கிறிஸ்துவை துய்க்கும் அனுபவம்
பகுதி 11
✵பாடம் 01 – 09
சரீரத்தின் அவயவங்களை கனம்பண்ணுதல்
குறிக்கோள்: கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களைக் கனம்பண்ணும்படி இளம்வாலிபர்களுக்கு உதவுவதற்கு.
பொருட்சுருக்கம்: நாம் கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம் அதோடு கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களாக ஆக்கப்பட்டுள்ளோம். நாம் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல்; நாம் கிறிஸ்துவின் சரீரத்தோடும், இந்தச் சரீரத்தின் அவயவங்களோடும்கூட இணைக்கப்பட்டிருருக்கிறோம். நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம் அதோடு கிறிஸ்துவில் ஒருவரோடொருவர் ஒன்றாக இருக்கிறோம். இனம், தரவரிசை, வயது அல்லது சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், இந்த அவயவங்களாகிய நாம் ஒன்றாக இருக்க ஒன்றுசேர்ந்துக் கூடிவருகிறோம். எல்லா அவயவங்களும் வெவ்வேறானவை அதோடு வெவ்வேறு செயல்பாடுகளைக் கொண்டுள்ளன, ஆனால் எல்லா அவயவங்களும் சமமாகத் தேவைப்படுகின்றன. எல்லா அவயவங்களும் ஒருவருக்கொருவர் ஒரே மாதிரியான அக்கறையுடன் இருக்க வேண்டும் அதோடு குறைந்த அழகுள்ள (இலட்சணமுள்ள) அவயவங்களுக்குக் குறிப்பாக அதிகக் கனம் கொடுக்க வேண்டும்.
பின்புலம்: தாங்கள் சரீரத்தின் அவயவங்களாக இருப்பதைப் பார்த்து, தாங்கள் இருக்கும் இடத்தில் சகலப் பரிசுத்தவான்களோடும் தங்களை வைத்திருப்பதில் உள்ள தேவனுடைய ஏற்பாட்டைப் பெறுபவர்கள், தாங்கள் பெரிதும் ஆசீர்வதிக்கப்பட்டு இருப்பதைக் காண்பார்கள். இளம் வாலிபர்கள் தாங்கள் ஒவ்வொருவரும் சரீரத்தின் ஓர் இன்றியமையாத அவயவம் என்பதைப் பார்க்கும் போது இது ஒரு மாபெரும் விடுதலையின் நாளாக இருக்கும்.
அதிகாரம்: 1 கொரிந்தியர் 12.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
I. நாம் கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்கள்—1 கொரி. 12:22, 27
நாம் மறுபடிஜெநிப்பிக்கப்பட்டபோது, நாம் கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்கள் ஆனோம். நாம் பெற்ற ஜீவன் ஒரு கூட்டு ஜீவன். இந்த ஜீவன் சரீரத்தின் தலையாயிருக்கும் கிறிஸ்துவுடன் நம்மை ஜீவாதார ரீதியில் இணைக்கிறது, மேலும் அவருடைய சரீரத்தின் மற்ற எல்லா அவயவங்களோடும் கூட நம்மை இணைக்கிறது.
A. “ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது”—1 கொரி. 12:12
“கிறிஸ்துவின் விசுவாசிகள் எல்லாரும் ஜீவாதாரமாக அவருடன் இணைக்கப்பட்டு, அவரது ஜீவனையும், மூலக்கூறையும்கொண்டு கட்டியமைக்கப்பட்டு, இவ்வாறு அவரை வெளிக்காட்ட அவரது சரீரமாக, ஓர் உயிரியாக ஆகின்றார்கள். எனவே, அவர் தலை மட்டுமல்ல, அவர் சரீரமும் கூட. நம் பௌதிக சரீரத்தில் பல அவயவங்கள் இருந்தும், சரீரம் ஒன்றாக இருப்பதுபோல இந்தக் கிறிஸ்துவும் இருக்கிறார்” (1 Corinthians 12:12, footnote 2). சரீரம் கிறிஸ்துவே. நடபடிகள் 9:4 இல் பவுல் பெற்ற வெளிப்பாடு இதுதான். வெளித்தோற்றத்தில் பவுல் விசுவாசிகளைத் துன்புறுத்திக் கொண்டிருந்தான், ஆனால் கர்த்தர் அவனுக்குத் தோன்றிய போது, “சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?” என்று கர்த்தர் கேட்டார். இதன் மூலமாகப் பவுல், விசுவாசிகள் கிறிஸ்துவுடன் அவருடைய சரீரமாக இணைந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்தறிந்தான்.
B. “எல்லாரும் ஒரே ஆவியானவரிலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்”—1 கொரி. 12:13
“ஞானஸ்நானம் விசுவாசிகளைக் கிறிஸ்துவுடனும் மூவொரு தேவனுடனும் ஒரு ஜீவாதார சேர்க்கைக்குள் கொண்டுவந்து, அவர்களைக் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஜீவிக்கும் அவயவங்களாக்குகிறது” (1 Corinthians 12:13, footnote 2). கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களாக ஆக்கப்பட்டிருப்பவர்களாக, நம் ஆவிக்குரிய அனுபவமகிழ்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் சரீரம் ஒரு மாபெரும் திறவுகோல் என்பதை நாம் உணர்ந்தறிய வேண்டும். நாம் சரீரத்தின் அவயவங்களாக இருப்பதால், நாம் சரீரத்திற்கு வெளியே ஆவிக்குரிய ரீதியில் வளர முடியும் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது. உண்மையில், எவ்வளவு அதிகமாய் நாம் சரீர வாழ்க்கையில் இருக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக கர்த்தரைத் துய்க்கும் அனுபவமகிழ்ச்சி நமக்கு இருக்கும். “ஒரே ஆவியானவரை நாம் எங்கே பருக முடியும்? நாம் சரீரத்தில் இந்த ஆவியானவரைப் பருகுகிறோம். நாம் சரீரத்தில் இருக்கவில்லை எனில், எந்தப் பாய்ந்தோடுதலும் இருக்காது. பருக எதுவும் இருக்காது. இந்தப் பாய்ந்தோடுதல் சரீரத்தில் உள்ளது. வெளிப்படுத்தல் புத்தகத்தின்படி, நித்தியத்தில் இந்தப் பாய்ந்தோடுதல் புதிய எருசலேமில் இருக்கும் (வெளி. 22:1-2). இன்று, இந்தப் பாய்ந்தோடுதல், இந்த நதி, சரீரத்தில் இருக்கிறது” (Life-study of 1 Corinthians, Message 58, p. 523).
C. ஒவ்வோர் அவயவத்தின் வரமும் சரீரத்திற்கானது—1 கொரி. 12:7; எபே. 4:7; 1 பேது. 4:10
கர்த்தர் நம் ஒவ்வொருவருக்கும் ஒப்பற்ற மற்றும் சரீரத்திற்குத் தேவையான ஒன்றைக் அளித்திருக்கிறார் என்பதைக் கொண்டு நமக்குக் கருத்துப்பதிவு ஏற்படுத்தப்பட்டாக வேண்டும். ஒவ்வோர் அவயவமும் கர்த்தரால் வரம்பெற்று இருக்கின்றனர், ஆனால் இந்த வரம் சரீரத்தின் கட்டியெழுப்புதலுக்காக ஒவ்வோர் அவயவத்திற்கும் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், பல கிறிஸ்தவர்கள், சரீரத்தைப் பார்ப்பதில்லை, எனவே தங்கள் வரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றனர். வரங்கள் நம் பேசுதலில் வெளியரங்கமாக்கப்படுகின்றன. நாம் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்போதும், நாம் மற்றவர்களை மேய்த்துப்பேணும்போதும், நாம் கர்த்தரைத் துய்த்து அனுபவித்துமகிழ்ந்திருப்பதை நாம் பகிர்ந்துகொள்ளும்போதும், நாம் சபையில் தீர்க்கதரிசனம் சொல்லும்போதும் நாம் கர்த்தருக்காகப் பேசுகிறோம். ஆவிக்குரிய வரங்கள் அனைத்தும் சரீரத்திற்காக உள்ளன. பவுலின் காலத்தில் கொரிந்திய விசுவாசிகள் அந்நியபாஷைகளில் பேச விரும்பினார்கள். (1 Corinthians 12:13, footnote 2 ஐப் பார்க்கவும்.) மற்றவர்கள் தங்களைப் புரிந்து கொண்டார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் தங்கள் சொந்த அனுபவமகிழ்ச்சிக்காகவே இதைச் செய்தார்கள். அவர்கள் ஆவிக்குரிய வரங்களைத் தேடினாலும், அவர்கள் சரீரத்தின் மற்ற அவயவங்களின் உணர்வுக்காக அக்கறைப்படவில்லை, அதனால் அவர்கள் நன்றாக வளரவில்லை.
II. எல்லா அவயவங்களும் இன்றியமையாதவர்கள் மற்றும் ஒரே சரீரத்திற்குள் இழைந்திணைக்கப்பட்டுள்ளனர்—1 கொரி. 12:22, 24-25
A. சரீரத்தின் அவயவங்களுக்குத் தங்கள் செயல்பாடு மற்றும் இருத்தலுக்காக ஒருவருக்கொருவர் தேவை—1 கொரி. 12:21
கிறிஸ்துவின் சரீரம், நம் பௌதிக சரீரத்தைப் போன்றது. நம் சரீரத்தின் ஒவ்வோர் அவயவத்திற்கும் அதன் செயல்பாடு உள்ளது. “சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே?…கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது” (1 கொரி. 12:17, 21). ஒரு கண் அல்லது ஒரு காது தானாக இருக்கவும் செயல்படவும் முடியாதது போலவே, கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களாகிய நாமும் நாமாகவே இருக்கவும் செயல்படவும் முடியாது. நமக்கு முழு சரீரமும் தேவை, பலமுள்ளவையும் அதேபோல் பலவீனமானவையும் தேவை. ஒருவேளை ஒருவேளை, நீங்கள் ஒரு கண்ணாக இருந்தால், நீங்கள் கையை இழிவாகக் கருதக்கூடும், ஏனெனில் அது ஒரு கண். அல்லது ஒருவேளை, நீங்கள் ஒரு கையாக இருந்தால், நீங்கள் ஒரு கண்ணாக இல்லாததால் உங்களை நீங்களே இழிவாகக் கருதக்கூடும். இரண்டு வகையான இழிவான கருதுதலுமே தவறானவை. திறனுள்ள மற்றும் வரம்பெற்றவர்கள் மட்டுமே நமக்குத் தேவை என்று நாம் நினைக்கக்கூடும். “சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது” (1 கொரி. 12:22). (உங்கள் பௌதிக சரீரத்திலுள்ள அனைத்து அவயவங்களும் எவ்வாறு இன்றியமையாதவை என்பதைக் காட்ட நேரத்தைச் செலவிடுங்கள், காதுக்குள் ஏற்படும் ஓர் அரிப்புக் கூச்சத்தைப் போக்குவதற்கு இயலும் ஒப்பற்ற அவயவமாக இந்தச் சுண்டு விரல் இருப்பதைப் பற்றிய உதாரணம் போன்றவற்றை பயன்படுத்தவும்.)
B. “தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை இழைத்திணைத்திருக்கிறார்”—1 கொரி. 12:25
நம் பௌதிக சரீரத்தைப் பொறுத்தவரை, கனத்தில் குறைவுள்ளவையாக நாம் கருதும் அவயவங்களுக்கு நாம் மிகவும் அதிகமான கனத்தைக் கொடுத்து ஆடை அணிவிக்கிறோம் (1 கொரி. 12:23). தேவனும் அதையே செய்கிறார். கனத்தில் குறைவுள்ள அவயவங்களுக்கு அவர் மிகவும் அதிகமான கனத்தை அளிக்கிறார். சில அவயவங்கள் எவ்வளவு சிறியதாகவோ அல்லது முக்கியமற்றதாகவோ தோன்றினாலும்சரி, தேவனுடைய பார்வையில், அவை விலையேறப்பெற்றவை மற்றும் இன்றியமையாதவை. சரீரத்தில் உள்ள அவயவங்களாக, அவர்கள் அனைவரும் விலையேறப்பெற்றவர்கள் மற்றும் இன்றியமையாதவர்கள் என்பதை இளம் விசுவாசிகள் உணர்ந்தறிய வேண்டும்! இலட்சணமில்லாத அவயவங்களுக்கு அதிக கனத்தைக் கொண்டு ஆடை அணிவிப்பதன் மூலம், சரீரத்தில் எந்தப் பிரிவினையும் இல்லாதவாறு தேவன் இந்தச் சரீரத்தை ஒன்றாக இழைந்திணைக்கிறார். நீங்கள் எவ்வளவு இளமையாக இருந்தாலும்சரி, உங்களை விட இளையவர்களாகிய மற்றவர்களும் சரீரத்தில் இருக்கிறார்கள். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்களைவிட இளையவர்களாகிய உயர்நிலைப்பள்ளி மாணவர்களைக் கவனித்துக்கொள்வது என்னே ஓர் அழகான காட்சி! கூடுகைக்குப் பிறகு, இளம் வாலிபர்கள் தங்கள் நண்பர்களுடன் வெறுமனே சுற்றிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, புதியவர்களைக் கவனித்துக் கொள்ளச் செல்லும் போது, சரீரத்தின் என்னே ஒரு சாட்சி விளங்கும்.
C. ஓர் அவயவம் பாடுபடும்போது, எல்லா அவயவங்களும் அதனுடன் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்படும்போது, எல்லா அவயவங்களும் அதனுடன் கூட களிகூரும்—1 கொரி. 12:26
நம் சரீரத்தின் ஓர் அவயவம் காயப்படும்போது நாம் அசௌகரியத்தை உணர்கிறோம். நம் சரீரம் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது காயப்பட்டாலோ, நாம் அதை வெறுப்பதோ அல்லது நிராகரிப்பதோ இல்லை, மாறாக அதற்குப் பதிலாக நாம் அதைப் போஷித்துச் சீராட்டுகிறோம் (எபே. 5:29). கிறிஸ்துவின் சரீரத்தில், ஓர் அவயவம் பாடுபடும்போது, நாம் அனைவரும் பாடுபடுகிறோம். ஓர் அவயவம் ஒரு கஷ்ட காலத்தினூடாய்க் கடந்துசென்றுக் கொண்டிருந்தால், நாம் அந்த அவயவத்துடன் நின்று, தகுந்த உதவியை வழங்க இயல வேண்டும். ஓர் அவயவம் மகிமைப்படுத்தப்படும்போது, பொறாமைப்படுவதற்குப் பதிலாக, நாம் அனைவருக்கும் சந்தோஷம் மற்றும் களிகூருதலின் ஓர் உணர்வு இருக்க வேண்டும். நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாக இருப்பதன் மூலம் நாம் ஏற்கனவே கொண்டிருக்கும் சரீரத்தின் இந்த உணர்வின்படி நாம் பயிற்சிசெய்து, அதனுடன் போட்டியிடும் சுய-உணர்வை நிராகரிக்க வேண்டும்.
III. ஒருவருக்கொருவர் அக்கறைப்படுவதன் மூலம் நாம் ஒவ்வோர் அவயவத்தையும் கனப்படுத்த வேண்டும்—1 கொரி. 12:25
கனப்படுத்துதல் முதலில் இருதயத்தில் நடைபெறுகிறது. நாம் அனைத்து விசுவாசிகளையும் கனப்படுத்துவது, அவர்களின் தோற்றம், செல்வம், சமூக அந்தஸ்து, கல்வி அல்லது தாலந்தின் அடிப்படையில் அல்ல. கிறிஸ்து அவர்களைத் தம்முடைய சரீரத்தின் அவயவங்களாக ஆக்கியிருப்பதால் நாம் அவர்களைக் கனப்படுத்துகிறோம். சில சமயங்களில் இளம் வாலிபர்கள் சேவைசெய்பவர்களுக்கு செவிசாய்க்கவோ அல்லது அவர்களின் ஆலோசனைகளை ஏற்கவோ சித்தமாய் இல்லாதிருக்கக்கூடும். சேவைசெய்பவர்கள் எவ்வளவு காலாவதியானவர்களாகத் தோன்றினாலும்சரி, அவர்கள் இன்னும் கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களே. அவர்களின் பேசுதலும் உணர்வுகளும் சரீரத்தால் உண்டானவை, கர்த்தருடைய வழிநடத்துதலால் உண்டானவை. இளம் வாலிபர்கள் அவர்களுடைய வார்த்தைகளைப் பொக்கிஷமாய்க் கருதி, அவற்றைக் கனப்படுத்த வேண்டும். இளம் வாலிபர்கள் தங்களிலேயே மூழ்கியிருப்பவர்களாகவும், தங்களைப் பற்றியும் தங்கள் நண்பர்களைப் பற்றியும் மட்டுமே அக்கறைப்படுகிறவர்களாகவும இருக்கும் போக்கிலும் உள்ளனர். தங்களைத் தாங்களே அதிக ஆவிக்குரியவர்களாகக் கருதி, கூடுகையில் அடிக்கடி பயிற்சிசெய்கிறவர்கள், அமைதியாக இருப்பவர்களையோ அல்லது உலகப்பிரகாரமாகத் தோன்றுபவர்களையோ இழிவாகப் பார்க்கக் கூடாது. மறுபுறம், பங்கேற்பதில் சிரமம் உள்ளவர்கள், கூடுகைகளில் பயிற்சிசெய்பவர்களின் ஆவியைத் தணிக்கவோ அல்லது இழிவாகக் கருதவோ கூடாது. நாம் எப்போதும் ஒருவர் மற்றொருவரின் உணர்வுகளை உணர்ந்துகொள்ள உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும், இளம் வாலிபர்கள் பெரும்பாலும் மனரீதியாக சபை வாழ்க்கையின் நடவடிக்கைகளில் இருந்து தங்களை விலக்கிக் கொள்கின்றனர். எனினும், இத்தகைய நடவடிக்கைகள், இளம் வாலிபர்கள் வயோதிக அவயவங்களுடன்களுடன் இழைந்திணைக்கப்படுவதை அனுபவிப்பதற்கான ஒரு வாய்ப்பாக உள்ளன. இளம் வாலிபர்கள் இந்த வாய்ப்புகளைப் பற்றி அதிக உணர்வுள்ளவர்களாக (விழிப்புள்ளவர்களாக) ஆகுவதற்கு உதவப்பட்டு, பங்கேற்க உற்சாகப்படுத்தப்பட்டால் (இன்னும் நடைமுறையில் அவ்வாறு செய்ய உதவப்படவும் கூட செய்யப்பட்டால்), அவர்கள் எல்லா பரிசுத்தவான்களோடும் அதிகமாகக் கட்டியெழுப்பப்படுவதை அனுபவிப்பார்கள். அவர்களின் பங்கு தேவைப்படுகிறது, மேலும் அது பாராட்டப்படுகிறது. கர்த்தருடைய சரீரத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஜீவ-நிரப்பீட்டைப் பெற்று ஊழியஞ்செய்யும் அனுபவத்திற்குள் இளம் வாலிபர்களைக் கர்த்தர் கொண்டுவருவாராக.
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: உலகில், மக்கள் தாங்கள் யாருடன் நேரத்தைச் செலவிட போகின்றனர் என்பதை தோற்றம், திறமை, சமூக அந்தஸ்து, பிரபலம் (புகழ்) ஆகியன போன்ற மேலோட்டமான குணாதிசயங்களால் தீர்மானிக்கிறார்கள். எனினும், சபையின் சாட்சி முற்றிலும் வேறுபட்டதாக இருக்க வேண்டும். நாம் மறுபடிஜெநிப்பிக்கப்பட்டபோது, நாம் கிறிஸ்துவின் சரீரத்தின் ஜீவிக்கும் அவயவங்களாக ஆனோம், நாம் ஞானஸ்நானம் பெற்றபோது, நாம் இந்த ஒரே சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பெற்றோம். தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் கிருபையின்படி, சரீரத்தில், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட, அவசியமான செயல்பாடு மற்றும் வரம் உள்ளது. ஆகவே, சரீரத்தின் ஒவ்வோர் அவயவமும் இன்றியமையாதது அதோடு நம் அனைவராலும் கனப்படுத்தப்பட வேண்டும். உங்களையே இன்னோர் அவயவத்திற்கு மேலாகக் கருதுவது, தெளிந்தபுத்தியுள்ளவர்களாக (நிதானமாக) இருப்பது அல்ல, மாறாக நீங்கள் உங்களைக்குறித்து கருதவேண்டியதற்கு மிஞ்சி மிகவும் உயர்வாகக் கருதுவதாகும் (ரோ. 12:3). தேவன் சரீரத்தை ஒன்றுசேர்த்து இழைந்திணைத்து, கனத்தில் குறைவுள்ள அவயவங்களுகு அதிக அபரிமிதமான கனத்தைக் கொடுத்திருக்கிறார் (1 கொரி. 12:24-25). நம்மைச் சுற்றியுள்ள மற்ற இளம் வாலிபர்களை அவர்களின் தோற்றம், பிரபலத்தன்மை (புகழ்), திறமை அல்லது தாலந்தால் அல்ல, மாறாக அவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள், மேலும் அத்தகையவர்களாக அவர்கள் விலைமதிப்பற்றவர்கள் மற்றும் இன்றியமையாதவர்கள், நாம் அனைவருக்கும் தேவையான ஒரு சிறப்புப் பகுதியைக் கொண்டிருக்கின்றனர் என்ற உண்மையால் அவர்களைப் பாராட்ட வேண்டும். பரிசுத்தவான்களைப் பற்றிய இத்தகைய ஓர் ஆரோக்கியமான கருத்தாக்கமானது (கருதுதல்), உலகத்தின் பிரிவினை உண்டாக்கும் மற்றும் காயப்படுத்தும் “தனிக்குழுக்களின்” வழியிலிருந்து நம்மை இரட்சிக்கும், மேலும் நாம் கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுமாறு, சகோதர சிநேகத்திலே ஒருவரையொருவர் அன்பாக நேசிக்கவும் நம்மை வழிநடத்தும் (ரோ. 12:10).
சுவிசேஷ செயலாக்கம்: உலகில் ஒவ்வொருவரும் அடிப்படையில் தங்களுக்காகவே இருக்கிறார்கள். இனம் மற்றும் சமூக பிரச்சினைகள் அல்லது சிறப்பு ஆர்வங்கள் (நலன்கள்) மக்கள் வெவ்வேறு தரப்புகளை எடுக்க காரணமாகின்றன. பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் கூட தங்களை ஒருவரிடமிருந்து மற்றொருவர் ஸ்தாபனப்படுத்தி, பிரித்துக்கொள்கிறார்கள். கணவன் மனைவி, குழந்தைகள் பெற்றோர், மாணவர்கள் ஆசிரியர்கள், யூதர்கள் அரேபியர்கள் இடையேயும், இன்னும் கவலைக்கிடமாக உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்களிடையேயும்—பிரிவினை எல்லா இடங்களிலும் உள்ளது. இந்தப் பிரிவினைப் பிரச்சினையைத் தீர்க்கவும், பூமியில் இசைவைக் கொண்டுவரவும் கடந்த காலங்களில் மீண்டும் மீண்டும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டன. நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும்சரி, நம்மாஈல் மற்றவர்களுடன் ஒன்றாக இருக்க முடியாது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. “எந்தப் பிரிவினையும் இல்லாத,” மேலும் மக்கள் “ஒருவருக்கொருவர் ஒரேவித அக்கறைகொண்டிருக்கும்” ஓர் இடத்தை (1 கொரி. 12:25); அனைவரும் “மிகவும் அவசியமாயிருக்கும்” (1 கொரி. 12:22), ஒவ்வொருவரும் மற்றவர்களின் பாடுபடும் களிகூரும் அனுபவங்களால் பாடுபட்டு களிகூரும் (1 கொரி. 12:26), மேலும் பிரபஞ்சமளாவிய அக்கறையும் சமாதானமும் இருக்கும் ஓர் இடத்தை (1 கொரி. 12:25, எபே. 4:4) நீங்கள் எங்கே காணமுடியும்? இந்த ஒருமை இருக்கும் ஒரே இடம் கிறிஸ்துவின் சரீரத்தில் மட்டுமே உள்ளது என்று வேதாகமம் வெளிப்படுத்துகிறது (1 கொரி. 12:12). கிறிஸ்துவின் சரீரம் என்பது அவருடைய அவயவங்கள் அனைவரோடும் கூடிய கிறிஸ்து தாமே. ஒரு நபர் கிறிஸ்துவைப் பெறும்போது, அவன் ஓர் அற்புதமான நபரைப் பெற்று, அவருடைய சரீரத்தின் ஓர் அவயவமாக ஆகிவிடுகிறான். அவரைப் பெறுவதன் மூலமும் (அதோடு தொடர்ந்து அவரைப் பெறுவதன் மூலமும்—1 கொரி. 12:13) மட்டுமே, ஒரு நபர் பிரிவினையிலிருந்து இரட்சிக்கப்பட முடியும்.
மிக முக்கியக் காரியங்கள்: இன்று தேவனுடைய பொருளாட்சி சபையில் நிறைவேற்றப்படுகிறது அதோடு புதிய எருசலேமில் முழுநிறைவேற்றமடையும் என்பதை அறிதல் (II.A.5.); ஒரு சுறுசுறுப்பான, கூட்டு சபை வாழ்க்கையைப் பயிற்சிசெய்தல் (III.F.); நம்மை விட வயதானவர்களிடம் (பெற்றோர், ஆசிரியர்கள், வயதில் மூத்த பரிசுத்தவான்கள், சேவிப்பவர்கள் ஆகியோரிடம்) அன்பாகவும், பணிந்தடங்குதலுடனும், கீழ்ப்படிதலுடனும், மரியாதையுடனும் இருத்தல் (IV.C.1.); நண்பர்கள், புதிய அறிமுகமானவர்கள் மற்றும் நம் சொந்த வயதுடைய பிறரிடம் நட்போடும், மனதுருக்கத்தோடும், நேர்மையாகவும், தாராள மனப்பான்மையோடும், பெருந்தன்மையாகவும், விருந்தோம்பலோடும், ஒத்துழைப்போடும், தூய்மையாகவும், அவர்கள் பேசுவதை நன்கு கவனித்துக்கேட்பவராகவும் இருத்தல் (IV.C.2.); இளம் வாலிப சகோதர சகோதரிகள், அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் சபையில் உள்ள குழந்தைகள் போன்ற நம்மை விட இளையவர்களிடம் நட்பாகவும், பெருந்தன்மையாகவும், அக்கறையுடனும் இருத்தல் (IV.C.3.).
BACKGROUND READING: Life-study of 1 Corinthians, Messages 58–59.
REFERENCES: 1 Corinthians 12:12, footnote 2; 12:13, footnote 2; 12:24, footnote 1; Life-study of 1 Corinthians, Message 58, p. 523.