உயிர்த்தெழுந்து, பரமேறிய கிறிஸ்துவின் பரப்புதல்
பகுதி 10
✵பாடம் 01 – 09
ரோமர்—தேவனுடைய சுவிசேஷம்
குறிக்கோள்: தேவனுடைய முழு சுவிசேஷத்தில் கிறிஸ்துவின் சட்டரீதியான மீட்பும், அவரது ஜீவாதார இரட்சிப்பும், கிறிஸ்தவ வாழ்க்கையும், சபை வாழ்க்கையும் அடங்கும் என்பதைக் காண்பதற்கு.
பொருட்சுருக்கம்: ரோமர் புத்தகத்தின் கருப்பொருள் தேவனுடைய சுவிசேஷமே என்பதால், ரோமர் புத்தகம் தேவனுடைய இரட்சிப்பின் வழிவகை, இலக்கு ஆகிய இரண்டையும் பற்றிய ஒரு தெளிவான சித்திரத்தை நமக்குத் தருகிறது. தேவனுடைய இரட்சிப்பின் வழிவ்வகை அவரது சட்டரீதியான மீட்பு மற்றும் ஜீவாதார இரட்சிப்பு, மேலும் இதன் இலக்கு, கிறிஸ்துவுக்கு ஒத்தசாயலாக்கப்பட்ட அதோடு கிறிஸ்துவின் சரீரமாக ஒன்றுசேர்த்துக் கட்டியெழுப்பப்பட்ட குமாரர்களைப் பெறுவதே ஆகும். இந்த அற்புதமான இரட்சிப்பில் தொடங்கியிருக்கும் அனைவரும் அதன் இலக்கைச் சென்னறடைவார்கள். ரோமரில் நாம், கிறிஸ்து தம் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு மனிதனுக்குள் ஆவியானவராக எவ்வாறு தொடர்ந்து வேலை செய்கிறார் என்பதைப் பார்க்கிறோம். ரோமர் புத்தகம் கிறிஸ்தவ வாழ்க்கையையும், சபை வாழ்க்கையையும் நமக்குத் திரைநீக்குகிறது. இந்த “ஐந்தாவது சுவிசேஷத்திற்காக” கர்த்தருக்குத் துதி!
பின்புலம்: இளம் வாலிபர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சபை வாழ்க்கையில் இருந்து வந்திருந்தாலும், நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் அதோடு நாம் பாரம்பரிய கிறிஸ்தவத்திலிருந்து எவ்வாறு வேறுபட்டிருக்கிறோம் என்பதைப் பற்றிய அடிப்படை தரிசனம் அவர்களுக்குத் தெளிவற்றதாக உள்ளது. தேவனுடைய சுவிசேஷத்தைப் பற்றிய சத்தியத்தைப் பேசுவதற்கும் (அவர்களுக்குப் பிரயோகிப்பதற்கும்), இந்தச் சுவிசேஷத்தை வெறும் சட்டரீதியான மீட்பைப் பற்றிய சுவிசேஷத்துடன் ஒப்பிடுவதற்கும்கூட இந்தப் பாடம் அவசியம்.
அதிகாரங்கள்: ரோமர் 1–16.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
ரோமர் புத்தகத்தில், பவுல் தேவனுடைய இரட்சிப்பின் இலக்கையும், நாம் தேவனுடைய இலக்கை அடைவதற்காக அவர் நமக்கு வைத்திருக்கும் வழியையும் பற்றிய ஒரு தெளிவான சித்திரத்தை நமக்குத் தருகிறான். எனவே, ரோமர் “ஐந்தாம் சுவிசேஷம்” என்று அழைக்கப்படலாம், ஏனெனில் இது கிறிஸ்து தம் உயிர்த்தெழுதலுக்குப் பிறகும் மனிதனின் இரட்சிப்புக்காக எவ்வாறு தொடர்ந்து வேலை செய்கிறார் என்பதைச் சித்தரிக்கிறது. “கிறிஸ்துவின் அகம்சார்ந்த சுவிசேஷத்தை வெளிப்படுத்த ரோமர புத்தகமாகிய ஐந்தாம் சுவிசேஷம் நமக்குத் தேவை. நம் கிறிஸ்து வெறுமனே மாம்சமாகுதலுக்குப் பிறகும், உயிர்த்தெழுதலுக்கு முன்பும் தம் சீஷர்கள் மத்தியில் இருந்த கிறிஸ்துவாகிய மாம்சத்திலுள்ள கிறிஸ்துவல்ல….ரோமர் புத்தகம் அவரது உயிர்த்தெழுதலுக்குப் பிறகுள்ள கிறிஸ்துவின் சுவிசேஷமாகும், இது அவர் இப்போது அவரது விசுவாசிகளில் அகம்சார்ந்த இரட்சகராக இருக்கிறார் என்றும் காட்டுகிறது. ஆகவே, இந்தச் சுவிசேஷம் முன்னவற்றை விட அதிக ஆழமானது, அதிக அகம்சார்ந்தது” (ரோமரின் ஜீவ-ஆய்வு , செய்தி 2, பப. 17–18). ரோமரில், பவுல் தேவனுடைய சுவிசேஷத்தை ஒரு படிப்படியான, முழுமையான மற்றும் பூரணமான முறையில் முன்வைக்கிறான்.
- தேவனுடைய சுவிசேஷமாக, ரோமர் புத்தகம் சட்டரீதியான மீட்பு மற்றும் ஜீவாதார இரட்சிப்பு உட்பட, கிறிஸ்துவில் தேவனுடைய முழு இரட்சிப்பை வெளிப்படுத்துகிறது, இது நம்மை தேவனுடைய முழு-வளர்ச்சியடைந்த குமாரர்களாக ஆக்குகிறது.
- ரோமர், தேவனுடைய இரட்சிப்பின் அஸ்திபாரத்தை வெளிப்படுத்துகிறது—ரோ. 1:16-17; 3:21-26; 5:8-9
தேவனுடைய இரட்சிப்பின் அஸ்திபாரம், சிலுவையில் கிறிஸ்துவின் மீட்கும் மரணமே ஆகும், இது தேவனுடைய நீதியின் கோரிக்கைகள் அனைத்தையும் சட்டரீதியாகப் பூர்த்திசெய்தது (திருப்திப்படுத்தியது). இதன் காரணமாக நாம், நம் இரட்சிப்பின் அஸ்திபாரம் தேவனின் நீதியே என்றும் கூறலாம். எந்த நீதியின் மூலம் தேவன் நம்மைக் கண்டனம் செய்ய வேண்டியிருந்ததோ அந்தச் சாட்சாத்து நீதியே, தேவன் நம்மை நீதிப்படுத்தவும் இரட்சிக்கவும் வேண்டும் என்று இப்போது கோருகிறது மற்றும் கோரிக்கைவிடுக்கிறது. தேவன் ஒருபோதும் அநீதியாக இருக்க முடியாது என்பதால், நீதியே நம் இரட்சிப்புக்குச் சாத்தியமான அதி உறுதியான மற்றும் அதி வலுவான அஸ்திபாரம். (இந்தக் குறிப்பு தொடர்பான அதிக விவரங்களுக்கு ரோமரின் ஜீவ-ஆய்வு, செய்தி 57 ஐ வாசிக்கவும்). தேவன் தம் இரட்சிப்பில் நமக்காக நிறைவேற்றும் அனைத்தும், கிறிஸ்துவின் மீட்பின் மூலமாக நிறுவப்பட்டிருக்கும் நீதியின் அஸ்திபாரத்தை அடிப்படையாகக் கொண்டவை.
- ரோமர் தேவனுடைய இரட்சிப்பின் வழிமுறையை வெளிப்படுத்துகிறது—ரோ. 5:10, 17
இரட்சிப்பு என்பது மேலே குறிப்பிடப்பட்டுள்ள நீதிப்படுத்துதல் மற்றும் நித்திய பாதுகாப்பை மட்டுமே உள்ளடக்கியது என்று பல கிறிஸ்தவர்கள் கருதுகின்றனர். நித்திய தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவது ஓர் அற்புதமான விஷயம், ஆனால் தேவனுடைய இரட்சிப்பு அதை விட இன்னும் அதிகமானவற்றை உள்ளடக்குகிறது. குறிப்பிடப்பட்டுள்ளபடி, கிறிஸ்துவின் மீட்கும் மரணத்தின் மூலமான தேவனுடைய நீதிப்படுத்தும் வேலை தேவனுடைய இரட்சிப்புக்கான அஸ்திபாரம் மட்டுமே; இது, தேவனுடைய ஜீவனில் இரட்சிக்கப்படுதல் அடங்கிய தேவனுடைய முழு இரட்சிப்பை நாம் அனுபவிப்பதற்குத் தேவையான ஆரம்ப வேலை மட்டுமே (ரோ. 5:10). தேவனுடைய இரட்சிப்பின் வழிமுறை, உள்ளார்ந்த மற்றும் ஜீவாதாரமான ஒன்றாக ரோமரில் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளது. இது வளர்சிதைமாற்ற முறையில் நம்மை இரட்சிக்கவும்கூட வேலை செய்கிறது! தேவனுடைய இரட்சிப்பின் வழிமுறையானது நம் ஆள்தத்துவத்திற்குள்—நம் ஆவியிலிருந்து நம் ஆத்துமாவுக்கும், நம் சரீரத்திற்கும்கூட—வளர்ந்து பரவும் தெய்வீக ஜீவனின் வளர்ச்சி மற்றும் பரவுதல் மூலம் நடைபெறுகிறது என்பதை ரோமர் வெளிப்படுத்துகிறது. இதை உதாரணங்காட்டி விளக்குவதற்கு மூன்று வட்டங்களின் வரைபடத்தைப் பயன்படுத்தவும். ரோமரில் சித்தரிக்கப்பட்டுள்ளது போல் தேவனுடைய ஜீவாதார இரட்சிப்பின் வெவ்வேறு நிலைகளாகிய பரிசுத்தமாக்குதல், மறுசாயலாகுதல், ஒத்தசாயலாகுதல், மகிமைப்படுத்துதல் ஆகியவற்றை விவரிக்க பல பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனினும், இந்தப் பதங்கள் அனைத்தும் ஜீவன் மூலமான தேவனுடைய ஜீவாதார இரட்சிப்பின் அதே வழிமுறையைக் குறிக்கின்றன.
- ரோமர் தேவனுடைய இரட்சிப்பின் இலக்கை வெளிப்படுத்துகிறது—ரோ. 8:19, 29-30; 12:1–5
தேவனுடைய இரட்சிப்பின் இலக்கு, நாம் கிறிஸ்துவின் சரீரமாக ஒன்றுசேர்த்துக் கட்டியெழுப்பப்பட்ட தேவனுடைய முழு-வளர்ச்சியடைந்த குமாரர்களாக ஆகிவிட வேண்டும் என்பதே என்று ரோமர் வெளிப்படுத்துகிறது. “தேவன் தாம் வெளிக்காட்டப்படுமாறு கிறிஸ்துவுக்காக ஒரு சரீரத்தை உருவாக்க, பாவிகளிலிருந்து குமாரர்களை உண்டாக்குகிறார் என்பதே இந்தப் புத்தகத்தின் அடிப்படை எண்ணம்….தம்மையே அவர்களின் ஜீவனாக ஆக்குவதின்மூலம் தமக்குப் பல குமாரர்களை உற்பத்திசெய்வதே தேவனின் நித்திய திட்டம்….எனினும், இன்னும் இது தேவனுடைய குறிக்கோளின் உச்சநிலை இலக்கு அல்ல. கிறிஸ்துவை வெளிக்காட்ட இந்தக் குமாரர்கள் யாவரையும் சேர்த்து ஒரே சரீரமாகக் கட்டியெழுப்புவதே, அவரது குறிக்கோளின் உச்சநிலை இலக்காகும். கிறிஸ்துவை வெளிக்காட்டும்படி சரீரத்தை உருவாக்க தேவன் பாவிகளிலிருந்து குமாரமர்களை உண்டாடக்கிக்கொண்டிருக்கிறார். இது ரோமர் புத்தகத்தின் அடிப்படையான கருத்தின் முழு கூற்றாகும்” (ரோமரின் ஜீவ-ஆய்வு, செய்தி 32, பப. 411–412). ரோமர் புத்தகம், தேவனுடைய குமாரர்கள் சரீர வாழ்க்கையை நடைமுறையில் உள்ளூர் சபைகளுக்குள் வாழ்வதுடன் முடிவடைகிறது.
- ஒரு மனிதனாகிய கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றியவற்றின் அடிப்படையில், ஆவியானவராகிய கிறிஸ்துவால் தேவனுடைய முழு இரட்சிப்பு நம்மில் செயல்படுத்தப்படுகிறது—ரோ. 8:1–16
ரோமரில் பவுல், கிறிஸ்து தம் ஊழியத்தின் முதல் நிலையில், குறிப்பாக சிலுவையில் அவரது மரணத்தின் மூலமாக பூமியில் ஒரு மனிதனாக அவர் நிறைவேற்றியவற்றின் அடிப்படையில் கிறிஸ்து எவ்வாறு தம் இரட்சிப்பை நம்மில் ஆவியானவராக செயல்படுத்துகிறார் என்பதைக் காட்டுகிறான்.
- சிலுவையில் தம் மரணத்தின் மூலமாக தேவனுடைய நீதியான கோரிக்கையைக் கிறிஸ்து நிறைவேற்றியதன் அடிப்படையில், கிறிஸ்து ஆவியானவராக நம் ஆவிக்குள் நுழைந்து, அதை ஜீவனாக்கினார்—ரோ. 8:10
கிறிஸ்துவின் மீட்பு நாம் உழன்று மூழ்கியிருந்த அநீதியான சூழ்நிலையை அகற்றி, நம்மைச் சுத்திகரித்தது, இதனால் தேவன் நமக்குள் ஜீவனாக நுழைவதற்கான வழியைத் தெளிவுபடுத்தியது. கிறிஸ்து நமக்காகச் சிலுவையில் நிறைவேற்றியிருப்பதை நாம் விசுவாசித்து, விசுவாசத்தின் மூலமாகப் பெறும்போது, நாம் புறத்தூண்டுதலின்றி அவரை ஆவியானவராக நம் ஆவிக்குள் பெறுகிறோம். இவ்வாறு, மறுபடிஜெநிப்பித்தல் நீதிப்படுத்துதலின் அடிப்படையில் உள்ளது, நீதிப்படுத்துதலைத் தொடர்ந்து உடனடியாக வருகிறது. கிறிஸ்துவின் சட்டரீதியான மீட்பை அடிப்படையாகக் கொண்ட மறுபடிஜெநிப்பித்தலே நம் ஜீவாதார இரட்சிப்பின் தொடக்கமாகும்.
- கிறிஸ்துவை நம் ஆவியில் ஜீவனாக உடைமையாய் வைத்திருக்கும் குமாரர்களாக, நாம் அவரது ஜீவனில் இரட்சிக்கப்படுவோம், மேலும் தேவனுடைய முதற்பேறான குமாரனாகிய கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்தசாயலாக்கப்படுவோம்—ரோ. 1:5; 5:10; 8:29
ரோமரில், கிறிஸ்து ஆவியானவர் மட்டுமல்ல; அவர் மூதற்பேறான குமாரன் என்றும் அழைக்கப்படுகிறார். மகிமைக்குள் நுழைவதற்காக நாம் அனைவரும் கடந்துசெல்வத்தற்கான ஒரு முன்மாதிரியாக கிறிஸ்துவின் மனித வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை ரோமர் முன்வைக்கிறது. கிறிஸ்து இந்த வழிமுறையை முடித்தபோது, அவர் தம் மனுஷீகத்தில் தேவனுடைய முதற்பேறான குமாரனாக நியமிக்கப்பட்டார். தேவனுடைய முதற்பேறான குமாரனாக ஆகிவிட்ட மனிதனாக, அவர் தேவனுடைய பல குமாரர்களுக்கான முன்னுருமாதிரி ஆனார். இது ரோமர் புத்தகத்தில் உள்ள ஒரு முக்கிய (திறவுகோல்) சிந்தனை. பல குமாரர்கள் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் பல மறுபிரதிகளாக ஆகிவிடக்கூடுமாறு, அவர்கள் ஒவ்வொருவரையும் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்தசாயலாக்குவதே தேவனின் இலக்கு, நாம் அனைவரும் தேவனுடைய இரட்சிப்பின் வழிமுறைக்குள் நுழைந்திருப்பதால், நாம் அனைவரும் இந்த அற்புதமான இலக்கை அடையப் போகின்றோம். அந்த நேரத்தில், நாம் அனைவரும் கிறிஸ்துவை ஒரு முழு வழியில் வெளிக்காட்டுவோம். தேவன் தம் இரட்சிப்பில் நமக்காக என்னே ஓர் அற்புதமான விதியை ஆயத்தம் செய்திருக்கிறார்!
- தேவனுடைய முழு இரட்சிப்பு, தனிப்பட்ட ரீதியில் ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையையும், கூட்டான ரீதியில் ஒரு சபை வாழ்க்கையையும் வாழ நமக்குத் திறனளிக்கிறது.
- ரோமர் புத்தகம் கிறிஸ்தவ வாழ்க்கையை திரைநீக்குகிறது—ரோ. 1-11
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஜீவனாகிய கிறிஸ்துவால் ஜீவாதார ரீதியில் இரட்சிக்கப்படும் ஒரு வாழ்க்கை என்பதை ரோமர் புத்தகம் நமக்குக் காட்டுகிறது. நாம் ஒரு கிறிஸ்தவனாக இருக்கவோ, கிரியைகளால் அல்லது சுய-முயற்சியால் இரட்சிப்பைப் பெறவோ முயற்சிக்கக்கூடாது. கிறிஸ்தவ வாழ்க்கை என்பது கிறிஸ்து சாதித்திருக்கிறவற்றை அடிப்படையாகக் கொண்டது அதோடு ஜீவனாகிய கிறிஸ்துவால் செயல்படுத்தப்படுகிறது. கிறிஸ்தவ வாழ்க்கையில், கிறிஸ்துவே எல்லாமும். (இதனால்தான் பவுல், நாம் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதன் மூலம் இரட்சிப்பைச் சம்பாதிக்க முடியும் என்று கூறும் மக்களுக்கு எதிராக ரோமரில் அவ்வளவு கடுமையாக வாதிடுகிறான்.)
- ரோமர் புத்தகம் சபை வாழ்க்கையை திரைநீக்குகிறது—ரோ. 12-16
மக்கள் இந்த நடபடிகள் புத்தகத்தை வாசிக்கும்போது, இப்படிப்பட்ட ஒரு கூட்டு வாழ்க்கையை மனிதர்கள் வாழ்வது எப்படி சாத்தியமாகும் என்று அவர்கள் வியக்கக்கூடும். சபை வாழ்க்கை மிகவும் பரம்புதிரானதாக தோன்றுகிறது. உண்மையில், சபை வாழ்க்கை சாத்தியமற்றதாகத் தோன்றுகிறது. தனிப்பட்ட மனிதர்கள் ஒரு கூட்டு வாழ்க்கையை நடைமுறைப்படுத்த எவ்வாறு தங்கள் தனித்துவத்தை விட்டுவிட்டு, எல்லாவற்றையும் தியாகஞ்செய்ய முடியும்? நடபடிகளுக்குப் பிறகு உள்ள முதல் புத்தகமாகிய ரோமர் எவ்வாறு சபை வாழ்க்கை சாத்தியம் என்பதை விளக்குகிறது. கிறிஸ்து தம் கூட்டு சரீரத்தை ஆதாயப்படுத்துவதற்கு, தேவனின் பல குமாரர்கள் தங்களுக்குள் இருக்கும் தெய்வீக ஜீவன் சரீரத்திற்காகவே உள்ளது என்பதை உணர்ந்தறிந்தாக வேண்டும். கிறிஸ்து தம் சரீரத்தைப் பெறுவதற்கு, சபை வாழ்க்கை இருந்தாக வேண்டும். எனவே, ரோமர் புத்தகம் சபை வாழ்க்கையாகிய தெய்வீக வாழ்க்கையின் நடைமுறைப் பிரச்சினையுடன் முடிவடைகிறது, நாம் சபை வாழ்க்கையில் இருக்கிறோம் என்பதற்காக கர்த்தரைத் துதியுங்கள்!
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: தேவனுடைய முழு சுவிசேஷம், உள்ளூர் சபைகளில் நடைமுறைக்குரிய ரீதியில் வெளிக்காட்டப்படும் கிறிஸ்துவின் சரீரத்தின் கட்டமைப்பில் தொடர்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு, உயர்நிலைப்பள்ளியில் உள்ள பரிசுத்தவான்கள் மிகவும் இளம் பிஞ்சுகள் (இளமையானவர்கள்) அல்ல. எனினும், (உயர்நிலைப்பள்ளி மாணவர்களில் பலர் சமீபத்தில்தான் இரட்சிக்கக்கப்பட்டு, ஞானஸ்நானம் பெற்றிருக்கக்கூடும் என்பதால்) அவர்களது இரட்சிப்பின் அனுபவத்தை வலுப்படுத்துவதற்காக, இந்தச் செய்திக்குறிப்பின் ரோம இலக்கம் I இல் முதன்மையாக கவனம்செலுத்துவது உதவிகரமாக இருக்கக்கூடும். ரோமர் புத்தகத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி தேவனுடைய முழுமையான இரட்சிப்பிற்கு இரண்டு அம்சங்கள் உள்ளன—தேவனுடைய சட்டரீதியான மீட்பு மற்றும் அவரது ஜீவாதார இரட்சிப்பு. இவற்றைப் புரிந்துகொள்வதன் மூலம் இளம் வாலிபர்கள், தங்கள் விழுந்துபோன நிலையில் தங்களை வந்தடைவதற்காக தேவனுடைய இரட்சிப்பு எவ்வளவு தொலைதூரம் செல்ல வேண்டியிருந்தது என்பதையும், தேவனுடைய குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு நம் அனைவரையும் கொண்டுவருவதில் அவருடைய இரட்சிப்பு எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருக்கிறது என்பதையும் பற்றிய ஒரு பாராட்டுதலை இளம் வாலிபர்கள் ஆதாயப்படுத்த முடியும். இளம் வாலிபர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிடுவதன் மூலமாகவும், தங்களில வளர்வதற்குக் கர்த்தரை அனுமதிக்கும்படி அவரைத் தொடர்புகொள்வதன் மூலமாகவும் தேவனுடைய இரட்சிப்பை தினமும் அனுபவிக்க அவர்களை உற்சாகப்படுத்தவும் (இந்தப் பாடத்திற்கான ஒரு பயனுள்ள ஆதாரம், God’s Full Salvation, A Lesson Book ஆகும்.)
சுவிசேஷ செயலாக்கம்: எல்லா மனிதர்களுக்கும் இரண்டு பிரச்சினைகள் உள்ளன: அவர்கள் பாவமுள்ளவர்கள் (அழுக்கானவர்கள்), அவர்கள் மரித்தவர்கள் (வெறுமையானவர்கள், ஜீவன் இல்லாதவர்கள்) (ரோ. 3:23; எபே. 2:1). தேவன் மனிதனை ஒரு பாத்திரமாக, தேவனை தன் உள்ளடக்கமாக உள்ளடக்குவதற்கான ஒரு கொள்கலனாக சிருஷ்டித்தார், ஆனால் பாவத்தின் காரணமாக, மனிதன் தேவனிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறான் (ரோ. 9:20-21; 1 தெச. 4:5; 2 தீமோ. 2:21). ஒவ்வொரு மனிதனும் இவ்விதமாய்ப் பிறக்கிறான். கிறிஸ்துவில் தேவனுடைய இரட்சிப்பு இந்த இரண்டு பிரச்சினைகளையும் கவனித்துக்கொள்கிறது. சிலுவையில் அவருடைய மரணத்தின் மூலமாமக, நம் பாவம் நீக்கப்பட்டு, நாம் ஒருபோதும் பாவம் செய்திராதது போல் நாம் சுத்தமாக்கப்படுகிறோம் (1 பேது. 2:24; யோவான் 1:29; எரே. 31:34; சங். 103:12). கர்த்தர் நமக்காகச் சிந்திய இரத்தத்தால் நம் பாவங்கள் அனைத்தும் கழுவப்படுகின்றன (எபி. 9:22). இத்தகைய ஒரு சுத்திகரித்தலுக்குப் பிறகு, தேவன் நமக்குள் வந்து, நம் ஆவியை தம் ஜீவனால் நிரப்ப முடியும் (1 கொரி. 6:11; யோவான் 6:63; ரோ. 8:11; 1 கொரி. 6:17). இது நிகழும்போது, நாம் தேவனுடைய ஜீவாதார இரட்சிப்பின் வழிமுறைக்குள் நுழைந்து, அதை அனுபவித்துமகிழத் தொடங்குகிறோம் (ரோ. 5:10). அவருடைய தெய்வீக ஜீவன் நமக்குள் பரவுதல் மூலமாக நம் ஆள்தத்துவத்தின் ஒவ்வொரு பகுதியும்—ஆவியும், ஆத்துமாவும், இறுதியில் நம் சரீரங்களும்கூட—ஜீவனில் இரட்சிக்கப்படும் வரை இந்த ஜீவாதார இரட்சிப்பு தொடரும் (1 தெச. 5:23; ரோ. 8:11). உங்கள் வாழ்க்கையை அழுக்காகவும் வெறுமையாகவும் தொடர நீங்கள் விரும்புகிறீர்களா? இரட்சிப்பு என்னும் பரிசைப் (வரத்தைப்) பெறுங்கள், இதன் மூலம் நீங்கள் முழுவதும் சுத்திகரிக்கப்பட்டு, தேவனுடைய ஒரு குமாரனாக ஆகுவதற்கு தேவனுடைய ஜீவனால் நிரப்பப்பட முடியும் (1 யோ. 3:1)! (அழுக்கு நிரப்பப்பட்ட ஒரு சோடா பாட்டில், சோடாவைக் உள்ளடக்க சுத்தப்படுத்தப்பட வேண்டிய அவசியத்தைப் பற்றிய எடுத்துக்காட்டு, இந்தப் பாடத்திற்கான ஓர் உதாரணமாகப் பயன்படுத்தப்படலாம். எனினும், இது இரட்சிப்பின் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தற்போதைய ஜீவாதார வழிமுறையைச் சித்தரிப்பதில்லை. ஜீவாதார இரட்சிப்பைப் பற்றிய இந்தக் கூடுதல் அம்சத்திற்கு, நம் ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்தின் மூன்று வட்ட வரைபடத்தின் மூலமான தேவனின் ஜீவ பரப்புதல் உதவிகரமாக இருக்கக்கூடும்.)
மிக முக்கியக் காரியங்கள்: மனிதனுக்கு ஒரு முழு இரட்சிப்பு தேவை என்பதையும், தேவன் மனிதனுக்காக வழங்கியிருக்கும் இந்த முழுமையான இரட்சிப்புக்கு மனிதனின் ஒத்துழைப்பின் ஒரு நீண்ட வழிமுறை தேவைப்படுகிறது (II.B.3.).
பின்புல வாசிப்பு: Life-study of Romans, Message 32.
REFERENCES: Life-study of Romans, Message 1, pp. 10–15; Message 2, pp. 17–18; Message 9; Message 10, pp. 111–113; Message 32; Message 57; Salvation in Life in the Book of Romans, Chapters 1, 8; The Crystallization of the Epistle to the Romans, Chapter 4; God’s Full Salvation, A Lesson Book.