உயிர்த்தெழுந்து, பரமேறிய கிறிஸ்துவின் பரப்புதல்

பகுதி 10

✵பாடம் 01 – 09

உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் பரப்புதல்

குறிக்கோள்: தம் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, கிறிஸ்து தேவனுடைய ராஜ்யமாகிய சபைகளை உற்பத்திசெய்தலுக்காக தம்மையே பரமேறுதலில், ஆவியானவரால், தம் சீஷர்கள் மூலமாகப் பரப்புவதற்கு விரும்புகிறார் என்பதைக் காண்பதற்கு.

பொருட்சுருக்கம்: நடபடிகள் புத்தகம் சுவிசேஷங்களின் ஒரு தொடர்ச்சியாகும் அதோடு சுவிசேஷங்களை நிருபங்களுடன் இணைக்கும் புத்தகமாகும். சுவிசேஷங்கள் கிறிஸ்துவின் மாம்சமாகுதல், மனித வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் அவருடைய பூமிக்குரிய ஊழியத்தை வெளிப்படுத்துகின்றன. நடபடிகள் புத்தகம், கிறிஸ்து வந்து இந்த வழிமுறைகள் அனைத்தினூடாகவும் கடந்துசென்றதன் குறிக்கோள், தேவனுடைய ராஜ்யமாகிய சபைகளை உற்பத்திசெய்தலுக்காக இந்த உயிர்த்தெழுந்தக் கிறிஸ்துவாகத் தம்மையே தம் பரமேறுதலில், ஆவியானவரால், தம் சீஷர்கள் மூலமாகப் பரப்புவதற்கே இருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது. இன்றும் நாம் இன்னும் நடபடிகள் புத்தகத்தில்தான் இருக்கிறோம்; கிறிஸ்து, தம் நகர்வு பூமியில் பரப்பப்படுவதற்காக இன்னும் தம் பரலோக ஊழியத்தைப் பரமேறுதலில் மேற்கொண்டு வருகிறார்.

பின்புலம்: வேதாகமத்தினூடாய்ப் பயணம் (என்ற இந்தப் பாடப் புத்தகம்), இளம் வாலிபர்களை வேதாகமத்தின் அறுபத்தாறு புத்தகங்களினூடாய் ஒரு “பயணத்தில்” அழைத்துச் செல்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது வேதாகமத்தின் கதைகளையும் உண்மைகளையும் அறிய அவர்களுக்கு உதவி, அதன்பின் தங்கள் தினசரி வாழ்க்கைக்குப் பிரயோகிப்பதற்கான ஓர் அடித்தளமாக இந்தக் கதைகளையும் உண்மைகளையும் பயன்படுத்துகின்றது. இப்போது நம் பயணத்தில் நாம் நடபடிகள் புத்தகத்திற்கு வந்துசேர்ந்துள்ளோம். இந்தப் புத்தகத்தின் ஆவிக்குரிய உட்கருத்தைப் பாராட்ட, இளம்வாலிபர்கள் முதலில் நடபடிகள் புத்தகத்தின் கதைகளையும் உண்மைகளையும் அறிய வேண்டும். சேவிப்பவர்கள் இந்தப் பாடத்திற்கும், அதைத் தொடர்ந்து பின்வரும் பாடங்களுக்கும் தயாராகுவதில் அவர்கள் சுவிசேஷத்தின் பரப்புதல் பற்றிய கதைகளுடன் மிகவும் நன்கு பரீட்சியப்படுவதற்குச் சிறிது நேரம் செலவிடுவது அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். இளம் வாலிபர்களில் எத்தனை பேர் இந்த முழு நடபடிகள் புத்தகம் முழுவதையும் வாசித்திருக்கிறார்கள் என்று இந்தப் பாடத்தை நடத்துவதற்கு முன் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களில் பலருக்கு இந்தப் புத்தகத்தில் உள்ள பரபரப்பான கதைகள் பரீட்சியப்படாமல் இருக்கக்கூடும். கிறிஸ்துவின் பரப்புதலைக் குறித்து சீஷர்களுக்கான கர்த்தரின் ஆணையையும் (அப். 1:3-8), அவரது வெளியரங்கமான பரமேறுதலையும் (அப். 1:9-11), சீஷர்கள் பத்து நாட்களாக ஒருமனதில் ஜெபித்தலையும் (அப். 1:12-14), பெந்தெகொஸ்தே நாள் மற்றும் பேதுருவின் மேலோங்கும் சுவிசேஷப் பிரசங்கித்தலையும் (அப். 2:1-41; 3:11-26), எருசலேமில் உள்ள ஆரம்பகால சபை வாழ்க்கையையும் (அப். 2:42-47; 4:32-37), மதரீதியான மக்களிடமிருந்து வரும் துன்புறுத்தலுக்கு மத்தியிலும் சீஷர்களின் தைரியத்தையும் (4:8-31; 5:17-42; 12:1–24), அற்புத நிகழ்வுகள் மூலமாகக் கர்த்தர் இந்த சுவிசேஷப் பிரசங்கித்தலை உறுதிப்படுத்துதலையும் (3:1–10; 5:1–16, 19; 9:32–43), ஸ்தேவானின் சாட்சியையும் (அப். 6–7), பிலிப்பு மற்றும் பிறரின் ஊழியத்தையும் (8:4-40), புறவினத்தார் ஆவியானவரில் ஞானஸ்நானம் பண்ணப்படுதலையும் (அப். 10), தர்சுப் பட்டணத்தானாகிய சவுலின் துன்புறுத்தல், மனமாற்றம் மற்றும் சேவையையும் (அப். 8:1-3; 9:1–31; 13:1–28:31) பற்றிய கதைகளை அவர்களுக்குச் சொல்வதற்காக இந்தப் பாடத்திலும், பின்வரும் பாடங்களிலும் சிறிது நேரம் ஒதுக்கத் தயங்க வேண்டாம்.

அதிகாரங்கள்: அப். 1–28.

போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:

நடபடிகள் புத்தகம், புதிய ஏற்பாட்டில் உள்ள ஒரு மைய புத்தகம். இது புதிய ஏற்பாட்டின் முதுகெலும்புடன் ஒப்பிடப்படலாம், இது, மாம்சத்தில் உள்ள கிறிஸ்துவின் ஊழியத்தைப் பற்றிய ஒரு பதிவாகிய சுவிசேஷங்களையும், கிறிஸ்து ஆவியானவராக சபைகளைக் கட்டியெழுப்புவதைப் பற்றிய ஒரு பதிவாகிய நிருபங்களையும் ஒன்றுசேர்த்து இணைக்கின்றது. நான்கு சுவிசேஷங்களிலும் வெளிப்படுத்தப்பட்ட கிறிஸ்துவைக் காண நாம் மூன்று அலகுகளை செலவிட்டுள்ளோம். சுவிசேஷங்களில் கிறிஸ்து தெய்வீகம், மனுஷீகம் ஆகிய இரண்டையும் கொண்ட ஒரு தேவ-மனிதனாக மாம்சமானார். மாம்சத்தில் ஒரு தேவ-மனிதனாக, அவர் தம் பூமிக்குரிய ஊழியத்தை நிறைவேற்றினார், தேவனை மனிதனுக்குள் கொண்டுவந்தார், தேவனை மனுஷீகத்தில் வெளிக்காட்டினார், மேலும் நமக்கான ஒரு முழு சட்டரீதியான மீட்பை நிறைவேற்றினார். எனினும், கிறிஸ்துவின் ஊழியம் இத்துடன் நின்றுவிடவில்லை, அதேபோல் மீட்பு அவருடைய இலக்கும் அல்ல. நடபடிகள் புத்தகத்தில் கிறிஸ்துவின் ஊழியம் இன்னொரு நிலைக்குள் (கட்டத்திற்குள்) நுழைகிறது. மேலும் நடபடிகளில் நாம், கிறிஸ்து வந்ததற்கான இலக்கைக் காண்கிறோம்—அவர் தம்மையே மனிதனுக்குள் பரப்புவதற்கு விரும்புகிறார். அவர் இனியும் வெறும் மாம்சத்தில்  உள்ள ஒரு மனிதன் மட்டுமல்ல; அவரே பரமேறுதலில் உள்ள இந்த உயிர்த்தெழுந்த கிறிஸ்து. பரமேறுதலில் தம் பரலோக ஊழியத்தில், இந்த உயிர்த்தெழுந்த கிறிஸ்து, தேவனுடைய ராஜ்யமாகிய சபைகளை உற்பத்திசெய்ய தம்மையே நமக்குள் பரப்பிக்கொண்டிரு்க்கிறார்.

  • நடபடிகள் புத்தகம் புதிய ஏற்பாட்டில் உள்ள ஒரு மைய புத்தகம்

நடபடிகள் புத்தகம் புதிய ஏற்பாட்டின் முதுகெலும்புடன் ஒப்பிடப்படலாம். இது சுவிசேஷங்களிலுள்ள மாம்சத்தில் உள்ள கிறிஸ்துவுக்கும், நிருபங்களிலுள்ள ஆவியானவராகிய கிறிஸ்துவுக்கும் இடையே உள்ள ஓர் இணைப்பாகும். இப்படிப்பட்டதாக, நடபடிகள் புத்தகம் புதிய ஏற்பாட்டில் உள்ள ஒரு மிக முக்கியப் புத்தகம்.

  • நடபடிகள் புத்தகம் சுவிசேஷங்களின் ஒரு தொடர்ச்சியாகும் அதோடு சுவிசேஷங்களுக்கும் நிருபங்களுக்கும் இடையிலான ஓர் இணைப்பாகும்

நடபடிகள் புத்தகம் லூக்காவால் எழுதப்பட்டது (Luke 1:3, footnote 1 ஐ பார்க்கவும்) அதோடு லூக்காவின் சுவிசேஷத்தின் ஒரு நேரடி தொடர்ச்சியாகும் (லூக். 1:1-4; அப். 1:2). சுவிசேஷங்கள், மாம்சத்தில் உள்ள கிறிஸ்துவின் பூமிக்குரிய ஊழியத்தைப் பதிவு செய்கின்றன, அப்படியிருக்க நடபடிகள் புத்தகம் பரமேறுதலில் உள்ள கிறிஸ்துவின் பரலோக ஊழியத்தை விவரிக்கிறது. சுவிசேஷங்கள் கிறிஸ்துவின் பரமேறுதலுடன் முடிவடைகின்றன (மாற். 16:19; லூக். 24:51). எனினும், கர்த்தரின் நடவடிக்கை அவரது பரமேறுதலுடன் முடிவடையவில்லை. மாறாக, அவர் தம் பரமேறுதலில் மிகவும் அலுவலாக (பிஸியாக) இருக்கிறார். அவரது மாம்சமாகுதல் அவரது பூமிக்குரிய ஊழியத்தின் பதவியமர்வாக இருந்தது போலவே, அவரது பரமேறுதல் அவரது பரலோக ஊழியத்தின் பதவியமர்வாக இருந்தது. தம் பரலோக ஊழியத்தில் கிறிஸ்து சபைகளை உற்பத்திசெய்தலுக்காக தம்மையே பரப்புவதற்குப் பல விஷயங்களைச் செய்துகொண்டிருக்கிறார்.

  • நடபடிகள் இந்த உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் பரப்புதலையும், சபைகளை உற்பத்திசெய்தலையும் நமக்குக் காட்டுகிறது—அப். 1:8; 8:4; 14:23; 15:40-41

நான்கு சுவிசேஷங்களிலும் நாம், மாம்சத்தில் உள்ள ஒரு தனிப்பட்ட கிறிஸ்துவைக் காணலாம். எனினும் நிருபங்களில் நாம், பல விசுவாசிகளில் குடியிருக்கும் அதோடு தம் பரப்புதலாக உற்பத்திசெய்யப்பட்டிருக்கும் சபைகளைக் கட்டியெழுப்பும் இந்த ஆவியானவராகக் கிறிஸ்துவைக் காண்கிறோம். அவர் எப்படி விசுவாசிகளுக்குள் நுழைந்தார்? சபைகள் எவ்வாறு உற்பத்திசெய்யப்பட்டன? நடபடிகள் புத்தகம், கிறிஸ்துவின் பரப்புதல் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதை நமக்குச் சொல்லும் மிக முக்கிய இணைப்பு ஆகும். நிருபங்களைப் புரிந்துகொள்ள, நாம் நடபடிகள் புத்தகத்தை அறிந்துகொள்ள வேண்டும். முதலில் இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகளை அறிந்துகொள்வது, வேதாகமத்தின் உண்மைகளை அறிந்துகொள்வது முக்கியமானது. அப்போது நாம், அப்போஸ்தலர்களின் நடபடிகள் (நடவடிக்கைகள்) மற்றும் செயல்களுக்குப் பின்னால் உள்ள ஆவிக்குரிய உட்கருத்தை, அதாவது கிறிஸ்து தம்மையே உயிர்த்தெழுதலில் பரப்புதல்செய்துகொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

  • நடபடிகளில், கிறிஸ்து இனியும் வெறுமனே மாம்சமாகுதலில் உள்ள ஒரு தேவமனிதன் மட்டுமல்ல; அவர் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாகப் பதனிடப்பட்டு, இப்போது தம்மையே மனிதனுக்குள் பரப்புதல்செய்துகொண்டிருக்கிறார்—அப். 7:55; 9:5

நடபடிகள் புத்தகம் ஓர் அற்புதமான நபரை நமக்கு வெளிப்படுத்துகிறது. அவரே ஒரு முழுமையான மற்றும் பரிபூரணமான மனிதனாக இருக்க மாம்சமான யெகோவா, நித்திய தேவன். அவர் ஒரு தேவ-மனிதனாக ஒரு வாழ்க்கையை வாழ்ந்து, வரம்பற்ற தேவனின் குணாம்சங்களை ஒரு வரம்புள்ள மனிதனின் நற்பண்புமிக்க மனித வாழ்க்கையில் வெளிக்காட்டினார். பின்னர், அவர் சிலுவைக்குச் சென்று, ஒரு சகலத்தையும்-உள்ளடக்கிய மீட்பை நிறைவேற்றினார். தம் உயிர்த்தெழுதலில், அவர் சாராம்சரீதியில் தம் சீஷர்களின் ஜீவனாக இருக்க ஜீவன்-தரும் ஆவியாகி, அவர்களுக்குள் தம்மையே சுவாசித்து ஊதினார் (1 கொரி. 15:45; யோவான் 20:22). பின்னர் பொருளாட்சி ரீதியாக, அவர் பரலோகங்களுக்கு ஏறிச்சென்றார் (மாற். 16:19; லூக். 24:51; அப். 1:9). கிறிஸ்து இப்போது பரலோகத்தில் “ஆண்டவராய் வீற்றுள்ளார்” ( பாடல்கள், #132). பரலோகங்களில் சிங்காசனத்தில் இந்த நிலையில் இருந்து அவர் தம்மையே மனிதனுக்குள் பரப்புதல்செய்வதற்கான தம் பொருளாட்சியைச் செயல்படுத்திக்கொண்டிருக்கிறார்.

  • நடபடிகள் புத்தகம் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் பரப்புதலைப் பற்றியது—அப். 1:8; 2:24, 31-32, 36-38; 3:15; 5:30-32; 9:15; 13:32-33

“நடபடிகளின் கருப்பொருள், தேவனுடைய ராஜ்யமாகியசபைகளைஉற்பத்திசெய்தலுக்காக தம் பரமேறுதலில், ஆவியானவரால், சீஷர்கள் மூலமான இந்த உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் பரப்புதலே. நடபடிகள் இந்த உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் பரப்புதலைப் பற்றியது. கிறிஸ்து இந்தப் பரப்புதலை தம் பரமேறுதலிலும், ஆவியானவராலும், சீஷர்கள் மூலமாகவும் மேற்கொள்கின்றார். கிறிஸ்துவின் பரப்புதலின் குறிக்கோள், தேவனுடைய ராஜ்யமாகியசபைகளைஉற்பத்திசெய்தலே ஆகும்” (Life-study of Acts, Message 2, p. 9).

  • உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் பரப்புதல், அவரது பரமேறுதலில் உள்ளது—அப். 1:9; 7:5556

“உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் பரப்புதல் கிறிஸ்துவால் அவரது பரமேறுதலில் மேற்கொள்ளப்படுகிறது. கர்த்தராகிய இயேசு பூமியில் முப்பத்து மூன்றரை ஆண்டுகள் வாழ்ந்தார், ஆனால் இப்போது அவர் பரமேறுதலில் இருக்கிறார். அவரது பரமேறுதலில் கர்த்தர் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார்….கிறிஸ்து இப்போது பரமேறுதலில் இருக்கிறார் என்ற உண்மையின் அர்த்தம், அவர் பரலோகங்களில் இருக்கிறார் என்பது மட்டுமல்லாமல்; அவருக்கு வல்லமையும் அதிகாரமும் இருக்கிறது என்பதுமே ஆகும். தம் பரமேறுதலில் கிறிஸ்துவுக்குப் பிரபஞ்சத்தில் சகல வல்லமையும், சகல அதிகாரமும் உள்ளது [மத். 28:18]….எனவே, தம் பரமேறுதலில் இத்தகைய அதிகாரத்தோடும் வல்லமையோடும் கர்த்தர் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? கர்த்தர், பரமேறியவராக, தம் பிரபஞ்சமளாவிய மற்றும் நித்திய பரப்புதலை மேற்கொண்டு வருகிறார். இன்று பூமி ஏன் கிறிஸ்தவர்களால் நிரம்பியுள்ளது என்பதை யாரால் விளக்க முடியும்? உலகில் ஏன் இத்தனை அதிகமான விசுவாசிகள் உள்ளனர்? பெரிய மனிதர்கள் பூமியின் மீதான கட்டுப்பாட்டைக் கைவசப்படுத்த முயன்றனர், ஆனால் அவர்கள் தோல்வியடைந்தனர்….இங்குள்ள குறிப்பு என்னவெனில், முழு பூமியும் இந்தத் தோற்கடிக்கப்பட முடியாதவரின் கைகளில் உள்ளது, மேலும் இவர் தம் பரப்புதலை மேற்கொள்கின்றார் என்பதே….நாம் அனைவரும் கிறிஸ்துவின் பரப்புதலின் ஒரு பகுதியாக இருக்கிறோம். நாம் இந்த உயிர்த்தெழுந்த கிறிஸ்துவால் அவரது பரமேறுதலில் உற்பத்திசெய்யப்பட்டிருக்கிறோம்” (Life-study of Acts​​, Message 2, pp. 10–11).

  • உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் பரப்புதல், ஆவியானவரால் உள்ளது—அப். 1:8; 4:8, 31; 8:29; 11:12; 13:2, 4

நடபடிகள் புத்தகத்தில், உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் பரப்புதல் ஆவியானவரால் நடைபெறுகிறது (அப். 1:8; 4:8, 31; 8:29; 11:12; 13:2, 4). நடபடிகளில், விசுவாசிகள் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க எந்தவிதமான வித்தைகளையும் அல்லது இயற்கையான நுட்பங்களையும் பயன்படுத்துவதை நாம் காண்பதில்லை. மாறாக, அவர்கள் “ஆவியானவரால் நிரப்பப்பட்டிருந்தனர்” (அப். 4:8; 13:9, கிரே.).

  • உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் பரப்புதல், சீஷர்கள் மூலமாக உள்ளது—அப். 1:8; 4:20

“கிறிஸ்துவின் பரப்புதல் சீஷர்கள் மூலமாக நடைபெறுகிறது. சீஷர்கள் யார்? நாம் பார்க்கப்போவது போல், சீஷர்கள் வெறுமனே பிரசங்கிகள் மட்டுமல்ல, மேலும் நடபடிகளில் அவர்கள் பிரசங்கிகள் என்று அழைக்கப்படுவதில்லை. மாறாக, சீஷர்கள் சாட்சிகள். நடபடிகளில் உள்ள கர்த்தரின் சீஷர்கள், ஓர் அற்புதமான நபரின் சாட்சிகளாக இருக்கின்றனர்….” (Life-study of Acts, Message 2, p. 13).

  • உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் பரப்புதல்—தேவனுடைய ராஜ்யமாகிய—சபைகளை உற்பத்திசெய்தலுக்காகவே உள்ளது—அப் 1:3; 8:12; 9:31; 13:1; 14:22-23; 15:41; 16:5; 19:8; 20:25, 28; 28:23, 31

உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் பரமேறுதலில் உள்ள அவரது பரப்புதல் சபைகளை உற்பத்திசெய்வதற்காக உள்ளது. சபைகள் கிறிஸ்துவின் பரப்புதலின் உற்பத்தியாக உள்ளன. மேலும், உயிர்த்தெழுந்த கிறிஸ்துவால் தம் பரமேறுதலில் உற்பத்திசெய்யப்பட்ட சபைகள் தேவனுடைய ராஜ்யமாக உள்ளன (ஒப். ரோ. 14:17 மற்றும் footnote 1). “தேவனுடைய ராஜ்யம் கிறிஸ்துவின் பரப்புதலால் உற்பத்திசெய்யப்பட்ட ஜீவனுக்குரிய ஒரு மண்டலமாகும். உண்மையில் ராஜ்யம் என்பது இந்த உயிர்த்தெழுந்த, பரப்புகின்றவரின் விரிவாக்கம் ஆகும். தேவனுடைய ராஜ்யமே அவரது விரிவாக்கம்” (Life-study of Acts​, Message 2, p. 14).

  • நடபடிகள் புத்தகம் இன்று இன்னும் தொடர்கின்றது

நடபடிகள் ஒரு முடிவுரை இல்லாத ஒரு புத்தகம். இது ஏனெனில், ஒரு நல்ல அர்த்தத்தில், நடபடிகள் புத்தகம் இன்னும் முடிக்கப்படவில்லை. நடபடிகள் புத்தகம், தேவனுடைய ராஜ்யமாகியசபைகளைஉற்பத்திசெய்தலுக்காக தம் பரமேறுதலில், ஆவியானவரால், சீஷர்கள் மூலமான இந்த உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் பரப்புதலைப் பற்றி பேசுகிறது. இந்தப் பரப்புதல், பவுல் கிறிஸ்துவை ராஜ்யமாக ரோமில் அறிவித்ததுடன் முடிவடையவில்லை (அப். 28:29-31). மாறாக, அது கிறிஸ்துவின் சீஷர்கள் மூலமாக இன்றுவரை தொடர்ந்திருக்கிறது. அல்லேலூயா! நாமே கிறிஸ்துவின் பரப்புதல்! அல்லேலூயா! இன்று பூமியில் தேவனுடைய ராஜ்யமாக அதிகமான சபைகளை உற்பத்திச்செய்வதற்குக் கிறிஸ்து நம் நண்பர்கள், உறவினர்கள், அயலவர்கள் மற்றும் அந்நியர்களுக்குள்ளும் கூட தம்மையே பரப்புதல்செய்ய தம் சீஷர்களாகிய நம்மைப் பயன்படுத்த விரும்புகிறார். “நடபடிகள் புத்தகத்தில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன என்று நீங்கள் கூறமுடியுமா? நடபடிகளில் இருபத்து-எட்டு அதிகாரங்கள் இருக்கின்றன என்று ஒருவேளை நீங்கள் கூறக்கூடும். நிச்சயமாக இது சரிதான். எனினும், நடபடிகள் புத்தகம் இன்னும் எழுதப்பட்டுக் கொண்டு வருகிறது என்று கூறுவதும் உண்மைதான், ஏனெனில் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் பரப்புதல் இன்னும் நடைபெற்று வருகிறது….சபைகளிலுள்ள நாம் கிறிஸ்துவின் பரப்புதலாகவும், கிறிஸ்துவின் விரிவாக்கமாகவும் இருக்கிறோம், மேலும் நாம் தேவனுடைய ராஜ்யத்தைப் பெரிதாக்கிக்கொண்டிருக்கிறோம்” (Life-study of Acts​, Message 2, pp. 14–15).

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: நீங்கள் நடபடிகள் புத்தகத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நடபடிகள் புத்தகத்தின் கருப்பொருள், தேவனுடைய ராஜ்யமாகிய சபைகளை உற்பத்திசெய்தலுக்காக தம் பரமேறுதலில், ஆவியானவரால், சீஷர்கள் மூலமான இந்த உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் பரப்புதலே. இது கிறிஸ்து பரமேறுதலில் ஒரு மேகத்தின் மீது உயர்த்தப்படுவதிலிருந்து தொடங்குகிறது (அப். 1:9); ஆனால் கிறிஸ்து பூமியிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டார் எனில், சபைகளை உற்பத்திசெய்தலுக்காக அவர் எவ்வாறு பூமியில் பரப்புதல் செய்யப்பட முடியும்? நான்கு சுவிசேஷங்களுக்குப் பிறகு, உயிர்த்தெழுதலில் கர்த்தர் ஜீவன்-தரும் ஆவியானார் என்பதை உணர்ந்தறிவதே இந்தத் திறவுகோல் (1 கொரி. 15:45; 2 கொரி. 3:17). அவர் பூமிக்குத் திரும்பி வந்ததும், சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க சீஷர்கள் மூலமாக நகர்ந்ததும், விசுவாசிகளை எழுப்பியதும், தேவனுடைய ராஜ்யமாகிய சபைகளை நிறுவியதும் இந்த ஆவியானவராகதான். நிருபங்கள் தொடங்கி, புதிய ஏற்பாட்டின் எஞ்சிய பகுதி, ஆவியானவராகிய இந்த உயிர்த்தெழுந்த கிறிஸ்து தாம் ஆதாயப்படுத்தி, சபைகளுக்குள் ஒன்றுசேர்த்துக் கூட்டிச் சேர்த்தவர்களுக்கு எப்படி எல்லாமுமாக ஆனார் என்பதை வெளிப்படுத்துகிறது. எனவே, நடபடிகள் புத்தகம் நான்கு சுவிசேஷங்களின் ஒரு தொடர்ச்சியாகக் கருதப்படலாம், அவற்றை நிருபங்களுடன் இணைக்கின்றது. இறுதியில் வெளிப்படுத்தல் புத்தகத்தில் நாம் பார்க்க முடிவது என்னவெனில், சபைகளைக் கட்டமைக்க கர்த்தரால் ஆதாயப்படுத்தப்பட்ட அனைவரும் புதிய எருசலேமாக ஆகுவதற்கு மறுசாயலாக்கப்படுகின்றனர் என்பதே. அப்படியானால், நடபடிகள் புத்தகத்தின் பகுதியாக நாம் எப்படி இருக்க முடியும்? உயிர்த்தெழுந்த கிறிஸ்து இன்று இன்னும் தம் சீஷர்கள் மூலமாக ஆவியானவரால் பரப்புதல் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதே பதில்! எனவே, லூக்கா நடபடிகள் புத்தகத்தை முடிக்கவில்லை—அது கர்த்தருடைய சீஷர்களாகிய நம் அனைவரையும் கொண்டு இன்னும் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது! ஒரு சீஷனாக இருப்பது என்பது தினமும் கர்த்தரைப் பின்பற்றுவதும், அவரிடமிருந்து கற்றுக்கொள்வதும் ஆகும். உயர்நிலைப்பள்ளியில் கூட, நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் ஆவியில் அவரைப் பின்பற்றுவதன் மூலமும், அவரிடமிருந்து கற்றுக்கொள்வதன் மூலமும், அவரை அனுபவித்துமகிழ்வதன் மூலமும் கர்த்தருடைய ஒரு சீஷனாக இருக்க முடியும். பள்ளியில் உங்கள் நண்பர்களுடனும், கூடுகைகளில் உள்ள சகோதர சகோதரிகளுடனும் நீங்கள் அவரைப் பகிர்ந்து கொள்ளலாம். இறுதியில், நாம் அனைவரும் மறுசாயலாக்கப்பட்டு, ஒன்றுசேர்த்துக் கட்டியெழுப்பப்படும்போது, நடபடிகள் புத்தகம் நிறைவடையும். கிறிஸ்து எவ்வாறு நம்மை ஆதாயப்படுத்தி, சபை வாழ்க்கைக்குள் நம்மைக் கொண்டுவந்தார் என்பது பற்றிய எல்லாக் கதைகளாலும் அது நிரப்பப்படும். இங்கே, நாம் (அவரது சீஷர்கள்) இந்த அற்புதமான பரப்புதலில் பங்கேற்க, நம் ஆவியில் உள்ள இந்த உயிர்த்தெழுந்து, பரமேறியவராகிய அவரிடமிருந்து கற்றுக்கொள்கின்றோம். கர்த்தரை நேசித்து, அவருடைய சீஷர்களாக அவரைப் பின்பற்றுகிற அனைவருக்கும் நடபடிகள் புத்தகத்தில் ஓர் இடம் உள்ளது.

சுவிசேஷ செயலாக்கம்: வேதாகமத்தின்படி, இரண்டு வகையான மக்கள் உள்ளனர்—தேவனுடைய பொருளாட்சியில் இருப்பவர்கள், அதில் இல்லாதவர்கள். இன்று பூமியில் தேவனுடைய நகர்வின் ஒரு பகுதியாக இருப்பவர்கள் நடபடிகள் புத்தகத்தில் என்றென்றும் ஒரு இடத்தை வகிப்பார்கள், மேலும் ஒவ்வொரு விசுவாசியும் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ-புஸ்தகத்தில் ஓர் இடத்தை வகிப்பார்கள். விசுவாசிக்காதவர்கள் அனைவரும் நினைவுகூரப்பட மாட்டார்கள்; அவர்களது வாழ்க்கை பதிவு செய்யப்படாது, ஏனெனில் அவர்களின் வாழ்க்கை நித்தியத்தைப் பொறுத்தவரை அர்த்தமற்றதாகவும் வீணானதாகவும் இருக்கும். இன்று பதிவு செய்யப்படும் ஒவ்வொரு இன்னார் இன்னாரும், ஒவ்வொரு வரலாற்றுப் புத்தகமும், ஒவ்வொரு நற்பெயரும் சுட்டெரிக்கப்பட்டு, மறந்தேபோகும். உங்கள் சாதனை எவ்வளவு பெரியதாக தோன்றினாலும்சரி, அது தேவனுடைய பொருளாட்சியில் ஒரு சாதனையாக இல்லாத வரை, அது உங்களோடுகூட சேர்ந்து தொலைந்துபோகும். வெற்று நாட்டங்களில் உங்கள் வாழ்க்கையை வீணடிப்பதற்குப் பதிலாக, உங்களை மறுபடிஜெநிப்பித்து, உங்களை தம் பொருளாட்சிக்குள் கொண்டுவரும்படி இந்த ஆவியானவராகிய கர்த்தரை உடனடியாக இப்போதே அனுமதிக்கவும், இதனால் இன்று உங்கள் வாழ்க்கை நித்தியமான ஒன்றாகக் கணக்கில் எண்ணப்பட்டு, இன்றுமுதல் நடபடிகள் புத்தகத்தில் பதிவுசெய்யப்படக்கூடும்!

மிக முக்கியக் காரியங்கள்: தேவனுடைய பொருளாட்சியின் இலக்கு, தேவனை மனிதனோடும், மனிதனை தேவனோடும் கலந்திணைப்பதே என்பதை அறிதல் (II.A.4.); ஒரு கனிநிறைந்த சுவிசேஷ வாழ்க்கையை வாழ்தல் (III.G.).

பின்புல வாசிப்பு:  Life-study of Acts, Messages 1–2.

REFERENCES: Life-study of Acts, Messages 1–2.