உயிர்த்தெழுந்து, பரமேறிய கிறிஸ்துவின் பரப்புதல்

பகுதி 10

✵பாடம் 10 – 18

கட்டியெழுப்புதலுக்காக விசுவாசிகளை ஏற்றுக்கொள்ளுதல்

குறிக்கோள்: கிறிஸ்துவின் சரீரத்தின் ஒருமை, தேவன் ஏற்றுக்கொண்ட அனைவரையும் நாம் ஏற்றுக்கொள்ளவதற்குப் பயிற்சிசெய்வதன் மூலம் பலப்படுத்தப்பட்டு பராமரிக்கப்படுகிறது என்பதை உணர்ந்தறிவதற்கு.

பொருட்சுருக்கம்: விசுவாசிகளை ஏற்றுக்கொள்ளுதல் என்பது சபை வாழ்க்கையின் நடைமுறைப் பயிற்சிக்கு அவசியம். விசுவாசிகளிடையே நடைமுறைப் பயிற்சியிலும், உணர்விலும் பல வேறுபாடுகள் இருந்தாலும், கிறிஸ்துவின் சரீரத்தின் ஒருமைக்காக நாம் இன்னும் ஒருவரையொருவர் ஐக்கியத்தில் ஏற்றுக்கொண்டாக வேண்டும். சபை வாழ்க்கையில் மற்றவர்களை ஏற்றுக்கொள்வதற்கான நம் அளவுகோல் (நிபந்தனை), தேவன் அவர்களை ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பதே. தேவன் மற்றவர்களை இரட்சிப்பதன் மூலம் அவர்களை ஏற்றிருந்தால், (அது பாவமுள்ளதாகவோ அல்லது பிரிவினை உண்டாக்குவதாகவோ இல்லாத வரை) அவர்கள் என்ன பயிற்சிசெய்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், நாமும் அவர்களை ஏற்றுக்கொண்டாக வேண்டும். அத்தகைய ஓர் ஏற்றுக்கொள்ளுதல் செயப்பாட்டு வினையில் அல்ல, மாறாக செய்வினையில் உள்ளது, ஏனெனில் (ஒருவரையொருவர் நியாயந்தீர்ப்பதற்கு பதிலாக) ஒருவர் மற்றொருவரின் ஜீவனில் உள்ள வளர்ச்சிக்காகப் போராடுவதும், கிறிஸ்து தம் சரீரத்தைக் கட்டியெழுப்புவதற்காக எல்லா அவயவங்களிலும் நிறைவேற்றிக்கொண்டிருப்பதை அனுபவித்துமகிழ்வதும் இதில் அடங்கும்.

பின்புலம்: இளம் வாலிபர்களில் பலருக்குப் பள்ளியில் ஒரு குழு நண்பர்களின் தொகுப்பு உள்ளது, மேலும் இந்தக் குழுவில் உள்ளவர்களைப் ஏற்றுக்கொள்கிறார்கள் அதோடு தங்கள் வட்டத்திற்கு வெளியே உள்ளவர்களை விலக்கவோ அல்லது விமர்சிக்கவோ கூட செய்கிறார்கள். கிறிஸ்துவில் உள்ள விசுவாசிகளாக நாம், கிறிஸ்து ஏற்றுக்கொண்ட அனைவரையும், அவர்களது பின்னணி, தோற்றம் அல்லது கூட்டுறவுகளைப் பொருட்படுத்தாமல் ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்பதைப் பார்க்கும்படி இளம்வாலிபர்களுக்கு நாம் உதவ வேண்டும். இது தங்களுக்கும், தங்கள் பள்ளிகளில் உள்ள விசுவாசித்திருக்கும் மற்றவர்களுக்கும் என்னே ஒரு நேர்மறையான செய்தி: அவர்கள் சபை வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மதிப்புமிக்கவர்களாகக் கருதப்படுகிறார்கள்!

அதிகாரம்: ரோமர் 14.

போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:

ஒவ்வோர் உள்ளூர் சபையிலும், எழும்பக்கூடிய பிரச்சினைகள் உள்ளன. சில பரிசுத்தவான்கள் மற்றவர்களைப் புண்படுத்தலாம், சிலர் மிகவும் குறைவாகச் செயல்படலாம், அப்படியிருக்க மற்றவர்கள் மிகவும் அதிகமாகச் செயல்படலாம், மேலும் சபை வாழ்க்கையில் காரியங்கள் எப்படிச் செய்யப்பட வேண்டும் என்று பரிசுத்தவான்கள் எவ்வாறு உணருகிறார்கள் என்பதில் வேறுபாடுகள் இருக்கக்கூடும். சபை பரிசுத்தவான்களின் ஆத்தும அபிப்பிராயங்களின்படி அல்ல, மாறாக கர்த்தருடைய வழிநடத்துதலின்படி நகர்ந்தாக வேண்டும்,, ஒரு பரிசுத்தவான் “இதனால் நான் புண்படுத்தப்படுகிறேன்” அல்லது “இது சரி என்று நான் உணர்கிறேன்” என்று கூறுவது ஒரு விஷயம் என்பதையும், “என் மனச்சாட்சி என்னை அனுமதிக்காது” அல்லது “கர்த்தரை என்னை இவ்வாறு வழிநடத்தினார்” என்று கூறுவது மற்றொரு விஷயம் என்பதையும் நாம் இனம் கண்டுகொள்ள வேண்டும். ஏதாவது ஒன்றைப் பற்றிய நம் உணர்வு பரிசுத்தவான்களின் உணர்வுடன் உடன்படவில்லை என்றாலும்கூட, நாம் கர்த்தருக்கு முன்பாக அவர்களது உணர்வைக் கனப்படுத்த வேண்டும் அதோடு அவர்களை ஐக்கியத்தில் தொடர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். “விசுவாசிகளை ஏற்றுக்கொள்வதைப் பற்றி நாம் தெளிவாய் இல்லாவிட்டால், நாம் சபை வாழ்க்கையைச் சேதப்படுத்தி அதைக் கூறுபோட்டு விடுவோம்” (ரோமரின் ஜீவ-ஆய்வு, செய்தி 28, ப. 360). ஒருமையின் தளத்தில் உள்ள சபையாக நிற்பவர்கள் என்ற முறையில், நாம் எல்லா உண்மையான கிறிஸ்தவர்களையும் நம் ஐக்கியத்திற்குள் ஏற்றுக்கொண்டாக வேண்டும், அதாவது விசுவாசிகளாக அவர்கள் நடைமுறைப்படுத்துவதில் அவர்கள் நம்மிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

  • நாம், தேவனுடைய ஏற்றுக்கொள்ளுதலின்படி மற்றவர்களை ஏற்றுக்கொள்கிறோம்—ரோ. 14:19

மற்றவர்களை ஏற்றுக்கொள்வதற்கான நம் ஒரே நிபந்தனை, தேவன் அவர்களை ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பதே. தேவன் ஒருவனை ஏற்றிருந்தால், நாம் அவனை ஏற்றுக்கொண்டாக வேண்டும். அவர்கள் நம்மைப் போன்றவர்களா இல்லையா, அல்லது நம்மைப் போலவே அவர்கள் காரியங்களைப் பார்க்கிறார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்கள் கர்த்தருக்குள் விசுவாசித்திருந்தால், கிறிஸ்துவில் நம் அன்பான சகோதர சகோதரிகளாக நாம் அவர்களை ஏற்றுக்கொண்டாக வேண்டும். “எவர்களையெல்லாம் தேவன் ஏற்றுக்கொண்டிருக்கிறாரோ, அவர்களையெல்லாம் ஏற்றுக்கொள்ள நாம் கட்டாயப்படுத்தப்படுகிறோம். நமக்கு வேறு எந்த வழியும் இல்லை. அநேக பிள்ளைகளையுடைய ஒரு குடும்பத்தை எடுத்துக்கொள்வோம்….இப்படிப்பட்ட ஒரு பெரிய குடும்பத்தில் சில பிள்ளளைகள் தங்கள் எல்லா சகோர சகோதரிகளோடும் சந்தோஷமாக இல்லாமலிருக்கலாம். எனினும், யார் அவர்களுடைய சகோதர சகோதரிகள் என்று தீர்மானிப்பது அவர்கள் கரங்களில் இல்லை என்பதை பிள்ளைகள் உணரவேண்டும். அது பெற்றோரைச் சார்ந்திருக்கிறது. இந்தக் குடும்பத்திலுள்ள ஒரு பிள்ளை அவனுடைய சகோதரன் அசிங்கமாய் இருக்கிறான் என்று நினைத்து, அவனுக்கு எதிராகப் புகார் கூறினால், அவனுடைய புகார் தன் சகோதரனுக்கு எதிரானதாக இருக்காது, மாறாக அவனைப் பிறப்பித்த அவனுடைய பெற்றோருக்கு எதிரானதாக இருக்கும். நம் பரலோகப் பிதா அநேகப் பிள்ளைகளை, அநேகக் கிறிஸ்தவர்களைப் பெற்றெடுத்திருக்கிறார், அவர்கள் எல்லாரையும் அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். எனவே, நாமும் அவர்களை நம் சுவை அல்லது விருப்பத்தின்படி அல்ல, தேவன் ஏற்றுக்கொள்வதினப்டி ஏற்றுக்கொள்ள வேண்டும்” (ரோமரின் ஜீவ-ஆய்வு , செய்தி 28, ப. 361). நாம் எல்லா விசுவாசிகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை எனில், நாம் குறுங்குழுவாதிகள் (பிரிவினைவாதிகள்) அதோடு நாம் நம் உள்ளூரில் கிறிஸ்துவின் சரீரத்தின் ஓர் உண்மையான வெயாக்கமாக இல்லை.

  • விசுவாசத்தில் பலவீனமானவர்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்—வெளி. 14:1

“சில விசுவாசிகள் விசுவாசத்தில் பலவீனமாய் இருக்கின்றனர், ஏனெனில் அவர்களுக்குள் தேவனுடைய மூலக்கூறின் அதிகமான கடத்துதலையும் உட்செலுத்துதலையும் இன்னும் அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை. எனினும், ஒரளவு விசுவாசம் அவர்களிடம் இருக்கிறது, அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்” (ரோமரின் ஜீவ-ஆய்வு, செய்தி 28, ப. 365). விசுவாசத்தில் பலமுள்ளவர்கள், தங்களைவிட பலவீனமானவர்களை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு ஜீவனை ஊழியம்செய்தாக வேண்டும். மற்றவர்களை நியாயந்தீர்ப்பது எளிது, ஆனால் நிஜமான தேவை அவர்களை அன்பில் ஏற்றுக்கொள்வதுதான். அத்தகைய ஓர் ஏற்றுக்கொள்ளுதல் செயப்பாட்டு வினையில் அல்ல, மாறாக செய்வினையில் உள்ளது. ஏற்றுக்கொள்ளுதல் என்பது கர்த்தருடைய பந்தியில் பங்குபெற ஒருவரை அனுமதிப்பது மட்டுமல்ல. ஒரு விசுவாசியை ஏற்றுக்கொள்வதென்றால், அந்தச் சகோதரன் அல்லது சகோதரிக்குள் கர்த்தரின் கிரியைசெய்தலோடு நிற்பதும், ஜீவனில் உள்ள அவனது அல்லது அவளது வளர்ச்சிக்காகவும், கட்டியெழுப்புதலுக்காகவும் போராடுவதுமே ஆகும். விசுவாசிகளை ஏற்றுக்கொள்வதென்றால், அவர்களுடன் நம்மையே இணைத்துக்கொள்வதும், அவர்களுக்குள் ஜீவனைப் பகிர்ந்தளிப்பதுமே ஆகும்.

  • வித்தியாசமாகப் பயிற்சிசெய்கிறவர்கள் அவ்வாறு கர்த்தருக்கே செய்வதாக அவர்களை நாம் மதிக்க வேண்டும், மேலும் கர்த்தருக்கு முன்பாக தங்கள் மனச்சாட்சியைப் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை நாம் மற்றவர்களுக்கு அளித்தாக வேண்டும்—ரோ. 14:2-8; ஒப். 1 கொரி. 8:413

ரோமர் 14இல் பவுல், மனச்சாட்சியின் நிமித்தம் (ஒருவேளை அந்த இறைச்சி விற்கப்படுவதற்கு முன்பு விக்கிரகங்களுக்குப் பலியிடப்பட்டிருந்திருக்கலாம் என்ற பயத்தில்—1 கொரி. 10:24-33 ஐ பார்க்கவும்) இறைச்சியை உண்ணாத சிலரைப் பற்றியும், இறைச்சியை உண்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லாதவர்கள், மற்றும் ஒவ்வொரு நாளையும் ஒரே மாதிரியாகவே நிதானித்தவர்களுக்கு முரணாக சில நாட்கள் மற்ற நாட்களை விட அதிகப் புனிதமானவையாக இருப்பதாக (இது யூதர்களுக்கு முக்கியமானதாக இருந்தது—கொலோ. 2:16-17 மற்றும் கலா. 4:9–10 ஐ பார்க்கவும்) நிதானித்த சிலரைப் பற்றியும் எழுதினான், “பலவீனமானவர்கள்” என்று அழைக்கப்படுபவர்களை பவுல் நியாயந்தீர்க்கவில்லை. அதற்குப் பதிலாக, “அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்” என்று அவன் வெறுமனே கூறினான் (ரோ. 14:5). -இந்த விஷயங்களில் எல்லோரையும் நேருக்கு நேர் திருத்தும்படி அவன் ஒரு போதனையைக் கொடுத்திருக்க வேண்டும் என்பது போல் தோன்றும். ஆனால் அவன், இந்தக் காரியங்கள் கர்த்தருக்கு முன்பாகப் பரிசுத்தவான்களின் விசுவாசத்தையும் பயிற்சியையும் தொட்டன என்பதை இனம் கண்டுகொண்டான். பலவீனமானவர்கள் என்று அழைக்கப்படுபவர்களை நியாயந்தீர்ப்பது பற்றி பவுல் பலமானவர்கள் என்று அழைக்கப்படுபவர்களை எச்சரித்தான். நாம் பலமானவர்கள் என்று நாம் நினைத்தால், பலவீனமானவர்கள் என்று நாம் கருதுபவர்களை நாம் சகித்துக்கொள்ள வேண்டும். நாம் ஒருவரிடமிருந்து ஒருவர் ஜீவனைப் பெறுவதற்கும், ஒருவருக்கொருவர் ஜீவனை ஊழியஞ்செய்வதற்கும் மட்டுமே அக்கறைப்பட வேண்டும். இவ்வாறு, கிறிஸ்துவின் சரீரம் இடிக்கப்படுவதற்குப் பதிலாகக் கட்டியெழுப்பப்படும். நம் அனைவருக்கும் வெவ்வேறு பின்புலங்கள் உள்ளன, மேலும் கர்த்தரைப் பற்றிய நம் அனுபவங்களும் வேறுபட்டவை. நீங்கள் குறிப்பிட்ட சில விஷயங்களைப் பற்றி உங்கள் மனச்சாட்சியில் எப்படி உணருகிறீர்கள் என்பது, மற்றொரு விசுவாசி எப்படி உணரக்கூடும் என்பதிலிருந்து வேறுபட்டிருக்கலாம். உங்களுக்கு, ஒரு குறிப்பிட்ட விஷயம் அவ்வளவு மிக முக்கியமானதாக இல்லாதிருக்கக்கூடும். மற்றொருவருக்கு, அதே விஷயம் முக்கியமானதாக, அதாவது கர்த்தருக்கு அல்லது வார்த்தைக்குக் கீழ்ப்படிவதற்கு அவன் தான் செய்தாக வேண்டும் என்று உணரும் ஒன்றாகத் தோன்றக்கூடும். உதாரணமாக, சில விசுவாசிகள் தாங்கள தங்கள் ஜெபங்களை “இயேசுவின் நாமத்தில்” என்று முடித்தாக வேண்டும் என்று உணருகிறார்கள். மற்றவர்கள் இது அவ்வளவு முக்கியமானது அல்ல என்று உணருகிறார்கள். கர்த்தருடைய நாள் பரிசுத்தமாக ஆசரிக்கப்பட வேண்டும் என்று சிலர் உணரக்கூடும், எனவே அவர்கள் எந்த வகையான பொழுதுபோக்கிலிருந்தும் விலகியிருக்கவும், நாள் முழுவதும் உபவாசம்பண்ணவும்கூட செய்யக்கூடும். மற்றவர்கள் தங்கள் குடும்பத்தினரை வெளியே இரவு உணவிற்கும், பூங்காவிற்கும் அழைத்துச் செல்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று உணரக்கூடும், மேலும் இதைச் செய்வதற்கான வாய்ப்பைக் கர்த்தர் தங்களுக்கு வழங்குவதாகவும் கூட உணரக்கூடும். சட்டபூர்வமானவர்கள் தாங்கள் தானே செய்ய மறுக்கும் ஒன்றை மற்றவர்கள் செய்ததற்காக அவர்களை நியாயந்தீர்க்கக்கூடும், மேலும் தளர்வான சிலர், கர்த்தருடனான தங்கள் நடையில் மிகவும் கவனமாக இருக்கும் மற்றவர்கள் “மதவாதிகளாக” இருப்பதாக நியாயந்தீர்க்கக்கூடும்! அப்பட்டமான பாவமான காரியங்களைத் தவிர, மற்றவர்கள் தாங்கள் செய்வதைக் “கர்த்தருக்குச்” செய்கிறார்கள் என்று நாம் அனுமானம்செய்ய வேண்டும். பவுல் சபை வாழ்க்கையில் ஒரு மிக முக்கியக் காரியத்தோடு இடைபட்டுக்கொண்டிருந்தான். மற்றவர்கள் தாங்கள் செய்வதைக் கர்த்தருக்குச் செய்கிறார்கள்—அதாவது கர்த்தர் தங்களை வழிநடத்துவதை அவர்கள்  எவ்வாறு உணருகிறார்கள் என்பதின்படி, அவர்கள் மனச்சாட்சியின் உள்ள அவர்கள் உணர்வின்படி அல்லது அவருக்கான அன்பான கனத்தின் காரணமாகச் செய்கிறார்கள் என்று நம்புவதற்கு நாம் கற்றாக வேண்டும். உதாரணமாக, ஒரு பரிசுத்தவான் தான் (ஹட்சன் டெய்லர் செய்தது போல்) சுவிசேஷத்துடன் மற்றவர்களைச் சென்றடைய கலந்துகொள்ளும்படி தான் பாரப்படும் குழுவில் உள்ளவர்களைப் போலவே ஆடை அணிந்து, தன் தலைமுடியை சிகை அலங்காரம் செய்ய வேண்டும் என்று உணரக்கூடும். அவனை நியாயந்தீர்ப்பதற்குப் பதிலாக, அவன் செய்வது கர்த்தரால் உண்டானதாக இருக்கக்கூடும் (அல்லது குறைந்த பட்சம் அவனுடைய உணர்விலாவது அவன் அதைக் கர்த்தருக்குச் செய்கின்றான்) என்று நாம் கருத வேண்டும். எல்லா சூழ்நிலைகளோடும் இடைபடுவதற்கான வழி, வெறுமனே ஜீவனை ஊழியம்செய்வதுதான், ஏனெனில் ஜீவன் எல்லாவற்றையும் ஏற்ற காலத்தில் சரியாக்கிவிடும்.

  • விசுவாசிகளாகிய நாம், நம்மிடமான கர்த்தரின் தனிப்பட்ட வழிநடத்துதலைப் பின்பற்ற முற்பட வேண்டும், ஆயினும் சரீரத்தின் உணர்வுக்கான ஓர் அக்கறையுடனும் மரியாதையுடனும் அவ்வாறு செய்ய வேண்டும்

மற்றவர்களைப் பற்றி, நாம் நியாயந்தீர்க்காமல் இருக்க கவனமாயிருக்க வேண்டும், ஆனால் நம்மைப் பற்றி, நாம் சரீரத்தின் உணர்வைக் கவனித்துக்கொள்ள முயல வேண்டும். நாம் வித்தியாசமாக நடைமுறைப்படுத்துவதற்கான நம் சுதந்திரத்தைப் பயிற்சிசெய்வது, சரீரத்தின் அவயவங்களைப் புண்படுத்தும் எனில், நாம் அதைச் செய்யக்கூடாது.

  • கிறிஸ்துவின் நியாயாசனத்தின் வெளிச்சத்தில் நாம் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்கிறோம்—ரோ. 14:10-12

நாம் செய்யும் செயல்களுக்காக நாம் அனைவரும் இறுதியில் கர்த்தரிடம் பதிலளிக்க வேண்டும் என்று பவுல் நமக்கு நினைவூட்டுகிறான், எனவே நாம் மற்றவர்களை நியாயந்தீர்ப்பது முட்டாள்தனமானது. அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் அனைவரும் அவருக்கே உரியவர்கள். “நாம் கிறிஸ்தவர்கள் என்பதை நாம் அடையாளங் கண்டுகொள்ள வேண்டும்….இதன் அர்த்தம், நீங்கள் ஒரு “கிறிஸ்து-மனிதன்” என்பது மட்டுமல்லாமல்; நீங்கள் கிறிஸ்துவுக்குச் சொந்தமான ஒரு மனிதன் என்பதையும் இது குறிக்கிறது” (The Life-Pulse of the Lord’s Present Move—Elder’s Training, Book 8​, Chapter 8, p. 120). எனவே அனைவரும் அவருக்கு வாழ்ந்தாக வேண்டும். “ஒரு நபர் கர்த்தருக்குரியவனாயிருந்து, அவருக்காக வாழும்வரை, அவன் சரியே. நம் உபதேசக் கருத்துக்களின்படி அதிகமான கோரிக்கைகளை அவன்மேல் நாம் சுமத்தக்கூடாது” (​​Life-study of Romans, Message 28, p. 336). மற்றவர்களை நியாயந்தீர்ப்பதற்குப் பதிலாக, கர்த்தருடனான நம் சொந்த நடையை நாம் கவனித்துக்கொள்ள வேண்டும். ஏதேனும் ஒரு சகோதரனிடம் ஒரு குறை இருந்தால், கர்த்தர் அவனைப் பிரகாசிப்பித்து சரிசெய்யவும், அவனை நிலைநிறுத்தவும் வல்லவராயிருக்கிறார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும் (ரோ. 14:4). மேலும், கர்த்தர் துவக்கிவைத்திருக்கும் ஒன்றை நாம் நியாயந்தீர்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற ஓர் ஆரோக்கியமான பயம் நமக்கு இருக்க வேண்டும்! கர்த்தருடைய நியாயாசனத்திற்கு முன்பாக நாம் கணக்கொப்புவிக்க வேண்டியிருக்கும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

  • அன்பின் கோட்பாட்டில் அனைத்து விசுவாசிகளையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம்—ரோ. 14:13-15

பரிசுத்தவான்களுக்கு முன் இடறல்களை வைப்பதற்குப் பதிலாக, நாம் அவர்களுக்காக அன்பில் அக்கறைப்பட்டாக வேண்டும். உதாரணமாக, இறைச்சி சாப்பிடாத ஒரு சகோதரன் தான் மதிக்கும் ஒரு சகோதரன் இறைச்சி சாப்பிடுவதைப் பார்த்தால், அவனது மனச்சாட்சி ஒத்துக்கொள்ளாவிட்டாலும்கூட, இந்தச் சகோதரன் இறைச்சி சாப்பிடுவது பரவாயில்லை என்று அவன் உணரக்கூடும். அப்படிப்பட்ட ஒரு சங்கதியில், தன் மனச்சாட்சியின் உணர்வின்படி, அவன் தான் இறைச்சியை உண்ணும்போது தேவனுக்கு எதிராகப் பாவம் செய்கிறான். இறைச்சி உண்ணும் சகோதரன், இறைச்சி விரும்பாத மற்றவனை நேசித்தால், அவன் முன்னிலையில் இறைச்சியை உண்பதன் மூலம் தன் சகோதரனுக்கு முன்பாக இந்தச் சகோதரன் ஓர் இடறலை வைக்க மாட்டான். இதுவே அன்பின் கோட்பாட்டில் அவனுக்காக அக்கறைப்படுவதாகும். நம் கவனக்குறைவால் ஒரு சகோதரன் அழிக்கப்படக்கூடும் என்று கூட பவுல் இங்கே கூறுகிறான், அதாவது அவனது மனசாட்சியில் அவனது பாவ உணர்வின் காரணமாக அவன் தன் உணர்வில் கர்த்தரைப் பின்பற்ற முடியாது. நாம் பரிசுத்தவான்களின் உணர்வைப் பற்றி, குறிப்பாக தங்கள் நம்பிக்கையில் (விசுவாசத்தில்) இளையவர்களாகவோ அல்லது எளிமையானவர்களாகவோ தோன்றக்கூடியவர்களின் உணர்வைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும்.

  • ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்வது எவ்வாறு என்பதை நாம் அறிந்தால் மட்டுமே சபை கட்டியெழுப்பப்பட முடியும்—ரோ. 14:19

விசுவாசிகளை ஏற்றுக்கொள்வதென்றால், கர்த்தர் தம் சரீரத்திற்காக அவர்களில் உற்பத்திசெய்வதை ஏற்றுக்கொள்வதாகும். (மற்ற விசுவாசிகளுடன் ஐக்கியங்கொள்ளுதலை மும்முரமாக நாடுவதற்கு நாம் பயிற்சிசெய்ய வேண்டும். பள்ளியில் உள்ள மற்ற விசுவாசிகளுடன் நமக்குப் பொதுவாக இருப்பது, நம் விசுவாசியாத நண்பர்களுடன் நாம் பகிர்ந்துகொள்வதை விட வரம்பற்றரீதியில் விலையேறப்பெற்றது என்பதை நாம் உணர்ந்தறிய வேண்டும். உங்கள் பள்ளியில் வேறு யாரும் ஒரு விசுவாசியா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?) ஒரு சபை ஒத்ததோற்றத்தை வலியுறுத்தி, வேறுபட்டவர்களை விலக்கினால், தங்கள் கருத்துக்குப் புறம்பாகக் கிறிஸ்து செய்கிற அனைத்தும்கூட விலக்கப்படும். எனவே, எந்த விலைக்கிரயம் செலுத்தியும் கர்த்தரைப் பின்பற்றுவதற்கான ஓர் இருதயம் கொண்டவர்கள் கண்டுபிடிப்பது விசித்திரமாகவோ அல்லது புதியதாகவோ தோன்றினாலும்கூட,நாம் அவர்களைப் பாராட்ட வேண்டும். நாம் மற்றவர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு நியாயந்தீர்க்கப்படுகிறோம் என்று அர்த்தம் இருந்தாலும்கூட, கர்த்தரைப் பின்பற்றுவதற்கான இத்தகைய ஓர் உறுதிப்பாடு நமக்கும் இருக்க வேண்டும். சகோதரர் லீ கூறியிருப்பது போல், கர்த்தரைப் பின்பற்றுவதற்கான உண்மையான பாதுகாப்பான வழி, வெறுமனே அவரை நேசிப்பதே ஆகும் (​Life and Building as Portrayed in the Song of Songs, p. 24– 25 ஐ பார்க்கவும்). ஒவ்வொரு தலைமுறையிலும் கர்த்தருக்கு இது போன்ற சில நபர்கள் தேவைப்பட்டுள்ளனர். ஒருபுறம், நாம் பரிசுத்தவான்களின் உணர்வைக் கவனித்துக்கொள்ள வேண்டும்; மறுபுறம், நாம் கர்த்தருக்கு முன்பாக நம் உணர்வுடன் நிற்க வேண்டும். இந்த இரண்டும் பொருந்தவில்லை எனில், அது வெறுமனே ஜெபம் மற்றும் ஐக்கியத்திற்கான ஒரு வாய்ப்பாக மட்டுமே ஆகிவிடுகிறது. இத்தகைய ஒரு சூழலில், பரிசுத்தவான்கள் அனைவரும் அனுபவித்துமகிழ்வதற்கான கிறிஸ்துவின் பல ஐசுவரியங்கள் வெளிவரும். “ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், ஒருவரையொருவர் கட்டியெழுப்புதை உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம்” (ரோ. 14:19, கிரே.).

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: எல்லாப் பரிசுத்தவான்களையும் கிறிஸ்து ஏற்றுக்கொண்டது போல நாமும் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் (ரோ. 15:7). கிறிஸ்து பரிசுத்தவான்களை ஏற்றுக்கொள்ளுதலின்படி நாம் அவர்களை ஏற்றுக்கொள்ளுதல், நாம் மற்றவர்களைப் பற்றி பேசும் விதத்தில் மட்டுமல்லாமல், நாம் யாருடன் நம் நேரத்தைச் செலவிடுகிறோமோ அவர்களை நாம் தேர்ந்தெடுக்கும் விதத்திலும் நடைமுறைக்குரிய ரீதியில் கண்கூடாகக் காணப்படுகிறது. நம் பேசுதலைப் பொறுத்தவரை, மற்றவர்களைப் புண்படுத்தும் மற்றும் கேலி செய்யும் வார்த்தைகளைக் காட்டிலும் (Matt. 5:22 and footnotes 3,5,7), கட்டியெழுப்புதலுக்கு நலமான வார்த்தைகளையே ஒருவருக்கொருவர் பேசுவதற்கு நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் (Eph. 4:29 and footnote 3) ஒருவரின் தோற்றத்தின் அடிப்படையில் அவர்களைக் கேலி செய்வது, கண்டனம் செய்வது, மட்டம்தட்டுவது அல்லது நிராகரிப்பது என்பது அவர்களது சிருஷ்டிகராகிய தேவனுக்கு ஓர் அவமதிப்பதாகும் (எரே. 1:5; ஏசா. 43:7). நாம் நம் நேரத்தை யாருடன் செலவிட வேண்டும் என்று தேர்ந்தெடுப்பதைப் பொறுத்தவரை, நாம் அனைவரும் தேவனுடைய குடும்பத்தின் அங்கத்தினர் என்பதை முதலில் நாம் பார்க்க வேண்டும் (எபே. 2:19), மேலும் அத்தகையவர்களாக நாம் எந்தக் காரணத்திற்காகவும் மற்ற பரிசுத்தவான்களிடமிருந்து நம்மைப் பிரித்துக் கொள்ளக் (அதாவது இனம், பிரபலத்தன்மை, விளையாட்டுத் திறன் ஆகியன போன்றவற்றின் அடிப்படையில் கோஷ்டிகளை உருவாக்குதல்) கூடாது. நாம் ஒருவரோடு ஒருவர் ஒன்றுசேர்ந்து கூடிவருதல், நம் சொந்த தனிப்பட்ட ஆர்வங்களுக்காக இருக்கக்கூடாதுs (1 John 1:3 and footnote 3). இவ்விதமாய் ஒன்றுசேர்ந்து கூடிவருவது மற்றவர்களை விலக்கி, கிறிஸ்துவின் சரீரத்தில் பிரிவினைகளை விளைவிக்கிறது (1 கொரி. 1:10, 12–13). ஆகவே, நாம் ஒருவரையொருவர் கட்டியெழுப்பும் வார்த்தைகளைப் பேச வேண்டும் அதோடு கிறிஸ்து அவர்களை ஏற்றுக்கொண்டதைப் போலவே கூட அவர்கள் தாங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக உணருமாறு பரிசுத்தவான்கள் அனைவரையும் சேர்த்துக்கொள்ளும்படி பயிற்சிசெய்யவும் வேண்டும்.

சுவிசேஷ செயலாக்கம்: கர்த்தரைப் பெற்றுக்கொள்ளாத பலர் தங்கள் தற்போதைய நிலைமையில் மரிக்க இருந்தால், அவர்கள் தாங்கள் அக்கினிக்கடலில் தள்ளப்படுவார்கள் என்பதை உணர்ந்தறிகின்றனர், மேலும் அவர்கள் பயப்படுகின்றனர். மூடநம்பிக்கை அல்லது கற்பனையின் அடிப்படையில் மனிதர்களுக்கு இருக்கும் சில அச்சங்கள் நியாயமற்றவை, ஆனால் இந்த அச்சம் அப்படியல்ல. நியாயத்தீர்ப்பின் மாபெரும் வெள்ளைச் சிங்காசனத்திற்கு முன்பாக அனைவரும் நிற்பார்கள் என்றும், கர்த்தரைப் பெற்றுக்கொள்ளும்படி அவரில் விசுவாசிக்காதவர்களின் பெயர்கள் ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டிருக்காது என்றும் வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது. ஆகையால், இவர்கள் என்றென்றும் அக்கினிக்கடலுக்குள் தள்ளப்படுவார்கள் (வெளி. 20:11-15). இன்று முன்வைக்கப்படும் விருப்பத்தேர்வின் தீவிரத்தன்மையைப் பார்க்கும்படி, இத்தகைய ஒரு பயமுறுத்தும் உணர்ந்தறிதல் நம்மை நிதானப்படுத்த வேண்டும். நீங்கள் அழிந்துபோவதை தேவன் விரும்புவதில்லை. இந்த அக்கினிக்கடல் மனிதர்களுக்காக அல்ல, மாறாக பிசாசுக்காகவும் அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தப்படுத்தப்பட்டது (மத். 25:46). தேவன் மனிதனை நேசிக்கிறார், எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படுமாறு வாஞ்சிக்கிறார் (யோவான் 3:16; 1 தீமோ. 2:4). இன்று, கர்த்தர் தம்மை நீங்கள் ஏற்றுக்கொள்ள (பெற) வேண்டும் என்று விரும்புகிறார், மேலும் அவர் உங்களை “நீங்கள் இருக்கும் வண்ணமாகவே” ஏற்றுக்கொள்ள விரும்புகிறார் (பாடல்கள், #1048). மனிதனை ஏற்றுக்கொள்வதற்காக மனிதனிடமான கர்த்தருடைய அன்பின் இருதயம், எவ்வாறு அவர் ஓர் அசுத்தமான, குஷ்டரோகியான மனிதனை குணப்படுத்தும்படி அவனை அன்புடன் தொட்டார் என்பதிலும் (மத். 8:2-3; மாற். 1:40-41), ஒரு பாவமுள்ள பெண்ணுக்கு இந்த தாகம்-தணிக்கும், ஜீவத்தண்ணீராக தம்மையே வெளிப்படுத்த எவ்வாறு அவர் சமாரியாவுக்கு மாற்றுப்பாதையில் சுற்றிச் சென்றார் என்பதிலும் (யோவான் 4:5-30), பாவமற்ற ஒரே நபராகிய அவர்,  விபச்சாரத்தில் சிக்கிய ஒரு பெண்ணைக் கல்லெறியப்படுவதிலிருந்து எவ்வாறு இரக்கத்துடன் காப்பாற்றினார் என்பதிலும் காட்டப்படுகிறது (யோவான் 8:3-11). இவை, அவருடைய அன்பான மற்றும் ஏற்றுக்கொள்ளும் இருதயத்திற்கான ஒரு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. நல்ல சமாரியனாக அவர் இந்த சாலையில் மரித்துக்கொண்டிருந்த பலவீனமான மற்றும் காயப்பட்ட ஒருவனைக் கண்டு உதவாமல் கடந்துசெல்லவில்லை, மாறாக அவர் மனதுருக்கத்தால் நிறைந்தவர், அவனைக் கவனித்து, அவனுக்கு நிரப்பீடளிக்கின்றார் (லூக். 10:33-34). இன்று, அவர் உங்களுக்கும் அதையே செய்ய விரும்புகிறார். உங்கள் தற்போதைய நிலைமை உங்களை அவரிடம் வரவிடாமல் தடுப்பதற்கு அனுமதிக்க வேண்டாம். அவர் இந்தச் சுத்தமற்றவர்களையும், பாவமுள்ளவர்களையும், தாகமுள்ளவர்களையும், பலவீனர்களையும், மரணமடைபவர்களையும் ஏற்றுக்கொள்ள விரும்புகிறார். கர்த்தரில் விசுவாசிப்பதென்றால், அவரை ஏற்றுக்கொள்வது (பெற்றுக்கொள்வது) என்று பொருள் (யோவான் 1:12). நீங்கள் இருக்கும் வண்ணமாகவே, அவரிடம் வாருங்கள். அவரை ஏற்றுக்கொள்ளுங்கள், அப்போது நீங்கள் அக்கினிக்கடலில் இருந்து இரட்சிக்கப்படுவது மட்டுமல்லாமல், ஆனால் அவரால் அன்புடன் ஏற்றுக்கொள்ளப்படவும் செய்யப்படுவீர்கள்.

மிக முக்கியக் காரியங்கள்: ஒரு நேர்த்தியான, ஆரோக்கியமான தேவபயத்தையும், தேவனுடைய காரியங்களுக்கான ஒரு தேவத்தன்மைமிக்க மரியாதையையும் பேணுதல் (IV.D.2.); நண்பர்கள், புதிய அறிமுகமானவர்கள் மற்றும் நம் வயதுடைய பிறரிடம் நட்பாகவும், மனதுருக்கமுள்ளவர்களாகவும், நேர்மையாகவும், பெருந்தன்மையாகவும், தாராள மனப்பான்மையுள்ளவர்களாகவும், விருந்தோம்பல்மிக்கவர்களாகவும், ஓத்துழைக்கக்கூடியவர்களாகவும், தூய்மையாகவும், ஒரு நல்ல செவிசாய்ப்பவராகவும் இருத்தல் (IV.C.2.); கிறிஸ்தவ நம்பிக்கையின் (விசுவாசம்) அடிப்படைக் கூறுகள், விசுவாசிகள் அனைவரையும் ஏற்றுக்கொள்வதற்கான நம் அடிப்படையாக (II.E.2.).

பின்புல வாசிப்பு: Life-study of Romans, Message 28, pp. 327–336; Message 29, pp. 343, 348–352.

REFERENCES: Life-study of Romans, Messages 28–30; Life-study of 1 Corinthians, Message 44; The Speciality, Generality, and Practicality of the Church Life, Chapters 3–4; The Experience of Life, Chapter 6, pp. 105–114; Other Crucial Matters Concerning the Practice of the Lord’s Recovery (Elder’s Training—Book 4), Chapter 6, pp. 70–72; The Life-Pulse of the Lord’s Move (Elder’s Training, Book 8), Chapter 8, p. 120.