உயிர்த்தெழுந்து, பரமேறிய கிறிஸ்துவின் பரப்புதல்
பகுதி 10
✵பாடம் 01 – 09
ஐரோப்பாவிற்குள் பரப்புதலுக்காக ஆவியானவரால் வழிநடத்தப்படுதல்
குறிக்கோள்: ஐரோப்பாவிற்குள் கர்த்தரின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நகர்வை முன்னெடுத்துச் செல்ல பவுல் எவ்வாறு ஆவியானவரால், இன்னும் ஆவியானவரின் தடைபண்ணுதலால்கூட வழிநடத்தப்பட்டான் என்பதைக் காண்பதற்கு.
பொருட்சுருக்கம்: அந்தியோகியாவிலிருந்து தொடங்கி, இந்த ஆவியானவர் பவுலாலும், அவனது உடன்-வேலையாட்களாலும் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான ஊழியப் பயணங்களை துவக்கிவைத்தார். முதலாம் பயணத்தின் போது எழுப்பப்பட்டிருந்த, கலாத்தியாவில் உள்ள சபைகளைப் பவுல் மீண்டும் சந்தித்ததற்கு முந்தைய இரண்டாம் பயணத்தின் போது, அவன் சுவிசேஷத்தை மேலும் பரவச்செய்ய தீர்மானித்தான். ஒரு படிப்படியான வழியில் ஆவியானவரின் வழிநடத்துதலைப் பின்பற்றுவதன் மூலம், பவுல் இறுதியில் ஐரோப்பாவின் ஒரு பகுதியான மக்கதோனியாவிற்கு வழிநடத்தப்பட்டான், அங்கு ஒரு சபை பிலிப்பி பட்டணத்தில் எழுப்பப்பட்டது. இவ்வாறே கர்த்தருடைய நகர்வு ஒரு புதிய கண்டத்திற்குப் பரவியது. ஆவியானவரின் வழிநடத்துதலைப் பெறுவதற்கான பவுலின் திறன் காரணமாகவே, அவன் இந்த மாபெரும் நிகழ்விற்குக் கர்த்தரால் பயன்படுத்தப்பட இயன்றான். பெரும்பாலும் கர்த்தர் தம் தடுத்தல், தம் தடைசெய்தல் மூலம் நம்மை வழிநடத்துகிறார். கர்த்தர் நமக்கு இத்தகைய ஒரு ஜீவனுள்ள “சாலை வரைபடமாக” இருக்க விரும்புகிறார்; சேருமிடத்தை நம்மிடம் சொல்வதற்குப் பதிலாக, பயணம் முழுவதும் நாம் அவரைச் சார்ந்திருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இவ்விதமாய் நாம் கர்த்தரைப் பின்பற்றக் கற்றுக்கொண்டால், அவர் தம் குறிக்கோளுக்காக நம்மைப் பயன்படுத்த இயல்வார், மேலும் நாம் கர்த்தருடைய நகர்வில் இருக்கிறோம் என்ற சமாதானமும் திடநம்பிக்கையும் நம்மிடம் எப்போதும் இருக்கும்.
பின்புலம்: ஒவ்வோர் இளம் வாலிபனும் தங்கள் ஆவிக்குள் இருக்கும் ஜீவன் மற்றும் சமாதானத்தின் உணர்வைப் பின்பற்றுவதன் மூலம் கர்த்தரின் வழிநடத்துதலை அனுபவிக்க முடியும். என்ன விதமான கூட்டாளிகள் இருக்க வேண்டும் என்று முடிவெடுப்பதில் அல்லது கலந்துகொள்வதற்கான ஓர் இறுதியான கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதில், இளம் வாலிபர்கள் தங்கள் வாழ்க்கையின் விவரங்களில் கர்த்தரால் வழிநடத்தப்படுவதற்குக் கற்றுக்கொள்ளலாம்.
அதிகாரம்: நடபடிகள் 16.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
இந்தப் பாடத்திற்கு சேவிப்பவர்கள் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் ஆசியா மைனரின் ஒரு வரைபடத்தைப் படிக்க வேண்டும். பாடத்தின் போது நடபடிகள் 16:1-12 இல் பவுலின் பயணவழியை உதாரணங்காட்டி விளக்குவதற்கு ஒரு பெரிய வரைபடம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.
- பவுலின் முதல் ஊழியப் பயணம் அவனை அந்தியோகியாவிலிருந்து ஆசியா மைனருக்கு அழைத்துச் சென்றது—அப். 13:2–14:27
ஒரு சுருக்கமான மற்றும் பொதுவான வழியில், ஆசியா மைனருக்கான பவுல் மற்றும் பர்னபாஸின் பயணத்தைக் கண்டறியவும். தங்கள் நேரத்தில் பெரும்பாலானவை எவ்வாறு கலாத்தியாவில் செலவிடப்பட்டது என்பதைக் குறிப்பிடுங்கள், இது ஒரு பிராந்தியம் (ஒரு நகரம் அல்ல), இதற்குப் பவுல் பின்னர் கலாத்தியர் புத்தகத்தை எழுதினான். இந்த முதல் பயணத்திற்குப் பிறகு, அவர்கள் மகிழ்ச்சியுடன் அந்தியோகியாவுக்கு, அதாவது தங்கள் “சொந்த சபைக்கு” திரும்பினர்.
- தன் இரண்டாவது ஊழியப் பயணத்தில், பவுல் தன் முதல் பயணத்தின் போது நிறுவப்பட்டிருந்த சபைகளை மீண்டும் சந்தித்தான்—அப். 15:36-16:5
இறுதியில் பவுலும் பர்னபாவும், தங்கள் முதல் பயணத்தின் போது எழுப்பப்பட்டிருந்த சபைகளை மீண்டும் சந்திப்பதற்கான சமயம் வந்தது என்று உணர்ந்தனர். எனினும், பர்னபாவுக்கும் பவுலுக்கும் ஒரு கடுமையான கருத்துவேறுபாடு ஏற்பட்டது, அப்போது பர்னபா பவுலை விட்டு சென்றான். இந்த இரண்டாவது பயணத்தில் தன்னுடன் செல்ல பவுல் சீலாவைத் தெரிந்துகொண்டான். பின்னர் அவர்கள், முதல் பயணத்தின் போது எழுப்பப்பட்டிருந்த சபைகளை மீண்டும் சந்திக்கப் புறப்பட்டுச் சென்றான்.
- சபைகளை மீண்டும் சந்தித்தப் பிறகு, பவுல் சுவிசேஷத்தில் தன் நகர்வுக்காக ஆவியானவரால் வழிநடத்தப்பட்டான்
இந்தப் பாடத்தின் மீதமுள்ள பகுதியானது அப்போஸ்தலர் 16:6-10 ஐ குவிமையமாகக் கொண்டுள்ளது. (தெர்பையில் உள்ள சபையை மீண்டும் சந்திக்கையில், அங்கே பவுல் தீமோத்தேயுவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தான் என்பதை நீங்கள் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கக்கூடும்.)
- ஆசியாவில் வார்த்தையைப் பேசாதபடி, பரிசுத்த ஆவியானவர் பவுலை தடைபண்ணியிருந்தார்—அப். 16:6
ஆசியாவிற்குள் முன்னேறாதபடி ஆவியானவர் பவுலை தடைபண்ணியிருந்தார், எனவே பவுல் தான் சபைகளைச் சந்தித்து முடித்தப் பிறகு சுவிசேஷத்துடன் முன்னோக்கிச் செல்ல இருந்தான் எனில், அவன் வடக்கே செல்ல வேண்டியிருந்தது. (இங்கே “ஆசியா” என்பது முழு கண்டத்தையும் குறிக்கவில்லை, மாறாக மேற்கு ஆசியா மைனரில் உள்ள ஒரு சிறிய ரோம மாகாணத்தை மட்டுமே குறிக்கிறது. இது வரை பவுல் மத்திய ஆசியா மைனரில் உள்ள ஒரு மாகாணமாகிய கலாத்தியாவில் உழைத்துக்கொண்டு வந்திருந்தான்.)
- இயேசுவின் ஆவியானவர், அவர்களைப் பித்தினியாவிற்குள் நுழையவும் அனுமதிக்கவில்லை—அப். 16:7
பவுல் பித்தினியாவை அணுகினான், இது வடக்கே கலாத்தியாவுக்கும் ஆசியாவுக்கும் எல்லையாக இருந்தது. எனினும், ஆவியானவர் அவன் அங்கும் செல்ல முடியாது என்று அவனுக்குச் சொன்னார். ஆகவே, பவுல் மேற்காகத் திரும்பி, அவன் தான் பிரசங்கிக்கத் தடைபண்ணப்பட்டு இருந்த இந்த இரண்டு மாகாணங்களுக்கு இடையே பயணிக்க வேண்டியிருந்தது! பவுல் தான் வடக்கோ அல்லது தெற்கோ திரும்ப முடியாததால், இந்த இரண்டு பகுதிகளுக்கும் இடையே உள்ள ஒரு வேலியின் மேல் நடந்துக்கொண்டிருந்தது போல் தோன்றியது. “இடதுபக்கமாய் ஆசியாவுக்குச் செல்வதிலிருந்து பரிசுத்த ஆவி அவர்களைத் தடைசெய்வதும் (வ. 6), வலது பக்கமாய் பித்தினியாவுக்குச்செல்ல இயேசுவின் ஆவி அவர்களை அனுமதிக்காததும், அப்போஸ்தலன் மற்றும் அவனது உடன்வேலையாட்களுக்கான ஒரு நேர் திசையைச் சுட்டிக்காட்டின” (Acts 16:7, footnote 2).
- மீசியா பக்கமாய்ப் போய், அவர்கள் துரோவாவுக்கு வந்தனர்—அப். 16:8
மேற்கு நோக்கி தொடர்ந்து, பவுல் மேற்கு கடற்கரையில் உள்ள ஆசியாவின் ஒரு நகரமான துரோவாவை வந்துசேரும் வரை, அவன் (ஆசியா மாகாணத்தின் வடக்குப் பகுதியாகிய) மீசியாவைக் கடந்து தாண்டிச் சென்றான். அவர்களது பயணம் ஒரு சுவரில் மோதியது (தடையை எதிர்கொண்டது) போல் தோன்றியது. எனினும் பவுலும், அவனுடைய கூட்டாளிகளும் தேவனிடம் குறை (புகார்) கூறவோ அல்லது தேவனை விமர்சிக்க முயற்சிக்கவோ இல்லை. இந்தப் பயணத்தில் புதிதாக எங்கேயாவது சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவோ அவர்களைக் கர்த்தர் அனுமதிக்கவில்லை என்றாலும், ஏன் அவர் இத்தகைய ஒரு நீண்ட மற்றும் வெளித்தோற்றத்தின்படி கனியற்ற பிரயாணத்தில் அவர்களை அழைத்துச் சென்றார் என்பதை அவர்களுக்கு வெளிப்படுத்தவில்லை என்றாலும்கூட, அவர்கள் வெறுமனே கீழ்ப்படிதலுடன் ஆவியானவரைப் பின்பற்றி, சமாதானத்தில் இருந்தனர். (நடபடிகள் 16:9-10 இல் உள்ள பிரதிபெயர்கள் “எங்களுக்கு, எங்களை” மற்றும் “நாங்கள்” என்று மாறியதால், நடபடிகளின் எழுத்தாளரான லூக்கா துரோவா பட்டணத்தில்தான் பவுலைச் சந்தித்து, அவனுடன் இணைந்திருப்பதாகத் தெரிகிறது.)
- துரோவாவில், பவுலின் உதவியை மக்கெதோனியா தேசத்தான் அவனிடம் வேண்டிக்கொண்டதாக அவனுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று, அப்போது அவனும் அனுடைய கூட்டாளிகளும் அங்கு சுவிசேஷத்தை அறிவிக்க உடனடியாகப் புறப்பட்டனர்—அப். 16:9-10
அவர்கள் துரோவாவில் இருந்தபோது, மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் தன்னிடம் வந்து நின்று, தங்களுக்கு உதவிசெய்ய மக்கெதோனியாவுக்குள் வரும்படி வேண்டிக்கொண்டதாக இரவிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று. பவுலும், அவனுடைய கூட்டாளிகளும் தாங்கள் மக்கெதோனியாவில் சுவிசேஷத்தை அறிவிப்பதற்காக கடலைக் கடந்து மக்கெதோனியாவுக்குள் செல்ல வேண்டியிருந்தது என்பதே இதன் அர்த்தம் என்று உணர்ந்தறிந்தனர். அவர்கள் மக்கெதோனியாவிற்கு வந்துசேருதல் கர்த்தருடைய ஒரு பிரதான நகர்வாக இருந்தது, ஏனெனில் அது அவர்களை ஒரு புதிய கண்டத்திற்கு கொண்டுவந்தது (மக்கெதோனியா ஐரோப்பாவில் இருந்தது, அப்படியிருக்க ஆசியா மைனர் ஆசியா கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது). பவுல் ஆவியானவரைப் பின்பற்றியதால், ஆரம்பத்தில் பவுலுக்குக் கண்ணோட்டத்தில் இத்தகைய ஒரு வேலை இருக்கவில்லை என்றாலும்கூட, கர்த்தர் தாம் விரும்பியதைச் செய்ய இயன்றது. ஐரோப்பாவில் உள்ள முதல் சபை எழுப்பப்பட்ட இடமாகிய மக்கெதோனியாவில் உள்ள முக்கிய நகரமான பிலிப்பிக்குப் பவுலின் குழுவினர் இறுதியில் வந்துசேர்ந்தனர்!
- ஆவியானவரின் வழிநடத்துதலை நாம் அறிந்தால் மட்டுமே, கர்த்தர் நம் மூலமாக நகர்வதற்கு ஒரு வழியைப் பெற முடியும்
- நாம் கர்த்தருடைய வழிநடத்துதலை அறிந்து, குறிப்பாக அவருடைய மட்டுப்படுத்துதலுக்குக் கீழ்ப்படிதலுள்ளவர்களாக இருக்கக்கூடுமாறு, நமக்குள் இருக்கும் கர்த்தருக்கு நாம் உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும்—அப். 16:6-7; ரோ. 8:14
பவுலிடம் ஆதி ஆரம்பத்திலிருந்தே மக்கெதோனியாவுக்குச் செல்வதற்குக் கர்த்தரின் நேரடியான பேசுதல் இருக்கவில்லை என்றாலும், மட்டுப்படுத்துதல் மூலமான ஆவியானவரின் தெளிவான வழிகாட்டுதல் அவனிடம் இருந்தது. எங்குப் போக வேண்டும் என்று அவனுக்குச் சொல்லப்படவில்லை, மாறாக அவன் எங்குப் போக முடியாது என்று அவனுக்குச் சொல்லப்பட்டது. இதன் பொருள், தேவன் பின்பற்றிய இலக்கை அடைவதற்கு, படிப்படியாக, இந்த வழி முழுவதும் அவன் கர்த்தருக்கு உணர்வுள்ளவனாக இருக்க வேண்டியிருந்தது என்பதே. (கர்த்தர் எப்போதும் உடனடியாக விஷயங்களைத் தெளிவுபடுத்துமாறு நாம் ஆசைப்படுகிறோம், ஆனால் அப்படியிருந்தால் நாம் ஒரு கணம்தோறும் உள்ள வழியில் நம்மை வழிநடத்தும்படி கர்த்தரைச் சார்ந்திராமல் இருக்கக்கூடும்.) நம்மை வழிநடத்துவதில் ஆவியானவரின் வேலை பெரும்பாலும் நம்மிடம் “இல்லை (கூடாது)” என்று சொல்வதன் மூலம் இருக்கிறது. ஒன்றைச் செய்யும்படி கர்த்தர் நமக்கு ஒரு நேரடியான வழிநடத்துதலைத் தரக்கூடும், ஆனால் எதைச் செய்யக்கூடாது என்பதை நமக்குச் சொல்வதன் மூலமும் அவர் வழிநடத்துகிறார், இதனால் ஒரு குறிப்பிட்ட வழியில் நம்மை மட்டுப்படுத்தி, சரியான நேரம் அல்லது சூழ்நிலை வரும்போது நம்மை அவருடைய பயன்பாட்டிற்காக வைத்துக்கொள்கின்றார்.
- நம் கருத்துக்கு எதிராக இருந்தாலும்கூட, நாம் கர்த்தருடைய வழிநடத்துதலைப் பின்பற்ற வேண்டும்
வேதாகமத்தில் கர்த்தர் தம் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை இவ்விதமாய்ச் சோதிக்கும் பல சங்கதிகள் உள்ளன. ஒரு வெள்ளம் என்றால் என்ன என்று கூட யாருக்கும் தெரியாத நிலையில் ஒரு பேழையைக் கட்டுவதற்குத் தன் வாழ்நாள் முழுவதும் செலவிடும்படி நோவாவிடம் கேட்கப்பட்டது. ஆபிரகாமின் வித்து (சந்ததி) ஈசாக்கு மூலமாகத் தொடரப்படும் என்று தேவன் வாக்குறுதி அளித்திருந்ததால், ஆபிரகாம் ஈசாக்கை பலியிடும்படி அவனிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மனித ரீதியில் அர்த்தமற்றதாக இருந்தபோதிலும்கூட, அவ்வாறு செய்யும்படி அவனிடம் கேட்கப்பட்டது. இங்கே, பவுலின் சங்கதியில், ஒன்றைச் செய்யும்படி அவனிடம் கர்த்தர் கேட்டுக்கொண்டிருக்கவில்லை, மாறாக அவன் என்ன செய்ய வேண்டும் என்று அவர் தாம் விரும்புகிறார் என்பதை அவனுக்குச் சரியாகச் சொல்லாமல், நியாயமாகத் தோன்றியதைச் செய்வதிலிருந்து அவனைத் தடைபண்ணிக்கொண்டிருந்தார். இது, கர்த்தருக்கு மிகவும் உணர்வுள்ளதாக இருந்த ஒரு வழியில் பயணிக்கும்படி பவுலை நிர்ப்பந்தித்தது. (கர்த்தர் குறிப்பிட்ட சில விஷயங்களை நமக்குத் தெரியப்படுத்துமாறு நாம் பெரும்பாலும் ஆசைப்படுகிறோம், ஆனால் அவர் நம்மை வைத்திருக்கும் சூழ்நிலையிலிருந்து அதிகமானவற்றைப் பெறுவதற்கான அதிசிறந்த வழி நம்மைக் காத்திருக்க வைப்பதே என்பதைக் கர்த்தர் அறிவார். இது, நாம் நிஜமாகவே அவருக்கு முன்பாகப் பயிற்சிசெய்யப்படுவதற்கு காரணமாகிறது.)
- நாம் மற்றவர்களுடனான ஒருங்கிணைப்பு மற்றும் ஐக்கியத்தில் கர்த்தருடைய வழிநடத்துதலைப் பின்பற்ற வேண்டும்
பள்ளி, கல்லூரி, உத்தியோகம், திருமணம் ஆகியன போன்றவற்றினூடாய் நம் வாழ்வில் நாம் பயணிக்கையில், நமக்கு மிகவும் நியாயமானதாகத் தோன்றும் பாதையையே நாம் வழக்கமாக எடுத்துக்கொள்கிறோம். எனினும், கர்த்தரின் வழிநடத்துதலுக்காக நாம் அக்கறைப்பட்டால், நாம் கர்த்தரின் மட்டுப்படுத்துதலுக்குத் திறந்திருப்போம் அதோடு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவருடைய வழிநடத்துதலை நாடுவோம். சில நேரங்களில் நாம் ஒரு நேரடியான வழியில் கர்த்தரால் வழிநடத்தப்படுகிறோம், ஆனால் பல சமயங்களில், நாம் செய்ய நினைக்கும் ஒன்றைச் செய்ய கர்த்தர் நமக்கு அனுமதி மறுக்கும் வழி மூலம் வழிநடத்தப்படுகிறோம். இந்த விஷயத்தில், நம் பெற்றோர், சேவிப்பவர்கள், மூப்பர்கள் போன்ற நமக்கு மேலானவர்கள் மூலமான கர்த்தருடைய பேசுதலுக்கு நாம் உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும். தேவனுடைய பார்வையில், அவர்கள் அவரது பிரதிநிதிகள், நாம் அவர்களது உணர்வு கர்த்தருடைய உணர்வாக இருப்பது போல் நாம் அவர்களது உணர்வை மதிக்க வேண்டும். நாம் ஒரு குறிப்பிட்ட கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்று நாம் உணர்ந்து, அது கர்த்தருடைய வேலைக்கு நலமானதாக இருக்கப் போகும் ஒன்று என்று நினைத்தும்கூட, கர்த்தரில் இன்னும் அதிக முதிர்ச்சியுள்ள ஒரு சகோதரன் அது நாம் செல்ல வேண்டிய வழி அல்ல என்று நிச்சயமாக உணர்ந்தால், நம் பாதுகாப்புக்காக நமக்குக் கொடுக்கப்பட்ட ஐக்கியமாக இதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நாம் இவ்விதமாய்க் கர்த்தரின் மட்டுப்படுத்துதலைப் பெற்றால், கர்த்தர் நமக்கு உண்மையிலேயே விரும்புவதற்குள் நம்மை வழிநடத்தும் மற்றொரு திசைக்கு நம் வாழ்க்கை திருப்பப்படும். (இது நாம் கற்றுக்கொள்வதற்கான ஒரு முக்கியமான கோட்பாடு. நாம் பெற்ற வழிநடத்துதல், இந்த மற்ற நபருக்கு இருக்கக்கூடிய உணர்வுடன் ஒத்துப்போகவில்லை என்று நாம் உணர்ந்தால் நாம் எப்போதும் தொடர்ந்து ஜெபிக்கவும், ஐக்கியப்படவும் முடியும், அப்படியிருக்க கர்த்தர் தாம் நம்மீது வைத்துள்ளவர்களின் ஐக்கியத்தை நாம் பின்பற்றும்போது கர்த்தர் நம் நிலைப்பாட்டைக் கனப்படுத்தியாக வேண்டும், ஏனெனில் நாம் அவர்களின் வழிகாட்டுதலை கர்த்தரின் வழிகாட்டுதலாகக் கனப்படுத்துகின்றோம்.)
- கர்த்தரின் கணம்தோறும் உள்ள வழிநடத்துதலை அனுபவிப்பவர்கள தேவனுக்கும் மனிதனுக்கும் முன்பாக சமாதானத்தையும் தைரியத்தையும் கொண்டிருக்கிறார்கள்—2 கொரி. 2:14.
நாம் எங்கிருந்தாலும்சரி, என்ன செய்துக்கொண்டிருந்தாலும்சரி அது கர்த்தரின் ஏற்பாடு மற்றும் வழிநடத்துதலின் ஒரு விளைவாக இருக்கிறது என்ற நிச்சயம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். (நாம் எங்கு வாழ்கிறோம், நமக்கு என்ன விஷயங்கள் நடக்கிறது என்பதிலும் கூட, நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளின் மீது கர்த்தர் இறையாண்மையானவர் என்பது உண்மைதான். எனினும், கர்த்தருடைய சித்தத்தை மனப்பூர்வமாகத் தேர்ந்தெடுப்பவர்களாக நாம் நம் வாழ்க்கையை வாழத் தொடங்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். உதாரணமாக, கர்த்தரின் ஏற்பாடு மற்றும் வழிநடத்துதலைத் தவிர வேறு ஏதாவது ஒன்றின் அடிப்படையில் நாம் ஒரு கல்லூரியைத் தேர்ந்தெடுத்தோம் எனில், நாம் கர்த்தருடன் அதில் ஒன்றாக நின்றிருந்தால் அவர் நம் மூலமாக அந்தக் கல்லூரி வளாகத்தில் நகர்வதற்கு அந்த ஆண்டுகளை பயன்படுத்தியிருக்கும் அளவிற்கு, அவர் அவற்றைப் பயன்படுத்த முடியாது.) நாம் இருக்கும் இடத்தில் நாம் இருப்பதும், நாம் செய்வதை நாம் செய்துகொண்டிருப்பதும், கர்த்தர் இவ்வாறு நம்மை வழிநடத்தியிருப்பதால்தான் உள்ளன என்ற நிச்சயத்தைப் பெறுவது ஓர் அற்புதமான விஷயம். அப்படியானால், கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்பதையும், நாம் இவ்விதமாய் அவரை எடுத்துக்கொள்ளும்போது அவர் நமக்கான பொறுப்பை ஏற்றாக வேண்டும் என்பதையும் நாம் அறிவோம். அப்போதுதான் நமக்குக் கர்த்தரின் அதிசிறந்த நன்மை நமக்காக இருக்கிறது என்பதையும்கூட நாம் அறிவோம்.
உங்கள் பகிர்வில் உங்களுக்கு உதவக்கூடிய ஜீவ-ஆய்வுகளில் இருந்து எடுக்கப்பட்ட சில மேற்கோள்கள் இங்கே உள்ளன. ஆவியானவரின் வழிநடத்துதலை விவரிக்க பல பதங்கள் உள்ளன: அபிஷேகம், ஜீவனின் உணர்வு, கர்த்தருடைய பேசுதல், தெய்வீக சுபாவத்தின் மட்டுப்படுத்துதல் ஆகியன போன்றவை.
“நீங்கள் கடைக்குச் செல்ல விரும்பினால், உங்களுடன் செல்ல கர்த்தர் பிரியப்படுகிறாரா என்று கர்த்தரிடம் கேளுங்கள். நீங்கள் ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்க இருக்கும்போது, அந்தப் பொருளை வாங்குவதில் கர்த்தர் மகிழ்ச்சியடைகிறாரா என்று கர்த்தரிடம் கேளுங்கள். மிகச்சிறிய விவரங்களில் கூட நாம் அதைக் குறித்து கர்த்தரிடம் விசாரிக்க வேண்டும்….கிறிஸ்துவை வாழ்வதற்கான வழி, நாள் முழுவதும் அவரிடம் ஜெபிப்பதன் மூலமே ஆகும்” (Life-study of Colossians, Message 36, p. 312).
“நான் ஓர் இளம் வாலிபனாக இருந்தபோது, நான் கால்பந்து விளையாட விரும்பினேன். ஒரு நாள், நான் இரட்சிக்கப்பட்ட பிறகு, நான் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தேன். ஒரு குறிப்பிட்ட நேரத்தில், பந்து என்னிடம் வந்ததும், உள்ளுக்குள் ஒன்று, ‘நிறுத்து! இனிமேலும் விளையாட வேண்டாம். கால்பந்து மைதானத்தை விட்டு வெளியேறு’ என்று கூறியது. அனைத்து விளையாட்டு வீரர்களும் அதிர்ச்சியடைந்தனர்; எனக்கு என்ன நடந்திருந்தது என்று அவர்கள் அறியவில்லை. அப்போது நான் மைதானத்தை விட்டு வெளியேறி, நான் இனிமேலும் கால்பந்து விளையாட மாட்டேன் என்று அவர்களிடம் சொன்னேன். அது ஆவியானவரின் பரிசுத்தமாக்குதல் தொடர்பான ஓர் அனுபவமாக இருந்தது” (Life-study of 2 Thessalonians, Message 6, p. 50).
“ஆவியானவர் தாம் ஆம் (சரி) என்று கூறுவதை விட, அதிகமாக இல்லை (கூடாது) என்றுதான் கூறக்கூடும்” (Life-study of 2 Thessalonians, Message 6, p. 51).
“ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி நீங்கள் சிந்திக்கும் போது, உங்கள் ஆவியில் உங்களிடம் எந்த இளைப்பாறுதலும் (அமைதியும்) இல்லை எனில், உங்கள் சிந்தனையை நிறுத்துங்கள். உங்கள் ஆவிக்கு இளைப்பாறதலற்றத் தன்மையைத் (அமைதியின்மையைத்) தரும் விஷயத்திலிருந்து உங்கள் மனதைத் திரும்ப அழைக்கவும். நீங்கள் பகுத்தறிவு செய்ய முயற்சித்து, நீங்கள் உங்கள் ஆவியில் வெறுமையாக உணரும் போதெல்லாம், நிறுத்திவிட்டு உங்கள் மனதை மீண்டும் ஆவிக்குத் திருப்புங்கள். உங்களிடம் உள்ளுக்குள் இளைப்பாறுதலும் (அமைதியும்), ஆறுதலும், திருப்தியும் இருக்கும் வரை, அது உங்கள் மனம் சரியான திசையில் பொருத்தப்பட்டுள்ளது என்பதற்கான ஓர் அறிகுறியாகும். உங்களுக்கு எந்த இளைப்பாறுதலும் (அமைதியும்), ஆறுதலும் அல்லது திருப்தியும் இல்லை, மாறாக நீங்கள் இருட்டாகவும், வெறுமையாகவும், இளைப்பாறுதலற்றதாகவும் (அமைதியற்றதாகவும்) உணர்ந்தால், அது உங்கள் திசை மரணத்தை நோக்கி உள்ளது என்பதற்கான ஓர் அறிகுறியாகும். இத்தகைய ஒரு சங்கதியில் நீங்கள் உங்கள் மனதை மீண்டும் ஆவியின் பக்கம் திருப்ப வேண்டும்” (Life-study of Romans, Message 16, p. 201).
“ஆவியானவரின் வழிநடத்துதல் புறம்பார்ந்த காரியங்களிலிருந்து வருவதுமில்லை, அவற்றைச் சார்ந்திருப்பதும் இல்லை. ஆவியானவரின் வழிநடத்துதல் உள்ளார்ந்த ஜீவனின் ஒரு விளைவு ஆகும். ஜீவனின் உணர்விலிருந்து, நமக்குள் இருக்கும் தெய்வீக ஜீவனின் உணர்வுநிலையிலிருந்து இது வருகிறது என்று நான் கூறுவேன்….மனதை ஆவியின் மேல் பொருத்துவதிலிருந்து ஓர் உள்ளார்ந்த உணர்வு வருகிறது. நம் மனம் நம் ஆவியின் மேல் பொருத்தப்பட்டால், உடனடியாக உள்ளார்ந்தரீதியில் நாம் பலப்படுத்தப்பட்டு திருப்தியாக்கப்படுகிறோம். அதோடு நாம் நீர்ப்பாய்ச்சப்பட்டு புத்துணர்வளிக்கவும்படுகிறோம். அந்த உணர்வு மற்றும் உணர்வுநிலையினால் நம்முள் உள்ள ஜீவனை நாம் அறிய முடியும், இந்த ஜீவனின் உணர்வினால் நாம் சரியாக நடக்கிறோம் என்று நாம் அறிய முடியும். வேறு வார்த்தைகளில், நாம் ஆவியானவரின் வழிநடத்துதலின்கீழ் இருக்கிறோம் என்று நாம் அறிகிறோம்” (Life-study of Romans, Message 18, p. 220).
“சகோதரிகளே, நீங்கள் பொருள் வாங்கக் கடைக்குச் செல்லவிருக்கும் போது,….’ஆ கர்த்தாவே, நான் பல்பொருள் அங்காடிக்குச் செல்வதை நீர் விரும்பாவிட்டால், என்னைத் தடுத்துவிடும்’ என்று நீங்கள் ஜெபிக்கக் கூடாது…..புறம்பார்ந்தரீதியில் எல்லாம் சுமூகமாக இருக்கலாம், ஆனால் உள்ளார்ந்தரீதியில் எப்படி இருக்கிறது? ஒருவேளை உங்கள் வாகனத்திலிருந்து இறங்கி, பல்பொருள் அங்காடியின் வாசலை நோக்கி நீங்கள் நடந்துகொண்டிருக்கும் போது உங்களுக்குள் சமாதானம் இல்லை. உள்ளார்ந்தரீதியில் பலப்படுத்தப்படுவதற்குப் பதிலாக நீங்கள் விரக்தியாக உணர்கிறீர்கள். எனினும், புறம்பார்ந்தரீதியில் எல்லாம் சுமூகமாக இருப்பதால் நீங்கள் முன்செல்கிறீர்கள். எனினும், எவ்வளவாய் கடையை நீங்கள் நெருங்குகிறீர்களோ, அவ்வளவாய் நீங்கள் வெறுமையை உணர்கிறீர்கள்….புறம்பார்ந்தரீதியில் எல்லாம் சாதகமானதாக இருந்தாலும், உள்ளார்ந்தரீதியில் நீங்கள் வெறுமையாகவும் பலவீனமாகவும் இருக்கிறீர்கள். உங்களிடம் அபிஷேகம், நீர்ப்பாய்ச்சுதல், அல்லது உள்ளார்ந்த சமாதானம் இல்லை” (Life-study of Romans, Message 18, pp. 220–221).
“சகோதரிகளாகிய நீங்கள் பல்பொருள் அங்காடிக்குப் போகும் போது, புறம்பார்ந்த ரீதியில் எல்லாம் தெளிவாக இருந்தாலும், நீங்கள் உள்ளான ஜீவனின் உணர்வுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் கடை வாசலை நெருங்கும் போது, உள்ளிருக்கும் ஏதோவொன்று ‘திரும்பிப் போய்விடு’ என்று உங்களிடம் கூறலாம். நீங்கள் ஒரு சத்தமான வாரத்தையைக் கேட்கவில்லை, ஆனால் நீங்கள் கடைக்குள் நுழையப்போகையில் உங்களிடம் இருள், பலவீனம், மற்றும் வறட்சியின் உணர்வு இருக்கிறது. நீங்கள் தேவனுடைய ஒரு குமாரனாக இருப்பதால், உள்ளார்ந்த ஜீவனிலிருந்து இப்படிப்பட்ட ஒரு சுட்டிக்காட்டி உங்களிடம் இருக்கிறது. உலகத்திலுள்ள மக்களிடம் இல்லாத ஏதோவொன்று உங்களிடம் இருக்கிறது. உங்களிடம் தேவனுடைய ஜீவன் இருப்பதால், அந்த ஜீவனிலிருந்து வருகிற வழிநடத்துதல் உங்களிடம் இருக்கிறது” (Life-study of Romans, Message 18, p. 221–222).
“பழைய ஏற்பாட்டின் வழியைப் பின்பற்றும் ஒருவர், ‘கர்தருக்குச் சித்தமானால், நான் நாளை கடைக்குச் செல்வேன். ஆனால் கர்த்தர் அப்படிச் சித்தமாயிருக்கவில்லை எனில், நான் வீட்டில் இருப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?’ இதற்குப் பதிலாக, ஆவியானவரால் வழிநடத்தப்படுவதற்கு நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டும். நாளுக்கு நாள், இன்னும் ஒவ்வொரு கணமும் கூட, நாம் இந்த உள்வசிக்கும் ஆவியானவரால் வழிநடத்தப்பட வேண்டும்” (Life-study of James, Message 14, p. 124).
“குமாரன் விசுவாசியில் வாழ்கிறார், பேசுகிறார். இது ஒரு மிக முக்கியக் குறிப்பு. நமக்குள் இருக்கும் இந்த ஜீவிக்கும் கிறிஸ்து தொடர்ந்து நிலையாகப் பேசுகிறார். அவர் பேசுவதை ஒருபோதும் நிறுத்த மாட்டார். நாம் இன்னும் மிகப் பல எதிர்மறையான விஷயங்களைக் கொண்ட ஒரு சூழ்நிலையில் இருக்கிறோம் என்ற உண்மையின் காரணமாக, பெரும்பாலான நேரங்களில் இந்த ஜீவிக்கும் கிறிஸ்து வெறும் ஒரே ஒரு வார்த்தையை மட்டுமே பேசுகிறார்—கூடாது. காலை முதல் மாலை வரை மற்றும் மாலை முதல் காலை வரை, அவர் நம்மிடம் கூறும் கிட்டத்தட்ட ஒரே ஒரு விஷயம், கூடாது என்பதுதான். ஒரு சகோதரி, ‘நான் ஒரு ஜோடி காலணி வாங்க பல்பொருள் அங்காடிக்குப் போகின்றேன்’ என்று கூறலாம், அதற்குக் கர்த்தர் ‘கூடாது’ என்று கூறுகிறார். ஒரு சகோதரன் ஒரு குறிப்பிட்ட நபருடன் பேச விரும்பலாம், அப்போது இந்த உள்வசிக்கும் கிறிஸ்து, ‘கூடாது’ என்று கூறுகிறார். உங்கள் அனுபவமும் இதுதான் அல்லவா? (Life-study of John, Message 32, p. 381).
“ஒரு ஜீவிக்கும் நபர் நம்முள் நிலையாக வாழ்ந்துகொண்டும், அசைந்துகொண்டும் இருக்கிறார். இந்த வாழ்தலும் அசைதலுமே அவரது போதித்தலாகும்…..நாம் அவருடைய அபிஷேகத்தின் கீழ் இருக்கும்போதெல்லாம், என்ன செய்வது என்று நமக்குத் தெரியும். அவர் எடுக்க விரும்பாத ஒரு படியை நாம் எடுத்தால், அபிஷேகித்தல் நின்றுவிடும், அதோடு இதமளிக்கிற, ஆறுதலளிக்கிற உணர்வு மறைந்துவிடும். இதன் மூலம், நாம் அந்தக் குறிப்பிட்ட காரியத்தைச் செய்யக்கூடாது என்று அறிகிறோம். அப்படிப்பட்ட நேரத்தில் நாம், ‘கர்த்தாவே, நான் உம்மோடு ஒன்றாக இருக்கிறேன். நீர் செல்ல விரும்பாவிட்டால், நானும் போகமாட்டேன்’ என்று கூறவேண்டும். நாம் இதைச் செய்தால், அபிஷேகமும் அதன் ஆறுதலிக்கும் உணர்வும் திரும்பிவரும். இந்த அபிஷேகத்தின் வாழ்தலும் அசைதலுமே கிறிஸ்துவின் உள்ளான போதித்தல். எந்நேரமும் நமக்குப் போதிக்கிற ஒரு ஜீவிக்கும் நபர் நம்மில் இருக்கிறார். சில வேளைகளில் பரிசுத்தவான்களுடனான நம் ஐக்கியத்தில், உள்ளான அபிஷேகம் நின்றுவிட்டது என்று நாம் அறியக்கூடும். நம்மிடம் இந்த உணர்வு ஏற்படும்போது, நாம் பேசுவதை நிறுத்திவிட வேண்டும். நீங்கள் அரை வாக்கியம்தான் பேசியிருக்கக் கூடும், ஆனால் அபிஷேகம் நின்றுவிட்டது என்று உணர்வதால், நீங்கள் அந்த வாக்கியத்தின் மீதத்தைப் பேசக்கூடாது. வெறுமனே, இந்த உள்ளான அபிஷேகித்தலுடன் ஒன்றாயிருங்கள்” (Life-study of Hebrews, Message 66, p. 738–739).
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: ஆவியானவரைப் பின்பற்றுவதன் மூலம், அந்தக் காலத்தில் தன்னைச் சுற்றி பயணித்த மற்ற எவரையும் விட பவுல் நிச்சயமாக வித்தியாசமான ஒரு வழியில் நகர்ந்தான். (மக்கள் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஏன் பயணிக்கக்கூடும் அல்லது அவர்கள் தங்கள் பயணங்களின் போது ஒரு குறிப்பிட்ட இடத்தை ஏன் தவிர்க்கக்கூடும் என்பதற்கான பல காரணங்களைப் பட்டியலிடுங்கள்.) நாம் அந்தக் காலத்தில் உள்ள உலகைப் பற்றிய ஒரு வகையான பறவைக் கண்ணோட்டத்தைப் (காட்சியைப்) பெற முடிந்தால், மற்ற எல்லா மக்களிடமிருந்தும் வித்தியாசமாக நகர்ந்த ஒரு மனிதன் இருந்தான் என்பதை நாம் கவனிக்கலாம். அதுதான் பவுல், யுகத்தின் ஓட்டத்தின் போக்குகளால் (அலைகளால்) அல்லது மனித பகுத்தறிவினால் இழுத்து அடித்துச்செல்லப்படும் ஒரு மரத்துண்டு போல் சுற்றிலும் எடுத்துச்செல்லப்படுவதற்குப் பதிலாக, இவன் கர்த்தருடைய வழிநடத்துதலால் பூமியில் நகர்ந்துக்கொண்டிருந்தான். நம்மைப் பொருத்தவரை எப்படி? நாம் எங்காவது சென்றுக்கொண்டிருந்த போது, ஆவியானவரின் வழிநடத்துதலையும் மட்டுப்படுத்துதலையும் நாம் எப்போதாவது அனுபவித்திருக்கிறோமா? நிச்சயமாக இளம் வாலிபர்களில் பலர், தங்களைக் கர்த்தர் ஒரு குறிப்பிட்ட பாதையில் வழிநடத்தியிருக்கும், அல்லது தங்களுக்குள் “இல்லை (கூடாது)” என்று கூறியிருக்கும் அனுபவத்தைப் பெற்றிருந்திருக்க வேண்டும் (பெற்றிருந்திருப்பீர்கள்). சேவிப்பவர்களும்கூட இந்த முக்கியமான பாடத்தை ஆதரிக்குமாறு தாங்கள் பகிர்ந்துகொள்ள முடியக்கூடிய பல தனிப்பட்ட அனுபவங்களைப் பெற்றிருந்திருக்க வேண்டும் (பெற்றிருந்திருப்பார்கள்). ஏன் ஓர் “இல்லை (கூடாது)” உள்ளது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லாதிருக்கக்கூடும், ஆனால் நாம் இந்த வழியில் கர்த்தரைப் பின்பற்றினால், கர்த்தர் தாம் நம்மை ஒன்றுக்குள் வழிநடத்திக்கொண்டிருந்ததற்கு ஒரு குறிப்பிட்ட குறிக்கோளாகிய ஒன்றைக் கொண்டிருந்தார் என்பதை ஒரு நாள் நாம் கண்டுபிடிப்போம் என்று நாம் விசுவாசிக்க வேண்டும். இந்த விதத்தில் அவர் நம்மிடம் பேசுதலை நாம் புறக்கணித்தால், கர்த்தர் எந்தக் காரியத்திற்குள் நம்மை வழிநடத்திக்கொண்டிருந்தாரோ அதை நாம் நிச்சயமாகவே தவறவிட்டு, அவருடைய இலக்கிலிருந்து எங்கோ வெகுதொலைவில் போய் முடிவடைவோம். நாம் கர்த்தருடைய இலக்கைச் சென்றடைய ஆசைப்பட்டால், நிச்சயமாகவே நாம் அவருடைய வழிநடத்துதலை அறிந்திருந்தாக வேண்டும்.
சுவிசேஷ செயலாக்கம்: கர்த்தரைப் பெறுபவர்களுக்கு ஓர் உள்ளார்ந்த வழிகாட்டி இருக்கிறார், இவர் அவர்களை எப்போதும் சரியான பாதையில் வழிநடத்துகின்றார். நாம் நம் வாழ்வுகளைக் குறித்து எத்தனை முடிவுகளை எடுத்தாக வேண்டும் என்பதையும், நமக்கு என்ன மாபெரும் விளைவுகள் ஏற்படும் என்பதையும் பரிசீலியுங்கள். உங்கள் விருப்பத்தேர்வுகள் உச்சநிலையாக எதை உருவாக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொரு மாற்று விருப்பத்தேர்வுகளின் (மாற்றீட்டின்) நன்மைகளையும் (அனுகூலங்களையும்) உங்களால் நிதானிக்க இயலுமா? சாத்தியமான ஒவ்வொரு சாலையின் முடிவிலும் என்ன இருக்கிறது என்று உங்களால் பார்க்க முடியுமா? நீங்கள் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தேர்வுகள், வீண் மகிமைக்காகவோ அல்லது நம் சொந்த அற்பமான இலக்குகளைத் தேடுவதில் தற்காலிக இன்பத்திற்காகவோ வீணடிக்கப்படாமல், பிரபஞ்சத்திலுள்ள அதிஉயர்ந்தக் குறிக்கோளின்படி வாழ்ந்துக்காட்டப்படும் ஒரு வாழ்க்கையை எவ்வாறு விளைவிக்க முடியும்? அத்தகைய ஞானமும், தொலைநோக்கு பார்வையும் தேவனுக்கு மட்டுமே உண்டு, மேலும் தேவன் மட்டுமே நம்மை அறிவார்; ஆனால் நமக்கு நம்மைப் பற்றி கூட தெரியாது. நம்மை நாளுக்கு நாள் வழிநடத்தும்படி இத்தகைய ஒரு சர்வ-அறிவுள்ள (சர்வமும்-அறிந்த), சர்வ-வல்லமையுள்ள, சர்வ-அன்புள்ள (சர்வமும்-நேசிக்கும்) தேவன் நமக்குத் தேவை. அவர் ஒரு குறிக்கோளுக்காக நம்மை சிருஷ்டித்தார், மேலும் அவருடைய வார்த்தையில் நமக்கு முன் வைக்கப்பட்டுள்ள அவருடைய அற்புதமான இலக்கை நாம் எவ்வாறு அதிசிறப்பாக அடைய முடியும் என்பதை அவர் அறிவார். அவர் இல்லாமல், நாம் ஒரு வரைபடமோ, திசைகாட்டியோ, அல்லது கடலில் ஓட்டிச்செல்வதற்கு நமக்கு மேலிருந்து வழிகாட்ட நட்சத்திரங்களோ இல்லாத கப்பல்களைப் போன்று இருக்கிறோம், நாம் எங்கு செல்கின்றோம் அல்லது நமக்கு முன்பாக என்ன வரப்போகிறது என்று தெரியாமல், இலக்கின்றி அலைந்துதிரிந்து நம் நேரத்தை வீணடிக்கின்றோம். எனினும், தேவன் அறிவார்! அவர் எல்லாவற்றையும் பார்க்கிறார். அவரைப் பெற்றுக்கொள்ளுங்கள், மேலும் “கண் பார்த்திராத, காது கேள்விப்பட்டிராத, மனிதனுடைய இருதயத்தில் தோன்றியிராத மண்டலங்களுக்குள் (தோன்றியிராதவைகள்); தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளுக்குள் (ஆயத்தம்பண்ணினவைகள்)”‘ உங்களை வழிநடத்தும்படி உங்கள் மாலுமியாக (கடல்வழி வல்லுநர்) இருக்க அவரை அனுமதியுங்கள் (1 கொரி. 2:9, கிரே). பிரபஞ்சத்திலுள்ள அதிஉயர்ந்தக் குறிக்கோளின்படி உள்ள ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கான உங்கள் ஜீவிக்கும் “சாலை வரைபடமாக” அவரைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
மிக முமக்கியக் காரியங்கள்: அபிஷேகத்தையும், ஜீவனின் உணர்வையும் அறிதல் (II.G.2.).
பின்புல வாசிப்பு: Life-study of Acts, Message 44, pp. 377–378, 378–381; Message 45, pp. 385–386; Experience of Life, Chapter 7, pp. 141–142; Chapter 14, pp. 310–312; The Spirit, Chapter 7, pp. 77–78;
REFERENCES: Life-study of Acts, Message 44, pp. 377–378, 378–381; Message 45, pp. 385–386; Experience of Life, Chapter 7, pp. 141–142; Chapter 14, pp. 310–312; The Spirit, Chapter 7, pp. 77–78; Life-study of Colossians, Message 36, p. 312; Life-study of 2 Thessalonians, Message 6, pp. 50–51; Life-study of Romans, Message 16, p. 201; Message 18, p. 220–222; Life-study of James, Message 14, p. 124; Life-study of John, Message 32, p. 381; Life-study of Hebrews, Message 66, p. 738–739.