கிறிஸ்துவை துய்க்கும் அனுபவம்

பகுதி 11

✵பாடம் 01 – 09

தேவனுடைய பண்ணையும், தேவனுடைய கட்டிடமும்

குறிக்கோள்: சபை கிறிஸ்துவை வளர்ப்பதற்கான ஒரு பண்ணையாகவும், நம் தினசரி வாழ்க்கையிலிருந்து உற்பத்திசெய்யப்படும் ஒரு தெய்வீகக் கட்டிடமாகவும் இருக்கிறது என்பதைக் காண்பதற்கு.

பொருட்சுருக்கம்: தெய்வீக சிந்தனையின்படி, சபை கிறிஸ்துவை வளர்ப்பதற்கான ஒரு பண்ணையாகும், மேலும் சபை மூவொரு தேவனை விலையேறப்பெற்ற கட்டுமானப் பொருட்களாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட ஒரு கட்டிடமாகும். ஒவ்வொரு நாளும் நாம் நம் இருதயத்தில் எதையாவது வளர்த்துக் கொண்டிருக்கிறோம். நம்மில் உள்ள கிறிஸ்து நீர்ப்பாய்ச்சப்பட்டு, வளர முடியக்கூடிய சபை வாழ்க்கையில் நாம் தங்கியிருக்க வேண்டும். நம் ஆள்தத்துவத்தில் உள்ள அனைத்து களைகளோடும் பாறைகளோடும் இடைபடும்படி கர்த்தரை அனுமதிக்கும்படி நாம் கர்த்தருக்கும் பரிசுத்தவான்களுக்கும் திறந்திருக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு நாளும் நாம் ஒன்றைக் கட்டிக்கொண்டிருக்கிறோம், அதைக் கொண்டு நாம் வளர்க்கிறோம். நம் வாழ்க்கை—நாம் செய்யும் அனைத்தும்—ஒரு கட்டிடமாகும். நாம் சரீரத்தின் அவயவங்களாக இருப்பதால், நாம் செய்வது சபையைப் பாதிக்கிறது. எனவே, நாம் எவ்வாறு கட்டுகிறோம் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். கர்த்தர் திரும்பி வரும்போது, நம்முடைய கட்டுமான வேலைகள் அனைத்தும் அக்கினியால் சோதிக்கப்படும்.

பின்புலம்: இந்தப் பாடம் சபையைப் பற்றிய தேவனுடைய பார்வையை முன்வைக்கிறது, மேலும் இந்தப் பார்வை புத்திதெளிவிக்கின்றது அதோடு நம் வாழ்க்கையைப் பாதிக்க வேண்டும்.

அதிகாரம்: 1 கொரிந்தியர் 3.

போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:

I. தேவன் சபையை தம் பண்ணையாகவும் கட்டிடமாகவும் பார்க்கிறார்—1 கொரி. 3:9

சபை தேவனுடைய பண்ணையாகவும், தேவனுடைய கட்டிடமாகவும் இருக்கிறது. ஒரு பண்ணை என்பது ஒரு பயிரை உற்பத்திசெய்யும் குறிக்கோளுக்காகப் பண்படுத்தப்படும் (பயிரிடப்படும்) ஒரு நிலம் ஆகும். தேவனுடைய பண்ணை, கிறிஸ்துவை வளர்ப்பதற்காக உள்ளது. இந்தப் பண்ணையில் உற்பத்திசெய்யப்பட்ட கிறிஸ்துவே தேவனுடைய வீட்டைக் கட்டுவதற்கான விலையேறப்பெற்ற பொருட்களாக ஆகிவிடுகிறார். சபையில் கிறிஸ்துவைத் தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது என்று தேவன் வாஞ்சிக்கிறார். விசுவாசிகள் எவ்வளவு அறிவைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை விட, அவர்களில் என்ன வளர்கின்றது என்பதற்கும், அவர்கள் அவருக்காக எவ்வளவு வேலையைச் செய்திருக்கிறார்கள் என்பதை விட, சபையைக் கட்டுவதற்கு அவர்கள் எந்தக் கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கும் அவர் அக்கறைப்படுகிறார். கிறிஸ்தவர்கள் தாங்கள் எத்தனை முறை வேதாகமத்தை வாசித்தார்கள் அல்லது தாங்கள் எத்தனை கூடுகைகளில் கலந்துகொள்கிறார்கள் என்பதைக் கணக்கிட்டு தங்கள் ஆவிக்குரிய முன்னேற்றத்தை மதிப்பிடக் கூடாது. அதற்குப் பதிலாக அவர்கள் தாங்கள் எப்படி கிறிஸ்துவை அனுபவித்திருக்கிறார்கள் அதோடு  தாங்கள் சபையின் கட்டியெழுப்புதலுக்காக மற்றவர்களுக்கு கிறிஸ்துவை எவ்வாறு ஊழியம் செய்திருக்கிறார்கள் என்பதில் அவர்கள் அக்கறைக் கொள்ள வேண்டும்.

A. தேவனுடைய பண்ணை கிறிஸ்துவை வளர்ப்பதற்காக உள்ளது—1 கொரி. 3:9; ஒப். 1 பேது. 2:3

நம் ஆவிக்குரிய வளர்ச்சி, நம்மில் உள்ள கிறிஸ்துவின் வளர்ச்சிக்கு ஒத்திருக்கிறது. கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர்வதற்கு, நாம் நம்மில் கிறிஸ்து வளர்வதையும், அதிகரிப்பதையும் கொண்டிருந்தாக வேண்டும். வளராமல் இருப்பது அசாதாரணமானது. கொரிந்திய விசுவாசிகள் தாங்கள் ஆவிக்குரியவர்களாக இருந்ததாக நினைத்தார்கள். அப்போஸ்தலர்கள் மத்தியில் யார் பெரியவர் என்று அவர்கள் விவாதித்தனர், ஆனால் அவர்கள் பொறாமை மற்றும் வாக்குவாதத்தால் நிறைந்திருந்தனர் என்பதால் பவுல் அவர்களைக் கிறிஸ்துவில் உள்ள கைக்குழந்தைகள் என்று அழைத்தான். சபை தேவனுடைய பண்ணை என்றும், அதன் குறிக்கோள் வளர்வதே தவிர, சண்டையிடுவதல்ல என்றும் பவுல் அவர்களுக்கு நினைவூட்டினான். கொரிந்தியர்களுக்கு, அவர்கள் வளர வேண்டும் என்பதைக் காட்டுவதே அவனது நோக்கமாக இருந்தது. சபையாக நாமும் வளர வேண்டும். நாம் வளர தீவிரமாய் இருக்க வேண்டும். “சபையாகிய தேவனுடைய பண்ணையில் தாவரங்களாக, நாம் வளர வேண்டும். வளர்ச்சி இல்லாமல், நாம் பயனற்றவர்கள். வீட்டில் என் தோட்டத்தில் சில தாவரங்கள் வாழ்கின்றன, ஆனால் அவை வளர்வதில்லை. அதுபோலவே, ஆவிக்குரிய ரீதியில் உயிரோடிருக்கும் பல விசுவாசிகள் இன்றும் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் வளர்வதில்லை. நிச்சயமாக, இறப்பதை விட வாழ்வதே சிறந்தது. நாம் உயிருடன் இருக்கும் வரை, நமக்கு வளர்வதற்கான வாய்ப்பு உள்ளது. கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலில் யாரும் வளராமல் வாழ்வதில் மனநிறைவு அடைய மாட்டார்கள் என்று நான் எதிர்நோக்குகிறேன். நாம் அனைவரும் கிறிஸ்துவை உற்பத்திசெய்ய வளர்ந்தாக வேண்டும். கர்த்தருடைய மீட்டுத்திருப்புதலில் உள்ள பரிசுத்தவான்கள் அனைவரும் வளர தீவிரித்தாக வேண்டும். ‘கர்த்தாவே, எனக்கு வளர்ச்சியை அருளும்’ என்று நாம் ஜெபிக்க வேண்டும்’” (Life-study of 1 Corinthians​, Message 22, p. 198).

B. நாம் வளர்க்கும் கிறிஸ்து, தேவனுடைய கட்டிடத்திற்கான கட்டுமானப் பொருட்களாக ஆகிவிடுவார்

“நாம் நேர்த்தியாக வளரும்போது, கிறிஸ்து நம்மில் உற்பத்தி செய்யப்படுவார். அப்போது, நாம் கிறிஸ்துவுக்குரிய எதை வளர்த்தாலும் அது தேவனுடைய கட்டிடத்திற்கான கட்டுமானப் பொருட்களாக ஆகிவிடும். சபை கிறிஸ்துவைக் கொண்டு மட்டுமே கட்டியெழுப்பப்படுகிறது. எனினும், சபையானது புறம்சார்ந்த கிறிஸ்துவைக் கொண்டு ,அதாவது பரலோகங்களில் இருக்கும் அல்லது திடீரென்று பரலோகங்களிலிருந்து இறங்கி வரும் ஒரு கிறிஸ்துவைக் கொண்டு கட்டப்படுவதில்லை. மாறாக, சபையானது நாம் அனுபவிக்கும் அதோடு நம்மால் வளர்க்கப்படும் விளைபொருளாகவும் கூட உள்ள கிறிஸ்துவைக் கொண்டு கட்டப்படுகிறது. இவ்வாறு, சபையின் கட்டியெழுப்புதலுக்கு, ஜீவனில் நம் வளர்ச்சியின் மூலமாக உற்பத்திசெய்யப்படும் கிறிஸ்துவை நாம் கொண்டிருந்தாக வேண்டும் (​Life-study of 1 Corinthians, Message 22, p. 198–199). நாம் எவ்வாறு கிறிஸ்துவை வளர்த்து உற்பத்திசெய்கிறோம்? கிறிஸ்துவுடன் நேரத்தைச் செலவிடுதல், அவருடைய வார்த்தையில் அவரை அனுபவித்துமகிழ்தல், மற்ற விசுவாசிகளுடன் ஐக்கியம்கொள்ளுதல், உலகத்தைக் கைவிடுதல், சுயத்தோடு இடைபடுதல் ஆகியன போன்றவற்றின் மூலம் நாம் கிறிஸ்துவை வளர்க்கிறோம். அவர் நம் இருதயத்தில் வளர, நம் இருதயம் நல்ல நிலமாக இருப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும் (மத். 13:8). “நல்ல நிலம், உலகப் போக்குவரத்தால் கடினமாக்கப்படாததும், மறைவான பாவங்கள் இல்லாததும், யுகத்தின் மனஉளைச்சலும், ஐசுவரியத்தின் வஞ்சகத்தன்மை இல்லாததுமான நல்ல இருதயத்தை அடையாளப்படுத்துகிறது. இப்படிப்பட்ட ஓர் இருதயம், வார்த்தை வளர்ந்து, கனிகொடுத்து, நூறு மடங்குகூட உற்பத்திசெய்யுமாறு, அந்த வார்த்தையைப் பெற்றுக்கொள்வதற்காக தன்னிலுள்ள தளத்தின் ஒவ்வோர் அங்குலத்தையும் தருகிறது (வ. 23)” (Matthew 13:8, footnote 1).

II. நடுகின்ற மற்றும் நீர்ப்பாய்ச்சுகின்ற சபை வாழ்க்கையில் நாம் தேவனுடைய கட்டிடத்திற்கான விலையேறப்பெற்ற கட்டுமானப் பொருட்களை உற்பத்திசெய்ய வளர்கிறோம்—1 கொரி. 3:6

கிறிஸ்துவை வளர்க்க நமக்கு நடுதலும் நீர்ப்பாய்ச்சுதலும் தேவை. தேவன் நமக்கு இந்த வளர்ச்சியைக் கொடுப்பதும் நமக்குத் தேவை. இறையாண்மையாக, நாம் சபை வாழ்க்கைப் “பசுமைக்குடிலில்” இருக்கிறோம். நாம் வளர உதவுவதற்காக தேவனுக்கு உடன்-வேலைசெய்யும் விவசாயிகள் பலர் உள்ளனர். அப்போஸ்தலனாகிய பவுலைப் போல சிலர் நம்மை சபையில் நடுகின்றனர். அப்பொல்லோவைப் போல சிலர் நமக்கு நீர்ப்பாய்ச்சுகின்றனர். “தேவனும்கூட ஒரு வேலையாள்தான். கிறிஸ்துவின் சக வேலையாட்களாகிய அவரது ஊழியர்கள் தேவனின் பண்படுத்தப்பட்ட நிலத்தில் வேலைசெய்கையில், அவரும் வேலைசெய்கிறார் ” (1 Corinthians 3:9, footnote 1). தேவன் நமக்கு வளர்ச்சியைத் தருவதற்காக வேலைசெய்கிறார். அவர் நம் வளர்ச்சிக்காக எல்லோரையும் எல்லாவற்றையும் ஏற்பாடுசெய்கிறார். கட்டிடத்தில் விளையும் கிறிஸ்துவின் அனுபவங்களைப் பெறுவதற்கான அதி சிறந்த சுற்றுச்சூழலில் நாம் இருக்கிறோம்.

A. கிறிஸ்துவை நம் இருதயங்களில் வளர்க்க, சபை வாழ்க்கையில் நாம் நடப்பட்டு, ஐசுவரியமாக நிரப்பீடளிக்கப்படுகிறோம்—1 கொரி. 3:6; மத். 13:3, 8

நாம் மறுபடிஜெநிப்பிக்கப்பட்டபோது நாம் சபை வாழ்க்கையில் நடப்பட்டோம். நாம் ஒரு காலத்தில் குற்றங்களிலும் (அக்கிரமங்களிலும்) பாவங்களிலும் மரித்துப்போய் இருந்தோம் (எபே. 2:1). மற்றவர்களின் ஜீவன்-உட்பகிரும் பேசுதல் மூலம், நாம் ஜீவனின் தெய்வீக விதையைப் பெற்று, மறுபடிஜெநிப்பிக்கப்பட்டோம் (1 பேது. 1:23). பின்னர் நாம் சரியான மண்ணில், அதாவது சபை வாழ்க்கையில் வைக்கப்பட்டோம். சபை வாழ்க்கையில், பரிசுத்தவான்கள் எப்போதும் நமக்கு நீர்ப்பாய்ச்சுகின்றனர். நாம் எவ்வளவு அதிகமாக சபை வாழ்க்கையில் ஈடுபடுகிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் இந்த ஜீவிக்கும் தண்ணீரைப் பெறுவோம். எந்தக் கூடுகைகளையும் தவறவிடாதீர்கள், ஏனெனில் சபை வாழ்க்கையில் உள்ள எல்லாக் கூடுகைகளும் ஒருவருக்கொருவர் நீர்ப்பாய்ச்சுவதற்காகவே உள்ளன. சபை வாழ்க்கையில் உள்ள குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் “வயோதிக பரிசுத்தவான்களுக்கு” மட்டுமே நல்லது என்று கருத வேண்டாம். பரிசுத்தவான்களுடன் ஐக்கியம்கொள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் நாம் பயன்படுத்த வேண்டும். இவ்விதத்தில் கிறிஸ்துவை வளர்ப்பதற்கு நாம் கிறிஸ்துவைக் கொண்டு ஐசுவரியமாக நிரப்பீடளிக்கப்படுவோம்.

B. நம் தினசரி வாழ்வில் நாம் எதை வளர்க்கிறோமோ, அதைக் கொண்டு நாம் கட்டியெழுப்புகிறோம்

ஒவ்வொரு நாளும் நாம் நம் இருதயத்தில் ஒன்றை வளர்க்கின்றோம். மேலும், ஒவ்வொரு நாளும் நாம் எதை வளர்க்கிறோமோ அதைக் கொண்டு நாம் கட்டுகின்றோம். நம் வாழ்க்கை, நாம் செய்யும் அனைத்தும் ஒரு கட்டிடம். நாம் சரீரத்தின் அவயவங்களாக இருப்பதால், நாம் செய்வது சபையைப் பாதிக்கிறது. எனவே, நாம் எவ்வாறு கட்டுகிறோம் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். தேவனுடைய வீட்டைக் கட்டுவதற்கு, நம் இருதயத்தில் என்ன வளர்கின்றது என்பதோடு நாம் இடைபட வேண்டும். நம் இருதயம், பலவற்றையும் வளர்ப்பதற்கான ஒரு வளமான நிலம் ஆகும். கிறிஸ்துவை வளர்க்க பல வருடங்கள் உழைக்க வேண்டும், அதே நேரத்தில் களைகள் ஒரே இரவில் முளைக்கலாம் அதோடு பாறைகள் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். குறுகிய-கால அனுபவமகிழ்ச்சியில் நாம் அளவுக்கு அதிகமாக மகிழ்ச்சியடையவும் கூடாது, அல்லது தற்காலிகமான தோல்விகளில் நாம் அளவுக்கு அதிகமாக சோர்வடையவும் கூடாது. இளம் வாலிபர்களாகிய நாம் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் நாம் முழு நேரப் பயிற்சிக்குச் செல்கிற பட்சடத்தில், எல்லாம் சரியாகிவிடும் என்று நாம் நினைக்கக் கூடாது. அடுத்த ஒரு சில ஆண்டுகளில் நம் இருதயங்களில் என்ன வளர்ந்துக்கொண்டிருக்கும்? நாம் தீய ஆசைகளை வளர்த்துக்கொண்டிருக்கலாம் அல்லது நாம்  ஒரு சிறந்த தொழில், உயர்கல்வி, செல்வம் அல்லது காதல் போன்றவற்றின் மீதான ஓர் அன்பை வளர்த்துக் கொண்டிருக்கலாம். நாம் இந்த நீர்ப்பாய்ச்சும் சபை வாழ்க்கையில் இருக்கும்போது, கட்டிடத்திற்குத் தேவையானதை உற்பத்திசெய்ய கிறிஸ்து நம்மில் வளர்வார். வேதாகமத்தின் மீது நமக்குள்ள அன்பும், நம் நண்பர்களின் இரட்சிப்பு குறித்த நம் அக்கறையும் வளரும். சபையின் மீதும், ஒருவர் மற்றவர் மீதும், சபை சேவையின் மீதும் உள்ள நம்முடைய கரிசனை வளரும். எவ்வளவாய் நம் தினசரி வாழ்க்கை சபை வாழ்க்கையில் இருக்கிறதோ, மேலும் எவ்வளவாய் நாம் சபை வாழ்க்கையில் நீர்ப்பாய்ச்சுதலுக்குத் திறந்திருக்கிறோமோ, அவ்வளவாய் நம் இருதயம் கிறிஸ்துவைக் கொண்டு ஆக்கிரமிக்கப்படும். கிறிஸ்து நம் இருதயத்தில் வளரும்போது, தேவனுடைய வீட்டைக் கட்டுவதற்கான நேர்த்தியான கட்டுமானப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

C. மூவொரு தேவனை விலையேறப்பெற்ற கட்டுமானப் பொருட்களாகக் கொண்டு நாம் தேவனுடைய வீட்டைக் கட்ட வேண்டும்—1 கொரி. 3:12, 16-17

நாம் மரம், புல், வைக்கோலால் அல்ல, மாறாக பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கற்களால் தேவனுடைய வீட்டைக் கட்ட வேண்டும். “பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கற்கள் ஆகியவை மூவொரு தேவனின் நற்பண்புகளிலும் குணாம்சங்களிலும் கிறிஸ்துவின் பல்வேறு அனுபவங்களை அடையாளப்படுத்துகின்றன. இவற்றைக் கொண்டுதான் அப்போஸ்தலர்களும், எல்லா ஆவிக்குரிய விசுவாசிகளும் கிறிஸ்து என்ற ஒப்பற்ற அஸ்திபாரத்தின்மீது சபையைக் கட்டுகிறார்கள்” (1 Corinthians 3:12, footnote 1). “மரம், புல், வைக்கோல் ஆகியவை (யூதமதம் அல்லது மற்ற மதங்கள், தத்துவம், அல்லது கலாச்சாரம் போன்ற) விசுவாசிகளின் இயற்கையான பின்புலத்திலிருந்தும், (பிரதானமாக, ஆத்துமாவில் இருக்கிறதும், இயற்கையான ஜீவனுமாகிய) இயற்கையான விதத்தில் வாழ்வதிலிருந்தும் வருகிற அறிவு, உணர்ந்தறிதல், சாதனை ஆகியவற்றை அடையாளப்படுத்துகின்றன….இந்தத் தகுதியற்ற கட்டுமானப் பொருட்கள் எல்லாம், விசுவாசிகள் தங்கள் பின்புலத்திலிருந்து சேகரித்ததுடன் சேர்த்து, அவர்களது இயற்கையான மனிதனின் விளைபொருட்களாகும். தேவனுடைய பொருளாட்சியில், இந்த மூலப்பொருட்கள் சுட்டெரிக்கப்படுவதற்கு மட்டுமே ஏற்றவை (வ. 13)” (1 Corinthians 3:12, footnote 3). தேவனுடைய கட்டிடம் தெய்வீகமானது. ஓர் அர்த்தத்தில் (ஒரு வகையில்), நாம் எல்லா நேரத்திலும் கட்டுகின்றோம். நாம் இயற்கையான கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கட்டும்போது, நாம் தேவனுடைய ஆலயத்தைக் கறைப்படுத்தி, தீட்டுப்படுத்துகிறோம் (See 1 Cor. 3:17 and footnote 171).

D. கர்த்தர் திரும்பி வரும்போது, நம்முடைய கட்டுமான வேலைகள் அனைத்தும் அக்கினியால் சோதிக்கப்படும்—1 கொரி. 3:12-15

கர்த்தர் திரும்பி வரும்போது, நம்முடைய கட்டுமான வேலை அக்கினியால் சோதிக்கப்படும். தெய்வீகமானது நிலைத்திருக்கும், இயற்கையானது சுட்டெரிக்கப்படும். நாம் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் அவயவங்கள். நாம் செய்யும் அனைத்தும் சரீரத்தைப் பாதிக்கிறது, மேலும் நாம் யார் என்பது நம் கட்டியெழுப்பும் வேலையைப் பாதிக்கிறது. நாம் எப்படிக் கட்டுகிறோம் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். தன்னுணர்வின்றி அறியாமலேயே, நாம் சபையில் பயனற்ற மூலக்கூறுகளைச் சேர்க்கலாம். எடுத்துக்காட்டாக, ஓர் இயற்கையான முறையில் நாம் ஒருவருக்கொருவர் கவனக்குறைவாக தொடர்புகொள்ளும் நம் கவனக்குறைவான தொடர்புகொள்ளுதல், நம்முடன் இருக்கும் சில இளைஞர்கள் கர்த்தரிடமாக குளிர்ந்துபோனவர்களாக ஆகுவதற்கு வழிவகுக்கலாம். நம் தளர்வான (அலட்சியமான) பேச்சு, உலகப்பிரகாரமான யோசனைகளையும் மற்றவர்களுக்கு உட்பகிரவும் முடியும். கர்த்தர் தாம் திரும்பி வரும்போது இந்த இயற்கையான கட்டுமானப் பொருட்களை சுட்டெரித்துவிடுவார். பொன், வெள்ளி மற்றும் விலையேறப்பெற்ற கற்களால் உண்டானவை மட்டுமே நெருப்பிலிருந்து தப்பிக்கும். நம் கட்டியெழுப்பும் வேலை நிலைத்திருந்தால், நாம் கர்த்தரிடமிருந்து ஒரு வெகுமதியைப் பெறுவோம்; இல்லையெனில் நாம் இழப்பை அநுபவிப்போம். எனினும், நாம் நம் இரட்சிப்பை இழப்போம் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை (See 1 Corinthians 3:15, footnote 3). நம்முடைய இரட்சிப்பு கிரியைகளால் அல்ல, அது நித்தியமானது. எனினும், நம் வாழ்க்கை அனைத்தும், நம் வேலை அனைத்தும் கர்த்தருடைய திரும்பிவருதலில் நெருப்பால் சோதிக்கப்படும். தெய்வீகமானது நிலைத்திருக்கும், இயற்கையானது சுட்டெரிக்கப்படும். இன்று சபை வாழ்க்கையில் நடப்பட்டிருக்கும் நம் அனைவருக்கும் இது ஒரு தீவிர எச்சரிக்கை ஆகும்.

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: நம்மில் வளர்ந்து, கர்த்தருக்கான நம் அன்பைக் குளிர்ந்துபோகச் செய்ய வழிவகுத்து, இறுதியில் சபை வாழ்க்கையில் அவரை ஆசையாய்ப் பின்தொடர்வதிலிருந்து வழிதப்பிப்போக நம்மை விலக்கி நடத்துவதற்கு முடியக்கூடிய தீட்டுப்படுத்தும், திசைத்திருப்பும் “விதைகள்” நீங்க நம் இருதயத்தைக் காத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தைக் கொண்டு இளம் வாலிபர்களுக்குக் கருத்துப்பதிவை ஏற்படுத்தவும். நம் இருதயமே, கிறிஸ்து நமக்குள் வளரவதற்கான இந்த மண். ஆகையால், நாம் நம் இருதயத்தை எல்லாவற்றுக்கும் மேலாகக் காவல்காத்து (நீதி. 4:23), அத்தனை அதிகமான விஷயங்களை அதற்கு உள்ளே நுழைய அனுமதிக்காமல் இருக்க வேண்டும். நாம் எதையோ ஒன்றைத் தவறவிட்டுக்கொண்டிருக்கக்கூடும் என்று எண்ணி, வெவ்வேறு விஷயங்களை முயற்சி செய்ய விரும்புவதில் உள்ள நம் ஆர்வமே, சில சமயங்களில் நமது மிகப் பெரிய எதிரியாக உள்ளது. நாம் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் நாம் எதைச் செய்தாலும்சரி, அது தன்னுடன் ஒரு விளைவைக் கொண்டிருக்கும். நாம் எதை விதைக்கிறோமோ, அதையே நாம் அறுவடை செய்வோம் (கலா. 6:7). நாம் கர்த்தரை நேசிக்கும்படி வழிவகுக்காத, நாம் நம் இருதயங்களில் விதைக்கும் எந்த விதையும் இறுதியில் நம்மை அவரிடமிருந்து விலக்கித் திருப்பிவிடும். உலகப்பிரகாரமான அல்லது பாவமான விஷயங்கள் நம் இருதயங்களில் வேரூன்ற வாய்ப்பளிக்காமல், கிறிஸ்து வளர்வதற்கும், தம் வீட்டை நம்மில் அமைப்பதற்குமான நல்ல நிலமாக அதைத் தக்கவைத்துக்கொண்டு, இந்தத் திசைத்திருப்பும் விஷயங்கள் எல்லாவற்றிலிருந்தும் நம் இருதயங்களைக் காவல்காத்துக் கொள்வவர்களாக நாம் இருக்க வேண்டும்.

சுவிசேஷ செயலாக்கம்: இந்த பாடத்திற்கான சுவிசேஷத்தின் செயலாக்கம் மிகவும் எளிமையானது மற்றும் நேரடியானது: மனிதனின் இருதயம் கிறிஸ்துவை உள்ளடக்கி, வளர்க்கவே உண்டாக்கப்பட்டது. ஒரு நாள் நீங்கள், உங்களில் வளர்கின்ற அனைத்தையும் அறுவடை செய்வீர்கள். எனவே, இன்று நீங்கள் இவ்வாறு கேட்க வேண்டும், “என் இருதயத்தில் என்ன வளர்கின்றது?” வளர்வது, ஒரு தொழில் மீதான அன்பு எனில், நீங்கள் ஓய்வு பெறும்போது அல்லது இறக்கும்போது அது முடிவுக்கு வரும். வளர்வது பணத்தின் மீதான அன்பு எனில், நீங்கள் இந்த உலகத்தை விட்டுப் போகும்போது நீங்கள் அதை உங்களுடன் எடுத்துச்செல்ல இயல மாட்டீர்கள். வளர்வது இன்பத்தின் மீதான அன்பு எனில், நீங்கள் எப்போதும் திருப்தியடையாமல் இருப்பீர்கள். (பாடல்கள் , #1025 ஐ பார்க்கவும்). கிறிஸ்துவைத் தவிர வேறு எதுவும் வெறுமையே மற்றும் தற்காலிகமானதே. நிஜமானவரும், நித்தியமானவரும், தேவனுக்கு ஏற்புடையவருமாகிய, இந்தப் பிரபஞ்சத்திலுள்ள இந்த ஒரே ஒருவரிடமிருந்து உங்களை ஆக்கிரமித்து திசைதிருப்ப இதுபோன்ற விஷயங்களை அனுமதிப்பதன் மூலம், நீங்கள் ஒரு நாள் அவருக்கு முன்பாக நிற்பீர்கள், அப்போது மதிப்புக்குரிய ஒன்றுமே, கிறிஸ்துவுக்குரிய ஒன்றுமே—ஒரு விதை கூட—உங்ளில் காணப்படுவது இல்லை. நீங்கள் வீணான விஷயங்களைத் துரத்திக்கொண்டு உங்கள் வாழ்நாளைக் கழித்திருப்பீர்கள் அதோடு நித்தியத்திற்கும் அக்கினிக் கடலுக்குள் தள்ளப்படுவீர்கள். இன்று நீங்கள் நிஜத்தைக் காணலாம்! கிறிஸ்து மட்டுமே தேவனுக்கு ஏற்புடையவராக இருக்கிறார், மேலும் கிறிஸ்து மட்டுமே தேவனுக்கும் மனிதனுக்கும் திருப்தியளிக்கின்றார். கிறிஸ்து, தேவனால்-ஏற்றுக்கொள்ளப்பட்ட விதையாக, உங்களில் விதைக்கப்பட்டு வளர்ந்து வருகிறாரா? ஒரு கைக்கு ஒரு கையுறை போல, உங்கள் இருதயம் இந்த அற்புதமான விதையைப் பெறுவதற்காக குறிப்பாக உருவாக்கப்பட்டது. இதனால்தான் வேறு எதுவும் திருப்திப்படுத்துவதில்லை; உங்களில் மற்ற விஷயங்களின் வளர்ச்சி எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக திருப்திக்கான உங்கள் பசி இருக்கிறது. உங்கள் இருதயத்தைத் திறந்து, இந்த தேவனால்-ஏற்றுக்கொள்ளப்பட்ட, தேவனையும் மனிதனையும் திருப்திப்படுத்தும் விதையாக கிறிஸ்துவை உள்ளே வர அனுமதியுங்கள்!

மிக முக்கியக் காரியங்கள்: இரட்சிப்பின் பாதுகாப்பு எதிர் வெகுமதியும் தண்டனையும் (II.E.6.); இன்று தேவனுடைய பொருளாட்சி சபையில் செயல்படுத்தப்படுகிறது அதோடு புதிய எருசலேமில் முழுநிறைவேற்றமடையும் என்பதை அறிதல் (II.A.5.); ஒரு சுறுசுறுப்பான, கூட்டு சபை வாழ்க்கையைப் பயிற்சிசெய்தல் (III.F.); தேவன் மீதான ஒரு நேர்த்தியான, ஆரோக்கியமான பயத்தையும், தேவனுக்குரிய விஷயங்களுக்கான ஒரு தெய்வத்தன்மை நிறைந்த மரியாதையையும் பேணுதல் (IV.D.2.).

BACKGROUND READING: Life-study of 1 Corinthians, Message 22, pp. 198–199; Message 23, p. 203; 1 Corinthians 3:9, footnote 1; 3:12, footnote 3; 3:15, footnote 3.

REFERENCES: Life-study of 1 Corinthians, Messages 22–23; 1 Corinthians 3:9, footnote 1; 3:12, footnote 3; 3:15, footnote 3.