கிறிஸ்துவை துய்க்கும் அனுபவம்

பகுதி 11

✵பாடம் 01 – 09

சமமற்றவிதத்தில் நுகத்தடிக்குட்படாமல்

குறிக்கோள்: நம் இளம்வாலிபர்கள் தாங்கள் அவிசுவாசிகளிலிருந்து வேறுபட்டவர்கள் என்பதையும், அவிசுவாசிகளுடனான தங்கள் முறையற்ற உறவுகள் தங்களைச் சேதப்படுத்தக்கூடும் என்பதையும் உணர்ந்தறியும்படி அவர்களுக்கு உதவுவதற்கு.

பொருட்சுருக்கம்: கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலில் உள்ள இளம்வாலிபர்கள் தாங்கள் அவிசுவாசிகளிலிருந்து, கட்டமைப்புரீதியாக வேறுபட்டவர்கள் என்பதைப் பார்த்தாக வேண்டும். அவர்கள் தங்களுக்குள் தேவனுடைய ஜீவனையும் சுபாவத்தையும் கொண்டுள்ளனர் அதோடு உலகத்திற்குரிய மக்களிலிருந்து வேறுபட்ட ஒரு வாழ்க்கையைக் கொண்டிருந்தாக வேண்டும். 2 கொரிந்தியர் 6 இல், பவுல் அவிசுவாசிகளுடனான உறவுகளைப் பற்றிய ஒரு வெளிப்படையான எச்சரிக்கையை விசுவாசிகளுக்குக் கொடுத்தான். தேவனிடம் முழுவதும் ஒப்புரவாக்கப்படுவதற்கு, அவர்கள் அவிசுவாசிகளுடனான தங்கள் “நுகத்தடிக்குட்படுத்தும்” உறவுகள் (நெருங்கிய உறவுகள்) அனைத்தையும் துண்டித்து (2 கொரி. 6:14), அசுத்தமானவற்றிலிருந்து தங்களையே பிரித்துக்கொள்ள வேண்டியிருந்தது (2 கொரி. 6:17) இதனால் அவர்கள் தேவனுக்கென்று பரிசுத்தப்படுத்தப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட முடியும் (2 கொரி. 7:1). விசுவாசிகளுக்கும், அவிசுவாசிகளுக்கும் இடையே ஒரு மாபெரும் வேறுபாடு உள்ளது. இவ்வாறு, நாம் அவிசுவாசிகளுடன் சமமற்றவிதத்தில் நுகத்தடிக்குட்படுத்தப்படக்கூடாது. அவிசுவாசிகளுடன் நுகத்தடிக்குட்படுத்தப்படுவது என்றால் தேவனிடமிருந்து திசைதிருப்பப்படுவதாகும். நாம் கர்த்தருடன் தொடர்ந்து முன்னேறிச் செல்வதற்கு, நாம் ஒரு நேர்த்தியான விதத்தில் நம் உறவுகளைக் கவனித்துக்கொண்டாக வேண்டும். நம்மைச் சுற்றியிருப்பவர்களை இரட்சிக்க வேண்டும் என்ற இலக்குடன் நாம் அவர்களை நேசித்தாக வேண்டும், நாம் அவர்களுடன் ஒரு நுகத்தடிக்குட்படுத்தும் நட்பை உருவாக்காமல் அவர்களை நேசித்தாக வேண்டும், ஒரு நுகத்தடிக்குட்படுத்தும் நட்பை உருவாக்குவதே தேவனுக்கு விரோதமான பகையாகும். நமக்கு முறையான தோழர்கள் (கூட்டாளிகள்) இருக்கவும் வேண்டும், ஏனெனில் நம் தோழர்கள் எப்படியோ, அப்படியே நாமும் இருப்போம்.

பின்புலம்: நம் இளம் வாலிபர்களுடனான பிரச்சினைகளுக்கு ஒரு முக்கியக் காரணம், அவர்களுக்குத் தங்கள் அவிசுவாசமுள்ள நண்பர்களுக்கு இருக்கும் தங்கள் விசுவாசமும் (உத்தமம்) பக்தியுமே (முழு ஈடுபாடு, முனைப்பார்வம்) ஆகும். இந்த நட்பு, அவர்கள் இளமையாகவும் அப்பாவியாகவும் இருக்கும் போது உருவாகிறது. எனினும், அவர்கள் அனைவரும் வளர்ந்து முதிர்ச்சியடையும் போது, இளம் வாலிபர்கள் மீதான இந்த நண்பர்களின் தாக்கம் மிகவும் வலுவாக வளர்கிறது. அவிசுவாசிகள் பொல்லாங்கனின் கையில் செயலற்ற நிலையில் கிடக்கின்றார்கள், மேலும் அவன் நம் இளம் வாலிபர்களை சேதப்படுத்தவும் கெடுக்கவும் அவர்களைப் பயன்படுத்துகிறான். பதின்வயது பருவத்தில் இளம் வாலிபர்கள் தங்கள் சமூகத் திறன்களையும் அடையாளத்தையும் வளர்த்துக் கொள்கிறார்கள். எனினும், இந்த வளர்ச்சியின் பெரும்பகுதி அவர்கள் யாருடன் “சுற்றித் திரிகின்றனர்” என்பவர்களால்தான் தீர்மானிக்கப்படுகிறது. அவர்கள் ஒரே மாதிரியான ஆடை அணிகிறார்கள், ஒரே மாதிரியாகப் பேசுகிறார்கள், ஒரே மாதிரியான சிகை அலங்காரத்தைக் (ஹேர் ஸ்டைலைக்) கொண்டுள்ளனர், மேலும் தங்கள் நண்பர்களைப் போலவே அதே மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறார்கள். “பொருந்தி ஒத்துப்போவதே” பல இளம் வாலிபர்களுக்கு அதி முக்கியமான விஷயமாக ஆகிவிடுகிறது, மேலும் ஒதுக்கப்படுவதுதான் அவர்களுக்கு அதி திகிலூட்டும் விஷயம். உண்மையில், இதுவே அதி மோசமான வகையான அடிமைத்தனங்களில் ஒன்றாகும். இளம் வாலிபர்கள் தாங்கள் “தாங்களாகவே இருக்க” விரும்புவதாகக் கூறினாலும், உண்மையில் அவர்கள் தங்கள் குழு “அதி சிறந்தது (கூலானது” என்று எதைத் தீர்மானிக்கிறார்களோ அதுவாக இருக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். வித்தியாசமாக இருப்பது, அல்லது அவர்கள் தாங்கள் விசுவாசிக்கிறவற்றிற்காக வழக்காட தங்கள் நண்பர்களை எதிர்த்து நிற்பது என்றால் அவர்களால் நிராகரிக்கப்படும் அபாயத்திற்கு உட்படுத்தப்படுவதாகும். இளம் வாலிபர்கள் தாங்கள் உண்மையிலேயே வித்தியாசமானவர்கள் என்பதையும், அவர்கள் தாங்கள் விசுவாசிக்கிறவற்றிற்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்பதையும் பார்க்க அவர்களுக்கு நாம் உதவ வேண்டும். இந்தப் பாடம் ஒரு தடுப்பூசி, குறிப்பாக இளம் வாலிபர்களுக்கானது, அவர்கள் தங்கள் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் சில வழிகாட்டும் கோட்பாடுகளை அவர்களுக்கு வழங்குவதற்காக உள்ளது.

அதிகாரங்கள்: 2 கொரிந்தியர் 5–7.

போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:

I. முழுவதும் இரட்சிக்கப்படுவது என்பதில் தேவனிடம் ஒப்புரவாக்கப்படுதலும், தேவனுக்கென்று பரிசுத்தப்படுத்தப்படுதலும், அசுத்தமானவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படுதலும் அடங்கும்.

2 கொரிந்தியர் 5-7 இல் உள்ள பவுலின் எண்ணம் என்னவெனில், மக்களை தேவனிடம் ஒப்புரவாக்குவதற்கான, ஒப்புரவாக்குதலின் ஓர் ஊழியத்தைக் கொண்டு தனக்கு ஆணையிடப்பட்டிருந்தது. கொரிந்தியர்கள் தாங்கள் கர்த்தரைப் பெற்றபோது ஓரளவு தேவனிடம் ஒப்புரவாக்கப்பட்டிருந்தனர், ஆனால் அவர்களில் பலர் இன்னும் அவிசுவாசிகளுடன் சமமற்ற உறவுகளைக் கொண்டிருந்தனர். இவ்வாறு, கொரிந்திய விசுவாசிகள் தேவனிடம் மேலும் ஒப்புரவாக்கப்பட வேண்டியிருந்தது (2 கொரி. 5:20). அதிகாரம் 6 இல், பவுல் கொரிந்தியர்களுக்கு இந்த உறவுகளைப் பற்றிய ஒரு வெளிப்படையான எச்சரிக்கையைக் கொடுத்தான். தேவனிடம் முழுவதும் ஒப்புரவாக்கப்படுவதற்கு, அவர்கள் அவிசுவாசிகளுடனான தங்கள் “நுகத்தடிக்குட்படுத்தும்” உறவுகள் (நெருங்கிய உறவுகள்) அனைத்தையும் துண்டித்து (2 கொரி. 6:14), அசுத்தமானவற்றிலிருந்து தங்களையே பிரித்துக்கொள்ள வேண்டியிருந்தது (2 கொரி. 6:17) இதனால் அவர்கள் தேவனுக்கென்று பரிசுத்தப்படுத்தப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட முடியும் (2 கொரி. 7:1). (இந்த பாடத்தைத் தொடர்வதற்கு முன், ஒரு நுகம் என்றால் என்ன என்று இளம் வாலிபர்களுக்குத் தெரியுமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்). இது தேவனுடைய பார்வையில் ஒரு தீவிரமான காரியம். எனவே, நாம் தேவபயத்தில் பரிசுத்தத்தைப் பூரணப்படுத்த வேண்டும் என்று பவுல் நம்மை எச்சரித்தான் (2 கொரி. 7:1).

A. தேவனிடம் ஒப்புரவாக்கப்படுவதற்கு, நாம் அசுத்தமானவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டாக வேண்டும்— 2 கொரி. 5:20; 6:17-18

தேவனிடம் முழுவதும் ஒப்புரவாக்கப்படுவதற்கு, சபையிலுள்ள நம் வாழ்க்கையையும், கிறிஸ்துவை ஆசையாய்ப் பின்தொடரும் நம் பின்தொடர்தலையும் எதுவும் சேதப்படுத்தாதவாறு நாம் நம்முடைய மனித உறவுகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டாக வேண்டும்.

B. ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாக, நாம் பரிசுத்தமாக இருந்தாக வேண்டும்—2 கொரி. 6:16

C. தேவனுடைய வாக்குத்தத்தங்களைக் கொண்டிருப்பதால், நாம் நம்மையே சுத்திகரித்து, தேவபயத்தில் பரிசுத்தத்தைப் பூரணப்படுத்த வேண்டும்—2 கொரி. 7:1

II. அவிசுவாசிகளுடன் சமமற்றவிதத்தில் நுகத்தடிக்குட்படாதீர்கள்—2 கொரி. 6:14

உலகத்திலுள்ள நம் நட்புகள் பெரும்பாலும் நம் குடும்ப வாழ்க்கையிலும், சபை வாழ்க்கையிலும் மோதல்களை ஏற்படுத்துகின்றன. பல சமயங்களில் நம் நண்பர்கள், நாம் அவர்களுடன் ஒரு பார்ட்டி அல்லது திரைப்படம் போன்றவற்றிற்குச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள். நாம் செய்யக்கூடாது என்று நமக்குத் தெரியும், ஆனால் இந்த நெருங்கிய நட்பின் காரணமாக நாம் ஒத்துப்போகிறோம். நம் பெற்றோர் நம்மைக் கட்டுப்படுத்த முயலும்போது, நம் நண்பர்களுக்கு ஆதரவாக நாம் நம் பெற்றோருக்கு எதிராகவும் திரும்பக்கூடும். தங்கள் பெற்றோரும், பரிசுத்தவான்களும்தான் தங்களுடைய வாழ்க்கையில் அதி விலையேறப்பெற்ற மக்கள் என்பதையும், யாருக்காகவும் அவர்கள் இவர்களைக் கைவிடக் கூடாது என்பதையும் பார்க்க இளம் வாலிபர்களுக்கு உதவியளிக்கப்பட வேண்டும்!

A. விசுவாசிகளுக்கும், அவிசுவாசிகளுக்கும் இடையே ஒரு மாபெரும் வேறுபாடு உள்ளது— 2 கொரி. 6:14-18

இந்த பத்தியில், பவுல் விசுவாசிகளுக்கும் அவிசுவாசிகளுக்கும் இடையிலான இந்த மாபெரும் வேறுபாட்டை உதாரணங்காட்டி விளக்குவதற்காக ஐந்து குறிப்புகளை முன்வைக்கிறான். நீதிக்கும் அநீதிக்கும் இடையில் எந்தப் பங்காளித்துவமும், பங்கிடுதலும் இருக்கக்கூடாது (2 கொரி. 6:14). ஒளிக்கும் இருளுக்கும் இடையே எந்த  ஐக்கியமும், எந்தச் சம்பந்தமும் இருக்கக்கூடாது (2 கொரி. 6:14). கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இடையில் எந்த இணக்கமும், எந்த ஒத்திசைவும் இருக்கக்கூடாது (2 கொரி. 6:15). ஒரு விசுவாசிக்கும் அவிசுவாசிக்கும் இடையில் எந்தப் பகுதியும், எந்தப் பங்கும் இருக்கக்கூடாது (2 கொரி. 6:15). தேவனுடைய ஆலயத்துக்கும், விக்கிரகங்களுக்கும் இடையே எந்த உடன்பாடும், சம்மதமும் இருக்கக்கூடாது (2 கொரி. 6:16). “வசனம் 14 இல் உள்ள சமமற்றவிதத்தில்என்ற வார்த்தையின் அர்த்தம் வேறுபட்டவிதத்தில் என்பதாம்; இது ஒரு வகையான வித்தியாசத்தைக் குறிக்கிறது. இது, வித்தியாசமான இரண்டு விலங்குகளை ஒன்றாக நுகத்தடிக்குட்படுத்துவதைத் தடைசெய்கிற உபாகமம் 22:10ஐக் குறிக்கிறது. விசுவாசிகளும், அவிசுவாசிகளும் வெவ்வேறு இனத்தினர். விசுவாசிகளின் தெய்வீக சுபாவம் மற்றும் பரிசுத்த நிலைப்பாடு காரணமாக, விசுவாசிகள் அவிசுவாசிகளோடு ஒன்றாக நுகத்தடிக்குட்படுத்தப்படக்கூடாது. இது, அவர்களுடைய திருமணத்திற்கும் வியாபாரத்திற்கும் மட்டுமல்லாமல், விசுவாசிகளுக்கும் அவிசுவாசிகளுக்கும் இடையே எல்லா வகையான நெருக்கமான உறவுகளுக்கும் பிரயோகிக்கப்பட வேண்டும்” (Life-study of 2 Corinthians​, Message 43, p. 371). இங்கே பவுலின் கட்டளை, உபாகமத்தில் உள்ள மாதிரியை அடிப்படையாகக் கொண்டது, அதில் கர்த்தர் ஒரு எருது மற்றும் ஒரு கழுதையை ஒன்றாக நுகத்தடிக்குட்படுத்தி பிணைக்க தடை விதிக்கிறார். லேவியராகமத்தின்படி, ஓர் எருது சுத்தமானது, ஏனெனில் அது விரிகுளம்புள்ளதாயிருந்து, அசைபோடுகிறதுமானதாக உள்ளது (லேவி. 11:3). ஒரு கழுதை அசுத்தமானது, ஏனெனில் அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடுகிறதில்லை (லேவி. 11:4). “பழைய ஏற்பாட்டின்படி, கால்நடைகள் இரண்டு வகைகளைச் சேர்ந்தவையாக இருந்தன: சுத்தமானவை மற்றும் அசுத்தமானவை….[இஸ்ரயேல் புத்திரர் ஒரு சுத்தமான விலங்கை ஓர் அசுத்தமான விலங்குடன் ஒன்றாஈகப் பிணைத்து நுகத்தடிக்குட்படுத்தக்கூடாது என்றும், சுத்தமானதையும் அசுத்தமானதையும் ஒரே நுகத்தின்கீழ் உட்படுத்தக்கூடாது என்றும் நியாயப்பிரமாணம் இஸ்ரயேல் புத்திரருக்குக் கட்டளையிட்டது” (​Life-study of 2 Corinthians​, Message 43, p. 372).

B. அவிசுவாசிகளுடன் நுகத்தடிக்குட்படுத்தப்படுவது என்றால் தேவனிடமிருந்து திசைதிருப்பப்படுவதாகும்

அவிசுவாசிகளுடன் ஒன்றாக நுகத்தடிக்குட்படுத்தப்படுவது என்றால் தேவனிடமிருந்து திசைதிருப்பப்படுவதாகும். இத்தகைய ஒரு சமமற்ற நுகத்திலிருந்து நம்மையே விடுவிப்பது என்றால் தேவனிடம் திரும்பி வருவதும், அவருக்குள் ஒப்புரவாக்கப்படுவதுமே ஆகும். எடுத்துக்காட்டாக, ஒரு சகோதரன் ஓர் அவிசுவாசியை மணந்து கொள்ளக்கூடாது. அவன் ஓர் அவிசுவாசியை திருமணம் செய்துகொள்வதே, சமமற்றவிதத்தில் நுகத்தடிக்குட்படுத்தப்படுவது ஆகும். அந்த வகையான சமமற்ற நுகம், அவனை தேவனிடமிருந்து திசைதிருப்பும் ” (Life-study of 2 Corinthians​, Message 43, p. 372). இது ஏனெனில், ஒரு விசுவாசி தன் வாழ்க்கைக்கு ஒரு வேறுபட்ட இலக்கையும், தன் வாழ்க்கையை நிர்வகிக்கும் (ஆளும்) வேறுபட்ட மதிப்புகளையும் கொண்டிருக்கிறான். ஓர் அவிசுவாசியுடன் திருமணம் செய்துகொள்வதே, ஓர் இளைஞன் செய்ய முடியக்கூடிய மிகக் கடுமையான தவறுகளில் ஒன்றாகும், மேலும் அது மிகுந்த துன்பத்தை விளைவிக்கிறது. “அதேபோல், ஓர் அவிசுவாசியுடன் வியாபாரத்தில் ஒரு பங்குடைமை வணிகம் (கூட்டுறவை) உருவாக்குவதும் சமமற்றவிதத்தில் நுகத்தடிக்குட்படுத்தப்படுவதாகும். ஒரு விசுவாசியும், ஓர் அவிசுவாசியும் ஒரு வியாபாரத்தில் ஒன்றுசேர்ந்து பங்குதாரர்களாக இருந்து, ஒரே ஆர்வத்தையும் இலக்கையும் கொண்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். அவர்கள் உண்மையில் ஒரு சமமற்றவிதத்தில் நுகத்தடிக்குட்படுத்தப்பட்ட ஜோடியே” (Life-study of 2 Corinthians​, Message 43, p. 372). மீண்டும், வேறுபட்ட இலக்கு மற்றும் மதிப்புகளே இதற்குக் காரணமாகும். ஒரு பங்குதாரர் கர்த்தருடைய வேலைக்காக சபைக்குத் தங்கள் இலாபத்தை ஒரு பரிசாகக் கொடுக்க விரும்புகிறான் என்று வைத்துக்கொள்வோம். அவிசுவாசமுள்ள பங்குதாரர், இதை ஒரு பண விரயமாக கருதக்கூடும். வியாபாரத்திலுள்ள ஓர் அவிசுவாசி பண ஆசையாலும், பணக்காரராக இருப்பதற்கான வாஞ்சையாலும் ஊக்குவிக்கப்படுகிறான். இது இவ்வுலகில் ஒரு விசுவாசியின் நாட்டமாக (பின்தொடர்தலாக) இருக்க முடியாது. வேதாகமம் நமக்குக் காட்டுவது என்னவெனில், “இந்த வகையான ஜோடியிடுதல், நுகத்தடிக்குட்படுத்துதல், தீர்த்துக்கட்டப்பட வேண்டும். இந்த வழியில் ஒரு வியாபார வணிக பங்குடைமையில் (கூட்டாண்மையில்) ஈடுபடும் எவருமே தன் வியாபாரத்தால் தேவனிடமிருந்து திசைதிருப்பப்படுவார்கள்….மேலும், அவிசுவாசிகளுடனான நட்பு, நாம் சமமற்ற விதத்தில் நுகத்தடிக்குட்படுத்தும்படி வழிவகுக்க முடியும். இளம் வாலிபர்கள், நண்பர்களை உருவாக்க குறிப்பாக விரும்புகிறார்கள். இளம் வாலிப சகோதர சகோதரிகளே, நீங்கள் அவிசுவாசிகளுடன் நெருங்கிய நட்பை வைத்திருந்தால், அது,  நீங்கள் ஒரு சமமற்ற விதத்தில் நுகத்தடிக்குட்படுத்தப்பட்ட ஜோடியாக ஆகுவதற்கு வழிவகுக்கும். அந்த வகையான நுகத்தடிக்குட்படுத்துதல் உங்களை தேவனிடமிருந்து திசைதிருப்பும். உங்கள் அவிசுவாசமுள்ள நண்பன், நீங்கள் தேவனிடம் நெருங்கி வர உங்களுக்கு உதவ மாட்டான்; மாறாக, ஓர் அவிசுவாசமுள்ள நண்பன் உங்களை அவரிடமிருந்து விலக்கிவிடுவான். அத்தகைய ஒரு சமமற்ற (சமத்துவமற்ற நட்பை நீங்கள் தக்கவைத்துக்கொள்ளும் வரை, நீங்கள் தேவனிடமிருந்து மேலும் மேலும் அதிகமாகத் திசைதிருப்பப்படுவீர்கள் அதோடு படிப்படியாக அவரிடமிருந்து வெகுதூரம் விலகிச் செல்லப்படுவீர்கள். ஆகவே, நாம் தேவனில் காத்துக்கொள்ளப்படக்கூடும் அதோடு முழுவதும் அவருக்குள் மீண்டும் திரும்பக் கொண்டுவரப்படக்கூடும் என்ற குறிக்கோளுக்காக, நாம் அவிசுவாசிகளுடன் சமமற்றவிதத்தில் நுகத்தடிக்குட்படுத்தப்பட்டு ஒன்றாகப் பிணைக்கப்பட வேண்டாம் என்று பவுல் நமக்குக் கட்டளையிடுகிறான்” (Life-study of 2 Corinthians​, Message 43, pp. 372–373).

C. நாம் உலகத்தில் இல்லாதவர்கள், மேலும் நாம் உலகப்பிரகாரமான மக்களிடமிருந்து வேறுபட்டவர்கள்—2 கொரி. 6:17-18.

கிறிஸ்துவிலுள்ள விசுவாசிகளாகவும், கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களாகவும், நாம் உண்மையில் எவ்வளவு வித்தியாசமானவர்கள் என்பதை நாம் உணர்ந்தறிந்தாக வேண்டும். தேவனுடைய இரட்சிப்பு நம் ஆவியை மறுபடிஜெநிப்பித்தது அதோடு இப்போது நாம் தேவனுடைய ஆவியானவரால் மறுசாயலாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு வழிமுறையில் இருக்கிறோம். நாம் உள்ளான ஜீவ பிரமாணத்தினாலும், தேவனின்படியான நம் மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட மனச்சாட்சியினாலும் நாம் உள்ளான ரீதியில் கட்டுப்படுத்தப்படுகிறோம். நம் மதிப்புகள் மாறிவிட்டன. நாம் தற்காலிகமான, காணக்கூடிய விஷயங்களை அல்ல, மாறாக நித்திய விஷயங்களையே பொக்கிஷமாகக் கருதுகிறோம்..நம்முடைய இருதயமும் பாரமும் சுவிசேஷத்திற்காகவும், தேவனுடைய நித்திய குறிக்கோளை நிறைவேற்றுவதற்காகவுமே இருக்கிறது, ஆயினும்கூட அவிசுவாசிகள் இன்றைக்காக தற்போது மட்டுமே வாழ்கின்றார்கள். அவிசுவாசிகள் தங்களுடைய நேரத்தைச் செலவழித்து, தேவனோடு உள்ள தொடர்பில் தங்களைச் செயலற்றவர்களாக ஆக்கிவிடும் உறவுகள் அல்லது கேளிக்கைகளின் வடிவத்தில் இன்பத்தை ஆசையாய்ப் பின்தொடர்கின்றனர், அதே வேளையில், நாம் நம் இளமைப் பருவத்திலும்கூட கிறிஸ்துவை ஆதாயப்படுத்த ஆசையாய்ப் பின்தொடர்கின்றோம்.

III. நாம் கர்த்தருடன் தொடர்ந்து முன்னேறிச் செல்வதற்கு, நாம் ஒரு நேர்த்தியான விதத்தில் நம் உறவுகளைக் கவனித்துக்கொண்டாக வேண்டும்

A. நம்மைச் சுற்றியிருப்பவர்களை இரட்சிக்க வேண்டும் என்ற இலக்குடன் நாம் அவர்களை நேசித்தாக வேண்டும், நாம் அவர்களுடன் ஒரு நுகத்தடிக்குட்படுத்தும் நட்பை உருவாக்காமல் அவர்களை நேசித்தாக வேண்டும், ஒரு நுகத்தடிக்குட்படுத்தும் நட்பை உருவாக்குவதே தேவனுக்கு விரோதமான பகையாகும்—லூக். 7:34; யாக். 4:4

உலகத்தில் உள்ள மக்களிடையே நட்புதான் அதி நெருக்கமான உறவு. பொதுவாக மக்களுக்கு நட்புதான் அதி முக்கியமான உறவும்கூட. உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தாங்கள் தங்களுடைய இருதயத்தைத் திறந்து பேச முடியக்கூடிய நெருங்கிய தோழர்களை (கூட்டாளிகள்), நண்பர்களை நாடுகின்றனர். எனினும், உலகத்தில் உள்ள மக்களுடன் நாம் நட்புக் கொள்ளும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை நாம் உணர்ந்தறிந்தாக வேண்டும். ஒரு வகையில், நாம் மற்றவர்களுக்கு நண்பர்களாக இருக்க வேண்டும், மேலும் நம் நண்பர்களை இரட்சிக்கும் இலக்குடன் நாம் அவர்களை நேசிக்க வேண்டும் (ஒப். லூக். 7:34). ஆயினும்கூட அதே சமயம், அவிசுவாசிகளுக்கு ஓர் ஆவிக்குரிய உறவைப் பெறுவதற்கான திறன் இல்லை (1 கொரி. 2:14), மேலும் நாம் கர்த்தரை ஆசையாய்ப் பின்தொடர்வதை அவர்களால் பாராட்டவோ புரிந்துகொள்ளவோ முடியாது (1 பேது. 4:3-4) என்பதை நாம் உணர்ந்தறிந்தாக வேண்டும். இறுதியில், நாம் அவிசுவாசிகளுடன் நட்பில் நுகத்தடிக்குட்படுத்தப்பட்டு ஒன்றாக பிணைக்கப்பட்டால், அவர்கள் நம்மை கர்த்தரிடமிருந்து விலக்கிவிடுவார்கள். உலகப்பிரகாரமான மக்களுடனான நட்பு தேவனுக்கு விரோதமான பகை என்றும்கூட யாக்கோபு நம்மை எச்சரிக்கிறான் (யாக். 4:4).

B. சபையில், நட்புக்கான எந்தத் தேவையும் இல்லை, ஏனெனில் நாம் அனைவரும் கிறிஸ்துவில் சகோதரர்கள்—மத். 23:8; கொலோ. 1:2

சபையில் உள்ள விசுவாசிகளுடனான, நம் உறவு, ஒருவருக்கொருவர் சகோதரர்கள் மற்றும் அவயவங்கள் என்ற உறவே ஆகும். இது வெறும் நட்பை விட மிகவும் நெருக்கமானது. ஒருவருக்கொருவர் ஒரு சகோதரனாகவோ அல்லது ஓர் அவயவமாகவோ இருப்பது என்றால் ஒரு பொதுவான ஜீவன், சுபாவம், செயல்பாடு, குறிக்கோள் மற்றும் வெளியாக்கத்தைக் கொண்டிருப்பதும் ஆகும். இது எவ்வளவு நெருக்கமானது! சபையில், விசுவாசிகளிடையே உள்ள அதி முக்கியமான உறவு “சகோதரர்” என்பதே. இந்த உறவு, இளம் வாலிபர்கள் மத்தியில் மேம்படுத்தப்பட்டு வலுப்படுத்தப்பட வேண்டும். சபையில் உள்ள “சகோதரர்கள்” (அல்லது “சகோதரிகள்,” நாம் சகோதரிகளாக இருந்தால்) கொண்டு நம் நண்பர்களை நாம் இடமாற்றம்செய்ய வேண்டும். உண்மையில், சபையில் உள்ள நட்பு என்பது சாதாரண உறவுகளுக்கும் அப்பாற்பட்ட ஒன்று, மேலும் சபை வாழ்க்கைக்கு ஆரோக்கியமற்றதாக இருக்கலாம். நமக்கு “சகோதரன்,” “சகோதரி” ஆகிய ஜீவனிலுள்ள உறவுகளுக்குதான் சபையில் வலியுறுத்துதல் (முக்கியத்துவம்) கொடுக்கப்படுகிறது. உலகத்தில் அல்லது சபையில் உள்ள நட்புகள் நம் விருப்பத்தேர்வை வெளிக்காட்டுகின்றன. எனினும், கிறிஸ்துவின் சரீரத்தில் நாம் எல்லா பரிசுத்தவான்களிடமும் அதே (ஒரே) அன்பைக் கொண்டிருக்க வேண்டும்.

C. நமக்கு முறையான தோழர்கள் (கூட்டாளிகள்) இருக்கவும் வேண்டும், ஏனெனில் நம் தோழர்கள் எப்படியோ, அப்படியே நாமும் இருப்போம்—1 கொரி. 15:33; சங். 1:1-2

தோழர்களைப் (கூட்டாளிகள்) பொறுத்தவரை, நாம் மதிமயங்கி மோசம்போகவோ அல்லது வஞ்சிக்கப்படவோ கூடாது (1 கொரி. 15:33). நாம் மற்றவர்களுடன் நட்பு கொள்வதன் மூலம் அவர்களை சீர்திருத்த முடியாது. மாறாக, நாம் உலகப்பிரகாரமான தோழர்களைத் (கூட்டாளிகள்) தேர்ந்தெடுத்தால் நாம் தாமே கெடுக்கப்படுவோம். உணவுமுறையில் பகுத்துணர்தல் குறித்து லேவியராகமம் 11இல் உள்ள மாதிரியின்படி, மக்களுடனான நம் தொடர்புகொள்ளுதல் புசித்தலால் அடையாளப்படுத்தப்படுகிறது (அப். 10:9–14, 27–29; also cf. Journey through the Bible​, Unit 2, Lesson 12, “Discernment in Diet”). உலகத்தில் உள்ள நம் நட்புகளும் உறவுகளும், புசித்தலின் ஒரு வடிவத்தைப் பிரதிநிதிப்படுத்துகின்றன. நாம் நம் நண்பர்களுடன் இருக்கும்போது நாம் நமக்குள் ஒன்றை உட்கொண்டு எடுத்துக்கொள்கின்றோம். நாம் எதைப் புசிக்கிறோமோ அதுவாகவே நாம் ஆகிவிடுகிறோம். இது மிகவும் தீவிரமானது. விலங்குகளில் இரண்டு வகைகள் உள்ளன—அசுத்தமானவை மற்றும் சுத்தமானவை—இரண்டு வகை மக்களைப் பிரதிநிதிப்படுத்துகின்றன. நாம் மக்களை எவ்வாறு தொடர்புகொள்கிறோம் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் நாம் இந்த “அசுத்தமான” நபர்களுடன் நம்மையே இணைத்துக்கொண்டால், நாம் தீட்டுப்படுத்தப்படுவோம்.

D. உச்சநிலையாக, நம் திருமணத்தில், கர்த்தரை ஆசையாய்ப் பின்தொடர்வதற்கு நம்மிடம் இருப்பது போன்ற அதே இருதயம் கொண்ட ஒருவருடன் நாம் நுகத்தில் பிணைக்கப்பட வேண்டும்—2 கொரி. 6:14; 1 கொரி. 7:39; மத். 19:6

வேதாகமத்திலுள்ள முதல் திருமணமே, அனைத்து திருமணங்களுக்குமான தேவனுடைய நியமனத்தின் கோட்பாடுகளை நிறுவுகிறது (மத். 19:3–9). எந்தக் குழப்பமும் இல்லாமல், ஒரு பெண்ணுக்கு ஓர் ஆண் (ஒருத்திதக்கு ஒருத்தன்) இருக்க வேண்டும் என்பதே முதல் மற்றும் தெள்ளத்தெளிவான கோட்பாடு. ஆதியாகமம் 1-2 இல் தெளிவாகக் காணப்படும் மற்றொரு கோட்பாடு என்னவெனில், திருமணம் பூமியில் தேவனுடைய குறிக்கோளுக்கானது என்பதும், அது தேவனால் செய்யப்பட்ட ஒன்று என்பதுமே. கடைசியாக, ஒரு நேர்த்தியான திருமணத்தில், ஜீவன், சுபாவம் மற்றும் குறிக்கோளில் ஒரு பொருத்தம் இருந்தாக வேண்டும் (மத். 19:6; ஆதி. 2:19–23). உங்கள் பொருத்தத்தை நீங்கள் கண்டறிவது என்பது தேவன் தம்முடைய நேரத்தில் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்போகும் ஒன்று என்பதை நீங்கள் உணர்ந்தறிந்தாக வேண்டும். அவர் அதைச் செய்யும்போது, அதுவே பரிபூரணமானது. நீங்கள் அதைச் செய்யும்போது, நீங்கள் கஷ்டப்படுவீர்கள் (பாடுபடுவீர்கள்). உங்களைப் போன்ற ஒரு விசுவாசியாகிய ஒரு நபரிடம் தேவன் உங்களை வழிநடத்திச் செல்வதே ஒரு நல்ல பொருத்தம். நீங்கள் அதே ஜீவனையும் சுபாவத்தையும் பகிர்ந்துகொள்கிறீர்கள். அதே இலக்குகளும், கிறிஸ்துவை ஆசையாய்ப் பின்தொடர்தலும் உங்கள் இருவருக்கும் உள்ளது. கர்த்தருக்குச் சேவிப்பதற்கும் அல்லது அவரால் அனுப்பப்படுவதற்குமான அதே பாரம்கூட உங்கள் இருவருக்கும் இருக்கும். அப்போது, உங்கள் திருமணம் ஆரம்பத்திலிருந்தே ஓர் ஆசீர்வாதத்தின் கீழ் இருக்கும். இளம் வாலிபர்களின் திருமணம் இன்னும் ஒரு வெகு நீண்ட காலத்திற்குப் பிறகே இருந்தாலும், அவர்கள் இளமையாக இருக்கும்போதே இந்த ஆரோக்கியமான கண்ணோட்டத்தை உட்பகிர்வது நல்லது.

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: உயர்நிலைப்பள்ளியில் இளம் வாலிபர்கள் உருவாக்கும் உறவுகள், மிகவும் அநேகமாக மேல்நிலைப் பள்ளியில் தொடரும் நட்புகளாக இருக்கும். உயர்நிலைப்பள்ளியில் இவர்கள் போதுமான அளவு அப்பாவிகளாகத் தோன்றக்கூடும், ஆனால் அவிசுவாசமுள்ள இளம் வாலிபர்கள் வளர வளர, பல பாவமான விஷயங்கள் உள்ளே வருகின்றன.

நம் உயர்நிலைப்பள்ளி இளம் வாலிபர்கள் இரண்டு வழிகளில் வழிநடத்தப்பட வேண்டும். முதலில் இவர்கள் உணர்ந்தறிய வேண்டியது என்னவெனில், சபை வாழ்க்கையில் வளர்கின்ற இளம் வாலிபர்களாக இவர்கள் ஜீவனுள்ள தேவனுக்கென்று பரிசுத்தமாக்கப்பட்டு,க்கொண்டிருக்கும் அவருடைய பரிசுத்த ஆலயம் என்பதே (1 கொரி. 6:19). எனவே, அப்படிப்பட்டவர்களாக இவர்கள் தாங்கள் யாருடன் “சுற்றித் திரிகின்றனர்” என்பதைத் தேர்ந்தெடுப்பதில் ஞானத்தைப் பயிற்சி செய்ய வேண்டும், இவர்கள் தாங்கள் யாருடன் இருக்க வேண்டும் என்று தேர்வுசெய்கிறார்களோ, அவர்கள் சபை வாழ்க்கையில் இல்லை எனில், இவர்கள் சீர்கெடுக்கப்பட மட்டுமே முடியும், மேம்படுத்தப்பட முடியாது. ஓர் இளம் வாலிபன் ஒரு ஒரு படிக்கட்டில் நின்றுக்கொண்டு, தனக்குக் கீழே படிக்கட்டில் நிற்கும் மற்றொருவருடன் கைகளைப் பிடித்துக்கொண்டிருக்கும் எடுத்துக்காட்டைப் பயன்படுத்தவும். கீழே இருப்பவர் மேலே இழுக்கப்படுவது எளிதாக இருக்கிறதா அல்லது மேலே இருப்பவர் கீழே இழுக்கப்படுவது எளிதாக இருக்கிறதா என்று அவர்களிடம் கேளுங்கள். பரிசுத்தப்படுத்தப்படாத உறவுகளால் கீழே இழுக்கப்படுவது எவ்வளவு எளிது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. அவர்களுடைய அதி நெருங்கிய நண்பர்களாக இருக்க சபை வாழ்க்கையிலிருந்து கூட்டாளிகளைத் தேர்ந்தெடுக்க அவர்கள் உற்சாகப்படுத்தப்பட வேண்டும். இரண்டாவதாக, அவர்கள் இந்த அவிசுவாசமுள்ள நண்பர்களுக்கான ஒரு பாரத்தை எடுத்துக்கொள்ள அவர்கள் தங்கள் சிறு வயதிலிருந்தே கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுடைய நண்பர்களின் இரட்சிப்புக்கான இந்த வகையான பாரம் மற்றும் ஜெபம் அவர்களைப் பத்திரப்படுத்தும் (பாதுகாக்கும்). இளம் வாலிபர்கள் தாங்கள் எந்தெந்த நண்பர்களுக்காக ஜெபிக்கத் தொடங்க விரும்புவார்களோ அவர்களின் 3-5 பெயர்களின் ஒரு பட்டியலை தயாரிக்க அவர்களுக்கு உதவுங்கள். வாட்ச்மேன் நீ தனது நண்பர்களின் ஒரு பட்டியலைத் தயாரித்து, அவர்கள் ஒவ்வொருவராக இரட்சிக்கப்பட அவர்களுக்காக ஜெபித்ததைப் பற்றிய அவருடைய சாட்சியை நீங்கள் சொல்லலாம் (Watchman Nee: A Seer of the Divine Revelation in the Present Age​, p. 46).

சுவிசேஷ செயலாக்கம்: பல இளம் வாலிபர்களைப் பொறுத்தவரை, அதிசிறந்த (கூல்) அல்லது அதி பிரபலமான அல்லது ஒப்பற்ற (தனித்துவமான) நண்பர்களைக் கொண்டிருப்பதுதான் கிட்டத்தட்ட அவர்களுக்கு எல்லாமும். சிலர் தங்களுக்கு விருப்பமான நண்பர்கள் நட்பு வட்டத்துடன் பொருந்தி ஒத்துப்போக கிட்டத்தட்ட எந்த எல்லைக்கும் செல்வார்கள். நாளை தங்கள் நண்பர்கள் எங்கே இருப்பார்கள் என்பது பற்றிதான் பலர் யோசிப்பதில்லை. போதையில் மதிமயங்கிப்போன தன் நண்பர்களில் ஒருவரின் காரில் ஏறும் ஒரு நபரின் எடுத்துக்காட்டைப் பரிசீலிக்கவும். இந்தச் சவாரி ஒரு சாதாரண நட்புடன் தொடங்குகிறது, ஆனால் இந்தக் கார் அழிவுக்கு விதிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டுப்பாடற்ற காரைப் போலவே, இந்த யுகத்தின் போக்கு அழிவை நோக்கிச் செல்கிறது. இது, ஒழுக்கங்கெட்ட விதத்தில் வாழத் தேர்ந்தெடுக்கும் அனைவரையும் மூழ்கடிக்கும் ஒரு வெள்ளம், ஒரு வலுவான அலை (1 பேது. 4.4). உங்கள் சூழ்நிலை என்ன? “அதி சிறந்தவர்கள் (கூலானவர்கள்)” என்று நீங்கள் நினைப்பவர்களுடன் பொருந்தி ஒத்துப்போக நீங்கள் முயற்சிக்கின்றீர்களா? அவர்களின் தலைவிதியைப் பகிர்ந்துகொள்வது உங்கள் விருப்பமா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பெறுவதே உங்கள் மிகப்பெரிய தேவை. நீங்கள் கர்த்தரில் விசுவாசிப்பதற்காக உங்களை விசித்திரமானவர்கள் என்று மக்கள் நினைக்கலாம், உங்களை ஏளனம் செய்யவும் அல்லது அவதூறு செய்யவும்கூட பண்ணக்கூடும், ஆனால் இந்த அற்புதமான கர்த்தராகிய இயேசுவைப் பெறுவதன் மூலம் நீங்கள் பல சகோதர சகோதரிகளுடன்கூட நித்திய ஜீவனைச் சுதந்தரிப்பீர்கள் (மாற். 10:30), மேலும் நீங்கள் அழிவிலிருந்து இரட்சிக்கப்படுவீர்கள், இது ஒரு நண்பர்கள் குழுவுடன் “பொருந்தி ஒத்துப்போகுவதை” விட மிகவும் சிறந்த ஒன்று.

மிக முக்கியக் காரியங்கள்: ஒரு நபராக நீங்கள் யார் என்பதைப் பொக்கிஷமாய்க் கருதக் கற்றுக்கொள்ளுதலும், உங்களை சேதப்படுத்தும் விஷயங்களிலிருந்து உங்களையே பிரித்துக்கொள்ளுதலும் (IV.D.); டேட்டிங் மற்றும் திருமணம் பற்றிய ஒரு வேதாகமரீதியான பார்வையையும் புரிதலையும பெறுதல் (IV.D.9.b.); நட்பைப் பற்றிய ஒரு வேதாகமரீதியான பார்வையையும் புரிதலையும பெறுதல் (IV.D.9.c.); ஆவிக்குரியக் கூட்டாளிகளுடன் கரத்தரை ஆசையாய்ப் பின்தொடர்தல் (III.F.4.)..

BACKGROUND READING: Messages for Building Up New Believers (The Collected Works of Watchman Nee, Volume 49), Lesson 34, pp. 551–567.

REFERENCES: Life-study of 2 Corinthians, Message 43; Messages for Building Up New Believers (The Collected Works of Watchman Nee, Volume 49), Lesson 34, pp. 551–567..