வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்

பகுதி 7

பாடம் 01 – 08

பாடம் 09 – 18

கிறிஸ்து என்னும் நபர்

தம் தெய்வத்தன்மையில் கிறிஸ்து (2)

குறிக்கோள்: தேவனுடைய வார்த்தையும், தேவனுடைய குமாரனுமானவர் என்ற முறையில் கிறிஸ்து, தேவன் என்னவாகவெல்லாம் இருக்கிறாரோ, அவையெல்லாவற்றின் ஊனுருவாகவும் இருக்கிறார் என்பதையும், அவையெல்லாவற்றையும் வெளிக்காட்டுகிறார் என்பதையும் புரிந்துகொள்வது.

பொருட்சுருக்கம்: கிறிஸ்து தம் தெய்வத்தன்மையில், தேவனை நமக்கு வரையறுத்து, விளக்கிக்காட்ட, வார்த்தையாகவும் (யோவான் 1:1), தேவனுடைய பரம இரகசியமாகவும் இருக்கிறார் (கொலோ. 2:2). பிதாவுடன் சக-உள்வாசம்செய்கிற தேவனுடைய குமாரன் என்ற முறையில், கிறிஸ்து பிதாவை வெளிக்காட்டி, அவரை அறிவிக்கிறார். பிதாவை அறிவிக்கவும், பிதாவை அனுபவித்துமகிழ்வதற்குள்ளாக நம்மைக் கொண்டுவரவும், பிரியமான, ஒரேபேறான குமாரன் தொடர்ச்சியாக பிதாவின் மடியில் இருந்துகொண்டிருக்கிறார்.

பின்புலம்: தேவனை அறிந்துகொள்ளவேண்டுமென்ற உண்மையான வாஞ்சை பல வாலிபர்களிடம் இருக்கக்கூடும், ஆனால் இப்பேர்ப்பட்ட பரம்புதிரான, மறைவான தேவனை எப்படி அறிந்துகொள்வது என்று அவர்கள் நினைக்கலாம். தேவனை அறிந்துகொள்ள, நாம் கிறிஸ்துவிடம் வரவேண்டும். வார்த்தை என்ற முறையில், கிறிஸ்து தேவனுடைய ஊனுருவாக இருக்கிறார், தேவனை வெளிப்படுத்துகிறார், தேவனைத் தெரியப்படுத்துகிறார். தேவனுடைய குமாரன் என்ற முறையில், கிறிஸ்து தேவனை வெளிக்காட்டுகிறார், தேவனை அறிவிக்கிறார். நாம் எவ்வளவு அதிகமாக இந்த கிறிஸ்துவை அனுபவித்துமகிழ்ந்து, அவரைத் தொடர்புகொள்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் தேவனை அறிந்துகொள்கிறோம், ஏனென்றால், கிறிஸ்துவுக்குள் தேவனுடைய சகல காரியங்களும் அறிந்துகொள்ளப்பட்டு, தெளிவாகின்றன.

அதிகாரம்: யோவான் 1.

போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:

I. தேவனுடைய வார்த்தை என்ற முறையில், கிறிஸ்து தேவனுடைய விளக்கமாகவும், வரையறையாகவும் இருக்கிறார்

காலம் தொடங்குவதற்குமுன்பே, கடந்த நித்தியத்தில், கிறிஸ்து தேவனுடைய வார்த்தையாக இருந்தார்.இங்குள்ள வார்த்தை என்பது, கிரேக்க மொழியில் லோகோஸ் என்பதாகும். மனிதனால் புரிந்துகொள்ளப்படக்கூடிய ஒரு கருத்தினாலான ஒரு வெளியாக்கம் என்பதுதான் இதன் அர்த்தம். பிரபஞ்சத்தில் நம் தேவனைக் காணமுடியாது என்றாலும், அவர் மனிதனால் புரிந்துகொள்ளப்படக்கூடிய வார்த்தையாக இருக்கிறார். இந்த வார்த்தையினால் அவருடைய பரம்புதிரான ஆள்தத்துவம் விளக்கப்பட்டு, வெளிக்காட்டப்படுகிறது. கிறிஸ்து இல்லாமல், தேவன் அறியப்படாதவராகவும், அறியமுடியாதவராகவும் இருப்பார். நம் ஆச்சரியமான தேவன் என்னவாகவெல்லாம் இருக்கிறாரோ, அவையெல்லாவற்றையும் கிறிஸ்து நமக்குத் தெரிவிக்கிறார். கிறிஸ்து வார்த்தை என்ற முறையில், வரையறையளிக்கப்பட்ட தேவனாக இருக்கிறார், அதாவது, விளக்கப்பட்டு, வெளிக்காட்டப்பட்டு, வெளிப்படுத்தப்பட்ட தேவனாக இருக்கிறார், மனிதர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்ட தேவனாக இருக்கிறார். இதனால்தான், வேதாகமம் கிறிஸ்துவை தேவனுடைய பரம இரகசியம் என்றும் குறிப்பிடுகிறது (கொலோ. 2:2), ஏனென்றால், தேவன் பரம இரகசியமாக இருக்கிறார், அவரை கிறிஸ்துவின்மூலமாக மட்டுமே புரிந்துகொள்ளமுடியும். கிறிஸ்துவே தேவனை அறிந்துகொள்வதின் இரகசியம்.

A. தேவனுடைய வார்த்தை என்ற முறையில், கிறிஸ்து தேவனுடைய ஊனுருவாயிருக்கிறார்

தேவனாகிய வார்த்தை மாம்சமாக மாறியது என்று வேதாகமம் நமக்குச் சொல்லுகிறது (யோவான் 1:1). வார்த்தை என்பது தேவனுடைய வரையறையாகும், அது தேவனுடைய வரையறையாக இருப்பதால், அது தேவனுடைய ஊனுருவாக இருக்கிறது. தேவன் ஆவியாயிருப்பதால், அவர் புலப்படாதவர், கண்களுக்குத் தெரியாதவர் (யோவான் 4:24). நம்முடைய கருத்து புலப்படாதது, கண்களுக்குத் தெரியாதது, ஆனால் நாம் நம் கருத்தை வார்த்தைகளாக்கும்போது, இந்த வார்த்தைகள் நம் கருத்தின் வரையறையாகிறது, அதாவது, நம் கருத்தின் ஊனுருவாகவே மாறுகிறது. வார்த்தை என்பது நம் கருத்தின் வரையறையாகவும், வெளியாக்கமாகவும், ஊனுருவாகவும் இருக்கிறது. நான் ஒருமணிநேரம் உங்களிடம் பேசினால், என் கருத்து என்னவென்று நீங்கள் தெரிந்துகொள்வீர்கள், ஏனென்றால், என் வார்த்தை என் கருத்தின் ஊனுருவாயிருக்கிறது. நாம் அதிகமாகப் பேசப்பேச, நாம் மர்மமானவர்களாய்த் தோன்றுவது குறைகிறது, ஏனென்றால், நமக்குள் இருப்பது வெளியே வந்துவிடுகிறது. கிறிஸ்து தம் வார்த்தைகளினாலும் செயல்களினாலும் தேவனைப் பேசினார். கிறிஸ்து எவ்வளவு அதிகமாகப் பேசினாரோ, வேலைசெய்தாரோ, அவ்வளவு அதிகமாக தேவன் அறிந்துகொள்ளப்பட்டார், புரிந்துகொள்ளப்பட்டார். நாம் கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்வதற்குமுன்பு, நாம் தேவனைப் புரிந்துகொள்ளவில்லை, அவரைப்பற்றிய நம் கருத்துகள் விநோதமாயிருந்தன. எனினும், நாம் கிறிஸ்துவைப் பெற்றுக்கொண்டபிறகு, தேவனையும் அவருடைய குறிக்கோளையும் அறிந்துகொண்டோம்.

B. வார்த்தை என்ற முறையில், தேவனுடைய வரையறையாகிய கிறிஸ்து தேவனுடைய பேசுதலுக்காக இருக்கிறார்—எபி. 1:1-2

மூவொரு தேவனின் வரையறையாகிய இந்த வார்த்தை தேவனுடைய பேசுதலுக்காக இருக்கிறது. இந்த வார்த்தை முழு தேவனாக இருக்கிறது என்பது, இது மூவொரு தேவனின் பேசுதலுக்காக இருக்கிறது என்பதைக் குறிக்கிறது. இந்த வார்த்தை ஒரு மனிதனாக மாம்சமானது, அந்த மனிதன் தேவனுடைய பேசுதலாக இருந்தார். மனிதனாகிய இயேசுகிறிஸ்து தேவனுடைய வார்த்தையாக, அதாவது, தேவனுடைய பேசுதலாக இருந்தார் என்பதே இதன் அர்த்தம். தெளிவான வார்த்தைகளால் மட்டுமல்ல, அவர் என்னவாக இருந்தாரோ அதினாலும், அவர் என்ன செய்தாரோ அதினாலும்கூட அவர் தேவனைப் பேசினார். அவர் முற்றும்முடிய தேவனுடைய வார்த்தையாகவும், தேவனுடைய பேசுதலாகவும் இருக்கிறார். சிலவேளைகளில் அவர் வார்த்தைகளால் பேசினார், மற்ற வேளைகளில் அவர் செயல்களால் பேசினார். அவர் என்னவாகவெல்லாம் இருந்தாரோ, அவர் என்னவெல்லாம் செய்தாரோ, அவை யாவும் தேவனைப் பேசியது. வார்த்தையாக கிறிஸ்து நமக்கு தேவனைத் தெரியப்படுத்துவது மட்டுமல்லாமல், தேவனுடைய பொருளாட்சியையும் நிறைவேற்றுகிறார். நாம் நம்முடைய உள்ளான விருப்பங்களையும் நோக்கங்களையும் நிறைவேற்றுவதற்காகவே பேசுகிறோம். (பேசுவதினால் அல்லது எழுதுவதினால் நாம் நம் அனுதின வாழ்க்கையில் எத்தனை வெவ்வேறு காரியங்களை நிறைவேற்றுகிறோம் என்பதைப் பரிசீலித்துப்பாருங்கள். நம்மிடம் மொழி இல்லையென்றால், அல்லது நம் எண்ணங்களைத் தெரியப்படுத்தவோ, வெளிக்காட்டவோ ஓர் ஊடகம் இல்லையென்றால், நாம் எப்படி எந்தவொரு நோக்கத்தையும் நிறைவேற்றமுடியும்?) தேவன் தம் நோக்கத்தை நிறைவேற்ற, அவர் அநேக வேலைகளை செய்துமுடிக்கவேண்டியிருந்தது! அவர் அநேக பொருட்களை சிருஷ்டிக்கவேண்டியிருந்தது, அநேக நிகழ்வுகளை ஏற்பாடுசெய்யவேண்டியிருந்தது, இறுதியாக, அவர் மனுஷீகத்திற்குள் நுழைந்து, நமக்காக மரிக்கக்கூடிய ஒரு மனிதனாக வளர்ந்தேறவேண்டியிருந்தது. இந்த வேலைகள் யாவும் தேவனுடைய வார்த்தையாகிய கிறிஸ்துவினால் நிறைவேற்றப்பட்டன.

II. தேவனுடைய குமாரன் என்ற முறையில், கிறிஸ்து பிதாவின் வெளியாக்கமாகவும், அறிவிப்பாகவும் இருக்கிறார்—யோவான் 1:18

A. தேவனுடைய குமாரன் என்ற முறையில், கிறிஸ்து பிதாவின் வெளிப்போக்காகவும், வெளிவருதலாகவும், வெளியாக்கமாகவும் இருக்கிறார்

குமாரன் என்ற முறையில் அவர் தேவனுடைய வெளிப்போக்காக, அதாவது, வெளிவருதலாக இருக்கிறார்; அவர் பிதாவின் வெளியாக்கமாகவும் இருக்கிறார். குமாரன் பிதாவை வெளிக்காட்டியதினால், குமாரன் பிதாவின் வெளியாக்கமாக இருக்கிறார்.

B. தேவனுடைய குமாரன் என்ற முறையில், கிறிஸ்து பிதாவின் மடியில் இருக்கிறார், பிதாவை அறிவிக்கிறார்

  1. கிறிஸ்து பிதாவுடன் சக-உள்வாசம்செய்கிறார், அவர் பிதாவோடு ஒன்றாயிருக்கிறார்—யோவான் 14:10-11

இரண்டுபேர் சக-உள்வாசம்செய்கிறார்கள் என்றால், அவர்கள் ஒருவருக்குள் ஒருவர் வசிக்கிறார்கள் என்று அர்த்தம். கிறிஸ்து பிதாவின் மடியில் இருக்கவும்முடியும், பிதாவை அறிவிக்கமுடியும், ஏனென்றால், அவரும் பிதாவும் தொடர்ச்சியாக சக-உள்வாசம்செய்கிறார்கள். எனவே, குமாரன் பூமியில் வாழ்ந்துகொண்டிருந்தபோது, அவர் பிதாவுக்குள் வசித்துக்கொண்டிருந்தார், பிதாவும் அவருக்குள் வசித்துக்கொண்டிருந்தார் (யோவான் 14:10, 11; 17:21). குமாரனும் பிதாவும் ஒருவருக்குள் ஒருவர் வசிக்கிறார்கள்.

  1. குமாரனாக கிறிஸ்து பிதாவை நம்மிடம் கொண்டுவருகிறார், நம்மைப் பிதாவிடம் கொண்டுவருகிறார்—யோவான் 14:2-3, 23; எபே. 2:18; எபி. 4:14; 7:25

தேவனை நமக்குள்ளும், நம்மை தேவனுக்குள்ளும் கொண்டுவரவேண்டும் என்பதே கிறிஸ்துவின் நோக்கம். அவர் குமாரனாக பிதாவிடம் அனுபவித்துமகிழ்கிற அதே உறவுக்குள்ளாக நம்மையும் கொண்டுவருகிறார். இதே உறவில்தான், நாம் தேவனோடு நகர்கிறோம், நடக்கிறோம், தேவனுக்குள் வசிக்கிறோம், தேவனும் நமக்குள் வசிக்கிறார். தேவன் நம் ஆவியில் வாழ்வது மட்டும் போதாது. நம் ஆள்தத்துவத்தின் ஒவ்வொரு பகுதியும் தேவனால் நிரப்பப்படுமாறு, அவர் நம் இருதயத்திலும் தம் வீட்டை அமைக்கவேண்டும். அப்போது, நாம் அவருடைய குமாரர்களாக அவரை முழுவதும் வெளிக்காட்டமுடியும். இப்படிப்பட்ட விதத்தில் பிதாவை அனுபவித்த முதல் நபர் இயேசுகிறிஸ்துதான் (யோவான் 1:1), ஆனால் இன்று, பிதா உள்வசிக்கிற அநேக குமாரர்கள் இருக்கிறார்கள். பிதா நமக்குள் வசிக்கிறார்; தொடர்ச்சியாய் பிதாவுடனான இந்த உறவுக்குள் கிறிஸ்து மேலும் நம்மைக் கொண்டுவருகிறார். நாம் கர்த்தருடைய பந்திக்கு வரும்போதெல்லாம், பிதாவின் அநேக குமாரர்களாக அவரைத் துதிக்கும்படி கிறிஸ்து நம்மை பிதாவிடம் வழிநடத்துவதை நாம் உணர்கிறோம் (எபி. 2:12). இறுதியாக, நாமெல்லாரும் கிறிஸ்துவைப்போலவே நம் பிதாவை முழுவதுமாக வெளிக்காட்டி, அவரை அனுபவித்துமகிழ்வோம். இதுவே தேவனுடைய பொருளாட்சியின் இலக்கு.

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: தேவனுடைய கூட்டு வெளியாக்கமாக இருக்கும்படி, அவருடைய குமாரனைப்போலவே இருக்கிற அநேக குமாரர்களை அடைவதே தேவனுடைய விருப்பம். எனினும், முதலில், தேவன் தம்மை நமக்குத் தெரியப்படுத்தவேண்டியிருந்தது. நிஜமாகவே நம் தேவன் யார் என்பதைக்குறித்தோ அல்லது அவர் எதை நாடுகிறார் என்பதைக்குறித்தோ நாம் ஒன்றும் அறியாமலிருந்தோம். தேவன் எப்படிப்பட்டவர் என்று சிருஷ்டிப்பு ஓரளவு நமக்குச் சொல்லுகிறது, ஆனால் நாம் கிறிஸ்துவை அறியும்வரை, தேவன் நமக்கு முழுவதுமாக வரையறுக்கப்படவோ அல்லது விளக்கப்படவோ இல்லை. தேவன் என்னவாகவெல்லாம் இருக்கிறாரோ, அவையெல்லாவற்றிற்கும் ஊனுருவாக கிறிஸ்து இருப்பதால், தேவன் என்னவாகவெல்லாம் இருக்கிறாரோ, அவையெல்லாவற்றையும் அவரால் நமக்குத் தெரிவிக்கமுடிகிறது. இதுதான் முதல் படி. நாம் தேவனுடைய குமாரர்களாகுமாறு, தேவனுடைய ஜீவனை நமக்குள் கொண்டுவருவதுதான் இரண்டாவது படி. (தேவன் நம்மை தத்தெடுக்கவில்லை; அவர் நம்மை தம் நிஜமான குமாரர்களாக்கினார்.) இப்போது நாம் கிறிஸ்துவில் தேவனை சந்தித்திருப்பது மட்டுமல்ல; நாம் அவரைப் பெற்றுமிருக்கிறோம், இதனால் நாம் அவருடைய அநேக குமாரர்களாகியிருக்கிறோம். நாம் அவருடைய குறிக்கோளை புரிந்துகொள்வதால், இனி அவர் நமக்கு மர்மமானவர் அல்ல, நாம் அவரோடு ஒத்துழைக்கவும் முடியும். இன்று நாம் கிறிஸ்துவோடு சேர்ந்து தேவனை அனுபவித்துமகிழ்கிற, தேவனுடைய அநேக குமாரர்களாக இருக்கிறோம். பிதாவோடு கொண்டுள்ள இந்த உறவை கிறிஸ்து தம்மிடம் மட்டும் வைத்துக்கொள்ளவில்லை என்பது மிகவும் அற்புதமானது! அவர் பிதாவை நமக்குத் தெரியப்படுத்தி, பிதாவின் ஜீவனை நம்மிடம் கொண்டுவரும்படி வந்தார்.

சுவிசேஷ செயலாக்கம்: யோவானின் சுவிசேஷம், தேவனுடைய வார்த்தையாக கிறிஸ்துவைக்குறித்து பேசி தொடங்குகிறது. கண்களுக்குத் தெரியாத நம் எண்ணங்களை நம்முடைய வார்த்தைகள் வெளிக்காட்டி, விளக்குவதுபோலவே, வார்த்தையாகிய கிறிஸ்து பரம்புதிரான, கண்களுக்குத் தெரியாத தேவனை வெளிக்காட்டி, விளக்கி, வரையறுக்கிறார். யோவானின் முதல் அதிகாரம் அந்த முழு புத்தகத்திற்கும் முன்னுரையாக இருக்கிறது; பிரபஞ்சத்தின் வரலாற்றிலேயே மாபெரும் ஐந்து நிகழ்வுகளில் கிறிஸ்து எப்படி தேவனை வெளிக்காட்டி, விளக்கி, வரையறுக்கிறார் என்பதை இந்த முன்னுரையில் யோவான் காண்பிக்கிறான். ஒவ்வொரு நிகழ்விலும், மிகப்பெரிய ஏதோவொன்றை கிறிஸ்து நமக்கு வெளிப்படுத்துகிறார். பிரபஞ்சம் சிருஷ்டிக்கப்பட்டதுதான் மிகப்பெரிய முதல் நிகழ்வு (யோவான் 1:3). இந்த நிகழ்வில், கிறிஸ்துவின் சிருஷ்டிப்பு தேவனுடைய மகிமையைப் பறைசாற்றி, தேவனுடைய தெய்வீக குணாதிசங்களை வெளியரங்கமாக்குகிறது (சங். 19:1-3; ரோ. 1:20). மனிதமாம்சமாகுதல்தான் இரண்டாவது மிகப்பெரிய நிகழ்வு (யோவான் 1:14); தேவனை மனிதனுக்குள் கொண்டுவருவதினாலும், தெய்வீகத்தை மனுஷீகத்தோடு கலந்திணைப்பதினாலும் தேவன் தம் சிருஷ்டிகளோடு ஒன்றாக விரும்புகிறார் என்று கிறிஸ்து இதன்மூலம் திரைநீக்கிக் காண்பிக்கிறார். கிறிஸ்து தேவ ஆட்டுக்குட்டியாக மாறுவதின்மூலம் (மூன்றாவது மிகப்பெரிய நிகழ்வு—யோவான் 1:29), எப்படி தேவன் தம் நீதிக்கேற்ற வழிமுறையாக மனிதனுக்காக சட்டரீதியாக மரித்ததின்மூலம் மீட்பை நிறைவேற்றினார் என்பதைப்பற்றி கிறிஸ்து பேசுகிறார். கிறிஸ்து புறாவாகிய ஜீவன்தரும் ஆவியானவராக மாறுவதின்மூலம் (நான்காவது மிகப்பெரிய நிகழ்வு—யோவான் 1:32-34), தேவன் தம் தெய்வீக ஜீவனை மனிதனுக்குள் செலுத்துவதினால் தம் பொருளாட்சியை நிறைவேற்றுகிறார் என்பதை கிறிஸ்து திரைநீக்கிக் காண்பிக்கிறார். கடைசி மிகப்பெரிய நிகழ்வில், அதாவது, மனுஷகுமாரனாகிய கிறிஸ்து பரலோகத்தை பூமிக்கு கொண்டுவந்து, பூமியை பரலோகத்துடன் இணைக்கிற பரலோக ஏணியாக இருக்கும் நிகழ்வில், நித்தியத்திற்கும் ஒரு வாழ்விடத்தை அடைய (பெத்தேல்—யோவான் 1:51; ஆதி. 28:11-22), தேவன் எப்படி மனுஷீகத்தோடு இணைய விரும்புகிறார் என்பதைப்பற்றி கிறிஸ்து நம்மிடம் பேசுகிறார். சிருஷ்டிப்பிலும், மனிதமாம்சமாகுதலிலும், ஆட்டுக்குட்டியானவராக இருப்பதிலும், ஆவியானவராக மாறுவதிலும், தேவனை மனிதனிடம் கொண்டுவருகிற ஏணியாக இருப்பதிலும், தேவனுடைய வார்த்தையாகிய கிறிஸ்து பரம்புதிரான தேவனை முழுவதுமாக விளக்குகிறார். இந்த ஆச்சரியமான கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்கிற எவரும் தேவனுடைய வீட்டின் அங்கத்தினராக இருக்கும்படி தேவனால் பிறந்த தேவனுடைய பிள்ளையாகும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள் (யோவான் 1:12-13). (Crystallization-study of the Gospel of John, Message 1-ஐ பார்க்கவும்.)

முக்கியமான விஷயங்கள்: நம் நிறைவான இரட்சிப்புக்காக அநேக அம்சங்களில் கிறிஸ்துவையும், அவருடைய நபரையும் வேலையையும்பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.);தேவன் மூவொருவர் என்று அறிதல் (II.A.1.)

பின்புல வாசிப்புக்காக: The Conclusion of the New Testament, Message 22.

REFERENCES: The Conclusion of the New Testament, Message 22; Crystallization-study of the Gospel of John, Messages 1–4; Message 5, pp 57–61; Life-study of John, Messages 2–3; God’s New Testament Economy, Chapter 2; The Mysteries in God’s New Testament Economy, Chapter 1, pp 23–24; Life-study of Colossians, Message 18; The Divine Dispensing of the Divine Trinity, Chapter 12, pp 119– 124; Basic Training, Message 1, pp 6–7; Living In and With the Divine Trinity, Chapter 1, pp 8–9; The Full Knowledge of the Word of God, Chapter 1, pp 17–18; The History of God in His Union with Man, Chapter 1, pp 8–10.

பாடம் 01 – 08  animated-arrow-image-0104