உயிர்த்தெழுந்து, பரமேறிய கிறிஸ்துவின் பரப்புதல்
பகுதி 10
✵பாடம் 10 – 18
ஜீவனில் ஆளுகைசெய்தல்
குறிக்கோள்: ஜீவனில் ஆளுகைசெய்தல் என்பது நமக்குள் இருக்கும் தெய்வீக ஜீவனால் ஆட்சிசெய்யப்படுவதைப் (ஆளப்படுவதைப்) பற்றிய ஒரு காரியம் என்பதைக் காண்பதற்கு.
பொருட்சுருக்கம்: தேவனுடைய முழுமையான இரட்சிப்பு, கிருபையின் அபரிமிதம் மற்றும் நீதியின் ஈவின் அபரிமிதத்தால் நாம் ஜீவனில் ஆளுகைசெய்வதற்கே உள்ளது. கிருபையின் அபரிமிதத்தைப் பெறுவதென்றால், நம் ஜீவாதார இரட்சிப்புக்கான நம் சகலத்திற்கும் போதுமான நிரப்பீடாக சாட்சாத்து தேவனையே பெறுவதாகும். நீதியின் ஈவின் அபரிமிதத்தைப் பெறுவதென்றால் ஒரு நடைமுறைக்குரிய வழியில் நமக்குப் பிரயோகிக்கப்படும் தேவனுடைய சட்டரீதியான மீட்பைப் பெறுவதாகும். நாம் கிருபையின் அபரிமிதத்தையும், நீதியின் ஈவின் அபரிமிதத்தையும் பெறும்போது, நாம் தேவனுடைய முழுமையான இரட்சிப்பை அனுபவிக்கிறோம், இது நாம் ஜீவனில் ஆளுகைசெய்தலுக்குச் சமம். ஜீவனில் ஆளுகைசெய்வது என்பது நமக்குள் இருக்கும் தெய்வீக ஜீவனால் ஆளப்படுவதைப் பற்றிய ஒரு காரியம் ஆகும். தெய்வீக ஜீவன் நம் ஆள்தத்துவத்திலும், நம் வாழ்க்கையிலும், நம் எண்ணங்கள், உணர்வுகள், செயல்கள் ஆகியவற்றிலும் ஆளுகைசெய்யும்படி நாம் அனுமதிக்க வேண்டும். நாம் கிருபையின் அபரிமிதத்தையும், நீதியின் ஈவின் அபரிமிதத்தையும் தொடர்ச்சியாகப் பெறும்போது, நாம் ஜீவனில் ஆளுகைசெய்கிறோம் அதோடு தேவனுடைய இரட்சிப்பைப் பற்றிய நம் அனுபவத்தில் உண்மையிலேயே ஆரோக்கியமாகவும் இயல்பாகவும் இருக்கிறோம்.
பின்புலம்: ஜீவனில் ஆளுகைசெய்தல் என்பது நம் பெருமுயற்சியைப் பற்றிய ஒரு காரியம் என்று இளம்வாலிபர்கள் பலர் உணரக்கூடும். உண்மையில் ஜீவனில் ஆளுகைசெய்தல் என்பது தெய்வீக ஜீவனின் ஆட்சிசெய்தலைப் பெறுவதைப் பற்றிய ஒரு காரியமும், அதன் ஆட்சிசெய்தலின் கீழ் இருப்பதைப் பற்றிய ஒரு காரியமும் ஆகும் என்பதை அவர்கள் பார்ப்பது அவர்களுக்கு என்னே ஒரு விடுதலை! ஜீவனில் ஆளுகைசெய்தல் என்பது தேவனுடைய இரட்சிப்பைப் பற்றிய நம் அனுபவத்திற்குச் சமம்.
அதிகாரங்கள்: ரோமர் 5-6.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
-
தேவனுடைய இரட்சிப்பின் மண்டலத்திற்கு வெளியே, பாவமும் மரணமும் ராஜாக்களாக ஆளுகைசெய்கின்றன—ரோ. 5:14, 17, 21
பாவம் மனித இனத்திற்குள் நுழைந்தது முதற்கொண்டு, அது மனுக்குலத்தின் மீது ஒரு சர்வ வல்லமையுள்ள ராஜாவாக ஆளுகைசெய்து வருகிறது. பலர் தங்கள் சொந்த வாழ்க்கையின் எஜமானர் தாங்கள்தான் என்று நினைக்கிறார்கள், ஆனால் அவர்கள் நன்மை செய்ய முயற்சிக்கும்போது, பாவம்தான் தங்களுக்குள் இருக்கும் நிஜமான ராஜா என்பதை அவர்கள் காண்கிறார்கள் (ரோ. 7:13-16). பாவத்தின் மூலமாக ஓர் இரண்டாவது ராஜாவான மரணமும் ஆட்சிக்குள் கொண்டுவரப்பட்டது. மரணத்தின் ஆளுகை என்பது ஒவ்வொரு மனிதனும் பௌதிகமாக மரித்தாக வேண்டும் என்று மட்டும் அர்த்தப்படுத்துவதில்லை: “மனிதனிலுள்ள மரணம், தேவனுடைய காரியங்களைப் பற்றிய எந்தப் பலமும் இல்லாமல், அவன் மரித்துப்போகும் அளவுக்கு அவனை பலவீனப்படுத்துகிறது. இந்த வழியில், மரணம் ஆளுகைசெய்கிறது” (Salvation in Life in the Book of Romans, Chapter 7, p. 43). ஒவ்வொரு மனிதனும் பாவம் மற்றும் மரணத்தின் கொடூரமான ஆட்சியுரிமை (ஆதிக்கம்) மற்றும் அடிமைத்தனத்தின் கீழ் பிறக்கிறான்.
-
தேவனுடைய முழுமையான இரட்சிப்பு, கிருபையின் அபரிமிதம் மற்றும் நீதியின் ஈவின் அபரிமிதத்தால் நாம் ஜீவனில் ஆளுகைசெய்வதற்கே உள்ளது—ரோ. 5:17
பூமியில் தம் ஆட்சியுரிமையைப் பயிற்சிசெய்யும் ஒரு கூட்ட மக்களைப் பெறுவதே தேவனின் நோக்கம் (ஆதி. 1:26). இந்த மக்கள் தங்கள் சொந்த திறன் அல்லது சக்தியின் வழிவகை மூலம் அல்ல, மாறாக கிறிஸ்துவை கிருபையாகப் பெறுவதன் மூலமும், தங்களுக்குள் ஆளுகைசெய்யும்படி கிறிஸ்துவை கிருபையாக அனுமதிப்பதன் மூலமும் ராஜாக்களாக ஆளுகைசெய்வார்கள். ஒரு விசுவாசிக்குள் ராஜாவாக ஆளுகைசெய்யும்படி கிருபை அனுமதிக்கப்படும்போது, அந்த விசுவாசி பாவம், மரணம் உட்பட எல்லாவற்றின் மீதும் ஒரு ராஜாவாக ஆளுகைசெய்கிறான். (பாவமும் மரணமும் தாங்கள் ஆட்சி செய்பவர்களை ராஜாக்களாக ஆக்குவதில்லை!எனினும், கிருபை ஒரு நபரில் ராஜாவாகும் போது, அது அந்த நபரையும் ராஜாவாக ஆக்குகிறது.) ரோமர் புத்தகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள தேவனுடைய இரட்சிப்பின் அனுபவம், நாம் ஜீவனில் ஆளுகைசெய்து கொண்டிருக்கையில் செயல்படுத்தப்படுகிறது அதோடு நாம் ஜீவனில் ஆளுகைசெய்வதை விளைவிக்கிறது.
-
கிருபையின் அபரிமிதத்தைப் பெறுவதென்றால், நம் ஜீவாதார இரட்சிப்புக்கான நம் சகலத்திற்கும் போதுமான நிரப்பீடாக சாட்சாத்து தேவனையே பெறுவதாகும்—ரோ. 5:17; யோவான் 1:14, 16; 2 கொரி. 12:9
முழு பிரபஞ்சத்தையும் ஆட்சிசெய்யும் (ஆளும்) மகா ராஜாவாகிய தேவன், நமக்கு ஜீவனாகவும் கிருபையாகவும் ஆகுவதற்காக ஒரு வழிமுறையினூடாய்க் கடந்துசென்றனிருக்கிறார். நமக்கு ஜீவனாகவும் கிருபையாகவும், தேவன் நம் நிரப்பீடாக இருப்பதற்குக் கிறிஸ்துவில் இருக்கிறார். எதற்காக அவர் நமக்கு நிரப்பீடளிக்கிறார்? ராஜாக்களாக இருப்பதற்குதான்! “தெய்வீகமானதாக மட்டுமல்லாமல், இராஜரீகமானதாகவும் அரசத்துவத்திற்குரியதாகவும் கூட இருக்கும் ஒரு ஜீவனால் நாம் இரட்சிக்கப்பட்டோம் என்று பவுல் நமக்குச் சொல்கிறான். இது ஆளுகைசெய்ய இயலும் ஒரு ஜீவன் (5:17). ஆவிக்குரியவர்களாயும், பரலோகத்திற்குரியவர்களாயும், தெய்வீகமானவர்களாயும் இருப்பதற்கான ஒரு திறனை மட்டுமல்லாமல், ஆளுகைசெய்வதற்கான திறனையும் நமக்கு அளிக்கும் ஒரு ஜீவனை நாம் பெற்றுள்ளோம். இந்த ஜீவனில் நாம் எல்லா எதிர்மறையான விஷயங்கள் மீதும் ஆளுகைசெய்கிறோம்” (To Be Saved in the Life of Christ as Revealed in Romans, Chapter 1, p. 10). ராஜாக்களாக ஆளுகைசெய்ய, நாம் கிருபையைப் பெறுவதற்கான,, இன்னும் கிருபையின்மேல் கிருபையையும்கூட பெறுவதற்கான நம். திறனை அதிகரித்தாக வேண்டும் (யோவான் 1:16). இந்தக் கிருபை நமக்குள் ஆளுகைசெய்யும் போது அதோடு நாம் இந்த தெய்வீக ஜீவனின் ஆட்சிசெய்தலின் (ஆளுதலின்) கீழ் இருக்கும்போது, நாம் தானே பாவம் மற்றும் மரணத்தின் மீதும், நம் வாழ்வில் உள்ள எல்லா சூழ்நிலைகளின் மீதும் கூட ராஜாக்களாக ஆளுகைசெய்கிறோம்.
-
நீதியின் ஈவின் அபரிமிதத்தைப் பெறுவதென்றால் ஒரு நடைமுறைக்குரிய வழியில் நமக்குப் பிரயோகிக்கப்படும் தேவனுடைய சட்டரீதியான மீட்பைப் பெறுவதாகும்—ரோ. 5:17; எபே. 1:7
நாம் நீதியின் ஈவைப் பெற்றிருப்பதால், நாம் கிருபையைப் பெற்று, ராஜாக்களாக ஜீவனில் ஆளுகைசெய்ய முடியும். நீதியின் ஈவு நம் நீதிப்படுத்துதலில் விளைவடைந்ததோடு, நாம் நம் முழுமையான இரட்சிப்புக்கென்று ஜீவனில் ஆளுகைசெய்யக்கூடுமாறு கிருபையின் அபரிமிதத்தைப் பெறுவதற்கு நம்மைத் தகுதிப்படுத்துகிறது. “கிருபையின் அபரிமிதம் மற்றும் தேவன் நமக்குப் பரிசாக அளத்திருக்கும் நீதியின் ஈவின் அபரிமிதம் மூலமாக இந்தக் கலந்திணைந்த ஆவி மூலமான ஆவிக்குரிய, நடைமுறைக்குரிய மற்றும் அனுபவத்துக்குரிய சேர்க்கையில் நாம் ஜீவனில் ஆளுகைசெய்கிறோம் (5:17). கிருபை என்பது நாம் தேவனுடைய ஜீவாதார இரட்சிப்பை அனுபவிப்பதற்காக உள்ளது, அப்படியிருக்க நீதியின் ஈவு தேவனுடைய சட்டரீதியான மீட்பிற்காக உள்ளது” (Crystallization–study of the Complete Salvation of God in Romans, Message 4, p. 29). கிறிஸ்து தம் சட்டரீதியான மீட்பில் நமக்காக நிறைவேற்றியிருக்கும் அனைத்தையும் நாம் பாராட்டும்போது, நாம் புறத்தூண்டுதலின்றி கிறிஸ்துவை கிருபையாகப் பெற்று அனுபவித்துமகிழ வழிநடத்தப்படுகிறோம். நீதிப்படுத்தப்பட்டிருக்கும் அனைவரும் ஜீவனில் ஆளுகைசெய்ய வேண்டும், ஏனெனில் அவர்கள் அனைவரும் கிருபையின் அபரிமிதத்தைப் பெற்று அனுபவித்துமகிழும் நிலையில் தகுதிப்படுத்தப்பட்டுள்ளனர். நாம் ஜீவனில் ஆளுகைசெய்யும் ராஜாக்களாக இருக்கக்கூடுமாறு நாம் மீட்கப்பட்டு, கிருபை அளிக்கப்பட்டிருக்கிறோம். என்னே ஒரு பரிசு!
-
நாம் கிருபையின் அபரிமிதத்தையும், நீதியின் ஈவின் அபரிமிதத்தையும் பெறும்போது, நாம் தேவனுடைய முழுமையான இரட்சிப்பை அனுபவிக்கிறோம், இது நாம் ஜீவனில் ஆளுகைசெய்தலுக்குச் சமம்—ரோ. 5:10, 17
ரோமர் அதிகாரங்கள் 6-16, ஜீவனில் ஆளுகைசெய்வது என்ன என்பதை வரையறுக்கின்றன. தேவனுடைய ஜீவாதார இரட்சிப்பின் வழிமுறை (நம் பரிசுத்தமாகுதல் மற்றும் மறுசாயலாகுதல்) மூலமாக நாம் ஜீவனில் வளர்ந்து ஆளுகைசெய்யும்போது, நாம் ஒவ்வொரு சுற்றுச்சூழலிலும் முற்றும் வெற்றிசிறந்து (ரோ. 8:35-37), சரீர வாழ்க்கையைப் பயிற்சிசெய்வதற்கு தடையாய் இருக்கும் ஒவ்வொரு தடையையும் ஜெயங்கொள்கிறோம். உதாரணமாக, நாம் ஜீவனில் ஆளுகைசெய்யும்போது, நாம் எந்த வகையான விசுவாசிகளையும், அவர்கள் தங்கள் பின்புலம் அல்லது நடைமுறைப் பயிற்சியில் நம்மிலிருந்து எவ்வளவு வேறுபட்டவர்களாக இருந்தாலும்சரி, நாம் அவர்களை ஏற்றுக்கொள்ளவும், அவர்களுடன் கட்டியெழுப்பப்படவும் இயல்கிறோம் என்பதை நாம் காண்கிறோம். நாம் இந்த அபரிமிதமான கிருபையின் நிரப்பீட்டை அனுபவித்துமகிழ்கையில், நம் கிறிஸ்தவ வாழ்க்கைக்கும், நம் சபை வாழ்க்கைக்கும் நமக்குத் தேவையான அனைத்தும் நமக்கு நிரப்பீடுசெய்யப்படுகிறது (Crystallization-study of the Complete Salvation of God in Romans இன் 31–32, 36– 37, 42–44 ஆகிய பக்கங்களை தயவுசெய்து வாசிக்கவும்.)
-
ஜீவனில் ஆளுகைசெய்பவர்கள் தேவனுடைய முழுமையான இரட்சிப்பை அனுபவிக்கின்றனர்
-
ஜீவனில் ஆளுகைசெய்வது என்பது நமக்குள் இருக்கும் தெய்வீக ஜீவனால் ஆளப்படுவதைப் பற்றிய ஒரு காரியம் ஆகும்—ரோ. 5:17; 6:12-14; மத். 8:9
இதுவே இந்தப் பாடத்தின் பாரம். ரோம இலக்கம் II.A. இல் நாம், தேவன் கிருபையின் அபரிமிதமாகிய தம்மைக் கொண்டு நமக்கு நிரப்பீடளிக்கிறார் என்பதைக் கண்டோம். அவர் தெய்வீக ஜீவனாக உள்ளே வருகிறார், மேலும் இந்த ஜீவன் ஆளுகைசெய்ய இயல்கிறது. நம் ஆள்தத்துவத்திலும், நம் வாழ்க்கையிலும் ஆளுகைசெய்யும்படி தெய்வீக ஜீவனை நாம் அனுமதிக்க வேண்டும். மத்தேயு எட்டாம் அதிகாரத்தில் உள்ள நூற்றுக்கு அதிபதி அதிகாரத்தின் கீழ் இருப்பதன் மூலம் ஓர் அதிகாரப் பதவியில் இருந்ததைப் போலவே, தெய்வீக ஜீவனால் ஆட்சிசெய்யப்படுவதன் (ஆளப்படுவதன்) மூலம் நாம் ஜீவனில் ஆளுகைசெய்கிறோம். நம் எண்ணங்களும், நம் நடத்தையும், நம் வாழ்க்கையும் தெய்வீக ஜீவனால் ஆட்சிசெய்யப்படும் (ஆளப்படும்) போது, நாம் பாவம் மற்றும் மரணத்தின் மீது ஆளுகைசெய்கிறோம்; பாவமும் மரணமும் நம்மை ஆட்கொள்வதில்லை. நம் எண்ணங்களும் உணர்ச்சிகளும் தெய்வீக ஜீவனால் ஆட்சிசெய்யப்படும் (ஆளப்படும்) போது, எந்தச் சூழ்நிலையும் நம்மை வீழ்த்த முடியாது (ரோ. 8:35–39). எனவே, நம்மை நாமே சரிபார்த்துக் கொள்ள வேண்டும்; நாம் எப்படி உடுத்துகிறோம், நம் ஓய்வு நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று நாம் தேர்வு செய்கிறோம் அல்லது நம்மைச் சுற்றியுள்ளவர்களுடன் நாம் எப்படிப் பழகுகிறோம் போன்ற தினசரி காரியங்களில் நாம் இந்த தெய்வீக ஜீவனின் ஆட்சிசெய்தலின் (ஆளுதலின்) கீழ் உட்பட்டிருக்கிறோமா? ஒருவேளை அப்படியிருந்தால், நாம் நடைமுறையில் ஜீவனில் ஆளுகைசெய்துகொண்டிருக்கிறோம். நம்மைப் பார்ப்பவர்கள், பூமியில் தேவனுக்காக ஆளுகைசெய்யும் ஒருவரைக் காண்பார்கள்.
-
தேவனுடைய முழுமையான இரட்சிப்பில் முன்னேற, நாம் கிருபையின் அபரிமிதத்தையும், நீதியின் ஈவின் அபரிமிதத்தையும் தொடர்ச்சியாகப் பெற வேண்டும்—ரோ. 5:17; 6:16
“நாம் பெற்றுக்கொண்ட ஜீவன் வெறுமனே ஒரு சில காரியங்களிலிருந்து நம்மை இரட்சிப்பது அல்லாமல், எல்லாக் காரியங்கள் மீதும் ஆளுகைசெய்ய நம்மை ராஜாக்களாகச் சிங்காசனத்தில் அமர்த்துகிறது. இது ஜீவனில் இரட்சிக்கப்படுவதைவிட மிகவும் உயர்ந்தது. நாம் புறம்சார்ந்தரீதியில் நீதியைப் பெற்றிருக்கிறோம், ஆனால் அகம்சார்ந்தரீதியில் நாம் ஜீவனில் ஆளுகைசெய்யக் கூடுமாறு கிருபையின் அபரிமிதத்தை நாம் இன்னும் தொடர்ச்சியாகப் பெறுவது தேவை. இந்த ஆளுகைசெய்தல் அதி. 6—16ல் வரையறுக்கப்பட்டுள்ளது; அங்கு விவரித்துக் கூறப்பட்டுள்ள எல்லாக் காரியங்களும் நம் பிரயாசத்தின் விளைவு அல்ல, மாறாக கிருபையின் அபரிமிதத்தை நாம் பெறுவதன் விளைவாகும்” (Romans 5:17, footnote 3). நாம் ஒவ்வொருவரும் ஒரு சாத்தியமான ராஜாதான், ஆனால் நாம் சாத்தியமான ராஜாக்களாக மட்டுமே, அதாவது கோட்பாட்டளவில் மட்டுமே ராஜாக்களாக தொடர்ந்து இருப்போமா? நம்மில் பலர் தேவனுடைய இரட்சிப்பைப் பற்றி மனரீதியாக மட்டுமே அறிந்திருக்கலாம், ஆனாலும் தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் இந்தப் பரிசைப் (ஈவு) பற்றிப்பிடிக்க ஆக்ரோஷமாக இருக்க மாட்டார்கள். தேவன் தம் வெளியாக்கத்திற்காக தம் சாயலில் நம்மை சிருஷ்டித்தார் (ஆதி. 1:26; ரோ. 8:29-30), ஆனால் பூமியில் அவருக்காக ஆட்சிசெய்யும் (ஆளும்) ராஜாக்களாக நாம் அவருடைய ஆட்சியுரிமையைப் பயிற்சிசெய்வோம் என்று அவர் மேலும் விரும்புகிறார் மற்றும் எதிர்பார்க்கிறார் (ஆதி. 1:26). சாயல் என்பது ஆட்சியுரிமைக்காகவும் அதேபோல் வெளியாக்கத்திற்காகவும் உள்ளது. நாம் நம் ஆவிக்குரியக் குழந்தைப் பருவத்திலிருந்து, ரோமர் 6-16 இல் சித்தரிக்கப்பட்டுள்ள தேவனுடைய ஜீவாதார இரட்சிப்பின் நிலைகளினூடாய்க் கடந்துசென்று வளரவில்லை எனில், கிறிஸ்து திரும்பி வரும்போது நாம் அவருடன் ஆட்சிசெய்ய (ஆள) இயல மாட்டோம். நாம் பெற்றிருக்கும் கிருபை மற்றும் ஜீவின் மூலமாக இன்று நாம் ஆளுகைசெய்யப் பயிற்சிசெய்யாவிட்டால், வரவிருக்கும் இராஜ்ஜியத்தில் நாம் ராஜாக்களாக ஆளுகைசெய்யத் தகுதிபெற மாட்டோம்.
-
ஜீவனில் ஆளுகைசெய்தல் என்பது தேவனுடைய இரட்சிப்பைப் பற்றிய நம் அனுபவத்தில் நாம் ஆரோக்கியமாகவும் இயல்பாகவும் இருக்கிறோமா என்பதை நாம் காண்பதற்கான ஒரு சோதனையாகும்
“நாம் தேவனுடைய ஜீவாதார இரட்சிப்பை உண்மையிலேயே அனுபவிக்கின்றோமா என்பதை அறிய, நாம் கிறிஸ்துவின் ஜீவனில் ஆளுகைசெய்கின்றோமா என்பதை நாம் பார்த்தாக வேண்டும்” (The Experience of God’s Organic Salvation Equaling Reigning in Christ’s Life, Message 4, p. 45). நாம் ஜீவனில் ஆளுகைசெய்யவில்லை எனில், தேவனுடைய முழுமையான இரட்சிப்பில் நாம் முன்னேறவில்லை என்பதை நாம் அறியலாம். நாம் ஆரோக்கியமான மற்றும் இயல்பான கிறிஸ்தவர்கள் என்று நாம் நினைக்கக்கூடும், ஆனால் தேவன் நம் நிஜமான நிலைமையை நமக்குக் காட்ட இருந்தால், நாம் அதிர்ச்சியடையக்கூடும். ஒரு விசுவாசியின் நிலைமைக்கான நிஜமான சோதனை, அவர்கள் ஜீவனில் எந்த அளவிற்கு ஆளுகைசெய்கிறார்கள் என்ற அளவுதான். நாம் பாவத்தாலும் மரணத்தாலும் ஆளுகைசெய்யப்படுகின்றோம் எனில், தேவனுடைய இரட்சிப்பைப் பற்றிய நம் அனுபவம் குறுகியதாக இருப்பதை நாம் அறியக்கூடும். “நாம் புறம்சார்ந்தரீதியில் நீதியைப் பெற்றிருக்கிறோம், ஆனால் அகம்சார்ந்தரீதியில் நாம் ஜீவனில் ஆளுகைசெய்யக் கூடுமாறு கிருபையின் (முழுநிறைவேற்றமடைந்த ஆவியானவராக இந்தப் பதனிடப்பட்ட மூவொரு தேவன்) அபரிமிதத்தை நாம் இன்னும் தொடர்ச்சியாகப் பெறுவது தேவை” (The Experience of God’s Organic Salvation Equaling Reigning in Christ’s Life, Message 4, p. 46). நாம் அனைவரும் புறம்சார்ந்தரீதியில் இரட்சிக்கப்பட்டுள்ளோம், ஆனால் கிறிஸ்து ஜீவனாகவும் கிருபையாகவும் நமக்குள் அகம்சார்ந்தரீதியில் வளர்ந்து ஆளுகைசெய்யும்படி அனுமதிக்க இப்போது நாம் தொடர்ந்து முன்சென்றாக வேண்டும். நாம் இவ்விதத்தில் தேவனுடைய ஜீவாதார இரட்சிப்பை அனுபவிப்பதால், நாம் பாவம் மற்றும் மரணத்தின் ஆட்சியுரிமையிலிருந்து (ஆதிக்கத்திலிருந்து) இரட்சிக்கப்படுவோம் என்பது மட்டுமல்லாமல்; நாம் எல்லாவற்றின் மீதும் நேர்மறையாக ஆளுகைசெய்யவும் பண்ணுவோம். “நாம் ஜீவனில் ஆளுகைசெய்யும் போது, எல்லா சூழ்நிலைகளிலும் நாம் கிறிஸ்துவின் வெற்றியில் நாம் சகலத்தையும்-விஞ்சுகிறவர்களாக இருக்கிறோம்” (The Experience of God’s Organic Salvation Equaling Reigning in Christ’s Life, Message 4, p. 49). நாம் அனைவரும் இத்தகைய இயல்பான, ஆரோக்கியமான, ஆளுகைசெய்யும் விசுவாசிகளாக இருக்க நாடுவோமாக.
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: இளம்வாலிபர்களின் கூடுகையில் தங்கள் ஆவியைப் பயிற்சிசெய்வதன் மூலம் கர்த்தரைத் துய்க்கும் ஓர் ஐசுவரியமான அனுபவமகிழ்ச்சிக்கு இளம்வாலிபர்கள் தொடர்ச்சியாக வழிநடத்தப்பட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு விதத்தில் கர்த்தரை அனுபவித்துமகிழ்வதே கிருபையைப் பெற்றுக்கொள்தும், தேவனுடைய ஜீவாதார இரட்சிப்பில் பங்குபெறுவதாகும். இந்த அனுபவமகிழ்ச்சியானது, நாம் ஜீவனில் ஆளுகைசெய்தலை விளைவிக்கிறது. எனினும், இளம்வாலிபர்களுக்கான இந்தப் பாடத்தின் நோக்கெல்லை, அவ்வப்போது நடக்கும் இளம்வாலிபர்களின் கூடுகைகளைத் தாண்டி அவர்களின் தினசரி வாழ்க்கைக்குள் சென்றடைகிறது. அத்தனை அதிகமான நடைமுறைக்குரிய விஷயங்கள் மீது ஜீவனில் ஆளுகைசெய்வது என்றால் என்ன என்பதைக் கொண்டு அவர்களுக்குக் கருத்துப்பதிவை ஏற்படுத்தவும். ஜீவனில் ஆளுகைசெய்வதற்கு முதலில் நாம் இந்த தெய்வீக ஜீவனால் ஆளப்பட (ஆட்சிசெய்யப்பட) வேண்டும் என்ற உணர்ந்தறிதலுக்குள் இளம்வாலிபர்களை வழிநடத்த, ரோம இலக்கம் மூன்றின் கீழ் குறிப்பு A ஐப் பயன்படுத்தவும். நடைமுறைக்குரிய ரீதியில், இந்த தெய்வீக ஜீவன் நம் பெற்றோர், சபை வாழ்க்கையில் உள்ள வயோதிக பரிசுத்தவான்கள் மற்றும் நம்மீது அதிகாரத்தில் உள்ளவர்கள் மூலமாகப் புறம்பான ரீதியில் நம்மிடம் “பேசுகிறது.” உள்ளான ரீதியில், நாம் எப்போதும் நம் மனச்சாட்சியில் உள்ள கர்த்தருடைய பேசுதலுக்குக் கவனம்செலுத்தவும், அதைப் பின்பற்றவும் வேண்டும் (அப். 24:16). இதை நாம் எவ்வாறு செய்ய முடியும்? நிச்சயமாக சுய-தீர்மானத்தால் முடியாது. இத்தகைய முயற்சிகள் எப்போதும் தோல்வியில் முடிவடைகின்றன (நம் அனுபவத்தில், இந்தத் தோல்விகள் நம்மை நம் இயலாமையுள்ள சுயத்தைவிட்டு விலக்கி வழிநடத்தி, நம் ஆவிக்குள் இருக்கும் சக்திவாய்ந்த ஆளுகைசெய்யும் ஜீவனை நமக்குச் சுட்டிக்காட்டுவதற்குத் தேவைப்படுகின்றன). தேவனுடைய அபரிமிதமான கிருபையைப் பெறும் நல்ல பெறுநர்களாக இருப்பதன் மூலம் மட்டுமே, அத்தனை அதிகமான தீய, எதிர்மறையான, திசைத்திருப்பும் விஷயங்கள் மீது ஜீவனில் ஆளுகைசெய்து, இந்த யுகத்தில் ராஜாக்களாக வாழ நமக்கு நிரப்பீடளிக்கப்பட்டு, நாம் பலப்படுத்தப்பட முடியும்.
சுவிசேஷ செயலாக்கம்: எல்லா மனிதர்களும் பாதிப்புக்கு ஆளாக்கப்படக்கூடிய ஒரு விஷயம் இருக்கிறது—மரணம். ஒரே மனிதன் (ஆதாம்) மூலமாகப் பாவம் உலகத்திற்குள் நுழைந்தது, “பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று” (ரோ. 5:12). மரணம் என்பது வெறுமனே நம் மனித இருத்தலின் (வாழ்வின்) முடிவு மட்டுமல்லாமல்; அதில் பலவீனம், வெறுமை, ஓய்வின்மை, மனச்சோர்வு, இருள், வேதனை ஆகிய உணர்வுகள் அடங்கும். மரணம் பயங்கரமானது! எனினும், மரணத்தை ஜெயங்கொண்ட ஒரு நபர்—தேவ-மனிதன், இயேசு கிறிஸ்து இருக்கிறார். வேதாகமத்தின்படி, அவர் மரணத்தால் பிடித்துவைக்கப்படுவது சாத்தியமானதாக இருக்கவில்லை, ஏனெனில் அவரே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார் (அப். 2:24; யோவான் 11:25). மரணத்தின் வல்லமையை உடைய பிசாசானவனை அவர் மரணத்தின் மூலமாக அழிக்கக் கூடுமாறு, உண்மையில் அவர் இரத்தத்திலும் மாம்சத்திலும் பங்குற்றார் (எபி. 2:14). சாத்தான், பாவம் மற்றும் மரணத்தை ஜெயங்கொள்ளும் திறனுள்ள ஒரே ஜீவன் இந்த ஜீவன் மட்டுமே. இந்த ஜீவனை உடையவனும்கூட ஜெயங்கொள்வான், ஆனால் இந்த ஜீவன் இல்லாதவன் என்றென்றும் மரணத்தை அநுபவிப்பான் (ஒப். 1 யோவான் 5:12-13)! இன்றைய நற்செய்தி என்னவெனில், இந்த ஜீவன் நமக்கு ஓர் இலவச பரிசாகக் கிடைக்கப்பெறுகிறது. ரோமர் 5:17, “கிருபையின் அபரிமிதத்தையும், நீதியின் ஈவின் அபரிமிதத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே” என்று கூறுகிறது (கிரே.). இயேசு கிறிஸ்துவைப் பெறுவதன் மூலம் நாம் ஜீவனில் ஆளுகைசெய்ய முடியும்! நாம் ஜீவனில் ஆளுகைசெய்யும் போது, இந்த நித்திய ஜீவனின் அற்புதமான துணை உற்பத்திபொருட்கள் அனைத்தையும் நாம் அனுபவிக்கிறோம்: வலிமை, திருப்தி, சமாதானம், ஓய்வு, சந்தோஷம், மகிழ்ச்சி, ஆறுதல் போன்றவை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் மரணத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, நம்மை நேசிக்கும் அதோடு நமக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்த இந்த ராஜாதி ராஜாவின் ஆளுகையின் கீழ் வருகிறோம். ஜீவனில் ஆளுகைசெய்ய அவரைப் பெற்றுக்கொள்ளுங்கள்!
மிக முக்கியக் காரியங்கள்: எல்லாவற்றின் மீதும் ஜீவனில் ஆளுகைசெய்ய கிறிஸ்துவின் அரசத்துவத்தின் கீழ் ஒரு வாழ்க்கையை வாழ்தல் (III.H.).
பின்புல வாசிப்பு: Life-study of Romans, Messages 46–47; To Be Saved in the Life of Christ as Revealed in Romans, Chapter 1.
REFERENCES: Life-study of Romans, Messages 46–47; Crystallization-study of the Complete Salvation of God in Romans, Messages 4–6; The Experience of God’s Organic Salvation Equaling Reigning in Christ’s Life, Messages 4–5; To Be Saved in the Life of Christ as Revealed in Romans, Chapter 1; Salvation in Life in the Book of Romans, Chapter 7, p. 43.