிலும் திறமையானவர் மற்றும் உணர்வுகள் நிறைந்தவர். அவர் ஞானம் நிறைந்தவரும், வல்லமை நிறைந்தவருமாகிய ஒரு தேவன், பிரபஞ்சத்தையும் அதற்கு அப்பாலும் நிரப்பும் ஒரு தேவன், ஆயினும் இன்னும் அவர் நமக்காக, அதாவது அவருடன் ஒப்பிடும்போது வரம்பற்ற ரீதியில் சிறியவர்களாகிய நமக்காக அக்கறைக்கொள்ளும் ஒரு தேவன். மிக நுணுக்கமான விவரங்களில் கூட அவர் நமக்காக அக்கறைக்கொள்கிறார். அது ஓர ஈயாக இருந்தாலும்சரி, அல்லது ஒரு காளானாக இருந்தாலும்சரி, தான் சிருஷ்டித்திருக்கும் அனைத்தையும் பற்றிய ஒவ்வொரு விவரத்தையும் குறித்து முன்யோசனை செய்திருக்கும் ஒரு தேவன் அவர். நிச்சயமாக நித்தியத்தில் அவர் திட்டமிட்டுக்கொண்டும், எல்லாவற்றையும் வடிவமைத்துக்கொண்டும் இருந்தார், அதனால் அவை அனைத்தும் அவருடைய குறிக்கோளில் ஒன்றுசேர்ந்து வேலைசெய்யும். தேவன்   சிருஷ்டித்த எல்லாவற்றிலும் நாம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பைக் காண முடியும். தேவனுடைய தெய்வீக குணாதிசயங்கள், உண்டாக்கப்பட்ட பொருட்களில் தெளிவாகக் காணப்படுகின்றன என்று பவுல் கூறுகிறான். சிருஷ்டிப்பில் உள்ள தன்னுணர்வுள்ள (நனவான) வடிவமைப்பு, சிருஷ்டிப்பின் இந்தத் தடுத்துநிறுத்த முடியாத மாபெரும் சாட்சி ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பாளரை சுட்டிக்காட்டுகிறது என்ற எண்ணத்தை நிராகரிக்க இன்று பலர் தங்களால் இயன்றவரை முயற்சி செய்கிறார்கள். உண்மையில், இன்று பல விஞ்ஞானிகள் இயற்கையில் உள்ள அனைத்து “தற்செயல் நிகழ்வுகளையும்,” ஒரு தெளிவான (டிஎன்ஏ மூலக்கூறின் வடிவமைப்பு, இயற்பியல் விதிகள், அல்லது இத்தகைய ஒரு நீண்ட காலமாக உயிர் வாழ்வதற்கான ஒரு சரியான வாழ்விடமாகிய பூமியின் வடிவமைப்பு ஆகியன போன்ற) “நுண்ணறிவின் கையொப்பம்” என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

  • சிருஷ்டிப்பின் சாட்சி, தேவனை ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள் எந்தச் சாக்குப்போக்கும் சொல்ல இடமளிப்பதில்லை—ரோ. 1:20

சிருஷ்டிப்பை எவரும் எவ்வளவு அதிகமாக   ஆய்வுசெய்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவன் அல்லது அவள் ஒரு சிருஷ்டிகர் இருப்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். “தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட காணக்கூடிய காரியங்களை உற்றுக்கவனிப்பதன் மூலம், தேவனுடைய காணமுடியாத காரியங்களை நாம் அறிந்துகொள்ள முடியும். தேவனின் உள்ளார்ந்த சுபாவத்தை வெளிக்காட்டுகிற தேவனுடைய நித்திய வல்லமையும், தெய்வீக குணாதிசயங்களும் தேவனின் சிருஷ்டிப்பில் வெளியரங்கமாக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒளி தெய்வீக சுபாவத்தின் ஒரு தெய்வீக குணாதிசயம், ஒரு தெய்வீக குணாம்சம் (யாக். 1:17) என்பதை இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அபரிமிதமான ஒளி காட்டுகிறது.  அழகு மற்றும் ஜீவனைப் பொருத்தவரையிலும்கூட இதுவே உண்மை”  (Romans 1:20, footnote 2).

  • சத்தியத்தை அநீதியிலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநீதிக்கும் விரோதமாய், தேவனுடைய கோபாக்கினை (தேவகோபம்) வானத்திலிருந்து வெளியரங்கமாக்கப்பட்டிருக்கிறது—ரோ. 1:18

ரோமர் 1:18 இல் பவுல், சத்தியத்தை அநீதியிலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநீதிக்கும் விரோதமாய், தேவனுடைய கோபாக்கினை (தேவகோபம்) வெளியரங்கமாக்கப்பட்டிருக்கிறது என்று கூறுகிறான். சிருஷ்டிப்பின் பரமஇரகசியம் தேவன் தாமே. இதை மறுதலிப்பதே ஒரு கொடூரமான (கடுமையான) அநீதியுள்ள செயல். அப்படிப்பட்ட மனிதர்கள் அடக்கிவைக்கும் அல்லது ஒடுக்கும் சத்தியம், இப்பிரபஞ்சத்தின் முதன்மையான நிஜமாகிய தேவனின் இருத்தல் பற்றிய சத்தியமே. “இந்த நிஜம் தேவனும் அவரது இருத்தலும் சிருஷ்டிப்பால் நிரூபிக்கப்படுகின்றன என்ற நிச்சயமான உண்மையாகும், அதோடு, இது மனிதன் எந்த சாக்குப்போக்குமின்றி, சிருஷ்டிப்பால் தேவனை அறிய முடியும் என்ற திட்டவட்டமான உண்மையாகும். இந்த மாபெரும் நிஜம், இந்த மாபெரும் சத்தியம், மனிதர்கள் தேவனை அறியவும், இவ்வாறு அவரை மகிமைப்படுத்தி, அவருக்கு நன்றிசெலுத்தவும் வழிவகுக்க வேண்டும் (வ. 21). எனினும், தேவன் மகிழ்கிற நீதியின்படி இந்த நிஜத்துடன், இந்த சத்தியத்துடன் நேர்த்தியாக இடைபடுவதற்குப் பதிலாக, மனிதர்கள் தேவன் வெறுக்கிற அநீதியில் சத்தியத்தை அடக்கிவைத்து, தேவனை அறிவதை அங்கீகரிக்காமல் இருந்தார்கள் (வ. 28). ஆகையால், அவர்கள் தேவனுடைய மகிமையை விக்கிரகங்களுக்கு மாற்றி (வவ. 21-23), எந்த வரம்பும் இல்லாமல் வீழ்ச்சியடைய சுய-கட்டுப்பாட்டை உதறித்தள்ளி (வவ. 24-32), தேவனை இழிவுபடுத்தி நிராகரித்தார்கள்; இதனால் அவர்கள் தேவனால் விடப்பட்டு, கைவிடப்பட்டார்கள் (வவ. 24, 26, 28)” (Romans 1:18, footnote 5).

  • தேவனைப் பற்றிய சத்தியத்தை அடக்கிவைக்கத் தேர்ந்தெடுக்கும் மனிதன் இறுதியில் தேவனால் கைவிடப்படுவதில் போய் முடிகிறான்—ரோ. 1:18, 24, 26, 28

“தேவன் அவர்களை….ஒப்புக்கொடுத்தார்” என்ற சொற்றொடர் இந்த அதிகாரத்தில் மூன்று முறை பயன்படுத்தப்பட்டுள்ளது: ரோமர் 1:24, 26 மற்றும் 28 இல். “மனிதன் தேவனைக் கைவிடுவதன் விளைவு மனிதன் அவரால் கைவிடப்படுவதாகும். தேவனைக் கைவிடுகிறவர்கள் தேவன் தங்களைக் கைவிடும்படி அவரைக் கட்டாயப்படுத்துகிறார்கள். இந்த அதிகாரத்தின்படி தேவன் மக்களை மூன்று காரியங்களுக்கு விட்டுவிடுகிறார், அவையாவன, அசுத்தம் (வ. 24), கனவீனமான மோகங்கள் (வ 26), அங்கீகரிக்கப்படாத மனம் (வ. 28). இத்தகையக் கைவிடுதலின் விளைவு வேசித்தனமாகும் (வவ. 24, 26-27), இது, ஆளுகைசெய்கிற மற்றும் கட்டுப்படுத்துகிற கோட்பாட்டை மீறி, குழப்பத்தைக் கொண்டுவருகிறது. ஒவ்வொரு விதமான தீமையும் இந்த வேசித்தனத்திலிருந்து விளைவுறுகிறது (வவ. 29-32)” (Romans 1:24, footnote 1).

  • தேவனைப் பற்றிய சத்தியத்தை அடக்கிவைப்பவர்கள் தங்களை ஞானிகள் என்று நினைத்தும், முட்டாள்களாக ஆகிவிடுகின்றனர்—ரோ. 1:22

தேவன் இல்லை என்று கூறும் மனிதர்கள் தாங்கள் கற்றறிந்தவர்களாகவும் ஞானிகளாகவும் இருப்பதாகச் சொல்லிக்கொள்கிறார்கள், ஆயினும் அவர்கள் தேவனைப் பற்றிய சத்தியத்தை மறுதலிப்பதால், அவர்கள் முட்டாள்களாக ஆகிவிடுகின்றனர். தங்களை சிருஷ்டித்த தேவனை மகிமைப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் “அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்” (ரோ. 1:23), அதாவது, அவர்கள் தங்களுக்காக விக்கிரகங்களை உண்டுபண்ணுகிறார்கள். (எல்லா மனிதர்களும் எதையாவது ஆராதிக்கின்றனர், இரண்டிலொன்று தேவனை அல்லது ஒரு விக்கிரகத்தை ஆராதிக்கின்றனர்.) இன்று பலர் தேவனைப் பற்றிய சத்தியத்தை ஒரு பொய்க்காக பரிமாற்றம் செய்திருக்கின்றனர் அதோடு தேவனை ஆராதிப்பதற்குப் பதிலாக விக்கிரகங்களை ஆராதிக்கின்றனர். இது எவ்வளவு முட்டாள்தனம்!

  • தேவனைப் பற்றிய சத்தியத்தை அடக்கிவைக்க தேர்ந்தெடுப்பவர்கள் ஒழுக்கக்கேடு, சச்சரவு, குழப்பம் ஆகியவற்றின் ஒரு படுகுழிக்குள் படிப்படியாக இறங்குகிறார்கள்—ரோ. 1:21-32

ரோமர் 1:21-32, தேவனைப் பற்றிய பாதுகாக்கும் (பத்திரப்படுத்தும்) சத்தியத்தைக் கைவிடுபவர்கள் எவ்வாறு பாவம் மற்றும் குழப்பம் நிறைந்த ஒரு சாக்கடைக்குழிக்குள் (கழிவுக் குழிக்குள்) கீழ்த்தரமாக இறங்குவதற்கான கதவைத் திறந்திருக்கின்றனர் என்பதைப் பதிவுசெய்கிறது. அவர்கள் அசுத்தத்திற்கும் (வேசித்தனம்), கனவீனமான மோகங்களுக்கும் (ஓரினச்சேர்க்கை), சகலவித துன்மார்க்கத்தையும் நிகழ்த்தும் திறன் கொண்ட அங்கீகரிக்கப்படாத மனதுக்கும் தேவனால் கைவிடப்பட்டுள்ளனர். இது இன்று நம் சமுதாயத்தில் தெளிவாகக் காணப்படுகிறது. சமுதாயத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூல காரணம், தேவன் கனப்படுத்தப்படுவதில்லை அல்லது மனிதனின் கருத்தில் அவருக்கு உரியதாகிய சரியான இடம் அவருக்குக் கொடுக்கப்படவில்லை என்பதே. தேவன் நம் சிருஷ்டிகர் என்பதால் நியாயமான மற்றும் பொருத்தமான காரியமாகிய, தேவனை மகிமைப்படுத்துவதற்கும், அவருக்கு நன்றி செலுத்துவதற்கும் பதிலாக, பலர் வீணான தருக்கங்களுக்காக தங்களைத் தாங்களே ஒப்புக்கொடுத்துள்ளனர். “வீணான தருக்கங்களே விழுந்துபோன மனுக்குலத்தின் அனுதின வாழ்க்கையிலுள்ள அடிப்படை மூலக்கூறாக இருக்கின்றன” (Romans 1:21, footnote 2). நம் சமுதாயம், தேவனை நோக்கிய ஒரு தவறான மனப்பாங்கால் பூரிதமாக்கப்பட்டுள்ளது, எனவே அது ஒரு பாவப் படுகுழிக்குள் விரைவாக இறங்கிக்கொண்டிருக்கிறது.

  • சத்தியத்தை அடக்கிவைக்க தேர்ந்தெடுப்பதன் உச்சநிலையான விளைவு, ஓர் அங்கீகரிக்கப்படாத மனதிற்கு தேவனால் கைவிடப்படுதலே—ரோ. 1:28

மனிதன் தர்க்கரீதியாகப் பகுத்தறிய முடியும் ஒரு மனதுடன் சிருஷ்டிக்கப்பட்டான். எனினும், மனிதன் சத்தியத்தைப் புறக்கணிக்கத் தேர்ந்தெடுக்கும்போது, அவனது மனம் அதன் நேர்த்தியான செயல்பாட்டை இழக்கிறது, மேலும் தேவன் அதை சிருஷ்டித்த வண்ணம் இனியும் செயல்பட முடியாது. அதனால்தான் சத்தியத்தை அடக்கிவைக்கும் நபரின் மனம், ரோமர் 1:28 இல் ஓர் “அங்கீகரிக்கப்படாத மனம்” என்று அழைக்கப்படுகிறது (கிரே.). சிருஷ்டிப்பில் தேவனைப் பாராட்டுவதற்கான தங்கள் திறனை மக்கள் இழக்கும்போது, அவர்கள் தங்கள் மனதின் அதி முக்கியமான செயல்பாட்டை இழக்கின்றனர். ஓர் அங்கீகரிக்கப்படாத மனம் என்பது எல்லாவிதமான அநீதியையும், துன்மார்க்கத்தையும், தீமையையும் நிகழ்த்தக்கூடிய திறன் கொண்ட ஒரு மனம் (ரோ. 1:28-32). மக்கள் தேவனைப் பற்றிய சத்தியத்தை அநீதியில் அடக்கிவைக்கும் போது, இறுதியில் அவர்கள் தங்கள் படுமோசமான இயல்பின் கீழ்த்தரமான நிலைக்கு இறங்குகிறார்கள். இன்று நம் சமுதாயத்தில் இது நடந்துகொண்டிருக்கிறது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. நம் கலாச்சாரத்தில் இன்று நாம் பார்ப்பது, தேவனை மறுதலிக்கும் ஒரு தத்துவத்தின் பலனைத்தான் (கனியைத்தான்).

  • தீமையிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கும், தேவனின் கோபாக்கினையின்கீழ் நாம் விழாதபடி தடுப்பதற்கும் தேவன் ஒரு மட்டுப்படுத்தும் வழியை வழங்கியுள்ளார்—ரோ. 1:18-22; சங். 19:1

இளம்வாலிபர்களுக்கான இந்தப் பாடத்தின் நடைமுறைக்குரிய பிரயோகம் இங்கே அமைந்துள்ளது. ரோமர் 1-2 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, நம் தினசரி வாழ்க்கையில் தேவனுடைய மட்டுப்படுத்தும் வழியை எடுத்துக்கொள்வதன் மூலம் நாம் தேவனின் கோபாக்கினையிலிருந்து இரட்சிக்கப்பட முடியும். இந்த அதிகாரங்களில் நாம், சத்தியத்தை அநீதியிலே அடக்கிவைக்கிற மனுஷருடைய அவபக்திக்கும் அநீதிக்கும் விரோதமாய் தேவனுடைய கோபாக்கினை (தேவகோபம்) சேமித்து வைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம் (ரோ. 1:18). தேவனுடைய இருத்தலை மறுத்தலிப்பதோ, தேவனுக்கு நன்றிகூற மறுப்பதோ, மனச்சாட்சியின் குற்றச்சாட்டுகளை அல்லது மனசாட்சியைப் புறக்கணிப்பதோ, நம் பாவங்களை நியாயப்படுத்த திரிக்கப்பட்ட தருக்கங்களைப் பயன்படுத்துவதோ நீதியல்ல. ஆயினும்கூட இதே வசனங்கள், நாம் தேவனுடைய கோபாக்கினையிலிருந்து விடுவிக்கப்படக்கூடுமாறு, ஒரு மட்டுப்படுத்தும் வழி, அதாவது துன்மார்க்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கப்போகும், நாம் எடுத்துக்கொள்ளக்கூடிய ஒரு நடைமுறைக்குரிய வழி உள்ளது என்பதையும் நமக்குக் காட்டுகின்றன. இந்த மட்டுப்படுத்தும் வழி ஐந்து அம்சங்களால் ஆனதாகும்: 1) எல்லாவற்றின் ஊற்றாகவும் தேவனை அவருடைய சிருஷ்டிப்பின் மூலம் அறிந்துகொள்வது (ரோ. 1:19-20; ஏசா. 44:24; அப். 17:24); 2)நாம் தேவனை மகிமைப்படுத்தி, அவருக்கு நன்றிசெலுத்தி, அவரை ஆராதித்து, அவரைச் சேவித்தாக வேண்டும் என்பதைக் குறிக்கும், நம் முழு அறிவில் தேவனைக் காத்துக்கொள்ளுதலை அங்கீகரித்து, சத்தியத்தை நீதியில் நிலைநிறுத்துவது (தாங்கிக்கொள்வது) (ரோ. 1:18, 28); 3) சுபாவத்தின் விதிகளுக்குக் கீழ்ப்படிவது (ரோ. 2:14-15); 4) மனச்சாட்சிக்கு செவிசாய்ப்பது (ரோ. 2:15); மற்றும் 5) நம் மனதில் உள்ள நேர்த்தியான தருக்கங்களைக் கவனித்துக்கொள்வது (ரோ. 2:15).

  • தேவனுடைய சிருஷ்டிப்பின் சாட்சியின் மூலமாக நாம் அவரைப் பாராட்டவும் அறியவும் முடியும்—ரோ. 1:19-20; சங். 19:1

தேவனுடைய மட்டுப்படுத்தும் வழியின் முதல் அம்சம், தேவனை அவருடைய சிருஷ்டிப்பின் மூலம் அறிந்துகொள்வதாகும் (ரோ. 1:19-20). தேவனே எல்லாவற்றின் ஊற்றாகவும் இருக்கிறார் (ஏசா. 44:24; அப். 17:24; 1 கொரி. 8:6) இளம் வாலிபர்களாகிய நாம் கற்றாக வேண்டிய முதல் விஷயம், தேவனுடைய சிருஷ்டிப்பின் அற்புதங்களைப் பாராட்டும் (சங். 19:1–4), குறிப்பாக அவர் நம் பௌதிக சரீரத்தை எவ்வாறு சிருஷ்த்தார் என்பதில் பாராட்டும் (சங். 139:14) ஒரு நேர்த்தியான பாராட்டுதலைக் கொண்டிருப்பதே ஆகும். நாம் தேவனுடைய சிருஷ்டிப்பின் அற்புதத்தைப் பாராட்டும்போது, நாம் நம் சிருஷ்டிகராகிய தேவனை புறத்தூண்டுதலின்றி இனம் கண்டுகொள்வோம், பாராட்டுவோம், ஆராதிப்போம், அவருக்கு நன்றி செலுத்துவோம் (சங். 100:1–5). பார்வை, செவித்திறன் அல்லது ஒரு தசையின் செயல்பாடு போன்ற சரீரத்தின் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டைப் பற்றி தங்களால் இயன்ற அனைத்தையும் கண்டறிந்து, அதன்பின் ஒரு சுருக்கமான அறிக்கையை வழங்கும்படி ஒருவேளை இளம் வாலிபர்களுக்கு எளிய வீட்டுப்பாடங்கள் (assignments) வழங்கப்படலாம். பின்னர் கர்த்தருக்கான ஏதாவது கொஞ்சம் பாராட்டுதலின் வார்த்தை இருக்க வேண்டும்! ஒருவேளை உங்கள் உள்ளூரில் உள்ள சில சகோதர சகோதரிகள் மருத்துவம் அல்லது அறிவியல் போன்ற ஏதாவது ஒரு துறையில் இருக்கலாம், அந்தத் துறையில் இவர்கள் தேவனுடைய சிருஷ்டிப்பின் அற்புதங்களுக்கு எடுத்துக்காட்டுகளைக் கொடுக்கலாம். தேவனுடைய சிருஷ்டிப்பில் உள்ள அவருடைய வடிவமைப்பைக் கண்டு பாராட்டும் பழக்கத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்விதமாய் தேவனை அறியவிடாமல் நம்மை அறியாமலே ஏமாற்றும் இந்த யுகத்தின் தாக்கத்திலிருந்து கர்த்தர் நம்மை இரட்சிப்பாராக.

  • நாம் நம் முழு அறிவில் தேவனைக் காத்துக்கொள்ளுதலை அங்கீகரித்து, சத்தியத்தை நீதியில் நிலைநிறுத்தியாக (தாங்கிக்கொள்ள) வேண்டும்—ரோ. 1:18, 28

தேவனின் இருத்தல், தம் அற்புதமான சிருஷ்டிப்பால் நிரூபிக்கப்படுகிறது, மேலும் “இது மனிதன் எந்த சாக்குப்போக்குமின்றி, சிருஷ்டிப்பால் தேவனை அறிய முடியும் என்ற திட்டவட்டமான உண்மையாகும். இந்த மாபெரும் நிஜம், இந்த மாபெரும் சத்தியம், மனிதர்கள் தேவனை அறியவும், இவ்வாறு அவரை மகிமைப்படுத்தி, அவருக்கு நன்றிசெலுத்தவும் வழிவகுக்க வேண்டும் [ரோ. 8:20” (Romans 18:5, footnote 5). நாத்திகம் தலைவிரித்தாடும் சமுதாயத்தில், நாம் தேவனை மகிமைப்படுத்துபவர்களாகவும், அவருக்கு நன்றி செலுத்துபவர்களாகவும், அவரை ஆராதிப்பவர்களாகவும், அவரைச் சேவிப்பவர்களாகவும் இருந்தாக வேண்டும்.

  • நாம் சுபாவத்தின் விதிகளுக்குக் கீழ்ப்படிந்தாக வேண்டும்—ரோ. 2:14.

தேவனோடும், அவருடைய நியாயப்பிரமாணத்தோடும் ஒத்துப்போகும் ஒரு நல்ல சுபாவத்துடன் மனிதனை தேவன் சிருஷ்டித்தார். மனிதன் வீழ்ந்திருந்தாலும், அவனுடைய நல்ல சுபாவம் இன்னும் நன்மை செய்ய விரும்புகிறது. நாம் பாவத்தைப் பயிற்சிசெய்வதன் மூலம் நம் சொந்த நல்ல மனித சுபாவத்தை மீறக்கூடாது, மாறாக தேவனுடைய நியாயப்பிரமாணத்தோடு ஒத்துப்போகும் நம் அசல் தேவனால்-சிருஷ்டிக்கப்பட்ட, நல்ல சுபாவத்திற்குக் கவனம்செலுத்தி, அதைக் கடைப்பிடிக்க வேண்டும். எவரேனும் தன்னில் உள்ள இந்த தேவனால்-சிருஷ்டிக்கப்பட்ட நல்ல சுபாவத்தின்படி வாழ்ந்தால், அவனில் உள்ள தீமை மட்டுப்படுத்தப்படும்.

  • நாம் நம் மனச்சாட்சிக்கு செவிசாய்த்தாக வேண்டும்—ரோ. 2:15.

இது, இளம் வாலிபர்களுக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டிய ஒரு பெரிய குறிப்பு. நாம் நம் மனச்சாட்சிக்கு செவிசாய்க்க வேண்டும், செவிசாய்த்தாக வேண்டும் (ரோ. 2:15). மனிதனின் மனச்சாட்சி, அவன் தான் தவறானதைச் செய்யும் போது அவனைக் குற்றஞ்சாட்டுகிறது, அவன் சரியானதைச் செய்யும் போது அவனை மன்னிக்கிறது. நாம் அனைவரும் நம் மனச்சாட்சியை நேர்த்தியாக கவனித்துக்கொள்ள கற்றாக வேண்டும்.

  • நாம் நம் மனதில் உள்ள நேர்த்தியான தருக்கங்களைக் கவனித்துக்கொண்டாக வேண்டும்—ரோ. 2:15.

நம் மனதின் தருக்கங்களைக் கைவிடுவது ஆவிக்குரியது என்று நாம் கருதக்கூடாது. நாம் துன்மார்க்கம் செய்ய குறிக்கோள் கொள்ளும் போது, நம் மனதில் உள்ள நல்ல தருக்கங்கள் நம்மைக் குற்றஞ்சாட்டுகின்றன, கண்டனம்செய்கின்றன, இவ்வாறு நம்மைப் பாதுகாக்கின்றன. பலர் தாங்கள் பாவம்செய்யப் போகும்போது, தங்கள் மனசாட்சியுடன் தருக்கம்செய்ய முயற்சிக்கவும், தாங்கள் செய்யப்போவதைக் குறித்து தங்களைத் தாங்களே நியாயப்படுத்த முயற்சிக்கவும் செய்கின்றனர். எனினும், நாம் ஒரு பாவமுள்ள செயலை நியாயப்படுத்த முடிவதற்கான ஒரே வழி, நம் மனதின் நேர்த்தியான தருக்கங்களைத் திரித்து, தலைகீழாய்புரட்டுவதுதான். நாம் தேவனைப் பாராட்டி, இனம் கண்டுகொண்டு, அவருக்கு நன்றிசெலுத்தவும், நம் ஆள்தத்துவத்திலுள்ள தேவனால்-சிருஷ்டிக்கப்பட்ட சுபாவத்தின் விதிகளுக்குக் கீழ்ப்படியவும், நம் மனச்சாட்சிக்கு செவிசாய்க்கவும், நம் மனதின் நேர்த்தியான தருக்கங்களைக் கவனித்துக்கொள்ளவும் செய்தால், நாம் ஏராளமான தீமைகளிலிருந்து பாதுகாக்கப்படுவோம். இளம் வாலிப விசுவாசிகளாக, நாம் எல்லாவிதமான தீமையிலிருந்தும் இரட்சிக்கப்படக்கூடுமாறு,நாம் தேவனுடைய மட்டுப்படுத்தும் வழியின் இந்த ஐந்து அம்சங்களையும் நம் தினசரி வாழ்வில் பயிற்சிசெய்தாக வேண்டும்.

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: தேவனுடைய சிருஷ்டிப்பில் காணப்படும் சிக்கலான வடிவமைப்பின் அற்புதங்கள் பலவற்றையும் பாராட்டும் நேர்மறையான கோடுகளில் இளம் வாலிப சகோதர சகோதரிகள் உதவப்படலாம். அணுவின் நுண்ணிய அளவிலும், மனித சரீரத்திற்க்குள்ளும், இயற்கை உலகிலும், அல்லது பிரபஞ்சத்தின் பரந்த ஆகாயவிரிவுகளிலும்சரி எல்லா இடங்களிலும் எடுத்துக்காட்டுகள் காணப்படலாம். நம்மைச் சுற்றி நாம் காணும் சிக்கலான உயிரினங்கள் அனைத்தும் தற்செயலாக இருத்தலுக்குள் வர (உருவாக) முடியும்) என்று நம்புவது நியாயமானதுதானா என்று இளம் வாலிபர்களிடம் கேளுங்கள்? பார்க்கும் திறன் அல்லது சிந்திக்கும் திறன் எப்படி, இவை விபரீதமாக வந்தனவா? ஒரு சிருஷ்டிகரில் விசுவாசிக்கத் தேவையான விசுவாசத்தை விட, எல்லாமே தற்செயலாக வந்தன என்று நினைப்பதற்கு அதிகமான விசுவாசம் தேவைப்படுகிறது. தேவனுடைய சிருஷ்டிப்பு தேவனுடைய உறுதியான (திட்டவட்டமான) இருத்தலை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், அவர் எப்படிப்பட்ட தேவன் என்பதையும் வெளியரங்கமாக்குகிறது: விவரிக்கமுடியாத அளவிற்கு ஞானமுமள்ளவர், சக்திவாய்ந்தவர் (வல்லமையுள்ளவர்), அக்கறையுள்ளவர். பிரபஞ்சத்தில் கிரகங்களின் சிக்கலான வரிசைக் கிரமமும், அவற்றின் சுற்றுப்பாதைகளில் அவை இடம் வகித்தலும் அவருடைய ஞானத்தை அறிவிக்கின்றன. ஒரு சிறிய அணுவைப் பிளக்கும் போது வெளியாகும் அபரிமிதமான சக்தி (வல்லமை), தேவனுடைய வியப்புக்குரிய சக்தியைப் (வல்லமை) பற்றிய ஒரு சிறுகுறிப்பை மட்டுமே நமக்குத் தருகிறது. பூமியை விண்வெளியில் சுழல வைக்கும் சக்தியும், புவியீர்ப்பு விசையால் மனிதனை கீழே இழுக்கும் சக்தியும்கூட தேவனுடைய ஒரு வெளியரங்கமாகுதல்தான். அவரது அன்பான இருதயம் தம் சிருஷ்டிப்புக்கான தம் நுணுக்கமான மற்றும் விரிவான கவனிப்பில் வெளிப்படுத்தப்படுகிறது (மத். 6:28-29; யோபு 38:39-41; சங். 84:3). அவர் நம் சரீரத்தை வடிவமைத்து, அதன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அற்புதமான விதமும்கூட, நமக்கான தேவனின் அன்பான கரிசனையைக் குறித்து சாட்சிபகிர்கிறது (சங். 139:14; மத். 6:30-32; 2 கொரி. 9:9-10; 1 பேது. 5:7). இளம் வாலிபர்களுக்குத் தங்கள் ஞானமுள்ள, சக்திவாய்ந்த மற்றும் அன்பான சிருஷ்டிகரைப் பற்றிய இத்தகைய ஒரு பாராட்டுதலை வழங்குவது, பரிணாம வளர்ச்சியின் தீய போதனைக்கு எதிரான ஒரு நச்சுமாற்று (நச்செதிர்ப்பி, நச்சுமுறி) மருந்தாக தேவனுடைய சிருஷ்டிப்பைப் பற்றிய சத்தியத்தை அவர்களுக்குள் உட்செலுத்தவும், கர்த்தரில் உள்ள தங்கள் விசுவாசத்தையும் அன்பையும் அதிகரிக்க வழிவகுக்கவும் முடியும். நம் சிருஷ்டிகரைத் துதியுங்கள்!

சுவிசேஷ செயலாக்கம்: “எல்லாவற்றையும் ஆட்சிசெய்து, ஒழுங்குபடுத்தும் ஒரு தேவன் இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் நம்மிடம் இன்றைக்கு இருக்கும் இந்த அற்புதமான ஒழுங்கை எவ்வாறு நாம் கொண்டிருக்க முடியும்? விஷயங்களின் ஒழுங்கு இரண்டு சாத்தியக்கூறுகளைப் பற்றி மட்டுமே பேச முடியும். அது இரண்டிலொன்று தற்செயலாக இருக்கலாம், அல்லது அது யாரோவொருவரால் இடத்தில் பொருத்தப்பட்டு இருந்தாக வேண்டும். அது தற்செயலாக அல்லது ஏற்பாடுசெய்தல் மூலமாக மட்டுமே வரமுடியும். இரண்டிலொன்று யாரோவொருவர் இந்த விஷயங்களை ஏற்பாடுசெய்திருக்கிறார், அல்லது இவை விபரீதமாக வந்திருக்கின்றன. இந்த இரண்டில் ஒன்று சரியானதாய் இருந்தாக வேண்டும்…..நாம் ஒரு லேசான விதத்தில் இந்தத் தலைப்பை விட்டு விலகிச்செல்ல முடியாது. நாம், ‘ஒரு தேவன் இருந்தால், நாம் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்கவேண்டும். ஒரு தேவன் இருக்கிறார் என்று விசுவாசிப்பது போதுமானது அல்ல. தயவுசெய்து ஆமோஸ் 4:12ஐ வாசிக்கவும்: ‘உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.’ நண்பர்களே, நீங்கள் உங்கள் தேவனைச் சந்திக்க ஆயத்தமா? ஒரு தேவன் இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் முட்டாள்த்தனமாக வாழவோ வெட்டியாக உட்காரவோ முடியாது. முதலில் நீங்கள் உங்கள் தேவனைச் சந்திக்க ஆயத்தப்படுத்தப்பட்டாக வேண்டும். நண்பர்களே, நீங்கள் தேவனைச் சந்திக்க ஆயத்தமா? நம் மத்தியில் இருக்கும் ஒருவரும் நாத்திகர்களால் இனிமேலும் வஞ்சிக்கப்பட மாட்டார்கள் என்று நான் எதிர்நோக்குகிறேன். ஒரு தேவன் இருந்தால் நாம் அவரைச் சந்திக்க முடிவதற்கு முன் நாம் என்ன செய்தாக வேண்டும்? ஒரே ஒரு விஷயம் மட்டுமே உண்டு: கர்த்தராகிய இயேசுவில் விசுவாசித்திடு. இதுதான் தேவனைச் சந்திப்பதற்கான ஒரே வழி ஆகும், ஏனென்றால் அவர் கிறிஸ்துவின் மூலமாக நமக்குக் கிருபையைப் பொழிந்தருள்கிறார். கிறிஸ்துவுக்கு அப்பால் ஒவ்வொருவரும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டுள்ளனர்” (The Normal Christian Faith​, Collected Works, Volume 27, Appendix 2, pp. 201–202, pp. 210–211; Also see ​Gospel Outlines​, Subject one hundred thirty-eight, “God May be Known,” p. 268).

மிக முக்கியக் காரியங்கள்: தேவனே இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர் மற்றும் ஊற்று என்பதை அறிதல் (II.A.6.).

பின்புல வாசிப்பு: Life-study of Romans, Message 3; The Crucial Points of the Truth in Paul’s Epistles (Elder’s Training, Book 6), Chapter 2, pp. 16–18; Romans 1:18, footnote 5; Romans 1:20, footnote 2; Romans 1:21, footnote 2; Romans 1:24, footnote 1.

REFERENCES: Life-study of Romans, Message 3; Life-study of Colossians, Message 10; The Crucial Points of the Truth in Paul’s Epistles (Elder’s Training, Book 6), Chapter 2, pp. 16–18; Experience of Life, Chapter 8, pp. 166–169; The Normal Christian Faith (Collected Works, Volume 27), Chapter 1; Appendix 2, pp. 201–203; Gospel Outlines, Subjects 138, 259; Romans 1:18, footnote 5; Romans 1:20, footnote 2; Romans 1:21, footnote 2; Romans 1:24, footnote 1.