உயிர்த்தெழுந்து, பரமேறிய கிறிஸ்துவின் பரப்புதல்
பகுதி 10
✵பாடம் 01 – 09
ஆவியானவரின் வெளியூற்றுதல்
குறிக்கோள்: பொருளாட்சியின் ஆவியானவர் விசுவாசிகள் அனைவரின் மீதும் அவர்களது நகர்வுக்காக பொழிந்தருளப்பட்டிருக்கிறார் என்பதைக் காண்பதற்கு.
பொருட்சுருக்கம்: கர்த்தர் உயிர்த்தெழுந்தபோது, அவர் தம் விசுவாசிகளுக்குள் தம்மையே சுவாசித்து ஊதுவதன் மூலம் சாராம்சரீதியில் அவர்களுக்குள் தம்மையே ஆவியானவராக உட்பகிர்ந்தார். எனினும், எருசலேமில் பெந்தெகொஸ்தே நாளிலும், மற்றொரு சமயத்தில் கொர்நேலியுவின் வீட்டிலும், இந்த ஆவியானவர் விசுவாசிகள் மீது ஊற்றப்பட்டபோது சபை பொருளாட்சி ரீதியாக இந்த ஆவியானவரில் ஞானஸ்நானம் பெற்றது. எருசலேமில் பெந்தெகொஸ்தே பண்டிகையின்போது, எல்லா விசுவாசிகளும் ஒன்றுசேர்த்துக் கூடிவரச்செய்யப்பட்டிருந்து, கர்த்தர் பரமேறிச் சென்றிருந்தபின் பத்து நாட்கள் ஜெபித்துக் கொண்டிருந்தனர். பத்தாம் நாளில், இந்த ஆவியானவர் அவர்கள்மேல் வந்தார், அப்போது அவர்கள் சுவிசேஷத்தை தைரியமாகப் பேசவும், வல்லமையின் கிரியைகளைச் செய்யவும் ஆரம்பித்தார்கள். இது, எருசலேமில் உள்ள சபை ஒரு வலுவான விதத்தில் நிறுவப்படுதலை விளைவித்தது. பின்னர், பேதுரு கர்த்தரால் புறவின கொர்நேலியுவின் வீட்டாரிடம் அனுப்பப்பட்டபோது, ஆவியானவரின் வெளியூற்றுதல் அங்கே நிகழ்ந்தது. இவ்வாறு, யூத மற்றும் புறவின விசுவாசிகள் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றார்கள். இன்று, இந்த ஆவியானவர் இன்னும் பொருளாட்சி ரீதியாக சபையின் மீது இருக்கிறார், எனவே ஆவியானவரின் இன்னொரு வெளியூற்றுதலுக்காக நாம் காத்திருக்க வேண்டிய தேவையில்லை; நாம் கர்த்தருக்காக தைரியமாகப் பேசவும் வேலைசெய்யவும் இந்தப் பொருளாட்சி ரீதியான ஆவியானவரைப் பிரயோகிக்க முடியும்.
பின்புலம்: இந்தப் பாடத்தில், இளம்வாலிபர்கள் ஆவியானவரின் இரண்டு அம்சங்களாகிய, சாராம்சரீதியான அம்சத்தையும், பொருளாட்சிரீதியான அம்சத்தையும், மேலும் இந்த இரண்டு அம்சங்களும் நம் வாழ்க்கை மற்றும் வேலையுடன் எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளன என்பதையும்ம் பார்க்க வேண்டும். இது, வயோதிக பரிசுத்தவான்களுக்குக் கூட ஒரு கடினமான கருத்தாக இருக்கலாம். ஆயினும்கூட, நாம் என்ன கூறவருகிறோம் என்பதை உதாரணங்காட்டி விளக்குவதற்கு, உண்மையான வாழ்க்கைக் கதைகள் விலைமதிப்பற்றதாக இருக்கலாம். நம் மறுபடிஜெநிப்பித்தலின் போது நாம் ஆவியானவரின் சாராம்சரீதியான மற்றும் பொருளாட்சிரீதியான அம்சங்கள் இரண்டையும் பெற்றோம். இப்போது நாம் ஆவியானவரைப் பருகுவதன் மூலமும், பரப்புதலுக்காக மற்றவர்களிடம் பேசுவதன் மூலமும் இந்த ஆவியானவரைப் பிரயோகிக்க முடியும்.
அதிகாரங்கள்: நடபடிகள் 1–2, 10.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
இந்தப் பாடத்தில் விவரிக்கப்பட்டுள்ள நிகழ்வுகளைப் பற்றி பேசுவதற்கு முன், ஆவியானவரின் சாராம்சரீதியான மற்றும் பொருளாட்சிரீதியான அம்சங்களை இரண்டு தனித்தனி நெடுவரிசைகளில் பட்டியலிடுவதன் மூலம் அவற்றைப் பற்றிப் பேசுவதும், வேறுபடுத்திப் பார்ப்பதும் உதவிகரமாக இருக்கக்கூடும். “சாராம்சரீதியான” நெடுவரிசையில் பின்வருவன அடங்கலாம்: ஜீவ ஆவியானவர், சுவாசம், தண்ணீர், சாராம்சம், ஜீவிக்கும் போன்றவை. “பொருளாட்சிரீதியான” நெடுவரிசையில் பின்வருவன அடங்கலாம்: வல்லமையின் ஆவியானவர், காற்று, வேலை, பொருளாட்சி, அதிகாரம், சீருடை போன்றவை (see Luke 24:49, footnote 3). இது, ஆவியானவரால் இரண்டு வகையான நிரப்புதல் உள்ளன என்பதை உணர்ந்தறிய இளம் வாலிபர்களுக்கு உதவிகரமாக இருக்கக்கூடும். இது இரண்டு வெவ்வேறு கிரேக்க வார்த்தைகளால் நெடுவரிசைகளில் குறிப்பிடப்படலாம் (see Acts 2:4, footnote 2). “சாராம்சரீதியான ஆவியானவர்,” “பொருளாட்சிரீதிதயான ஆவியானவர்” ஆகிய பதங்கள் பயன்படுத்தப்பட்டாலும், அவை அதே ஒரு ஆவியானவரையே குறிப்பிடப்படுகின்றன என்பதும் கவனத்தில் கொள்ளப்பட்ட வேண்டும். நாம் இரண்டு ஆவியானவர்களைப் பற்றி பேசவில்லை, மாறாக இந்த ஒரே ஆவியானவரின் இரண்டு அம்சங்களைப் பற்றி பேசுகின்றோம்.
- தம் உயிர்த்தெழுதலின் நாளில், கர்த்தராகிய இயேசு சாராம்சரீதியில் தம் விசுவாசிகளின் ஜீவனுக்காக ஆவியானவரை அவர்களுக்குள் சுவாசித்து ஊதினார்—யோவான் 20:22
உயிர்த்தெழுதலில், கர்த்தராகிய இயேசு ஜீவன்-தரும் ஆவியானார் (1 கொரி. 15:45). அவர் தம் உயிர்த்தெழுதலின் நாளில் தம் சீஷர்களைச் சந்தித்தபோது, இந்த ஆவிக் (நியூமேடிக்) கிறிஸ்து அவர்களுக்குள் சுவாசித்து ஊதி, “பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினார் (யோவான் 20:22). இவ்வாறு, அவர் தம்மையே அவர்களுக்குள் அவர்களது ஜீவனாக உட்பகிர்ந்து, அவர்கள் தம் ஜீவிக்கும் அவயவங்களாக ஆகுவதற்கு வழிவகுத்தார். அவர்கள் அவயவங்களாக இருந்தபோதிலும், பூமியில் அவரது பொருளாட்சிரீதியான நகர்வுக்காக அவர்கள் இன்னும் ஒரே சரீரமாக உருவாக்கப்பட வேண்டியிருந்தது. சீஷர்கள் தெய்வீக ஜீவனைப் பெற்றிருந்தனர், மேலும் இந்தப் புதிய ஜீவனின் காரணமாகவே, அவர்கள் முன்பு பழக்கப்பட்டது போல ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்வதற்குப் பதிலாக, ஒருமனதில் ஒன்றுசேர்ந்து ஜெபிக்க இயன்றது. எனினும், அவர்கள் பூமியில் கர்த்தருடைய பொருளாட்சியின் நிறைவேற்றத்திற்காக நகர்ந்து வேலைசெய்ய முடிவதற்கு முன், அவர்கள் இன்னும் ஆவியானவரின் இன்னொரு பிரயோகித்தலுக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது.
- தம் பரமேறுதலுக்குப் பிறகு, கர்த்தர் பொருளாட்சிரீதியில் தம் விசுவாசிகளின் வேலை மற்றும் ஊழியத்திற்காக ஆவியானவரைப் பொழிந்தருளினார்—அப். 2:17-18
“[பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம்] இரண்டு பகுதிகளில் நிறைவேற்றப்பட்டது: (1) எல்லா யூத விசுவாசிகளும் பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் பெற்றார்கள் (2:4); (2) எல்லாப் புறவின விசுவாசிகளும் கொர்நேலியுவின் வீட்டில் ஞானஸ்நானம் பெற்றார்கள் (10:44–47; 11:15–17). இந்த இரண்டு பகுதிகளில் கிறிஸ்துவின் உண்மையான விசுவாசிகள் அனைவரும் பிரபஞ்சமளாவியரீதியில் ஒரேமுறையாகப் பரிசுத்த ஆவியில் கிறிஸ்துவின் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள்” (Acts 1:5, footnote 2).
- ஆவியானவரின் வெளியூற்றுதல் பெந்தெகொஸ்தே நாளில் யூத விசுவாசிகள் மீது முதலில் நிகழ்ந்தது—அப். 2:1-21
- தம் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, கர்த்தர் தம் பிதாவின் வாக்குத்தத்தமாகிய, பரிசுத்த ஆவியில் உள்ள ஞானஸ்நானம் தம் விசுவாசிகள் மீது வருவதற்காக எருசலேமில் காத்திருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்—லூக். 24:49
கர்த்தராகிய இயேசு தம் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு நாற்பது நாட்கள் தம் சீஷர்களுடன் தங்கியிருந்தார். கூடுதல் பயிற்சியின் இந்தக் காலஅளவு முடிந்த பிறகு, அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் பண்ணப்படும் வரை எருசலேமில் தங்கியிருக்கும்படி அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அதன்பின், அவர்கள் ஒலிவ மலையில் இருந்தபோது அவர் அவர்கள் நடுவிலிருந்து பரமேறினார்.
- சீஷர்கள் பத்து நாட்களாக ஒன்றுசேர்ந்து ஜெபித்துக்கொண்டு வந்திருந்த பிறகு, பெந்தெகொஸ்தே பண்டிகையின் போது ஆவியானவர் ஒரு பலத்த காற்று வீசுவது போல் அவர்கள் மீது வந்தார்—அப். 2:2
சீஷர்கள் எருசலேமுக்குத் திரும்பிசென்று, ஒன்றுசேர்ந்து ஜெபிக்க ஆரம்பித்தனர். கர்த்தருடைய வாக்குத்தத்தம் நிறைவேறுதலுக்காகக் காத்திருந்து, அவர்கள் பத்து நாட்களுக்கு ஒருமனதில் ஒன்றுசேர்ந்து தொடர்ந்து ஜெபித்தனர். இதற்கிடையில், யூதர்கள் பாஸ்காவுக்கு ஐம்பது நாட்களுக்குப் பிறகு நடந்த பெந்தெகொஸ்தே பண்டிகையைக் கொண்டாட உலகம் முழுவதிலுமிருந்து வந்துக்கொண்டிருந்தனர். அவர்கள் ஜெபித்துக் கொண்டிருந்த வீட்டை திடீரென்று ஒரு பலத்த காற்று நிரப்பிற்று. அக்கினிமயமான நாவுகள் போன்ற நாவுகள் (அப். 2:3) அனைவரின் தலைமீதும் தோன்றின, அப்போது அவர்கள் தாங்கள் ஒருபோதும் கற்றிராத மொழிகளில் பேசத் தொடங்கினார்கள் (நடபடிகள் 2:4 இல் “நாவுகள் [வெவ்வேறு பாஷைகள்]” என்ற வார்த்தைக்கு “பேச்சுவழக்கு வகைகள்” என்று பொருள்—see Acts 2:4, footnote 3).
- உடனடியாக விசுவாசிகள் இந்த உயிர்த்தெழுந்து, பரமேறிய கிறிஸ்துவை அவரது அதிகரிப்புக்காக அறிவிக்க அதிகாரமளிக்கப்பட்டனர்—அப். 2:4-11
அப்போது விசுவாசிகள் புறப்பட்டுச் சென்று, சுவிசேஷத்தைப் பிரசங்கித்தனர். ஆவியானவரால் ஆற்றப்படும் (அப்பட்டமாக சீஷர்கள் கற்றிருக்க முடியாத பாஷைகளாகிய, அத்தனை அதிகமான பார்வையாளர்களின் “தாய் மொழிகளில் [நாவுகளில்]” பேசுதல் போன்ற) வல்லமையான செயல்களின் காரணமாகவும், அவர்கள் எந்த அதிகாரத்தினால் பேசினார்களோ அந்த அதிகாரத்தின் காரணமாகவும், பலர் நம்பவைக்கப்பட்டு, சுவிசேஷத்தில் விசுவாசித்தனர். இவ்வாறு, சபை எருசலேமில் நிறுவப்பட்டது.
- ஆவியானவரின் வெளியூற்றுதல் கொர்நேலியுவின் வீட்டில் புறவினத்தார்கள் மீது நிறைவுசெய்யப்பட்டது—அப். 10:22, 44-45; 11:15-18
யூதர்கள், புறவினத்தார்கள் ஆகிய இருவராலும் உருவாக்கப்பட்ட, ஒரே புதிய மனிதனைப் பூமியில் பெறுவதே, கர்த்தரின் நோக்கமாக இருந்தது. சிலுவையில் கர்த்தர், இந்த இருதிறத்தாரையும் பிரித்த பிரிவினையாகிய நடுச்சுவரை இடித்துத் தள்ளியிருந்தார் (எபே. 2:14-16). கர்த்தர் ராஜ்யத்தின் திறவுகோல்களை பேதுருவிடம் ஒப்படைத்திருந்தார் (மத். 16:19). பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு யூதர்களுக்கான கதவைத் திறக்க முதல் திறவுகோலைப் பயன்படுத்தினான், மேலும் இங்கே நடபடிகள் 10 இல், அவன் கொர்நேலியுவின் வீட்டிலே புறவினத்தார்களுக்கான கதவைத் திறக்க இரண்டாவது திறவுகோலைப் பயன்படுத்தினான். கர்த்தருக்குத் துதி! பூமியின் மக்கள் மத்தியில் இடம்பெற்றிருந்த பிரிவு இல்பொருளாக்கப்பட்டது, ஏனெனில் யூதர்கள், புறவினத்தார்கள் ஆகியோர் அனைவரும் ஒரே ஆவியானவரிலே அதே சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர், அனைவரும் குடிக்கும்படி அந்த ஒரே ஆவியானவர் தரப்பட்டனர் (1 கொரி. 12:12-13).
- பேதுரு ஒரு புறவினத்தானாகிய கொர்நேலியுவின் வீட்டிற்குக் கர்த்தரால் அனுப்பப்பட்டான்—அப். 10:9-27
கொர்நேலியு தேவனில் விசுவாசித்த ஒரு நூற்றுக்கு-அதிபதியாக (ரோம இராணுவத்தில் ஓர் அதிகாரியாக) இருந்தான். எனினும், பேதுரு இன்னும் தன் பழைய கருத்துகளின் கீழ் இருந்ததால், யூதர்கள் புறவினத்தார்களுடன் கலக்க வேண்டும் என்று அவன் நம்பவில்லை. எனவே, பேதுரு ஜெபித்துக்கொண்டிருந்தபோது, அவன் கர்த்தரிடமிருந்து ஒரு மிக முக்கிய தரிசனத்தைப் பெற்றான். பேதுருவின் தரிசனத்தை விரிவாக விளக்க இங்கே நேரம் ஒதுக்குங்கள். மேல்வீட்டில் தன் மதியவேளை ஜெபத்தின் போது, அவனுக்குப் பசியெடுத்தது, அப்போது உணவு தயார்செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது, பேதுரு ஒரு மெய்மறந்த நிலையில் ஒரு தரிசனத்தைப் பெற்றான். அவன் தன் தரிசனத்தில், வானம் திறந்திருக்கிறதையும், நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒருவிதமான பாத்திரம் (கூடு) தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதையும், அதிலே பூமியிலுள்ள சகலவிதமான விலங்குகளும் பறவைகளும் நிறைந்திருக்கிறதையும் கண்டான், அப்போது அவன், எழுந்திருந்து, அடித்துப் புசிக்கும்படி கர்த்தர் தனக்குக் கட்டடளையிடுவதைக் கேட்டான். எனினும், பேதுரு தன் தரிசனத்தில், இந்த விலங்குகள் அசுத்தமானவையாக இருந்தன என்று கருதி, கர்த்தருக்குக் கீழ்ப்படிய மாட்டான். கர்த்தர் அவனுக்கு அளித்த பதில், “தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே” என்பதாக இருந்தது (அப் 10:15). இது பேதுருவின் மெய்மறந்த நிலையில் மூன்று முறை நடந்தது. பேதுரு பார்த்த பாத்திரம் (கூடு) சுவிசேஷத்தை அடையாளப்படுத்துகிறது, மேலும் இந்த விலங்குகள் சுவிசேஷத்தின் மூலமாக இரட்சிக்கப்பட்டு, கர்த்தருடைய இரத்தத்தில் சுத்திகரிக்கப்பட்ட அனைத்து வகையான மனிதர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. முதலில் பேதுரு தன் தரிசனத்தைப் புரிந்துகொள்ளவில்லை (அப். 10:17), ஆனால் இறுதியில் அவன், கர்த்தர் புறவினத்தாரைச் சுத்திகரித்திருந்தார் என்பதை அவனுக்குக் காட்டவே இந்தத் தரிசனம் கொடுக்கப்பட்டது என்பதை உணர்ந்தறிந்தான் (அப். 10:28). பேதுரு தன் தரிசனத்தைப் பெறுவதற்கு முன், கர்த்தர் கொர்நேலியூவுக்கு ஒரு கனவைக் கொடுத்து, பேதுருவைத் தேடி ஆள் அனுப்பி, பேதுருவைத் தன் வீட்டிற்கு வரவழைக்கும்படி அவனிடம் சொன்னார். பேதுரு தன் மெய்மறந்த நிலையிலிருந்து வெளியே வந்த சமயத்தில் தானே, கொர்நேலியுவிடமிருந்து அனுப்பப்பட்ட தூதுவர்கள் வந்துசேர்ந்தனர், மேலும் ஆவியானவராகக் கர்த்தர் பேதுருவிடம் பேசி, அந்தத் தூதுவர்களுடன் செல்லும்படி அவனுக்குச் சொன்னார் (அப். 10:17-20). இவ்வாறு கர்த்தர், புறவினத்தார்களை சரீரத்திற்குள் கொண்டுவருவதற்காக எல்லாம் தயாராக இருக்குமாறு, கொர்நேலியுவின் கனவையும், பேதுருவின் தரிசனத்தையும் ஒருங்கிணைத்தார்!
- ஆவியானவர் பெந்தெகொஸ்தே நாளில் வெளியூற்றப்பட்டிருந்தது போலவே, கொர்நேலியுவின் வீட்டார் மீதும் ஊற்றப்பட்டார்—அப். 10:28-44
பேதுரு கொர்நேலியுவின் வீட்டில் பேசிக்கொண்டிருந்த போது, கர்த்தர் தாம் பெந்தெகொஸ்தே நாளில் ஆவியானவரைப் பொழிந்தருளியிருந்த அதே விதத்தில் ஆவியானவரைப் பொழிந்தருளினார். பெந்தெகொஸ்தே அன்று யூத விசுவாசிகள் அனைவரும் எருசலேமில் வேறு பாஷைகளில் பேசத் தொடங்கியிருந்ததைப் போலவே, கொர்நேலியுவும் அவனது வீட்டார் அனைவரும் வேறு பாஷைகளில் பேசத் தொடங்கினர்.
- கொர்நேலியுவின் வீட்டில் ஆவியானவரின் வெளியூற்றுதல், ஒரேமுறையாக நடக்கும் பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்தை நிறைவுசெய்தது—அப். 2:17, 33
மக்கள் பரிசுத்த ஆவியானவரால் பொருளாட்சிரீதியாக நிரப்பப்படுவதை பல்வேறு முறை அனுபவித்தாலும், இதன் அர்த்தம் ஆவியானவர் திரும்பத் திரும்ப பொழிந்தருளப்படுகின்றார் என்பதல்ல. ஆவியானவர், மாம்சமான யாவர்மேலும் ஒரேமுறையாக பொழிந்தருளப்பட்டிருக்கிறார். “இறுதியில், கிறிஸ்து பெந்தெகொஸ்தே நாளில் தம்மையே பொழிந்தருளினார் (அப். 2:16-18, 33), மேலும் அந்தப் பொழிந்தருளுதல் சபையை உருவாக்கியது. அப்போதிருந்து, அவர் சபைக்குள்ளும், சபையின் மீதும் இருந்து வருகிறார்” (The Advance of the Lord’s Recovery Today, Chapter 6, p. 102). கர்த்தர் ஒருபோதும் இந்த ஆவியானவரைத் திரும்பப் பெறவில்லை. அது இன்னும் சரீரத்தின் மீது இருக்கிறது, அதோடு எப்போதும் இருக்கும். அதை எவ்வாறு பிரயோகிப்பது என்பதை மட்டுமே நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
- வெளியூற்றப்பட்ட ஆவியானவர் இன்று சரீரத்தின் மீது அதன் நகர்வு மற்றும் வேலைக்காக இருக்கிறார்
- நாம் அனைவரும் இந்த ஆவியானவருக்குள் ஞானஸ்நானம் பெற்றிருப்பதால், நாம் அனைவரும் இந்த ஆவியானவரைப் பருக முடியும்—1 கொரி. 12:13
- இந்த ஆவியானவர் சரீரத்தின் மீது இருப்பதால், நாம் சரீரத்திற்காக நகரும்போது, நம்மிடம் இந்தப் பொருளாட்சிரீதியான ஆவியானவர் இருக்கிறார் என்று நாம் திடநம்பிக்கையுடன் இருக்க முடியும்—அப். 1:8
வல்லமையின் ஆவியானவர் சரீரத்தின் மீது அதன் நகர்வுக்காக இருப்பதால், நாம் கர்த்தருக்காகச் செய்யும் எல்லாவற்றிலும் நாம் தைரியமாக இருக்க முடியும். நடபடிகளில், விசுவாசிகள் சுவிசேஷத்தின் நிமித்தம் ஆவியானவரால் வல்லமையான வேலைகள் பலவற்றைச் செய்துகாட்டினர். நாம் கர்த்தருடைய நாமத்தில் மக்களிடம் செல்லும்போது, நாம் எதிரியின் வேலைகளைக் கட்டவும், எதிரியின் ராஜ்யத்திலிருந்து மக்களைக் கட்டவிழ்க்கவும் சரீரத்தின் மீதான இந்தப் பொருளாட்சிரீதியான ஆவியானவரின் அதிகாரத்தைப் பயிற்சிசெய்ய வேண்டும்.
- இந்த ஆவியானவர் சரீரத்தின் மீது இருப்பதால், நாம் மற்றவர்களின் இரட்சிப்புக்காகவும், கிறிஸ்துவின் சரீரத்தின் கட்டியெழுப்புதலுக்காகவும் பேசுவதற்கு தைரியமாக இருக்க வேண்டும்—அப். 2:18
நாம் கர்த்தருக்காக தீர்க்கதரிசனம் உரைக்க எழுந்து நிற்கும்போது, ஆவியானவர் நம் பேசுதலுக்காகப் பொருளாதாரரீதியாக நம்மீது இருக்கிறார் என்பதை நாம் உணர்ந்தறிய வேண்டும். அது நம் ஆவியை விடுவிக்கவும், கர்த்தருடைய நாமத்தில் அதிகாரத்துடன் பேசவும் நமக்கு உதவுகிறது. ஆகையால், நாம் கர்த்தருக்காகப் பேசும்போது, கர்த்தர் ஆவியானவராக நம்முடன் இருக்கிறார் என்று நாம் உற்சாகப்படுத்தப்பட வேண்டும்! சரீரத்தின் மீது பொழிந்தருளப்படும் பொருளாட்சிரீதியான ஆவியானவராகக் கர்த்தரை நாம் அறிய விரும்பினால், நாம் பேச வேண்டும்!
உயிர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: ஆவியானவரின் வெளியூற்றுதலின் இரண்டு நிகழ்வுகள் மூலமாக—யூத விசுவாசிகளுக்கு பெந்தெகொஸ்தே நாளிலும், புறவின விசுவாசிகளுக்கு கொர்நேலியுவின் வீட்டிலும்—முழு சரீரமும் ஒரேமுறையாக ஆவியானவரின் வெளியூற்றுதலை (ஞானஸ்நானத்தை) பெற்றுள்ளது (அப். 2:1–4,17, 10:44–45). எனினும், காலம் மற்றும் எளிமை நிமித்தம், இந்த இரண்டு நிகழ்வுகளின் விவரங்களும் முழுமையாக வெளியே கொண்டுவரப்பட. வேண்டிய அவசியமில்லை. மாறாக, பூமியில் கர்த்தருடைய சரீரத்தின் வேலை மற்றும் நகர்வுக்காக அதன் மீது பொழிந்தருளப்பட்ட ஆவியானவரின் புறம்பான, பொருளாட்சிரீதியான அம்சத்திற்கும், சீஷர்களின் ஜீவனுக்காக அவர்களுக்குள் ஜீவனாக சுவசித்து ஊதப்பட்ட ஆவியானவரின் உள்ளான, சாராம்சரீதியான அம்சத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் காணும்படி இளம்வாலிபர்களுக்கு உதவுவதில் நேரம் செலவிடப்பட வேண்டும். ஆவியானவரின் இந்த இரண்டு அம்சங்களையும் தெளிவுபடுத்த, ஒரு போலீஸ்காரர் புறம்பான ரீதியில் வேலைக்காக தன் சீருடையை அணிந்திருக்கவும், உள்ளான ரீதியில் ஜீவனுக்காக தன் தாகம் தணிக்கப்படவும் வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய உதாரணத்தைப் பயன்படுத்துவது உதவிகரமாக இருக்கக்கூடும். “ஒரு போலீஸ்காரர் தன் தாகத்தைத் தணிப்பதற்காக தன் சீருடையை அணிவதில்லை. ஒரு சீருடையை அணிவதன் மூலம் தாகம் தணிக்கப்பட முடியாது. ஒரு போலீஸ்காரர் தான் வேலைக்குச் செல்ல இருக்கும்போது, அதாவது அவன் ஒரு போலீஸ்காரராக வேலைசெய்ய தயாராக இருக்கும் போது, ஒரு சீருடையைக் கொண்டு தன்னைத் தரிப்பித்துக்கொள்வான். ஒரு போலீஸ்காரர் தன் தாகத்தைத் தணிக்க ஒன்றைப் பருகிவிட்டு, அதன்பின் தன் சீருடை இல்லாமல் வேலைக்குச் சென்றான் என்று வைத்துக்கொள்வோம். அவன் இதைச் செய்தால், அவன் தெருவில் கட்டளையிட முயற்சித்தபோது யாருமே அவனுக்குக் கவனம்செலுத்த மாட்டார்கள். அவன் தன் தாகத்தைத் தணிக்க எவ்வளவுதான் குடித்தாலும்சரி, ஒரு போலீஸ்காரர் காவலராக வேலைசெய்ய இருக்கும் போது அவன் இன்னும் தன் சீருடையை அணிந்திருந்தாக வேண்டும். அவன் தன் சீருடையில் தரிப்பிக்கப்பட்டிருந்தால், மற்றவர்கள் அவனை மதிப்பார்கள். இந்த உதாரணத்தின் மூலமாக நாம், பருகுவதற்கும் தரிப்பிக்கப்படுவதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் காண முடியும். பருகுதல் உள்ளானது, ஆனால் தரிப்பிக்கப்படுதல் ஒரு புறம்பான காரியம்” (Life-study of Acts, Message 7, p. 53). ஒரு போலீஸ்காரர் தன் பணியை நிறைவேற்ற சாப்பிடவும், தன் சீருடையை அணியவும் வேண்டும். அதுபோலவே, நாம் தேவனுடைய பொருளாட்சியை நிறைவேற்ற வேண்டுமானால், இன்று நாம் ஆவியானவரின் இரு அம்சங்களையும் அனுபவிக்க வேண்டும்.
சுவிசேஷ செயலாக்கம்: நடபடிகள் அதிகாரம் இரண்டில் தன் சுவிசேஷம் பிரசங்கித்தலில் பேதுரு, மாம்சமான யாவர்மேலும் ஊற்றப்படும் பரிசுத்த ஆவியானவரின் வெளியூற்றப்படுதலைக் குறித்த யோவேல் தீர்க்கதரிசியை மேற்கோள் காட்டுவதன் மூலம் தொடங்கினான், மேலும் அவன் “கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்” என்று அறிவிப்பதன் மூலம் முடித்தார் (வவ. 17, 21, கிரே.). “[இது] மாம்சமான யாவர்மேலும் தேவன் தம் ஆவியைப் பொழிந்தருளுவதன் விளைவு, கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவதன்மூலம் வருகின்ற அவர்களது இரட்சிப்பே என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. தேவன் தம் ஆவியானவரை வெளியூற்றுதல், தம் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்கென்று கர்த்தருடைய இரட்சிப்பைப் பிரயோகித்தலாக உள்ளது. இரட்சிக்கப்படுவதென்றால் தேவனுடைய புதிய ஏற்பாட்டுப் பொருளாட்சியில் சுவிசேஷத்தின் ஆசீர்வாதமாகிய, இந்த ஆவியானவரைப் பெறுவதாகும் (கலா. 3:2, 5, 14). இந்த ஆவியானவர், நமக்குச் சுவாசமாகவும் (யோவான் 20:22) ஜீவிக்கும் தண்ணீராகவும் உள்ள (யோவான் 4:10, 14) கர்த்தர் தாமே. நம் சுவாசமாக அவரை உள்சுவாசிப்பதற்கும், நம் ஜீவிக்கும் தண்ணீராக அவரைப் பருகுவதற்கும் நாம் அவரை நோக்கிக் கூப்பிட வேண்டும்….நாம் வசனம் 21 ஐ அதன் இடஅமைப்பில் பரிசீலிக்கும்போது, மாம்சமான யாவர்மேலும், அதாவது மனிதர்கள் யாவர்மேலும் ஊற்றப்படும் பரிசுத்த ஆவியானவரின் பொழிந்தருளுதல், மக்கள் கர்த்தருடைய நாமத்தை நோக்கிக் கூப்பிட்டு இரட்சிக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளுக்காக இருப்பதை நாம் காண்கிறோம். ஒருவன் இரட்சிக்கப்பட வேண்டுமானால், அவன் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிட வேண்டும் என்று பவுல் கூறுவதற்கு இதுவே காரணம் (ரோ. 10:12–13).…நாம் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, மற்றவர்கள் இரட்சிக்கப்படுவதற்கு உதவும்போது, கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிட்டு, ‘ஆ கர்த்தராகிய இயேசுவே!’ என்று கூறும்படி அவர்களை நாம் உற்சாகப்படுத்த வேண்டும். ஒரு நபர் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தை எவ்வளவு பலமாகக் கூப்பிடுகிறானோ, அவ்வளவு பலமானதாக அவனுடைய இரட்சிப்பின் அனுபவம் இருக்கும் என்பதை அனுபவத்திலிருந்து நாம் அறிகிறோம்” (Life-study of Acts, Message 9, pp. 71–72).
மிக முக்கியக் காரியங்கள்: ஆவியானவரின் சாராம்சரீதியான மற்றும் பொருளாட்சிரீதியான அம்சங்களை அறிதல் (II.G.1.).
பின்புல வாசிப்பு: The Baptism in the Holy Spirit; God’s New Testament Economy, Chapter 10.
REFERENCES: The Baptism in the Holy Spirit; God’s New Testament Economy, Chapters 7–8, 10; Life- study of Acts, Message 4, pp. 29–31; Message 5, pp. 37–39; Message 6, pp. 43–45; Message 7; Message 9; Message 30, pp. 247–250, 251–252; Message 31, pp. 262–265; ; Acts 2:4, footnotes 2–3; Life-study of Luke, Message 55, pp. 478–480; Life-study of Mark, Message 67; Life-study of John, Message 46, pp. 558–560; Life-study of 1 Corinthians, Message 52, pp. 460–461; Two Spirits: A Lesson Book—Level 3, Lesson 6, pp. 47–54; The Spirit and the Body, Chapter 4, pp. 41–44, The Ministry of the New Testament (Elders’ Training—Book 1), Chapter 5, pp. 59–62; The Scriptural Way to Meet and to Serve for the Building Up of the Body of Christ, Chapter 14; Vital Factors for the Recovery of the Church Life, Chapter 3, pp. 35–39.