உயிர்த்தெழுந்து, பரமேறிய கிறிஸ்துவின் பரப்புதல்
பகுதி 10
✵பாடம் 01 – 09
சீஷர்களை ஆயத்தப்படுத்துதல்
குறிக்கோள்: தம் சீஷர்கள் பூமியில் தம் நகர்வுக்காக தம்மோடு தொடர்ந்து வேலைசெய்ய முடியுமாறு, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க தம் சீஷர்களை அனுப்புவதற்கு முன், அவரை இந்த அதரிசனமான (கண்ணுக்குத் தெரியாத), உள்வசிக்கும் ஆவியானவராக அறியும்படி அவர்களைக் கர்த்தர் பயிற்றுவித்தார் என்பதைக் காண்பதற்கு.
பொருட்சுருக்கம்: தம் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, கர்த்தர் தம் அதரிசனமான (கண்ணுக்குத் தெரியாத) பிரசன்னத்தை தம் சீஷர்கள் அறியும்படி அவர்களை நாற்பது நாட்களாகப் பயிற்றுவித்தார். அவர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தம் பௌதிகப் பிரசன்னத்தில் அவர்களுடன் இருந்து வந்திருந்தார், ஆனால் இந்தக் காலத்திற்குப் பிறகு சீஷர்கள், அவர் சிலுவைமரணத்தினூடாய்க் கடந்துசென்று, தம் உயிர்த்தெழுதலின் நாளில் இந்த ஆவியானவராக அவர்களுக்குள் நுழையும் வரை இயற்கையானவர்களாக தொடர்ந்து இருந்தனர். அந்தச் சமயத்திற்குப் பிறகு, சீஷர்கள் கர்த்தரை ஒரு வித்தியாசமான வழியில் அறிந்துகொள்ள பயிற்றுவிக்கப்பட வேண்டியிருந்தது. அவர்கள் அவரது பூமிக்குரிய ஊழியத்தில் அவரோடு நடந்தார்கள்; இப்போது அவர்கள் அவரது ராஜ்யத்தின் பரவலுக்காக இந்த ஆவியானவராகிய அவருடன் நகர்வதற்குக் கற்றுக்கொண்டிருந்தனர். இன்று, நாமும் கர்த்தரை ஓர் உள்ளான வழியில் அறிய பயிற்றுவிக்கப்பட வேண்டும், இதனால் நமக்குள்ளும் மற்றவர்களுக்குள்ளும் அவரது ராஜ்யத்தின் பரவுதலுக்காக நாம் பூமியில் அவரது நகர்வை முன்னெடுக்கக்கூடும்.
பின்புலம்: தங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையை சற்றே தொடங்குகின்ற விசுவாசிகளாக இளம் வாலிபர்களுக்கு, கர்த்தரோடும் கர்த்தரிலும் வாழ்ந்து வேலைசெய்வது என்றால் என்ன என்பதைத் தெளிவுபடுத்துவதற்கு உதாரணங்களும் எடுத்துக்காட்டுகளும் தேவை. நடபடிகள் புத்தகம், கிறிஸ்துவில் உள்ள விசுவாசிகள் பூமியில் அவரது பரப்புதலுக்காக அவருடன் எவ்வாறு ஒத்துழைத்தனர் என்பதைப் பற்றிய கதைகளால் நிறைந்துள்ளது. இந்தக் கதைகளை அறிந்துகொள்வதன் மூலம், நம் சொந்தக் கிறிஸ்தவ வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். சீஷர்கள் தாங்கள் கர்த்தரை ஜீவன்-தரும் ஆவியானவராக அறிந்துகொள்வதன் மூலம் ஆயத்தப்படுத்தப்பட்டிருந்ததால், பூமியில் அவரது நகர்வுக்காக அவருடன் வேலைசெய்ய இயன்றனர். இளம் வாலிபர்கள் நடபடிகளில் உள்ள கதைகளுடன் நன்கு பரீட்சியப்படவில்லை எனில், ஆவியானவராக தம் அதரிசனமான (கண்ணுக்குத் தெரியாத) நடத்துதல் மூலமாகக் கர்த்தரோடு சீஷர்கள் எவ்வாறு ஒன்றுசேர்ந்து வேலைசெய்தனர் என்பதைப் பற்றிய சில கதைகளைப் பகிர்ந்துகொள்ள நேரம் ஒதுக்குங்கள்.
அதிகாரங்கள்: லூக்கா 24; நடபடிகள் 1–2.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
- தம் உயிர்த்தெழுதலுக்குப்பின், கர்த்தர் ஒரு நாற்பது நாள் காலஅளவிற்கு தம் சீஷர்களுக்குத் திரும்பத்திரும்பத் தோன்றினார்—அப். 1:1-3
- சீஷர்கள் கர்த்தரால் தம் பூமிக்குரிய ஊழியத்தின் போது மூன்றரை ஆண்டுகளாகப் பயிற்றுவிக்கப்பட்டிருந்தனர்
அவரைப் பின்பற்றிய அனைவரிலிருந்தும், கர்த்தர் தம் குறிப்பிட்ட கூட்டாளிகளாகவும் சாட்சிகளாகவும் இருக்க பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டார். இந்தப் பன்னிரண்டு சீஷர்கள் நம் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். எனவே, சுவிசேஷங்கள் மற்றும் நடபடிகளில் அவர்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நமக்கும் பொருந்தும். தங்கள் இயற்கையான கட்டமைப்பில், சீஷர்கள் கர்த்தருக்காக வைராக்கியமாக இருந்தனர், ஆயினும் அவர்கள் இயற்கையாக இருந்தனர், அதாவது கர்த்தர் தம் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு நடக்கவிருக்கும் ஆவிக்குரிய நிஜங்களைப் பற்றி பேசியதால், கர்த்தர் அவர்களுக்குப் போதித்த விஷயங்களில் பலவற்றை அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை என்பதே இதன் அர்த்தம். (இயற்கையான மனிதனால் ஆவியானவருக்குரிய விஷயங்களைப் புரிந்துக்கொள்ள முடியாது—1 கொரி. 2:14). கர்த்தர் தம் வழிமுறையினூடாய்க் கடந்துசென்ற போது, அவர் தம் சீஷர்களையும் தம்முடன் அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். அவரது ஊழியத்தின் மூன்றரை ஆண்டுகள் அவர்களது கூடுதலான பயனுள்ளத் தன்மைக்கான அஸ்திபாரத்தை உருவாக்கியது, ஆனால் அது அவர்களைக் கர்த்தரின் உண்மையான சாட்சிகளாக ஆக்குவதற்குத் தன்னில்தானே போதுமானதாக இருக்கவில்லை. அவர்கள் தங்களால் இயன்றவரை முயற்சித்த போதிலும், அவர்கள் தங்களை மட்டுமே வெளிக்காட்ட முடிந்தது, மேலும் பெரும்பாலும் அவர்கள் தங்கள் பொறாமை மற்றும் இலட்சியப்பேராவலில் முழுவதும் அம்பலமாக்கப்பட்டனர். அவர்களது பழைய கருத்துகள் என்னும் திரையின் காரணமாக, தம் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் பற்றிய கர்த்தரின் தெளிவான (அப்பட்டமான) மற்றும் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட வார்த்தையை அவர்களால் புரிந்துகொள்வதற்குக் கூட இயலவில்லை! அவர்கள் இவ்வளவு அதிகமாகப் பார்த்திருந்தாலும் கூட, தெய்வீக விஷயங்களைப் பொறுத்தவரை அவர்கள் இன்னும் இருளில் இருந்தனர்.
- அவர் உயிர்த்தெழுந்த பிறகு, இயேசு தம் சீஷர்களுக்குள் தம்மையே இந்த ஆவியானவராக சுவாசித்து ஊதினார், மேலும் பகிரங்கமாக பரலோகங்களுக்கு ஏறிச்செல்வதற்கு முன் ஒரு நாற்பது நாள் காலஅளவிற்கு அவர்களுக்குத் தொடர்ந்து தோன்றினார்—யோவான் 20:22
- உயிர்த்தெழுதலில், இயேசு தம் விசுவாசிகளின் ஜீவனாக இருக்க அவர்களுக்குள் குடியிருப்பதற்கும், அவர்களை எல்லா தெய்வீக நிஜங்களுக்கும் வழிநடத்துவதற்கும் ஜீவன்–தரும் ஆவியானார்—1 கொரி. 15:45; யோவான் 14:17; 16:13
இந்த ஆவியானவரைப் பெறுவதற்கு முன், சீஷர்கள் இயற்கையான ஜீவனை உடைமையாகக் கொண்டிருந்தனர். இந்த ஆவியானவரைப் பெற்ற பிறகு, அவர்கள் வித்தியாசமான நபர்களாக ஆனார்கள். கர்த்தரைப் பரிசுத்த ஆவியானவராகப் பெற்றதன் மூலம், அவர்கள் தெய்வீக ஜீவனை உடைமையாகக் கொண்டிருந்தனர். இந்தப் புதிய ஜீவனால், அவர்களது கண்கள் தெய்வீக விஷயங்களைக் காணத் திறக்கப்பட்டன, மேலும், கர்த்தர் இப்போது அவர்களில் நிஜத்தின் ஆவியானவராக இருந்ததால், கர்த்தர் அவர்களுக்காகச் சாதித்து அடைந்திருந்த ஆவிக்குரிய நிஜங்களை அவர்கள் அனுபவிக்கத் தொடங்கினர்.
- அவருடைய பரமேறுதலுக்கு முன், கர்த்தர் தம் சீஷர்களுக்கு ஆவியானவரின் வெளியூற்றுதலுக்காக எருசலேமில் காத்திருக்கும்படி கட்டளையிட்டார், அதன் பிறகு அவர்கள் பூமியின் கடையாந்திரங்களுக்கும் அவரது சாட்சிகளாக ஆகுவார்கள்—அப். 1:8
தங்கள் புதிய ஜீவனின் மூலம், இந்த நூற்றிருபது சீஷர்கள் எருசலேமில் அச்சுறுத்தும் சூழ்நிலைக்கு மத்தியிலும் ஒருமனதில் ஒன்றுசேர்ந்து ஜெபிக்க இயன்றனர். கர்த்தர் மரிப்பதற்கு முன்பு அவர்கள் அவருடன் சாப்பிட்ட தங்கள் கடைசி போஜனத்தின் போது இருந்ததிலிருந்து இது எவ்வளவு வித்தியாசமானதாக இருந்தது! அந்தச் சமயத்தில் அவர்கள் தங்கள் மத்தியில் யார் பெரியவன் என்று வாக்குவாதம்செய்து, கர்த்தருக்காக மரிப்பதற்கான தங்கள் விருப்பமுடைமையை அறிவித்துக்கொண்டிருந்தார்கள். படைவீரர்கள் இயேசுவைக் கைது செய்ய வந்தபோது, பேதுரு ஒருவனின் காதை அறுத்திருந்தான், அதன்பின் அவனும் மற்ற சீஷர்களும் தப்பி ஓடியிருந்தனர். இப்போது அவர்கள் முற்றிலுமாக ஒரு வேறுபட்ட மக்கள் குழுவாக இருந்தனர். அவர்கள் ஒருமையிலும் இசைவிலும் ஜெபித்துக்கொண்டிருந்தனர், மேலும் இயேசு சற்றுமுன் சிலுவையில் அறையப்பட்டிருந்த எருசலேமில் அவர்கள் தைரியமாகத் தங்கினர். (அவர்கள் பூமியில் அவருக்காக நகர்வதற்கு பலப்படுத்தப்படக்கூடுமாறு, பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் பற்றிய கர்த்தரின் வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலுக்காக அவர்கள் அநேகமாக ஜெபித்திருக்கலாம்.)
- தம் சீஷர்களுக்குத் திரும்பத்திரும்பத் தோன்றியதன் மூலம், கர்த்தர் அவர்கள் அவரது பரப்புதலுக்காக அவருடன் ஒன்றுசேர்ந்து வேலைசெய்ய முடியுமாறு, தம் அதரிசனமான (கண்ணுக்குத் தெரியாத) பிரசன்னத்தை அறிய அவர்களைப் பயிற்றுவித்தார்—அப். 1:3
ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பரப்புவதற்குத் தமக்கு உதவுவதற்காகதான், கர்த்தர் முதலில் பன்னிருவரையும் தெரிந்துகொண்டார், பின்னர் தம் பூமிக்குரிய ஊழியத்தின்போது அவர்களைப் பயிற்றுவிக்க தொடர்ந்தார். கர்த்தரின் உயிர்த்தெழுதலைத் தொடர்ந்து இந்த ஐம்பது நாட்களின் போது அவர்களது பயிற்சி நிறைவுபெற்றது. உயிர்த்தெழுதலின் நாளில், சீஷர்கள் கர்த்தரை ஆவியானவராக தங்களுக்குள் பெற்றனர்; பெந்தெகொஸ்தே நாளில், அவர்கள் ஆவியானவரின் ஞானஸ்நானத்தை தங்கள் மீது பெற்றனர். எனினும், இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையில், சீஷர்கள் கர்த்தரை ஆவியானவராக அறிவதற்கும், ஆவியானவராகிய கர்த்தரால் வாழவும் நகரவும் பயிற்றுவிக்கப்படுவதற்கும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஆவியானவராக, கர்த்தர் இனியும் ஒரு பௌதிக சரீரத்தால் வரம்புக்குட்படுத்தப்படவில்லை. சீஷர்கள் கர்த்தரை மாம்சத்தில் அறிவதற்குப் பழக்கப்பட்டனர். அவர்கள் கர்த்தரின் அதரிசனமான (கண்ணுக்குத் தெரியாத) பிரசன்னத்தை உணர்ந்தறிய பயிற்றுவிக்கப்பட வேண்டியிருந்தது. கர்த்தர் இப்போது ஆவிக் (நியூமேடிக்) கிறிஸ்துவாக இருந்தார். (“நியூமேடிக்” என்பது ஆவிக்கான கிரேக்க வார்த்தையாகிய “நியூமா” என்பதிலிருந்து எடுக்கப்பட்ட ஓர் ஆங்கிலமாக்கப்பட்ட வார்த்தையாகும்.) அவர் அவர்களுடன் இருந்தார், ஆனால் சீஷர்கள் அதை முதலில் உணர்ந்தறியவில்லை. இவ்வாறு, கர்த்தர் திரும்பத்திரும்ப தோன்றி மறைந்தார், இதனால் சீஷர்கள் அவர் ஆவியானவராக எந்நேரமும் தங்களுடன் இருந்தார் என்பதைப் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள் (மத். 28:20). சீஷர்களால் கர்த்தரைக் காண முடியாத போதிலும், அவர் தம் பூமிக்குரிய ஊழியத்தின் போது இருந்திருந்ததை விட ஓர் அதிக நிஜமான வழியில் அவர்களுடன் இருந்தார், ஏனெனில் அவர் உண்மையில் அவர்களுக்கு உள்ளே இருந்தார்!
- அவர்கள் கர்த்தரை ஆவியானவராகப் பெறுவதற்கு முன்பு, சீஷர்களால் கர்த்தர் தம் பூமிக்குரிய ஊழியத்தின்போது தங்களுக்குப் போதித்த பல விஷயங்களைப் புரிந்துகொள்ள இயலவில்லை—யோவான் 16:12
- அவர்கள் கர்த்தரை ஆவியானவராகப் பெற்ற பிறகு, சீஷர்கள் ராஜ்யத்தைப் பற்றிய காரியங்களைப் புரிந்துகொள்ள கர்த்தரால் கூடுதலாகப் பயிற்றுவிக்கப்பட்டனர்—அப். 1:3
நடபடிகள் 1:3, இந்த நாற்பது நாள் காலஅளவின் போது கர்த்தர் தம் சீஷர்களுடன் இருந்தபோது, அவர் தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றி அவர்களிடம் பேசினார் என்று கூறுகிறது. இப்போது சீஷர்கள் தேவனுடைய தெய்வீக ஜீவனைப் பெற்றிருந்தனர் என்பதால், அவர்கள் ராஜ்யத்தின் அதிகரிப்புக்காக மற்றவர்களுக்கு இந்த ஜீவனைப் பரவச்செய்வதற்கு முடியும். கிறிஸ்துவை மற்றவர்களுக்குப் பரப்புதல் என்பது பூமியில் அவரது ராஜ்யத்தின் பரவுதலைக் குறிக்கிறது. ஆகையால், சீஷர்கள் கர்த்தருடைய ராஜ்யத்தின் பரவுதலுக்காக நகர்ந்தபோது, ஜீவனாகிய கர்த்தரால் வாழ்ந்து, ஜீவனாகிய கர்த்தரால் செயலாற்றுவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
- தம் பொருளாட்சியைச் செயல்படுத்துவதற்காக எப்போதும் நம்முடன் இருக்கும் இந்த எப்போதும்-இருக்கும் ஆவியானவராக இன்று கர்த்தரை நாம் அறிந்தாக வேண்டும்.
- இன்று கர்த்தர் அதரிசனமான (கண்ணுக்குத் தெரியாத) ஆவியானவராக எப்போதும் நம்முடன் இருக்கிறார்—ரோ. 8:9-10; மத். 28:20
கர்த்தர் தொடர்ந்து நம்மோடு இந்த ஆவியானவராக இருக்கிறார். ஆவியானவராக அவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார், ஒருபோதும் நம்மை விட்டு விலகமாட்டார் என்பதை நாம் உணர்ந்தறிய வேண்டும். ஆவியானவராக, அவர் தம் பொருளாட்சியைச் செயல்படுத்துவதற்காக நமக்குள் எப்போதும் போராடிக் கொண்டிருக்கிறார் (கொலோ. 1:28-29).
- இன்று கர்த்தருடைய சீஷர்களாகிய நாம் அவரில் தங்கியிருக்கவும் (நிலைத்திருக்கவும்), அவரது பௌதிக இன்மையிலும், ஆவிக்குரிய பிரசன்னத்திலும் உழைக்கவும் பயிற்றுவிக்கப்படுகின்றோம்—யோவான் 14:12; 15:4; 16:7-8; 1 பேது. 1:7–9
இன்று ஆவியானவராக, கர்த்தர் தம்முடன் ஒன்றுசேர்ந்து வேலைசெய்ய நம்மைப் பயிற்றுவித்துக்கொண்டிருக்கிறார். ஆகவே, ஆவியானவர் நமக்குக் கொடுக்கும், நம் ஆவியில் உள்ள ஜீவ உணர்வைப் பின்பற்ற நாம் கற்றாக வேண்டும் (ரோ. 8:6, 14, 16). அதரிசனமானவராக (கண்ணுக்குத் தெரியாதவராக), நமக்குள் இருக்கும் ஆவியானவராக அவரை நாம் அறிந்தாக வேண்டும், இதனால் அவர் தம் ராஜ்யத்தின் பரவுதலாகிய, தம் பரப்புதலுக்காக பூமியில் நம் மூலமாக நகரக்கூடும்.
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: கர்த்தர் மாம்சத்தில் தம் சீஷர்களுடன் இருந்தபோது, அவர்கள் அவரை ஆவியானவராக அல்ல, மாறாக அவரை மாம்சத்தின்படி மட்டுமே அறிய முடிந்தது. கர்த்தர் பூமியில் மாம்சத்தில் இருந்தபோது, அவர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் வரம்புக்குட்படுத்தப்பட்டு இருந்தார் அதோடு ஒரு நேரத்தில் ஒரே ஓர் இடத்தில் மட்டுமே இருக்க முடிந்தது. எனவே, கர்த்தர் பூமியில் நடமாடிக்கொண்டிருந்த போது நாம் அவரைக் காண விரும்பினால், அவர் இருந்த இடத்திற்கு நாம் பயணிக்க வேண்டியிருக்கும். எனினும், இன்று கர்த்தர் ஆவியானவராக இருக்கிறார் (2 கொரி. 3:17). அவர் இனியும் இடத்தால் வரம்புக்குட்படுத்தப்படுவதில்லை; நாம் எங்கிருந்தாலும்சரி அவரால் நம்மிடம் வரமுடியும். மேலும், ஆவியானவராக அவர் வெறுமனே நம் மத்தியில் (நம்மிடையே) அல்லது நமக்கு அருகில் மட்டுமல்லாமல், அவரால் அப்படியே நமக்குள்ளேயே வாழ முடியும். நாம் கர்த்தரை ஆவியானவராக அறியும்போது, அவரது உயிர்த்தெழுதலுக்கு முன்பு அவரது சீஷர்கள் அறிந்து அனுபவித்ததை விட, நாம் கர்த்தரை மிகவும் அதிக அந்நியோன்யமாக (நெருக்கமாக) அறிந்து, அவரை மிகவும் அதிக நெருங்கிய விதத்தில் அனுபவிக்கிறோம். எனவே, கர்த்தருடைய ஊழியத்தின் இந்த நிலையில் (கட்டத்தில்) இன்று உயிருடன் இருப்பது அதிக பாக்கியம்! நம்மிடம் கர்த்தர் நமக்குள் இருப்பது மட்டுமல்லாமல், நிஜத்தின் ஆவியானவராக அவர் தம் உள்ளான வேலைசெய்தலின் (அடித்துருவாக்குதலின்) மூலம் நம்மை சகல நிஜத்துக்குள்ளும் வழிநடத்திக்கொண்டிருக்கிறார் (1 கொரி. 3:16; யோவான் 16:13). நம்மிடம் கர்த்தர் நமக்குள் இருக்கிறார் என்பதற்காக அவரைத் துதியுங்கள்! (பாடல்கள், #491 ஐ பார்க்கவும்.)
சுவிசேஷ செயலாக்கம்: ஜீவிக்கும் கர்த்தராகிய இயேசு ஒரு தத்துவம் அல்லது ஒரு வெறும் வரலாற்று நபர் (சித்திரம்) அல்ல. அல்லது அவர் நம்மிடமிருந்து எங்கோ வெகு தொலைவில் உள்ள ஓர் உணர்ச்சியற்ற, மதரீதியான, தொலைதூர தேவனும் அல்ல. இன்று, இயேசு “சரியாக இப்போதே கிடைக்கும் கிறிஸ்துவாக” இங்கே நம்முடன் இருக்கிறார்! மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாக, இந்த மனிதனாகிய இயேசு, ஜீவிக்கும் தேவ வார்த்தை, சரியாக இப்போதே கிடைக்கும் “இந்த ஆவியானவராக” இருக்கிறார் (யோவான் 1:1, 14; 2 கொரி. 3:17). இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அவர் ஒரு பௌதிக வழியில் பூமியில் வாழ்ந்தார். உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்ப்பதற்கான தேவ ஆட்டுக்குட்டியாக இருக்க அவர் இத்தகைய ஒரு வழியில் (இவ்விதமாய்) வந்தார் (யோவான் 1:29). பின்னர், இந்தச் சாட்சாத்து இயேசுவே மரணத்தினூடாய்க் கடந்துசென்று, உயிர்த்தெழுதலுக்குள் நுழைந்தார், அதில் அவர் அதரிசனமானவராக (கண்ணுக்குத் தெரியாதவராக), ஆயினும்கூட மிகவும் நிஜமான, ஜீவன்-தரும் ஆவியானவராக ஆனார், இதனால் அவர் நம் ஜீவனாக நம்மால் பெற்றுக்கொள்ளப்பட முடியும் (1 கொரி. 15:45; யோவான் 20:22; கொலோ. 3:4). இது, அவர் வெறுமனே மனிதர்கள் மத்தியில் (மனிதர்களிடையே) இருப்பதை விட மிகவும் அதிக விலையயேறப்பெற்றது மற்றும் அந்நியோன்யமானது (நெருக்கமானது). இப்போது இந்த ஆவியானவராக, அவர் மனிதனுக்குள் நுழைய முடியும். அவர் அதரிசனமானவராக (கண்ணுக்குத் தெரியாதவராக) இருந்தாலும், சரியாக இப்போது அவர் உங்கள் அருகில் இருக்கிறார். “….நம் ஆள்தத்துவத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட முடியக்கூடிய காற்று, சுவாசம் போலவே, நம் வாயிலும், நம் இருதயத்திலும் இருக்கும்படி அவர் ஜீவிக்கும் வார்த்தையாக, இந்த ஆவியானவராக ஆகியிருக்கிறார் (எபே. 6:17). அவர் அருகில் இருக்கிறார், அவர் கிடைக்கக்கூடியவர்” (Romans 10:8, footnote 1). அவரைப் பெற, சரியாக இப்போதே அவருக்குத் திறந்துக்கொடுக்கவும்.
மிக முக்கியக் காரியங்கள்: நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.); அபிஷேகத்தையும், ஜீவனின் உணர்வையும் அறிந்துகொள்ளுதல் (II.G.2.).
பின்புல வாசிப்பு: Life-study of Acts, Messages 3–5.
REFERENCES: Life-study of Acts, Messages 3–5; Life-study of Luke, Message 55; Life-study of John, Messages 46–49; The Ministry of the New Testament (Elders’ Training—Book 1), Chapter 5, pp. 59–62.