கிறிஸ்துவை துய்க்கும் அனுபவம்
பகுதி 11
✵பாடம் 01 – 09
விசுவாசத்தை செவிகொடுத்துக் கேள்விப்படுதல்
குறிக்கோள்: விசுவாசத்தை செவிகொடுத்துக் கேள்விப்படுதலே நம் கிறிஸ்தவ வாழ்க்கையை நிர்வகிக்கும் ஓர் அடிப்படைக் கோட்பாடு என்பதைக் காட்டுவதற்கு.
பொருட்சுருக்கம்: நியாயப்பிரமாணத்தின் கிரியைகள் மூலம் அல்ல, மாறாக விசுவாசத்தை செவிகொடுத்துக் கேள்விப்படுதல் மூலம்தான் நாம் மறுபடிஜெநிப்பிக்கப்பட்டோம். விசுவாசத்தை செவிகொடுத்துக் கேள்விப்படுதல் மூலமாகக் கிறிஸ்துவுக்குள் விசுவாசிப்பதால் நாம் கிறிஸ்துவைப் பெற்றபோது, நாம் விசுவாசத்தின் மூலமாக தேவனுடைய குமாரர்களாக ஆக்கப்படக்கூடுமாறு இந்த ஆவியானவர் நம் ஆவிக்குள் நுழைந்தார். ஆகவே, நம் சொந்த மாம்சீக முயற்சியால் அல்ல, மாறாக விசுவாசத்தை செவிகொடுத்துக் கேள்விப்படுதால் நாம் தொடர்ந்து ஆவியானவரைப் பெற வேண்டும். விசுவாசத்தை செவிகொடுத்துக் கேள்விப்படுதல் மூலம்தான் நாம் வளர்ந்து, முதிர்ச்சியடைவோம். நம் அற்புதமான கர்த்தரைப் பற்றிய பேசுதலை நாம் கேள்விப்படும்போது, நாம் அவரை இந்த ஆவியானவராக அனுபவித்துமகிழ்வோம். உச்சநிலையாக, இது புதிய எருசலேமுக்குள் நம்மை அழைத்துச் செல்லும், அங்கு நாம் இந்த ஆவியானவரை நித்தியத்திற்கும் பெற்றுக்கொண்டிருப்போம்.
பின்புலம்: எது சரி எது தவறு என்பதை மட்டும் வெறுமனே பரிசீலிப்பதற்குப் பதிலாக, நாம் தேவனை நமக்குள் பெறுவதைதான் தேவனுடைய பொருளாட்சி வலியுறுத்துகிறது. இந்தச் சத்தியத்தின் வெளிச்சத்தின் கீழ், நாம் அவரை இன்னும் அதிகமாகப் பெறுவதற்கு நாம் திறந்துக்கொடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பெறுவதற்கான ஓர் அருமையான இடம் கூடுகைகளில்தான். இத்தகைய காலங்கள் பொக்கிஷமாகக் கருதப்பட வேண்டும், ஏனெனில் இந்தக் காலங்களில்தான் கிறிஸ்துவின் நித்திய டோஸ்கள் (அளவுகள்) நமக்கு ஊழியம் செய்யப்படுகின்றன.
அதிகாரங்கள்: கலாத்தியர் 1–3.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
“கலாத்தியர் புத்தகம், கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை இடமாற்றம் செய்வதைக் குவிமையமாகக் கொண்டுள்ளது. தம் மக்களை நியாயப்பிரமாணத்தின் கீழ் காவல் வைத்திருப்பது தேவனுடைய நோக்கம் அல்ல. அவரது நோக்கம், கிறிஸ்துவை அவர்களுக்குள் பகிர்ந்தளிப்பதே ஆகும்.கிறிஸ்து தம்மைக் கொண்டு நியாயப்பிரமாணத்தை இடமாற்றம் செய்ய வந்திருக்கிறார். இதுவே கலாத்தியரின் குவிமையம்” (Life-study of Galatians, Message 35, p. 309).
I. நியாயப்பிரமாணத்தின் கிரியைகள் மூலம் அல்ல, மாறாக விசுவாசத்தை செவிகொடுத்துக் கேள்விப்படுதல் மூலம்தான் நாம் ஆரம்பத்தில் இந்த ஆவியானவரைப் பெற்று, மறுபடிஜெநிப்பிக்கப்பட்டோம்—கலா. 3:2-3
“நியாயப்பிரமாணம், கிரியைசெய்யும்படி மனிதனிடம் கோருகிறது, ஆனால் தேவன் என்னவாக இருக்கிறாரோ அவை அனைத்தையும், தேவன் திட்டமிட்டிருக்கிற மற்றும் தீர்மானித்திருக்கிற அனைத்தையும், தேவன் நிறைவேற்றியிருக்கிற அனைத்தையும், தேவன் அடைந்திருக்கிற மற்றும் சாதித்திருக்கிற அனைத்தையும், தேவன் நமக்குள் உட்பகிர உத்தேசிக்கிற அனைத்தையும் விசுவாசம் பெற்றுக்கொள்கிறது” (Life-study of Galatians, Message 15, p. 128). விசுவாசித்து, இவ்வாறு தேவனை தங்கள் இரட்சகராக தங்களுக்குள் பெறுவதற்குப் பதிலாக, எத்தனை பேர் தங்கள் இரட்சிப்புக்காக நற்செயல்களில் தங்கள் நம்பிக்கையை வைக்கிறார்கள் என்பதற்கு சில எடுத்துக்காட்டுகளை இளம் வாலிபர்களுக்குக் கொடுப்பது பயனுள்ளதாக இருக்கக்கூடும்.
A. மனிதன் (ஆவியானவராகிய) தேவனைப் பெறுவதற்காகவே சிருஷ்டிக்கப்பட்டான்—ரோ. 9:23; யோவான் 1:12; 4:24
தேவனை உள்ளடக்குவதற்கான ஒரு பாத்திரமாக மனிதனை தேவன் சிருஷ்டித்தார் என்று வேதாகமம் தெளிவாக வெளிப்படுத்துகிறது. மனிதனின் ஆவி (ஆவியானவராகிய) தேவனைப் பெறுவதற்கான இந்தப் பாத்திரமாக இருப்பது மட்டுமல்லாமல், மனிதன் தானே தேவனைப் பெறுவதற்கும், உள்ளடக்குவதற்கும், வெளிக்காட்டுவதற்குமான ஓர் ஆவி, ஓர் ஆத்துமா மற்றும் ஒரு சரீரத்துடன் கூடிய ஒரு பாத்திரமாக இருக்கிறான்.
B. இந்த ஆவியானவராக ஆகுவதற்கும், நாம் அவரை இந்த ஆவியானவராகப் பெறுவதற்கான வழியைத் திறப்பதற்கும் கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்தார்—1 கொரி. 15:45; கொலோ. 2:14; ரோ. 8:34
மனிதனின் வீழ்ச்சியின் காரணமாக, மனிதன் ஒரு பாத்திரமாக தேவனைப் பெறுவதற்கும், உள்ளடக்குவதற்கும், வெளிக்காட்டுவதற்கும் அவனுக்கான குறிக்கோளை நிறைவேற்ற முடியவில்லை. ஆகவே, மனிதனை தேவனிடமிருந்து பிரித்த அனைத்தையும் கவனித்துக்கொண்ட அதோடு கிறிஸ்து மனிதனால் பெறப்படுவதற்கான சகலத்தையும்-உள்ளடக்கிய, ஜீவன்-தரும் ஆவியானவராக ஆகுவதற்காக அவருக்குத் திறனளிக்கவும் செய்த ஒரு வழிமுறையினூடாய்க் கிறிஸ்து கடந்துசென்றார்,.
- நாம் கிறிஸ்துவுக்கு நம் ஆள்தத்துவத்தைத் திறந்துக்கொடுத்து, அவரை ஆவியானவராகப் பெற்றபோது நம் ஆரம்ப இரட்சிப்பு நிகழ்ந்தது—கலா. 3:1-3; ரோ. 10:17
மனிதன் ஒரு கேமராவிற்கும் ஒப்பிடப்படலாம். கிறிஸ்து என்னவாக இருக்கிறாரோ, நமக்காக என்னவெல்லாம் நிறைவேற்றியிருக்கிறாரோ அவை யாவும் ஓர் ஆவிக்குரிய நிஜமாகவும், விசுவாசத்தின் ஓர் உருப்படியாகவும் உள்ளது. விசுவாசத்தின் உருப்படிகள் அனைத்தும் இயற்கைக் காட்சியமைப்பு உருப்படிகளைப் போன்றவை, அவற்றை கேமராக்களாகிய நமக்குள் இருக்கும் “புகைப்படச் சுருள் தகட்டில்” பெற முடியும். கலாத்தியர் 3 இல், பவுல் கலாத்திய விசுவாசிகளுக்கு அவர்கள் எப்படி இரட்சிக்கப்பட்டார்கள் என்பதை நினைவூட்டுகிறான். பவுலின் பிரசங்கம் கிறிஸ்துவையும்,, சிலுவையில் அவர் செய்த சாதனைகளையும் கலாத்தியர்களின் கண்களுக்கு முன்பாக வெளிப்படையாகச் சித்தரித்தது (Gal. 3:1 and footnote 1 1 ). மனிதர்கள் பெற்றுக்கொள்வதற்கான ஐசுவரியங்களாக இதுபோன்ற விசுவாச உருப்படிகளைப் பவுல் பிரசங்கித்தான். அவர்கள் இந்தக் காட்சியைப் பார்த்தபோது, விசுவாசித்தவர்கள் இந்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டனர் (கலா. 3:2). ஆவிக்குரிய பார்த்தல், நம் செவிகொடுத்தலுடன் தொடர்புடையது (கலா. 3:2). இது, இஸ்ரயேல் புத்திரர் வனாந்தரத்தில் வெண்கல சர்ப்பத்தை நோக்கிப் பார்த்த போது உள்ளது போன்றது (எண். 21), நோக்கிப் பார்த்தவர்கள் பிழைத்தார்கள்! அவர்கள் எவ்வளவு நேரம் அதை நோக்கிப் பார்த்தார்கள், அல்லது அவர்கள் தாங்கள் அதை நோக்கிப் பார்த்தபோது எவ்வளவு தூரத்தில் இருந்தார்கள், அல்லது வெளிச்சம் எவ்வளவு நன்றாக இருந்தது என்பது நமக்குத் தெரியாது. முக்கிய விஷயம் என்னவெனில், அவர்கள் நோக்கிப் பார்த்தார்கள், மேலும் அந்தப் பார்வையைப் பெறுவதன் மூலமாக, அவர்களுக்குள் ஏதோவொன்று நடந்தது (விசுவாசம்) அது அவர்களுக்கு ஜீவன் தந்தது. அது, ஆபிரகாம் இன்னும் கல்தேயாவில் இருந்தபோது அவனுக்கு மகிமையின் தேவன் மீண்டும் மீண்டும் தோன்றுதலை போன்றதும் ஆகும் (அப். 7:2-3). மகிமையின் தேவன் மீண்டும் மீண்டும் தோன்றுதலின் மூலமாக, ஆபிரகாம் தன் வீட்டை விட்டு வெளியேறி, தேவனைப் பின்பற்ற இயன்ற வரை அவனுக்குள் விசுவாசம் உட்செலுத்தப்பட்டது. சேவிப்பவர்கள் கேமராவைப் பற்றிய இந்த உதாரண விளக்கத்தை இன்னும் சிறிது கூடுதலாகப் பயன்படுத்துவதற்கு நேரம் எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக, பலருக்கு தங்கள் கேமரா லென்ஸ் மீது மூடியை தொடர்ந்து வைத்திருக்கிறார்கள். சுவிசேஷத்தின் இந்த அற்புதமான “காட்சி” அவர்களுக்கு முன்வைக்கப்படலாம், ஆனால் அவர்கள் தங்கள் லென்ஸ் மூடியைக் கழற்றவோ (அதாவது, தங்கள் காதுகளால் கேட்கவோ), தங்கள் கேமராவை இந்த இயற்கைக்காட்சிக்குத் திருப்பவோ (அதாவது சுவிசேஷத்திற்கு தங்கள் கவனத்தைக் கொடுக்கவோ), அல்லது ஷட்டரைக் “கிளிக்” செய்யவோ (அதாவது தங்களுக்கு வெளியே இருக்கும் இந்த ஆவியானவரைப் பெற தங்கள் இருதயத்தையும் ஆவியையும் திறக்கவோ) மறுக்கக்கூடும்! எனவே, அவர்களுடைய ஆள்தத்துவம் முழு அந்தகார இருளில் உள்ளது. எனினும், ஒரு நபர் திரும்பி, இந்த அற்புதமான “காட்சிக்கு” திறந்தவுடன், அந்தக் “காட்சி” உள்ளே நுழைகிறது, மேலும் அந்த நபர் மீண்டும் ஒருபோதும் அதே போல் இருக்க முடியாது, ஏனென்றால் கிறிஸ்து நுழைந்திருக்கிறார்! அவர் நம் “புகைப்படச் சுருள் தகட்டின்” மீது பிரகாசித்தவுடன், அவரது சாயல் நிரந்தரமாக உள்ளது. இங்கே உற்பத்திசெய்யப்படும் இந்த விசுவாசம் ஒரு வெறும் மன நம்பிக்கைக்கு சமமானதல்ல. கிறிஸ்துவுடன் எந்த தொடர்பும் இல்லாத பல்வேறு விஷயங்களை மக்கள் நம்பலாம், ஆனால் இந்த நிஜமான விசுவாசம், கிறிஸ்துவுக்குரிய ஒன்றை நாம் செவிகொடுத்துக் கேட்கும் நம் கேட்டல் மற்றும் பெற்றுக்கொள்ளுதல் மூலம் உற்பத்திசெய்யப்படுகிறது.
- நம் இரட்சிப்பின் பூரணமாக்குதலுக்கென்று நாம் இந்த விசுவாசத்தை செவிகொடுத்துக் கேள்விப்படுதல் மூலமாக இந்த ஆவியானவரைப் பெறுவதால் நாம் நம் இரட்சிப்பில் தொடர்கிறோம்—கலா. 3:3, 5
ஓர் இளம் வாலிபன் இரட்சிக்கப்பட்ட பிறகு, ஆவியானவரைப் பெறுவதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக அவன் அல்லது அவள் இன்னும் அறியாமலேயே தன்னுணர்வின்றி நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள முற்படக்கூடும். (சேவிப்பவர், எவ்வாறு விசுவாசிகள் இன்னும் நியாயப்பிரமாணத்தின் கீழ் வாழ முடியும் என்பதைப் பற்றிய ஒரு கூடுதல் புரிதலைப் பெற, Life-study of Galatians, Message 41, pp. 363–365 ஐ வாசிக்க வேண்டும்.) நம் கிறிஸ்தவ வாழ்க்கை, ஒரு விசுவாச வாழ்க்கை ஆகும். நம்மிடம் விசுவாசம் இருப்பதற்கு, நாம் தேவன், கிறிஸ்து, இந்த ஆவியானவர், தேவனுடைய வழிமுறை, நம் இரட்சிப்பு, தேவனுடைய புதிய ஏற்பாட்டுப் பொருளாட்சி ஆகியவற்றைப் பற்றிய வார்த்தையைக் கேட்க வேண்டும். நாமும் இந்த ஆவியானவரைப் பெற வேண்டும். ஆவியானவரைப் பெறுதல் என்பது வார்த்தையைக் கேட்பதன் மூலமாகவும், நாம் கேட்கும் வார்த்தையைப் பாராட்டுவதன் மூலமாகவும், கர்த்தருக்குத் திறந்துக்கொடுத்து அவரைக் கூப்பிடுவதன் மூலமாகவும், அவருக்கு நன்றி செலுத்துதல் மற்றும் அவரை துதித்தல் மூலமாகவும், அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு அவருடன் நம்மையே இணைத்துக்கொள்வதன் மூலமாகவும் வருகிறது. விசுவாசத்தை செவிகொடுத்துக் கேள்விப்படுதல் மூலமாக தொடர்ந்து இந்த ஆவியானவரைப் பெறுபவர்களாக நாம் இருப்போமாக.
- நம் இரட்சிப்பு அது தொடங்கிய அதே வழியில் தொடர்ந்து முன்னேறுகிறது: விசுவாசத்தை செவிகொடுத்துக் கேள்விப்படுதல்—கலா. 3:5
“ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளுவது என்பது ஒரேமுறையாக நடப்பதில்லை. சுவாசித்தலைப் போன்று, இது ஒரு வாழ்நாள் காரியம்” (Life-study of Galatians, Message 41, p. 369). நமக்கும், ஒரு கேமராவிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்றால், ஒரு கேமராவால் பெறப்பட்ட ஒளி புகைப்படச் சருள் தகட்டின் மீது மட்டுமே படுகிறது. எனினும், நம்மைப் பற்றிய தேவனுடையவாஞ்சை, தம்மையே நம் முழு ஆள்தத்துவம் முழுவதும் பரப்புவதே! இவ்வாறு, நாம் விசுவாசத்தை செவிகொடுத்துக் கேள்விப்படுதலில் தொடர்ந்து இருந்தாக வேண்டும். நாம் முதன்முதலில் கர்த்தரில் விசுவாசித்தபோது கர்த்தர் நமக்குள் பிரவேசித்தலே, நம் இரட்சிப்பின் ஆரம்பமாக வெறுமனே இருந்தது. கர்த்தரைப் பெறுவதன் மூலம் நாம் ஆரம்பத்தில் இரட்சிக்கப்பட்ட பிறகு, விசுவாசத்தை செவிகொடுத்துக் கேள்விப்படுதல் மூலம்—நாம் முதன்முதலில் அவரைப் பெற்றதைப் போலவே அதே முறையில், நாம் அவரைத் தொடர்ந்து பெற்றாக வேண்டும் (கலா. 3:2). ஓர் அவிசுவாசி முதன்முறையாக சுவிசேஷத்தைக் கேள்விப்படும்போது, அவன் இரட்சிக்கப்படுவதற்கான விசுவாசிக்கும் திறனாக அவனுடைய இருதயத்திற்குள் விசுவாசம் உட்செலுத்தப்படுகிறது. அதே வழியில், நாம் சபைக் கூடுகைகளுக்கு வந்து, பரிசுத்தவான்களின் செய்திகளையும், சாட்சிகளையும், தீர்க்கதரிசனம் உரைத்தலையும் கேள்விப்படும்போது, விசுவாசம் நமக்குள் உட்செலுத்தப்படுகிறது, மேலும் கர்த்தரில் விசுவாசித்து, கர்த்தருக்குப் பதிலளிப்பதற்கான நம் திறன் வளர்ந்து அதிகரிக்கிறது. பவுல் கிறிஸ்துவின் ஆராய்ந்தறிய-முடியாத ஐசுவரியங்களை சுவிசேஷமாகப் பிரசங்கித்தான் (எபே. 3:8). கிறிஸ்துவைப் பற்றிய விஷயங்களைக் குறித்து (அதாவது, சிலுவையில் அவருடைய மரணம், அவருடைய மனித வாழ்க்கை, அவருடைய உயிர்த்தெழுதல், நமக்கான அவருடைய தற்போதைய கரிசனை மற்றும் அத்தனை அதிகமான பல அம்சங்களில் அவர் என்னவாக இருக்கிறாரோ அவற்றையும் குறித்து), ஒரு விசுவாசிக்கும் விதத்தில் நாம் எவ்வளவு அதிகமாகக் கேட்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம், அவர் என்னவாக இருக்கிறாரோ அதோடு அவர் என்ன நிறைவேற்றியிருக்கிறாரோ அவற்றைப் பற்றிய பல உருப்படிகளை, விசுவாசத்தை செவிகொடுத்துக் கேள்விப்படுதல் மூலமாகப் பெறுகிறோம், ஆகவே, இன்னும் அதிகமாகக் கேள்விப்பட நாம் நம்மையே கொடுக்க வேண்டும்! கூடுகைகள் மற்றும் ஐக்கிய நேரங்களில் கலந்துகொள்வதன் மூலம், நாம் அதிக ஆவியானவரைப் பெற இயல்கிறோம். ஆவியானவராகிய கிறிஸ்துவின் ஐசுவரியங்களை நமக்குத் தெரிவிக்கும் வேதாகமத்தையும், மற்ற ஆவிக்குரிய புத்தகங்களையும் வாசிக்க நாம் நம்மையே கொடுக்கவும் வேண்டும், ஏனென்றால் நம் வாசிப்பு உண்மையில் ஒரு வகையான “உள்ளான கேள்விப்படுதல்” ஆகும், இதன் மூலம் நாம் இந்த ஆவியானவரைப் பெற முடியும்.
- இந்த ஆவியானவரை நம் ஆள்தத்துவத்திற்குள் பகிர்ந்தளித்தல், நம் இரட்சிப்பின் பூரணமாகுதல் வரை தொடரும்—1 தெச. 5:23-24
- இந்தப் பேசும் ஆவியானவர் தம் வார்த்தையின் மூலமாகப் பகிர்ந்தளிக்கும் தம் கிரியைசெய்தல் மூலமாக நம் முழு ஆள்தத்துவத்தையும் பரிசுத்தமாக்குகிறார்—யோவான் 17:17; எபே. 5:26; 1 தெச. 5:23
தேவனுடைய வார்த்தை கிறிஸ்துவின் ஐசுவரியங்களையும், இந்த ஆவியானவரையும் தம் விசுவாசிகளுக்கு வெளிக்கொணர்கிறது (தெரிவிக்கிறது}. (ஆவியானவரில் நம்மிடம் பாய்ந்தோடி, இவ்வாறு வளர்சிதைமாற்ற முறையில் நம் ஆள்தத்துவத்திற்குள் பெறப்படும்) வார்த்தையில் உள்ள ஐசுவரியங்களைப் பெறுவதன் மூலம், நாம் பரிசுத்தமாக்கப்படுகிறோம். இந்தப் பரிசுத்தமாக்கும் வேலை நம் ஆவியில் தொடங்கி, நம் ஆத்துமாவிற்குள் பரவி, இறுதியில் நம் சரீரங்களையும் கூட வந்தடையும். இந்த ஆவியானவரின் பரிசுத்தமாக்கும் வேலை, நாம் விசுவாசத்தை செவிகொடுத்துக் கேள்விப்படுவதன் மூலமான தேவனுடைய வார்த்தையின் கிரியையால் ஆகும் (எபே. 5:26; கலா. 3:5). எனினும், அது தொடங்கப்பட்டவுடன், அது பூரணமாக்கப்படும் (பிலி. 1:5), ஏனென்றால் தேவன் தாம் என்னவாக இருக்கிறாரோ அவை அனைத்தையும் அனுபவித்துமகிழ்ந்து வெளிக்காட்டுவதாகிய, அவருடைய இரட்சிப்பின் இலக்கை நாம் வந்தடைவதை தேவன் உறுதிசெய்வார்.
- ஆவியானவர் நமக்கு முத்திரையிட்டு, நம் மீட்பின் நாளிலே நம் சுதந்தரத்தைத் துய்க்கும் முழு அனுபவமகிழ்ச்சிக்கான உத்தரவாதத்தை நமக்கு அளிக்கிறார்—எபே. 1:13-14; 4:30
நம் மீட்பின் நாள்தான், நம் இரட்சிப்பின் பூரணமாக்குதல். “பரிசுத்த ஆவியின் முத்திரை ஜீவிக்கிறது; நாம் தேவனின் ஜீவனில் முதிர்ச்சியடைந்து, இறுதியில் நாம் முழுவதுமாக நம் சரீரத்திலும்கூட மீட்கப்படும்வரை தேவனின் தெய்வீக மூலக்கூறைக்கொண்டு நம்மை ஊடுருவ வியாபித்து, மறுசாயலாக்கும்படி அது நம்முள் வேலைசெய்கிறது” (Ephesians 1:14, footnote 3). “நாம் முழுமையாக தேவனைச் சுதந்தரிக்கப்போகும் நேரமாகிய, நம் சரீரம் மகிமையில் உருமாற்றப்படும் நேரம்வரை பரிசுத்த ஆவி இன்று நம் தெய்வீக சுதந்தரிப்பின் உத்திரவாதமாகவும், முன்சுவையாகவும், மாதிரியாகவும் இருக்கிறார்” (Ephesians 1:14, footnote 4).
- விசுவாசத்தின் வார்த்தைகளை நாம் கேட்பதாலும், நாம் பேசுவதாலும், கிறிஸ்து பகிர்ந்தளிக்கப்படுகிறார், மேலும் தேவனுடைய பொருளாட்சி சபையில் நிறைவேற்றப்படுகிறது—2 தீமோ. 2:2; கொலோ. 1:25-28; 1 தீமோ. 4:15-16
நாம் இந்த ஆவிக்குரிய நிஜங்களைப் பெற்றிருப்பதால், நாம் அதேபோல் மற்றவர்களிடமும் அவற்றைப் பேசலாம். இந்த வழியில், நாம் பகிர்ந்தளிப்பவர்களாகவும் அதேபோல் பெறுபவர்களாகவும் ஆகிவிடுகிறோம்! நாம் எவ்வளவு பெற்றுள்ளோம் என்பதுதான் மற்றவர்களுக்குள் நாம் பகிர்ந்தளிக்க முடியக்கூடிய தொகையாகும். கிறிஸ்துவைப் பற்றி நாம் பார்த்திருப்பதும் கேள்விப்பட்டிருப்பதும்தான் நம் ஊழியத்தைக் கட்டமைக்கிறது (ஒப். அப். 4:20). நாம் பார்த்து, பெற்று, அனுபவித்துமகிழ்ந்திருக்கும் கிறிஸ்துவின் ஐசுவரியங்களை, நாம் மற்றவர்களிடமும் பகிர்ந்துகொள்ள முடியும், அதனால் அவர்கள் அவற்றைப் பெறவும், நாம் அவற்றைப் பாராட்டும் அதே வழியில் அவர்களும் பாராட்டவும் கூடும். விசுவாசத்தை செவிகொடுத்துக் கேள்விப்படுதல், பூமியில் வளர்ந்து பெருகும்படி, நாம் அனைவரும் இதுபோன்ற இந்த ஆவியானவரைப் பெறுபவர்களாகவும் பகிர்ந்தளிப்பவர்களாகவும் இருப்போமாக!
- நாம் புதிய எருசலேமில் நித்தியத்திற்கும் இந்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டிருப்போம்—யோவான் 4:14; 7:38-39; வெளி. 22:1, 17
நாம் முதன்முதலில் விசுவாசித்தபோது, நம் விசுவாசக் கேள்விப்படுதல் மூலமாக நாம் இந்த ஆவியானவரை “ஜீவத் தண்ணீராக” பெற்றோம். ஜீவிக்கும் தண்ணீராக இந்த ஆவியானவர், நாம் அவரை பெற்றுக்கொள்ளும் நம் தொடர்ச்சியான பெற்றுக்கொள்ளுதல் மூலமாக நம் இரட்சிப்பின் முழு ஓட்டம் முழுவதிலும் தொடர்ந்து பாய்ந்தோடுகிறார், மேலும் இந்த ஜீவத்தண்ணீரையே நாம் நித்தியத்திற்கும் அனுபவித்துமகிழ்வோம். நாம் முதன்முதலில் விசுவாசித்தபோது, நாம் பெற்ற இந்த ஆவியானவர், நித்தியத்திற்கும் நாம் பெற்று அனுபவித்துமகிழும் அதே ஆவியானவரே. நித்தியத்தில், புதிய எருசலேமாக, நாம் இன்னும் நம் அற்புதமான கர்த்தரைக் குறித்து ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருப்போம். கர்த்தருக்குத் துதி! நாம் ஜீவத் தண்ணீரை இலவசமாய்ப் பருகக்கடவோம்!
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: ரோம இலக்கம் II ஐ அதன் துணைக் குறிப்புகளுடனே கூட சுருக்கமாக வழங்குவதன் மூலம், விசுவாசத்தை செவிகொடுத்துக் கேள்விப்படுதலின் கீழ் இருப்பதன் அற்புதமான விளைவுகளைப் பற்றி இளம் வாலிபர்களுக்குக் கருத்துப்பதிவை ஏற்படுத்தவும். கூடுகைகளுக்கு வருவதன் மூலமும், கூடுகைகளில் திறந்திருப்பதன் மூலமும், வேதாகமத்தையும், ஊழியப் புத்தகங்களையும் வாசிப்பதன் மூலமும், இளம் வாலிபர்கள் அத்தகைய ஓர் ஐசுவரியமான விசுவாசக் கேள்விப்படுதலை தங்களுக்குத் தாங்களே கிடைக்கப்பெறச் செய்ய முடியும். கூடுதலாக, அவர்கள் தங்கள் உயர்நிலைப்பள்ளி பருவ ஆண்டுகளில், விசுவாசத்தைப் பற்றி கேட்பவர்களாக மட்டுமல்லாமல், அதை மற்றவர்களிடம் பேசுபவர்களாகவும் இருக்க கற்றுக்கொள்ள முடியும். வேதாகமத்தில் உள்ள சில முக்கிய வசனங்களை மனப்பாடம் செய்து, ஒருவருக்கொருவர் ஒப்பிக்கும்படி இளம் வாலிபர்களுக்கு உதவுங்கள் (அதாவது, ஆதி. 1:27; 1 கொரி. 15:45; யோவான் 1:1, 14; 3:36; 1 யோவான் 1:9, முதலியன). அவர்களிலுள்ள வார்த்தை அவர்களுடைய விசுவாச ஆவியைப் பலப்படுத்தும், மேலும் அவர்களால் பேசப்பட்ட வார்த்தை மற்றவர்களிலுள்ள விசுவாச ஆவியைப் பலப்படுத்தும். அதுவுமல்லாமல், பின்வருவன போன்ற விசுவாசத்தின் சில அடிப்படை விஷயங்களை எழுதவும், அவற்றை அறிவிக்கவும் அவர்களுக்கு உதவவும், அதாவது: நம் தேவன் மெய்யான தேவன், மூவொரு தேவன்; அவர் மூவர், ஆயினும் இன்னும் ஒருவர்; தேவன் மாம்சத்தில் தம்மையே வெளியரங்கமாக்கினார்; இயேசு கிறிஸ்து நம் பாவங்களுக்காக மரித்து, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்தார் ஆகியன போன்றவை. அவர்கள் தாங்கள் கூடுகைகளில் கேட்டிருக்கிறவற்றையும், வேதாகமத்திலோ அல்லது ஓர் ஊழியப் புத்தகத்திலோ வாசித்திருக்கிறவற்றையும் பேசலாம், திரும்பத் திரும்பச் சொல்லலாம். அவர்கள் தாங்கள் இளம் வாலிபர்களின் கூடுகைகளில் கேட்ட செய்திகளை, அவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களிடம் கூட சொல்லலாம். அத்தகைய ஒரு வழியில் வார்த்தையைப் பெறுவதும் பேசுவதும் அவர்களுடைய விசுவாசத்தில் அவர்களைப் பலப்படுத்தி உற்சாகப்படுத்தும்.
சுவிசேஷ செயலாக்கம்: பிரபஞ்சத்தின் சிருஷ்டிப்பும் ஒழுங்கும், அதேபோல் மனிதனின் பௌதிக சரீரமும் மனநிலையும், தேவன் இருக்கிறார் என்பதை நிரூபிக்கின்றன. தேவன் இருந்தாலும், அவர் மறைந்திருக்கிறார். வேதாகமம், தேவன் ஆவியானவராக இருக்கிறார் என்று கூறுகிறது (யோவான் 4:24). எனவே, வீழ்ந்துபோன மனிதன், தன் பௌதிக உணர்வுகள் மற்றும் வழிகள் மூலமாக, தேவனைப் பார்க்கவும் முடியாது, தொடவும் முடியாது, இவர் தம் கனம், மகத்துவம் மற்றும் பரிசுத்தம் காரணமாக, அத்தகைய ஓர் அழுக்கான (இழிவான) மற்றும் தாழ்ந்த மனிதனிடமிருந்து தம்மையே மறைத்தாக வேண்டும். தேவனே ஆவியானவராகவும், மறைவானவராகவும்—நம் பௌதிகக் கண்ணால் பார்க்கப்படவோ அல்லது ஓர் அனுபவ வழியில் நிரூபிக்கப்படவோ இயலாதவராக இருப்பதால்—அவரே இருக்கிறார் என்பதை நாம் விசுவாசித்தாக வேண்டும், ஏனெனில் தேவனை தொடுவதற்கு மனிதனுக்கு வேறு வழியில்லை (See Gospel Outlines, subject one hundred ninety, “The Necessity of Believing that God is,” p. 323.) அப்படியானால், நாம் எப்படி விசுவாசிக்க முடியும்? முதலில் நாம் இந்த விசுவாசத்தை செவிகொடுத்துக் கேள்விப்படுதலின் கீழ் வந்தாக வேண்டும், ஏனெனில் “வார்த்தையின் பிரசங்கம் இல்லாமல், மக்கள் விசுவாசிப்பது கடினம். வார்த்தைக்குச் செவிசாய்ப்பதன் மூலம்தான் விசுவாசித்தல் வருகிறது [ரோ. 10:17}. உங்களால் விசுவாசிக்க முடியவில்லை என்று சொல்லாதீர்கள். நம்மைப் பொறுத்த வரையில், நம்மிடம் விசுவாசம் இல்லை, ஆனால் விசுவாசம் என்பது தேவன் தாமே நம்மில் விசுவாசித்தல் ஆகும். நாம் அவரிடம் வந்து, நம் ஆள்தத்துவத்திற்குள் அவர் உட்செலுத்தப்பட வேண்டும். தேவன் என்னவாக இருக்கிறாரோ அதைக் கொண்டு நமக்கு உட்செலுத்தப்பட வேண்டும். தேவனே விசுவாசித்தல். தேவனே நம் விசுவாசம். நீங்கள் அவரிடம் வந்து, அவரைக் கொண்டு உட்செலுத்தப்பட்டு, அவருடைய வார்த்தைக்குச் செவிசாய்க்கும்போது, உங்களுக்குள் உட்செலுத்தப்பட்டிருக்கும் இந்தச் சாட்சாத்து தேவன் புறத்தூண்டுதலின்றி உங்களிலும், உங்களுக்காகவும் விசுவாசிப்பார்” ” (Life-study of Genesis, Message 28, p. 384). இந்த வார்த்தையை நீங்கள் கேட்கும்போது கூட, தேவன் உங்களுக்குள் விசுவாசமாக உட்செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு விழுந்துபோன மனிதனாக நீங்கள் ஒருபோதும் தேவனை அணுக முடியாது, எனவே அவரைப் பெறுவதற்கு அவருக்குள் விசுவாசித்து, அவருடைய நாமத்தைக் கூப்பிடுகிற அனைவருக்கும் தடையை அகற்றி வழியைத் தெளிவுப்படுத்துவதற்கான ஒரு சகலத்தையும்-உள்ளடக்கிய மரணத்தை இறக்க தேவன் பூமிக்கு வந்தார் (ரோம். 10:10, 13). அவரை விசுவாசமாகப் பெற்றுக்கொள்ளுங்கள், மேலும் அவரே இருக்கிறார் என்பதை விசுவாசித்து, தேவனிடம் முன்வாருங்கள் (எபி. 11:6)!
மிக முக்கியக் காரியங்கள்: வேதாகமத்தை வாசித்தல் (III.E.3.); ஊழியத்தை வாசித்தல் (III.E.8.); சபையின் கூடுகைகளில் கலந்துகொள்ளுதல் (III.F.2.); கர்த்தரை மற்றவர்களிடம் அறிக்கைசெய்தல் (III.G.2.); சுவிசேஷத்துடன் நண்பர்களைத் தொடர்புகொள்ளுதல் (III.G.4.).
BACKGROUND READING: Life-study of Galatians, Message 7, pp. 64–68; Message 14.
REFERENCES: Life-study of Galatians, Message 14; Message 15, pp. 127–130; Message 18, p. 159;
Message 35, p. 309; Message 38, p. 340; Message 41, pp. 363–365, 368–369; Life-study of Corinthians, Message 9, 77–79; Life-study of 1 Peter, Message 25, p. 224; Life-study of 2 Peter, Message 2, pp. 9–13; Message 3, pp. 21–27; Life-study of 1 Thessalonians, Message 3, pp. 26–28; Life-study of Jude, Message 3, pp. 17–20; Ephesians 1:14, footnotes 3–4; Life-study of Genesis, Message 28, p. 384; Gospel Outlines, Subject 190, “The Necessity of Believing that God is,” p. 323.