உயிர்த்தெழுந்து, பரமேறிய கிறிஸ்துவின் பரப்புதல்
பகுதி 10
✵பாடம் 01 – 09
சவுலின் மனமாற்றம்
குறிக்கோள்: ஒருவன் தேவனுக்குப் பயனுள்ளவனாக இருக்க எவ்வாறு அவரால் அழைக்கப்பட முடியும் என்பதற்கான ஒரு முன்மாதிரியாக சவுலைக் காண்பதற்கு.
பொருட்சுருக்கம்: சவுல் தேவனால் தம் குறிக்கோளுக்காக ஆயத்தப்படுத்தப்பட்ட ஒரு தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரமாக இருந்தான். அவன் எபிரேய மதம், கிரேக்க கலாச்சாரம் மற்றும் ரோம அரசியலின் கீழ் இறையாண்மையாய் வளர்க்கப்பட்டான்; அவன் உயர் கல்வி கற்றறிந்தவன் அதோடு தன் குணத்தில் நன்கு பயிற்சிபெற்றவன்; மேலும் அவன் தன் மதத்திலும், தேவனைச் சேவிப்பதிலும் வைராக்கியமாக இருந்தான். எனினும், ஒரு பரலோக தரிசனம் இல்லாமல், சவுல் குறிதவறவிட்டு, சபையைத் துன்புறுத்தினான். ஆயினும் தமஸ்குவுக்குச் செல்லும் வழியில் கர்த்தர் சவுலுக்குத் தோன்றி, அவனை அழைத்தார். கர்த்தருடைய அழைப்பில், சவுல் இயேசு கிறிஸ்துவையும், அவரது சரீரமாகிய சபையையும் பற்றிய ஒரு வெளிப்பாட்டைப் பெற்றான். கர்த்தரால் அழைக்கப்பட்ட பிறகு, சவுல் தன் மதத்தைக் கைவிட்டுவிட்டு, உடனடியாக இயேசுவை தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவாகப் பிரசங்கிக்கத் தொடங்கினான். சவுல் மற்ற எல்லாவற்றிலிருந்தும் கிறிஸ்துவிடம் மனமாற்றப்பட்டான், மேலும் இந்தக் கிறிஸ்துவை மற்றவர்களுக்குத் தெரிவிக்க பயன்படுத்தப்பட்டான். இவ்விதத்தில் சவுல், நாம் தேவனால் தம் குறிக்கோளுக்காக எவ்வாறு அழைக்கப்படுகிறோம் என்பதற்கான ஒரு முன்மாதிரியாக நமக்கு இருந்தான் (ரோ. 8:28).
பின்புலம்: பவுல் தேவனுடைய ஒரு தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரமாக இருந்தான், தேவனுடைய திட்டத்தைப் பற்றிய ஒரு பரலோக தரிசனத்தைப் பெற்றான், மேலும் பலரை கிறிஸ்துவிடம் மனமாற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்டான். எனினும் இந்தப் பாடத்தில் நீங்கள், ஒவ்வோர் உண்மையான, மீண்டும்-பிறந்த விசுவாசியும் ஓர் ஆசாரியனாகவும், ஒரு ராஜாவாகவும் இருக்க தேவனால் அழைக்கப்பட்டிருக்கிறான் என்பதை நினைவில் வைத்தாக வேண்டும். இவ்வாறு, நாம் இளம் வாலிபர்களிடம் கர்த்தருக்கான அவர்களது சொந்த இறுதியான பயனுள்ளத் தன்மையைப் பற்றி பேசும்போது, அவர்களது ஆவியில் ஒரு சாட்சி இருக்கிறது. (இன்று இளம் வாலிபர்கள் எப்படி தோன்றினாலும்சரி) தேவன் இளம் வாலிபர்கள் ஒவ்வொருவரையும் அழைத்திருக்கிறார் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுங்கள். நாம் இதை, நம் ஆவியில் உள்ள ஓர் உண்மையாக அறிவோம். இந்த அழைப்பைப் பலப்படுத்தவும் அதிதீவிரப்படுத்தவும் நமக்கு தேவனுடைய தொடர்ச்சியான அழைப்பும், மறுதோன்றுதலும் தேவை.
அதிகாரம்: நடபடிகள் 9.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
தர்சுப் பட்டணத்தானாகிய சவுல், தம் குறிக்கோளுக்காக தேவனால் ஆயத்தப்படுத்தப்பட்டு, தேவனால் அழைக்கப்பட்ட ஒரு தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரமாக இருந்தான். அவன் கர்த்தரைச் சேவிக்க ஆரம்பித்தப் பிறகு, அவன் பெயர் பவுல் என்று ஆனது (அப். 13:9). இறுதியில், அப்போஸ்தலனாகிய பவுல் புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களில் பாதிக்கும் மேல் எழுதுவதற்கு தேவனால் பயன்படுத்தப்பட்டான். ஆயினும் பவுல் கர்த்தருடைய ஒரு தலைசிறந்த சேவிப்பவனாக இருந்தது மட்டுமல்லாமல்; அவன் தேவனால் ஒரு சராசரி அழைப்பைப் பெற்ற ஒரு சராசரி விசுவாசியாகவும் இருந்தான். நம் சொந்த அழைப்பைப் பாராட்டுவதற்கு, நாம் தேவன் எவ்வாறு மற்றும் என்ன குறிக்கோளுக்காக சவுலை அழைத்தார் என்பதைப் பார்க்க வேண்டும்.
- சவுல் தேவனுடைய குறிக்கோளுக்காக ஆயத்தப்படுத்தப்பட்ட ஒரு தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரமாக இருந்தான்—அப். 9:15; 26:16; 2 தீமோ. 2:20–21
நடபடிகள் 9:12 இல் கர்த்தர் அனனியாவிடம்,,சவுல் “அனனியா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையும்படி தன்மேல் கைவைக்கவும் தரிசனங்கண்டான்” என்று சொன்னார். அனனியா போக சற்று பயந்தான், “அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன்” என்று இவனிடம் கூறினார் (அப். 9:15-16). “சவுல் கர்த்தருக்கு ஒரு தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரமாக இருந்ததால், அவன் தன் தாயின் கர்ப்பத்திலிருந்தது முதல், அவன் பிரித்தெடுக்கப்பட்டு, கர்தரால் அழைக்கப்பட்டான் (கலா. 1:15). நித்தியத்தில் தம் தெரிந்துகொள்ளுதலின்படி, கர்த்தர் தம்மை துன்புறுத்துகிறவர்களுள் அதிகடுமையானவனை, சுவிசேஷம் பிரசங்கிக்க தாம் கொடுத்த ஆணையை நிறைவேற்றவும், அவன் எதிர்த்துத் துன்புறுத்தியிருந்த வழியை அவனே எடுக்கவும், அவனை ஒரு பாத்திரமாக, ஒரு முன்னணி அப்போஸ்தலனாக ஆக்குவதற்கு இறையாண்மையுள்ளவர், வல்லவர்” (Life-study of Acts, Message 25, p. 208). “9:15 இல் நாம், தர்சுப் பட்டணத்தானாகிய சவுல் ஒரு தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரமாக இருந்ததைக் காண்கிறோம். வேத வாக்கியங்களை வாசிப்பதில் நாம் ஒரு முக்கியமான ஆவிக்குரிய பதமாகிய ‘பாத்திரம்’ என்ற வார்த்தைக்குப் போதுமான கவனம் செலுத்தாமல் இருக்கக்கூடும். ஒரு பாத்திரம் என்பது ஒரு கொள்கலன், எனவே ஒரு கருவி அல்லது ஓர் ஆயுதத்திலிருந்து வேறுபட்டது. பவுலின் நிருபங்களில் பாத்திரங்களின் முக்கியத்துவத்தின் மீது ஒரு வலுவான வலியுறுத்தல் உள்ளது [ரோ. 9:23; 2 கொரி. 4:7; 2 தீமோ. 2:20]….சவுல் தான் ஒரு தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரமாக இருந்தான் என்பதை அனனியாவிடமிருந்துதான் அறிந்திருக்கக்கூடும். தர்சுப் பட்டணத்தானாகிய சவுல் கர்த்தரால் தம் அப்போஸ்தலனாகவும், தம் சேவிப்பவனாகவும், தம் ஊழியக்காரனாகவும் இருக்க தெரிந்துகொள்ளப்பட்டது மட்டுமல்லாமல்; அவன் தம் பாத்திரமாக இருக்கவும் தெரிந்துகொள்ளப்பட்டான். நடபடிகள் 9:15 இல் கர்த்தராகிய இயேசு அனனியாவிடம் இவ்வாறு கூறுவதாகத் தெரிகிறது, ‘சவுல் ஒரு தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரம். அவன் என்னை உள்ளடக்குவான், மேலும் புறவின உலகிற்கு என்னைக் கொண்டுசெல்வதே (தெரிவிப்பதே) அவனது ஊழியமாக இருக்கும்!’ சவுல் ஒரு தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரமாக இருப்பதன் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் பார்க்க வேண்டும்” (Life-study of Acts, Message 26, pp. 216–217).
- சவுல் எபிரேய மதம், கிரேக்க கலாச்சாரம் மற்றும் ரோம அரசியலின் கீழ் இறையாண்மையாய் வளர்க்கப்பட்டான்—அப். 22:3; 26:4-5; 21:39; 22:25-28
“சவுல் ஓர் உயர் கலாச்சாரம் நிறைந்த நகரமாகிய தர்சுப் பட்டணத்தில் பிறந்தான், அங்குள்ள பல்கலைக்கழகத்தில் கிரேக்கக் கல்வியைப் பெற்றான். 22:3 இல் அவன் தான் ‘கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டு’ படித்ததாகக் கூறுகிறான். இது, அவன் ஒரு மாபெரும் ரபியாகிய கமாலியேலிடமிருந்து தன் மதக் கல்வியைப் பெற்றான் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. சந்தேகத்திற்கு இடமின்றி, சவுல் கிரேக்க மற்றும் எபிரேய மொழிகள் இரண்டிலும் ஓர் அறிஞனாக இருந்தான், மேலும் அவன் கிரேக்க கலாச்சாரம் மற்றும் எபிரேய மதம் இரண்டிலும் பயிற்சி பெற்றிருந்தான். மேலும், அவன் ஒரு ரோம குடிமகனாக இருந்தான். அவனுடன் மேற்கத்திய கலாச்சாரத்தின் மூன்று முக்கிய மூலக்கூறுகளை நாம் காண்கிறோம்: எபிரேய மதம், கிரேக்க கலாச்சாரம் மற்றும் ரோம அரசியல். அவன் எபிரேய மதத்தின்படி போதிக்கப்பட்டான், அவன் கிரேக்க கலாச்சாரத்தில் பயிற்சி பெற்றான், மேலும் அவன் ரோமப் பேரரசின் ஒரு குடிமகனாக இருந்தான். அவனது பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி ரோமக் குடிமக்களாக ஆகியிருக்கக்கூடும், மேலும் சவுல் தானே ஒரு ரோமனாகப் பிறந்தான் (22:25-28). எனவே, சவுலுக்கு ஒரு மூன்று மடங்கு தகுதி இருந்தது—கிரேக்க கலாச்சாரத்திலும், எபிரேய மதத்திலும், ரோம அரசியலிலும். கர்த்தர் இறையாண்மையானவர், சகலத்தையும்-அறிந்தவர். படிப்பறிவில்லாத கலிலேய மீனவர்களாக இருந்த பேதுரு, யோவான் ஆகியோரை விட ஸ்தேவான் சிறந்த கல்விபெற்றவனாக தோன்றினான். ஆனால் மேற்கத்திய கலாச்சாரத்தின் மூன்று மூலக்கூறுகளில் சவுல் தகுதிபெற்றதைப் போன்று ஸ்தேவான் தகுதிபெறவில்லை. பிலிப்பியர் 3:5 இல் அவன் தன்னை ‘எபிரெயரில் பிறந்த எபிரெயன்’ என்று விவரிக்கிறான், ஏனெனில் அவன் ஓர் எபிர்ரேயனாகப் பிறந்தான் அதோடு எபிரேய மதத்தில் நன்கு கல்விபெற்றவனாக இருந்தான். தேவனுடைய புதிய ஏற்பாட்டுப் பொருளாட்சியை புறவின உலகிற்குக் கொண்டுவருவதற்கான ஆணையைச் சுமப்பதற்கு அவனைப் போல் வேறு யாரும் தகுதியுடையவர்களாக இருக்கவில்லை (Life-study of Acts, Message 25, pp. 203–204).
- சவுல் உயர் கல்வி கற்றறிந்தவன் அதோடு தன் குணத்தில் நன்கு பயிற்சிபெற்றவன்—அப். 22:3-4
மேற்கண்ட குறிப்பு A இலிருந்து நாம், சவுல் உயர் கல்வி கற்றறிந்தவன் என்பதைக் காண முடிகிறது. அவனது வைராக்கியத்திலிருந்து நாம், அவனிடம் ஒரு வலுவான, ஒழுக்கமான குணம் இருந்தது என்பதைக் காண முடிகிறது. “சவுல் தமஸ்குவுக்கு போகும் வழியில் கிறிஸ்துவால் சந்திக்கப்பட்டதற்கு முன், சந்தேகமேயின்றி, அவன் ஒரு புத்திசாலித்தனமான, மதரீதியான, பக்திவைராக்கியமான, பலமான வாலிபனாக இருந்தான்” (A Young Man in God’s Plan, Chapter 2, p. 21).
- சவுல் தன் மதத்திற்காக வைராக்கியமாக இருந்தான் அதோடு தேவனை சேவிப்பதில் வைராக்கியமாக இருந்தான்—பிலி. 3:6; கலா. 1:13-14
“நடபடிகள் 9:1, ‘சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷர்களுக்கு எதிராக அச்சுறுத்துதலையும் கொலையையும் சுவாசித்துக்கொண்டிருந்து சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்’ என்று கூறுகிறது (கிரே.). ஸ்தேவானின் கொலையை சவுல் அங்கீகரித்தான் (8:1), மேலும் ஸ்தேவானைக் கல்லெறிந்தவர்கள் தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, சவுலின் பாதத்தினருகே வைத்தனர் (7:58). ஒரு துன்புறுத்துபவனாகிய சவுல் ஒரு மிகவும் வலுவான குறிக்கோள் உணர்வைக் கொண்ட ஓர் இளம் வாலிபனாக இருந்தான்” (Life-study of Acts, Message 25, p. 203). எனினும், அவன் கர்த்தரால் ஆதாயப்படுத்தப்படுவதற்கு முன்பு, சவுல் மதத்தால் ஆதாயப்படுத்தப்பட்டான் அதோடு மதத்திலிருந்து கிறிஸ்துவுக்குத் திரும்பும் ஒரு மனமாற்றம் அவனுக்குத் தேவைப்பட்டது. சவுல் வைராக்கியமாக இருந்தான், ஆனால் அவனது வைராக்கியம் தேவனுடைய பொருளாட்சி்க்கு ஒரு முட்டுக்கட்டையாக இருந்தது. சவுல் சபையைத் துன்புறுத்திக்கொண்டிருந்தது மட்டுமல்லாமல், அதைப் பாழாக்கிக்கொண்டிருந்ததாகவும்கூட நடபடிகள் நமக்குச் சொல்கிறது (அப். 8:3).
- சவுல் தேவனுடைய திட்டத்தைப் பற்றிய ஒரு பரலோக தரிசனத்தைப் பெற்றான்—அப். 26:19
“சவுல் தமஸ்குவுக்குச் சென்றுகொண்டிருக்கும் தன் வழியில் இருந்தபோது அவன் அநேகமாக மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம். அவன் ஆர்வமடைந்து இருந்திருக்கக்கூடும், ஒருவேளை ஒரு பரவசத்தில் கூட இருந்திருக்கலாம். சவுல் தனக்குத்தானே இவ்வாறு கூறியிருக்கக்கூடும் ‘இயேசுவின் நாமத்தைக் கூப்பிட்ட அனைவரையும் சிறைப்படுத்தும்படி, நான் பிரதான ஆசாரியர்களிடமிருந்து அதிகாரம் பெற்றிருக்கிறேன். இந்த நாமத்தைக் கூப்பிடுகிற அனைவரையும் கைதுசெய்து, அவர்களை எருசலேமுக்குக் கொண்டுவந்து, அவர்களைச் சிறையில் அடைக்க நான் தமஸ்குவுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன்.’ சவுல் தமஸ்குவை நோக்கிப் பிரயாணம் செய்துகொண்டிருந்த போது கர்த்தராகிய இயேசு அவனை உற்றுக்கவனித்துக்கொண்டிருந்தார். சவுலுக்கு உடனடியாகத் தோன்றுவதற்குப் பதிலாக, கர்த்தர் ‘அவன்…தமஸ்குவுக்குச் சமீபித்த’ வரை காத்திருந்தார் (9:3). அப்போது ‘சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது; அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்’ (9:3-4). வானத்திலிருந்து வந்த ஒளியாலும், அவனைப் பெயர் சொல்லி அழைத்த இந்தக் குரலாலும் சவுல் அதிர்ச்சியடைந்திருக்க வேண்டும். சவுல் தான் வெறுமனே இயேசுவைப் பின்பற்றுபவர்களை மட்டுமே துன்புறுத்திக்கொண்டிருந்ததாக நினைத்தான். இப்போது பரலோகங்களிலிருந்து ஒரு குரல் உண்டாகி, பரலோகங்களில் இருப்பவரை அவன் துன்புறுத்திக்கொண்டிருந்ததாக அவனுக்குச் சொன்னது (Life-study of Acts, Message 25, p. 205).
- சவுல், இயேசுவை இரட்சகராக வெளிப்படுத்தும் ஒரு வெளிப்பாட்டைப் பெற்றான்—அப். 9:3-5
“சவுலுக்கு மாபெரும் ஆச்சரியமாக, அவன் ஒரு பரலோக ஒளியையும், ஒரு பரலோக குரலையும், ஒரு பரலோக நபரையும் அனுபவித்தான். புறத்தூண்டுதலின்றி சவுல், ‘ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே’ என்று கூறினார் (வ. 5). சவுல் அவரை அறியாமலேயேகூட, அவரை ஆண்டவரே என்று அழைத்தான். சவுல் தனக்குத்தானே இவ்வாறு கூறியிருக்கக்கூடும், ‘நான் இயேசுவை ஒருபோதும் துன்புறுத்தியதில்லை. மாறாக, நான் ஸ்தேவானையும், இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் மற்றவர்களையும்தான் துன்புறுத்தினேன். இயேசு கல்லறையில் இருந்ததாக நான் நினைத்தேன், ஆனால் இப்போது அவர் பரலோகங்களிலிருந்து என்னிடம் வருகிறார்'” (Life-study of Acts, Message 25, pp. 205–206). சவுலுக்கு எபிரேய மொழி தெரிந்திருந்ததால், “இயேசு”—நம் இரட்சகராகிய யெகோவா என்ற நாமத்தின் உட்கருத்தை அவன் நிச்சயமாகவே புரிந்துகொண்டான். மேலும், இயேசு பரலோகங்களிலிருந்து சவுலிடம் பேசி, சவுல் அவரை “ஆண்டவரே” என்று அழைத்ததால், இந்த இயேசு நிஜமாகவே உயிர்த்தெழுந்திருந்தார் என்பதைச் சவுல் அறிய ஆரம்பித்தான். நிச்சயமாகவே சவுல் கிறிஸ்துவின் மனித வாழ்க்கை மற்றும் சிலுவைமரணத்தோடு பரீட்சியமாக இருந்தான்; இந்த விஷயங்கள் பொது அறிவாக இருந்தன (அப். 26:26). இவ்வாறு, இயேசு பரலோகங்களிலிருந்து அவனுக்குத் தோன்றியதன் மூலம், சவுல் மாம்சமாகுதல், மனித வாழ்க்கை, சிலுவைமரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றினூடாய்க் கடந்துசென்றிருந்த இந்தப் பரமேறிய கிறிஸ்துவைப் பற்றிய ஒரு வெளிப்பாட்டைப் பெற்றான். “லூக்கா, சவுலின் மனமாற்றம் தொடர்பான விவரங்களை நமக்குத் தரவில்லை. ஆயினும்கூட, கர்த்தராகிய இயேசு சவுலுக்கு ஒரு போதுமான சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார் என்பதை நாம் காண முடிகிறது. சவுல் உண்மையில் சுவிசேஷத்திற்குச் செவிசாய்த்தான். இதை நாம் எவ்வாறு கூற முடியும் என்று சிலர் யோசிக்கக்கூடும். வானத்திலிருந்து வந்த குரல் சிலுவைமரணம், மீட்கும் இரத்தம், அல்லது உயிர்த்தெழுதல் பற்றி எதுவும் கூறவில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டக்கூடும். எனினும், இயேசு என்ற நாமமே ஒரு போதுமான சுவிசேஷம் என்பதை நாம் உணர்ந்தறிய வேண்டும். சவுல் ஒரு பாவியாக, ஓர் எதிரியாக இருந்தான், ஆனால் அவனுக்கு எபிரேயு மற்றும் கிரேக்கம் இரண்டும் தெரிந்ததால், இந்த நாமத்தின் உட்கருத்தை அவன் அறிந்திருக்க வேண்டும். இயேசு என்றால் இரட்சகராகிய யெகோவா என்பது பொருள் என்று அவன் உணர்ந்தறிந்திருக்க வேண்டும். இது சுவிசேஷம் இல்லையா? நாம் இயேசுவைப் பற்றி கேள்விப்படும்போது நாம் சுவிசேஷத்தைக் கேள்விப்படவில்லையா? இரட்சகராகிய யெகோவா யார்? இயேசு என்னும் நாமத்தின் அர்த்தத்தைப் பவுல் நிச்சயமாகவே அறிந்திருந்தான்” (Life-study of Acts, Message 25, pp. 206–207).
- சவுலுக்குத் தன்னில் கிறிஸ்து வெளிப்படுத்தப்பட்டிருந்தார்—கலா. 1:15-16
பின்னர், கலாத்தியர் புத்தகத்தில், பவுல் தன் மனமாற்ற அனுபவத்தை இவ்வாறு விவரித்தான்: “தேவன்…தம்முடைய குமாரனை…என்னில் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்த போது” (கலா. 1:15–16). சவுல் கிறிஸ்துவை அறிந்து (பிலி. 3:10), கிறிஸ்துவை ஜீவனாகப் பெற்று (கொலோ. 3:4; யோவான் 20:31; ரோ. 6:23), தேவனுடைய ஒரு பிள்ளையாக ஆகுமாறு (யோவான் 1:12; ரோ. 8:16) அவனுக்குத் தன்னில் கிறிஸ்து வெளிப்படுத்தப்பட்டிருந்தார். கிறிஸ்து நம்மில் வெளிப்பட்டிருப்பதன் அர்த்தம் இதுதான். நம்மை இரட்சிப்பதில் தேவனின் இலக்கு, கிறிஸ்து நமக்கு எல்லாமுமாய் இருப்பார் என்பதும், நாம் கிறிஸ்துவை அவரது வெளியாக்கத்திற்காக வாழ அவரைக் கொண்டு நிரப்பப்படுவோம் என்பதுமே (பிலி. 1:21).
- தலையாகிய கிறிஸ்துவையும், தம் சரீரமாகிய கிறிஸ்துவின் பல அவயவங்களையும் உள்ளடக்கிய கூட்டுக் கிறிஸ்துவைப் பற்றிய ஒரு வெளிப்பாட்டை சவுல் பெற்றுக்கொண்டான்—அப். 9:5–6, 10–12
“9:4 இன் படி, கர்த்தராகிய இயேசு சவுலிடம், ‘நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?’ என்று கேட்டார். இது ஒரு கூட்டு “என்னை”, இது கர்த்தராகிய இயேசுவையும் அவரது விசுவாசிகள் எல்லாரையும் உள்ளடக்குகிறது. சவுலுக்கு இந்த வெளிப்பாடு இருக்கவில்லை, அவன் தான் துர்உபதேசம் என்று கருதிய அந்த வழியில் இருந்த ஸ்தேவானையும், இயேசுவைப் பின்பற்றுகிற மற்றவர்களையும் தான் துன்புறுத்திக்கொண்டிருந்ததாக நினைத்தான் (24:14). அவர்கள் இயேசுவிலுள்ள தங்கள் விசுவாசத்தின் மூலம் அவருடன் இணைக்கப்பட்டு, அவருடன் ஒன்றாயிருந்ததால், அவன் அவர்களை துன்புறுத்தியபோது, அவன் இயேசுவை துன்புறுத்தினான் என்பதை அவன் அறியவில்லை. அவன் தான் பரலோகத்திலுள்ள ஒருவரைத் தொட்டதாக ஒருபோதும் நினைக்காமல், தான் பூமியிலுள்ள மக்களை துன்புறுத்திக்கொண்டிருந்ததாகக் கருதினான். அவனுக்குப் பெரிய அதிர்ச்சியாக, அவன் துன்புறுத்திக் கொண்டிருந்தவர் தாம்தான் என்றும், தம் பெயர் இயேசு என்றும் வானத்திலிருந்து ஒரு சத்தம் அவனிடம் கூறியது. அவனுக்கு இது இந்தப் பிரபஞ்சத்தில் ஓர் ஒப்பற்ற வெளிப்பாடாக இருந்தது! இதன்மூலம், கர்த்தராகிய இயேசுவும், அவரது விசுவாசிகளும் ஒரே மாபெரும் நபர்—இந்த அற்புதமான “என்னை” என்பதை அவன் காணத் துவங்கினான். இது தேவனுடைய மாபெரும் பரமஇரகசியமாகிய கிறிஸ்துவையும் சபையையும் குறித்த (எபே. 5:32) தன் வருங்கால ஊழியத்திற்காக அவனில் பதிக்கப்பட்டிருக்கவும் அவனைப் பாதித்திருக்கவும், அவனது ஒப்பற்ற ஊழியத்திற்காக ஒரு திடமான அஸ்திவாரத்தை இட்டிருக்கவும் வேண்டும்” (Life-study of Acts, Message 25, p. 206). “இயேசு மரித்து, உயிர்த்தெழுப்பப்பட்ட இரட்சகராகிய யெகோவா என்பதை சவுல் கண்டது மட்டுமல்ல; கர்த்தராகிய இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுடன் ஒன்றாக இருக்கிறார் என்பதையும் அவன் கண்டான். சவுல் தனக்குத்தானே, ‘நான் இயேசுவைத் துன்புறுத்தவில்லை—அவரைப் பின்பற்றுபவர்களைத் துன்புறுத்தினேன். ஆனால் நான் அவரைத் துன்புறுத்தியதாக அவர் என்னிடம் கூறினார். அவர் தம்மைப் பின்பற்றுபவர்களுடன் ஒன்றாயிருக்கிறார் என்பதே இதன் அர்த்தமாயிருக்க வேண்டும்’ என்று அவன் கூறியிருப்பான். இவ்விதத்தில், சவுல் சரீரத்தைக் காண முற்பட்டான். அவன் கிறிஸ்துவின் இரட்சிப்பைப் பற்றி மட்டுமல்லாமல், கிறிஸ்துவின் சரீரத்தைப் பற்றியும் ஒரு செய்தியைக் கேட்டான். கர்த்தர் சவுலுக்குத் தோன்றியபோது, அவர் அவனிடம் ‘நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?’ என்று கேட்டார். ‘சவுலே, இந்த ‘என்னை’ தனிப்பட்டரீதியில் என்னையும், கூட்டானரீதியில் என் சரீரத்தையும் உள்ளடக்கியது. தனிப்பட்டரீதியில் நான் வானத்தில் இருக்கிறேன், ஆனால் கூட்டானரீதியில் சரீரம் பூமியில் உள்ளது. நீ என்னைப் பின்பற்றுபவர்களைத் துன்புறுத்தியபோது, நீ என் சரீரத்தைத் துன்புறுத்தினாய். என் சரீரத்தைத் துன்புறுத்துவது என்னைத் துன்புறுத்துவதே’ என்று கூறியதாகத் தோன்றுகிறது” (Life-study of Acts, Message 26, pp. 212–213).
- சவுல் மற்ற எல்லாவற்றிலிருந்தும் கிறிஸ்துவிடம் மனமாற்றப்பட்டான், மேலும் இந்தக் கிறிஸ்துவை மற்றவர்களுக்குத் தெரிவிக்க தேவனால் பயன்படுத்தப்பட்டான்—பிலி. 3:7–9, 11
சவுல் ஒரு திறமையான இளம் வாலிபனாக இருந்தான், இவன் யூத மதத்திற்காக பக்திவைராக்கியமாகவும், யூத மதத்தால் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டும் இருந்தான். யூத மதமே அவனுடைய வாழ்க்கையாக இருந்தது. எனினும், தேவனுடைய நித்திய திட்டமும், தேவனுடைய பொருளாட்சியும் யூத மதத்துடன் தொடர்புடையவையாக இருக்கவில்லை, மாறாக சாட்சாத்துக் கிறிஸ்துவுடன் தாமே தொடர்புடையவையாக இருந்தன. சவுல் தேவனுடைய பொருளாட்சியில் பங்குகொள்ளவும், தேவனுடைய திட்டத்தில் பயனுள்ளவனாக இருக்கவும், அவன் அந்த மதத்திலிருந்து கிறிஸ்துவிடம் மனமாற்றப்பட வேண்டியிருந்தது. மனமாற்றப்படுவதென்றால் நம் திசை மற்றும் இலக்கில் ஒரு மாற்றத்தைப் பெறுவதாகும். பவுல் பக்திவைராக்கியமாக யூத மதத்திற்குரிய விஷயங்களை ஆசையாய்ப் பின்தொடர்வதிலிருந்து சாட்சாத்துக் கிறிஸ்துவையே ஆசையாய்ப் பின்தொடர்வதற்கு மனமாற்றப்பட்டான் (பிலி. 3:5–7). மேலும், பவுல் கிறிஸ்துவால் ஆக்கிரமிக்கப்படுவதையே தன் புதிய இலக்காக ஆக்கினான் (பிலி. 1:21; 3:8-11). இவ்வாறு, கிறிஸ்துவை மற்றவர்களுக்குத் தெரிவிக்க தேவன் பவுலைத் தம் தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரமாகப் பயன்படுத்த முடிந்தது (அப். 9:15; ரோ. 15:15).
- சவுல் தன் மதத்தைக் கைவிட்டுவிட்டு, உடனடியாக இயேசுவை தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவாகப் பிரசங்கிக்கத் தொடங்கினான்—அப். 9:20-22; பிலி. 3:7; மத். 16:16; யோவான் 20:31
நடபடிகள் 9:19-20 மற்றும் 22, “…சவுல் தமஸ்குவிலுள்ள சீஷருடனே சிலநாள் இருந்து, உடனடியாக (தாமதமின்றி), கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்….சவுல் அதிகமாகத் திடன்கொண்டு, இவரே கிறிஸ்துவென்று திருஷ்டாந்தப்படுத்தி, தமஸ்குவில் குடியிருக்கிற யூதர்களைக் கலங்கப்பண்ணினான்” என்று கூறுகின்றன (கிரே.). “அநேகமாக தர்சுப் பட்டணத்தானாகிய சவுலைப் போல வேறு யாருமே இதுவரை கர்த்தராகிய இயேசுவிடம் இவ்வளவு அதிகச் சீக்கிரமாகத் திரும்பியிருக்க மாட்டார்கள். இங்கு ‘உடனடியாக’ என்ற வார்த்தை உட்கருத்துவாய்ந்தது. ஒரு மிகக் குறுகிய காலத்தில், கர்த்தரை நோக்கிய அவனது திருப்பம் முற்றிலும் நிறைவடைந்தது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. சவுல் ஒரு துன்புறுத்துபவனாக இருந்தான், ஆனால் அவன் கர்த்தரிடம் திரும்பி, கிறிஸ்துவை உள்ளடக்குவதற்கும், அவரை மற்றவர்களுக்கு ஊழியம்செய்வதற்குமான ஒரு பாத்திரமாக ஆனான்” (Life-study of Acts, Message 27, p. 219).
- கிறிஸ்துவை மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்கான ஒரு பாத்திரமாக சவுல் தேவனால் பயன்படுத்தப்பட்டான்—அப். 9:15
- கிறிஸ்துவை வாழ்வதற்காக நாம் கிறிஸ்துவுடன் ஒன்றாயிருக்கவும், கிறிஸ்துவால் நிரப்பப்படுவதும், சாட்சாத்துக் கிறிஸ்துவால் தாமே ஆக்கிரமிக்கப்படுவதுமே தேவனின் திட்டம்—1 கொரி. 6:17; பிலி. 1:21; 3:7–9, 11; கலா. 2:20.
கிறிஸ்துவை வாழ்வதற்காக நாம் கிறிஸ்துவுடன் ஒன்றாயிருக்கவும், கிறிஸ்துவால் நிரப்பப்படுவதும், சாட்சாத்துக் கிறிஸ்துவால் தாமே ஆக்கிரமிக்கப்படுவதுமே தேவனின் திட்டம் (A Young Man in God’s Plan, Chapter 3, pp. 29–32 ஐ பார்க்கவும்). கிறிஸ்துவைப் பற்றிய ஒரு பரலோக தரிசனத்தைப் பார்த்த பிறகு, சவுல் தேவனுடைய திட்டத்திற்காக கிறிஸ்துவுடன் தன்னையே இணைத்துக் கொண்டான். சவுல் தான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்தக்கூடுமாறு, தனக்கு லாபமாயிருந்த அனைத்தையும் நஷ்டமாகவும், கழிவுப்பொருளாகவும் எண்ணினான் (பிலி. 3:7–9, 11). அவன் கிறிஸ்துவைத் தன் இலக்காக ஆசையாய்ப் பின்தொடர்வதற்காக எல்லாவற்றையும் கைவிட்டான் (பிலி. 3:12–14). பவுல் தன் மனமாற்றத்திற்குப் பிறகு, கிறிஸ்துவை வாழ்ந்த ஒருவனாக இருக்கத் தன்னையே ஒப்புக்கொடுத்தான் (பிலி. 1:21; கலா. 2:20).
- தேவனுடைய திட்டத்தைப் பற்றிய ஒரு பரலோக தரிசனம் நமக்குத் தேவை, மேலும் நாம் பலவற்றிலிருந்து சாட்சாத்துக் கிறிஸ்துவிடம் தாமே மனமாற்றப்பட வேண்டும்—அப். 26:19
எல்லாவற்றிலிருந்தும் கிறிஸ்துவிடம் திரும்பிய தன் மனமாற்றத்தில், சவுல் நம் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கிறான். நாம் அனைவரும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட, அவரால் அழைக்கப்பட்ட பாத்திரங்கள். நாம் தேவனுக்குப் பயனுள்ளவர்களாக இருக்கிறோமா இல்லையா என்பது நாம் தேவனுடைய திட்டத்திற்காக அவருடன் சேர்ந்து செல்ல எவ்வளவு சித்தமுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதைப் பொறுத்தது. முதலில், நமக்கு தேவனுடைய திட்டத்தைப் பற்றிய ஒரு பரலோக தரிசனம் தேவை. இரண்டாவதாக, நாம் பலவற்றிலிருந்து சாட்சாத்துக் கிறிஸ்துவிடம் தாமே மாற்றப்பட வேண்டும். அப்போது நாம் தேவனுடைய பொருளாட்சியில் அவருக்குப் பயனுள்ளவர்களாக இருக்க முடியும் (A Young Man in God’s Plan, Chapters 2–3 ஐ பார்க்கவும்).
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: “நீங்கள் மறுபடி ஜெநிப்பிக்கப்பட்டு இருக்கலாம், ஆனால் ஒருவேளை இன்றுகூட பாரம்பரிய காரியங்களிலிருந்தும், மத ரீதியான காரியங்களிலிருந்தும் ஜீவிக்கின்ற கிறிஸ்துவினிடமாக ஒரு நிஜமான, நடைமுறைக்குரிய மனமாற்றம் உங்களுக்குத் தேவையிருக்கக்கூடும். ஒரு நபர் ஒருமுறை மட்டுமே மறுபடி ஜெநிப்பிக்கப்பட முடியும். ஆனால் என் அனுபவத்தில் நான் பல முறை மனமாற்றங்களைப் பெற்றிருக்கிறேன் என்று என்னால் சாட்சி பகிர முடியும். மறுபடி ஜெநிப்பிக்கப்படுதல் ஒரேமுறையாக நடந்துவிடுகிறது, ஆனால் மனமாற்றம், உங்கள் வாழ்க்கையில் ஏதோவொரு மாற்றத்தைக் கொண்டிருத்தல், ஒரேமுறையாக நடந்துவிடுவதில்லை….உங்கள் வாழ்க்கையிலுள்ள ஏதோவொன்று கிறிஸ்துவினுடைய இடத்தை எடுத்து கொண்டிருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் பரிசீலிக்க வேண்டும். கிறிஸ்துவை விட அதிக முக்கியமான ஒன்று உங்கள் வாழ்க்கையில் இருக்கிறதா? அப்படியிருந்தால், நீங்கள் இந்தக் காரியத்தில் இருந்து கிறிஸ்துவினிடத்திற்கு மனமாற்றப்பட வேண்டும். மறுபடிஜெநிப்பிக்கப்படுதல் ஒரு மாற்றம், ஆனால் கிறிஸ்தவர்களாகிய நமக்கு மாற்றம் என்பது ஒரே முறை நடந்துமுடிந்துவிடுவதில்லை. நமக்குப் பல மாற்றங்கள் தேவை. எதுவும், அது எவ்வளவு நல்லதாக இருந்தாலும் சரி, உங்கள் வாழ்க்கையில் கிறிஸ்துவினுடைய இடத்தை எடுத்துக்கொண்டு, உங்கள் வாழ்க்கையில் கிறிஸ்துவை பதிலீடு செய்துகொண்டு, உங்களுக்கும் கிறிஸ்துவுக்கும் இடையே ஓர் இடையூறாக, ஒரு தடையாக ஆகமுடியும். நாமெல்லாரும் கிறிஸ்துவல்லாத எல்லாவற்றிலும் இருந்து கிறிஸ்துவினுடைய ஜீவிக்கின்ற நபரிடம் மாற்றப்படுவோமாக” (A Young Man in God’s Plan, Chapter 3, pp. 26, 29).
சுவிசேஷ செயலாக்கம்: நீங்கள் இயேசுவை சந்தித்திருக்கிறீர்களா? நீங்கள் உங்களில் திடநம்பிக்கையாய் இருந்து, உங்கள் சொந்தக் கண்ணோட்டம் ஒவ்வொரு காரியத்திலும் கூரியதாகவும் தெளிவாகவும் இருப்பதாகக் கருதினால், நீங்கள் இன்று கிறிஸ்துவிடம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். கற்றறிந்தவனாகவும், திறமையானவனாகவும், தேவனைப் பற்றிய தன் மத நம்பிக்கைகளில் கூட முழுமையானவனாகத் தன்னைத்தானே கருதின சவுல் என்ற பெயருள்ள ஓர் இளம் வாலிபனை வேதாகமம் விவரிக்கிறது. ஆயினும் அவனுடைய சகல திறமையும் பலமும் இருந்தபோதிலும், அவன் கர்த்தரை அறியாதது மட்டுமல்லாமல், அவரைத் துன்புறுத்தவும் செய்தான் (அப். 9:4-5). கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிட்ட அனைவரையும் கட்டிப்போட சவுல் தன்னால் முடிந்த மதரீதியானதைச் செய்துகொண்டிருந்தபோது, இந்த ஜீவனுள்ள கர்த்தராகிய இயேசு சவுலுக்குத் தம்மையே வெளிப்படுத்தினார். தான் தேவனைப் பற்றி மிகவும் தெளிவாக இருந்ததாக நினைத்த சவுல், கிறிஸ்து தம் இரக்கத்தில் அவன் மீது பிரகாசித்து, அவனிடம் பேசிய வரை, உண்மையில் இருளில் உள்ள ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டிருந்தான். இது இந்த இளம், வலிமையான, கற்றறிந்த, கலாச்சாரமுள்ள, மதரீதியான சவுலை தரையில் விழச் செய்தது. தன்னிடம் பேசியவர் தேவனே என்பதை சவுல் உணர்ந்தறிந்தான், ஆயினும் அது சவுல் அறிந்த விதமான தேவன் அல்ல. ஆகவே சவுல், “ஆண்டவரே, நீர் யார்?” என்று கேட்டான். கர்த்தர், “நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே” என்று பதிலளித்தார் (அப். 9:5). அந்த ஒளி அவனைக் குருடாக்கிய அளவிற்கு, அது மிகவும் பிரகாசமாக இருந்தது. முன்பு, அவனிடம் எல்லாவற்றையும் கையாள ஒரு வழி இருந்தது; அவன் தன் பார்வை மிகவும் தெளிவாக இருந்ததாக நினைத்தான். இப்போது சவுல், தான் ஆவிக்குரிய ரீதியில் குருடனாக இருந்து வந்திருந்ததை உணர்ந்தறிந்தான். பின்னர் கர்த்தர் சவுலிடம், அனனியா என்ற பெயருள்ள ஓர் எளிய சீஷனால் போதிக்கப்படும்படி நகரத்திற்குள் போகச் சொன்னார். அனனியா வந்தபோது, சவுலின் கண்களிலிருந்து செதிள்கள் போன்ற ஒன்று விழுந்தது. அவன் தன் பார்வையைப் பெற்று, கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிட்டு ஞானஸ்நானம் பெற்றான் (அப். 9:18; 22:16). நீங்கள் இயேசுவை சந்தித்திருக்கிறீர்களா? அவர் உங்கள் மீது பிரகாசித்திருக்கிறாரா? கிறிஸ்து இல்லாத உங்கள் “பார்வை” குருட்டுத்தன்மை என்பதை நீங்கள் உணர்ந்தறிவதற்கு அவர் வழிவகுத்திருக்கிறாரா? இன்று உங்கள் நிலைமை, நீ விழுந்துபோய் இருளில் இருக்கிறீர்கள் என்பதாக இருந்தாலும், தேவன் உங்கள் மீது கோபமாக இல்லை. அவர் சரியாக இப்போதே உங்களை அழைக்கின்றார். உங்கள் நிலைமையைக் கர்த்தரிடம் அறிக்கையிடுங்கள், இரட்சிக்கப்படுவதற்கு அவருடைய நாமத்தைக் கூப்பிடுங்கள் (ரோ. 10:13), மேலும் இந்த இனிமையான மற்றும் ஜீவனுள்ள கர்த்தராகிய இயேசுவை சந்தியுங்கள்.
மிக முக்கியக் காரியங்கள்: கர்த்தருக்குத் தனித்தனியாக பதிலளித்தல்—கர்த்தருடைய தனிப்பட்ட அழைப்பின் அடிப்படையில் அவரை அறிதலும், நேசித்தலும், அவருக்கு நம்மையே அர்ப்பணித்தலும் (III.C.3.); நாம் நம் உயிர்களைக் கொடுக்க முடியக்கூடிய அதி உயர்ந்த விஷயமாக தேவனுடைய நித்திய குறிக்கோள் இருத்தல் பற்றிய ஒரு தரிசனத்தின் அடிப்படையில் கர்த்தரை அறிதலும், நேசித்தலும், அவருக்கு நம்மையே அர்ப்பணித்தலும் (III.C.5.); உங்கள் இலக்குகளையும், இறுதியில் உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளையும் நிறைவேற்ற உங்கள் பாத்திரத்தை அதி சிறந்த முறையில் தயார்ப்படுத்தும் மனித மற்றும் ஆவிக்குரிய கல்வியையும் பயிற்சியையும் நாடுதல் (IV.A.3.).
பின்புல வாசிப்பு: Life-study of Acts, Messages 25–26; A Young Man in God’s Plan, Chapters 2–3.
REFERENCES: Life-study of Acts, Messages 25–27; A Young Man in God’s Plan, Chapters 2–3.