உயிர்த்தெழுந்து, பரமேறிய கிறிஸ்துவின் பரப்புதல்

பகுதி 10

✵பாடம் 01 – 09

ஸ்தேவானின் சாட்சி

குறிக்கோள்: கர்த்தரைச் சேவிப்பதற்கும், வார்த்தையால் கட்டமைக்கப்படுவதற்குமான ஸ்தேவானின் முன்மாதிரியின் மூலமாக இளம் வாலிபர்களை தூண்டுவதற்கு.

பொருட்சுருக்கம்: ஸ்தேவான் பரிசுத்த ஆவியும், கிருபையும், விசுவாசமும், ஞானமும், வல்லமையும் நிறைந்தவனாய் இருப்பதாக வார்த்தையால் சான்றளிக்கப்பட்ட (நற்சாட்சி பெற்ற) ஒரு சகோதரனாக இருந்தான். இத்தகைய ஒருவன் விதவைகளுக்குப் பந்திவிசாரணை செய்து சேவிக்க தெரிந்துகொள்ளப்பட்டான்! இதற்காக அவன் ஓர் உதவிக்காரனாக நியமிக்கப்பட்டான். அவன் வரம்பெற்றவனாகவும், பல விஷயங்களில் திறனுள்ளவனாக இருந்தாலும், அவன் தனக்கு ஏற்பாடுசெய்யப்பட்டதை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டான். (அவன் ஏற்றிருக்கவில்லை எனில், அவன் கர்த்தருக்கு இவ்வளவு பயனுள்ளவனாக ஆகியிருக்க முடியாது.) அவன் சேவித்தக் காலத்தின் போது, சபை பெரிதும் வளர்ந்தது. அவனது வலுவான சாட்சியின் காரணமாக, பொய்யான குற்றஞ்சாட்டுகிறவர்கள் அவன் தேவதூஷணம் பேசியதாக அவனைக் குற்றஞ்சாட்டும்படி அவனை யூத நீதிமன்றத்தின் (“சனஹெரின்”) முன் கொண்டுவருவதற்கு பயன்படுத்தப்பட்டனர். தேவனுடைய வார்த்தையால் கட்டமைக்கப்பட்ட ஒருவனாக, ஸ்தேவான் நீதிமன்றத்தின் முன் நின்று, வேதவாக்கியங்களிலிருந்து ஒரு நீண்ட மற்றும் விரிவான செய்தி மூலம் கிறிஸ்துவைக் குறித்து யூதத் தலைவர்களைக் கண்டித்து உணர்த்துவதற்கு இயன்றது. பதிலுக்கு, அவர்கள் அவனைக் கல்லெறிந்தனர். அவன் கல்லெறியப்பட இருந்தபோது, ஸ்தேவான் தேவனுடைய மகிமையையும், தன்னை ஏற்றுக்கொள்ள இயேசு தயாராக நிற்கிறதையும் கண்டான். தன்னைத் துன்புறுத்தியவர்களை மன்னித்து, கர்த்தருடைய நாமத்தைத் கூப்பிட்டு அவன் மரித்தான். ஸ்தேவானின் சாட்சியும், இரத்தசாட்சியும் நிச்சயமாகவே, அங்கிருந்த பவுலின் மீது ஓர் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அவனது இரத்தசாட்சியைத் தொடர்ந்து, சபையை துன்புறுத்திய ஒரு துன்புறுத்தல் இருந்தது, இது வேறு பல நகரங்களுக்கு சுவிசேஷத்தைப் பரவ வழிவகுத்தது. இவ்வாறு, ஸ்தேவானின் வாழ்க்கையும் மரணமும் மிகுந்த பலனைக்கொடுத்தது (யோவான் 12:24).

பின்புலம்: சபை வரலாற்றில் பல “ஸ்தேவான்கள்” இருந்திருக்கிறார்கள், ஒருவேளை உங்கள் உள்ளூரில் சில ஸ்தேவான்கள் இருக்கலாம். கர்த்தரை முற்றிலும் சேவித்த ஆண்கள் மற்றும் பெண்களின் கதைகளால் இளம்வாலிபர்கள் தூண்டப்படலாம். இந்தக் கதைகள், பாடத்திற்குப் பிறகும்கூட நீண்டகாலம் அவர்களது இருதயங்களில் நிலைத்திருக்கும்.

அதிகாரங்கள்: நடபடிகள் 6-7.

போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:

  • பரிசுத்த ஆவியும், கிருபையும், விசுவாசமும், ஞானமும், வல்லமையும் நிறைந்த ஒரு மனிதனாகிய ஸ்தேவான் எருசலேமில் உள்ள சபையில் பந்திவிசாரணை செய்து சேவிக்க தெரிந்துகொள்ளப்பட்டான்—அப். 6:1-6

எருசலேமில் உள்ள சபையிலுள்ள ஒரு சகோதரனாகிய ஸ்தேவான் பரிசுத்த ஆவியும், கிருபையும், விசுவாசமும், ஞானமும், வல்லமையும் நிறைந்தவனாய் [கிரே. ப்ளெரெஸ், அப். 6:3, footnote 1 மற்றும் அப். 2:4, footnote 2 ஐ காண்க] இருப்பதாக வேதாகமத்தில் சான்றளிக்கப்படுகிறான் (அப். 6:3, 5, 8). இத்தகைய ஒருவன் எருசலேமில் உள்ள சபையிலுள்ள விதவைகளுக்குப் பந்திவிசாரணை செய்து சேவிக்க மற்ற ஆறு பேருடன் கூட தெரிந்துகொள்ளப்பட்டான்! (இந்த நியமனத்திற்கான பின்புலத்தை அறிய நடபடிகள் 6:1–4 ஐ வாசிக்கவும், ஹெலனிஸ்டிக் [மாபெரும் அலெக்சாண்டருக்குப் பிந்தைய  கிரேக்க வரலாறு, கலாச்சாரம் அல்லது கலை தொடர்பான] கிரேக்க விதவைகள் முதன்முதலில் கிரேக்க மொழி பேசும் உலகில் யூத குடியேற்றங்களிலிருந்து வந்தவர்கள். அவர்கள் பெந்தெகொஸ்தே பண்டிகைக்காக எருசலேமுக்கு வந்துசேர்ந்து, இரட்சிக்கப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட சபையில் தங்கியிருந்தனர். எபிரேய விதவைகள் எருசலேம் அல்லது அருகிலுள்ள இடங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். சபையில் தேவையுள்ளவர்களுக்கான நடைமுறைக்குரிய கவனிப்பு அப்பட்டமாக நேர்த்தியாக விநியோகிக்கப்படவில்லை, மேலும் இந்த ஹெலனிஸ்டிக் [கிரேக்கம் பேசும்] விதவைகள் கவனிக்கப்படாமல் விடப்பட்டுக்கொண்டிருந்தனர். இது எருசலேமில் உள்ள சபையிலுள்ள அமைதியான சூழ்நிலையை அச்சுறுத்தியது.)

  • ஸ்தேவான் ஓர் உதவிக்காரனாக இருக்க தேர்ந்தெடுக்கப்பட்டு, நியமிக்கப்பட்டான்—அப். 6:5

எருசலேமில் உள்ள சபையில் மூப்பர்களாகவும் செயல்பட்ட அப்போஸ்தலர்கள், ஞானமும் பரிசுத்த ஆவியும் நிறைந்த ஏழு நற்-சான்றளிக்கப்பட்ட மனிதர்கள் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யத் தேர்ந்தெடுக்கப்படும்படி கட்டளையிட்டனர். இந்த ஏழு பேரும்தான் சபைகளில் உதவிக்காரர்களாகத் தெரிந்துகொள்ளப்பட்டு நியமிக்கப்பட்ட முதலாமவர்களாக இருந்தனர். உதவிக்காரர்கள், மூப்பர்களின் மேற்பார்வையின் கீழ் சபையில் உள்ள நடைமுறைக்குரிய காரியங்களைக் கவனித்துக்கொள்பவர்கள்.

  • ஒரு தாழ்மையான வழியில் சேவித்தல், ஸ்தேவானின் சேவையில் அடங்கியது—அப். 6:23

ஒரு கூட்ட விதவைகளுக்கு உணவு பரிமாறுவது, கவர்ச்சியற்றதாக இருப்பதாகத் தெரிகிறது. ஆயினும் ஸ்தேவான் இந்தப் பொறுப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டான். அவன் வல்லமையான வேலைகளை தான் செய்துகாட்டுவதிலும், அவனது பேசும் திறனிலும் காட்டப்பட்டுள்ளபடி, அவன் ஒரு வரம்பெற்ற நபராக இருந்தான் என்பதில் சந்தேகமில்லை, இந்தத் தெரிந்துகொள்ளப்பட்ட ஏழு பேரில் மற்றொருவனாகிய பிலிப்புவும் ஒரு வரம்பெற்ற நபராக, குறிப்பாக சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதில் வரம்பெற்ற நபராக இருந்தான். “நடபடிகள் 6 இல் உள்ள முன்மாதிரியின்படி, ஸ்தேவானும் பிலிப்புவும் தாங்கள் பந்திவிசாரணை செய்து பரிமாறும்படி கேட்டுக்கொள்ளப்பட்ட போது முறுமுறுக்கவில்லை. ஸ்தேவான், ‘நான் ஒரு மாபெரும் போதகன். ஓர் உதவிக்காரனாக இருக்கும்படி என்னிடம் எப்படி உங்களால் கேட்க முடிகிறது?’ என்று கேட்கவில்லை. அதேபோல் பிலிப்பு, ‘நான் ஒரு தலைசிறந்த சுவிசேஷகன். பந்திவிசாரணை செய்து பரிமாறும்படி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?’ என்று கேட்கவில்லை. முறுமுறுப்பதற்குப் பதிலாக, ஸ்தேவானும் பிலிப்புவும் பந்திவிசாரணை செய்து பரிமாறுவதில் (சேவிப்பதில்) ஓர் அருமையான பணியைச் செய்தனர். சபை வாழ்க்கையில் நாம் கர்த்தருடைய கிருபையின் கீழும், அவருடைய இறையாண்மையின் கீழும்கூட இருக்கிறோம். எனவே, முறுமுறுக்காமல் நாம் கர்த்தரின் இறையாண்மையையும், அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுச்சூழலையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் இதைச் செய்து, நடபடிகள் 6 இல் உள்ள முன்மாதிரியைப் பின்பற்றினால், நமக்கு ஒரு மகிழ்ச்சியான மற்றும் இனிமையான சபை வாழ்க்கை இருக்கும்” (​Life- study of Acts, Message 19, p. 158). மேலும், ஸ்தேவான் அல்லது பிலிப்பு தங்களுக்கான தேவனுடைய ஏற்பாட்டை ஏற்றுக்கொள்ளச் சித்தமாய் இருந்திருக்கவில்லை எனில், அவர்கள் இறுதியில் கர்த்தருக்குப் பயனுள்ளவர்களாக ஆகியிருந்ததைப் போல ஒருபோதும் ஆகியிருக்க மாட்டார்கள்.

  • எருசலேமில் உள்ள சபை அதிகரிக்கவும் பெருக்கமடையவும் ஸ்தேவானின் சேவை உதவியது—அப். 6:7

உதவிக்காரர்கள் நியமிக்கப்பட்ட பிறகு உடனேயே, வேதாகமம் தேவனுடைய வார்த்தை வளர்ந்ததாகவும், எருசலேமிலுள்ள விசுவாசிகளின் எண்ணிக்கை மாபெரிதும் பெருக்கமடைந்ததாகவும் பதிவுசெய்கிறது. அப்போஸ்தலர்கள் தங்கள் ஜெபத்திலிருந்தும், வார்த்தையின் ஊழியத்திலிருந்தும் விரக்தியடையாததாலும் (அப். 6:2-4), விருப்பமும் திறமையும் உள்ளவர்கள் சிலர் இந்த நடைமுறைக்குரிய சூழ்நிலையைக் கவனித்துக்கொள்ள எழும்பியிருந்ததாலும், கர்த்தர் சபையில் மக்களைக் கூட்டிச் சேர்ப்பதற்கான வழி வகுக்கப்பட்டது. நாம் இத்தகைய ஒரு விதத்தில் சேவிக்க நம்மை நாமே ஒப்புக்கொடுக்கும்போது, நாம் இருக்கும் இடத்திலுள்ள சபை புதியவர்களை பெற்றுக்கொள்ளவும், கவனித்துக்கொள்ளவும் ஓர் அதிகரி்ககப்பட்ட திறனை நாம் பெறுவோம்.

  • ஸ்தேவானின் உண்மையுள்ள சாட்சி, யூத மதவாதிகள் மூலமான சாத்தானின் தாக்குதலை ஈர்த்தது—அப். 6:8-12

ஸ்தேவான் எந்த ஞானம் மற்றும் ஆவியானவரால் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தானோ அந்த ஞானத்தையும் ஆவியானவரையும் எதிர்ப்பாளர்களால் மறுத்துவாதிட முடியாததால், அவன் தேவனை தூஷித்ததாகவும், மோசேயையும் நியாயப்பிரமாணத்தையும் தாக்கியதாகவும், ஆலயத்திற்கு எதிராகப் பேசியதாகவும் கூறின பொய்யாகக் குற்றஞ்சாட்டுகிறவர்களை அவர்கள் உள்ளே கொண்டுவந்தனர். இவை கடுமையான குற்றச்சாட்டுகளாக இருந்தன, மேலும் அவற்றின் காரணமாக ஸ்தேவான் யூத சட்ட நீதிமன்றமாகிய சனஹெரின் முன் கொண்டுவரப்பட்டான்.

  • ஸ்தேவான் சன்ஹெரின் முன் கொண்டுவரப்பட்டு, அவனது சாட்சிக்காக இரத்தசாட்சியாக்கப்பட்டான்—அப். 6:12-7:60
  • இயேசுவை சிலுவையில் அறைந்திருந்த அதே சன்ஹெரின் முன் ஸ்தேவான் கொண்டுவரப்பட்டான்—அப். 6:12

சன்ஹெரின் என்பது ஒரு வகையான யூத நீதிமன்றமாக இருந்தது, இது அவர்களது நியாயப்பிரமாணத்தை மீறுபவர்களுக்கு தண்டனையை நிர்ணயிப்பது உட்பட, மதரீதியான பிரச்சினைகளுக்குத் நியாயத்தீர்ப்பு வழங்க முடிந்தது. எனினும், ஒரு நபரை மரணத்திற்கு உள்ளாக்கும் அதிகாரம் அவர்களுக்கு இருக்கவில்லை. ரோம ஆட்சியாளர்களால் மட்டுமே இதைச் செய்ய முடிந்தது. (இந்தக் குழுதான் இயேசுவை மரண தண்டனைக்கு ஆளாக்கியிருந்த அதோடு தற்போது எருசலேமில் உள்ள சபையைத் துன்புறுத்திக்கொண்டிருந்த அதே குழு!) அவர்கள் ஸ்தேவானை நோக்கிப் பார்த்தபோது, அவனுடைய முகத்தில் ஒரு தேவதூதனின் முகத்தின்.தோற்றம் இருந்தது (அப். 6:15), இது அவன் பாடநுபவித்துக்கொண்டிருக்கவில்லை; அவன் கர்த்தரை அனுபவித்துமகிழ்ந்துக் கொண்டிருந்தான் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது!

  • தேவனுடைய பொருளாட்சி பற்றிய ஒரு நீண்ட செய்தியுடன் ஸ்தேவான் தன் குற்றஞ்சாட்டுகளுக்கு பதிலளித்தார்—அப். 7:2-53

ஸ்தேவான் நிச்சயமாக தேவனுடைய வார்த்தையால் கட்டமைக்கப்பட்ட ஒரு நபராக இருந்தான்! இங்கு அவனது பேசுதல் புதிய ஏற்பாட்டில் இதி நீண்டது, மேலும் தேவன் ஆபிரகாமை அழைத்த காலத்திலிருந்து தொடங்கி இஸ்ரயேலின் வரலாற்றை உள்ளடக்கியது. இந்த மகிமையின் தேவன் எவ்வாறு ஆபிரகாமுக்குத் தோன்றினார் என்பதைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் அவன் தொடங்கினான். (முழு வேதாகமத்திலும் ஸ்தேவான் மட்டுமே, ஆபிரகாமின் அழைப்பைக் குறிப்பிடுவதில் “மகிமையின் தேவன்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினான்.) அவன் ஆலயத்தின் கட்டியெழுப்புதலுக்கு வந்தடையும் வரை, அவன் ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு நிலையாக தொடர்ந்தான். அவன் தேவனையும், மோசேயையும், ஆலயத்தையும் தூஷித்ததாகக் கூறியவர்களிடம் அவன் தன்னை நியாயப்படுத்திக்கொண்டிருந்தான். அவன் தேவனை “மகிமையின் தேவன்” என்றும், “உன்னதமானவர்” என்றும் அழைத்தான். அவன் மோசேயின் வாழ்க்கையில் ஓர் அதி நேர்மறையான வழியில் ஒரு நீண்ட நேரம்  செலவிட்டான், ஆபிரகாமுக்கும் மோசேக்கும் தோன்றிய இந்தச் சாட்சாத்து தேவன் மனிதக் கைகளால் செய்யப்பட்ட ஒரு வீட்டில் எப்படி குடியிருக்க மாட்டார் என்பதை இறுதியாகப் பகிர்ந்துகொண்டான். அவன் இதைப் பகிர்ந்துகொண்டபோது, “தேவனுடைய ஆவிக்குரிய வாழ்விடமாகிய சபை இருக்கிற ஆவியில் (எபே. 2:22), அவரது மக்கள் அவரை தொழுதுகொள்ளுமாறு (யோவான் 4:24) தேவன் பழைய ஏற்பாட்டுப் பௌதிகமான ஆலயத்தைக் கைவிட்டு, ஒரு புதிய காலகட்டத்தைத் துவங்குவார்”என்பதை அவன் மறைவாய்க் காட்டினான்  (Life-study of Acts​, Message 21, p. 173). ஸ்தேவானின் வார்த்தை இந்த மதவாதிகளை அம்பலப்படுத்தியது. அவர்கள் தேவனுக்கான தங்கள் ஆலயத்தைக் குறித்து மேன்மைப் பாராட்டினர், ஆனால் அவர்களுக்குள் வாழ வேண்டும் என்ற தேவனுடைய வாஞ்சையில் அவரை நிராகரித்தனர்.

  • ஸ்தேவானின் பேசுதல் தனக்குச் செவிசாய்த்தவர்களைக் கடுங்கோபமடையச் செய்தது, அப்போது அவர்கள் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, அவனை நகரத்திற்கு வெளியே இழுத்துச்சென்று அவனைக் கல்லெறிய அவன்மேல் பாய்ந்தனர்—அப். 7:54-59

அப்போஸ்தலர் 7:51-53 இல் தன் பேசுதலில், ஸ்தேவான் தன் கேட்போரை பெரிதும் காயப்படுத்தினான். இந்த வார்த்தையின் மூலம் நாம், ஸ்தேவான் தன் சொந்த ஜீவனுக்காக அக்கறைப்பட்டதை விட, தேவனுக்காகவும் அவருடைய பொருளாட்சிக்காகவும் அதிக அக்கறை காட்டினான் என்பதைப் பார்க்க முடிகிறது. அவர் தன் எதிர்ப்பாளர்களை முற்றும்முடிய அம்பலப்படுத்தினான். அவர்கள் தாங்கள் ஸ்தேவானை விசாரணைக்கு உட்படுத்திக்கொண்டிருந்ததாக நினைத்தார்கள், ஆனால் ஸ்தேவான் “சூழ்நிலையை தலைகீழாக மாற்றிப்போட்டான்,” மேலும் பரிசுத்த ஆவியை எதிர்ப்பதாகவும், தீர்க்கதரிசிகளை துன்புறுத்திக் கொன்றதாகவும், தங்களிடம் வரும் சாட்சாத்து தேவனாகிய இந்த நீதிமானை காட்டிக்கொடுத்து கொலை செய்ததாகவும் அவர்களைக் குற்றஞ்சாட்டினான். எந்த நியாயப்பிரமாணத்தை அவன் தான் மீறியதாக அவர்கள் மாய்மாலத்துக்குரிய ரீதியில் குற்றஞ்சாட்டியிருந்தனரோ, அதே நியாயப்பிரமாணத்தை அவர்கள் கைக்கொள்ளவில்லை என்றும் அவன் அவர்களைக் குற்றஞ்சாட்டினான். உண்மையில், இயேசுவைப் பெற்றிருந்த ஒருவனாக, ஸ்தேவான் தான் விசுவாசத்திற்குக் கீழ்ப்படிதல் மூலமாக அவனில் நியாயப்பிரமாணம் நிறைவேற்றப்பட்டிருந்தது! ஸ்தேவானைக் குற்றஞ்சாட்டியவர்கள் ஸ்தேவானின் அம்பலமாக்கும் வார்த்தைகளால் கடுங்கோபமடையச் செய்யப்பட்டனர் அல்லது “வெட்டப்பட்டனர்” (இதற்கான கிரேக்க வார்த்தையின் அர்த்தம், “அறுக்கப்பட்டனர்” என்பதாம்) அதோடு தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, காட்டு மிருகங்களைப் போன்று அவனை நோக்கித் தங்கள் பற்களைக் கடித்துக்கொண்டு அவன்மேல் பாய்ந்ததன் மூலம் அவன் கூறிக்கொண்டிருந்ததைத் தடுத்துநிறுத்த தங்களால் முடிந்தவரை முயன்றனர். அவர்கள் உடனடியாக அவனை நகரத்திற்கு வெளியே இழுத்துச்சென்று அவனைக் கல்லெறியத் தொடங்கினர், அவ்வாறு செய்ய அவர்கள் தங்களுக்கு உரிமை இல்லை என்றாலும் அவ்வாறு செய்தனர்.

  • அவர்கள் அவனைக் கல்லெறியப் போகையில், ஸ்தேவான் தேவனுடைய மகிமையையும், இயேசு தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் கண்டான்—அப். 7:56

ஸ்தேவான் பரிசுத்த ஆவியினாலே நிறைந்ததவனாய், தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசு நிற்கிறதையும் கண்டான். பூமியிலுள்ள மக்கள் அனைவரும் அவனை நிராகரித்துக்கொண்டிருந்தனர், ஆனால் பரலோகங்களிலுள்ள கர்த்தர் அவனை உற்சாகப்படுத்தவும் பலப்படுத்தவும் நின்றுகொண்டிருந்தார். இயேசு பரலோகங்களில் நின்றார் என்று வேதாகமம் கூறும்  ஒரே முறை இதுதான். மற்ற இடங்களில், அது இயேசு தேவனுனடைய வலதுபாரிசத்தில் அமர்ந்திருக்கிறார் என்று கூறுகிறது. இங்கே, இயேசு தம் துன்புறுத்தப்பட்டவனுக்கான தம் அக்கறையைக் காட்டும் விதமாக எழுந்து நின்றார். தன் பேசுதலில் ஸ்தேவான், மகிமையின் தேவன் ஆபிரகாமுக்கு எவ்வாறு தோன்றினார் என்பதைப் பற்றி பகிர்ந்துகொள்வதன் மூலம் தொடங்கினான். தேவனுடைய தோன்றுதல், ஆபிரகாமை ஒரு மண்டலத்திலிருந்து வெளியேறி இன்னொரு மண்டலத்திற்குள் நுழைய பலப்படுத்தியது. இங்கேயும் மகிமையின் தேவன் ஸ்தேவானுக்குத் தோன்றி, அவனுடைய இரத்தசாட்சிக்காக அவனைப் பலப்படுத்தினார்.

  • ஸ்தேவான் கர்த்தரைக் கூப்பிட்டு, தன் மீது குற்றஞ்சாட்டியவர்களுக்காக ஜெபித்து மரித்தான்—அப். 7:59-60

அவன் மரித்துக்கொண்டிருந்த போது, ஸ்தேவான் பலமாக கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, தன்னை துன்புறுத்தியவர்களை மன்னித்து, இயேசு தாம் சிலுவையில் மரித்துக்கொண்டிருந்த போது வெளியரங்கமாக்கிய அதே தெய்வீக குணாம்சங்களை தன் மனித நற்பண்புகளில் காட்சியாக்கிக்கொண்டிருந்தான். தன் இறுதி மூச்சில் ஸ்தேவான், இயேசு செய்திருந்ததைப் போலவே தேவனை வெளிக்காட்டினான்.

  • ஸ்தேவானின் இரத்தசாட்சி, நகரமெங்கும் சபையின் மீது நடத்தப்பட்ட ஒரு துன்புறுத்தலைகுத் தூண்டியது, இது சுவிசேஷம் மேலும் பரவுவதற்கு வழிவகுத்தது—அப். 8:1-5

ஸ்தேவானின் இரத்தசாட்சி நகரமெங்கும் கிறிஸ்தவர்களை துன்புறுத்தலைத் தூண்டியது, அப்போஸ்தலர்களைத் தவிர மற்ற அனைவரும் விரட்டப்பட்டனர். சிதறடிக்கப்பட்ட விசுவாசிகள், சுவிசேஷத்தை மற்ற நகரங்களுக்கு எடுத்துச் சென்றனர். ஸ்தேவானின் மரணம், பூமியில் கர்த்தருடைய நகர்வுக்காக மிகுந்த பலனைக்கொடுத்த ஒரு வித்தாக ஆயிற்று. ஸ்தேவானைக் கல்லெறிந்தவர்களுக்காக அருகிலே நின்று, வஸ்திரங்களைப் பார்த்துக்கொண்டவன் மீது ஓர் ஆழமான கருத்துப்பதிவை அது நிச்சயமாகவே ஏற்படுத்தியது. இந்த இளம் வாலிபன் தர்சுப் பட்டணத்தானாகிய சவுல் ஆவான், மேலும் ஸ்தேவான் செய்திருந்ததைப் போலவே அவன் தன்னையே முற்றிலும் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கும்படி செய்து கர்த்தர் இந்தத் துன்புறுத்துபவனைக் கைப்பற்றும் நாள் வரை, அவன் ஸ்தேவானில் கண்டதும் கேட்டதுமாகிய அனைத்தும் நிச்சயமாகவே அவனில் கிரியைசெய்தது.

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: வேதாகமத்தைப் பற்றிய இத்தகைய ஒரு பரந்தகன்ற பார்வையைப் பகிர்ந்துகொள்ளும் ஸ்தேவானின் திறனைக் கொண்டு இளம்வாலிபர்களுக்குக் கருத்துப்பதிவை ஏற்படுத்தவும் (அப். 7:2-50). அவன் வேதாகமத்தின் பார்வையை அதன் ஆரம்பம் முதல் இறுதி வரை பார்த்தான், எனவே சமயம் வாய்த்த போது, அவன் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த தரிசனத்தை மற்றவர்களிடம் பேச இயன்றது. ஸ்தேவான் வேதாகமத்தை மிகவும் நன்கு அறிந்திருக்கவில்லை என்றாலும், அவன் இன்னும் இரத்தசாட்சியாக்கப்பட்டிருக்கக்கூடும், ஆனால் அவனது தியாகம் அதிக கவனத்தை ஈர்த்திருக்காது, அல்லது அது இத்தகைய ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்காது. பல ஆண்டுகளாக சிறுவர் கூடுகை சேவிக்கும் பரிசுத்தவான்கள் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வசனமாக மனப்பாடம் செய்யும்படி நம்மை உற்சாகப்படுத்தியிருப்பதை நாம் பாராட்டாமல் இருக்கக்கூடும். எனினும், நாம் வார்த்தையை வாசிப்பதையும் மனப்பாடம்செய்வதையும் பயிற்சிசெய்வதில்லை எனில், தெய்வீக வெளிப்பாடு நமக்கு ஒருபோதும் ஒரு தரிசனமாக ஆகிவிடாது. நாம் மனப்பாடம் செய்யும் ஒவ்வொரு வசனமும் ஒரு புதிரின் துண்டைப் போன்றது, அது நமக்குள் நுழைந்து, நமக்குள் இருக்கும் மற்றத் துண்டுகள் அனைத்தோடும் இழைந்திணைகிறது. இறுதியில், நாம் தொடர்ந்து வேதாகமத்தை மனப்பாடம்செய்துக்கொண்டும் வாசித்துக்கொண்டும் இருந்தால், தேவனுடைய வார்த்தையில் உள்ள சத்தியத்தைப் பற்றிய ஒரு முழு சித்திரம் நம் ஆள்தத்துவத்தில் உருவாகத் தொடங்கும். இத்தகைய ஓர் அற்புதமான சித்திரத்தை நாம் எவ்வளவு அதிகமாகப் பார்க்கிறோமோ, அவ்வளவு அதிகமாக அது நம்மைக் கட்டுப்படுத்தி, நாம் பேசும் விஷயமாகவே ஆகிவிடும். ஒரு பரவசமான நாடகத்தையோ விளையாட்டையோ பார்ப்பவர்கள் தாங்கள் பார்த்திருக்கிறவற்றைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதை அனுபவித்துமகிழ்கிறார்கள். நமக்கும் வேதாகமத்திற்கும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஆகவே, இந்தப் புதிர் துண்டுகள் அனைத்தும் ஒன்றாக வரத் தொடங்கி, நாம் வேதாகமத்தைப் பற்றிய முழு பரந்தகன்ற காட்சியையும் பார்க்க இயலும் வரை, நாம் வார்த்தையை வாசித்து மனப்பாடம்செய்வதைத் தொடரலாம். அப்போது, நாம் அப்படியே ஸ்தேவானைப் போலவே ஆகிவிடுவோம், ஆவியானவரால் நிரப்பப்பட்டு, நாம் பார்த்திருக்கிறதையும் விசுவாசித்திருக்கிறதையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் பேசுவோம்.

சுவிசேஷ செயலாக்கம்: நாம் மரிக்கும் போது, நம் முகம் ஸ்தேவானின் முகம் போல் பிரகாசமாக இருக்குமா? தெய்வீக சத்தியத்தை மற்றவர்களிடம் பேசி, இயேசுவை மகிமையில் காண்போமா? அல்லது நம் உதடுகளில் துயரமும் மனஸ்தாபமும் நிறைந்த ஒரு பயமுறுத்தும், வெறுமையான மரணத்திற்கு நாம் ஆளாகுவோமா? ஸ்தேவான் தேவனோடு உள்ள தொடர்பில் ஒரு மரணமடையக் காரணம், அவன் தேவனோடு தொடர்பில் இருந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்தான் என்பதே. ஸ்தேவான் வெறும் ஓர் இயல்பான கிறிஸ்தவனாக இருந்தான்—ஓர் அசாதாரணமான மனிதப்பிறவி அல்ல—இவன் தனக்காக மரித்த தன் ஜீவன்-தரும்-இரட்சகராக இயேசுவை அறிந்துகொண்டார், எனவே அவன் மரணத்திற்குப் பயப்படவில்லை (எபி. 2:14-15; 1 கொரி. 15:54–57). வேதாகமம் மிகவும் தெளிவாக உள்ளது, “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனுக்குள் விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3:16, கிரே.). இன்று நீங்கள் கர்த்தரில் விசுவாசித்தால், நீங்கள் என்றென்றும் அவருடையவர்களாக இருப்பீர்கள். நீங்கள் வாழ்ந்தாலும் சரி அல்லது நீங்கள் மரித்தாலும் சரி, நீங்கள் கர்த்தருடையவர்களாக இருப்பீர்கள் (ரோ. 14:8). இதுவே ஸ்தேவானின் சாட்சியாக இருந்தது அதோடு இதுவே பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்களின் சாட்சியாக இருந்து வருகிறது. தேவன் உங்களை நித்திய ஜீவனுக்கென்று இரட்சித்திருக்கிறார் என்ற நிச்சயத்தை இன்று நீங்கள் பெறலாம். மரணத்தினூனடாய் உயிர்த்தெழுதலுக்குள் கடந்துசென்றிருப்பவராக கர்த்தராகிய இயேசுவைப் பெறுவதன் மூலம் நீங்கள், மரணத்தை வென்ற அதோடு மரண பயத்தின் அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுவித்த இந்தத் தெய்வீக, அழிக்கப்படமுடியாத, உயிர்த்தெழுதல் ஜீவனாக அவரை உடைமையாகப் பெற்றிருப்பீர்கள் (எபி. 2:15).

மிக முக்கியக் காரியங்கள்: பரிசுத்தவான்களைச் சேவிப்பதன் மூலம் நடைமுறையில் கர்த்தரைச் சேவித்தல் (III.F.5.); வேதாகமத்தை வாசித்தல் (III.E.3.); ஊழியத்தை வாசித்தல் (III.E.8.).

பின்புல வாசிப்பு: Life-study of Acts, Message 19, pp. 154–159; Message 20, pp. 161–162; Message 21.

REFERENCES: Life-study of Genesis, Message 39, p. 528; Life-study of Acts, Message 2, p. 10; Message 19, pp. 154–159; Message 20, pp. 161–162; Message 21; Life-study of Luke, Message 69, p. 591; Life-study of Mark, Message 67, p. 571.