உயிர்த்தெழுந்து, பரமேறிய கிறிஸ்துவின் பரப்புதல்

பகுதி 10

✵பாடம் 01 – 09

பவுல் பெற்ற ஆணையின் உள்ளடக்கங்கள்

குறிக்கோள்: பவுல் தேவனிடமிருந்து பெற்ற சுவிசேஷ ஆணையைக் காண்பதற்கு.

பொருளடக்கம்: பவுலின் மூன்றாவது பயணத்தின் முடிவில், அவர் எருசலேமுக்குச் சென்றான், அங்கே அவன் யூதர்களின் உச்சநிலையான துன்புறுத்தலை அநுபவித்து, இறுதியில் ரோம காவலில் போய்முடிந்தான். எனினும், அவனது கைதும் விசாரணையும் அவன் கிறிஸ்துவைப் பற்றியும், அவன் தேவனிடமிருந்து பெற்றிருந்த ஆணையைப் பற்றியும் சாட்சிபகிர்வதற்கான ஒரு வாய்ப்பை அவனுக்கு வழங்கியது. ரோம ஆளுநர்களுக்கும் யூதர்களுக்குமான தன் வாதத்தில், பவுல் கர்த்தராகிய இயேசுவைப் பற்றியும், தேவன் தனக்கு அளித்திருந்த ஆணையைப் பற்றியும் சாட்சிபகிர்ந்தான். பவுல் தான் கிறிஸ்துவின் ஓர் ஊழியக்காரனாகவும், ஒரு சாட்சியாகவும் நியமிக்கப்பட்டிருந்ததாகவும், அவன் தனக்கு நான்கு மாபெரும் வி‌ஷயங்களைக் கொண்டு தேவனால் ஆணையிடப்பட்டிருந்ததாகவும் சாட்சிபகிர்ந்தான்: மக்கள் பாவங்களின் மன்னிப்பைப் பெற்று, தெய்வீக சுதந்தரத்தைப் பெறக்கூடுமாறு, அவர்களது கண்களைத் திறந்து, இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் அவர்களைத் திருப்புதல். இந்த நான்கு உருப்படிகளும், கிறிஸ்துவின் ஒரு பரலோக தரிசனத்தின் மூலமாக நாம் பெறும் நம் ஆணையின் உள்ளடக்கங்களாக இருந்தாக வேண்டும்.

பின்புலம்: மீண்டும் இந்தப் பாடத்தில், அப்போஸ்தலனாகிய பவுலுக்கான கர்த்தருடைய அழைப்பு மற்றும் ஆணை பற்றிய கதைகள் நம் கடிந்துபுத்திசொல்லுதலை விட இன்று சத்தமாகப் பேசுகின்றன. மற்றவர்களின் எடுத்துக்காட்டுகள், கர்த்தரைச் சேவிக்கும்படி ஆசைப்பட அவர்களை உற்சாகப்படுத்தும். நமக்கு ஓர் ஆணையாக ஆகிவிடும் ஒரு பரலோக தரிசனத்தைப் பார்ப்பதன் மூலமாக நாம் அனைவரும் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாகவும் சாட்சிகளாகவும் ஆகுவதற்கு முடியும்.

அதிகாரங்கள்: நடபடிகள் 21-26.

போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:

  • பவுலின் கைதும் விசாரணையும் அவன் கிறிஸ்துவைப் பற்றியும், அவன் தேவனிடமிருந்து பெற்றிருந்த ஆணையைப் பற்றியும் சாட்சிபகிர்வதற்கான ஒரு வாய்ப்பை அவனுக்கு வழங்கியது
  • பவுலின் மூன்றாவது பயணத்தின் முடிவில், அவர் எருசலேமுக்குச் சென்றான், அங்கே அவன் யூதர்களின் உச்சநிலையான துன்புறுத்தலை அநுபவித்து, இறுதியில் ரோம காவலில் போய்முடிந்தான்—அப். 21:15-17, 27-33

எருசலேமில் உள்ள சபையில் யூத மதத்தின் எதிர்மறையான தாக்கம் காரணமாக, யாக்கோபு பவுலை பழைய ஏற்பாட்டு நாசரேய விரதத்தில் வேறு நான்கு பேருடன் பங்கேற்கும்படி சம்மதிக்க வைத்தான் (அப். 21:18-26). எனினும், அவனது விரதம் முடிவடைவதற்கு முன்பு, பவுல் யூதர்களால் ஆலயத்தில் பிடித்துச்செல்லப்பட்டான், இவர்கள் அவனைக் கொல்ல முயன்றனர் (அப். 21:27-30). பவுல் ஒரு ரோம (நூற்றுக்கு) அதிபதியால் கைது செய்யப்பட்டதன் மூலம் யூதர்களிடமிருந்து காப்பாற்றப்பட்டான் (அப். 21:31-36). பவுல் எந்தத் தவறும் செய்திராத போதிலும்கூட, யூதர்களின் தயவைப் பெறுவதற்காகவும், லஞ்சம் பெறும் நம்பிக்கையுடனும்கூட, இந்த ஊழல் நிறைந்த ரோம ஆளுநர்கள் அவனைக் காவலில் வைத்திருந்தனர் (அப். 24:26-27). இறுதியில், தன் உயிரைக் காப்பாற்ற, பவுல் சீசரிடம் (இராயனிடம்) தன் வழக்கை முறையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது (அப். 25:6-12; 25:11, footnote 1; 26:32, footnote 2).

  • ரோம ஆளுநர்களுக்கும் யூதர்களுக்குமான தன் வாதத்தில், பவுல் கர்த்தராகிய இயேசுவைப் பற்றியும், தேவன் தனக்கு அளித்திருந்த ஆணையைப் பற்றியும் சாட்சிபகிர்ந்தான்—அப்போஸ்தலர் 21:3922:21; 22:3023:10; 26:129

கர்த்தராகிய இயேசு தன்னை எவ்வாறு இரட்சித்திருந்தார் என்பதற்கு சாட்சிபகிர்வதன் மூலம் எருசலேம் மக்களுக்கு முன்பாக பவுல் தன்னையே தற்காத்து வாதம் முன்வைத்தான் (அப். 21:39-22:21). மரித்தோரிலிருந்து கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப் பற்றி சாட்சிபகிர்வதன் மூலம் அவன் யூத சன்ஹெரின் முன் தன்னை  தற்காத்து வாதத்தை முன்வைத்தான் (அப். 22:30-23:10). இறுதியாக, பவுல் தன் பரலோக தரிசனத்தையும், தன் மனமாற்றத்தையும், தேவனிடமிருந்து பெற்ற தன் ஆணையையும் பற்றி சாட்சிபகிர்வதன் மூலம் ரோம ஆளுநர்களுக்கு முன்பாக தன்னையே தற்காத்து  வாதம் முன்வைத்தான் (அப். 26:1-29).

  • பவுல் தான் கிறிஸ்துவின் ஓர் ஊழியக்காரனாகவும், ஒரு சாட்சியாகவும் நியமிக்கப்பட்டிருந்தாக சாட்சிபகிர்ந்தான்—அப். 26:16
  • ஓர் ஊழியக்காரனாக, பவுல் கிறிஸ்துவை மற்றவர்களுக்கு ஊழியம்செய்ய தேவனுக்காக வேலைசெய்தான்—அப். 26:16

பவுல் நியமிக்கப்பட்டது “ஓர் ஊழியக்காரனாக மட்டுமல்லாமல், ஒரு சாட்சியாளராகவும்கூட. ஓர் ஊழியக்காரன் ஊழியத்திற்காக இருக்கிறான்; ஒரு சாட்சியாளர் சாட்சிக்காக இருக்கிறான். ஊழியம் பிரதானமாக வேலையுடன், ஓர் ஊழியர் என்ன செய்கிறார் என்பதுடன் தொடர்புடையது; சாட்சி அந்த நபருடன், ஒரு சாட்சி என்னவாக இருக்கிறார் என்பதுடன் தொடர்புடையது” (அப். 26:16, footnote 1).

  • ஒரு சாட்சியாளராக, பவுல் கிறிஸ்துவுக்கும், கிறிஸ்து செய்திருந்த அனைத்திற்கும் சாட்சிப்பகிர்ந்த ஒரு சாட்சியாளராக இருந்தான்—அப். 26:16; 1:8 மற்றும் footnote 3

சாட்சியாளர்கள் “வெறுமனே எழுத்துக்களில் உபதேசங்களைப் பிரசங்கிக்கிற பிரசங்கியார்களிடமிருந்து வேறுபடுகிற, ஜீவனில் உயிர்த்தெழுந்து, பரமேறிய கிறிஸ்துவின் ஒரு ஜீவிக்கும் சாட்சியை ஏந்துகிறவர்கள்” (அப். 1:8, footnote 3). “தம் நிறைவாக சபைகளைக் கட்டியெழுப்புவதற்காக தேவனுடைய இராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்படுமாறு தம்மையே பரப்புவதற்கான தம் பரலோக ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு, பரமேறிய கிறிஸ்து ஒரு பிரசங்கிக்கும் வேலையைச் செய்ய மனிதப் போதனையால் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு கூட்ட போதகர்களை அல்லாமல், மாம்சமாகி, சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்தெழுந்து, பரமேறிய கிறிஸ்துவின் ஒரு ஜீவிக்கும் சாட்சியைச் சுமந்த தம் ஒரு கூட்ட சாட்சியாளர்களை, இரத்தசாட்சிகளைப் பயன்படுத்த விரும்பினார் ” (அப். 23:11, footnote 4).

  • பவுல் யூத மக்களிடமும், புறவினத்தாரிடமும் அனுப்பப்பட்டான்—அப். 26:17-18
  • பவுல் தனக்கு நான்கு மாபெரும் வி‌ஷயங்களைக் கொண்டு தேவனால் ஆணையிடப்பட்டிருந்ததாக சாட்சிபகிர்ந்தான்தான்—அப். 26:18
  • மக்களின் கண்களைத் திறக்க—அப். 26:18; லூக். 4:18

“தேவனுடைய சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்களாகிய புதிய ஏற்பாட்டு யூபிலியின் ஆவிக்குரிய மற்றும் தெய்வீக ஆசீர்வாதங்களில் முதல் காரியம், விழுந்துபோனவர்கள் ஆவிக்குரிய மண்டலத்திலுள்ள தெய்வீக காரியங்களைக் காணுமாறு அவர்களின் கண்களைத் திறந்து, அவர்களை இருளிலிருந்து ஒளியிடம் திருப்புவதாகும். இந்தக் காரியங்களைக் காண்பதற்கு, ஆவிக்குரிய பார்வையும் தெய்வீக ஒளியும் தேவை. நம்மை இருளுக்குள் கொண்டுவந்த குறிப்பிட்ட சில செய்திகளுக்குச் செவிசாய்க்கும் அதோடு நம்மை ஒளிக்குள் கொண்டுவந்த மற்ற செய்திகளுக்குச் செவிசாய்க்கும் அனுபவம் நம்மில் பலருக்கு உண்டு. நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஊழியக்காரர், பாஸ்டர் அல்லது போதகர் வழங்கும் ஒரு பிரசங்கத்திற்குச் செவிசாய்க்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பிரசங்கத்திற்கு நீங்கள் எவ்வளவு அதிகமாக செவிசாய்க்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் இருளில் கொண்டுவரப்படுகிறீர்கள், மேலும் அனைத்தும் ஒளிபுகாததாக ஆகிவிடுகிறது. எனினும், நீங்கள் மற்றொரு செய்திக்குச் செவிசாய்க்கக்கூடும், மேலும் நீங்கள் எவ்வளவு அதிகமாக செவிசாய்க்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக தெய்வீக ஒளி உங்களில் பிரகாசிக்கிறது. நாள் விடிகிறது, உங்கள் கண்கள் திறக்கப்படுகின்றன, மேலும் நீங்கள் ஆவிக்குரிய காரியங்களைப் பார்க்க ஆரம்பிக்கிறீர்கள். இதுவே மக்களின் கண்களைத் திறக்கும் விதமான செய்தி” (Life-study of Acts​, Message 69, p. 600).

  • மக்களை இருளிலிருந்து ஒளியினிடமும், சாத்தானுடைய அதிகாரத்திலிருந்து தேவனிடமும் திருப்புவதற்கு—கொலோ. 1:13

“நடபடிகள் 26:18, கண்களைத் திறப்பதைப் பற்றி மட்டுமல்லாமல், இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும் திருப்பத்தைப் பற்றியும் பேசுகிறது. இந்தத் திருப்பத்தையே நாம் ஓர் இட மாற்றம் என்று குறிப்பிடுகிறோம். இருளைவிட்டு ஒளியினிடத்திற்குத் திரும்புவதென்றால், இருளிலிருந்து ஒளிக்குள் ஓர் இட மாற்றத்தைப் பெறுவதாகும், மேலும் சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்புவதென்றால் சாத்தானின் அதிகாரத்திலிருந்து தேவனுக்குள் இட  மாற்றப்படுவதாகும். என்னே ஒரு மாபெரும் இட மாற்றம் இது! இருளானது பாவம் மற்றும் மரணத்தின் ஓர் அடையாளம்; ஒளியானது, நீதி மற்றும் ஜீவனின் ஓர் அடையாளம் (யோவான் 1:4; 8:12). தேவனிடம் இட மாற்றப்படுவதென்றால், தேவனுடைய அதிகாரத்திற்கு, அதாவது ஒளிக்கு உரியதான தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு இட மாற்றப்படுவது என்று பொருள். முன்பு நாம் இருளிலும், சாத்தானின் அதிகாரத்தின் கீழும் இருந்தோம். ஆனால் நாம் இருளிலிருந்தும் சாத்தானின் அதிகாரத்திலிருந்தும் ஒளிக்குள்ளும் தேவனுக்குள்ளும் இட மாற்றப்பட்டிருக்கிறோம். இருள் என்பது உண்மையில் சாத்தானின் அதிகாரமே. நாம் இருளில் இருக்கும்போதெல்லாம், நாம் சாத்தானிய அதிகாரத்தின் கீழ் இருக்கிறோம். ஒளி என்பது தேவன் தாமே (1 யோ. 1:5). ஆகையால், நாம் ஒளியில் இருக்கும்போது, நாம் தேவனில் இருக்கிறோம். சாத்தானும் இருளும் ஒன்றாயிருப்பது போலவே, தேவனும் ஒளியும் ஒன்றே. இருளிலிருந்து ஒளிக்கு மாற்றப்படும் இட மாற்றமே நாம் பெற முடியக்கூடிய அதி மாபெரும் இட மாற்றம்” (Life-study of Acts​​, Message 69, pp. 600–601).

  • பாவங்களின் மன்னிப்பு—அப். 10:43; எபே. 1:7; கொலோ. 1:14

“26:18 இல், நம் கண்கள் திறக்கப்பட்டு, நாம் இருளிலிருந்தும் சாத்தானின் அதிகாரத்திலிருந்தும்,  ஒளியினிடமும் தேவனிடமும் திரும்பும் ஒரு திருப்பத்தை, ஓர் இட மாற்றத்தைப் பெறும் போது, நாம் பாவங்களின் மன்னிப்பைப் பெறக்கூடும். பாவங்களின் மன்னிப்பே, புதிய ஏற்பாட்டு யூபிலியின் சகல ஆசீர்வாதங்களுக்கும் அடித்தளம். பாவங்களின் உண்மையான மன்னிப்பு, கண்களைத் திறத்தல் மற்றும் சாத்தானிடமிருந்து தேவனிடம் இட மாற்றப்படுதல் மூலமாக வருகிறது. எனவே, பாவங்களின் முழுமையான மற்றும் பரிபூரணமான மன்னிப்பைப் பெறுவதற்கு, நம் கண்கள் திறக்கப்பட்டு, சாத்தானின் அதிகாரத்திலிருந்து தேவனிடம் இட மாற்றப்படும் ஓர் இட மாற்றத்தை நாம் பெற வேண்டும்” (Life-study of Acts​, Message 69, pp. 601–602).

  • தெய்வீக சுதந்தரம்—கொலோ. 1:12

“நம் கண்கள் திறக்கப்பட்டு, நாம் சாத்தானின் அதிகாரத்திலிருந்து தேவனிடம் இட மாற்றப்பட்டதன் விளைவாக, எதிர்மறையான பக்கத்திலே நாம் பாவ மன்னிப்பைப் பெறுவது மட்டுமல்லாமல், நேர்மறையான பக்கத்திலே நாம் தெய்வீக சுதந்தரிப்பையும்கூட பெறுகிறோம்.. இந்த தெய்வீகச் சுதந்தரம் என்பது, தம் மீட்கப்பட்ட மக்களுக்காக தம்மிடமுள்ள எல்லாவற்றுடன், தாம்செய்திருக்கிற எல்லாவற்றுடன், தாம் செய்யப்போகிற எல்லாவற்றுடனான மூவொரு தேவன் தாமே. இந்த மூவொரு தேவன் சகலத்தையும்-உள்ளடக்கிய கிறிஸ்துவில் ஊனுரு கொண்டுள்ளார் (கொலோ. 2:9), இவரே பரிசுத்தவான்களுக்கு அவர்களது சுதந்தரமாக ஒதுக்கப்பட்ட பங்காயிருக்கிறார் (கொலோ. 1:12). பரிசுத்தவான்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பரிசுத்த ஆவியானவரே, இந்தத் தெய்வீகச் சுதந்தரத்தின் (ரோ. 8:23; எபே. 1:13-14) முன்ருசியாகவும், முத்திரையாகவும், அச்சாரமாகவும், உத்தரவாதமாகவும் இருக்கிறார், இதை நாம் தேவனுடைய புதிய ஏற்பாட்டு யூபிலியில் ஒரு முன்ருசியாக இன்று பகிர்ந்துகொள்கின்றோம், அனுபவித்துமகிழ்கின்றோம் அதோடு வருகின்ற யுகத்திலும் நித்தியத்திற்கும் இதை முற்றும்முடிய பகிர்ந்துகொள்வோம், அனுபவித்துமகிழ்வோம் (1 பேது. 1:4). நடபடிகள் 26:18 இல் உள்ள சுதந்தரம் ஒரு பரலோக மாளிகை என்று விசுவாசிகளுக்குப் பொதுவாக போதிக்கப்படுகிறார்கள். இதுதான் ஓர் இளம் கிறிஸ்தவனாக எனக்குச் சொல்லப்பட்டது. ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வேதாகமத்தை ஆய்வுசெய்த பிறகு, இந்தச் சுதந்தரம் பதனிடப்பட்ட மூவொரு தேவனின் ஊனுருவாகிய கிறிஸ்துவே என்பதை நான் கற்றுக்கொண்டேன். இந்தக் கிறிஸ்துவே பரிசுத்தவான்களின் பங்கு” (Life- study of Acts​​, Message 69, p. 602).

  • இந்த நான்கு உருப்படிகளும், கிறிஸ்துவின் ஒரு பரலோக தரிசனத்தின் மூலமாக நாம் பெறும் நம் ஆணையின் உள்ளடக்கங்களாக இருந்தாக வேண்டும்—அப். 26:18-19

“நாம் தேவனுடைய திட்டத்தை நிஜமாகவே பார்த்து கிறிஸ்துவல்லாத காரியங்களில் இருந்து கிறிஸ்துவினிடத்திற்கே நிஜமாகவே மனமாற்றப்பட்டு இருக்கிறோம் எisல், நாம் பார்த்து அனுபவித்திருப்பது நமக்கான ஓர் ஆணையை உற்பத்திப்பண்ணும், உருவாக்கும். இந்தத் தரிசனம் நாம் அவரைக்குறித்து பார்த்திருப்பதின்படி நாம் கிறிஸ்துவுக்காக செயல்படும்படி, வேலை செய்யும்படி, கிறிஸ்துவை சேவிக்கும்படி செய்யும்….மக்களைத் தொடர்புகொள்ளும்படி உங்களுக்கு சக்தியூட்டுகின்ற ஏதோவொன்று உங்களுக்குள் இருக்கும். நாம் மற்ற விசுவாசிகளைத் தொடர்புகொள்ளும் போது, நாம் அறிந்துள்ள கிறிஸ்துவைப் பற்றி அவர்களிடம் ஐக்கியங்கொள்ளுவோம். நம் ஆணையும் ஊழியமும் பரலோக தரிசனத்திலிருந்து வெளிவருகிறது. எவ்வளவாய் நீங்கள் கர்த்தரை ஜெபத்தில் தொடர்பு கொள்ளுகிறீர்களோ, அவ்வளவாய் நீங்கள் பல அவிசுவாசிகளுக்காகப் பாரப்படுவீர்கள்….உங்கள் உள்ளான பாரத்தின் ஒரு விளைவாக, சுவிஷசம் பிரசங்கிப்பது உங்களுக்கு எளிதாக இருக்கும்” (A Young Man in God’s Plan​, Chapter 4, p. 34). நம் ஆணையின் இந்த உருப்படிகள் சகலத்தையும்-உள்ளடக்கியவை. “முதலாவது, நாம் மற்றவர்களின் கண்களைத் திறக்க வேண்டும்….உங்களிடம் பரலோக தரிசனம் இருக்கும் போது, நீங்கள் சொல்வன்மை இல்லாமல் பேசினாலும்கூட நீங்கள் மற்றவர்களின் கண்களைத் திறப்பீர்கள்….நீங்கள் பேசும் காரியமும் மக்களைத் திருப்ப வேண்டும்….நீங்கள் மக்களை இருளிலிருந்து ஒளியினிடமும் சாத்தானுடைய அதிகாரத்திலிருந்து தேவனிடமும் திருப்ப வேண்டும்….நேர்மறையான பக்கத்தில், மக்கள் தேவனிடமிருந்து நிஜமான பாவ மன்னிப்பை உணர்ந்தறிவதற்கு உதவப்பட வேண்டும், அதோடு அவர்கள் தங்கள் பங்காக தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்ளவும் வேண்டும்” (​A Young Man in God’s Plan​, Chapter 4, pp. 35–36).

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: இந்தப் பூமியை எவ்வளவு பெரிய ஓர் ஆவிக்குரிய இருள் மூடுகிறது என்பதைக் கொண்டு இளம் வாலிபர்களுக்குக் கருத்துப்பதிவு ஏற்படுத்தப்பட வேண்டும் (மத். 6:23; லூக். 1:78-79; யோவான் 3:19; 12:46). நாம் எந்தப் பக்கம் திரும்பினாலும், தேவன் தங்களுக்கு எவ்வளவு அற்புதமாக இருக்க முடியும் என்பதைப் பற்றிய எந்த அறிவும் இல்லாமல், இருளில் தங்கள் வாழ்க்கையை வாழும் மக்களை நாம் காணலாம். இதை நாம் எவ்வளவு அதிகமாகப் பார்க்கிறோமோ, அவ்வளவு அதிகமாக மற்றவர்களை இருளிலிருந்து ஒளியினிடத்திற்குத் திருப்புவதற்கு நாம் பாரப்படுத்தப்படுவோம் (அப். 26:18). எனினும், இது நடப்பதற்கு, நாம் தாமே இந்த ஒளியில் இருந்தாக வேண்டும் (1 யோ. 1:7; மத். 5:14-16)! ஒளியில் இருப்பவர்களால்தான், இருளில் இருப்பவர்களுக்கு ஒளியைப் பற்றி சாட்சிபகிர முடியும். கர்த்தரை விட்டு வெகு தொலைவில் நாம் தாமே இருளில் இருந்தால், எவ்வாறு மற்றவர்களுக்கு நாம் எந்த உதவியாகவும் இருக்க முடியும்? பவுல் தான் கிறிஸ்துவின் ஒளியை முழுவதுமாகப் பெற்றிருந்ததால், மற்றவர்களுக்காக பாரப்படுத்தப்பட்டான், மேலும் இந்த ஒளி அவனுடைய சுவிசேஷமாக ஆயிற்று (2 தீமோ. 1:8–11). அவர் வெறுமனே மக்களுக்குப் போதனைகளை மட்டும் பேசவில்லை; அவன் அவர்களது இருண்ட சூழ்நிலைக்குள் கிறிஸ்துவை ஒளியாகக் கொண்டுவந்தான். இருளில் இருக்கும் மக்களுக்கு ஒளி கொண்டுவரப்படும் போது, அவர்கள் உடனடியாக அதை உணர்ந்து, அவர்கள் ஒளியை நோக்கி திரும்ப ஆரம்பிக்கிறார்கள். இது (ஒரு பார்வையற்ற நபரின் வாழ்க்கையில் மிகப்பெரிய தருணமாக, அவன் பார்வை பெறும் தருணமே இருக்கக்கூடும் என்பது போலவே) ஒரு நபரின் வாழ்க்கையின் மிகப்பெரிய தருணத்தைக் குறிக்கிறது. நாம் கிறிஸ்துவை வார்த்தையிலும், நம் ஆவியிலும் தொடர்பு கொள்ளும்போது, நாம் தாமே அவரை ஒளியாகப் பெறுகிறோம் (சங். 119:130. கர்த்தரை ஒளியாகப் பெற நாம் எவ்வளவு அதிகமாகப் பயிற்சி செய்கின்றோமோ, அவ்வளவு அதிகமாக நாம் இருளில் இருப்பவர்கள் கிறிஸ்துவைப் பெறுவதற்கு உதவ விரும்புவோம். இந்த இருண்ட தலைமுறைக்கு நாம் அனைவரும் ஒளிச்சுடர்களாக ஆகிவிடுவோமாக!

சுவிசேஷ செயலாக்கம்: ஆவிக்குரிய ரீதியாகப் பார்த்தால், எல்லா மனிதர்களும் (தேவனையோ அல்லது தங்களையோ அறியாமல்) குருடர்களாகவும், (தேவனைப் பார்க்கவோ அல்லது தேவனுக்குரிய விஷயங்களைப் புரிந்துகொள்ளவோ இயலாமல், எந்த மகிழ்ச்சியும் இல்லாத பரிதாபகரமான அந்தகாரத்தில் தக்கவைக்கப்பட்டு) இருளிலும், (பாவங்களைச் செய்வதை நிறுத்த இயலாமலும், மரணத்தை எதிர்த்து நிற்க திராணியில்லாமலும்) சாத்தானின் வல்லமை மற்றும் கட்டுப்பாட்டின் கீழும் பிறக்கிறார்கள், அப்படியிருக்க பிசாசுக்கும் அவனுடைய தூதர்களுக்கும் ஆயத்தம்பண்ணப்பட்ட சேருமிடத்தை—அக்கினிக்கடல்—சுதந்தரிக்கும்படி அழிவுக்கு விதிக்கப்பட்டிருக்கின்றனர் (மத். 25:41). எனவே, சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்களைக் கேள்விப்படுவதற்கான ஒரு மாபெரும் தேவை மனிதர்களுக்கு உள்ளது. “மனிதன் சுவிசேஷத்தைக் கேள்விப்பட்டு, இயேசுவில் விசுவாசிக்கும்போது, அவனுடைய கண்கள் பரிசுத்த ஆவியானவரால் திறக்கப்படுகின்றன. அப்போது அவன் தேவனையும், ஜீவனையும், தன்னையும், இரட்சகரையும் அறிந்துகொள்ள இயல்கிறான். நாம் இருளில் பிறந்தாலும், நாம் சுவிசேஷத்தை விசுவாசித்து, கிறிஸ்துவின் ஜீவனைப் பெறும்போது, நாம் ஒளியிடம் திருப்பப்படுகிறோம். தேவனுடைய சுவிசேஷம் ஒளியாயிருக்கிறது, ஏனெனில் தேவன் ஒளியாயிருக்கிறார், மேலும் கிறிஸ்துவின் ஜீவனும் ஒளியாயிருக்கிறது. நம்மிடம் நமக்குள் ஒளி இருக்கும்போது, நாம் தெளிவாகப் பார்க்க இயல்கிறோம், மேலும் நமக்கு மகிழ்ச்சியும் இருக்கிறது….சாத்தானின் வல்லமையிலிருந்து[ம் நாம்] விடுவிக்கப்பட்டுள்ளோம். சிலுவையில் தம் மரணத்தின் மூலமாகக் கிறிஸ்து மரணத்தின் வல்லமையை உடையவனாயிருந்த பிசாசை அழித்தார். ஒருவன் கிறிஸ்துவிடம் திரும்பும்போது, அவன் சாத்தானின் வல்லமையிலிருந்து தேவனுக்கென்று விடுதலையாக்கப்படுகிறான் அதோடு பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிக்கப்படுகிறான்” (Gospel Outlines, subject one hundred thirty-six, The Blessings of the Gospel, pp. 264–265). இன்று, கர்த்தர் உங்கள் கண்களைத் திறக்கவும், உங்களை இருளிலிருந்து ஒளியிடம் திருப்பவும், சாத்தானின் அதிகாரத்திலிருந்து தேவனிடம் திருப்பவும், உங்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிக்கவும் அவரை அனுமதியுங்கள்.

மிக முக்கியக் காரியங்கள்: ஒரு கனிநிறைந்த சுவிசேஷ வாழ்க்கையை வாழ்தல் (III.G.).

பின்புல வாசிப்பு: Life-study of Acts, Message 69; A Young Man in God’s Plan, Chapter 4.

REFERENCES: Life-study of Acts, Message 51; Message 52, pp. 455–457; Message 53, pp. 460–463; Messages 56–60; 62–69; A Young Man in God’s Plan, Chapter 4; Acts 23:11, footnote 4; Acts 26:16, footnote 1; Acts 1:8, footnote 3.