உயிர்த்தெழுந்து, பரமேறிய கிறிஸ்துவின் பரப்புதல்

பகுதி 10

✵பாடம் 10 – 18

ஆவியானவர் நம் ஆவியுடன்

குறிக்கோள்: முழு குமாரத்துவத்திற்கென்று தங்கள் வளர்ச்சிக்காக ஆவியானவரைப் பின்பற்றுவது எவ்வளவு மிக முக்கியம் என்பதை இளம்வாலிபர்களுக்கு வெளிப்படுத்துவதற்கு.

பொருட்சுருக்கம்: மறுபடிஜெநிப்பிக்கப்பட்டவர்கள் அனைவரும் தேவனுடைய பிள்ளைகள் என்பதற்கு இந்த உள்வசிக்கும் ஆவியானவர் அவர்களுடைய ஆவிகளுடன் சாட்சிப்பகிர்கிறார். நாம் மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட பிறகு, தேவன் ஜீவ ஆவியாகத் தம் வழிநடத்துதல் மூலம் நம்மைத் தம் குமாரர்களாக முதிர்ச்சிக்குக் கொண்டுவர நாடுகிறார். தேவனின் ஜீவனே அதி உயர்ந்த உணர்வு நிலைய்டன் கூடிய அதிஉயர்ந்த ஜீவன் என்பதால், நம்மால் அதை நமக்குள் உணர முடியும். எவ்வளவு அதிகமாக நாம் ஆவியானவரின் உள்ளான வழிநடத்துதலைப் பின்பற்றி, உள்ளிருக்கும் ஜீவ உணர்வைக் கவனித்துக்கொள்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் அவருடைய குமாரர்களாக நியமிக்கப்படுகிறோம். எனினும், நாம் தெய்வீக ஜீவனில் தானாகவே வளர்வதில்லை. தெய்வீக ஜீவனின் வழிநடத்துதலை உணர்வதற்கு நம் மனதை ஆவியின் மீது பொருத்துவதாலும், அதன்பின் இந்த வழிநடத்துதலின்படி நடப்பதாலும் நம் ஒத்துழைப்பு வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது.

பின்புலம்: புறம்பார்ந்த, உபதேசத்துக்குரிய நடைமுறைப் பயிற்சிகளின்படி வாழ்வதற்கும், கலந்திணைந்த ஆவியின்படி வாழ்வதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் காண இளம்வாலிபர்களுக்குப் பல எடுத்துக்காட்டுகள் தேவை. இந்தக் கருத்து அடிப்படையானது அதோடு கிறிஸ்தவத்திலிருந்து கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலை வேறுபடுத்திக் காட்டுவதில் மிக முக்கியமானது.

அதிகாரம்: ரோமர் 8.

போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:

  • நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்—ரோ. 8:16

  • நாம் மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட நேரத்தில், ஆவியானவராகிய தேவன் நம் ஆவிக்குள் நுழைந்தார்—யோவான் 3:6

  • நாம் மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட நாளிலிருந்து, நம் ஆவிக்குள் இருக்கும் ஆவியானவர், நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று நமக்குச் சாட்சி கொடுக்கிறார்—ரோ. 8:15-16

நாம் கிறிஸ்துவைப் பெற்று மீண்டும் பிறந்ததிலிருந்து ஆவியானவர், நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று நம் ஆவியுடன் சாட்சி கொடுக்கிறார். இதை யாரும் நமக்குச் சொல்ல வேண்டியதில்லை, ஏனெனில் இந்த உண்மைக்கு தேவன் தாமே நம் உள்ளான சாட்சியாளர். ஒவ்வொரு உண்மையான விசுவாசிக்கும் இந்த அனுபவம் உள்ளது, குறிப்பாக அவர்கள் “அப்பா பிதாவே” என்று கூப்பிடும் போதெல்லாம் இந்த அனுபவம் உள்ளது. நாம் தேவனை “பிதாவே” என்று அழைத்தலுக்கு அவர்,, நாம் அவருடைய பிள்ளைகள் என்ற சாட்சியுடன் நமக்குப் பதிலளிப்பதன் மூலம் பதிலளிக்கிறார்.

  • தேவனுடைய குமாரர்கள் ஆவியானவரால் வழிநடத்தப்படுபவர்கள்—ரோ. 8:14; கலா. 5:25

  • ஒவ்வொரு விசுவாசியின் ஆவிக்குள்ளும் இருக்கும் ஆவியானவர் ஜீவனாக இருக்கிறார் அதோடு ஜீவனைக் கொடுக்க முயல்கிறார்—ரோ. 8:2; 1 கொரி. 15:45; யோவான் 6:63

தேவனுடைய பிள்ளைகளாக நாம் தேவனுடைய ஜீவனை உடைமையாகப் பெற்றிருக்கிறோம், இது வெறுமனே ஆவியானவராகிய தேவன் தாமே. நமக்குள் இருக்கும் ஆவியானவராக, தேவன் தம்மையே ஜீவனாக நம் இருதயங்களுக்குள் பரவச்செய்வதற்குத் தொடர்ச்சியாக முயன்றுகொண்டிருக்கிறார். தேவன் ஜீவனாக நமக்குள் பரப்புவது, ஜீவனில் நம் வளர்ச்சிக்குச் சமம். நாம் ஜீவனில் எவ்வளவு வளர்ந்தாலும்சரி, நாம் எப்போதும் தேவனுடைய பிள்ளைகளாகவே இருப்போம், ஆனால் ஜீவனில் வளர்கிறவர்கள் தேவனுடைய வளர்ந்த குமாரர்களாக ஆகுவதற்கு முதிர்ச்சியடைகின்றனர்.. (நாம் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, தேவனுடைய பிள்ளைகளாக நாம் அனைவரும் தேவனை வெளிக்காட்டவும், அவரிடம் என்னவெல்லாம் இருக்கிறதோ, அவர் என்னவாக இருக்கிறாரோ அவை அனைத்தையும் சுதந்தரித்துக்கொள்ளவும் தேவனுடைய குமாமரர்களாக ஆகுவதற்கு வளர்ந்துகொண்டிருக்கிறோம்.)

  • ஒவ்வொரு விசுவாசியும் தெய்வீக ஜீவனை உடைமையாய்க் கொண்டிருப்பதால், அவர்கள் அதன் உணர்வு நிலையையும் உடைமையாய்க் கொண்டிருக்கின்றனர் அதோடு இந்த ஜீவனின் உணர்வைக் கொண்டுள்ளனர்—ரோ. 8:6; 2 கொரி. 2:13

ஒவ்வொரு வகையான ஜீவனுக்கும் அதன் உணர்வும், உணர்வு நிலையின் அளவும் உள்ளது. தேவனுடைய ஜீவனே அதிஉயர்ந்த ஜீவனாக இருப்பதால், அதுவே அதிஐசுவரியமான உணர்வையும், அதிஉயர்ந்த உணர்வு நிலையையும் உடைமையாய்க் கொண்டுள்ளது. நமக்குள் இருக்கும் கர்த்தருடைய ஜீவனை நாம் தொடும்போது, பல விஷயங்களைப் பற்றிய கர்த்தரின் உணர்வை நாம் உணர்கிறோம். நமக்குள் இருக்கும் தெய்வீக ஜீவனை நாம் தொட்டு, அதன் உணர்வுக்குத் திறந்துக்கொடுக்கும்போது, நாம் உடனடியாக ஆற்றலூட்டப்படுவதையும், புத்துணர்ச்சியூட்டப்படுவதையும், பிரகாசிப்பிக்கப்படுவதையும், அதன் வழிநடத்துதலைப் பின்பற்ற ஊக்குவிக்கப்படுவதையும் உணர்கிறோம்.

  • நாம் ஆவியானவரின் வழிநடத்துதலைப் பின்பற்றும்போது, நாம் ஜீவனில் வளர்கிறோம், மேலும் தேவனுடைய குமாரர்களாகக் குறியீடு அளிக்கப்படுகிறோம்—ரோ. 8:14:

  • ஆவியானவரின் வழிநடத்துதலைப் பின்பற்றுவது என்றால் புறம்பார்ந்த அடையாளங்கள் அல்லது சூழ்நிலைகளைப் பின்பற்றுவது அல்ல, மாறாக முதன்மையாக ஜீவனின் உள்ளான உணர்வைப் பின்பற்றுவதே ஆகும்

ஆவியானவரைப் பின்பற்றுவதென்றால், கர்த்தர் தாங்கள் செய்ய விரும்புவதைச் சுட்டிக்காட்டும் புறம்பார்ந்த அடையாளங்கள் அல்லது தங்கள் சுற்றுச்சூழலில் உள்ள சூழ்நிலைகளைக் கவனிக்க விழிப்பாக இருப்பதாகும் என்று கிறிஸ்தவர்கள் பலர் நினைக்கிறார்கள். எனினும், ஆவியானவரின் வழிநடத்துதலைப் பின்பற்றுவதென்றால், முதன்மையாக ஜீவனின் உள்ளார்ந்த உணர்வைப் பின்பற்றுவதாகும்., “அடையாளங்கள் அல்லது சுட்டிக்காட்டிகளால் அல்ல, மாறாக ஓர் உள்ளான உணர்வு, உணர்ச்சி அல்லது உணர்வுநிலையை நமக்குத் தருவதன் மூலம், நம்முள் உள்ள தெய்வீக ஜீவன் தொடர்ச்சியாக நம்மை வழிநடத்துகிறது. இதனால் பவுல், ‘மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய குமாரர்களாயிருக்கிறார்கள்’ என்று கூறுகிறான். வெளியார்ந்த காரியங்களால் நீங்கள் வழிநடத்தப்பட்டால், நீங்கள் தேவனுடைய ஒரு குமாரன் என்று அது நிரூபிப்பதில்லை. ஆயினும், தெய்வீக ஜீவனின் உள்ளான உணர்வினால் நீங்கள் வழிநடத்தப்பட்டால், நீங்கள் தேவனுடைய ஒரு குமாரன் என்று அது சுட்டிக்காட்டுகிறது. நாம் தேவனுடைய குமாரர்களாக இருக்கிறோம், ஏனெனில் நம்மிடம் தேவனுடைய ஜீவன் இருக்கிறது. உலகப்பிரகாரமான மக்கள் ஏன் தேவனுடைய குமாரர்களாக இல்லை? ஏனெனில் அவர்களிடம் தேவனுடைய ஜீவன் இல்லை” (ரோமரின் ஜீவ-ஆய்வு , செய்தி 18, ப. 240). நமக்குள் இருக்கும் கர்த்தரின் வழிநடத்துதலை நாம் எவ்வளவு அதிகமாகப் பின்பற்றுகிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் ஜீவனை அனுபவித்துமகிழ்கிறோம் அதோடு அவ்வளவு அதிகமாக நாம் தேவனுடைய குமாரர்களாக ஜீவனில் வளர்கிறோம். நிகழ்வுகள் (கனவுகள், தற்செயல்கள் அல்லது பிற வழக்கத்திற்கு மாறான நிகழ்வுகள் போன்றவை) எவ்வாறு கர்த்தருடைய வழிநடத்துதலதின் முதன்மையான வழி அல்ல என்பதற்கு எடுத்துக்காட்டுகளை வழங்குவதன் மூலம் சேவிப்பவர்கள் இந்தக் குறிப்பில் அதிக நேரம்  செலவிட்டு தங்கியிருக்க உணரக்கூடும். இந்தப் புறம்பார்ந்த காரியங்களுக்கு நாம் மிகவும் அதிகக் கவனம் செலுத்தினால், நாம் கர்த்தரின் உள்ளார்ந்த வழிநடத்துதலிலிருந்து திசைதிருப்பப்பட்டு மூடநம்பிக்கைக்கு ஆளாகலாம். குமாரத்துவத்திற்கென்று நம் வளர்ச்சிக்காக கர்த்தர், உள்ளிருக்கும் தம் ஆவியானவரால் நம்மை வழிநடத்துகிறார்.

  • ஆவியானவரின் உள்ளான வழிநடத்துதலைப் பின்பற்றுபவர்கள் தேவனுடைய குமாரர்களின் குறியீட்டைக் கொண்டிருக்கிறார்கள்

“கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலிலுள்ள சபைகள், ஆடையைப் பற்றி வெளியார்ந்த சட்டதிட்டங்களின் ஒரு பட்டியலை வைத்திராவிட்டாலும், உங்களை தேவனுடைய ஒரு குமாரனாக்குகிற தெய்வீக ஜீவன் உங்களுக்குள் இருக்கிறது. உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மற்றும் வகுப்புத் தோழர்கள் பிசாசுத்தனமான விதத்தில் ஆடை அணியும் போது, அந்த விதமாக ஆடை அணிய உங்களை அனுமதிக்காத ஓர் உணர்வு உங்களுக்குள் இருக்கிறது. இதுவே ஆவியானவரின் வழிநடத்துதல், இது உங்களை தேவனுடைய குமாரனாக பட்டமளிக்கிற குறியீடு” (ரோமரின் ஜீவ-ஆய்வு , செய்தி 18, ப.. 242). ஜீவனின் உள்ளான உணர்வுக்காக அக்கறைப்படுவதன் மூலம் நாம் ஆவியானவரைப் பின்பற்றும்போது, ஆவியானவரைக் கொண்டிருக்காத நம்மைச் சுற்றியுள்ளவர்களிலிருந்து வித்தியாசமாக நாம் நகர்கிறோம், நடந்துகொள்கிறோம், ஏனெனில் மற்றவர்கள் உடைமையாக வைத்திருக்காத உள்ளிருக்கும் ஒரு மறைவான மற்றும் பரம்புதிரான மூலத்தால் நாம் ஊக்குவிக்கப்பட்டு வழிகாட்டப்படுகிறோம். இத்தகைய ஒரு வாழ்க்கை, நமக்குள் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத (அதரிசனமான) தேவனுடைய குமாரர்கள் என்ற குறியீட்டை நமக்கு அளிக்கிறது.

  • ஆவியானவரால் வழிநடத்தப்படுவதற்கு, நம் மனதை ஆவியின் மீது பொருத்துவதன் மூலம் நாம் ஆவியானவரின்படி நடந்தாக வேண்டும்—ரோ. 8:4, 6:

  • நம் மனதை மாம்சத்தின் மீது பொருத்தும் அல்லது நம் மனதை ஆவியின் மீது பொருத்தும் விருப்பத்தேர்வு நமக்கு உள்ளது

கர்த்தர் நம் ஆவிக்குள் வந்திருக்கிறார், நமக்கு ஓர் அற்புதமான தேர்வை நமக்கு அளித்துள்ளார். நாம் இரட்சிக்கப்படுவதற்கு முன்பு, நாம் நம் மாம்சத்தில் மட்டுமே வாழ முடிந்தது. இப்போது கர்த்தர் நமக்குள் வந்திருப்பதால், நம் இருத்தலுக்கான மற்றொரு ஊற்றின் மீது நம் மனதைப் பொருத்த நாம் தேர்ந்தெடுக்க முடியும்நம் கலந்திணைந்த ஆவி.

  • நாம் நம் மனதை நம் ஆவியின் மீது பொருத்துகையில், நம் ஆவிக்குள் இருக்கும் தேவனுடைய ஜீவனின் உணர்வைக் குறித்து நாம் உணர்வுள்ளவர்களாக ஆகிவிடுகிறோம்

நாம் நம் மனதை நம் ஆவியின் மீது பொருத்தும்போது, ஜீவனில் நம் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஆவியானவரின் வழிநடத்துதலை நம்மால் உணர இயல்கிறது.

  • நம் ஆவிக்குள் இருக்கும் ஜீவ உணர்வுக்கு நாம் கீழ்ப்படிகையில், நாம் தேவனுடைய குமாரர்களாக ஜீவனில் வளர்கிறோம்

முதற்பிறந்த குமாரனாகிய கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்தசாயலாக்கப்பட்ட பல குமாரர்களை உற்பத்திசெய்வதே தேவனுடைய பொருளாட்சியின் இலக்கு (ரோ. 8:29). நமக்குள் இருக்கும் கர்த்தருடைய வழிநடத்துதலின் இலக்கு,, நாம் அவருடைய முழு-வளர்ச்சியடைந்த குமாரர்களாக ஆகிவிடக்கூடுமாறு, நாம் தெய்வீக ஜீவனில் வளர்வதே ஆகும். பிள்ளைகளை (குழந்தைகளை) விட குமாரர்கள் ஜீவனில் அதிகமாக வெளியரங்கமாக்கப்படுகின்றனர். நம் மனித ஜீவனில் நாம் எவ்வளவு அதிகமாக வளர்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் மனித ஜீவனின் முழு வெளியாக்கமாக அபிவிருத்தியடைகிறோம். தெய்வீக ஜீவனுக்கும் இது பொருந்தும். தெய்வீக ஜீவனில் நாம் எவ்வளவு அதிகமாக வளர்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் தேவனுடைய ஜீவனை முழுவதுமாக வெளிக்காட்டுவதற்கு ஆவிக்குரிய குழந்தைப் பருவத்தைவிட்டு வளர்கிறோம்.

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: நாம் கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர விரும்பினால், உள்ளிருக்கும் ஆவியானவரின் உணர்வைப் பின்பற்ற நாம் கற்றாக வேண்டும். நாம் நம் வாழ்நாள் முழுவதும் ஆவிக்குரிய குழந்தைகளாகவே தொடர்ந்து இருக்க முடியும் அல்லது நாம் தேவனுடைய முதிர்ந்த குமாரர்களாக ஆகுவதற்கு வளர முடியும். நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதை மாத்திரம் அறிந்து நாம் திருப்தி அடையக்கூடாது (ரோ. 8:16). நாம் தேவனுடைய குமாரர்களாக ஆகுவதற்கு வளர்ந்தாக வேண்டும் (ரோ. 8:14). நாம் மறுபடிஜெநிப்பிக்கப்படுவதற்கு முன்பு, நாம் நம் மனித எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைப் பின்பற்றி, மனித ஜீவனிலும், மனித ஜீவனின்படியும் நம் வாழ்க்கையை வாழ்ந்தோம். இப்போது நாம் மற்றொரு ஜீவனால்தெய்வீக ஜீவனால் வாழக் கற்றாக வேண்டும். நம்மில் உள்ள ஆவியானவரே ஜீவ ஆவி (ரோ. 8:2). நாம் எவ்வளவு அதிகமாக ஆவியானவரைப் பின்பற்றுகிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் அதன் ஜீவ-பகிர்ந்தளித்தலைப் பெறுவோம். இதுவே ஜீவனில் வளர்வதற்கான வழி. இவ்விதமாக நாம் ஆவியானவரைப் பின்பற்றும்போது, நாம் முதிர்ச்சிக்கென்று வளர்வோம்.

சுவிசேஷ செயலாக்கம்: நீ யாருடைய குமாரன்? நீங்கள் தேவனுடைய பிள்ளையா அல்லது பிசாசின் பிள்ளையா? பாவத்தைப் பயிற்சிசெய்வது நடத்தையைப் பற்றிய ஒரு காரியம் அல்ல, மாறாக நாம் யாருடைய பிள்ளைகள் என்பதைப் பற்றிய ஒரு காரியம் ஆகும். எனவே, இது ஜீவன் மற்றும் சுபாவத்தைப் பற்றிய ஒரு காரியம் ஆகும். கர்த்தராகிய இயேசுவை உங்கள் ஜீவனாகப் பெற்று, அதன்மூலம் தேவனுடைய ஒரு பிள்ளையாக ஆகுவதற்கு நீங்கள் இந்த உறுதியான முடிவை ஒருபோதும் எடுக்கவில்லை எனில், நீங்கள் இயல்பாகவே, பிசாசின் ஒரு பிள்ளைதான் (யோவான் 8:44). நீங்கள் நல்ல ஒழுக்கம், நல்ல நடத்தை, ஓர் உயர் கல்வியுடன் கூடிய ஓர் உயர்ந்த கலாச்சாரம் ஆகியவற்றை உடைமையாய்க் கொண்டிருந்தாலும், நீங்கள் ஒருபோதும் தேவனுடைய ஜீவனைப் பெறவில்லை எனில், நீங்கள் இன்னும் பிசாசின் ஒரு பிள்ளையாகவே நிலைத்திருப்பீர்கள். தேவனுடைய வார்த்தையில் உள்ள சத்தியம், நீங்கள், உங்கள் இயற்கையான பிறப்பால், அக்கினிக் கடலின் நியாயத்தீர்ப்புக்காகக் காத்திருக்கும் பிசாசின் ஒரு பிள்ளை என்று புறம்பார்ந்த ரீதியில் உங்களிடம் பேசுகின்றது (யோவான் 8:44; மத். 3:7; 23:33). ஆகையால், “நீங்கள் புதிதாய்ப் பிறந்தாக வேண்டும்” (யோவான் 3:7) என்று வார்த்தை உங்களிடம் கூக்குரலிடுகிறது. புறம்பார்ந்த ரீதியில், வார்த்தை இந்தச் சத்தியத்தை அறிவிக்கின்றது, மேலும் தேவனுடைய ஒரு பிள்ளையாக அல்ல, மாறாக ஒரு பாவியாக இருப்பதற்காக உங்களைக் குற்றஞ்சாட்டி, உங்கள் மனச்சாட்சி உள்ளார்ந்த ரீதியில் சரியாக இப்போது சாட்சிபகிர்கின்றது. இங்குள்ள கேள்வி ஜீவனைப் பற்றிய ஒரு காரியம் என்பதால், இரட்சிப்பின் ஒரே வழி மற்றொரு ஜீவனுடன்—தேவனின் ஜீவன்—கூடிய ஒரு புதிய பிறப்பைப் பெறுவதே ஆகும். கர்த்தராகிய இயேசுவுக்குத் திறந்துக்கொடுங்கள், அவருடைய நாமத்தைக் கூப்பிடுங்கள், நீங்கள் ஒரு பாவி என்பதை அவரிடம் அறிக்கையிடுங்கள், மேலும் உங்களை தேவனுடைய பிள்ளையாக ஆக்குவதற்கு தேவனுடைய சாட்சாத்து ஜீவன் மற்றும் சுபாவத்தைக் கொண்டு உங்களை மறுபடிஜெநிப்பிக்கும்படி கர்த்தராகிய இயேசுவை ஜீவன்-தரும் ஆவியானவராகப் பெற்றுக்கொள்ளுங்கள். அப்போது உங்கள் மனச்சாட்சி உங்களைக் குற்றம்சாட்டுவதற்குப் பதிலாக, நீங்கள் தேவனுடைய ஒரு பிள்ளை என்பதற்கு சாட்சிபகிர உங்கள் ஆவி கிறிஸ்துவின் இந்த உள்வசிக்கும் ஆவியானவருடன் இணைந்துகொண்டு (ரோ. 8:16), தேவனை உங்கள் பிதா என்று அந்நியோனியமாய் நெருக்கமாகக் கூப்பிடுவதற்கு உங்களை அனுமதிக்கின்றது (ரோ. 8:15; கலா. 4:6).

மிக முக்கியக் காரியங்கள்: அவரது உள்ளார்ந்த கிரியை—நமக்குள் இருக்கும் கர்த்தரை அனுபவித்தலும், நம் ஆவியில் அவரது பேசுதலை இனம்கண்டு கொள்ளுதலும் (III.C.2.).

பின்புல வாசிப்பு: Life-study of Romans, Message 18.

REFERENCES: Life Lessons, Lessons 32, 34; Life-study of Romans, Messages 16, 18.