உயிர்த்தெழுந்து, பரமேறிய கிறிஸ்துவின் பரப்புதல்
பகுதி 10
✵பாடம் 10 – 18
மூன்று ஜீவன்களும், நான்கு பிரமாணங்களும்
குறிக்கோள்: ஜீவ ஆவியின் பிரமாணம், கிறிஸ்து இயேசுவிலே நம்மைப் பாவம் மரணம் என்பவற்றின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்று என்பதைக் காண்பதற்கு.
பொருட்சுருக்கம்: மனிதன் தன் மனதில் உள்ள நன்மையின் பிரமாணத்தினாலும், தன் அவயவங்களில் உள்ள பாவப் பிரமாணத்தினாலும் ஒழுங்குபடுத்தப்படுகிறான். தேவனுடைய ஜீவனைப் பெற்றிருக்கிறவர்கள், தங்கள் ஆவியில் இந்த ஜீவ ஆவியின் பிரமாணத்தையும் உடைமையாகக் கொண்டிருருக்கிறார்கள். மனிதனின் மனதில் உள்ள நன்மையின் பிரமாணம், தேவனுடைய பிரமாணம் (நியாயப்பிரமாணம்) அவன் தான் கைக்கொள்வதற்குத் தகுதியானதே என்பதை ஒப்புக்கொள்கிறது, ஆனால், தேவனுடைய பிரமாணத்தைக் கைக்கொள்ளும்படி மனிதனை இந்த நன்மையின் பிரமாணம் முயற்சிக்க வைக்கும் போதெல்லாம், மனிதனின் அவயவங்களில் உள்ள பாவப் பிரமாணம் மனதில் உள்ள நன்மையின் பிரமாணத்தைத் தோற்கடிக்கவும், மனிதனை பாவத்திற்குள் வழிநடத்தவும் எழும்புகிறது. பாவம் என்பது நபர்த்துவப்படுத்தப்பட்ட சாத்தானே என்பதால், அது சிருஷ்டிக்கப்பட்ட மனிதனை மட்டுமே சேர்ந்த நன்மையின் பிரமாணத்தை விட மிகவும் வலிமையானது. எனினும், ஒரு நபர் இரட்சிக்கப்பட்ட பிறகு, அவன் இன்னோர்,, உயர்ந்த பிரமாணமாகிய—தன் ஆவியில் உள்ள ஜீவ ஆவியின் பிரமாணத்தால் வாழ முடியும். ஆகவே விசுவாசிக்கு வெளியே உள்ள தேவனுடைய பிரமாணத்திற்குக் (நியாயப்பிரமாணம்) கூடுதலாக, அவனுடைய மூன்று பகுதிகளுக்குள்ளும் கிரியைசெய்யும் (சாத்தானிய, மனித மற்றும் தெய்வீக) மூன்று வகையான ஜீவனின்படி மூன்று பிரமாணங்கள் உள்ளன. நாம் எந்த ஜீவனால் வாழ்கிறோமோ அந்த ஜீவனின் பிரமாணத்தின் கிரியைசெய்தலை நாம் அனுபவிக்கிறோம். நாம் நம் நல்ல மனதில், நன்மையானதையும் சரியானதையும் செய்யும்படி கோரும் அதன் கோரிக்கையை திருப்திப்படுத்த முயற்சிக்கும்போது, நாம் தோற்கடிக்கப்பட்டு, நம் அவயவங்களில் உள்ள பாவப் பிரமாணத்தின் வல்லமையின் கீழ் வருகிறோம். ஆகையால், நாம் நம் மனதை நம் ஆவியின் மீது பொருத்தவும், நம் ஆவியில் வாழவும், நகரவும், நடக்கவும் கற்றாக வேண்டும், இதனால் நாம் தேவனை நம் மனித வாழ்க்கையில் வெளிக்காட்டக்கூடும்.
பின்புலம்: நன்மையைச் செய்ய முயற்சித்தும்கூட, பாவம் மரணம் என்பவற்றின் பிரமாணத்திடமிருந்து தோல்வியை அநுபவிப்பதில் அடிமைத்தனம் மற்றும் ஆக்கினைத்தீர்ப்பின் தொடர்ச்சியான சுழற்சியிலிருந்து இளம்வாலிபர்கள் விடுதலையாக்கப்பட வேண்டும். “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்க…ளுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை” (ரோ. 8:1). பிரபஞ்சத்திலேயே உள்ள அதிவலிமையான பிரமாணத்துடன் கூடிய அதிவலிமையான ஜீவன் நம்மிடம் உள்ளது. பாவம் மரணம் என்பவற்றின் பிரமாணத்தை ஜெயங்கொள்ள ஒவ்வொரு நாளும் நாம் ஆவியானவரால் நிரப்பப்பட்டு, ஆவியானவரால் வாழ வேண்டும்.
அதிகாரங்கள்: ரோமர் 7-8.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
இந்தப் பாடத்திற்குத் தயாராகவதற்கு,, சேவிப்பவர்கள் ஜீவனின் அறிவு , அதிகாரம் 9 க்குள் நுழைய வேண்டும்.
-
மனிதனுக்குள் மூன்று ஜீவன்களும் மனிதனுடன் தொடர்புடைய நான்கு பிரமாணங்களும் உள்ளன
இவற்றில் மூன்று பிரமாணங்கள், ஒரு குறிப்பிட்ட ஜீவன் மற்றும் சுபாவத்துடன் தொடர்பான பிரமாணங்கள் ஆகும். மனித ஜீவனோ, சாத்தானிய ஜீவனோ அல்லது தெய்வீக ஜீவனோ ஒவ்வொரு குறிப்பிட்ட ஜீவனின் ஒரு குணாதிசயமாக அவை புறத்தூண்டுதலின்றி கிரியைசெய்கின்றன. அவை புவியீர்ப்பு பிரமாணம் போன்ற அறிவியல் பிரமாணங்களாக இருக்கும் அர்த்தத்தில் உள்ள பிரமாணங்கள். எனினும், தேவனால் மோசேக்குக் கொடுக்கப்பட்ட பிரமாணம் (நியாயப்பிரமாணம்), மனிதனின் உண்மையான நிலைமையை அம்பலப்படுத்துவதற்காகக் கொடுக்கப்பட்ட புறம்பான கோரிக்கைகளின் ஒரு தொகுப்பாக வெறுமனே உள்ளது.
-
நன்மையின் பிரமாணம் மனிதனின் மனதில் அமைந்துள்ளது அதோடு மனிதனின் தேவனால்-சிருஷ்டிக்கப்பட்ட சுபாவத்தின்படி உள்ளது—ரோ. 7:22-23
மனிதன் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டான், மேலும் தேவனுக்கு ஒத்திருக்கிறான். ஆதலால், மனிதனில் உள்ள ஏதோ ஒன்று தேவனின்படி சரியானதையும் நன்மையாதையும் நாடுகிறது மற்றும் தேவனின் சுபாவத்திற்கு முரணானதை வெறுக்கிறது. மனிதனின் மனதில் உள்ள இந்த நன்மையின் பிரமாணம் தேவனின் பிரமாணத்தைச் செய்ய நாடுகிறது, ஏனெனில் தேவனுடைய பிரமாணம் தேவனின்படி உள்ளது, எனவே அது மிகவும் நன்மையானது. அதனால்தான் ஒவ்வொரு மனிதனும், தேவனுடைய பிரமாணம் நன்மையானது என்பதை ஒப்புக்கொள்கிறான் அதோடு தேவனின் பார்வையில் நன்மையானதைச் செய்ய விரும்புகிறான்.
-
பாவத்தின் பிரமாணம் மனிதனின் மாம்சத்தில் அமைந்துள்ளது அதோடு சாத்தானிய சுபாவத்தின்படி உள்ளது—ரோ. 7:17–18, 20, 23; 8:2
மனிதன் விழுந்துபோன போது, இன்னொரு சுபாவத்துடன் கூடிய இன்னோர் ஜீவன் அவனுக்குள் நுழைந்தது. இந்த ஜீவனும் சுபாவமும் தேவனுடைய எதிரியாகிய சாத்தானால் உண்டானது ஆகும். சாத்தானின் ஜீவன் கலகத்தால் குணாதிசயப்படுத்தப்படுகிறது, எனவே அதன் பிரமாணம் பாவத்தின் பிரமாணம் என்று அழைக்கப்படுகிறது. நம் மனதில் உள்ள நன்மையின் பிரமாணம் தான் செய்ய வேண்டும் என்று அறிந்திருக்கும் நன்மையைச் செய்ய முயற்சிக்கும் போதெல்லாம், நம் அவயவங்களில் உள்ள பாவப் பிரமாணம் உடன்படுவதில்லை,, மேலும் நாம் அப்படியே எதிர்மாறாகச் செய்யும்படி வழிவகுக்க எழுகிறது. இவ்விதமாய் அது நம் மீதான தன் ஆதிக்கத்தை நிரூபித்துக் காட்டுகிறது. பாவப் பிரமாணம் நம் மனதில் உள்ள நன்மையின் பிரமாணத்தை விட மிகவும் வலிமையானது,, ஏனெனில் சாத்தானிய ஜீவன் மனித ஜீவனை விட மிகவும் வலிமையானது. எனவே, ஒவ்வொரு மனிதனும் (குறிப்பாக நன்மையைச் செய்ய முயற்சிக்கும் நபர்) நன்மையைச் செய்வதற்குப் பதிலாக, தங்களுக்குள் இருக்கும் நன்மையின் பிரமாணத்திற்கு எதிரான தீமையையே செய்யும்படி அவன் அல்லது அவள் மீது ஆதிக்கம் செலுத்தப்படுவதைக் கண்டுபிடிக்கிறான். பாவத்தைப் பொறுத்தவரை நாம் சக்தி வாய்ந்தவர்கள்; தேவனுக்குப் பிரியமானதைச் செய்வதைப் பொறுத்தவரை, நாம் திராணியயற்றவர்கள். இந்த இரண்டு பிரமாணங்களும் மட்டுமே நமக்குள் இருக்கும் இரண்டே பிரமாணங்களாக இருந்தன எனில், நம் சிருஷ்டிக்கப்பட்ட சாட்சாத்துக் கட்டமைப்புக்கு எதிரான ஒரு பிரமாணத்தைச் சேவிக்கும் அடிமைகளாக நாம் ஒரு பரிதாபகரமான மற்றும் நிர்ப்பந்தமான இருத்தலுக்காக அழிவுக்கு விதிக்கப்படுவோம்.
-
மனிதனுக்கு வெளியே உள்ள தேவனுடைய பிரமாணமும் (நியாயப்பிரமாணம்) தேவனுடைய சுபாவத்தின்படி உள்ளது, ஆனால் கோரிக்கைகளைப் பூர்த்திசெய்வதற்கான எந்த நிரப்பீட்டையும் அளிக்காமல் அந்தக் கோரிக்கைகளை நம்மிடம் முன்வைக்க மட்டுமே செய்கிறது—ரோ. 7:12, 14, 16
நம் தேவனால்-சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனில் நாம், தேவனுடைய பிரமாணம் (நியாயப்பிரமாணம்) நன்மையானது என்பதையும், நாம் அதைக் கைக்கொள்ள வேண்டும் என்பதையும் ஒப்புக்கொள்கிறோம், ஆனால் நாம் அதைக் கைக்கொள்ள முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் நம்மால் அதைக் கைக்கொள்ள முடியவில்லை என்பதை நாம் காண்கிறோம். உண்மையில், நாம் அதைக் கைக்கொள்ள முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும், பாவத்தின் பிரமாணம் நம் மீதான அதன் கட்டுப்பாட்டையும் வல்லமையையும் நிரூபித்துக் காட்டுகிறது. நியாயப்பிராணத்தைக் கைக்கொள்வதற்கான மனிதனின் முயற்சியே அவனை மோசமடையச் செய்கிறது! மனிதன், தன் மனதில் உள்ள நன்மையின் பிரமாணத்தோடும், தனக்கு வெளியே உள்ள தேவனுடைய பிரமாணத்தோடும் (நியாயப்பிரமாணம்), தன் மாம்சத்தில் உள்ள பாவம் மரணம் என்பவற்றின் பிரமாணத்தோடும் ஒரு மிகப்பெரிய முரண்பாடான சூழ்நிலையில் இருக்கிறான். அவன் நன்மை செய்ய விரும்புகிறான்; அவன் நன்மை செய்ய முயற்சிக்கிறான், ஆனால் பாவம் மரணம் என்பவற்றின் பிரமாணத்தை அவனால் ஜெயங்கொள்ள முடியாது. நிச்சயமாகவே இது ஒருவர் இருப்பதற்கான ஒரு நிர்ப்பந்தமான சூழ்நிலைதான் (ரோ.. 7:24)!
-
ஜீவ ஆவியின் பிரமாணம் நம் ஆவியில் அமைந்துள்ளது அதோடு தேவனுடைய சுபாவத்தின்படி உள்ளது—ரோ. 8:2
பாவம் மரணம் என்பவற்றின் பிரமாணத்தை விட அதிக சக்திவாய்ந்த மற்றொரு பிரமாணம் உள்ளது. நாம் மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட பிறகு, தேவனுடைய ஜீவன் தேவனுடைய சுபாவத்துடன் நம் ஆவிக்குள் நுழைகிறது. தேவனுடைய ஜீவனே அதி உயர்ந்த ஜீவன், மேலும் அது தெய்வீக ஜீவனின் பிரமாணமாகிய, அதி உயர்ந்த பிரமாணத்தை உடைமையாகக் கொண்டுள்ளது. தெய்வீக ஜீவனின் பிரமாணம் பாவம் மரணம் என்பவற்றின் பிரமாணத்தை ஜெயங்கொள்ள முடியும். தெய்வீக ஜீவனின் பிரமாணம் “ஜீவ ஆவியின் பிரமாணம்” என்று அழைக்கப்படுகிறது (ரோ. 8:2), மேலும் நாம் அதன் ஆட்சியின் கீழ் இருக்கும்போது, நாம் பாவம் மரணம் என்பவற்றின் பிரமாணத்தினின்று விடுவிக்கப்படுகிறோம். ஜீவ ஆவியின் பிரமாணத்தின்படி வாழ்கிறவர்கள், தாங்கள் புறத்தூண்டுதலின்றி தேவனுடைய பிரமாணத்தின் (நியாயப்பிரமாணத்தின்) கோரிக்கைகளை நிறைவேற்றுவதைக் காண்கிறார்கள். ஆகையால், தேவனுடைய பிரமாணம் (நியாயப்பிரமாணம்) என்பது நாம் நம் சொந்த ஜீவனால் கைக்கொள்ள முயற்சிசெய்ய வேண்டிய ஒன்றல்ல; அது, நாம் பாவம் மரணம் என்பவற்றின் பிரமாணத்தால் ஆளப்படும் ஒரு மனித வாழ்க்கையை வாழ்கின்றோமா அல்லது ஜீவ ஆவியின் பிரமாணத்தால் ஆளப்படும் ஒரு மனித வாழ்க்கையை வாழ்கின்றோமா என்பதை நமக்குக் காட்ட முடியக்கூடிய ஒன்று ஆகும். ஒரு மூன்றாவது சுபாவத்தோடும், ஒரு மூன்றாவது பிரமாணத்தோடும் கூடிய ஒரு மூன்றாவது ஜீவனுக்காகக் கர்த்தரைத் துதியுங்கள்! நாம் ஜீவ ஆவியைத் தொடும்போதெல்லாம், தேவனுடைய சொந்த ஜீவனின் வழிவகையின் மூலம் முழுவதும் தேவனின்படி உள்ள ஒரு வாழ்க்கையை வாழ நாம் விடுதலையாக்கப்படுகிறோம்! தேவன் தாம் இருக்கும் விதமாக இருப்பதற்குக் காரணம் அவரது ஜீவனே. நாம் தேவனுடைய ஜீவனை உடைமையாகப் பெற்றிருந்தால், தேவன் தாம் இருக்கும் விதமாக இருப்பதற்கு வழிவகுக்கும் அந்தச் சாட்சாத்து விஷயத்தையே நாம் உடைமையாக வைத்திருக்கிறோம்! நாம் தேஐவனை அனுகரிக்க முடியாது, ஆனால் இப்போது நமக்குள் இருக்கும் அவருடைய தெய்வீக ஜீவனின்படி வாழ்வதன் மூலம் நாம் அவர் இருக்கும் வண்ணமாகவே இருக்க முடியும். நாம் தேவனை அனுகரிப்பது என்பது ஒரு குரங்கு, ஒரு மனிதனை அனுகரிக்க முயற்சிப்பதைப் போன்று இருக்கும். ஒரு குரங்கானது ஒரு குரங்கைப் போல் வாழாமல், ஒரு மனிதனைப் போல வாழ வேண்டும் எனில், அது ஒரு மனித ஜீவனைப் பெற்று, குரங்கு ஜீவனை நிராகரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். ஒவ்வொரு ஜீவனுக்கும் அதன் பிரமாணம் உண்டு. ஆப்பிள் மரத்தின் ஜீவனுக்குள் இருக்கும் பிரமாணத்தின்படி ஆப்பிள் மரம் பழங்களை உற்பத்திசெய்கிறது. நாய் ஜீவனுக்குள் இருக்கும் ஒரு பிரமாணத்தின் காரணமாக, ஒரு நாய் புறத்தூண்டுதலின்றி உறுமுகிறது அல்லது அதன் வாலை அசைக்கிறது. இத்தகைய ஒரு பிரமாணத்தின் கிரியை புறத்தூண்டுதலற்றது அதோடு தானாகவே நடக்கிறது; அது தன் ஜீவனின்படி உள்ளிருந்து ஆளப்படும் ஒன்று. இப்போது நம்மிடம் தேவனுடைய ஜீவன் இருப்பதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இந்த ஜீவன் நம்மில் வளர்வதற்கு எவ்வளவு அதிகமாக நாம் அனுமதிக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் புறத்தூண்டுதலின்றி இந்த தெய்வீக ஜீவனின் பிரமாணத்தை வாழ்ந்துக்காட்டுகிறோம்.
-
எந்தப் பிரமாணத்தின் கீழ் நம்மை நாமே வைக்கிறோமோ அந்தப் பிரமாணத்தின் புறத்தூண்டுதலற்ற கிரியையின்படி நாம் வாழ்கிறோம்
இன்று நமக்குள் மூன்று ஜீவன்கள் அவற்றின் மூன்று பிரமாணங்களுடன் நம்மிடம் உள்ளன. நாம் எந்த ஜீவனால் வாழ்வோம் என்ற ஒரு விருப்பத்தேர்வை நாம் எதிர்கொள்கிறோம். நாம் நம் மனதில் உள்ள நன்மையின் பிரமாணமாகிய, நம் நல்ல சுபாவத்தின்படி வாழத் தேர்வுசெய்தால், பாவம் மரணம் என்பவற்றின் பிரமாணம் நம்மை வீழ்த்துவதற்குத் தானாகவே கிரியைசெய்யும். எனினும், நாம் நம் ஆவிக்குத் திரும்பி, கிறிஸ்துவால் வாழத் தேர்வுசெய்தால், ஜீவ ஆவியின் பிரமாணம் நம் ஆள்தத்துவத்தில் கிரியைசெய்யும், மேலும் நாம் பாவம் மரணம் என்பவற்றின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கப்படுவோம். ஆதாமும் ஏவாளும் இரண்டு விருட்சங்களுடன் கூடிய ஏதேன் தோட்டத்தில் தாங்கள் வாழ்ந்தபோது இருந்த சூழ்நிலையில்தான், தேவனுடைய ஜீவனை உடையவர்கள் மீண்டும் இருக்கின்றனர். பாவம் மரணம் என்பவற்றின் பிரமாணத்தின் ஆளுகையின் கீழ் நம்மைக் கொண்டுவரும் விருட்சத்தையோ அல்லது தெய்வீக ஜீவனின் பிரமாணத்தின் ஆளுகையின் கீழ் நம்மைக் கொண்டுவரும் விருட்சத்தையோ நாம் ஒவ்வொரு கணமும் தேர்வுசெய்ய முடியும்.
-
தேவனுடைய விருப்பத்தின்படி வாழ்வதன் இரகசியம், தேவனுக்காகவோ அல்லது தேவனின்படியோ எதையும் செய்ய நம்மில் எந்த சக்தியும் இல்லை என்பதை முதலில் இனம்கண்டு கொள்வதே ஆகும்—ரோ. 7:18– 19, 21–24
ரோமர் 7-ல் பவுல் முன்வைப்பது போன்ற ஒரு தரிசனத்தைப் பார்த்த பிறகு, நாம் தீமையைச் செய்ய பயப்படுவது போலவே அதே அளவிற்கு நன்மையைச் செய்ய முயற்சிப்பதற்கும் பயப்பட வேண்டும்! பிரச்சினை தேவனுடைய நன்மைப் பிரமாணத்தில் (நியாயப்பிரமாணத்தில்) இல்லை; பிரச்சினை, நாம் அதன் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய எந்த ஊற்றிலிருந்து முயற்சிக்கிறோம் என்பதில்தான் உள்ளது. நாம் நன்மை செய்ய முயலும்போது, “என்னிடத்தில் தீமையுண்டென்கிற,” பாவம் மரணம் என்பவற்றின் பிரமாணத்தின் ஓர் எதிர்வினையைத் தூண்டுகிறது, (ரோ. 7:21). எனவே நல்லவனாக இருக்க முயற்சிப்பதை நாம் மறந்துவிட வேண்டும். தேவன் இல்லாமல் ஒரு நல்ல நபராக விஷயங்களைச் செய்ய முயற்சிப்பது ஒரு மாபெரும் பொறி. ஒரு நபர் இந்தப் பொறியின் வலையில் விழுந்தவுடன், அவன் ஜீவனாகிய தேவனிடமிருந்து திசைதிருப்பப்படுகிறான். தேவன் நியாயப்பிரமாணத்தில் முன்வைக்கும் தரத்தை அடைய நம்மில்தானே நம்மிடம் எந்தத் திறனும் இல்லை. நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள முயற்சிப்பதை நாம் முழுமையாகக் கைவிட்டாக வேண்டும்!
-
இந்த உண்மையை அங்கீகரித்தப் பிறகு, நம்மில் உள்ள தம் பிரமாணத்தை இயக்க ஆவியானவரை அனுமதிக்கும்படி, நம் ஆவியில் உள்ள ஆவியானவர் மீது நாம் நம் மனதைப் பொருத்தியாக வேண்டும்—ரோ. 8:4-6:
நாம் செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புவதாக நாம் நினைக்கும் விஷயங்களைச் செய்ய முயல்வதற்குப் பதிலாக, ஜீவனாகிய சாட்சாத்து தேவனால் வாழ நாம் தவிப்புடன் இருக்க வேண்டும்! இதைச் செய்வதற்கு, நாம் நம் மனதை ஆவியின் மீது பொருத்த கற்றாக வேண்டும். நாம் ஜீவனாகிய தேவனில் கவனம் செலுத்தும் மக்களாக இருந்தால், ஜீவ ஆவியின் பிரமாணத்தின்படி வாழும் ஒரு வாழ்க்கையை நாம் புறத்தூண்டுதலன்றி வாழ்வோம். அத்தகைய ஒரு வாழ்க்கை நிச்சயமாகவே தேவனுக்குப் பிரியமானதாக இருக்கும் அதோடு இதற்கு எந்த சுய-முயற்சியும் தேவையில்லை. இவை அனைத்தும் புறத்தூண்டுதலற்றது என்ற உண்மையை முன்னிலைப்படுத்தவே பவுல் இந்த வசனங்களில் “யின் பிரமாணம்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறான். நாம் மாம்சத்தில் வாழ்ந்தால், நம்மைப் புறத்தூண்டுதலின்றி பாவம் செய்ய வைக்கும் ஒரு பிரமாணத்தின் வல்லமையின் கீழ் நாம் கொண்டுவரப்படுவோம். நாம் ஆவியில் வாழ்ந்தால், தேவனை வெளிக்காட்டுகிற அதோடு தேவனின் குறிக்கோளை நிறைவேற்றுகிற ஒரு வாழ்க்கையை நாம் புறத்தூண்டுதலின்றி வாழ வைக்கும் ஒரு பிரமாணத்தின் வல்லமையின் கீழ் நாம் கொண்டுவரப்படுவோம். நம் மனதை ஆவியின் மீது பொருத்துவதற்கான ஒரு நடைமுறைக்குரிய வழி, தேவனுடைய வார்த்தையை ஜெப-வாசிப்பதே ஆகும்.
-
ஜீவப் பிரமாணம் கிரியைசெய்யும் ஜீவனின் மண்டலத்திற்குள் நாம் நுழைந்திருக்கிறப் பிறகு, நம் ஆவியில் இந்த ஆவியானவரைத் தொடர்ச்சியாகப் பின்பற்றுவதாலும் நடப்பதாலும் நாம் அங்கே நிலைத்திருக்க (தங்கியிருக்க) வேண்டும்—ரோ. 8:4, 6, 14
நாம் காலையில் விழித்தெழுந்தவுடனே, நாம் நம் மனதை நம் ஆவியின் மீது பொருத்த வேண்டும், இதனால் ஜீவ ஆவியின் பிரமாணம் நம் ஆள்தத்துவத்தில் கிரியைசெய்யக்கூடும். இத்தகைய ஒரு மண்டலத்திலும், இத்தகைய ஒரு பிரமாணத்தின் கீழும் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கையில், சாத்தான் நம் சொந்த ஜீவனால் வாழும் நன்மையான விஷயங்களைச் செய்ய முயற்சித்தும்கூட, இன்னும் பாவத்திற்குள் விழுந்துபோகும் இந்தத் தீய சுழற்சிக்கு மீண்டும் பழையபடி நம்மைத் திசைத்திருப்ப தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வான். இந்த மண்டலத்தில் நாம் நம்மைக் காணும்போது, நாம் வெறுமனே ஆவிக்குத் திரும்பி வந்து, மீண்டும் நம் மனதை ஆவியின் மீது பொருத்த வேண்டும். நாம் ஜீவ ஆவியைத் தொட்டவுடனே, ஜீவ ஆவியின் பிரமாணம் நம்மை மீண்டும் விடுதலையாக்குகிறது அதோடு, தேவனை வெளிக்காட்டுகிற மற்றும் எல்லா விதத்திலும் முழுமையாக தேவனின்படி இருக்கக்கூடிய ஒரு வாழ்க்கையை வாழ நமக்குத் திறனளிக்கிறது.
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: இந்தப் பாடத்தை தெளிவாக முன்வைக்க, மனிதனின் பகுதிகளைப் பற்றிய மூன்று வட்ட வரைபடத்தைப் பயன்படுத்துவது உதவிகரமாக இருக்கும், இதில் மூன்று ஜீவன்களின் இருப்பிடமும், முறையே அவற்றின் அந்தந்தப் பிரமாணங்களும் (தேவனுடைய பிரமாணமாகிய, நான்காவது பிரமாணத்தை இந்த வட்டங்களுக்கு வெளியே வைத்து) குறிப்பிடப்படுவது பயனுள்ளதாக இருக்கும். எனினும், இந்த வரைபடத்தின் ஆவிக்குரிய செயலாக்கத்தைப் பற்றி பேசுவதற்கு முன், பௌதிக, அறிவியல் உலகில், அதிக வலிமையான ஜீவன் மற்றும் பிரமாணம், செயல்படுத்தப்படும் போது, பலவீனமான ஜீவன் மற்றும் பிரமாணத்தை எப்போதும் வெல்கிறது என்பதை இளம்வாலிபர்களுக்கு விளக்கவும். (புவியீர்ப்பு பிரமாணத்தை ஜெயங்கொள்ள காற்றியக்கவியலின் (aerodynamics) பிரமாணத்தைப் பயன்படுத்தும் ஒரு விமானத்தின் எடுத்துக்காட்டு, இந்தக் கோட்பாட்டைப் புரிந்துகொள்வதில் உதவிகரமாக இருக்கிறது.) பின்னர், வரைபடத்தைப் பயன்படுத்தி, மனிதனின் மனதில் உள்ள நன்மையின் பிரமாணம், மனிதனுக்கு வெளியே உள்ள தேவனுடைய பிரமாணத்துடன் எவ்வாறு ஒத்துப்போகிறது அதோடு எவ்வாறு அதை நிறைவேற்ற விரும்புகிறது என்பதை விளக்குங்கள் (ரோ. 7:21–22). ஆயினும், அது தான் விரும்பும் நன்மையைச் செய்ய முயலும்போது, அது மனிதனின் மாம்சத்தில் உள்ள பாவம் மரணம் என்பவற்றின் பிரமாணமாகிய, ஓர் அதிக வலுவான பிரமாணத்தால் ஜெயங்கொள்ளப்படுகிறது (ரோ. 7:23; 8:2). (இளம்வாலிப பரிசுத்தவான்கள் தாங்கள் ஆவியானவரால் எப்படி வாழ்வது மற்றும் நடப்பது என்ற உணர்ந்தறிதலுக்குள் அவர்கள் இன்னும் அதிகமாக வரும் வரை தங்களைக் காத்துக்கொள்வதற்கான நியாயப்பிரமாணத்தின் கிரியை அவர்களுக்கு இன்னும் தேவைப்பட்டாலும், நன்மையைச் செய்வதற்காக அவர்கள் செய்யும் பெரும்தீர்மானித்ததை விட பாவம் இன்னும் அதிக சக்திவாய்ந்தது என்ற உண்மையை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.) அவர்களது மாம்சத்தில் உள்ள பாவம் மரணம் என்பவற்றின் பிரமாணத்தை ஜெயங்கொள்வதற்கான ஒரே வழி, மற்றொரு, வலுவான பிரமாணமாகிய—ஜீவ ஆவியின் பிரமாணத்தின் கிரியை மூலம் மட்டுமே (ரோ. 8:2). ஜீவ ஆவியின் பிரமாணத்தின் இருப்பிடம் அவர்களது ஆவியில் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுங்கள். ஆகவே, நாம் காலையில் விழித்ழுந்ததும், நாம் செய்ய வேண்டிய முதல் காரியம், கர்த்தருடைய நாமத்தைத்க் கூப்பிடுவதன் மூலம் நம் மனதை நம் ஆவிக்குத் திருப்புவதுதான். காலைப் புத்துயிர் முதல் நாளின் முடிவு வரை, நம் மனதை நம் ஆவியின் மீது பொருத்துவதன் மூலம், ஜீவ ஆவியின் பிரமாணம் கிறிஸ்து இயேசுவிலே நம்மைப் பாவம் மரணம் என்பவற்றின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கும்.
சுவிசேஷ செயலாக்கம்: ஒவ்வொரு ஜீவனுக்கும் அதன் பிரமாணம் உண்டு. மனிதன் தேவனால் தம் சாயலின்படியும் தம் ரூபத்தின்படியும் சிருஷ்டிக்கப்பட்டான் (ஆதி. 1:26). எனவே, தேவனுடைய பிரமாணத்திற்கு (நியாயப்பிரமாணத்திற்கு) ஒத்திருக்கும் ஒரு பிரமாணம் மனிதனுக்குள் உள்ளது, மேலும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள நன்மையை அது செய்ய விரும்புகிறது (ரோ. 7:16). எனினும், மனிதன் விழுந்தபோது, சாத்தான் தன் ஜீவனை அதன் பிரமாணத்தோடுகூட (பாவம் மரணம் என்பவற்றின் பிரமாணம்) மனிதனின் சரீரத்திற்குள் உட்செலுத்தினான் (ரோ. 5:19; 7:17, 23). மனிதனின் மாம்சத்தில் உள்ள பாவம் மரணம் என்பவற்றின் இந்தப் பிரமாணம், மனிதனின் மனதில் உள்ள நன்மையின் பிரமாணத்தைவிட அதிக வலிமையானது. எனவே, மனிதன் தான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை, மாறாக அவன் தான் விரும்பாத தீமையைத்தான் அவன் பயிற்சிசெய்கிறான் (ரோ. 7:19). (திருடுவது, பொய் சொல்வது, உங்கள் பெற்றோரிடம் எதிர்த்துப் பேசுவது, ஒரு பரீட்சையில் ஏமாற்றுவது போன்றவை சரியல்ல என்பதை அறிந்திருந்தும்கூட, எப்படியும் அதைச் செய்வது போன்ற சில எளிய எடுத்துக்காட்டுகள், நம் மாம்சத்தில் உள்ள பாவம் மரணம் என்பவற்றின் பிரமாணம், நம் மனதில் உள்ள நன்மையின் பிரமாணத்தைத் தோற்கடிக்கும் கிரியையைக் காட்டுவதற்காக இந்தக் குறிப்புக்குப் பயன்படுத்தப்படக்கூடும்.) இதன் விளைவாக நம் மனச்சாட்சி, நாம் செய்ய வேண்டும் என்று நமக்குத் தெரிந்த நன்மையைச் செய்யாததற்காக நம்மை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்க (கண்டனம்செய்ய) எழுகிறது (ரோ. 2:15). பாவத்திற்கு அடிமைப்பட்ட இத்தகைய அடிமைத்தனமானது, நாம் நம் நம்பிக்கையற்ற (நிர்க்கதியான), நிர்ப்பந்தமான நிலைமையையும், நம் மாம்சத்தில் உள்ள பாவம் மரணம் என்பவற்றின் பிரமாணத்தை ஜெயங்கொள்ள முடியக்கூடிய அதிஉயர்ந்த ஜீவன் மற்றும் அதிஉயர்ந்த பிரமாணத்துடன் கூடிய ஓர் இரட்சகரைப் பெறுவதற்கான நம் தேவையையும் உணர்ந்தறியும் வரை மீண்டும் மீண்டும் அது தன்னையே நிகழ்த்தும் பாவம் மற்றும் ஆக்கினைத்தீர்ப்பின் (கண்டனத்தின்) ஒரு சுழற்சியில் விளைகிறது (ரோ. 7:24). யார் நம்மை விடுதலையாக்க முடியும் (ரோ. 7:24)? “தேவனே…தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி“ சிலுவையிலே “மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்”(ரோ. 8:3). சிலுவையில் மரித்த பிறகு, கிறிஸ்து இயேசு ஜீவன்-தரும் ஆவியானவராக ஆகுவதற்கு உயிர்த்தெழுதலில் எழுந்தார் (1 கொரி. 15:45), இதனால் நாம் அவரை நம் ஆவிக்குள் ஜீவனாகப் பெறக்கூடும் (யோவான் 1:26; 3:6; 11:25). நம் மாம்சத்தில் உள்ள பாவம் மரணம் என்பவற்றின் பிரமாணத்தை ஜெயங்கொள்ள இயல்வதற்கான—ஜீவ ஆவியின் பிரமாணமாகிய—இந்த அதிஉயர்ந்த பிரமாணத்தை உடைய தேவன்தாமே இந்த ஜீவன் (ரோ. 8:2). “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்க…ளுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.” (ரோ. 8:1). அவரைப் பெற்றுக்கொள்ளுங்கள், உங்கள் நிர்ப்பந்தமான நிலைமையிலிருந்து விடுதலையாக்கபட்டு, “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் ” தேவனுக்கு நன்றி செலுத்துங்கள் (ரோ. 7:25).
மிக முக்கியக் காரியங்கள்: கலந்திணைந்த ஆவி பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.D.).
பின்புல வாசிப்பு: The Knowledge of Life, Chapter 9.
REFERENCES: The Knowledge of Life, Chapter 4, pp. 30–35; Chapters 9–10; Life-study of Romans, Messages 13–15; Message 67; Life-study of Hebrews, Message 37, pp. 418–426; Messages 63–64; Message 66, pp. 734–739.