உயிர்த்தெழுந்து, பரமேறிய கிறிஸ்துவின் பரப்புதல்

பகுதி 10

✵பாடம் 10 – 18

கிறிஸ்துவை திருமணம்செய்ய விடுவிக்கப்படுதல்

குறிக்கோள்: மனிதன் ஒரு மனைவியாக தேவனைச் சார்ந்திருக்க வேண்டும் என்பதைக் காண்பதற்கு.

பொருட்சுருக்கம்: தேவன் தம் இணைபாதியாக, தம் மணவாட்டியாக தம்மை முழுமையாக்குவதற்காக மனிதனை சிருஷ்டித்தார். இந்தக் குறிக்கோளுக்காக தேவன் மனிதனை ஓர் ஆவியுடன் தம் சாயலில் சிருஷ்டித்தார், இதனால் மனிதன் தேவனுடன் ஒருமையில் வாழக்கூடும். எனினும், மனிதன் வீழ்ச்சியின் காரணமாக தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டான். மனிதன் இந்தச் சார்புடைய சாராராக இருக்க சிருஷ்டிக்கப்பட்டான், ஆனால் விழுந்துபோன நபர் (சுயாதீனமான சுயம், “பழைய மனிதன்”) கணவராகிய தேவனுடைய பங்கையும் வகிக்க முயன்றான். கிறிஸ்து சிலுவையில் மரித்த போது, அவர் பழைய மனிதனை சிலுவையில் அறைந்து, இவ்வாறு தமக்குள் விசுவாசித்தவர்கள் அனைவரும் மற்றொருவரை, கிறிஸ்துவை கூட திருமணம்செய்யும்படி அவர்களை விடுவிக்கின்றார்! இவ்வாறு, சிலுவையில் கிறிஸ்துவின் மரணம் உண்மையிலேயே மனிதனை தேவனிடம் பழையபடி மீட்டுத்திருப்பியது. ஒரு நேர்த்தியான கணவனாக இருக்க இயலாத விழுந்துபோன மனிதனின் இயலாமையை அம்பலப்படுத்த தேவனால் நியாயப்பிரமாணம் வழங்கப்பட்டது. நம் கணவனாக இருந்த நம் பழைய மனிதனுக்கு நாம் கட்டுண்டு இருந்தவரை, நாம் நியாயப்பிரமாணத்தின் கீழ் துன்பப்பட்டோம். எனினும், நம் பழைய மனிதன் கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையப்பட்டபோது, நாம் நியாயப்பிரமாணத்திலிருந்து விடுவிக்கப்பட்டோம்! கர்த்தருக்குத் துதி! நம் கணவனாகவும், நபராகவும் இருந்த நம் பழைய மனிதனுக்கு நாம் இனியும் கட்டுண்டு இல்லை; அதற்குப் பதிலாக, நாம் கிறிஸ்துவை நம் கணவராகவும், நபராகவும் திருமணம்செய்ய மீட்டுத்திருப்பப்பட்டுள்ளோம்..

பின்புலம்: இந்தத் தலைப்பு கருத்தாழமிக்கது என்றாலும், இதுவே இளம்வாலிபர்களின் அனுபவம். கூடுகைகளில் பல முறை நாம் ஒரு புத்திசொல்லுதலை அல்லது கட்டளையைக் கேட்டு, கர்த்தருக்காக ஒன்றைச் செய்ய தீர்மானிக்கிறோம். எனினும், நாம் ஒன்றைத் தீர்மானித்து, அதை நம்மில் நாமே செயல்படுத்த முயற்சிக்கத் தொடங்கியவுடன், நாம் கர்த்தரிடமிருந்து நம்மைச் சுயாதீனமுள்ளவர்களாக ஆக்குகின்றோம். நாம் கர்த்தரிடம் இவ்வாறு சொல்லக் கற்றுக்கொள்ள வேண்டும், “கர்த்தாவே, என்னால் அதைச் செய்ய முடியாது. நீரே என் கணவர். நீர் இந்த வார்த்தையை எனக்காகவும் என்னிலும் நிறைவேற்ற வேண்டும். அப்போது நாம் அவரைச் சார்ந்து இருக்கிறோம், மேலும் கர்த்தர் கிரியைசெய்யத் தொடங்க முடியும்.

அதிகாரங்கள்: ரோமர் 6-7.

போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:

ரோமர் 7:1-4 பற்றிய இந்தப் பாடத்தைப் பகிர்ந்துகொள்வதற்கு, இரண்டு முக்கிய காரியங்கள் புரிந்துகொள்ளப்பட்டாக வேண்டும். முதல் காரியம் விசுவாசிகளின் இரட்டை நிலை, இரண்டாவது  காரியம் “புருஷனைப்பற்றிய பிரமாணம்” என்ற சொற்றொடரின் நேர்த்தியான புரிதல் (ரோ. 7:2). எனவே, வார்த்தையின் இந்தப் பகுதியிலிருந்து ஊழியம் செய்வதற்கு முன், சேவிப்பவர்கள்​​ Life-study of Romans இன் 12வது செய்தியை (especially pp. 141–149) ஐ முழுமையாகத் தன்மயமாக்கி உட்கிரகித்துக்கொள்ள வேண்டும். பகிர்ந்துகொள்ளப்படுவதன் சிந்தனையையும், பாரத்தையும் கூடுதலாகத் தெளிவாக்கி வலுப்படுத்த இந்தப் பாடத்தின் போது இளம்வாலிபர்கள் மீட்டுத்திருப்புதல் படிவத்தில் உள்ள அடிக்குறிப்புகளை வாசிக்க வைப்பது உதவிகரமாக இருக்கும்

  • நம் பழைய கணவன் (பழைய மனிதன்) மரித்தான், கிறிஸ்துவை திருமணம்செய்து கொள்ள நம்மை விடுதலையாக்கினான்—ரோ. 6:6; 7:13

  • தேவன் மனிதனைத் தம் மனைவியாக இருக்க சிருஷ்டித்தார்—ஏசா. 54:5

முழு வேதாகமமும் மனிதனை மனைவியாகவும் தேவனை கணவராகவும் சித்தரிக்கும் ஒரு காதல் (கதை). தம் இணைபாதியாக இருக்கப் போகும் ஒரு மணவாட்டியைப் பெறுவதே, சிருஷ்டிப்பில் தேவனுடைய நோக்கமாக இருந்தது..

  • மனிதன் விழுந்துபோன பிறகு, அவன் கணவன் என்ற நிலையில் தானே பதவியை ஏற்றான்

  • அவன் தேவனிடமான ஒருபெண்ணாகஇருக்க சிருஷ்டிக்கப்பட்ட போதிலும், மனிதன் வீழ்ச்சிக்குப் பிறகு கணவன் என்ற நிலையில் பதவியை ஏற்றுக்கொண்டான்

வீழ்ச்சிக்குப் பிறகு தேவனிடம் திரும்புவதற்குப் பதிலாக, மனிதன் சுயாதீனமாக (சுதந்திரமாக) தொடர்ந்து இருக்கத் தேர்ந்தெடுத்தான், இதனால் கணவராக இருப்பதிலிருந்து தேவனை நிராகரித்தான். ஒரு நபர் இதைச் செய்யும்போது, அவன் தன் சொந்த வாழ்க்கையில் கணவனின் பாத்திரத்தை (கதாப்பாத்திரத்தை) தானாகவே ஏற்றுக்கொள்கிறான்.

  • தன் விழுந்துபோன, சுயாதீனமான (சுதந்திரமான) நிலைமையில் உள்ள மனிதனை வேதாகமம் “பழைய மனிதன்” என்று அழைக்கிறது— ரோ. 6:6; எபே. 4:22

வீழ்ந்துபோன மனிதனில், வீழ்ச்சியின் மூலமாக மனிதனின் ஆத்துமாவில் தோன்றிய சுயமே இந்தக் கணவனின் பாத்திரத்தை ஏற்றுக்கொள்கிறது (அனுமானித்துக்கொள்கிறது). மனிதனின் சுயாதீனமான (சுதந்திரமான) சுயம் வேதாகமத்தில் “பழைய மனிதன்” என்று அழைக்கிப்படுவதற்குக் காரணம் வயது அல்ல, மாறாக சுபாவத்தின்படி பழைய மனிதன் தளர்வுற்றவனாகவும், சிதைந்துபோகிறவனாகவும் இருக்கிறான் என்பதே இதற்குக் காரணம். ஜீவனின் ஊற்றானவராகிய அதோடு எப்போதும் புதிதானவராகிய தேவனிடமிருந்து பழைய மனிதன் பிரிக்கப்பட்டிருப்பதால், அவன் பழையவனாக  மட்டுமே இருக்க முடியும். தேவனுடன் இணைக்கப்பட வேண்டிய பகுதியாக நம்மில் நிலைத்திருந்த நம் துரதிர்ஷ்டவசமான ஆவி, இப்போது பழைய மனிதனாகிய சுயத்தின் தலைமைத்துவத்தின் கீழ் வாழ்ந்து, கணவனாகச் செயலாற்றியது.

  • நாம் கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையப்பட்டபோது, சிலுவையில் அறையப்பட்டது நம் பழைய மனிதனே—ரோ. 6:6, 8

  • கிறிஸ்து சிலுவையில் மரித்தபோது, நம் பழைய மனிதன் (நம் பழைய கணவன்) அவருடன் சிலுவையில் அறையப்பட்டான்—ரோ. 6:6

கலாத்தியர் 2:20இன் படி, நாம் கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையப்பட்டபோது, சிலுவையில் அறையப்பட்டது பழைய மனிதனாகிய பழைய “நான்”தான் (ரோ. 6:6). சுயம், பழைய மனிதன், “நான்” ஆகியவை அனைத்தும் மனிதனின் விழுந்துபோன மற்றும் சுயாதீனமான (சுதந்திரமான) நிலைமையில் மனிதனின் பல்வேறு அம்சங்களைக் குறிக்கும் பதங்கள். அப்படியானால், நாம் கிறிஸ்துவின் சிலுவைமரணத்தை அனுபவித்த பிறகு நம்மில் என்னதான் விட்டுவைக்கப்படுகிறது? விட்டுவைக்கப்படுவது நாமே! சுயம், பழைய மனிதன், பழைய “நான்” ஆகியவற்றிலிருந்து நாம் விடுவிக்கப்படும்போது, நாம் யாராக இருக்க உண்டாக்கப்பட்டோமோ அவனாக இருப்பதற்க்ஆன ஓர் உண்மையான விடுதலையை நாம் அனுபவிக்கிறோம். நாம் ஒரு “புதிய நான்” ஐ அனுபவிக்கிறோம் ” (Galatians 2:20, footnote 2 ஐப் பார்க்கவும்)!

  • கிறிஸ்து சிலுவையில் மரித்தபோது, தேவனுக்கு ஒரு மனைவியாக இருக்க சிருஷ்டிக்கப்பட்ட பகுதி, கணவர் என்ற தேவனின் இடத்தை அபகரித்திருந்த பகுதியிலிருந்து விடுவிக்கப்பட்டது—கலா. 2:20

நாம் கிறிஸ்துவின் விடுதலையாக்கும் மரணத்தை அனுபவிக்கும்போது, நம் ஆவி இந்த அபகரிக்கும், சுயாதீனமான (சுதந்திரமான) பழைய மனிதனுக்குக் கட்டுண்டு இருந்த அதன் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுகிறது. அல்லேலூயா! நம் பழைய மனிதன் கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையப்பட்டான்! நம் ஆவி கிறிஸ்துவுடன் இணைக்கப்படுவதற்கு விடுதலையாக உள்ளது!

  • நம் பழைய கணவன் (நம் பழைய மனிதன்) மரித்ததால், விழுந்துபோன மனிதனுக்கு தேவன் கொடுத்திருந்த நியாயப்பிரமாணத்திலிருந்து நாம் விடுவிக்கப்பட்டோம்—ரோ. 7:13

  • விழுந்துபோன மனிதனை (கணவனாகிய பழைய மனிதனை) அம்பலப்படுத்த தேவன் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார்— ரோ. 7:13-15

தேவனுக்குப் பதிலாக கணவன் என்ற இடத்தை நிரப்புவதற்கு நம் பழைய மனிதன் தான் தகுதியானவனாக இருந்ததாக அனுமானித்ததால், இத்தகைய ஒரு கணவனாக இருக்க இயலாத மனிதனின் அவலமான போதாமையையும் இயலாமையையும் அம்பலப்படுத்தவே தேவன் மனிதனுக்கு நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார். எனினும், நம் பழைய மனிதன் இந்தக் கணவரி என்னும் பதவியை அபகரிப்பதை ஒருபோதும் கைவிடமாட்டான், மேலும் தன்னையே நியாயப்படுத்தவும், அவன் தேவனிடமிருந்து சுயாதீனமாக இருந்தும்கூட அவன் தேவனாக வாழ முடியும் என்பதை நிரூபிக்கவும் அவன் நியாயப்பிரமாணத்தைப் பயன்படுத்த முயன்றான்..

  • நம் பழைய மனிதன் சிலுவையில் அறையப்பட்டபோது, நாம் அவனிடமிருந்தும், அவனுக்குக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டோம்—ரோ. 7:2, 4

தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்களாக, நாம் ஓர் ஆவி, ஓர் ஆத்துமா மற்றும் ஒரு சரீரத்தை உடைமையாகக் கொண்டுள்ளோம். மனிதன் விழுந்துபோன போது, அவனது ஆத்துமா சுயமாக ஆயிற்று, அதாவது நம் ஆளுமை (நபர்த்துவம், ஆள்தத்துவம்) நம் ஆவியுடன் முழுவதும் ஒன்றித்துக்காணப்படுவதற்குப் பதிலாக, சுயத்துடன் முழுவதுமாக ஒன்றித்துக்காணப்பட்டது. நம் பழைய மனிதன், நம் சுயாதீனமான (சுதந்திரமான) சுயம் நியாயப்பிரமாணத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அதன் இருத்தலை தக்க வைத்துக்கொள்ள முயன்றபோது, நாம் (அதாவது நம்முடைய மனைவி பகுதி) இதனுடன் ஒத்துச்சென்றோம். எனினும், இப்போது நம் பழைய மனிதன் சிலுவையில் அறையப்பட்டிருப்பதால்,, நாம் இனியும் “புருஷனைப்பற்றிய பிரமாணத்திற்குக்” கட்டுண்டு இல்லை. எந்த நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள நம் பழைய கணவன் பெருமுயற்சி செய்துகொண்டிருந்தானோ, அந்த நியாயப்பிரமாணத்தினின்று நாம் விடுபட்டுள்ளோம். “நியாயப்பிரமாணத்தினின்று விடுபட்டது—ஆ என்னே மகிழ்ச்சியான நிலைமை ” (Hymns​, #1001)!

  • நம் பழைய கணவன் (நம் பழைய மனிதன்) மரித்திருப்பதால், நாம் இன்னொரு கணவனை, அதாவது நமக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்த, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைக்கூட மணந்துகொள்ள விடுதலையாக இருக்கிறோம்—ரோ. 6:8; 7:4; 2 கொரி. 11:2; எபே. 5:25-27; வெளி. 21:9-10

இது ஒரு நிஜமான காதல். நாம் கிறிஸ்துவுக்காகவே உண்டாக்கப்பட்டோம், ஆனால் நாம் அவரிடமிருந்து திருடப்பட்டோம் அதோடு தவறான நபருடன் திருமணம்செய்யப்பட்டு ஒரு நம்பிக்கையற்ற (நிர்க்கதியான) சூழ்நிலையில் இருந்தோம்! எனினும், கிறிஸ்து சொந்த மரணத்தின் மூலமாக நம் பழைய மனிதனை  சிலுவையில் அறைவதன் மூலம் நம்மைக் காப்பாற்றினார்.. அல்லேலூயா!

  • கிறிஸ்துவுக்குத் திருமணம்செய்யப்பட்டவர்களாக, நாம் தேவனுக்குக் கனி கொடுக்க முடியும்—ரோ. 7:4

  • பழைய மனிதனுக்குத் திருமணம்செய்யப்பட்டவர்கள் மரணத்தை மட்டுமே உற்பத்திசெய்ய முடியும்—ரோ. 7:5

நம் பழைய மனிதன் நம் கணவனாக இருந்தபோது, நமக்கோ அல்லது தேவனுக்கோ பிரியமானதாக இருக்கக்கூடிய எதையும் உற்பத்திசெய்யவதற்கான திறன் எதுவும் நம்மிடம் இருக்கவில்லை. நம் வாழ்க்கை மரணத்தை மட்டுமே வெளிக்கொணர்ந்தது.

  • கிறிஸ்துவுக்குத் திருமணம்செய்யப்பட்டவர்கள் தேவனுக்கான கனியாக தேவனை வெளிக்கொணர முடியும்—ரோ. 7:4

உயிர்த்தெழுதலில் கிறிஸ்துவுக்குத் திருமணம்செய்யப்பட்டவர்களாக, நாம் தேவனுக்குக் கனிகளை வெளிக்கொணர முடியும். இந்தக் கனி என்பது வெறுமனே நம் மனித நற்பண்புகளில் தெய்வீக குணாம்சங்களின் வெளியாக்கம் தானே ஆகும். “நம் ஜீவனின் கனியாக, அதாவது, நிரம்பிவழிதலாக தேவன் நம்மால் வெளிக்கொணரப்படுகிறார்” (Romans 7:4, footnote 3). தேவனுடைய இந்த வெளியாக்கம் தேவனுக்குத் துதியை வெளிக்கொணர்கிறது.

  • கிறிஸ்துவுக்குத் திருமணம்செய்யப்பட்டவர்களாக நாம் நம் கணவராகிய கிறிஸ்துவுடன் இணைக்கப்பட வேண்டும்— எபே. 5:23-24; கொலோ. 1:18; 2:18

  • நம் பழைய மனிதனை கணவனாக மீண்டும் நிலைநிறுத்தக்கூடிய, நம் சார்பிலான எந்தவொரு சுதந்திரத்தையும் (சுயாதீனத்தையும்) நாம் நிராகரித்தாக வேண்டும்

கிறிஸ்துவை நம் கணவனாக இருக்க நாம் அனுமதிக்கவில்லை எனில், நம் வாழ்வில் எல்லாவற்றிலும் நாம் அவருக்குப் பணிந்தடங்கவில்லை எனில், நமக்காக தேர்ந்தெடுக்கவும், நமக்கு வழிகாட்டவும் அவரை நாம் அனுமதிக்கவில்லை எனில், நாம் மீண்டும் நம் பழைய மனிதனை நம் கணவனாக எடுத்துக்கொள்கிறோம். மனிதர்களுக்கு ஒரு கணவர் இருந்தாக வேண்டும். கணவராக தேவன் இல்லை எனில் அது நாமாகத்தான் இருக்கும். நாம் நம்மில் இருக்கும்போதும், அனுபவத்தில் கிறிஸ்துவிலிருந்து பிரிந்து இருக்கும்போதும், கிறிஸ்து நடைமுறையில் நம் கணவனாக இல்லை.

  • ஒரு மனைவியாக, நாம் எல்லாவற்றிலும் கிறிஸ்துவைச் சார்ந்திருத்தலைப் பயிற்சிசெய்தாக வேண்டும், இவ்வாறு தேவனுக்குக் கனியை வெளிக்கொணர்ந்தாக வேண்டும்—ரோ. 7:4

இவை அனைத்தின் வெளிச்சத்திலும், நாம் கர்த்தருக்கு நம்மையே மீண்டும் அர்ப்பணித்து, அவருக்கு நம்மையே மீண்டும் ஒப்புக்கொடுத்தாக வேண்டும். நாம் அவரை நம் கணவராக எடுத்துக்கொண்டாக வேண்டும். ஒரு தம்பதியில் கணவனே மனைவியின் தலை. எபேசியர், நாம் எல்லாவற்றிலும் கிறிஸ்துவை தலையாகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று நமக்குச் சொல்கிறது (எபே. 4:15). எல்லாவற்றிலும் நமக்குள் இருக்கும் அவருடைய உணர்வு மற்றும் விருப்பத்திற்கு நாம் அனைவரும் மிகவும் உணர்திறன் உடையவர்களாக ஆகிவிடுவோமாக, மேலும் அவருடைய நிரப்பீடு மற்றும் வழிநடத்துதலுக்காக எல்லாவற்றிலும் நாம் அவரிடம் வர கற்றுக்கொள்வோமாக. நம் கணவராக, நம்மைப் பற்றிய எல்லா விஷயங்களுக்கும் அவரே பொறுப்பு.

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: மனிதன் தேவனைச் சார்ந்திருக்கவே சிருஷ்டிக்கப்பட்டான். தேவனுடனான நம் உறவு, ஒரு கணவனுடனான ஒரு மனைவியின் உறவைப் போன்றது. தேவனால் நியமிக்கப்பட்ட திருமண உறவில், கணவனே மனைவிக்கு நிரப்பீடாக இருப்பதற்கான தலையாயிருக்கிறான். எனினும், சாத்தியமான வரை சுயாதீனமாக (சுதந்திரமாக) வாழ வேண்டும் என்பதே இந்த உலகின் செய்தி. அப்படிப்பட்டவர்கள், கர்த்தரில் விசுவாசிப்பது போன்ற “ஊன்றுகோல்” எதுவும் தங்களுக்குத் தேவையில்லை என்று கூறுகின்றனர். ஆயனும் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவன் தேவை! இந்த யுகத்திற்கான நம் அறிவிப்பு, “நமக்கு தேவன் தேவை!” என்பதாக இருக்க வேண்டும். நம் வாழ்க்கையின் ஊற்று தேவன் இல்லை எனில், அது நம் சுயமே. இது தேவனுக்கு ஓர் அவமதிப்பு ஆகும். ஒரு கணவன், தன் மனைவி வேறொரு ஆணால் ஆதரிக்கப்பட்டுக்கொண்டிருப்பதைக் கண்டுபிடிப்பதைக் கற்பனை செய்து பாருங்கள்! எவ்வளவு பயங்கரம்! நம்மில் நாமே நம்பிக்கை வைப்பது ஒரு வகையான விக்கிரக வழிபாடு ஆகும், ஏனெனில் அது நம்மை தேவனுடைய இடத்தில் வைக்கிறது. ஆயினும்கூட, நாம் அடிக்கடி இப்படித்தான் வாழ்கிறோம்: அவரிடம் திரும்புவதற்குப் பதிலாக, நாம் நம் சொந்த மனம், திறன் போன்றவை உட்பட பிற ஊற்றுகளுக்குத் (ஆதாரங்களுக்குத்) திரும்புகிறோம். நம் ஒவ்வொரு தேவையையும் பூர்த்திசெய்ய முழுவதுமாக இயலும் ஓர் அற்புதமான கணவர் நமக்கு இருக்கிறார். நாம் கர்த்தருடன் இணைந்திருக்கிறோம், அவருடன் ஒரே ஆவியாக இருக்கிறோம் (1 கொரி. 6:17). இதன் காரணமாக, நமக்கு எல்லாமாக தேவனை நாம் அறிய முடியும். அவரே நம் “நான் இருக்கிறேன்.” அவர் நமக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வெற்று காசோலை போன்றவர். நமக்குத் தேவையான “தொகையை” நாம் அதில் நிரப்ப மட்டுமே வேண்டும், அப்போது நாம் இந்த மூவொரு தேவனாகிய இந்த ஐசுவரியமான “வங்கி” நிரப்பீட்டிலிருந்து பணம் எடுக்க முடியும். உலகில் உள்ள மக்களைப் போல், நாம் சுயாதீனமாக (சுதந்திரமாக) ஆகுவதற்கு முயலவில்லை; மாறாக, நம் அற்புதமான கணவரும், ஐசுவரியமான நிரப்பீடுமாகிய தேவனை முற்றிலும் சார்ந்திருப்பவர்களாக ஆகுவதற்கு முயன்றுகொண்டிருக்கிறோம்.

சுவிசேஷ செயலாக்கம்: நம்மை உண்டாக்கியவராக, தேவனே இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒப்பற்ற கணவராக இருக்கிறார், நம் தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்ய விரும்புகிறார் (ஏசா. 54:5). அவர் முதல் மனிதனாகிய ஆதாமை ஏதேன் தோட்டத்தில் வைத்தபோது, அவர் அவனது வழங்கீடாகவும், பாதுகாப்பாகவும், இன்பமாகவும் இருப்பதே தம் நோக்கமாக இருந்தது என்பதை அவர் வெளிப்படுத்தினார். மேலும், தேவன் மனிதனை தோட்டத்தில், ஜீவ விருட்சத்தின் முன் வைத்ததன் மூலம் காட்டப்படுகிறபடி, தேவன் அவனுடைய சாட்சாத்து ஜீவனாக இருக்க விரும்பினார். எனினும், மனிதனின் வீழ்ச்சியின் காரணமாக, அவன் தன் கணவரும் வழங்குபவருமாகிய தேவனிடமிருந்து துண்டிக்கப்பட்டான். இதனால்தான் மனிதன் இப்போது தன்  வழங்கீடாகவும், பாதுகாப்பாகவும், இன்பமாகவும் இருப்பதற்கான வேறு பல விஷயங்களை (அதாவது தொழில், ஆயுதங்கள், திரைப்படங்கள் போன்றவைற்றை) தேடுகிறான். மேலும், பிறப்பால் மனிதன் ஆதாமிடமிருந்து தனக்குக் கையளிக்கப்பட்ட வாழ்க்கையை (ஜீவனை) உடைமையாய்ப் பெற்றிருக்கிறான்: தேவனிடமிருந்து சுயாதீனமான ஒரு வாழ்க்கை. இதன் விளைவாக, மனிதன் தன்னையே சார்ந்திருக்கும் ஒரு பரிதாபகரமான வாழ்க்கையை இன்று வாழ்கிறான். ஆனால் அல்லேலூயா, நம் மனதுருக்கமுள்ள தேவன் ஆதாமின் விழுந்துபோன ஜீவனிலிருந்து நம்மை இரட்சிக்கவும், நம் தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்வதற்கான நம் அற்புதமான ஐசுவரியமான மணவாளனாக (மத். 9:15) தம்மையே நமக்கு முன்வைக்கவும் இந்த மனிதனாகிய கிறிஸ்து இயேசுவில் தம்மையே ஊனுருகொள்ளச் செய்தார்! தேவனிடமிருந்து சுயாதீனமான ஒரு வாழ்க்கையை வாழ்வதற்காக மனந்திரும்புங்கள், மேலும் உங்கள் கணவரும் வழங்குபவருமாகிய இந்த அன்பான கர்த்தராகிய இயேசுவை தாம் என்னவாக இருக்கிறாரோ அதோடு உங்களுக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறாரோ, அவை அனைத்தையும் பெற அவருக்குத் திறந்துகொடுங்கள்.

மிக முக்கியக் காரியங்கள்: நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.).

பின்புல வாசிப்பு: Life-study of Romans, Message 12.

REFERENCES: Life-study of Romans, Message 12; Life-study of Genesis, Message 18, pp. 232–236; Message 20, p. 263.