உயிர்த்தெழுந்து, பரமேறிய கிறிஸ்துவின் பரப்புதல்
பகுதி 10
✵பாடம் 01 – 09
எருசலேமிலிருந்து வெளிநோக்கிய பரப்புதல்
குறிக்கோள்: சுவிசேஷப் பிரசங்கித்தல் மூலமான இந்த உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் பரப்புதல் முழு பூமியையும் சென்றடைய எவ்வாறு எருசலேமிலிருந்து வெளிநோக்கிப் பரவியது என்பதைக் காண்பதற்கு.
பொருட்சுருக்கம்: அப்போஸ்தலர்கள் இந்த உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைப் பரப்பும் தங்கள் பரப்புதலை எருசலேமில் தொடங்கினர். அங்கிருந்து, இந்த உயிர்த்தெழுந்த கிறிஸ்து சிதறடிக்கப்பட்ட பரிசுத்தவான்கள் மூலமாகவும், அப்போஸ்தலர்களின் ஊழியத்தின் மூலமாகவும் யூதேயா மற்றும் சமாரியாவுக்குப் பரப்புதல் செய்யப்பட்டார். அதன்பின் இந்தப் பரப்புதல் பவுலின் ஊழியத்தின் மூலமாகப் புறவினத்தாரிடம் பரவியது, இறுதியில் அது பூமியின் கடையாந்திரத்தைச் சென்றடைந்தது. அல்லேலூயா, இந்த உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் பரப்புதல் இன்று இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, நாமும் அதில் ஒரு பகுதியாக இருக்க முடியும்!
பின்புலம்: முந்தைய பாடங்களில் உள்ளதைப் போலவே, சித்திரங்கள் விலைமதிப்பற்றவையாக இருக்க முடியும். இன்றும்கூட உலகம் முழுவதும் கர்த்தரின் நகர்வு பற்றிய பல கதைகள் உள்ளன. மீட்டுத்திருப்புதலில் நமக்கு, சுவிசேஷத்தின் பரவுதலைப் பற்றிய அறிக்கைகளை அளிக்கும் வெளியீடுகள் உள்ளன. உயிர்த்தெழுந்து, பரமேறிய கிறிஸ்து அப்போஸ்தலர்களின் காலத்தின் போது தம்மையே பரப்புதல் செய்தார், மேலும் நாம் அவருடன் நம்மையே இணைத்துக்கொள்வதன் மூலம், அவர் இன்று இன்னும் பரப்புதல் செய்துகொண்டிருக்கிறார். ஆரம்பகால அப்போஸ்தலர்களைப் போலவே நாமும் கிறிஸ்துவின் பரப்புதலில் இன்னும் பங்குகொள்ள முடியும்.
அதிகாரம்: நடபடிகள் 7.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
நடபடிகள், உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் பரப்புதல் பற்றிய ஒரு புத்தகம். தம் பரமேறுதலுக்கு முன் கர்த்தர் அப்போஸ்தலர்களுக்கு, இந்தப் பரப்புதலை எருசலேமிலிருந்து தொடங்கி முன்னெடுத்துச் செல்லவும், அங்கிருந்து யூதேயா மற்றும் சமாரியாவுக்கும், உச்சநிலையாகப் பூமியின் கடையாந்திரத்திற்கும் பரவச் செய்யவும் கட்டளையிட்டார் (அப். 1:8). இப்படித்தான் அப்போஸ்தலர்கள் இந்தப் பரப்புதலை முன்னெடுத்துச் சென்றனர். அவர்கள் பெந்தெகொஸ்தே நாளின் போது எருசலேமில் பரப்புதலைத் தொடங்கி, அங்கிருந்து பரவி இறுதியில் பூமியின் கடையாந்தரத்தைச் சென்றடைந்தனர். நடபடிகள் புத்தகம், இந்தப் பரப்புதல் எவ்வாறு பரவியது என்பதைப் பற்றிய கதையாகும். அது, சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது எவ்வாறு என்று உபதேசரீதியாக நமக்குச் சொல்வதில்லை; மாறாக, கிறிஸ்துவின் பரப்புதல் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்பட்டது என்பதை அப்போஸ்தலர்களின் உதாரணத்தின் மூலம் நமக்குக் காட்டுகிறது. உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் பரப்புதல் எவ்வாறு எருசலேமிலிருந்து முழு பூமிக்கும் பரவச் செய்யப்பட்டது என்பதைப் பற்றிய ஒரு சித்திரத்தை முன்வைக்க இந்தக் கதைகளில் சிலவற்றை ஒரு சுவாரஸ்யமான முறையில் சொல்ல தயங்க வேண்டாம்.
- அப்போஸ்தலர்கள் இந்த உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைப் பரப்பும் தங்கள் பரப்புதலை எருசலேமில் தொடங்கினர்—அப். 1:1-2, 8
பரிசுத்த ஆவியானவரின் வெளியூற்றுதலுக்காக எருசலேமில் காத்திருக்கும்படி கர்த்தர் அப்போஸ்தலர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார் (அப். 1:5, 8). எனினும், சீஷர்கள் செயலற்ற நிலையில் காத்திருக்கவில்லை. அவர்கள் பத்து நாட்கள் முழுவதும் ஒன்றாகச் சேர்ந்து செலவிட்டு, ஒருமனதில் ஜெபித்தனர் (அப். 1:14). நிச்சயமாகவே அவர்கள் ஆவியானவரின் வாக்களிக்கப்பட்ட வெளியூற்றுதலுக்காகவும், கிறிஸ்துவின் பரப்புதலுக்காகவும் ஜெபித்துக்கொண்டிருந்தனர். பத்து நாட்களின் முடிவின் போது, பெந்தெகொஸ்தே நாளிலே, ஆவியானவர் சபை மீது பொழிந்தருளப்பட்டு, இந்தப் பரப்புதல் தொடங்கியது (அப். 2:1-4, 14).
- பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, பெந்தெகொஸ்தே நாளில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தான், அப்போது சுமார் மூவாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டனர்—அப். 2:14, 40-41
பேதுரு, பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, மற்ற பதினொரு அப்போஸ்தலர்களுடன் சேர்ந்து நின்று, பெந்தெகொஸ்தே நாளில் எருசலேமில் ஒரு திரளான கூட்டத்திற்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தான், அப்போது சுமார் மூவாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் பெற்றனர்.
- பேதுரு தேவாலயம் அருகே ஒரு சப்பாணியைக் குணப்படுத்திய பிறகு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தான், அப்போது சுமார் ஐயாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டனர்—அப். 3:1–8, 12; 4:4
சுவிசேஷம் பிரசங்கித்தலுக்கு அடையாளங்களும் அற்புதங்களும் துணைபோயின (அப். 2:43). ஒரு சமயம் பேதுரு பிறவிலேயே சப்பாணியாய் இருந்து வந்திருந்த அதோடு நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாக இருந்த ஒரு மனிதனை தேவாலய வாசல் அண்டையிலே குணப்படுத்தினான் (அப். 3:1-8, 12). இது ஆச்சரியமடைந்த யூதர்களின் ஒரு பெரிய கூட்டத்தை ஒன்றிணைத்தது, அப்போது பேதுரு அவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிப்பதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். அந்த நாளில், சுமார் ஐயாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் பெற்றனர்.
- புதிய விசுவாசிகள் அப்போஸ்தலர்களின் போதனையிலும், ஐக்கியத்திலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள், மேலும் அவர்களது சாட்சியின் மூலமாக நாளுக்கு நாள் புதியவர்கள் இரட்சிக்கப்பட்டு, சபையில் சேர்க்கப்பட்டனர்—அப். 2:42-47; 5:14
கிறிஸ்துவின் பரப்புதல் அப்போஸ்தலர்களால் மட்டுமல்லாமல், எருசலேமில் உள்ள சகல பரிசுத்தவான்களாலும் முன்னெடுக்கப்பட்டது. இது பெரும் திரளான மக்கள் கூட்டத்திற்கு மாபெரும் சுவிசேஷ செய்திகள் மூலம் மட்டுமல்லாமல், பரிசுத்தவான்களின் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் தங்கள் தினசரி வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்துக்காட்டப்படும் பரிசுத்தவான்களின் சாட்சி மூலமும் பரவச் செய்யப்பட்டது. புதியவர்கள் இரட்சிக்கப்பட்டு, சபையில் “நாளுக்கு நாள் (அநுதினமும்)” சேர்க்கப்பட்டனர் என்று வார்த்தை நமக்குச் சொல்கிறது (அப். 2:47). நாம் அப்போஸ்தலர்களாக இல்லாவிட்டாலும்கூட, நம் தினசரி வாழ்க்கையில் கிறிஸ்துவை மற்றவர்களுக்கு வெறுமனே வழங்குவதன் மூலம் நாம் இந்த வகையான பரப்புதலில் பங்கேற்க முடியும்.
- அப்போஸ்தலர்கள் தினமும் இடைவிடாமல் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தனர், அப்போது சீஷர்களின் எண்ணிக்கை பெருகியது—அப். 5:42-6:1, 7
நாம் ஒருமனதில் ஜெபிக்கவும், அப்போஸ்தலர்களின் போதனையிலும், ஐக்கியத்திலும் தரித்திருக்கவும், சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும் உண்மையுள்ளவர்களாக இருந்தால், கர்த்தர் நிச்சயமாகவே மக்களை சபையில் சேர்ப்பார்.
- எருசலேமிலிருந்து இந்தப் பரப்புதல், எருசலேமிலிருந்து சிதறடிக்கப்பட்ட பரிசுத்தவான்கள் மூலமாகவும், அப்போஸ்தலர்களின் ஊழியத்தின் மூலமாகவும் யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய நாடுகளுக்குப் பரவியது.
எருசலேமில் உள்ள சபை வளர்ந்து, பரிசுத்தவான்களின் எண்ணிக்கை பத்தாயிரமாக பெருகியபோது, இந்தச் சூழ்நிலை மிகவும் செழிப்பாகத் தோன்றியது. எனினும், எருசலேமில் தங்கியிருப்பதில் கர்த்தர் திருப்தியடையவில்லை. அவர் தம் பரமேறுதலுக்கு முன்பு தம் சீஷர்களுக்குக் கட்டளையிட்டிருந்தது போல், அவர் சுற்றியுள்ள மாகாணங்களுக்கும், பூமியின் மற்ற பகுதிகளுக்கும் தம்மையே பரப்புதல்செய்ய விரும்பினார். அவரது இறையாண்மையின் மூலமாக ஒரு சூழ்நிலை ஏற்பட்டது, இது சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி தேசம் முழுவதும் பரிசுத்தவான்களைச் சிதறடித்தது.
- எருசலேமில் உள்ள சபைக்கு எதிரான துன்புறுத்தல் காரணமாக, பரிசுத்தவான்கள் இந்தச் சுற்றியுள்ள பகுதிகள் எங்கும் சிதறடிக்கப்பட்டனர், அப்போது அவர்கள் சென்ற இடமெல்லாம், அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தனர்—அப். 8:1, 4
எருசலேமில் உள்ள சூழ்நிலை மிகவும் பிரகாசமாகத் தோன்றிய போதுதான், ஸ்தேவான் இரத்தசாட்சியாக்கப்பட்டான், மேலும் எருசலேமில் இருந்த சபைக்கு எதிராக ஒரு மாபெரும் துன்புறுத்தல் ஏற்பட்டது. அப்போஸ்தலர்களைத் தவிர, பரிசுத்தவான்கள் அனைவரும் எருசலேமிலிருந்து யூதேயா, சமாரியா பிராந்தியங்கள் முழுவதும் சிதறடிக்கப்பட்டுப்போனார்கள் என்று நடபடிகள் நமக்குச் சொல்லும் அளவிற்கு இந்தத் துன்புறுத்தல் அவ்வளவு தீவிரமானதாக இருந்தது (அப். 8:1). இது சபைக்கு ஒரு மாபெரும் அடியாகத் தோன்றியது; “சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷ வசனத்தைப் பிரசங்கித்தார்கள்” என்பதால், உண்மையில் இன்னும் கூடுதலாகத் தம்மையே பரப்புதல் செய்வதற்கான கர்த்தரின் இறையாண்மையால்தான் இந்த அடி உண்டாயிருந்தது (அப். 8:4). மேலும், இந்தச் சிதறடித்தல் இருந்தபோதிலும், எல்லா பரிசுத்தவான்களும் துன்புறுத்தல் மூலமாக வெளியே துரத்தப்பட்டாலும்கூட எருசலேமில் உள்ள சபை தொடர்ந்து வளர்ந்து செழித்தோங்கியதை நாம் நடபடிகளில் பின்னர் காண்கிறோம் (அப். 21:20). கர்த்தர் நம்மை வைக்கும் சூழ்நிலைகள் அனைத்தும், சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கான வாய்ப்பை நமக்கு வழங்குவதற்காக அவரால் இறையாண்மையாய் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
- எருசலேமில் உள்ள சபையில் ஒரு முன்னாள் உதவிக்காரனாக இருந்த பிலிப்பு சமாரியாவிலும், ஆசோத்து முதல் செசரியா வரையிலான கடற்கரை எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தான்—அப். 8:5, 40
பரிசுத்தவான்களுக்கு உணவு பரிமாறுவதற்காக ஓர் உதவிக்காரனாக தெரிந்துகொள்ளப்பட்ட, எருசலேமில் உள்ள ஏழு சகோதரர்களில் பிலிப்புவும் ஒருவனாக இருந்தான். எருசலேமை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட பிறகு, அவன் சமாரியர்களுக்கும், எத்தியோப்பிய அண்ணகனுக்கும், ஆசோத்து முதல் யூதேயாவின் தலைநகரான செசரியா வரையிலான இஸ்ரயேலின் அனைத்து கடற்கரை நகரங்களுக்கும் சுவிசேஷத்தைக் கொண்டுவந்தான்.
- யூதேயா, கலிலேயா மற்றும் சமாரியா முழுவதும் சுவிசேஷப் பிரசங்கம் அப்போஸ்தலர்களின் ஊழியத்தால் பலப்படுத்தப்பட்டது—அப். 8:14-16; 9:31-32
கர்த்தர் வாக்குத்தத்தம் செய்திருந்தபடியே இந்த உயிர்த்தெழுந்த கிறிஸ்து சமாரியாவில் பரப்புதல் செய்யப்பட்டார் (அப். 1:8). எனினும், யூதர்கள் பாரம்பரியமாக சமாரியர்களை இழிவாகக் கருதியிருந்தனர் அதோடு அவர்களுடன் ஒருபோதும் எந்த உறவும் வைத்திருக்கவில்லை (யோவான் 4:9). இந்தப் புதிய சமாரிய விசுவாசிகளுக்கு என்ன நடக்கும்? அவர்கள் சபையின் பகுதியாக யூத விசுவாசிகளால் ஏற்றுக்கொள்ளப்படுவார்களா? இது, சமாரியர்களிடம் சுவிசேஷம் பரவுவதற்கு இத்தகைய ஒரு வரலாற்று நகர்வாக இருந்ததால், எருசலேமில் உள்ள அப்போஸ்தலர்கள் சமாரியர்களுக்காக ஜெபிக்கவும், அவர்களது இரட்சிப்பை உறுதிப்படுத்தவும் பேதுருவையும் யோவானையும் சமாரியாவுக்கு அனுப்பினார்கள். இது சமாரியாவில் உள்ள சபையைப் பலப்படுத்தியது அதோடு அவர்கள் சபையில் சேர்க்கப்படுவதை உறுதிப்படுத்தியது. சிதறடிக்கப்பட்ட பரிசுத்தவான்களின் பிரசங்கித்தல் மூலமாக இரட்சிக்கப்பட்டிருந்த, யூதேயா, கலிலேயா மற்றும் சமாரியா முழுவதும் உள்ள புதிய விசுவாசிகள் அனைவருக்கும்கூட அப்போஸ்தலர்கள் ஊழியம்செய்தனர். இவ்விதத்தில், சபைகள் பலப்படுத்தப்பட்டு கட்டியெழுப்பப்பட்டன (ஒப். அப். 9:31-32).
- இந்தப் பரப்புதல் புறவினத்தாரையும் சென்றடைந்தது—அப். 1:8; 10:1, 24, 46; 11:19-23
சுவிசேஷம் புறவினத்தாரைச் சென்றடையும் என்று தேவனுடைய வார்த்தையில் பல தீர்க்கதரிசனங்கள் இருந்தன (ஆதி. 22:18; 26:5; ஏசா. 11:10; 42:1, 7; 49:6; எரே. 4:2; மீகா 4:2), மேலும் கர்த்தர் தம் பரப்புதலை “பூமியின் கடையாந்திரமும் (கடைசிபரியந்தமும்)” வரை முன்னெடுத்துச் செல்லும்படி அப்போஸ்தலர்களுக்குக் குறிப்பாகக் கட்டளையிட்டிருந்தார் (அப். 1:8). எனினும், யூதர்களின் கலாச்சார மற்றும் மத பின்புலத்தின் காரணமாக, அவர்கள் புறவினத்தார்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க மிகவும் தயங்கினார்கள். எனவே, கொர்நேலியுவின் வீட்டிற்கு சுவிசேஷத்துடன் செல்ல விருப்பமுள்ளவனாக பேதுருவை ஆக்குவதற்காக அவனுக்குக் கர்த்தர் ஒரு தரிசனத்தை மூன்று முறை அனுப்ப வேண்டியிருந்தது (பாடம் 3 ஐப் பார்க்கவும்).
- இந்தப் பரப்புதல் முதலில் கொர்நேலியுவின் வீட்டில் இருந்த புறவினத்தாரைச் சென்றடைந்தது—அப். 10:1, 24, 42-48; 11:1
கொர்நேலியுவின் வீட்டில், கர்த்தர் புறவின விசுவாசிகள் மீது பரிசுத்த ஆவியானவரைப் பொழிந்தருளுவதன் மூலம் அவர்களை தாம் நேரடியாக ஏற்றுக்கொள்ளுதலை உறுதிப்படுத்தினார். புறவினத்தாருக்குப் பரவிய செய்தியை மற்ற சகோதரர்களுக்குக் கொண்டுவர கர்த்தர் பேதுருவைப் பயன்படுத்தினார்.
- சிதறடிக்கப்பட்ட பரிசுத்தவான்களில் சிலர் புறவினத்தாருக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தனர்—அப். 11:19-23
சிதறடிக்கப்பட்ட பரிசுத்தவான்களில் சிலர் தாங்கள் எருசலேமுக்கு வெளியே சந்தித்த புறவினத்தாருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க தைரியமாக இருந்தனர். இந்த வழியில், புறவின விசுவாசிகள் பலர் சபைகளுக்குள் சேர்க்கப்பட்டனர்.
- இறுதியில், சபைகள் சீஷர்களிடையே பல புறவின விசுவாசிகளை உள்ளடக்கியது— அப். 13:1 மற்றும் footnotes 5, 7, மற்றும் 9
அந்தியோகியாவில் உள்ள சகோதரர்களின் குறிப்பிடப்பட்ட பெயர்கள் புறவின மற்றும் யூத பெயர்களின் ஒரு கலவையாகும், இது கிறிஸ்துவின் பரப்புதல் இறுதியில் சீடர்களிடையே பல புறவின விசுவாசிகளை உள்ளடக்கியது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது.
- இந்தப் பரப்புதல் பவுலின் கூட்டிணைவின் ஊழியத்தின் மூலமாக மேலும் பரவி, இறுதியில் பூமியின் கடையாந்திரத்தைச் சென்றடைந்தது—அப். 13:1–4, 46–49; 14:1, 27; 15:40-41; 16:1, 9–12; 17:1, 4, 10, 15; 18:1, 19, 23; 19:10; 20:1–2, 6, 13–16
புறவினத்தாருக்கு சுவிசேஷத்தின் பரவுதலை உறுதிப்படுத்த கர்த்தர் பேதுருவைப் பயன்படுத்தினார். எனினும், எருசலேமில் உள்ள அப்போஸ்தலர்கள் எவருக்குமே, புறவின உலகில் கிறிஸ்துவைப் பரப்புதல் செய்வதற்கான பாரம் இருக்கவில்லை, மேலும் கிறிஸ்துவின் பரப்புதல் இன்னும் இந்தச் சிறிய இஸ்ரயேல் தேசத்திற்குள் அடைத்துவைக்கப்பட்டது. இவ்வாறு, கர்த்தர் புறவினத்தார்களுக்கான தம் அப்போஸ்தலனாக இருக்கும்படி சவுல் (பின்னர் பவுல்) என்ற பெயருள்ள ஒரு விசேஷித்த பாத்திரத்தை எழுப்பி, அழைத்தார் (அப். 22:21; 26:17-18). உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் பரப்புதல், பவுலின் ஊழியம் மற்றும் அவனது உடன்-வேலையாட்களின் கூட்டிணைவின் மூலமாக வெகுதூரமும் பரவலாகவும் புறஜாதி உலகிற்கு முன்னெடுத்துச் செல்லப்பட்டது. யூதேயா, சமாரியா மற்றும் கலிலேயாவில் முன்னெடுத்துச் செல்லப்பட்டதைப் போன்ற ஒரு தற்செயலான சுவிசேஷப் பிரசங்கித்தலாக, இந்தப் பவுலின் கூட்டிணைவின் ஊழியத்தின் மூலமான பரப்புதல் இருக்கவில்லை. இது முழுநேர உடன்-வேலையாட்கள் கொண்ட ஒரு குழு மூலமான ஓர் உளமார்ந்த திட்டமிடப்பட்ட சுவிசேஷப் பரவுதலாக இருந்தது. பவுலின் கூட்டிணைவு, இதற்குமுன் சுவிசேஷம் ஒருபோதும் பிரசங்கிக்கப்படாத பகுதிகளில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும், சபைகளை நிறுவவும் அங்குப் புறப்பட்டுச் செல்வதற்காக தங்களையே ஒப்புக்கொடுத்த முழுநேர ஊழியர்களின் ஒரு குழுவாக இருந்தது. கர்த்தருக்கு இன்று இந்த விதத்தில் தம்மைச் சேவிக்கும்படி தங்களையே ஒப்புக்கொடுக்க சில முழுநேரக்காரர்கள் இன்னும் தேவை.
- இந்தப் பரப்புதல் இன்று இன்னும் தொடர்கின்றது, நாமும் அதில் ஒரு பகுதியாக இருக்க முடியும்—அப். 1:8
ஒரு நல்ல அர்த்தத்தில், நடபடிகள் புத்தகம் ஒருபோதும் முடிவடையவில்லை, ஏனெனில் கிறிஸ்துவின் பரப்புதல் இன்று இன்னும் தொடர்கின்றது. கிறிஸ்துவின் பரப்புதல் நம்மை வந்தடைந்துள்ளது, அதில் பெரும்பாலோர் எருசலேமிலிருந்து வெகு தொலைவில் உள்ள புறவினத்தார்களே. கிறிஸ்துவை மற்றவர்களுக்குப் பரப்புதல் செய்ய நாம் இப்போது சீஷர்களாக ஆக்கப்பட்டுள்ளோம். நம் நண்பர்கள், உறவினர்கள், வகுப்புத் தோழர்கள் மற்றும் அண்டை வீட்டாரிடம் நம் தினசரி வாழ்வில் கிறிஸ்துவைச் சாட்சிப்பகிர நாம் கற்றுக்கொள்ளலாம். சுவிசேஷத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்படி கர்த்தர் இறையாண்மையாக நம்மை வைக்கும் சூழ்நிலைகளைச் சாதகமாக்கிக் கொள்ள நாம் கற்றுக்கொள்ளலாம். மேலும், சுவிசேஷப் பரப்புதலில் முழுநேரமும் கர்த்தரைச் சேவிக்கும்படி நம்மில் சிலர் அவரால் பாரப்படுத்தப்பட வேண்டும். அந்நிய மொழிகளைக் கற்றுக்கொள்வதன் மூலமும், வார்த்தையையும் ஊழியத்தின் புத்தகங்களையும் வாசிப்பதன் மூலமும், நம் நண்பர்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதன் மூலமும், கர்த்தரைச் சேவிக்க நம்மையே தயார்படுத்திக்கொள்ள முழுநேரப் பயிற்சிக்குச் செல்லத் திட்டமிடுவதன் மூலமும் இதற்கு நம்மை நாமே ஆயத்தப்படுத்திக் கொள்ளலாம்.
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: பூமியில் கர்த்தர் தம்மையே பரப்புதல்செய்யும் பரப்புதலின் இறுதிக் கட்டங்களில் (நிலைகளில்) நாம் இருக்கிறோம். நடபடிகள் புத்தகத்தில் உள்ள இறுதி அதிகாரங்கள் இந்த நாட்களில் அவரது பரப்புதலை (பரவுதலை) முன்னெடுத்துச் செல்பவர்களால் எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒருவேளை இந்தப் பரப்புதலின் முதல் நடபடிகள் (நடவடிக்கைகள்) பேதுரு, பவுல் போன்ற மாபெரும் அப்போஸ்தலர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டன, ஆனால் இந்த இறுதி அதிகாரங்கள், “சிறிய உருளைக்கிழங்குகளாகிய” நம் அனைவராலும் நிறைவுசெய்யப்பட்டாக வேண்டும். அப்போஸ்தலர்களின் வேலையை நம்மால் செய்ய முடியாது என்று நாம் நினைக்கக்கூடாது. அப்போஸ்தலன் என்ற வார்த்தைக்கு “அனுப்பப்பட்டவன்” என்பது பொருள். நாம் ஒருவனுக்காக ஜெபிக்கையில், அந்த நபர் கர்த்தரைப் பெறக்கூடுமாறு நாம் அவனிடம் அனுப்பப்படுகின்றோம் என்ற உணர்வு நமக்கு இருக்கக்கூடும். சுவிசேஷத்தின் செய்தியுடன் நாம் ஒருவரைச் சந்திக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும், நாம் கிறிஸ்துவின் பரப்புதலை முன்னெடுத்துச் செல்கிறோம். கிறிஸ்து ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவச் செய்யப்படும்போது இந்தப் பரப்புதல் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த வழியில், சுவிசேஷம் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குப் பரவுகிறது. ஒரு நபர் நம் மூலமாக இரட்சிக்கப்பட்டால், அவன் இறுதியில் மற்றவர்கள் இரட்சிக்கப்படுவதற்கும் வழிவகுக்கக்கூடும், மேலும் பதிலுக்கு இவர்கள் மற்றவர்கள் இரட்சிக்கப்படுவதற்கும் வழிவகுத்து, இவ்வாறு தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கக்கூடும். இறுதியில், கிறிஸ்து ஒரு நேரத்தில் ஒரு நபருக்குள் பரவுதல் மூலமாகக் கர்த்தர் பலரை ஆதாயப்படுத்த முடியும். சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதில், நீங்கள் அத்தனை அதிகமானோருக்காக அக்கறை செலுத்த வேண்டும் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். ஒன்று அல்லது இரண்டு பேரின் இரட்சிப்புக்காக வெறுமனே அக்கறை செலுத்துங்கள் அதோடு இவர்களுக்காக ஜெபிக்க உங்கள் கூட்டாளிகளுடன் நேரத்தைச் செலவிடுங்கள். ஒரு தாய் ஒன்பது மாதங்களில் ஒரே ஒரு குழந்தையை மட்டுமே பெற்றெடுக்கிறாள். இதுவே ஜீவனின் கோட்பாடு. கர்த்தருடைய பரப்புதல்செய்யும் வேலையின் ஒரு பகுதியாக இருக்க நாம் நடபடிகள் புத்தகத்தில் உள்ள இந்த இறுதி நாட்களைச் சாதகமாக்கிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், ஏனெனில் விரைவில் இந்த வாய்ப்பின் கதவு மூடப்படும் அதோடு நடபடிகள் புத்தகம் முடிக்கப்படும்.
சுவிசேஷ செயலாக்கம்: இன்று பூமியில் தேவனுடைய ராஜ்யத்தின் பரவுதல் கண்ணுக்குத் தெரியாதது மற்றும் உள்ளார்ந்தது, மேலும் இன்று ஆவியானவராக இருக்கும் கர்த்தரால் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. உலகத்தின் ராஜ்யம் விரைவில் கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யமாக ஆகிவிடும் (வெளி. 11:15). இந்த நடவடிக்கை இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, ஆனால் வெகு சிலருக்கு மட்டுமே இது தெரியும். அது வெளியரங்கமாகி, பூமி கர்த்தருடையதாக ஆகிவிடும்போது, அது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். சாத்தான் தள்ளப்படுவான் (துரத்தப்படுவான்), மேலும் உலகம் முழுவதும் தேவனால் நியாயந்தீர்க்கப்பட்டு ஆட்கொள்ளப்படும் (உடைமையாக்கப்படும்). இன்று, கிறிஸ்து பூமியில் ஒரு பாய்ந்தோடும் தெய்வீக ஜீவ நீரோடையைப் போன்று பரவி, ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் அதிகமான தளத்தை ஆதாயப்படுத்துகின்றார். இந்தப் பாய்ந்தோடுதல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எருசலேமிலிருந்து ஒரு சில விசுவாசிகளுடன் தொடங்கியது, யூதேயா மற்றும் சமாரியாவுக்குள் பரவியது, மேலும் பூமியின் கடையாந்திரத்தைச் சென்றடையும். இன்று, கர்த்தருடைய இரக்கத்தால், இந்த ஜீவன்-தரும் பாய்ந்தோடுதல் உங்களை வந்தடைந்துகொண்டிருக்கிறது. ஆயினும், அது வந்தடைந்துக்கொண்டிருக்கையில், சாத்தான் உங்களையும் தன்னுடன் சேர்த்து அக்கினிக் கடலுக்குள் இழுத்துச்செல்ல முயற்சித்துக்கொண்டிருக்கிறான். அந்த அக்கினிமயமான நீரோடையிலிருந்து காப்பாற்றப்பட்டு, ஜீவனின் சுவிசேஷத்தின் பாய்ந்தோடுதலுக்குள் கொண்டுவரப்பட உங்களை அனுமதியுங்கள். இதைத்தான் தேவன் இன்று பூமியில் செய்துகொண்டிருக்கிறார். நாம் இதைத் தவறவிட்டு, இந்த யுகத்தின் ஓட்டத்தால் (அலையால்) அதனுடன் கொண்டுசெல்லப்பட்டால், நாம் எல்லாவற்றையும் தவறவிட்டு இழந்துவிடுவோம். இந்த தெய்வீக நீரோடைக்குள் குதித்திடுங்கள்! நீங்கள் குதித்தவுடன், அது தேவனுடைய நித்திய இலக்காகிய புதிய எருசலேமுக்குள் உங்களைக் கொண்டுசெல்லும் வரை, அது உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களைச் சுமந்துசெல்லும்.
மிக முக்கியக் காரியங்கள்: ஒரு கனிநிறைந்த சுவிசேஷ வாழ்க்கையை வாழ்தல் (III.G.).
பின்புல வாசிப்பு: Life-study of Acts, Message 2; Message 6, p. 43; Messages 22, 33, 35.
REFERENCES: Life-study of Acts, Message 2; Message 6, p. 43; Messages 9–13, 22, 33, 35–37; Acts 13:1 and footnotes 5, 7, and 9.